Pages

Monday, August 30, 2010

சொர்கமடி ஊர் எனக்கு..

என்னாங்கையா.. ரெண்டு வ்ருஷமா ஊர் பக்கம் வராட்டி...
ஊர் இப்படியா மாறும்?.

இது தெரியாமா , நானும்..தாத்தா பற்றியும்,  அம்மா பற்றியும் கண்டபடி ஒளரிக்கிட்டு இருந்திருக்கேன்..   கொடுமையடா சாமி...

இரவை பகலாக்கும் வெளிச்சம்..
ரோட்ல பாலும் தேனும் ஓடுது..
சுத்தமான ரோடு.  சுகாதாரணமான காற்று..

அதுக்கெல்லாம் காரணம் கழக அரசுக்கள்..  ஓ..ஓ... சந்தோசமாயிருக்கய்யா..

வீதில ஒரு பிச்சைக்காரனும் இல்ல.. எல்லாருக்கும் அரசே வீடு கட்டிக்கொடுத்திருக்கு..( உள்குத்து எதுவுமில்லை...)

பேஸ்..பேஸ்.. சூப்பராயிருக்கு....

அப்படீனு சொல்லாமுனு பார்த்தேன்.. ஊகூம்..


டிஸ்கி..
அய்யா.. அரசியல் பெருந்தலைகளே..
ஒரு ரெண்டு வருஷ்ம்..கையச்சொறியாமா.. நாட்டுக்கு ஏதாவது பண்ணுங்கப்பா..  போகும்பொது நீங்கள் சேர்த்த சொத்துக்களை.. கூடவே அனுப்பி வைக்க.. ஏதாவது கண்டுபிடிக்கிறோம்.

Thursday, August 26, 2010

போட்டோ காமெடி 15..


.
.
.


எப்பப் பாரு..அப்பாவுக்கு மட்டும்  “பலூன்”  வாங்கித்தரீங்க...

எனக்கு?..
.
.
.

Wednesday, August 18, 2010

உமாசங்கரை பழிவாங்கிய அரசு எ(இய)ந்திரத்திற்கு...

.
.


சுடுகாட்டில ஊழல்? - அமைச்சராக்கி அழகு பார்ப்போம்..
ஸ்பெக்ரம் ஊழல்? - ஊ..ஊ..சந்துமுனையில சமரசம்..

கணவனுக்கு தண்டனையா? - ’கல்’இனத்தை துடைத்து அழிப்போம்..
காவல் தெய்வங்களை - கண்மூடி காதலிப்போம்..

தமிழக மீனவர்களா? - சரி..சரி.. தந்தி அடி..
அறிவு துளிர்க்கிறதா? -  டாஸ்மார்க்கை கையிலெடு..

ஆங்கிலத்தில் தடுமாற்றம்
- அடடா..சட்டம் மாற்றம்..
கேள்விகள் பிறக்கிறதா? - கடற்கரையில் படுத்துவிடு..

முதுமையில் சிகிச்சை?
- முடிந்தவரை அனுப்பிவிடு..
முக்கல், முனங்கள் வந்தால்..
முக்காடு போட்டுவிடு..

தனிமனிதச்சுதந்திரமா? - தக்காளி போட்டுத் தள்ளு..
ஊழலுக்கு எதிரியா? - வீடு கட்டி போட்டுத்தள்ளு..

மனதில கேள்விகளா?
- மாதர்(?) குஷ்புவை.. மகிழ்வுடன் மேடையேற்று..
ஊழலுக்கு இவன் தடையா? -  குந்த விட்டு குண்%$#டி அடி..

கரம்சந்த் காந்தி.. இந்திரா காந்தி..
ராஜீவ் காந்தி.. சோனியா காந்தி..
ராகுல் காந்தி.. பிரியங்கா காந்தி(!)..
மிருகத்தை பாதுகாக்கும் ,அய்யோ.. நம்ம  மேனகா காந்தி..

