Pages

Tuesday, June 29, 2010

ஒரு பானை சோற்றுக்கு , ஒரு சோறு பதம்..

நம்ம நாட்டு விமானநிலையங்களைப் பற்றி உங்களின் கருத்து என்ன?..

வெளிநாடு சென்று வரும் பயணிகளின் புலம்பல்களை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். அடிக்கடி அவர்களின் பேக்கேஜிலிருந்து கைத்தொலைபேசி, மடிக்கணனி,  வாசனைத்ததிரவியங்கள், மதுவகைகள் மாயமாக மறைந்துவிடும். அதை அங்குள்ள ஆபிஸரிடம் புகாராக அளித்தால், நீங்கள் குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டு உங்கள் பட்டாபட்டி உருவப்படும். சில சமயம் நிர்வாணமாகத்தான் வெளியே வர வேண்டியிருக்கும்.

இது ஒரு சாதாரண நிகழ்வுதான். பிரச்சனைகளை கண்டு ஒதுங்குவதும் , துடைத்துபோட்டுவிட்டு போவதும், ஒவ்வொரு சராசரி இந்தியனும் செய்வதுதான்.  அய்யா.. நானும் இப்படித்தான் நினைத்திருந்தேன் போனவாரம் வரை.

தவறு மக்களே தவறு...

இந்தியர்..வயது 40..பாம்பே ரயிலில் பயணம் செய்யும் சராசரி முகம்..அவருக்கு போன வாரம் பிறந்தநாள்.  அதை இங்கு கொண்டாடுவதைவிட, ஐரோப்பியாவில் கொண்டாடினால் நன்றாக் இருக்கும் என்ற அவரது தாயாரின் எண்ணம். ’தாய் சொல்லை தட்டாத தனயனா’ன அவர், அன்னையின் விருப்படி ஐரோப்பியா சென்றுவிட்டார்.

வாரம் கழிந்தது. கடமை அழைத்தது.. கண்ணியமாக திரும்பிவிட்டார்..
அந்தோ பரிதாபம். டெல்லி ஏர்போர்டில் அவரது கைத்தொலைபேசி காணாமல் போய்விட்டது. Special Protection Group (SPG)  அதிகாரிகளிடம்  சென்றார். விவரங்களை சொன்னார். போன் விலை ரூ 15,000.

செய்திகள் பறந்தன. விமான நிலயத்தில் உள்ள காவல்துறை முடுக்கிவிடப்பட்டது. கண்டுபிடிக்கமுடியவில்லை. 2 நாட்கள்.. 300 போலீஸார்.. துப்பறியும் நாய்கள்..விமான நிலையம் அலம்பப்பட்டு, பதிவு செய்யப்பட்ட காமிராக்கள் மூலம், குற்றவாளி இனம் காணப்பட்டார்.. வேறுயாருமில்லை பாஸ்..விமான நிலையத்தில், பொருடகளை ஏற்றி இறக்கும் தொழிலாளி.

கடைசியாக, அந்த தொழிலாளியின் வீட்டுக்கு காவல்படை விரைகிறது. தொலைபேசியை கண்டுபிடிக்கப்படுகிறது.  இரண்டு நாட்களில், அது உரியவரிடம் சேர்ப்பிக்கப்படுகிறது..கண்டுபிடிக்க ஆன செலவு பல லட்சங்கள் மட்டுமே.

இவ்வளவு திறமைமிக்கவர்களாகவும், விரைந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் காவலர்களை/அதிகாரிகளையும் பார்த்து.... நாம் பொருமிகிறோம்... நகைக்கிறோம்..நையாண்டி செய்கின்றோம்.. இதுதான் இந்தியர்களின் குணமா?..

காண்போர் காறித்துப்பும் நிலையை அடையும்முன், ஒரு இந்தியனாக, தமிழனாக என்னுடைய கருத்தை  பதிவு செய்வது என் கடமையாகும்..

 • அடுத்தவரை குறை கூறுவதை நிறுத்துங்கள்..
 • நாட்டை வல்லரசாக, முட்டுக்கட்டையாக இருக்காதீர்..
 • இந்தியனாக உங்கள் கடமையை செய்யுங்கள்..

கடைசியாக.....
”  திருந்துங்கள்..இல்லை திருத்தப்படுவீர்கள்...  “


நன்றி...
.
.
.
.
டிஸ்கி..
அட பார்றா.. அவரு யாருனு கடைசி வரை சொல்லாம விட்டு..என்னுடைய கடமையிலிருந்து நழுவப்பார்த்தேனே...
|
|
|
.
.
அவரு பேரு ராகுல் காந்தியாம்  சார்..
அதனால மறக்காம . அடுத்த முறை ..என்ன பிரச்சனை என்றாலும்..அரசு அதிகாரிகளை தயங்காமல் அணுகவும்..  பிரச்சனைகள் புயல் வேகத்தில தீர்க்கப்படும்..
.
.
வரட்டா...
.
.
.

130 comments:

 1. சே! ரொம்ப மோசம் பட்டா. இத்தனை வசதியிருந்தும் ஐஃபோன் 38ஆயிரம் குடுத்து வாங்காம வெரும் 15,000 ரூ ஃபோன் வச்சிருந்தத பாராட்ட வேணாமா? இல்லாம நம்மள மாதிரி அப்போலோ பார்மஸி நம்பரும், கால் டாக்சி நம்பரும் இருக்கிற ஃபோனா அது:))

  ReplyDelete
 2. திருட தெரியாதவன் ராகுல் Cell ல திருடுனானாம......

  ReplyDelete
 3. எனக்கு நல்லா வாயில வருது............................
  15 ஆயரம் மதிப்புள்ள செல்போன் காணாம போனா 300 போலீஸ் காரர்களும் .சிறப்பு பாதுகாப்பு படையும் ,இரண்டு நாள்ல கண்டுபிடிக்கிற வேகமும் சாமானிய மக்களுக்கு கிடைக்குமா?
  சோனியாவின் பிள்ளைக்கு இதெல்லாம் ஜுஜுபி பட்டா! இந்த தத்தாரிகள் அவர்களின் வாரிசுகளின் வாரிசுகள்தான் இந்தியாவை வல்லரசாக (Lavadaakkaa Baal ) மாத்தி சுருட்ட போறாங்க?
  முன்பு ஆங்கிலேயர்களிடம். இன்று பூட்ஸ் நக்கும் காங்கிரஸ் கபோதிகளிடம்.
  இதெல்லாம் மாறும் நண்பரே!நிச்சயம் மாறும்!! இன்னும் ஒரு 25 வருடங்கள் கழித்து!

  ReplyDelete
 4. @வானம்பாடிகள் said...
  சே! ரொம்ப மோசம் பட்டா. இத்தனை வசதியிருந்தும் ஐஃபோன் 38ஆயிரம் குடுத்து வாங்காம வெரும் 15,000 ரூ ஃபோன் வச்சிருந்தத பாராட்ட வேணாமா? இல்லாம நம்மள மாதிரி அப்போலோ பார்மஸி நம்பரும், கால் டாக்சி நம்பரும் இருக்கிற ஃபோனா அது:))
  //

  நம்ம ராசா..சுத்தமா சுருட்டிட்டு வந்ததால..பாவம்..கஷ்டப்படறாங்க போலிருக்கு..
  இரு இதியனா..அவருக்கு ஐ.போன் வாங்கிக்கொடுப்பது நம் கடமை சார்..

