Pages

Thursday, July 29, 2010

பதிவுலகில் நான் ஒரு பன்னா @#$..........!!!

.
.
.
தலைப்பை பார்த்து மிரளவேண்டாம்..
பதிவுலகில்,  நான் பன்னாட்டு சிங்கம் என்று எழுத வந்தது.. இங்க் தீர்ந்தபடியால்.. பாதியில் தொங்கிக்கொண்டிருக்கிறது...
என்னையும்(?).. இந்த தொடருக்கு..எழுத அழைத்த அண்ணன்  “முகிலனின் பிதற்றல்கள்”  அவர்களுக்கு நன்றி கூறி...

யாருப்பா.. மைக் பிடிங்கிறது......சரி..சரி.....நேரா கேள்விக்குப்போயிடலாம்......1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
பட்டா..பட்டி ( படிக்கும்போது, மறக்காம  ”கலர்ல” படிங்க பாஸ்..)


2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில்
பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

உண்மையான பெயரா....சே..சே....      என்ன பாஸ்..இப்படி ஒரு கேள்விய கேட்டுப்புட்டீங்க?.        நான் ஜெர்மனியில பிறந்தபோது..சரி..சரி..விடுங்க..

தீபாவளி சமயம், நானும் நண்பரும், துணி எடுக்க காந்திபுரம்  போயிருந்தோம்.  சுமார் இரண்டு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, அழகான,  அருமையான ஒரு சட்டைதுணியப் பார்த்தேன்..  அதுல இரண்டுமீட்டர் கிழிக்கச்சொல்ல, அந்த சேல்ஸ் கேர்ள் பார்த்த  பார்வையில...

அப்பப்பா...வேற யாராவது இருந்தா..வெக்கமில்லாம  அரசியல் கட்சில சேர்ந்திருப்பானுக.. நான் மானஸ்தன் ஆச்சே.     கண்ணாடி எடுத்து மூஞ்சியில மாட்டிக்கிட்டு,  கடைய விட்டு வெளிய  வந்துட்டேன்.

அது பேரு பட்டாபட்டியாம்.....கீழ போடறதாம்..பாக்கெட் வைத்தோ, வைக்காமலோ தைத்துப் போட்டுக்கலாமாம்... அவ்வளவு ’ஆம்’மிருக்காம்... அதிலிருந்து  இனிமேல் பட்டாபட்டில சட்டை போடுவதில்லைனு குலதெயவம் மேல சத்தியம்  பண்ணிட்டேன்.

அதனால, பழச மறக்ககூடாதுனு ...ஹி..ஹி..பேர மட்டும் யூஸ் பண்ணிக்கிட்டேன்.

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
என்ன பாஸ்?.. விரதம் இருந்தா... காலடி எடுத்து வைப்பாங்க.. அப்படிக்கா போனவருஷம் ஊருக்குப்போயிருந்தபோது, பிரதர் கேட்டாரு.. ”ஏண்டா..யாரைப்பார்த்தாலும்  Blog Blog-னு  சொல்லிக்கிட்டு இருக்காங்க.   நீதான் வாயைத்திறந்தா, நிறுத்தாம ஒரு மணி நேரம் பேசுவியே. ஏதாவது  எழுது”னு புத்திமதி சொன்னாரு..அதனால கூகிளாண்டவர்கிட்ட கேட்டு நானும்   ஆரம்பிச்சுட்டேன்.


4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம்  செய்தீர்கள்?
இனிதான் ஏதாவது செய்யனும்.  நித்தியானந்த்தை வச்சு யாகம் பண்ணினா,
பிச்சுக்க சான்ஸ் இருக்கா?-னு பார்க்கனும் தல..
இல்ல.... சாணியக்கூப்பிட்டு, வாசல் தெளிக்கவும் ஐடியா வெச்சிருக்கேன்.


5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து 
கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை
என்றால் ஏன்?

தோணினதை எழுதுவேன். சொந்த விஷயம்?.. இதுல ஏதாவது உள்குத்து
இருக்கா பாஸ்..   ஏன்னா, கலைஞர் ”உடன்பிறப்பே”னு சொல்வாரு..
அம்மா, ”ரத்ததின் ரத்தமே”னு சொல்லும்..   அப்ப,  நான் எழுதுவது சத்தியமா சொந்தவிசமா..சாரி   பாஸ்..சொந்தவிசயமாத்தான் இருக்கனும். ஹி..ஹி


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது
பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நான் எழுதுவது பொழுதுபோக்குக்குத்தான். 
ஆங்....சம்பாரிப்பது?.. இதையும் முயற்சி செய்தேன்.. ஆனா யாரும் வாங்க
வரலே..   ( வெளியூர்காரன் ப்ளாகை..ப்ளாட் போட்டு விற்க முயற்சிசெய்தது மிஸ்  ஆயி....சே..அந்த கொடுமைய விடுங்க பாஸ்...  எல்லா பயலும் விவரமாயிட்டானுக..)


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில்
எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒண்ணுதான் பாஸ்..  இதுக்கே கண் பிதுங்குது...
மேலும், நான் சட்டப்படி நடப்பவன்.. ஒருவனுக்கு ஒருத்தி...ஹி..ஹி
( இதில் உள்குத்து எதுவுமில்லை என தமிழக அரசின் மேல் ஆணையாக கூறுகிறேன்..)

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை  ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
கோபமா?.. அப்பப்போ வரும்..அப்புறம்,    காணாம போயிடும்..  ( உப்பை குறைக்கனும் பாஸ்.)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு
பாராட்டிய மனிதர் யார்?

பலபேர் பாராட்டியிருக்காங்க...ஓகே..ஓகே.. ரைட்டு...
பலபேரு தேடிக்கிட்டு இருக்காங்க பாஸ்...ஒத்துக்கிடறேன்.....


