Pages

Thursday, December 31, 2009

வாங்கய்யா..மருத்துவரய்யா..

செய்திகள்
  • ஜெயங்கொண்டம்: வன்னியர்கள் வன்னியர்களுக்கு மட்டுமே, குறிப்பாக பாமகவுக்கு மட்டுமே ஒட்டு போட்டால் தமிழகத்தில் உள்ள 120 சட்டசபை தொகுதிகளில் பாமக வெற்றிக் கனியை பறித்து ஆட்சியை பிடிக்கும்
    ( அய்யா..சாமி.. தயவு பண்ணி ஓட்டப்போடுங்க சாமி...)

  • தமிழகத்தில் உள்ள 6 கோடி பேரில் 2 கோடி பேர் வன்னியர்கள் உள்ளனர். வன்னியர்கள் வன்னியர்களுக்கே ஒட்டு போட்டால் தமிழகத்தில் 120 சட்டசபை தொகுதிகளில் வெற்றிக் கனியை பறித்து ஆட்சியை பிடிக்கலாம். இதற்கு அனைத்து வன்னியர்களும் ஒன்று சேர வேண்டும்.
    ( 2 கோடி இருக்கட்டும்.. முதல்ல அன்பு-பெல் உங்களுக்கு ஓட்டு   போடுவாராய்யா?..தவறான முடிவினால், மகனுனோட கோட், ஸுட் -ய கழட்டுனவறாச்சே நீங்க...)

 

  • 1987 -ல் போராட்டம் நடத்தி மற்ற சாதிகளுடன் இணைந்து 20 சதவீத இடஒதுக்கீடு பெற்றோம்.ஆனால் அதில் 7 சதவீதம் கூட நமக்கு பலன் கிடைக்கவில்லை. 
     ( அடடா.. வடைபோச்சே..)
 


  • வன்னியர்களுக்கு என தனியாக 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி அறவழியில் போராட்டம் நடத்தி சிறை செல்ல 20 வயது முதல் 30 வயது வரையுள்ள ஒரு லட்சம் இளைஞர்கள் தயாராக வேண்டும்.
         ( அடப்  பார்றா..இதுதான் பெற்ற பாசமென்பதா...அழகா நம்ம மணிய கரைசேத்திட்டார்...)



  • சிறையில் இருந்து வெளியில் விட்டாலும் மீண்டும் அதே போராட்டத்தை நடத்தி சிறைக்கு செல்ல வேண்டும். நான்கூட 6 மாதம் சிறைக்குச் செல்ல தயாராக உள்ளேன் என்றார்.
     ( அய்யா.. நீங்க எதுக்குய்யா வயசானகாலத்திலே உள்ளபோயிட்டு.... வெளியிருந்தே கட்ட ஆரம்மிசுருங்க............. சமாதி-ய...


ஏனய்யா. உங்கள் அரசியல் அனுபவமென்ன..நீங்கபோயி 6 மாத விசா அப்ளை பண்ணீட்டு......நீங்கமட்டும் "உம்" -னு சொல்லுங்க.... காடுவெட்டிகிட்ட சொல்லி பர்மனெண்ட் விசாவுக்கு ,  பேப்பர்ச மூவ் பண்ணிடலாம்..)





.

Wednesday, December 30, 2009

ஆங்கிலம் கற்கலாம் வாங்க.. -> 1


இந்தப் பதிவை படிக்கும்முன் தயவுசெய்து, கீழ்கண்ட கேள்விகளுக்கு பதிலளியுங்கள்..


  • நீங்க அடுத்தவருக்கு உதவும் மனப்பான்மை உள்ளவரா?
  • அடுத்தவர் துயர் கண்டு மனம் துடிப்பவரா?
  • உதவி செய்வதையே கடமையாக கொண்டுள்ளவரா?
  • ஆமாய்யா ஆமா..என்னானு சொல்லித்தொலை-னு நினைக்கிறிங்களா?..

