Pages

Tuesday, March 29, 2011

சாண(ணி)க்கிய நாயகன்...

.
.
.
அருமை அண்ணன், அஞ்சா குஞ்சன் , சரித்திர சாணக்கியன் பார்க்கத கட்சிகளா?.. கோஷ்டிகளா?.        எத்தனை அவமானங்கள், அவமதிப்புக்கள், செருப்படிகள். வேட்டி அவிழ்ப்புக்கள்..    சி(ரை)றை ஒன்றுதான் செல்லவில்லையே தவிர சீறிய ஆட்டங்கள் பல.

கூட்டணி என்ற பெயரில், நால்வரை துணைக்கு அனுப்பினாலும், விடியாமூஞ்சியை கொண்டு, விட்டில்பூச்சிகளை துரத்திய லாவகம். 

கோடிகளில் சுருட்டி, கல்லூரிகளை கலவி மைதானமாக்கி, அருட்தந்தை ஆகியவர் பலரிருக்க, ’கொண்டதே கோயில், அன்னையைவிட சிறந்த கோயில் இல்லை’ என, மனைவியைக்கூட தூக்கி எறிந்த வள்ளல் எங்கள் தங்கபாலுவை,  ’டிவீட்டர், பேஸ்புக் மற்றும் பதிவு’களில், நாற அடிக்கும் மக்களுக்காக, தலைவனுக்கு தோள் கொடுக்க களம் இறங்குகின்றான் இந்த பட்டாபட்டி..


நல்ல எண்ணங்களை உடையவர்கள், நல்லவருடன் சேருவர்.
தீய எண்ணங்களை உடையவர் தீயவர்களுடன் சேருவர்.

ஒரு நல்லமனிதனை, அவனைச் சுற்றியுள்ள தீயஎண்ணங்கள் அபகரிக்க முயலும். அதை விடுத்து, அதிலிருந்து மீண்டு, சமுதாயத்திற்க்காக பாடுபடுபவர்களே நல்லோர்கள். மற்றவரெல்லாம், குடி, கும்மி , குத்து என்று கற்பிழந்து காறி உமிழ்வோருக்குச்சமம்..

மேலே நான் குறிப்பிட்டவை புரியவில்லை என்று சொல்பவருகளுக்காக,
அதாவது நல்ல எண்ணம், நல்ல எண்ணத்துடன் சேரும்.. சிம்பிளா சொன்னா, ”பயர்மாதிரி..

அடச்சே.. தங்கபாலுவை பற்றிச்சொல்ல ஆரம்பித்து, வண்டி தறிக்கெட்டு ஓடுகிறது. மன்னிக்க.....  உங்கள் ஆத்மா ’சாந்தி’ அடையட்டும்.....

அப்படி பெருமைகளை பெற்ற அண்ணன் தங்கபாலுவை, பத்திரிக்கை உலகம் , காணவில்லை என்று கூறி எள்ளி நகையாடுகிறது.   மக்கள் மதிகெட்டவர்கள் என்பதற்க்கு இதைவிட சான்று வேறு என்ன வேண்டும்?

மனைவியின் பேரில் மனு அளித்தார். நிராகரிக்கப்படுகிறது. அவரது மனு ஏற்கப்படுகிறது. இதில் என்ன குற்றம் கண்டீர்? பார்க்க சாதுவாக இருப்பதால் அவரை ’பன்னி’ என்று நினைக்கவேண்டாம். அவர் ஒரு பாயும் புலி.

பதுங்கியிருந்தார். சான்ஸ் கிடைத்ததும்... பாய்ந்துவிட்டார்.( அவரு டீவீ வெச்சு நடத்துவது இப்போதுதான் பட்டாபட்டிக்குத் தெரியும். அதன் இயக்குனராக மாற, பட்டாபட்டி சதி செய்கிறான் எனக்குகூறும் நயவஞ்சகர்களே.
உங்களை நான் ஒன்று கேட்கிறேன். என தலைவன் முகத்தைப்பார்த்துமா, உங்களுக்கு பரிதாபம் வரவில்லை?)