  ReplyDelete
 5. ஆமாங்க...எல்லாரும் நல்லவங்க தான்...வேலைவெட்டி இல்லாம தான் நாங்க குறை சொல்றோம்...மன்னிச்சுகுங்க...(ஏர்போர்ட் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே அவங்க கண்டுபிடுச்சு இருப்பாங்க)

  ReplyDelete
 6. @ராஜா said...
  திருட தெரியாதவன் ராகுல் Cell ல திருடுனானாம......
  //

  திருடியவன்...பாவம்... படிக்காதவன் போலிருக்கு..ஹி..ஹி..

  ReplyDelete
 7. @mythees said...
  :)
  //

  டாங்ஸ்ங்கோ...

  ReplyDelete
 8. @கக்கு - மாணிக்கம் said...
  எனக்கு நல்லா வாயில வருது............................
  15 ஆயரம் மதிப்புள்ள செல்போன் காணாம போனா 300 போலீஸ் காரர்களும் .சிறப்பு பாதுகாப்பு படையும் ,இரண்டு நாள்ல கண்டுபிடிக்கிற வேகமும் சாமானிய மக்களுக்கு கிடைக்குமா?
  சோனியாவின் பிள்ளைக்கு இதெல்லாம் ஜுஜுபி பட்டா! இந்த தத்தாரிகள் அவர்களின் வாரிசுகளின் வாரிசுகள்தான் இந்தியாவை வல்லரசாக (Lavadaakkaa Baal ) மாத்தி சுருட்ட போறாங்க?
  முன்பு ஆங்கிலேயர்களிடம். இன்று பூட்ஸ் நக்கும் காங்கிரஸ் கபோதிகளிடம்.
  இதெல்லாம் மாறும் நண்பரே!நிச்சயம் மாறும்!! இன்னும் ஒரு 25 வருடங்கள் கழித்து!
  //

  இது என்ன சார் 25 வருடம் கணக்கு?..
  பிரியங்கா பையன் பெருசாகும்வரைக்குமா?..

  வெள்ளையனிடம் வாங்கி..நேருவிடம் விற்றுவிட்டோம்..நம்மை...

  ReplyDelete
 9. Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  போன சுட்டது யாரு?
  //

  நீர், போலீஸ் என்பதை மீண்டும் மீண்டும் நிருபிக்கின்றீர்...

  ஒரு வேளை கோட்ஸேவா?.. இல்லையே..அவரு காந்திய மட்டும்தானே சுட்டாரு?...

  சரி ரமேஸ்..னீங்கலே இந்த கேஸ எடுத்து நடத்துங்க..ஹா.ஹா..

  ReplyDelete
 10. Blogger ராசராசசோழன் said...

  ஆமாங்க...எல்லாரும் நல்லவங்க தான்...வேலைவெட்டி இல்லாம தான் நாங்க குறை சொல்றோம்...மன்னிச்சுகுங்க...(ஏர்போர்ட் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே அவங்க கண்டுபிடுச்சு இருப்பாங்க)
  //

  அதுதான் .. பேசாமா, இனிமேல நாமளும் பேருந்து..கார் எல்லாம் விட்டுவிட்டு விமானத்தில பயணம் செய்யலாம்..

  என்னா பாதுகாப்பு?

  ..மேலும்..இதை பின்பற்றினால்..பெட்ரோல் விலை குறையகூட வாய்ப்புண்டு..

  ReplyDelete
 11. ஆமா அந்த போன்ல இருந்த கிளிப்புகள் CD கிடைக்குதாமே உண்மையா பாஸ்?

  ReplyDelete
 12. பட்டாஜி, பட்டாஜி, நிம்பல் நம்பல் ராகுல்ஜியப்பத்தி ஏதோ தப்பா பேசுரான், நான் நம்பல் மம்மிகிட்டே சொல்லி ஆட்டோ அனுப்புவான்!

  (ஏக் காவுன் மே, ஏக் கிசான்.....ரகதாதா!...எங்க சொல்லுங்க பட்டாஜி?)

  ReplyDelete
 13. தலைவரே அவரை குறை கூறாதீர்கள். அவர் மிகவும் எளிமையானவர். வாரிசு அரசியலை ஒழிக்க மிகவும் தீவிரமாக செயல்படுபவர். ஆகையால்தான் இன்னமும் மறுமணம் கூட மண்ணிக்கவும் திருமணம் கூட செய்யாமல் அன்னையின் அரவனைப்பிலேயே வாழ்கிறார். அவரை போய் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்கண்ணே

  ReplyDelete
 14. \\சில சமயம் நிர்வாணமாகத்தான் வெளியே வர வேண்டியிருக்கும்.//
  இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராதுங்களா

  ReplyDelete
 15. சிவா (கல்பாவி) said...

  \\சில சமயம் நிர்வாணமாகத்தான் வெளியே வர வேண்டியிருக்கும்.//
  இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராதுங்களா
  //

  எப்பம்போல கண்ண மூடிக்கனும் சிவா..ஹி..ஹி

  ReplyDelete
 16. ///அதை அங்குள்ள ஆபிஸரிடம் புகாராக அளித்தால், நீங்கள் குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டு உங்கள் பட்டாபட்டி உருவப்படும்///

  இதுக்குத்தான் உள்ள எதுவும் போடக்கூடாது! (போட்டாலும் அவுத்துடுவாங்கள்ல?)

  ReplyDelete
 17. “பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஆமா அந்த போன்ல இருந்த கிளிப்புகள் CD கிடைக்குதாமே உண்மையா பாஸ்?//
  பாஸ் நாமெல்லாம் எங்கேயோ போய்கிட்டு இருக்கோம் CD-ன்னு சொல்லிகிட்டு DVD- ன்னு சொல்லுங்க பாஸ்

  ReplyDelete
 18. @சிவா (கல்பாவி) said...
  அவர் மிகவும் எளிமையானவர். வாரிசு அரசியலை ஒழிக்க மிகவும் தீவிரமாக செயல்படுபவர். ஆகையால்தான் இன்னமும் மறுமணம் கூட மண்ணிக்கவும் திருமணம் கூட செய்யாமல் அன்னையின் அரவனைப்பிலேயே வாழ்கிறார். அவரை போய் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்கண்ணே

  //

  பாவம் தான் ..இங்க 40 வயசுலேயும் அன்னையின் அரவணைப்பு வேண்டியிருக்கு..

  இன்னொருவர்..50 வயசிலும்.சீட் வாங்கிதரச்சொல்லி..அப்பா உயிர வாங்கறார்..

  இந்த வயசுலையும் தனியா சிந்திக்கமுடியாது என்றால்...ஒரு வேளை, நம்நாட்டில்..கல்விமுறை சரியில்லையா?..

  ReplyDelete
 19. ஒரு போனையே ஒழுங்கா வசிக்க தெரியாதவன் இந்த நாட்டையா ஒழுங்கா வச்சிருக்க போறான் ??

