Pages

Sunday, May 30, 2010

கண்கள் பனித்தது..இதயம் இடித்தது..

பட்டாபட்டி சார்.. நான் கடந்த 5 வருடங்களாக, மருத்துவர் அய்யா கட்சியில்
தொடர்ந்து இணந்திருக்கிறேன்.. சில வருடங்களுக்குமுன், அய்யா, கலைஞரிடம் இருந்து பிரிந்து  அம்மாவிடம் சேர்ந்ததால்,அலகு குத்திக்கொண்ட ஆளவந்தான் நான்.

ஆனால் சமீபகாலமாக ஊடங்களில் வரும் செய்திகள், அய்யா, கலைஞருடன் இணயப்போவதாக கூறுகிறது.  அலகு குத்தின புண்ணு ஆறுவதற்க்குள் அய்யா இப்படி பன்ணுவாருனு தெரியாம போச்சு..
என்ன செய்யலாம் என அறிவுறை கூறமுடியுமா?..

குவாட்டர் கோவிந்தன்
------------------------------------------------------------



அடங்கொன்னியா.. வாய்யா தமிழ்குடிமகனே..
அய்யா யாரு?.. மக்களுக்காக நல்லது பண்ணவேண்டுமென மருத்துவர் பணியை உதறிதள்ளிவிட்டு  உழைக்க ஓடி வந்தவரு..
அவருடைய தொண்டனா ராசா  நீ..
இந்தா டீ சாப்பிடு முதல்ல....


அய்யா எதுக்கு தாத்தாகூட சேரனும்? .. யோசனை பண்ணு கோவிந்தன் சார்.... மக்கள் சொல்லுவானுக, ’அவரது அன்பு மகனுக்கு ஏதாவது கொடுப்பானுகனு  தாவுகிறார்’-னு.. ஊகூம்..மக்கள் கிடக்கானுக நாதாரிக..

பழைய பேப்பர் கிடைச்சா புரட்டிப்பாருங்க.. அவரது குடும்பமோ, உறவினறோ பதவிக்கு வந்தா..அவரை நடுரோட்டில வைத்து சவுக்கடி கொடுங்கனு சொன்ன வீரனையா அவரு...அப்படிப்பட்ட மகான்..எதுக்காக தாத்தாவிடம் வந்திருக்காரு...

உன்னையமாறி மற்றும் என்னையமாறி இருக்கும் பல லட்சம் ஏழை பங்காளனுக்கு முட்டு கொடுக்க ப்ளான் பண்ணுகிறாரு..
இது மாறி தலைவனுக, யாருக்கையா கிடைப்பானுக..?

அதனால என்ன பண்றோமுனா, பேசாம டாஸ்மார்ல போயி ஒரு குவார்ரட் விட்டுக்கிட்டு, வீட்க்குப்போ..
உங்க ஊட்டுக்காரம்மா, ரேசன் அரிசில  சோறு பொங்கி வெச்சிருக்கும்..அதை வழிச்சு தின்னுப்புட்டு,
இலவச டீவி இருக்குமே..அதுல மானாட மயிலாட பாரு..
நட்ட்டுக்குச்சுனா அடுத்த தொண்டனை ரெடி பண்ணு..
அதை விட்டுபுட்டு, என்ன மயி#$%க்கு எங்கிட்ட கேள்வி கேக்குறே?..

ஆமா.. அலகுகுத்தின இடத்தில இன்னுமா புண்ணு ஆறல?.. அடப்பாவி மக்கா.. இது தெய்வகுத்தம் ஆச்சே..
சீக்கிரம் போயி அம்மாவுக்கு தீமிதிக்கிறேனு வேண்டிக்கிட்டு, கூடவே ஒரு மொட்டையும் போடு...
வாழ்க ஜனநாயகம்..வளர்க கழகப்பணி...

இது தலைவர்களுக்கு

உங்கள் சேவை நாட்டுக்கு தேவை..
எத்தனை இடர்கள் வந்தாலும், தமிழனுக்காக உழைக்க, உ(ம)யிரை கொடுக்க ரெடியா இருக்கீங்களே..
உங்கள பெத்த மகராசிகளையும், உடனிருந்து உந்துசக்தியளிக்கும் மனைவியர்களையும்(?) வாழ்க..
உம் சந்ததியினர் வாழ்க..
எங்களை வாழவைக்கும் தெய்வங்களே..குவார்ட்டர் கோவிந்தன்(கள்) இருக்கும்வரை உங்களுக்கு சாவே கிடையாது..
அடிச்சு ஆடுங்க தலைகளா...
இவன் மர(?)த்தமிழன்..
.
.
.

Thursday, May 27, 2010

இரும்பு கோ.மு.சிங்கம்- பட்டாபட்டி பார்வையில்..



என்னாடா படம் வந்து இவ்வளவு நாள் கழிச்சு விமர்சனம் வருதேனு பார்க்கிறீங்களா?..  Thanks to Dr.Vijay.....

தட்டுல 4 இட்லி வெச்சு, சைட்ல கொஞ்சம் தேங்கா சட்னி, தக்காளி சட்னி, இட்லி பொடி வெச்சுக்கிட்டு, நீங்க சாப்பிட்டு முடிக்கும்முன், முழு படத்தையும் பார்க்கும் திறமை எனக்கு இருக்கு  சார்..( எல்லாம் 'சுறா + ரிமோட்' உபயம்..)


ஒரு படத்துக்கு என்னென்ன தேவையோ(?), அதெல்லாம் சத்தியமா இந்த படத்தில இல்ல சார்..


மார்பை காமிச்சுட்டு படம்பூரா வந்துபோகும் ஜூனியர் குஷ்புஸ்..
ஒரு படத்துக்கு, 10 இண்டர்வெல் கொடுக்கும் மாஸ் ஹீரோஸ்..( தம்மடிக்கிறத சொல்றேன்..)
அக்கா..அம்மா..அம்மம்மா, அப்பப்பா..அய்யா..தாத்தா..பாட்டி செண்டிமென்ஸ்..
மொக்கை காமெடினு எதுவுமில்லாம...

பலபடங்களில் இருந்து சுட்ட காட்சிகள், தற்கால அரசியல் நிகழ்வுகள் போன்ற காமெடிகளை(?)   போட்டு, படம் ஆரம்பிச்சு, முடியவரை எல்லா ஸ்கிரின்லயும் விளையாடி இருக்காங்க..

முக்கியமா
அணுகுண்டு ஒப்பந்தம்,
வில்லனின் இடத்துக்கு யு.எஸ்.ஏ என்ற பெயர்,
ரேஷன்,
இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் மக்களின் நிலைப்பாடு
நிழல்+நிஜம் துப்பாக்கி சுடும் காட்சி,
அரசியல் நையாண்டிகள்

அதுவும், பாஸ்கர் உயிருக்கு போராடும்போது, அதே உணர்வோடு மொழிபெயர்க்கும்  நம்ம ஜாவா சுந்தரேஷன்..சூப்பர்யா..

