Pages

Tuesday, July 20, 2010

நொந்த சாமீஈஈஈஈ....

.
.
.
வணக்கம். என்னையும் சகபதிவராக நினைத்து, கடந்த சிலவருடங்களாக,  Forwarded Chain Mail அனுப்பிக்கொண்டிருக்கும் சிலபல நல்ல  உள்ளங்களுக்கு, எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்வதில்  பெரும் மகிழ்சி அடைகிறேன்.

அய்யா.. சக பதிவர்கள் சார்களா..
அனுப்பிய மெயிலையே,  திரும்பத்திரும்ப அனுப்பினால்,  அடியேன் என்னதான் பண்ண முடியும்?.    சமீபத்தில் காரமடை ஜோசியர் , பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில்,  இதுபோன்ற மெயில்களை, சில நல்ல மனிதர்களுக்கே அனுப்புவதை விடுத்து,  வேறு பலருக்கு அனுப்பினால், அடுத்த ஜென்மத்தில், நாட்டை ஆளும்  நல்லவர்களின்(?) குடும்பத்தில பிறக்க  வாய்புள்ளதாக கூறியுள்ளார்.   ஆகவே, தயவுசெய்து, அதுபோனற மெயில்களை,  வேறு பலருக்கு அனுப்பி, அவர்களையும் வாழவையுங்கள்.

சாமிகளா..
இதுவரை நீங்கள் அனுப்பிய மெயில்கள் மூலம்......


Coco cola
டாய்லெட்டில் உள்ள கறைகளை , நீக்க Coco cola உபயோகப்படும் என்ற அரிய தகவல்.. ஆகா. குடிச்சா, பல்லு பளீர்னு மின்னும் போல..


எயிட்ஸ் ஊசி
சினிமா தியேட்டருக்குப்போய் படம் பார்த்தால் , ஊசிவைத்து டிக்கியில் குத்துவாங்களாம்.    ஊசினாவே, பேண்ட் கழட்டாம,  யூரின் போகும் ஜாதி. இந்த பிரச்சனைக்காகவே, தியேட்டர் போவதை விட்டு ரெண்டு வருஷம் ஆச்சி.


FREE DESKTOP
Forward மெயில் செய்தால், FREE DESKTOP,  LAPTOP, CAMERA, CELLPHONE வரும் என வழிமேல் விழி  வைத்து, தினமும் வாசலை பார்த்துக்கொண்டுள்ளேன்.
நம்பிக்கைதானே வாழ்க்கை பாஸ்..


மயக்கமருந்து
கார் பார்க்கில், மயக்கமருந்து கொடுத்து , கையில் உள்ளதை  கொள்ளையடித்துவிடுவார்கள் என்ற தகவலால், கார் ஓட்டுவதை  சமீபகாலமாக நிறுத்திவிட்டேன்.


ஒரு மெயில்..10 காசு
ஏழு வயசு பொண்ணுக்கு உடம்பு சரியில்லையாம். மெயிலை Forward பண்ணினால், ” ஒரு மெயிலுக்கு  10 காசு ” என Google  ஆண்டவர் கொடுப்பார்னு சொல்றாங்க. பாவம்..ஏழு  வருஷமா, அந்த,  ”ஏழு வயசுப்பொண்ணு”, உடம்புக்கு முடியாம கஷ்டப்படுது.    அடுத்தமுறை மெயில் வந்தா, கலைஞர் காப்பீட்டை பற்றி சொல்லனும்.


ISD Bill
முகம் தெரியாத ஆள், வீட்டு போனுக்கு கூப்பிட்டு, ஒரு நம்பரை தருவாங்களாம். அதற்கு கூப்பிட்டால், ஏதோ இலவசமா கிடைக்கும் என சொன்னார்களே என்று....?????

ஆமா....இந்த பாகிஸ்தான், சவூதி, சிங்கப்பூர் எல்லாம் கோயமுதூர் பக்கத்திலேயா இருக்கு பாஸ்.?.. ஏன்னா...என்னோட பில்-ல இந்த ஊர்க்கு பேசினதா போட்டிருக்கானுக.  என்னானு விசாரிக்கனும்....


கிட்னி
பார்ட்டிக்கு போனால், மயக்கமருந்து கொடுத்து, கிட்னிய களவாடிவிடுவார்களாம். நல்லவேளை, காலையிலதான் செக் பண்ணினேன். இன்னும் எனக்கு, ரெண்டு கிட்னி இருக்கு....


(ஆ)சாமிகள்
திருப்பதி, முருகன், சிவன், விஷ்ணு...காணக்கிடைக்காத படம்..மனசுல ஏதாவது நினைச்சுக்கிட்டு, 11 பேருக்கு அனுப்பினா, நினைத்தது நடக்கும். ..உஷ்..தினமும், கண்ணாடியில்............... கண்றாவி சார்.


கேன்ஸர்
போனை, வலதுகாதில் வைத்துப்பேசினால், கேன்ஸர் வரும் .
இடது காதில வைத்தால் இதயம் பலகீனமாகும்..
பேசாம, வாயில் வைத்து பேசிலாமா என்று யோசனை  பண்ணிக் கொண்டுள்ளேன்..( ஸ்பீக்கர் போட்டுத்தான் சார்..)


