Pages

Friday, April 2, 2010

நானும் பிரபலம்தான்..

வணக்கம் சார்..எம்பேரு தங்கவேலு..    பேரக்கேட்டதும் உங்களுக்கு, காங்கிரஸ்காரன் தங்கபாலு நினைவுக்கு வந்தா நான் பொறுப்பில்லை..     நான் அன்றாடங்காச்சிங்க...ஆனா.. ஒரு நாளு நானும் பிரபலமாவேனு ஜோசியகாரன் சொல்லியிருக்கான்..

வேலை முடிஞ்சா, சரக்கடிக்கனும், இல்லாட்டி அது சாமிகுத்தமுனு நம்புறவன் நானு..
தண்ணி..குட்டினு ஷோக்கா பொழுதபோக்கிட்டு..வாரத்துக்கு ரெண்டு படம் பார்த்துருவேன்..
யாரையாவது அடிக்கனும், புடிக்கனுமுனா.. என்னைய விட்டா இந்த ஜில்லாவுல தொழில் தெரிஞ்சவன்   யாருமில்லை..ஒத்த ப்ளேடு வெச்சே..1 கி.மீட்டருக்கு கோட்ட போடுவேன்..

எப்பாவது, போஸ்டர் ஒட்டறது, சாணிஅடுக்கிறதுனு, சப்ப மேட்டருக்கு கூப்பிடுனானுக..
அடிச்சு முடிச்சா, 1 ப்ளேட் பிரியாணியும் 1 குவாட்டரும் கொடுப்பானுகோ..

அப்படியே மனுசன் ஜாலியா சுத்திகினு இருந்தப்போ,பக்கத்து வீட்டுக்கு ஒரு சப்ப பிகரு குடி வந்துச்சு..   நானும், மூஞ்சிக்கு பவுடரு..தலைக்கு எண்ண, எல்லாம் வெச்சுட்டு மடக்க பாத்தேன்..முண்ட..  கண்டுகமாட்டிங்கிறா..போடி கருவாச்சினு வேலையப் பார்க்க போயிட்டேன்..

அன்னைக்கு எங்கூர்ல தலவர் படம் ஓடுது.( அதாங்க.. வயித்துல பம்பரம் உடுவாரே..பேரு மறந்துடுச்சு.. ஆங்..)   படம் பாக்க, காச தேத்திட்டு வாடானு, கோவாலு கூப்பிட்டான்..
வீட்ல ஒரு மயிரும் இல்ல.. என்னாத்த வெச்சு காசு பாக்கிறது..என்னாடா பன்ணலாமுனு
ரோசனை பண்ணிகிடு, பீடிய வலிச்சுகினு இருந்தேன்.
பக்கத்துஊட்டுகாரி, பப்பரப்பேனு வாசல்ல தூங்கிகினு இருந்தா...
.
.
அப்புறம் சேட்டுகிட்ட சண்ட போட்டு.. அது பெரிய கதை சார்.  ( தக்காளி 300க்கு மேல ஒரு நயாபைசா குடுக்கமாட்டேனு சொல்லிட்டான்..   ஏழையோட கஷ்டம் எந்த தே...பயலும் புரியமாட்டிங்குது சார் )..  சரி..போடா மயிருனு காசை வாங்கிகினு , படத்துக்கு போயிட்டேன்..(சரசக்கா சாராயம் மாறி சுத்துபட்டில எங்கேயும் கிடைக்காது.ஊறுகாய  தொடாமா, 1 பாட்டில் அடிக்கிலாம்.)

படம் பார்த்துட்டு வெளிய வந்தா.. ’பம்பரம், தொப்புளு’, மட்டும் கண்ணுல் நிக்குதுசார்..எப்படியோ
ஒருவழியா வீட்டுக்கு போயிட்டேன்..வீட்ல ஒரே கூட்டம் ..என்னய பாத்து கருவாச்சி, ‘லபோ திபோ’னு கத்தறா..    எங்கப்பன் மீசையில், கைய வெச்சுட்டு..நான் என்னமோ கற்பழிச்சமாறி பாக்குறான்..  எனக்கு அடிச்ச சரக்கு இறங்கினமாறி ஆயிடுச்சி..வீராப்பா ஆக்ட் கொடுத்திட்டு..
வீட்டுகுள்ள போறேன்.. முதுகுல ஒரே எத்துவெச்சான் சார்.. எங்கப்பன்..
அதுவும் சப்பச்சிக்கு முன்னாடி.. எப்படியிருக்கும் எனக்கு.. திரும்பி ஒரே குத்....
.
.
6 வருஷம் கழிச்சுதான் வெளிய உட்டானுக..வீட்டுக்கு போனா.. எங்கம்மா..
மூக்க சீந்திகினே, ஒப்பாரி பாடுது..வந்துச்சு சார்.. கோவம்.. திரும்பவும் எத்து..
ஆனா மெதுவாதான் சார்.. எவன் திரும்பி 6 வருசம் கழி துண்றது..

சரி.. இங்கன இருந்தா..அப்பன்காரன் பேயா சுத்தற மாறி கனவு வந்துகினேயிருக்கு..
போயி அய்யமாரை பாத்து பரிகாரம் கேக்கலாமுனு போனா..நல்ல செகப்பியா ஒரு பிகரு சார்..
மூக்கில கைய வச்சா.. மாரு வரைக்கும் வழுக்கிட்டு வரும்போல..என்னப்பாத்து சிரிச்சது.
அப்ப ஒரு வயசான் கிழபோல்டு குச்சிய ஊனிக்கினு வந்து, ‘ எண்டா அம்பி..எங்காத்துல இருக்குற மாதாவுக்கு’..ஏன்னவோ சொன்னானே..     ஆங்..மேரி மாதாவோ..இல்ல..இல்ல.. வேற என்னமோ மாதாவ பாத்துக்க..மூனுவேளை சோறு போடரேனு ஆப்பர் லெட்டரு

கொடுத்துச்சு..சரி.. கனவுக்கன்னிக்காக.. மாட்டு சாணி வளிக்கிறது தப்பில்லனு இங்கனவே.. அதாங்க அக்ரகாரத்தில தங்கிட்டேன்..   எவனோ ஒருத்தன் எம்மேல பரிதாபப்பட்டு,  ரேசன் கார்டவே வேற வாங்கி கொடுத்துட்டா னுக..      ஒரு 6 மாசம் ரூட் உட்டு பாத்தேன்..ஒண்ணும் வேலைக்காகல..அது கண்ணாலம் பண்ணிகினு பறந்து பூடிச்சு சார்..

