Pages

Tuesday, June 29, 2010

ஒரு பானை சோற்றுக்கு , ஒரு சோறு பதம்..

நம்ம நாட்டு விமானநிலையங்களைப் பற்றி உங்களின் கருத்து என்ன?..

வெளிநாடு சென்று வரும் பயணிகளின் புலம்பல்களை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். அடிக்கடி அவர்களின் பேக்கேஜிலிருந்து கைத்தொலைபேசி, மடிக்கணனி,  வாசனைத்ததிரவியங்கள், மதுவகைகள் மாயமாக மறைந்துவிடும். அதை அங்குள்ள ஆபிஸரிடம் புகாராக அளித்தால், நீங்கள் குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டு உங்கள் பட்டாபட்டி உருவப்படும். சில சமயம் நிர்வாணமாகத்தான் வெளியே வர வேண்டியிருக்கும்.

இது ஒரு சாதாரண நிகழ்வுதான். பிரச்சனைகளை கண்டு ஒதுங்குவதும் , துடைத்துபோட்டுவிட்டு போவதும், ஒவ்வொரு சராசரி இந்தியனும் செய்வதுதான்.  அய்யா.. நானும் இப்படித்தான் நினைத்திருந்தேன் போனவாரம் வரை.

தவறு மக்களே தவறு...

இந்தியர்..வயது 40..பாம்பே ரயிலில் பயணம் செய்யும் சராசரி முகம்..அவருக்கு போன வாரம் பிறந்தநாள்.  அதை இங்கு கொண்டாடுவதைவிட, ஐரோப்பியாவில் கொண்டாடினால் நன்றாக் இருக்கும் என்ற அவரது தாயாரின் எண்ணம். ’தாய் சொல்லை தட்டாத தனயனா’ன அவர், அன்னையின் விருப்படி ஐரோப்பியா சென்றுவிட்டார்.

வாரம் கழிந்தது. கடமை அழைத்தது.. கண்ணியமாக திரும்பிவிட்டார்..
அந்தோ பரிதாபம். டெல்லி ஏர்போர்டில் அவரது கைத்தொலைபேசி காணாமல் போய்விட்டது. Special Protection Group (SPG)  அதிகாரிகளிடம்  சென்றார். விவரங்களை சொன்னார். போன் விலை ரூ 15,000.

செய்திகள் பறந்தன. விமான நிலயத்தில் உள்ள காவல்துறை முடுக்கிவிடப்பட்டது. கண்டுபிடிக்கமுடியவில்லை. 2 நாட்கள்.. 300 போலீஸார்.. துப்பறியும் நாய்கள்..விமான நிலையம் அலம்பப்பட்டு, பதிவு செய்யப்பட்ட காமிராக்கள் மூலம், குற்றவாளி இனம் காணப்பட்டார்.. வேறுயாருமில்லை பாஸ்..விமான நிலையத்தில், பொருடகளை ஏற்றி இறக்கும் தொழிலாளி.

கடைசியாக, அந்த தொழிலாளியின் வீட்டுக்கு காவல்படை விரைகிறது. தொலைபேசியை கண்டுபிடிக்கப்படுகிறது.  இரண்டு நாட்களில், அது உரியவரிடம் சேர்ப்பிக்கப்படுகிறது..கண்டுபிடிக்க ஆன செலவு பல லட்சங்கள் மட்டுமே.

இவ்வளவு திறமைமிக்கவர்களாகவும், விரைந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் காவலர்களை/அதிகாரிகளையும் பார்த்து.... நாம் பொருமிகிறோம்... நகைக்கிறோம்..நையாண்டி செய்கின்றோம்.. இதுதான் இந்தியர்களின் குணமா?..

காண்போர் காறித்துப்பும் நிலையை அடையும்முன், ஒரு இந்தியனாக, தமிழனாக என்னுடைய கருத்தை  பதிவு செய்வது என் கடமையாகும்..

 • அடுத்தவரை குறை கூறுவதை நிறுத்துங்கள்..
 • நாட்டை வல்லரசாக, முட்டுக்கட்டையாக இருக்காதீர்..
 • இந்தியனாக உங்கள் கடமையை செய்யுங்கள்..

கடைசியாக.....
”  திருந்துங்கள்..இல்லை திருத்தப்படுவீர்கள்...  “


நன்றி...
.
.
.
.
டிஸ்கி..
அட பார்றா.. அவரு யாருனு கடைசி வரை சொல்லாம விட்டு..என்னுடைய கடமையிலிருந்து நழுவப்பார்த்தேனே...
|
|
|
.
.
அவரு பேரு ராகுல் காந்தியாம்  சார்..
அதனால மறக்காம . அடுத்த முறை ..என்ன பிரச்சனை என்றாலும்..அரசு அதிகாரிகளை தயங்காமல் அணுகவும்..  பிரச்சனைகள் புயல் வேகத்தில தீர்க்கப்படும்..
.
.
வரட்டா...
.
.
.

Thursday, June 24, 2010

அய்யோ..கொல்றாங்களே..

தானத்தலைவர்..ன்மானச்சிங்கம்..மிழர் காவலர்...அய்யா கலைஞருக்கு, காலை வணக்கத்தை போட்டுக்கொள்றதில பெருமைகொள்கிறேன்.    அப்படி இப்படினு, செம்மொழி மாநாட்டை ஆரம்பிச்சு, கோவைய கலக்கு கலக்குனு கலக்கிப்புட்டீங்க.     நேத்து, சன்டீவிய போட்டுக்கிட்டு சோபால,  குத்த வெச்சு உக்காந்தவன்தான், என் ரூம்மேட் செல்போன்ல, மலர்வளையம் ஆர்டர் கொடுத்த சத்ததிலதான நிகழ்காலத்துக்கு வந்தேனா,  பார்த்துக்கோங்களேன்.

என்னோட வாழ்நாள்ல இதுமாறி ஒரு நிகழ்சியை பார்த்ததேயில்லைனு, காரமடை கோயில் உண்டக்கட்டி மேல, சத்தியம் பண்ணுவேன் தல.     அப்பப்பா...என்னா கூட்டம்?..என்னா ஜனம்?. கடலலையும் தோத்துப்போகும்.   

லட்சுமி மில்ல ஆரம்பிச்ச ஊர்வலம், ஊர்ந்து..ஊர்ந்து கொடீசியா போகும்வரை.. ஆகா..பேஸ்..பேஸ்..   வண்டிகளின் அணிவகுப்பு, பாரம்பரிய 
உடைகள், தமிழனின் வீரவிளையாட்டுக்கள், தாரை தப்பட்டை, ஒயிலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம்..  இந்த ஜென்மத்துக்கு  போதும் போதும்னு சொல்ற அளவுக்கு வாரி வழங்கிட்டீங்க...

ஆமா தல.  இந்த ஊர்வலத்தில ஒரு பெரியவரு சிலை , இடுப்ப வளைச்சிக்கிட்டு சிம்ரன் மாறியே நிக்கவெச்சிருந்தாங்களே. அதுவும், அப்புறம்  பின்னாடி வந்த வண்டில,  ”ஆத்திச்சூடி, அறம் செய்ய விரும்பு”-னு எழுதி, கையில ஆணி வெச்சிக்கிட்டு இருந்த பாட்டியும் கடைசிவரைக்கும்  யாருனு சொல்லாமா விட்டுட்டாங்க இந்த டீவிக்காரனுக.

