Pages

Wednesday, December 29, 2010

தலைப்பா?.. “ப.ர்.ர்..ர்ர்..”னு வெச்சுக்குங்க..

.
.
.
ஆணி-னு போர்ட் போட்டாலும், தொந்தரவு சுத்தி சுத்தி வரும் என்பது கலைஞர் மூலமாக கற்றுணர்ந்த உண்மை.

வேலையிடத்தில ஆணி..   சரி.. ஏதாவது பதிவ படிக்கலாம்னு போனால்...
போனேனா!!!..  அங்கதான் சனி சம்மணம் போட்டு உட்கார்ந்து இருந்தது......

நமது அண்ணன், அஞ்சா சிங்கம், திருவருச்செல்வன், சிந்தனைச்சிற்பி, படத்தைப்பற்றி அருமையா விமர்சனம் எழுதி, பார்க்காதவன் பைத்தியக்காரன் என்ற ரேஞ்சில விளாசி விளாசி  எழுதியிருந்தார்...ஆமா.. இப்ப நான் எழுதியிருந்தாருனா சொன்னேன்.. சே..சே  வரைந்திருந்தார்..

அண்ணன் சொன்னா.. ஆண்டவரு(?) சொன்னமாறினு நினச்சுக்கிட்டு, அப்பவே  கிளம்பி தியேட்டருக்கு போனேன்.

ங்க்கொய்யா.. படமாய்யா அது.. சூப்ப்பரு... நான் கமல் ரசிகன்னு சொல்வதைவிட,  வெறியன்னு சொல்லலாம்.  அப்பேர்பட்ட வெறியன், இப்பதான் சமீபமா..( ஹி..ஹி..  இங்கே சமீபம் என குறிப்பிட்டால், ரெண்டு அல்லது மூணு வாரம் என அர்த்தம் கொள்க..  மீறி, 1948 க்கு சென்றால்...  சென்றால்....போய் தொலைங்கப்பா.. நான் சொல்ல  வந்ததை சொல்லிட்டு, கிளம்பறேன்..  -பதிவர்)

சே...பார்த்தீங்களா?.. இதுதான் சார், எங்கிட்ட பிரச்சனை.   இப்ப என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன்.. ஆங்..  சினிமா பற்றி...  அதாவது,  படம் சூப்பருங்க.. குடும்பத்தோட பாருங்க. முடிஞ்சா ப்ளாக்ல டிக்கெட்
வாங்கிப்பாருங்க.. காதலர்களுக்கு அருமையான படம். அட்டகாசமான லைட்டிங்..   தியேட்டரை சொன்னேன் .  ( நல்லா இருட்டாத்தான் இருக்கு..பிரச்சனை வர வாய்ப்பில்லை.)

அதுல எனக்கு மிகவும் பிடிச்ச காட்சி என்னானா?.. பையன் காசை வாயில
போட்டுறுவான்.. கூடியுள்ள கூட்டம் பதைபதைக்குது. அடுத்து என்ன ஆகமோ-னு சீட்  நுனியில ஒவ்வொருத்தையும் உட்காரவைத்த, ரவிக்குமாரை ( அதாம்பா..  படத்தோட டைரக்டராமாம்..) பாராட்ட வார்த்தைகளே இல்லை...

எனக்கோ, கண்ணுல தண்ணியா கொட்டுது. அடுத்து அந்த காசு வெளிய வரும்... தவறி த்ரிஷா வாயில விழும்.  கமல் சீறி பாய்ந்து, தலைகீழா புரட்டி(?),  த்ரிஷா வாயில இருந்து காசை எடுப்பாருனு நினச்சுக்கிட்டு இருந்தனா.. ஹி..ஹி  தூங்கிட்டேன் போல.

படம் முடிஞ்சு, மந்திரிச்சு விட்டமாறி வெளிய வந்தா ஒரே வெயில்.
ஆகவே மக்களே. மீதி படத்தை பார்த்து, புளங்காகிதம் அடைய, பதிவர்கள் சார்பில் வாழ்த்துக்குறேன்.

