Pages

Saturday, February 27, 2010

சதம் அடிச்சாச்சு.. ..வெற்றி..வெற்றி..

இன்று எமது ஆசான் "எழுத்துலகச் சக்ரவர்த்தி சுஜாதா " அவர்களின் நினைவு நாள்...
அவர் நினைவு நாளில்,  அவர் நினைவாக , எனது 100வது பதிவை வெளியிடுகிறேன்..

நன்றி..
.
.
.

விளையாட்டுத்தனமா ஆரம்பிச்சு ....இதோ  100வது பதிவைப் போட்டாச்சு ..

அப்படியே கொஞ்சம் திரும்பி ( மெதுவா ஸ்லோமோஷன்ல சார்..) ,  கடந்து வந்த பாதையைப் பார்த்தால் ,  ரொம்பவும்  மலைப்பாயிருக்கு சார்..

அதுவரை வந்து , " குட்டி , கொட்டி , அணத்து , துவைத்து ",
என்னை வழிப்படுத்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி...


நான் " எழுதியது மற்றும்,எழுதப்போவது " ,  யார் மனதையும் புண்படுத்தவோ , இல்லை  காயப்படுத்தவோ இல்லை...

என்னோட ஆதங்கத்தை ,சில சமயங்களில் ஆனந்தத்தை ( கண்டிப்பா ஆணவத்தை இல்லை சார் ).... பதிவின் மூலம் வெளிப்படுத்திகிறேன்..அவ்வளவுதான்..
( என்ன சில சமயம் ரொம்ப பீறிட்டு வந்துடுது சார்...என்ன பண்றது.. )

.
அப்புறம் முக்கியமா இதுவரை என்னை ரசிக்கவைத்த , சிரிக்கவைத்த  , சிந்திக்கவைத்த

 • அண்ணாமலையான் ( நம்ம விவேகானந்தர் )
 • அதே கண்கள் -  (பங்காளி  டவுசர் பாண்டி )
 • கிறுக்கல் பக்கங்கள் ( மசக்கவுண்டர்.. இப்பத்தான் வண்டிய ஸ்டார்ட் பண்ணியிருக்கார் )
 • கும்மாச்சி அண்ணன் ( வெரைட்டி மன்னன்.. )
 • சாமக்கோடங்கி ...(எங்க  ஊர்கார பய புள்ள.. அவரோட 'கார்பன் சுவடுகள்' படிச்சுப் பாருங்க..  )
 • சி @ பாலாசி...( நல்ல மனுசர்.ஈரோடுக்காரர்.. .இப்ப வருவதில்லை )
 • சேட்டைக்காரன் ( நிசமான சேட்டை வாலு..நாளோரு பதிவு..பொழுதொரு பின்னூட்டம் )
 • ஜெய்லானி ( பின்னூட்டப் புயல்.. )
 • தண்டோ....ரா.. ..( அடிங்க சார்...)
 • திசை காட்டி ( ரோஸ் விக்கு.. நல்ல கருத்துக்களை பதிப்பவர் )
 • பலா பட்டறை ( சங்கர் ...டைமிங்கா நக்கல் அடிப்பவர்..)
 • பித்தனின் வாக்கு ( சிங்கை மன்னர்.. )
 • மங்குனி அமைச்சர் ( Trainee.. ஆனா எப்ப ஆட்சியப் பிடிக்குமுனு தெரியல)
 • யூர்கன் க்ருகியர் ( எப்போ , எப்படி , எதுல வருவாருனே தெரியல..)
 • ரெட்டைவால்ஸ்.. ( குசும்புலகத் திலகம்.. )
 • வெளியூர்காரன். ( இது யாரப் பாத்தாலும் போட்டு தள்ளிடும்.. எதுக்கும் மூஞ்சிய மறைச்சிகிட்டு போங்க )
 • எண்ணத்தை எழுதுகிறேன்...( பிரபாகர்.. சமீபமா வருவதில்லை..)
 • சைவகொத்துப்பரோட்டா..( அசைவமா ஆகிவிடுவார் சீக்கிரம்.. எங்ககூட சேர்ந்தா ?)
 • சொல்லத்தான் நினைக்கிறேன்...( கண்ணகி.. பயபுள்ளைக ஆடுன ஆட்டத்திலே , Work permit -ட கேன்ஷல் பண்ணிட்டாங்க)
 • இலுமினாட்டி ( ஆங்கில நாயகன்..சொல்லிச்சொல்லி தமிழ்ல ஏழுதுகிறார்)
 • அப்பாவி (  இவரா அப்பாவி.. ஊகூம்..)
 • முத்து ( பிரெஞ் குடிமகன் ?..இருக்கீங்களா)
 • எங்கள் ப்ளாக் (  ஸ்ரீராம்.)
 • பார்வையில் (ராஜ நடராஜன்.. காணாவில்லை.. கண்டுபிடித்து தருபவர்களுக்கு 10 ஒட்டகம் )    
 • பின்னூட்டமிடாமல் , Window shopping செய்துவிட்டுப் போகும் மற்றவர்களுக்கும்
 • விடுபட்ட வலைப்பதிவர்களுக்கு( மன்னிச்சுக்கோங்க சாமிகளா..) 
 •  மற்றும் ,என்னுடன் பணியாற்றும்/பணியாற்றிய ரமேஸ் , காமா , சாமி , சம்பத்,மனிதன்
அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்..
ஏப்ரல் 10 .... என்னா விசேசமா?..
அன்னைக்குத்தான் , பட்டாபட்டி ஒரு பெரிய முடிவை எடுக்கப்போறான்..
என்ன முடிவுனு ஓரளவுக்கு தெரிஞ்சு வைத்திருப்பீர்கள்..( நீங்க யார் சார்.?. பட்டாபட்டியவே   படிக்ககிறீங்கனா, உங்களுக்கு புரியாம யாருக்குத்தான் புரியும்   )

என்ன முடிவு வந்தாலும், நான் சந்தோசமா ஏற்றுக்கொள்கிறேன்...
.( சில பெயர்கள் விடுபட்டு இருக்கலாம்..அவர்கள்,  தயவு செய்து கோபப்படாமல் ,
என்னை மன்னித்துவிடுங்கள்..எப்படியும் உங்களை தொடர்பு கொள்வேன்.)

.

Friday, February 26, 2010

போட்டோ காமெடி - 11...

//
kamma சொன்னது...
    அப்புறம்.. கஸ்மாலம்... "யூஸ் பண்ணனுன டிஸ்யூ பேப்பர்ல",  ந்னு என்னமோ சொல்லியிருக்கே?    அந்த பேப்பரு! கர்மம்... கர்மம்.... உனக்கு எங்கய்யா பொகுது புத்தி?
 லவலேசமும் லஜ்ஜை இல்லே வுனுக்கு....

    நீ அந்த பதிவுல ,  படம் ஒண்னு போட்டிருக்கே பாரு..... நீ காட்டுலே பீடி குடிச்சிட்டே கதை  புஸ்தகம்   படிச்சிகிட்டே பேண்டுட்டு  இருக்கற மாதிரி... நல்ல ரசனைய்யா வுனக்கு............
    சில பேருக்கு ஐடியாவயே அங்கிருந்து தா வருமாமா?  வுனக்கும் அப்பிடித்தாமன் போல!
//


அருமை அண்ணன் 'காமா' ( காமன் மேனாமா...!!) அவர்கள்
என்னைப்பற்றி பெருமையாக பின்னூட்டமிட்ருந்தார்..

அவருக்கு,  பதில் கைமாறு செய்யாவிட்டால் , 'பட்டாபட்டியாரின்' ( அட நாந்தான்.. )
பெருமை காற்றில் பறந்துவிடும் என்பதால்,  அவர்   , மின்னஞ்சலில் அனுப்பி வைத்த படத்தை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்

பய புள்ள , என்னோட 'உக்காந்திட்டு, லெட்டர் படிக்கிற',  போட்டோவை
கிழி கிழி-னு கிழிச்சதாலே, அன்புத் தம்பியின்,  பரிசு இது ...ஹா..ஹா
.
.
.
தாய் குலங்களே......
கூடி நின்று குமற வேண்டுமா?
குலவையிட வேண்டுமா...?
கொத்து புரோட்டா  (அ)   கறி  செய்ய பழகவேண்டுமா?
அணுகுங்கள் அண்ணன் 'கமா'வை...

( குஷ்பு மேட்டருக்கு வரிந்துகட்டிட்டு வந்தீங்க இல்ல...
அதனால,  எதுனாலும் அண்ணனை கேளுங்க...)
'Bar' - அப்படினு சொன்னா , ஆண்/பெண் மனதில் உடனடியாக தோன்றுவது...

 சே.. வடை போச்சே...
நம்ம பதிவப் படிக்கிற தாய்குலங்கள் கம்மி..
ஒண்ணு , ரெண்டு பேரு தப்பி வந்தவங்களை ,
இந்த நாதாரிகள் போட்ட போடுல ,   ' காணோம் '   என  உளவுத்துறை
ரிப்போர்ட் சொல்லுது ..ம்....

அதனால , போயி அடுத்த பதிவுக்கான  பொழப்ப பாரு...
வரட்டா......
.
.
.


சாரி சார்.. இது எனக்கு.....

( பட்டாபட்டி.  பழச மற............
அடுத்தது உன்னோட  100வது பதிவு...
ரொம்பத்தான் கிழிச்சுட்டனு தலை கனத்தில ஆடாம ,
யாராருக்கு  சொல்லனுமோ , அவங்களுக்கு ஒரு நன்றியப் போட்டுட்டு ,
Poll ரிசல்ட்க்காக வெயிட் பண்ணு....)
.
.
.
.

Wednesday, February 24, 2010

அடப்பாவிகளா.. இப்படிகூட இருக்கா?

ரொம்ப நாள் கழிச்சு நண்பர் ஒருவரை, 'லிட்டில் இந்தியாவில்'   பார்க்க நேர்ந்தது..    பீர் சாப்பிட்டுட்டுதான் போகனுமுனு ஒரே அடம் சார்..
"யோவ்.. நான் நல்ல பையனாயிட்டேன்",    சொன்னாலும் கேட்காம சீனக் கடைக்கு கூட்டிட்டு   போயிட்டான்.

(  நண்பர் பேரு வேண்டாமே சார்.. பின்னாடி என்னைய யாருனு தெரியாது சொல்லிட்டா,   மனசு கஷ்டமாயிடும்.. அதனால மிஸ்டர் எக்ஸ் -னு நினச்சுக்கோங்க .....ப்ளிஸ்....)

அப்போது ஒரு சீனர்.. தாத்தா வயசு இருக்கும் சார்.. நல்லா பேண்ட் , சர்ட் போட்டுட்டு   ரீஜண்டா, பீர் குடுச்சுட்டு இருந்தார் ..

நாங்க போயி பக்கத்து டேபிள்ல உக்கார்ந்து பீர் ஆர்டர் செஞ்சுட்டு,  எப்போதும்போல
 • நாட்டு நடப்பு,
 • ஊத்திகிட்ட படங்கள்,
 • ஊத்தப்போற படங்கள்,
 • அடுத்தவன் காலை வாரிவிடுவது நல்லதா/கெட்டதா?,
 • விஜய்/அஜீத் யாரோடது படம் ஹிட்,
 • ஏறிப்போற ஏணியா?, இல்ல... எட்டி மிதிக்கிற சாணியா இருக்கணுமா?
அப்படினு தலையால பிரச்சனைய பற்றி பேசிட்டு இருந்தோம்..

கொஞ்ச நேரம் ஆயிருக்கும் சார்..தண்ணி உள்ள போயிட்டா , எல்லோருமே சொந்தக்காரங்கதானே..( சீனனாவது , மலாய்காரனாவது )
சன்னமா, பக்கத்திருந்த பெருசப் பார்த்து சிரித்தோம்..

அவரும் எங்களைப் பார்த்து சிரிச்சுகிட்டே சீன பாஷையிலே என்னமோ சொன்னார்..     நமக்கு தான் எல்லா பாஷையும் தெரியுமே.......
நாய் வாய் வெச்சமாறி சார்......... ( எல்லாமே அரைகுறை........ இன்னும் .புரியாதவங்க, என்னோட  மெயில் ஐடீக்கு , தட்டிவிடுங்க... சொல்றேன் .)
அப்படியே பேச்சு கொடுத்தேன்..( சீன பாஷையில தான் .. ஹி..ஹி )

பார்த்தா, பெருசு சீன ஆயுர்வேதிக் டாக்டராம்..
என்னடா, டாக்டராயிருந்துட்டு , தண்ணி அடிக்கிறீங்கனு கேட்டா பெருசு நக்கலா சிரிக்குது..

நண்பருக்கு டர்ர்ர்ர்ர் ஆயிடுச்சு..... அவசரமா என்னைய சொறிஞ்சு , அவரை கலாயிக்கலாமானு கேக்கிறான்..  என்ன பிரச்சனைனா , நண்பருக்கு சீனம் தெரியாது.. பெருசுக்கு ஆங்கிலம் அவ்வளவா வராது..

நண்பர் உணர்சிவசப்பட்டு , நான் உங்கிட்ட ஆங்கிலத்திலே சொல்றேன்..
நீ அதை  அவர்கிட்ட சீனத்தில கேட்டு பதில் சொல்லுனு சொன்னான்..