சரி. கூடவேலை செய்யும் ஒரு பன்னாடை, காலேஸ் வரைக்கும் படிச்சவன். அவனைக்கேட்டா, சந்தேகத்தை நிவர்த்தி செய்வானு நினச்சு  தொடர்புகொண்டா, என்னமோ சிங்கைத்தமிழல ’ங்கொய்யா..ங்கொம்மா’-னு சொல்லீட்டு போனை கட் பண்ணிட்டான்.    மரியாதை தெரியாத பய.  எப்பம்போல மூடிக்கிட்டு கரகாட்டகாரிக ஆட்டத்தை ரசிக்க ஆரம்பிச்சேன். என்னா டான்ஸ்? என்னா டைமிங்?..சான்ஸே இல்ல தல. 
( அடுத்த முறை ஊருக்கு வரும்போது, கட்சி ஆபிஸ்ல இருக்குற கலைஞர் டீவி எடுத்து கொடுக்கப்போறேன்.. எத்தனை கொலை விழுந்தாலும் சரி. )


ஆங்..என்னத்தவோ சொல்லவந்துட்டு, வேற ஏதோ பேசிக்கிட்டு இருக்கேன். கோயமுத்தூர் கட்சிக்காரனுக ஒழுக்கமயிரா  வேலைபாக்கமாட்டீங்கிறானுக.  ஊட்டுக்காரம்மாகள், மகன், மகள் , மருமகன், மருமகள்னு தமிழ வளர்க்க பாடுபட்ட, எல்லோரும் சேர்  போட்டானுகளே..ஆனா கட்சிக்கு புதுவரவான, வாண்டுகளுக்கு சேர் போட்டானுகளா?..பொறந்த குழந்தையினாலும், ஒரு மரியாதை வேண்டாம்?

கட்சிக்காக குடும்பத்தைகூட பார்க்க நேரமில்லாம அலையிறீங்க. ஒரு வேளை அவசரத்தில, சென்னையில உட்டுட்டு வந்திட்டீங்களா?. அப்படீனா  சொல்லுங்க..அடுத்த ப்ளைட்ல அவங்களை கோவைக்கு கூட்டிக்கிட்டு வரோம்..ஸ்டேஸ்ல ஊஞ்சல் கட்டியாவது, இதே ஊர்வலத்தை
இன்னொருமுறை நடத்திக்காட்டுறோம்..  நமக்கு சரித்திரம் முக்கியம் தல.. நாளபின்ன, பையனுக வளர்ந்தபிறகு கேள்வி வரக்கூடாது பாருங்க..  அதுக்காகத்தான்..  பணம் என்ன பெரிய பணம்?..  இந்த 400 கோடிகூட, இன்னொரு 100 கோடி செலவாயிட்டுப்போகுது. ( எல்லாம்  ராசா பார்த்துக்குவாரு..)

பிரதீபா படேல், மன்மோகன்சிங்கை, நம்ம ஏரியாவுக்கு வரவெச்ச பெருமை கழகத்தையே சேரும்..    ஆமா தல..   இந்த சிங் என்னமோ, ’கவர்னர்’-னு,  சின்ராசு சொல்றான்.    தாடி வெச்சு, குல்லா வெச்சிருந்தா, அது மன்மோகன்சிங்னு தெரியாதா எங்களுக்கு?.   என்ன அவ்வளவு மடப்பயலா நாங்க?. ஒருவேளை சின்ராசுக்கு, மாநாட்டப்பார்த்து, பின்னாடி எரியுதுனு நினைக்கிறேன்..

இந்த இனிமையான நேரத்தில, நம்ம நித்தியானந்தாவுக்கு பதில் மரியாதை செலுத்த, கழகம் கடமைப்பட்டுள்ளது..   செம்மொழி மாநாடு நல்லா நடக்க, அவரச்சுற்றி குழி தோண்டி, அதுல தீ வெச்சுக்கிட்டு யாகம் பண்ணினாறாம் நம்ம சாமி...   இதை நான் சொல்லலே..ஊர் சொல்லுது.. 


அவரு மட்டும் யாகம் நடத்தாம இருந்திருந்தால்..யப்பா....நினைச்சு பார்க்கவே பயமாயிருக்கு..என்னவா?   ஒயிலாட்டத்தை பார்த்து, ஒய்யாரசுந்தரி, பழைய நினைப்புல, “கொட்ட பாக்கும், கொழுந்து வெத்தலையும் போட்டா..”-னு, ஸ்டேஸ்ல ஆடியிருந்தா..   அந்தோ...        மாநாடு கதி?.     அதை தடுத்த பெருமை நித்தியவே சாரும்.    மாநாடு முடிஞ்சதும், நித்திக்கு ஏதாவது பண்ணனும் தல..    பயபுள்ள பயந்துபோயிருக்கு...

(கழக சார்பா, அதையும் சொல்லீட்டேன்..இனி மேல தீர்த்தம் , கையிலதாம் கொடுக்கனும்..வாயில கொடுத்தா, சட்டம்..... மீண்டும் பாயுமுனு(?)..   
சரினு சொல்லியிருக்காரு..பார்ப்போம்..)


டிஸ்கி..
தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லையினு யோசனை பண்றவங்களுக்கு..

தமிழில் முதல் எழுத்து “அ”.. பதிவின் முதல் எழுத்து (?).. ஹி..ஹி..

(துப்பனுமுனு நினைக்கிறவங்க, தயவு செய்து  நண்பர்களான  “ரெமியையும், மார்ட்டீனையும்” துப்புங்க..எல்லாத்துக்க்கும் காரணம் அவனுகதான்..)
.
.
.

Tuesday, June 22, 2010

அண்டா..குண்டா அடகு வெச்சு...?

பட்டாபட்டி சார்..சமீபத்தில் மத்திய அரசு , இரவு நேரங்களில் ஏற்படும் விபத்தை தடுக்கும் வகையில், சைக்கிள்களின் நிறம் ஆரஞ்சு வண்ணத்துக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக எங்கள் ஊர் வெட்டியான் கூறுகிறார்..  அது உண்மையா?..    அது உண்மையாக இருக்கும்பட்சத்தில, என்னுடைய சைக்கிளை, சொந்தகாசில் பெயிண்ட் அடிக்கவேண்டுமா?.. அல்லது மத்திய அரசே அதற்கு உதவுமா?
ராமேஸ்..கெட்டவன்..


==================================

ஆமாய்யா.. இது நிசம்தான்..மத்திய அரசு என்ன சொல்லுதுனா..

 • ஏழைகளின் வாகனமாம் சைக்கிள்
 • இன்றளவும் கிராமங்களில் பெருமளவு பயன்பாட்டில் உள்ளதாம்.
 • பெட்ரோல்-டீசல் விலையைச் சமாளிக்க சைக்கிள் போக்குவரத்து உதவுமாம்
 • உடல் பருமனாக இருப்பவர்களுக்கு சைக்கிள் பயிற்சி அவசியமாம்

இவ்வளவு “மாம்” இருக்கும் சைக்கிளினால்..  இந்திய பொருளாதாரம் எங்கோ போய்விடுமாம்..    இது நான் சொல்லலே..மத்திய அரசு சொல்லுது...

இந்தியா ஏழை நாடுப்பா.  .பாவம்.. சமீபத்தில வந்த போபால் தீர்ப்பு கூட,  ஏழை மக்களின் கஷ்டத்தை புரிந்துகொண்டு. மத்திய அரசின் வழிகாட்டுதலால் வந்த தீர்ப்புதான்..  அவ்வளவு பணமுடை..   இதுல வேற, வேட்டிகட்டிய தமிழனுக, டெல்லில உட்கார்ந்துகொண்டு  ஏதோ அவர்களால் முடிந்ததை சம்பாரிக்கிறார்கள்..