என்னடா படத்தை பற்றி ஆகா..ஓகோனு புகழறானே.. அதுல குறை ஒன்றும் இல்லையா எனக்கேட்கும்  மக்களுக்கு..ஒண்ணே ஒண்ணு இருக்கு சார்..அதுதான் சந்தியா...( செவ்விந்தியர்கள் தலைவனின்  மகளாய் வருகிறார்.)..

முதல்லையே பார்க்க சகிக்காது..அதுல மேக்கப் போட்டு..
( pen Stand ஞாபகம்வருவதை தடுக்கமுடியவில்லை ..)

ங்கொய்யா.. ரிமோட்-க்கு வேலை கொடுக்காமல்,என்னை முழு படத்தையும் பார்க்கவைத்த   சிம்புதேவனுக்கு..பட்டாபட்டி வெக்கிறான் பாருங்க சார் பெரிசா..
.
.
.
அய்யா சிம்புதேவன் அவர்களே..உங்களுக்கு ஒரு 
சல்யூட்..
.
.
.
சுறா பார்த்துவிட்டு,  இனி மேல படமே பார்ப்பதில்லை என்ற என்னுடைய வைராக்கியத்துக்கு(?)  ஆப்பு வெச்ச.................. குடும்பத்தோட  ரசிச்சு பார்க்ககூடிய ஒரு படம்...

கடைசியா, சிம்பு தேவனுக்கு ஒன்னை சொல்லிக்கிட்டு, என்னோட வேலைப பார்க்கபோறேன் சார்..

சொஞ்ச நாள் முன்னாடி ஒரு படம் வந்துச்சே..ஆங்..கோவா..

அதுல, நம்ம கங்கை அமரன் குடும்பத்தாரோட உழைப்புல Gay-ன்னா என்னானு தமிழர்களுக்கு  புரியவெச்ச குரூப்புக்கும்,( அதுதாங்க நம்ம சூப்பர் ஸ்டார், அந்த படவெளியீட்டு விழாவுல, தன்னோட  மகளை உச்சிமோந்து பாராட்டினாரே..அதே படம்தான்..)

ஆயிரத்தில் ஒருவன்னு ஒரு படத்தை எடுத்து, உள்மனச தொறந்து காட்டிய ஜாம்பவான் செல்வராகவனுக்கும்   ( அய்யா..ராகவன்களா...நான் படம் எடுத்த பயலுகளை சொல்றேன்..தனிமனித  தாக்குதல்னு பெல்ட் போட்டுக்கிட்டு வராதீங்கயா..அப்புறம் எனக்கு..கை கால் உதறும்..)

சுறா படம் பார்க்கும்போது, ஸ்கீர்னையும் தாண்டி, தியேட்டருக்கு வெளியே ஒரு உலகம் இருக்கிறது என்று புரிய வைத்த சுறா படக்குழுவினருக்கும்..

மறக்காம, உங்க சாம்பிளை அனுப்பி வையுங்க சார்..குடிச்சுட்டு தெளியட்டும்   ( யூ@#$ரி#$@ன சொன்னேன்..)
.
.
.

Tuesday, May 25, 2010

வெளியூர்காரன் Blog விற்பனைக்கு...

ஹி..ஹி.. வணக்கம் சார்.....
செய்திகள் வாசிப்பது பட்டாபட்டி..

முக்கிய செய்திகள்...
ஸ்பெக்டரம் விவகாரத்தில், அமைச்சர் ராஜா ஊழல் செய்யவில்லை.. பிரதமர் கூவல்..

அமைச்சர் ராஜா ஒரு சத்தியசீலர்..வீரமணி அறிவிப்பு..
 

குஷ்புவை தி.மு.க தாங்குகிறதா?..கலைஞர் பேட்டி..
 
ராகுல் அரசியலுக்கு வந்தால் நாங்கள் வழிவிடுவோம்..பிரதமர் மீண்டும் கூவல்...
 
வெளியூர்காரன் ப்ளாக் விற்பனைக்கு...
.
.
.

விளம்பர இடைவேளைக்கு பிறகு...
பாதுகாப்பாக உடலுறவு கொள்வது எப்படி..குஷ்புவின் செயல்முறை விளக்கம்..
இடம்     :    தீவு திடல்..
தலைமை     :    கலைஞர்..
நேரம்    :    இரவு 10 மணிக்கு மேல்..


--------------------------------------------------------

ஒன்னு வாங்கினால் ஒன்று ப்ரீ..
டாஸ்மார்க்கின் அதிரடி அறிவிப்பு..

.
.
.

செய்திகள் தொடர்கின்றன...
ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் ஊழல் நடந்ததாக, இந்தியமக்களுக்கு சில மாதங்களுக்குமுன்  சொல்லப்பட்டது..அது வதந்தி..சிலபல பேச்சு வார்த்தைகளின் மூலம், ”அது ஊழல் அல்ல, நாட்டுக்கு  செய்த சேவை” என பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.   அதைப்பற்றி வீரமணி வெளியிட்ட அறிக்கையில், ”ராசா..ஒரு ஒழுக்கசீலர்..காந்தி, பெரியார் பிறப்பதற்க்குமுன், அவர் பிறந்திருந்தால், அமெரிக்க ஜனாதிபதி ஆயிருப்பார்.  அவரது கொள்கையை பரப்பும் அயராத பணியை என் சிரம்மேற்க்கொண்டு செய்யும் வாய்ப்பை அவர்கள் பறித்துவிட்டனர்..”  என கண்ணீர் மல்க கூறியுள்ளார்..

மேலும், குஷ்பு தி.மு.க-வில இணந்ததால் ( Butterfly Effect ), இது சாத்தியமானதா? என்ற பட்டாபட்டியின் கேள்விக்கு, ”இல்லை..தமிழகம் ஜொலிக்க தானைதலைவி குஷ்புவின் சேவை.. நாட்டுக்கு தேவை” என்று நார்வே பதிவர் தொலைபேசியில் பதிலளித்தார்..


மேலும் மின்சாரப்பற்றாக்குறைக்கு முந்தைய ஆட்சிதான் காரணம் எனக்கூறிய திமுகவும்,
ஸ்பெக்ரம் விவகாரத்தில ஊழல் என்றால், பாஜாக முந்தைய ஆட்சியில் ஏற்படுத்திய சட்டம் ஒரு காரணம்
என கூறும் காங்கிரஸும்
, ஒரே கோட்டில் பயணிக்கிறதா என்ற கேள்விக்கு, ”ராகுல் வாழ்க “ என பிரதமர் கூறினார்..