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது அப்பதான் சார் புரிஞ்சது...
அவனுக்கும் தமிழ் தெரியும்.. எனக்கும் தமிழ் தெரியும்..

நாதாரி..ஆங்கிலத்திலே கேட்கிறானாமா.. ஆங்கிலத்தில....

அப்புறம் நடந்த உரையாடலை தமிழ்படுத்தி கொடுத்துள்ளேன்..நீங்களே பாருங்க...

சார்.. குடிப்பது, அசைவம் , சைவம் பற்றி என்ன நினைக்கிறீகள்.. குடி உடம்புக்கு கெடுதலா..?
வெஜிடேரியன் உடம்புக்கு நல்லதுதான்.. உடம்பை ஈஸியா வைத்திருக்க உதவும்..  அதனாலதான் டெய்லி பீர் குடிக்கிறேன்...

ஆல்கஹால்தான் உடம்புக்கு கெடுதல்தானே சார்.
இல்லை..இல்லை.. வைன் எதுல இருந்து தயாரிக்கறாங்க.. பழங்கள்தானே..
பிராண்டி, சுத்திகரிக்கப்பட்ட வைன்ல இருந்து வருவது..
பியர் பார்லியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.. அப்புறம் என்ன கெடுதல்? ...

சார்.. இதய ஆரோக்கியப் பயிற்சிகளால், வாழ் நாள் அதிகரிக்கும் என்கிறார்களே..  அது உண்மையா ?.
ஒரு கார் -னு எடுத்துகிட்டா , அதில இஞ்சின் என்பது இதயம்..
கார் தயாரித்தவங்க என்ன சொல்றாங்க?..நார்மல் கண்டிஷன்ல , இஞ்சின் 100,000 கி.மீ.. பிரச்சனியில்லாமல் ஓடும்..

உடற்பயிற்சி என்பது, இதயத்துடிப்பை அதிகரிப்பது....
உதாரணத்துக்கு , உங்கள் கார் இஞ்சின் வேகமாக ஓடினால் , இஞ்சின் ஆயுட்காலம் நீடிக்குமா அல்லது
குறையுமா?.

100,000 கி.மீ நீங்க 20 வருசத்திலையும் ஓட்டலாம்.. அல்லது 40 வருடம் வரையும் ஓட்டலாம்..
எது என முடிவு செய்ய வேண்டியது நீங்கதான்..
அதனால் , நேரம் கிடைக்கும்போது நிம்மதியாகத் குட்டி தூக்கம் போடுங்கள்..

இந்த Body / Fat ratio .. அதைபற்றி விளக்கமுடியுமா?
இப்போ உங்களுக்கு ஒரு Body , அதில் FAT இருந்தால் 1:1
அப்படியில்லாம , ரெண்டு Body இருந்தால் 2:1.. etc..

சார். இந்த பொறித்த (பிரை) பண்ணிய உணவுகளை சாப்பிடக்கூடாதுனு சொல்றாங்களே..
தம்பி....பிரை, எதில் பண்றாங்க?.. வெஜிடபிள் ஆயில்ல..
அப்படினா நீங்க ரொம்ப வெஜிடபிள் சாப்பிடுகிறீர்கள்...அது நல்லதுதானே....

Sit-Ups செய்தால் வயிறு குறையும் என்ற கருத்து....
தவறான கருத்து..
உடற்பயிற்சி செய்தால் உங்கள் தசை பெரிதாகும் என்பது எல்லோருக்கும் தெரியும்..   உங்களுக்கு வயிறு வேண்டுமென்றால் Sit-Ups செய்யலாம்.. தவறில்லை..

சாக்லெட் கெடுதலா?
சாக்லெட் ..ம்.. "Cocoa Beans"ல இருந்து சாக்லெட் செய்யறாங்க .. அதுவும் ஒரு வெஜிடபிள்..  எனக்கு தெரிந்து, உலகத்திலேயே சிறந்த உணவு சாக்லெட்தான்..

உடம்பை அழகாக வைத்திருக்க நீச்சல் நல்ல உடற்பயிற்சியா டாக்டர்?..
சரி.. நீச்சல் உடம்பை அழகாக வைத்திருக்க உதவுமெனில் , திமிங்கலத்தின் உடம்பை பற்றி எனக்கு கூறுங்களேன்...

உடம்பை Shape - ஆக வைத்திருப்பது , வாழ்க்கைக்கு உதவுமா?
Round-ம் ஒரு Shape தானே தம்பி...
அந்தகாலத்து ஆளுக எல்லாம் உங்கள கெடுத்து வைத்திருக்கிறார்கள்..

பிறந்து , வளர்ந்து , கடைசியில் இறப்பது வரை , அது ஒரு நெடிய, வாழ்க்கை பயணம்..

ரோலர் கோஸ்டரில், ' A , B  ' ரெண்டுபேரு பயணம் செய்கிறர்கள் என வைத்துக்கொள்வோம்..
பயண முடிவுல
A- தலை கலையாமல், சட்டை கசங்காமல் , பயணத்தை முடிக்கிறார்.
B- தலை கலைந்து , சட்டை மேலேறி.. அட....,ஒரு பைத்தியகாரன் போல
இறங்குகிறான்..

யார் பயணத்தை அனுபவித்தது ... A-யா B-யா ?..யோசனை பண்ணுங்க...

நல்ல உடம்பை மெயின்டெயின் பண்ணி , அழகாக சுடுகாட்டுக்கு செல்வதா?

இல்லை

நல்லா தண்ணியாடிச்சுட்டு ,கை, கால்ல காயம் பண்ணிகிட்டு, தலையிலே பாதி முடி காணாம போயி,   வாழ்க்கைய அனுபவிச்சுட்டு , வெற்றி , வெற்றி கத்திகிட்டு சுடுகாட்டுக்கு செல்வதா?

சிந்தியுங்கள் மக்களே..


அப்பாடா..
பெருசு ஒரு வழியா பேசி முடிக்கவும் , எங்க பியர் முடியவும் சரியாயிருந்தது..
ஆனா ஒண்ணு பட்டும் சார்..


கடைசியா சொன்னாரு பாருங்க...

 • ஜப்பாங்காரங்க குறைவான FAT எடுத்துக்கிறாங்க..அதனால ஹார்ட் அட்டாக் வருவது,  அமெரிக்கனைவிட கம்மி..
 • மெக்சிகன் அதிகமான FAT எடுத்துக்கிறாங்க..ஆனாலும் ஹார்ட் அட்டாக் வருவது,  அமெரிக்கனைவிட கம்மி..
 • சீனனுக  குறைவான Wine குடிக்கிறாங்க..அதனால ஹார்ட் அட்டாக் வருவது,  அமெரிக்கனைவிட கம்மி..
 • இத்தாலிகாரனுக அதிகமான Wine எடுத்துக்கிறாங்க..ஆனாலும் ஹார்ட் அட்டாக் வருவது,  அமெரிக்கனைவிட கம்மி..
 • ஜெர்மங்காரனுக அதிகமான BEER எடுத்துக்கிறாங்க..ஆனாலும் ஹார்ட் அட்டாக் வருவது,  அமெரிக்கனைவிட கம்மி

இதிலிருந்து என்ன தெரியுது?.. பெருசு எங்களை கேட்குது..
எங்களுக்கு Confuss ஆயிடுச்சு.

எங்க மூஞ்சி இஞ்சி தின்ன குரங்கு மாறி மாறுனதாலே , பெருசே பதிலையும் சொல்லிடுச்சு..

என்னவா ?

நல்லா குடி.. நல்லா தின்னு..
ஆனா ஆங்கிலம் பேசுனா ஹார்ட் அட்டாக் வருவதற்க்கு சான்ஸ் அதிகமாம்..
அய்யோ சாமி...தல கிர்னு சுத்திடுச்சு...

முக்கியமான மேட்டரை விட்டுவிட்டேன்..
மேல சொன்னதெல்லாம் தாத்தாவோட கருத்து..
பின்பற்றுவதும் , துடைத்துப் போட்டுவிட்டு அடுத்த பதிவைப் படிக்கப்போவதும்  உங்கள் விருப்பம்...

என்னைய குறை சொல்லாதீங்க அப்புகளா..........
.
.
.
அந்த சீனக்கிழவனாரை பார்க்கனுமா?..
கீழ இருக்காறே.. அவர்தான்.. ......

...ம்..ம்.....நல்ல டாக்டர் சார்.... .
..

.
.

Tuesday, February 23, 2010

ஆந்திராவில் தமிழன் மீது கொலை வெறித் தாக்குதல்?

செய்தி...
ஆந்திராவில் தமிழக இளைஞர்களுக்கு எதிரான தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எ‌ன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அ‌ம்மா‌நில முதலமை‌ச்ச‌ர் ரோச‌ய்யாவு‌க்கு கடித‌ம் எழு‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌‌ர் இ‌ன்று ஆந்திர முதலமை‌ச்ச‌ர் ரோசய்யா, மத்திய அமை‌ச்ச‌ர்கள் ப.சிதம்பரம், விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகரில் பெல் நிறுவன வேலைக்காக தேர்வு எழுதச் சென்ற தமிழக இளைஞர்கள் மீது தெலங்கானாப்பகுதி வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்திய நிகழ்ச்சி கடும் கண்டனத்திற்குரியதாகும்.

பெல் நிறுவன 4ஆம் தகுதி ஊழியர்களின் வேலைக்கான எழுத்துத் தேர்வு கடந்த 14ஆ‌ம் தேதி நடந்தது. அதில் ஐ.டி.ஐ. படித்த தமிழகத்தின் பல்வேறு மாவட்ட இளைஞர்கள் 800 பேர் கலந்து கொண்டனர். அவர்களுள் 600 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்கள் 17ஆ‌ம் தேதி நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அதற்காக ஹைதராபாத் நகரில் உள்ள பெல் நிறுவன ஊழியர்கள் குடியிருப்புகளில் தங்கியிருந்தனர்.

இந்நிலையில் தெலங்கானா பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள் அக்குடியிருப்புகளுள் அத்துமீறி நுழைந்து தமிழக இளைஞர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். அதோடு பெல் நிறுவன தமிழக ஊழியர்களும் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடமைகளையும், வன்முறையாளர்கள் பறித்துக் கொண்டனர்.

அக்கொலை வெறித் தாக்குதலில் இருந்து தப்பித்து தமிழக இளைஞர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்க முடியாமல் தமிழகம் திரும்பியுள்ளனர். நெஞ்சையே பதறவைக்கும் இக் கொடூரச் செய்தியை அறிந்து தமிழகமே அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்தியத் திருநாட்டின் அடிப்படை மக்கள் வாழ்வுரிமைச் சட்டப்படி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான அனைத்து மாநில மக்களுக்கும் எந்த மாநிலத்திலும் வாழ தொழில் புரிய, மத்திய, மாநில அரசுகளில் வேலை வாய்ப்புகளைப் பெற முழு உரிமை உண்டு.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த குறிப்பாக தெலங்கானாப் பகுதி மக்கள் ஏராளமானோர் தமிழகத்தில் அரசு மற்றும் பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். சுமூகமான வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். ஆனால் ஆந்திராவில் தமிழக இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட வன்செயல் கொடுமை இந்திய ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு மிகவும் விரோதமானது.

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு நாட்டில் சாதி, இன, மதம் மற்றும் மாநில வெறித்தனச் செயல்பாடுகளின் தீவிரவாதத்தை ஒழித்திட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஆந்திராவில் தமிழக இளைஞர்களுக்கு எதிரான தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீண்டும் நடைபெறும் பெல் நிறுவன நேர்முகத் தேர்வுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல அம்மாநிலத்திலுள்ள அனைத்து தமிழக மக்களின் வாழ்வுக்கும், தொழிலுக்கும் உரிய உத்தரவாதம் தரப்பட வேண்டும். அம்மாநில அரசுக்கான அக்கடமையை அம்மாநில முதலமை‌ச்ச‌ர் உரிய நடவடிக்கையின் மூலம் செயல்படுத்துவார் என்று பெரிதும் நம்புகிறோம் எ‌ன்று த‌ங்கபாலு கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

 --------------------------------------------------------------------------------------------------------------

எனது மனத்திலே தோன்றியவை....

யார் இந்த தங்கபாலு?
என்னா சார்.. டம்மி பீஸ் எல்லாம் கடிதம் எழுத ஆரம்பித்துவிட்டது..
பசுமைப் புரட்சி , ஓஷோன் ஓட்டை எல்லாம் வாய் கிழிய பேசுபவர்கள் , கடிதம் எழுதி,  துரோகம் செய்த வாலுக்கு என்ன பண்ணப்போகிறோம்..


கடிதம் எழுதினால பிரச்சனை தீர்ந்துவிடுமா?ப.சி என்ன அவ்வளவு பவர்புல் ஆளா ?
ஒரு ஆளு என்னடானா , தந்தியா அடிக்கிறாரு..
இந்தாளு கடிதமா எழுதறாரு.. என்ன கொடுமையாடா சரவணா....
அதுமில்லாமல், நாம் இருப்பது  சோனியா ஆட்சியிலா , இல்லை ...ப.சி ஆட்சியிலா  ,  இல்லை  சிங் ஆட்சியிலாகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி , எந்த மாநில மக்களுக்கும் எந்த மாநிலத்திலும் வாழ மற்றும் தொழில் புரியலாமா?
அப்படியென்றால், ஏன் காஷ்மீரில் , மற்ற மாநிலத்தினர்  இடம் வாங்க முடியாது...  அதற்கு தேசிய கட்சி என்ன செய்யப் போகிறது?
வன்செயல் கொடுமை இந்திய ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு மிகவும் விரோதமானது.   மன்மோகன் சிங் அரசு,  தீவிரவாதத்தை ஒழித்திட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறதா?..
ஆனால் இலங்கை பிரச்சனையில் எவ்வளவு தமிழர்கள் இறந்தார்கள். அப்போது  ஓன்பது ஓட்டையும் அடைத்துவிட்டதா?..