மில்லினர்
இரண்டு பர்சண்ட் கட்டினால், 1 மில்லியன் டாலர்..இந்த டீல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.   மாதாமாதம் சம்பளம் வாங்கி , நைஜீரியா மாமாவுக்கு அனுப்பிக்கிட்டு இருக்கேன் சார்.     அந்த , மில்லியன் டாலர் மட்டும் வரட்டும்.. வேலைக்கு ஆள் வைத்தாவது,  தினமும் 200 மெயில் Forward பண்ணலாம் என்று இருக்கிறேன்.


டிஸ்கி..
மேற்கண்டவை இதுவரை எனக்கு வந்தவை..

ப்ளீஸ்..ப்ளீஸ்..ப்ளீஸ்..
ப்ளீஸ்..ப்ளீஸ்..ப்ளீஸ்..
ப்ளீஸ்..ப்ளீஸ்..ப்ளீஸ்..ப்ளீஸ்..
ப்ளீஸ்..ப்ளீஸ்..ப்ளீஸ்..ப்ளீஸ்..ப்ளீஸ்..

இதுக்கே நிக்காம போயிட்டு இருக்கு பாஸ்...


நம்ம,  நைஜீரியா மாமா , மில்லியன்  டாலர் அனுப்பும்வரை,  யாரும் forwarded Mail அனுப்பாதீங்க மக்கா..ப்ளீஸ்...
.
.
.

81 comments:

 1. Tamilish ல சப்மிட் பண்ணுங்க. வந்ததுக்கு ஓட்டு குத்திட்டு போறேன்

  ReplyDelete
 2. //யாரும் forwarded Mail அனுப்பாதீங்க மக்கா..ப்ளீஸ்...//

  பொது சொத்துக்கு யாரும் தீங்கு விளைவிக்காதீர்க‌ள்னு த‌லைவ‌ர் ஒரு அறிக்கை விடுவார்
  இந்த‌ வேண்டுகோள் அந்த‌ மாதிரியா ப‌ட்டா?????????????????????

  ReplyDelete
 3. என்ன கொடும சார்,

  ReplyDelete
 4. ஏன் இன்னும் இன்ட்லி பட்டனை இணைக்காமல் உள்ளீர்கள். இந்த பதிவையும் இணைக்க வில்லை சீக்கிரம்

  ReplyDelete
 5. @சசிகுமார் said...
  @அருண் பிரசாத் said...

  Password reset பண்ணனும் பாஸ்..
  கம்பெனில..ஹி..ஹி..
  கொஞ்சம் கஷ்டம்...ஹி..ஹி...

  நாளைக்குத்தான் பண்ணனும்..

  ReplyDelete
 6. தமிளிஷ்ள சுப்மிட் பண்ணிட்டேன். அதுக்கு நன்றி சொல்லி ஒரு Forward mail அனுப்புங்க. உங்களுக்கு நிறைய ஓட்டு விழும்...

  ReplyDelete
 7. லாட்டரி சீட்டு

  வயக்ரா


  இதெல்லாம் விட்டுட்டீங்களே?

  ReplyDelete
 8. =))))... superb.. இவ்ளோ மெனக்கெட்டு அத எல்லாம் படிச்சு பதிவும் போட முடியுதுன்னா... நீரு ரொம்ப்ப நல்லவரு...

  ||பேசாம, வாயில் வைத்து பேசிலாமா||

  மா..? இன்னா லாஜிக்பா இது...

  ReplyDelete
 9. ||யாசவி said...
  லாட்டரி சீட்டு

  வயக்ரா ||

  அப்பாடா... இது எனக்கும் அப்ப அப்ப வந்திச்சு... எனக்குப் போயீ இதெல்லாம் ரெகமண்ட் பண்றாங்களேன்னு அழுவாச்சியா வந்திச்சு... இப்போ நீங்க சொல்றத கேட்டா நிம்மதியா இருக்கு... அட துன்பம் எனக்கு மட்டுமில்லன்னா எவ்ளோ சந்தோஷம்பா...

  ReplyDelete
 10. என்னப்பா, ரொம்ப நோகடிச்சிருகாங்க போல. எனக்கும் டெய்லி ஏழெட்டு மெயில் வரத்தான் செய்யுது என்ன பன்ரது...

  ReplyDelete
 11. Blogger க‌ரிச‌ல்கார‌ன் said...

  //யாரும் forwarded Mail அனுப்பாதீங்க மக்கா..ப்ளீஸ்...//

  பொது சொத்துக்கு யாரும் தீங்கு விளைவிக்காதீர்க‌ள்னு த‌லைவ‌ர் ஒரு அறிக்கை விடுவார்
  இந்த‌ வேண்டுகோள் அந்த‌ மாதிரியா ப‌ட்டா?????????????????????
  //


  ஆகா... கிளம்பிட்டாங்கப்பா..கிளம்பிட்டாங்க..
  பேசாமா டம்மி ஐடி கிரியேட் பண்ணலாமுனு நினைக்கிறேன்..ஹி..ஹி

  ReplyDelete
 12. Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  தமிளிஷ்ள சுப்மிட் பண்ணிட்டேன். அதுக்கு நன்றி சொல்லி ஒரு Forward mail அனுப்புங்க. உங்களுக்கு நிறைய ஓட்டு விழும்...
  //

  ஹி..ஹி.. பதிவுலக் தலைவர் ஆயிடலாமுனு சொல்றீங்க..ரைட்டு..