10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு
தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

ஏதோ.பொழப்புக்கு பொட்டி தட்டிட்டு இருக்கேன் சிங்கைல..
சீக்கிரமா(?), இந்தியா வந்து செட்டில் ஆகிடனுமுனு , கடந்த 15 வருடமா முயற்சிபண்ணிக்கிட்டு இருக்கேன்..”முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்..”

மேலும் பொழுதுபோக்குக்கு ஆரம்பித்த, பட்டாபட்டி ப்ளாக்கை,
உசுப்பேற்றி, உசுப்பேற்றி...   ”போஸ்மார்ட்டம் கிரவுண்ட்” ஆகிய பெருமை , நல்ல நண்பர்களையே(?) சேரும்..

அந்த நல்லவர்களை,  இத்தொடரைத்  தொடர அழைக்கிறேன்

கீழே நான் கிறுக்கியிருப்பது.....அந்த நல்ல நண்பர்களுக்காக..

பேரைச்சொல்லி உங்களை இழுத்துவிட விரும்பவில்லை...
மனச்சாட்சிப்படி, நீங்களா ஒத்துக்கிட்டு....
ஒழுக்கமா..
உண்மையா..
மெய்யா..
விவரமா..
நீங்களா எழுதினா....... நல்லாயிருக்கும்..
இல்ல ஆயுத முனையில,  எழுதவைக்கவேண்டி வரும் ...சொல்லிப்புட்டேன்  மக்கா...
.
.
.

Saturday, July 24, 2010

வாழ்த்தி வரவேற்(க்க்ர்ர்ர்ர்ர்)கிறோம்...

.
.
.

பண்பு நண்பர்,

பதிவுலக காவலன்,

பறவைகளின் சரணாலயம்,

பார்(?) போற்றும் வேந்தன்,

படைப்பு உலக சக்ரவர்த்தி,ரகசியப் பயணமாக, ஒரு வாரம்  வெளிநாடு சென்ற செய்தி,  ப.மு.க உளவுத்துறை மூலம் வெளியாகி உள்ளது.   ஒரு சாதாரண மனிதன், ஏழு நாட்களில், இரண்டு நாடுகளை சுற்றுவதே மிகக்கடினம்.   ஆனால் ஏழு நாட்களில்,  எட்டு நாடுகளைச் சுற்றிய அசாதராண மனிதர் இவர்..
இப்படிப்பட்ட மாமனிதரை பேட்டி எடுக்காவிட்டால்..”கூவம் மணந்துவிடும்” என்ற காரணத்தால்  கேமரா மற்றும் லென்சு சகிதம் எங்கள் குழு,  மீனம்பாக்கத்தை முற்றுகையிட்டது..    (  நித்தி ரூம்ல வெச்ச அதே கேமராதான் சார்.. )


இனி அவரிடம் எடுத்த பேட்டி..

என்ன சார்.. போனமாசம் அழகா, கூலிங்கிளாசை, மண்டைமேல போட்டிருந்தீங்க.    இப்ப.... முக்காடு போட்டுக்கிட்டு  போஸ் கொடுக்கிறீங்க?.
அது வந்து............ வாஸ்துக்காக, காரமடை ஜோசியர், முக்காடு  போடச்சொல்லியிருக்கார்.


எப்படி சார்,  ஏழு நாட்களாக சுற்றிய களைப்பே முகத்தில இல்லை?
அதாவதுங்க......ப்ளைட்ல வரும்போது ஜூஸ்னு என்னமோ மஞ்சக்கலர்ல கொடுத்தாங்க.   அதுல மூஞ்சி கழுவி .. ப்ரெஸ் ஆயிட்டேன்... மஞ்சக்கலர்ல எது இருந்தாலும், உடம்புக்கு நல்லதுனு பெரியவங்க சொல்லுவாங்க..


இன்றைய பதிவுலகம் பற்றி உங்கள் கருத்து?..
அய்யோ..அந்த கர்மமே வேணாமுனுதான் , ரகசியமா வெளிநாடு போனேன். இப்ப எதுக்கு  சனியை, சக்கரத்தில ஏத்துறீங்க?..


சரி சார்..     ப்ளைட் வந்து 24 மணி நேரம் ஆச்சே..இப்பத்தான் வெளிய வறீங்க.. ஏன்?..
ஓ..இறங்கினதும் வயிறு லைட்டா கலக்குச்சு பாஸ்.. பக்கத்தில ஆம்பளை படம் போட்ட ஒரு ரூம் இருந்திச்சு.    நான் எதார்த்தமா உள்ள போயி பார்த்தா.. சொர்க்கம் சார்...


என்ன சார்.. கக்கூஸை போயி சொர்க்கம்னு சொல்றீங்க?..
ஒரு வாரமா, பேப்பர் யூஸ் பண்ணிட்டு.. தண்ணீரை பார்த்தா..  அடிவயித்திலிருந்து ஒண்ணு அப்படியே மேல வரும் பாஸ்.. இதை அனுபவிச்சு பார்த்தாதான் தெரியும்..    அப்படியே கண்ணை மூடி  அனுபவிக்கும்போது, ஹி..ஹி  தூங்கிட்டேன்..   அடுத்த நாள் கிளீன் பண்ண வந்த ஒருவர்,  எழுப்பி விட்டுட்டார்...


ஓ.இவ்வளவு நடந்திருக்கா?.. நாங்க கூட , கஸ்டம்ஸ் அதிகாரிக உங்கள, கம்ளீட்டா...
No..No...அவரு எழுப்பித்தான் எந்திருச்சேன்.. இதை எந்த கோர்ட்ல வேணாலும் சொல்ல, ரெடியா இருக்கிறேன்..


