Pages

Friday, April 30, 2010

சுறா- பட்டாபட்டியின் பார்வையில்.

.

நடிகர்கள்
தளபதி விஜய்
தமன்னா
வடிவேலு
தேவ் கில் மற்றும் பலர்.

கலைஞர்கள்
சண்டை பயிற்சி: கனல்கண்ணன்
இசை:மணிசர்மா,
ஒளிப்பதிவு: என்.கே.ஏகாம்பரம்
இயக்கம்: எஸ்.பி.ராஜ்குமார்.
தயாரிப்பு: சங்கிலி முருகன்.

விஜய் --->  50 படமாயிருப்பதால், படத்தை ப்ரேம் பை ப்ரெம் செதுக்கியிருக்கிறார்கள்...    ஒவ்வொரு ப்ரேமிலும், அவர்களின் உழைப்பு, சிந்திய வியர்வை தெரிகிறது...

தமன்னா.--->..ஜொள்ளவே வேண்டியதில்லை.. அம்மணி திரையில் வந்தால் போதும்...

வடிவேலு.--->..ஆகா... ஓகோ..சூப்பரு...

சங்கிலி முருகன்.--->. சபாஸ்..சீக்கிரம் பெரிய அளவில் பேசப்படுவார்..

மாறன்.--->..இனி டாய்லெட் வரைக்கும், விளம்பரமா போட்டு ,நமது மூளைக்குள் நுழைத்துவிடுவார்கள்.. ”இது சூப்பர் படம்னு...

சந்திரசேகர் --->:..”சான்றோன் எனக்கேட்ட தந்தை”
.
 .
.
வெளியூரான் சுறா செத்துப்போச்சுனு விமர்சனம் பண்ணியிருக்கானே..
எப்படியா, விஜயின் தீவிர ரசிகனாயிருந்துட்டு ,  நீ பண்ணலாம்..  ?
என்னா நினைச்சுக்கிட்டு இருக்கே?.. உம்?


இப்படியெல்லாம் சொல்லலாமுனு, மின்சாரக் கனவு கண்டுக்கிட்டு இருந்தனே.. ஆனா.. மின்சாரத்தையே கனவாக்கிப்போட்டீங்களேப்பா...
நல்லாயிருங்கலே...
.
.
.
எல்லோரும் குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படம்..ஹி..ஹி வீராசாமி...
.
.
.


நன்றி...

Thursday, April 29, 2010

வெளியூரானுக்கு சமர்ப்பணம்...

நண்பர் ஒருவர், இதை மெயில் அனுப்பியிருந்தார்..
சத்தியமா இது என்னோட மண்டையில் உதிக்கவில்லை என்பதை
தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..
( ஏன்னா.. நான் இன்னும் கொழந்தப் பய சார்...
எனக்கு தெரிஞ்சது ,” வடக்கே இத்தாலி...தெற்கே வள்ளுவர்....”, அவ்வளவுதான்)

கடுப்பான, தயவு செய்து, வடக்கே தந்தி அடிச்சுக்கோங்க.. ( உங்க சொந்த காசில..ம்..)திருமணத்திற்கு முன்: (நிச்சய தார்த்தம் முடிந்தவுடன்)
கீழே படியுங்கள்

அவன்: ஆமாம் , இதற்காகத்தானே நான்,இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்
அவள்: நீ என்னை விட்டு விலக நினைப்பாயா?
அவன்: இல்லை, இல்லை, நான் கனவிலும் அதை,நினைத்ததில்லை
அவள்: நீ என்னை விரும்புகிறாயா?
அவன்: ஆமாம், இன்றும், என்றென்றும்
அவள்: என்னை ஏமாற்றிவிடுவாயா?
அவன்: அதைவிட நான் இறப்பதே மேல்
அவள்: எனக்கொரு முத்தம் தருவாயா?
அவன்: கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்
அவள்: என்னை திட்டுவாயா?
அவன்: ஒருபோதும் இல்லை. அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா?
அவள்: நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா?திருமணத்திற்குப் பின்:
கீழிருந்து மேலே படியுங்கள்
.
.
.

Tuesday, April 27, 2010

தனிமனித தாக்குதல்னா என்னாயா...?

யோவ் பட்டாப்பட்டி...,வெளியூர்க்காரன், ரெட்டைவால்ஸ், பட்டாப்பட்டி, இவனுக மூணு பெரும் தனிமனித  தாக்குதல்ல படுமோசமா ஈடுபடராங்கன்னு ஒரு டாபர் அந்த பிரபல பதிவர் ப்ளாக்ல போய் கருத்து  சொல்லிருந்துச்சே...தனிமனித தாக்குதல்னா என்னாயா...?
இப்படிக்கு..வெளியூர்க்காரன்


---------------------------------------------------------------------------------------------
வாய்யா வெளியூரு..இதுக்கு பதில் சொல்றது சாதாரணமில்லை..நீரு, மூணு வரில கேட்டுப்புட்டீர்..  புரியவைக்க, மூணு பதிவே போடனும்..என்னால் முடிஞ்சளவு சுருக்கி பதில் சொல்றேன்..

அழகு..
முதல்ல அழகுனுனா என்னா?..யோசனை பண்ணிப்பாரு.. உன்னோட கண்ணுக்கு அழகா தெரிவது,    அடுத்தவன் கண்ணுக்கு ஆபாசமா படலாம்...ஏன்னா.. ஒவ்வொருமனித்னின் சிந்தைனையும் வெவ்வேறு
மாறியிருக்கும்..

உதாரணத்திற்க்கு.. கீழேயுள்ள படத்தை பாரு..ஒரு பெண்ணோட பார்வையில, ஆண் எப்படித்தெரியிறானு
விளக்கியிருக்காங்க..ஆனா.. அது எல்லாபெண்களுக்கும் பொருந்தாது..
.
.
.

இப்ப, மங்குனிய எடுத்துக்க..இப்படி படம் போட்டு சொன்னாலும், வந்து நக்கல் பண்ணுவான்..  அவனுக்காகவே Special படம்..இதுவும் புரியலேனே..அப்புறம் டோமர்சாச்சு..மங்குனியாச்சு..மயிராச்சு..   ( சாரிப்பா.. ஒரு ப்ளோல வந்திடுச்சு..)

.
.
.
.

தனிமனிதத்தாக்குதல்..
நான் , ஒரு பதிவுல சொல்லியிருந்தேன்.. தமிழிஸ்லிருந்து என்னுடைய பதிவைப்பாராட்டி  ஒரு மெயில் அனுப்பியிருந்தாங்க.. ஆனா.. நமக்குத்தான் தற்பெருமையே பிடிக்காதே..     பாவம்.. பயபுள்ளைக, கண்ணு முழிச்சு அனுப்பினாங்களே.. அதையும் ஒரு கமென்ஸ்சா போட்டா,
வாசகர்கள் ஆனந்தப்படுவார்களேனு போட்டேன்..திரும்பவும் சொல்றேன்.. எனக்கு தற்பெருமை சுத்தமா   பிடிக்காது.ஹி..ஹி..


நான் சொன்னது..
அய்யோ மக்களே..எனக்கும் அனுப்பிட்டாங்க..

//
Hi pattapatti,
Congrats!

Your story titled 'தப்பேயில்லை..' made popular by tamilish users at tamilish.com

and the story promoted to the home page on 22nd April 2010 05:56:03 PM GMT

Here is the link to the story: http://www.tamilish.com/story/231371
Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team
//

ஏம்பா.. யாருப்பா, தமிழிஸ் ஆபிஸ்ல உக்காந்துகிட்டு எனக்கு மெயில் அனுப்புறது?

ஆமா.. சம்பளம் எல்லாம் கரெக்டா வருதா?.. மின்சார வெட்டு அடிக்கடி
நடக்குதுனு கேள்விப்பட்டேன்..

ஓ... விளக்கு வெளிச்சத்திலேயே..
எனக்கு மெயில் அனுப்புனிங்களா??

இப்படித்தான் எந்த வேலையையும் அக்கறையா செய்யனும்..

அடுத்த முறை சென்னை வந்தா, உமக்கு சம்பள உயர்வு பற்றி, பாஸ் கூட விரிவா பேசறேன்.. வரட்டா?
அடிக்கடி மெயில் அனுப்பு..


ரெட்டை சொன்னது...

    பட்டாபட்டி அனுப்பிய பதிவுகளை தமிலிஷ் முதலில் வரவழைத்து பின் திருப்பி அனுப்பிவிட்டனர்- செய்தி
    பதிவர்களுக்கு

    எகத்தாளம் புடிச்ச பட்டாபட்டி பதிவுகள் நமக்கு வேண்டவே வேண்டாம். பட்டாபட்டி பிளாகுக்கு வந்து கமெண்ட்   போடும் அன்பர்கள் கலாய்ப்பார்கள். அதை படித்து எல்லாரும் தலையில் அடித்து வெளியே போய் நொந்திருப்பார்கள்.
    எது எப்படியானாலும் பட்டாபட்டி சம்மந்தப்பட்ட எதுவுமே நமக்கு வேண்டாம்...       இப்படி கோரமாக தனிமனித தாக்குதல் நடத்தும் பட்டாபட்டிக்கு நாளைக்கு தமிலிஷ் ஆஃபீஸ் வாசலில் மணிமண்டபம்
கட்டினாலும் கட்டுவார்கள்.நாட்டின் நலனுக்கு இது உகந்ததில்லை. ஆகவே தான் தமிலிஷ் இந்த முடிவை எடுத்திருக்க  வேண்டும்


அதற்கு  நான் போட்டது..

யார் என்ன சொன்னாலும், என் முடிவில மாற்றமில்லை.. நான் சொன்னால் சொன்னதுதான்..
அன்புடன் பட்டாபட்டி..

நான் அடுத்தவனுக்கு உதவ நினக்கும்போது( அதுதான்யா..தமிழிஸ் மெயில் பாய்-க்கு), மற்றவர்கள் தடுத்தால்  அது தனிமனித தாக்குதல்..
.
.
.

சரி மண்டையச்சொறியாதே..சிம்பிளா சொல்றேன்..

அதாவது , மனிதனுக்கும் , மிருகத்துக்கும் உள்ள பெரிய வித்தியாசம்,
ஆறாவது அறிவு..அதுதாம்பா பகுத்தறிவு..
சிலருக்கு, அது மட்டும் ப்யூஸ் ஆகியிருக்கும்..
அவர்களை, மனிதன் எனக்கூறி கேவலப்படுத்தக்கூடாது..

மனிதனை கார்னர் பண்ணினால்,அது தனிமனிதத் தாக்குதல்..
ஆனா..ஐந்தறிவு மிருகங்களை, ஆறறிவு மனிதன் தாக்கலாம்..
அது தப்பேயில்லை..

இன்னும் புரியலேனே..மங்குனியக்கேளு.. விளக்கிச்சொல்லுவான்..

வரட்டா
.
.
.

Thursday, April 22, 2010

தப்பேயில்லை..

மனுசனாப்பொறந்தா..பல கலைகளை கற்றுக்கொள்ளனும்..
இப்ப.. என்னையே எடுத்துக்கோங்க..
படிச்சது இயந்திரவியல்..இப்ப வேலை செய்வது மின்னியல்..

ஓய்வு பெற்றதும் மண்ணியல்.. ( ஒன் வே டிக்கெட் வாங்குவதைச்சொன்னேன்..)
இந்த மூன்று இயல்களுக்கு நடுவிலதாம் .. இவ்வளவு சண்டைகள்..
போட்டிகள்.. பொறாமைகள்..சரி விடுங்க.. அப்புறம் பட்டாபட்டி ஓவராப்பேசுரானு, கூடி நின்னு கிழிப்பாங்க..

