Pages

Thursday, January 26, 2012

வெளிநாடு செல்லும் தமிழ ப்ளாக்கர்களுக்கு..

வணக்கண்ணே.. வெளிநாடுனு சொன்னதும், உங்களுக்கு ”மலேசியா சிங்கப்பூர், சீனா, ஜப்பான் , அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா-னு மனது ஓடினால்..
.
.
.
ஒன் மினிட்...
.
.
.
கையக் கொடுங்கண்ணே.. நீங்கதான் மறத்தமிழன்.. அங்..காங்..

சரிண்ணே.. உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியத்தை சொல்றேன். கேட்டுக்கிட்டு அப்படியே ஓடிப்பூடுங்க..     அதாவதுண்ணே... இந்தப்பதிவு உங்களுக்கில்லை.. நான் சொல்லவந்தது...... "தமிழர்கள், இந்தியா செல்லும்போது" கவனிக்கவேண்டிய முக்கியமான விசயங்கள்.

சீனப்பெருநாள், பொங்கல், தீபாவளி இப்படி ஏதாவது ஒரு பண்டிகை வருசா வருசம் வந்துக்கிட்டே இருக்கும்.   இதை தயவு செய்து மனதில் இருத்திக்கொள்ளுங்கள்.    இப்படி ஏதாவது ஒரு அசந்தப்ப சூழ்நிலையில், நீங்கள் உங்கள் சொந்த பந்தங்களைப்பார்க்க இந்தியா  செல்லவேண்டியிருக்கலாம்.

இப்போது மறக்காமல் சில பொருட்களை கொண்டு செல்லவேண்டியிருக்கும். அதைமறந்தால் வரும் பின்விளைவுகள், சந்திக்ககூடிய பிரச்சனைகளை பற்றி அலசுவதுதான் இந்தப்பதிவின் நோக்கம்.

அப்பாடா.. என்ன சொல்லப்போறேனு ஒருவழியா புரியவெச்சுட்டேன். எங்கய்யா இம்பூட்டி நாளா காணோம்.. உள்ள போயிருந்தியா? என்று வரும் பின்னூட்டங்களுக்கும் நான் பதில் பேஸ்..மாட்.டேன்..

சார்..இது  கற்பனைக்கதையில்லை.. நடந்த கதை..  திரும்பவும் நடக்க வாய்பிருக்கிறது!!..

நான் இந்தப்பதிவை எழுத முக்கியகாரணமே, ஒரு பிரபல பதிவர் .. அவருடைய பெயர் சொன்னால் தேவையில்லா பிரச்சனைகள் வரும் என்பதால்,
பொதுவாக “அவர்” என்று இந்தப்பதிவில் குறிப்பிடப்போகிறேன்.

 • யார் சார் அந்த பதிவர்?.
 • அவர் பெயரை தயவுசெய்து செல்லுங்களேன்!!
 • அவருடைய ஊர் தஞ்சாவூரா?
 • நான் கண்டுபிடித்துவிட்டேன் சகோ!!..
 • ஒருவேளை இலங்கைத்தமிழராய் இருக்குமோ?
 • கன்பார்ம்-டா அவரு உடம்பிறப்புதான் சார்..!!
 • சைந்தவி கதை எழுதுபவரா?
என்று வரும் பின்னூட்டங்களுக்கு நான் பதில் சொல்லத் தயாரில்லை என்பதையும் குறிப்பிடவிரும்புகிறேன்.

பொங்கலுக்கு அரிசி , சர்க்கரையுடன், கொத்தமல்லி, கெட்டிச்சட்னி யார் கொடுக்கிறார்களோ ,    கோடியாவது  லட்சமாவது... அவர்களூக்கே ஓட்டுப்போடும் மறத்தமிழனுக நாம...   அப்பேற்பட்ட நமக்கு, நடந்த சம்பவத்தை மட்டும் சொன்னா, துடைத்துபோட்டுவிட்டு போகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால்..  ப்ளீஸ். கதையுடன் நீங்களும் பயணியுங்கள்..

இப்ப கதை..