இப்படிக்கு
வெறுப்புடன் கமல் ரசிகன்.

டிஸ்கி 0..
எங்கப்பா..நான் பள்ளியில படிக்கிற காலத்தில, ’ஒழுக்கமா படிச்சு வாழ்க்கையில முன்னேற பாரு’ன்னு பிடரியிலே, அவ்வப்போது போடுவாரு.  ஆனா, எங்கப்பனையும் மிஞ்சி, ஒரே போடா போட்டு, என் வாழ்க்கையில தீபம் ஏற்றிய ’அண்ணன் ரவிக்குமாருக்கு’ என் இரு கரம் கூப்பி நன்றியை தெரிவித்துக்கொண்டு, பொழப்ப பார்க்க ஆபீஸ் போகிறேன்..
நன்னி தலிவா..

இதேமாறி அடுத்த படத்தை சீக்கிரமா எடுத்து விடுங்க.. புண்ணியமா போகும்.. ஆங்.. எங்களுக்குத்தான்..


டிஸ்கி 1.
சிங்கப்பூர் டீவீயில், ”கமல், ரவிக்குமார், த்ரிஷா மற்றும் மாதவனு”க்கு, சிவப்பு கம்பள வரவேற்ப்பு கொடுத்ததை காட்டி( படத்தில் நடித்தற்க்கு.!!),  என்னை மனிதனாக்கிய டீவி நிலையத்துக்கும் என் நன்னி.

”கண்ணால் காண்பதும் பொய்.. 

காதால் கேட்பதும் பொய்.. 
தீரவிசாரிப்பதும் பொய்தான்..”

மறக்காம் படத்தை பாருங்க.. நாட்டை முன்னேற்றிச்செல்லுங்க...


டிஸ்கி 2.
ஆங்.. என்னா படம்னு சொல்லமறந்துட்டேன்.. ”மன்மத அம்பாம்”..


டிஸ்கி 3.
மார்க்கெட் போன நடிகனுக, நடிக்கவேண்டிய படத்தில்.. கமல்.. இதுல, வசனமும் அவரேதானாம்.. உம்...
”ஊறுகாய வெச்சு உண்டக்கட்டி சாப்பிட்டு

இருந்தா.. வெடுக்குனு போயிருக்கும்”.. எல்லாம் கொடுமை சார்..
.
.
விடு தலைவா  !!!..   இப்ப எங்க மூஞ்சியும் இப்படிதான் இருக்கு....
.
.
.

Wednesday, December 22, 2010

ஆ........ணீ......ஆணி அதிகம்..அதனால.. ஹி..ஹி... அடிக்கடி ப்ளாக் பக்கம் வரமாட்டேன்..

 @டெ%$#^#&#@ரர்...
ப்ளாக்கை வித்துடாதே மச்சி...

நான் சொல்வதை என்னைக்கு கேட்டிருக்கே?.. சரி வித்தா,
2 % டோமருக்கும், ( ங்கொய்யா.. இனியாவது மொய் கொஞ்சம் அதிகமா வைக்கட்டும்.. வெங்காயம் என்னா விலை விற்க்குது?..)
4%  கனி+ராசாவுக்கும் கொடுத்துட்டு,
மீதியை , என்னுடை ஸ்விஸ் பேங்க் லாக்கர்ல வைத்துவிடு. ( ஆமாய்யா.. சோனியாவின் தங்கை லாக்கருக்கு..பக்கத்து லாக்கர்தான்.. அதுல புலிப்படம் ஒட்டியிருக்கும்.)

@%@#$#@^$#@$ஸு..
தக்காளி..சைக்கிள் கேப்-ல உள்ள பூந்து விற்க பார்த்தே...அப்பால இருக்கு உனக்கு..

( பட்டாபட்டியே போடாம, நான் ஆடும் ருத்ரதாண்டவத்தை பார்த்திருக்கியா?.!!!!  )
டிஸ்கி..