ஒரு இ(அ)ந்தியகுடிமகனா, நீயும் நாட்டுக்கு ஏதாவது செய்யுப்பா.. சைக்கிளுக்கு பெயிண்ட் அடிக்க, மத்திய அரசு நிதி ஒதுக்கும்..அதை சிலபேரு ஒதுக்கிடுவானுக..  அதை பார்த்து..”ங்கொய்யா..ங்கொம்மா”னு எரிச்சலாகாமா..  உன்னால் முடிந்தளவுக்கு மத்திய அரசுக்கு உதவனும்..  அது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும்... 

மேலும்..ராகுலுக்கு 40 வயசு ஆயிடுச்சாம்.....வெளி உலகம் தெரியாம பொத்தி பொத்தி வளர்த்துட்டானுக.  பாவம்.. இப்பத்தான் வெளி உலகம் பார்க்க, ரயில் ரயிலா ஏறி இறங்கிட்டு இருக்கார்..  எப்படியோ கடைசி சொட்டு முடியறதுக்குள்ள, அடுத்த வாரிசு வரனுமேனு..எனக்கு பயமாயிருக்கு.

அப்புறம்..மறக்காம அடுத்த எலெக்‌ஷன்ல, அவங்களுக்கு உன்னோட பொன்னான ஓட்டை குத்தி வாழவையப்பா..   நீங்க உங்க கடமைய தவறாது செஞ்சா..பெட்ரோல், டீசல் விலையெல்லாம் குறைந்துபோகும்.. அப்புறம் நாடு ஓகோனு எங்கோ போயிடும்..    நீயும் நானும் டீ குடிக்க, 5 கிமீ சைக்கிள போகலாம்...     நம்பிக்கையா...

நான் இப்ப சொல்வதை உன்னோட டைரில குறிச்சு வெச்சுக்கோ..  நாடு போறபோக்கை பார்க்காம நீயும், நானும் கண்ணு மூடப்போறதில்லை..
அன்னை,  ”இந்தியாவை தூக்கி நிறுத்தாம , இத்தாலி  போகமாட்டாங்க..  ”

உனக்காகவும் எனக்காவும் கஷ்டப்பட எவ்வளவுபேரு இருக்காங்கனு நினைச்சு  பெருமைப்படாம..  பெயிண்ட அடிக்க காசு தருவானுகளா?னு கேட்டுக்கிட்டு இருக்கே...

அதுவுமில்லாம, நம்ம தலைவர் பழுத்தபழமய்யா..  அவருக்கே முன்னமே தெரியும்போல.. அதுதான் பட்டியும் சாப்பிடாத ரேஷன் அரிசிய ஏழைக்கு கொடுக்கிறாரு..   இப்பவே அதை சாப்பிட்டு பழகிக்க..    இல்ல..  பின்னாடி கஷ்டமாயிடும்..

என்னதான் நாம ஏழையா இருந்தாலும், விருந்தோம்பலில் நம்ம அடிச்சுக்க ஆளே இல்லை..     இவ்வளவு கஷ்டத்திலும்,எவ்வளவோ கோடி+ஆயுதம் கொடுத்து ராஜபட்ஷேக்கு உதவி பண்றாங்க பாரு ..  அதை பண்றதுக்கு காங்கிரஸ்காரனை தவிர யாருக்கும் மனசு வராதய்யா..

அதனால்..மத்திய அரசு சொன்னபடி..  வீட்ல இருக்கும் அண்டா குண்டாவ அடகு வெச்சாவது சைக்கிளுக்கு கலர் மாத்திக்க..இல்லாட்டி வருங்கால சந்ததி உன்னைய மன்னிக்காது..சொல்லீட்டேன்..
.
.
.

டிஸ்கி..வருங்கால பிரதமருக்கு ,  “கேக்”  ஊட்டாத நாதாரிகளை,   பட்டாபட்டியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்..  
( படம் உதவி : யூர்கன்  )

.
.
.

Friday, June 18, 2010

பூக்காரி - பொனவு..

கோவை பூ மார்க்கெட்..
பரபரப்பான காலை நேரம்..  பிஸியான பூ மார்க்கெட் ஏரியாவில, உதித்த சூரியன், மக்களின் மண்டையை பிளக்கிறான்..  மரத்தினடியில், உடைந்த பம்பரத்துடன் ஒரு ஏழைச்சிறுவன்..   இலைக்கள் உதிர்கின்றன..

டீ சாப்பிடாவிட்டால், தமிழனா பிறந்ததற்க்கு அர்த்தம் இல்லாம் போய்விடும் என்ற காரணத்தால், எனது கால்கள் மன்னாரின் டீக்கடையை நோக்கிப் பயணிக்கிறது..    அருகில் பூக்கடை.. பூக்காரி என்னைப்பார்த்து சைகை செய்கிறாள்..    பூக்காரி என்றாலே பிரச்சனை என ஒதுங்கிச்செல்கிறேன்..
சத்தமாக அழைக்கிறாள்..
சத்தியமாக ஓடினேன் மன்னார் கடையை நோக்கி..


இடம்  : டீ கடை..
மாஸ்டர்..ஸ்டார்ர்ர்ர்ர்ர்ர்ங்கா ஒரு டீ...

இருங்க பாஸ்.. எல்லாப் பாலையும் செம்மொழி மாநாட்டுக்கு வழிச்சுக்கிட்டு போயிட்டானுக..   இனி பால்காரன் வந்தாத்தான் என் பொழப்பு ஓடும்...

அட..அப்ப அடுத்தவாரம், கோவையில தமிழ்பால் ஓடப்போகுதுனு சொல்ற?

நக்கல் பண்ணாதீங்க தல...கட்டின கோமணத்தை உருவாம இருக்க நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும்...   என்னமோ அலங்காரம் பண்ண துணி பத்தலேனு,  தலைவர் முரசொலில சொன்னாலும் சொன்னாரு..வீட்ல இருந்த பழைய துணியெல்லாம்  கட்சிக்காரனுக அள்ளிட்டுப்போயிட்டானுக..

அதுவேறயா?...ஆமா, உன்னோட மேல்மாடிக்கடையை, யாரோ டாக்டருக்கு வாடகைக்கு விட்டுட்டேனு சின்ராசு சொன்னான்..   யாருப்பா அது?..

யாரோ மெட்ராஸ்காரராம்..பேரு ராகவனாம்..கொஞ்சம் பெருவயசுதான்.. கருகலைப்பு பண்றதுல ஸ்பெஷலிஸ்டாம்..

ஏன்..இதுக்கு முன்னாடி காது ரிப்பேர் பண்ற டாக்டர் இருந்தாரே..அவருக்கு எனன ஆச்சு?..

அதை ஏன் கேக்குறீங்க..அவரை அம்மா கட்சியில இருந்து தாத்தா கட்சிக்கு, காசு கொடுத்து வாங்கிட்டானுக..    இனி மேல டாக்டர் தொழில் பண்றதுக்குபதில், பேசாம குஷ்பு பின்னாடியே போனா காசு பார்க்கலாமுனு , அங்க போயி ஐக்கியமாயிட்டாரு..

ஓ..குஷ்பு வந்ததும், கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சினமாறி இருக்குமே?...  ஆமா...புது டாக்டருக்கு தொழில் எப்படி போயிட்டு இருக்கு?...

அது ஜோரா ஓடுது தல. கலைக்கிறவங்களுக்குத்தான் காலம்.   அதுவுமில்லாம, நம்ம குஷ்பு மேடம் இருக்கும்போது அவருக்கு என்னா  கவலை?...

யோவ்.. அதுக்கும், டாக்டர் தொழிலுக்கும் என்னையா சம்பந்தம்?

தலைவா.. விவரமில்லாமா பேசாதீங்க..  குஷ்பு அக்கா வந்ததும் , இளந்தாரிகள் தறிகெட்டு திரியுதே..  டாக்டருக்கு நல்ல வரும்படி..

