Pages

Friday, July 23, 2010

ப்ளீஸ்... கண்ணக் குத்திப்போடாதீங்க....

தமிழக மக்களுக்கு அன்பான வேண்டுகோள்.
ஆளும் கடவுள்களைப்பற்றியும் , காவல் தெய்வங்களைப்பற்றியும், சுட சுட உண்மைகளை வெளியிட்டதால்,  "நண்பர் சவுக்கு"  போலீசாரால் , போலி வழக்கில் கைது  செய்யப்பட்டுள்ளார்..

அதற்கு எனது கண்டனங்களை பதிவுசெய்கிறேன்...

மேலும் சக மனிதர்களுக்கு என்னுடைய அறிவுரை..

 •  ஊழல் செய்பவரை , உற்றாராக நினையுங்கள்.
 •  கரைவேட்டிகளை பார்த்தால், கடவுளாக எண்ணி,  காலில் விழுங்கள்.
 •  நக்கீரன் பத்திரிக்கைய வாங்காதாவர்களை, நாடுகடத்துங்கள்..அல்லது நடுரோட்டில், காறி உமிழுங்கள்.முக்கியமா, இந்த உப்பு..உப்புனு சொல்றாங்களே...அது ரொம்ப கெடுதல் பாஸ்.. இனிமேல அந்த கர்மத்தை போட்டு சாப்பிடாதீங்க..

ஆ....என்னாது... முடியாதா?...
அப்ப ஒன்பது ஓட்டையையும் மூடிக்கிட்டு.. குடும்பத்தை பாருங்க..( உங்க குடும்பத்தை சொன்னேன் பாஸ்...)


மேலும்..அடுத்த எலெக்னுக்கு , ஓட்டு கேட்டு வருவாங்க..அப்ப, மறக்காம,  ஏதாவது இலவசமா வாங்கிட்டு   ( அது நமது பிறப்புரிமை பாஸ்.) ,உங்க பொன்னான வாக்கை , பார்த்து பத்திரமா குத்துங்க பாஸ் ..குத்துங்க...

மேலும் ( சத்தமா படிங்க பாஸ்......கேக்குலேனா..என்மேலும் ஏதாவது பாயும்..)வாழ்க கலைஞர்..
வாழ்க கனிமொழி..
வாழ்க அழகிரி..
வாழ்க ஸ்டாலின்..
வாழ்க உதயநிதி..
வாழ்க அறிவுநிதி ..
வாழ்க மு.க.முத்து..( சொல்லமுடியாது..இவரு பேரைச்சொல்லலேனா..பின்னாடி....பொய்வழக்கு பாய்ந்தாலும் பாயும்..)


என்னால முடிஞ்ச பேரையெல்லாம் சொல்லீட்டேன்...வேறதாவது இருந்தா அப்படிக்கா சேர்த்து, வாழ்க..வாழ்கனு சொல்லுங்க...
வாழ்க ஜனநாயகம்(?)..
வளர்க பத்திரிக்கை தர்மம்..
.
.
.

67 comments:

 1. திருவிளையாடல்ல புள்ளையார் மாதிரி இவ்வளவு பேரையும் தனித்தனியா வாழ்க சொல்றதும் பட்டா வாழ்க சொல்றதும் ஒன்னுதானே. அதே சொல்லிக்கிறேன். பட்டா வாழ்க. வடை எனக்குதான்:)))

  ReplyDelete
 2. பின்னூட்டம் போட்டாக் கண்ணைக் குத்தினதா ஆகிருமோ!!!!!

  ReplyDelete
 3. ஆகா..”வாழ்க..வாழ்க” சொல்லி ஒரு வாய் தண்ணி குடிச்சு முடிக்கலே...
  என்னைய முந்திடீங்களே...ஹி..ஹி

  ReplyDelete
 4. Blogger துளசி கோபால் said...

  பின்னூட்டம் போட்டாக் கண்ணைக் குத்தினதா ஆகிருமோ!!!!!
  //

  தமிழனு... மூச்சுவிட்டாவே..குத்துவாங்க போல பாஸ்...