சரி..சரி..லூஸ்ல விடுங்க... அப்படி, என்னென்ன நாடு போயிருந்தீங்க?
சீனா,  ஹாங்காங்..  ம்... ஆங்.. சைனா.. சப்பான்.. ஜப்பான்.. தாய்லாந்து.. பர்மா.. அப்புறம் கேரளா..  


ஓ..கேரளாவுமா?.. விசா...பாஷை பிரச்சனை ஏதாவது?
பாஷையெல்லாம் பிரச்சனையே இல்ல..அதுக்கு நான் ஒரு டிரிக் வெச்சுருக்கேன்.  மூக்கை பொத்திக்கிட்டு,  “தமிழ், தெலுங்கு.. மலையாளம், ஆங்கிலம்”  கலந்து அடச்சா போதும்..சமாளிச்சடலாம்..
 கேரளாவுக்கு விசா வேண்டியதில்லை பாஸ்.. இதுகூட தெரியாமா, பேட்டி எடுக்க வந்திருக்கீங்க.. கர்மமடா கண்ணா...


ஓ..இதுதான் மேட்டரா....இவ்வளவு நாடு சுற்றிப்பார்த்திருக்கீங்க.. இதுல உங்களுக்கு பிடிச்ச இடம் எது சார்?...
ஹாங்காங்தான்..  அங்கே பாம்பை, பொன்னிறமா வறுத்து, பக்கோடா மாறி கொடுத்தாங்க..சூப்பர் சார்..   நான் சாப்பிடும் அழகை பார்த்து காசே வாங்களேனா பார்த்துக்குங்களேன்..    அப்புறம், பிடிக்காத இடம்  ”மக்காவ் தீவு..”


என்ன சார்..மக்காவை பிடிக்காத முதல் ஆள் நீங்கதான்..அது  காஸினோக்கு  புகழ் பெற்ற தீவாச்சே.?
சீன மக்கள் சொன்னாங்க சார்.. நானும் போயி விளையாடிப்பார்த்தேன்.
மெசின்ல டாலரை செருகி ..லிவரை இழுத்தா..காசா கொட்டுமுனு சொன்னாங்க..   நானும் செருகி, இழுத்தேன்..     “படார்”னு சத்தம்..  கொட கொடனு கொட்டிச்சு..


என்ன சார் .. காசா..?
நீங்க வேற பாஸ்..   ரத்தம்..நான் பக்கத்திலிருந்தவருடைய  லிவரை இழுத்துட்டேன்.. ஹி..ஹி  ..
சரி..இது வேணாம்னு பக்கத்திலிருந்த வேற மெசினுக்குப்போயி..  வேற விளையாட்டு விளையாடினேன்..  அதுவும் என்னை ஏமாத்திடுச்சு..


அப்படி என்ன விளையாட்டு சார்?.
டாலரை உள்ளே விட்டு, நம்பர் அமுக்கனும். சரியா இருந்தா , பணம் 10 மடங்கா வெளிவரும்..    என்னோட ICICI Pin no அடிச்சுப்பார்த்தேன்..உகூம்.. அப்படியே கட்சிக்காரனுக பாக்கெட்ல போனமாறி..      ஒரே  ‘செகண்ட்’ல காணோம்.
விதியேனு,   வெளிய வந்துட்டேன்..


ஏன் சார்..இந்த சிங்கப்பூர், மலேசியா போகலையா?.. அங்கே உங்க உயிர் நண்பர்கள் வெளியூரு , பட்டாபட்டி இருக்காங்களே..
அவனுகளா உயிர் நண்பனுக?.. ’உயிரை வாங்கும் நண்பர்கள்’ பாஸ்..  அந்த பன்னாடைக கண்ல படக்கூடாதுனுதான் தாய்லாந்து போயி, இந்தியாவுக்குள்ள நுழைஞ்சேன்.   
’டிரீட்..டிரீட்’னு பாரின் பாட்டல் மேலேயே குறியா இருப்பானுக.   அவனுக சாகவாசமே வேணாம் பாஸ்..


மூணு நாளைக்கு   முன்னாடியே,   பட்டாபட்டி   எங்களுக்கு பேக்ஸ் அனுப்பி, உங்ககிட்ட இருந்து ,  சரக்கை கைப்பற்றச் சொல்லியிருக்காரு.   இதுல வெளியூர்காரன்,   கூரியர்ல  ‘கத்தி’ அனுப்பியிருக்காரு..   மரியாதையா, சரக்கை கொடுத்துட்டு, ’எஸ்’ ஆகும் வழியை பாருங்க..

(ஆகா..ஆள் விட்டு புடுங்கறானுகளா..)
சரி பாஸ்..இந்த பாட்டிலை நான் கொடுத்தேனு அவனுகளுக்கு கொடுத்துடுங்க.. கர்மம்..  குடிச்சு தொலையட்டும்..

( பேட்டி முடிந்தது..லாபம் சரக்கு பாட்டில் மட்டுமே)


டிஸ்கி 1
பட்டாபட்டி வெளியூர்காரன் :      தூக்கறோம்.. ரெட்டைய தூக்கறோம்.. சிங்கப்பூர் வராம, அல்வா கொடுத்துட்டு  போனதுக்கு..


டிஸ்கி 2
ரெட்டை.  :     பன்னாடை பயலுக..   ஒரு  நாள் பூரா டாய்லெட்ல இருந்தேனே.  பாட்டில்ல இருக்கும் சரக்கு ’ஒரிஜினல் இல்லே’னு கண்டுபிடிக்கவா போறானுக..   மஞ்சக்கலர்ல எது இருந்தாலும்,  பல்ல காட்டிட்டு குடிக்கும் பயலுகதானே...


