Pages

Tuesday, March 29, 2011

சாண(ணி)க்கிய நாயகன்...

.
.
.
அருமை அண்ணன், அஞ்சா குஞ்சன் , சரித்திர சாணக்கியன் பார்க்கத கட்சிகளா?.. கோஷ்டிகளா?.        எத்தனை அவமானங்கள், அவமதிப்புக்கள், செருப்படிகள். வேட்டி அவிழ்ப்புக்கள்..    சி(ரை)றை ஒன்றுதான் செல்லவில்லையே தவிர சீறிய ஆட்டங்கள் பல.

கூட்டணி என்ற பெயரில், நால்வரை துணைக்கு அனுப்பினாலும், விடியாமூஞ்சியை கொண்டு, விட்டில்பூச்சிகளை துரத்திய லாவகம். 

கோடிகளில் சுருட்டி, கல்லூரிகளை கலவி மைதானமாக்கி, அருட்தந்தை ஆகியவர் பலரிருக்க, ’கொண்டதே கோயில், அன்னையைவிட சிறந்த கோயில் இல்லை’ என, மனைவியைக்கூட தூக்கி எறிந்த வள்ளல் எங்கள் தங்கபாலுவை,  ’டிவீட்டர், பேஸ்புக் மற்றும் பதிவு’களில், நாற அடிக்கும் மக்களுக்காக, தலைவனுக்கு தோள் கொடுக்க களம் இறங்குகின்றான் இந்த பட்டாபட்டி..


நல்ல எண்ணங்களை உடையவர்கள், நல்லவருடன் சேருவர்.
தீய எண்ணங்களை உடையவர் தீயவர்களுடன் சேருவர்.

ஒரு நல்லமனிதனை, அவனைச் சுற்றியுள்ள தீயஎண்ணங்கள் அபகரிக்க முயலும். அதை விடுத்து, அதிலிருந்து மீண்டு, சமுதாயத்திற்க்காக பாடுபடுபவர்களே நல்லோர்கள். மற்றவரெல்லாம், குடி, கும்மி , குத்து என்று கற்பிழந்து காறி உமிழ்வோருக்குச்சமம்..

மேலே நான் குறிப்பிட்டவை புரியவில்லை என்று சொல்பவருகளுக்காக,
அதாவது நல்ல எண்ணம், நல்ல எண்ணத்துடன் சேரும்.. சிம்பிளா சொன்னா, ”பயர்மாதிரி..

அடச்சே.. தங்கபாலுவை பற்றிச்சொல்ல ஆரம்பித்து, வண்டி தறிக்கெட்டு ஓடுகிறது. மன்னிக்க.....  உங்கள் ஆத்மா ’சாந்தி’ அடையட்டும்.....

அப்படி பெருமைகளை பெற்ற அண்ணன் தங்கபாலுவை, பத்திரிக்கை உலகம் , காணவில்லை என்று கூறி எள்ளி நகையாடுகிறது.   மக்கள் மதிகெட்டவர்கள் என்பதற்க்கு இதைவிட சான்று வேறு என்ன வேண்டும்?

மனைவியின் பேரில் மனு அளித்தார். நிராகரிக்கப்படுகிறது. அவரது மனு ஏற்கப்படுகிறது. இதில் என்ன குற்றம் கண்டீர்? பார்க்க சாதுவாக இருப்பதால் அவரை ’பன்னி’ என்று நினைக்கவேண்டாம். அவர் ஒரு பாயும் புலி.

பதுங்கியிருந்தார். சான்ஸ் கிடைத்ததும்... பாய்ந்துவிட்டார்.( அவரு டீவீ வெச்சு நடத்துவது இப்போதுதான் பட்டாபட்டிக்குத் தெரியும். அதன் இயக்குனராக மாற, பட்டாபட்டி சதி செய்கிறான் எனக்குகூறும் நயவஞ்சகர்களே.
உங்களை நான் ஒன்று கேட்கிறேன். என தலைவன் முகத்தைப்பார்த்துமா, உங்களுக்கு பரிதாபம் வரவில்லை?)

கலவரபூமில, சாணக்கியத்தனத்தை காட்டிய அண்ணனைப் பார்த்து, பெரும் தலைவரே எழமுடியாத சூழ்நிலையில் உள்ளார்.  அப்படிப்பட்ட அண்ணனை நேரில் பார்த்து வாழ்த்துத் தெரிவிக்கலாம் என நேற்று நான் சென்றிருந்தேன்.
அவரின் முகத்தில மகிழ்சி, முன்னைவிட ’பளபள’வென் மின்னிகிறது.

பூங்கொத்தை கொடுத்தேன்.. வாழ்த்தை பகிர்ந்தேன். அகண்ட முக்கத்தில, நிரந்தரப்புன்னகை. எதிர்கட்சிக்கு இறுதிப்புன்னகை. அவனல்லவோ எம்தலைவன்.

வாழ்த்தை பெற்றுக்கொண்டதும், ஆறுதலாக ஆறு வார்த்தைகளாவது பகிருங்கள் என்றேன்.   அவர் சொன்னதை கேட்டதும், மானமிழந்துவிட்டான் இந்த பட்டாபட்டி..

இதோ அந்த கண்றாவி வாசகம்...

”என்னை மயிலாப்பூரின் எம்.எல்.ஏ வாக, தேர்வு செய்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி”


ங்கொய்யாலே.. ’ஓட்டு கேட்கவில்லை, வாக்குறுதி  வழங்கவில்லை. ”வாய்க்கரிசி போட்டவுடன் , வந்தது பதவி”யென கூவித்திரியும் இந்த கூட்டதுக்கா உங்கள் ஓட்டு.?..

தமிழகத்தில், காங்கிரஸ் ஜெயிக்கும் ஒவ்வொரு தொகுதியும்,  “தமிழனுக்கு தமிழன் , தானே தோண்டிக்கொள்ளும் குழி....”

சிந்தியுங்கள்...செயல்படுங்கள்.


டிஸ்கி.. தங்கபாலுக்கு கோபம்வந்து, நீங்க பார்த்ததில்லையே.........
இதோ உங்களுக்காக..

.
.
.Friday, March 25, 2011

கேளுங்கள்.. சொல்லப்படும்..

