Pages

Wednesday, January 27, 2010

பிரபல டீவி சீரியல் தயாரிப்பாளருடன் ஒரு சந்திப்பு..

பிரபல டீவி சீரியல் தயாரிப்பாளர் சிங்கைமுத்து நமக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டி..

இவர் கடந்த 10 வருடங்களாக் சின்னத்திரையில் டைரக்டராக பணிபுரிகிறார்...

சார்.. உங்களை பற்றி கொஞ்சம் நேயர்களுக்கு சொல்லமுடியுமா?..
நான் 8-ஆம் வகுப்பை 5 வருடங்களுக்கு மேலாக படித்துகொண்டிருந்தேன்..
அப்போதே நல்ல வாட்ட சாட்டமாக இருப்பேன்.. அந்தப்பள்ளி மிகவும் கண்டிப்பானது..தவறு செய்தால், ஒரு நாள்முழுதும்   பெஞ்ச் மேலே ஏறி நிற்கவேண்டும்..
ஒரு நாள் கணக்கு வாத்தியார் என்னமோ கேட்டார்.. அப்ப நான் முக்கியமான ஒரு பிரச்சனை என்னவாகும் ... என மனதில் அசை போட்டுக்கொண்டிருந்தேன்.. கேட்டது காதில் விழவில்லை..

அப்படி என்ன சார் பிரச்சனை அந்த வயசிலே...?
முன்னாடி ரெண்டு பொம்பளப் புள்ளைக சார்..
நானு அவங்களுக்குத் தெரியாம ,ரெண்டு பேரு ஜடைகளையும் ஒண்ணா பின்னிவிட்டுட்டேன்.. திருப்பிப் பார்த்தா ஜடை இழுக்குமில்லையா..அப்ப அவர்களுடைய முகம் எப்படி மாறும்..
மூஞ்சிய சுழிப்பாங்களா இல்ல.. அழுவாங்களா ? ஒரு பரிசோதனை பண்ணிட்டுயிருந்தேன்

அந்த வயசிலேயே ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க?

ஆமா சார். அது புரியாம , கணக்கு வாத்தியார் பிரம்பை எடுத்து அடிக்க வராரு சார்.. எனக்கு கோபம் வந்து மெதுவா ரெண்டு தட்டு தட்டிட்டேன் சார்.
என்னமோ , காச் மூச்சுனு கத்திட்டு பெஞ்ச் மேல ஏறி நிற்கச்சொன்னார்..

அடடே..அப்புறம் ?

நாங்கெல்லாம் கவரிமான் ஜாதி ஆச்சே.. மயிரேனு நினச்சிட்டு பெஞ்ச்மேல ஏறி நின்னுட்டேன்.. வகுப்பில எல்லாரும் சிரிக்கிறாங்க. எப்படியிருக்கும் சார் எனக்கு..

ஆமா சார். சும்மாவா விட்டீங்க ?
அது எப்படி சார் சிரிக்கலாம்.. அதுவும் என்னைப் பார்த்து..
ங்கொய்யா.. சிரிங்கிறீங்களா.....சொல்லிட்டு காலைத் தூக்கி பக்கத்திலேயிருந்த பையன் முதுகுல ஓங்கி ஒரு எத்து சார்..
அப்புறம் வீங்கிருச்சு..

என்ன. .....பையன் முதுகா சார்?..
இல்லைங்க.. என்னோட பேக்க்க்க்க்க்க்க்க் சைடூ....

அப்புறம் ஏன்னாச்சு சார் ?
போங்கடானு ஸ்கூல் விட்டு நின்னுட்டேன்..கொஞ்ச நாளா, ஆடு , மாடு , கோழி
பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தேன்.. எங்க நைனா பார்த்தாரு.. ஆகா.. இவன்
இப்படியேயிருந்தா , எவனும் பொண்ணு குடுக்கமாட்டாங்களே..
நம்ம பரம்பரை புட்டுகிடுமேனு நினைத்து , எங்கூரு கட்சி செயலாளருகிட்ட
கோத்துவிட்டுட்டாரு..
அவர் வீட்டில தள தளனு.. அப்புறம்  டீவிக்கு வந்துவிட்டேன்..

என்ன சார்..வேட்டைக்காரன் இடைவேளையில, டாக்டர குதிச்சமாறி ஒரே ஜம்ப் பண்ணீட்டிங்க..
பழச உடுங்க சார்..சில சமயம் கடந்து வந்த பாதைய திருப்பிப் பார்க்க கூடாது..

சார். நீங்க இப்படி சொல்வது , எங்கள் ஆவலை கிளப்புகிறது..
பாருங்க.. இப்ப நான் இருப்பது மறுபிறவி...அவ்வளவுதான் சொல்லமுடியும்..