  இப்பவே பேரன்..பேத்திகளுக்கு ஸீட் ரெடி பண்ணிடலாம்.. ஜாலி....

  ReplyDelete
 13. யாசவி said...

  லாட்டரி சீட்டு

  வயக்ரா


  இதெல்லாம் விட்டுட்டீங்களே?
  //

  ஓ..அப்படி வேற வந்திருக்கா?.. இது புச்சா இருக்கு மேடம்...

  ReplyDelete
 14. @கலகலப்ரியா said...


  ||பேசாம, வாயில் வைத்து பேசிலாமா||

  மா..? இன்னா லாஜிக்பா இது...

  //

  லாஜிக்கெல்லாம் பார்க்ககூடாது மேடம்..

  ஸ்பீக்கர் போன் போட்டு பேசலாம்..
  ( உலகமே கேக்கட்டுமே...ஹி..ஹி)

  ReplyDelete
 15. Blogger Jey said...

  என்னப்பா, ரொம்ப நோகடிச்சிருகாங்க போல. எனக்கும் டெய்லி ஏழெட்டு மெயில் வரத்தான் செய்யுது என்ன பன்ரது..
  //

  பூக்குழி இறங்கினா, சரியாக வாய்ப்புள்ளதா? ஆபீஸர் சார்....

  ReplyDelete
 16. இன்பாக்ஸ் திறந்து பார் பட்டா 4 மெயில் அனுப்பியிருக்கேன்

  ReplyDelete
 17. //இதுக்கே நிக்காம போயிட்டு இருக்கு பாஸ்//

  ஹா ஹா ஹா.. குழந்தைல ரொம்ப அழக்கா இருக்கீங்க..

  ReplyDelete
 18. பட்டா உன்னோட மெயில் ஐடி வேனுமே எனக்கு . ஒன்னுமில்ல எனக்கு தினம் வரும் ( இப்ப சைட்டு பேர கேக்க கூடாது ) 400 மெயில அப்படியே ஃபோர்வேட் பண்ணதான் .ஹி..ஹி..

  ReplyDelete
 19. ////இதுக்கே நிக்காம போயிட்டு இருக்கு பாஸ்//

  இந்த சொம்பு ரொம்ப அடிவாங்குனது மாதிரி இருக்கே..!!

  ReplyDelete
 20. //லாஜிக்கெல்லாம் பார்க்ககூடாது மேடம்..

  ஸ்பீக்கர் போன் போட்டு பேசலாம்..
  ( உலகமே கேக்கட்டுமே...ஹி..ஹி)//

  ஏன் பட்டா நாம அசிங்க படறது ஊர் முழுசும் கேக்கனுமா என்ன ..?

  ReplyDelete
 21. இந்த மாதிரி மெயில் வந்ததுன்னா நான் ஒரு ரிப்ளை பண்ணுவேன் பாரு.
  க்க்காளி, நாலு நாளைக்கு அவனுக்கு தூக்கம் வராது ..

  ReplyDelete
 22. தலைவரே பாலோவர் கவுன்ட் 199
  ப மு க விற்கு மக்கள் ஆதரவு அமோகமா இருக்கு
  அடுத்த தேர்தல்ல காங்கிர"சை" கவுத்திட வேண்டியதுதான்!!

  ReplyDelete
 23. 200 ku vaazhthugal... ipdi oru offer irukkunu therinjiruntha late a join panni irukkalam... justu missedu... radha sir... ungalukku paaraattugal...

  ReplyDelete
 24. இந்தப் பதிவை குறைஞ்சது பத்து பதிவர்களுக்காவது ரெகமென்ட் செஞ்சா, ஒரு வருஷத்துக்கு பதிவுக்கான ஐடியாக்களும், ஒவ்வொரு பதிவுக்கும் குறைஞ்சது நூறு கமென்ட்டுகளும் அனுப்பப் படும், ஒருவேளை, ரெகமென்ட் பண்ணத் தவறிட்டா................சாரி பதிவப் படிச்ச மூடுலையே இப்படி பின்னூட்டமும் தோணுது!

  ReplyDelete
 25. என்ன செய்றது பட்டா. வலைபதிவாளர் குழுமத்துல இப்படி தொல்லை தாங்காம.. சொல்லிபார்த்தேன் யாரும் கேக்கவும் இல்ல.. வெளியே வந்ததுக்கப்புறம் இப்ப ஒழுங்கா இயங்குதுன்னு ஜாக்கி சேகர் அண்ணே சொன்னாரு..

  ஒருவேளை நமக்கு சூனியம் வைக்கத்தான் இந்தமாதிரி மெயில் வருதோ என்னமோ.. பாத்து சூதனமா நடந்துக்கங்க..