.
.
.
வணக்கம்ண்ணே. தேர்தல் சூடு பிடிச்சாலும் பிடிச்சது, என்னால் தெருவில்  நிம்மதியா நடக்ககூட முடியலண்ணே.     டீ குடிக்கபோனாலும் கூடவே வரானுக.       முகம் மழிக்க, பார்பர் ஷாப் போனாலும் தொல்லை.   சரி.. வேணாம்.     சினிமாவுக்கு போகலாம்னு போனா.. அங்கேயும் வந்துடரானுக.!

அன்னைக்கு எங்க வீட்டு டாய்லெட்-ல உக்காந்து கக்கா போய்கிட்டு  இருந்தண்ணே.   அங்கயும் வந்து கதவ தட்டுரானுக.    எவண்டானு அவசரமா வெளிய வந்தா...........    என்னொட கைய பிடிச்சுக்கிட்டு  ”எனக்கு ஓட்டு போடு. உனக்கு இதை தரேன். ஊட்டுக்காரம்மாக்கு அதைத்தரேன். உன்னோட  குழந்தைக்கு கம்யூட்டர் தரேன்”னு   உருகரானுக கூட்டமா.
யோவ்.. ’முதல்ல என்னோட, கைய திருப்பி தாங்கடா. கழுவனும்’னு  கத்தறேன்.. கதறரேன்.    ஊகூம்..   எவன் காதிலையும் விழவேமாட்டீங்குது..

பாருங்களேன்.. அன்னைக்கு இப்படித்தான்.  மூக்கு அடைச்சிருச்சுனு, சீந்த கைய கொண்டுபோனேன். ரெண்டு பேர் ஓடி வந்தானுக. வந்ததும், ”நாங்க உனக்கு   இலவசமா சீந்திவிடரோம்னு” நிற்கானுக.   அதைப்பார்த்துட்டு, அடுத்த குரூப். அதுல பெண்கள் வேற!!.  ஏதோ மகளிரணியாம்!!!  அவனுக வந்து..  ”எதிர்கட்சிக்காரனை நம்பாதே.. நாங்க சீந்திவிட்டு, நகத்தையும் இலவசமா வெட்டிவிடுவோம்”னு அலம்பரானுக.  

ஆங்.. சொல்லமறந்துட்டேனே. சிலவருசத்துக்கு முன்னாடி, எங்க அப்பன், ஜெயலலிதா அம்மாவுக்காக, நாக்கை வெட்டி, கோயில் உண்டியல்ல போட்டவரு..    எங்கே பார்த்தாலும் வாரிசு அரசியல் வேற.    ஏதாவது ஆர்வக்கோளாரு-ல,   எங்கப்பன் வாரிசா , என்னைய அறிவிச்சுட்டு,  ’வேறஎதையாவது வெட்டிட்டானுகனா’?.       அதனாலே... ஒரே ஓட்டமா வீட்டுக்குள்ள ஓடிப்போயிட்டேன்.

சரி அதை விடுண்ணே..  இப்ப நேரா பிரச்சனைக்கு வரேன். பதிவுலக மூத்தவர், ’என்னிய கேள்வி கேளு..பதில் சொல்றேன்’னு போட்டிருந்தாரே ஒரு விளம்பரம்.        அதை நம்பி, ஒரு கேள்வி கேட்டுத்தொலச்சிட்டேன். ங்கொய்யா... அனுப்புனாரு பாருங்க பதிலை.. ஆடிப்போயிட்டேன்.
 
என்னமோ ஒரு கேள்விக்கு ரூ 100, மணியார்டர் அனுப்பனுமாம்.  அதுவுமில்லாம, என்னோட ஜாதகம், சாதி.. ஆங்.. வீட்டுக்காரியோட குலம் கோத்திரம்  இதெல்லாம் சொன்னா,  10% தள்ளுபடி செய்வாராம்.   நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராதுண்ணே.   அதான் நேரா இங்க வந்துட்டேன்.
அதுவுமில்லாம , என்னொட மாமன் முதல்வர் வீட்டுல,  கார் டிரைவரா இருக்கேன்.    கூட்டிக்கிட்டு வருவது.. கொண்டுபோய் விடுவது..   நல்ல பணப்புழக்கம்.

இப்ப என்னோட பிரச்சனை இதுதான்ணே.   ஒத்தைப்பையனை, தவமிருந்து பெத்தோம்.    ஆனா பாவிப்பய.. 15 வயசுதான் ஆச்சு.. இப்பவே பீடி, குடி கூத்தி-னு சுத்திக்கிட்டு   இருக்கான். படிப்போ சுத்தம்!!.  என்ன பண்ணினா, அவனோட வாழ்க்கை பிரகாசிக்கும்?.     நல்ல பதிலை சொல்லி, என்னோட வாழ்க்கையில விளக்கை ஏத்திவையுங்கண்ணே..   ப்ளீஸ் (ஹி..ஹி நானும் அந்த காலத்து அஞ்சாம் வகுப்பு. கனிமொழியக்கா   மாறியே இங்கிலீசு பேசவரும்..)

அன்புடன் ஜெய்சிங்கம்

==================================
வாய்யா ஜெய்ஜங்ங்ங்கம்...
அரசியல் ஒரு ’சாக்கடை தேசம்’. அதை ’பூக்கடை தேசமா’க்க, யாராலும்  முடியாது.    ஆனால், அதில் நீந்தி, கரை சேர்வது எப்படினு வேணா  சொல்லித்தரேன்.   ஆமா..அந்த பதிவர்கிட்ட கேள்விகேட்கனுமுனா, நீ அவாளா இல்லை இருக்கனும். சரி விடு.. பதிவரசியல் நமக்கெதற்கு..?

மேட்டருக்கு வரேன்.
 • ’எங்கே தவமிருந்து’ உம் பிள்ளைய பெத்தேனு சொல்லவேயில்லை. அது முதல் தப்பு.
 • அஞ்சாம்வகுப்புவரை படிச்சிருக்கேனு பெருமையா சொன்னபாரு.. அது அடுத்த தப்பு.
 • அவனுக வேற எதையாவது வெட்டிடுவானுகனு ஓடின பாரு.. அது மூணாவது தப்பு.
 • கடைசியா, என்னைய பெரியமனுஷன்னு நினச்சு வந்து கேட்டிருக்க பாரு கேள்வி?.. தக்காளி.. அது உலகமகா தப்புய்யா..