டிஸ்கி 3
நிருபர்   :      தக்காளி..     பட்டாபட்டியாவது..வெளியூர்காரனாவது..    பாரின் சரக்கை ,    இந்த பன்னாடைகளுக்கு கொடுக்க நான் என்ன  நார்வேகாரரா?..
எல்லோருக்கும் அரோகரா..
நாளை நமதே...
.
.
.

Friday, July 23, 2010

ப்ளீஸ்... கண்ணக் குத்திப்போடாதீங்க....

தமிழக மக்களுக்கு அன்பான வேண்டுகோள்.
ஆளும் கடவுள்களைப்பற்றியும் , காவல் தெய்வங்களைப்பற்றியும், சுட சுட உண்மைகளை வெளியிட்டதால்,  "நண்பர் சவுக்கு"  போலீசாரால் , போலி வழக்கில் கைது  செய்யப்பட்டுள்ளார்..

அதற்கு எனது கண்டனங்களை பதிவுசெய்கிறேன்...

மேலும் சக மனிதர்களுக்கு என்னுடைய அறிவுரை..

 •  ஊழல் செய்பவரை , உற்றாராக நினையுங்கள்.
 •  கரைவேட்டிகளை பார்த்தால், கடவுளாக எண்ணி,  காலில் விழுங்கள்.
 •  நக்கீரன் பத்திரிக்கைய வாங்காதாவர்களை, நாடுகடத்துங்கள்..அல்லது நடுரோட்டில், காறி உமிழுங்கள்.முக்கியமா, இந்த உப்பு..உப்புனு சொல்றாங்களே...அது ரொம்ப கெடுதல் பாஸ்.. இனிமேல அந்த கர்மத்தை போட்டு சாப்பிடாதீங்க..

ஆ....என்னாது... முடியாதா?...
அப்ப ஒன்பது ஓட்டையையும் மூடிக்கிட்டு.. குடும்பத்தை பாருங்க..( உங்க குடும்பத்தை சொன்னேன் பாஸ்...)


மேலும்..அடுத்த எலெக்னுக்கு , ஓட்டு கேட்டு வருவாங்க..அப்ப, மறக்காம,  ஏதாவது இலவசமா வாங்கிட்டு   ( அது நமது பிறப்புரிமை பாஸ்.) ,உங்க பொன்னான வாக்கை , பார்த்து பத்திரமா குத்துங்க பாஸ் ..குத்துங்க...

மேலும் ( சத்தமா படிங்க பாஸ்......கேக்குலேனா..என்மேலும் ஏதாவது பாயும்..)வாழ்க கலைஞர்..
வாழ்க கனிமொழி..
வாழ்க அழகிரி..
வாழ்க ஸ்டாலின்..
வாழ்க உதயநிதி..
வாழ்க அறிவுநிதி ..
வாழ்க மு.க.முத்து..( சொல்லமுடியாது..இவரு பேரைச்சொல்லலேனா..பின்னாடி....பொய்வழக்கு பாய்ந்தாலும் பாயும்..)


என்னால முடிஞ்ச பேரையெல்லாம் சொல்லீட்டேன்...வேறதாவது இருந்தா அப்படிக்கா சேர்த்து, வாழ்க..வாழ்கனு சொல்லுங்க...
வாழ்க ஜனநாயகம்(?)..
வளர்க பத்திரிக்கை தர்மம்..
.
.
.

Tuesday, July 20, 2010

நொந்த சாமீஈஈஈஈ....

.
.
.
வணக்கம். என்னையும் சகபதிவராக நினைத்து, கடந்த சிலவருடங்களாக,  Forwarded Chain Mail அனுப்பிக்கொண்டிருக்கும் சிலபல நல்ல  உள்ளங்களுக்கு, எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்வதில்  பெரும் மகிழ்சி அடைகிறேன்.

அய்யா.. சக பதிவர்கள் சார்களா..
அனுப்பிய மெயிலையே,  திரும்பத்திரும்ப அனுப்பினால்,  அடியேன் என்னதான் பண்ண முடியும்?.    சமீபத்தில் காரமடை ஜோசியர் , பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில்,  இதுபோன்ற மெயில்களை, சில நல்ல மனிதர்களுக்கே அனுப்புவதை விடுத்து,  வேறு பலருக்கு அனுப்பினால், அடுத்த ஜென்மத்தில், நாட்டை ஆளும்  நல்லவர்களின்(?) குடும்பத்தில பிறக்க  வாய்புள்ளதாக கூறியுள்ளார்.   ஆகவே, தயவுசெய்து, அதுபோனற மெயில்களை,  வேறு பலருக்கு அனுப்பி, அவர்களையும் வாழவையுங்கள்.

சாமிகளா..
இதுவரை நீங்கள் அனுப்பிய மெயில்கள் மூலம்......


Coco cola
டாய்லெட்டில் உள்ள கறைகளை , நீக்க Coco cola உபயோகப்படும் என்ற அரிய தகவல்.. ஆகா. குடிச்சா, பல்லு பளீர்னு மின்னும் போல..


எயிட்ஸ் ஊசி
சினிமா தியேட்டருக்குப்போய் படம் பார்த்தால் , ஊசிவைத்து டிக்கியில் குத்துவாங்களாம்.    ஊசினாவே, பேண்ட் கழட்டாம,  யூரின் போகும் ஜாதி. இந்த பிரச்சனைக்காகவே, தியேட்டர் போவதை விட்டு ரெண்டு வருஷம் ஆச்சி.


FREE DESKTOP
Forward மெயில் செய்தால், FREE DESKTOP,  LAPTOP, CAMERA, CELLPHONE வரும் என வழிமேல் விழி  வைத்து, தினமும் வாசலை பார்த்துக்கொண்டுள்ளேன்.
நம்பிக்கைதானே வாழ்க்கை பாஸ்..