”நாங்கள் 2வது முறை ஆட்சிக்கு வந்த ஓராண்டில் போதுமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளோம். இன்னும் ஏராளமான சாதனைகளை நிகழ்த்துவோம்.” எனக்கூறிய பிரதமர்,   இது ’அன்னை சோனியா காந்தி’, தாய் நாட்டின்மேல்(?) வைத்திருக்கும் பாசம் என்றார்

மேலும், ராகுல் காந்தி சில மாதங்களுக்கு முன், மும்பையில் ரயில் பயணம் செய்த்தாரல்லவா?..  அதை தேசிய உடமையாக்கலாமா? என சோனியாவுடன், பிரதி சனிக்கிழமை விவாதிப்பதாகவும் கூறினார்..

இதற்குமேலும், பட்டாபட்டியால் தாங்கமுடியாதாதால்   (இயற்கை உபாதை சார்.. ), பிரதமருடன் , பேட்டியை தொடரமுடியவில்லை என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்..

கடைசியாக வந்த செய்திகள்..
’சைந்தவி புகழ் வெளியூர்காரன்’ என்ற பிரபல பதிவர், சிங்கையில் வாசம்(?)
செய்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.. அவர் சில நாட்களாக, ”சிங்கை To தமிழகத்துக்கு”, ஆப்டிகல் பைபர் தொலைதொடர்பை போடச்சொல்லி, பதிவுலக பக்கமே வராமலிருக்கிறார்..

மேலும், எங்களுக்கு வந்த ரகசிய தகவலின்படி, அவரது சைக்கிள், BoonLay MRT அருகில், தக்க பாதுகாப்புடன் , பூட்டப்பட்டுள்ளதாகவும், செய்திகள் கசிந்தவண்ணம் உள்ளது...


ஆகவே, அண்ணன் வெளியூர்காரனின் விருப்பத்துக்கிணங்க(?), அவரது ப்ளாக்கை விற்றுவிடலாம்  என பட்டாபட்டி முடிவு செய்துள்ளார்..( பட்டா  நிலத்துக்கு, பாலூம், தேனும் ஊற்றுவதில், பட்டாபட்டி வல்லவர் என்பதை, இந்த நேரத்தில சொல்லிக்கொள்ள விருப்பப்டுகிறோம்..)

வாங்க விருப்பமுள்ளவர்கள்,  ”1800-ங்கொய்யாலே” என்ற டோல் ப்ரீ எண்ணுக்கு தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..

வெளியூர்காரன்,  “இது என்னுடைய சொந்த ப்ளாக்..பட்டாபட்டிக்கு விற்கும் உரிமையில்லை” ,  எனச் சண்டைக்கு வந்தால், அவசர தொலைபேசி எண்ணை அழுத்தவும்.. அவர் பதிவுலகிலிருந்து நீக்கப்பட்டுவிடுவார்..

வணக்கம்..வாழ்க ஜனநாயகம்.. வளர்க ராகுல் காந்தி...
.
.
.

Tuesday, May 18, 2010

கறுப்பு தினம்..

இன்று தமிழர்களுக்கு கறுப்பு தினம்..
போன வருடம் இதே நாள், கொன்று குவிக்கப்பட்ட என் இன மக்களுக்காக,
கையிலாகாதவனாய், பரிதவித்த தினம்..

குடும்ப உறுப்பினர்கள்சூழ, ஏற்றப்பட்ட உண்ணாவிரத நாடகங்கள்..

வாய் கிழிய பேசி, ஓட்டு வங்கிக்கு குறி வைத்த அரசியல் சாணக்கியர்கள்..


மீசைக்கும் ஆசை..கூழுக்கும் ஆசை என்ற இரட்டைவேட கபடதாரிகளின் மிதமிஞ்சிய நடிப்பு..


அன்னை சொன்னால் ஆண்டவன் சொல்வதுபோல என நான்கு, காலைதூக்கிக்கொண்ட நயவஞ்சகர்களின் கயமை.


ஓட்டுக்காக, மலம் தினபதற்க்கும் அஞ்சாத மிருகங்கள் .



போதும் மடையர்களே..

தமிழனை காப்பாற்றிக்கொள்ள தமிழன் பழகிவிட்டான்..

அழித்துவிட்டோம் என்ற இறுமாப்பு இருந்தால்..இத்துடன் இறுக்கிக்கொள்ளுங்கள்..

வினை விதைப்பவன் வினை அறுப்பான்..

சகோதரர்கள் அழிந்துவிடவில்லை.. ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் விதைக்கபட்டு இருக்கிறான்..


பொறுங்கள்..காலம், உங்களுக்கு பதில் சொல்லும்...  ஆம்...
.
.
.
இவன்
தமிழன்...



.
.
.

கனவு, ஒரு நாள் நிஜமாகும்..


சரியான சாலைகள் இல்லை,
மின்சாரம் இல்லை,
உணவுப்பொருட்களில் கலப்படம்,
போலி மருந்துகள்,
குடிநீரில் கழிவு,
கல்விச்சாலைகளில் ஊழல்..

என்னதான் நடக்கிறது?..

இதில் நடிகை குஷ்பு, கட்சியில் சேர்ந்து மக்களுக்காக,  பாடுபடப்போகிறாராம்..கர்மமடா கண்ணாயிரம்.. தள்ளாத வயதில், தலைவர் வேற, நற்சான்றிதல் கொடுக்கிறாரு..”குஷ்பு மிகவும்  முற்போக்கான கொள்கையுடையவர்”யென..  விளங்கும்.. ( நான் மக்களை சொன்னேன் தலைவா..   நீங்க நடத்துங்க..)

போட்ட சால்வை என்ன சாதாரணமா?.. கார் டிரைவர் உட்பட, ஓடிஓடி சால்வை போர்த்தின அழகை காண, ஆயிரம்கோடி கண்ணு வேணுமய்யா...இனிமேல் ஊருக்கு ஊர், திருமணத்துக்கு முன், பாதுகாப்பா எப்படி உடலுறவு கொள்வது எனபதை விளக்க, கட்சி மேடை உதவும் என்பதில எள்ளலுவும்  சந்தேகமில்லை.. வேலைவெட்டியை விட்டுவிட்டு, கேட்டுப் பயன்பெறுங்கள்..அது வருங்காலத்துக்கு  நல்லது..