  (இந்த லட்சணத்துல. ஆட்டு தாடி மண்ணு மொக்க சிங்கு வேற பதவியை விட்டு தருவாராம்.. ))

  வாயில கெட்ட கெட்ட வார்த்தையா வருது ..... முடியல!! .................... தூத்தேரிக்க ...

  ReplyDelete
 20. Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ஏக் காவுன் மே, ஏக் கிசான்.....ரகதாதா...ஆங், சரியா சொல்லுங்க பட்டாஜி, ஏக் காவுன் மே, ஏக் கிசான்.....ரக..ரக...ரக ரகதாதா, சொல்லுங்க ரகதாதா...!
  //

  அடப்பாவி..நீ இந்தியும் பேசுவயா?..
  சொல்லவேயில்ல...

  ReplyDelete
 21. //சிவா (கல்பாவி) said...
  “பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஆமா அந்த போன்ல இருந்த கிளிப்புகள் CD கிடைக்குதாமே உண்மையா பாஸ்?//
  பாஸ் நாமெல்லாம் எங்கேயோ போய்கிட்டு இருக்கோம் CD-ன்னு சொல்லிகிட்டு DVD- ன்னு சொல்லுங்க பாஸ்//


  ஒரு புளோவுல வந்திருச்சி பாஸ்!

  ReplyDelete
 22. ///பட்டாபட்டி.. said...
  Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ஏக் காவுன் மே, ஏக் கிசான்.....ரகதாதா...ஆங், சரியா சொல்லுங்க பட்டாஜி, ஏக் காவுன் மே, ஏக் கிசான்.....ரக..ரக...ரக ரகதாதா, சொல்லுங்க ரகதாதா...!
  //

  அடப்பாவி..நீ இந்தியும் பேசுவயா?..
  சொல்லவேயில்ல...///

  டெல்லியிலே ஆறு வருசம் குப்ப கொட்டி இருக்கேன் (அப்பிடியும் ஏக் காவுன் மே...வரைக்கும்தான் முடிஞ்சது..!)

  ReplyDelete
 23. Blogger யூர்கன் க்ருகியர் said...

  ஒரு போனையே ஒழுங்கா வசிக்க தெரியாதவன் இந்த நாட்டையா ஒழுங்கா வச்சிருக்க போறான் ??

  (இந்த லட்சணத்துல. ஆட்டு தாடி மண்ணு மொக்க சிங்கு வேற பதவியை விட்டு தருவாராம்.. ))

  வாயில கெட்ட கெட்ட வார்த்தையா வருது ..... முடியல!! .................... தூத்தேரிக்க ...
  //

  மன்மோகன் எங்க விட்டு கொடுக்கிறது.. வாங்கினதை திருப்பி கொடுக்கிறார்..

  ReplyDelete
 24. சுவிஸ்ல இருக்குறதெல்லாம் கண்டுபிடிச்சு கொண்டு வந்துட்டா கூட தான் நல்லாயிருக்கும்! அதெல்லாம் ஏன் தோண மாட்டிகுது!

  ReplyDelete
 25. //ஒரு போனையே ஒழுங்கா வசிக்க தெரியாதவன் இந்த நாட்டையா ஒழுங்கா வச்சிருக்க போறான் ??//

  இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்.

  ReplyDelete
 26. ஆமா திருடுன ஆளு இப்போ எங்கே இருக்காரு? (கேசு போட்டங்களா இல்ல விட்டுட்டாங்களா?)

  ReplyDelete
 27. //ஏக் காவுன் மே, ஏக் கிசான்.....ரக..ரக...ரக ரகதாதா, சொல்லுங்க ரகதாதா...!//

  ராம்சாமி, இது பாக்கியராஜ் படத்துலையே வந்தாச்சு.

  ReplyDelete
 28. 15000 ரூபாய் செல்போனா இருந்தாலும் இவ்வளவுதூரம் விடாப்பிடியா புடிச்சிருக்காங்கன்னா, மேட்டர் என்னமோன்னு பட்சி சொல்லுதே?

  ReplyDelete
 29. ராம்சாமி, கேசு போடல. விட்டுட்டாங்க.

  ReplyDelete
 30. ராம்சாமி, அந்த போன்ல நிறைய தகவல் இருக்காம். கேசு போட்டா அதெல்லாம் வெளிய வந்துரும்னு உட்டுட்டாங்க.

  ReplyDelete
 31. ///கொல்லான் said...
  //ஏக் காவுன் மே, ஏக் கிசான்.....ரக..ரக...ரக ரகதாதா, சொல்லுங்க ரகதாதா...!//

  ராம்சாமி, இது பாக்கியராஜ் படத்துலையே வந்தாச்சு.///

  எனக்கும் இந்தி தெரியும்னு பட்டாஜியே நம்பிட்டாரு, இப்பப்போயி மேட்டர ஓப்பன் பன்ணீட்டீங்களே?

  ReplyDelete
 32. யோவ் பட்டு,இப்ப தான்யா பழைய மாதிரி போஸ்ட் போட்டு இருக்கீர்.நடத்தும் ஓய்.நானு ஒரு ஓரமா நின்னு வேடிக்கை பாக்குறேன். :)
  ஆமா சின்ன பசங்க எல்லாம் உள்ளுக்க சேப்ப இல்ல? :)

  ReplyDelete
 33. ///வாரம் கழிந்தது. கடமை அழைத்தது.. கண்ணியமாக திரும்பிவிட்டார்..///

  அப்படின்னா?

  ReplyDelete
 34. அப்போ அநேகமா ஏதும் வீடியோ எதிர் பாக்கலான்னு சொல்லுக

  ReplyDelete
 35. வால்பையன் said...

  சுவிஸ்ல இருக்குறதெல்லாம் கண்டுபிடிச்சு கொண்டு வந்துட்டா கூட தான் நல்லாயிருக்கும்! அதெல்லாம் ஏன் தோண மாட்டிகுது!
  //
  ஓ..அது வெளிநாட்டு பிரச்சனை..இந்தியா தலையிடுவதில்லை என்ற நிலைபாட்டை எடுத்திருக்கும் தல....

  ( போபால் பிரச்சனைக்கே, ஆண்ட்ர்ஷனை, ரத்தின கம்பளம் விரிச்சு அனுப்பி வெச்ச ஆட்சி இது..)

  ReplyDelete
 36. பட்டா, ஆனி, சாரி பார் த லேட். படிச்சிட்டு வரேன்

  ReplyDelete
 37. //அப்போ அந்த DVD எங்க கிடைக்குதுன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே?//

  எம்புட்டு காசு தருவீங்க?

  ReplyDelete
 38. அட தக்காளி, நானும் படிச்சென் இந்த நூச, சும்மா ஹெட் லைன் படிச்சிட்டு போயிட்டென், மக்கா உனக்கு மட்டும் எப்படியா இந்த மாதிரி ஆங்கில்ல ரோசனை தோனுது??...( சரி சரி கடா வெட்டுரதையே தொழிலா வச்சிருக்கிரவங்களுக்கு இதெல்லாம் சாதரணமப்பா)

  இனிமே எந்து ஏதவது காணாம போன இதெ மாறி கம்ப்ளயிண்ட் பண்றேன்( உன் பேச்ச தட்ட முடியுமா பட்டா)

  ReplyDelete
 39. நம்ம போலீசார் இவ்வளவு ஸ்பீடான்னு
  நினைச்சேன்,கொய்யாலே பின்னாடி தான் எதுக்குன்னு தெரியுது.இந்த நாடு திருந்துமுன்னு நினைக்கிற

  ReplyDelete
 40. வால்பையன் said...

