Pages

Wednesday, January 19, 2011

ம்.. பெருசுகளுக்காக..

படிப்பறிவு ....ம்...ம்...கொஞ்சம்.     படிக்கும் காலத்தில, பழுத்து, புழுத்து, காலத்தின் கோலத்தில கல்யாணம்.

சாட்சியாக இரு குழந்தைகள்.   குழந்தைகளின் படிப்பு, செலவு.. பராமரிப்பு.. Don't Worry மாம்ஸ்....... எல்லாம் பெருசுவின் தலையில்.


குடி..குட்டி..கூ****..    வாழ்க்கை இன்பமாக போய்கொண்டிருக்கிறது.
யாருக்கா?.... உம்....தெரிஞ்ச குடும்பத்தில், இப்படி ஒரு மகன் கேரக்டர்.

பாவம் பெரிசு.   மகனை படிக்க வைத்தார். ஏறவில்லை..
பணியில் சேர்த்துவிட்டார்.. முடியவில்லை...

ரிட்டையர் ஆன பணத்தில , மகனுக்கு, லேத் கம்பெனி வைத்துக்கொடுத்தார்.
ஒவ்வொன்றாக விற்று, புதல்வன் மதுவின் மூலமாக, அரசுக்கு உதவ அதுவும் அந்தோ!!!

காலை எழுந்ததும், சரக்கு... அதுவும் எப்படி? சுயமா  நிற்ககூட முடியாதளவுக்கு.    அப்புறம் தெருவீதி உலா..மதியம் மீண்டும் கடைக்கு திரும்பல்.  நல்ல தூக்கம்.. தந்தைக்கு துக்கம்..

மாலை எழுந்ததும், மறுபடியும் கடை.  மயங்கி விழும்வரை ஆட்டம் பாட்டம்..

வாழ்க்கைச்சக்கரம் சுழல்கிறது. இப்போது அன்பருக்கு வயது 50.
கால், கை விரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கம் திரும்பி, ஒவ்வாமையை  காட்டத்துவங்கிவிட்டது.

துன்பங்கள் பல வந்தாலும், துடைத்து எறிந்துவிட்டு, துள்ளலாக துயிலும் இடம் மதுபானக்கடை என ஆயிற்று..

பிறந்தோம்.. வளர்ந்தோம்.. வாழ்ந்தோம் .. சென்றோம்..”.. இதுதான் வாழ்க்கைச்சக்கரம்....

ஆம்..... நாளை, மகனுக்கு 12 ஆம் நாள்.... கருமாதி...
.

.
.

டிஸ்கி 1
அய்யா பெரியவர்களே. உங்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்..
தயவுசெய்து, உங்கள் குழந்தைகளுக்கு, நல்ல படிப்பை கொடுத்து, சுயமாக முன்னேற மட்டும், வழியை காட்டுங்கள்.

டிஸ்கி 2
அதீத அன்பால், உங்கள் சேமிப்பை, வாரிசுகளுக்கு கொடுக்கும்முன்..தாரக மந்திரத்தை மனதில் நிறுத்தி, முடிவை எடுங்கள்.. ( ”என் காலத்துக்குப்பின்..”)


டிஸ்கி 3
பெரியவர்(74),  பழைய சைக்கிளை மீண்டும் துடைக்க ஆரம்பித்துவிட்டார்..ம்.

பேத்திகளை படிக்கவைக்க , நாளை முதல்,  இரவு பணியாளராக ஓரிடத்தில் சேரப்போகும் அவருக்கு,  


என் வருத்ததை தெரிவிப்பதா?  அல்லது  வாழ்த்துக்களையா?...
.
.

Tuesday, January 11, 2011

கடந்..ந்ந்ந்ந்ந்த வருடம் - தொடர் பதிவு(!)

.
.
.
எந்த ஒரு நிகழ்வுக்கும், ஒரு ஆரம்பம் இருக்கும். இந்த பதிவுக்கான ஆரம்பம் இங்கிருந்து.    அப்படி ஒரு புள்ளியில் ஆரம்பித்த இந்தத்தொடர் ,  காடு.. மேடு.. மலை.. குட்டை.. நதி.. ’நிதி’ எல்லாவற்றையும் கடந்து அண்ணன், அஞ்சா நெஞ்சன் டெரர் மூலமாக என்னை  அடைந்துள்ளது.. உஷ்.. எவ்வளவு பெரிய பா(வா)க்கியம்(!)...