போன ஆட்சியில பண்ணின குழறுடியாலதான் மின்சார தடுப்பாடுனு பேட்டி வேற..மின்சார  உபயோகத்துக்கு காசு வாங்கிறிங்களே.. அப்புறம் என்னய்யா கேடு?..எனக்கு தெரிஞ்சு  இந்தோனேசியாவுல, டீ கடை வெச்சிருந்த பயலுக, இப்ப மெர்சிடிஸ் பென்ஸ்ல சுத்தாரானுக..
கேட்டா, $10 டாலர் விலையுள்ள நிலக்கரிய, $30க்கு விற்கிறானுக..
அதையே, $93க்கு தமிழ்நாடு வாங்குது.. யார் வீட்டுப்பணம்..எவன் சம்பாரிப்பது?..
இந்த இறக்குமதி பண்ணுவது யாருனு கேட்டீங்கனா, வேதியல் பட்டப்படிப்பில்  டாக்ரேட் வாங்கின,  கலைக்காக, உயிரைக்கொடுக்கும் .கன்னிமை..

ஒண்ணுமட்டும் உண்மை...படிச்சபய புள்ளைக, சயின்டிபிக்கா ஊழல் பண்றது எப்படினு  கத்துக்கிட்டானுக.. நடத்துங்கடா ராசா...உங்க தாயாள உள்ளம் புல்லரிக்கவைக்குது.  எங்களுக்கு இதுவும் வேணும் இன்னமுன் வேணும்..
( கை நீட்டி காசு வாங்கியாச்சு சார்..நம்ம வாயத்தொறந்து,  அதுல சாணி வெச்சாலும்..முகம்  கோணாம சாப்பிடுவதுதான் தமிழர் பண்பாடாச்சே....)

அடுத்து ஜோசியம்..நம்ம முன்னால் நடிகை, இந்நாள் எதிர்கட்சித்தலைவர் , ”கோபாலபுரம் வீட்டை  தானம் கொடுக்காவிட்டால்,ஆட்சிக்கும், உயிருக்கும் ஆபத்து..அதனால்தான் அங்கிருந்து வெளியேறப்  போகிறார் முதல்வர் கருணாநிதி” அப்படீனு காளஹஸ்தில இருந்து அறிக்கை வேற..
நாட்டுக்கு ரொம்ப முக்கியமான பிரச்சனையல்லாவா இது?..

ஊழல்..ஊழல்.. எங்கும் அதிலும் ஊழல்.. இவ்ர்களுக்கு இப்பொது உள்ள சட்டம் போதாது மக்கா.. தக்காளி..போட்ட ரோடு ரெண்டு வருசத்தில, பப்பரபானு பல்லகாமிக்குதா?... கூப்பிடுயா அந்த  இஞ்சினியரை மற்றும் அதிகாரிகளைனு , அவங்களோட, கு@#$ல, 1 லிட்டர் காய்ச்சின தாரை ஊற்றினா, ஒழுக்கமா வேலை செய்வாங்களா..இல்லையா?.

ஊழல்
1 லட்சம் வரை..ஒரு லட்சத்துக்கு , ஒரு இஞ்ச் என உடம்பிலிருந்து சதைகளை பிரிக்கலாம்..

1 கோடி வரை..பழுக்க காய்ச்சிய கம்பிய..பின்புறமா, தொப்புள் வரை செருகலாம்..

10 கோடி வரை..மூக்கை அறுத்து, யானை தும்பிக்கையை இணைக்கலாம்

100 கோடி வரை.ஜீம்..பூ..பா...புஸ்...பூமியில அட்ரஸ் இல்லாம பண்ணிவிடலாம்...

ங்கொய்யா.. இப்படியெல்லாம் சட்டம் கொண்டுவந்தா, இந்த நாட்டுநலன்,நாட்டுநலன்னு ,அன்பு மகன், அன்பு மச்சான், அன்பு மனைவியெல்லாம், அன்பு கூ@%$யா வைத்துக்கொண்டு பாடுபடுகிறார்களே..
இவர்கள் எல்லாம், அரசியலுக்கு வரனுமுனு நினைப்பாங்க?..வந்தாலும், ஊழல் பண்ணனுமுனு நினைப்பாங்க?

கனவு காணுங்கள்..கனவு, ஒரு நாள் நிஜமாகும்..

இவன்
ஆடும் ஆட்டத்தை பார்த்து, மனசு வெறுத்துப்போய் உள்ள தமிழன்..
.
.
.

Saturday, May 15, 2010

ப்ளீஸ்..விட்டுவிடுங்களேன் பயலை...

வணக்கம்.. பதிவுலகத்தோழர்களே..சுதந்திரப்பறவையாக சுற்றித்திரிந்த நான், உங்கள் முன் என்  இரு  கைகளையும் பிணைத்தபடி உதவி கேட்கவந்துள்ளேன்.. ஏன்?.. என்னாவாகிவிட்டது? என நெஞ்சம்  பதைக்க, நீங்கள் வினவுவது என் காதில் விழுகிறது..

இதோ விளக்கமாக் கூறுகிறேன்..
அய்யா.. போன வாரம்.கடும் வெயில்..கடையில் குளிர்பானம் அருந்தியபடி, ’நாட்டை  முன்னேற்ற, நாற்பது வழிகள்’ என்ற தலைப்புக்காக,  மூளையை(?)  கசக்கிக்கொண்டிருந்தேன்..அப்போது, பெயர் தெரியாத இளைஞர், எனனருகில் வந்து  பேச்சுக்கொடுத்தார்....


பாவம்.. கசங்கிய உடை..கலைந்த தலை.. வாழ்க்கையில் ரொம்ப நொந்துபோன
தோற்றம்..’என்னப்பா ஆச்சு?.. ஏன் இப்படியிருக்கிறாய்?’  ஏன என கேட்டபோது, அவரது நொந்த வாழ்க்கையை 1 மணி நேரமாகச்சொன்னார்..இதை உங்களிடம் சொல்லி, உங்களையும் நோக வைக்க, என் மனம் விரும்பாததால், அடுத்து நடந்ததை உங்களுக்கு சொல்கிறேன்..

பாவம்..அவர் எதோ Vaccum Cleaner விற்கும் கம்பெனியில் வேலை பார்க்கிறாராம்..அவரது  உயரதிகாரி, மாதம் 1 லட்சத்துக்கு ஆர்டர் கிடைக்கவில்லையென்றால், வேலையை விட்டு  தூக்கிவிடுவேன் என கத்துவதாக, கலங்கிய கண்களுடன் சொன்னான்..மேலும் பேசியதில், அவருக்கு, பகலில் 6 பாஷைகளும், இரவில் 7 பாஷைகளும், பேசும் திறமை கொண்டவர் என்பதை அறிந்துகொண்டேன்...

கலங்கிய கண்களை பார்த்தால், எனக்கும் கலங்கிவிடும்(?) என்பதை இந்த உலகம் அறிந்ததல்லவா?.. எனவே அதைப்பற்றி இங்கு மேலும் விளக்கிச்சொல்ல விரும்பவில்லை..    தோண்டித்துருவி கேட்டபின், அவருடைய பிரச்சனை, ’ஏட்டு சுரைக்காய்’ என்று புரிந்துவிட்டது..
ஒரு பொருளை எப்படி விற்பது என சரியாகத்தெரியாததால், அவரால், சரிவர விற்பனை செய்யமுடியவில்லை சார்.