இதுல , இரண்டு கேள்விகளுக்கு மேல் உங்கள் பதில்  "ஆம்"  என்றால்,
நீங்கதான் நம்ம ஆள்...........மற்றவங்ககெல்லாம் , அப்படியே இந்தப்
பக்கத்தில்   " கீழே வலதுமூலையிலே " ஒருவர் தலைத்தலையா அடிச்சுட்டிருப்பார்..
அவரு செய்ற மாறி , செஞ்சிட்டு அடுத்தபதிவைப் படிக்க போயிடுங்க.. ப்ளீஸ்...

மற்றவற்கெல்லாம் ,

OK.... நேர சப்ஜெட் ஆரம்பிச்சுடலாமா....

எந்த ஒரு " Target "-ய் அடையமுனாலும் , அதுக்கு விடாமுயற்சி, மற்றும் நேர் & குறுக்கு வழிகள் இருக்கும்.

விடாமுயற்சி.
இன்னும் நீங்க இந்தப்பதிவைப் படிக்கிறதாலே , உங்களுக்கு ரத்ததிலேயே "விடாமுயற்சி "  ஊறிட்டிருக்கு மக்கா.. அதனாலே நீங்க தைரியமா Continue பண்ணலாம்..

நேர் வழி
நேர்வழியில போற நல்லவங்கெல்லாம் , அந்தப் படத்தப் பார்த்து
தலையில அடிச்சுட்டு , அடுத்தப் பதிவுக்குப்போனதாலே, அவங்களோட சேர்த்து இதையும் ஸ்கிப்  பண்ணிடலாம்...

குறுக்கு வழி
எப்படியோ தட்டுத்தடுமாறி குறுக்கு வழிவரை வந்துட்டீங்க.. சபாஸ் மக்கா. ,
" நீங்கதான் நம்மாளு.."
அப்படியே கை கோர்த்திகிட்டு , எங்கூட வாங்க..

கீழ உள்ள கோல்டன் Rules , எப்படியாவது மண்டையில ஏத்திக்கோங்க..


#Rule 1 - எந்த புது "language" கற்றுக்கொள்ளனுமுனா, அதில் உள்ள கெட்ட வார்த்தைகளை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்..
#Rule 2 - அடுத்தவனுக்கு சொல்லிக்கொடுக்கும் போது, அது அவனோட மண்டையில் ஏறிடுச்சானு க்ராஸ் செக் செய்யுங்க..
#Rule 3 - அப்படி ஏதாவது Screwup ஆயிடுச்சுனா, சடாருனு Shutter -ப் போட்டுட்டு தப்பிச்சுருங்க...


உதாரணத்துக்கு " Holding & Lifting " அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்..


எங்க கம்பெனியில, போனமாதம் கால்பந்து மேட்ச் "Woodlands Statium"-ல நடந்தது..எங்க டீம்ல சின்ராசு ,  எங்களுக்கு படியளக்கிற கடவுள், மற்றும் சில நண்பர்கள் ஒரு டீம்ல விளையாடினோம்..


இந்த சின்ராசு இருக்கானே...அவன் தமிழில புலி..( தாத்தாவோட பட்டாபட்டிய, அவருக்கே தெரியாம கழட்டி  ஆற்காட்டுக்காரருக்கு மாட்ற ஜாதி...) 

பிரச்சனை என்னான்னா ,நம்மாளு ஆங்கிலத்தில கொஞ்சம் அரை குறை.
எதை,  எங்க, எப்படி  யூஸ் பண்ணனும் தெரியாது.

அன்னைக்கு நடந்து முடிந்த மேட்சுல எங்களுக்கும் (எப்பவும்போல ஆறுதல்) பரிசு கிடைத்தது.. 









                                                                               படம்...