  அப்புறம் நைஜீரிய மாமாகிட்ட நம்மால பத்தியும் சொல்லிவையுங்க... அனுப்புறதுல பாதி தர்றேனாலும், வேண்டாம் எனக்கு transfer செலவு US$500 மட்டும் கொடுத்தா போதுன்னு அடம் புடிக்கிறாரு.. நாமல்லாம் அப்புடியா.. கொடுத்தா அவர் அனுப்புறதுல பாதிதான்...

  ReplyDelete
 26. கடை காலியா இருக்கே இந்த jey officer எங்க போனாரு?

  ReplyDelete
 27. கடை காலியா இருக்கே இந்த jey officer எங்க போனாரு?

  ReplyDelete
 28. நா இந்த கன்றாவிகள பாத்து பாத்து சலிசிப்போய் ஒரு குத்து!.... இல்ல ரெண்டு குத்து!! Select all & Delete all அவ்வளவுதான்

  ReplyDelete
 29. பட்டாபட்டி.. said...
  பூக்குழி இறங்கினா, சரியாக வாய்ப்புள்ளதா? ஆபீஸர் சார்....///

  வேற எந்த வழிடும் இல்லைனா, இறங்கிரவேண்டியதுதனே பங்காளி..., ஆபீஸர்னு வேற கூப்பிட்டுருகீரு. இந்தக்கூட செய்யமாட்டமா:)

  ReplyDelete
 30. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  கடை காலியா இருக்கே இந்த jey officer எங்க போனாரு?//

  ஆனி பிடுங்கிட்டு வரதுக்குள்ள எல்லரும் கும்மிஅடிச்சிட்டு போய்டாங்க போலயே... யப்பா யாரும் இருக்கீகளா?..

  ReplyDelete
 31. உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்..

  பெற்றுக்கொள்ளவும்.

  ReplyDelete
 32. பட்டா, உன்னோட ரசிகர்கள் கூட்டம் 200 ஆனதுக்கு வாழ்த்துக்கள்.
  ( நம்ம கடை தொறந்து ஒரு மாசமாயிருச்சி இப்பதான் 54 பேர் சேர்ந்திருக்காங்க.... எப்ப 100 ஆயி, அப்புறம் 150 ஆயி... 200 ஆகுரது....ம்ஹூம்ம், ஒன்னுமில்லை பட்ட, லைட்டா பொறாமை... ஹி ஹி..)

  ReplyDelete
 33. இந்திராவின் கிறுக்கல்கள் said...
  உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்..

  பெற்றுக்கொள்ளவும்.///

  யாருக்கு சார் எனக்கா..எனக்கா..(ங்கொய்யாலே மொதல்ல ஒருங்கா எழுது அப்புரமா தருவாங்க....)

  ReplyDelete
 34. கக்கு - மாணிக்கம் said...
  நா இந்த கன்றாவிகள பாத்து பாத்து சலிசிப்போய் ஒரு குத்து!.... இல்ல ரெண்டு குத்து!! Select all & Delete all அவ்வளவுதான்///

  என்ன இருந்தாலும் சீனியர் சீனியர்தான்....

  ReplyDelete
 35. யூர்கன் க்ருகியர் said...
  இந்த மாதிரி மெயில் வந்ததுன்னா நான் ஒரு ரிப்ளை பண்ணுவேன் பாரு.
  க்க்காளி, நாலு நாளைக்கு அவனுக்கு தூக்கம் வராது ..///

  யூர்கன் சார், அது எப்படின்னு சொல்லிகொடுத்தா நாங்களும் ஃபாளோ பன்னுவோம்ல...

  ReplyDelete
 36. //யூர்கன் சார், அது எப்படின்னு சொல்லிகொடுத்தா நாங்களும் ஃபாளோ பன்னுவோம்ல...//

  நல்லது.. கீ போர்டுல டைப் பண்ணும்போது விரலெல்லாம் கூசும் பரவாயில்லையா?

  ReplyDelete
 37. டபுள் செஞ்சுரிக்கு வாழ்த்துகள் பட்டா. வல்லவனுக்கு ஃபார்வர்ட் மெயிலும் இடுகையா:))

  ReplyDelete
 38. ///நா இந்த கன்றாவிகள பாத்து பாத்து சலிசிப்போய் ஒரு குத்து!.... இல்ல ரெண்டு குத்து!! Select all & Delete all அவ்வளவுதான்////

  இது இது ...இதேதான் நான் பண்ணிண்டு இருக்கேன் பட்டா ...,

  ReplyDelete
 39. பால்லோவர்ஸ் 200, வாழ்த்துக்கள் பட்டா , பார்ட்டி எப்ப ???
  இப்படிக்கு
  உன் வழியை பின்தொடர்வோர் சங்கம்


  (கர்ர்ர்ர்ர்ர்....................... ஜஸ்ட்டு மிஸ்ஸு
  இப்படிக்கு
  பொறாமையில் போசுங்குவோர் சங்கம் )

  ReplyDelete
 40. இவனுங்க எப்பவும் இப்படித்தான் பாஸ்.திருந்தவே மாட்டானுங்க...