எழுத சரக்கு இல்லேனு கண்டுபிடிச்சிருப்பானுகளா?..
சே..சே.. நம்ம பயலுக, அந்தளவுக்கு யோசனை பண்ண மாட்டாங்க..!!!...... ஹி..ஹி


மக்கா... உங்க தன்மானத்தை ஓவரா காட்டிடாதீங்க.. அப்புறம் அந்த ரெண்டு எழுத்துக்காரரு, “நான் அப்பவே சொல்லலே.”.னு  எல்லா பெண் பதிவர்கள் ப்ளாக்குக்கு போய் பிலாக்கணம் பாடும்.. ஹி..ஹி

Saturday, December 18, 2010

சொன்னாங்கோ...


@கனிமொழி

”ராசா கைய வெச்சா.. அது ராங்கா...”

திமுக மீது எந்தக்குற்றமும் இல்லை என்பதை நிரூபிக்க இது போன்ற ஆய்வு நடவடிக்கைகள் அவசியம்.   ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுக தனது தூய்மையை மெய்ப்பிக்கும்.  விசாரணைகளுக்கு திமுக எதிரானது அல்ல என்பதை இந்த நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுக்கிறது.   சிபிஐ விசாரணைக்கு முழுவதுமாக ஒத்துழைக்க தயார்.  இந்த விவகாரத்தால் எந்த வகையிலும் திமுக-காங்கிரஸ் உறவு பாதிக்காது.ஹா..ஹா... கலைஞர் மகள்னா கொக்கா?.. அப்படி போடுக்கா அருவாளை..
இந்த முட்டாப்பயலுக..அதாங்கா..நம்ம  நாட்டுமக்கள்..  ஹி..ஹி அவர்களின் முன்னேறத்துக்காக, தன் குடும்பத்தையே அர்பணித்த கலைஞரை(?),
சீண்டிப்பார்க்கிறாங்க.. விடாதீங்கங்கா...

அக்கா.. உங்கள் ஆங்கிலம் அருமை.. அதைவிட, ராசாவின் ஆங்கிலமும் ஓகோ..ஆகா..   நீங்க ரெண்டு பேரும் மேடையில சேர்ந்து நின்னு பேசனும். அதை நாங்க வாய் பிளந்துட்டு பார்க்கனும்.. அதான் இந்த ஏழை வாக்காளானின் ஆசைக்கா..
 
’மணி எனக்கு, கனி உனக்கு..’ யாரோ சொன்னாங்களாமே.. அப்படீனா என்னாக்கா?..


=======================================================================


@தங்கபாலு

ஓய்..அங்க பாரு- .உங்க அன்னை.
ஊழலுக்கு காங்கிரஸ் எதிரானது. ஊழல் குற்றச்சாட்டு வந்தவுடனேயே பதவியிலிருந்து மகாராஷ்டிர முதல்வர் ராஜினாமா செய்தார். இதுபோல பல உதாரணங்களை கூறலாம். ஊழலுக்கு துணை போக மாட்டோம். உண்மை நிலை தெரியும் வரை ஒருவரை குற்றம்சாட்டுவது தவறு. குற்றச்சாட்டு வந்தவுடனேயே ஒருவரை குற்றவாளி என்று கூறிவிட முடியாது. அது சரியானதல்ல.
”எங்களை பெற்றெடுத்தது(?) அன்னை சோனியா. அவர் காலடி மண்ணெடுத்து, அவரது அடிவருட்டும் வரை,   ஊண் உறக்கம் இன்றி பாடுபடுவோம்.
ராகுல்.... ’அன்னை பெற்றெடுத்த வைரம்’.   அவரையும்,  அவரது இன்நாள்காதலியையும், ஆட்சிப்பீடத்தில ஏற்றும்வரை, மலம்கூட கழிப்பதில்லை என சூழுரைக்கின்றேன்.”
ஏண்ணே. இதெல்லாம் விட்டுட்டீங்க...போங்கண்ணே.. வயசானா, எல்லாம் மறந்துட்டு வருது..