  ReplyDelete
 5. @All

  ஆமா சார்..இந்த சுதந்திரம் வாங்கி தந்ததா..வரலாற்றில் படித்தேன்..

  அப்படீனா என்ன சார்?..

  யாருகிட்ட இருந்து யாருக்கு?...

  ReplyDelete
 6. சுதந்திரம் வாங்கினாங்க பட்டா. ‘சு’ன்னா சுயம்னு புரிஞ்சிகிட்டு, தந்திரத்த மட்டும் நமக்கு தந்துட்டாங்க:))

  ReplyDelete
 7. தானே விழா எடுத்த தானைத் தலைவன் வாழ்க வாழ்க!

  அப்பாடி!என்ன பட்டு?இப்ப எதுவும் பாயாதுள்ள ?

  பட்டு,சுதந்திரம் அயல் நாட்டுக்காரன் கிட்ட இருந்து நமக்கு.நமக்குள்ளேயே எல்லாம் கிடையாது.புரியுதா?மன்னர் ஆட்சி நடந்தாலும்,மைனர் ஆட்சி நடந்தாலும் நாம மயித்த கூட புடுங்க முடியாது.இது தான் சுதந்திரத்தின் சாராம்சம்.எல்லாத்தையும் பொத்திகிட்டு வேலைய பார்க்க வேண்டியது தான்.

  ReplyDelete
 8. ஆங்!இதுவும் எதுக்கும் இருக்கட்டும்.

  'கர்ம' வீரர் காமராஜர் வாழ்க!
  'கர்ம' சிரத்தை உள்ள ஜாபர் சேட் வாழ்க!

  ReplyDelete
 9. தயாநிதி அழகிரியை விட்டுட்டீங்க, நிச்சயம் ஆட்டோதான்!

  ReplyDelete
 10. வாழ்க வாழ்க மு.க.முதுவோட நிக்குது அப்படியே உதய நிதி ,தயாநிதி ,அரவிந்தன் அடுத்தடுத்த தலை முறைகளுக்கும் சொல்லுவோம்.

  ReplyDelete
 11. வாழ்க பட்டா பட்டி.
  வாழ்க பட்டா பட்டி.
  வாழ்க பட்டா பட்டி.
  வாழ்க பட்டா பட்டி.
  வாழ்க பட்டா பட்டி.
  வாழ்க பட்டா பட்டி.
  வாழ்க பட்டா பட்டி.

  (பயம் ரொம்ப ஓவரா போயிடுச்சு)

  ReplyDelete
 12. இந்த கேடுகெட்ட அரசு முறைகேடுகளை விசாரிக்காமல்.. அதனை வெளிக்கொண்டு வந்தவரை கைது செய்திருக்கிறது..
  எந்த ஊடகமும் அதனைக் கண்டு கொள்ளவில்லை.. ஈழத்தமிழனின் ரத்தம் குடித்தும், நித்தியானந்தாவின் அந்தரங்கம் எழுதியும் சோறு தின்கிறார்.. நெற்றிக்கண்ணை திறப்பேன் என்பவர்.. கேவலமான உலகத்தில் நான் உப்பு போட்டு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு பட்டா...

  ReplyDelete
 13. அரைநாள் உண்ணாவிரதத்தில் ஈழத்தமிழர்களுக்கு விடிவு பெற்றுதந்ந விடிவெள்ளி இடிதாங்கி மூத்த பத்திரிகையாளன் தழிழ் காக்கும் கோமான் டாக்டர் கலைஞர் வாழ்க

  ReplyDelete
 14. அய்ய.......உப்பா?? சோத்திலையா?? அட போங்க அண்ணாத்த.
  10 வருஷமா உப்பே போடறதும் இல்ல. நமக்கெல்லாம் சாரி .......எனகெல்லாம் .. அது எதுக்குங்கண்ணா??

  ReplyDelete
 15. பயமா இருக்கு பாஸ்! அங்க இங்க, அவங்க இவங்களப் பத்தி, அப்படி இப்படி எழுதிருக்கேன். அழிச்சிடவா?