கலவரபூமில, சாணக்கியத்தனத்தை காட்டிய அண்ணனைப் பார்த்து, பெரும் தலைவரே எழமுடியாத சூழ்நிலையில் உள்ளார்.  அப்படிப்பட்ட அண்ணனை நேரில் பார்த்து வாழ்த்துத் தெரிவிக்கலாம் என நேற்று நான் சென்றிருந்தேன்.
அவரின் முகத்தில மகிழ்சி, முன்னைவிட ’பளபள’வென் மின்னிகிறது.

பூங்கொத்தை கொடுத்தேன்.. வாழ்த்தை பகிர்ந்தேன். அகண்ட முக்கத்தில, நிரந்தரப்புன்னகை. எதிர்கட்சிக்கு இறுதிப்புன்னகை. அவனல்லவோ எம்தலைவன்.

வாழ்த்தை பெற்றுக்கொண்டதும், ஆறுதலாக ஆறு வார்த்தைகளாவது பகிருங்கள் என்றேன்.   அவர் சொன்னதை கேட்டதும், மானமிழந்துவிட்டான் இந்த பட்டாபட்டி..

இதோ அந்த கண்றாவி வாசகம்...

”என்னை மயிலாப்பூரின் எம்.எல்.ஏ வாக, தேர்வு செய்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி”


ங்கொய்யாலே.. ’ஓட்டு கேட்கவில்லை, வாக்குறுதி  வழங்கவில்லை. ”வாய்க்கரிசி போட்டவுடன் , வந்தது பதவி”யென கூவித்திரியும் இந்த கூட்டதுக்கா உங்கள் ஓட்டு.?..

தமிழகத்தில், காங்கிரஸ் ஜெயிக்கும் ஒவ்வொரு தொகுதியும்,  “தமிழனுக்கு தமிழன் , தானே தோண்டிக்கொள்ளும் குழி....”

சிந்தியுங்கள்...செயல்படுங்கள்.


டிஸ்கி.. தங்கபாலுக்கு கோபம்வந்து, நீங்க பார்த்ததில்லையே.........
இதோ உங்களுக்காக..

.
.
.46 comments:

 1. கடைசி போட்டோவுல உள்ளவாறு யாரு பாஸ்? உங்களுக்கு வேண்டியவரா?

  ReplyDelete
 2. யோவ் பட்டாபட்டி, பால் வடியிற அந்த மொகத்தை பாருய்யா,மாசும(சு)ரு இல்லாத அந்த தலைய பாருய்யா.
  அதையெல்லாம் பாத்துமாய்யா உனக்கு இம்புட்டு கோவம்?.....

  ReplyDelete
 3. அய்யா சாமீ......தாங்கல......வயித்த வலிக்குது.....போதும்...அவர விட்டுடலாம் பட்டா...... நிச்சயமா மைலாப்பூரில் ரெட்ட இலைக்குத்தான் போடுவா .

  ReplyDelete
 4. மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் ஹிஹி!

  ஒரு குண்டுபல்ப்புக்குள்ள ஒரு மினி பல்ப் ஹி ஹி!

  ReplyDelete
 5. //அப்படி பெருமைகளை பெற்ற அண்ணன் தங்கபாலுவை, பத்திரிக்கை உலகம் , காணவில்லை என்று கூறி எள்ளி நகையாடுகிறது.//

  அதானே? அப்ஸ்காண்டு என்று எழுதி அற்பமகிழ்ச்சி அடைகிறது.

  ReplyDelete
 6. //உங்களை நான் ஒன்று கேட்கிறேன். என தலைவன் முகத்தைப்பார்த்துமா, உங்களுக்கு பரிதாபம் வரவில்லை?)//

  அப்படியும் வரவில்லேன்னா, மனு நிராகரிக்கப்பட்ட அவரு வூட்டுக்காரம்மாவை நினைச்சாலாவது பரிதாபம் வராதா?