நானு தேவதாசு மாறி , தாடி வளத்துகினு..தன்ணிய போட்டுகினு ஊருக்குள்ல சுத்திகினு இருந்தேன்..      எங்கம்மாகாரிக்கு பொறுக்கல...ஒரு சண்டக்காரிய புடிச்சு கட்டி வெச்சுட்டா சார்..
அவங்கப்பன் ரவுடியாம.. அது தெரியாம.. வகைக்கு போயி கால வெச்சுட்டேன்..
அது ஒரு மூதேவி சார்..புருசன்காரனாச்சேனு ஒரு மட்டு மரியாதி வேணாம்..
டெய்லி வீட்டுக்கு போன அடிதடி சார்.. என்ன மனுச ஜென்மாமோனு நீங்களே கேக்க்றீங்க பாத்தீங்களா?

உடம்பு வளிக்குதே..போயி மருந்து தண்ணிய குடிச்சுட்டு வந்தா.. அதுக்கும் உதைக்கிறா சார்..
இதுல வேற, என்னமோ 33% வேனுமுனு கொஞ்சப்பேரு சொல்லிகினு இருக்கானுகோ..

கொஞ்ச வருசமா அப்படியே பல்ல கடிச்சுட்டு ஓட்டிகினு இருக்கேன்.. வயசு வேற ஆயிடுச்சா.ஆனா வாலிபம் முறுக்காயிருக்கு..      உடுவனா..பக்கத்தூட்டு காரிக்கு நூலு உட்டு பாத்தேன்..தக்காளி அவ மாட்ட மாட்டிங்கிறா சார்..   ஆனா, விதி மாட்டிகிச்சு.. எம் பொண்டாட்டி பாத்துட்டா..திருப்பவும் அடிதடி..

உடம்பு வலி வேற.. தண்ணி காச்சி குளிச்சா.. உடம்பு வலி போயிடுமேனு.. தன்ணிய காச்ச சொன்னேன்..     காச்றா.. காச்றா. ஒரு மணி நேரமா,  விறக வெச்சுகினு..ங்கோய்யா.. கோபம வந்திடுச்சு..  


”ஏய் ஓடுகாலி ...இந்த மண்ணென எடுத்து ஊத்துடி”னு, Bottle-ல ஒரு எத்து சார்..
வயசாயிடுச்சு..குறி தவறி எண்ணெய் எம்மேல படவும், நான் அடுப்புகிட்ட விழவும்...”அய்யோ...அம்ம்ம்ம்மா.....”னு நான்

கத்திகிட்டே.....
.
.
 

-------------------------------------------------------------------------------------------------------------------------------
செய்தி...
தீக்குளித்த தொண்டரைப் பார்க்க ஜெயலலிதா இன்று ஈரோடு பயணம்

சென்னை, மார்ச் 31: பென்னாகரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வியால் தீக்குளித்த அக்கட்சித் தொண்டரைப்  பார்ப்பதற்காக, கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வியாழக்கிழமை ஈரோடு செல்கிறார்.   ஈரோடு, பி.பி. அக்ரஹாரம், 18}வது வார்டில் வசிக்கும் அ.தி.மு.க. தொண்டர் தங்கவேல் (55). இவர், பென்னாகரம் சட்டப்பேரவை  தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வியை அடுத்து, செவ்வாய்க்கிழமை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் பலத்த காயமடைந்த தங்கவேல், இப்போது ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில் தீக்குளித்த கட்சித் தொண்டர் தங்கவேலை சந்தித்து, அவரது உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வியாழக்கிழமை ஈரோடு செல்கிறார்.  இதற்காக சென்னையிலிருந்து வியாழக்கிழமை காலை தனி விமானம் மூலம் புறப்படும் ஜெயலலிதா, சேலம் சென்றடைகிறார். அங்கிருந்து கார்  மூலம் ஈரோடு சென்று தங்கவேலை சந்திக்கிறார்.   பின்னர் சேலம் திரும்பும் ஜெயலலிதா, அங்கிருந்து மாலையில் விமானத்தில் புறப்பட்டு, சென்னை திரும்புகிறார் என்று அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

.
.
.

101 comments:

 1. என்னடா.. ஒருத்தன் தீக்குளிச்சத நக்கலா எழுதியிருக்கேனு பார்க்கிறீர்களா?..
  சார்.. தன்னம்பிக்கையில்லாதவனுக பண்ற காரியம் இது..

  மேலும்..எந்த தலைவனாவது,’இது மாறி பண்ணாதீங்கடா முட்டா பயலுகளே”னு, அறிக்கை விட்டானுகளா..
  இல்ல..ஏன்னா..இது அவனுகளுக்கு பப்ளிசிட்டி..

  மக்களே.. முட்டாளா இருக்காதீங்க..

  ReplyDelete
 2. "காசேதான் கடவுள்" படம்
  பாத்தாச்சா தல.

  ஆமா Genting highland போகலையா....
  நீங்க பித்தருக்கு பதில் சொல்லி, போட்ட
  பின்னூட்டத்த "ரகசியமா" படிச்சிட்டேன் :))

  ReplyDelete
 3. அடப்பாவிகளா.. கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கனும் போல..

  ( கடைசி நேர மாறுதல்.. வெளியூரு பிஸியாயிட்டான்..)

