Pages

Thursday, September 20, 2012

காங்கிரஸும் பின்னே ஞானும்!!


வணக்கம்..வணக்கம்.. வணக்கம்...
ஏன் இவ்வளவு நாளாக எழுதாமல், தீடீரென?...

கேள்வி கேட்பது சகஜம்ண்ணே.. ஆனா.. யோசனை பண்ணி பதில் சொல்வது அம்பூட்டு ஈஸியில்லை.
ஆகவே.. அந்த கேள்வியையை சாய்ஸ்-ல் விட்டுப்புட்டு.. பதிவுக்குப்போறேன்...

ஆமா... இதுவரை எழுதியெல்லாம் எலக்கணமாக்கும்!னு யாராவது மனசுக்குள்ள நெனச்சா!!...
ஏலேய்....நீ....கிளம்பு தொரை.. 
எவனாவது இங்கிலீஸுல.. இலக்கியம் பேசிக்கிட்டு திரிவான்.. அவன்கிட்டப்போய் பேசிக்கினு இரு...  உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது...ஆங்..


மேட்டருக்கு வரேன்.. என்னமோ தெர்ல.. திடீர்னு.. பிரியங்கா.. ராகுலு.. சோனியா ஆங்.. நம்ம ஞானதேசிகன்னு ஏகப்பட்டபேரு, கனவுல வந்து...
”காங்கிரஸ் வாழ்க.. காந்தி வாழ்க!!”னு கூப்பாடு போட்டுக்கிட்டு இருக்காங்க.    சே..சே.. இது கனவுனு நினைச்சு..கிள்ளிப்பார்த்தேன்.. நிசமாவே வலிக்குது பாஸ்...

சரி... ’வாழ்க வாழ்க’னு கூவரானுகளே.. யார் வாழ(?)னு யோசனை பண்ணிப்பார்த்தேன்.. பகீர்ங்குது.    பச்சமண்ணு.. பஞ்சம் பொழைக்க வந்தவங்களை.. இப்படியா சார் பரிதவிக்க வைக்கிறது..

முடிவு பண்ணீட்டேன்..

இனிமேல காங்கிரஸ்தான் என் ஒரே கட்சி.. சோனியாதான் ஒரே தலவீ.. அவரு பையன் தான் அடுத்த தலீவரு.    அதற்காக... நம்ம நாராயணசாமி.. அதாம்ப்பா.. அணு உலையில பொங்க வைக்கிறது எப்படின்னு இங்கிலீஸுல பேசிக்கிட்டு இருக்கே,, அது.    அப்பால... அவரோட வாரிசு.. அதான்யா.. அரசியல் வாரிசு.. நம்ம யுவராசு.. அப்பால.. மாண்பிமிகு தங்கபாலு, நம்ம செட்டியாருகாரு.    இவங்ககூட சேர்ந்து.. இந்தியாவ ஓகோனு கொண்டு வர.. என்னாலான உதவி செய்யலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்...

காங்கிரஸ்காரனுக தீர்க்கதரிசிக.. அதை நீங்க புரிஞ்சுக்கிட்டா... சோனியாவ, உங்க குல தெய்வமா கும்பிடுவீங்க...இன்னா அறிவு.. இன்னா தொலைநோக்குப்பார்வை!!!!..

இதெல்லாம் புரிய, தீவீரமா, குத்த வெச்சு உக்காந்து, யோசனை பண்ணனும்.


ஒரு காங்கிரஸ்காரனா.. எனக்கு ஒரே ஒரு சின்ன ஆசைதான்..

ராகுல் காண்டி பிரதமர் ஆகனும்..
செட்டியாரு பையன், அது பேரு கூட என்னமோ சொன்னாங்களே.. அதாம்ப்பா தொழிலதிபரு.. ஆங்.. கார்த்திக்..
அவரு நிதியமைச்சர் ஆகனும்.. ( இன்னாது வாரிசு அரசியலா... நோ..நோ.. அவரு வேற.. இவரு வேற.. தனி தனி ரேஷன் கார்ட் வெச்சிருக்காங்க.. செக் பண்ணிட்டோம்..ஆங்..)