இதை படித்து முடித்ததும் , 10 பேரை கோக்க வேண்டுமாம்.  ”சேர்ப்பது , கோர்ப்பது,  வெட்டுவது, அறுப்பது.. அணைப்பது”.  இதில் நாங்கள் டாக்ட்ரேட் வாங்கியிருப்பது..  பாவம்..பதிவுலகுக்குத் தெரியாதல்லாவா?.

விடுங்க .. இப்ப தெரி(ளி)யவைத்துவிடுவோம்.1. நமக்கு பிடித்த நல்ல விஷயங்கள்.
நாய் வளர்ப்பது. சமீபத்தில் ஒரு நாயை, பாலும் தேனும் ஊட்டி வளர்த்தோம். வெறி  பிடித்ததால், மங்குனியின் ஆலோசனைப்படி  துரத்திவிட்டோம். Next Question...


2. மறக்க முடியாத சம்பவம்
இரண்டு. இதை சம்பவம் என்று சொல்வதா, சம்பந்தம் என்று சொல்வதா தெரியவில்லை.   எப்படியோ வருடாவருடம், எனது பிறந்தநாளும்,  Income Tax.கும் வந்துவிடுகிறது.   உம்.. Tax-யை, ஏபரல் மாத இறுதிக்குள் கட்டவேண்டும்.’சிங்கையின் சீமந்த புத்திரன்’  ரமேஸ் இங்கு ஏப்ரல்மாதம் வருவதாக எங்கோ படித்தேன்(!).   ம்.. பார்ப்போம்....


3. மகிழ்ச்சி தந்த அல்லது பிடித்த பொழுதுபோக்கு
பிடித்த பொழுதுபோக்கு... ஏரோபிளேன் ஓட்டுவது. இது முடியாத பட்சத்தில்
பங்கி ஜம்ப்.  இல்லை..பிலிப்பினோ.... சரி..சரி..விடுங்க.. அருகில் உள்ளவரை ஓட்டுவது.


4. அன்பு அல்லது பரிசுகள்

ஹி..ஹி.. பதிவுலகில் பல நண்பர்களையும், எதிரிகளையும் ஒருசேர பெற்றது.
(எதிரிகள் யார்யார் என அறிய நினைப்பவர்கள், ரூ 1000-க்கு காசோலை எடுத்து
அனுப்பவும். என் ஜட்டியை, இந்த வருடமாவது மாற்றவேண்டும்.)


6. பிடித்த நல்ல மனிதர்கள்
அரசியல்வாதி.
ஒருவர் வாழும் வள்ளுவர். கடந்தகாலத்தை மக்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்க்காக,  ’தமிழகத்தை,  கடந்தகாலமாகவே  வைத்துக்கொண்டிருப்பவர்’.

அடுத்து, இந்தியாவை தூக்கி நிறுத்த, இத்தாலியில் இருந்து பறந்து வந்த பாசமிகுதேவதை.  மற்றும் அவர்தம் வாரிசுகள்.  Foreign Talent(!)

அடுத்து தமிழகத்தை கெட்டுக்சுவராக்க, உடன்பிறந்தாருடன் ஆடுகளத்தில் ஆட ரெடியாக உள்ள ’ம்மா’


கலைஞர்கள்.
மனிதநேயம் மிக்க, மனித உருவில் வலம்வரும்
கடவுள் சு..சு...வாமி நித்தியானந்தா.  எவ்வளவு இடர்கள் வந்தாலும், இடது கையால, புறம்தள்ளிவிட்டு, வலது கையில் மலம்  துடைக்கும் திறமை.