  ReplyDelete
 4. நாட்டுக்காகதான் சாவனும் ... நாண்டுகிட்டு சாவ கூடாது !!

  ReplyDelete
 5. தக்காளி அந்த நியூஸ் படிச்ச உடனே உன் நியாபகம் தான் வந்தது, வந்து பாத்தா கின்டி கிழங்கெடுத்து வச்சுருக்க

  ReplyDelete
 6. @யூர்கன் க்ருகியர் said...
  நாட்டுக்காகதான் சாவனும் ... நாண்டுகிட்டு சாவ கூடாது !!
  //

  எல்லா முட்டாப் பயலுகளா இருக்கானுக.. தலைவனுகளே தீ குளிக்கல..
  இவனுகளுக்கு என்னா?

  ReplyDelete
 7. @மங்குனி அமைச்சர் said...
  தக்காளி அந்த நியூஸ் படிச்ச உடனே உன் நியாபகம் தான் வந்தது, வந்து பாத்தா கின்டி கிழங்கெடுத்து வச்சுருக்க
  //

  பரவாயில்லையே.. சரியா கணிச்சிருக்கே..


  சரி..சரி.. கேமரா போன் கிடைக்க பிட்டு குடுய்யா...

  ReplyDelete
 8. // பட்டாபட்டி.. said...

  @மங்குனி அமைச்சர் said...
  தக்காளி அந்த நியூஸ் படிச்ச உடனே உன் நியாபகம் தான் வந்தது, வந்து பாத்தா கின்டி கிழங்கெடுத்து வச்சுருக்க
  //

  பரவாயில்லையே.. சரியா கணிச்சிருக்கே..


  சரி..சரி.. கேமரா போன் கிடைக்க பிட்டு குடுய்யா...///

  எனக்கே அந்த மூணாவது கேள்விக்கு பதில் தெரியல

  ReplyDelete
 9. @மங்குனி அமைச்சர் said...
  எனக்கே அந்த மூணாவது கேள்விக்கு பதில் தெரியல

  //

  யாராவது மூணாவது கேள்விக்கு பதில சொன்னா, மார்க் கொறச்சிரு..ஓ.கேவா..

  ReplyDelete
 10. அது சரி , என்னா உன் ப்ளாக்ல மாற்றங்கள் நிறைய இருக்கு ?

  ReplyDelete
 11. பட்டா போய் மெயில் பாரு
  பட்டா போய் மெயில் பாரு
  பட்டா போய் மெயில் பாரு

  ReplyDelete
 12. @வால்பையன் said...
  அருமை தல
  i agree with you!
  //

  நன்றிண்ணே.. மக்கள் மூளைய யூஸ் பண்ணாததின் விளைவுதான் இது..

  ReplyDelete
 13. எழிதில் உணர்ச்சிவச படுவது கூர்ப்பில் பின்தங்கிய இயல்பாம்ல..
  பிரிச்சி மேயறறே அண்ணாச்சி...

  http://tamilpp.blogspot.com/2010/03/blog-post_24.html

  ReplyDelete
 14. @Cool Boy said...
  எழிதில் உணர்ச்சிவச படுவது கூர்ப்பில் பின்தங்கிய இயல்பாம்ல..
  பிரிச்சி மேயறறே அண்ணாச்சி...
  //

  நீயூஸ் பார்த்தா.. வயிறு எரியுது சார்..
  ஏன் இப்படி இருக்கானுகளோ?

  ReplyDelete
 15. பட்டா , இது ரொம்ம பெரிசு , இதுல கால்வாசி சைஸ் வை , உன் ப்ளாக்ல இருக்க சைஸ் வை, முடியலைன்னா எடுத்திடு, இது கொஞ்சம் அசிங்கமா இருக்கு

  ReplyDelete
 16. வேற வழிங்க... எனக்காக அவந்தீக்குளிச்சான், இவன் பீர் குடிச்சான்னு சொல்லியாச்சும் மனச தேத்திக்கவேண்டியதுதான்.

  செம ரவுசுதான்... ஆமா..எங்களவிட நீங்க ஃபாஸ்டா இருக்கீங்களே... ஈரோட்டுல நடந்தது இதுவரைக்கும் எனக்கே தெரியாது... என்னமோ போங்க...

  ReplyDelete
 17. @க.பாலாசி said...
  செம ரவுசுதான்... ஆமா..எங்களவிட நீங்க ஃபாஸ்டா இருக்கீங்களே... ஈரோட்டுல நடந்தது இதுவரைக்கும் எனக்கே தெரியாது... என்னமோ போங்க...
  //

  என்ன சார்..அம்மா,சேலம் வ-து , அங்கிருந்து, ஹெலிகாப்டர்ல, கோயமுத்தூர் போயிருக்காங்க..தெரியலேனு சொல்லிப்புட்டீங்க..

  ஆனா. கன்பார்ம்.. அடுத்த எலெக்‌ஷன்ல ஒரு ஓட்டு கம்மியாத்தான் வாங்கப்போறாங்க..பாவம்

  ReplyDelete
 18. பட்டு நான்கூட உன் சுய சரிதை மாதிரி என்னவேன்னு நெனச்சேன் . தமிழ் நாட்டில பாதி கதை இப்பிடிதான்ல நடக்குது.

  ReplyDelete
 19. @ஜெய்லானி said...
  பட்டு நான்கூட உன் சுய சரிதை மாதிரி என்னவேன்னு நெனச்சேன் . தமிழ் நாட்டில பாதி கதை இப்பிடிதான்ல நடக்குது.
  //

  சைட்ல குத்தறது இதுதான்..
  நான் எவ்வளவு நல்லவனு பித்தன் சாரை கேளுங்க.. சொல்லுவாரு..

  ReplyDelete
 20. ரொம்ப நல்லாருந்துச்சி பட்டா! உங்களோட சிறப்பான இடுகைல இதுவும் ஒன்னுன்னு சொல்லுவேன்.

  வாழ்த்துக்கள்.