  ReplyDelete
 16. தைரியமா பதிவு போடறீங்க..

  அண்ணாத்தை.. நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா?

  ReplyDelete
 17. @வானம்பாடிகள் said...
  சுதந்திரம் வாங்கினாங்க பட்டா. ‘சு’ன்னா சுயம்னு புரிஞ்சிகிட்டு, தந்திரத்த மட்டும் நமக்கு தந்துட்டாங்க:))
  //

  அருமையான விளக்கம் பாஸ்..
  இப்பத்தான் எனக்கு புரிஞ்சது...ஹி..ஹி

  ReplyDelete
 18. @ILLUMINATI said...
  தானே விழா எடுத்த தானைத் தலைவன் வாழ்க வாழ்க!
  அப்பாடி!என்ன பட்டு?இப்ப எதுவும் பாயாதுள்ள ?
  பட்டு,சுதந்திரம் அயல் நாட்டுக்காரன் கிட்ட இருந்து நமக்கு.நமக்குள்ளேயே எல்லாம் கிடையாது.புரியுதா?மன்னர் ஆட்சி நடந்தாலும்,மைனர் ஆட்சி நடந்தாலும் நாம மயித்த கூட புடுங்க முடியாது.இது தான் சுதந்திரத்தின் சாராம்சம்.எல்லாத்தையும் பொத்திகிட்டு வேலைய பார்க்க வேண்டியது தான்.
  //

  அப்படித்தான் நடக்குது இலுமி...

  ReplyDelete
 19. @ILLUMINATI said...
  ஆங்!இதுவும் எதுக்கும் இருக்கட்டும்.
  'கர்ம' வீரர் காமராஜர் வாழ்க!
  'கர்ம' சிரத்தை உள்ள ஜாபர் சேட் வாழ்க!
  //

  இது நல்ல குடிமகனுக்கு அழகு..

  ReplyDelete
 20. @பெயர் சொல்ல விருப்பமில்லை said...
  தயாநிதி அழகிரியை விட்டுட்டீங்க, நிச்சயம் ஆட்டோதான்!
  //


  ஆகா.. கடவுளே..

  தெய்வக்குத்தம் ஆகிப்போச்சே...

  ReplyDelete
 21. @ஆண்டாள்மகன் said...
  வாழ்க வாழ்க மு.க.முதுவோட நிக்குது அப்படியே உதய நிதி ,தயாநிதி ,அரவிந்தன் அடுத்தடுத்த தலை முறைகளுக்கும் சொல்லுவோம்.
  //

  இதுக்குத்தான் படிச்சவங்க வேணும் சார்..
  வேற யாராவது பேர் விட்டுட்டேனுங்களா?....ஹி..ஹி

  ReplyDelete
 22. @கொல்லான் said...
  வாழ்க பட்டா பட்டி.
  வாழ்க பட்டா பட்டி.
  வாழ்க பட்டா பட்டி.
  வாழ்க பட்டா பட்டி.
  வாழ்க பட்டா பட்டி.
  வாழ்க பட்டா பட்டி.
  வாழ்க பட்டா பட்டி.
  (பயம் ரொம்ப ஓவரா போயிடுச்சு)
  //

  ஹா.ஹா

  ReplyDelete
 23. @கே.ஆர்.பி.செந்தில் said...
  இந்த கேடுகெட்ட அரசு முறைகேடுகளை விசாரிக்காமல்.. அதனை வெளிக்கொண்டு வந்தவரை கைது செய்திருக்கிறது..
  எந்த ஊடகமும் அதனைக் கண்டு கொள்ளவில்லை.. ஈழத்தமிழனின் ரத்தம் குடித்தும், நித்தியானந்தாவின் அந்தரங்கம் எழுதியும் சோறு தின்கிறார்.. நெற்றிக்கண்ணை திறப்பேன் என்பவர்.. கேவலமான உலகத்தில் நான் உப்பு போட்டு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு பட்டா...
  //

  ஒரு வேளை கீழே உள்ள நெற்றிக்கண்ணை சொல்றாரோ நம்ம மீசைக்கார அண்ணாச்சி...