சரி.விடு..  ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி..மேல..மேல..எப்படி ஏறுவது-னு பார்ப்போம்..    பள்ளிவாழ்க்கையையே எடுத்துக்கோ.( பெண்புர்ர்ரசியாளர்கள் தயைகூர்ந்து ’பள்ளியறை’ என நினக்கவேண்டாம்.  ’இஸ்கூலு’.. அதைதான் குறிப்பிட்டேன்.)

நன்குபடித்து முதலிடம் வருபவர்கள், ’இஞ்சினியரு, டாக்டர்’னு செட்டில் ஆயிடுவானுக. ஓகேயா..

இரண்டாமிடத்தில் வருபவர்கள், ’கட்டடவேலை, மில்லுவேலை, சிலபேரு வீட்டுக்காரரா’, லைப்-ல  செட்டில் ஆயிடுவானுக..

என்னதான் படிச்சு பெரிய பதவியில் இருந்தாலும், முதலிடம் வந்தவர்களை... ’வீடோ, இல்லை மில்லையோ’ கட்டச்சொல்லுங்க பார்க்கலாம்.. முடியாது மச்சி.. இரண்டாம் இடத்துக்காரனுககிட்ட, கையகட்டி, வாயப்பொத்தி நின்னாத்தான் வேலை நடக்கும். இப்ப இதுல யாரு பெரியவனுக? ரோசனை பன்ணு..

அடுத்து..மூன்றாம் இடத்தில் வரும் மூதேவிகள்.. இவனுக பலே மூள(ல)க்காரனுக. எப்படியோ வட்டம், மாவட்டம் , தேசிய அரசியல்னு பூந்து.. மேல சொன்னேன் பாரு ரெண்டு கோஷ்டி.. அவனுகளையே அடிமைப்படுத்தி.. பார்க்குற இடத்தில் எல்லாம்.. கைய கட்டி கும்ம்பிட வெச்சுருவானுக..

சரி.. இதெல்லாம் பள்ளிப்படிப்பை முடிச்சவனுகளுக்கு..     இப்ப, உன்னோட பையன்மாறி.. பள்ளீக்கூடமே போகாம.. சுத்திக்கிட்டு இருக்கானுகபாரு..
எப்படியும், நீ வளர்த்த லட்சணத்தில..அவன் எங்கேயோ(?)  போகப்போறான். !!!
வேலை வெட்டி கிடைக்காது. இப்பவே குடி.. .சீக்கிரம் ’தாதா’ ஆகிடுவான். அப்பால.. இந்த அரசியல் நாதாரிக..இவனுகளை பார்த்து..... ’முன்னாடி பின்னாடி பொத்திக்கிட்டு நிப்பானுக’.. 

அப்ப மட்டும் ஒரு சிச்சுவேஷன் சாங்கை மறந்துடாதே...
”மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்”

அப்பன் நாக்கை அறுத்து..உண்டியல்ல போட்டானாம்!!. அதை பெருமையா வேற நினச்சுக்கிட்டு வந்து கேள்வி கேக்குற பாரு.. உனனைய.....%$$#@

போய்யா.. போ.. புள்ளக்குட்டிகளை வெளிநாடு அனுப்பிச்சு வை.. அவனுகளாவது உருப்படுட்டும்...

Wednesday, March 23, 2011

களவாணி(கள்)-விமர்சனம்

.
.
.
முஸ்கி 1:
கத்திமுனையில், இந்த பதிவை எழுதவைத்த, அருமை அண்ணன்கள் வெளியூர்காரன் மற்றும் ,  இலுமிக்கும்... இந்த பதிவு கன்னாபின்னா என்று சமர்பிக்கப்படுகிறது.முஸ்கி 2:
அரசியலில், எதிரிகளும் நண்பராகலாம். அப்படிப்பட்ட நிலையில், எங்கள் தலைவரை, பொதுமக்கள் முன்னிலையில், அவிழ்த்துவிட்டு மானபங்கப்படுத்திய.... ரத்தத்தின் ரத்தங்களுக்கு..... பட்டாபட்டி விடுக்கும் பகிரங்க சவால்தான் இந்த பதிவு..செயலலிதா..(ஹி..ஹி “ஜெ” எனபது வடமொழிச் சொல்லாம்.. கனிமொழி சொல்லியது..)   பழம் நழுவி பால்ல விழுந்தா எப்படி இருக்கும்?. அதான் நடந்துச்சு. ஆனால் நாம யாரு?..நமக்கு என்னா பவரு?..
அதுவுமில்லாம, அந்த காலத்திலேயே கான்வெண்ட் போய் படிச்ச பரம்பரை..

எல்லோரும்  டம்ளர்ல பால் ஊற்றி, வாய் வழியா குடிச்சா, நாம ஸ்ட்ரா வெச்சு அதுலே..... உக்காருவோம். ஏன்னா.... நாம ரத்ததின் ரத்தம்.!!!

கலைஞரை ஊழல் ஆட்சி... குடும்ப ஆட்சீ...னு பேசின கழக உடன்பிறப்பு நான்.(ஹி..ஹி).   வரும் தேர்தலில் மாற்றம் வந்து, ஊழலின் வேகம் கொஞ்சம் மட்டுப்பட்டு,  தமிழ்நாட்டிலே ’பாலும் தேனும்’ ஓடட்டும் என கனவு கண்ட பன்னாடை மனுஷன் ..

அன்னைக்கே நிருபர்(?) .. ”யோவ் அடிக்கிற வெள்ளத்தில, பீத்துணி கிடைத்தாலும் விடக்கூடாது. கிடைப்பதை எல்லாம் எடுத்து வைத்துக்கொள் என எங்கப்பா சொல்வாரு”னு சொன்னாரு.  நாமதான் மூளைய கழட்டி..முச்சந்தில வெச்சுக்கிட்டு திரிகின்றோமே...

பாருங்க ..இப்ப என்ன  ஆச்சுனு?..