கடைசியாக....

இடம் வாங்க நினைப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி..
 •  மழை பெய்தால் உடனடியாக வடிந்துவிடும் வசதி...
 • தோண்டத்தோண்ட நல்ல களிமண் கிடைக்கும் பூமி  

சகாய   விலைக்கு உள்ளது..   உடனடி கிரயம்.. முந்துங்கள்..

(கார்திக் , கனி  என தொடங்கும் பெயருள்ளவர்களுக்கும் ,
நிதி என்று முடியும் பெயருள்ளவர்களுக்கும் ,
இடம் கிடையாது என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம்..


மேலும்  படத்துக்கும் , இடத்துக்கும் சம்பந்தம் இல்லை..எனவே தமிழக ஜனங்களே.....குழப்பிக்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கிறோம்...)
தமிழன் , தன்னை தானே காப்பாற்றிக்கொள்ளும் அறிவாளிகள்.. அவர்களுக்கு இந்த பன்னாடைகளின்  கடிதமோ  அல்லது தந்தியோ  தேவையில்லை என்பது என் விருப்பம்...

What do you think ?
.
.

அஜீத் என்ன கொம்பா ?

செய்தி...

''நடிக‌‌ர் அஜீத்குமா‌ர் படத்தை திரையிடுவதா, வேண்டாமா? என்பதை மார்ச் 3ஆ‌ம் தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்வோம்'' என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில், ''தமிழர்களை வைத்து சம்பாதித்த நடிகர் அஜீத்குமார், தமிழர்களுக்கு எதிராக பேசி வருகிறார். காவிரி நீர் பிரச்சனைக்காக நடைபெற்ற போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார். அவர் சோர்வாக இருந்தால், நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டியதுதானே...தொடர்ந்து ஏன் நடிக்க வேண்டும்?

அஜீத் தன் கருத்தை திரும்ப பெற வேண்டும். இந்த பிரச்சனை பற்றி விவாதிக்க மார்ச் 3ஆ‌ம் தேதி, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அஜீத் படத்தை திரையிடுவதா, வேண்டாமா? என்பதை அந்த கூட்டத்தில் முடிவு செய்வோம் எ‌ன்று பன்னீர்செல்வம் கூறியு‌ள்ளா‌ர்.

--------------------------------------------------------------------------------------------------------


அய்யா பன்னீரு..
நீர் வாழ்க.. உம் கொற்றம் ஓங்குக..
மார்ச் 3ஆ‌ம் , இந்த பிரச்சனை பற்றி விவாதிக்க கூடுவதாக அறிந்தேன்..

கடுமையான பணி நிமித்தம் காரணமாக, என்னால் அந்த கூட்டத்திற்க்கு கலந்து கொள்ளமுடியாது..   எனவே இந்த பதிவின் மூலம் என் கருத்துக்களை சொல்லிக்கொள்ள விருப்பபடுகிறேன்..

அஜீத் முதுகெலும்புள்ள தமிழனாக, நடமாடிக் கொண்டிருப்பது ஒரு வருத்தமான செய்தி. .        இதை அப்படியே வளரவிட்டால் , நாளை ரஜினி மருமகனும் இது போல பேச ஆரம்பித்துவிடுவான்..

ஒரு நடிகன் அவனது தொழிலை மட்டும் பார்ப்பது தேச துரோகம்( சுய நலம்)  என்பது என் கருத்து..  நாம் எல்லோரும் நாலு காலைத் தூக்கிகொண்டு , மன்னராட்சியில் வாழும்பொழுது ,   அஜீத்  அவர்கள் , தனது சொந்தக் கருத்தை  சொன்னது என் மனதை பாதித்துவிட்டது...

எனவே இன்று முதல் , அஜீத் படங்களை திரை அரங்கில் வெளியிட வேண்டாமென்பதுதான்  என்விருப்பமும்..  மேலும் , உங்கள் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டியிருப்பதால் , 

இன்று முதல் , அடுத்த 1 வருடத்திற்கு

காலை,
மதியம் ,
இரவு வேளைகளில் , "உளியின் ஓசை "  யையும் ,

பின்னிரவு நேரத்தில்,
தேவ நாதாரி இயக்கத்தில் வந்த "கடவுளுக்கே கலவி " என்ற
லோ - பட்ஷெட் படத்தையும் வெளியிடலாம் என நினைக்கிறேன்..


மேலும், நமது  " கலா, உதய , அறிவு "   நிதிகள் இயக்கும் படங்கள் விரைவில் வெளிவருகின்றன...  அதை திரை அரங்கில் பார்க்காத பன்னாடைகளை , நாடு கடத்த வேண்டும் என்று முடிவு செய்யுமாறு தாழ்மையுடன்
வேண்டிக்கொள்கிறேன்...

-இவன் பட்டாபட்டி

Thursday, February 18, 2010

ராதிகா செல்போன் சுக்கு நூறாக உடைந்தது..மக்கள் அதிர்சி

செய்தி...
முதல்வர் கருணாநிதிக்கு திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாவில் வழக்கம் போலவே ஏகப்பட்ட குழப்பங்கள், கடைசி நேர சொதப்பல்கள்.  நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏறத்தாழ 7,000 பேர் அமரலாம். ஆனால் 14,000 அழைப்பிதழ்கள் அடிக்கப்பட்டுவிட்டனவாம்.

இதனால் விழா நாளன்று உள்ளே இருந்த கூட்டத்துக்கு நிகராக வெளியிலும் குழுமி நின்று சாலைளை ஸ்தம்பிக்க வைத்தனர்.  இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்ட முக்கியமானவர் ராதிகா சரத்குமார். அவர் கொண்டு வந்திருந்த பாஸ், அடையாள அட்டை என எதைக் காட்டியும் உள்ளே அனுமதிக்க தாமதப்படுத்தினர்.

இதனால் கடும் ஆத்திரம் கொண்ட ராதிகா, திட்டிக் கொண்டே, அரங்கத்துக்குள் இருந்த சரத்குமாரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தாராம். ஆனால் செல்போன் அலைகள் தடுக்கப்பட்டிருந்ததால், சரத்தை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் பலனில்லாததால், அந்த மகா காஸ்ட்லி செல்போனை ஆத்திரத்துடன் நடு ரோட்டில் போட்டு உடைத்தார் ராதிகா.

பின்னர் மிகக் கடுமையான வார்த்தைகளால் திட்டியபடியே தனது காருக்குள் அமர்ந்தவர், வீட்டுக்கு போய் விட்டார்.
ராதிகாவுக்கு மட்டுமல்ல, இன்னும் பல நட்சத்திரங்களுக்கும் அன்றைக்கு இதே நிலைமைதான் ஏற்பட்டதாம்.
'நான்கு மணிக்கே அரங்குக்கு வந்து இருக்கையில் அமரச் சொல்லி அழைப்பிதழில் போட்டிருந்தோம். ஆனால் இவர்கள் எப்போதும் போல மிகத் தாமதமாக, கடைசி நேரத்தில் வந்ததால் இந்த நிலை. அதைப் புரிந்து கொள்ளாமல் எங்களைத் திட்டி என்ன பயன்' என்று பதிலுக்கு கத்தினார் வாசலில் இருந்த ஒரு காவலர்.


------------------------------------------------------------------------------------------------------தலைவர்  அவர்களுக்கு..
உங்கள் உடன்பிறப்பு எழுதும் மடல்..


அய்யா..உங்களுக்கு நடத்திய பாராட்டு விழாவில் பங்குபெற பறந்தோடி வந்த எங்கள் ஜக்குGirl- லை, உள்ளே விட  தாமதப்படுத்தியதால் , அவர் ஆத்திரத்தில் தனது தொலைபேசியை உடைத்து விட்டார்...

அவர் சமீபத்தில் 17 கோடி ரூபாய் நஷ்டத்துக்கு கண்ணீர்விட்டு அழுத காட்சி,  உங்களுக்கு மறந்திருக்கலாம்..  (  காரணம் நமீதா என்ற கட்டுக்கதையை நான் நம்பவில்லை  )  அத்துடன் இந்த செல்போன் செலவு வேறு..

எனவே , தயவுசெய்து நீங்கள் , மேடத்துக்கு நல்ல செல்போன்கள்( Standby  தலைவா...)  + 17 கோடிகளை   அள்ளித் தருவீர்கள் என் நம்புகிறோம்... .பெண்களின் காவலன் நீங்கள்... ஒரு பெண்ணின் கண்ணீரை
விட உங்களுக்கு அரசாங்கப் பணி முக்கியமில்லை என இந்த நேரத்ததில்  நினைவுப்படுத்த விரும்புகிறேன்..

மேலும் உங்களுடைய இலவச திட்டத்தினால் கஜானா காலியாயிவிட்டது என ஆற்காட்டார் புலம்புவது  என் காதில் விழுகிறது..போக்குவரவு மற்றும்  தகவல் தொடர்பு துறையில் சில மாற்றங்கள் செய்தால்  ராதிகா மேடம் கண்ணீரை துடைத்துவிடலாம் என்பது என் கருத்து..மேலும் முடியாவிட்டால்,
இருக்கவே இருக்கிறார்கள் இந்த NRI பயல்கள்...( தாளித்துவிடலாம் தல..)

மேடம்   நாட்டாமையை அழைத்தபோது , அவர் தகவல் தொடர்பு எல்லைக்கு அப்பால்  உள்ளதாக செய்திகள் வந்துள்ளது.. எனவே , அவருக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கவேண்டும்  என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..( பாவம் சார்.. நம்ம நாட்டாமை )

வாசலில் இருந்த ஒரு காவலர் , மேடத்தைப் பார்த்து கத்தியதாகக் கேள்விப்பட்டேன்.  எப்படி கணவனாக,  எங்கள் நாட்டாமைக்கு இல்லாத உரிமை , .அரசாங்க சம்பளம்   வாங்கும் ஒரு காவலருக்கு வந்தது?.இதற்கும் தகுந்த ஆவன செய்வீர்கள் என நம்புகிறோம்..   (  தயவு செய்யு அவரை தூக்கில் போட வேண்டாம்.. பாவம் புள்ளை குட்டிக்காரன் .. சும்மா பயங்காட்ட ஆயுள் தண்டனை போதும் )..

- இவன்  உடன்பிறப்பு

Tuesday, February 16, 2010

பெண்ணைப் பார்த்தாச்சு சார்....

வலை வீசி , வலை வீசி ,  நமது நண்பருக்கு ஒரு
பெண்ணைப் பார்த்தாகிவிட்டது..

பொண்ணு , ரொம்ப நல்ல டைப்பாம்..
நேர நேரத்திற்க்கு சமையல் பண்ணி, துணி துவைத்து விட்டால்  போதும்..
அது பாட்டுக்கு கம்யூட்டரெ கதியெனயிருக்கும் என ரகசியப் பிரிவின் அறிக்கை கூறுகிறது..


இனி.......... நடப்பதெல்லாம் நமது நண்பரின் கையில்...

வாழ்க வளமுடன்....முக்கிய குறிப்பு..

//
நமது நண்பர்   நேர நேரத்திற்கு சமையல் பண்ணி, துணி துவைத்து விட்டால்  போதும்..//
.
.
.
.
.

.
வெளியூர் , நமது நண்பர் முத்துவிடம் , நல்ல செவத்த குட்டியா பார்க்கச்சொல்கிறார்...
இது ஓகே வா வெளியூரு...

ஆனா, கல்யாணத்திக்கு பின்னாடி , ஒழுக்கமா ஜாகிங் போகனும்.. இப்பவே சொல்லிட்டேன்..

.

Saturday, February 13, 2010

" மானமுள்ள தமிழன் "

இளம் தொழிலதிபருடன் ஒரு சந்திப்பு....

( யார் என கண்டுபிடிப்பவர்களுக்கு , பதிவின் முடிவில் ஒரு பரிசு காத்திருக்கிறது..   சே.. முழு பதிவையும் படிக்க வைக்க என்னென்ன பண்ணவேண்டியிருக்கு.......ஏழுகொண்டலவாண்டா  ஏடுகொண்டலவாடா. -(நன்றி -  சேட்டைக்காரன் )


வணக்கம்..நான் தினக் குசுப்பு பத்திரிக்கையிலிருந்து பட்டாபட்டி..உங்கள் நேரத்தை வீணடிக்க விருப்பவில்லை.. எனவே நேரடியாக கேள்விகளுக்கு செல்கிறேன்...

இந்த இளம் வயதிலேயே , இவ்வளவு பெரிய பதவிக்கு வரமுடிந்தது எப்படி?