  பிரபாகர்...

  ReplyDelete
 21. நம்ம ப.ராவுக்காக ரொம்ப ஆவலா காத்திருக்கேன்... அதாங்க பின்னூட்டப்புயல் பன்னிக்குட்டி ராம்சாமிங்கோ!

  பிரபாகர்...

  ReplyDelete
 22. //நான் எவ்வளவு நல்லவனு பித்தன் சாரை கேளுங்க.. சொல்லுவாரு../

  நேத்து தண்ணி பார்டியா அப்ப நல்ல பேருதாங் கிடைக்கும் .இது தெரியாதா எனக்கு

  ReplyDelete
 23. யோவ் பட்டு நீ கவுத்து விட்டு கையும் தர ஆளுயா (எப்பூடி கோத்து விட்டாச்சி ) பாவம் அவரு மண்டை காஞ்சி போய்டாரு.

  ReplyDelete
 24. அப்பாவிApril 2, 2010 at 5:57 PM

  நல்ல பந்து.. மிதமான வேகம், கூக்ளி ஆகா இருக்கும் என் நினைத்தால், எதிர் முனையில் இருக்கும் பட்டாப்பட்டி , மிக லாவகமாக தடுத்து அடித்தார், மிட் விக்கெட் திசையில் செல்கிறது ...............ஆஹா ஆஹா ................... அருமையான ஓர் சிக்ஸ்சர்...
  --

  ReplyDelete
 25. அண்ணே இதையே கொங்கு தமிழில் எலுதிஇருக்கலாமுலுங்க. கொஞ்ச தமசா இருந்துருக்குமில்ங்.

  ...சிவா...

  ReplyDelete
 26. பட்டு நான் கூட உன் சுய சரிதையோன்னு நினைச்சேன் சும்மா சொல்ல கூடாது சொல்ல வந்ததை பன்னி குட்டிக்கும் புரிகிற மாதிரி சொல்லி இருக்க

  ReplyDelete
 27. Anonymous said...

  அண்ணே இதையே கொங்கு தமிழில் எலுதிஇருக்கலாமுலுங்க. கொஞ்ச தமசா இருந்துருக்குமில்ங்.

  ...சிவா...

  இது உங்களுக்கு தமாசா சிவா சார்

  ReplyDelete
 28. பிரபாகர் said...

  நம்ம ப.ராவுக்காக ரொம்ப ஆவலா காத்திருக்கேன்... அதாங்க பின்னூட்டப்புயல் பன்னிக்குட்டி ராம்சாமிங்கோ!

  பிரபாகர்...////


  நானும் தான்,வந்தால்
  அது மேயற இடத்தில வுட்டு அடிக்கலாமுன்னு காத்திட்டு இருக்கேன்

  ReplyDelete
 29. மங்குனி அமைச்சர் said...

  பட்டா , இது ரொம்ம பெரிசு , இதுல கால்வாசி சைஸ் வை , உன் ப்ளாக்ல இருக்க சைஸ் வை, முடியலைன்னா எடுத்திடு, இது கொஞ்சம் அசிங்கமா இருக்கு//////


  எப்பவும் நொன்ன சொல்றதே உனக்கு வேலையாய் போச்சு,
  ஆமாம் எந்த சைஸை சொன்ன

  ReplyDelete
 30. பட்டாபட்டி.. said...
  ( கடைசி நேர மாறுதல்.. வெளியூரு பிஸியாயிட்டான்..)///


  ஏன் பிஸியாக இருக்கமாட்டாரு போன பதிவில் பிரியா இப்போ ஆஷிதாவுடன் ரொம்ப பிஸி, நடுவில் பன்னிகுட்டி வேறு

  ReplyDelete
 31. யூர்கன் க்ருகியர் said...

  நாட்டுக்காகதான் சாவனும் ... நாண்டுகிட்டு சாவ கூடாது !!////


  நாண்டுகிட்டு எப்படி சாவுரதுன்னு சொல்லுங்க தல நம்ம மங்கு விஜய காண்டுவுக்காக சாவ போகுதாம்

  ReplyDelete
 32. Muthu said...

  மங்குனி அமைச்சர் said...

  பட்டா , இது ரொம்ம பெரிசு , இதுல கால்வாசி சைஸ் வை , உன் ப்ளாக்ல இருக்க சைஸ் வை, முடியலைன்னா எடுத்திடு, இது கொஞ்சம் அசிங்கமா இருக்கு//////


  எப்பவும் நொன்ன சொல்றதே உனக்கு வேலையாய் போச்சு,
  ஆமாம் எந்த சைஸை சொன்ன//


  மங்குனியின் பட்டாபட்டி அளவுதான் முத்து.

  ReplyDelete
 33. //நானும் தான்,வந்தால்
  அது மேயற இடத்தில வுட்டு அடிக்கலாமுன்னு காத்திட்டு இருக்கேன்//

  முத்து ,அவனவன் இப்ப கேமரா கையோட அலையரான் ஜாக்ரத

  ReplyDelete
 34. வீணாப் போனவர்களின் வாழ்கைகைய நல்லா சொல்லிருக்கே பட்டு... கதை மாதிரி நல்ல நடை...

  உண்மையிலேயே சிறப்பான இடுகையா...

  இவனுகெல்லாம் இருக்கிறத விட சாகுரதே மேல்-னு தான் அரசியல் வியாதிகளும் நினைப்பாங்க.

  ReplyDelete
 35. ஆமா எங்கயும் போயி சிறுகதைப் பட்டறை அட்டென்ட் பண்ணீங்களா ஆப்பிசர்...

  ReplyDelete
 36. நாட்டுல அக்கிரமங்க பல வகைல நடக்குது. ஆரும் தீக்குளிக்கலன்னா இவங்களே ஒரு ஆளப்புடிச்சு தீ வச்சாலும் வப்பாங்க.