  ReplyDelete
 41. எனக்கு கூடிய விடரைவில் யோகம் அடிக்கும்னு ஜோசியர் சொல்லிருக்கார் பட்டா. ஆனால் அந்த யோகம் எல்லாம் 500000000000000000000 கிரேட் பிரிட்டன் பவுண்ட் பரிசால மிஸ்சாயிடுது. வாரத்திற்கு 4 கம்பெனிகள் என் மெயில் ஐடியை தேர்ந்தெடுத்து பரிசு குடுத்துடுறாங்க பட்டா. இதவிட நாலுபேருக்கு ...விட்டு அதிகம் சம்பாதிக்கலாம் அப்பிடினு ரிப்ளை அனுப்பினாலும் அடுத்த கம்பெனி எனக்கு பரிசு குடுக்க காத்திட்டுருக்கு. என்ன பண்றதுனே தெரியல பட்டா.

  ReplyDelete
 42. 200 க்கு வாழ்த்துக்கள் பட்டா.

  ரொம்ப ஆணி புடுங்க வுடுன்றாங்க 27 க்கு பிறகு நார்மல் ஆகிடும்

  ReplyDelete
 43. ATTN:
  Dear Sir/M,
  I am Mr.David Mark. an Auditor of a BANK OF THE NORTH INTERNATIONAL,ABUJA FCT). I have the courage to Crave indulgence for this important business believing that you will never let me down either now or in the future. Some
  years ago, an American Mining consultant/ contractor with the Nigeria National Petroleum Corporation, made a numbered time (fixed)deposit for twelve calendar months, valued $12M.USD (TWELVE MILLION US DOLLARS) in an account.
  On maturity, The bank sent a routine notification to his forwarding address but got no reply. After a month, The bank sent another reminder and finally his contract employers, the Nigerian National Petroleum Corporation wrote to inform the bank that he died without MAKING A WILL, and all attempts by the American Embassy to trace his next of kin was fruitless. I therefore, made further investigation and discovered that the beneficiary was an immigrant from Jamaica and only recently obtained American citizenship. He did not decla re any kin or relations in all his official documents, including his Bank deposit paper work. This money total amount$12M.USD (TWELVE MILLION US DOLLARS)is still sitting in my bank as dormant Account. No one will ever come forward to claim it, and according to Nigerian Banking policy, after some years, the money will revert to the ownership of the Nigerian Government if the account owner is certified dead. This is the situation, and my proposal is that I am looking for a foreigner who will stand in as the next of kin to beneficiary, and OPEN a Bank Account abroad to facilitate the transfer of this money.
  This is simple, all you have to do is to OPEN an account anywhere in the world and send me its detail for me to arrange the proper money transfer paperwork, and facilitate the transfer. The money will then be paid into this Account for us to share in the ratio of 60% for me, 35 % for you and 5% for expenses that might come up during transfer process. There is no risk at all, and all the paper work for this transaction will be done by me using my position and connections in the banks in Nigeria. This business transaction is guaranteed. And the first phase of the transfer will be ($4M.USD) FOUR MILLION DOLLARS as advised by our insider in the bank.
  If you are interested, please reply immediately through my personal email sending the following details:
  1) Your Full Name/Address
  (2) Your Private Telephone/fax Number.
  Please observe the utmost confidentiality, and be rest assured that this transaction would be most profitable for both of us because I shall require your assistance to invest some of my share in your country. I look forward to your earliest reply.
  Yours,
  Mr.David Mark.

  ReplyDelete
 44. என்ன தல இன்னும் இப்பிடி எத்தன நாளைக்கி பொழைக்கத் தெரியாத ஆளா இருக்க போறீங்க? நாங்கள்லாம் நைஜீரியா மாமா கிட்ட இருந்து USD 12Million வாங்கி ரொம்ப நாளாச்சு! சட்டு புட்டுனு டீலீங்க முடிச்சி செட்டில் ஆகுர வழியப் பாருங்க! (5% கமிசன் கொடுத்தீங்கன்னா காதும் காதும் வெச்சா மாதிரி டீலீங்க முடிச்சிடலாம், எப்புடி வசதி?)

  ReplyDelete
 45. @மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
  இன்பாக்ஸ் திறந்து பார் பட்டா 4 மெயில் அனுப்பியிருக்கேன்
  //

  பிரதர்..எதுனாலும் பேசித்தீர்த்துக்கலாம்...ஹி..ஹி

  ReplyDelete
 46. @பிரசன்னா said...
  ஹா ஹா ஹா.. குழந்தைல ரொம்ப அழக்கா இருக்கீங்க..
  //

  என்ன பாஸ்..குழந்தையிலே..நிது போன வாரம் எடுத்த போட்டோ..ஹி..ஹி

  ReplyDelete
 47. @ஜெய்லானி said...
  பட்டா உன்னோட மெயில் ஐடி வேனுமே எனக்கு . ஒன்னுமில்ல எனக்கு தினம் வரும் ( இப்ப சைட்டு பேர கேக்க கூடாது ) 400 மெயில அப்படியே ஃபோர்வேட் பண்ணதான் .ஹி..ஹி..
  //

  ஆகா..கடைக்கு ஷட்டர் போடாம விடமாட்டாங்க போல..