நான் பிறக்கும்போதே ஜீனியஸ் என்று எனது ' வக்கீல் தாய் '   சொல்லியிருக்கிறார்கள்..மேலும் எனது தந்தை  தேர்தலில் நிற்காமலேயே , பெரிய பதவியை அடையும் சாணக்கியத்தனம் கொண்டவர்..
அந்த கலப்படத்தால்.. இல்லை..இல்லை கலப்பினத்தால் ,சார்.. நான் சொன்னதை அடித்துவிடுங்கள்..  (அடித்துவிட்டோம் தொழிலதிபரே..)
அந்த இருவரரின் மேதாவித்தனம் சேர்ந்ததால் , எனக்கு இயற்கையிலேயே திறமை அதிகம்..

சார். இந்த அரசியலுக்குள் நுழைந்ததைப்பற்றி வாசகர்களுக்கு ஏதாவது?

இப்போதுதான் எனது தந்தையார் டிரெயினிங்க் கொடுத்துக்கொண்டுள்ளார்..
விரைவில் அரசியல் வாழ்வில் பிரகாசிப்பேன்..அதற்கு உதவும் ஒரு பெண்மணியின் தொண்டும் மகத்தானது..

சாரி சார்.. மன்னிக்கனும்.. யார் அந்த பெண்மணி.. தங்கையா சார்?

இல்லை.. இல்லை.. எங்கள் நலம்விரும்பி.. வாளும் வள்ளுவரின் போர்வால்(ள்)... ( சாரி ..நான் தமிழ்ல வீக்.. எந்த " ள் " என நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள்-நிருபர்)    நாங்கள் இருவரும் சேர்ந்து , தமிழர்களுக்கு ஆற்றும் தொண்டை நாளைய வரலாறு கூறும்..

சார். அந்த கோதுமைய வெச்சு எவ்வளவோ சம்பாரித்துவிட்டீர்கள் என வந்த நியூஸ் பற்றி...

அது வேலையில்லா பன்னாடைக கிளப்பிவிட்ட புரளிங்க..நான் தொழில் தொடங்கிய நேரம்,   உள் நாட்டில் கோதுமை விளைச்சல் அமோகமாயிருந்தது.. விலை பாத்திங்கனா , ரம்பா தொடைமாறி சர்-னு  இறங்க்கிடுச்சு..அப்ப நான் கொஞ்சம் ப்ளான் பண்ணுனேன்..

எதுக்கு சார். ரம்பா தொடைக்கா?

இப்படி குறுக்க பேசக்கூடாது.. பாவம் ரம்பா. அதுதான் தொழிலதிபருடன் செட்டில் ஆயிடுச்சே...  சே.. எங்க விட்டேன்..

சார்.. ரம்பா தொடையில சார்...

யோவ்..என்னைய பேசவிடுப்பா...
ஆங்.. கோதுமையில...
விலை கம்மியாயிருக்கும்போது எல்லா கோதுமையையும் விலைக்கு வாங்கிட்டேன்..அதை   வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாமுனு முடிவு பண்ணி லாரியில ஏற்றி ,  டெல்லிக்கு அனுப்பிட்டேன்...

ஏன் சார்.. டெல்லியிலிருந்து அனுப்பி , அங்கிருந்து லாரியிலேயே வெளி நாட்டுக்கு அனுப்ப திட்டமா சார்..?

இல்லை..இல்லை.. என் தந்தையார் , தமக்கு வேலை அதிகம் இல்லை.. அங்க அனுப்பினா, அவரே  மீதியெல்லாம் பார்த்துக்குரேனு சொன்னாரு...

ஓ.. டாலரில சம்பாரிச்சுட்டேனு சொல்லுங்க.....


No... No....
அப்ப என்னாச்சுனா , இந்தியாவில கோதுமைத்தட்டுப்பாடு வந்திருச்சு..
(ங்கொய்யாலே.. எல்லா கோதுமையும் வாங்கி பதுக்கிட்டா தட்டுப்பாடு வராம , ம%$#ரா வரும்...)
அப்ப எங்க நைனா சொன்னாரு பாருங்க ஒரு வாசகம்..எனக்கே கலங்கிடுச்சு..

சார்.. சார். ப்ளீஸ் சார்.. அதை கொஞ்சம் பதிவுலகத்துக்கு சொல்ல முடியுமா?..

"அமெரிக்காக்காரனே, விளஞ்ச கோதுமைய யார் தலையிலே கட்டலாமுனு பார்த்துக்கொண்டிருக்கிறான்.....உள் நாட்டில பசி பஞ்சம் தலைவிரித்து ஆடும்போது , அந்த நாதாரிகளை பணம் பண்ண விடக்கூடாது..
மேலும் , அவர்கள் வந்து நம் கோமணத்தை உருவுவதை விட ...நாமே மக்களுக்கு செய்திடலாமுனு  சொல்லி , கோதுமைய உள்ளூர் மார்கெட்ல விற்கச்சொல்லிட்டார்.

சரி.. தந்தை சொல்லை மீறிவிட்டான் தமையன் என நாளைய சரித்திரம் சொல்லிவிடக்கூடாது என் எண்ணி,  கோதுமைய திருப்பி வரவழைத்து தமிழக மக்களுக்கு கொடுத்துவிட்டேன்..

வாங்கின விலைக்கே-வா சார்....

என்ன சார். லாரியெல்லாம் வெச்சு செஞ்சுருக்கேன்.. கட்டுபடியாகுமா சார்..அதுவுமில்லாம ,  கோதுமை பஞ்சம் தலைவிரித்தாடுது.. அதனால கொஞ்சம் அதிக விலைக்கு விற்றுவிட்டோம்...  வந்த லாபத்தை , நானும்  எனது நலம் விரும்பியும் , கோவையில் 200 ஏக்கர் நிலத்தில்
முதலீடு செய்துவிட்டோம்...

அது என்ன விளைச்சல் நிலமா சார்?.


of course...
வாங்கும்போது விளைச்சல் நிலம்தான்.. இப்போது பார்க்க ஆள் கிடைக்காத்தால்............ அதை விடுங்க..

என்ன சார்.. இந்த பணத்தை விவசாயிகளுக்கு கடனா கொடுத்திருந்தால் , தமிழ் நாடு எங்கேயோ போயிருக்குமே சார்..

சார்.. என்னொட மனசுலையும் பட்டுச்சு.. ஆனா , எனது தந்தையும் , நலம் விரும்பியின் தந்தையும்  எங்கள் மனதை மாற்றிவிட்டனர்..


என்ன சொல்லி சார் ?.

"விவசாயிகள், குழந்தைகளை படிக்க வைக்கவும் கஷ்டப்படுகின்றனர்...
அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு...
பெட்ரோல் , டீசல் விலை உயர்வு...
தற்கொலை சாவு அதிகரிப்பு....
இந்த நேரத்தில் அவர்களுக்கு வேண்டியது பணமே தவிர ஆறுதல் அல்ல...
அவர்களை காப்பாற்ற ஒரே வழி.. அவர்களின் இடத்தை வாங்கிக்கொள்வதுதான்.." என கூறிவிட்டனர்.
தமிழனுக்கு ஒரு பிரச்சனையினா , பெரியவர்களின் உடல் , உயிர் , பொருள் எல்லாமே  துடிக்கும் சார்ஆனாலும் கொஞ்சம் நெருட்டலா இருக்கிறதே?..

சார். நீங்க சின்ன வட்டத்திலேயே யோசனை பண்ணுகிறீர்கள்...
அமெரிக்காவும் பாவம் சார்.. அங்கேயும் வேலையில்லா திண்டாட்டம்..
அவர்களுக்கு உதவுவது நம் கடமையில்லையா சார்...
அதனாலே, எங்க அப்பா அவரோட Influnce பயன்படுத்தி ,
அயல் நாட்டு கோதுமைய , எங்கள் மூலமாக விற்க ஏற்பாடுசெய்துவிட்டார்...
என்னயிருந்தாலும் , அடுத்தவன் வந்து நம்மளை உருவுவதை,
தன்மானமுள்ள எந்த தமிழனும் ஒத்துக்கொள்ள மாட்டான் ..

நான் சொல்வது சரிதானே சார்...

100% சரிதான் சார்.. அப்புறம் , எவனோ ஒரு பன்னாட , ஷூ எடுத்து
உமது தந்தையார் முகத்திலே வீசினானாமே.. அதைப் பற்றி..


அது வந்து.. வந்து .. உடுங்க சார்.. அது முடிந்து போன சம்பவம்..
அதுவுமில்லாமல் , குறிதான் தப்பிடுச்சே...

ஆமா சார்.. எனக்கும் கஷ்டமாயிருக்கு...
( எங்க ஊர்ல குறி பார்த்து வீசுபவர்கள் நிறைய உள்ளனர்..
அவர்களுக்கு அடுத்த தடவை ஏதாவது சான்ஸ் வாங்கி கொடுங்க சார்..)


அதற்குள் நலம் விரும்பியிடமிருந்து போன் வந்ததால்,  பேட்டியை தொடர முடியவில்லை...

சரி சார்.. மீண்டும் சந்திப்போம்..


வரட்டா...


( யோவ்.. பதிவு கடைசியிலே என்னமோ கொடுக்கிறேனு சொன்னீரே.. எங்கையா ? )
.
.

யார் என கண்டுபிடிப்பவற்களுக்கு , நமது அண்ணன் கார்திக் சிதம்பரம்   தனது பொற்கரங்களால் , காங்கிரஸ் உறுப்பினர் அட்டையை வழங்குவார் என்பதை   அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்..
 விழா முடிவில் ,  நமது அக்கா கனிமொழியின் கலைக்குழு நடத்தும்,  " மானமுள்ள தமிழன் " என்ற நகைச்சுவை நாடகத்தை கண்டுகளிக்க தவறாதீர்கள்...
.
.
..

Friday, February 12, 2010

வெளியூர்காரனுக்கு Gong Xi Fa

வெளியூர்காரனுக்கு , இந்த வருடமாவது பெண் கிடைக்க வாழ்த்துக்கள்....வரும் வாரம் சிங்கப்பூரில் TOTO ,இரண்டு குலுக்கலாக நடைபெறவுள்ளது என்பதையும்  இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்பிகிறான் இந்த பட்டாபட்டி..

1 குலுக்கல்  :  $5 மில்லியன்
2 குலுக்கல்  :  $10 மில்லியன்

முதல் பரிசு கிடைத்தால், பட்டாபட்டிக்கு 10% கொடுத்தது போக , மீதியை....   தாய் நாட்டுக்கு எடுத்துச்செல்லலாம்.

வேலையிடத்திலிருந்து ரிலீவ் செய்யவில்லையென்றால் ,அதற்கு
வருத்தம் வேண்டாம்..

எவ்வளவோ செய்துவிட்டோம்.. இதைச்செய்ய மாட்டோமா நமது வெளியூரானுக்கு...

நேராக உங்கள் பாஸ்-சிடம் சென்று ' உங்கள் மகள் சூப்பர் சார் ' என கூறிவிடுங்கள்..

கிளிரன்ஸ் , மற்றும் ரூம் செட்டில்மெண்ட் , உங்கள் தலைவனால் ( பாஸு )   முடிக்கப்பட்டுவிடும்...உங்களுக்கு எந்த ஒரு கவலையும் இல்லை..

உங்களை  மில்லினராக்கி...... சந்திக்க வரும் - பட்டாபட்டி

Thursday, February 11, 2010

யோவ்..ஐடியா குடுய்யா.. பாக்கலாம்..

யோவ் பட்டாபட்டி..

நான் கடந்த 3 வருடங்களாக சிங்கையில் வேலை செய்கிறேன்..
நான் ஒரு கிரிக்கெட்+கம்யூட்டர் பைத்தியம்...       அவ்வப்போது பொழுது போகாவிட்டால் உங்கள் பதிவைப் படிப்பேன்..   பரவாயில்லை.. ஏதோ எழுதரே...


சரி...நானும் , என்னொட கூட்டாளியும் ஒரு பந்தயம் போட்டிருக்கிறோம்..
அவன்,   நீ அறிவாளி என்கின்றான்... எனக்கு என்னவோ....... 
சரி.........விடு....... 

விசயத்துக்கு வருவோம்..

எனக்கு ஒரு நல்ல ஐடியா குடுயா பார்க்கலாம்..   என்னுடைய லவ்வருக்கு பரிசு கொடுக்க விரும்புகிறேன்..  காசெல்லாம் செலவு பண்ணத் தாயாராயில்லை..
ஆனா, அது எல்லோரும் பேசர மாறியிருக்கனும்..


உனக்கு டைம் ஸ்டார்ட்....
 

- ஜேக் டேனியல்

-----------------------------------------------------------------------------------------------


அய்யா ஜேக் டேனியலு...
நல்லா கேட்டய ஒரு கேள்விய.. ஆமா .. எந்த ஊரு நீரு.........சிவகாசியா?
சும்மா பட்டாசு வெடிக்கற மாறி பேசறீங்க..

உங்க பந்தயத்துக்கு நான் வரல சாமி...... என்னைய என்ன பொழப்பில்லாதவனு நினச்சீங்களா   நீரும் உங்க கூட்டாளியும்?
இதுல வேற எனக்கு " கிளாக் " ஸ்டார்டா?....
சரி.. சிங்கையில வேலை செய்யிரேனு சொல்லிட்டிங்க.. என்ன பண்றது?..