 அப்போது எங்க கடவுள் , கைல டீம் கொடியப்   பிடித்துக்கொண்டு ,
சுற்றியும் பெண்கள் படைசூழ, யாரிடமோ உரக்கப் பேசிட்டுருந்தார்.. ..
சின்ராசு பெண்கள் முன்னாடி, படம் போடலாமுனு முடிவுபண்ணி சத்தமா
" டேய்..Boss is lifting our Team Flag... " கத்த, எங்களுக்கு ரொம்ப அவமானமா போயிடுச்சு..

அவன தனியா கூப்பிட்டு , காச்சியெடுத்துட்டேன்....
சின்ராசு மெதுவா "ஏன்டா நான் சொன்னதில என்ன தப்பு"னு கேட்க,
" சின்ராசு.. Boss is holding our Team Flag " னு சொல்லனும் நானு பெரிய மனுசன் மாறி சொல்ல ,  சின்ராசு தலையாட்டிட்டுப் போயிட்டான்..

இது நடந்து ஒரு வாரம் இருக்கும்..ஒரு நாள் மதிய வேளையிலே, உண்ட மயக்கத்திலே ரிலாக்ஸா   பேசிக்கிட்டுருந்தோம்.  திடீருனு பார்த்தா கடவுள் , எங்க பின்னாடி நின்னுக்கிட்டு யாரோடவோ போனில
பேசிக்கிட்டுருக்கார். 


நாங்களும் எவ்வளவு நேரம்தான் வேலை செய்றமாறி நடிக்கிறது..
அவரு கை வேற, நாங்க அலங்காரமா வைத்திருந்த பரிசு மேல டான்ஸ் ஆடிட்டுருக்கு..

திடீர்னு சின்ராசு Boss-ப் பார்த்திட்டு, "Boss is holding our Balls " -னு போட்டான் பாரு ஒரு போடு...

ங்ககொய்யா...எங்க சொல்லிக்கொடுத்ததை , எங்க விட்டான் பாருங்க...
அவனாலே இந்த வருசமும் எங்களுக்கு இன்கிரிமெண்ட் கட்..

அதனாலே , கோல்டன் ரூல்சை மறந்துராதிங்க..



 

Tuesday, December 29, 2009

கணிதம் பழகலாம் வாங்க..-> 1

ரொம்ப நாளா மொக்கையா எழுதி, எழுதி , வெறுப்பாயிடுச்சு..
இதுல வேற நம்ம வெளியூர்காரன் ," சுனாமி டைம் , எங்க மச்சி இருந்தீங்க " -னு கையில அருவா வெச்சுட்டு , பின்னூட்டம் போட ஆரம்பிச்சுட்டார்.

சரி.. மக்களுக்கு Useful-லா ஒரு நல்ல பதிவைப்போடலாமுனு முடிவு பண்ணிட்டேன்..
நீங்க ஸ்கூல SIN , COS & TAN  எல்லாம் படித்திருப்பீர்கள்.

சரி.. சரி.. மண்டைய குழப்பிக்கவேண்டாம்..
உங்க கணித அறிவை மீண்டும் புதிப்பித்துக்கொள்ள
எளிய வழிமுறைகளுடன் வருகின்றான் உங்கள் பட்டாபட்டி..( சரி அப்பு.. கொஞ்சம் உட்டுப் பார்த்தேன்  கோவிச்சுகாதீங்க....)







கேள்வி 1 :  கீழ் கண்ட  படத்தில்  X- ய்  கண்டுபிடி....








 


இதுல X-யை கண்டுபிடிக்க எப்போதும் மாறி ,    "    Scientific Calculator  , பேனா , பென்சில்"      எல்லாம் எடுத்துகிட்டீங்களா...OK...




இதுல அந்த கால்குலேட்டர எடுத்து , பக்கத்தில உள்ள குப்பைத்தொட்டியில போடுங்க...

போட்டாச்சா..??


மச்சி..நான் நிசமா நக்கல் பண்ணல..இந்த  கணக்குக்கு இதெல்லாம் வேண்டாம்...