அய்யா காந்திகளும்..அம்மா காந்திகளும்..
உடன்பிறந்த மற்றும் பிறவா சகோதரிகளும்..
கருப்பு எம்.ஜி.ஆர்..  காடுவெட்டி மாமேதை..
வெள்ளை வேட்டி கட்டி..வீறாப்பா போராடும்..
மனிதர்களை மிருகமாக்கி, மந்தைகளாய்..... ஆக்கும் வரை..
ஓயாது பாடுபடும் ஓங்காரச்செல்லங்களே..

கும்பல்கள் கேட்கட்டுமே.. கும்மாளம் அடிக்கட்டுமே..
கூச்சல்கள் பல கண்டோம்.. குடும்பம்தான் எங்கள் (தொலை)நோக்கு..

வாழ்க ஜனநாயகம்.. வளர்க வாழும் கடவுள்கள்..
வாழையடி வாழையாக.. வளைந்தைபடி தோள் கொடுப்போம்..

டிஸ்கி :
ஊழலைய அம்பலமாக்கிய உமா சங்கருக்கு, பல தடைகள் வந்தாலும்..
உண்மை ஒரு நாள் வெளிவரும்..
அதுவரை மனிதனாய்... தோள் கொடுக்க விரும்பும்.. மனிதர்களே..
ஒன்றுபடுங்கள்..

.
.
.

Saturday, August 14, 2010

சுற்றும் விழிச் சுடரே...

.

  விடியற்காலை 5 மணிக்கு, வெறும் வயிற்றில், சூடா காப்பி குடிச்சிருக்கீங்களா?.  நான் குடிச்சேன் சார்.  போன மாசம்...அதுவும் ஒரு பன்னாட பயலால.  யாருனு கண்டுபிடிச்சிட்டீங்களா?.  ரைட்....அதே.....அவனேதான்.  பழைய பதிவுகளில், வரும் வில்லன் “சின்ராசே” தான்.  பிஸ்னஸ்ல ’கால்’ வெச்சப்பப் பார்த்தது. பல மாசம் ஆயிடுச்சு. காலங்காத்தாலே, “இதோ வந்துட்டே இருக்கேன். வெளிய போலாம்”-னு, போன் அடிச்சான்.  விதி சார் விதி.  போனோம்.


ஆங்... சொல்ல மறந்துட்டேனே.. அவன் வந்தது BMW கார்லே. கருப்பு கலரு..புஸ்க்குனு வந்து நிறுத்தி, “ஏறு”-னு சொன்னான்.  சொந்த தொழில்ல, கொடி கட்டிப்பறக்கிறான் போல.  கார்-னா, அது  கார் சார். சொட்டை தலையில, எண்ணெய் வெச்ச மாறி. சும்மா சர்ர்ர்ர்ர்ர்ர்னு வழுக்கிட்டு போகுது.  காருக்குள் இருந்து வரும் இசையா..இல்லை..நறுமணமா?. தெரியலே.  சுகமா கண்ணு சொருக்கிச்சு.  சின்ராசு எழுப்பி, வெளிய பாருனு கைய காட்டுறான்.  ( காலங்காத்தாலே 5 மணிக்கு, நாய்-ய கூட்டிக்கிட்டு வாங்கிங் போயிட்டு இருக்காங்க சில பைத்தியக்காரிக.  எப்படி சார், இந்த சீன பைங்கிளிகள் மட்டும் சிக்-னு இருக்காளுக.  அந்த பல்லு.... அந்த கண்றாவிதான், இதுக்கு மேல என்னை பேச விடாம  தடுக்குது..)

காபி கடையில நிறுத்திக்கிட்டு, பழைய கதைகளை பேச ஆரம்பித்தோம்.  எனக்கு தெரியும் சார்.  சின்ன வயசியிலிருந்து, காலேஸ் வரை, ஒரே கோட்டில, பயணம் செஞ்சவங்க நாங்க...