ஒரு முகூர்த்த நாளில், இந்தியா செல்ல முடிவெடுத்த அவர், தேவையான முக்கிய சாமான்கள்.. அதாங்க ..
செண்ட்..
பவுடர்..
அப்புறம்.. ஆங்.. ஷூ..( ரீபோக்.. )
கறுப்புக்கண்ணாடி..
ரெண்டு ஜீன்ஸ் பேண்ட்..
சக்கரம் வைத்த சூட்கேஸ் முதலியவற்றை வாங்கி.... தாயாராக்கியவர், ஒருவழியாக தயாராகிவிட்டார்.


விடிந்தது..வழக்கம்போல் தரிசனம் மட்டுமே தரும் சூரியனும் ஊர்ந்து.. ஊர்ந்து.. வந்துவிட்டான்.    கண்கள் சிவக்க, காலண்டைரை பார்த்தவர், இந்தநாள் அவரது வாழ்க்கையின் இனியநாள் என்பதை இனம் கண்டு...(ஹிஹி.. கொஞ்ச நேரத்தில், இந்தியாவுக்கு பறந்து செல்பவர்கள் கண் சிவப்பாக இருக்கும் என்று எனது நண்பன் கூறுகிறான்.. ஆமாவா சார்?)  பல்துலக்கி.. பயணத்தை ஆரம்பிக்கிறார்.

(சார்.. ரோட்டின் இருபக்கமும் பசுமையாக இருக்கிறதே.. இதுபோல் இந்தியாவில் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனைக்குதிரையை தட்டிவிடாதீங்க சார்.. நமக்கு வாய்த்தது அம்புட்டுத்தான்.)

சாங்கி விமான நிலையம்..
வெளிநாடு செல்லாத மக்களுக்கான குறிப்பு..( இங்குதான் விமானம் வரும்..போகும்..யோவ்.. பதிவோட முதல் பாராவுல சொல்லிட்டேன்.. அப்படியே ஓடிப்பூடுங்கனு.. சத்தம் போடாம இது வரைக்கும் படிச்சுட்டு வந்தா,.. இப்படிதான் இடக்கு மடக்கா ஏதாவது எழுதுவேன்..)

விமான நிலையத்தில நுழைந்தவர், மக்கள் காத்திருக்கும் வரிசையில் சென்று,  ’அவரை’யும் இணைத்துக்கொள்கிறார். நிற்கும் வரிசையையும், நகர்கின்ற வேகத்தையும் பார்த்தால்...( வாங்க பாஸு.. நாம வெளிய போய் ரிலாக்ஸ்டா இருந்துட்டு வருவோம். எப்படியும் 1 மணி நேரம் ஆகிவிடும் என நினைக்கிறேன்..)

சிங்கை அழகிய நகரம்.. குப்பைகள் பெரும்பாலும் இல்லை..
சீனர்கள் மஞ்சள் நிறமாக இருப்பார்கள்.. பல்லும் மஞ்சள் நிறமாக இருக்கும்..
நடப்பது , படுப்பது , ஊர்வது,  மேயவது எல்லாவற்றையும் உள்ளே தள்ளி வெளியே தள்ளுவதில் திறமைசாலிகள்.
வீட்டில் பெரும்பாலும் சமையல் செய்யமாட்டார்கள். அப்படி மீறி செயதாலும், வாயில் வைத்து,  வெளியே செலுத்தும் அளவிற்கு சுவையாக இருக்கும்.

(போதும் சார்.. வாங்க  ஏர்போர்ட் உள்ளே போவோம்..)

வெயிட்.. வெயிட்.. ஏன் சார்..’அவர்’ முகம், ”கனிமொழி திகார் செல்லும்போது, அவரது தாயார் முகம் சிவந்ததைப்போல” , கொடுரமாக(?) இருக்கிறது?.

இத்தருணத்தில் சாதாரண பாமரன் மனதில் தோன்றும் எண்ணங்கள்...
 • பயணம் செய்ய வேண்டிய நாள், நேற்று என்பதை அதிகாரி சுட்டிக்காட்டியிருக்கலாம்..
 • குறிப்பிட்ட அளவுக்குமேல் சுமை இருப்பதால், அதிகப்பணம் கேட்டிருக்கலாம்..
 • ஆங்கிலம்/சீனம் புரியாமல் இருந்திருக்கலாம்..
 • அதிகாரி டிக்கெட் பார்த்து, பக்கத்து டெர்மினலுக்கு செல்லச்சொல்லியிருக்கலாம்.
 • பணத்தை மறந்துவிட்டு வந்திருக்கலாம்..