  ReplyDelete
 7. அண்ணன் கோபப்பட்டு நான் பார்த்ததேயில்லை. நான் தங்கபாலு அண்ணனைச் சொன்னேன். ஹிஹி!

  ReplyDelete
 8. சா(ணி)ணக்கியன்..! இப்படியும் போடலாம்ல...! ;;))

  ReplyDelete
 9. இது கோவமா. இதுக்கு கூட போக விடமாட்டிங்களான்னு கடுப்புல கேக்குறமாதிரியே இருக்கு:))

  ReplyDelete
 10. ஒத்த விரலை தூக்கிகாட்டுகிறாரே அதான் கோபமா? நான் அவசரமா உச்சா வருதுன்னு சொல்றாருன்னு நினைத்தேன் .........

  ReplyDelete
 11. பார்க்க சாதுவாக இருப்பதால் அவரை ’பன்னி’ என்று நினைக்கவேண்டாம். அவர் ஒரு பாயும் புலி.//

  புலி.. தமிழில் தலைவனுக்கு புடிக்காத வார்த்தை!

  ReplyDelete
 12. என தலைவன் முகத்தைப்பார்த்துமா, உங்களுக்கு பரிதாபம் வரவில்லை?)//

  அந்த மண்டைக்கு நடுவில மூஞ்சி எங்கையா இருக்கு?

  ReplyDelete
 13. ///////அருமை அண்ணன், அஞ்சா குஞ்சன் , சரித்திர சாணக்கியன் பார்க்கத கட்சிகளா?.. கோஷ்டிகளா?./////////

  அஞ்சா நெஞ்சன் கேள்விப்பட்டிருக்கேன், இது என்னது?

  ReplyDelete
 14. ///////மனைவியின் பேரில் மனு அளித்தார். நிராகரிக்கப்படுகிறது. அவரது மனு ஏற்கப்படுகிறது. இதில் என்ன குற்றம் கண்டீர்? பார்க்க சாதுவாக இருப்பதால் அவரை ’பன்னி’ என்று நினைக்கவேண்டாம். அவர் ஒரு பாயும் புலி.////////

  அய்யய்யோ அண்ணன் புலின்ன உடனேயே பாஞ்சுடுவாரே?

  ReplyDelete
 15. ///////கலவரபூமில, சாணக்கியத்தனத்தை காட்டிய அண்ணனைப் பார்த்து, பெரும் தலைவரே எழமுடியாத சூழ்நிலையில் உள்ளார்.////////

  எப்பேர்ப்பட்ட சாணக்கியத்தனம்... அப்பிடியே மண்டைல வழிஞ்சு ஓடுது பாருங்க.... (ஆமா இதுக்காக ஏன் தலைவரு எந்திரிக்கனும்?)

  ReplyDelete
 16. ///////இதோ அந்த கண்றாவி வாசகம்...

  ”என்னை மயிலாப்பூரின் எம்.எல்.ஏ வாக, தேர்வு செய்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி”///////

  தேர்தலைச் சந்திக்காமலே வெற்றிக்கனியைச் சுவைத்த தானைத்தலைவன் வால்க..........!

  ReplyDelete
 17. //////தமிழகத்தில், காங்கிரஸ் ஜெயிக்கும் ஒவ்வொரு தொகுதியும், “தமிழனுக்கு தமிழன் , தானே தோண்டிக்கொள்ளும் குழி....”////////

  அய்யய்யோ அப்போ அண்ணன் தொங்கன் ஏற்கனவே எம்எல்ஏ ஆகிட்டாரே இப்போ என்ன பண்றது?