ஏழைக்குடும்பம். அண்ணன் தம்பிகளே ஆறு பேர். கரண்டே இல்லா கிராமம். கஷ்டப்ப்ப்ப்பட்டு படிச்சான். அதுவுமில்லாம, அடிக்கடி அய்யாவுக்கு ______ வெளிய வந்திடும். ( அறிவு, நக்கல், நையாண்டி.. எதோ ஒண்னைப்  போட்டு வாக்கியத்தை படிச்சு முடிச்சுக்கோங்க.. )
அப்புறம் காட்டை விற்று, கனடா... திடீர்னு சிங்கை.. சில பல கம்பெனி.. உதைபட்டு வெளியே..  சொந்த பிஸ்னஸ்.. நஷ்டம்.. துரத்தல்.. ஓட்டம்.. தோன்றுதல்.. மறைதல்.. உள்ளே.. வெளியே..

இப்ப எதுக்கு ’பத்து வருசத்து’ கதைய இரண்டு நிமிசத்தில சொன்னேனு யோசனை பண்றீங்க பார்த்தீங்களா!!.  அதுதான் சார், உங்ககிட்ட எனக்கு பிடிச்ச விசயம்.  வேற ஒண்ணுமில்ல பாஸ்..
காப்பி ஆறிட்டா, வாயில வைக்கமுடியாது.

வாழ்க்கை சக்கரம் சுற்றிக்கிட்டேயிருக்கு.  கடைசியா அவனை, அவனுடைய கல்யாணம் நடந்த பெருமாள் கோயில பார்த்தது.  அருவா முனையில ஆடம்பரக்கல்யாணம்.  சுற்றம்சூழ(!), நாலு பேர் முன்னிலையில் நாலு நிமிசத்தில முடிந்தது.  அவனுக்கு வாய்த்த தங்கமணி, வீட்டுக்கு ஒரே பொண்ணு.  அப்பவே, கொஞ்சம்  தாட்டி....  எப்படீனா, சின்ராசு அதை சுற்றி வரனுமுனாவே ரெண்டு நிமிசம் வாக்கிங் போகனும்.  அவனோட மாமனார், மனுசனா  சார் அவன். முறுக்கு மீசை. மூஞ்சிய வெட்டு. பழைய ரவுடியாம். அருவா எடுத்துட்டு , ”கட்டுடா தாலி..”-னு ஆடினார் பாருங்க. கையெல்லாம் நடுங்கிச்சு.  ( என்ன இருந்தாலும் பழைய ரவுடியில்லையா.. வயசானாவே ஆடும் போல. பேசாம எங்காவது முதலமைச்சர் போய் தொலையாம. ஆனா.. குஷ்பு குத்த வெச்சு ஆடியிருந்தாலும்.. அது போல ஆட்டம், ஆடியிருக்க முடியாது பாஸ்..)


சரி. அதை விடுங்க.  எவ்வளவோ கஷ்டபட்டு ,வாழ்க்கையில முன்னேறி, கார் வாங்கி.. அதுமட்டுமா, அதுல நண்பனை உக்கார வெச்சு, காபி வாங்கி கொடுப்பவர்களை, விரல் விட்டு எண்ணிடலாம்.  சரியா சார் நான் சொல்வது?..

அந்த தன்னம்பிக்கை, முன்னேற வேண்டும் என்ற வெறி..வாழ்க்கையில, இவன மாறி ஒருத்தனை நண்பனா அடைய, கொடுத்து வெச்சிருக்கனும் பாஸ்.   மக்கா.. இப்ப சொல்றேன்.. வாழ்க்கையில முன்னேறி, நல்லா வாழந்துகாட்டி, எல்லோருக்கும் முன்னோடியா, நல்ல உதாரணமா இருங்க..
சுறுசுறுப்பா செயல்படுங்க.

சின்ராசாவாலவே முடியுமுனா, ஏன் நம்மால் முடியாது?  கொஞ்சம் யோசனை பண்ணுங்க பாஸ்.  
( நல்லவங்க அப்படியே அடுத்த ப்ளாக் ஜம்புங்க.. )
.
.
.
.
நம்மாளுக தொடருங்க...
.
.
.