( பேசரதயும் பேசிட்டு , தக்காளி ஐடியாவேற கேக்குறயா?.. இருடி.. இரு )

நீரு என்ன பண்ணும் , இந்த டிஸ்யூ பேப்பர் இருக்கல்ல.. அதை கொஞ்சம் எடுத்து  ஏதாவது ஒரு பொம்மை செஞ்சு , உன்னோட காதலிக்கு கொடு..ஓ.கே..
.
.
.
(ஜேக் .... மூஞ்சியில சிரிப்ப பாருங்களேன்.....)..
.
.
.
யோவ்.. இருப்பா.. அதுக்குள்ள உன்னோட கூட்டாளிக்கு ,
' நான் முட்டாளுனு '  பேப்பர் போட ஓடாதய்யா..

.
.
.
அட.. நீ காசு செலவு பண்ணத் தயாரில்லனு சொன்னீருதானே...
அதனாலே .. யூஸ் பண்ணனுன டிஸ்யூ பேப்பர்ல பொம்மைய செய்யி..

எப்படியும் உன்னோட லவ்வர், அதைய தூக்கி உன் மூஞ்சியில எறிவா....
நீ வேற கிரிக்கெட் ப்ளேயரு சொல்லியிருக்க..
அப்ப என்ன லட்சணத்தில புடிப்பேனு நம்ம வெளியூர்காரனுக்கே தெரியும்..
.
.
அது எப்படியும் கீழ விழும்..
போலிஸ்காரன்,  ' எண்டா... குப்பைய வீசுனனு ',  சொல்லி உன்னைய மாமியார் வீட்டுக்கு  கூட்டிட்டுப் போவாங்க..

சரி.. நீ அறிவாளியாச்சா..அதனாலே குறைந்த பட்ச
தண்டனையா " ஒரு வாரம் குப்பைய கூட்ட விடுவானுக..."
.
( கோவிச்சுகிட்டு போற பார்த்தியா ஜேக்கு...          இனிதான் உன்னோட கேள்விக்கே பதில்....)
.
.
நீ குப்பை பெருக்கற அழகை , " வசந்தம் சென்ரல் தமிழ் செய்திகளில் " காட்ட,  காமிராவத் தூக்கிட்டு வருவானுக..   அப்ப மட்டும் நான் சொல்ற மாறி பண்ணு...
.
ஒரு பேப்பர்ல "I Love you xxx " ( அந்த xxx ங்குறது உன்னோட லவ்வர் பேரு)   அப்படினு எழுதி............ 

டீவீ காமிரா முன்னாடி பல்லுளிச்சுக்கிட்டு காமி...பேமஸ் ஆயிடுவே...

அப்புறம் எல்லோரும் உன்னைய பற்றியே பேசுவானுக..

( மகனே...கேள்வி கேக்குறையா கேள்வி....)
.
.
.
.

Wednesday, February 10, 2010

நன்றி டாக்டர் கலைஞர் அவர்களே..

சென்னை,​​ பிப்.9:​ அரசு உயர் அதிகாரிகள் சூட்கேஸ் வாங்கிக் கொள்வதற்கான தொகை ரூ.440-லிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.​

சார்பு,​​ ​ துணைச் செயலாளர் நிலையில் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரமும்,​​ இணை,​​ கூடுதல் செயலாளர் நிலையில் உள்ளவர்களுக்கு ரூ.3,500-ம் வழங்கப்படும் என்று பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.​
 

கூடுதல் செயலாளர் நிலையில் மேல் உள்ளவர்களுக்கு இத் தொகை ரூ.5 ஆயிரம் ஆக உயர்த்தப்படுவதாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது.  ​ துறைச் செயலாளர்களும்:​ சூட்கேஸ் வாங்கிக் கொள்ள ஒரு அதிகாரிக்கு ரூ.440 என்கிற உச்ச வரம்பு 20 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது.​ இந்தத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த செயலாளர்களும் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு அதிகாரி ஒருவர் மாற்றப்படும்போது,​​ சூட்கேஸ் பெற்றுக் கொண்டதற்கான தகவலை அவர் மாற்றப்படும் துறையிடம் சம்பந்தப்பட்ட துறை தெரிவிக்க வேண்டும் என்பன போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் உள்ளன.


------------------------------------------------------------------------------------------------------------

நன்றி டாக்டர் கலைஞர் அவர்களே..
எங்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கண்ட உங்களுக்கு ,
எங்களால் முடிந்த சிறு உதவிபாராட்டு விழா நடத்துவதுதான்..

"ஸ்ரேயா மற்றும் நமிதாவை தூக்கி வர கழக கண்மணிகள் , வீறு கொண்டு புறப்பட்டுவிட்டனர்.."

மேலும் உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி , கீழ் கண்ட விருதுகளில்
உங்கள் மனதை மகிழ்வு கொள்ளச்செய்யும் விருது எது எனக் குறிப்பிட்டால் , பேனர் மற்றும் கட்-அவுட் செய்ய வசதியாகயிருக்கும்
என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

 1. இடர்களை களைப்போன்..
 2. உறைதரும் உற்றோன்..
 3. வாழ்வியல் காவலன்..
 4. வாழ்வுமிகு வள்ளுவன்..
 5. உச்சவரப்பு உற்றவன்..
 6. சீவக சிங்காரன்..
 7. நடமாடும் தொல்காப்பியர் ..
 8. செந்தமிழ் காப்போன் ..
 9. செம்மொழிச் சிங்கம் ..
 10. சொல்லின் செல்வர் ..
 11. பைந்தமிழ்ப் பாரதி ..
 12. ஈழத்தின் கோவலர் ..
 13. தண்டவாளம் கண்டவர் ..
 14. குடமுருட்டி குணவான் ..
 15. கலைத்துறையின் கோமகன்..

பின்குறிப்பு..
 • ஒரு விழாவுக்கு ஒரு விருதுதான் வழங்கப்படும்.
 • புடவை அணிந்து வருபவர்கள் உள்ளே நுழைய அனுமதியில்லை..
 • கடைசிவரை விழா அரங்கத்தில் இருப்பவர்களுக்கு , நமிதாவுடன் நடனமாடும் வாய்பு அளிக்கப்படும்.
 • நமிதா யூஸ் பண்ணிய டிஸ்யூ வை ஏலத்தில் எடுப்பவர்கள் முன்பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..
 • முதல் இரண்டு வரிசைகள், உடன்பிறப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது..

Tuesday, February 9, 2010

வெளியூர்காரனுக்கு ஒரு அட்வைசு...

நம்ம கழகக்கண்மணிக்கு ( பேரு சொல்லமாட்டேன் சார்...) ரொம்ப நாளாவே ,

 • காலையிலே எந்திருச்சா, கை , கால் வலிக்குது...
 • கம்யூட்டரைப் பார்த்தா கண் எரியுது...
 • டீவீ பார்த்தா காது வலிக்குது...
 • மூச்ச விட்டா மூக்கு வலிக்குது...
 • சாப்பிட்டா வாய் வலிக்குது.... என சொல்லிக்கொண்டிருப்பது
உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன்..

அவரது பிரச்சனைக்கு தீர்வு.... ' காரமடை ஜோசியரின் ஆலோசனைப்படி இன்று முதல் உடற்பயிற்சி  செய்வதுதான் ஒரே வழி ' என்பதை  தெரிவித்துக்கொள்கிறேன்..

இத்துடன் அவர் கொடுத்த விளக்கவுரையை உங்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்

முதல் ஸ்டெப்...
( அதை 20 முறை வெறும் வயிற்றில் செய்யவும்)
.
.
.
.

.


இரண்டாவது ஸ்டெப்...
( இதை உச்சி வெயிலில் , உள்ளங்காலில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு
செய்யவும்.. உச்சந்தலையில் இறங்கும் சூடு, உள்ளங்கால் வழியாக
வெளியேரும் வரை செய்யவும் )
.
.
.
.

.

கடைசி ஸ்டெப்..
இதை செய்வதற்க்குமுன் , 1 லிட்டர் நல்லெண்ணையை எடுத்து ,
அதில் ஒரு டீ- ஸ்பூன் மட்டும் வயிற்றில் தடவிக்கொள்ளவும்..
மீதி எண்ணெயை உங்கள் குலதெய்வத்தை நினைத்து , ஒரே மூச்சில்
குடித்துவிடுங்கள்.

.
சரியாக இரண்டு நிமிடம் கழித்து , வயிற்றில் கட, முடா என சத்தம் கேட்கும்..
ஆம்.. இதுதான் சரியான நேரம்..இப்போது கீழ்கண்ட படத்தில் உள்ளவாரு,
உயிர் போகும்வரை செய்யவும்...
.
.
.
.
.
.

இதை தினந்தோறும் செய்து வந்தால் , இருமல்,. வாயு , கை கால் வலி
அட.... மூச்சே நின்றுவிடும்..

(முக்கிய குறிப்பு.. குரு காணிக்கையாக உங்கள் சொத்தை ,
60% பட்டாபட்டிக்கும் ( ஐடியா நம்மளது ),
20% ஜோசியருக்கும் ( பாவம்...)
10% மன்னருக்கும் (ஹூம்.. வேற வழி )
5% வெளியூருக்கும், ( என்ன சார் பண்ணித் தொலைக்கிறது )
மீதி 5% ரோஸ்விக்குக்கும் எழுதி வைத்துவிட்டு இந்தப்பயிற்சியை ஆரம்பிக்கவும்...)

இது மட்டும் வெற்றிகரமாக நடந்து முடிந்தால் , எனது
ராணுவ தளபதிக்கு பரிந்துரைக்க, மகளிர் அணி முடிவுசெய்துள்ளது...

கேளுங்க.. கேளுங்க.. கேட்டுகிட்டேயிருங்க..

பட்டாபட்டியாரே..
நாங்கள் புதியதாக திருமணம் செய்துகொண்டவர்கள்..
எனது கணவர் ,சீக்கிரம், குழந்தைகள் வேண்டுமென நச்சரிக்கிறார்..
ஆனால் எனக்கு குழந்தைகள் வேண்டாம் என நினைக்கிறேன்.
எவ்வளவோ சொல்லியும் , எனது கணவர் விடாப்பிடியாக இருக்கிறார்.
உங்கள் கருத்துக்கள் என்ன?

- பெயர் சொல்ல விருப்பவில்லை.

மேடம் "பெயர் சொல்ல விருப்பவில்லை."..
ராணியில்  "அல்லி பதில்" -களுக்கு அனுப்பு வேண்டிய கேள்வி...
சரி.. பட்டாபட்டிக்கு தெரியாதது உலகத்திலே உண்டா?.

நீங்கள் உங்கள் கணவரின் ஆபிஸ் முகவரி , மற்றும்  ஒரு சிறு கவரில் ரூ 1 லட்சம் வைத்து , உங்கள் வீட்டிலிருந்து மூன்று தெரு தள்ளியுள்ள பொது கழிப்பிடத்தில்  வத்துவிடுங்கள்..

நாங்கள் நம்பிக்கையான எங்கள் கம்பெனி ஆட்களை அனுப்பி,  உங்கள் கணவருடன் ( எங்கள் பாஷயில் ) பேசுகிறோம். 

அதற்குப்பின் , உங்கள் கணவருக்கு குழந்தை ஆசையிருக்காது..   
அப்படியே ஆசை வந்தாலும் , அவரால் முடியாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்

அடுத்த முறை , உங்கள் பிரச்சனைக்கு  , 10 % கழிவு உண்டு என்பதை நிர்வாகம் இந்த நேரத்தில்  சொல்லிக்கொள்ள விருப்புகிறது...

Saturday, February 6, 2010

வாசன் டூவீலரில் பயணம்...( நூசு..)


செய்தியா வந்தது
திருச்சி : திருச்சியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், மத்திய அமைச்சர் வாசன், டூவீலரில் "லிப்ட்' கேட்டு விமான நிலையம் சென்றார். தொட்டியம் தொகுதி காங்., எம்.எல்.ஏ., ராஜசேகரனின் மகள் திருமணம், திருச்சியில் நேற்று நடந்தது. 

திருமணத்தில், மத்திய கப்பல் துறை அமைச்சர் வாசன் பங்கேற்றார். பின், சென்னை செல்ல காலை 11.45 மணிக்கு, சென்னை பை-பாஸ் சாலை வழியாக விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டார். பால் பண்ணை ரவுண்டானா பகுதிக்கு வந்த போது, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

போக்குவரத்து போலீசார் மற்றும் வாசனின் பாதுகாப்பு போலீசார் இணைந்து, பகீரத முயற்சி மேற்கொண்டும், போக்குவரத்தை உடனடியாக ஒழுங்குபடுத்த முடியவில்லை. நீண்ட நேரம் அங்கு இருந்தால் விமானத்தைப் பிடிக்க முடியாது என கருதிய அமைச்சர் வாசன், காரில் இருந்து இறங்கி, அவ்வழியாக வந்த அரிசி வியாபாரி சுப்ரமணியன்    ஓட்டி வந்த டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி டூவீலரை நிறுத்தி, விமான நிலையத்தில் இறக்கி விடுமாறு லிப்ட் கேட்டார். 

சுப்ரமணியன் சம்மதம் தெரிவிக்கவே, டூவீலரில் ஏற வாசன் தயாரானார். அதற்குள் ஓடி வந்த திருச்சி மாவட்ட இளைஞர் காங்., முன்னாள் தலைவர் ராஜராஜசோழன், டூவீலரை வாங்கி ஸ்டார்ட் செய்ய, அவருடன் வாசன் விமான நிலையத்துக்கு சென்றார். 