யோவ்.. வாயில நல்லாவருது...  சரித்திரத்தை மாத்திச்சொல்லாதே..  அந்தம்மா, பாதுகாப்பா வெச்சுக்கோங்கனுதானே சொல்லுச்சு..  அதுக்கும் கருகலைப்புக்கும் என்ன சம்பந்தம்?

போங்க தலைவா..  நேரா விளக்கமா செஞ்சு காமிச்சாவே, மண்டையில ஏறாது..  இதுல அந்தம்மாவோட அறிக்கைய வெச்சுக்கிட்டு  பலபேர் ஆட ஆரம்பிச்சுட்டானுக..  அப்புறம் டாக்டரே கதினு வந்து க்யூல உக்காந்துட்டு இருக்காளுக...

விளங்குமய்யா..  ஆமா எதுக்கு அந்த பொண்ணு காதில கைய வெச்சுக்கிட்டு ஓடுது? .   நீ சொன்னமாறி, இந்த காலத்து பொண்ணுகளுக்கு எல்லாமே அவசரம்தான்..

( டாக்டர் வருகிறார்..)

மன்னாரு.. ஒரு டீ போடுப்பா..ஒரே தலைவலி..

சார்.. வாங்க சார்..    கருங்காப்பி குடிங்க..தலைவலிக்கு நல்லது...(தக்காளி..பால் இல்லாட்டியும், காரியத்தில கண்ணாயிருக்கானுக...)

வணக்கம் டாக்டர்..    நான் பட்டாபட்டி..எப்படியிருக்கீங்க?..

வணக்கம்..வணக்கம்..    சீக்கிரம் தலையில துண்டு போட வெச்சுருவானுக போல...

என்ன டாக்டர்..   நான் என்ன சொல்லீட்டேனு இப்படி பேசறீங்க.?..

சாரி..சார்..   நான் உங்களை சொல்லலே..  இப்ப போச்சே ஒரு  பொண்ணு.. கண்றாவி சார்..   கண்ட கருமத்துக்கு நான் வைத்தியம் பார்க்க வேண்டியிருக்கு...

என்ன சார்.. ரொம்ப வெறுத்துப்போயி பேசறீங்க...என்னாச்சு?..

பின்ன என்ன சார்?.. வேர்த்து பூத்து என்னைய பார்க்க வந்துச்சு..’வாம்மா உக்காரு’னு சொன்னேன்..  நாற்காலி முனையில உட்கார்ந்துகொண்டு, நகத்தை கடிக்குது..     ’ஏம்மா..பதைபதைப்பா இருக்கே.. வீட்டுக்காரரு வரலையா?’னு கேட்டேன்..   அவரு வெளிநாடு போயி 2 வருஷம் ஆச்சாம்..கண்றாவி சார்...

ஆசுவாசப்படுத்தி, ’சொல்லும்மா’னு சொன்னேன்.  அதுக்கு கண்ணு கலங்கி, மெதுவா, ’வலிக்குமா?’னு கேட்டுச்சு..   இல்லை..லைட்டா கொஞ்ச நாளைக்கு வலிக்குமுனு சொன்னேன்..  ஓ-னு அழுதுக்கிட்டு சொல்லுது, ’டாக்டர்..இதை எடுக்க வீட்ல முயற்சிபண்ணினேன்..ஆனா முடியலே’

எனக்கு பயங்கர ஷாக் ஆயிடுச்சு.. பாருங்க பாஸ்.. படிச்சவங்களே இப்படி இருந்தா என்ன பண்றது?  அதுவுமில்லாம, ’ மேல கீழ ‘  குதிச்சுக்கிட்டே இருந்தா அதுவா வெளிய வந்திருமுனு, ஏதோ பாட்டி சொல்லுச்சாம்..
அதையும் முயற்சி பண்ணியிருக்கு, இந்த படிச்ச முட்டாள்..

அதக்கூட விட்டுடலாம்.. பக்கத்து வீட்டுக்காரன் கைய விட்டு எடுக்கப்பார்த்திருக்கான்...ஓட்டை சின்னதா இருந்ததாலே, முடியலையாம்... ஹேர்பின் வெச்சு எடுக்கப் பார்த்தானாம்.. அதுவும் முடியலையாம்..   கடைசியா அவங்க அம்மா, ’தீக்குச்சு’யை வெச்சு எடுக்கலாமுனு ஐடியா கொடுத்திருக்கு..  இதைக்கேட்டதும், டாக்டரான  என்க்கே ப்ளட்பிரஷர் ஏறிடுச்சு..காச்சு மூச்சுனு கத்திட்டேன்..
.
.
மன்னாரு..காபி என்னாச்சு?.

.
.

பட்டாபட்டி..நீங்க கேளுங்க..நடந்தது இதுதான்....

நான் அந்தப்பொண்ணுகிட்ட ’இப்படியெல்லாம் நீங்க முயற்சி பண்ணக்கூடாது.. அதுக்குத்தான் படிச்சுட்டு இந்த தொழிலுக்கு வந்திருக்கோமு’னு  சொல்ல, டாக்டர்..இந்தமாறி குப்பையெல்லாம் உள்ளேபோகாம இருக்க ஏதாவது வழியிருக்கா?னு, என்னைப்பார்த்து கேட்குது.

சார்...குப்பையாம்.. என்னா லொள்லுனு பார்த்தீங்களா?..வரவர படிச்சவனைப் பார்த்தா யாரும் மதிக்கிறதில்லை..   நானும் கோவத்தை அடக்கிட்டு, ‘அதுக்குத்தான் மாத்திரை இருக்கே..இல்ல...இரவுல பாதுகாப்பு சாதனத்தை உபயோகப்ப்டுத்தின, பிரச்சனை வர  சான்ஸ்சே இல்லை..’ னு சொன்னேன்..

“ஓ..நைட்டு மட்டும் உபயோகப்படுத்தினா போதுமா சார்?’- என்னைப்பார்த்து கேள்வி..

‘பாருங்க மேடம்...அப்படினு குறிப்பிட்டு சொல்லமுடியாது..உங்களுக்கு எப்பப்போ மூடு வருதோ. அப்ப உபயோகப்படுத்துங்க’னு சொன்னேன்.

ஓ..என்னோட மூடுதான் காரணம்னு சொல்றீங்களா?’- பெண்

’இதுக்கு, உங்க மூடுமட்டும் காரணம்னு சொல்லமுடியாது..  உங்க பாஷையில, குப்பை உருவாக பல காரணங்கள் இருக்கு மேடம்..’

’சரி டாக்டர்..என்னோட பக்கத்து வீட்டுக்காரன் சொன்னான்..  சில கிராமத்தில, செலவு குறைச்சலா,  இதுக்கு வைத்தியம்  இருக்காமே..?.. நல்லா சூடா எண்ணெய் காய்ச்சி ஊற்றினா, அடுத்தநாள் வெளிய வந்திடுமாம்..அவரு சொன்னதுமாறி பண்ணியும், அது வெளிய  வரலே..’

’கர்மம்..இப்படிவேற  சொல்லிக்கிட்டு திரியறானுகளா?..உங்களுக்கு, ’ஒன்வே டிக்கெட்’ எடுக்க, அவன் ஐடியா  கொடுத்திருக்கான்...முதல்ல, போலீஸ்க்கு போன் பண்ணி, அவனை தூக்கி உள்ள போடுங்க..எப்படியோ..சீக்கிரமா என்னைய பார்க்க  வந்தீங்களே..அதுவே சந்தோசம்...’

இல்ல சார்.. நேற்று நைட்டே வரலாமுனு பார்த்தேன்..அதுக்குள்ள வீட்டுக்காரர், வெளிநாட்ல இருந்து போன் பன்ணீட்டார்...’