அவங்களுக்கு கீழ, மொத்த இந்தியாவும் இருக்கனும்... அது போதும்யா எனக்கு...

வாழ்க காங்கிரஸ்..
வாழ்க காந்தி..
வாழ்க சோனியா...
வாழ்க எங்கள் அணு விஞ்ஞானி நாராயணசாமி...

இன்னாது.. ரெண்டாவது சின்ன ஆசையையும் சொல்லனுமா...

ஹிஹி..
எங்கள் விவசாயிகளும், சிறு தொழில் அதிபர்களும்.... கலர்கலரா,   பெர்முடாஸ் + Roundneck T-Shirt போட்டுக்கிட்டு,
கிராமம் கிராமமா போய், எங்கள் அன்னை சோனியாவுக்கு கோயில் கட்டி, ரெண்டு கை(!)யையும் கூப்பி,  வழிபட்டு நிற்பதை... கண்குளிரப்பார்க்கனும்... அம்புட்டுதேன்...
அதுவுமில்லாம.......    இன்னும் ரெண்டு வருசத்திலே.. இந்தியாவுல வேற கட்சியே இருக்ககூடாது,,,

எங்கும் காங்கிரஸ்... எதிலும் காங்கிரஸ்...எப்படியும் காங்கிரஸ்..!!

மேலும்......
 • அணு உலை ஏன்?
 • சில்லறை வர்த்தகர்களை , கோடீஸ்வராக்கும் திட்டம்..
 • பெட்ரோல் விலையெல்லாம் ஒரு உயர்வா?..
 • நிலக்கரியா?.. அச்..
 • ஸ்பெக்ரமும், பேதைப்பெண்களும்...
என்ற தலைப்புகளில், எங்கள் அறிவுச்சுடர் காங்கிரஸ் தலைவர்கள் , தங்கள் கருத்துக்களை,    வரும் பதிவுகளில் புரிய வைப்பார்கள்...-இவன்
தீவிர காங்கிரஸ் தொண்டன்...நீ தலையில ’கை’ வைக்காதே தல...   சீக்கிரமே.. எல்லாப்பயலையும்...!!!!!Friday, July 27, 2012

வந்துட்டேன்....

பதிவு எழுதலாம் என்ற நல்ல எண்ணத்தில் வந்த எனக்கு...
எழுத ஒரு ம^%&ரும் தோணாததால்...


Pls grand me leave for another two more days...


நன்னி..
வணக்கம்...

கடைசியா ஒரு செய்தி...

ரோகித்தின் தந்தயாம் நம்ம திவாரி...

ஆடுங்கய்யா.. ஆடுங்க

Sunday, June 10, 2012

உடும்பன் வருங்கால் நகுக...

சமீபத்தில் எதேச்சையா ஒரு ப்ளாக் படிக்க நேர்ந்தது.
எடக்கு மட்க்கா அது என்னா ம$%^யிறு ப்ளாக்னு கேட்காதீங்க அப்புகளா..!!

அதில் ஒரு அறிவுஜீவி, கமென்ஸ்-ல என்னமோ உளரிக்கிட்டு இருக்கு...

அட முட்டாப்பயலுகளா...

நான் எண்டா அனானியா வந்து வாந்தி எடுக்கனும்?.
சிங்கப்பூர்ல இருந்து எவன் வந்து உங்க ப்ளாக் படிச்சாலும் அது பட்டாப்பட்டி கணக்குல சேர்த்துகனும்னு உங்க
கணக்கு வாத்தி.. ஆங்.. மோரன் சொல்லிக்கொடுத்தானா?..

உங்களுக்கு வரட்டி வெச்சு.. 'வருணு.. வருணு' இழுத்தாலும் உறைக்காதா!!!


பிரச்சனை ஒண்ணுமில்ல சார்.. யாரோ ஒரு பதிவராம்.. மூக்கு சீந்தினாகூடா, மூணு பதிவா போடுவாராம். எங்க போனாலும், சில பல பிரச்சனைகளை உருவாக்கி
அதை பதிவா வேற எழுதுவாராம்.. அதுகூட என்னைய எய்யா சேர்க்கிறீங்க?..