அலம்பல்.. செருக்கு.. ஆணவம்..  அம்மாம்ம்ம்ம்ம்மா... எனக்கு இன்னும் தண்ணியா, நிற்காம போய்கிட்டு இருக்கு பாஸ்..(கண்ணில், எனப்படிக்கவும்)

இப்ப எனக்கு லைட்டா டவுட் வந்திருக்கு மச்சி.. ஒருவேளை  கலைஞரும் , அம்மாவும் கூட்டணி போட்டு நம்ம வேட்டிய உருவுவாங்களோனு?.
நீங்க என்னா நினைக்கிறீங்க?..
.
.
ஒரு நிமிசம்..
.
.
எதுக்கும் உங்க வேட்டிய இறுக்கபிடிச்சுட்டு,  பதில் சொல்லுங்க. ஊழலைவிட நமக்கு.....ஹி.ஹி   மானம் மரியாதைதான் முக்கியம்
.
.
டாஸ்மார்க் சரக்கை  ’உங்க கம்பெனியில’ இருந்து வாங்கிக்கிறோம்.
நாங்க சொல்லும்போது எல்லா கட்சிக்காரனையும்,  காறித்துப்பிவிட்டால்... விட்டால்..... ”ஆர்டரை அதிகமாக்குவோம்”-னு  முதல்வர்  சொல்லியிருப்பாரோ?..

அப்படி இல்லை.. ”மக்கள் எல்லோரும்  மானா.சூனா..   நான் அடிக்கிறமாறி அடிக்கிறேன்.. நீ அழகுறமாறி அழு.  அப்பால  சில வருஷம் கழிச்சு,  வேஷத்தை மாற்றி  கல்லா கட்டுவோம்”-னு, ஏதாவது  உடன்படிக்கை போட்டிருப்பாங்களோ?  இந்த  ஹி..ஹி...நமது  தமிழகத்தின்  வாழும் கடவுள்கள்.!!!

ஒண்ணு நிச்சயமா தெரியுது.. இலவசமா எதையும், முதல்வர் படம்போட்ட பைகளில் அழகாக வைத்து, அன்புடன் கொடுத்தால், கடவுளே!! என கைநடுங்க வாங்கிச் செல்லும் கும்பல் இருக்கும்வரை... 
”அய்யா..அம்மா..தாத்தா..பாட்டி..பேரன்..பேத்தி.. உடன்பிறப்பு.. வளர்ப்புமகன்..வளர்க்காமகன்..ராஜ்ஜியம்தான்”.

ஆகவே மக்களே.. உங்கள் உழைப்பை நம்பித்தான் நாடே உள்ளது.. வியர்வை சிந்தி உழைத்து.. நாட்டை முன்னேற்றுவது நம் கடமை.

==========================================

விளம்பர இடைவேளை.

கடந்த 5 வருடங்களாக, ,  ’தரமான பெயிண்டர்கள் மற்றும் கடஅவுட் டிசைனர்கள்’ வைத்து. விளம்பரம் செய்து வருகிறோம்.

கட்சிப்பாகுபாடு இல்லாமல், நீங்கள் காட்டும் இடத்தில், துல்லியமாக, துப்புரவாக... பெயிண்டிங் செய்து தருவதில் எங்களை விட்டால் உங்களுக்கு வேறு கதி இல்லை என்பதையும் தாழ்மையுடன் சொல்லிக்கொள்ள விழைகிறோம்.

தரமான சேவை..குறைந்த கட்டணம். ( ஹி..ஹி 1 குவாட்டர், மற்றும் கோழிபிரியாணிக்கு), மூன்று நாள் கண்முழித்து, குடும்பத்தை விட்டு , காரியத்தில் மூழ்கும் தொண்டர்கள்..சே..ஊழியர்கள் உள்ள ஒரே நிறுவனம் எங்களுடையது... டொண்டடொய்ங்....


==========================================
பதிவு தொடர்கிறது..( யோவ்.. வெளியூரு  .. கத்திய கொஞ்சம் பொத்தினாப்புல புடிய்யா.. பயமாயிருக்கு...)

ஆகவே... வாக்காளர்களே...
 
”வேட்டியை அவிழுங்கள்
பட்டாபட்டியை அணியுங்கள்.
உழைக்கப்புறப்படுங்கள்.

நாட்டை பாதுகாக்க அரசியல்வாதிகள் உண்டு.
நம்மை பாதுக்காக்க யார் இருக்கிறார்கள்?..


டிஸ்கி 1
அம்மா மற்றும் உடன்பிறவா வாழ்க..
அய்யா மற்றும் அன்புமணி வாழ்க..
கலைஞர் மற்றும் கழகம்(?) வாழ்க..

தங்கபாலு வாழ்க வாழ்க..( மனைவிக்கு சீட் கிடைச்சுதா தொரை.. இல்லேனா சொல்லு.. தாத்தாவ, விட்டு தந்தி அடிக்கிறோம்.)
.
.
.

டிஸ்கி 2

எங்கள் தலைவர், ’செயலலிதாவிற்க்கு  பிறந்தநாள் வாழ்த்துக்கடிதம்’ அனுப்பியும், பதிலுக்கு வாழ்த்து சொல்லத்தெரியாத, அரசியல் நாகரீகம் தெரியாத, அம்மா என்ற ஜெயலலிதாவிற்க்கு, எங்கள் எதிர்ப்பை பதிவு செய்கிறோம்.

எங்கள் தலைவர் , எகிப்து போன்று, FaceBook மூலமாகவே, வோட்டு பெற்று, ஆட்சியை கைப்பற்றிவிடும் அருகதை கொண்டவர்.நல்லவர்.. வல்லவர்... தேவர்குலத்தில்,  ஒரே ஒரு மாணிக்கம்,  (யோவ்.. உன்னொட கட்சிப்பேரு என்னாய்யா?.. சீக்கிரம் சொல்லு.. மக்களுக்கு இன்ரோ பண்ணத்தாவலே..
அடச்சே.. மறந்து தொலச்சிட்டியா?.. சரி விடு..சூனாபானா பார்க்காததா?)