  சுவிஸ்ல இருக்குறதெல்லாம் கண்டுபிடிச்சு கொண்டு வந்துட்டா கூட தான் நல்லாயிருக்கும்! அதெல்லாம் ஏன் தோண மாட்டிகுது!///////////

  என்னா தல அவங்க அடி மடியில் கை வைக்கிறிங்களே

  ReplyDelete
 41. ராசராசசோழன் said...

  ஆமாங்க...எல்லாரும் நல்லவங்க தான்...வேலைவெட்டி இல்லாம தான் நாங்க குறை சொல்றோம்...மன்னிச்சுகுங்க...(ஏர்போர்ட் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே அவங்க கண்டுபிடுச்சு இருப்பாங்க)///////////////


  அப்படி இல்லை பாஸ் சோனியாவின் புதல்வன் என்ற ஒரே காரணத்திற்காக தான் கண்டுபிடித்தார்கள்

  ReplyDelete
 42. பட்டாபட்டி.. said...

  Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ஏக் காவுன் மே, ஏக் கிசான்.....ரகதாதா...ஆங், சரியா சொல்லுங்க பட்டாஜி, ஏக் காவுன் மே, ஏக் கிசான்.....ரக..ரக...ரக ரகதாதா, சொல்லுங்க ரகதாதா...!
  //

  அடப்பாவி..நீ இந்தியும் பேசுவயா?..
  சொல்லவேயில்ல.../////////////////////

  நான் தெலுங்குன்னு நினைச்சேன்

  ReplyDelete
 43. சீக்கிரம் இந்தி கத்துக்க முத்து! ராகுல்ஜி கிட்டே பட்டாஜி கோர்த்து வுட்டுடுவாரு, அப்புறம் எங்கேயோ போய்டலாம்!

  ReplyDelete
 44. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  சீக்கிரம் இந்தி கத்துக்க முத்து! ராகுல்ஜி கிட்டே பட்டாஜி கோர்த்து வுட்டுடுவாரு, அப்புறம் எங்கேயோ போய்டலாம்!////////////////


  எங்கயும் போக வேண்டாம் சுவிஸ் பாங்கில் இருந்து கொஞ்சம் குடுத்தால் போதும்

  ReplyDelete
 45. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அங்க பீசு கைல கெடைக்காது கழிச்சிக்கத்தான் முடியும்!/////////

  எப்படியோ பீஸ் வருதுல!அது போதாதா
  இப்போ கரக்டா சொல்லுறேன் பாரு
  ரகுதாத்தா

  ReplyDelete
 46. Mr . பட்டா,

  உங்கள் பதிவுக்கு Dr .மன்மோகன் சிங் இப்பொழுது பதிலளித்துள்ளார்.

  "ஒரேயடியாக மக்களுக்கு சலுகைகள் வழங்க முடியாது"

  புரிஞ்சதா நல்லா அழுத்திப் படிங்க மக்களுக்கு மக்களுக்கு.....

  ராகுல் என்ன மக்களா?

  ReplyDelete
 47. Phantom Mohan said...

  Mr . பட்டா,

  உங்கள் பதிவுக்கு Dr .மன்மோகன் சிங் இப்பொழுது பதிலளித்துள்ளார்.

  "ஒரேயடியாக மக்களுக்கு சலுகைகள் வழங்க முடியாது"

  புரிஞ்சதா நல்லா அழுத்திப் படிங்க மக்களுக்கு மக்களுக்கு.....

  ராகுல் என்ன மக்களா?/////////////

  எலக்சன் பக்கத்தில் இல்லை என்ற தயிரியாமா

  ReplyDelete
 48. எலெக்ஷன் இருந்தா மட்டும்? சரக்கும், பிரியாணியும் பேசும். இன்னைக்குத்தான் வாயத் தொறந்து உண்மைய சொல்லிருக்காருன்னு சந்தோசப்பட வேண்டியதுதான்!

  ReplyDelete
 49. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ஹூ இஸ் த டிஸ்டர்ப்பன்ஸ்? இந்தி டியூசன் நடக்கும் போது யாருய்யா குறுக்க வாரது?//////////

  நோ டென்ஷன் நம்ம பருப்பு தான்,அவருக்கும் டியூஷன் எடு அவரும் கத்துகிடட்டும்

  ReplyDelete
 50. ///Phantom Mohan said...
  Mr . பட்டா,

  உங்கள் பதிவுக்கு Dr .மன்மோகன் சிங் இப்பொழுது பதிலளித்துள்ளார்.

  "ஒரேயடியாக மக்களுக்கு சலுகைகள் வழங்க முடியாது"

  புரிஞ்சதா நல்லா அழுத்திப் படிங்க மக்களுக்கு மக்களுக்கு.....

  ராகுல் என்ன மக்களா?///


  என்னது சலுகைகள் கிடையாதா? அப்போ மன்மோகன் ஜிக்கு கடிதம் எழுதுவோம் (தமிழன்னா கடிதம் தான் எழுதோனும்)

  ReplyDelete
 51. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ஆங்...முத்து..பருப்பு இப்போ ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து கோரசா சொல்லுங்க....
  ஏக்... காவுன் மே.....!
  ஏக்... கிசான்.....1
  ரக...தாதா...!
  ///////////////////////////

  யோவ் மொக்கை, செம்மொழியாம் தமிழ் இருக்க, கிழிஞ்ச துணி ஹிந்தி எதற்கு?

  ReplyDelete
 52. யோவ் பருப்பு இந்தின்ன உடனே எங்கேய்யா எஸ்கேப் ஆகுர? எல்லாம் நல்லதுக்குத்தான்ய்யா, அடுத்த வாரம் பட்டாஜி, நம்ம ராகுல்ஜிய மீட் பண்ணப் போறார், அப்போ நீங்களும் கூட போக வேணாமா?

  ReplyDelete
 53. Phantom Mohan said...

  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ஆங்...முத்து..பருப்பு இப்போ ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து கோரசா சொல்லுங்க....
  ஏக்... காவுன் மே.....!
  ஏக்... கிசான்.....1
  ரக...தாதா...!
  ///////////////////////////

  யோவ் மொக்கை, செம்மொழியாம் தமிழ் இருக்க, கிழிஞ்ச துணி ஹிந்தி எதற்கு?/////////////

  கடிதம் எழுதுவதற்கு

  ReplyDelete
 54. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  யோவ் பருப்பு இந்தின்ன உடனே எங்கேய்யா எஸ்கேப் ஆகுர? எல்லாம் நல்லதுக்குத்தான்ய்யா, அடுத்த வாரம் பட்டாஜி, நம்ம ராகுல்ஜிய மீட் பண்ணப் போறார், அப்போ நீங்களும் கூட போக வேணாமா?
  ///////////////////////////

  ALL THE BEST PATTA SIR!

  MY BEST WISHES TO PANNI SIR & MUTHU SIR!