இப்ப.. ஓவியம் வரைதல் பற்றி.. இது ரொம்ப ஈசியா பழகலாம் சார்..( சத்தியமா ஏரோப்பிளேன் ஓட்டுவதுமாறி, ரொம்ப  ஈசி சார்..)

நீங்க என்னோட கைய பிடிச்சுக்கிட்டு .. அப்படியே வாங்க..
வரைந்து தள்ளிடலாம்..


ஒரு பேப்ப்ர்..பேனா.. அப்படினு சொல்லி ஜல்லியடிக்கமாட்டேன்..
ஓவியம் வரைய தேவையானவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்..
உங்கள் வீட்டில், கிழக்கு பார்த்த அறையிருந்தால்..சாலச்சிறந்தது..
இல்லாதவங்க.. அப்படியே லூஸ்ல விட்டுட்டு, வீதிக்குப்போங்க..


இப்ப
.
.
.
படம்..1அதுமாறி வரைங்க..தப்பா நினைச்சா.. இப்படியா வெளியாயிடுங்க..

(அப்பாடா.....போனதில பாதிபேரு..என் குடும்பத்தையே இழுத்து, திட்டியிருப்பானுக..   உடுங்க.. இதுக்கெல்லாம் பயப்பட்டா.. பதிவெழுதுவது எப்படி?..ம்..)
.
.
.

அடுத்து படத்தில உள்ளதுபோல, இரண்டு சின்ன வட்டங்களை,  வரையவும்..

படம்..2


ஓகே...இதுவரைக்கும் டவுட்டே வந்திருக்காதே..ரைட்டு..
.
.
.
.
.
இப்ப.. போலீஸ்காரங்க தொந்திய நினைச்சுட்டு ..கோட்டப்   போடுங்க....
.
படம்..3

.
.
.
.
. 

இப்ப ஒட்டு வேலை.. நட்டு வேலை செய்தால்.....
படம் 4..& 5..
வரைஞ்சாச்சே...
யானைப்படம் வரைவதில் நீங்கள் விற்பன்னராகிவிட்டீர்...

இப்ப....அதை ..அப்படியே,  நடுவீட்ல மாட்டலாம்..
இல்ல வாஸ்து ந(து)ம்பிக்கையிருந்தா.. படுக்கையறையில் மாட்டிக்குங்க..


வரட்டா
.
.
.

Wednesday, April 21, 2010

உயர்திணையா..உயர்குடியா?
வணக்கம் சார்..நாந்தான் பட்டாபட்டி...
போன பதிவைப் பார்த்து...ஏதோ ஹிட் ரேட்டுக்காகவோ..Highest followersய காட்டவோ,  ஆடுகிறார்கள் என் நீங்கள் நினைத்தால்..?
.
.
பேசாமா, இதோட நிறுத்திக்கிட்டு, பக்கத்து ப்ளாக்குக்கு போயிடுங்க..

திரும்பவும் சொல்கிறேன்..’நொன்னை பேச்சுனா.. அது எங்கிருந்து வந்தாலும், கிழிக்கப்படும்..’சிலர் சொல்லிகிறார்கள்.. ’சிங்கையிலோ, சவுதியிலோ இருந்து எழுதுவதில் வீரம் இல்லை.   சென்னைக்கு வாருங்கள். உங்கள் வீரத்தை அதிகாரத்திடம் காண்பியுங்களேன்’ என்று...

அய்யா.. சாமிகளா..
பதிவர் சங்கத்தை பற்றிய  அறிவிப்பு....விவாதம்..பதிவுகள்...அதில ஒரு பங்கை, இந்த மூதாட்டி  பிரச்சனையில், கொஞ்சம் காட்டியிருக்களாமே, எனபதுதான் எனது ஆதங்கம்..
பாவம். உங்களுக்கு ஆயிரம் குறுக்கீடுகள்.. அலுவல்கள்.. நிர்பந்தங்கள்..அதனால் வீரம், அங்கிருந்தால்  வராதோ என்ற ஐயப்பாடும் எனக்கு எழுகிறது....

அதிகாரவர்கம்..அதிகாரவர்கம்..என்று சொல்கிறீர்களே..அவர்களை பற்றிய விவாதப்பதிவுகளை  வெளிநாட்டு பதிவர்கள் எழுதுவதில்லை என்று நினைக்கிறீர்களா?..


பாரதியார், அவரது பாடல்களை தமிழகத்தில் எழுதியதால்தான், அதில் வீரம் வீரியமாகயில்லை.  இதே...டெல்லியில் எழுதியிருந்தால்தான்....
.
.
.
15 வருடங்களுக்கு முன்னரே, சுதந்திரம் கிடைத்திருந்தாளும் கிடைத்திருக்கும்..( வடை போச்சு...நம்ம பாரதியாரால்...)

சரி..விடுங்க...இப்ப மேட்டருக்கு வருவோம்...


பந்து 1 :

‘எது எப்படியானாலும் பிரபாகரன் சம்பந்தப்பட்ட எதுவுமே அல்லது யாருமே நமக்கு வேண்டாம். நல்ல வேளையாக, பிரபாகரனின் பிணத்தைக் கூட கண்ணில் காட்டாது எரித்து விட்டார்கள். இல்லாவிட்டால் அவருக்கு நினைவாலயம் அமைக்கும் கூத்தெல்லாம் நிறைவேறியிருக்கும்.’

பந்து 2 :

’ஏண்டா டேமரு கஸ்மாலம் பீட, ஒருத்தன் அமைதியா இருந்தா, உங்களுக்கு எல்லாம் அமைதியா ஒதுங்கி இருந்த எகத்தாளமா?
டேய் XXXX பொறம்போக்கு. நானும் மகாராணி தியோட்ட்ராண்ட உன்னை மாதிரி கக்கா போனவன் தான் வர்றியா பார்ப்போம்.
எதே சின்னப் பசங்கன்னு ஒதுங்கினா, என்ன ஓவராப் போற.

இப்ப தேவை இல்லாம எதுக்குடா போமானி, கார்ப்பேரசன் கக்குஸ்ஸல பொறந்தவனே என்னை ஏண்டா இழுக்கறே. என் ஸ்யரூவத்தைக் காட்டவா? நான் வாயைத் தெறந்தா அப்புறம் உன் கக்கூஸ் நாறிடும் தெரிஞ்சுக்கே.

இன்னம் ஒருதரம ஆரஞ்சி பச்சடின்னு சொல்லி என்னை இழுத்த இழுத்தா உன் குடும்பத்துக்குத் தரவான்னு பின்னூட்டம் வரும்டா கேப்மாறி. சோமாறி அமைதியா போனா உனக்கு எல்லாம் லொள்ளா?

இன்னிக்குத்தான் பதிவுபோட்டேன் கோவத்தைக் கட்டுப் படுத்துகின்றேன்னு. அதுக்குள்ள ஏன்ப்பா பத்த வைக்கின்றாய். உன்னை மாதிர் நிறைய ஆடி ஒடுங்குகின்றேம், எதுக்கு கிளறி விடுகின்றாய்.'

----------------------

இது எங்க வந்தது.. எப்படி வந்ததுனு தெரியாதவங்க..இந்த்ப பதிவையும், கமென்ஸ்சையும், முதல்ல படிங்க..
அதில்..எனக்கு ..அவர்களின் ஆதிக்கவெறி..சீறிப்பாய்வதாகப்படுகிறது..
இதைப்பற்றி..பின்னூட்டங்களில் அலசுவோம்...
.
.
.

Tuesday, April 20, 2010

டோமர் டோண்டு Vs சிங்கப்பூர் டோமர்ஸ்


Vs
ஒரு பெரிசு , இந்தியா தர்மசாலையில்லை என் கூவிகிறது.....
பத்திரிக்கையில் இருட்டடைப்பு..

ஏய்யா.. நாமெல்லாம் 
கற்காலத்தை நோக்கியா போய்கொண்டி இருக்கிறோம்......


காட்டை வெட்டி, மனிதர்களை பிரித்து ..நாட்டை சுடுகாட்டாக்கி, மனிதர்களை மிருகமாக்கி.....போதும் பெரிசுகளே........
-----------------------------------------------------------------------------------------------------------

பெரியவரின் பதிவும், அதன் ராசி பலன்களும்

வயது முதிர்ந்த அந்த அம்மையாரை அனுமதிப்பதில் என்ன கெடுதல் வந்துவிடப்போகிறது என்பது இங்குள்ள பலரின் வாதங்களில் முக்கியமானது. முதலில் அதைப் பார்ப்போம்.அப்படியே உள்ளே வந்தால் என்ன செய்திருப்பார்கள் புலிகளின் ஆதரவாளர்கள்? பிரஸ் மீட்கள் வைத்திருப்பார்கள். தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார். பிறகு அவரது பாதுகாப்புக்கென ஒரு கணிசமான தொகையை நமது அரசுகள் செலவழிக்க வேண்டியிருக்கும். ஒரு முறை உள்ளே வந்தவரை வெளியில் அனுப்பவும் முடியாது முழி பிதுங்கியிருக்கும்.

சூப்பர் சார்.. எப்படி சார் இப்படி?..
ராஜ பட்ஷே, இங்கு வந்து, கோயில் , குளம் என சுற்றியபோது வராத, பிரச்ச்சனை..இந்த மூதாட்டி வருவதால் உண்டாகப்போகிறதா?...
மேலும், 
ராஜ பட்ஷேவுக்கு, காவல்துறை பாதுகாப்பு அளித்தது..அரசுகள், பணத்தை செலவளித்தது.. அப்போது எங்கோ போனது உங்கள் நாட்டுப்பற்று?..

எது எப்படியானாலும் பிரபாகரன் சம்பந்தப்பட்ட எதுவுமே அல்லது யாருமே நமக்கு வேண்டாம். நல்ல வேளையாக பிரபாகரனின் பிணத்தைக் கூட கண்ணில் காட்டாது எரித்து விட்டார்கள். இல்லாவிட்டால் அவருக்கு நினைவாலயம் அமைக்கும் கூத்தெல்லாம் நிறைவேறியிருக்கும்.

ரைட்.. இது தனிமனித வெறுப்பு.. உங்கள் மீது கோபம் என்றால், உங்கள் குடும்பத்தையே எதிர்க்கவேண்டும்..  அல்லது.. உங்கள் இனத்தையே....!!!!


நாட்டின் நலனுக்கு இவை எதுவுமே உகந்ததில்லை. ஆகவேதான் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். மாநில அரசு தன்னிச்சையுடன் இதை பின்பற்றியதோ அல்லது வேறு வழியின்றி பின்பற்றியதோ எதுவாயினும் ஒரு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கப்பட்டது.

ஆமாம்.. எந்த நாடு சார்?.. இத்தாலியா?..ஒரு அயல் நாட்டவர், உங்கள் ராணுவம் முதல்  உள் நாட்டு பிரச்சனை வரை தலையிடுவது,  நாட்டு நலனுக்கு உகந்தது..ஆனால் ஒரு 80 வயசு மூதாட்டி வருவது..பெரிய அசம்பாவிதத்தை உருவாக்கும்?


வெறுமனே சிலரது நாடகத் தன்மை மிக்க செயல்பாடுகளுக்கு தீனி போட்டதாக அமைந்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வு முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது நல்லதுக்குத்தான்.
 

 4 மணி நேரம் பயணம் செய்து வந்தால், அது முளையிலேயே கிள்ளிவிட்டதா?..ஜோர்..கலக்குங்க..