ஆகவே....அண்ணன் கார்த்திக்கை அவமானப்படுத்திய, ஜெயலலிதாவை.. ஆணவக்காரி என்று பதிவு செய்து எங்கள் தலைவனின் முகநூல் முகவரி “கார்த்திக் முத்துராமன்”-ல் உங்கள் பொன்னான வாக்கை பதிவு செய்து அவரை முதல்வராக்க அறைகூவல் விடுகிறோம்...( தலீவா.. கட்சிப்பேரை ஒரு பேப்பர்ல எழுதி , பாக்கெட்ல வெச்சுக்க. இல்ல அசிங்கப்படப்போறோம்...)
.
.
.Wednesday, March 16, 2011

சாதிக் பாட்ஷா - (On behalf of lucky அண்ணன்)

செய்திகள் வாசிப்பது பட்டாபட்டி

2ஜி அலை‌க்க‌ற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக மத்திய புலனாய்வுக் கழகத்தால் ‌விசாரணை செ‌ய்ய‌ப்ப‌ட்ட முன்னாள் மத்திய அமை‌ச்ச‌ர் ஆ.இராசாவின் நண்ப‌ர் சாதிக் பாட்சா த‌ற்கொலை செ‌ய்து‌ கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

மரணம் என்பது வருத்ததக்க செய்திதான். ஆனால் அதற்க்காக, மரணம் அடைந்தவர் அனைவரும்   ’தியாகி’   எனக்கூற, பட்டாபட்டியின் நாக்கு கொஞ்சம் கூசுகிறது. Sorry....

நிற்க.

மரணதிலும் பதிவு எழுதும், பட்டாபட்டி ஒழிக என்று கோஷம் போடுபவர்களுக்கு..

ஒரு நிமிடம்..Please....

 • 01..
 • 02..
 • .
 • .
 • .
 • .
 • 57..
 • 58..
 • 59..
 • 60..


ரைட் மேடம்/சார்..
நீங்க போகலாம்...வருகைக்கு, என் உளமார்ந்த, ஒரு நன்னிய மட்டும்  போட்டுக்கிறேன் .

மற்றவர்கள். எப்பவும் போல தொடருங்க..
.
.
.
இன்னக்கு இந்த பதிவை எழுதுவது பட்டாபட்டி இல்லை.. என்னை நம்புங்கள். போற்றலும் தூற்றலும்,  ரெமி மாட்டினுக்கே.  ( சாரு.. இது வேற பாட்டில். இதற்காக ஒரு பதிவை வேஸ்ட் செய்யவேண்டாம்.)


மனிதர்களாக பிறப்பவர்கள் அனைவருக்கும், ஒருநாள்..... தலைவலியோ அல்லது வயிற்றுவலியோ வரலாம்.   இது எல்லைமீறும்போது, பணம் படைத்தவர் டாக்டரிடம் சிகிச்சைக்கு செல்வர். 
மற்ற ஏழை பாளைகள் அவர்களுக்கு தெரிந்த, பாட்டி வைத்தியமோ அல்லது சாணிப்பவுடரோ..( சாணி என்பதை, உணமையான சாணி  எனக்கொள்க.-ஆசிரியர்.)

மீதியிருக்கும், நடுத்தர மக்களுக்கு, ஒரு முழம் கயிருதான் போல...

ஆங்.. இததருணத்தில் நமது மகா பத்திரிக்கை, நக்கீரனை பற்றி சொல்லாவிட்டால், மனிதனாக இருப்பதில் பயனில்லை. நக்கீரன் சாணி பத்திரிக்கை.. வழக்கம்போல, செய்திகளை கொடுத்து, விசுவாசத்தை காட்டிவிட்டது.....’கலைஞர் வாழ்க...


சரி .. மேட்டருக்கு வருவோம். .........பாவம் பிரச்சனை......... வயிற்று வலி.. என்னதான் பண்ணுவார் ?.. ஒருமுழக்கயிற்றில் தொங்கிவிட்டார்.
வழக்கம்போல தேர்தலும் களைகட்டத்தொடங்கிவிட்டது..  நமது ஜனநாயக கடமையை ஆற்ற,, எப்பவும் போல, தலைவர் தங்கப்பாலுவின் அறிக்கையை படிக்க ஆரம்பித்துவிட்டோம்.. ஏன்னா.. நாம் தமிழர்கள்...

இப்ப நான் சொல்லவருவது என்னவென்றால், வயிற்றுவலிக்கு, முழக்கயிறை விட,  ‘ஒத்தைக்கொம்பு தைலம்’ நல்லது. மேல் விபரங்களுக்கு, அண்ணன் ALLinALL-யை அணுகவும்.. அவர்தான் பதமா....இதமா...... தைலம் கொடுப்பதை பற்றி விளக்கிக்சொல்வார்..   (என்ன ராஜன்.. சரிதானே இந்த மார்ட்டின்(?) சொல்வது? .. பார்த்துச்சொல்லிக்கொடுங்க.. எல்லாப்பயலும், வருங்கால வாக்காளர்கள்)


ஜப்பானில் சுனாமியினால், நாடு எட்டு அடி நகர்ந்துவிட்டதாம்... நகரட்டும்..நகரட்டும்.. சீக்கிரம் சில தொகுதிகள், சேரும்போல...


மீனவப்பிரச்சனையில், ஆர்வம் கொப்பளிக்க, ’கைது செய்த அரைமணிதுளிகளில்’ பேனர் தயாரித்த கழகக்கண்மணிகளுக்கு...

பாலை வார்தீங்க கண்ணுகளா...  ‘கெட்டது பல நடந்தாலும், அதிலும் சில நல்லது நடக்கும்’,  என்று டோமர்கள் குரைப்பார்கள். உண்மை போல...    அண்ணன் இறந்து அரைமணி நேரத்தில், அவசரப்பட்டு, மலர்வளையம் வாங்காமல்.... இரங்கல் பா பாடாமல், தேர்தலில் மும்முரமாக இருந்த கழகக்கனிகளுக்கு.. என் அன்பு வணக்கம்..

நெஞ்சு விம்முகிறது.. ( கும்மி சார்..சிரிக்காதீங்க.. உண்மைய சொன்னேன்...)

நிருபர் அண்ணன், தேர்தல் பணிகளுக்காக களத்தில் இருப்பதால்   (  வெளிநாட்டில் இருப்பவர்கள் களம் இறங்க தயாராக இல்லாததால், சின்ன தோளில பெரும்சுமையை தூக்கும் அவருக்கு, ஏன் கொடுக்கவில்லை சீட்டு?.. பாவம்.. அவருக்கும் தமிழக ஆண்டவர், கூடியசீக்கிரம், கருணை புரியட்டும்.),

ஸ்பெக்ரமில் ஊழலே நடக்கவில்லை என்று விழிப்புணர்வு பதிவை எழுதிய அண்ணன் லக்கி சாருக்கு இது சமர்ப்பணம். ..அதாவது, இந்த பதிவு சார்..