அப்படியே கீழ போங்க..விடை ரொம்ம ஈஸி...
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

இதுதான்  X...






நான் அப்பவே சொல்லல..இதுக்கு கால்குலேட்டர் எல்லாம் வேண்டாமுனு....
இப்பவாவது  நம்புங்க அப்பு.. நம்புங்க...

.
.
.
.


போட்டோ காமெடி - 2...

ஆப்பிளயும் கண்ணுல காட்டுல...
மூணு கிலோ அரிசியும் வாங்கல..
வெறும் காலுலயே காரியத்த முடிச்சுரானுக.  ங்க்கொய்யா...



இந்த பயபுள்ளைகளுக்கு , யாரப்பா விளையாட சொல்லிக்கொடுத்தது.?

" Foot Ball " ஒரு Ball -ல தான் ஒதைக்கனும். இரண்டு "Ball" யில்ல.....





Saturday, December 26, 2009

ப.மு.க முதலாண்டு நிதி அறிக்கை...

ப.மு. கழகத் தொண்டர்களுக்கு,

புதுவருட நல்வாழ்த்துக்கள்.



முதல் செயற்குழு வெற்றிகரமாக நடந்து முடிந்தது..




















ஏதோ உங்களால் ஆன
அன்பளிப்பினால் , கட்சி வளர்ந்துகொண்டே போகிறது..
கீழே உள்ள போட்டோ , நம்ம R & D கொடுத்த "Inventory List "
















விரைவில் நம்ம தொண்டர்கள், மீண்டும் துண்டேந்தி 
வருவார்கள்..( 2010 -க்கு )

இப்படியே போனா, உங்கள் பட்டாபட்டி சீக்கரம் "Life" -ல செட்டிலாயிடுவேன்..

ஹி.. ஹி.. ஹி..



நம்ம  " R & D "  & "Secret Dept"  பதிய கட்டடதிற்க்கு மாற்றப்பட்டுள்ளது...







Wednesday, December 23, 2009

கூவம் மணக்கிறதா ?



கொஞ்ச நாளா சின்ராசு தொந்தரவில்லாம நிம்மதியா இருந்தேன்..
மனுசன் நிம்மதியா இருந்தா , சனிஸ்-க்கு ஆகாதே...
அடுத்த நாளே முன்னாடி வந்து நிக்கிறான் சின்ராசு..

நொட்ட கதை, மொட்ட கதை , மொண்டி கதையெல்லாம் பேசி முடித்த பிறகு ,
மெதுவா ஆரம்பிச்சான் டாபிக்க ...

"அப்புறம்..கொஞ்ச நாளைக்கு முன்னாடி கோட், ஸுட் போட்டுட்டு துணை முதல்வர் நம்ம ஏரியா வந்திருந்தார் போலிருக்கே " சொல்லிட்டே மெதுவா மண்டயச்சொறிஞ்சான்...
( ஊட்டி குதிரைக்காரன் மாறி..யாராவது காதில விழுத்திருந்தா நான் பொறுப்பில்லை)

நமக்கு உள்ளுக்குள்ளே நம்பிக்கை வந்திருச்சு..என்ன இருந்தாலும் , நல்லது பண்றதுக்குத்தானே, தலைவர் வந்திருக்காரு..இதுல என்னத்த நொள்ள கண்டுபிடிக்கபோறானு மனசு தெம்பாயிருச்சு...

"ஆமா சின்ராசு..கூவத்த மணக்க வைக்க என்னென்ன பண்ணலாமுனு பார்க்க
வந்திருந்தார் " னு நான் சொன்னேன்.

"இங்கபாரு பட்டாபட்டி.. லோக்கல் பேப்பரில் , அதைப்பற்றி நூசு வெளியாயிருந்தது..
ஏம்பா.. கூவத்த இங்க ஷிப்ட் பண்ணிட்டாங்கா?"... னு நக்கலா
சிரிக்கிறான்.