மயக்கமருந்து
கார் பார்க்கில், மயக்கமருந்து கொடுத்து , கையில் உள்ளதை  கொள்ளையடித்துவிடுவார்கள் என்ற தகவலால், கார் ஓட்டுவதை  சமீபகாலமாக நிறுத்திவிட்டேன்.


ஒரு மெயில்..10 காசு
ஏழு வயசு பொண்ணுக்கு உடம்பு சரியில்லையாம். மெயிலை Forward பண்ணினால், ” ஒரு மெயிலுக்கு  10 காசு ” என Google  ஆண்டவர் கொடுப்பார்னு சொல்றாங்க. பாவம்..ஏழு  வருஷமா, அந்த,  ”ஏழு வயசுப்பொண்ணு”, உடம்புக்கு முடியாம கஷ்டப்படுது.    அடுத்தமுறை மெயில் வந்தா, கலைஞர் காப்பீட்டை பற்றி சொல்லனும்.


ISD Bill
முகம் தெரியாத ஆள், வீட்டு போனுக்கு கூப்பிட்டு, ஒரு நம்பரை தருவாங்களாம். அதற்கு கூப்பிட்டால், ஏதோ இலவசமா கிடைக்கும் என சொன்னார்களே என்று....?????

ஆமா....இந்த பாகிஸ்தான், சவூதி, சிங்கப்பூர் எல்லாம் கோயமுதூர் பக்கத்திலேயா இருக்கு பாஸ்.?.. ஏன்னா...என்னோட பில்-ல இந்த ஊர்க்கு பேசினதா போட்டிருக்கானுக.  என்னானு விசாரிக்கனும்....


கிட்னி
பார்ட்டிக்கு போனால், மயக்கமருந்து கொடுத்து, கிட்னிய களவாடிவிடுவார்களாம். நல்லவேளை, காலையிலதான் செக் பண்ணினேன். இன்னும் எனக்கு, ரெண்டு கிட்னி இருக்கு....


(ஆ)சாமிகள்
திருப்பதி, முருகன், சிவன், விஷ்ணு...காணக்கிடைக்காத படம்..மனசுல ஏதாவது நினைச்சுக்கிட்டு, 11 பேருக்கு அனுப்பினா, நினைத்தது நடக்கும். ..உஷ்..தினமும், கண்ணாடியில்............... கண்றாவி சார்.


கேன்ஸர்
போனை, வலதுகாதில் வைத்துப்பேசினால், கேன்ஸர் வரும் .
இடது காதில வைத்தால் இதயம் பலகீனமாகும்..
பேசாம, வாயில் வைத்து பேசிலாமா என்று யோசனை  பண்ணிக் கொண்டுள்ளேன்..( ஸ்பீக்கர் போட்டுத்தான் சார்..)


மில்லினர்
இரண்டு பர்சண்ட் கட்டினால், 1 மில்லியன் டாலர்..இந்த டீல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.   மாதாமாதம் சம்பளம் வாங்கி , நைஜீரியா மாமாவுக்கு அனுப்பிக்கிட்டு இருக்கேன் சார்.     அந்த , மில்லியன் டாலர் மட்டும் வரட்டும்.. வேலைக்கு ஆள் வைத்தாவது,  தினமும் 200 மெயில் Forward பண்ணலாம் என்று இருக்கிறேன்.


டிஸ்கி..
மேற்கண்டவை இதுவரை எனக்கு வந்தவை..

ப்ளீஸ்..ப்ளீஸ்..ப்ளீஸ்..
ப்ளீஸ்..ப்ளீஸ்..ப்ளீஸ்..
ப்ளீஸ்..ப்ளீஸ்..ப்ளீஸ்..ப்ளீஸ்..
ப்ளீஸ்..ப்ளீஸ்..ப்ளீஸ்..ப்ளீஸ்..ப்ளீஸ்..

இதுக்கே நிக்காம போயிட்டு இருக்கு பாஸ்...


நம்ம,  நைஜீரியா மாமா , மில்லியன்  டாலர் அனுப்பும்வரை,  யாரும் forwarded Mail அனுப்பாதீங்க மக்கா..ப்ளீஸ்...
.
.
.

Tuesday, July 13, 2010

நல்லாயிருங்கலே..

நூசு..அதாம்பா செய்தி..

யுஎன்டிபி(UNDP) முயற்சியுடன், வறுமையை அளவிடும் எம்பிஐ (Multidimensional Poverty Index - MPI) எனப்படும் முறையில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

ஆப்ரிக்காவில் உள்ள 26 ஏழைநாடுகளில் உள்ளவர்களை( 410 மில்லியன்) விட, இந்தியாவின்  • பீகார்,
 • சட்டீஸ்கர்,
 • ஜார்க்கண்ட்,
 • மத்தியபிரதேசம்,
 • ஒரிஸ்ஸா,
 • ராஜஸ்தான்,
 • உத்தரபிரதேசம்,
 • மேற்கு வங்கம்... 

ஆகிய 8 மாநிலங்களில் உள்ள (421 மில்லியன்) மக்கள் மிக அதிக வறுமையில் வாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

=========================================================

நாடு சுதந்திரம் அடைந்து பலவருடங்களாகிவிட்டது..
ஒரே குடும்பத்திலிருந்து வந்த,  தாத்தா..மாமா..அத்தை..மருமகள்..பேரன்.. என ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து  நாட்டை செம்மைப்படுத்தி, இப்போது பாலும் , தேனும் ஓடுவதை பார்க்க சந்தோசமாக இருக்கிறது..

ஒருவர் தன் கடமையை முழுமூச்சாக செய்தால்....மக்களாகிய நாம் பாராட்டவேண்டும்..  அப்போதுதான், ஆட்சியாளர்களின் மனம் குளிர்ந்து , மேலும் மேலும் , நாட்டை வளமாகக் பாடுபடுவார்கள்.