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய அமைச்சரின் கார் மற்றும் பாதுகாப்பு போலீசார், நெரிசலில் இருந்து வெளியேறி விமான நிலையம் வந்தடைந்தனர்.

--------------------------------------------------------------------------------------------------------------
இடம்  :மன்னாரு டீ கடை..

என்னா மன்னாரு.. வாசன் டூ- விலர்ல போயி படம் போடறாரு..அவங்க  தலைவன் மும்பையிலே ட்ரெய்ன் ஏறி படம் போடறாரு..  என்னப்பா நடக்குது ?..

ஆமா.. தலிவா.. வாசன் அய்யா, எம்.எல்.ஏ., ராஜசேகரனின் மகள்  திருமணம் வரும்போது ,  போக்குவரத்து நெரிசலாகி , ரொம்ப மெர்சாயிட்டாருங்க..


சரியா சொன்ன மன்னாரு...போக்குவரத்து போலீசாரை சிறையில் போட்டு நொங்கெடுக்கனும்..அவரு யாரு..?   மூப்பனாரு மகன்.. அவர அவதிபட உட்டவனுகளுக்கு புழல் ...இல்ல..இல்ல , திகார்ல உள்ள போடனும்..
அப்புறம் எம்.எல்.ஏ., ராஜசேகரன் , பண்ற லொல்ளு வேற.. எதுக்கையா போக்குவரத்து நெரிசலாயிருக்கர  இடத்தில கல்யாணம் வைக்கனும்...

அத உடு தல.. கடவுள் மாறி வந்த நம்ம அரிசி வியாபாரி சுப்ரமணியன்யன பாராட்டனும்.. சரிங்களா?.

ஆமாய்யா.. கண்டிப்பா பாரட்டனும்.  அதுல வேற,  'வாசன் அய்யா ஏறத் தாயாரானார்' -னு நியூஸ் சொல்லுது...  டூ-வீலர்ல கு%$#டிய வெச்சு போறது ஒரு சாதாரான விசயம்,  ஆனா உங்க அய்யா , 'ஏறத் தாயாரானார்' சொன்னா.....
இந்த அரிசி , அந்த வண்டிய எவ்வளவு லட்சணத்தில வெச்சிருக்குமுனு நினைக்கிற?...  ஆனா இந்த 'முன்னாள் தலைவர் ராஜராஜசோழன்' கில்லாடியா...உள்ள பூந்து அரிசி வண்டிய வாங்கி  பிரச்சனைய ஒரு வழியா சமாளிச்சுடுச்சே..

காலையிலே, அரிசிய வித்து பெத்ததுகளுக்கு சோறு போடனுமே கவலையிருந்தாலும்,  இதையெல்லாம் விட்டுட்டு... அய்யா கேட்டாருனு , பல்லக் காமிச்சுட்டு வண்டிய கொடுத்தாரே,   அதுக்கே இந்த தேசிய  கட்சிக்காரனுக , 'அரிசி சுப்புக்கு'' ஒரு டாக்டர் பட்டம் கொடுக்கனுமையா..

போங்க தல.. நக்கல் பண்ணிகிட்டு.. எப்படியோ,  முன்னாள் தலைவர் ராஜராஜசோழன், சுப்ரமணியன் கஷ்டப்படக்கூடாதுனு
அவரு வண்டிய எடுத்துட்டு போயி வாசனை  ட்ராப் செஞ்சுட்டாரே....


அடப் போய்யா.. கட்சிக்காரன் கிட்டயே.... வண்டியக் குடுத்திருக்கு இந்த லூசு..
அது திரும்பி வருமாலே ?..மடையனுக...  அந்த  'முன்னாள் தலைவர் ராஜராஜசோழன்' லைசென்ஸ் வெச்சுருக்கும்னு நினைக்கிறயா நீ?... இது எங்கயாவது போயி முட்டுச்சுனா,   நாளைக்கு பேப்பர்ல "வாசன் சென்ற வாகனம் விபத்து " ஒரு செய்தி மட்டுதான் வரும்.

முன்னாள் தலைவர் ராஜராஜசோழன் , கலைஞர் காப்புறுதி வெச்சிருபாயா...
ஆனா,   எல்லோரும் அரிசியோட  டூ- வீலர,  மறந்துடிவாங்களே..
அப்புறம் , அரிசி,   அரிசிய விட்டுட்டு ,  டூ- வீலருக்கு டோக்கன் கொடுக்குற வேலைதான் போகனும்..

சரி தலை.. அரிசி  , வண்டிய கொடுத்திருக்க கூடாதுனு சொல்றீங்களா?.


யோவ்.. வண்டிய மட்டும் அரிசி கொடுக்க முடியாதுனு சொல்லியிருந்தா,
ங்கொய்யா.. அன்னைக்கே , வாயில அரிசியப் போட்டிருப்பானுக, நம்ம  தேசிய தொண்டனுக...  பாவம்யா இந்த அரிசி...அன்னக்கு , ' சனி சைரன் போட்டுட்டு வந்திருக்கு '....  எப்படியும் ,  ஒரு மாசமாயிடும் மன்னாரு..

எதுக்கு தல.. டாக்டர் பட்டம் கொடுக்கறதுக்கா?

யோவ்.. வண்டி திருப்ப கிடைக்கிரதுக்கு..இனி அரிசி,  போலீஸ் ஸ்டேசன் , கட்சி ஆபிஸ்.-னு  கிரிவலம் வந்தா , ஏதோ ஒரு வீலவாவது திருப்பி குடுப்பானுகோ..

அட சாமி.. இந்த செய்தில இவ்வளவு விசயம் இருக்கா.. நமக்கு புரியாம போச்சே..

மன்னாரு.. உனக்கு புரியலேனுதான் நீ டீ ஆத்துற........... புரிஞ்சதாலேதான் நான் தலைவனாயிருக்கேன்..

சரி.. டீ -ய கணக்குல வச்சுக்கோ..
அப்புறம்...... வாசன் அய்யா மட்டும் ஹெல்மெட் போடாம , டூ-வீலர்ல போறாரே..  நீயும் போகலாமுனு , ரோட்டுக்கு போயிடாதே..
போலிஸ் புடிச்சா , ங்கொய்யாலே , டீ-கடைய வித்துதாண்ட மாமூல் கொடுக்கனும்..   பதனமா  நடந்துக்க...
வரட்டா..
.
.
.

Thursday, February 4, 2010

10 நாளில் கோடிஸ்வரன் ஆவதெப்படி ?...

ரொம்ப நாளா , சின்ராசு கண்ணுல படலையே..
நாதாரி இருக்கானா.. இல்ல போயி சேந்துட்டானனு ஒரு டவுட்...


எதுக்கும் 50 டாலரக் கையில எடுத்துகிட்டு ,  'ங்கொய்யா...  இருந்தா நமக்கு.. இல்லாட்டி அவனுக்கு 'னு   நினச்சுட்டு பூன்-லே( BoonLay ) போனேன்..
(எதுக்கா........யோவ்.... இங்க செத்துப்போனா பணத்த கவர்ல போட்டு இழவு வீட்டுக்கு கொடுப்பாங்கய்யா !! )
போயிப் பார்த்தா Mr.சின்ராசு ( பெரிய ஆள் ஆயிட்டான் சார் அவன்.. தப்பு..தப்பு...........அவர் .. )

மூணு செல்போன் சார்..அதுவும் லேட்டஸ்ட் மாடல்
மேல் பாக்கெட்ல் ரெண்டு , பேண்ட் பாக்கெட்ல ஒண்ணு
தோள்ல லேப்டாப்..தலையில தொப்பி..
அதை உடுங்க.......

தலைசீவ...." சீப்பே " ரெண்டு வச்சிருக்கான பார்த்துக்குங்களே.....


சந்தோசமா தோள்ல கைபோட்டு , தேத்தண்ணி( Tea ) சாப்பிட கூட்டிட்டு போறார் அய்யா...   எனக்கு  கை.. நம நமங்க்குது...

"எப்படி சின்ராசு அண்ணே...? இவ்வளவு சீக்கிரம் பெரியாளாயிட்டிங்க?.  லாட்டரில ( 4D../ TOTO ) பணம் பார்த்திட்டிங்க போல...", -கேட்க , ஒரு புன்சிரிப்ப சிரிச்சா பாருங்க... நான் பஸ் வருதானு பார்க்க திரும்பிட்டேன்..( ஊத்த பல்லு சார். மனுசன் அவன் முன்னால்
நிக்கமுடியுமா?..அந்த கேனச்சிரிப்பு மட்டும் மாறல... அவனுக்கு முன்னாடி அப்புடி  சொல்ல முடியுமா பங்காளி...)


சின்ராசு- 'சரி.. தேத்தண்ணி குடிச்சு முடி.. உன்னைய.... என்னோட ஆபிஸ்க்கு கூட்டிட்டுப்போறேன்..'

பய பரவாயில்லையே.. ஆபிஸ் தொறக்கர அளவுக்கு பெரிய மனுசனாயிட்டான்..இவனை கைக்குள்ள  போட்டுவெச்சுட்டா நாளை பின்னே , வெளியூரோ அல்லது ரெட்டையவோ,  முடிக்கும் போது,
 இந்த பீஸயும் கூடப் போட்டுட்டு....  ஆபிசுக்கு நாமளே முதலாளியாரலாம்...னு நான் மனசுல நினச்சத ,   நாயிப்பய மூஞ்சியப் பார்த்தே கண்டுபிடுச்சுட்டான்...

இதுல பயபுள்ள "டாக்ஸில" வேற கூட்டிட்டுப்போறான்..
ஆபிஸ் போறவரை ஏதாவது பேச்சுக் கொடுத்து "Business Tricks"-ச கறந்துடலாமுனு பாத்தா...  ஊகும்.. மனுசன் வாயே தொறக்க மாட்டிங்கிறான்..

சரி.. இவங்கிட்ட இப்படி பேசுனா காரியம் ஆகாது.. வேறமாறி கேக்கலாமுனு  "ஏன் சின்ராசு..   இன்னுமா கார் வாங்கலையா ?" னு நான் கேட்க...
" இல்லப்பு ..பாத்துட்டு இருக்கேன்.  இன்னும் செட் ஆகலை "-னு நக்கலா சிரிக்கிறான்..

ங்கொய்யா.. அப்ப முடிவுபண்ணுனேங்க..  
நானும் பிஸுனஸ் பண்ணி பெரியாளாயி இந்த நாய,   நம்ம ஏரோபிளேனுல ஏத்தக்கூடாதுனு..  
 டாக்ஸி " RedHills- MRT "-யில போய் நிக்குது..

நம்ம ஹீரோ இறங்கி நேரா டாய்லெட் பக்கமா போறான்..
நான் தயங்கறேன்..  கையப் புடிச்சு இழுத்துட்டு போறான்..
பக்கத்தில டேபிள் சேர் போட்டிருக்கு..
மனுசன் பந்தாவா போயி அதில் உக்காந்துட்டு , "மாப்ள.. வா.. ஆபிஸ்-ல உக்காரு..".-னு சொல்றான்..

வந்ததே கோபம்..  "பரதேசி நாயி.. இததான் பிஸ்னசு.. ஆபிஸ்னு பேசிட்டு வந்தயா..        சே..கண்றாவிடா..                  நான் இங்கிருந்தா , எம்பேரு நாறிடும்.. இனி உம் மூஞ்சியில முளிச்சா என்னடானு கேளு"..

பாருங்க சார்.பேச பேச காத்துதான்  வருது...( தப்பா நினைக்காதிங்கண்ணே .. நான் வாயுல.. இல்ல இல்ல  வாயில இருந்து  வர்ர காற்றச் சொன்னேன்)

"டே.. முடிட்டு உக்காரு.. நானும் மூளக்காரன்தான்..10 நிமிசம் உக்காரு.. 100 வெள்ளி சம்பாரிக்கலாம்"-சின்ராசு..

"என்ன ... அவனுகளுக்கு கு^% கழுவியுட்டா ?"..கோபமா நான் கேட்க,

"பரதேசி.. கோவத்துல கூட,  உனக்கு மூளை வேலை செய்யாதா?..இவனுக எங்கடா தண்ணியூத்தி கழுவுவானுக?.  எல்லாம் பேப்பர்தான்"   அந்த 'situvation' -லையும்  நாயிக்கு நக்கல் பாருங்க...

"சின்ராசு.. நான் கிளப்பரேன்.. யாராவது பாத்தா,   நாய்க்கர் மகன் கக்கூசுல காவலிருக்கானு எங்கப்பனுக்கு
போட்டு குடுத்துருவானுக .. அப்புறம்"
-   நான் பின்னாடி தேச்சுட்டு எந்திரிக்க...

"பாரு... பிஸ்னஸ் வர்ற நேரம் இப்படி கத்திட்டு இருக்காதே.. ஒரு 5 நிமிசம் அப்படி ஓரமா நின்னு கவனி " - சின்ராசு.

நானும்,  அவனுக்கும் எனக்கும் சம்பந்தமில்லாத மாறி கொஞ்சம் தள்ளி நின்னுக்கிட்டேன்...

ஒரு சீனன் ஓடி வர்றான்.. சின்ராசு பல்ல காமிச்சுட்டு  "  Tissue paper " -ர கொடுத்துட்டு உள்ள கையக்காண்பிக்கிறான்.

தாங்க முடியல சார்.. நேராப் போனேன்..