’ஓ..உங்க வீட்டுக்காரருக்கு சொல்லீட்டீங்களா?..ஒண்ணும் பிரச்சனையில்லையே?’

’சே..சே. அவரு ரொம்ப நல்லவரு.. பக்கத்து வீட்டுக்காரனை கூட்டிக்கிட்டு , உங்களை போயி பார்க்கச்சொன்னாரு..’

சத்தியமா நல்ல மனுசன் போலிருக்கு...

நானும் கொஞ்சமா சுதாரிச்சுக்கிட்டு,  ‘கொஞ்ச நாள் ஆனா, அது உள்ள நகர ஆரம்பிச்சுடும்..அப்புறம் வெளிய எடுப்பது கஷ்டம்...சரி..சரி..   பயப்படாதே.. ஆப்ரேஷன் முடிஞ்சதும், 1 வாரம் லைட்டா ரத்தப்போக்கு இருக்கும்..அப்புறம் அதுவே நின்றுவிடும்..’னு ஆறுதலா சொல்ல அந்தப்பொண்ணுக்கு, கண்ணுல தண்ணி தளும்பிக்கிட்டு வருது சார்..

பண்றதை பண்ணிப்புட்டு..இப்ப அழுது என்ன பிரயோசனம்..சரி..சரி..
டிரஸ்ச லூஸ் பண்ணிக்கிட்டு , அந்த டேபிள்ல் ஏறிப்படு’னு சொன்னதுதான் மாயம்..  கிளினிக்க விட்டு ஓடிப்போயிடுச்சு சார்...என்ற கண்றாவியோ..போங்க சார்..பூக்கடை பக்கத்தில வாஸ்து சரியில்லையோ என்னமோ?

இல்ல டாக்டர் சார்.. எதுக்கும் பங்காருவை கூப்பிட்டு பாதபூசை பன்ணிப்பாருங்களேன்..- நான்

இனி அதுதான் பண்ணனும்..

( டாக்டர் தளர்ந்துபோய் திரும்பிப்போகிறார்..)

இதுவரை படிச்சுக்கிட்டு,  ’பட்டாபட்டி ஒரு நாதாரி’னு நினைச்சவங்க, அப்படியே ஓடிப்போயிடுங்க..
Bye..Bye..

.
.
.
.
உரையாடல் தொடர்கிறது..(வாங்க நல்லவங்களே.. இது உங்களுக்கு மட்டும்...)
.
.
.
.
.
ஓய் மன்னாரு..இதுக்கு காரணம் என்னவாயிருக்குமுனு நினைக்கிறே?...

தெரியலே தலைவா?..ஆனாலும் பாவம் அந்த பொண்ணு..

யோவ்..பன்னாடை..நாதாரி..முட்டாப்பயலே..மொள்ளமாறி..முடிச்சவுக்கி..முதல்ல உன்னோட கடைக்கு மேல, “கண்,காது..மூக்கு நிபுணர்”னு தொங்கற, பழைய போர்டை தூக்கி வீசுயா..
இந்த பிரச்சனையே, மூலகாரணமே இதுதான்..  வெயிலை மறைக்க உனக்கு வேற வழியா இல்லை...  பாவம்.. காது வலினு வந்த பொண்ண கருகலைப்பு பண்ற இடத்துக்கு அனுப்பிச்சுட்டையே.    .ங்கொய்யாலே...
.
.
தலைவா.. மன்னிச்சிரு தலைவா..அறியாம பண்ணிட்டே’னு மன்னாரு என்னோட கால்லவிழ ஓடிவர................  எனக்குதான் கால்ல விழந்து,  கு@#$ண்டி காட்ற பயலுகனாவே அலர்ஜி ஆச்சே...நானும் ஓட ரெடியாக...
.
.
.
மக்கா.. நான் சொன்னது கரெக்ட்தானே...
.
.
.
டிஸ்கி..
என்னாது?.... தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமேயில்லையா..?
சார்..பூக்காரி மட்டும் என்னைப்பார்த்து கை காட்டாம இருந்திருந்தால்.. இது நடக்க வாய்ப்பேயில்லை சார்..  அவ்..
.
.
.

Wednesday, June 16, 2010

நீயா...நானா.....?

பட்டாபட்டி சார்..வணக்கம்..
சார்..ரொம்ப கஷ்டப்பட்டு, தட்டுத்தடுமாறி, ஸ்கூல் படிச்சுட்டேன்..  எனக்கு ரொம்ப  நாளா, ஷேர் மார்க்கெட்ல இறங்கி, பணக்காரனா ஆகி, அவனுக மாறியே வாழனுமுனு ஆசை..என்ன பிரச்சனைனா..இந்த ஷேர்  மார்க்கெட் பற்றி, ஒரு மண்ணும்  மண்டையில ஏறமாட்டீங்குது..  நண்பர்களை கேட்டா, சரக்கு  வாங்கித்தா, சொல்லிக்கொடுக்கிறேனு சொன்னாங்க.. சரி...பொழைக்க வழி  சொல்றவங்களுக்கு, சரக்கு வாங்கி கொடுப்பது தப்பேயில்லனு, சாஸ்திரத்தில சொல்லியிருக்கே..வாங்கடானு, ஒரு நல்ல நாள்ல கடைக்கு கூட்டிக்கிட்டு போனேன்..

படுபாவிக.. தண்ணியப்போட்டு ,அங்கேயே ஆப்பாயில்  எடுக்கிறானுக.. கையிலிருந்த காசெல்லாம் எடுத்து கல்லாவுல கட்டிப்புட்டு திரும்பிப் பார்க்காம ஓடி வந்துட்டேன்..சோறு  துன்னனுமே..அதுக்கு ஏதாவது வழி பண்ணலாமுனு, சலூன் கடை வைச்சுட்டேன்

சார்.. ஆனாலும் கை அரிக்குது.. நீங்கதான் என் வாழ்க்கையில ஒளி ஏற்றி
வைக்கனும்..எனக்கு மட்டும் இந்த ஷேர் மார்க்கெட்டைப்பற்றி, புரியறமாறி சொல்லீட்டீங்க..பட்டாபட்டி சார்.. எங்க  கடையில, உங்களுக்கு கட்டிங் + சேவிங் ப்ரீ...
அன்னூர் ஆளவந்தான்


-----------------------------------------------------

வணக்கம் அன்னூர் ஆளவந்தான்..ஏய்யா..இப்பத்தான் கை மேல தொழில
வெச்சிருக்கையே..அப்புறம் ஏன் காண்டு புடிச்சு அலையிறே?.. இங்க பாரு..முடி
வெட்டறது ,டாக்டர் தொழில் மாறி..எல்லா சீசன்லையும் காசு பார்க்கலாம்.
.

ஷேர்..ஷேர்னு கூவிக்கிட்டு இருக்கான்களே..அது ஒரு கானல் நீரருப்பா..கொஞ்சம்  மூளைய யூஸ் பண்ணினா, காசு பார்க்கலாம்..இல்ல கட்டின கோமணத்தை அவுத்து  விட்டுடுவானுக..இன்னொரு விசயம்..ஆமா..இப்ப எதுக்கு பணக்காரனாகனுமுனு பரபரக்குறே?..அவனுக சோத்தை தின்னாலும், காலையில அதுதான் வரும்.. நீ  தின்னாலும் அதுதான் வரும்..

சரி..உனக்கு ’சனி’ குட்மார்னிங் சொல்லனுமுனு இருந்தா, நான் நடுவுல என்ன
செய்யமுடியும?..இந்த ஷேர் மார்க்கெட்னா என்னானு ஒரு கதை சொல்றேன்..
கேட்டுக்கோ..அதுக்கு மேல உன் விருப்பம்...