  ReplyDelete
 24. im on the way to thillaalankadi mv(romba mukkiyam) poyittu appaalikka varen...

  ReplyDelete
 25. @Cool Boy கிருத்திகன். said...
  அரைநாள் உண்ணாவிரதத்தில் ஈழத்தமிழர்களுக்கு விடிவு பெற்றுதந்ந விடிவெள்ளி இடிதாங்கி மூத்த பத்திரிகையாளன் தழிழ் காக்கும் கோமான் டாக்டர் கலைஞர் வாழ்க
  //


  வாழ்க..வாழ்க..

  ReplyDelete
 26. கக்கு - மாணிக்கம் said...

  அய்ய.......உப்பா?? சோத்திலையா?? அட போங்க அண்ணாத்த.
  10 வருஷமா உப்பே போடறதும் இல்ல. நமக்கெல்லாம் சாரி .......எனகெல்லாம் .. அது எதுக்குங்கண்ணா??
  //


  உண்மைதான் பாஸ்....
  வர வர எங்களுக்கும் ரோசம் குறைய ஆரம்பிச்சுடுச்சு அண்ணாச்சி..
  ஒரு வேளை, டாஸ்மார் சரக்குல, ஏதாவது கலக்குறானுகளா?

  ReplyDelete
 27. @கிரி said...
  பயமா இருக்கு பாஸ்! அங்க இங்க, அவங்க இவங்களப் பத்தி, அப்படி இப்படி எழுதிருக்கேன். அழிச்சிடவா?
  //

  என்ன பாஸ்.. உங்க ப்ளாக்ல கமென்ஸ் போட்டா Error காமிக்குது...

  ReplyDelete
 28. @Indhira said...
  தைரியமா பதிவு போடறீங்க..
  அண்ணாத்தை.. நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா?
  //

  உப்பு சொஞ்சம் அதிகமா சாப்பிட்டுட்டேன் மேடம்..ஹி..ஹி
  கண்டிப்பா கெட்டவனாத்தான் இருக்கனும்..

  சாமி.. எனக்கு நல்ல புத்தி கொடு தெய்வமே...ஹி..ஹி

  ReplyDelete
 29. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  im on the way to thillaalankadi mv(romba mukkiyam) poyittu appaalikka varen...

  //

  பார்த்துப்பா.. காக்கிக, கண்ணுல படாம போயிட்டு வா...

  ReplyDelete
 30. @தாத்தா
  சீக்கிரம் எல்லாப்பயலையும் உள்ள போட்றலாம் தலைவா..
  வரவர ரொம்பத்தான் எழுதரானுக..

  நம்ம குடும்பம்..நம்ம உறவினர்கள்...

  சும்மா அல்லக்கையா, ஐந்து குடும்பத்துக்கு மட்டும் Long term visa கொடுத்து
  கூடமாட ஒத்தாசைக்கு வெச்சுக்கிட்டா போதும்...

  ReplyDelete
 31. முரட்டு நித்தியின் குறும்பு பேட்டி!

  ரஞ்சிதா பட்ட வேதனை : நித்யானந்தா மன உருக்கம்.

  அச்சச்சோ,டபுள் மீனிங்லாம் இல்ல. அப்படி பார்க்காதேள்:)

  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=45158

  ReplyDelete
 32. பட்டா உப்புன்னா என்னது தமிழ்நாட்டில அது கிடைக்குதா...?

  ReplyDelete
 33. அப்ப சவுக்கு போட்ட கவுண்டவுன் சரிதான் போல அதான் சனி உச்சத்துல இருக்கு தாத்தாவுக்கு

  ’’’வாழ்க தாத்தா பரம்பரை ’’’


  மொத்தமா வாழ்திட்டேன் பாஸ்.. அப்புறம் பேராண்டியை வாழ்தலைன்னு யாரும் கேஸ் போட்டுட கூடாது பாருங்க அதான் முன் சாக்கிரதை

  ReplyDelete
 34. @ILLUMINATI said...
  முரட்டு நித்தியின் குறும்பு பேட்டி!