=======================================================================

@முதலைமைச்சர்
உம்..இன்னைக்காவது முடி வெட்டனும்.
அமைச்சர் பதவிக்காக தன் பேரனிடம் அதுவும் ரூ. 600 கோடி அவரது பாட்டி வாங்கினார் என்று சில பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இதை நிரூபிக்கத் தயாரா? இதுபோன்ற உண்மைக்கு மாறான பொய்ச் செய்திகளை ஒரு சில பத்திரிகையாளர்கள் திரித்து வெளியிட்டோ அல்லது அதற்காக கூடிப்பேசி சதித் திட்டம் வகுத்தோ திராவிட இயக்கத்தை சேதப்படுத்த எண்ணுகிறார்களா?
//ரைட்..ரைட்..ரெண்டு நாளா முரசொலில கடிதம் கூட எழுதாம , எங்க போய் தொல.. இருந்தீங்க?.
அறிஞர் அண்ணா இறந்தபோதுகூட விடாமல், கடிதம் எழுதிய கைகள், கட்டுண்டு கிடப்பதின் ரகசியம் என்னா தலை?...
கனியோ.. காயோ?. பழுத்தால் அழுகதான் செய்யும்...=======================================================================
 @அன்புமணி ராமதாஸ்
’நாளை நமதே.. இந்த நாடும் நமதே...
 
பாமக துணை இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. அடுத்த 10 ஆண்டுகளில் புகையிலை மற்றும் மதுவுக்கு அடிமையாகத இளைஞர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதுவா புரட்சி, இதுவா முன்னேற்றம், இதுவா சமுதாய முன்னேற்றம். மதுவை ஒழிக்க வேண்டும் என்று சொல்லக் கூடிய தலைவர் இந்தியாவிலேயே ராமதாஸ் மட்டும்தான். அனைவருக்கும் இலவச கல்வி தர பாமக பாடுபடும் என்றார்.விடுண்ணே..விடுண்ணே.. எதுக்குண்ணே 10 வருஷம்?..

அரசியல் குடும்பங்களும், வாரிசுகளும், சுருட்டும் வேகத்தை பார்த்தால்,( பார்த்தீங்களா.. கோவிச்சிக்கிரீங்க.. வாரிசுனு உங்களை சொல்வேனா?.. இது அவங்களைண்ணே..)  இன்னும் ரெண்டு வருஷத்தில் எல்லா பயலும், பிச்சை எடுக்கும் நிலைக்கு போயிடுவானுக.

அப்போது, கண்டிப்பா, இலவச கல்விதான் கொடுக்கவேண்டி வரும்...ஹி..ஹி..
நடத்துங்க..நடத்துங்க.. ஆமா..வரும் தேர்தலை, யார் வீட்ல கொண்டாடப்போறீக?...=======================================================================

@இதெல்லாம் நாம...
.
மன்னன் வருவான்..   கதை சொல்லுவான்.
வண்ண வண்ண போஸ்டர் ஒட்டி காயடிப்பான்..
.


Tuesday, December 14, 2010

ங்கொய்யா..விடாதே..குத்து…

காங்கிரஸ் எம்.பி.  ஆவேசம்: கலெக்டர் மீது கடும் தாக்குதல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் அடையாள அட்டை வழங்கும் விழா இன்று காலை நடைபெற்றது.  இவ்விழாவில் கலந்துகொள்ள அமைச்சர் எ.வ.வேலு, காங்கிரஸ் எம்பி கிருஷ்ணசாமி, திமுக
எம்.எல்.ஏ. சிவானந்தம், மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


விழா மேடையின் மேல் எம்.பி.  கிருஷ்ணசாமியுடன் வந்திருந்த காங்கிரசாருக்கும்மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.  இதில் ராஜேந்திரன் மூன்று காங்கிரஸ் பிரமுகர்களை அடித்துவிட்டார்.  இதைக்கண்டு  முக்கியபிரமுகர்கள் உட்பட எல்லோரும் அதிர்ச்சியானார்கள்.


இதனால் கோபமடைந்த காங்கிரசார்  மாவட்ட ஆட்சியரை சுற்றி வளைத்து உதைத்து கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
 

மேலும்எம்.பி.கிருஷ்ணசாமி மாவட்ட ஆட்சியரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட
முற்பட்டார்.  அப்போது திமுகவினர் அவரை தடுத்து ஆரணி தங்கும் விடுதிக்கு
அழைத்து சென்றனர்.
    மாவட்ட ஆட்சியர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. தரப்பினர் உறுதியாக உள்ளனர்.