இரு அழகான கிராமம்..மக்கள் சந்தோசமா விவசாயம் பண்ணிக்கிட்டு, குடும்பம் குட்டியோட இருக்கானுக..நல்லது கெட்டதுக்கு கூடிக்கிறதும், சின்ன சின்ன சண்டை  சச்சரவுமா, வாழ்க்கை ஆனந்தமா ஓடிக்கிட்டு இருக்கு..என்ன ஒரு பிரச்சனைனா,  அங்க குரங்கு தொல்லை கொஞ்சம் அதிகம்..ஆக்கி வெச்ச சோத்தை, வீட்டுக்குள்ள  புகுந்து , தட்டுல போட்டு சாப்பிடற அளவுக்கு உரிமையோட சுத்திக்கிட்டு இருக்கு..

அப்ப ஒரு முதலாளி அந்த கிராமத்துக்கு போனான்..கிராமத்தான் வாழ்க்கைமுறையை  பார்த்ததும், அவனுக்கு எப்பம்போல வயிரெறியுது..என்னடா பண்ணலாமுனு  யோசிக்கிறான்..

ஒரு நாள், ஊர் மத்தியில நின்னுக்கிட்டு, ”அய்யா வாங்க..அம்மா வாங்க..கடவுள்,  என் கனவில வந்தாரு”னு கூவறான்..கடவுள்னு சொன்னதும், மக்கள் போட்டது போட்டபடி மைதானத்துல கூடறாங்க..

கூட்டத்தை பார்த்துட்டு, “மக்களே..நான்  பிறவிப்பணக்காரன்..ஒரு நாள், நல்ல தூக்கத்தில கடவுள் வந்து, இப்படி ஒரு கிராமம் இருக்கு..அங்குள்ள மக்கள்,குரங்கினால பெரும் பிரச்சனைய சந்திக்கிறாங்க..நீ போயி அவங்களுக்கு, ஏதாவது  நல்லது பண்ணுனு சொல்லியிருக்காரு”னு சொல்றான்.

மக்கள்தான் விவரமில்லாதவனுக ஆச்சே..சந்தோசமா தலையாட்டுரானுக அவனுக தலை போவது தெரியாமல்..    முதலாளி சொல்றான்..”மக்களே.. இனிமேல உங்களுக்கு  நல்ல காலம்  வந்திடுச்சு..தொல்லை தருகின்ற குரங்கை பிடித்து என்னிடம் தந்தால்,  ஒரு குரங்குக்கு  ரூ 100 தருகிறேனு.. அது வரை , இந்த கிராமத்தில ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கிக்கொள்கிறேன் “

மக்களும், மண்டையாட்டிக்கிட்டு, குரங்கு பிடிக்கப்போறானுக..ஒரு வாரம் கழித்து  பிடித்த குரங்குகளுடன் முதலாளி வீட்டுக்கு போனா, அவரு,  1 குரங்குக்கு  ரூ 100 கொடுத்து, எல்லா குரங்கையும் வாங்கி கூண்டுல அடைச்சுட்டாரு..

இப்ப மக்களை பார்த்து, “இனிமேல் பிடிக்கும் குரங்குகளை, ரூ 200 -க்கு வாங்கி
கொள்கிறேனு” அறிக்கை விடறாரு..மக்களும், விவசாயத்தை மறந்து, குடும்பத்தோட குரங்கு வேட்டைக்கு  அலையாருனுக..

ரூ200 ஆச்சே.. ஆசை விடும்மா? .இப்ப கிராமத்தில குரங்குகள்  வேற கம்மியாயிடுச்சு.. அடுத்த வாரம்,  கஷ்டப்பட்டு மீதிக்குரங்குகளை பிடித்து  வருகின்றனர்..சொன்னபடி 1 குரங்கு , ரூ200 செட்டில பண்ணிட்டாரு...

இப்ப....

”நீங்கள் பிடிக்கும் குரங்கு ஒன்றுக்கு ரூ 500 கொடுக்கப்போறனு” முதலாளி
சொன்னதும் மக்கள் விழிப்படைஞ்சிட்டாங்க..ஆகா,  இனி மாமன் மச்சானு கூட்டு  சேர்ந்துக்கிட்டு போனா, நல்லாயிருக்காது.. நாமே, தனித்தனியா பிடிச்சு, ரூ 500  வாங்கி  வாழ்க்கையில செட்டிலாகிடனுமுனு சபதம் போட்டுக்கிட்டு போறானுக..

கடைசியா கிடைத்தது 10 குரங்கு மட்டுமே..நல்லவரும் சொன்னபடி 1 குரங்கு = ரூ 500 கொடுத்திட்டு, “மக்கா..நகரத்தில, என்னோட கடைய, போட்டது போட்டபடி வந்துட்டேன்..அதுவுமில்லாம புள்ள குட்டியப் பார்த்து நாளாச்சு..நான் போயிட்டு, 2 வாரம் கழித்து வருகிறேன்..அதுவரை நம்ம
கணக்குப்பிள்ளை  ( ப.சி இல்ல பாஸ்..) குரங்குகளை பார்த்துக்குவான்..அப்புறம்
சொல்ல  மறந்துட்டேன்..அடுத்த பேஜ்ல 1 குரங்கு, ரூ 1000.. வரட்டா”னு
சொல்லிக்கிட்டு  நகரம் பார்க்கப்போயிட்டாரு..

மக்கள் அலையுறானுக...ஒரு குரங்காவது மாட்டனுமே..சே...கண்ணுக்கு முன்னாடி காசு ஆடுது.. 1 குரங்கு , ரூ 1000 .. விவசாயத்தை விட்டுவிட்டு, காடு மேடா சுத்தறானுக..ஊகூம்.. கிடைக்கலை.. என்னடா பண்றது..சரி வேற ஏதாவது வாங்குவானுகளானு  (நப்பாசை?) , எதுக்கும்,  அந்த கணக்குப்புள்ளைய கேட்கலாமுனு முதலாளி வீட்டுக்குப்போறானுக..

கணக்குப்புள்ளை, காலை விரிச்சுட்டு, கட்டில்ல தூங்கிக்கிட்டு இருக்காரு...
எழுப்பி..எங்க வாழ்க்கைக்கு ஒரு வழி சொல்லுனு அழறானுக..மக்கள் படும்பாட்டை  பார்த்து, கணக்குப்புள்ளை கண்ணுல தண்ணியா வருது.. ”உங்க நிலைமைய பார்த்து  மனசு கஷ்டமாயிருக்கு..என்னோட  முதலாளியா?... இல்ல மக்களா?னு கேள்வி  கேட்டா, நான் மக்கள்னுதான் சொல்லுவேன்..ஏன்னா மங்களோட நானும் ஒரு அங்கம்.  அதனால நாம கூட்டணி வெச்சு காசு  பார்க்கலாம்.. நீங்க என்ன பண்றீங்க..எங்கிட்ட உள்ள குரங்கையெல்லாம், ரூ800  கொடுத்து வாங்கிடுங்க..அடுத்த வாரம் முதலாளி வந்ததும், அவருகிட்ட ரூ 1000 -துக்கு விற்று ரூ 200 லாபம் பார்க்கலாமுனு சொல்றாரு.. 

இப்ப மக்கள் கண்களில் தண்ணீர்..நீர்தான் எங்களை வாழவைத்த தெய்வம்னு  சொல்லீட்டு, இருந்த தோட்டம், வீடு, காடு எல்லாம் விற்றுவிட்டு, குரங்கா வாங்கி  வெச்சுட்டானுக..

இப்ப


 • கணக்குப்புள்ளைய காணவில்லை..

 • முதலாளி திரும்பவும் வருவானா???