நான் என்ன ஹிட் ரேட் வாங்கிட்டு , கு%^$&ண்டியிலா செருக்கிக்கிட்டா இருக்கேன்?..
உஙகளுக்கு மகுடம்னா.. அது எனக்கு மயி%^$&ருக்கு சமானம்..

நல்லா வருது.. கொஞ்சநாளா எழுதாததால சின்ன தயக்கம்...

சரி விடுங்க .. மேட்டருக்கு வருவோம்..

அதுல சில பன்னாடை, ”பட்டாபட்டி டவுசரை கழட்ட ரெடியா இருக்கோம்”னு உதார் விட்டுக்கிட்டு இருக்கானுக..
எனக்கு ரெண்டு நிமிசம் டயம் கொடுங்க சார்.. அடி வாயில  சிர்ச்சுக்கிறேன்....

பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...


ஏய்யா.. இஷ்டப்பட்டு கேட்டா, நானே கழட்டி கூரியர்ல அனுப்பி வைப்பேனே.. நீ இன்னா வந்து கழட்டுறது?..


எனக்கு சண்டைனா அலர்ஜி...

அதனால ஒரு ரெண்டு மாசம் டைம் கொடுத்தா.. அக்குள்ல அரையடிக்கு முடி வளர்த்துக்கிட்டு.. கட்டியணைக்க வரேன்..

”பொறுத்தார்..என்னத்தையோ ஆழ்வாராம்”..


இப்படிக்கு
பட்டாப்பட்டி...

Wednesday, April 11, 2012

வலிக்குது....

நானும் பொறுத்து பொறுத்து  பார்த்தேன்....
அசிங்கபடுத்துனீங்க..
கேவலபடுத்துனீங்க...
அப்பறம் எங்கள பார்க்கற எடத்துல எல்லாம் வெரட்டி வெரட்டி கொம்மட்டுலையே குத்துனீங்க...அப்ப கூட எங்களுக்கு சூடு சொரணை அவ்ளவா இல்லாததனால அதையும் பொறுத்துகிட்டோம்...

ஆனா, எப்போ மெட்ராஸ்ல துணி கடை இருந்தாதான உன் தலைவன் தங்கச்சி கல்யாணத்துக்கு துணி எடுக்க வந்துட்டு வில்லனுகள அழிப்பான்னு, அஜித் பேன்ஸ் எல்லாம் சேர்ந்து அரசாங்கத்துகிட்ட சொல்லி இருக்கற துணி கடைய பூராத்தையும் மூடுனீங்களோ...இனிமே பொறுத்துக்க மாட்டேன்..வந்து ஸ்பாட்ல எறங்கிட்டான் இந்த வெளியூர்க்காரன்..

என் தங்க தளபதி விஜய்க்க்காகவும், மண்டைல மூளை இல்லன்னாலும் மனசு பூரா பாசத்தோட இருக்கற என் பங்காளிக விஜய் ரசிகர்களுக்காகவும் அடுக்கடுக்கான பாய்ன்ட்டுகளோட அற்புதமா களமிரங்கிட்டாண்டா இந்த முரட்டு காளை..! ( விடு விடு..எங்க கூட்டமே இப்டிதான்...முட்டுசந்துல ஒன்னுக்கடிக்கரதுக்கு கூட எதுனா பஞ்ச் டயலாக் அடிச்சிகினேதான் போவோம்..நீ கண்டுக்காம அடுத்த பேராவுக்கு போ...)

உங்கள எங்களுக்கு புடிக்காதுதான்..இருந்தாலும் மங்காத்தா படத்துல உன் தல சொன்ன ஒரே வார்த்தைக்கு கண்டி, இதுநாள் வரை நான் அத பாலோ பண்ணிகினுகிறேன்...! (ரெண்டு சரக்க மிக்ஸ் பண்ணி குடிக்காதன்னு...) அந்த பெரிய மனுசத்தனம் உங்கள்ட்ட ஏண்டா இல்ல..அதென்னடா எங்க போனாலும் அடிக்கறீங்க...எத்தன பேர்ரா இருக்கீங்க நீங்க...? விஜய் ரசிகனா இருக்கறது அவ்ளோ பெரிய குத்தமாடா...?