சமீபத்தில், நடந்த லிங்க பூஜை அதற்கு ஒரு நல்ல உதாரணம். சிலர் சொல்கிறார்கள் அவர்  ஒரு ஏமாற்றுக்காரர் என்று. ஆனால் நான், அவரின் ஒவ்வொரு செய்கையிலும் மனிதநேயம்  மிளிர்வதை  காண்கின்றேன். லிங்க பூஜைக்கு ரஞ்சிதா வந்தாரா?. இல்லையே..  இதிலிருந்தே தெரியவில்லையா, அவர்தான் மானிடர் துயர்துடைக்கவந்த மாமேதை என்று.  ( இதில் எங்கேயா மனிதநேயம் என அலறுபவர்களுக்கு...ரஞ்சிதாவுக்கு இருப்பது வாயா?,
இல்லை வண்ணான் கொப்பறையா?.. சிந்தியுங்கள் மக்களே....அப்பப்பா.. எவ்வளவு பெரிய லிங்கம்..)

நண்பர்கள்/நண்பிகள்
பதிவிலகில் அடியெடுத்து வைத்ததும், பலநாட்டிலிருந்து பல நண்பர்கள் கிடைத்துள்ளனர்.  ஒவ்வொருத்தர் பெயரையும் சொன்னால், அண்ணன் உண்மைத்தமிழன் பதிவைவிட பெரிசா  போகும். அதனால நண்பிகள் பற்றி மட்டும்.

நண்பிகள் என்று சொன்னால்,  இருந்தார்கள். சிலர் இருக்கிறார்கள்..ஹி..ஹி
மற்றவர்கள்...ஓ.. வேண்டாம் சார். அப்புறம் அவரின் கோபத்துக்கு ஆளாகவேண்டும்.  
எவரா?.. அட.. அவர்தான்.. வெய்ட் அன் ஸீ...


7. பிடித்த உணவுகள் புதியதாய் ஏதாவது ட்ரை செய்து சாப்பிட்டது

பிலிப்போனாகாரியுடன் லக்கிப்ளாசாவில் சாப்பிட்ட ’மீ கோரிங்’. இப்ப நினைச்சாலும்..உம்...  ’கழிப்பறையில் நான்’ என பத்து பதிவு எழுதும் அளவுக்கு மேட்டர் தே(நா)றும்...


8. பிடித்த அல்லது மறக்கமுடியாத இடங்கள்
இப்படி பச்சையாவா கேட்பாங்க?.. சே..சே.. இங்க பதில் சொன்னா, Image (ஹி..ஹி அப்படி இருந்தால்...) காலிஆகிடும்.. அதனால நெக்ஸ்ட்..


9. வாழ்க்கையில்  நடந்த மனதை தொடுகிற சம்பவங்கள்.
சமீபத்தில் கோவை சென்றிருந்தபோது (என்னோட அகராதியில், சமீபம்   என்றால் கடந்த வருடம் மட்டுமே..  மனக்குதிரைய தட்டிவிட்டு 1930-க்கு செல்பவர்களுக்கு,  அப்படியே..போய்க்கிட்டேயிருங்க...) முதல்வரின் ஆசீர்வாதம்பெற்ற குடிமகன், காரில் விழப்பாய்ந்ததும், உடனே நான் டிக்கெட் கிழிக்க ஆயுத்தமாக, கடைசி நிமிடத்தில் ஒருவனால் அவன் தப்பியதும்..
ங்கொய்யாலே.. நண்பனா சார் அவன்?. நான் ஏதோ நல்லது பண்ண டிக்கெட் கிழிக்கலாம் எனப்பார்த்தால் தப்பிக்கவைத்த கருங்காலி..( நண்பேண்ண்ண்ண்டாவாம்..)


10 அடுத்த வருடம், நீங்கள் சாதிக்க விரும்புகிற எண்ணங்கள்.
பிரபல பதிவர் என பெயரெடுத்து, கால் அகட்டி(?) நடக்கவேண்டும் என்பது நான் பிறந்தவுடன் கண்ட கனவு.. அதற்காகதான், இப்பொது என் பதிவுகளை குறைத்துகொள்ள ஆரம்பித்துவிட்டேன். (அகட்டி வெச்சு நடந்தா , கால் வலிக்கும் என்ற டாக்ரரின் ஆலோசனைப்படி...ஹி..ஹி )கடைசியா, பத்து பேரை கோக்கவேண்டும். அந்த தார்மீகக் கடமையை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில பின்வருபவர்களை கோக்கிறேன்.
( இனிமேல யாராவது தொடர் பதிவுக்கு கூப்பிடுவீங்க?...)
.
.
.