 • சும்மா கிடைத்த, குரங்கோட அடக்கவிலை ரூ 800

 • விற்கும் விலை ரூ 1000...லாபம் ரூ 200..சரி அன்னூர் ஆளவந்தான்..
இவ்வளவு தூரம் நூல்பிடிச்சப்மாறி படிச்சிட்டு வந்தீங்க... எங்கிட்ட சில குரங்குகள் இருக்கு சார்..குரங்கு விலை ரூ  700 தான் (அன்னூர்காரங்களுக்கு, 100 ரூபா டிஸ்கவுண்ட்..) .. ஆனா சீக்கிரமா  ரூ 1000 க்குப்போகும்.. வாங்கிக்குங்க பாஸ்...
டிஸ்கி..
சரியாக வைத்தால் சரக்கு உங்களுக்கு..லாபம் எங்களுக்கு...
இல்லாட்டி,  உங்க கோமணம் எங்களுக்கு..லாபமும் எங்களுக்கு..
கடைசியா..ஹி..ஹி...எல்லாமே எங்களுக்கு...ஹி..ஹி
.
.
.

Thursday, June 10, 2010

உயிரா?..இல்லை.. மயிரா?உயர்திரு இந்திய சமூகத்துக்கு,
அன்றாடங்காச்சி பட்டாபட்டி எழுதும் கடிதம். பேப்பர்ல போபால் பற்றிய தீர்ப்ப படிச்சதும், உச்சிமுடி நட்டுக்கிட்டதால் இந்த கடிதம். 2 ஆண்டு  சிறைத்தண்டனையும், தலா 1 இலட்சம் ரூபா அபராதமும் போட்டு, தீர்ப்பு வந்ததும் எனக்கு என்ன மயிரு சொல்வதென தெரியவில்லை.

25 ஆயிரம் பேரு செத்தானுக. எதுக்கு? தாய் நிறுவனம் யூனியன் கார்பைட், அதன் இந்தியக் கிளையான யூனியன் கார்பைட் இந்தியா லிமிடெட்   நிறுவனத்தின் அலட்சியபோக்கால். ஆனா, இங்கு உயிர்களின் மதிப்பு மயிர்களுக்கு சமம் எனற புனிதக்கோட்பாடு இருப்பதால், எல்லோரும்  பொத்திகிட்டுதான் இருக்கனும்..
1984ல் விபத்து நடந்த நான்கு நாட்கள் கழித்தே ”வாரன் ஆன்டர்சன்” கைது செய்யப்பட்டன். ஆனால் சிலமணி நேரங்களிலேயே அவன் ஜாமினில்  வெளியேறி, மாநில அரசின் விமானம் மூலம் டில்லி சென்று அங்கிருந்து தனி விமானம் முலம் அமெரிக்கா தப்பிச்சென்றான்.

அப்பப்பா.. ஜேம்ஸ்  பாண்டு செத்தாண்டா...மேலும், கேஸில் அவனது பெயர் வரமாலிருக்க உதவி செய்ய சொன்னது, பழைய காங்கிரஸ் பிரதமர்  நரசிம்மராவாம்...இது யார் சொன்னது.. நம்ம முன்னால்  சி.பி.ஐ  பெரியவன்..ஏய்யா.ரிடையர்ட் ஆனதும்தான், உங்க மனச்சாட்சி வேலை  செய்யுமா?.


அதுல வேற..பா.ஜ.கா..இவனுக போராட்டம் வேற  பண்ணப் போறாங்களாம்..ஆமாடா..இவனுகளும் சில வருஷம் நாட்டை  ஆண்டானுக..அப்ப என்ன, அவனுக ஒம்பது ஓட்டையும் அடச்சிக்கிச்சா?...இப்ப கரெக்டா பிரச்சனைய எடுத்து , அரசியல் பண்ண ஆரம்பிச்சுட்டானுக..தூ...நாதாரிகளா..

ஏதோ ஒரு நாய் ஜாமீன் போட்டுத்தானே , ”வாரன் ஆன்டர்சன்” தப்பிச்சுபோனான்.. அந்த ஜாமீன்போட்ட நாதாரி, எங்க போயி தொலஞ்சான்..?
அவன, “கசாப்”கூட சேர்த்து காயடிக்கலாமில்ல..அதுவுமில்லாம, இதை சொல்ல 26 வருஷம் ஆச்சு..பன்னாடை  அரசியல்வாதிகளா..அமெரிக்காகூட சமீபத்தில் ஒப்பந்தம் போட்டீங்களே..அப்ப அந்த நாதாரி ”வாரன் ஆன்டர்சன்”-னை, இந்தியாவிடம்  ஒப்படைக்கனுமுனு கேட்டீங்களா?..மாட்டானுக..அவரு என்ன பிரபாகரனா?.. இல்ல  நளினியா?..ராணுவப்படைகளை அனுப்ப?..

ஆமா..போபர்ஸ் பீரங்கி பேர ஊழல்ல, ’குவாட்ரோச்சி’ என்ற  இடைத்தரகரையும் காணவில்லை..ஏன்னாச்சு சார்?..ஓ..அது  வெளிநாட்டுப்பீஸு..அவரோட உடம்புல ஓடுவது இத்தாலி ரத்தம்..கேட்டா, அன்னை சோனியாவுக்கு கோபம் வரும்..

ஒண்ணுமட்டும் உண்மை...அந்த பாரின் பீஸ் சோனியா, இலங்கை பிரச்சனையில , இந்திய ராணுவத்தை வெச்சு, சொந்த  பிரச்சனைய தீர்த்தவேகத்தை இங்கேயும் காட்டியிருக்கலாம்..என்ன? பாழாப்போன ஏழைமக்களுக்கு என்ன மயிரு வந்தா என்னானு , கொஞ்சமா அடங்கிட்டாங்க..உடுங்க சார்.. ”இந்தியனின் உயிர் மயிருக்கு சமானம்..”மக்கா..இது உங்களுக்கு..
 • இந்தியா கண்டெடுத்த முத்து..எங்கள் அன்னை சோனியா..
 • மக்களே என் தெய்வம்..உயிர் உள்ளவரை அயராது...Bla..Bla..
 • செந்தமிழ் மாநாடு நடத்தி, தமிழனை தலை நிமிரச்செய்த உங்கள் தலைவர்..
 • ஈழப்பிரச்சனையில, உண்ணாவிரதம்(?) இருந்து..உயிரை .மயிராக நினைத்த...
 • திரை அரங்கை காப்பாற்ற, தீப்பிளம்பாய் வருகின்ற...
 • மக்கள் தொண்டே, மகனுக்கு ஆற்றும் தொண்டு..
 • வாக்கு கேட்டு வருகிறார்..வாருங்கள் என்  ரத்தத்தின் ரத்தங்களே...
 • ஓய்வை உதறிவிட்டு..உயிர்தோழியுடன் பவனி வரும்...


அப்படீனு எல்லாபயலும், நாலு காலை தூக்கிட்டு வருவானுக..வந்து, ’உங்கள் பொன்னான வாக்கை..உங்க கண்ணுல, கண்ணீர் வடிஞ்சா, எங்க நெஞ்சுல உதிரம் கொட்டும்..மறக்காம இதுல குத்துங்க’-னு பல்லக்காமிப்பாங்க..
அப்ப உங்க பிரச்சனைய நினைக்காம..தயவுசெய்து குத்துங்க சார்..குத்துங்க..

ஆமா..பிரச்சனை...பிரச்சனைனு சொல்றேனே..என்ன பிரச்சனைனு யாராவது கேட்டீங்களா?
அதுதாங்க...