ஆ ஊன்னா ஒரே கதைல எத்தன படத்துலடா நடிப்பான் உன் தலைவன்னு எகத்தாளம் வேற பேசுறீங்க..நான் உங்கள்ட்ட ஒன்னு கேக்குறேன்..நீங்கல்லாம் ஒரே கம்பெனில பத்து வருஷம் வேலை பார்க்கறதில்ல..அதே மாதிரிதாண்டா இதுவும்...! கடந்த பத்தாண்டு காலமா ஊர்னாட்லேர்ந்து கெளம்பி வந்து மெட்ராஸ் வில்லனுகள அழிக்கரதுன்னா சும்மா இல்லடா தம்பி...பஸ் சீசன் டிக்கெட் எடுத்தே சொத்து அழிஞ்சிரும்...இருந்தும் என் தலைவன் அதையே காலகாலமா அலுத்துக்காம செஞ்சுக்கிட்டுருக்கான்...நீ அதுக்கே அவன கோவில் கட்டி கும்புடணும்...

இப்பல்லாம் என் தலைவன் எந்த ஊர்ல பஸ்ல ஏறுனாலும் கண்டக்டர் கேக்குறாராம்...என்ன சார் ஊருக்கு போறீங்க போலருக்கு...என்ன வில்லன அழிக்கவான்னு....அந்த அளவுக்கு உலகமெங்கும் பரவிருக்கற என் தலைவனோட புகழ் உனக்கு புரியலையேங்கரதுதாண்டா எனக்கு ரொம்ப சங்கட்டமா இருக்கு..!

அப்பறம் கேக்கனும்னு நெனச்சேன்...அதென்னடா என் தலைவன இண்டர்நெட்ல பிச்சைகாரன் மாதிரி போட்டோஷாப்ள போட்டு கேவலபடுத்துறீங்க..உங்களுகெல்லாம் மனசாட்சியே இல்லையா...என் தலைவன சைட் போஸ்ல ஒருக்களிச்சு நிக்க சொல்லி உக்காந்துகிட்டு பாருங்கடா...சும்மாவே அப்டித்தாண்டா இருப்பாரு என் தங்க தளபதி...அவர போய் போட்டோஷாப்ள எல்லாம் போட்டு போட்டோஷாப்ப அசிங்கபடுத்துரீங்களே., நீங்கல்லாம் மனுசன்தானா...? என்னை விடு...இந்த போட்டோவ ஒரு பிச்சகாரனோ இல்ல சந்து அங்கிளோ பார்த்தா எவ்ளோ பீல் பண்ணுவாங்க...பிச்சகாரன்னா அவ்ளோ கேவலமா போச்சா உங்களுக்கு...? இத நிறுத்திக்கங்க மொதல்ல.. !


வெரைட்டி வெரைட்டிங்கறீங்க..பொறந்ததுலேர்ந்து இட்லிக்கு மொளகா பொடிதானடா தொட்டுகிட்டு திங்கறீங்க...வெரைட்டியா இருக்கட்டுமேன்னு எவனாச்சும் மூக்கு பொடிய தொட்டு தின்னு பாருங்களேன்...! முடியாதுள்ள...அந்த மாதிரிதாண்டா என் தலைவனுக்கும்...நீ நக்கல் அடிக்கலாம்...எல்லாரும் வெரைட்டியா நடிக்கறாங்க...ஆனா, உன் தளபதி மட்டும் என் ஹேர் ஸ்டைல கூட மாத்தாம நடிச்சு உசுர எடுக்கராருன்னு..உன்ன பார்த்து நான் ஒன்னு கேக்குறேன்..தெய்வ திருமகன்ல விக்ரம் பண்ண ரோல என் தளபதி பண்ணி அத வீட்ல உக்காந்து குடும்பத்தோட டிவில பார்த்தா எத்தன புள்ளைகளுக்கு மூளைக்காய்ச்சல் வரும்..எத்தன பேர் வீட்ல பிக்சர் டியுப் வெடிக்கும்..இதெல்லாம் யோசிச்சியா நீ..? பிரெண்ட்ஸ் பட க்ளைமாக்ஸ்ல விஜயோட ஆக்டிங் பார்த்துட்டு என் பிரெண்ட் மூணு நாள் ஆபிசுக்கு லீவ் போட்டுட்டு சிரிச்சிகிட்ருந்தாண்டா...அவ்ளோ பெரிய நடிப்பு சக்கரவர்த்தி ரிஸ்க் எடுக்காம இருக்கறது உங்கள காப்பாத்ததான்னு ஏண்டா புரிஞ்சுக்க மாட்றீங்க...!