"யோவ்.நாதாரி.. காசு போட்டு டிஸ்யு பேப்பர்  வாங்கி,  இந்த கம்மனாடிகளுக்கு சும்மா கொடுக்கறையா?....நீ ஒரு பிஸ்னஸ் மேக்னெட்னு உங்கூட வந்தேன் பாரு..என்னய்ய......

சே... இந்த பொழப்பு பொழைக்கிரதுக்கு ,  பெருமாள் கோயிலில(செராங்கூன்),   உண்டகட்டி வாங்கித் திங்கலாமடா..
" சொல்ல

சின்ராசு 'பொறுடா.. இப்ப நடக்கறதப் பாரு.தக்காளி.. 5 நிமிசனு சொல்லியிருக்கேனில்ல ' சொல்ல   நான் திரும்பி பழைய எடத்துக்கே வந்து நின்னுட்டேன்...

2 நிமிசம் இருக்கும் சார்.. வேகமா உள்ள போன சீனன் ,
கால விரிச்சுட்டு நடக்கமுடியாம , மெதுவா திரும்பி வரான்..சின்ராசும் அவனும் என்னவோ பேசிக்கிராங்க..   சீனன் அவங்க பாசையில ,  அனேகமா சின்ராசு பரம்பரையத் திட்டுறானு   புரியுது..    ங்கொய்யா.. அதுக்கும் அசராம பல்லை காமிச்சுட்டு நிக்கிறான் சார்...

சீனன் பாக்கெட்-ல இருந்து 50 வெள்ளியெடுத்து நம்மாளுகிட்ட கொடுக்கறான்..  பய வாங்கி சொருகிட்டு (பாக்கெட்ல) , வேற Bag-ல இருந்து  டிஸ்யூ எடுத்து அவனுக்கு கொடுக்கறான்..  சீனன் வாங்கிட்டு பரிதாபமா திரும்பவும் உள்ள போறான் சார்..

சின்ராசு திரும்பி,  என்னைப் பாத்து கண்ண வேற சிமிட்டறான்..
என்னடா இழவு நடக்குது ?. நிமிசத்தில 50 வெள்ளி சம்பாரிச்சுட்டானே..நல்ல மண்டக்காரந்தான் நினைச்சுட்டு..... பக்கத்தில போயி "என்ன சின்ராசு நடக்குது..எனக்கு ஒண்ணுமே புரியல-னு மண்டையச் சொறிஞ்சேன்..

டேய்.. முதல்ல நான் சும்மா கொடுத்தது உப்புக்காகிதம் ( SandPaper..பெயிண்ட் அடிக்கறது முன்னாடி   சுவத்தில தேய்ப்பாங்களே.. அது )..
அப்புறம் ரெண்டாவதா தந்தது  "  Tissue paper " .. ஆனா அதுக்கு விலை....   நான் சொல்ற ரேட்டுதான்..

கொஞ்சமா புரிஞ்சுடிச்சு.. நானும் மண்டக் காரனாச்சே..
'சரி.. தொடச்ச பிறகு , பார்த்தா ,  அவனுகளுக்கு உப்பு காயிதமுனு தெரிஞ்சுடுமே..அப்ப மாட்டிகுவே மாப்ள..'

டேய்.. மனுச சைக்காலஜி தெரியுமா முட்டாளே?.. எவனாவது தொடச்சுட்டு பார்ப்பானாயா?..  வேற வழி......உள்ள பேப்பரு இல்ல.............
வா........................ நம்மகிட்ட................அப்ப,   நான் சொல்ரதுதான் ரேட்டு..

'அப்ப அந்த செல்போனு , லேப்டாப் எல்லாம்" .- நான் இழுக்க
சின்ராசு - " காசு இல்லாத பன்னாடைக இப்படி கொடுத்திட்டு போயிடரானுக.. நான் ரொம்ப நாளா  நல்ல கார் வேணுமுனு பாத்துட்டு இருக்கேன்'  சொல்றான்..

சரி மக்கா... ஊர்ல எல்லாரும் தண்ணிய யூஸ் பண்ணுவாங்களே.
அப்ப எப்படினு யோசனை பண்றீங்களா?..

 உங்க பிரச்சனை புரியுது... ஊர்ல ஜாவா சுந்த்ரேசனுக ஜாஸ்தி..
அவனுக  வேலை செய்ய இடத்தில போயி நீங்க உங்க வேலையச் செய்யுங்க...  அட.. "அந்திய மோகம் இருக்கும்வரை " ......... நாமதான் "கிங்கையா ( king ) "...
.
.
.

Wednesday, February 3, 2010

பட்டாபட்டி தலைவர் பதவியிலிருந்து ராஜினமா !!!

கடந்த இரண்டு வருடங்களாக நடந்த உட்கட்சி  மாநாட்டிலே ( யோவ்.. வெளியூரு.. பட்டாபட்டிய உருவாதையா...சொல்லிறேன் )  முடிவெடுத்த கருத்துக்களை உங்கள் முன் வைக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்..( லெமன் சூசு வேண்டாய்யா...)

இன்று முதல் ரெட்டை வால் இந்தியாவின் மன்னராக முடிசூட்டிக்கொண்டு டெல்லிக்கு  பயணமாகிறார்.  ( யோவ்.. அந்த தொப்பியக் கழட்டி மக்களுக்கு காமியா...)

மேலும் ( செருமல்.. ) அன்புத் தம்பி , என் உடன்பிறப்பு, ராணுவத் தளவிதியாக.. சாரி......,,ராணுவத் தளபதியாக பொறுப்பேற்கிறார்..

மேலும் பட்டாபட்டி , மகளிர் அணிக்கு, தலைவராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்..

மன்னராகப் பொறுபேற்றுள்ள ரெட்டைக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பது எல்லோரும் அறிந்ததே.. ஆகவே அவர் , நாளை முதல் , காலை வேளையில் தெருவீதி உலா வருவார் என்பதை  தெருவித்துக்கொள்கிறோம்..  பட்டத்து இளவரசியாக விருப்பமுள்ளவர்கள், காலை எழுந்து வாசலில் கோலம் போட ஆயத்தமாகுங்கள்.

கடைசியாக ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்..
ங்கொய்யாலே..
எவனாவது திவாரி , தேவ நாதாரிய...... மாமன் மச்சான் சொல்லி ,
மகளிரணிக்கு சேர்க்க ஆசைப்பட்டா , அடுத்த பாரதப் போர் வரும் என தாழ்மையுடன் சொல்லிக் கொள்ள விருப்பபடுகிறேன்..


( யோவ்.. நான் பெரிய மனுஷனய்யா.. தலைமைய.... ஒரு பதிவுக்காக விட்டுக்கொடுத்த பொன்மனச் செம்மல் என நாளை சரித்திரம் சொல்லும்..
என்ன பதிவா?.. எழுதினாம் பாருய்யா ஒரு பதிவை.. சூப்பர் அப்பு.. கம்பெனியில் சிரிச்சு .. சிரிச்சு மற்றவனுக  என்னைய கேணத்தனமா பார்க்க வச்சதால..........இனி தலைமையில இருந்தா எனக்கு மதிப்பில்ல.. யோவ்.......வெளியூரு. மரியாதையா டெய்லி ஒரு பதிவை போடு...

யோவ் ரெட்டை வாலு.. உனக்கும் தான்.. மார்க்கெட் நாளக்குகூட பண்ணிக்கலாமையா..
கம்பெனி என்ன... ஓடியா போகப்போகுது.. )
.
.
.

ப.மு.க வில் திடீர் திருப்பம்..

கடந்த இரண்டு நாட்களாக , ப.மு.க ஏற்பட்ட உட்கட்சி பூசலினால் , தமிழகமே இருண்டது...

சாலைகள் வெறிச்சோடிக்கிடந்தன..மக்கள் வீதிகளுக்கு வர
அஞ்சி , சீரியலே கதி என இருந்தனர்..  சிறையில் இருந்து தப்பிய பட்டாபட்டியார் , மீண்டும் அரியணை ஏறினார்..

அவர் , தினக்குசும்பு நிருபருக்கு அளித்த பேட்டியில்,
'எதிர் கட்சிக்காரர்களின் சதியினால் , வெளியூரான் மற்றும் ரெட்டைவால் மனம் மாறி , உட்டாலங்கடி வேலை செய்துவிட்டனர்.. கட்சியில் உள்ள களர்களை வெட்டியெடுக்க ,  மீண்டும் உயிர்தெரிந்ததாகவும்..இனி மக்கள் பயப்படத் தேவையில்லை' என கண்ணீர் மல்க உரையாற்றினார்..

மேலும் அவர் கூறுகையில் ,'வெளியூரான் மற்றும் ரெட்டைவால்' பிடிக்க
தமிழ் நாட்டிலிருந்து சிறப்பு காவல் படை அமைக்கப்பட்டுள்ளதாக
தெரிவித்தார்..

நமது நிருபர் தலைவரை பார்த்து ' அந்த இருவரையும் பிடித்து தூக்கிலிடுவீர்களா? அல்லது  நாடு கடத்த திட்டமா ?; என்று வினவிய போது,  'பொறுத்திருந்து பாருங்கள்...காலம் பதில் சொல்லும் ' என கூறினார்...

இங்கு நடந்த அமளி அமெரிக்காவிலும் எதிரொலித்தது.. அதை கட்டுப்படுத்த திணறிய 'ஓபாமா'  பட்டாபட்டியாரை தொலைபேசியில் அழைத்து 'கலவரத்தை ஒடுக்க , அமெரிக்கா வர முடியுமா?' என் கெஞ்சியதாக
உளவுத்துறை செய்தி அறிக்கை கூறுகிறது...

பட்டாபட்டியார் நாற்காலியை இறுக்க பற்றியபடி , 'தாம் அயல் நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற கொள்கை வைத்துள்ளதாக பதிலளித்தார்.

கிளின்டனும்,மற்றும் மோனிகா இருவரும் நியூயார்க் டைம்ஸ்-க்கு அளித்த பேட்டியில்,
Such a great person , who was survey from the great local politics...
I still remember, ' When i was struggle with Monica law suit , I follow and implement his advice
to bring back my reputation.. Even Monica is keen interested to visit pattapatti palaceகடைசியா வந்த தகவல்களின்படி , ,'வெளியூரான் மற்றும் ரெட்டைவால்' திருப்பதியில் உண்டகட்டி வாங்க க்யூவில் நின்றபோது , காவல் துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டனர்.

அதைபற்றி காவல் துறை அதிகாரி 'குத்து கருப்பன் ' கூறியது....
இருவரையும் பிடிக்க இந்தியா முழுவதும் வலைவீசலாமா.. அல்லது எலிப்பொறி வைத்துப் 'கப்' என பிடிக்கலாமா?  என ஆலேசனை செய்து கொண்டிருந்த போது , தலைவர் தொலைபேசியில் அழைத்து , ' அரசாங்க பணத்தை வீண் செலவு செய்யாமல்  உடனடியாக ரயில் ஏறி திருப்பதி செல்லுமாறு கூறினார் ...

தலைவர் சொன்னால் அதில் உட்கருத்துதிருக்கும் என ஊகித்து , விரைந்து திருப்பதி சென்றோம்  (ஹி..ஹி.. டிக்கெட் எடுக்காமல்தான்)..

மிகவும் பசியாக இருந்தனால் உண்டகட்டி வாங்க 'க்யூ'வில் நின்றோம்...
அப்போது சந்தேகத்துகிடமான வகையில் இருவர் உண்டகட்டியை கைகளில் ஏந்தியபடி  படிக்கட்டில் அமர்திருந்தனர் ..அதில் ஒருவர், முகத்தை தொப்பியால் மூடியபடி குனிந்து  அவரது பட்டாபட்டியப் பார்த்தவாரு கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தார்..

மற்றொருவர் , மொட்டை அடித்துக்கொண்டு , முகத்தில் சந்தனம் பூச முயற்சித்து கொண்டிருந்தார்..

எங்களுக்கு சந்தேகம் வந்ததால் , ஏட்டு ஒருவரை அனுப்பி என்ன பேசுகிறார்கள் என் ஒட்டுகேட்க   அனுப்பினோம்..
"சே.. ஏரோப்ளேன் பெட் ரோல் ஊத்தி கொழுத்தியிருந்தால் , நாமே ராஜாவாக இருந்திருக்கலாம்"  எனப் பேசிக்கொண்டு இருந்தனர்..

நாங்கள் உடனடியாக இருவரையும் கைது செய்து டெல்லிக்கு அனுப்பிவிட்டோம்..  இனி தலைவர் பார்த்துக்கொள்வார்..

மேலும் அவர் கூறுகையில் , 'தமிழகத்தில் இருள் நீங்கி .... புத்தொளி பிறக்க தலைவர் ஆவன செய்வார் என் நம்புகிறேன்..
அப்படியே அடுத்த முறை எனக்கு, பதவி உயர்வு கிடைக்க ஏழு மலையாண்டவருக்கு மொட்டை போடப் போவதாக கூறியுள்ளார்...

.
.

Tuesday, February 2, 2010

ப.மு.க பொதுகுழு அறிக்கை

ப.மு.க பொதுகுழு அறிக்கை
கழகக் கண்மணிகளே.. ஏன் உடன்பிறவா ரத்ததின் ரத்தங்களே..
உங்கள் கை தட்டல் ஓசையினால் , டெல்லி அதிர்கிறது..
நான் அன்றே சொன்னேன் ' வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது' என்று..
( யோவ் .. என்ன பேச உடுங்கடா நாதாரிகளா..1 குவாட்டர்+ 1 ப்ளேட் பிரியாணிக்கும் இது ஓவர்யா )

நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்திலே ( கை தட்டல்...சோமாறிகளா..
கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவேயில்லையாடா..
. ) உடன் பிறப்புகளின் கலந்துரையால் நல்லவிதமாக நடந்து முடிந்தது...