இந்திய அரசு என்பதன் முதல் வேலையே நாட்டின் நலனே. அதிலெல்லாம் உணர்ச்சிவசப்பட முடியாது.  அப்பெண்மணி இங்கு வந்திருந்தால் என்னவெல்லாம் சீன் போடலாம் என பெரிய அஜெண்டாவே வைத்திருந்தார்கள். அவற்றை தவிர்த்தது புத்திசாலித்தனமான செயல்.வைத்திய உதவிக்கு இந்தியாதான் கிடைத்ததா? மலேசியா சிங்கப்பூரில் இல்லாத வைத்திய வசதிகளா?   அப்போதும் பாலசிங்கத்துக்கு வைத்திய உதவி என்னும் பெயரில் இந்தியாவினுள் நுழைக்கப் பார்த்தார்கள். நல்ல வேளையாக நடக்கவில்லை.

அமெரிக்க அதிபர் வந்தபோது வராத பிரச்சனை..
Exபாகிஸ்தான் அதிபர் வந்தபோது வராத பிரச்சனை..
தலாய்லாமா வந்தபோது வராத பிரச்சனை..
ராஜபட்சே வந்தபோது வராத பிரச்சனை..
    .
    .
இந்த வயதான முதியவர் வரும்போது வந்திடுமா சார்?

விசா கொடுக்காமல் இருந்திருக்கலாம். அதை ஏதோ ஆர்வக் கோளாறில் செய்திருப்பார்களாக இருக்கும். எது எப்படியாயினும் இதையாவது செய்து வருகையை தடுத்தார்களே.

இதில என்ன ஆர்வம் இருக்கிறது என்பதை , அடியேனுக்கு சொல்கிறீர்களா சார்?........   ஒருவேளை, மூதாட்டியை அழவைத்துப் பார்ப்பதா?

 பார்வதி அம்மாள் என்பவர் மீது தனிப்பட்ட முறையில் என்ன கோபம் இருக்கவியலும்? ஆனாலும் அவரை வைத்து அரசியல் பண்ண பெரிய கும்பலே இங்கு காத்திருக்கிறது. அது பற்றித்தான் எனது பதிவு.   

இதுல, எங்காவது, மனிதனாக எழுதியிருக்கிறீர்களா?

ராஜபட்சே இங்கு வந்தது ராஜரீக உறவுகள் கீழே வருகிறது. அதையெல்லாம் இந்த கேசில் போட்டு குழப்பிக் கொள்ளலாகாது.

ஓ.கோ..ராஜரீக உறவா?..மீனவர்களை, தமிழர்களை, கொன்றவர்கள் ஆட்சியில் இருந்தால், ராஜரீக உறவாகிவிடுமா?..
என்னே உங்கள் நாட்டுப்பற்று மற்றும் விசுவாசம்..


.
.
.


தமிழனுக்கு, எதிரிகள் என தனியா யாருமில்லை..
.
.
.

Sunday, April 18, 2010

மானமில்லாத் தமிழன்...

செய்திகள்
     இந்தியாவுக்குள் அனுமதிக்க மறுத்த இந்திய அரசின் நடவடிக்கை மிகவும் சரியானது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வந்து, தங்கி செல்ல இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல. ராஜீவ் காந்தியை கொன்றதற்காக பார்வதி முதலில் கண்டனம் தெரிவிக்கட்டும். அதன்பிறகு அவரை இந்தியாவுக்குள் அனுமதிப்பது பற்றி பிறகு பரிசீலிக்கலாம் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்

//


சப்புரமணி சாமி
( எழுத்துப்பிழை இல்லை)
இந்தியா தர்மசாலையில்லை.. ஆமாய்யா.. இத்தாலிகாரங்க வரலாம், அனுபவிக்கலாம், ஆளலாம்..  ஆனா, தமிழர்கள் வர இது தர்மசாலையில்லை..
நீங்கள் உண்மையிலேயெ , மனிதர்கள்தானா.. இல்லை மலம் தின்னும் ஐந்தறிவு பிராணிகளா?..
ஏம்பா. இந்திராவ சுட்டாங்களே.. சீக்கியர்களை , நாடு கடத்தும் எண்ணம்  ஏதாவது உள்ளதா? 
இல்லை.. அது மாமியார் பிரச்சனை..நாங்கள் மருமகள் பிரக்க்சனைக்குத்தான் தோள் கொடுப்போம் என  தினவெடுத்து திரிகிறீர்களா?


 நக்கீரன்
குற்றம் நடந்தால், நெற்றிக்கண் திறக்கபடுமா?..
ஆம்.. அது கலைஞரிடல் பரிசு வாங்கும்முன்.. சரிதானே நக்கீரன் அவர்களே...
நீங்கள் ஏதாவது சொல்லி, ஐயா தரும், விளம்பரம் நின்றுவிட்டால், நீங்கள் என்ன மலத்தையா தின்னமுடியும்?.....தொடருங்கள் உங்கள் நாட்டுப்பணிகளை.. ( புது கேமரா ஏதாவது வாங்கிவிட்டீர்களா?..அரசு பணத்தில..)
தமிழர்களுக்காக, அடுத்து எந்த சாமியாரின் சீ.டீ வெளியாகும் நக்கீரன் சார்..
முடிஞ்சளவு, சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க.. இல்ல மக்கள் சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்கள்...
கலைஞர்..
நீங்கள் , ஈழத்தமிழர்களுக்ககாக உண்ணாவிரதம் இருந்த காட்சி , இன்னும் என் கண்களில் நிழழாடுகிறது..
தொடரட்டும் மக்கள் சேவை..ராஜபட்சே , தமிழகம் வந்த போது, தமிழக் காவல்துறை அளித்த பாதுகாப்புக்கு,
நீங்கள் ஏன், காவலர்களுக்கு, இலவச நிலம் கொடுக்ககூடாது?
யோசனை பண்ணுங்க முதலாளி... புண்ணியமா போகும்..
நீங்க, மிதிக்கலாம், அடிக்கலாம், உதைக்கலாம்..
எந்த நாயாவது , ஏன்னு கேட்கமுடியும்?..
ஏன்னா,  மக்கள் உங்களிடம்,  கை நீட்டி காசு வாங்கியாச்சு தலைவா.. அடிச்சு தூள் பண்ணுங்க..ஜெயலலிதா..
இப்பொது  தேர்தல் இல்லை.. ஓய்வெடுங்கள் அம்மையார் அவர்களே..
மேலும் வந்த அம்மையாராலும், உங்களுக்கு ஓட்டு கிடைக்க வாய்ப்பில்லை..
அதனால் ஓய்வுதான் முக்கியம்.. சகோதரியை கேட்டதாக கூறவும்..
மக்களா?.. கிடக்குறானுக பன்னாட பரதேசிக...மக்களே...
உங்கள் தலைவர்கள் , உங்களுக்காக உழைத்து ஓடாக போய்கொண்டுள்ளனர்..
முடிந்தவரை, உங்கள், உடல், பொருள், ஆவி அனைத்தையும், அவர்களுக்காக அர்பணிக்காவிட்டால், ’உங்களை தமிழன் என்று, நாளைய சரித்திரம் சொல்லாது’..மனதிலிருத்திக்கொள்ளுங்கள்..

மேலும்.... அவர்களை கண்டால், நாலு காலையும் தூக்கி, நன்றி சொல்லுங்கள்..

அன்புடன்
மானமில்லா, மலம் தின்னும் தமிழன்
.
.
.

Thursday, April 15, 2010

சாணி சாருவும் , சாக்கடை பட்டாபட்டியும்..

பதிவே போடக்கூடாதுனுதான் இருந்தேன்.. ஆனா, அந்த ஒரு வரி என்னை மனிதனாக்கிவிட்டது..

 VSஎந்த வரியா?

இதுதான் சார்..

”இவ்வளவுக்கும் சுஜாதாவுக்கு அடுத்தபடியாக பரபரப்பாக விற்பனை ஆகும் புத்தகங்களை எழுதும் ஓரிரண்டு  எழுத்தாளர்களில் ஒருவன் நான்”

ஓ.கே.. இப்ப நம்ம பதிவு...

மாதாமாதம் எனக்கு ஒரு நண்பர் 5000 ரூ. அனுப்பி வைப்பார்.  அது என்னுடைய உப்பு புளி மிளகாய் வாழ்க்கைக்கு   ஒரு பெரும் ஆறுதல்.  முதல் தேதியே வங்கிக்குப் போய் எடுக்காமல் ஐந்தாறு தேதி கழித்து எடுத்துக் கொள்வது என்  வழக்கம்.

தக்காளியும், தயிர் சாப்பாடும் ஓசியில கிடைத்ததால்,உப்பு புளி மிளகாய் மீதியானதை சொல்லக்கூடாது..


அப்படி இந்த மாதம் போய்ப் பார்த்த போது வங்கிக் கணக்கில் எப்போதும் இருக்கும் 4 ரூபாய் 50 பைசா மட்டுமே  இருந்தது.  5000 ரூபாயைக் காணோம்.  பகீர் என்றது.  மறுநாளும் போய்ப் பார்த்தேன்.  இல்லை.

ங்கொய்யா..இருக்காதா பின்னே..வியர்வை வழிய உழைச்ச காசு... பேங்ககாரனுக திருடனுக..அடுத்த தடவை , சுவிஸ் பேங்க்ல போடச்சொல்னும்..
ரெண்டு நாள் பேங்க் போனதுக்கு, எந்த கேணய்யன் காசு தருவான்?.கலிகாலமாடா சாமி...
ஆமா.. கால் வலி சரிசெய்ய, காசு கேட்டிருப்பானே உங்க சாமி..
பின்னாடி , மறக்காம செட்டில் பண்ணுங்க சார்...

எட்டு தேதி ஆனதும் பயம் வந்தது.  நண்பரைக் கேட்கலாமா என்றால் அதற்குக் கூச்சம், தயக்கம். நண்பர் பணம்  அனுப்புவதை நிறுத்தி விட்டாரா, அல்லது, வங்கியில் குறைந்த பட்சத் தொகையை வைக்காமல் எப்போதும் துடைத்து   விடுவதால் வங்கிக்காரனே அபராதக் கட்டணமாக எடுத்துக் கொண்டு விட்டானா?  அப்படி வங்கிக்காரனே எடுத்திருந்தால்  நல்லது என்று தோன்றியது.  குறைந்த பட்சம் அடுத்த மாதப் பணம் கிடைத்து விடும் அல்லவா?

என்னய்யா கூச்சம், வெட்கம்....... தக்காளி, காசு அனுப்புறவன் ஒழுக்கமா அனுப்புல..அவனப் பற்றி, அடுத்த பதிவில   கிழிச்சு எழுது..


என்ன செய்யலாம் என்று கைகளைப் பிசைந்து கொண்டிருந்து விட்டு நண்பருக்கு ஒரு எஸ்ஸெம்மெஸ் போட்டேன்.    உடனே பதில் வந்தது. 

சே.. SMS க்கு வேற எக்ஸ்ரா செலவு.. எல்லா நாதாரிகளும், செலவு வைக்கிறதிலேயே இருக்கானுக..
அடுத்த தடவை, மிஸ்ட் கால் மட்டும் கொடுக்கனும்..

மார்ச் மாதம் கணக்கு வழக்கெல்லாம் முடிப்பதால் தாமதமாகி விட்டது; உதவியாளரிடம் சொல்லி உடனே அனுப்பச் சொல்கிறேன்.

எவனுக்கும் பொறுப்பில்லை சார்.. சோம்பேறி நாதாரிக...பிரபல எழுத்தாளனோட கஷ்டம் எவனுக்கும் புரிவதில்லை..


இந்த நிலையில் எனக்குக் கிடைக்கும் ராயல்டி தொகை எவ்வளவு தெரியுமா?  பா. விஜய் என்ற சினிமாப்  பாடலாசிரியர் ஒரு பாட்டுக்கு 80,000 ரூ. வாங்குவதாக பத்திரிகையில் படித்தேன். என்னுடைய ஒரு ஆண்டுக்கான  ராயல்டி தொகையும் அவ்வளவுதான்.