  //

  தவறான பிரசாரத்தால் அவரும், அவரது குடும்பத்தாரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக நான் எனது பிராத்தனையையும், வாழ்த்தையும் வழங்குகிறேன்

  //


  அதை மட்டும் வழங்கியிருந்தா..இவ்வளவு பிரச்சனை வந்திருக்காதே...


  இனிமேல.. வாழ்க்கையில ,யாருக்கும் தீர்த்தம் கொடுக்காதீங்க சாமீஈஈஈஈஈஈ...

  ReplyDelete
 35. ஜெய்லானி said...

  அப்ப சவுக்கு போட்ட கவுண்டவுன் சரிதான் போல அதான் சனி உச்சத்துல இருக்கு தாத்தாவுக்கு

  ’’’வாழ்க தாத்தா பரம்பரை ’’’


  மொத்தமா வாழ்திட்டேன் பாஸ்.. அப்புறம் பேராண்டியை வாழ்தலைன்னு யாரும் கேஸ் போட்டுட கூடாது பாருங்க அதான் முன் சாக்கிரதை

  //

  அது கணக்குல வராது..
  பேர் ..மற்றும் நட்சத்திரம் சொல்லி வாழ்த்தனும்....ஹி..ஹி

  ReplyDelete
 36. //அது கணக்குல வராது..
  பேர் ..மற்றும் நட்சத்திரம் சொல்லி வாழ்த்தனும்....ஹி..ஹி//

  ஏங்க தாத்தா சாமி கண்ணை குத்திடுமா..? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 37. அட, சாமி நம்ம பிளாக் எல்லாம் படிக்குதோ?
  அது இந்த டிச்குஸ் பண்ற ரவுசு பாஸ். விட்டு ஒழிக்கணும். இந்த வார இருதியில பண்ணிடுவோம்.

  ReplyDelete
 38. எப்ப பதிவு போடுராகனே தெரிய மட்டீங்குது..., படிச்சிட்டு வர்றேன்.....

  ReplyDelete
 39. Pattapatti nov.. Pinreenga.. Edherchiyaa paathadhu thaan unga blog.. Aprom continuous a padikka arambichitten.. Nadathunga...
  (Ellaarum tamil la eludhum pothu naan mattum yen englipiss la eludharen .. Naan enna periyaa pudingiyaa nu neenga kekardhu enakku kekudhu.. Namba Tamizh semmozhi mamanaadu.. saarry..maanaadu liye thuvakka urai (Condoms illa bass)englipiss la thaan kuduthaangalaam.. Ippo nan tamil la eludhinaa adhu Indha Tamizhin paadhukaavalar Dr.Watcman a asinga paduthuvadhu maari thaane.. Thalaivar thaan en uyir moochu..!!

  Vaazhga Tamizh.. Valarga Kalaingner .. Vaanga Rahul ..!!

  ReplyDelete
 40. //ஊழல் செய்பவரை , உற்றாராக நினையுங்கள்.//

  அதைத் தானே இத்தனி வருசமா செஞ்சுக்கிட்டிருக்கோம். புதுசா ஏதாச்சும் சொல்லுங்க அண்ணே!

  ReplyDelete
 41. ///ஆளும் கடவுள்களைப்பற்றியும் , காவல் தெய்வங்களைப்பற்றியும், சுட சுட உண்மைகளை வெளியிட்டதால், "நண்பர் சவுக்கு" போலீசாரால் , போலி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்..

  அதற்கு எனது கண்டனங்களை பதிவுசெய்கிறேன்...///


  முன் மொழிகிறேன்... அப்புறம் வழிமொழிகிறேன்....

  ReplyDelete
 42. ///என்னால முடிஞ்ச பேரையெல்லாம் சொல்லீட்டேன்...வேறதாவது இருந்தா அப்படிக்கா சேர்த்து, வாழ்க..வாழ்கனு சொல்லுங்க...///

  பட்டா, இன்னும் கொஞ்சம் உப்பை கொறைச்சுக்கோ, என்ன தைரியம் இருந்தா, சன் குடும்பத்தையும் ... அப்புறம் முக்கியமா குஞ்சு குளுவான்களோட பேர்கலையும் விட்டிருப்பே, நாளைய டமில் நாட்டோட எதிகாலமே அவங்ககிட்ட்தான்யா இருக்கு....