”ஏண்டா சின்ராசு.. இவ்வளவு பட்டு, இந்த நிலைக்கு வந்திருக்கேனா, அது சாதாரணம் இல்லை. அதுக்காக, பலதை இழந்திருப்பேயில்லை”-னு நான் கேட்க,

”இல்ல..இல்ல..  நான் இழந்தது ஒண்ணு மட்டும் தான்”- சின்ராசு சொல்ல,

“என்னதுனு?” நான் கேட்க,
.
.
.
.
.
.
.
தன்மானம்...  ”-னு அவன் பதில் சொல்ல............

போங்க பங்காளிகளா.. குடிச்ச காபி, வயிறுல கலக்குது.  நான் போறேன்..

டிஸ்கி..
ஆங்.. சொல்ல மறந்துட்டேனே.  அவனோட மாமனார், அதாங்க, அந்த பழைய ரவுடி.  போன மாசம்  10 கோடி சொத்தை வெச்சுட்டு, ஒன் வே டிக்கெட் எடுத்துட்டாராம்...

.
.
.

Tuesday, August 10, 2010

எந்...ந்..ந்......திரன் ஆடியோ ரிலீஸ்..


.
.
.
டீவீ-யே பார்ப்பதில்லை என்ற என்னுடைய சபதம், உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். சே..யார் கண்ணு பட்டதோ..  யாரோட எதிர் சாபமோ?.. போன வாரம், நண்பர் வீட்டில மாட்டிக்கொண்டேன். சுமார் ரெண்டு மணி நேரம் பாஸ்.. உக்காரவெச்சு உருவிவிட்டானுக.. ஆகா.. பார்த்தீங்களா?. எதைப்பற்றி பற்றி பேசுறேனு சொல்லாமலேயே, புலம்பிட்டு இருக்கேன். போன வாரம், மலேசியாவில் நடந்த ”எந்திரன் ஆடியோ நிகழ்சி” பற்றிதான்...எவ்வளவோ கோடி செலவு பண்ணி  நடத்தினாங்களாம்.. அமர்களம்..

அதுலேயும், நம்ம விவேக்கும் ஷங்கரும்.. மனுசங்களா அவர்கள்?.. பேசினாங்க..பேசினாங்க.. பேசிக்கிட்டே இருந்தாங்க.  அவிங்க கலக்குன கலக்குல, எனக்கு தண்ணி வந்திடிச்சுனா பாருங்களேன்..   சின்ன கலைவாணரின் அறிவு, சிந்திக்கவைத்தது. எவ்வளவு போராட்டங்கள்.. எதிர் வினைகள்.. பத்திரிக்கையில் இருட்டடிப்பு.. எல்லாவற்றையும், இடது கையால ஈஸியா ஒதுக்கிவிட்டு..கம்பீரமா அரங்கதில் நிமிர்ந்து நின்னாரு பாருங்க..    கலக்கல்..

படத்தில நடித்த ..அதற்கு உதவிய.. பணம் பட்டுவாடா பண்ணிய... ஏன்? அரங்கத்தின் வாட்ச்மேனைதுகூட விடலை..  நல்ல ஞாபக சக்தி விவேக் உங்களுக்கு..

”அழகிருந்தால் அறிவு இருக்காது..
அறிவிருந்தால் அழகிருக்காது..
ஆனால ரெண்டையும் ஒருங்கே பெற்றவர் ஐஸ்வர்யா ராய்”.

படத்தில அவருடைய நடிப்பு ஏ-கிளாசாம்..  (அமிதாப்ஜீ.. அம்மணிக்கு சுற்றிப்போடுங்க.. மகன் கிடக்கான்..  )

கண்டிப்பா படத்தை பார்க்கனும் பாஸ்.. உயிரைக்கொடுத்து, நாலு காலை தூக்கிட்டு, நாட்டு மக்களுக்கு கருத்து சொன்னதற்க்காவே.. படத்தை பார்க்கனும் விவேக் சார்..