ஆகவே...இந்த பொன்னான தருணத்தில, மனமுவந்து ,எனது நல்வாழ்த்துக்களை , இந்த பதிவின் மூலம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்..

மக்கா..வரும் தேர்தலில்..அழகா உங்க வாக்கை..........இவர்களுக்கே விற்றுவிடுங்கள்(?)..  அப்போதுதான் , மேற்கண்ட லிஸ்டில், ஒன்பதாவது மாநிலமாக நம்மை இணைக்கமுடியும்...

வாழ்க காங்கிரஸ்..
வளர்க மக்கள்..
வளர்க வள்ளுவரும், அவரது குடும்பமும்..


( என்னது ..தமிழக மீனவன, சிங்களப்படை சுட்டுட்டாங்களா?..
அட..விடுங்க சார்..    நம்ம ராகுல் காந்திக்கு வயசாகிட்டே போகுது. எப்ப கலயாணம்?னு தங்கபாலுவ கேட்டுச்சொல்லுங்க...புண்ணியமாப்போகும்.)
டிஸ்கி..லிஸ்டில்,  எல்லாமே வடமாநிலமா இருக்குனு நினைக்கிறவங்க... தயவு செய்து, டெல்லிக்கு  கடுதாசு/தந்தி , போட்டு உங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்துங்க..

என்னான?..

 • “இருக்கும் மரத்தையெல்லாம் வெட்டிவிட்டோம்..
 • விளை நிலங்களை முடிந்தவரை, வீடுகளாக மாற்றிவிட்டோம்..
 • ஆற்றை மூடிவிட்டோம்..
 • குழந்தை தொழிலாளர்களுக்கு கும்பிடு போட்டுவிட்டோம்..


இன்னும் ஏன் எங்கள்மீது கோபம் என..?.”
 .
.
.

(” துரைமுருகன்” ,  “காந்தி”,  ”சிதம்பரம்”,  ”சப்புரமணி சாமி”என்ற பெயருடையவர்கள், தயவு செய்து கமென்ஸ் போடவேண்டாம்..அப்புறம்..பச்ச பச்சையா, கண்டபடி பேசவேண்டியிருக்கும்..சொல்லிப்புட்டேன்)

Sunday, July 11, 2010

போட்டோ காமெடி 14..

.
.
.
எதுக்கு வம்பு..?
பட்டாபட்டி கருத்து சொல்ல...
பதிவுலகம் கொடி பிடிக்க...
.
.
மொக்கை..புனவு..
கருத்து..கலப்பு..
நீதி..நேர்மை..
ரத்தம்..யுத்தம்..
ஆண்..பெண்..அன்னை..ஆட்சி..
 .
.
அடிச்சும் கேட்பாங்க..
அன்பாகக் கேட்பாங்க..
அதட்டிக் கேட்பாங்க.
கருத்து கேட்பாங்க..கலங்காதே செல்லம்..

வாய்மூடி மவுனியாய்.. தந்திரமாய் தாவிவிடு....

ரெடி..1..2..3.....ஜூட்..


(   ரெட்டை..மற்றும் வெளியூர்காரனுக்கு இந்த பதிவு அர்ப்பணம்..
இன்னும் 2 மணி நேரம்..

தக்காளி.. பதிவு வரலே..

“பாவலர் பட்டாபட்டி”.. பாட்டுப்பாட ஆரம்பிப்பான்..

வேல்..வேல்..வெற்றிவேல்...)
.
.
.

Friday, July 9, 2010

நீயா(!) ..இல்ல.. நானா ?...

வெளியூர்காரன் மற்றும் ரெட்டைவாலுக்கு , பட்டாபட்டி எழுதும் பகீ(கி)ங்கரக்கடிதம்..போனமாசம் வக்கீல் நோட்டீஸ் உட்டேன்..பதிலக்காணோம்..

”அருவாள எடுத்தா, ரத்தம் பாக்காம வெக்கமாட்டான் இந்த பட்டாபட்டி”-னு எட்டுப்பட்டி கிராமத்திலேயும் சொல்லுவானுகோ.

 • அன்பா சொன்னேன்..
 • அதட்டி சொன்னேன்..
 • இளிச்சுட்டே சொன்னேன்..
 • இருமிட்டு சொன்னேன்..
 • காரமா சொன்னேன்..
 • கடைசியா சொன்னேன்..

கேக்குலையே பயபுள்ளைக..    அதுக்காக  பொத்திக்கிட்டு போக,  நான் என்ன %$^#னு நினைச்சீங்களா?..  பொத்திபொத்தி வெச்ச ’பெரியார் சிந்தனைகளே’-யே,   வீரமணிகிட்ட இருந்து புடுங்கி, மக்களுக்கு கொடுத்தாச்சு..

அதனால...அதனால... உங்களுக்கு கடைசியா 48 மணி நேரம் டைம் கொடுக்கிறான் இந்த பட்டாபட்டி...அதுக்குள்ள ,

”புத்திக்கு லேலை கொடுத்து, அடுத்த பதிவ போடறதா?”

.
.
இல்ல..
.
.
”லீவு லெட்டர் கொடுத்துட்டு, ஊரைப்பார்க்க போறதா?”
.
.
இல்ல...
.
.
”ப்ளாக்க இழுத்து மூடிக்கிட்டு புல்லு புடுங்க போறதா?”-னு  முடிவு பண்ணுக்குங்க..

இது சாதாரண மிரட்டல் கிடையாது...சாத்வீக மிரட்டல்..