அடுத்தது கவ்தம் மேனன் படத்துல மட்டும் என்ன கதைன்னு நெனைக்கற...அமெரிக்கால நடக்கற ஒபாமா தங்கச்சியோட கல்யாணத்துக்கு துணி எடுக்கறதுக்காக நியூயார்க் போறாரு என் தளபதி...அப்போ நியூயார்க்ல இருக்கற வில்லன் ஒபாமா தங்கச்சிய கைய புடிச்சு இழுத்தர்றான்..!.ஒபாமா தங்கச்சிய எவனோ ஒருத்தன் கைய புடிச்சு இழுக்கரதுக்கும் உன் தளபதிக்கும் என்னாடா சம்பந்தம் நார பயலேன்னுதான கேக்க வர்ற...! போடா லூசு...இதுவரைக்கும் எந்த படத்துலடா நாங்க லாஜிக்கொட படம் எடுத்துருக்கோம்...கேக்றான் பாரு கேள்வி.கேனயாட்டம் ..கதைய மேல கேள்றா பன்னாட..கைய புடிச்சு இழுத்த அடுத்த செகேன்ட் வெக்கிறோம் ஒரு பஞ்ச் டயலாக...தங்கச்சி யாரோடதுங்கறது முக்கியம் இல்ல..கைய புடிச்சு இழுக்கரதுதான் முக்கியம்னு சொல்லிட்டு கலிபோர்னியால இருக்கற ஒரு டீ கடைல வெச்சு வில்லன வெளு வெளுன்னு வெளுத்து......டேய் டேய் டேய்..ஏண்டா இப்ப கொட்டாவி விட்ரா...இருடா படம் வரட்டும்..அப்பறம் விட்டுக்கலாம்....!


கடைசியா ஒரு விஷயம் உன்ட்ட வெக்கத்த விட்டுட்டு சொல்றேன்...எங்களுக்கு இதான் வரும்...வெச்சுக்கிட்டு வஞ்சகம் இல்ல...நடிக்க தெரிஞ்சா நடிச்சிருவோம்..வரல..அதனால வில்லனுகள அழிச்சு வியாபாரம் பண்ணிக்கிட்டுருக்கோம்..!


வேணா என் தலைவன்ட்ட சொல்லி அடுத்த படத்துல மெட்ராஸ்லேர்ந்து கெளம்பி போய் கொட்டாம்பட்டில இருக்கற பண்ணையார் வில்லன அழிக்க சொல்றேன்..!

ஆனா ஒரு கண்டிசன்...!

"நீங்க மொதொள்ள மெட்ராஸ்ல மூட சொன்ன துணி கடை எல்லாத்தையும் தொறந்து விட சொல்லுங்க...!"


இவன்
வெளியூர்க்காரன்


( ஒரே ஒருத்தர் தான் இதுவரைக்கும் புலனாய்ய்ய்ய்ய்ய்ய்ந்து...” வெளியூரும் நானும் ஒருத்தனு “ கண்டுபிடிச்சிருக்கார்... அவருக்காக இந்த பதிவு..ஆக்காங்...)

Thursday, January 26, 2012

வெளிநாடு செல்லும் தமிழ ப்ளாக்கர்களுக்கு..

வணக்கண்ணே.. வெளிநாடுனு சொன்னதும், உங்களுக்கு ”மலேசியா சிங்கப்பூர், சீனா, ஜப்பான் , அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா-னு மனது ஓடினால்..
.
.
.
ஒன் மினிட்...
.
.
.
கையக் கொடுங்கண்ணே.. நீங்கதான் மறத்தமிழன்.. அங்..காங்..