அதாவது, ஒவ்வொரு வீட்டுக்கும் போவாராம்.. எங்க கம்பெனி ப்ராடெக்ட் வாங்கினா,
விலை மிகவும் குறைவு,
1 வருடம் உத்தரவாதம்,
ரிப்பேரானால்,சரிசெய்ய வீடு தேடி ஆள் வரும்னு சொல்வாராம்..

இப்படி சொன்னா, யாரு சார் வாங்குவாங்க?..அவருடைய உயரதிகாரி திட்டாம என்ன செய்வான்?
அதனால், என் அறிவுக்கு தோன்றிய வழிகளை சொல்லிக்கொடுத்தேன்..

ப்ராடெக்ட் + ’தண்ணீர் கலந்த மாட்டு சாணிய’ எடுத்துட்டு போ..
கதவத்தட்டு..
திறந்ததும், எதுவும் பேசாம, சாணிய வீட்டுக்குள்ள கொட்டு..
கோபப்படுவாங்க...
தொடச்சு போட்டுட்டு ( திட்டினத ) , வீறாப்பா..( இது ரொம்ப முக்கியம்..), ’இன்னும் ஒரு மணி நேரத்தில எங்க ப்ராடெக்ட் கொண்டு சுத்தம் பண்ணலேனா, நான் கொட்டினதை , நானே திங்கிறேனு சொல்லு’..


வேற வழி.. வீட்டுக்குள்ள விடுவாங்க.. உன் தொழில் திறமைய காட்டு..
விற்பனையாகுதா இல்லையானு போன் பண்ணு..

பார்த்தீங்களா?..  யார் சார் இப்படி அன்பா,நல்ல ஐடியாவை சொல்லிக்கொடுப்பாங்க?..

சரி.. நல்ல ஐடியாதான். இப்ப எதுக்கு சென்னை பதிவர்களை உதவிக்கு அழைக்கிறாய் என கேட்கிறீர்களா?...எனக்கு உதவ, அவர்களால் மட்டும்தான் முடியும் சாரே...

ஐடியா சொன்னப்ப, ஆற்காட்டாரை மறந்துவிட்டேன்..
இவன் வீறாப்பா(?) சாணிய திங்கிறேனு சொல்ல, ஆற்காட்டார், பல்பு கொடுத்திட்டார்னா?..

பாவம், பயபுள்ள எப்படி சார் ராவா சாப்பிடுவான்?.. அதனாலே கொஞ்சம் ’ருசி ஊறுகாய’ வாங்கி வீட்ல வெச்சு , கரெண்ட் போயிருந்தா அவனுக்கு கொடுங்க பாஸ்..

அடையாளமா?
ரெண்டு பெல்ட் போட்டுக்கிட்டு ,கழுத்துல டை கட்டிக்கிட்டு, கொஞ்சம் ஸ்மார்ட்டா இருப்பான் சார்..
.
.
.

Thursday, May 13, 2010

சிங்கையிலுமா? ஊகூம்..

ஆங்.. சொல்ல மறந்துட்டனே..
போன வாரம் பதிவ போட்டு..சண்டையாகி..சமாதானமாகி(?)..
எல்லாம ஆயி...ரெகுலர் வாழ்க்கைக்கு போனபோது, திடுக்கிடும் சம்பவம் நடந்துடுச்சு மக்காஸ்..

சம்பவம் நடந்த அன்று,  எனது பைக்..கம்பெனி கேட்டை கடக்கும்போது சரியாக மாலை 6 மணி..பட்டா...உள்குத்து உடம்புக்கு ஆகாது.. பார்த்துக்க.( இது எனக்கு நானே சொல்லிக்கிட்டது....)

சரியான மழை சார்...அப்படியே என்னொட பைக், இடதுபக்கம் திரும்புது.. போலிஸ்..சைரன் போட்டுகிட்டு, அடாதாமழையில..விடாம
ரோட்டுக்கு குறுக்கே நிற்கிறார்கள்..லைட்டா டவுட்...ஏன்னா.. போட்டுகுடுத்தே பேர் வாங்கும் , சொம்புதூக்கி எவனாவது,  எப்போம்போல, தவறான தகவல் கொடுத்திட்டானுகளா?.. இல்ல..ஆக்ஸிடெண்ட் ஏதாவதா?..

அருகில் நெருங்கினால், நடுரோட்ல மூணு மரம்..ஹாய்யா....ரோட்டுக்கு குறுக்கா படுத்துக்கிட்டு இருக்கு?..இந்த மழைக்கெல்லாம் தற்கொலை பண்ணிக்கிட்டா?.. யாருக்கு சார்.. பிரயோசனம்?.

ரெண்டு நிமிசம் ஆச்சி.. போலீஸ்கார அண்ணாச்சி என்னொட பைக்கை பார்த்து கைய காட்டுறாரு..  பைக்கும், மெதுவா, அவங்களை கடந்து போகுது சார்..( தற்பெருமையா?..சே..சே..நான் அவ்வளவு ஸ்மார்ட் கிடையாது..)

மழை தொடர்ந்து பெய்ஞ்சுக்கிட்டு இருக்கு.. ஒருவழியா வீட்டுக்கு போனேன்...
வீடும் இருட்டாயிருக்கு..
தீப்பெட்டி இல்ல.. 
மெழுகுவர்த்தி இல்ல..
பிரண்ஸ் இல்ல..

அப்படியே பேய் அடிச்சமாறி உக்காத்திட்டு இருக்கேன்..
இருட்டுல, வேர்க்க விறுவிறுக்க , கொஞ்ச நேரம் இருந்து பாருங்க.. நான் என்ன சொல்ல வரேனு புரியும்..
( எங்கேயோ புகையிற வாசனை வர்றமாறி இருக்கு..என்னானு பாரு  மங்குனி....)



5 நிமிசம் ஆச்சு..வந்தது பாருங்க கரண்ட்.. அப்பாடி..
கரண்ட் இல்லாட்டி வாழ்க்கையில ரொம்ப கஷ்டம் சார்..

எதுக்குடா இப்படி மொக்கையா எழுதுரேனு யோசனை பண்றீங்களா?..
கக்கூஸ் போயிட்டு கழுவுரதப் பற்றி ஒரு பதிவ போடலாம்..இப்படி
மொக்கையா , சாரிப்பா..ஸ்மார்ட்டா எழுதினா..புடிக்காது..அப்படித்தானே...


