Pages

Tuesday, February 9, 2010

வெளியூர்காரனுக்கு ஒரு அட்வைசு...

நம்ம கழகக்கண்மணிக்கு ( பேரு சொல்லமாட்டேன் சார்...) ரொம்ப நாளாவே ,

 • காலையிலே எந்திருச்சா, கை , கால் வலிக்குது...
 • கம்யூட்டரைப் பார்த்தா கண் எரியுது...
 • டீவீ பார்த்தா காது வலிக்குது...
 • மூச்ச விட்டா மூக்கு வலிக்குது...
 • சாப்பிட்டா வாய் வலிக்குது.... என சொல்லிக்கொண்டிருப்பது
உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன்..

அவரது பிரச்சனைக்கு தீர்வு.... ' காரமடை ஜோசியரின் ஆலோசனைப்படி இன்று முதல் உடற்பயிற்சி  செய்வதுதான் ஒரே வழி ' என்பதை  தெரிவித்துக்கொள்கிறேன்..

இத்துடன் அவர் கொடுத்த விளக்கவுரையை உங்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்

முதல் ஸ்டெப்...
( அதை 20 முறை வெறும் வயிற்றில் செய்யவும்)
.
.
.
.

.


இரண்டாவது ஸ்டெப்...
( இதை உச்சி வெயிலில் , உள்ளங்காலில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு
செய்யவும்.. உச்சந்தலையில் இறங்கும் சூடு, உள்ளங்கால் வழியாக
வெளியேரும் வரை செய்யவும் )
.
.
.
.

.

கடைசி ஸ்டெப்..
இதை செய்வதற்க்குமுன் , 1 லிட்டர் நல்லெண்ணையை எடுத்து ,
அதில் ஒரு டீ- ஸ்பூன் மட்டும் வயிற்றில் தடவிக்கொள்ளவும்..
மீதி எண்ணெயை உங்கள் குலதெய்வத்தை நினைத்து , ஒரே மூச்சில்
குடித்துவிடுங்கள்.

.
சரியாக இரண்டு நிமிடம் கழித்து , வயிற்றில் கட, முடா என சத்தம் கேட்கும்..
ஆம்.. இதுதான் சரியான நேரம்..இப்போது கீழ்கண்ட படத்தில் உள்ளவாரு,
உயிர் போகும்வரை செய்யவும்...
.
.
.
.
.
.

இதை தினந்தோறும் செய்து வந்தால் , இருமல்,. வாயு , கை கால் வலி
அட.... மூச்சே நின்றுவிடும்..

(முக்கிய குறிப்பு.. குரு காணிக்கையாக உங்கள் சொத்தை ,
60% பட்டாபட்டிக்கும் ( ஐடியா நம்மளது ),
20% ஜோசியருக்கும் ( பாவம்...)
10% மன்னருக்கும் (ஹூம்.. வேற வழி )
5% வெளியூருக்கும், ( என்ன சார் பண்ணித் தொலைக்கிறது )
மீதி 5% ரோஸ்விக்குக்கும் எழுதி வைத்துவிட்டு இந்தப்பயிற்சியை ஆரம்பிக்கவும்...)

இது மட்டும் வெற்றிகரமாக நடந்து முடிந்தால் , எனது
ராணுவ தளபதிக்கு பரிந்துரைக்க, மகளிர் அணி முடிவுசெய்துள்ளது...

24 comments:

 1. ஏன்.. அப்பு விளக்கெண்ணயை யூஸ் பண்ணக்கூடாதா?

  ReplyDelete
 2. ஏன் அப்பூ இந்தக் கொல வெறி?

  ReplyDelete
 3. சும்மா டமாசு.. ஹி..ஹி..ஹி..
  யாராவது try பண்ணிடாதீங்க அப்பு...

  ( முதல்ல வெளியூரானுக்கு பண்ணச்சொல்லி என்னாகுதுனு
  பார்த்துட்டு பண்ணலாம் சாமிகளா....)

  ReplyDelete
 4. கடைசி ஸ்டெப் அசத்தல்ணே...

  ReplyDelete
 5. அட்டகாசம் தாங்கமுடியலே....முதல்ல உங்களுக்கு கையக்காலக்கட்டி புனல்வழியா ஊத்தணும்....

  ReplyDelete
 6. //க.பாலாசி said...
  கடைசி ஸ்டெப் அசத்தல்ணே...
  //
  அண்ணா கொஞ்சம் வெயிட் பண்ணிட்டு
  டிரை பண்ணுங்க.. ( வெளியூரான் கதிய பார்த்துட்டு சார்...)