  ReplyDelete
 43. ///அப்ப ஒன்பது ஓட்டையையும் மூடிக்கிட்டு.. குடும்பத்தை பாருங்க..( உங்க குடும்பத்தை சொன்னேன் பாஸ்...)///

  எல்லா டமில் மக்களையும் தன் குடும்பமா பாவிக்கிற,டமிலுக்கா, டமில் நாட்டுக்காக, ஒழச்சி ஒழச்சி ஓடா தேஞ்சி போனவங்கள திட்டுரயே... உனக்கு மனசாச்சியே இல்லையா பட்டா?.

  ReplyDelete
 44. ///வாழ்க ஜனநாயகம்(?)..
  வளர்க பத்திரிக்கை தர்மம்..///

  சாதி வித்தியாசம் பாக்காம, ஏழை பணக்கரண்ணு பிரிச்சி பாக்காம, ஓட்டு போடுர எல்லருக்கும் பணத்த அள்ளி குடுக்கிற ஜனனாயகத்தை வாழ்க என்று நானும் உங்களுடன்....

  விளம்பரம்ன்ற பேர்ல எல்லா பத்திரிகைகளுக்கும், தர்மம் பண்ணி நல்லாத்தானயா வளத்துகிட்டு இருக்காங்க...,
  நம்ம பதிவர், சவுக்கு சங்கரால இந்த பத்திரிகைகளுக்கு தம்ப்படி பைஸாவுக்கு பிரயோசனம் உண்டா..., பேச வந்திட்டீரு...

  ReplyDelete
 45. மதிப்பு மிகு திரு சவுக்கு அவர்களின் கைது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

  ReplyDelete
 46. செம்மொழி வாழ்க, செம்மொழி கீதம் தந்த தலைவர் வாழ்க, மாநாடு கண்ட மன்னர் வாழ்க, வாழ்க!

  ReplyDelete
 47. பட்டா நண்பா, உங்கள நினச்சி பெருமையா இருக்கு. சும்மா பயப்படாம போட்டு தாக்குறீங்க! வாழ்த்துக்கள்.

  பிரபாகர்...

  ReplyDelete
 48. சவுக்கு தளம் அரசு புரசலாய் பார்வையிடும் போது ஏதோ கிசு கிசு தளமென்றே புறக்கணித்திருக்கிறேன்.அத்தனையும் உண்மைகள் என்றே சங்கர் கைது மூலம் அதிகார வர்க்கம் நிரூபித்திருக்கிறது.

  இந்தப் பின்னூட்டமிடும் கணத்தில் சங்கர் ஜாமினில் விடுதலை மகிழ்ச்சியை அளிக்கிறது.

  மேலும் பதிவர்கள் தனி ஒரு உலகில் பவனி வருகிறோமோ என்ற சந்தேகத்தை பத்திரிகை,தொலைக்காட்சி ஊடகங்கள் கொண்டு வருகின்றன.எந்த ஊடகத்திலும் இது சங்கர் கைது பற்றிய ஒற்றை வரியைக் காணோம்.

  இந்தக் கைதின் மூலம் சங்கருக்கு மறைமுகமான விளம்பரமே கிடைத்திருக்கிறது.

  ReplyDelete
 49. தயாளு வாழ்க
  தர்மாம்பா வாழ்க
  ராசாத்தி வாழ்க
  செல்வி வாழ்க
  கயல்விழி வாழ்க
  தமிழரசு வாழ்க
  ராசா வாழ்க

  பட்டாபட்டி இவங்களுக்கெல்லாம் மவனே வாழ்த்து சொல்லல அம்பேல்தான்.