சென்னையில இருக்கற கூவத்துக்கு, சிங்கப்பூர்ல என்னய்யா பண்றிங்க?..
எங்கோ தேள் கொட்டுனா எங்கேயோ நெறி கட்றமாறி.....சொல்லிட்டு என்னைய
சைடா பார்க்கிறான்..

இவங்கிட்ட பேசி தப்பிக்கமுடியாது முடிவுபண்ணிட்டு "இல்ல சின்ராசு..அவரு சீக்கிரமா
கூவத்த மணக்க வெச்சுருவாரு.. என்னா.... 



எங்க தலைவரு , நல்லவரு, வல்லவரு..
சொன்னத்தான் செய்வாரு.. செஞ்சத்தான் சொல்வாரு ,"

                                                                                                                                      நான் இழுக்க...

ஆமான்டா .. வேட்டைக்காரன்ல டாக்டர் விஜய் மஞ்சத்துண்ட போட்ட மாறி ,
தமிழ் நாட்ல ஒருத்தரு தோள்ல மஞ்சத் துண்டப்போட்டுட்டு பகுத்தறிவு பேசுவாரே..
அவரு நம்ம துணைமுதல்வர் ஸ்கூல் பையனா இருந்தப்போ இதையேதான் சொல்லிட்டிருந்தார்
.-னு சொல்லிட்டு பெரிசா மூச்சு உடுறான்.

நாயி.எங்கிருந்து எதெதுக்கு முடிச்ச போடறான் பார்த்தீங்களா.
டாக்டர் விஜய எடுத்து , மஞ்சத்துண்டல மூடி , துணைமுதல்வர் தோள்லயே மாட்றான்.

மக்கா..வேறவழியே இல்லை..அதனாலே









   

One


Two



Three


 


வுடு         ஸுட்..












தற்காலியமா அவங்கிட்ட இருந்து ஒரு வழியா தப்பிச்சுட்டேன்..
சின்ராசு கிட்டயிருந்து முழுசா தப்பிக்கனுமுனா
எனக்கு ஒரே ஒருவழிதான் இருக்கு..

அதற்கு, சென்னையில வசிக்கும், மற்றும் "Digital Camera"
வைத்துள்ள நண்பர்கள் மட்டுமே எனக்கு உதவமுடியும்.,



சிரமம் பார்க்காம


" பாலும் தேனும் ஓடுகின்ற கூவத்தை" தயவுசெய்து
கிளிக் செய்து ஈஈஈஈஈஈஈஈஈமெயில் அனுப்பிவைக்கவும்.
அப்பதான் சின்ராசு மூஞ்சியிலெ கரி பூசமுடியும்...

நன்றி மக்கா..எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..



போட்டோ மறந்திராதிங்க...

Tuesday, December 22, 2009

வேட்டைக்காரன்.. - ஒரு அலசல்






ஆனாலும் நம்ம கா @#$% மாறன் மனசுல இருக்கறத அப்படியே விஜய் மூலமா,
தமிழக மக்களுக்கு தொறந்து காட்டிடாரு ...



படத்தில எனக்கு பிடித்த காட்சிகள்..

  • மஞ்சத்துண்டு போட்டு தாத்தா மனச நக்குன அழகு என்ன ?
  • யாராவது எம்.பி ஆகனுமுனா , மினிமம் என்ன எதிர்பார்போமுனு கொடுத்த "Hints" என்ன ?
  • மக்களை பயமுருத்தி சொத்துக்களை எப்படி வளைக்கனும் காட்டின வழி என்ன ?
  • அடுத்தவன் பொண்டாட்டிய ஆட்டய போடரது எப்படினு சொன்ன "Style" என்ன?

ஆக மொத்தம் தாத்தா கொ^#$% தாங்கு தாங்குனு தாங்கிட்டார்..





 

ஆனா கடைசியா ஒண்னு சொல்லனுமுனு ஆசை...
படம் எடுத்த காசுக்கு , பேசாமா தாத்தா முன்னாடி நாலு காலத் தூக்கிட்டு
உக்காந்திருக்கலாம்...