அதுல, ரூ 60,000, நண்பர் மாசாமாசம் அனுப்புகிறார்..( 5000 x 12 )..
இனிமே, தீபாவளி, ரம்ஷான் , பொங்கலுக்கு, கூடுதல் காசு அனுப்பச்சொல்லனும்..


இவ்வளவுக்கும் சுஜாதாவுக்கு அடுத்தபடியாக பரபரப்பாக விற்பனை ஆகும்
புத்தகங்களை எழுதும் ஓரிரண்டு எழுத்தாளர்களில் ஒருவன் நான்.

அதுக்கு, பேசாம, எங்களை செருப்புல அடிச்சிருக்கலாம்..இந்த பதிவ போடக்காரணமே இந்த வரிகள்தான் சாணி  சார்..

ஒரு சினிமா பாடலாசிரியன் ஒரு பாட்டுக்கு வாங்கும் சம்பளமும் 35, 40 புத்தகங்களை எழுதியிருக்கும் எனக்கு  அந்தப் புத்தகங்கள் வருடம் பூராவும் விற்றுக் கிடைக்கும் தொகையும் ஒன்று.

அப்ப பேசாமா, மூட்டைய கட்டிட்டு, பாட்டு எழுதப்போங்க சார்..( மறக்காம, இந்த குப்பைகளை, பழைய பேப்பர்காரனுக்கு போட்டுவிட்டு)

நான் பா. விஜய்யைப் பார்த்துப் பொறாமை கொள்ளவில்லை.

சத்தியமா நம்புகிறோம்..ஆனாலும் இந்தப் படுபயங்கரமான ஏற்றத்தாழ்வு எனக்குள் ஒரு கசப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.

ஆமாமாம்..இமயமலைக்கும்,குறுடி மலைக்கும் உள்ள ஏற்றத்தாழ்வு..
இன்னும் ஒரு வேளை சோறு கிடைக்காத பிச்சைக்காரங்க இன்னும் இருக்காங்க..  அதைப் பற்றி இப்ப பேச வேண்டாம்..ஏன்னா.. நம்மளொடது , தொலை நோக்குப்பார்வை...   அதுவுமில்லாம, நாம யாரு.. பிரபல எழுத்தாளர் ஆச்சே..

சமூகத்தை அசுத்தமாக்கும் பாடல்களை எழுதும் ஒருவரின் ஒரு பாடலுக்கான சம்பளமும் ஒரு எழுத்தாளனின் ஆண்டு  வருமானமும் ஒன்று! இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நான் தொடர்ந்து எழுதி வருகிறேன்.

என்னொட எழுத்து, சமூகத்தை எவ்வளவு சுத்தப்படுத்துனு , எல்லோரும் இருட்டடைப்பு செய்துவிட்டனர்..

ஒரு எழுத்தாளனை இந்தச் சமூகம் எவ்வாறு கௌரவிக்கிறது என்பதற்கு மேற்கண்ட ஒப்பீடு ஒரு உதாரணம்.   இன்னொரு உதாரணமாக சமீபத்தில் நான் லொயோலா கல்லூரிக்கு சில தடவைகள் சென்று வந்த அனுபவத்தைச் சொல்ல  வேண்டும்.  ஒரு தடவை கூட லொயோலா நிறுவனம் நான் அங்கே சென்று உரை நிகழ்த்துவதற்குப் பணம்  கொடுத்ததில்லை.  சென்ற வாரம் நான் அங்கே ஊடகத்துறை நண்பர்களால் அழைக்கப் பட்டிருந்தேன்.   அது ஒரு திரைக்கதைப் போட்டி.  தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கல்லூரி  மாணவர்கள் கலந்து கொண்ட போட்டி. 
கடைசிச் சுற்றுக்கு இயக்குனர்கள் பாக்யராஜ், வசந்த,  திருமாவளவன் மற்றும் நான் ஆகிய நால்வர் நீதிபதிகள்.   காலை ஒன்பது மணிக்கே கிளம்பி விட்டேன்.சோறு போடறாங்கனா, ஒம்பது மணி என்ன.. எட்டு மணிக்கே போயிடலாம்..

அங்கே பத்து மணியிலிருந்து மதியம் இரண்டு மணி வரை சிறந்த திரைக்கதைக்கான போட்டி நடைபெற்றது. இரண்டரை  மணிக்குக் கிளம்பும்போது கொஞ்சம் சாம்பார் சாதமும், தயிர் சாதமும் கொடுத்து காரில் அனுப்பி வைத்தார்கள்.

எவனுக்காவது ஊறுகாயும், தண்ணி பாட்டலும் கொடுக்கனுமுனு தோணிச்சா.. சாணிப் பயலுக..

ஆக மொத்தம் எனக்கு ஆறு மணி நேரமும் நூறு ரூபாயும் செலவு.  வீட்டிலிருந்து லொயோலாவுக்கு ஆட்டோ செலவு  100 ரூ.


நானும், என்னோட கார் சரியாக 10 மணிக்கு , லொயோலாவுக்குள் நுழைந்ததுனு எழுத ஆசை..வாசகர்கள்   நல்ல பாரின் காரை பரிசளித்தால், அடுத்த பதிவில, அவர்களை பற்றி தூக்கி எழுதி, சொம்பு தூக்குவேன்..
( கருப்பு கலர், எழுத்தாளனுக்கு நல்லது என ,ரஞ்சிதானந்தா சுவாமிகள் கூறியுள்ளார்..)

லொயோலோ கல்லூரியில் அழைத்தால் அங்கே சென்று வருவது பாக்யராஜ் போன்ற ’முருங்கைக்காய்’  இயக்குனர்களுக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாமே தவிர எனக்கு அது பெருமை அல்ல.லொயோலா
கல்லூரிக்குச் செல்வதால் எனக்கு எந்த ஆதாயமும் இல்லை. என்னுடைய இலக்கும் நோக்கமும் வேறு.

அப்புறம் என்ன பருப்புக்கு போனே?னு எவனும் கேட்கக்கூடாது..என்னை இழுத்தது சாம்பார் சாதம்..

மேலும்,  24 மணி நேரமும் நான் இலவசமாகவே பணி புரிய வேண்டுமென்றால் நான் எப்படி பூவா சாப்பிடுவது?

ஏன்..எல்லோரையும் போல வாயிலதான்..

லொயோலா கல்லூரியில் மாணவர்களுக்கு இலவசமாகவா கல்வி தரப் படுகிறது?  கல்லூரிகள் என்றாலே அதன் கணக்கு  வழக்குகள் கோடிகளில்தானே நடந்து கொண்டிருக்கின்றன? எத்தனையோ லட்சங்களை செலவு செய்தல்லவா ஒரு  பட்டப்படிப்பை முடிக்க வேண்டியிருக்கிறது?  அவ்வளவு ஏன், பல ஏக்கர்களில் பரந்து கிடக்கும் பிரம்மாண்டமான
லொயோலா கல்லூரியைச் சுத்தப்படுத்துவதற்கும், பராமரிப்பதற்குமே மாதம் லட்சக் கணக்கான ரூபாய் செலவு செய்ய  வேண்டியிருக்குமே?  அப்படியிருக்கும் போது என் போன்ற எழுத்தாளர்களை மட்டும் ஓசியில் வேலை வாங்குவது எந்த  விதத்தில் நியாயம்?சத்தியமா நியாயமே இல்லை..கல்லூரி நிர்வாகமே..அண்ணன், உங்கள் கல்லூரியை சுத்தப்படுத்த ஒரு சான்ஸ்  கொடுங்க..( டாய்லெட்ல , கேண்டீன் நடத்துமளவு, சுத்தப்படுத்தி தருவார்..ஏன்னா.. அவரு பிரபல எழுத்தாளர்.ஆங்..)

எழுத்தாளன் என்றால் அவ்வளவு மலிவாகப் போய் விட்டதா?  எல்லாவற்றுக்கும் லட்சங்களில் விலை; எழுத்தாளன்  என்றால் மட்டும் ஓசி ஃபக்கிங்?  ஒரு பிரபல சினிமா பாடலாசிரியர் ஒரு விழாவில் கலந்து கொள்ள வாங்கும் தொகை  எவ்வளவு தெரியுமா?  ஒரு லட்சம் ரூபாய். 

ஆமாப்பா.. சரி விடு.. எவனாவது நல்ல எழுத்தாளன் சொன்னா, அரசு செவிசாய்க்கும்..  நம்ம , எப்பம்போல, நம்ம வேலையப் பார்ப்போம்..இன்னைக்கு நைட் சரக்குக்கு, எவன் மண்டைய சொறியலாம்..

அதுவும் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை.  ஜவுளிக் கடை திறப்பு விழா போன்றவற்றுக்கு மூன்று  லட்சம்.

பாம்பேக்கு ஒரு ஓசி டிக்கெட் போடுங்கப்பா..அறுத்து வீசிட்டு, நானும் ஜவுளிக் கடை திறப்பு விழாவில   கலந்துக்கிறேன்...

என்னுடைய நண்பர் ஒருவர் சொன்னார்.  அவர் ஒரு பிரசுரகர்த்தர்.  பத்திரிகையாளர்.  கவிஞர்.  இரவு முழுவதும்  வேலை செய்து விட்டு, காலையில் இரண்டு மணி நேரமே தூங்கி விட்டு மீண்டும் எழுந்து வேலை செய்து மதியம்  இரண்டு மணிக்கு முடித்திருக்கிறார்.  அப்போது பார்த்து  ஒரு வாசகர்  கவிஞரிடம் முன்கூட்டியே சொல்லக் கூட  இல்லாமல் போய் உட்கார்ந்து கொண்டு மாலை நான்கரை மணி வரை பிளேடு போட்டிருக்கிறார்.  அதுவும் எப்படி?  இந்த வாசகர் தன் வாழ்நாளிலேயே ஒன்றிரண்டு புத்தகங்கள் மட்டுமே படித்திருக்கிறார்.

ரொம்ப நல்ல மனுசன் போல..

அப்படிப்பட்டவர்,  கவிஞருக்கு முன்னால் சரிக்கு சரியாக உட்கார்ந்து கொண்டு  கவிஞருக்கு சமூகவியல், உலக  அரசியல், இலக்கியம், பொருளாதாரம் ஆகியவற்றில் பாடம் எடுக்கிறார்.  அந்த இரண்டரை மணி நேரமும் கவிஞரைப்  பேசவே விடவில்லை.  குறுக்கே புகுந்து பேசினாலும் அதை அறுத்துக் கொண்டு பேசுகிறார்.  பேச்செல்லாம்  பிளாட்ஃபாரங்களிலும் டீக்கடைக்களிலும் பேசப்படும் அரைவேக்காட்டுப் பேச்சு.

பாருங்கயா லொள்ள..அரைவேக்காட்டு டாஸ்மார்க் பேச்சு பேச, நாங்க இருக்கோம்..இவனுக இதிலும் ஆப்பு வெக்க பார்க்கிறானுக..


ஒரு மருத்துவ நிபுணரிடம் ஐந்து நிமிடம் பேசுவதற்கு மூன்று மணி நேரம் காத்திருந்து 500 ரூ. கன்ஸல்டேஷன்  கட்டணம் கொடுத்துப் பார்க்கிறார்கள் அல்லவா?  அப்படியிருக்கும் போது  எழுத்தாளனை மட்டும் ஏன் இப்படி   ஓசியிலேயே ——  நினைக்கிறார்கள்? 

ஒரு வேளை.. எழுத்தாளன் எக்ஸாம் எழுதாம, தொழிலுக்கு வந்ததாலா?..இருந்தாலும் இருக்கும்...