Saturday, January 8, 2011

தெய்வமே.. தெய்வமே..

.
.
.
தர்மபுரி: தர்மபுரியில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் மாநில தலைவர் யுவராஜ் நிருபர்களிடம் கூறியது: "அவசர கால ஆம்புலன்ஸ் சேவை 108க்கு மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் பெயர் மற்றும் படம் வைக்க வேண்டும்' என்ற இளைஞர் காங்கிரஸின் கோரிக்கை விரைவில் நிறைவேறும். இளைஞர் காங்கிரஸின் ரதயாத்திரை பயணம் பல இடங்களில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். தர்மபுரி மாவட்டத்தில் மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் ஜனவரி 24ம் தேதியிலிருந்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை துவக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


 ------------------------------------------------------------------------------------------
அன்றே கூவினோம்....
தேசிய நெடுஞ்சாலையில்,  ஒவ்வொரு கி.மீ-க்கும் அன்னையின் திருவுருவப்படத்தை வைக்கவேண்டுமென !!”..
யாராவது  செவிமடுத்தார்களா...?....          இல்லை..

அந்தோ பரிதாபம்..
அந்தத்தீ அணைந்து விட்டது என்று கொக்கரித்த,  ஆர்ப்பாட்டக்கார கயவர்களின் முன்னால்,  “இல்லை..இல்லை.. ’காந்திகள்’ ஏற்றிவைத்த தீ..என்றுமே அணைவதில்லை” என்று நிருபிக்க, சீறி எழுந்த, எங்கள் தங்கத்தலைவன்... தவப் புதல்வன்.... தென்னக காந்தி- யின் அறிக்கையை பாருங்கள். படியுங்கள்... உணருங்கள்... தெளிவு பெறுங்கள்.


பாலங்களாம், விளக்குகளாம்...
அரிசியாம்.. வெங்காயமாம்..

சீறும் சிந்தனைகளை,  சீந்திவிட்டு(?)  கைதுடைத்து..
செங்குருதி சிந்த நாம்.. சிந்தனையில் சேர்ந்திடுவோம்....

மீனவர்கள் ஒரு புறமும், தமிழ் இனம் மறுபுறமும்..
சிரிக்கட்டும். அழுகட்டும்.. சீர்கெட்டுப்போகட்டும்...

கேடுகெட்ட  மக்களே.. சிந்தைனையில் மண்போட்டு..
குடும்பத்தை ஒதுக்கிவிட்டு , பாடுபட வாருங்கள்.


வாருங்கள்.. வாருங்கள்.. நகைத்தபடி வாருங்கள்..

நாளைய சரித்திரம்..  நம்மவர்கள் குணம் அறிய..
தலைகுனிந்து படிக்கட்டும்.. சந்தோசம் கொள்ளட்டும்...


டிஸ்கி..
யுவராஜ் அண்ணே.. இத்துடன் நமது போராட்டம் முடிந்துவிடக்கூடாது.
நமது அடுத்த தாக்குதல்.. அனைவரும் தூங்கியபின்..!!

பொதுக்கழிப்பிடத்திலும், தமது தலைவர்களின் படம் வைக்கவேண்டும்.. ”, இது வேண்டுகோள் அல்ல.. நான்கு கால்களையும் தூக்கியபடி, நான்  வைக்கும்  கோரிக்கை.....

”பிரச்சனைகளை பிரித்துமேய.. கடவுள் அனுப்பிய அவதாரம்..
வாழ்க நீவீர்.. வையகம்  வாய்பிளக்க...”
.
.
.

Wednesday, January 5, 2011

நேர் நேர் தேமா!!!!

.
.
.
சீக்கிரம் தேர்தல் வரப்போகிறது. கட்சி தலைமைகளின் ஒரே கு(வெ)றி.... "அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்போம்" என்பதே. இதில் பிரச்சனைக்குறிய உயிரினங்கள்(?) யார் என நினக்கிறீர்கள்?