  ReplyDelete
 37. @பிரபாகர் said...
  ரொம்ப நல்லாருந்துச்சி பட்டா! உங்களோட சிறப்பான இடுகைல இதுவும் ஒன்னுன்னு சொல்லுவேன்.
  வாழ்த்துக்கள்.
  நம்ம ப.ராவுக்காக ரொம்ப ஆவலா காத்திருக்கேன்... அதாங்க பின்னூட்டப்புயல் பன்னிக்குட்டி ராம்சாமிங்கோ!
  //

  நன்றி பிரபாகர்.
  ப.ரா புதுசா வந்த ஆளு..சரியா சிக்கமாட்டிங்கிறாரு..

  ReplyDelete
 38. @ஜெய்லானி said...
  நேத்து தண்ணி பார்டியா அப்ப நல்ல பேருதாங் கிடைக்கும் .இது தெரியாதா எனக்கு
  யோவ் பட்டு நீ கவுத்து விட்டு கையும் தர ஆளுயா (எப்பூடி கோத்து விட்டாச்சி ) பாவம் அவரு மண்டை காஞ்சி போய்டாரு.
  //

  பித்தன் அண்ணனும் நாங்களும் ராசியாயிட்டோம்..
  இனி எந்த சக்தியாலும் பிரிக்க முடியாதுனு அவர்தான் சொன்னாரு..

  ReplyDelete
 39. @அப்பாவி said...
  நல்ல பந்து.. மிதமான வேகம், கூக்ளி ஆகா இருக்கும் என் நினைத்தால், எதிர் முனையில் இருக்கும் பட்டாப்பட்டி , மிக லாவகமாக தடுத்து அடித்தார், மிட் விக்கெட் திசையில் செல்கிறது ...............ஆஹா ஆஹா ................... அருமையான ஓர் சிக்ஸ்சர்...
  //

  சும்மா எழுதிப் பார்த்தேன்.. அப்பாவி சார்..
  நன்றி அப்பாவி..

  ReplyDelete
 40. @ ...சிவா...
  அண்ணே இதையே கொங்கு தமிழில் எலுதிஇருக்கலாமுலுங்க. கொஞ்ச தமசா இருந்துருக்குமில்ங்.
  //

  ஒரு சேஞ்சுக்கு சிவா சார்.. சீக்கிரம் கோவை தமிழ் பேசி வருவேன்

  ReplyDelete
 41. @Muthu said...
  பட்டு நான் கூட உன் சுய சரிதையோன்னு நினைச்சேன் சும்மா சொல்ல கூடாது சொல்ல வந்ததை பன்னி குட்டிக்கும் புரிகிற மாதிரி சொல்லி இருக்க
  //

  என்னோட சுயசரிதைய எழுதினா, நக்கீரன், தலையில துண்டப்போட்டுட்டு போயிடுவான்..
  கண்ராவியா இருக்கும்

  ReplyDelete
 42. @யூர்கன் க்ருகியர் said...
  வூ இஸ் பண்ணி குட்டி ?
  //
  அது பன்னிகுட்டி ராமாசாமினு ஒரு ஆள் , அடிக்கடி வெளியூரு ப்ளாக்ல மேய வருது..
  அதைப்பத்திதான் யூர்கான்

  ReplyDelete
 43. @மசக்கவுண்டன் said...
  நாட்டுல அக்கிரமங்க பல வகைல நடக்குது. ஆரும் தீக்குளிக்கலன்னா இவங்களே ஒரு ஆளப்புடிச்சு தீ வச்சாலும் வப்பாங்க.
  //

  ரொம்ப மோசம் ஆகிட்டு வருது கவுண்டரே..எவனாவது அவனோட குடும்பத்தை பற்றீ நினைச்சானா?

  ReplyDelete
 44. வணக்கம் தல..! எப்படி தலைவா... ஒருவரையும் விடுவதில்லை போலிருக்கே...! சும்மா...! அசத்துறீங்க..! போங்க..! ஹி..ஹிஹி...ஹஹாஹி..

  ReplyDelete
 45. @ரோஸ்விக் said...
  வீணாப் போனவர்களின் வாழ்கைகைய நல்லா சொல்லிருக்கே பட்டு... கதை மாதிரி நல்ல நடை...
  உண்மையிலேயே சிறப்பான இடுகையா...
  இவனுகெல்லாம் இருக்கிறத விட சாகுரதே மேல்-னு தான் அரசியல் வியாதிகளும் நினைப்பாங்க.
  //

  இது என்னப்பத்தி சொல்லலியே..ஹா..ஹா..


  //
  ஆமா எங்கயும் போயி சிறுகதைப் பட்டறை அட்டென்ட் பண்ணீங்களா ஆப்பிசர்...
  //

  பாலா பட்டறை..
  சங்கர்
  முதல் குறுக்கு சந்து..
  கருணா புரம்..
  அங்கதான் ஒட்டு கேட்டு எழுதினேன்..

  ReplyDelete
 46. @பிரவின்குமார் said...
  வணக்கம் தல..! எப்படி தலைவா... ஒருவரையும் விடுவதில்லை போலிருக்கே...! சும்மா...! அசத்துறீங்க..! போங்க..! ஹி..ஹிஹி...ஹஹாஹி..
  //


  நீங்க வேற சார்.. சில சமயம், மறந்தாப்படி, என்னைய , நானே திட்டிக்கிறேன்.. ஹி..ஹிஹி...ஹஹாஹி.

  ReplyDelete
 47. தீக்குளிக்கிறதும் ஒரு மூடப்பழக்கவழக்கம் தாண்ணே! நீங்க எழுதினதுலே எந்த தப்புமில்லே! அசத்தல்!!

  ReplyDelete
 48. @@ Pattapatti.//

  நீங்கள் மிகவும் நகைச்சுவையாக எழுதுகிறீர்கள்...வாழ்த்துக்கள்..

  மீண்டும் வருவான் வெளியூர்காரன்...!!

  ReplyDelete
 49. என்னையா பட்டு..பட்டாபட்டிய மாத்திட்ட போல..நல்லாருக்குயா இந்த துணி...!!