பாருங்க.. எதையோ சொல்ல வந்து  எதையோ பேசிக்கிட்டு இருக்கேன்..
சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில இருக்கும் பதிவர்களே..எனக்காக ஒரு உதவி செய்யுங்களேன்..  அப்படிக்கா.. பக்கத்தில , ஆற்காட்டாரும், மருத்துவரும் ஊருக்குளள இருக்காங்களா?..  இல்ல டூரிஸ்ட் விசா எடுத்துக்கிட்டு, ஏதாவது வெளிநாடு போயிருக்காங்களானு செக் பண்ணிக்கிட்டு,
எனக்கு உடனடியா தந்தி அடிங்க..
சார்.. முழுசா கேட்டுக்கிட்டு போங்க.....
டெல்லிக்கு இல்ல  சார்.... சிங்கைக்கு..

( பாரேன்.. உள்நாட்டுக்கு தந்தி, வெளிநாட்டுக்கு #$%தினு, யாராவது,   ஸ்மார்டா  சொல்லுவாங்க..)
.
.

.
( இது மங்குனி மட்டும்...
இனி புது பதிவப்போடுனு சொல்லுவே..?..
மேலும்..மண்டையில கரையான் அரிச்சது போக, இன்னும் ஒரு  கவிதை ஒட்டிக்கிட்டு இருக்கு  பாஸ்..
போடவா?..  சொல்லு.. போடவா?...)
.
.
.
கடைசியா ஒரு சீரியஸான மேட்டரை சொல்லிக்கிட்டு கிளம்பறேன் சார்..
பாஸ்ட் புட்..பாஸ்ட் புட்..னு சொல்றாங்களே..அதை அதிகமா தின்னா.. அப்புறம்,  காங்கிரஸ்காரங்க சொல்றது மாறி போர்ட், மாற்றி வைக்கவேண்டி வரும்..
பார்த்துக்குங்க...
.
.
.
.
.
.
.
.

Sunday, May 9, 2010

அனானியும், பிரபல பதிவர்களும்..

ரொம்ப நாளா, மனசுல இரு விசயம் அரிச்சுக்கிட்டு இருக்கு சார்..
எனக்கு இந்த அனானிபேர்ல வந்து, கெட்ட வார்த்தைகளில் கமென்ஸ் போடும் மிருகங்கள்மேல், நல்ல அபிப்ராயம் கிடையாது..

மனசு வக்கிரத்தை , அனானியா வந்து கொட்டிக்கிட்டு போறவன்,
உண்மையா, சந்தேகப்பிராணியாத்தான் இருப்பான்..   ஏதைப்பார்த்தாலும் சந்தேகம்.. மனைவி..குழந்தை..பெற்றோர், நண்பர்கள்  எவரையும் நம்பமாட்டாங்க..

வானம்பாடி அய்யா சொன்னார்.. ஒரு பேரு வைக்காம, வந்த் கமென்ஸ் போடுகிறவன்.. என்ன நல்ல விசயத்தையா சொல்லப் போறான்..அவன் அப்படி சொல்லவே வேண்டாமுனு, அனானி அப்ஷனை எடுத்து விடச்சொன்னார்..

அவர் சொன்ன கருத்து,  சரியாகப்பட்டதால், என்னுடைய ப்ளாக்கில் அனானி அப்ஷனை எடுத்துவிட்டேன்..




பதிவர்களுக்கு
உங்க ப்ளால, இவனுகளை ஒதுக்க..ஒரே வழி..அனானி ஆப்ஷ்னை எடுத்துவிடுங்க...    நீ சொல்லாத அதை.. அது தனிமனித உரிமை..நீ எதுக்கு,  ம&^%ரைப் புடிங்கிட்டு அட்வைஸ் பண்ணுகிறாய் என நினைப்பவர்களுக்கு, என்னோட, ஒரே வேண்டுகோள்..

ஏண்டா திடீர்னு, பட்டாபட்டி இந்த சப்ஜெட் பேசறானு நினைப்பவர்களுக்கு..
இல்ல சார்..இந்த வெளியூர்காரன், ரெட்டைவால், நான்..மனசுல பட்டதை, முகத்துக்கு நேரா சொல்லிடுவோம்..   எங்களுடைய கருத்துக்களை சொல்ல, எதுக்கு சார் பயம்?..மேலும்  நாங்கள் போடும் கமென்ஸ், எங்கள் ப்ளாக்கர் ஐடி-ய யூஸ் பண்ணித்தான் போடுவோம்..  அதில, எங்கள் லோகோ இருக்கும்..

உ.ம் : பார்வதியம்மா பற்றிய பதிவுகளில், ஒரு பிரபல(?) பதிவரின் கருத்தில் எங்களுக்கு   உடன்பாடில்லை.. வெளியூர்காரன், நேரா போயி கமென்ஸ் போட்டான்..”உங்களை ப்லோ பண்ணும் 270 பேருமே மனுசனுக இல்லையினு.”.
அதையும் அவர் வெளியிட்டார்..இதற்காக, அவருக்கு ஒரு சல்யூட்..

ஆனால், சில பதிவர்களின் பதிவுகளில்,சில விசமிகள், வெளியூரான், ரெட்டை பேர்ல போயி, தகாத வார்த்தைகளில் கமென்ஸ் போட்டிருக்கின்றனர்..
Name & URL யை யூஸ் பண்ணி, அவர்களின் பெயரில் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்..

அதில் பார்த்தால், அவர்களின் புரொபைல் போட்டோ இருக்காது..ஆனால், அந்த பிரபல பதிவர்கள், அதை க்ராஸ் செக் செய்யாமல்,
ஏதோ வெளியூர்காரனை, தீவிரவாதிபோல நினைத்து, பதிவுலகை விட்டு செல்லப் போவதாக, ஒரு பதிவை போட்டுள்ளனர்..

சார்/மேடம் பதிவர்களே.
.
ப்ளாக்கைவிட்டு போவதும், எழுதுவதும் உங்கள் உரிமை..ஆனா, இந்த காரணங்களால், விடை பெறுகிறேன் என் நீங்கள் சொல்வது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது..
மேலும்..இவர்கள் பெயரில், அனானிகள் கருத்து சொல்கின்றனரே..அதை அந்தத்த பதிவர்களின் ப்ளாக்ல் போய்.தெரியபடுத்துதில் தவறு ஏதுமில்லையே..    ஏன்னுடை நண்பர் ஒருவர், அந்த பதிவை படித்து விட்டு எங்களுக்கு தகவல் சொன்னதால்,    எங்களுடைய விளக்கங்களை பதிவு செய்கிறேன்..

மேலும் , இந்த பதிவின் லிங்கை, அவருக்கும், தெரியப்படுத்தப்போகிறேன்..இதற்கு மேலும் எங்களால், புரியவைக்க முடியாது  நண்பர்களே..



அனானிகளுக்கு...