  ReplyDelete
 50. //இந்த கேடுகெட்ட அரசு முறைகேடுகளை விசாரிக்காமல்.. அதனை வெளிக்கொண்டு வந்தவரை கைது செய்திருக்கிறது..
  எந்த ஊடகமும் அதனைக் கண்டு கொள்ளவில்லை.. ஈழத்தமிழனின் ரத்தம் குடித்தும், நித்தியானந்தாவின் அந்தரங்கம் எழுதியும் சோறு தின்கிறார்.. நெற்றிக்கண்ணை திறப்பேன் என்பவர்.. கேவலமான உலகத்தில் நான் உப்பு போட்டு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு பட்டா..//

  நானும் தான்...

  ReplyDelete
 51. செல்லாது செல்லாது..

  தானைத்தலைவன் தயாநிதி அழகிரி பேர விட்டுட்டீங்க..

  விரைவில் எதிர்பாருங்கள்.. பதிவர் பட்டா கைது.. பரபரப்புச் செய்தி.

  ReplyDelete
 52. தமிழ்நாட்டுல பதிவரா இருக்கிறது ஒண்ணும் லேசுப்பட்ட சமாசாரம் இல்ல போல இருக்குது?

  ReplyDelete
 53. @கிரி said...
  அட, சாமி நம்ம பிளாக் எல்லாம் படிக்குதோ?
  அது இந்த டிச்குஸ் பண்ற ரவுசு பாஸ். விட்டு ஒழிக்கணும். இந்த வார இருதியில பண்ணிடுவோம்.
  //


  ரைட்டு...

  ReplyDelete
 54. @Jey said...
  எப்ப பதிவு போடுராகனே தெரிய மட்டீங்குது..., படிச்சிட்டு வர்றேன்.....

  //

  எல்லாம், நல்ல ராகு காலத்திலதான் ஜே...

  ReplyDelete
 55. @Blogger Anand said...
  Pattapatti nov.. Pinreenga.. Edherchiyaa paathadhu thaan unga blog.. Aprom continuous a padikka arambichitten.. Nadathunga...
  (Ellaarum tamil la eludhum pothu naan mattum yen englipiss la eludharen .. Naan enna periyaa pudingiyaa nu neenga kekardhu enakku kekudhu.. Namba Tamizh semmozhi mamanaadu.. saarry..maanaadu liye thuvakka urai (Condoms illa bass)englipiss la thaan kuduthaangalaam.. Ippo nan tamil la eludhinaa adhu Indha Tamizhin paadhukaavalar Dr.Watcman a asinga paduthuvadhu maari thaane.. Thalaivar thaan en uyir moochu..!!

  Vaazhga Tamizh.. Valarga Kalaingner .. Vaanga Rahul ..!!
  //


  ஆகா.. எழுத்துக்கூட்டி , 1 நாள் முழுதும் உங்க பதிலை , படிக்கவைத்ததற்க்காக, இந்த வாரப் பூச்செண்டு உங்களுக்கு..

  ஹி..ஹி

  ReplyDelete
 56. @சேட்டைக்காரன் said...
  //ஊழல் செய்பவரை , உற்றாராக நினையுங்கள்.//

  அதைத் தானே இத்தனி வருசமா செஞ்சுக்கிட்டிருக்கோம். புதுசா ஏதாச்சும் சொல்லுங்க அண்ணே!
  //

  ஆகா..சேட்டை.. வந்துட்டீங்களா..
  வருக...வருக....

  ReplyDelete
 57. @Jey said...

  ///என்னால முடிஞ்ச பேரையெல்லாம் சொல்லீட்டேன்...வேறதாவது இருந்தா அப்படிக்கா சேர்த்து, வாழ்க..வாழ்கனு சொல்லுங்க...///

  பட்டா, இன்னும் கொஞ்சம் உப்பை கொறைச்சுக்கோ, என்ன தைரியம் இருந்தா, சன் குடும்பத்தையும் ... அப்புறம் முக்கியமா குஞ்சு குளுவான்களோட பேர்கலையும் விட்டிருப்பே, நாளைய டமில் நாட்டோட எதிகாலமே அவங்ககிட்ட்தான்யா இருக்கு....
  //

  தவறு.. இன்றைய எதிகாலம்

  ReplyDelete
 58. @ராஜ நடராஜன் said...
  சவுக்கு தளம் அரசு புரசலாய் பார்வையிடும் போது ஏதோ கிசு கிசு தளமென்றே புறக்கணித்திருக்கிறேன்.அத்தனையும் உண்மைகள் என்றே சங்கர் கைது மூலம் அதிகார வர்க்கம் நிரூபித்திருக்கிறது.