டவுட்...
மனுசனோட ஆயுள் என்பது ,
குதிரைகிட்ட இருந்து சில வருஷம்..
நாய்கிட்ட  இருந்து சில வருஷம்..
நாதாரிககிட்ட  இருந்து சில வருஷமுனு எங்க பாட்டி ஒரு காலத்தில கதை சொல்லுச்சு.... அதெல்லாம் பொய்யி..

இப்பத்தான் பார்த்தேன். மேடையில, அண்ணன் ”கலாநிதி  மாறன்” அழகா , இளமையா தெரிஞ்சாரு.. ஒருவேளை , நான் கண்ணாடி போடனுமா?.. எதுக்கும் காரமடை ஜோசியருக்கு மிஸ்ட் கால் கொடுத்து கேட்டுக்கிறேன்..
( ஆமா மக்கா.. பத்திரிக்கை ஆபீஸ் எரிப்பு வழக்குல. இறந்தவங்க சின்ன வயசா?.. பாவம்.. அவிகளுக்கு ஆயுள் கம்மிபோல.. இல்ல .. பாட்டி சொன்ன கதைக்கும் , இதுக்கும் சம்பந்தம் இல்ல..சும்மா  ஜெனரல் நாலேட்ஸ்க்கு கேட்டேன்..)


டிஸ்கி..
  • சொத்துபத்து விற்றாவது..
  • மூணு நேரம் சோற்றை திங்காமலாவது..
  • குழந்தைகளின் ஸ்கூல் பீஸை கட்டாமலாவது..
கொஞ்சம் பணம் சேர்த்துவெச்சுக்குங்க மக்கா.

படம் வந்ததும், குடும்பத்தோட போயி பாருங்க.. பாவம்.. கோடிக்கணக்கா இறைச்சிருக்காங்கலாம். அவங்களும் பிழைக்கவேண்டாம்?
இவ்வளவு சொல்லியும், நொன்ன ஞாயம் பேசிக்கிட்டு , திருட்டு வீடியோவுல பார்க்கறவங்களை, ”ஆதிவாசிகள் லிஸ்ட்”-ல சேர்க்க, அரசாணை ரெடியாயிட்டு இருக்கு..கபர்தார்..[ சரி..சரி... விடுங்க மேடம்.. 
நாங்க அப்படித்தான்.
”வந்தாரை வாழவைப்போம்” ]
.
.
.

Tuesday, August 3, 2010

பணப்.......பு.......பு.....பு...புழக்கம்...

.
.
.
வணக்கம் பிரதர். எனக்கு ரொம்பநாளா ஒரு டவுட்.  இந்த பணபுழக்கம்..பணப்புழக்கமுனு சொல்லிக்கிட்டு இருக்கானுகளே.  அப்படீனா என்னாப்பா?. ஏன்னா...எவனக்கேட்டாலும்,காசு இல்லேங்கரான்.   ’பங்கு’ங்குரான்..  ’வர்த்தகம்’னு கூவரான்.  ஒருநாளு ஏறுதுன்னு  சொல்றான்.. அப்பால .இறங்குதுனு சொல்றான்.. . பிஸ்னஸ் டல்லுங்குரான்.

எனக்கு ஒரு மண்ணும் புர்லே. டெய்லி ஆட்டோ எடுத்துகினு வந்து வேலை வாய்ப்பு குடுக்கிறானுகோ.  அதாம்பா.. காந்தி பேரச் சொல்லிக்கினு கடப்பாறை எடுத்துக்கினு போனா 200 ரூபா குடுக்கிரானுகோ. அதுல அவனுக பங்கு போக, எனக்கு ஒரு குவாட்டரு..  கோழி..கூட ஆப்பாயில்.. எனக்கு என்னா கவலை?..