நான் கவிஞரைத்தான் திட்டினேன்,  ஏன் இந்த மடையர்களுக்கு இடம் கொடுக்கிறீர்கள் என்று.  இந்த விஷயத்தில்  எனக்கு தர்மு சிவராமுவை ரொம்பப் பிடிக்கும்.  ஒரு நிமிடம் கூடப் பொறுக்க மாட்டார்.  கடுமையாக   அவமானப்படுத்தி அனுப்பி விடுவார்.  நான் அந்த அளவுக்குப் போவதில்லை.  இப்படிப்பட்ட ஓசி ஓலுக்கு இடம் தர  மாட்டேன்.


அய்.. இந்த வார சரக்குக்கு, ஆளை ரெடி பண்ணியாச்சு...

இனிமேல் எந்தக் கல்வி நிறுவனமாக இருந்தாலும் என்னைப் பேச அழைத்தால் ஒரு குறைந்த பட்சத் தொகையைக் கேட்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.


கூப்பிடுவானுகோ?..இல்லாட்டி, பேசாம,இன்னொரு பாக்கெட் தயிர் சாதமும், சாம்பார் சாதமும்கேட்டு  வாங்கிடனும்..( மறக்காம ஊறுகாயும்..)
.
.
.
.

80 பேரா?..அடங்கொப்புறானே..

 (என்னடா கருப்பு, வெள்ளையில படம் போட்டிருக்கானுகனு யோசனை பண்றீங்களா?..
கடைசியா, பீரங்கில சம்பாரிச்சது..
ஸ்பெக்ரம் காசு,  மாநிலத்துக்காரனுக சுருட்டிட்டானுக...உம். பார்போம்..)

சென்னை,ஏப்.13: 2011-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் 80 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற வேண்டும் என்பதே நமது இலக்கு என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் தெரிவித்தார். 
இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்ற தனது ஆதரவாளர்களுக்கு சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் செவ்வாய்க்கிழமை இரவு விருந்தளித்தார்.
"இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் நமது இலக்கை அடைந்துள்ளோம். அது போல, 2011 சட்டப்பேரவை தேர்தலிலும் நமது இலக்கை அடைய வேண்டும். புதிய சட்டப்பேரவையில் 80 க்கும் அதிகமான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நுழைய வேண்டும்.

அதனை இலக்காக வைத்து நாம் அனைவரும் இன்றில் இருந்தே பாடுபட வேண்டும்.  இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் பதவியை பிடித்துள்ளவர்கள் ஓய்ந்து விடாமல், சட்டப்பேரவை தேர்தலை குறி வைத்து பணியாற்ற வேண்டும்' என்றார்.

---------------------------------------------------------------------------------------------------------


நேற்று தமிழர் திருநாள்..ஹி..ஹி...அனைவருக்கும் எனது  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..ஹி..ஹி...
என்னடா, காலங்காத்தாலே நெஞ்ச நக்கறேனு தப்பா நெனைக்காதீங்க சார்..

சந்தோசமாதான் புத்தாண்டு ஆரம்பிச்சிருக்கு.. ஆமாம்....
நம்ம  கார்திக் சிதம்பரம்    சார்க்குத்தான்..  ( அதுதாங்க வருங்கால முதலமைச்சருக்கு..)
என்னா அழகா பேட்டி கொடுத்திருக்காரு...புலிக்கு பிறந்தது பூனையாகுமா சார்?...

இப்படிப்பட்ட, நல்லவரை , நாட்டு மக்களுக்குகாக பேட்டி எடுக்காட்டி,
நாமெல்லாம் மனுஷனே கிடையாது சார்..
பட்டாபட்டிய மாட்டீட்டு    ( சே... சுருக்குமுடி விழுந்துடுச்சு..)  நேரமில்லாததால், எடுத்தேன் சார் பைக்க..ஓவர் டூ வருங்கால முதலமைச்சர் வீடு....

சார்.. வணக்கம்..நான் பட்டாபட்டி..ப.மு.க நிருபர்..
வாங்கோ.. வணக்கம்.. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..டீ சாப்பிடறீங்களா?..


இல்ல சார்..இப்பத்தான் பல்லு வெளக்கிட்டு வாரேன்..அதுவுமில்லாம,  டீ சாப்பிட்டா,  பட்டாபட்டிய கழட்டனும் சார்..சுருக்குமுடி வேற..
என்னாது சுருக்கு முடியா?..எங்கே....எங்கே..


அதை விடுங்க சார்..ஆமா சார்.. கடைசியா இளைஞர் காங்கிரஸ் தேர்தல் முடிஞ்சிருச்சு போல..
அப்பப்பா.. ஒரு வழியா,அன்னை சோனியா, அருளாசையால், தேர்தல் வெற்றிகரமாக நடந்துமுடிந்தது..
> எவ்வளவு தில்லு முல்லுகள்..
> போராட்டங்கள்..
> கட்சித்தாவல்கள்..
> பணம் பட்டுவாடா..
> இலவச பிரியாணி..
> அராஜகம்..
> உள்குத்து..
> வெளிகுத்து..

இவ்வளவு நடந்தும், மக்கள் முகம் கோணாமல் எங்களுக்கு வாக்கு அளித்ததை நினைக்கும்போது, மனது பூரிப்படைகிறது..


என்னா சார்..நடந்து முடிந்தது ,  இளைஞர் காங்கிரஸ் தேர்தல் ஆச்சே..
நீங்க கொடுக்கும் பில்டப்ப பார்த்தா, சட்டமன்ற தேர்தல் மாறி சொல்றீங்க..
அப்படியில்லை.. இதற்க்காக எவ்வளவு பாடுபட்டோம் என்பது
எங்கள் அன்னைக்கு தெரியும்..பாருங்களேன்.. இந்த தமிழர் புத்தாண்டை இவ்வளவு நாளா யாராவது பெருசா கொண்டாடினீங்களா?.இல்லையே.
எங்க அன்னை, இந்தியாவுக்குள் காலடியெடுத்து வெச்சதுமே, எவ்வளவு பேமஸ் ஆயிடுச்சு..  அதுதான் காங்கிரஸின் பலம்..ஏன்னா  நாங்க பாரம்பரிய கட்சி..


சார்.. முடியலே..ஆமா, உங்க அப்பாரு ரிசைன் பண்ணப்போறேனு, அலம்பல் பண்ணிக்கிட்டு இருந்தாரே?.  பண்ணீட்டாரா?..
அதை எங்கள் அன்னையும் நிராகரித்துவிட்டார்..எங்கள் அன்னை உள்ளவரை எங்களுக்கு பயமில்லை..அவர்தான் எங்கள் தெயவம்.. கடவுள்..பராசக்தி..இந்தியாவின் ஒரே அன்னை.. எங்கள் அன்னை..


சார்ர்ர்ர்ர்ர்ர்.. உங்கப்பா, மாவோயிஸ்ட்கள் பிரச்சனைனாலத்தான்  ரிசைன் பண்ணினதா கேள்வி...
பார்த்தீங்களா?.. வெளி நாட்டு பிரச்சனைக்கு கூட எங்கப்பா பேரை இழுக்குறானுக..   இது எங்களை பிடிக்காதவங்க செய்யும் சதி..இதற்கு அன்னை , தகுந்த ஆவணம் செய்வார் என் நம்புகிறோம்.


அண்ணா..சத்தீஸ்கர் மாநிலம், இந்தியாவுலதான் இருக்குது..
அப்படியா?..சரி..சரி.. அடுத்த கேள்வி..

 
அடுத்த கேள்வியா?. ஆதிவாசி பிரச்சனைய, சரியா கையாளலாதான், மாவோயிஸ்ட்கள் பலம்  பெற்றுவிட்டார்கள் என்ற கருத்துக்கு..
இல்லை..இல்லை.. நாங்கதான் ஆதிவாசிகளை ஒழித்துவிட்டோமே..
அதாவது..
ம்..
அது..
ஆங்..
ஒழித்துவிட்டோமென்றால், அவர்களது வறுமையை..
எங்கள் அன்னை உள்ளவரை..ஆதிவாசிகள்  ஆனந்..........


ஸ்டாப்..ஸ்டாப்..   உடுங்க சார்.. நொன்னை..கொன்னைனு.. மண்டை வலிக்குது..சரி அடுத்து என்னா ப்ளான்..?
2011-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் 80 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற வேண்டும் என்பதே நமது இலக்கு.. அதற்க்காக அன்னையின் சொற்படி பாடுபடப்போகிறோம்..


எப்படி?.. ஆமா 80  எம்.எல்.ஏ-க்கு எங்க சார் போவீங்க?..
தங்கவாலு, இளங்கோ, எல்லாத்தயும் சேர்த்தாலே, 80 வராதே?.
அதற்க்காகத்தான், எங்கள் அன்னையின் புதல்வன், திருமணமே செய்யாமல், சூறாவழி சுறுப்பயணம் செய்கிறார்..


ஓ.. அதுவேறயா?...ஆமா சார்..அப்ப நீங்க?..
எங்கள் அன்னை..இமயமலை போன்றவர்.. எதற்கும் கலங்காத,
திடமான முடிவுகளை , தீர்க்கமா எடுக்கும், தில்லான..எனக்கு முடியல சார்......உங்களுக்கு, ப்ரியமா  நம்மாளு, கேட்டமாறி கேட்டாத்தான் ஒழுக்கமா பதில் சொல்வீங்க போல..
என்ன கேட்டாரு அவரு..?


இல்ல படிச்சுட்டு தான் கமெண்ட் போடுறுயா?னு என்னைப் பார்த்து கேட்டாரு.. அதுவும் என்னை பார்த்து கேட்டாரு சார்..
அன்னைக்கே முடிவு பண்ணீட்டேன்..
என்னானு?..

படிக்கிறதில்லனு..
ஏன்?..


சார்.. இப்ப நாந்தான் பேட்டி எடுக்க வந்திருக்கேன்.. நாந்தான் கேள்வி கேட்பேன்..
கேட்டுறுவியா?.. கட்சிக்காரனப் பார்த்து கேள்வி கேட்பே?..
நான் யாரு தெரியுமில்ல.. சிங்கம் பெத்த சிறுத்தை..
எங்க அன்னை இருக்கும்போது , என்னைப்பார்த்து கேள்வி கேட்பே?..

மன்னிச்சுக்குங்க சார்..கடைசியா ஒரு கேள்வி சார்..

உம்...

’இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் பதவியை பிடித்துள்ளவர்கள் ஓய்ந்து விடாமல், சட்டப்பேரவை தேர்தலை குறி வைத்து பணியாற்ற வேண்டும்' என்று சொல்லியிருக்கீங்களே.. அதை பற்றி..

ஆமாம்.. உழைப்பு.. அதுதான் உயர்வு தரும்..
அகண்ட பாரத்ததை அன்னையின் காலில் சமர்பிக்கும் வரை ..காங்கிரஸ்காரனுக்கு ஓய்வு என்பதே கிடையாது..அதைத்தான் சொன்னேன்..

என்ன சார்.. இதெல்லாம் நீங்க சொல்லித்தான் தெரியனுமா?..வயசான காலத்தில, திவாரி உழைச்ச உழைப்ப, நாங்க கண்கூடா பார்த்தோமே..
அப்புறம் சார்...சட்டமன்ற தேர்தலில் 80 வாக்கு பெற , வாழ்த்துக்கள் சார்..

இது.. இதுதான் நல்ல பிள்ளைக்கு அழகு..ஆமா, கோயமுத்தூர்ல, ரியல் எஸ்டேட் எப்படியிருக்கு?