( யோவ்..பன்னாடைகளா.. இதுக்காக உண்ணாவிரதம், சத்தியாகிரகம் பண்ணுவேனு கனவுல கூட நினக்காதீங்க..ரெண்டு புரோட்டா + ஒரு டீ-க்கு, உங்க ப்ளாக வித்துட்டு போயிட்டேயிருப்பேன்  பங்காளிகளா....சொல்லிப்புட்டேன்)

.........   Countdown Starts    .....
.
.
.
.
( மக்கா..... எல்லோரும், ரெடியாயிருங்க..
பிரச்சனை முடிஞ்சதும் கொண்டாடிவிடலாம்
இடம்..பொருள்..ஏவல் பின்னால அறிவிக்கப்படும்..)
.
.
.
.
.
.
.

Wednesday, July 7, 2010

வறுமைக் கோட்டிலிருந்து (?)

    சாரி பிரதர்ஸ்..  என்னடா எடுத்ததும் மன்னிப்பு கேக்குறானே?.  அதுவும் ஆம்பளப்பசங்களைப் பார்த்து(!). பெருசா ஏதாவது அலம்பப்போறானா?-னு நினைக்கிற பயபுள்ளைகளுக்கு , நான் ஒன்றுமட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.   வந்_____ந்து..வந்து....சாரிங்க..ஹி..ஹி.. கொஞ்சநாளா ஆணி அதிகமானதால், வலையுலகம் வர இயலவில்லை.  ஓ.கே..  மேட்டருக்கு போவோம்.

    நாடு சுதந்திரம் வாங்கி பலவருசங்கள் ஆகிவிட்டன.  சுதந்திரத்துக்காக, தனிமனிதனாய் பாடுபட்ட தேசத்தந்தை(!) காந்தியாகட்டும், குடும்பத்தையே துச்சமாக நினைத்து, நாட்டுக்காக ரத்தம் சிந்திய மோதிலால் நேருவாகட்டும். ( சரித்திரம் சொல்கிறது பாஸ்..). ஒன்றாக இருந்த நாட்டை, துண்டாக்கி ,பாகிஸ்தானுக்கு பண உதவிசெய்து அதற்காக ’தீவிரவாதம்’ என்ற பெயரில், ’வட்டி’ வாங்கிக்கொண்டிருக்கும் நமது தேசமாகட்டும், அன்றுமுதல் இன்றுவரை போராடிக்கொண்டிருப்பது முக்கியமான ஒரு பிரச்சனைக்குத்தான்.  ஆங்.. அதுக்கு ஒரு பேர வெச்சுருக்காங்க.. ’வறுமைக்கோடாம்’.

    சரி. சுதந்திரம் வாங்கியதும், தலைவர்கள் விட்ட அறிக்கைகளில் முக்கியமானது , ’வறுமைக்கோட்டை ஒழித்து, இந்தியாவை முன்னேற்றுவோம்’ .  சமீபத்தில அதே வசனம் அன்னை(?) சோனியாவால் திரும்பவும் சொல்லப்பட்டது.   சரி..  இவர்களின் பார்வையில் வறுமைக்கோடுனா என்ன, அதற்காக அவர்கள் தீட்டிய திட்டம், அதனுடைய பலன்கள் ஆகியவற்றைப்பற்றி  அலசலாம்.

    இந்திய மக்கள்தொகையில் 15% ஏழ்மையில் உள்ளனர்.  அடுத்த 65%, நடுத்தர மக்கள்.  மீதியுள்ள 20% ஏதோ அவர்களின் சொந்தமுயற்சியால்(?) உழைத்து, பணக்கார வர்கமாக வசிக்கின்றனர்.  நமது தமிழகத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.  ஒரு தலைவனுக்கே, நடுத்தரவர்கத்தில் இருந்து பணக்கார வர்கமாக,  பதவி உயர்வு பெற,  சற்றேரக்குறைய 40 ஆண்டுகள் பிடித்தன.  அப்படியென்றால். சாதாரண மக்களின் கதி?. 

பணக்கார வர்க்கம்
    இவர்கள்தான் நாட்டின் முதுகெலும்பென்றால் மிகையாகாது.  அரசியலிலும், ஆளுமையிலும், வர்த்தகத்திலும் கொடி கட்டிப்பறக்கும் அவர்களின் இன்றைய தலையாலப் பிரச்சனை ‘வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு’ உதவி செய்யசெய்வதுதான்.  ’என்ன ம%$#@ரு உதவி?’ என்று உங்கள் மனதில் தோன்றினால், சாரி..பாஸ்..  நீங்க பாகிஸ்தான் உளவாளியா இருக்க வாய்ப்புள்ளது எனக்கருதி, தேசிய சட்டப்படி உங்களுக்கு விளக்கமுடியாது.

நடுத்தர வர்க்கம்

     இது வேறயாருமில்ல பாஸ்...  ’நானும் நீங்களும்தான்’.  கஷ்டப்பட்டு சம்பாரிப்பது, மனதை கடினமாக்கி செலவளிப்பது, சட்ட திட்டங்களை முடிந்தவரை(?0 பின்பற்றுவது, இலவசங்களுக்காக சிலசமயம்(?) கை ஏந்துவது, பெரும்பாலான நேரங்களில், மனச்சாட்சிப்படி நடக்கும் கேணப்பயலுக.
சரியாச்சொல்லனுமுனா தலையாட்டி பொம்மைகள்.  நம்முடைய உயர்ந்தபட்ச நோக்கமே, ‘இன்னைக்கு நமக்கு என்ன ஆதாயம்?’. அவ்வளவுதான்.  இப்படிபட்டவர்களுக்கு அரசாங்கம் என்ன செய்கிறது என்று நினைத்துப்பார்த்திருக்கிறீர்களா?.  கவலையை விடுங்க மக்களே.  உங்களை வறுமைக்கோட்டுக்கு கீழே கொண்டு செல்லும் காலம் வெகு அருகில்.