  ReplyDelete
 55. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  பருப்பப் புடி விடாதே! டியூசன்ன உடனே ஆளு நழுவுது!/////////

  டியூஷன் என்றவுடன் ஆள் எஸ் ஆகுறார் இதே ட்ரைனிங் சொல்லி பாரு கும்பல் கூடுவதை

  ReplyDelete
 56. எப்படி இத்தாலி பேசுறேனா,அப்போ எனக்கு மினிஸ்டர் பதவி உண்டு

  ReplyDelete
 57. mozilla add on நல்லா இருக்கு! நன்றி முத்து....

  என்னய்யா இது ட்யுஷன், ட்ரைனிங் ரொம்ப பயமுறுத்துறீங்க. பட்டா வேற டெல்லிக்கு போறாராம், நம்ம விஜய் மாதிரி ஆகிடாதே! (35 வயசுக்கு மேல உள்ளவங்கள இளைஞர் அணில சேர்க்க மாட்டாராம்!) பட்டா already half century போட்டாரு, என்ன ஆகப்போகுதோ?

  ReplyDelete
 58. /// Phantom Mohan said...
  mozilla add on நல்லா இருக்கு! நன்றி முத்து....

  என்னய்யா இது ட்யுஷன், ட்ரைனிங் ரொம்ப பயமுறுத்துறீங்க. பட்டா வேற டெல்லிக்கு போறாராம், நம்ம விஜய் மாதிரி ஆகிடாதே! (35 வயசுக்கு மேல உள்ளவங்கள இளைஞர் அணில சேர்க்க மாட்டாராம்!) பட்டா already half century போட்டாரு, என்ன ஆகப்போகுதோ?///


  யோவ் இளைஞர் அணி அது இதுன்னு பட்டாஜியப் பத்தி அசிங்கமா ஏதாவ்து சொன்னீங்கன்னா அப்புறம் நடக்குறதே வேற! ராகுல்ஜிக்கே 40 வயசாச்சு!மன்மோகன் ஜிக்கு என்ன 70 வயசுதான் ஆகுது, அதுனால பட்டாஜிக்கு நோ ப்ராப்ளம்!

  ReplyDelete
 59. அதிகாரிகளின் ”நேர்மை” பிடிச்சிருக்கு!

  ReplyDelete
 60. சோனியா ஜி வாழ்க !
  ராகுல் ஜி வாழ்க !!


  இங்கனம்
  ராகுல் காந்தி
  இளைஞர் காங்கிரசு தலைவர்

  ReplyDelete
 61. ராம்சாமி, டி. வி. டி. வேணுமா இல்ல வேண்டாமா?

  ReplyDelete
 62. நாடு நன்றாக இருக்கிறது என்று தெரிகிறதல்லவா!

  ReplyDelete
 63. எங்கய்யா இந்த கழுத்துல கோவணம் கட்டின ஆள காணோம். சொந்தமா ப்ளாக் ஆரமிச்சதும் ஆளையே காணோம். தேடுங்க பாஸ்

  ReplyDelete
 64. கைத்தொலைபேசி, மடிக்கணனி, வாசனைத்ததிரவியங்கள், மதுவகைகள் மாயமாக மறைந்துவிடும்.///


  திரு பட்டாபட்டி அவர்கள் சமூகத்தாருக்கு
  உங்களுடைய தமிழ் சேவை எங்களை மெய்மறக்க செய்துவிட்டது , தாங்களது தமிழ் அறிவு செம்மொழியை வளர்க்க பாடுபட வேண்டும் என்றும் உங்களிடம் இருகரம் கூப்பி....கேட்டுகொள்கிறோம்

  ReplyDelete
 65. வால்பையன் said...

  சுவிஸ்ல இருக்குறதெல்லாம் கண்டுபிடிச்சு கொண்டு வந்துட்டா கூட தான் நல்லாயிருக்கும்! அதெல்லாம் ஏன் தோண மாட்டிகுது!///


  திரு வால்ஸ் அவர்கள் சமூகத்திற்கு ,
  நமது கண்ணியம் மிக்க காவல்துறை , தொலைந்து போன பொறுக்கலை மட்டுமே கண்டுபிடுத்து கொடுக்கும் , ஒழித்து வைக்கும் பொருட்களை அல்ல , நமது அரசும் அதை அனுமதிக்காது .

  ReplyDelete
 66. Arumaiyaana Pathivu! after a long time ungalidam irunthu!

  ReplyDelete
 67. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  எங்கய்யா இந்த கழுத்துல கோவணம் கட்டின ஆள காணோம். சொந்தமா ப்ளாக் ஆரமிச்சதும் ஆளையே காணோம். தேடுங்க பாஸ்////


  உனக்கு தெரியாதா ???
  செய்தி :::பெரியபாளையம் மாரியம்மன் கோவில் கூழ் ஊத்துரான்கலாம் , (இதுக்கு மேல கோமணம் எங்க போயிருக்குமுன்னு உனக்கு நான் சொல்லனுமா ??)

  ReplyDelete
 68. யோவ், க்ஞ்சம் பெரிய பெரிய ஆனியா நல்லா அடிச்சி வச்சைருங்காங்கயா, அத பிடிங்கிட்டு வரதுக்குள்ள மங்குனி என்னை பெரியபாளையத்துக்கெல்லாம் அனுப்பிருக்கு.( தக்காளி இன்னுரு ஜோக்ஸ் பதிவத்தான் போடனும்!!!)

  ReplyDelete
 69. அதானே பார்த்தேன், எவனோ பொது ஜனம் செல்லுதான் தாராந்து போச்சோன்னு.

  ReplyDelete
 70. கும்மாச்சி said...

  அதானே பார்த்தேன், எவனோ பொது ஜனம் செல்லுதான் தாராந்து போச்சோன்னு.///////////

  இருந்தாலும் நீங்க ரொம்ப நல்லவருங்க!!!!!!!!!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........

  ReplyDelete
 71. 50 ம் நானே 100 ம் நானே

  ReplyDelete
 72. என் செருப்பக் கழட்டி என் தலைலயே அடிச்சுக்கணும் சார்....

  :-(

  ReplyDelete
 73. அகல்விளக்கு said...

  என் செருப்பக் கழட்டி என் தலைலயே அடிச்சுக்கணும் சார்..../////


  நீங்க என்னா தப்பு பண்ணீங்க இப்படி ஒரு விரக்தி

  ReplyDelete
 74. மேல்தட்டு மக்களுக்கு மட்டும் இன்னும் வேகமாக கண்டுபிடித்து தருவார்கள் நீங்கள் போய் ஒரு புகார் கொடுத்துப்பாருங்கள் அப்ப தெரியும் என்ன நடக்கும்னு அங்க 15,000 என்ன லட்சம் மா இருந்தாலும் ம்கும் கிடைக்காது

  ReplyDelete
 75. இரண்டுநாள் என்பதே கொஞ்சம் அதிகம்தான்.. பட்டாபட்டி..! பணபலமும், பதவிபலமும் உள்ளவர்களுக்கு மட்டுமே இதெல்லாம் சாத்தியம். நண்பர் செந்தில்குமார் சொன்ன மாதிரி பொதுமக்கள் யாராவது இதுபோன்று புகார் கூறியிருந்தால் காற்றில பறக்கவிட்டு அடுத்தா.. ”அப்படியே ஒரு பேப்பர்ல எழுதிகுடுங்க.. கடைசியா யாருக்கிட்ட பேசுனீங்க.. அதுல எவ்வளவு பேலன்ஸ் இருந்தது.. இப்ப உங்ககிட்ட எவ்வளவு இருக்கு... (லஞ்சம்தான்) லொட்டு லொசுக்குனு கேள்விக்கேட்டு கடைசியா.. சரி பார்ப்போம்னு டாட்டா காட்டிதான் அனுப்புவாங்க..!