அது இருக்கு சார், வெயிலுக்கு கோமணத்த கழட்ற மாறி..சார்.. இவ்வளவு நேரம், பேட்டி கொடுத்ததுக்கு நன்றி சார்..எப்படியாவது அந்த 80 பேரை கண்டுபிடிச்சு..ஓகோனு வர வாழ்த்துகிறேன் சார்..
.
.
வர்ட்டா
.
.

Tuesday, April 13, 2010

மூளைக்கு வேலை..ஹி..ஹி..


வணக்கம் சார்.. Ruby Cube  பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா?..
இருக்கனும்.. இல்லாட்டி, நீங்க கன்பார்மா,  அரசியல்ல நீஞ்சிட்டு இருப்பீங்க.


சரி..உங்களால மினிமம் எவ்வளவு நிமிடத்தில சால்வ் செய்ய முடியும்..?
இதை பரிசோதனை பண்ணிப்பார்த்துவிடலாம் என எண்ணி, 5 பேர் கொண்ட குழுவிடம் போட்டிவைத்தோம்..வந்த ரிசல்ட பார்த்தா, உகூம்.. சொல்லுவதுபோல இல்லை..

சில அறிவுஜீவிகள் 3 நிமிடத்தில் சால்வ் பண்ணிவிட்டனர்..
மற்றும் சிலர் இரண்டு நாட்களாக..(மங்குனி சார்.. ரெண்டு நாளா ,குளிக்காட்டி கப்பு அடிக்காது?..போதும் போங்க சார்.. )இந்தப் பிரச்சனைக்கு, எப்படி முற்றுப்புள்ளி வைக்கலாமுனு, யாராவது யோசனை செஞ்சிருக்கீங்களா?..இல்லை..
ஏன்?..

வீட்டு பிரச்சனை.. ஆபிஸ்ல பிரச்சனை..அந்தரங்கப்பிரச்சனை...
உடுங்க சார்..

திரும்பவும்..நம்ம R&D கூப்பிட்டு..இப்ப இரண்டே கண்டிஷன் தான் போட்டோம்..
“கேப்டன் டீ.வீக்கு முன்னாடி நம்ம ப்ராடெக்ட் வரனும்..
மங்குனி அமைச்சர், அதை அரைமணி நேரத்தில் சால்வ்  பண்றமாறியிருக்கனும்”

..அவ்வளவுதான்..

மூளைக்காரனுக.சொன்னபடி  பண்ணீட்டானுக...அதை நீங்களே பாருங்க..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
( மங்குனி.. போட்டோகிராப்ரை அனுப்புறேன்.. சிரிச்சுகிட்டே போஸ் கொடு..)
.
.
வரட்டா...

Friday, April 9, 2010

பெட்ரோல் விலை உயர்வா? கலங்க வேண்டாம்..!!!

அய்யா பதிவர்களா..சத்தியமா இது  எதிர் பதிவில்லை..
( மங்குனி மேல சத்தியமா..)...

பெட்ரோல் விலை ஏறியது..
மங்குனி டிக்கெட் இல்லாம அரேபியா போனது ..
போலிஸ்காரனுகிட்ட மாட்டினது..
இதெல்லாம் சரித்திரம்..இப்ப பெரிய பிரச்சனை என்னான,
ஏன்,  இந்திய நாட்டு பொருள்களை ஒதுக்கவேண்டும்?
இங்கு மூளைக்காரர்கள் இல்லையா.
.( உள்குத்து எதுவுமில்லை..)

அதனாலே, வேற வழியேயில்லாம. இந்த பதிவ போடுகிறேன்..
மனுசனுக்கு கோபம் வந்தா, அடக்ககூடாது சார்..ஏதாவது ஒரு வழியில வெளிக்காட்டிடனும்.

விலைவாசி தறிகெட்டு ஏறிக்கிட்டு இருக்கு.. 
வேலைக்குப் போக சிரமமாயிருக்குது..
இட நெருக்கடி..

அதுக்கு ஏதாவது பண்னலேனா, என்னையும் , ’அம்மாவுக்கு டெபாஸிட் புடுங்கிவிட்டமாறி’    , பண்ணிடுவீங்கனு பயம் வந்திடுச்சு..

ப.மு.க வோட R&D யக் கூப்பிட்டு ரைட், லெப்ட் கொடுத்து ஒரு வாரம் டைம் கொடுத்தேன்..   எதுக்கா?.  முதல்ல இதை படிச்சுட்டு, வாங்க . அப்பத்தான் புரியும்...

மற்றவர்கள்..( உடுங்க சார்.. அவங்க வந்து சேந்துக்குவாங்க..)

மண்டைய கசக்கி ஒருவழியா, ப.மு.க வோட R&D, ஒரு புதுசா ஒரு ஹோமோஜினியஸ்  ப்ராடெக்ட்டை உருவாக்கிவிட்டது..( கையெல்லாம் தட்ட வேண்டாம் சார்.. வெக்கமாயிருக்கு..    நான் என் கடமையைதான் செய்தேன்..)

அப்புறம் சொல்ல மறந்துட்டேன்.. எந்த ஒரு ப்ராடெக்ட் இருந்தாலும் அதுல, Pros, & Cons   இருக்கும்..முதலில்

Pros
- பார்க் பண்ணவது சுலபம்..
- ஒரு கார் நிறுத்துமிடத்தில் ,எங்களுடைய 10 வண்டிகளை நிறுத்தலாம்..
- மாடிப்படியில் ஏற்றும் வசதி..
- காதலர்களுக்காக, நெருக்கமாக உட்காரும் வசதி..
- அவ்வப்போது , தண்னீர் ஊற்றினால் போதும்..
- மெயிண்டனென்ஸ் ப்ரீ..ஆயில், மற்றும் பெட்ரோல் தேவையில்லை
- Road tax இல்லை..
- பெயிண்டிங்  செய்யத் தேவையில்லை..
- முக்கியமா லைசென்ஸ் தேவையில்லை..
- பெரியோர் , மற்றும் சிறியோருக்கு ஏற்ற வாகனம்..
- உடற்பயிற்சி தேவையில்லை..


அட.. மூஞ்சியில சிரிப்பு வந்துடுச்சு.. அப்படியே சிரிச்சுட்டு எங்க ப்ராடெக்ட பாருங்க..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
ஆமா Cons என்னானு சொல்ல மறந்துட்டேனே..
சாதா வண்டி ,24 மணி நேரத்துக்கு ஒரு தடவை , கழிவை வெளி தள்ளினால்,
எங்க வண்டி ,12 மணி நேரத்துக்கு ஒரு தடவை , கழிவை வெளி தள்ளும் சார்..
( ஏன்னா.. வண்டியோட Length  பாதியா இருப்பதால்..சீக்கிரம் அதுக்கும் ஒரு முடிவை கட்டுவோம் சார்..)
.
வரட்டா...
.
.
.

Wednesday, April 7, 2010

வாரே வா..நவீன ரேசன் கடைகள்..

செய்தி
தமிழகத்தில் உள்ள ரேஷன்கடைகள் ஒரு மாதத்திற்குள் அடிப்படை வசதிகள் செய்து பணியாளர்களுக்கு  சீருடை, பில் போடும் இயந்திரம் என நவீனமயமாக்கப்படவுள்ளது.ரேஷன் கடைகளின் மூலம்   மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், பாமாயில்,  பருப்பு போன்ற பொருட்கள் மக்களுக்கு முறையாக சென்று சேரவில்லை என தொடர்ந்து புகார்கள்  தெரிவிக்கப்பட்டன.

இதை சரி செய்ய உணவு பொருள் வழங்கல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ரேஷன் 
கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர், எடையாளரை அடை யாளம் காண சீருடை, அடையாள  அட்டை வழங்கப்படுகிறது.பெண் விற்பனையாளர்களுக்கு ஓவர் கோட் போல் சீருடை   வழங்கப்படவுள்ளது. ரேக், சேர், டேபிள், அறிவிப்பு போர்டுகள், எலக்ட்ரானிக் தராசு, பில்லிங்   மிஷின் ஆகிய வசதிகளும் செய்து தரப் படவுள்ளன.

இதற்காக, ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் 
சங்கங்கள் மூலம் 25 ஆயிரம்ரூபாய் வழங்கப் படும்.இதன்மூலம் முறைகேடுகளை முற்றிலும் தடுக்க   ரேஷன் கடைகளுக்கு அரசு கடும், 'செக்' வைத்துள்ளது.


--------------------------------------------------------------

தமிழக அரசுக்கு நன்றி..மக்கள் துயர்துடைக்க அரும்பாடுபட்டு வரும், ’உணவுபொருள் வழங்கல்  துறைக்கு’, ப.மு.க , நன்றியைத்   தெரிவித்துக்கொள்கிறது..

மக்கா.. தயவு செய்து, பட்டாபட்டி , தமாசு பண்றானு நினைக்காதீங்க..

பாருங்களேன்.. ரூ 25 ஆயிரத்துக்கு,
ரேக்,
சேர்,
டேபிள்,
அறிவிப்பு போர்டுகள்,
எலக்ட்ரானிக் தராசு,
பில்லிங் மிஷின் ,
சீருடை,
அடையாள அட்டை,
ஓவர் கோட்
எல்லாம் வாங்க முடிகிறது.. ஆனால் , அம்மையார், தமிழகத்தில, விலைவாசி எல்லாம்   ஏறிடுச்சு....... மக்கள், கஞ்சி கிடைக்காம அல்லல்படுகிறார்கள் என அறிக்கை விடுகிறார்..   என்னா நினைச்சுகிட்டு இருக்கீங்க மேடம்?..உம்..


மேலும், அதையெல்லாம் செய்தால் முறைகேடுகளை முற்றிலும் தடுக்கமுடியும் என்று , எங்க   அரசுக்கு தெரியுது..எப்படினு புரியலையா?..
ஏன் சார்.. சீருடை போட்டா, எப்படி ஊழல் பண்ண முடியும்.. யோசனை பண்ணுங்க சார்..  மேலும், கட்டில், பீரோ, சேர் எல்லாம்  கொடுக்கிறாங்க..அதனால கண்டிப்பா ரேசன் கடைக்காரங்க
ஊழல் பண்ண சான்ஸ்சே இல்லையினு, மங்குனி தலமேல, அடிச்சு சொல்றான் பட்டாபட்டி..


மேலும்,ஊழியர்களுக்கு,  அடையாள அட்டைய வேற கவர்மெண்ட் கொடுத்து இருக்கு..   பார்த்தீங்களா.. எப்படி ‘செக்’ வெச்சிருக்குனு?

அய்யா..அரசு மற்றும் அரசியல் ஊழியர்களே.. உங்கள் கடமை இத்துடன் முடிந்துவிடக்கூடாது..   இது போல, செய்து... தமிழகத்தை ஊழல் இல்லாத மாநிலமா சீக்கிரம் கொண்டு வாங்க   சாமிகளா..

நன்றி.. வணக்கம்..


( அய்யா.. .. உங்கள் உழைப்பு நாட்டுக்கு தேவை தலைவா..   கலா அண்ணன் மட்டும், பணக்காரனு பேப்பர்ல போடரானுக..   ஏன்..?

 
எங்க துணை முதல்வர், கனி அக்கா, அஞ்சா நெஞ்சன் , போட்டோ பீஸு தயா  எல்லாம்   வரமுடியலே?..அவங்களுக்கும் கொஞ்சம் வாய்ப்பு கொடுங்க..

தல.. அடுத்த தடவை..இவங்க பேரு மட்டும் தான் பணக்காரங்க லிஸ்ட்ல இருக்கனும்..   மீறி, அம்மானி, கிம்மானினு எவனாவது வந்தா, நாங்க மனுஷனா இருக்கமாட்டோம்..