  ReplyDelete
 48. @யூர்கன் க்ருகியர் said...
  இந்த மாதிரி மெயில் வந்ததுன்னா நான் ஒரு ரிப்ளை பண்ணுவேன் பாரு.
  க்க்காளி, நாலு நாளைக்கு அவனுக்கு தூக்கம் வராது ..
  //

  இது வன்முறை யூர்கன்.
  நான் என்னுடைய பாஸ் போன் நம்பரை கொடுத்து பேசச்சொல்லிடுவேன்..ஹி..ஹி
  ( Win-Win situation...)

  ReplyDelete
 49. @யூர்கன் க்ருகியர் said...
  தலைவரே பாலோவர் கவுன்ட் 199
  ப மு க விற்கு மக்கள் ஆதரவு அமோகமா இருக்கு
  அடுத்த தேர்தல்ல காங்கிர"சை" கவுத்திட வேண்டியதுதான்!!
  //


  நாம எதுவும் பண்ணவேண்டியதில்லை பாஸ்..
  ராகுலும், சோனியாவும்.... தூக்கம் மறந்து , அதற்குத்தான் பாடுபட்டுக்கிட்டு இருக்காங்க..

  ReplyDelete
 50. @T.V.ராதாகிருஷ்ணன் said...
  aiyaa..200 aavathu Follower naan
  //

  ஆகா..அண்ணே..200 வது பாலோயரா இணஞ்சதுக்கு நன்றிண்ணே..

  ReplyDelete
 51. @பெயர் சொல்ல விருப்பமில்லை said...
  இந்தப் பதிவை குறைஞ்சது பத்து பதிவர்களுக்காவது ரெகமென்ட் செஞ்சா, ஒரு வருஷத்துக்கு பதிவுக்கான ஐடியாக்களும், ஒவ்வொரு பதிவுக்கும் குறைஞ்சது நூறு கமென்ட்டுகளும் அனுப்பப் படும், ஒருவேளை, ரெகமென்ட் பண்ணத் தவறிட்டா................சாரி பதிவப் படிச்ச மூடுலையே இப்படி பின்னூட்டமும் தோணுது!
  //

  ஹா...ஹா.. அனுப்ப தவறினா, அடுத்த எலெக்‌ஷன்ல வாசிங் மெசின் கிடைக்காது..ஹி..ஹி

  ReplyDelete
 52. @கே.ஆர்.பி.செந்தில் said...
  என்ன செய்றது பட்டா. வலைபதிவாளர் குழுமத்துல இப்படி தொல்லை தாங்காம.. சொல்லிபார்த்தேன் யாரும் கேக்கவும் இல்ல.. வெளியே வந்ததுக்கப்புறம் இப்ப ஒழுங்கா இயங்குதுன்னு ஜாக்கி சேகர் அண்ணே சொன்னாரு..
  ஒருவேளை நமக்கு சூனியம் வைக்கத்தான் இந்தமாதிரி மெயில் வருதோ என்னமோ.. பாத்து சூதனமா நடந்துக்கங்க..
  அப்புறம் நைஜீரிய மாமாகிட்ட நம்மால பத்தியும் சொல்லிவையுங்க... அனுப்புறதுல பாதி தர்றேனாலும், வேண்டாம் எனக்கு transfer செலவு US$500 மட்டும் கொடுத்தா போதுன்னு அடம் புடிக்கிறாரு.. நாமல்லாம் அப்புடியா.. கொடுத்தா அவர் அனுப்புறதுல பாதிதான்...
  //


  அதுதானே..நைஜீரிய மாமாவுக்கு நம்மல பற்றி தெரியாது போல..

  ReplyDelete
 53. @கக்கு - மாணிக்கம் said...
  நா இந்த கன்றாவிகள பாத்து பாத்து சலிசிப்போய் ஒரு குத்து!.... இல்ல ரெண்டு குத்து!! Select all & Delete all அவ்வளவுதான்
  //

  அப்பவும் அனுப்பிக்கிட்டே இருப்பானுகளே பாஸ்..அவனுகள குத்த முடியமானு சொல்லுங்க..

  ReplyDelete
 54. இந்திராவின் கிறுக்கல்கள் said...
  உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்..
  பெற்றுக்கொள்ளவும்.
  //

  நன்றி மேடம்.. நல்லா யோசனை பண்ணித்தான் கொடுக்கிறீங்களா?..

  திருப்பி கேட்டா, தரமாட்டேன்..ஹி..ஹி

  ReplyDelete
 55. @ey said...
  பட்டா, உன்னோட ரசிகர்கள் கூட்டம் 200 ஆனதுக்கு வாழ்த்துக்கள்.
  ( நம்ம கடை தொறந்து ஒரு மாசமாயிருச்சி இப்பதான் 54 பேர் சேர்ந்திருக்காங்க.... எப்ப 100 ஆயி, அப்புறம் 150 ஆயி... 200 ஆகுரது....ம்ஹூம்ம், ஒன்னுமில்லை பட்ட, லைட்டா பொறாமை... ஹி ஹி..)
  //

  என்ன ஆபீஸர்..இந்த கடைய எடுத்துக்கோங்க..