  

Saturday, December 19, 2009

மூளை மக்கா..மூளை....


கணக்குல புலி....

மக்கா.. அல்ஜீப்ரா எல்லாம் நமக்கு ஜுஜுபி...
கீழ உள்ள வினாவை எப்படி " Expand " பண்றது..

                   |
                   |
                   |
                   |

                        n
             ( a+b )


ரொம்ப ஈசி...
                 |
                 |
                 |
                 |
                 |
                 |
                 |
                 |
                 |
                 |
                 |
                 |
                 |
                 |

                n
( a   +   b )

                    n
( a     +     b )

                         n
( a       +       b )

                             n
( a          +          b )

                                    n
( a              +            b )

                                              n
( a                    +               b )



அவ்வளவுதான்.........

 

போட்டோ காமெடி - 1...

மாமா குரூப் போட்டோ எடுக்கிறாரு...
கொஞ்சம் சிரிங்க பொண்ணுகளா...
...


Friday, December 4, 2009

பட்டாபட்டியின் பகிங்கர அறிவிப்பு...

நேற்று , சின்ராசு, என்னொட கடவுசொல்லை பயன்படுத்தி , "நேரு மாமா, காந்தி பேச்சைக் கேட்கவில்லையா?" என்று என்னோட
ப்ளாக்-ல ஒரு பதிவை ச் சொருகிட்டான்.....

மக்களே.. அந்தப்பதிவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..


அதில் அவன் , என்னைப்பற்றியும், நேருமாமா பற்றியும் பல தவறான கருத்துக்களை பதிவுசெய்துள்ளான்..

1. ///  ஏன்னா அவனுக்கு காந்தினா உயிரு..  ///


இது தவறு.. எனக்கு காந்திய பிடிக்குமுனு சொல்லவில்லை.. பிடிச்சிருந்தா நல்லாயிருக்குமுனுதான் சொல்றேன்...



2 ///  .நம்ம மக்கா எல்லாரும் நல்லாயிருக்கனுமுனு  நல்ல , நல்ல கருத்துக்களையெல்லாம் நம்ம தாத்தா பிதா அள்ளிவிட்டிருந்தார். உதாரணமாக


*       அஹிம்சை,
*       புலால் உண்ணாம்மை,
*       மது அருந்தாமை,
*       யாராவது அடிக்கவந்தா, தயங்காம பின்புறத்த காட்டனும் ,
*      அடுத்தவன் (இந்திய)பொண்டாட்டியா தாயா (அ) மகளா பார்க்கனும்,
*      பொறுமை-னு


/// 

 
காந்தியொட கருத்துக்கள் எனக்கூறி சிலவற்றை அட்டவணையிட்டுருந்தான்..
அதிலே முக்கியமா, அந்நியத்துணி எரிப்புப்போராட்டம் காணவில்லை...


எனக்கு மண்டைக்குமேல எறிடுச்சு.. மகனே , உன்ன இப்படியேவிட்டா ,என்ற பட்டாபட்டிய அவுத்துருவானு நினைத்து ,
உடனே சின்ராசுக்கு Phone-ப் போட்டேன்.. ( ISD- ஹி...ஹி..ஹி.. பூத்ல போயிதான்)

Phone-ய் எடுத்து சின்ராசு பேசரதுக்குள்ள , நான் அவனை காச்சியெடுத்துவிட்டேன்
ரொம்ப நேரமா , அந்தமுனையில சத்தமே இல்ல.. எனக்கு கொஞ்சம் சங்கடமா போயிடுச்சு... மெதுவா "சின்ராசு.. ஏன் எதுவுமே பதில் பேசமாட்டிங்கிற " னு கேட்டேன்..

சின்ராசு மெதுவா, "பட்டாபட்டி, உனக்கு மூளை , கீளை இருக்கானு யோசன பண்ணிட்டுருக்கேன்" னு கூலா சொல்றான்...