  ReplyDelete
 18. ////////டிஸ்கி.. தங்கபாலுக்கு கோபம்வந்து, நீங்க பார்த்ததில்லையே.........

  இதோ உங்களுக்காக../////////

  என்னங்க அண்ணன் ரொம்ப கோவப்படுறாரு, ரசத்துல புளி அதிகமாயிடுச்சுன்னா?

  ReplyDelete
 19. என்னடா இவன் இன்னும் பதிவு போடாம இருக்கானேனு நினைச்சுகிட்டே இருந்தேன். ;)
  தோ படிச்சிட்டு வந்து தொங்கபாலுவ கும்முறேன்.

  ReplyDelete
 20. அது வரைக்கும் இது என்னன்னு கொஞ்சம் கவனி மச்சி...

  கொஞ்சம் முத்தின பீசு,வகை தொகையில்லாம அடிக்கலாம்.

  மாவு, சட்னி அரைக்க நேரமில்லாததால் மிக்சி, கிரைண்டர் வழங்கப்பட உள்ளது: கனிமொழி

  ReplyDelete
 21. இதெல்லாம் ஒர் பொழப்பா மிஸ்டர் தங்கபாடு...

  ReplyDelete
 22. //கலவரபூமில, சாணக்கியத்தனத்தை காட்டிய அண்ணனைப் பார்த்து, பெரும் தலைவரே எழமுடியாத சூழ்நிலையில் உள்ளார். //

  எங்க,அவன எழுந்துருக்க தான் சொல்லிடேன் பாப்போம். :)

  //அவரின் முகத்தில மகிழ்சி, முன்னைவிட ’பளபள’வென் மின்னிகிறது.//

  அட, பார்றா !(அப்படியாவது கண்ணு கெட்டுப் போய் சாவுடா டேய்!) :)

  ReplyDelete
 23. ////டிஸ்கி.. தங்கபாலுக்கு கோபம்வந்து, நீங்க பார்த்ததில்லையே.........

  இதோ உங்களுக்காக..//

  ஒன்னுக்கு இருக்க போறேன்னு சொன்ன போட்டோவ போட்டு கிட்டு ..இவரு கோவ படுராறாம் ..கோவம் ..போ மக்க

  ReplyDelete
 24. ஆஜர், அருவாள் எங்கே, தேங்காய் ஒடைக்கவேண்டும்.

  ReplyDelete
 25. யாருய்யா, எங்க தங்கதலைவனை கலாய்க்கிறது?..

  ReplyDelete
 26. ”சாண(ந)க்கிய நாயகன்..” அப்புடீன்னு தலைப்பு போட்டிருக்கலாம்...

  ReplyDelete
 27. டெபாசிட்டாவது கிடைக்குமா?

  ReplyDelete
 28. //அவரு டீவீ வெச்சு நடத்துவது இப்போதுதான் பட்டாபட்டிக்குத் தெரியும்.//

  இவ்வளவு நாளா நாந்தான் அப்பாவின்னு நினைச்சிகிட்டிருந்தேன் பட்டு:)

  ReplyDelete
 29. M.P பெருசா M.L.A பெருசா?

  தங்கபாலு M.P
  தங்கபாலு M.L.A

  ReplyDelete
 30. தங்கபாலு எவ்வளவு கஷ்டப்பட்டு ஆட்டத்த கலைச்சு ஆடுறாரு.பாராட்டறத விட்டுப்புட்டு..

  ReplyDelete
 31. ஒண்ணாவது கமெண்டுல ரமேஷ் யாரை புடிச்சிட்டு வாரேன்னு சொல்றார்?

  ReplyDelete
 32. எம் புருஷன் கச்சேரிக்குப் போறாங்கற மாதிரி எலக்சன்ல நின்னா போதுமா பட்டா? கண்டிப்பா கவுத்துடுவோம்...

  பிரபாகர்...