ஆனால் ‘அவர்’தான் பிரபல பதிவர் ஆகிற்றே.. அவருக்கு என்ன இதுபோல சாதாரண பிரச்சனையா வரும்?..    வேற ஒண்ணுமில்லை சார்...
நம்ம அண்ணன் சார்,     பாஸ்போர்ட்.. டிக்கெட்.. எதுவுமில்லாமல் ( ஸ்பைஸ் ஜெட் ஓனர்மாறி..)   வந்து வரிசையில் நின்றிருக்கிறார்.   அதிகாரி உள்ளே விடமுடியாது என மறுக்கவும் அன்னாருடைய முகம் மேற்சொன்னதுபோல சிவந்துவிட்டது...

ஆகவே.. வெளிநாடு செல்லும்போது மறக்காமல் பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட் எடுத்துச்செல்லவும். விமான நிலையத்தில் கேட்பார்கள்.

ஒருவ(லி)ழியாக அவரை அசுவாசப்படுத்தி , நடந்தது என்ன? என்று விசாரிக்கவும், அன்னார், பாஸ்போர்ட் மற்றும் லேப்டாப் பேக்கை கார் பார்க்கில் விட்டுவிட்டு வந்ததையும், சிங்கைவாழ் மக்கள் எல்லாம் தேவதூதர்கள் என்ற எங்கள் எண்ணத்தில் மண் விழுந்ததைப் பற்றி எழுதி, இந்தப்பதிவை,  அண்ணாச்சி மாறி இழுக்க விரும்பவில்லை..ஆங்..

பாஸ்போர்ட் காணவில்லை.. பயணம் ரத்து..

இத்தருணத்தில் செய்யவேண்டியவை..
பயணப்பெட்டி தொலைந்த இடத்தில், பரிதாபமாக 1 மணி நேரம் நிற்கவும்.
யாரும் பரிதாப்பட்டு , உங்கள் பொருட்களை திரும்ப கொடுக்கவில்லையென்றால்.. காலம் தாழ்த்தாது
உடனடியாக அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் தெரியப்படுத்தவும்.
அவர்கள் கேட்கும் கேள்விக்கு, மூளையை கசக்கியாவது பதில் சொல்லவும்..


”அடிச்சுக்கேட்டாலும், என்னுடைய பேர் வரக்கூடாது” என்ற நிபந்தனையும், அவருடன் காவல் நிலையம் சென்று புகார் அளித்தது இக்கதைக்கு தேவையில்லாதது..  ஒருவழியாக புகாரின் நகலை வைத்து, இந்தியன் எம்பஸியில் பாஸ்போர்ட் அப்ளை செய்து, மீண்டும் பயணச்சீட்டு வாங்கி..
வாவ் .. ஒரு வாரம் ஓடியதே தெரியவில்லை பாஸ்...


இத்தனை இன்னலுடன் தளராது,  மீண்டும் பயணம் மேற்க்கொண்டு, இந்தியா சென்றடைந்த அவரை .. பதிவர்கள் சார்பாக வாழ்த்துகிறோம்..
யோவ்.. உனக்கு  ”Gong Xi Fa Cai (恭喜发财)”...” .. இனியாவது போய்.. சீனப்(?)பொங்கலை விமர்சையா கொண்டாடு...

டிஸ்கி 1..
தொலைந்த பொருட்கள்
 • பாஸ்போர்ட் ( அதான் புச்சு  கொடுத்திட்டாங்க..)
 • டிக்கெட் ( புச்சா எடுத்தாச்சு..)
 • லேப்டாப்..( முதலாளி மண்டையக்கழுவி, புதுசு வந்திருச்சு..)
 • டை-( கழுத்தில் கட்டுவதாம்..இதான் பெரிய பிரச்சனை...)

இதில் முதல் மூன்றை, ஒருவழியா சமாளித்தாகிவிட்டது..
கடைசியா சொன்ன பொருளை, எடுத்தவர்கள்... ப்ளீஸ்... தயவு செய்து திரும்ப கொடுத்துவிடுங்கள்..
அதை இந்தியா கொண்டு சென்று DryWash செய்வதுதான் அவரின் திட்டம்..
அதை செயல்படுத்தமுடியாமல், அரைமனதுடன் இந்தியா சென்றுள்ள அன்னாருக்கு, பதிவர்கள் சார்பாக ஏதாவது செய்ய முடிந்தால் தனயனாவேன்...

.
.
.