உங்களுக்கு என்னோட ஒரு அட்வைஸ்..
எவனையும் நம்பாதே..உனக்கு சாப்பாட்ல விஷம் வெச்சு கொடுத்தாலும்
கொடுப்பாங்க உங்க குடும்பத்திலே..
அதனாலே..பேசாம, ..காலையில சாப்பாட்டுக்கு, உன்னோட உடம்பிலிருந்து நேரம் தவறாம ஒண்ணு வருமே..
அதைய பத்திரமா வெச்சு, மூணு வேளையும் சாப்பிடு.. 
எவனும் உன்னைய அசைக்கமுடியாது...
.

.
.
நன்றி..வணக்கம்..

Thursday, May 6, 2010

உஷ்.. கண்ணக்கட்டுதே...

எனக்கு ஜெயமோகன் மேல நல்ல மரியாதை இருக்கு சார்..மனசுல பட்டதை படார்னு போட்டு உடைக்கிறார்..  யாருக்கும் சொம்பு தூக்கியோ, ஜட்டி வாங்க காசு குடுங்கையானு சொல்லாம,      அவரோட எழுத்தை நம்பி..கலக்கிட்டு இருக்கார்..


நேற்று எதேச்சையா ஒரு வீடியோ கிளிப் பார்த்தேன்.. அதில்
நம்ம பூவையர் அரசி, ஜெயமோகனை, ‘சைக்கோ’னு,  விட்டத்த பார்த்துட்டே பேசறாங்க..

சூப்பரக்கா.......புலிக்கு பிறந்தது பூனைனு நிருபிச்சுட்டாங்க..

இதுல அவங்க சொன்ன ஒரு கோட் எனக்கு ரொம்ப படிச்சது..
“எம்.ஜி.ஆர்..என்னதான் எதிர்கட்சி தலைவராயிருந்தாலும், அவரை நக்கல் பண்ணி  ஜெயமோகன் சொன்னதை தமிழ் சமுதாயம் மன்னிக்காது”னு..
ஆனா..அதுக்கும், ’கை தட்டல்னு’ கூடியிருந்தவங்க, அடிச்சாங்க பாருங்க...
அப்படியே, என்னோட நெஞ்சு முடி சிலுத்துக்குச்சு...

ஆனா, ’கோமாளி, மலையாளத்தான்..Etc..Etc’, யாராரோ சொன்னாங்களேனு,
உங்க மனசுல தோணிச்சுனா,.. கம்பெனி பொறுப்பில்லை..

எதுக்கு சொல்லவரேனா..தமிழங்க நன்றி மறக்காதவங்க..
கைய நீட்டி காசு வாங்கினதாலே..கமுக்கமா பொத்திக்கிட்டு போயிட்டிருக்காங்க..

அதனால்.. பேசுங்க ஆத்தா.. பேசிக்கிட்டே இருங்க...


எதுக்கு இப்ப பட்டாபட்டி,  சன்னமா ஆரம்பிக்கிறானு சிலருக்கு மனசுல தோணும்..   தோன்றது தப்பேயில்லை சார்..ஏன்னா..
போன பதிவில போட்ட தாக்கதிலிருந்து வெளிய வரத்தான் இந்த பதிவு..
(கேட்ட கேள்விக்கு பதில் வரலப்பா.. அதனால் அதை ஓபன்ல விட்டுட்டு, இங்க வந்தாச்சு.)


சமீபத்தில நான் ரசிச்ச ஜோக்..

6 மொழிகள் தெரிஞ்ச வெளி நாட்டுக்காரன் , தமிழ்நாடு வந்திருந்தான்..( சாமிகளா..சும்மா.. ஒரு பேச்சுக்கு..எதுவும் உள்குத்தில்லை..)
ஒரு மாசமா சுற்றித்திரிஞ்ச பிறகு, கேரளா போகலாமுனு
முடிவு பண்ணி, அருகில் இருந்த போலிஸ்காரங்கிட்டு, ‘எப்படி ரயில்நிலையம் போகனும்?’னு  ஆங்கிலத்தில கேட்டிருக்கான்..

நம்மாளுக்கு, தமிழே தத்திதத்திதான் வரும்..ஹி..ஹி-னு பல்ல காமிச்சுட்டு, பதில் சொல்லாம விட்டத்தை பார்க்கிறான்..
வெளிநாட்டுக்காரன் பார்த்தான்.. சரி..ஆங்கிலம் தெரியாது போலனு நினச்சுகிட்டு,    அவனது மொழிப்புலமைய பயன்படுத்தி,
இந்தியில கேட்கிறான்.. திரும்பவும் விட்டம்...
சீனம்..விட்டம்
கொரியன்..விட்டம்
ஜெர்மன்..விட்டம்..

போலீஸ்காரனை நம்பி பிரயோசனமில்லைனு முடிவு பன்ணிட்டு,
அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தை ஒட்டி நடக்க ஆரம்பிச்சுட்டான்..( எப்படியும் ஸ்டேஷன் வருமில்ல..)

அவன் போனதும்.. நம்மாளு பார்வை.. விட்டத்திலிருந்து.. கீழ இறங்குச்சு..
அருகில் இருந்த சக போலீஸ்காரனை பார்த்து..’சே..கேவலமாயிருக்கப்பா..ஒருத்தன் நம்ம கிட்ட உதவி கேட்டும், பாஷை புரியாததால உதவ முடியாம போச்சே..பேசாம நாமளும் நாலு பாஷை படிச்சு வெச்சுக்கிட்டா..இந்த மாறி சந்தர்ப்பத்தில எவ்வளவு உபயோகமாயிருக்கும்..”னு  புலம்பறான்..

அதுக்கு பக்கத்திலருந்தவன் சொல்றான்...”ஆமாய்யா.. 6 பாஷை தெரிஞ்சவனுக்கே.. அவன் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கலை..
இவரு... இன்னொரு பாசை தெரிஞ்சுகிட்டு, அடுத்தவனுக்கு உதவப்போறானாமா”னு தலையில அடிச்சுட்டு, டீ குடிக்கப்போயிட்டான்..

நான் என்ன சொல்லவரேனா.. இது டமாசுக்கு சொன்னது..ஹி..ஹி.. பல பாஷைகளை கத்துக்கிறதுல தப்பேயில்லை..
( முக்கியமா.. கெட்ட வார்த்தைய, முதல்ல தெரிஞ்சுக்குங்க.. அதுவே பாதி கிணறை தாண்டியதுக்கு சமம்..)
.
கண்ணக் கட்டிருச்சு சார்...

.
.
.

Tuesday, May 4, 2010

கிராமம்தோறும் கட்சி போர்ட்..கலக்குங்க பாஸு..