உங்கள் மனத்தில், 'மக்கள்' என்ற எண்ணம் தோன்றினால்...... ப்ளீஸ்.. ஒரு நிமிடம் கண்களை இறுக்க மூடிக்கொண்டு, கைகளால், உங்களின் ஒரே ஒரு பரம்பரை சொத்தான, கோமணத்தை இறுக்க பற்றிக்கொண்டு வெளியே போய்விடுங்கள், அடுத்த பதிவில் நாம் சந்திக்கலாம். ( நானும் எங்கேயும் போயிடமாட்டேன்.. ஹி..ஹி நீங்களும்தான்.. அப்புறம் என்ன கவலை பிரதர்?..)மீதி உயிரினங்கள்(!)... வாங்க சார்.. நாம அலசுவோம். உஷ்.. இப்ப ஒரு குரூப் வெளிய போனதே!.. தேசப்பற்றே இல்லாத பன்னாடை பயலுக சார்... கட்சி நடத்துவது என்ன சாதாரணமா?. என்னமோ எப்ப பார்த்தாலும், 'மக்கள், மயிரு, மட்டை'னு கூவிக்கிட்டு இருக்கானுக.. இந்த மக்களுக்குத்தான் தங்களின் பொன்னான, மூளையை கசக்கி,

 • 1 ரூபாய்க்கு அரிசி,
 • அரசின் சலுகைவிலையில் சாராயம். அதாங்க.. டாஸ்மார்க்,
 • இலவச டீவீ,
 • அதுக்கு முன்னாடி செருப்பு,
 • பல்லு விளக்க பிரஸ்..
 • ஆங்.. கோயில்ல இலவச உண்டக்கட்டி,
 • வெள்ளிக்கிழமை, பெண்கள் தலைக்கு குளித்துவர ஆபீஸ் நேர மாற்றம்....
 • கிராமிய வேலைவாய்ப்புத்திட்டம். (கைதாங்கலா நடந்து வந்தா போதும். தினக்கூலி நிச்சயம்.என்னா அருமையான திட்டம்!!)
போன்ற அரிய திட்டங்களை கொண்டு வந்தாலும், திருப்திப்படமாட்டார்கள்.

எல்லாப்பயலும், பழசை மறந்துட்டானுக தலை. நன்றி கெட்ட நாதாரிக....


'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு'னு , அவரவர் குழந்தைகுட்டியை பார்க்ககூட நேரமில்லாமல், மக்களுக்கு உழைக்கும் கட்சிக்காரர்களின் புகழை, நாம் பாடாமல் எவர் பாடுவார்?. என்ன சார்?. நான் சொல்லுவது சரிதானே.

சரி..இப்ப யார் யார் , எப்படினு பார்க்கலாம்.கலைஞர்.

'மக்கள்தான் குடும்பம், குடும்பம்தான் மக்கள்' என்ற உயரிய கொள்கைகொண்ட ப(பு)ழுத்த பழம்.. எவ்வளவு வருட அரசியல் அனுபவங்கள், சிறைகள், சிந்தனைகள், திரைப்படங்கள், பாராட்டு நிகழ்சிகள். பாவம் நிற்ககூட(!) நேரமில்லாமல்.. நினச்சா எனக்கே கலங்குது பாஸ்.

விரைவில் பொதுக்குழு கூட்டப்போகிறாராம். உம்..பார்ப்போம். 'எந்த மக்களின் பேரன்' அரசியலுக்கு வரப்போகிறாரோ!... காரமடை ஜோசியனுக்கு மட்டும்தான் தெரியும்.

அதனால , அவரை அடுத்த முதல்வர் ஆக்குவது நம் கைகளில்தான் உள்ளது..பராசக்தி

'அம்மா' என்று செல்லமாக, ரத்தங்களால் அழைக்கப்படும் கான்வென்ட் மாமி. அந்தகால வெற்றிப்பட நடிகை. தமிழகத்தின் தலைவிதி. மக்களின் விடிவெள்ளி, ஆடிட்டர்களை செருப்பில் அடிக்கும் பத்ரகாளி. கொடைநாட்டு கோமகள். உடன்பிறந்த, பிறக்கப்போகும் பெண்களின் காவல் தெய்வம். அப்ப்ப்பா எவ்வளவு பட்டங்கள்?.