ஓ.கே. சீரியல்.டைரக்டராயிருப்பது கஷ்டமான வேலையா? நீங்க ஒரே நேரத்தில இரண்டு , மூன்று சீரியல் எடுக்கிறீர்களே?
Maybe இப்ப வருகின்ற கத்துகுட்டி டைரக்டர்களுக்கு வேணா கஷ்ட்டமா இருக்கலாம்.. நாங்க எப்படினா........, சாயங்காலம் ஒரு ஏழு எட்டு கேமராவை எடுத்துட்டுப்போயி வீடு , ஆபிஸ் , தெருவோரம் எல்லாம் கட்டிட்டு வந்துவிடுவோம்..

அடுத்த நாள் , ரெக்கார்ட் ஆனதை அப்படியே கொஞ்சம் எடிட் செய்து ஒளிபரப்பிடுவோம்.. சிலசமயம் ரெக்கார்ட் சரியாயில்லைன்னா , வேற டைரக்டர்க்கு போனைப் போட்டு அவர்கள் எடுத்த படத்த சேர்த்துவிடுவோம்..யாருக்கும் தெரியாது...

இப்படிபடம் எடுக்கும்போது நடந்த சுவையான நிகழ்ச்சி ஏதாவது ?
நீங்க சொன்னதும் ஒரு நிகழ்ச்சி எனக்கு நினைவுக்குவருகிறது..ஒரு நாள் ஹோட்டல்ல  என்னுடைய உதவியாளர்..நல்ல பையந்தான்.. என்னைப்போல.. என்ன பண்ணுனான , கை கழுவ பாத்ரூம்க்குள்ள போயிருக்கான்..அப்புறம் மறந்துபோயி கேமராவை அங்க்கேயே வச்சுட்டு வந்துட்டான்..
கேமரா வேற விலை ஜாஸ்தி..
அப்புறம் வேற லேட்டஸ்ட் கேமரா வாங்கிட்டோம்..

பழைய கேமரா கிடைத்தா சார்..மேலும் புது கேமரா விலை அதிகமாகயிருக்குமே ?
பழைய கேமரா கிடைக்காம போயிடுமா சார்..?நாங்க வேலை செய்கின்ற டீவீ பேரச்சொன்னாலே போதுமே..  கேமரா கைக்கே வந்துருச்சு.. அப்புறம் ரெக்கார்ட் ஆனதை வெளியில விற்று, அங்க நிற்குது பாருங்க வெளி நாட்டுக்கார்.. அது..... அப்புறம் புது கேமராவெல்லாம் வாங்கிட்டோம்..

சார்.. நீங்க சொல்வதை பார்த்தா , அந்த நடிகை குளிக்..............................
ஷ்...ஷ்.. வேற ஏதாவது கேள்விகள் இருக்கா?...

ஓ.கே..சார் இப்ப வருகின்ற சீரியல்ல ,
புருஷனுக்குத் தெரியாம பொண்டாட்டி சோரம் போவது..
பொண்டாடிக்கு தெரியாம , புருஷன் சின்னவீடு வைத்துக்கொள்வது...
கொலை , கொள்ளை செய்து மாட்டிக்காம தப்பிப்பது,
மாமியார் கை, கால உடைப்பது,
மருமகளை தீ வைத்து எரிப்பது,
மண்ணாங்கட்டி மாமனார் எப்ப பார்த்தாலும் கை பைய எடுத்துட்டு மார்க்கெட் போவது..
மேலும் கக்கூஸ் போயி, கால் கழுவரவரை கேமராவா  கு#%^$&க்குப் பின்னாடியே தூக்கிட்டு போவது
இதைத்தவிர வேற நல்ல விசயம் எவ்வளவோயிருக்கே..அதையெல்லாம் எடுக்கலாமில்லை..


யோவ்.. ( ஆகா,, மரியாதை சார்.. மரியாதை...)
எனக்கு தெரியாத கதையா.. எங்க என்ன எடுக்கலாமுனு நீயே சொல்லு..

இல்ல சார்..
கம்யூட்டர் கற்போம் வாருங்கள்...
கைம்பெண்களுக்கு கல்வியறிவு,
வீட்டுப்பெண்கள் சொந்த தொழில் செய்வது எப்படி?
லோன் வாங்க வரைமுறைகள்..
நம் கடமைகள் மற்றும் உரிமைகள்..
புதிய மொழியைக் கற்கலாம்..
சுற்றுச்சூழல்....
இதுபோல..இன்னும்...........

யோவ்.நிறுத்து.. நிறுத்து ..ஆமா நீ தமிழ் நாட்லதான் இருக்கையா?.
இது போல எடுத்தா யாரையா பார்ப்பான்..ரேட்டிங்க் சர்-னு கீழே போயிடுச்சுனா..... எவன் பதில் சொல்றது?..