வயிற்றுவலி பிரச்சனைய ,  ஸ்பெக்ரம் ஊ..ஊழல் என,  புத்தி இல்லாதவர்கள் பேசுவார்கள்.. அவர்களுக்கு புரியவைக்கத்தான் இந்த பதிவு..

 =================================================

“எச்சக்கலை ரிப்போர்ட்..சாரிப்பா.. இது ஒரு Exclusive ரிப்போர்ட்..By பட்டாபட்டி..”

Wednesday, March 9, 2011

நிரந்தர(?) முதல்வர் வாழ்க...

.
.
.
தலைவா. வணக்கம். ஆங்.. அட என்னாத்தலைவா..  நாந்தான்.... அட...உடன்பிறப்பு தலீவா..   நாலு நாளா உடம்பு சுளுக்கெடுத்தாபல இருக்கேனு, புல் அடிச்சு மட்டையாகி இருந்தேன். அதுக்குள்ள படா பேஜாரு பண்ணிப்புட்டானுக இந்த பதிவுலகுலே.

ஒருத்தன் என்னான, ’தலீவரு சாணக்கியத்தனம் பண்ணியிருக்காரு’ங்கரான்.
அடுத்தவன், ’தலைவரு வெச்சாரு பாரு ஆப்பை’-ங்கிறான்.
சென்னையிலிருந்து இன்னொருத்தன், ”அதை கூட்டி, இதை கழித்து, இதாலே பெருக்கினா சுத்தம் ஆகுங்குறான்”.
அவனோ,”கலைஞர், turbo power-யை உபயோகப்படுத்தரார்”-ங்குரான்
என்னா தலைவா நடக்குது?.

என்னமோ போங்க. கடைசியா சோனியா அம்மாவோட மனம் குளிர நடந்ததுக்கு, உங்களுக்கு ஒரு பட்டம் தரனும் தலீவா?. உங்களுக்கு இன்னா அறிவு?.. இன்னா சாணக்கியத்தனம்..?

ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம் தலை.  படிச்சவனையே சில நாட்கள், சிங்கி அடிக்கவிட்டுட்டீயே!!.. அங்கதான் நீ நிக்கிறே!!... சாரி தலைவா.. ஒரு ப்ளோல வந்திருச்சு. எப்பவும் மாறி கண்ணை மூடிக்கிட்டு, உடன்பிறப்பு சொன்னதா எடுத்துக்க..


ஆங்..தலீவா.. நம்ம அல்லக்கை, அதாம்பா  ’லகலக அண்ணாச்சி’, நீங்க எடுத்த முடிவை பார்த்து, ”ஆகா.. தமிழகத்திலேயே முதன்முறையா, அதிரடி ஆட்டம்னு” டிவிட்டராரு. பார்த்துக்கோங்க தலீவா.. இதுமாறி அல்லக்கைக இருக்கும்வரைதான் நாடு நம்மதுதான். இல்லை, எல்லாத்தையும் புடிங்கி, திரும்பவும் திருட்டு ரயில் ஏத்த விட்டுவானுகோ..

தல.. உங்ககிட்ட ஒரே ஒரு விண்ணப்பம்.. இந்த அல்லக்கைக்கு, ஏதாவது வட்டம், சதுரம்னு,  பீடி காசுக்கு சம்பாரிக்கிறமாறி, ஒரு பதவி குடேன். பாவம் சம்பளம் வாங்காம கூவிக்கிட்டு இருக்குல்ல..

ஆங்.. தலீவா.. இங்க எல்லா பயபுள்ளைகளும் பயந்து போய், நடுங்கிட்டு இருக்கானுகோ நாம ஆடின ஆட்டத்தைப் பார்த்து. வீல்சேர்ல புச்சா பேட்டரி மாத்தினது எவனுக்கு தெரியாது போல தலீவா.  சாம்பிளுக்கு சிலது சொல்றேன்.. மைண்டுல வெச்சுக்க.

 • தலைவர் புத்துணர்சியுடன் புதுவேகம் எடுத்துள்ளார்.
 • அவர் கை அசைத்தால், இந்தியாவே ஆடும்
 • சாணக்கியனுக்கே சாணக்கியதனம் சொல்லிக்கொடுப்பார்
அப்படீனு , காலையில பல்லே விளக்காம கூவிக்கினு இருக்கானுக..
அதனால...இதையெல்லாம், அப்படியே லூஸ்ல விட்டுபுட்டு, கனிய முதல்வர் ஆக்கும் வழியை, இப்பவே ஸ்டார்ட் பண்ணுங்க...சொல்லிப்புட்டேன்.

அப்பால தலீவா.. முடிக்கும்முன், இன்னொன்னை சொல்லிக்கிட்டுப்போறேன். வீட்டுக்காரம்மாவை, வேலைக்கு போகச்சொல்லீட்டேன்.. புள்ளைக படிப்பை பாதியிலே நிறுத்திப்புட்டு, சிவகாசிக்கு , வேலைக்கு அனுப்பியிருக்கேன்.. என்னோட பிரச்சனை முடிஞ்சது தலீவா.. இனி உனக்காக, உடல், பொருள் ஆவி.. எல்லாமயிரையும் குடுக்க ரெடி ஆகிட்டேன்.. நீ மட்டும் ‘உம்’னு சொல்லு தலீவா.. 63 தொகுதியிலும் இடைதேர்தல் வரமாறி செஞ்சுபுடலாம்...