பாவம்..அடிக்கடி ஓய்வு எடுத்தாலும், மக்களுக்கு ஒரு பிரச்சனைனா, வீதிக்கு வந்து போராடும் மிருககுணம் கொண்ட மூர்க்கமான கோபம் உள்ளவர். ( நீங்கவேணா, அவர் காலில் விழாமல், உங்கள் காரியத்தை சாதித்துப்பாருங்க.. அப்ப புரியும் அந்த வலி..)

ஏன் அடிக்கடி கொடை நாடு போறாங்க?. இது, சில பன்னாடைகள் கேட்கும் கேள்வி..

பாவம்... என்னதான் பண்ணுவாங்க?.. எல்லோரும் கால்ல விழுந்து, ஏதாவது விழும் என எழாமல் இருப்பதால், அவருக்கு கால்வலி. அதனால..., கொடை நாட்டுக்கு போறாங்க..

தற்போதய முதல்வருக்கு , இவர் மாற்றா?.. இல்லை.. இவருக்கு, அவர் மாற்றா?.. சே..சே. அப்படி எல்லாம் பிரிச்சு பேசக்கூடாது. கோயில்ல அன்னதானம் பண்ணி, மக்களுக்கு புண்ணியம் சேர்த்த வீராங்கனை இவர்..

என்ன.. அங்கே ஓவரா நாறுச்சுனா, இங்கே, விட்டுவிட்டு நாறும்.. மற்றபடி எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக, மக்களுக்கு தொண்டு செய்பவர்கள்தான்..

அதனாலே.. அதனால்.. இவரையும் அடுத்த முதல்வராக்கலாம். ( ஆனா..கால்ல விழுந்தா, தலை தூக்கிப்பார்க்க்கூடாது ..சொல்லீட்டேன்..)கேப்டன்.

'கேப்டன்' என்று செல்லமாக, மக்களால் அழைக்கப்படும் அடுத்த முதல்வர்(?). அவரும் முதல்வராகி, 'பாகிஸ்தானை தமிழ்நாட்டுடன் சேர்க்க', அரிதாரம் பூச ஆரம்பித்துவிட்டார். ( ஆமாய்யா.. அவர் முகத்துக்குத்தான்.. மக்களுக்கு கரி போதும்.). பெண்களை எப்போதும் மதிப்பார். பாருங்களேன்.. அவரது மனைவி, மச்சான் நல்லா இருந்தா, மக்களும் நல்லா இருப்பாங்கனு புரிஞ்சு வைத்துள்ளார்.

அவரு மட்டும் முதல்வராகட்டும்.. மச்சான் சதீஸ்கிட்ட சொல்லி, விருதகிரிய தேசியப்படமா அறிவிக்க சொல்லிடலாம்.. தேசிப்பறவை மயில், தேசப்படம் விருதகிரி....ஹி..ஹி நல்லாயிருக்குல்ல..

அதனாலே.. இவரையும் அடுத்த முதல்வராக்கி பாகிஷ்தானை தமிழ்நாட்டோடு இணய உதவ.. உங்கள் பொன்னான வாக்கை, இவருக்கோ, அல்லது அவரது துணவியாருக்கோ, அல்லது மச்சான் சதீஸ்க்கோ போடுங்க.. போடுங்க. போட்டுக்கிட்டே இருங்க.'அய்யா'.

இவர் பெயர் சொன்னால், சாலை ஓர மரங்கள், அதுவாக தற்கொலை செய்துகொள்ளும். 'பிள்ளைய பெற்றா கண்ணீரு'னு பாவம், வயதான காலத்தில், மகனின் வேலை வாய்புக்காக, கடைகடையா ஏறி இறங்கிட்டு இருக்காரு.. யாரும் கொடுக்க தயாராக இல்லை.

அவரின் மனசஞ்சலத்தைப்போக்க, அவரை முதல்வராக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது.
சிற்றரசர்கள்.