  ReplyDelete
 50. சேட்டைக்காரன் said...

  தீக்குளிக்கிறதும் ஒரு மூடப்பழக்கவழக்கம் தாண்ணே! நீங்க எழுதினதுலே எந்த தப்புமில்லே! அசத்தல்!!
  //

  டேங்ஸ்ண்ணே.. ஏண்ணே.. ஊர்ல, மண்ணெண்ணை சரியா எரிய மாட்டிங்கிதா?

  ReplyDelete
 51. Veliyoorkaran said...

  @@ Pattapatti.//

  நீங்கள் மிகவும் நகைச்சுவையாக எழுதுகிறீர்கள்...வாழ்த்துக்கள்..

  மீண்டும் வருவான் வெளியூர்காரன்...!!
  //

  யூ.. சங்கர்..?

  பனித்துளி சங்கர்?

  ReplyDelete
 52. Blogger Veliyoorkaran said...

  என்னையா பட்டு..பட்டாபட்டிய மாத்திட்ட போல..நல்லாருக்குயா இந்த துணி...!!
  //

  இது உல்லுலாய்க்கு.. சீக்கிரம், பழைய பட்டாபட்டி போடப்போறேன்.. ஹா..ஹா.. ( துவைக்க போட்டிருக்கேன்..)

  ReplyDelete
 53. \\மக்களே.. முட்டாளா இருக்காதீங்க..//

  நூத்துல ஒரு வார்த்த ...............துல குத்தரா மாதிரி சொல்லியிருக்கீங்க.

  ReplyDelete
 54. // அது பன்னிகுட்டி ராமாசாமினு ஒரு ஆள் , அடிக்கடி வெளியூரு ப்ளாக்ல மேய வருது..//

  யோவ்,என்னய்யா சொல்ற நீயி?சைக்கிள் கேப்ல வெளிய கலாய்சுட்ட பாத்தியா?(எப்பா,கோத்து விட்டாச்சு).....

  ReplyDelete
 55. வணக்கம்
  நண்பர்களே

  உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
  உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
  நன்றி
  தலைவன் குழுமம்

  http://www.thalaivan.com

  Hello

  you can register in our website http://www.thalaivan.com and post your articles

  install our voting button and get more visitors

  http://www.thalaivan.com/button.html


  Visit our website for more information http://www.thalaivan.com

  ReplyDelete
 56. அப்போ இது உங்க கதை இல்லையா

  ReplyDelete
 57. @வெறும்பய said...
  அப்போ இது உங்க கதை இல்லையா
  //

  அய்ய.. நான் தீக்குளிச்சா, என்னோட தலைவனோடத்தான் குளிப்பேன்..

  ReplyDelete
 58. @ILLUMINATI said...
  யோவ்,என்னய்யா சொல்ற நீயி?சைக்கிள் கேப்ல வெளிய கலாய்சுட்ட பாத்தியா?(எப்பா,கோத்து விட்டாச்சு).....
  //


  ஒண்ணும் பண்ண முடியாது.. சுறா படத்துக்கு, 100 டிக்கெட் கேட்டுருக்கேன்.. அதனால வெளியூரு, என்னைய ஒண்ணும் சொல்லமாட்டான்..

  ReplyDelete
 59. @கும்மாச்சி said...
  நூத்துல ஒரு வார்த்த ...............துல குத்தரா மாதிரி சொல்லியிருக்கீங்க.
  //

  என்ன ஒரு வருத்தமுனுனா, குளிக்கிறப்ப, அவனுக தலவனையும் கட்டிப்பிடிச்சுட்டு குளிச்சிருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும் சார்..

  ReplyDelete
 60. @Anand said...
  pattapatti
  //

  ஆங்.. கேக்குது..கொஞ்சம் சத்தமா சொல்லுங்க சார்..

  ReplyDelete
 61. @@@@ILLUMINATI said...
  // அது பன்னிகுட்டி ராமாசாமினு ஒரு ஆள் , அடிக்கடி வெளியூரு ப்ளாக்ல மேய வருது..//
  யோவ்,என்னய்யா சொல்ற நீயி?சைக்கிள் கேப்ல வெளிய கலாய்சுட்ட பாத்தியா?(எப்பா,கோத்து விட்டாச்சு).....///

  ஹா ஹா...ஏய் இவன் உலக நக்கல் புடிச்சவண்யா...எப்பா... நக்கல் விட எப்புடியெல்லாம் யோசிக்கரானுகப்பா...எலேய் இலுமு...கலக்கற மச்சி...!! :)

  ReplyDelete
 62. மங்குனி said...


  வாங்கப்பூ///

  டே இது யார்ரா?

  ReplyDelete
 63. @மங்குனி அமைச்சர் said...
  டே இது யார்ரா?
  //

  ஜெய்லானி?

  ReplyDelete
 64. இன்றைய நூசு : இனிமே பென்னாகரம் இடை தேர்தலில் தோல்வி அடைந்ததற்காக யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் - ஜெயலலிதா அறிக்கை

  ReplyDelete
 65. மங்குனி அமைச்சர் said...

  இன்றைய நூசு : இனிமே பென்னாகரம் இடை தேர்தலில் தோல்வி அடைந்ததற்காக யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் - ஜெயலலிதா அறிக்கை
  //

  சர்தான்.. எவனோ என்னோட பதிவ படிச்சுட்டு போட்டு குடுத்தான் போல.. ஹி..ஹி

  ReplyDelete
 66. இல்ல பட்டா லேடிஸ் வேணாம்ன,, வேணும்னு தானே அர்த்தம்

  ReplyDelete
 67. @மங்குனி அமைச்சர் said...
  இல்ல பட்டா லேடிஸ் வேணாம்ன,, வேணும்னு தானே அர்த்தம்
  //

  ஆமாம்..

  அது லேடிஸ் சொன்னாத்தானே..!!!!