என்னடா, சின்ராசுக்கு மறை கழண்டிருச்சா? -னு என்று மண்டைக்குள்ள மணியடிக்குது...

சின்ராசு, " இங்க பாரு.. உன்னோட பதிவு கேப்சனா என்னமோ, யோசன பண்ணி, பிளான் பண்ணினு என்னென்னமோ போட்டிருக்க....
ஆனா , நான் போன பதிவில போட்ட படத்த நல்லா நோட் பண்ணினியா ?" திருப்பிக்கேட்கிறான்..

நான் பாத்தவரை , அதுல நேரு , வெள்ளகாரிகிட்ட பல்ல காமிச்சுட்டு , தம் பத்தவைக்கிறாரு...இந்த படத்தில மயி%# யோசன பண்ரதுக்கு இருக்குது நான் நினைக்க,  சின்ராசு என் மனஓட்டத்த புரிஞ்சுக்கிட்டு கெக்கே..பெக்கே...னு சிரிச்சுட்டு விளக்கினான் பாருங்க எனக்கு..
மண்ட முடியெல்லாம் நேரா நிக்க ஆரப்பித்துவிட்டது...

அவனோட விளக்கம்...

நேரு மாமா, அந்நியதுணி எரிப்பு போராட்டதிற்கு , அவளொட துணிய எரிக்கப்பார்க்கிறாராம்...
அத்னால அவரு காந்திபேச்சைக் கேட்கிறாரு...அவ்வளவுதான்
....

Thursday, December 3, 2009

நேரு மாமா , காந்தி பேச்சை கேட்கவில்லை என்பது நிசமா?

முன்னொரு காலத்தில , முருங்க மர தோப்புகுள்ள மூணு காலு முயல் ஒன்னு துள்ளித்திரிச்சதாம்..
சே... என்னவோ எழுதவந்துட்டு, எத எதையோ சொல்லிற்றுக்கென்....
யாராவது வரதுக்குள்ள இந்தப்பதிவ போட்டரனும்.

நம்ம தேசப்பிதா காந்தி மகான், அரைகோமணம் கட்டி, வெள்ளக்காரங்கிட்ட இருந்து  இந்திய மக்களுக்கு சுதந்திரம் வாங்கித்தந்தார்..( நல்லவேளை பட்டாபட்டி கடவு சொல்ல குடுத்துட்டு லீவுல கோயமுத்தூர் போயிட்டான்.)

நம்ம மக்கா எல்லாரும் நல்லாயிருக்கனுமுனு  நல்ல , நல்ல கருத்துக்களையெல்லாம் நம்ம தாத்தா பிதா அள்ளிவிட்டிருந்தார். உதாரணமாக


*       அஹிம்சை,
*       புலால் உண்ணாம்மை,
*       மது அருந்தாமை,
*       யாராவது அடிக்கவந்தா, தயங்காம பின்புறத்த காட்டனும் ,
*      அடுத்தவன் (இந்திய)பொண்டாட்டியா தாயா (அ) மகளா பார்க்கனும்,
*      பொறுமை-னு


என்னென்னவோ சொல்லிட்டு போனாரு...

ஆனா, நம்ம ராகுல் காந்தியொட கொள்ளு தாத்தன் , சும்மாயிருக்காம பண்ணின அட்டகாசத்த
பாருங்க....மக்கா.... பாருங்க......




|||

|||

|||

|||

|||

|||




அப்புறம் வெள்ளக்காரன் ஏன் திரும்பி ஓடமாட்டான் ?
அப்புறம், முக்கியமா , பட்டாபட்டிகிட்ட சின்ராசுதான் இந்தப்பதிவப் போட்டானு சொல்லிராதிங்க அப்பு...

ஏன்னா அவனுக்கு காந்தினா உயிரு...( ஹி... ஹி... நம்ம நமிதா அந்தூரு புள்ளங்கரதால.....)