  ReplyDelete
 76. ஸ்டார்ட்டிங் நல்லாத்தான் இருக்கு.. ஆனா ஃபினிஷிங் டெர்ரரா இருக்கே பட்டாபட்டி... எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் பேக்கை சென்னைல லவட்டிட்டானுங்க... கேட்டதுக்கு மத்த மூணு பேக்தான் வந்துடுச்சே.. போவியான்னு சொன்னானுங்களாம்... ஹும்...

  ReplyDelete
 77. பாஸ் ..படிச்சிட்டு நல்லா திட்டலாமுன்னு பாத்தேன்..யாரையா உம்மைதான்யா...ஆனா தங்க தலைவர் (புண்ணாக்கு ) வருங்கால பிரதமர் ( விளக்கெண்ணெய் ) நம்பிக்கை நட்சத்திரம் ( கழுதை கெட்டா குட்டிசுவர் ) ராகுல் பேரை பாத்து கண் கலங்கிட்டேன்பா..!!

  வேற என்ன இத்தாலிக்கு சேவை செய்யதான நம்ம கவர்மெண்ட் இருக்கு. அதை போய் திட்டினா நா சும்மா இருப்பேனா ?

  ReplyDelete
 78. //வெள்ளையனிடம் வாங்கி..நேருவிடம் விற்றுவிட்டோம்..நம்மை...//

  இதுக்குதான் அத்வானி பாகிஸ்தான் போன போது ஜின்னா புத்திசாலின்னு பாராட்டிட்டு வந்தாரு..( வந்ததும் நல்ல ஆப்பு கிடைச்சது வேற விஷயம் )

  ReplyDelete
 79. @@@பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ஆமா அந்த போன்ல இருந்த கிளிப்புகள் CD கிடைக்குதாமே உண்மையா பாஸ்?//

  குட்டி என்னை மறந்துராதபா நா பக்கா தோஸ்த் உன்னோட , CD கிடைச்சா மறக்காம சொல்லு..ஹி..ஹி..

  ReplyDelete
 80. //15000 ரூபாய் செல்போனா இருந்தாலும் இவ்வளவுதூரம் விடாப்பிடியா புடிச்சிருக்காங்கன்னா, மேட்டர் என்னமோன்னு பட்சி சொல்லுதே?//

  புத்திசாலியா நீ ..மேட்டரை அழகா கவ்வி பிடிச்ச பாரு ...சும்மா நச்..

  ReplyDelete
 81. கைதொலைபேசி விலை 15 ஆயிரம் என்றாலும், அதில் இருக்கும் தகவல்கள் லீக் ஆனால் ஆபத்து என்பதற்காக 15 கோடி வரை கூட அரசு செலவு செய்யும்.

  :)

  ReplyDelete
 82. //அதனால மறக்காம . அடுத்த முறை ..என்ன பிரச்சனை என்றாலும்..அரசு அதிகாரிகளை தயங்காமல் அணுகவும்.. பிரச்சனைகள் புயல் வேகத்தில தீர்க்கப்படும்..//

  அரசு அதிகாரிகளின் கடமையுணர்ச்சி மெய்சிலிர்க்கச் செய்கிறது.

  கடைசி பஞ்ச் செம கலக்கல் நண்பா.

  ReplyDelete
 83. ///ஜெய்லானி said...
  @@@பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ஆமா அந்த போன்ல இருந்த கிளிப்புகள் CD கிடைக்குதாமே உண்மையா பாஸ்?//

  குட்டி என்னை மறந்துராதபா நா பக்கா தோஸ்த் உன்னோட , CD கிடைச்சா மறக்காம சொல்லு..ஹி..ஹி..///

  நம்ம கொல்லான் சாருதான் இந்த DVD ஹோல்சேல டீல் பண்ணிக்கிட்டு இருக்காரு, எனக்கு ஒரு காப்பி சொல்லியிருக்கேன், உங்களுக்கும் சேத்து சொல்லிட்டாப் போச்சு!

  ReplyDelete
 84. நம்ம கு.மு.க சார்பா ராகுல்ஜிக்கு ஏதாவது விருது கொடுத்தா என்ன ஜெய்லானி? சீக்கிரம் முடிவு பண்ணுங்கப்பா! (நாங்கள்லாம் இந்தி படிக்க ஆரம்பிச்சுட்டோம், ஏக் காவுன் மே......*!@#^%!...!)

  ReplyDelete
 85. இப்பிடி ஆள் இல்லாத கடைல டீ ஆத்துறதே என் வேலையா போச்சு!

  ReplyDelete
 86. ///கோவி.கண்ணன் said...
  கைதொலைபேசி விலை 15 ஆயிரம் என்றாலும், அதில் இருக்கும் தகவல்கள் லீக் ஆனால் ஆபத்து என்பதற்காக 15 கோடி வரை கூட அரசு செலவு செய்யும்.

  :)///

  ஆபத்து? அடடா இப்பிடி ஒரு ஆங்கிள்ல நாம பாக்க வுட்டுட்டோமே, சீனியர் சீனியர்தான்!

  ReplyDelete
 87. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  இப்பிடி ஆள் இல்லாத கடைல டீ ஆத்துறதே என் வேலையா போச்சு!///

  நீ ரொம்ப நல்லவன் பண்ணி

  ReplyDelete
 88. கொல்லான் said...
  //ஒரு போனையே ஒழுங்கா வசிக்க தெரியாதவன் இந்த நாட்டையா ஒழுங்கா வச்சிருக்க போறான் ??//
  இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்.
  //


  வெறுத்துப்போயிட்டீங்க போல...

  ReplyDelete
 89. @பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஆமா திருடுன ஆளு இப்போ எங்கே இருக்காரு? (கேசு போட்டங்களா இல்ல விட்டுட்டாங்களா?)
  //

  டேபுளுக்கு கீழயே முடிச்சிட்டாங்க

  ReplyDelete
 90. @ILLUMINATI said...
  யோவ் பட்டு,இப்ப தான்யா பழைய மாதிரி போஸ்ட் போட்டு இருக்கீர்.நடத்தும் ஓய்.நானு ஒரு ஓரமா நின்னு வேடிக்கை பாக்குறேன். :)
  ஆமா சின்ன பசங்க எல்லாம் உள்ளுக்க சேப்ப இல்ல? :)
  //

  ஆமாமா..

  ReplyDelete
 91. @கடல்புறா said...
  அப்போ அநேகமா ஏதும் வீடியோ எதிர் பாக்கலான்னு சொல்லுக
  //

  இதுக்கெ வராது சார்.. ஏன்னா..ராணுவம் அவனுக கையில.