  ReplyDelete
 68. இதெல்லாம் நல்லாயில்ல ஆமா....  யாரங்கே...

  ReplyDelete
 69. இப்படித்தான் நடந்திருக்கும்... எவனாவது கட்சிக்காரன் காசு வாங்கித் தர்றேன்னு கதை கட்டி விட்டிருப்பானுங்க.... :((

  ReplyDelete
 70. @அஹமது இர்ஷாத் said...
  இதெல்லாம் நல்லாயில்ல ஆமா....
  யாரங்கே...
  //

  ஆமாண்ணே.. நானும் த்லை தலையா அடிச்சுக்கிறேன், இப்படி பண்ணாதீங்கடானு..போயி குடும்பத்தை கவனிங்கடானு.. யாரும் கேக்க மாட்டிங்கிறாங்கணே...( எப்படி சமாளிச்சேன் பார்த்தீங்ளா...)

  ReplyDelete
 71. @துபாய் ராஜா said...
  இப்படித்தான் நடந்திருக்கும்... எவனாவது கட்சிக்காரன் காசு வாங்கித் தர்றேன்னு கதை கட்டி விட்டிருப்பானுங்க.... :((
  //

  கடைசியா மிஞ்சினது 1 லட்சம் ரூபாய் மற்றும் அம்மாவுடன் எடுத்துகிட்ட போட்டோ..

  ஆனா , அவனோட குடும்பம் பட்ட கஷ்டம்..?

  ReplyDelete
 72. ////”ஏய் ஓடுகாலி ...இந்த மண்ணென எடுத்து ஊத்துடி”னு, Bottle-ல ஒரு எத்து சார்..
  வயசாயிடுச்சு..குறி தவறி எண்ணெய் எம்மேல படவும், நான் அடுப்புகிட்ட விழவும்...”அய்யோ...அம்ம்ம்ம்மா.....”னு நான் ///


  ஹா ஹா ஹா ஹா ஹா

  ReplyDelete
 73. Blogger ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
  ஹா ஹா ஹா ஹா ஹா
  //

  வாங்கப்பு.. எப்படி இருக்கீங்க?

  ReplyDelete
 74. பட்டாபட்டி.. said...
  என்ன ஒரு வருத்தமுனுனா, குளிக்கிறப்ப, அவனுக தலவனையும் கட்டிப்பிடிச்சுட்டு குளிச்சிருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும் சார்../////


  நீயே ஐடியா குடுத்து மாட்டிக்காதே,மங்கு தீ குளிக்கும் போது நீயும் குளிக்க வேண்டி வரும்

  ReplyDelete
 75. @Muthu said...
  நீயே ஐடியா குடுத்து மாட்டிக்காதே,மங்கு தீ குளிக்கும் போது நீயும் குளிக்க வேண்டி வரும்
  //

  மங்குனி புரியாதே..அதனால பிரச்சனை இல்லை.. ஹா..ஹா

  ReplyDelete
 76. புது பதிவை போடு பட்டு

  ReplyDelete
 77. O.k..முத்து சார்..
  விரைவில..

  (யோவ்.. என்னா எழுதுவதுனு தெரியலையா... ஒரு டிப்ஸ் குடேன்..)

  ReplyDelete
 78. வெளியூரு... இப்பொவெல்லாம் ஏன்டா பட்டு மாமா தயிர்வடை சாப்பிட ஆரம்பிச்சுட்டான்!

  பட்டாபட்டி...நல்லா நாட்டுக்கோழியா ஒன்னை வறுத்து வைய்யா..!

  ReplyDelete
 79. @ரெட்டைவால் ' ஸ் said...
  வெளியூரு... இப்பொவெல்லாம் ஏன்டா பட்டு மாமா தயிர்வடை சாப்பிட ஆரம்பிச்சுட்டான்!
  பட்டாபட்டி...நல்லா நாட்டுக்கோழியா ஒன்னை வறுத்து வைய்யா..!
  //  சீக்கிரம் வறுக்கனுமைய்யா..
  என்ன.. மாட்றது எல்லாம் பன்னியா இருக்கு..

  அய்யா...கோழிக்காக வெயிட்டிங்..

  ReplyDelete
 80. பட்டாபட்டி..அட்ரஸ் மாறி வந்த லெட்டர் யா..கொஞ்சம் என்னன்னு கவனிச்சு புது பதிவு ஒன்னை போட்டு வை..அப்புறமா வர்றேன்!
  ***********************************

  பட்டாபட்டி அண்ணனுக்கு வணக்கம்..

  எனக்கு அப்பனும் ஆத்தாளும் வச்ச பேரு முனுசாமிங்க... இஸ்கூலு படிக்கும்போது வாத்தியாருங்க வச்ச பேரு தீவட்டி தடியனுங்க... சுமாரா படிப்பேனுங்க..அதுலயும் சின்ன வயசிலேயே அரசியலு, பொது விசயம்னா கொஞ்சம் இஷ்டமுங்க... எங்கூரு டீக்கடைல சலூன் கடைல நடக்குற எல்லா அரசியல் வாக்குவாதத்திலையும் நான் தானுங்க செயிப்பேன்... ஆனா பாருங்க நான் எந்த கட்சிலயும் கிடையாதுங்க... முத முதல்ல எம்.ஜி.ஆருக்கு ஓட்டு போட்டேனுங்க..அப்புறமா அவர் செத்த பின்னால கருணாநிதிக்கு போட்டேனுங்க..அப்புறமா ஒரு தபா புரட்சிதலைவிக்கும் திரும்ப கருணாநிதிக்கும் போட்டேனுங்க...