இப்ப மேட்டருக்கு வரேன். என்னோட ஆளு பத்தாங்கிளாசு பெயிலு..நாலு  விசயத்தை தெரிஞ்சிகினு, அதுகிட்ட பிட்டப் போடலாமேனு  நார்வேக்காரரை  கேட்டேன். அவரு ரீசெண்டா, ”அதப்பற்றி இப்ப பேச முடியாது. நானு  ரொம்ப பிஸி. பெண்  பதிவருக்கு சுதந்திரம் வாங்கித்தரவே, நாளு கிழமை  பார்க்காம சுத்திகினு இருக்கேன். வேட்டியக்கட்டிக்கினு வந்துட்டானுக..தூ....” -ன்னு துப்பிக்கினு  அப்பீட் ஆயிட்டாரு.   ( ஏஞ்சாமி..அவருக்கு  வேட்டிக்கட்டிக்கினு கேள்வி கேட்டா புடிக்காதா?. என்னா பேச்சு பேசராரு?.  ஒருகோடி குடுத்தாலும் ,  நான் ஆப்ரேசன் பன்ணிகமாட்டேன்  )

அப்பால, எட்டு பாஷை பேசுவேனு சொல்லிக்கினு இருக்குமே. அதையும் கேட்டேன். அது என்னமோ டீவீ பொட்டிக்கு பேச்சுக்குடுக்க போகனும். ஆறு மணிக்கு அது காந்திசிலையாண்ட வந்திருமுனு தோள்ல பையும், கால்ல சுடுதண்ணியுமா தவிச்சிக்கிட்டு இருக்கு.. எது வருமுனு எனக்கும் தெர்லே. என்னொட தோஸ்துக்கு தெர்லே.

சரி..பெரிய மனுஷனுக சாகவாசம் நமக்கெதுக்குனு, குவாட்டர் எத்திக்கினு கடவீதியாண்ட போனேன். நம்ம மங்குனி சார், டீ-ய ஆத்தி ஆத்தி குடிச்சிக்கினு இருந்தாரு. நல்ல வெள்ள வேட்டி, வெள்ள சட்ட. ரியல் எஸ்டேட் பிஸ்னஸ்ல சரி காசு போல(?). அவரை கேட்டா,   ”ஒரு கிரவுண்ட் வாங்கு. அப்பால  பதில் சொல்றே”-னு சிலுப்பறாரு.

இது என்ன, அவ்வளவு பெரிய ராணுவ ரகசியமா பிரதர்?. கடசியா நம்ம காளி கோயில் பூசாரிதான்  உங்களப் பார்க்கச் சொன்னாரு.  சரி. பதில் சொல்லு..?
- குவாட்டர் கோயிந்தன்


-----------------------------------------------------

வாய்யா கோயிந்து..நல்லாக்கீறியா?. நீ எதுக்கு நார்வேகாரரை கண்டுக்கினு வந்தே.. அவரு குஷ்பு பத்தி சொன்னாமட்டும், ”டாண்”ணு வருவாரு.. இல்லாங்காட்டி பொண்ணு  விடுதலை.. பேராளி.. துப்பாக்கி.. தோட்டா.. சைபரு.. கிரைமு  .. சொல்லிக்கினு இருப்பாரு.. ஆனாலும் உனக்கு மகா நெஞ்சழுத்தையா...வேட்டி கட்டிக்கினு அங்கன போயிருக்கே..

ஆமா அடுத்த பார்ட்டி... அதுகூட பேசவே முடியாதே. உனக்கு ஒரு மண்ணும் தெரியாதுனு சொல்லியிருக்குமே. அது எப்பவும் அப்படித்தான்.. ஊருல எல்லாப் பயலும் புண்ணாக்கு மு$#%#.. அதுக்குமட்டும்தான் எல்லாம் தெர்யுமுனு ஆட்டிக்கினு இருக்கும்.
உனக்கு என்னா?..பணப்புழக்கம்னா என்னா?-னு தெர்யனும்.. காதை தொறந்துவெச்சுக்க.. கத சொல்றேன்..