தலைவா.. மாற்று அரசு ஆட்சிக்கு வரனுமுனு , சிலபயலுக கூவிக்கிட்டு இருக்கானுக.. அந்தம்மா என்னமோ, வந்ததும் தமிழ்நாட்டை ஆசிட் ஊத்தி கழுவிவிடரமாறி.
( இதுல வேற , இந்த பட்டாபட்டி மயிராண்டி,  இந்த ஊழல்பெருச்சாளிக்கு, அந்த ஊழல் மகாராணி தேவலைனு கூவரான்) . தல.. முடிஞ்சா, அந்தம்மா கூட சில ரகசிய கூட்டணி போடுங்க தல்.. மக்கள்  தலவிதி நம்ம கையிலதான்.. எவ்வளவு ஜென்மங்கள் ஆனாலும் சரி.. விடக்கூடாது..ஆங்..தலீவா.. சமீபத்தில, இலவச டீவிய..அதாம்மா.. கட்சி ஆபீஸ்ல சுட்டுகிட்டு வந்ததை, பழைய இரும்புக்கு போட்டு,ஐபோன் வாங்கிட்டேன்.. என்னா வசதி. என்னா அழகு... தொட்டாப்போதும்.. பூ மாறி வழுக்கிட்டு போகுது தலீவா ..
அதுக்கு 2 மணி நேரம் சார்ஜ் பண்ணினா, 4 மணி நேரம் உழைக்குது.

ஆனா, அந்தம்மா, 4 நாள் ஓய்வெடுத்தா, 2 நாள்தான் உழைக்குது.. பேட்டரி வீக் போல..  அதனால .. கவலையே படாத தல..  அடுத்த 50 வருசத்துக்கு நம்ம ஆட்சிதான்.. கட்சிக்காரனுக, ஏரோப்ளேன் ஏறிப்போயி பிச்சை எடுப்பதை, கண்குளிர பார்க்கனும்..


எவனாவது, ’ஏய்யா ரெண்டு ஏக்கர் நிலம் தரலே?னு கேட்டா, உள்ள தூக்கிப்போட்டு, வாயிலையே மிதி தலைவா.. மிதினா.. நான் உன்னிய சொல்லலே.. ஆளைவிட்டு மிதிக்கச்சொல்றேன்.

நமது நோக்கம், ”தமிழ்நாட்டுல பாலும் தேனும் ஓடவைக்கனும்”. இனி எவ்வளவு ஜென்மம் எடுத்தாலும் சரி தல.. அதை அடைய பாடுபட்டுக்கிட்டே இருப்போம் என கனிஉறுதிமொழி எடுக்கிறேன்..

நீங்க வேற, மகளிர் துயர் துடைப்பதில் நம்பர் ஒன் ஆச்சே.. பேசாம, இந்த கோயமுத்தூரை தனியா பிரிச்சு, ராசாத்தி அம்மாக்கு தாரை வார்த்திடலாம் தொரை.   ஏன்னா, ’உன்னை நம்பி வந்ததுக்கு, எனக்கு எதுவுமே இல்லை’னு கண்ணை கசக்கினா, கழக்த்தொண்டன் பார்த்துக்கிட்டு சும்மா இருக்கமுடியாது இல்ல..

சும்மா உக்காந்திருக்கும்போது ரோசனை பன்ணி, தமிழனுகளுக்கு(?) நல்ல முடிவை எடு முதலாளி..


இப்படிக்கு
உடன்பிறப்பு.
.
.
.

Tuesday, March 1, 2011

மனைகள் விற்பனைக்கு..

மன்னாரு டீக்கடை.
நேரம் : எப்பொழுதும்போல அதிகாலை.


மேலெழுந்துவரத் துடிக்கும் உதயசூரியனை(?) பார்த்து, இலைகள்(?) பதைபதைக்கு நிற்க, பெண்களிடமிருந்து  தற்காலிக விடுதலைவேண்டி, காளையர் ட்ராக் சூட்டில் ஓடிக்கொண்டிருக்க.. வயதை குறைக்கவோ, வாலிபத்தை  நிலைநாட்டவோ..(யோவ்..விடுய்யா பட்டாபட்டி.. சும்மா, ஏனோதானோனு எழுதுவதை விட்டுவிட்டு மேட்டருக்கு வா..)


ஆங்.. காலையில எழுந்து, மன்னார் கடையில டீ சாப்பிடாதவன் மனுசனா சார்?. பாருங்க. பல்லு  விளக்குறோமோ இல்லையோ, டீ உள்ளபோகனும். அப்பத்தான்..ஹி..ஹி..மற்றது வெளிய வருது. இன்னா  நைனா ..  நான் சரியா பேசறேனா?. (வெளியூரு..நீ மூடிக்கிட்டு இரு. இப்ப நான் கலைஞரை இழுக்கலே.   என்னமோ, நான் இழுத்தாத்தான் வருவாரு போல பில்டப் கொடுக்காதே.!!! ஹி..ஹி  தள்ளுவியா? அதை  விட்டுப்புட்டு.. சரி..சரி.... குட் மார்னிங் தொரை..)

சின்ராசு. என்னாய்யா நல்லா இருக்கியா?.. ரொம்பநாளா ஆளே காணோம்?.

வாய்யா பட்டு. வா.. வா.. தேடிப்போன மூலிகை, பின்புறத்தில ஒட்டிக்கிட்டு இருந்தாப்பல.. உன்னைத்தான்  தேடிக்கிட்டு இருக்கேன். நல்லா இருக்கியா?.

ஏதோ இருக்கேன் சின்ராசு. வேலை கொஞ்சம் அதிகம். அதுவுமில்லாம ..ஹி..ஹி.. சொல்றேனு தப்பா  நினக்கக்கூடாது.. ஹி..ஹி  வேலை அதிகம்..

போய்யா வெண்ணை. அதைத்தான் முதல்லே சொல்லிட்டீயே. அப்புறம் என்ன ஹி..ஹி?.  சே.. இந்த வெளியூர்பய உன்னைய நல்லாவே மெண்டல் ஆக்கி வெச்சிருக்கான்.

சின்ராசு. அந்த நாதாரிய மட்டும் சொல்லாதே.  உள்நாட்டு, வெளிநாட்டு உரிமையெல்லாம் நாந்தான் வாங்கி  வெச்சிருக்கேன். அதனால அவனை, ’நாந்தான் வாண்டவாண்டையா திட்டுவேன்’. நீ அவனைப்பத்தி இனிமேல
ஒரு வார்த்தை பேசக்கூடாது. மீறிப்பேசினே,  ஒரு ரூபாய் அரிசில பொங்க வெச்சு , பார்த்த இடத்திலெல்லாம்  கண்டபடி வாந்தி எடுப்பேன். சாக்கிரதை.