  ReplyDelete
 56. @வானம்பாடிகள் said...
  டபுள் செஞ்சுரிக்கு வாழ்த்துகள் பட்டா. வல்லவனுக்கு ஃபார்வர்ட் மெயிலும் இடுகையா:))
  //

  ஆணி அதிகம் பாஸ்... இதுல வாரத்துக்கு 10 மெயில் இது மாறி வருது..
  சென்னை வரும்போது , கலைஞர் கிட்ட மனு கொடுக்கனும் போல...

  ReplyDelete
 57. @பனங்காட்டு நரி said...
  ///நா இந்த கன்றாவிகள பாத்து பாத்து சலிசிப்போய் ஒரு குத்து!.... இல்ல ரெண்டு குத்து!! Select all & Delete all அவ்வளவுதான்////

  இது இது ...இதேதான் நான் பண்ணிண்டு இருக்கேன் பட்டா ...,
  //

  ஊகும்..அனுப்பறவன் மூஞ்சிதான் நம்ம டார்கெட்..

  ReplyDelete
 58. @மங்குனி அமைசர் said...
  பால்லோவர்ஸ் 200, வாழ்த்துக்கள் பட்டா , பார்ட்டி எப்ப ???
  இப்படிக்கு
  உன் வழியை பின்தொடர்வோர் சங்கம்
  (கர்ர்ர்ர்ர்ர்....................... ஜஸ்ட்டு மிஸ்ஸு
  இப்படிக்கு
  பொறாமையில் போசுங்குவோர் சங்கம் )
  //

  அட.. இந்த ப்ளாக்கை எடுத்துக்கோ..எடுத்த்க்கோனு சொல்லீட்டேயிருக்கேன்..
  நீதான் கேட்கமாட்டீங்கிற..

  ReplyDelete
 59. @ஆர்.கே.சதீஷ்குமார் said...
  இவனுங்க எப்பவும் இப்படித்தான் பாஸ்.திருந்தவே மாட்டானுங்க...
  //

  உண்மை பாஸ்.. இனிமேல ஒவ்வொரு பார்வேர்ட் மெயிலுக்கும், 10 ரூபா ஸ்டாம்ப் ஒட்டனுமுனு சட்டம் கொண்டு வரனும்..(?)..ஹி..ஹி

  ReplyDelete
 60. @geeyar said...
  எனக்கு கூடிய விடரைவில் யோகம் அடிக்கும்னு ஜோசியர் சொல்லிருக்கார் பட்டா. ஆனால் அந்த யோகம் எல்லாம் 500000000000000000000 கிரேட் பிரிட்டன் பவுண்ட் பரிசால மிஸ்சாயிடுது. வாரத்திற்கு 4 கம்பெனிகள் என் மெயில் ஐடியை தேர்ந்தெடுத்து பரிசு குடுத்துடுறாங்க பட்டா. இதவிட நாலுபேருக்கு ...விட்டு அதிகம் சம்பாதிக்கலாம் அப்பிடினு ரிப்ளை அனுப்பினாலும் அடுத்த கம்பெனி எனக்கு பரிசு குடுக்க காத்திட்டுருக்கு. என்ன பண்றதுனே தெரியல பட்டா.
  //

  முதல்ல 10% அனுப்பச்சொல்லுங்க..மீதிய பேச்சுவார்த்தை மூலமா முடிவு செய்யலாமுனு சொல்லிப்பாருங்க...

  ReplyDelete
 61. @முத்து said...
  200 க்கு வாழ்த்துக்கள் பட்டா.
  ரொம்ப ஆணி புடுங்க வுடுன்றாங்க 27 க்கு பிறகு நார்மல் ஆகிடும்
  //

  உனக்குமா?

  ReplyDelete
 62. @பன்னிக்குட்டி ராம்சாமி said...
  என்ன தல இன்னும் இப்பிடி எத்தன நாளைக்கி பொழைக்கத் தெரியாத ஆளா இருக்க போறீங்க? நாங்கள்லாம் நைஜீரியா மாமா கிட்ட இருந்து USD 12Million வாங்கி ரொம்ப நாளாச்சு! சட்டு புட்டுனு டீலீங்க முடிச்சி செட்டில் ஆகுர வழியப் பாருங்க! (5% கமிசன் கொடுத்தீங்கன்னா காதும் காதும் வெச்சா மாதிரி டீலீங்க முடிச்சிடலாம், எப்புடி வசதி?)
  //

  ஆ...ஊருக்கு போயிட்டு அதுக்குள்ள வந்தாச்சா?..
  ( ஏன் பாஸ்..வீட்ல திருப்பி போனு தொறத்திவிட்டுடாங்களா?)

  ReplyDelete
 63. எவ்வளவு விருதுதுகள்...? எத்தனை ஃபாலோயர்கள்....? எத்தனை ஓட்டுக்கள்...? எல்லாத்தையும் அப்படியே எனக்கு பார்வர்ட் பண்ணிவிடுயா... நைஜீரியா மாமாகிட்ட சொல்லி பணத்தை சீக்கிரம் அனுப்ப சொல்லுறேன்...

  ReplyDelete
 64. //கிட்னி
  பார்ட்டிக்கு போனால், மயக்கமருந்து கொடுத்து, கிட்னிய களவாடிவிடுவார்களாம். நல்லவேளை, காலையிலதான் செக் பண்ணினேன். இன்னும் எனக்கு, ரெண்டு கிட்னி இருக்கு....//

  ஒன்னு காணாமப் போச்சுன்னு நினைக்கிறேன்... நல்ல செக் பண்ணிப்பாரு. எனக்கெல்லாம் மூணு இருக்கு.