இந்த லிஸ்டில், மீதியுள்ள நல்ல உள்ளங்களை பட்டியலிட்டுக்கொள்ளலாம். பாவம்.. அவர்களும் மக்களுக்காக உழைக்க , ஓ.கே..ஓ.கே.( தங்கபாலு அண்ணே.. இதில் உங்கபேரும் இருக்கு..பயப்படாதீங்க..!!)இது தலைவர்களுக்காக..

அய்யா தொரைகளே, தொரைசாணிகளே... மக்கள் துயர் துடைக்கவந்த மாசறு மாணிக்கங்களே. இப்படி பிரிச்சு, பிரிச்சு அடிச்சுக்கிட்டா, எங்க மனசு கலங்குது.. ஏன் நீங்கள் எல்லோரும் சேர்ந்து, "முதல்வர்களாக" அமரக்கூடாது. 
அந்த காட்சியை காணும் பாக்கியத்தை, இந்த மக்களுக்கு அருள்வீர்களா? ( அருள் அண்ணே.. உங்கள சொல்ல்லே.. லூஸ்ல விட்டுப்புட்டு, எப்பவும் போல, டோமர்ர்ர்ர்ர்ர்ர்ருக்கு உதவி பண்ணுங்க..ஹி..ஹி)

 

தலைவர்களுக்கு, 
இலவச திட்டங்களுக்கு,  என்னால் முடிந்த சிறு உதவி.

 • ஆண் மக்களுக்கு இலவச காண்டம்.
 • வீதிக்கு ஒரு அன்னதான முகாம்.
 • பொங்கலுக்கு, இலவச கோமணம்
 • பெண்களுக்கு, இலவச மூக்குத்தி
 • குழந்தைகளுக்கு, மூக்கு சீந்த, பழைய கட்சிக்கொடிகள்.
 • மாதம் ஒருமுறை மொட்டை அடிக்க, திருப்பதிக்கு இலவச பேருந்து. ( ஏசி வசதியுடன் )
 • பாராட்டுவிழாவில் நேரில் பார்வையிட , நமீதா மூலம் குலுக்கல் முறையில் தேர்வு.
 • முதியவர்களுக்கு, இலவச சுடுகாடு.
 • பள்ளிக்கட்ட்டங்களை, டாஸ்மார்க் கோடோனாக மாற்றகோரிக்கை.
 • கோயில்களில், அம்மாவாசை அன்று இலவச பூசை.


டிஸ்கி 0.

சார்வாள்.. யாரு முதல்வரா வந்தாலும், இந்த சிறுவனை மறந்துவிடாதீங்க.. என்னோட மச்சான், சென்னையில, சும்மா ப்ளாக் எழுதிக்கிட்டு நேரத்தை விரயம் பண்ணிக்கிட்டு இருக்கான்.

அந்த பன்னாடைக்கு, ஹோல்சேல் காண்டம் சப்ளை செய்ய அனுமதி கொடுத்தால், நானும், என் குடும்பமும், வாழ்நாள் முழுதும், உங்களை மறக்கமாட்டோம்.


( அதில், கட்சி லோகோ மற்றும் எழுச்சி வாசங்கள் எழுத, என்னுடைய பெரியப்பா மகன் இருக்கான்.. இத்துடன் சில சாம்பிள் கொடுத்துள்ளேன்.. அதனால, பிரிண்டிங் காண்ராக்ட்டை, பெரியப்பா பையனுக்கு கிடைக்க, அருள் புரியுங்கள். )


சாம்பிள் வாசகங்கள்


சூரியன் எழுகிறது...

எழுச்சிப்பயணம் இங்கே ஆரம்பம்..

இலை..தொடை..இலவசம்..( முக்கியமாக, இந்த காண்ராக்ட் கிடைத்தால், காண்டத்தில், இலவசமாக, தலைவர்கள் படத்தை ( கலர் ) போடவும், தயாராக உள்ளோம் என்பதையும் இத்தருணத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.)


டிஸ்கி 1..

என்னடா.. பட்டாபட்டி, காங்கிரஸ் பற்றி ஒன்னுமே சொல்லலைனு பார்க்கிறீங்களா?
”.. சே..சே.. நாம் வாழும் நாடு.. அவர்கள் போட்ட பிச்சை..”.
அவர்கள் கடவுளின் அவதாரங்கள்...


நன்றி..
.
.
.