ஒரு ஊரு. மொத்தமா ஒரு நூறுவீடு இருக்கும். ஏதோ ஒரு பஞ்சாயத்துல இருக்கு.. அப்பப்ப மினி பஸ் வரும். இல்லாட்டி எலெக்‌ஷன் நேரத்தில கட்சிக்காரனுக வருவானுக...( வெள்ள வேட்டி கட்டிக்கினு, பிளஷர் கார் எடுத்துக்கினு, உன்னோட நல்னை தூக்கி நிறுத்தரது தான் எங்களோட குறிக்கோள்னு , போற வரவனையெல்லாம் கையெடுத்து கும்பிடுவானுக..அவங்களைத்தான் சொல்றேன்...)

அந்த ஊர்ல, கள்ளுக்கடை.பக்கதில சால்னா கடை..  ரெண்டுவீதி தள்ளிப்போனா முடிவெட்ற கடை.. அருகில், கறிக்கடை பாய்.. ஒதுக்குபுறமா ஆறு..அங்க வேல வெட்டி இல்லாப் பயலுக எருமை மேய்ச்சிக்கினு இருக்கானுக. பக்கத்தில ஏழைபாளைக,  துணி துவச்சுகினு இருகானுக.. சந்துல டீக்கடை... அதுல வெட்டிப்பயலுக நாலு பேரு..( நான் மங்குனிய சொல்லலே... போட்டுக்குடுத்துராத சாமி..)


அங்க ”ஹெலிக்காப்டர் இறங்க, எலிபேட்டோ”, அல்லது ”ஆயிரம் ஓட்டோ” இருந்திருந்தா, அம்மா....... அங்கனையும் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கும். நூறு வீடு.. மொத்தமா நாற்பது ஓட்டு..நாக்கா வழிக்கமுடியும்?.. அதனால..அந்த கிராமம.. “ அம்மா, அய்யா, அண்ணன் , தம்பி  “ யார்கண்ணுல படாமா அப்படியே இருக்கு..

இதுவரைக்கும் புரிஞ்சுதா?..( புரியாதவங்க..... ஏதாவது கவிதை..கதைனு, பக்கத்தில.....  கல்லா கட்டிட்டிக்குனு இருப்பானுக..அங்க போய்
  • சூப்பர்..
  • நெஞ்சை நக்கிவிட்டீர்கள்..
  • எங்க சார் உங்க காலு?..
  • ஆகா..அருமை..
  • இதுபோன்ற பதிவை, வாழ்க்கையில படிச்சதில்லை..
  • என் அறிவுக்கண்ணை திறந்துவிட்டீர்கள்..
  • நெஞ்சு கனக்குது பாஸ்..
அப்ப்டி  சொல்லிக்கிட்டு .....போயிட்டேயிருங்க..
சத்தியமா....இது உங்களுக்கான பதிவேயில்லை.. )

மத்தவங்க....
ஓ.கே..
கள்ளுக்கடைகாரன் , கறிக்கடைகாரன்கிட்ட கடன் வெச்சுருக்கான்..

கறிக்கடைகாரன், கோழி சப்ளைபண்றவன்கிட்ட கடன்..

கோழிபண்ணைக்காரன், ஊர் குஷ்$%#க்கு கடன் வெச்சுருக்கான்..( அட.அந்த விசயத்துக்குமா?....ஆமாய்யா..ஆமாம்...)

குஷ்^$%#, முடிவெட்டரவ்ன்கிட்ட கடன்..( ப்யூட்டி பார்லர் பாஸ்.. மேலும்  முடிவெட்டறவன் கொஞ்சம் வயசானவன்)

முடிவெட்டறவன், கள்ளுக்கரான்கிட்ட கடன் சொல்லி குடிச்சிருக்கான். (அது பிரச்சனையாயி..கள்ளுக்காரன் பொண்டாட்டி, விளக்குமாற்றுல, புருஷனை அடிச்சது தனிக்கதை..)