சொல்லிட்டேன்..அதனால...அதனால..

இப்போதைக்கு...உங்களுக்கு ஓய்வு கொடுக்க, நாங்கள் விரும்பலை..)

.
.
வரட்டா..
.
.

Tuesday, April 6, 2010

மூளைக்கு வேலை..( இருந்தால்..)

வணக்கம் சார்.. என்னாடா ரொம்பநாளா, எஸ் ஆயிட்டேனு பார்க்கிறீங்களா?.
என்ன சார்.. பண்றது..எங்க கம்பெனியில, ஏப்ரல்மாசம் ப்ரோமோஷன் லிஸ்ட் ரெடி பண்ணுவாங்க.( லூஸ் மோஷன் இல்ல சார்.. பதவி..மற்றும் சம்பள உயர்வு..ஆமாமா..ப்ரோமோஷன்தான்)
 
நானும் கடந்த ஒரு மாதமா, சிவாஜி, எம்.ஜி.ஆர் மாறி  நடிச்சிட்டேன்..
நமக்கு கடமை முக்கியமில்லையா?...பார்ப்பம்.. ஏதாவது ஆஸ்கார்,கீஸ்கார் கொடுக்கிறானுகளானு..!!

இதுலவேற, ரெட்டை, வெளியூரு , முத்து , இந்த மூணூபேரும் சேர்ந்துகிட்டு , பதிவ போடுனு மெரட்ரானுக..சரி.. சமையலப்பற்றி எழுதலாமுனா, பித்தன் சாரோட ஆரஞ்சு பச்சிடி மனசுல ஆடுது..
அடுத்த நாளு கழுவிட்டு , வேற புதுசா யோசிக்கனும்.. இது நமக்கு சரிவராது..

சரி.. கதை, கவிதை எழுதலாமென பார்த்தால்..ஏற்கனவே பயபுள்ளைக, கழட்டி விட்டுட்டாங்க..
அதனால யூஸ்புல்லாவும் இருக்கனும்..ரெட்டை மற்றும் வெளியூரானுக்கு உபயோகமாவும் இருக்கனும்..என்னடா பண்ணலாமுனு ரோசனை பண்ணினேன்..


ஆ..எக்ஸ்ரா திறமை..அது இருந்தா எல்லாரும் மூளைக்காரன் ஆகிவிடலாம்...
அதனால..Origami பற்றி இந்த பதிவு..இது மூளைக்கு வேலை..( மங்குனி..நீ கழண்டுக்க..)

மற்றவர்களெல்லாம் தொடருங்க..

மேலும் இதை , காலை, மாலை, இரவு ..முக்கியமா.. பெண்களுக்கு முன்னாடி பண்ணி அசத்தலாம்..( வெளியூரான்.. Note the Point..)

முதல்ல, A4 பேப்பர எடுத்துக்குங்க..இதுல முக்கியமா 4 ஸ்டெப்ஸ் இருக்கு..
படத்தில இதைப்பற்றி விரிவா, விளக்கமா சொல்லியிருக்கோம்..முதல்ல கஷ்டமாகத்தான் தெரியும்.   பழக பழக , “அட.. இவ்வளவுதானா”-னு, நீங்களே அடுத்தவன் மூக்கில விரலை வைப்பீங்க..
இப்ப முக்கியமான கட்டத்தக்கு வந்துட்டீங்க..இத செய்யும்போது , ரொம்ப ஜாக்கிரதையா,  சரியா சொல்லனுமுனா, ”ஒரு தவம் மாறி செய்யனும்”..
.
.
.
.
அந்த பேப்பரை, இரண்டு கையிலையும் பிடித்துகொண்டு, கிழக்கு நோக்கி நில்லுங்க..
.
.
.
கண்ண மூடிக்கிட்டு..இந்த பேப்பரை, 90 டிகிரி திருப்புங்க..
.
.
.
ரைட்..
அப்படித்தான்..
.
.
.
.
துணி துவைத்ததும், பிழிவீங்களே..அது மாறி ..ஆங்..
அப்படித்தான்..பார்த்தீங்களா.. இப்ப மனித மூளைய, ஒரு சாதாரண பேப்பர் வைத்து பண்ணீட்டீங்க..
இதே மாறி தினமும் செய்துவந்தால்,.....எதுக்கு என் வாயால சொல்லிகிட்டு?..
நீங்களே பாருங்களேன்


கடைசியா ஒரு டிப்ஸ்சு..
வீட்ல பத்திரபேப்பர் இருந்தா.. அதை யூஸ் பண்ணுங்க..Final Output சூப்பராயிருக்கும்..  ஏன்னா.. பேப்பர் குவாலிட்டி அதுமாறி...

வ்ரட்டுமா..
.
.
.

Friday, April 2, 2010

நானும் பிரபலம்தான்..

வணக்கம் சார்..எம்பேரு தங்கவேலு..    பேரக்கேட்டதும் உங்களுக்கு, காங்கிரஸ்காரன் தங்கபாலு நினைவுக்கு வந்தா நான் பொறுப்பில்லை..     நான் அன்றாடங்காச்சிங்க...ஆனா.. ஒரு நாளு நானும் பிரபலமாவேனு ஜோசியகாரன் சொல்லியிருக்கான்..

வேலை முடிஞ்சா, சரக்கடிக்கனும், இல்லாட்டி அது சாமிகுத்தமுனு நம்புறவன் நானு..
தண்ணி..குட்டினு ஷோக்கா பொழுதபோக்கிட்டு..வாரத்துக்கு ரெண்டு படம் பார்த்துருவேன்..
யாரையாவது அடிக்கனும், புடிக்கனுமுனா.. என்னைய விட்டா இந்த ஜில்லாவுல தொழில் தெரிஞ்சவன்   யாருமில்லை..ஒத்த ப்ளேடு வெச்சே..1 கி.மீட்டருக்கு கோட்ட போடுவேன்..

எப்பாவது, போஸ்டர் ஒட்டறது, சாணிஅடுக்கிறதுனு, சப்ப மேட்டருக்கு கூப்பிடுனானுக..
அடிச்சு முடிச்சா, 1 ப்ளேட் பிரியாணியும் 1 குவாட்டரும் கொடுப்பானுகோ..

அப்படியே மனுசன் ஜாலியா சுத்திகினு இருந்தப்போ,பக்கத்து வீட்டுக்கு ஒரு சப்ப பிகரு குடி வந்துச்சு..   நானும், மூஞ்சிக்கு பவுடரு..தலைக்கு எண்ண, எல்லாம் வெச்சுட்டு மடக்க பாத்தேன்..முண்ட..  கண்டுகமாட்டிங்கிறா..போடி கருவாச்சினு வேலையப் பார்க்க போயிட்டேன்..

அன்னைக்கு எங்கூர்ல தலவர் படம் ஓடுது.( அதாங்க.. வயித்துல பம்பரம் உடுவாரே..பேரு மறந்துடுச்சு.. ஆங்..)   படம் பாக்க, காச தேத்திட்டு வாடானு, கோவாலு கூப்பிட்டான்..
வீட்ல ஒரு மயிரும் இல்ல.. என்னாத்த வெச்சு காசு பாக்கிறது..என்னாடா பன்ணலாமுனு
ரோசனை பண்ணிகிடு, பீடிய வலிச்சுகினு இருந்தேன்.
பக்கத்துஊட்டுகாரி, பப்பரப்பேனு வாசல்ல தூங்கிகினு இருந்தா...
.
.
அப்புறம் சேட்டுகிட்ட சண்ட போட்டு.. அது பெரிய கதை சார்.  ( தக்காளி 300க்கு மேல ஒரு நயாபைசா குடுக்கமாட்டேனு சொல்லிட்டான்..   ஏழையோட கஷ்டம் எந்த தே...பயலும் புரியமாட்டிங்குது சார் )..  சரி..போடா மயிருனு காசை வாங்கிகினு , படத்துக்கு போயிட்டேன்..(சரசக்கா சாராயம் மாறி சுத்துபட்டில எங்கேயும் கிடைக்காது.ஊறுகாய  தொடாமா, 1 பாட்டில் அடிக்கிலாம்.)

படம் பார்த்துட்டு வெளிய வந்தா.. ’பம்பரம், தொப்புளு’, மட்டும் கண்ணுல் நிக்குதுசார்..எப்படியோ
ஒருவழியா வீட்டுக்கு போயிட்டேன்..வீட்ல ஒரே கூட்டம் ..என்னய பாத்து கருவாச்சி, ‘லபோ திபோ’னு கத்தறா..    எங்கப்பன் மீசையில், கைய வெச்சுட்டு..நான் என்னமோ கற்பழிச்சமாறி பாக்குறான்..  எனக்கு அடிச்ச சரக்கு இறங்கினமாறி ஆயிடுச்சி..வீராப்பா ஆக்ட் கொடுத்திட்டு..
வீட்டுகுள்ள போறேன்.. முதுகுல ஒரே எத்துவெச்சான் சார்.. எங்கப்பன்..
அதுவும் சப்பச்சிக்கு முன்னாடி.. எப்படியிருக்கும் எனக்கு.. திரும்பி ஒரே குத்....
.
.
6 வருஷம் கழிச்சுதான் வெளிய உட்டானுக..வீட்டுக்கு போனா.. எங்கம்மா..
மூக்க சீந்திகினே, ஒப்பாரி பாடுது..வந்துச்சு சார்.. கோவம்.. திரும்பவும் எத்து..
ஆனா மெதுவாதான் சார்.. எவன் திரும்பி 6 வருசம் கழி துண்றது..

சரி.. இங்கன இருந்தா..அப்பன்காரன் பேயா சுத்தற மாறி கனவு வந்துகினேயிருக்கு..
போயி அய்யமாரை பாத்து பரிகாரம் கேக்கலாமுனு போனா..நல்ல செகப்பியா ஒரு பிகரு சார்..
மூக்கில கைய வச்சா.. மாரு வரைக்கும் வழுக்கிட்டு வரும்போல..என்னப்பாத்து சிரிச்சது.
அப்ப ஒரு வயசான் கிழபோல்டு குச்சிய ஊனிக்கினு வந்து, ‘ எண்டா அம்பி..எங்காத்துல இருக்குற மாதாவுக்கு’..ஏன்னவோ சொன்னானே..     ஆங்..மேரி மாதாவோ..இல்ல..இல்ல.. வேற என்னமோ மாதாவ பாத்துக்க..மூனுவேளை சோறு போடரேனு ஆப்பர் லெட்டரு

கொடுத்துச்சு..சரி.. கனவுக்கன்னிக்காக.. மாட்டு சாணி வளிக்கிறது தப்பில்லனு இங்கனவே.. அதாங்க அக்ரகாரத்தில தங்கிட்டேன்..   எவனோ ஒருத்தன் எம்மேல பரிதாபப்பட்டு,  ரேசன் கார்டவே வேற வாங்கி கொடுத்துட்டா னுக..      ஒரு 6 மாசம் ரூட் உட்டு பாத்தேன்..ஒண்ணும் வேலைக்காகல..அது கண்ணாலம் பண்ணிகினு பறந்து பூடிச்சு சார்..

நானு தேவதாசு மாறி , தாடி வளத்துகினு..தன்ணிய போட்டுகினு ஊருக்குள்ல சுத்திகினு இருந்தேன்..      எங்கம்மாகாரிக்கு பொறுக்கல...ஒரு சண்டக்காரிய புடிச்சு கட்டி வெச்சுட்டா சார்..
அவங்கப்பன் ரவுடியாம.. அது தெரியாம.. வகைக்கு போயி கால வெச்சுட்டேன்..
அது ஒரு மூதேவி சார்..புருசன்காரனாச்சேனு ஒரு மட்டு மரியாதி வேணாம்..
டெய்லி வீட்டுக்கு போன அடிதடி சார்.. என்ன மனுச ஜென்மாமோனு நீங்களே கேக்க்றீங்க பாத்தீங்களா?