சரிண்ணே.. உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியத்தை சொல்றேன். கேட்டுக்கிட்டு அப்படியே ஓடிப்பூடுங்க..     அதாவதுண்ணே... இந்தப்பதிவு உங்களுக்கில்லை.. நான் சொல்லவந்தது...... "தமிழர்கள், இந்தியா செல்லும்போது" கவனிக்கவேண்டிய முக்கியமான விசயங்கள்.

சீனப்பெருநாள், பொங்கல், தீபாவளி இப்படி ஏதாவது ஒரு பண்டிகை வருசா வருசம் வந்துக்கிட்டே இருக்கும்.   இதை தயவு செய்து மனதில் இருத்திக்கொள்ளுங்கள்.    இப்படி ஏதாவது ஒரு அசந்தப்ப சூழ்நிலையில், நீங்கள் உங்கள் சொந்த பந்தங்களைப்பார்க்க இந்தியா  செல்லவேண்டியிருக்கலாம்.

இப்போது மறக்காமல் சில பொருட்களை கொண்டு செல்லவேண்டியிருக்கும். அதைமறந்தால் வரும் பின்விளைவுகள், சந்திக்ககூடிய பிரச்சனைகளை பற்றி அலசுவதுதான் இந்தப்பதிவின் நோக்கம்.

அப்பாடா.. என்ன சொல்லப்போறேனு ஒருவழியா புரியவெச்சுட்டேன். எங்கய்யா இம்பூட்டி நாளா காணோம்.. உள்ள போயிருந்தியா? என்று வரும் பின்னூட்டங்களுக்கும் நான் பதில் பேஸ்..மாட்.டேன்..

சார்..இது  கற்பனைக்கதையில்லை.. நடந்த கதை..  திரும்பவும் நடக்க வாய்பிருக்கிறது!!..

நான் இந்தப்பதிவை எழுத முக்கியகாரணமே, ஒரு பிரபல பதிவர் .. அவருடைய பெயர் சொன்னால் தேவையில்லா பிரச்சனைகள் வரும் என்பதால்,
பொதுவாக “அவர்” என்று இந்தப்பதிவில் குறிப்பிடப்போகிறேன்.

 • யார் சார் அந்த பதிவர்?.
 • அவர் பெயரை தயவுசெய்து செல்லுங்களேன்!!
 • அவருடைய ஊர் தஞ்சாவூரா?
 • நான் கண்டுபிடித்துவிட்டேன் சகோ!!..
 • ஒருவேளை இலங்கைத்தமிழராய் இருக்குமோ?
 • கன்பார்ம்-டா அவரு உடம்பிறப்புதான் சார்..!!
 • சைந்தவி கதை எழுதுபவரா?
என்று வரும் பின்னூட்டங்களுக்கு நான் பதில் சொல்லத் தயாரில்லை என்பதையும் குறிப்பிடவிரும்புகிறேன்.

பொங்கலுக்கு அரிசி , சர்க்கரையுடன், கொத்தமல்லி, கெட்டிச்சட்னி யார் கொடுக்கிறார்களோ ,    கோடியாவது  லட்சமாவது... அவர்களூக்கே ஓட்டுப்போடும் மறத்தமிழனுக நாம...   அப்பேற்பட்ட நமக்கு, நடந்த சம்பவத்தை மட்டும் சொன்னா, துடைத்துபோட்டுவிட்டு போகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால்..  ப்ளீஸ். கதையுடன் நீங்களும் பயணியுங்கள்..

இப்ப கதை..

ஒரு முகூர்த்த நாளில், இந்தியா செல்ல முடிவெடுத்த அவர், தேவையான முக்கிய சாமான்கள்.. அதாங்க ..
செண்ட்..
பவுடர்..
அப்புறம்.. ஆங்.. ஷூ..( ரீபோக்.. )
கறுப்புக்கண்ணாடி..
ரெண்டு ஜீன்ஸ் பேண்ட்..
சக்கரம் வைத்த சூட்கேஸ் முதலியவற்றை வாங்கி.... தாயாராக்கியவர், ஒருவழியாக தயாராகிவிட்டார்.