  ReplyDelete
 33. ஐயோ ,
  இப்பதானே உன்ன பத்தி ஒரு பதிவு போட்டேன் , அத படிச்சுட்டு வந்தும் நீ மறுபடியும் அரசியல் பதிவு போடுறியே . உன்ன என்ன பண்ணுறது பட்டா ? ? ?
  ?
  ?
  ?
  ?

  ReplyDelete
 34. ////@ பன்னிக்குட்டி ராம்சாமி said... 16

  ///////அருமை அண்ணன், அஞ்சா குஞ்சன் , சரித்திர சாணக்கியன் பார்க்கத கட்சிகளா?.. கோஷ்டிகளா?./////////

  அஞ்சா நெஞ்சன் கேள்விப்பட்டிருக்கேன், இது என்னது? / / / /
  ஹி ஹி ஹி பன்னிகுட்டி செல்லம் கரெக்ட்டா பாயிண்ட்டா புடிச்சுட்ட போ

  ReplyDelete
 35. யார்யா கோல்டன்மில்க்கை சும்மா கலாய்க்கிறது. அந்தாலே பாவம் என்னென்ன கஷ்டப் பட்டு பிளான் பன்னி எம் எல் எ- வுக்கு நிக்கிறாரு அவரைப் போயி....

  பட்டா இப்படியே பேசிட்டிருந்தே அப்புறம் இத்தாலிக்கு விசா கிடைக்காதுலே பாத்த்து....

  ReplyDelete
 36. ராஜ நடராஜன் said...
  M.P பெருசா M.L.A பெருசா?//

  M.P ரெண்டெழுத்து, MLA மூனெழுத்து இப்ப சொல்லுங்க எது பெருசுன்னு?.

  ( எப்படியோ நாம படிச்ச புள்ளைனு காட்ரதுக்கு இத வாய்ப்பா பயன்படுத்தியாச்சு...)

  ReplyDelete
 37. அவனுகளே கரகரன்னு கழுத்தை அறுத்துக்குவானுக தலைவரே#காங்கிரஸ் ஆடு அறுப்பு டீம்

  ReplyDelete
 38. அப்பாவிMarch 30, 2011 at 1:25 AM

  பட்டாப்பட்டி ........ அந்த ஆளு , உன்கிட்ட வாங்கன 1001 ரூபாய , நான் குடுத்தேன்பா ... டென்ஷன் ல , அந்த ஆளு மண்டைய தேச்சி , தேச்சி ...... அங்க ஒரு மசுர காணோம் ....

  ReplyDelete
 39. இந்த நாயெல்லாம் தலிவனா வ்ச்சுகிட்டுதான் கலிஞ்சருக்கு கிச்சு கிச்சு மூட்டுது காங்குரசு...

  ReplyDelete
 40. //என்னை மயிலாப்பூரின் எம்.எல்.ஏ வாக, தேர்வு செய்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி//

  அடப்பாவிங்களா இந்த வேலை வேற நடக்குதா, பட்டாப்பட்டி உங்க தலிவர தோக்கடிக்க வேறு யாரும் தேவையில்லை அவனுடைய கட்சி காரனுங்களே ஒட்டு போட மாட்டானுங்க

  ReplyDelete
 41. கருணாநிதி செஞ்சா ராஜதந்திரம் அதையே கோல்ட் மில்க் செஞ்சா கிண்டல் பண்ணுவீங்க.

  ReplyDelete
 42. துணைவிய முன்னாடி அனுப்பி பின்னாடியே போயி சீட்டு வாங்குறது அரசியல்ல சகஜம்னு சொன்னாய்ங்க. அத தானைத்தலைவன் செஞ்சா இந்த கும்மு கும்முராய்ங்க.எவனாவது வழுக்கைதலையோட வந்தா இப்படித்தான் தபேலா வாசிப்பீங்களா?. என்ன எழவுடா இது.......

  ReplyDelete
 43. Congress - hang இனிமேல் rush தான்

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!