  ReplyDelete
 92. @Jey said...
  அட தக்காளி, நானும் படிச்சென் இந்த நூச, சும்மா ஹெட் லைன் படிச்சிட்டு போயிட்டென், மக்கா உனக்கு மட்டும் எப்படியா இந்த மாதிரி ஆங்கில்ல ரோசனை தோனுது??...( சரி சரி கடா வெட்டுரதையே தொழிலா வச்சிருக்கிரவங்களுக்கு இதெல்லாம் சாதரணமப்பா)
  இனிமே எந்து ஏதவது காணாம போன இதெ மாறி கம்ப்ளயிண்ட் பண்றேன்( உன் பேச்ச தட்ட முடியுமா பட்டா)

  //

  அழகு என்பது எதில உள்லது..பார்க்கும் பார்வையில்..ஹி..ஹி

  ReplyDelete
 93. @முத்து said...
  நம்ம போலீசார் இவ்வளவு ஸ்பீடான்னு
  நினைச்சேன்,கொய்யாலே பின்னாடி தான் எதுக்குன்னு தெரியுது.இந்த நாடு திருந்துமுன்னு நினைக்கிற
  //

  எதுக்கு திருந்தனும்?

  ReplyDelete
 94. Phantom Mohan said...
  Mr . பட்டா,
  உங்கள் பதிவுக்கு Dr .மன்மோகன் சிங் இப்பொழுது பதிலளித்துள்ளார்.
  "ஒரேயடியாக மக்களுக்கு சலுகைகள் வழங்க முடியாது"
  புரிஞ்சதா நல்லா அழுத்திப் படிங்க மக்களுக்கு மக்களுக்கு.....
  ராகுல் என்ன மக்களா?
  //


  சாதாரண மக்களுக்கும்.தெய்வப்பிறவிகளுக்கு வித்தியாசம் இருக்குல்ல..
  ஆமா.ராகுலக்கு எவ்வளவுப்பா?ஹி..ஹி

  ReplyDelete
 95. @ஜில்தண்ணி - யோகேஷ் said...
  சோனியா ஜி வாழ்க !
  ராகுல் ஜி வாழ்க !!
  இங்கனம்
  ராகுல் காந்தி
  இளைஞர் காங்கிரசு தலைவர்
  //


  உம். சரி..சரி..வாழ்க..வாழ்க..

  ReplyDelete
 96. @DrPKandaswamyPhD said...
  நாடு நன்றாக இருக்கிறது என்று தெரிகிறதல்லவா!
  //

  அதுகென்ன சார்..சூப்பரா இருக்கு..

  ReplyDelete
 97. @மங்குனி அமைச்சர் said...
  கைத்தொலைபேசி, மடிக்கணனி, வாசனைத்ததிரவியங்கள், மதுவகைகள் மாயமாக மறைந்துவிடும்.///
  திரு பட்டாபட்டி அவர்கள் சமூகத்தாருக்கு
  உங்களுடைய தமிழ் சேவை எங்களை மெய்மறக்க செய்துவிட்டது , தாங்களது தமிழ் அறிவு செம்மொழியை வளர்க்க பாடுபட வேண்டும் என்றும் உங்களிடம் இருகரம் கூப்பி....கேட்டுகொள்கிறோம்

  //

  அப்பாடா...ஒரு வழியா என்னைய முடிக்க மங்குனி ரெடியாயிட்டான்..

  ReplyDelete
 98. @vinothamanavan said...
  Arumaiyaana Pathivu! after a long time ungalidam irunthu!
  //

  வாங்க பாஸ்.. என்ன புது பதிவ போடாம இருக்கீங்க..வேலை அதிகமா?

  ReplyDelete
 99. @கும்மாச்சி said...
  அதானே பார்த்தேன், எவனோ பொது ஜனம் செல்லுதான் தாராந்து போச்சோன்னு.
  //

  ஓ..திருந்திட்டானுகனு நினைச்சீங்களா?..டமாசு சார்..

  ReplyDelete
 100. @அகல்விளக்கு said...
  என் செருப்பக் கழட்டி என் தலைலயே அடிச்சுக்கணும் சார்....
  :-(
  //

  எதுக்கு பாஸ்..கொஞ்ச நாள் பொறுங்க..பிரதமர் ஆனதும் அடிச்சிடலாம்..

  ReplyDelete
 101. @செந்தில்குமார் said...
  மேல்தட்டு மக்களுக்கு மட்டும் இன்னும் வேகமாக கண்டுபிடித்து தருவார்கள் நீங்கள் போய் ஒரு புகார் கொடுத்துப்பாருங்கள் அப்ப தெரியும் என்ன நடக்கும்னு அங்க 15,000 என்ன லட்சம் மா இருந்தாலும் ம்கும் கிடைக்காது
  //

  அப்பா..இல்ல அம்மா ஆட்சிப்பொறுப்பில் இருக்கனும் சார்.. இது நம் பெற்றொர்கள் பிரச்சனை..ஹி..ஹி

  ReplyDelete
 102. @பிரவின்குமார் said...
  இரண்டுநாள் என்பதே கொஞ்சம் அதிகம்தான்.. பட்டாபட்டி..! பணபலமும், பதவிபலமும் உள்ளவர்களுக்கு மட்டுமே இதெல்லாம் சாத்தியம். நண்பர் செந்தில்குமார் சொன்ன மாதிரி பொதுமக்கள் யாராவது இதுபோன்று புகார் கூறியிருந்தால் காற்றில பறக்கவிட்டு அடுத்தா.. ”அப்படியே ஒரு பேப்பர்ல எழுதிகுடுங்க.. கடைசியா யாருக்கிட்ட பேசுனீங்க.. அதுல எவ்வளவு பேலன்ஸ் இருந்தது.. இப்ப உங்ககிட்ட எவ்வளவு இருக்கு... (லஞ்சம்தான்) லொட்டு லொசுக்குனு கேள்விக்கேட்டு கடைசியா.. சரி பார்ப்போம்னு டாட்டா காட்டிதான் அனுப்புவாங்க..!
  //

  உண்மைதான் பிரவின்.. இதனுடைய தொடர்சியை காண..எதுக்கும் என்னுடன் இணைந்திருங்கள்..ஹி.ஹி

  ReplyDelete
 103. Soonya said...
  ஸ்டார்ட்டிங் நல்லாத்தான் இருக்கு.. ஆனா ஃபினிஷிங் டெர்ரரா இருக்கே பட்டாபட்டி... எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் பேக்கை சென்னைல லவட்டிட்டானுங்க... கேட்டதுக்கு மத்த மூணு பேக்தான் வந்துடுச்சே.. போவியான்னு சொன்னானுங்களாம்... ஹும்...
  //


  சாதாரண ஓட்டு போடறவரா இருந்திருப்பாரு உங்கள் நண்பர்..