இப்படி எல்லாரும் கடன்காரனாயிருங்காங்க..
அங்க ஒரு படிச்சவன். என்னையமாறி(!).. மக்கள் காசுபணம் இல்லாம, கஷ்டப்படரானுகளே!.. இவனுகளுக்கு, ஏதாவது பண்ணலாமுனு முடிவு பண்ணி, அம்பானி பையனுக்குக்கு கடிதாசு போட்டுச்சு.. அதாவது, அங்கன கம்மா கரையில, பெட்ரோல் நாத்தம் அடிக்குது..குழி
தோண்டி , பைப் வெச்சு உறிஞ்சா, பெட்ரோல வந்தாலும் வரலாம்..  முட்டாப்பயலுக மூளைய யூஸ் பண்றதுக்குள்ள, சீக்கிரம் வந்து பாருனு...

அம்பானி பையனும், அரை டிராயார் மாட்டிக்கினு, கண்ணுக்கு கருப்பு கண்ணாடி போட்டுக்கினு, பெரிய ஜீப் எடுத்துகினு வந்தாரு.. வந்தவரு தண்ணி பாட்டில எடுக்காம வந்துட்டார்.. நாக்கு வறலுது..அப்படியே சைட்ல  கள்ளுக்கடைகுள்ள நுழைஞ்சாரு..

இந்தாப்பா 100 ரூபா.. நல்ல ஒரு மரத்து கள்ளா எடுத்து வை.. சீக்கிரம் வாரேனு , பெட்ரோல் பாக்க போயிட்டாரு..  கள்ளுக்கடைக்காரன் பார்த்தான்.. ஆகா..100 ரூபா..
அப்படியே, கறிக்கடை பாய்க்கு,  செட்டில் பண்ணி சால்னா கடை ஓட ரெடி பண்ணிட்டாரு.

பாய்..அதை எடுத்து, கோழி மீனு சப்ளை பன்ணினவனுக்கு பைசல் பண்ணிட்டாரு

கோழிக்காரன், குலதெய்வம் குஷ்&%^% க்கு, கொடுத்து  செஞ்சோற்றுக்கடனை(?) அடைச்சுட்டார்(?)..

குலதெய்வம், முடிவெட்டறவனுக்கு...

முடிவெட்டறவன்..பணத்தை எடுத்துக்கிட்டுப்போய்..கள்ளுக்கடைகாரன் மூஞ்சில வீசிட்டான்..

இப்ப கள்ளுக்கடை கல்லால, 100 ரூபா இருக்கு.. அம்பானி பையன் கோபமா உள்ள வராரு..
“எவனோ ஒரு பன்னாடை..பெட்ரோல்க்கும், ஆட்டுப்புழக்கைக்கும் வித்தியாசம் தெரியாம, லெட்டர் போட்டு..    சே.. கர்மமடா சாமி.. இந்நேரம், 10 கோடி  சம்பாரிச்சிருக்கலாம்” னு. பணத்தை எடுத்துக்கிட்டு வெளிய போயிட்டான்.

இப்ப..

பணம் சேரவேண்டிய இடத்தில சேர்ந்திடுச்சு..
யாருக்கும் கடன் இல்லை.. எல்லாம் அழகா,  செட்டில் பண்ணிட்டானுக..
அம்பானி பொழப்ப பார்க்க டெல்லி போயிட்டாரு..

இதுக்கு பேர்தான் பணப்புழக்கம்..

( ”நாட்டை, விரைவில வல்லரசாக்கப்போகின்றோம்”,  என்று  வெள்ள சட்டை அணிந்த பெருமக்கள் வருவார்கள்..  அவர்களுக்கு  உங்கள் பொன்னான வாக்கை இட்,டு வெற்றிபெறச்செய்யுமாறு தாழ்மையுடம்  கேட்டுக்கொள்கிறேன்..

அவர்கள் நினைத்தால், ஆயிரம் அம்பானிகளை உருவாக்கமுடியும்..நாமும் கடன்களை அடைத்துவிட்டு, நெஞ்சு நிமிர்த்தி..பீடு நடை போடும் காலம்  வெகு தொலைவில் இல்லை.....நன்றி..)
.
.
.