 • ஈழத்தில தமிழர்கள் -  இலங்கைப்பிரச்சனை
 • நளினியின் விடுதலை  - உள்நாட்டுப்பிரச்சனை
 • சோனியாவுக்கு - இந்தியப்பிரச்சனை(?)
 • காங்கிரஸ்காரனுகளுக்கு - பதவிப்பிரச்சனை
 • பாஜகாவுக்கு- ரதம் ஓட்ட, ரோடில்லா பிரச்சனை
 • அம்மையாருக்கு- உடன்பிறவா சகோதரி பிரச்சனை
 • அய்யாவுக்கு - மகன் சீட் பிரச்சனை
 • பெரியவருக்கு -குடும்ப பிரச்சனை
 • விஜயகாண்டுக்கு - தியேட்டர் மற்றும் மச்சான் பிரச்சனை
 • நமக்கு -1 ப்ளேட் பிரியாணி, 1 குவாட்டர் கிடைக்குமா என்ற பிரச்சனை


சீக்கிரமா, ஆப்கானிஸ்தான் நம்மள பார்த்து பொறாமைபடும் அளவுக்கு,  இந்தியாவை வல்லரசு ஆக்கிடுங்கப்பா...நன்றி..
வாழ்க அரசியல்..வளர்க மக்கள் தொண்டு..
.
.
டிஸ்கி
போங்கடா நீங்களும், உங்க அரசியலும்..
.
.
.

Saturday, June 5, 2010

போட்டோ காமெடி 13..

அம்மா தாயே...
சாதா போட்டோ”-வை
”சதாம் போட்டோ” ஆக்கிடாதே...!!!!
.
.
.
.
.
.

Friday, June 4, 2010

போங்கய்யா.. நீங்களும் உங்க பதிவுலகும்..

பதிவுலகப் பிரச்சனை போகும் பாதை சரியாபடலே..


ஒரு பிரச்சனை உருவாச்சு..சரி..அதுக்கு அந்த பிரபலம் மன்னிப்பு கேட்டு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கிறேனு  சொல்றாரு..
அதற்கு அந்தம்மா முறுக்கிட்டு, என்னுடைய கணவரிடம் கேட்டது செல்லாதுனு ஆரம்பிக்குது..  ஊகும்.. அடிச்சுக்குங்க..

இது அடுத்த மகாபாரதப்போரா மாறட்டும்..

இதுல எரியர வீட்டுல புடுங்கும் மட்டும் லாபமுனு...டோமரோட அடுத்த பதிவு வருது..
என்னா.. அதுக்கு ஹிட்ஸ் முக்கியம்..பிரச்சனை என்ன மயிரா ஆச்சுனாலும் அதுக்கு என்ன?

இப்ப, இந்த பிரச்சனைய,  சாதில இருந்து மாற்றி, இந்து முஸ்லீம் பிரச்சனையாக்கும் வரை   ,  டோமர் ஓயாது என நினைக்கிறேன்..

ஏய்யா.. வயசாக வயசாக..மூளை மழுங்குமாய்யா ?...
.
.
.
அடிச்சுக்கிட்டு , வெட்டிக்கிட்டு...நல்லாயிருங்கலா நாதாரி பதிவர்களா...
.
.
.

(... இந்த பொழப்ப பொழைக்கிறதுக்கு...தக்காளி...நாண்டுக்கிட்டு
அடச்சே.. தூ...)


.
.
.

Wednesday, June 2, 2010

மன்னிப்பு கேட்கும் வாரம்ம்ம்ம்...

கடந்த ஒரு வாரமா ஆணி அதிகமாயிருந்ததால், வலைப்பூ பக்கமே ஒதுங்கமுடியவில்லை..  வந்து பார்த்தா..கும்மிட்டு இருக்காங்க..

நம்ம கருத்தை போடாவிட்டால், வருங்கால சந்ததிகளுக்கு,  வரலாறு தெரியாமப்போயிடுமேனு  நானும் என் பங்குக்கு பதிக்கிறேன்..( நன்றி முதல்வர் அவர்களே..)

பதிவுலகம் ஒரு போதை சார்..கத்தியெடுப்பவன் கடவுளுனு ஆகிப்போச்சு..
அதுவுமில்லாம, பிரபலமா(?)யிருப்பதும், கத்திமேல நடப்பதுபோல்...

பிரபல பதிவர், பூக்காரினு ஒரு பதிவ போடுவார்.. அப்புறம் டெலிட் பண்ணீட்டு, மன்னிப்புனு சொல்லுவார்..
அதுக்கு இன்னொரு பிரபலம், ஒட்டகத்தை பற்றி கதை சொல்லும்..
மீண்டும் மற்றுமொரு பிரபலம், வினவை படிக்காதீங்கனு சொல்லுவாங்க..
அதுக்கும் ஆட்டிக்கிட்டு, ஒண்ணாம் கிளாஸ் பையன்போல எல்லாரும் தொடச்சுக்கிட்டு போயிடனும்..

ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம்.. இது மன்னிப்பு கேட்கும் வாரம்னு மக்களுக்கு புரிஞ்சுடுச்சு... ( சாணி, விஜய் டீவில கேட்டது , உங்களுக்கு நினைவுக்கு வந்தால், நிர்வாகம் பொறுப்பாகாது..)

வினவு நல்லாத்தான் அலசியிருக்காங்க..அப்படியே, சைட்ல கத்திய சொருகியுமிருக்காங்க..
சாதிவெறி..பதிவு வட்டம் எல்லாம் சரிதான்..
ஆனா பிரச்சனையான பதிவர்களுடன், வேறு சிலரையும் இழுத்தது
உள்ளே போட்டது கண்டிக்கத்தக்கது
...( அவர்களின் பங்கு!!!.. )அந்த பிரச்சனையான  பூக்காரி பதிவ, பப்ளிஷ் பண்ணுமுன் தெரியாதா?..இதுல வெண்ணைமாறி  டெலிட் பண்ணிட்டு, ஒரு மன்னிப்புனு போர்ட் போட்டா, எல்லோரும் பல்லக்காமிச்சுட்டு போயிடனும்..
பச்சையா சொல்லனுமுனா, கொ#$%டையில காற்று இல்லை..

கடைசியா ஒண்ணச்சொல்றேன்.. எல்லோரும் அவரவர் ஆதங்கத்தை, சொல்லிட்டு .. அவர்களுக்கு ஆகாதவர்களை இழுத்து விட்டுட்டு போயிட்டாங்க...
நடத்துங்க உங்க ராஜாங்கத்தை..ஆமா சங்கம் ஆரம்பிப்பது எந்த நிலையில உள்ளது   சார்களா?மீண்டும் இன்னொருமுறை கடைசியா..(?)..

எல்லாப்பிரச்சனைக்கும் காரணம் காளகஸ்தி கோபுரம் சாஞ்சதுதான்..  போசாம ஏதாவது யாகம் பண்ணி,  எல்லோரும் சேர்ந்து பதிவுலகை பழையபடி தூக்கி நிறுத்துங்கப்பா...


அட.. கடைசியா ஏதாவது சொல்லிட்டு போகலேனா, சாமி கண்ணக்குத்துங்கிறதால..
பதிவுலக்கு கருத்தை சொல்லிக்கிட்டு அப்பீட் ஆகப்போறான் இந்த பட்டாபட்டி..


கலைஞருடன் மருத்துவர்  இணைந்தார்..
கலைஞருடன் அதிமுக இணயப்போகுது..
கலைஞருடன் மதிமுக இணயப்போகுது..

சீக்கிரம் எல்லோரும் ஒரே குடையின்கீழ வந்திடுவாங்க

ஜனநாயகத்தை ஒழித்து ,   மீண்டும் முடியாட்சியை கொண்டுவரும்வரை,  எங்களுக்கு தூக்கமில்லை...
பதிவுலகுக்கு நிம்மதியுமில்லை...
.
.
.