  ReplyDelete
 104. @ஜெய்லானி said...
  பாஸ் ..படிச்சிட்டு நல்லா திட்டலாமுன்னு பாத்தேன்..யாரையா உம்மைதான்யா...ஆனா தங்க தலைவர் (புண்ணாக்கு ) வருங்கால பிரதமர் ( விளக்கெண்ணெய் ) நம்பிக்கை நட்சத்திரம் ( கழுதை கெட்டா குட்டிசுவர் ) ராகுல் பேரை பாத்து கண் கலங்கிட்டேன்பா..!!
  வேற என்ன இத்தாலிக்கு சேவை செய்யதான நம்ம கவர்மெண்ட் இருக்கு. அதை போய் திட்டினா நா சும்மா இருப்பேனா ?

  //


  ஆகா..

  ReplyDelete
 105. கோவி.கண்ணன் said...
  கைதொலைபேசி விலை 15 ஆயிரம் என்றாலும், அதில் இருக்கும் தகவல்கள் லீக் ஆனால் ஆபத்து என்பதற்காக 15 கோடி வரை கூட அரசு செலவு செய்யும்.

  :)

  //

  நல்லவேளை சார்.. இதுக்கு ராணுவத்தை அனுப்பாம விட்டாங்க..

  ReplyDelete
 106. @செ.சரவணக்குமார் said...
  //அதனால மறக்காம . அடுத்த முறை ..என்ன பிரச்சனை என்றாலும்..அரசு அதிகாரிகளை தயங்காமல் அணுகவும்.. பிரச்சனைகள் புயல் வேகத்தில தீர்க்கப்படும்..//
  அரசு அதிகாரிகளின் கடமையுணர்ச்சி மெய்சிலிர்க்கச் செய்கிறது.
  கடைசி பஞ்ச் செம கலக்கல் நண்பா.
  //

  நன்றி பாஸ்..

  ReplyDelete
 107. @பித்தனின் வாக்கு said...
  hai patta how are you?
  //

  இது நம்ம பித்தன் சார் மாறீயே இருக்குள்ள மங்குனி..
  சீக்கிரம் அவரு அடுத்த பதிவ போடுவதற்க்குள்...பேசினபடி..அவரோட ப்ளாக்கை விற்றுவிடலாம்
  க்யூக்...வேலை ஆகட்டும்..


  //

  @பித்தன் சார்...ஆள் இருக்கீங்களா?..
  இல்ல கலைஞர்கூட கேர்ந்துட்டீங்களா?..சத்தமே காணோம்?...

  ReplyDelete
 108. எங்க வீட்டுல இருந்த டப்பா போன் காணாம போச்சு. பக்கதுல இருந்த போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் குடுத்தா கண்டுக்கவே இல்ல. என்ன பண்ணலாம் பாஸ் ?

  ReplyDelete
 109. ℛŐℳΣŐ ♥ said...

  எங்க வீட்டுல இருந்த டப்பா போன் காணாம போச்சு. பக்கதுல இருந்த போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் குடுத்தா கண்டுக்கவே இல்ல. என்ன பண்ணலாம் பாஸ் ?///////////


  அந்த டப்பாக்குள் பாம் இருக்குன்னு சொல்லுங்க அப்புறம் பாருங்க வேகத்தை,ஆனால் பின்விளைவுக்கு நான் பொறுப்பு இல்லை

  ReplyDelete
 110. அவுங்க‌ளுக்குன்ன‌ தேடிக்குடுப்பாங்க‌,
  ந‌ம்ம‌ட்ட‌ன்ன‌ புடுங்க்கிக்கிருவாங்க‌.

  ReplyDelete
 111. ///முத்து said...
  ℛŐℳΣŐ ♥ said...

  எங்க வீட்டுல இருந்த டப்பா போன் காணாம போச்சு. பக்கதுல இருந்த போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் குடுத்தா கண்டுக்கவே இல்ல. என்ன பண்ணலாம் பாஸ் ?///////////


  அந்த டப்பாக்குள் பாம் இருக்குன்னு சொல்லுங்க அப்புறம் பாருங்க வேகத்தை,ஆனால் பின்விளைவுக்கு நான் பொறுப்பு இல்லை///

  அப்புறம் நம்மல்லாம் அவரைத் தேட வேண்டியிருக்கும்!

  ReplyDelete
 112. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அப்புறம் நம்மல்லாம் அவரைத் தேட வேண்டியிருக்கும்!////

  எதுக்கு தேடிக்கிட்டு,வேலூர்,இல்லை சென்ட்ரல் போய் பார்த்தால் இருக்க போறாரு

  ReplyDelete
 113. @♥ ℛŐℳΣŐ ♥ said...
  எங்க வீட்டுல இருந்த டப்பா போன் காணாம போச்சு. பக்கதுல இருந்த போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் குடுத்தா கண்டுக்கவே இல்ல. என்ன பண்ணலாம் பாஸ் ?
  //

  வாஸ்த்துக்காக பேரை மாற்றீ பாருங்க பாஸ்..(♥ ℛŐℳΣŐ ♥ )...
  ஆமாங்க.. இது என்னா மொழி?

  ReplyDelete
 114. @Blogger vasan said...
  அவுங்க‌ளுக்குன்ன‌ தேடிக்குடுப்பாங்க‌,
  ந‌ம்ம‌ட்ட‌ன்ன‌ புடுங்க்கிக்கிருவாங்க‌.
  //

  ஏன்னா..நாம பொதுஜனம் பாஸ்...

  ReplyDelete
 115. @முத்து said...
  அந்த டப்பாக்குள் பாம் இருக்குன்னு சொல்லுங்க அப்புறம் பாருங்க வேகத்தை,ஆனால் பின்விளைவுக்கு நான் பொறுப்பு இல்லை
  //

  நீர் போதுமய்யா...
  விளக்கு வைக்க..ஹி..ஹி

  ReplyDelete
 116. நல்ல பதிவு

  http://adisuvadu.blogspot.com/2010/06/blog-post_27.html

  ReplyDelete
 117. முனியாண்டி said...

  நல்ல பதிவு

  http://adisuvadu.blogspot.com/2010/06/blog-post_27.html
  //

  வாங்க பாஸ்...நன்றி

  ReplyDelete
 118. நான் நலம் , நீங்களும், உங்க சமூகமும் நலமா?. சரக்கு வாங்க சாப்பிங் போயிருக்குரீகளா?( நான் புது பதிவ பத்தி சொன்னேன்.)

  ReplyDelete
 119. Jey said...

  நான் நலம் , நீங்களும், உங்க சமூகமும் நலமா?. சரக்கு வாங்க சாப்பிங் போயிருக்குரீகளா?( நான் புது பதிவ பத்தி சொன்னேன்.)
  //


  ஆணி முதலாளி..ஆணி..

  படியளக்கும் பகவான் பட்டக்ஸ் பின்னாடி நின்னு வேலை வாங்குறான்...

  மெதுவா வாரேன்...

  ReplyDelete
 120. ராகுல் சோனியாவிடம்:

  "நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்.
  ஆனால் வாய்தான் காதுவரை இருக்கிறது."

  ReplyDelete
 121. ராகுல் வீட்டு நாய்குட்டி காணோம்னாலும் நாட்டின் சொத்த வித்தாவது கண்டிபிடிச்சிகொடுத்துடுவாங்க நம்ம கடமை தவறாத காக்கி சட்டைங்க ...

  பட்டாபட்டிக்கு குசும்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்போல....வாழ்க...!

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!