விடிந்தது..வழக்கம்போல் தரிசனம் மட்டுமே தரும் சூரியனும் ஊர்ந்து.. ஊர்ந்து.. வந்துவிட்டான்.    கண்கள் சிவக்க, காலண்டைரை பார்த்தவர், இந்தநாள் அவரது வாழ்க்கையின் இனியநாள் என்பதை இனம் கண்டு...(ஹிஹி.. கொஞ்ச நேரத்தில், இந்தியாவுக்கு பறந்து செல்பவர்கள் கண் சிவப்பாக இருக்கும் என்று எனது நண்பன் கூறுகிறான்.. ஆமாவா சார்?)  பல்துலக்கி.. பயணத்தை ஆரம்பிக்கிறார்.

(சார்.. ரோட்டின் இருபக்கமும் பசுமையாக இருக்கிறதே.. இதுபோல் இந்தியாவில் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனைக்குதிரையை தட்டிவிடாதீங்க சார்.. நமக்கு வாய்த்தது அம்புட்டுத்தான்.)

சாங்கி விமான நிலையம்..
வெளிநாடு செல்லாத மக்களுக்கான குறிப்பு..( இங்குதான் விமானம் வரும்..போகும்..யோவ்.. பதிவோட முதல் பாராவுல சொல்லிட்டேன்.. அப்படியே ஓடிப்பூடுங்கனு.. சத்தம் போடாம இது வரைக்கும் படிச்சுட்டு வந்தா,.. இப்படிதான் இடக்கு மடக்கா ஏதாவது எழுதுவேன்..)

விமான நிலையத்தில நுழைந்தவர், மக்கள் காத்திருக்கும் வரிசையில் சென்று,  ’அவரை’யும் இணைத்துக்கொள்கிறார். நிற்கும் வரிசையையும், நகர்கின்ற வேகத்தையும் பார்த்தால்...( வாங்க பாஸு.. நாம வெளிய போய் ரிலாக்ஸ்டா இருந்துட்டு வருவோம். எப்படியும் 1 மணி நேரம் ஆகிவிடும் என நினைக்கிறேன்..)

சிங்கை அழகிய நகரம்.. குப்பைகள் பெரும்பாலும் இல்லை..
சீனர்கள் மஞ்சள் நிறமாக இருப்பார்கள்.. பல்லும் மஞ்சள் நிறமாக இருக்கும்..
நடப்பது , படுப்பது , ஊர்வது,  மேயவது எல்லாவற்றையும் உள்ளே தள்ளி வெளியே தள்ளுவதில் திறமைசாலிகள்.
வீட்டில் பெரும்பாலும் சமையல் செய்யமாட்டார்கள். அப்படி மீறி செயதாலும், வாயில் வைத்து,  வெளியே செலுத்தும் அளவிற்கு சுவையாக இருக்கும்.

(போதும் சார்.. வாங்க  ஏர்போர்ட் உள்ளே போவோம்..)

வெயிட்.. வெயிட்.. ஏன் சார்..’அவர்’ முகம், ”கனிமொழி திகார் செல்லும்போது, அவரது தாயார் முகம் சிவந்ததைப்போல” , கொடுரமாக(?) இருக்கிறது?.

இத்தருணத்தில் சாதாரண பாமரன் மனதில் தோன்றும் எண்ணங்கள்...
 • பயணம் செய்ய வேண்டிய நாள், நேற்று என்பதை அதிகாரி சுட்டிக்காட்டியிருக்கலாம்..
 • குறிப்பிட்ட அளவுக்குமேல் சுமை இருப்பதால், அதிகப்பணம் கேட்டிருக்கலாம்..
 • ஆங்கிலம்/சீனம் புரியாமல் இருந்திருக்கலாம்..
 • அதிகாரி டிக்கெட் பார்த்து, பக்கத்து டெர்மினலுக்கு செல்லச்சொல்லியிருக்கலாம்.
 • பணத்தை மறந்துவிட்டு வந்திருக்கலாம்..