சார்.மக்கள் பார்ப்பாங்களே ஆமா நீங்க யாருக்கு பதில் சொல்லனும்..
எங்க தலமைக்குத்தான்.. ( நாக்கை கடித்துக் கொண்டு.. ).. இல்ல..இல்ல எங்க நிறுவனத்துக்கு..  இது மாறிதான்........ ஒரு பன்னாட தொழிலுக்கு வந்தான்.. ஆறு மாசம்....
இப்ப கையில்லாம் சிவந்துடுச்சு..

ஏன் சார் பாராட்டை வாங்கியா ??
யோவ்.. டீ கிளாஸ் கழுவிய்யா.. டீ கிளாஸ் கழுவி...

சார்.. மக்களுக்கு நல்லது பண்ணத்தானே ப்ரோகிராம் பண்றீங்க.. அப்புறம் என்ன சார்.. ?
80 வருடம் அனுபவமையா எங்க தலைவருக்கு.... அவருக்கு தெரியாதாயா எது நல்லது..எது கெட்டதுனு..  வந்துட்டானுக பேப்பர், பேனாவத் தூக்கிகிட்டு..பன்னாடப் பயலுக...

போ..போ.. போயி வேலைப் பாரு...
.
.
.
.
.

9 comments:

  1. வெட்டி வேந்தன், அமைப்பாளர்,அகில உலக பட்டாப்பட்டி பேரவைJanuary 27, 2010 at 1:16 PM

    உன்ன மஞ்ச துணி போத்தி , பட்டி , tinker , பெயிண்ட் பாத்தாதான், சும்மா இருப்ப ...

    ReplyDelete
  2. ஆட்டோ வரபோகுது ஜாகிரதை

    ReplyDelete
  3. //வெட்டி வேந்தன், அமைப்பாளர்,அகில உலக பட்டாப்பட்டி பேரவை said...
    உன்ன மஞ்ச துணி போத்தி , பட்டி , tinker , பெயிண்ட் பாத்தாதான், சும்மா இருப்ப ...//

    சாமி.. நல்லாயிருக்குனு சொல்றீங்களா?. இல்ல குழப்பிட்டேனு சொல்றீங்களா..
    புரியல சார்...




    //Tamilmoviecenter said...
    ஆட்டோ வரபோகுது ஜாகிரதை//

    அண்ணா.. வணக்கமுனா..
    இருப்பதிலேயே வெஜிடேரியனா எழுதியிருக்கேன்.. இதுக்கே
    ஆட்டோ வருமுனா ,
    நான் முன்னால போட்ட பதிவுகளுக்கு என்ன வரும்?...

    ReplyDelete
  4. நீங்க நல்லா எழுதுங்க. ஆட்டோ வந்தா நாங்க வந்து காப்பாத்தறோம்

    ReplyDelete
  5. //தமிழ் உதயம் said...
    நீங்க நல்லா எழுதுங்க. ஆட்டோ வந்தா நாங்க வந்து காப்பாத்தறோம்
    அண்ணா வணக்கங்க..//

    இப்படிபட்ட கமென்ஸ்தான் , எங்களுக்கு
    உண்மையை துகிழுரித்துக்காட்ட
    புத்துணர்சி அளிக்கிறது..
    இந்த வார்த்தைகள் போதும் சார்..

    நன்றி தமிழ் உதயம் ....

    ReplyDelete
  6. போ..போ.. போயி வேலைப் பாரு..//

    நீங்களுமா..?? :))

    ரெண்டு நாள்ள இத மூணுதடவ கேட்டுட்டேன்..

    நெம்ப தெகிரியம்..:))
    ----

    இன்னும் சாமிய ஏன் சார் துப்ப சொல்றீங்க..:))

    ReplyDelete
  7. மிக நல்ல இன்று ஒரு தகவல்..::)) நன்றி.

    ReplyDelete
  8. புரியுது...... ஆனா புரியல......

    ReplyDelete
  9. //பலா பட்டறை said...
    போ..போ.. போயி வேலைப் பாரு..//
    நீங்களுமா..?? :))

    ரெண்டு நாள்ள இத மூணுதடவ கேட்டுட்டேன்..
    நெம்ப தெகிரியம்..:))
    இன்னும் சாமிய ஏன் சார் துப்ப சொல்றீங்க..:)) //

    நம்ம சாமியப் பற்றி ஒரு பதிவு எழுத்வேண்டுமென ரொம்ப
    நாளா ஒரு ஆசை.. மறந்துவிடக்கூடாது என் நினைத்து ............
    பதிவை முடித்ததும் மாற்றிவிடலாம் சார்..





    //மன்மதக்குஞ்சு said...
    புரியுது...... ஆனா புரியல...... //

    எழுதுன எனக்கே இன்னும் புரியல..
    இன்னும் என்னோட கண்ணு மஞ்ச ( இருட்டு ) கட்டிருச்சு..

    சரியாகும் வரை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க Mr குஞ்சு சார் ...

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!