Pages

Wednesday, August 24, 2011

பேட்டி- நரியுடன்

நரி-சிறுகுறிப்பு:

நல்லவர். வல்லவர். அநியாத்தைக் கண்டால் ஓடும் Buzz  என்பதைக் கூடப்பாராமல்,  ஓங்காரமாய் ஏறுபவர்.    இவரிடம் பேட்டி எடுப்பது என்பது, ’கனிமொழியை வைத்து சென்னை சங்கமம் நிகழச்சிக்கு  ரிப்பன் வெட்டுவது’ போல..  (எல்லாம் காலம் கொடுமை பாஸ்.. விடுங்க...விடுங்க..)

மேலும், மக்களுக்காக களப்பணி ஆற்ற துடித்துக்கொண்டு இருக்கும் இந்த இளைஞர். திடீரென  காணமல் போனதுக்கு காரணம்?..
.
.
.
வேறு ஒன்றுமில்லை பாஸ்..
ஒரு திருட்டுக்கல்யாணம் பண்ணி வைக்க திருட்டுத்தனமா  போயிருந்தார். இவரைப்பற்றி மேலும் சொல்லிக்கொண்டு இருந்தால், வயோதிகர்கள்  வாலிபர்களாகும் சங்கடங்களும் நேரலாம் என்பதாலும்.....  இத்துடன்  இவரைப் பற்றிய  அறிமுகத்தை முடித்துக்கொண்டு பேட்டிக்குச் செல்லலாம்.  ( திருட்டுக்கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என வேண்டுதல் கொண்டவர்கள்,  உடனடியாக அவரை அணுகி துண்டைப் போட்டுக்கொள்வது நல்லது.)

===============

வணக்கம் நரி அவர்களே.. உங்களுடைய பேட்டி வேண்டும் என அறிக்கை விட்டதும், கட்டிய  துணியுடன் கடல்கடந்து போய்விட்டீர்கள் போல!!..

இல்லை..இல்லை.. நானும் லோக்கல்தான். என் தலைவன் மீது ஆணையாக, சத்தியமாக,   அவர் சொல்படி, ஒரு திருட்டுத் திருமணம் நடத்தி வைக்கச் சென்றிருந்தேன். இதில்   உள்நோக்கம் கற்பிக்கவேண்டாம்.
"யாதும் ஊரே..யாவரும் கேளீர்.."சரி..சரி..தெற்கிலிருந்து வடக்கு வரை கை-கள் நீளும்போது, யாதும் ஊரேதான்...

உம்..( ”கோபம்” எனக்கொளக, வாசகர்களே!!.. )கடந்த தேர்தலில் விழுந்த அடி பலமோ?.

நீங்கள் யாரை மனதில் வைத்துக்கேட்கிறீர்கள் என தெரியவில்லை. ஆனாலும் அடித்த அடியில்,   முழங்கால்வரை வந்து.. அப்பால பழையநிலைக்கு சென்றுவிட்டது.. சார்..சார். இந்த ஏரியாவுல பல படிச்ச பன்னாடைகள் புழங்குவாங்க. அசிங்கமா பதில்   சொன்னா மூஞ்சிய சுளிப்பாங்க சார்.


யோவ்.. இங்க நான் சொல்லவருவது “வலி”.. அதுகூடப்தெரியாமல்  இருப்பவர்களைப் பார்த்து, எதில்கொண்டு சிரிப்பதென  எனக்குத் தெரியவில்லை.
நெக்ஸ்ட்..===============


ஓகே.. ஓகே.. சில பதிவர்கள், நாங்கள் ’நடுநிலைமாறா நற்பண்பு கொண்டவர்கள்’  எனக்கூவிக்கொண்டு  இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது.. அதாவது..அவர்களின்  பஸ் படிக்கும்போது... தாங்கிய தாங்குதலால்தான்.. அது இரும்புக்கொட்டை  ஆகியிருக்குமோ என்ற எண்ணம் வருவதை மறுக்கமுடியவில்லை. அதைப்பற்றி தங்கள்  கருத்து?..

What is that iron ball?..இல்லை அய்யா.. அது எழுத்துப்பிழை. அதாவது நான் சொல்லவருவது
“இரும்புக்கோட்டை”..


ஓ.. you funny... ”கோழி கூவியா”, எங்கள் தலைவி வெளியவரப்போறாங்க...
ஒன்றும் தெரியாத அப்பாவிகளை சிறைக்கு அனுப்பி, சிரித்துக்கொண்டிருக்கும் சிங்காரிகளுக்கு,    காலம் பதில் சொல்லட்டும். மேலும் நீங்கள் சொன்ன பதிவர்கள், நடுநிலைவாதிகள் என்ற  கருத்துக்கு மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

சிலவிசயங்களில் , மக்களின் புரிதலுக்கும்,  மன்னர்களின் புரிதலுக்கும்  வித்தியாசங்கள்  இருக்ககூடும். எங்கள் மன்னர்கள் மூக்கு சொறிய கை துக்கினாலே, சாணக்கியத்தனம் என  புளங்காகிதம் அடையும், ’ஓட்டு வைத்திருக்கும் மக்கள்’ இருக்கும்வரை, எங்களை யாரும்  அசைக்கமுடியாது.. (வெண்ண.. கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கியே தவிர, குடிக்க தண்ணி
கொடுக்கிறானா..இந்த நாதாரி..)ஓ.கே சார்.. நடுநிலை-னா, ரெண்டு கால் இடுக்கில், இறுக்கப்பற்றியபடி, நேர்பார்வை  கொண்டு, விவாதம் புரிவது எனக் எடுத்துக்கொள்ளலாமா?..

எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இது ஜனநாயக நாடு..===============


ராஜீவ் சமாதியில் ரூ40 லட்சம் செலவில் மின்விளக்கு வைக்கப்போறாங்களாம். அதுவும்,  மூன்று விளக்கில் இருந்து வரும் வெளிச்சம், ஒரு புள்ளியில் குவிந்து, அந்த பிராந்தியமே  ஒளிவெள்ளத்தில் மூழ்கப்போவதாகவும்,  அதற்காக மத்திய அரசாங்க ஊழியர்கள், ஊண்  உறக்கமின்றி வேலை செய்துகொண்டிருப்பதாக செய்திகள் கூறுகிறதே.. அதைப்பற்றி உங்கள்  கருத்து?..

மத்தியமாநில அரசுகளின் திட்டங்களை குறைகூறிக்கொண்டே திரிபவர்களை, உள்ளே வைத்து  நொங்கெடுக்கனும் சார். ராஜீவ் காந்தி யார். அவர் இந்தமண்ணில் பிறக்க மக்கள் புண்ணியம்  பண்ணியிருக்கனும் சார்..
மேலும், அவர் சமாதியின் அருகிலதான்.. இன்னொருவர் சமாதியும்  இருக்கிறது.. அவரு பேரு..பேரு..... ஆங்.. காந்தி...இந்திராகாந்தியா சார்?..

இல்லப்பா.. இது அவரோட கொள்ளுத்தாத்தா..காந்தி..என்னமோ பெருசா வருமே..   சந்த்.ஆங்..கரம்சந்து காந்தி..தனிமனிதனாய் போராடி, வெள்ளையனிடமிருந்து சுதந்திரத்தை  வாங்கிக்கொடுத்தாரே. இப்படி கோவணம் கட்டியவரின் சமாதியும், சூட் போட்டவரின்  சமாதியும் ஒரே இடத்தில் இருப்பதைப்பார்த்து, வெள்ளையர்களே,  மூக்கில் விரலை
வைத்துக்கொள்வார்கள். பொறுத்திருந்து பாருங்கள்..ரொம்ப நல்லது. அம்மா ஆடு கொடுத்ததும், அதை விற்று காசாக்கி, திருட்டு ரயில்  ஏறியாவது ,அங்கு சென்று விளக்கு வெளிச்சதில் எங்கள் பின்புறத்தை பார்க்க நாங்கள் ஆவலாக  இருக்கிறோம் சார்..

சீக்கிரம் அடுத்த கேள்விய வீசுப்பா..  வேலை இருக்கு..


===============


ஓ.. உங்கள் பேரில் அது என்ன சார்.. பால்.. மாறாத மணம்னு.. அது என்ன இழவு-னு  ஒரு மண்ணும் புரியலே...

தம்பி.. சங்க இலக்கியத்தை படிச்சிருந்தா, என்னைப்பார்த்து இந்த கேள்வி வந்திருக்காது..   அது ஒருவகையான பால். இதைப்பற்றி மேலும் விவரம் வேண்டும் என்றால், திருச்சிக்கு  வா.. சொல்கிறேன்..
ஏன் சார் .. அங்கே பொதுக்குழு ஏதாவது..

இல்லப்பா.. என்னுடைய நண்பனுக்கு திருமணம்.. நான் தாலி எடுத்துக்கொடுத்தாதான்  கட்டுவேனு கூவறான். சரி.. திருட்டுக்கல்யாணம் பண்ணி வைக்க என்னைவிட்டா,     அவனுகளுக்கு யார் இருக்கா?. அதான்..

சரி.. பேட்டி போட்டும்போது, என்னோட போட்டோவை, கலர்ல போடு,,
கடைசிக்கு ஈஸ்ட்மென் கலராயிருந்தாலும் பரவாயில்ல....சே..சே.. போட்டோ போட்டு , அதற்கு பொட்டு வெச்சு, மாலை சாத்தாம நாங்க ஓயமாட்டோம சார்.....  கவலைப்படாம, கல்யாணம் பண்ணி வைக்க கிளம்புங்க பாஸ்..  
உங்க பேட்டிக்கு எங்களால் முடிந்த சிறு உதவி...ஹி..ஹி    “நன்றி”....


(மேலும் அண்ணன் மனம் நோகாதவாறு ”நரியின் பெயர், கலர் செய்யப்பட்டுள்ளது,,,,)
.
.
.


Thursday, August 18, 2011

வருக..வருக...


பீடு நடை போட்டு வரும்.. 
பிரபலமாம் எங்கள் தங்கம்...

நெஞ்சை உயர்த்தி..
காலை அகற்றி..
”ஒற்றைக்கால் கோழியை ”
ஓங்காரமாக பிளப்பவரும்..

ஆளப்பிறந்தவர்களை...”ஆழப் பிளப்பதற்க்கு.....”
வருகை தரும் எங்கள் அண்ணன்
”பால்” என்னும் மாறா நரியை
வருக .. வருக என வரவேற்க்கும்..
-சிங்கை பட்டாபட்டி...


அண்ணன் நரியின் பேட்டி இன்னும் சில தினங்களில்.. இங்கு வெளியாகும்...


மேல் விபரங்களுக்கு..
தொடப்பு கொள்ள .. 1800-ங்கொய்யாலே...