  ReplyDelete
 7. //கண்ணகி said...
  அட்டகாசம் தாங்கமுடியலே....முதல்ல உங்களுக்கு கையக்காலக்கட்டி புனல்வழியா ஊத்தணும்....
  //

  புனலெல்லாம் எதுக்குங்க..
  வீட்டு காபியக் குடிச்சு குடிச்சு , 1 லிட்டர் விளக்கெண்ணைய
  ராவா அடிக்கற அளவுக்கு உடம்பு ரெடியாயிடுச்சுங்க...
  ( ரைட் .. இன்னக்கு சாப்பாடு கட்..
  பட்டாபட்டி.. பயந்துக்காதே..
  என்னாகுதுனு பார்த்திடலாம்)

  ReplyDelete
 8. நான் கூட கொஞ்சம் சீரியஸாப் படிக்க ஆரம்பிச்சிட்டேண்ணே! நல்ல வேளை, முழுசாப் படிக்கிறதுக்கு முன்னாலே விஷப்பரீட்சையிலே இறங்கலே! :-))))

  ReplyDelete
 9. //சேட்டைக்காரன் said...

  நான் கூட கொஞ்சம் சீரியஸாப் படிக்க ஆரம்பிச்சிட்டேண்ணே! நல்ல வேளை, முழுசாப் படிக்கிறதுக்கு முன்னாலே விஷப்பரீட்சையிலே இறங்கலே! :-))))
  //

  நமது ப்ளாக் , ஒன்லி கலாய்க்கிறது மட்டும் தான் சார்.....
  நல்ல வேளை சார்.. தப்பிச்சுட்டிங்க...

  ReplyDelete
 10. வணக்கம் ஒய்..கொஞ்சம் வேலை அதிகம்...அதான் பஞ்சாயத்துல கலந்துக்கு முடியல...கூடிய சீக்கிரம் வந்துடறேன்..எல்லாரையும் பத்திரமா பார்த்துக்கங்க... :)

  ReplyDelete
 11. வேலை அழுத்தம் காரணமாக, கீழ்கண்ட சந்தகங்களை பட்டாபட்டியிடம் விளக்கம் கேட்டுவைக்குமாறு, ராணுவத் தளபதி வெளியூர்காரன் எனக்கு தகவல் அனுப்பியுள்ளார்...

  //முதல் ஸ்டெப்...
  ( அதை 20 முறை வெறும் வயிற்றில் செய்யவும்)//

  யாருடைய வெறும்வயிற்றில் ஏறி என்பதை குறிப்பிடவும். ரோஸ்விக், மன்னர், இலுமு தவிர வேறு யாரையாவது குறிப்பிடவும். அவர்களிடம் ஏற்கனவே முயன்றும் பலனில்லை.

  ReplyDelete
 12. //இரண்டாவது ஸ்டெப்...
  ( இதை உச்சி வெயிலில் , உள்ளங்காலில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு
  செய்யவும்.. //


  உள்ளங்கால் என்னிடம் உள்ளதால் செய்துவிட்டேன். உச்சிவெயிலில் தேய்க்க தாங்கள் உதவி செய்ய முடியுமா? உச்சிவெயிலின் உச்சியை என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை...

  ReplyDelete
 13. //கடைசி ஸ்டெப்..
  இதை செய்வதற்க்குமுன் , 1 லிட்டர் நல்லெண்ணையை எடுத்து ,
  அதில் ஒரு டீ- ஸ்பூன் மட்டும் வயிற்றில் தடவிக்கொள்ளவும்..//

  எவ்வளவு தேடிப்பார்த்தும் அந்த ஒரு லிட்டர் நல்லெண்ணையில், என்னால் அந்த ஒரு டீஸ்பூனை கண்டுபிக்கமுடியவில்லை. எண்ணெய் கம்பெனியிடம் விசாரித்ததில் இப்பொழுதெல்லாம் அவர்கள் டீஸ்பூன் இலவசமாக தருவதில்லை என்று கடுப்பாக கூறிவிட்டார்கள்.

  என்ன செய்ய??

  ReplyDelete
 14. //மீதி எண்ணெயை உங்கள் குலதெய்வத்தை நினைத்து , ஒரே மூச்சில்
  குடித்துவிடுங்கள்.//

  ராவாகவா இல்லை ஏதேனும் பூச்சி மருந்து கலந்து குடிக்க வேண்டுமா??

  ReplyDelete
 15. //சரியாக இரண்டு நிமிடம் கழித்து , வயிற்றில் கட, முடா என சத்தம் கேட்கும்..//

  இரண்டு நிமிடங்களும் கழிந்து போனால்... பிறகு நான் எப்படி அதே வேலையை செய்யமுடியும்??

  ReplyDelete
 16. //உயிர் போகும்வரை செய்யவும்...
  .
  .
  .
  இதை தினந்தோறும் செய்து வந்தால் , இருமல்,. வாயு , கை கால் வலி
  அட.... மூச்சே நின்றுவிடும்..//

  கொலை கேசு ஆகிவிடாதா??