Wednesday, December 2, 2009

" ப மு க " கட்சிக்கொள்கைகள்

கடைசியாக எங்கள் R & D dept , கம்பெனி கட்சிக்கொள்கைகளை ரெடி செய்துவிட்டனர்....

1. எல்லொருக்கும் ஒரே நீதி.. ( கட்சி ShareHolder have extra privileges )
2. டாஸ்மார்க் வேலை நேரம் அதிகரிப்பு..( 24/7 )
3. ப்ரீ செல்போன் ( ShareHolders - Incomming / Outgoing +IDD free )
4. மாதத்திற்க்கு ஒரு முறை இலவசமாக முடிவெட்டப்படும்...( ஷேர் ஹோல்டர் -கு நகமும் வெட்டப்படும்)
5. சொட்டை மண்டைகளுக்கு , மாதம் Rs 10/- (அ) 1 பெக் , நன்கொடையாக தலைமை கழகத்தில் வழங்கப்படும்.
6. காலை 7 மணி முதல் 10 மணிவரை கழகத்திற்க்கு வந்து " பட்டாபட்டி வாழ்க " என முழக்கமிட்டால் , 1 குவாட்டர் இலவசம்.
7. வேலையில்லா மக்களுக்கு மூன்று வேளை உணவு. மற்றும் மாதம் Rs 5000 /- பஞ்சப்படி..
8. மாதசம்பளம் Rs 10,000 க்கு மேல்வாங்குபவர்களுக்கு 60% Income Tax...
9. வருடம் ஒரு முறை, குடும்பத்தலைவருக்கு இலவசமாக டெல்லிக்கு உல்லாச ரயில் பயணம். + அன்னை வீட்டில் இத்தாலி பிஸ்ஸா...( For Share Holders - Exec class Flight tickets for whole family members - include பெரிய / சின்ன வீடு(கள்)... pizza - option )
10.வருடாந்திர மெம்பர்களுக்கு தீபாவளி அன்று புதிய உடைகள்.( பட்டாபட்டி லோகோவுடன் )

Tuesday, December 1, 2009

அப்பு..நானும் கட்சி ஆரம்பிக்கப்போறேன்.....

ரொம்ப நாளா எனக்கு மண்டக்குள்ள ஒரு விசயம் ஓடிட்டிருக்கு...
யாராரோ , குடும்பக்கட்சி ( Private Ltd ) நடத்திட்டிருக்கும்போது , நாம ஏன் சும்மா சுத்திட்டிருக்கனும்?.
நாமளும் ஒரு பிரைவேட் கம்பெனி ..Sorry.. Sorry.. Tongue Slip ஆயிருச்சு...ஒரு கட்சி ஆரம்பித்து , நாட்டு நலன்-க்கு
பாடுபடலாமுனு முடிவு பண்ணிட்டேன்..
என் கம்பெனியின் விபரங்கள் பின்வருமாறு...

கட்சியின் பெயர்             : பட்டாபட்டி முன்னெற்றக் கழகம் " ப மு க ",
கட்சியின் கொள்கை     : ஹி..ஹி..ஹி...கம்பெனி R & D தயாரித்துக்கொண்டுள்ளது... விரைவில் வெளியாகும்...
மாநாடு நடக்கும் இடம் : மெட்ராஸ்  சென்னை.. ( Looking for sponsers in Overseas )
இன்ன பிற நிபந்தனைகள் ( எத்தனை சூட்கேஸ்..) : Refer tomorrow  " THE HINDU "
வட்ட , மாவட்ட டேமேஜர் நியமனம் : Same as above
மற்ற விவரங்கள் அடுத்த பதிவில் வெளியாகும்...

ஆகவே, என் உயிரினும் மேலான ஞானஒளிகளே..
உங்களின் பொன்னான ஆதரவை எதிர்பார்க்கும்... பட்டாபட்டி..