இதனால் திருவண்ணாமலையில் பதட்டம் நிலவுகிறது.

//
ங்கொய்யாலே.. காங்கிரஸ்காரன்னா, என்ன இளிச்சவாய கூ.கூ..கூமுட்டையா? எங்க மேலேயே கை வைப்பையா நீ?.. எங்க தலைவன், இவனுகளுக்காக,  ஸ்பெயின் சரக்க ஒதுக்கி வெச்சுட்டு,  படிப்ப பாதியிலேயே நிறுத்திப்புட்டு(?) , ”மக்கள் தொண்டே மகேசன் தொண்டு”னு,  ஊண்  உறக்கமின்றி , நாடு முழுதும் சூறாவளி பயணம் சுற்றிக்கிட்டு இருக்கார்..

இங்க என்னடானா, ”பாரம்பரிய கட்சிகாரனுக ஆச்சே.,  நாட்டு சுதந்திரதுக்கு படாதபாடு பட்டவனுகலே இவனுக”  என்ற மட்டு மரியாதை இல்லாம,  நம்ம மேலேயே ”கை” வைக்கிறானுக... 

உடாதீங்க மக்கா..  இன்னைக்கு,  எவ்வளவு பேர் செத்தாலும் சரி..


உடனே அன்னைக்கு.. அதாம்பா..... நம்ம காவல் தெய்வம் “சோனியா அன்னைக்கு”  போன் போடுங்க.... 

இந்திய ராணுவத்தை  திருவண்ணாமலைக்கு திருப்பி விடுங்க..


தக்காளி.. நாடே சுடுகாடு ஆனாலும் சரி.. நாம மரியாதைய நாமதான் காப்பற்றனும்.

இலங்கையில் , தேசிய கீதத்தில் , தமிழ எடுத்துட்டானுகனு, எங்க தலைவர் கலைஞர் அய்யா, எவ்வளவு வருத்தப்பட்டு , அறிக்கை விட்டிருக்காரு.?  
(பாவம்... வருத்தம் தாங்காம, ஏற்காட்டுக்கு  ஏறிப்போயிட்டாரு...)

நம்ம மேல கை வைக்க, எவ்வளவு பொ&^$#ச்சு கொழுப்பு இருக்கனும் இவனுகளுக்கு...


இது என்ன ஜனநாயக நாடா?.. இல்ல சர்வாதிகாரிக நாடா?...
ஒவ்வொரு காங்கிரஸ்காரன் மேல் விழும் அடிக்கு, ரெண்டு தமிழனை போட்டுத்தள்ளனும்..


போர்..போர்...


டிஸ்கி 1..
இப்படியெல்லாம் சொல்லலாமுனு பார்த்தேன்.. ஊகும்.. நாக்கு வரமாட்டிங்குது..


டிஸ்கி 2.
"நீ போடி முன்னாடி..
நான் வாரேன் பின்னாடி... ”
அடுத்த தடவை,  சிவப்பா,  ஒரு பையன், தலையில மண்சட்டிய தூக்கி வெச்சுக்கிட்டு, ”எனக்கு ஓட்டுப்போடு..எங்காம்மாக்கு ஓட்டு போடு”னு வரும்..
வந்தா.. அதுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க மக்களே..  ( அதாவது , தலையில் இருக்கும் மண் சட்டிய, கீழ இறக்கி வையுங்க.   .ஹி..ஹி . ஆனா..மறந்தும், களிமண்ணை(?) இறக்கி வெச்சுடாதீங்க.. )
இறக்கிவெச்சதும், 10000 மரக்கன்று கொடுத்து,  1வாரத்தில்,  நட்டு முடிச்சுட்டு வரச்சொலுங்க.. அப்படி திரும்பவும் வந்திட்டா....அப்பால.... முடிவு செய்யலாம்..
.
.
.