  ReplyDelete
 17. எங்கய்யா தமிழிஷ் ஓட்டு பட்டை..?? ஜனநாயக கடமை ஆற்ற விடமாட்டீர் போலயே... தமிழ்மணத்துல நான் மட்டுந்தான் குத்திருக்கேன்...

  நீங்களும் குத்தும் ஓய்....

  ReplyDelete
 18. @ரோஸ்விக் said...
  வேலை அழுத்தம் காரணமாக, கீழ்கண்ட சந்தகங்களை பட்டாபட்டியிடம் விளக்கம் கேட்டுவைக்குமாறு, ராணுவத் தளபதி வெளியூர்காரன் எனக்கு தகவல் அனுப்பியுள்ளார்...//
  வெளியூருக்கு சீட்டு டர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

  யாருடைய வெறும்வயிற்றில் ஏறி என்பதை குறிப்பிடவும். ரோஸ்விக், மன்னர், இலுமு தவிர வேறு யாரையாவது குறிப்பிடவும். அவர்களிடம் ஏற்கனவே முயன்றும் பலனில்லை.
  என்னா சார்.. நமீதா வயிற்றிலேனுவா சார் சொன்னேன்.. உங்க வயத்திலே சார்.

  உள்ளங்கால் என்னிடம் உள்ளதால் செய்துவிட்டேன். உச்சிவெயிலில் தேய்க்க தாங்கள் உதவி செய்ய முடியுமா? உச்சிவெயிலின் உச்சியை என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை...
  இதற்க்கு உளியின் ஓசை பக்கம் 211-யை , பார்க்கவும் .

  எவ்வளவு தேடிப்பார்த்தும் அந்த ஒரு லிட்டர் நல்லெண்ணையில், என்னால் அந்த ஒரு டீஸ்பூனை கண்டுபிக்கமுடியவில்லை. எண்ணெய் கம்பெனியிடம் விசாரித்ததில் இப்பொழுதெல்லாம் அவர்கள் டீஸ்பூன் இலவசமாக தருவதில்லை என்று கடுப்பாக கூறிவிட்டார்கள்.

  என்ன செய்ய??
  வயிற்றில் தடவாவிட்டால் பரவாயில்லை..ஆனால் முழுதும் குடித்துவிடவும்

  ராவாகவா இல்லை ஏதேனும் பூச்சி மருந்து கலந்து குடிக்க வேண்டுமா??

  ராவாக முடியவில்லையென்றால் ,கூட சிறிது விளக்கெண்ணயஸ் சேர்க்கலாம்

  இரண்டு நிமிடங்களும் கழிந்து போனால்... பிறகு நான் எப்படி அதே வேலையை செய்யமுடியும்??

  பயப்பட வேண்டியது இல்லை.. ஸ்டெப் 1 -ல் இருந்து ஆரம்பிக்கவும்

  கொலை கேசு ஆகிவிடாதா??
  இது தற்கொலை பிரிவின் கீழ் வரும்.. எனவே பயப்பட வேண்டியது இல்லை..

  ReplyDelete
 19. பாவங்கன்னா. ஆனாலும் உங்க குசும்பு ஒவருங்க........

  ReplyDelete
 20. //பக்கத்து வீட்டுக்காரன் said...

  பாவங்கன்னா. ஆனாலும் உங்க குசும்பு ஒவருங்க........
  //
  ஏதோ என்னால முடிஞ்ச உதவி.. ஹி...ஹி

  ReplyDelete
 21. ஒரு கொலை வெறியோட தான் எழுதுறீங்க...

  ReplyDelete
 22. @பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
  ஒரு கொலை வெறியோட தான் எழுதுறீங்க...
  //
  அப்புறம் எப்படி சார் ,நாங்க ஆட்சியப் பிடிக்கிறது?

  ReplyDelete
 23. உங்க ஊருக்கு உங்களைத்தான் நம்பி வரலாம்னு பாஸ்போர்ட் எல்லாம் வாங்கிட்டனுங்க. இப்ப உங்க பதிவப்பாத்ததுக்கு அப்புறம் பயமா இருக்குதுங்க. வர முடிவத் தள்ளிப்போட்டுவிட்டனுங்க.

  ReplyDelete
 24. Dr.P.Kandaswamy said...

  உங்க ஊருக்கு உங்களைத்தான் நம்பி வரலாம்னு பாஸ்போர்ட் எல்லாம் வாங்கிட்டனுங்க. இப்ப உங்க பதிவப்பாத்ததுக்கு அப்புறம் பயமா இருக்குதுங்க. வர முடிவத் தள்ளிப்போட்டுவிட்டனுங்க.
  //

  இதெல்லாம் டமாசுக்கு சார்..
  நீங்க வாங்க சார்..
  எப்ப வருகிறீகள் எனச்சொல்லுங்கள்..
  நேரில் சந்திக்கலாம்

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!