அங்கு பரிமாறிய கருத்துக்களை , இங்கு பரிமாறினால் , மத்திய அரசிடம்
நிதி கேட்டு தந்தி அடிக்கும் நிலை வந்தூவிடும் என்ற காரணத்தால்

( யோவ்.. சோடா கொடுயா.....) கருத்துகளை வெட்டி , ஒட்டி  உங்களுக்கு புரியும்வண்ணம் அளிக்கிறேன்..( கை தட்டல்)

வெளியூர்காரன் மற்றும் ரெட்டை வால்ஸ் இருவருக்கும் பதவி மேல் என்றுமே
ஆசையிருந்ததில்லை..( சரி..சரி.. கத்திய உள்ள வைய்யா..
ஆய்.. ஊய்ன சபையில கத்திய தூக்காதேனு எத்தனை தடவை சொல்வது
)
அவர்களை அப்படியே விட்டுவிட்டால் தேசசஞ்சாரம் போய்விடுவார்களோ என்று  மனது அழுகிறது...

உயிரோடு இருக்கும் போதே திதி வைத்துவிடுவார்கள் என் உள்ளுணர்வு சொல்வதால்,  உடனடியாக கட்சியை இரண்டாகப் பிரித்து இன்று முதல்

ப.மு.க
ப.மு.க


என இரு வேறு அணிகளாக செயல்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கோள்கிறேன்..

கண்மணிகளே, நன்றாக உற்றுப் பாருங்கள்..
முதல் கட்சி நீல நிறத்திலும்   அடுத்த கட்சி மஞ்சல் நிறத்திலும் பிரிக்கப்பட்டுள்ளது..   உங்கள் விருப்படி , நீங்கள் இந்த இரண்டு கட்சிகளுக்குமே   வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் நாளை செய்தி வெளியிடும்

மற்றும் இன்று முதல் , தமிழ் நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும்
ஒரே குடையின் கீழ் வருகிறது...

அன்புத்தம்பி வெளியூரான், அண்ணன் சண்முகவேலுக்கு,
சென்னையிலிருந்து , தஞ்சாவூர் வரை ரன்வே அமைக்கும் டெண்டரில் முதல் கையெழுத்திடுவார் என்பதை   கரகோசங்களுக்கு நடுவே சொல்லிக்கொள்கிறேன்..
( யோவ் ரெட்டை..அந்தப் பக்கம் கை தட்டல் கம்மியா வருது. . என்னானு பாரு..
அப்புறம் கோவத்திலெ யாரையாவது கொடும்பாவி ஆக்கிடாதையா.
.)

மேலும் மற்றுமொரு தம்பி ரெட்டைவால் அண்ணன் வெளியூருக்கு ஆதரவு தந்து கொண்டே ,   அடுத்த ஆட்சிக்கு குழி பறிப்பார் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்..

மேலும், அன்பு அண்ணன் பட்டாபட்டியாகிய நான் சாகாவரம் பெற்றவன் என்பது   உலகம் அறிந்ததே..

ஆகவே... நீல  நிறக்கட்சி, தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும்,

மஞ்சள் நிறக்கட்சி மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆட்சி செய்யும்..

மற்ற நேரங்களில் , உங்கள் ' சாகாவரம் பெற்ற சாதனை சக்கரவர்த்தி ' பட்டினத்தாரின் மறு அவதாரமான
உங்கள் ... உங்கள் பட்டாபட்டியார் நல்லாட்சி செய்வார் என்பதை கண்டிப்பாக தெரிவித்துக் கொள்கிறோம்..

யோவ்.. கேட்டு கதவ இழுத்து மூடுங்கடா.. யாரு யாரையினு பார்த்திடலாம்..

இப்போது , வெளியூரு மற்றும் ரெட்டை வால் களத்தில் இறங்கி , கூடியுள்ள தொண்டர்களுக்கு பணம் வழங்குவார்கள்..
 
அவர்கள் உடம்பினுல் வெளியூர் மற்றும் உள்ளூர் கரென்சிகள் ஒளித்து வைக்கப்பட்டுள்ளது

தொண்டர்களே.. உங்கள் திறமைய காட்ட சரியான சமயம்..
சீறிப் பாயுங்கள்.. பரிசினை பெற்றிடுங்கள்..
உங்களால் எவ்வளவுக்கு எவ்வளவு எடுக்க முடியுமோ , அத்தனையும் அள்ள ஆசைப்படுங்கள்.
நமக்கு அவர்களின் உயிரை விட அவர்களின் மயிர் ( சாரிங்க.. ஒரு ப்ளோல வந்திருச்சு..) பணம்  முக்கியம்..

வென்றிடுவீர் .. வேல்... வேல் .. வீர வேல்...

லூசாயா நீயி?..மரம் வைக்கறானுகளாமா !!!...

அய்யா பட்டாபட்டியாரே..
நான் கல்லூரியில் , முதலாம் ஆண்டு படித்துவருகிறேன்..எனது சீனியர் மாணவர்கள்,   'அலட்டல்' என்ற பெயரில் நடத்தும் 'லொள்ளை' தாளமுடியவில்லை..

அன்று ஒரு நாள் , பூச்செடிகளை நடலாம் என் நினைத்து ,( ஏதோ இந்த செமஸ்டரில் , கொஞ்சம் படம் காண்பித்து 'Internal Marks'
வாங்கலாமென...ஹி..ஹி ) எங்கள் வகுப்பு மாணவர்கள் , கஷ்டப்பட்டு குழி தோண்டினோம்..

நல்ல கரடு முரடான பூமி.. ஒரு அடி தோண்டிவிட்டு ,முடியாததால்... தண்ணீரை ஊற்றிவிட்டு, மறு நாள் தோண்டலாம் என நாங்கள்
ஹாஸ்டலுக்குப் போய்விட்டோம்..
மறு நாள் வந்துபார்த்தால் , எங்களுக்கு ஆச்சரியம்..

இந்த சீனியர்கள் , விடியக் காலை வந்து , அந்த ஈரமணலை ஈசியாக அகற்றிவிட்டு , பூச்செடிகளை நட்டுவிட்டனர்.
அதுமட்டுமா.. அருகில் 'இரண்டாமாண்டு மாணவர்களின் சமூகத்தொண்டு ' என்ற போர்ட் எங்களைப் பார்த்து பல்லிளிக்கிறது..
எப்படியிருக்கும் சார் எங்களுக்கு..

நேரா போயி, மூஞ்சியில குத்தலாம் என்றால், தடி தடியாக நிற்கிறார்கள்.. நாங்கள் என்ன சார் செய்வது...?

-இப்படிக்கு ஜுனியர் பயலுக..
யோவ்.. நல்லா வருது வாயில...
படிக்க அனுப்பினா , படிக்கறத தவிர , மற்றதெல்லாம் பண்றீங்க..
என்னயா நினச்சுகிட்டு இருக்கீங்க மனசுல...

மார்க் வாங்கனுமுனா , சனி ஞாயிரு , வாத்தியாருவீட்டுக்குப் போயி மாடு , கன்னு கழுவு..   இல்லாட்டி , அவங்க காரு, பைக்க கழுவு.. அத விட்டுட்டு , பூச்செடி வைக்கரானுகலாமா..

என்னய உடுங்க வெளியூர்காரரே.. ஒரு கை பாத்துக்கறேன்..

ஏய்யா.. செடி கொடியெல்லாம் வெச்சு 'போட்டா' புடிச்சு , இப்பதான் அரசியல் பண்ணிட்டு இருக்கோம்..  நடுவுல வந்து குறுக்கு ஒழவு ஓட்டுட்டு இருக்கானுக...

நீ படிக்கறப்போ வந்து நாங்க ஏதாவது மார்க் வேணுமுனு பிரச்சனை பண்ணினமா?.    அப்புறம் எதுக்கையா , எங்க தொழிலுக்கு ஆப்பு வக்கிறீங்க..

சின்னப் புள்ளத்தனமா பண்ணிகிட்டு..சரி.. சரி.. அழுவாத..கண்ணத் தொடச்சுக்க....

இப்ப சொல்றேன் கேட்டுக்கோ..இந்த கேங்க் சேர்த்துட்டு , செடி நட்டரது ,
சமூக சேவையினு ஊர் கூட்டரது.. கோலம் போடரது.. இதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்..  மீறி ஆசையினா , எங்க கட்சி பேனர்ல செய்யி..... உன்னைய வேண்டாங்கல...
 
சரி.. உங்க பிரச்சனைக்கு வரேன்..தேன் எடுக்கறவன் ஒருத்தன்.. ந%#$# போறவன் இன்னோருத்தன்.. அடுத்த தடவை என்ன பண்ணு.!!!.....காலேஸ்-ல கொடிய நடப்போறோம்னு மைதானத்துல, நட்ட நடு சென்டரல ,
ஒரு குழியத்தோண்டு ..

எப்போ மாறி , கொஞ்சம் தண்ணி ஊத்திட்டு , 'ரூம்' -க்கு போயிடுங்க..
ஆனா, காலையிலே 4 மணிக்கு அலாரம் வெச்சுட்டு , ஒரு நாலு பய புள்ளைக மட்டும் எந்திருச்சு,   இந்த குழில , ஒண்ணு, ரெண்டு முடிஞ்சா   மூணு எல்லாம இருந்துட்டு , நிம்மதியா போயி  பட்டாபட்டிய நினைச்சுட்டு தூங்குங்க...

அந்த சீனியரு நாறப் பயளுக , காலையில வந்து மண்ண வெளிய எடுத்து போட்டு  நாறட்டும் ...நல்லா விடிந்த பிறகு ,   ' பட்டாபட்டி வாழ்க ' ஒரு போர்ட பக்கத்தில வெச்சு ஒரு  மாலையப் போட்டு பத்திரிக்கைக்கு நியூஸ்-க் குடு....

இதுக்குப் போயி...
.
.
.

மைக் டெஸ்டிங்க்.. One.. Two.. Three

அப்பு.. நாளைக்குப் பார்க்கலாம்..
தூக்கம் வருது சார்..
...
..
என்னது டைமா?.. இங்க 2 AM  சார்.

Monday, February 1, 2010

வெளியூர்காரனுக்கு வக்கீல் நோட்டீசு....

சார்.. நீங்களே கேளுங்க அ நியாயத்தை...

நேற்று , வெளியூர்காரன் தமிழ் ப்ளாக் - பதிவர்களுக்கு ஒரு எச்சரிக்கை விட்டிருந்தார்..

நானும் நைட்டு ஒரு மணிவரைக்கும்,  கட்ட பஞ்சாயத்து பண்ணி
ஒரு வழியா பிரச்சனைய முடிச்சாசுங்க...

ஆனா பாருங்க..மற்றவங்க பிரச்சனைய முடிச்சா போதுங்களா?..
நம்ம பிரச்சனைய யாருங்க முடிப்பா?..

யோவ்.. என்ன பிரச்சனையினு சொல்லித்தொலைக்கிறதா?
பார்த்தீங்களா. உங்களுக்கே இவ்வளவு கோபம் வருது...
அப்ப எனக்கு எப்படியிருக்குங்க..

அவரு சொன்னவரை போட்டு தள்ளினதுக்கு இன்னும் கவரு வந்து சேரலிங்கோ..
நேத்து 3 மணிக்கு ஒரு தடவை,
4 மணிக்கு ஒரு தடவை,
அப்புறமா காலங்காத்தாலே 10 மணிக்கு ஒரு தடவை, லெட்டர் பாக்ஸ்-ச தொறந்து பாத்தாச்சுங்க..

ஒரு மனுசன் , எவ்வளவு தடவை தான் 10 மாடிக்கும்........ மேல, கீழ ஏறி இறங்கிறது?..

சார்.. படிக்கற உங்களுக்கே இவ்வளவு கோபம் வருதுங்களே..
பண்ணுன எங்களுக்கு எவ்வளவு கோபம் வருமுங்க...

போன மாசம் 500 ரூபா அனுப்பினாருங்கோ
அதுக்கு அடுத்து 1000 ரூபா கொடுத்தாருங்கோ..
போன வாரப் பிரச்சனைக்கு 5000 ரூபா செட்டில் பண்ணிணாருங்கோ..

ஆனா, இப்ப மூச்சே காணோங்கோ...
பதிவப் படிச்சதும் ஆபிஸ்க்கு 10,000  ரூபா அனுப்பி வைக்கச் சொல்லுங்கோ...

ஆபிஸ்ல யாருமில்லாட்டி கேட்டுக்கு முன்னாடி போட்டுட்டு போகச்சொல்லுங்கோ...


( அய்யா வெளியூர்காரரே..விலைவாசி எல்லாம் ஏறிப் போச்சு.. கொஞ்சம் போட்டு குடுங்க நைனா..)

சே.. சே.. வெக்கமா.. எனக்கா..
போங்க சார் டமாஸ் பண்ணிகிட்டு..

கவர மட்டும் மறக்காம அனுப்பி வெச்சுருங்க அப்பு... 
.
.
.