  ReplyDelete
 65. //திருப்பதி, முருகன், சிவன், விஷ்ணு...காணக்கிடைக்காத படம்..//

  என்னையா ஏதோ தேவநாதன் படமாட்டம் சொல்ற...

  ReplyDelete
 66. எனக்கு எஸ்.எம்.எஸ் அதிகமா வருது, அவுங்களுக்கு எப்படி வேண்டுகோள் வைக்கிறது!?

  ReplyDelete
 67. தல, எவனோ செல்லுக்குக் போன் பண்ணி ரஜினி வாய்ஸ்ல எதையோ வாங்கச் சொல்லி ரெண்டு நாளா டார்ச்சர் பண்றானுங்க தல, என்ன வாங்க சொல்றானுங்கன்னும் தெரியல எங்கேருந்து கால் வருதுன்னும் தெரியல!

  ReplyDelete
 68. //பட்டாபட்டி.. said...
  ஆ...ஊருக்கு போயிட்டு அதுக்குள்ள வந்தாச்சா?..
  ( ஏன் பாஸ்..வீட்ல திருப்பி போனு தொறத்திவிட்டுடாங்களா?)//

  இன்னும் ஊர்லதான் இருக்கேன் பாஸ், ஆடித்தள்ளுபடியில சிக்கி சிதைஞ்சுக்கிட்டு இருக்கேன்!

  ReplyDelete
 69. ஒரு லட்சம் ஹிட்ஸ்! வாழ்த்துக்கள் தல!

  ReplyDelete
 70. //பார்ட்டிக்கு போனால், மயக்கமருந்து கொடுத்து, கிட்னிய களவாடிவிடுவார்களாம். நல்லவேளை, காலையிலதான் செக் பண்ணினேன். இன்னும் எனக்கு, ரெண்டு கிட்னி இருக்கு....///

  பட்டா, கிட்னி-ன்ற்து மண்டையில இருக்குரதுதானே..?., இப்ப அதகூட உருவுரானுகளா?.

  அலர்ட்டாவே இருப்போம்.

  ReplyDelete
 71. //போனை, வலதுகாதில் வைத்துப்பேசினால், கேன்ஸர் வரும் .
  இடது காதில வைத்தால் இதயம் பலகீனமாகும்..
  பேசாம, வாயில் வைத்து பேசிலாமா என்று யோசனை பண்ணிக் கொண்டுள்ளேன்..///

  அடப்பாவி நல்லாருங்க.... இதப்படிச்சுட்டு என்னயுமறியாம .. பகீர்னு சிரிச்சு.... எங்க தலைகிட்ட நல்லா வாங்கிகட்டிகிட்டேன்....நல்லாருங்க....

  ReplyDelete
 72. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஒரு லட்சம் ஹிட்ஸ்! வாழ்த்துக்கள் தல!//

  இந்த ஹிட்டு ஹிட்டு-னு சொல்றீங்களே.. அப்படின்னா என்னதுயா...பலபேர் இந்த வார்த்திய யூஸ் பன்ராங்க எனக்கு ஒன்னும் புரியலை..

  ReplyDelete
 73. வால்பையன் said...
  எனக்கு எஸ்.எம்.எஸ் அதிகமா வருது, அவுங்களுக்கு எப்படி வேண்டுகோள் வைக்கிறது!?///

  தல, உங்க மொபைலுக்கு யாரோ சூனியம் வச்சிருக்காங்கனு நினைக்கிறேன்... நம்ம நித்தி , இல்லனா நம்ம மருவத்தூர் மவராசனை வச்சி, பூஜை யாகம்னு நடத்தினா சரியாப்போகும் தல...

  ReplyDelete
 74. அப்ப உங்களுக்கும் சேம் ப்ளட் தானா..? எல்லா ஊர்லயும் இந்த மெயில் எல்லாம் சுத்திக்கினு இருக்குதா.. இதுக்கெல்லாம் ஒருநாள் உடுக்கை அடிக்கணும் போல...

  ReplyDelete
 75. //கிட்னி
  பார்ட்டிக்கு போனால், மயக்கமருந்து கொடுத்து, கிட்னிய களவாடிவிடுவார்களாம். நல்லவேளை, காலையிலதான் செக் பண்ணினேன். இன்னும் எனக்கு, ரெண்டு கிட்னி இருக்கு....//

  அதெப்படி ரெண்டு கிட்னியும் இருக்கான்னு செக் பண்றது, பட்டா, அந்த டெக்னிக்கைப் பத்தி ஒரு பதிவு கட்டாயம் போடணும். எனக்கு அடிக்கடி சந்தேகம் வந்துடுது.

  ReplyDelete
 76. சிரிச்சு சிரிச்சு கண்ணில் தண்ணீவந்ததுதான் மிச்சம். கொலகாரனய்யா நீ!!

  ReplyDelete
 77. I am searching/ researching for exact tamil word for 'forward'. Any suggestion ?

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!