ஏழை வர்க்கம்
     காந்தி சொன்னாரே ‘கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு’ என்று...... உண்மைதான்..... விவசாயி, அன்றாடங்காச்சி, அடுத்த நேரச்சோற்றுக்கு வழி தெரியாமல் இருக்கும் மக்கள், இவர்களை எல்லாம் இதில் அடக்கிவிடலாம்.  பல வருடங்களாக , இவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, அரசியல்வாதிகளும், அரசாங்கமும் பாடுபடுவதை கண்கூடாகப் பார்த்திருப்பீர்கள்.  நீங்களே சொல்லுங்க பாஸ்.. இலவசமா பல்பொடி, செருப்பு, பிரியாணி, காண்டம், டீவி, கரண்ட், குடிசை , அன்னதானம், சரக்கு,  இவ்வளவும் கொடுத்து இன்னும் முன்னேறவில்லையென்றால், யாருடைய பிரச்சனை இது?..  விடுங்க..  தேவையில்லாம சொல்லிட்டிருக்கோம்... பார்ப்போம் சார்..  கிரகநிலை சரியாயிருந்து, ராகுல் காந்தியின் பையன் ஆட்சிக்கு வந்ததும், எதாவது நல்வழி கிடைக்காமலா போயிடும்?.

உரிமை vs கடமை
     சமீபத்தில், பழைய ஆனந்தவிகடனை படிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  அதில் ஒரு கருத்து பசக்-னு மனசுல ஒட்டிக்கிச்சு சார்..  நேரு பிரதமராயிருந்தபோது நடந்த சம்பவம்.  ஒரு நாள் ஏதோ கூட்டத்துக்கு நேரு வந்தபோது, ஒருவன் அவரது காரை மறித்தானாம்.  நாடு சுதந்திரம் அடைந்திருச்சுனு எல்லோரும் சொல்றாங்களே..பட்டதாரி ஆகியும் வேலை கிடைக்காமல் இருக்கிறேன். சுதந்திரம் வாங்கி என்ன பலன்? என்று.
   
     அதற்கு அவர் சொன்னாராம். ”இப்படி பொது இடத்தில, பிரதமரை நிறுத்தி கேள்விகேட்கும் உரிமை கிடைத்துள்ளதே.. அதுதான் சுதந்திரம்”.    மேலோட்டமாக பார்த்தால், நேரு கடமை தவறா கண்ணியமானவர் போல தோற்றமளிக்கும் ஒரு செய்திதான் இது.   இந்த பதிலை பார்த்தால், அதில் பொதிந்துள்ள ஆணவம்தான் எங்களுக்கு தெரிகிறதே தவிர, ஒரு தலைவனின் கடமை குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது.    ’உரிமைக்கும் , கடமைக்கும் என்னய்யா வித்தியாசம்?’.
ஒரு நல்ல தலைவன் தொண்டர்களின் குரலை பிரதிபலிக்கும் ஆற்றல் கொண்டவனாக இருக்கவேண்டும்”.   அதைவிடுத்து,  மொத்தகூட்டமும், அவனது சொல்பேச்சு கேட்டு ஆடும், ஆட்டுமந்தைகளாக நினைத்தால் அந்த கூட்டத்தின் கதி அதோ கதிதான்..   ஆனால், கடமையை செய்யாமல், உரிமை பற்றி பேசும் தலைவர்களைத்தான் நாம் பெற்றிருக்கிறோம்.

     சரி..வறுமைக்கோடு பிரச்சனைக்கு வருவோம்.  இதையெல்லாம் ஒழிக்க ஒரே வழி..  நல்ல வழி... “நடுத்தர மக்களை, ஏழை மக்களாக்குவதுதான்”.  ஏணியில ஏறுவதை விட , இறங்குவது சுலபம் சார்.  அதற்கான முயற்சியாகத்தான்

 • மின்சார வெட்டு,
 • குழந்தை தொழிலாளர்கள்,
 • போலி மருந்துகள்,
 • கலப்பட உணவு,
 • அயல்நாட்டுக்கு நிதியுதவி,
 • கல்விக்கூடங்களில் பகற்கொள்ளை

என பல சிறந்த திட்டங்களை நடைமுறையில் செயல்படுத்திக்கொண்டுள்ளோம். எனவே அன்பு உள்ளங்களே..விரைவில் உங்களை நல்ல குடிமகனாக்கி, நாட்டை செழிப்பாக்கும் வரை, ஊண் உறக்கமின்றி பாடுபடும் நம் தலைவர்களுக்கு , உங்கள் உடல், உயிர் மற்றும் மயிர் கொடுக்க தயாராகுங்கள்... நாளை நமதே... நாளை சந்திப்போம்...

போகும்முன் சில சந்தேகங்கள்.

1. கோட்ஷேயின் வாக்குமூலத்தை, பல வருடங்களாக வெளியிடாமல் வைத்திருந்ததின் மர்மம் என்ன?

2. நாட்டின் பாதுக்காப்புக்கு வாங்கிய பீரங்கியில் ஊழல் செய்யத்துணிந்த ஜென்மங்களை, தியாகி என அழைப்பது ஏன்?

3. நாட்டுக்காக பாடுபட்டவர்கள் காந்தியும் நேருவும் (வரலாறுப்புத்தகத்தில் சொல்வது). சுதந்திரத்துக்காக, போராடிய மற்ற தியாகிகளின் சரித்திரத்தை மறைத்தது யார்? ஏன்?

இதைப்பற்றி அறிய, பல புத்தங்களை படிக்கவேண்டியுள்ளது.. வரும் பதிவுகளில் துவைத்து அலசவேண்டும்

.
.
.