ஆனால் ‘அவர்’தான் பிரபல பதிவர் ஆகிற்றே.. அவருக்கு என்ன இதுபோல சாதாரண பிரச்சனையா வரும்?..    வேற ஒண்ணுமில்லை சார்...
நம்ம அண்ணன் சார்,     பாஸ்போர்ட்.. டிக்கெட்.. எதுவுமில்லாமல் ( ஸ்பைஸ் ஜெட் ஓனர்மாறி..)   வந்து வரிசையில் நின்றிருக்கிறார்.   அதிகாரி உள்ளே விடமுடியாது என மறுக்கவும் அன்னாருடைய முகம் மேற்சொன்னதுபோல சிவந்துவிட்டது...

ஆகவே.. வெளிநாடு செல்லும்போது மறக்காமல் பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட் எடுத்துச்செல்லவும். விமான நிலையத்தில் கேட்பார்கள்.

ஒருவ(லி)ழியாக அவரை அசுவாசப்படுத்தி , நடந்தது என்ன? என்று விசாரிக்கவும், அன்னார், பாஸ்போர்ட் மற்றும் லேப்டாப் பேக்கை கார் பார்க்கில் விட்டுவிட்டு வந்ததையும், சிங்கைவாழ் மக்கள் எல்லாம் தேவதூதர்கள் என்ற எங்கள் எண்ணத்தில் மண் விழுந்ததைப் பற்றி எழுதி, இந்தப்பதிவை,  அண்ணாச்சி மாறி இழுக்க விரும்பவில்லை..ஆங்..

பாஸ்போர்ட் காணவில்லை.. பயணம் ரத்து..

இத்தருணத்தில் செய்யவேண்டியவை..
பயணப்பெட்டி தொலைந்த இடத்தில், பரிதாபமாக 1 மணி நேரம் நிற்கவும்.
யாரும் பரிதாப்பட்டு , உங்கள் பொருட்களை திரும்ப கொடுக்கவில்லையென்றால்.. காலம் தாழ்த்தாது
உடனடியாக அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் தெரியப்படுத்தவும்.
அவர்கள் கேட்கும் கேள்விக்கு, மூளையை கசக்கியாவது பதில் சொல்லவும்..


”அடிச்சுக்கேட்டாலும், என்னுடைய பேர் வரக்கூடாது” என்ற நிபந்தனையும், அவருடன் காவல் நிலையம் சென்று புகார் அளித்தது இக்கதைக்கு தேவையில்லாதது..  ஒருவழியாக புகாரின் நகலை வைத்து, இந்தியன் எம்பஸியில் பாஸ்போர்ட் அப்ளை செய்து, மீண்டும் பயணச்சீட்டு வாங்கி..
வாவ் .. ஒரு வாரம் ஓடியதே தெரியவில்லை பாஸ்...


இத்தனை இன்னலுடன் தளராது,  மீண்டும் பயணம் மேற்க்கொண்டு, இந்தியா சென்றடைந்த அவரை .. பதிவர்கள் சார்பாக வாழ்த்துகிறோம்..
யோவ்.. உனக்கு  ”Gong Xi Fa Cai (恭喜发财)”...” .. இனியாவது போய்.. சீனப்(?)பொங்கலை விமர்சையா கொண்டாடு...

டிஸ்கி 1..
தொலைந்த பொருட்கள்
 • பாஸ்போர்ட் ( அதான் புச்சு  கொடுத்திட்டாங்க..)
 • டிக்கெட் ( புச்சா எடுத்தாச்சு..)
 • லேப்டாப்..( முதலாளி மண்டையக்கழுவி, புதுசு வந்திருச்சு..)
 • டை-( கழுத்தில் கட்டுவதாம்..இதான் பெரிய பிரச்சனை...)

இதில் முதல் மூன்றை, ஒருவழியா சமாளித்தாகிவிட்டது..
கடைசியா சொன்ன பொருளை, எடுத்தவர்கள்... ப்ளீஸ்... தயவு செய்து திரும்ப கொடுத்துவிடுங்கள்..
அதை இந்தியா கொண்டு சென்று DryWash செய்வதுதான் அவரின் திட்டம்..
அதை செயல்படுத்தமுடியாமல், அரைமனதுடன் இந்தியா சென்றுள்ள அன்னாருக்கு, பதிவர்கள் சார்பாக ஏதாவது செய்ய முடிந்தால் தனயனாவேன்...

.
.
.