சுறா பார்த்துவிட்டு, வந்து, எதைப்பார்த்தாலும் நாலு,நாலாத் தெரியுது சார்.
நேற்று எந்திருச்சதும் கொஞ்சமா பரவாயில்லமாறி ஒரு பீலிங்..( ரெண்டு ரெண்டா தெரிஞ்சா, நல்லாயிட்டுவரேன்னுதானே அர்த்தம்..)
இன்னைக்கு, காலையில, கண்ணு பளீர்னு டால் அடிச்சது... ஆகா.. சுறாவில இருந்து முழுசும் வெளிய வந்திட்டோம்..   போதுண்டா சாமி... இனி நமக்கு சினிமாவே வேணாமனு நினைச்சுகிட்டு, காலையில மன்னாரு டீ-கடைக்கு போறேன்..  அங்க சின்ராசு டீ குடிச்சிகிட்டு இருக்கான்..

லைட்டா, பேஸ்மெண்ட் ஒரு ஆட்டம் ஆடுச்சு..தக்காளி.. மாட்டியாச்சு.. இனி சாண் போனா என்ன முழம் போனா என்னனு , ஒரு   வணக்கம் வெச்சேன்..

‘மன்னாரு.. பட்டாபட்டிக்கு ஒரு ஏலக்காயி டீ போடு’-சின்ராசு..

’இல்ல சின்ராசு.. நான் இப்பத்தான் டீ குடிச்சுட்டு..’ முடிக்குமுன், முறைக்கிறான் சார்.  விதியேனு, பெஞ்சில உக்காந்தேன்..

அப்புறம்..என்ன விசேசம் பட்டாபட்டி...? மூஞ்சி பளீர்னு இருக்கு..


இல்லப்பா.. ராகுல், கட்சிக்கு இளரத்தம் பாய்ச்சுறாரு பார்த்தியா?..

ஆமாய்யா.. எப்படியோ, தமிழக் இளைஞர் காங்கிரஸுக்கு, யுவராசை தேர்ந்தெடுத்திட்டீங்க?...  கலக்கராங்கப்பா காங்கிரஸ்காரனூக...

ஆமா.. சின்ராசு..யுவராசுக்கு சின்ன வயசுதான்.. வாசன் சார் புண்ணியத்தில, இப்பவே ஒரு போஸ்ட்க்கு போயிட்டாரு..  அதுவுமில்லாம, அவரது குடும்பமும், ஏதோ, பாரம்பரிய கட்சி குடும்பமாம்...

ஆமாமா.  பேப்பர்ல பார்த்தேன்..ஆனா, பதவியேறதும் அறிக்கை விட்டாரு பாரு..தக்காளி..

ஏன்?.. என்ன சொன்னாரு.. எல்லா தலைவனும் சொல்றமாறிதான் சொல்லியிருப்பாரு?..

போடா புண்ணாக்கு..
கிராமத்தில, வேலைவாய்ப்பை உருவாக்கலாம்..
குழந்தை தொழிலார்களை இல்லாமல் செய்யலாம்..
சுற்றுப்புர சூழ்நிலையைப்பற்றி விழிப்புணர்வு உருவாக்கலாம்..
கிராமம் தோறும், மரம் நடலாம்...
அப்படியே கட்சிய வளர்கலாமுனு சொல்லாம..... போட்டாரு பாரு ஒரு போடு..
காங்கிரஸ்காரன் அழிக்க வெளியயிருந்து எவனும் வரவேண்டாம்..

அப்படி என்ன சொல்லிப்புட்டாரு?..

சொன்னாரு.. சொன்னாரு.. சூ%$#@ல சுண்ணாம்பு வெக்கச்சொல்லி...
எல்லா கிராமத்துக்கும் போயி ’போர்ட்’ வெக்கப்போறாராமா உங்க தலைவரு...
வட நாட்டு காங்கிரஸ்காரனுக, நெடுஞ்சாலையில, ஒவ்வொரு கி.மீ க்கும் அன்னையோட போட்டோ வைக்கனுமுனு சொன்னாங்க..

இவரு..ஒருபடி மேலபோயி, ஒவ்வொரு கிராமத்திலையும், ’கட்சி போர்ட்’ வெக்கறாராம்.. உருப்படுமய்யா நாடு...   ஆனா ஒண்ணுயா.. போர்ட் வெச்சா, நடுவுல ஓட்டையப்போட்டு வெக்கச்சொல்லு..

ஏன்..

இல்லாடி வெயிலுக்கு, மக்கள், நிழழாயிருக்குனு போர்ட்க்கு கீழ நிப்பானுக..
அப்புறம் பாரம்பரிய கட்சிக்கு என்ன பெருமை..?

போ சின்ராசு.. புது ரத்தம் பாய்சறப்ப, இப்படி எடக்கு மடக்கா பேசாதே..
குஷ்புகூட, கட்சியில சேரப்போறதா கேள்விப்பட்டேன்..

யாருய்யா அது..ஓ.. நம்ம விஜய்ல, ’அழகிய ஆண் மகனை’ செலக்ட் பண்ணப்போறேனு சொல்லிகிட்டு இருக்கே.....  அதுவா?..

யோவ்.. சின்ராசு.. உனக்கு ஓவர் குசும்மாயிடுச்சி..அந்தம்மா என்ன பேமஸ் தெரியுமா?..


ஆமாய்யா..திருமணத்துக்கு முன்னாடி பாதுகாப்பா,  உடலுறவு கொள்ளலாமுனு பினாத்துச்சே அதுவா?..  இல்ல.. கல்யாணத்துகு முன்னாடி, ராஜீவ் போட்டாவை, படுக்கயறையில ,மாட்டியிருந்தேனு பெருமையா அறிக்கை விட்டுச்சே..  அந்தம்மாதானே?..பயங்கர பேமஸ் ஆச்சே அவங்க...
ஆனானும் நாட்ட முன்னேறற, இவங்களைவிட்டா, எவனுக் கிடையாது..
இத்தாலி கலாச்சாரம், இந்தியாவுக்கு வந்தாச்சு..
இப்ப குஷ்பு மூலமா, வெளிநாட்டு பண்பாடு..வரப்போகுது..
சீக்கிரம் யாரும் சேலை கட்டக்கூடாதுனு அறிக்கை வந்தாலும் வரும் பாரு..   என்னமோ பண்ணுங்க..ஆனா எங்கூர்ல சீக்கிரம் ஒரு ’போர்ட்’ வெக்கப்போறோம்..

என்னது திரும்பவும் போர்டா?..

ஆமாய்யா.. பன்னியும் , அரசியல்வாதியும் உள்ளே வரக்கூடாதுனு..
ஆனா.. பன்னிக்கு ரோசம் அதிகம்..படிக்கலேனாலும், வீறாப்பா உள்ள வராது.. ஆனா.. இந்த பன்னாடைக..??
.
.
.
.