உடம்பு வளிக்குதே..போயி மருந்து தண்ணிய குடிச்சுட்டு வந்தா.. அதுக்கும் உதைக்கிறா சார்..
இதுல வேற, என்னமோ 33% வேனுமுனு கொஞ்சப்பேரு சொல்லிகினு இருக்கானுகோ..

கொஞ்ச வருசமா அப்படியே பல்ல கடிச்சுட்டு ஓட்டிகினு இருக்கேன்.. வயசு வேற ஆயிடுச்சா.ஆனா வாலிபம் முறுக்காயிருக்கு..      உடுவனா..பக்கத்தூட்டு காரிக்கு நூலு உட்டு பாத்தேன்..தக்காளி அவ மாட்ட மாட்டிங்கிறா சார்..   ஆனா, விதி மாட்டிகிச்சு.. எம் பொண்டாட்டி பாத்துட்டா..திருப்பவும் அடிதடி..

உடம்பு வலி வேற.. தண்ணி காச்சி குளிச்சா.. உடம்பு வலி போயிடுமேனு.. தன்ணிய காச்ச சொன்னேன்..     காச்றா.. காச்றா. ஒரு மணி நேரமா,  விறக வெச்சுகினு..ங்கோய்யா.. கோபம வந்திடுச்சு..  


”ஏய் ஓடுகாலி ...இந்த மண்ணென எடுத்து ஊத்துடி”னு, Bottle-ல ஒரு எத்து சார்..
வயசாயிடுச்சு..குறி தவறி எண்ணெய் எம்மேல படவும், நான் அடுப்புகிட்ட விழவும்...”அய்யோ...அம்ம்ம்ம்மா.....”னு நான்

கத்திகிட்டே.....
.
.
 

-------------------------------------------------------------------------------------------------------------------------------
செய்தி...
தீக்குளித்த தொண்டரைப் பார்க்க ஜெயலலிதா இன்று ஈரோடு பயணம்

சென்னை, மார்ச் 31: பென்னாகரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வியால் தீக்குளித்த அக்கட்சித் தொண்டரைப்  பார்ப்பதற்காக, கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வியாழக்கிழமை ஈரோடு செல்கிறார்.   ஈரோடு, பி.பி. அக்ரஹாரம், 18}வது வார்டில் வசிக்கும் அ.தி.மு.க. தொண்டர் தங்கவேல் (55). இவர், பென்னாகரம் சட்டப்பேரவை  தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வியை அடுத்து, செவ்வாய்க்கிழமை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் பலத்த காயமடைந்த தங்கவேல், இப்போது ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில் தீக்குளித்த கட்சித் தொண்டர் தங்கவேலை சந்தித்து, அவரது உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வியாழக்கிழமை ஈரோடு செல்கிறார்.  இதற்காக சென்னையிலிருந்து வியாழக்கிழமை காலை தனி விமானம் மூலம் புறப்படும் ஜெயலலிதா, சேலம் சென்றடைகிறார். அங்கிருந்து கார்  மூலம் ஈரோடு சென்று தங்கவேலை சந்திக்கிறார்.   பின்னர் சேலம் திரும்பும் ஜெயலலிதா, அங்கிருந்து மாலையில் விமானத்தில் புறப்பட்டு, சென்னை திரும்புகிறார் என்று அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

.
.
.

Thursday, April 1, 2010

தமிழர்கள் நன்றிகெட்டவர்களா?

என்னடா.. பட்டாபட்டி ,இன்னுமா, இடைதேர்தலில் இருந்து விடுபடலைனு, நினைக்கிற மக்களுக்குகாக இந்த பதிவு..

அரசியல்வாதிகளும் மனிதர்கள்தான்..அவர்களுக்கு குடும்பம்,குட்டினு இருக்கும்..    அதையெல்லாம் விட்டுவிட்டு, மக்களுக்காக,ஊண் உறக்கம் தவிர்த்து , வீதி வீதியாக அலைந்து ஓட்டு சேகரித்து..  ஒரு நிமிசம் நினைத்துப்பாருங்க சார்..உங்களுக்கே மனசு நெகிழும்..

ரைட்.. ரொம்ப நெகிழவிட்டுவிடாதீங்க..முதுகுத்தண்டு வளைந்துவிடும்..தேர்தல்னா என்ன?.. அண்ணாச்சி கடைக்கு போயி
1 கிலோ புண்ணாக்கு வாங்குவதுனு நினைச்சீங்களா? இல்ல சார்.. இல்லை..

Target - தொகுதி
தேர்தல் தேதி அறிவிச்சவுடன்..    முதல்வேலை அந்த தொகுதி எங்க இருக்குனு கண்டுபிடிக்கனும்..
சரியான தொகுதி..
சரியான மக்கள்..
சரியான நேரம்..

ஏன்னா..அவர்கள் உழைப்பு, விழலுக்கு இறைத்த நீராகிவிடக்கூடாது பாருங்க. அதனால..

Planning - கணிப்பு
தொகுதில எவ்வளவு நம்ம ஜாதி..எவன் எதிர்கட்சினு, பணம் கொடுத்தா குத்துவானுகளா?..   இல்ல சிக்கன் பிரியாணி+குவாட்டருக்கே குத்திட்டு போயிடுவானுகளா?....  எதிர்த்து நிற்பவன் பண முதலையா? இல்ல பச்சோந்தியா?....  போனதடவை சொன்ன வாக்குருதியை, , திரும்பவும் ரீமேக் பண்ணி எப்படி சொல்லுவது?..... அதெல்லாம் பொதுக்குழுவில முடிவு செஞ்சு, தொகுதிய,தரவாரியா பிரிக்கனும்..


Decision Making - வேட்பாளர்..

இது ரொம்ப கஷ்டமான காரியம் சார்..இதை பண்றது,
’விஜயகாண்டு வெச்சு பிட்டு படம் எடுத்து.. 100 நாள் ஓட்டறதுக்கு சமம்’..

இதுல முக்கியமா கவனிக்க வேண்டியது..
சொந்தக்காரன்..மாமன் , மச்சான்.. சகலையோ சித்தப்பா..
இல்ல.. நல்ல கொழுத்த பணக்காரன்..
இல்ல.. டம்பி பீசு.. எதுசொன்னாலும் தலையாட்டும் பாருங்க ..அதெல்லாம் கன்சிடர் பண்ணிட்டு,   பேரை அறிவிக்கனும்..


Action - தேர்தல் களம்

இதுல, கட்சிக்கு நிதிசேர்பது..
போஸ்டர் ஒட்டுவது..
தினமும் முச்சந்தியில் மீட்டிங்..
பணம் பட்டுவாடா..
கள்ள ஓட்டு..
நல்ல ஓட்டு..
கட்டைபஞ்சாயத்து..
பிரியாணி..
ஆள் சேர்ப்பது அடக்கம்...

OutCome - தேர்தல் முடிவு..
இங்க தான் சார் மூளைய உபயோகிக்கனும்..
ஜெயிச்சா.. நன்றினு ஒரு பெரிய கும்புடு போட்டுட்டு போயிட்டேயிருக்கனும்..
தோத்தா.. இது எதிர்கட்சிகளின் சதி..ஊழல் தலைவிரித்தாடிச்சு..
இன்னும் பிறக்காதவர்கள் எல்லாம் வந்து ஓட்டு போட்டுட்டானுக..
அடுத்த ஆட்சி எங்களுதுதான்.. bla..bla...bla..னு சொல்லிட்டு
போயிட்டேயிருக்க வேண்டியதுதான்..ஏன்னா.. காலம் கலிகாலம் சார்.. சீக்கிரம் திரும்பி வரவேண்டியிருக்கலாம்..  (உள்குத்து எதுவுமில்லை  -ஆசிரியர்)Thanks Giving - மக்கள்
இந்த பார்ட்..நாம...அதாவது மக்கள்....
இப்படியெல்லாம் போராடி.. மக்களுக்கு நல்லது பண்ண வந்தா.. நக்கல் பண்ணிகிட்டு..சே..  கட்சிக்காரன் தோற்றானோ.. இல்ல ஜெயிச்சானோ.. அது வேற விசயம்..  ஆனா, பொழப்ப விட்டிவிட்டு உங்களுக்காக பாடுபட்டானே.. அவனுக்கு நீங்க என்ன பண்ணுனிங்க..?

ஓட்டு போட்டேனு சொல்லாதீங்க....
அது ஜனநாயகக்கடமை சார்..அதுவுமில்லாம காசு வாங்கித்தானே போட்டீங்க..அதைய பெரிய ம^%$ரா சொல்லக்கூடாது..

மாடுகளை மதித்து, மாட்டுப்பொங்கல்+ஜல்லிக்கட்டு கொண்டாடும் தமிழர்கள் நாம்..    ஆனால்.. இவர்களுக்கு எதுவும் பண்ணுவதில்லை நாம்.. ஏன்?..
இனிமேல நாம அவர்களுக்கு என்ன/எப்படி செய்யலாமுனு சொல்றேன்.. கேட்டுக்குங்க..

இதுக்கு தேவையானவை...
சைக்கிள் ( பைக் வேணாம்.. சாமகோடாங்கி பிரகாசு..எப்படி கார்பன் சுவடுகளுக்கு சப்போர்ட் பண்றேன்..)
மரப்பலகை( ரோஸ்விக்.. எனக்கு தெரியும்.. மரம் வெட்டுனா, நீர்வளம் குறையுமுனு..ஆனா வேற வழியில்லை எனக்கு..)
வேட்பாளர்கள் ( நம்மை வழிநடத்திச்செல்லும் தலைவர்கள்)
ஓட்டாளர்கள் ( அட நாமதான்..)
 அடுத்து மரத்தை வெட்டி..மேடான பாலம் மாறி செட்டப் செய்யுங்க..
தொகுதிக்கு பாடுபட்ட..தேர்தலில் நின்ற எல்லா வேட்பாளைகளையும்
வரச்சொல்லி.. வரிசையா படுக்கச்சொல்லனும்..அடுத்து..ஓட்டு போட்டவனுக
க்யூல நின்னு , கீழ உள்ள படத்தில் உள்ளது போல ஜம்ப் பண்ணுங்க.
.


 விதிமுறைகள்..
ரேசன் கார்ட் உள்ளவர்களுக்கு மட்டும்தான் கலந்து கொள்ளலாம்..
கள்ள ஓட்டு கண்டிப்பாக அனுமதிக்கப்படாது..
ஒருவர் ஒரு தடவைதான் ஜம்ப் பண்ணனும்..
யார் மேலையும் படாமா, ஜம்ப் பண்ணிவிட்டால்..1 குவாட்டர் இலவசம்..
ஒரு வேட்பாளர் மேல் பட்டுவிட்டால்.. அவருக்கு நீங்கள் 5கிலோ ரேசன் அரிசியும்..2 சாத்துகுடியும் கொடுக்கவேண்டும்..
இரண்டு வேட்பாளர்கள்மேல் பட்டுவிட்டால்..5 கிலோ அரிசி + 2 சாத்துக்குடி + நீங்கள் அவரிடம் வாங்கிய பணத்தையும் திருப்பிகொடுக்கவேண்டும்..


ஓ.கே..

ஆரம்பியுங்கள்.. ஸ்டார்ட்..
.
.
இந்த விளையாட்டு, வீடியோ கேமரா மூலமாக,கண்காணிக்கப்படுவதால்..ஊழல் நிகழ வாய்ப்பில்லை  என
தினக்குசும்பு நிருபர் பேட்டி அளித்துள்ளார்....
.
.
.