அடப்போடா போக்கத்த பயலே. உனக்கு நல்லது பண்ணலாம்னு வந்தா!!!. சே. எனக்கு, இதுவும் வேணும். இன்னமும் வேணும். வாந்து எடுப்பானாமில்ல வாந்தி?.

மவுனம்.. டீக்கடையைச் சுற்றி, ’கலைஞரின் பாசவலைகள்’ சூழ்வதுபோல மவுனம்.

டிக்..

டிக்..

டிக்..

உஷ்.. இரண்டு நிமிடங்களாயிற்று. சின்ராசு கோபம் தணிய..
( பட்டாபட்டி.. பதிவு எழுதறேனு வாந்தியா எடுத்துக்கிட்டு இருக்கே. பார்த்து.. சூ..சூ..சூ... சூதனமா இருந்துக்க.)


பட்டு, சம்பாரிச்சு ஏதாவது இடம் கிடம் வாங்கிப்போட்டிருக்கியா?.  இல்லை ’அரசியல், அட்வைசு’-னு  வெளியூர்காரன்மாறி, நாதாரித்தனமா சுத்திக்கிட்டு இருக்கியா?..

ஹி..ஹி.. எங்க பாஸ்.. சம்பாரிப்பது எல்லாம் வாய்க்கும்,  வயிற்றுக்குமே சரியா இருக்கு. இதுல  விலைவாசிவேற, ரம்பா தொடைமாறி ஏறிக்கிட்டு இருக்கு.  எங்கபோயி இடம் வாங்கிறது. ?

ஏலேய். சென்னையில, இப்ப 80 சைட் பிரிச்சுப்போட்டிருக்காங்க.. விலையும் சல்லிசா இருக்கு. நல்லா,  நடு செண்டர்ல.... சுற்றி  பாதுகாப்பா உடன்பிறப்புகள் வேற, புழங்கிட்டு இருக்காங்க.

யோவ்.. சின்ராசு.. ப்ளீஸ்யா.. வேற யாருக்காவது சொல்றதுக்கு முன்னாடி , நாம போய் வாங்கிப்போட்டுடலாமையா.. வா.. வா.. கிளம்பு..

இரு..இரு அவசரப்படாதே. ”பொண்ணு பார்ப்பதும்  பூமி பார்பதும்” , யோசனை பண்ணிப் பண்ணனும். இல்ல.. மகனே  வாழ்க்கைபூரா.. உய்ய்ய்ய்.உய்ய்ய்.. சங்குதாண்டீ.

என்னாய்யா. சரி.சரி. பூமியப் பற்றி சொஞ்சம் சொல்லேன். யாரு ஓனரு?. பரம்பரை சொத்தா?.  இல்லை புறம்போக்கா?.  கட்சிக்காரனை புடிச்சா வளைச்சு போட முடியுமா?..

ஓ.. அதுவா?.. (சின்ராசு  விளக்க,    நான் விளங்க...)
.
.
.
சாரி சார்..   “யாம் பெற்ற இன்பம் யாவரும் பெறுக” என்ற உயர்கருத்தினை மனதில்கொண்டு ,  இதைபற்றிய மேல்விளக்கங்கள் வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். 

மேலும் சின்ராசு சொன்ன இடத்தை , பப்ளிக்கா வெளியே சொன்னால், கட்சிக்காரர்கள் ( மரியாதை.. மரியாதை..),  இரவோடு இரவாக, பட்டா வாங்கினாலும் வாங்கிவிடுவார்கள். 

ஆகவே,  தமிழகத்தில் இருக்கும் பதிவர்களின் நலம் கருதி அதை கீழே குறிப்பிட்டுள்ளேன்.. வாங்கிப்பயனடையவும்...அதாவது இடத்தை..ஹி..ஹி)மேலும் மதுரைவாழ் பதிவர்களுக்கு
நான் போனமுறை மதுரை வந்திருந்தபோது, கடைவீதியில், ”கோல்கேட் பற்பசை” வாங்கியிருந்தேன். அது தீரும் தறுவாயில் இருப்பதால், கடந்த சிலமாதங்களாக, பற்களை குளிப்பாட்ட முடியாத நிலையில் உள்ளேன். 

இந்த பதிவை படிக்கும், மதுரை, தேனி, அருப்புக்கோட்டை, கோவில்பட்டி பதிவர்கள், உங்கள் வேலையை அப்படியே விட்டுவிட்டு, மதுரை சென்று, பற்பசைய வாங்கி, கூரியரில் அனுப்பி வைத்தால் உங்களுக்கு எல்லா செல்வமும் கிடைக்க, சிங்கை பெருமாள் கோயிலில் தனிபூசை நடத்த ஏற்பாடு செய்ய ஏதுவாக இருக்கும்.

நன்றி வணக்கம்.

#############

இடம் பற்றிய விளக்கம்.
 • சென்னைக்கு அருகில்
 • களிமண் பூமி
 • அஸ்திவாரத்துக்கு ஆழத்தோண்டவேண்டும்.
 • பரம்பரை சொத்து
 • விற்பனைக்கான நோக்கம் :ஓனர் மகன் வெளிநாடுப் பெண்ணைப் பார்ப்பதால்.
 • நில உரிமையாளர் : வெளிநாட்டுப்பெண், வசிப்பது நம்நாட்டில்
 • தண்ணீர் தேங்காத நிலப்பரப்பு.
 • வயதானவர்கள் சாக்கிரைதயாக நடக்கவேண்டும். வழுக்கும்.
 • விற்பனைக்கு கடைசிதேதி : தேர்தலுக்கு ஒரு வாரம் முன்.


..
 ( அண்ணனை ”அடுத்த முதல்வராக்க”, அரும்பாடுபடும், பாரம்பரிய நல்ல உள்ளங்களுக்கு, இந்த பதிவு சமர்பணம்.. 

வரும் சனிக்கிழமை, அவர்தம், கனியை பறித்திட,அதாவது.. வெற்றிக்கனியை பறித்திட,  அண்ணன் பட்டாபட்டி.. காலை 10மணிமுதல் 11 மணிவரை உண்ணா நோன்பு இருப்பார் எனத்தெரிவித்துக்கொள்கிறோம்.))
.
.
.
.