  இந்தப் பின்னூட்டமிடும் கணத்தில் சங்கர் ஜாமினில் விடுதலை மகிழ்ச்சியை அளிக்கிறது.

  மேலும் பதிவர்கள் தனி ஒரு உலகில் பவனி வருகிறோமோ என்ற சந்தேகத்தை பத்திரிகை,தொலைக்காட்சி ஊடகங்கள் கொண்டு வருகின்றன.எந்த ஊடகத்திலும் இது சங்கர் கைது பற்றிய ஒற்றை வரியைக் காணோம்.

  இந்தக் கைதின் மூலம் சங்கருக்கு மறைமுகமான விளம்பரமே கிடைத்திருக்கிறது.
  //

  உண்மை பாஸ்...

  ReplyDelete
 59. @கும்மாச்சி said...
  தயாளு வாழ்க
  தர்மாம்பா வாழ்க
  ராசாத்தி வாழ்க
  செல்வி வாழ்க
  கயல்விழி வாழ்க
  தமிழரசு வாழ்க
  ராசா வாழ்க
  பட்டாபட்டி இவங்களுக்கெல்லாம் மவனே வாழ்த்து சொல்லல அம்பேல்தான்.
  //

  ஆகா.. இவ்வளவு பேரு விட்டுப்போச்சா...
  ( ஆமா சார்.. ராசா எங்க உள்ள நுழைஞ்சாரு...)

  ReplyDelete
 60. @செ.சரவணக்குமார் said...
  செல்லாது செல்லாது..
  தானைத்தலைவன் தயாநிதி அழகிரி பேர விட்டுட்டீங்க..
  விரைவில் எதிர்பாருங்கள்.. பதிவர் பட்டா கைது.. பரபரப்புச் செய்தி.
  //

  குஷ்புகிட்ட லெட்டர் வாங்கி வெச்சுருக்கேன் சார்..

  ReplyDelete
 61. @DrPKandaswamyPhD said...
  தமிழ்நாட்டுல பதிவரா இருக்கிறது ஒண்ணும் லேசுப்பட்ட சமாசாரம் இல்ல போல இருக்குது?

  //

  ஆமா சார்.. ரத்தபூமி..ஹி..ஹி

  ReplyDelete
 62. போதை..வேறு என்ன சொல்ல..

  ReplyDelete
 63. தாராபுரத்தான் said...

  போதை..வேறு என்ன சொல்ல..
  //

  உண்மைதான் சார்...

  ReplyDelete
 64. விடுபட்டவர்கள்....

  துரைதயாநிதி
  கயல்விழி
  பூங்கோதை
  தயாளு அம்மாள்
  ராசாத்தி அம்மாள்...
  எல்லோரும் வாழ்க வாழ்க...

  போச்சுடி பட்டு... இவங்களையெல்லாம் நீ மறந்ததுக்கு உனக்கு உண்டுடி...

  ReplyDelete
 65. "இடிப்பாரை இல்லாத‌ எம‌ரா ம‌ன்ன‌ன்
  கெடுப்பார் இனானும் கெடும்"
  அய்ய‌ன் சொன்ன‌து. ஆனால்,
  வ‌ழித்தோன்ற‌ல்,இடிப்பாரையே,
  கைது செய்கிறாரே?

  ReplyDelete
 66. அரிசி கிலோ 1 ரூபாய்.உப்பு என்ன விலை விக்கிது?நாங்க எல்லாம் உப்பை மறந்துடோம் பாஸ்.வாழ்க பட்டாபட்டி,வழர்க நாடா.

  ReplyDelete
 67. ராகுல் காந்தி வாழ்க, கொலம்பியா வாழ்க!

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!