  ஊர் உலகத்துல எனக்கு ஆயிரம் பேரு இருந்தாலும் என் பொண்டாட்டி எனக்கு வச்ச பேரு இளிச்சவாயனுங்க..ஏன்னு கேக்கறீங்களா.. கொஞ்ச நாள் முன்னால எங்க ஊரு எம்.எல்.ஏ செத்துப் போனாருங்க.. ஊர்ல அத்தனை பயலுகளுக்கும் அம்புட்டு சந்தோசம்... ஏதோ ரொம்ப நாள் வேண்டுதல் நிறைவேறிட்ட மாதிரி சாராயத்தைக் குடிச்சு சந்தோசப்பட்டுக்கிட்டானுக.. எனக்கும் ஒன்னும் புரியலை..அப்புறம் தான் ஒரு பய சொன்னான்.."ஏ ஆக்கங்கெட்ட கூவ... எம்.எல்.ஏ செத்தா இடைதேர்தல் வரும்லே..நம்ம கடன் தொல்லையெல்லாம் தீந்துது"ன்னான். எனக்கு புரிஞ்சு போச்சு.. ஆனா பாருங்க நான் யோக்கியமான குடிமகனுங்கய்யா.. என் ஓட்டை காசுக்கு விக்கிறது எனக்கு புடிக்கலைங்கய்யா.. கைமாத்த வாங்கின ஒரு பத்தாயிரம் ரூவா கடன் கண் முன்னாடி வந்தாலும் நான் அசரலைய்யா ..ஆளுங்கட்சி எதிர்க்கட்சி எல்லாப்பயலும் வந்து கவர்ல கொட்டுனானுக... அடிச்சு துரத்தி விட்டுட்டேன்..

  பிரச்சினை அதில்லைங்கய்யா.. இப்போ அந்த கடனை கட்டியாவனும். நகையைக் குடுடி..அப்புறமா தர்றேன்னு சொன்னதுக்கு புள்ளையைக் கூட்டிட்டு அவ அப்பன் வீட்டுக்குப் போயிட்டாய்யா. ஏண்டின்னு கேட்டா இளிச்சவாயான்னு திட்டிட்டு ஊருக்குப் போய்ட்டாய்யா...

  அய்யா நான் என்ன பண்ணனும். இப்போ நானும் திருந்திட்டேன். எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் எம்.எல்.ஏ எல்லாவனும் உயிரோட இருக்கிறது தான் பிரச்சினைன்னு தோணுது. அட்லீஸ்ட் எங்க புது எம்.எல்.ஏவையாவது எப்படி போட்டு தள்ளறதுன்னு சொல்லிக்குடுங்கய்யா..! ஒரு குடும்பத்தைக் காப்பாத்தற புண்ணியம் வந்து சேரும்!

  ReplyDelete
 81. @@@ ரெட்டைவால் ' ஸ் said...
  பட்டாபட்டி..அட்ரஸ் மாறி வந்த லெட்டர் யா..கொஞ்சம் என்னன்னு கவனிச்சு புது பதிவு ஒன்னை போட்டு வை..அப்புறமா வர்றேன்!
  ***********************************

  ஆஹா...வராத லெட்டர்க்கே இவன் வளைச்சு வளைச்சு ஐடியா குடுப்பானே..பட்டாபட்டிக்கே பத்த வெச்சிட்டியே பரட்டை...!!

  எத்தன டெட் பாடி கரை ஒதுங்க போகுதோ..???

  ReplyDelete
 82. பட்டாபட்டி.. said...
  @ரெட்டைவால் ' ஸ் said...
  வெளியூரு... இப்பொவெல்லாம் ஏன்டா பட்டு மாமா தயிர்வடை சாப்பிட ஆரம்பிச்சுட்டான்!
  பட்டாபட்டி...நல்லா நாட்டுக்கோழியா ஒன்னை வறுத்து வைய்யா..!
  //
  சீக்கிரம் வறுக்கனுமைய்யா..///

  அதை சிறப்பாக வறுத்தீர்கள் என்றால் அருமையாக இருக்கும்..தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை..அற்புதம்..!! (நீ பார்மாலிட்டிக்கு எழுதுனா நாங்களும் பார்மாலிட்டிக்கு கமெண்ட் போடுவோம்..)

  ReplyDelete
 83. பட்டு...சும்மா ஃபோட்டோ போட்டு, கலர் கலரா எழுதி தாக்குய்யா...

  (வெளியூரு...இவனை ஏத்தி விடறது இவனுக்குத் தெரிஞ்சிருக்குங்கற...)

  ReplyDelete
 84. @Rettaivals//

  ஏய் ச்சீ..அசிங்கபடுதாதடா பட்டாபட்டிய...பட்டாபட்டிக்கு எதுடா மூளை..!! (நீ இன்னும் நல்லா ஏத்தி விடு..அப்பத்தான் இந்த மாங்கா எவனாயாச்சும் புடிச்சு ராவா கலாய்க்கும்..நாமெல்லாம் ஜாலியா கைகொட்டி சிரிக்கலாம்..!!) :)

  ReplyDelete
 85. // பட்டாபட்டி.. said...

  O.k..முத்து சார்..
  விரைவில..

  (யோவ்.. என்னா எழுதுவதுனு தெரியலையா... ஒரு டிப்ஸ் குடேன்..)//

  சானியா , மாலிக் திருமணம்

  ReplyDelete
 86. ரெட்ட , ராணுவம் அனேகமா நாம்ம மைலாபூர் பார்த்தசாரதி(பட்டா தான் ) ஐயர் மாமி எதையோ கரக்ட் பன்னுதுன்னு நினைக்கிறேன் ராணுவம் பாதுகாப்ப பலபடுத்தி அது யாருன்னு கண்ண்டுபுடி

  ReplyDelete
 87. பட்டு...லெட்டருக்கும் பதில் சொல்ல மாட்டற. சோனா ஏன் ஆஸ்திரேலியா போனாங்கறதயும் சொல்ல மாட்டேங்கிற... பதிவைப் பார்த்தா மலையாள ஆர்ட் ஃபிலிம் மாதிரி போடற...என்னய்யா நினைச்சுக்கிட்டு இருக்க நீ?

  ReplyDelete
 88. ரெட்டைவால் ' ஸ் said...

  பட்டு...லெட்டருக்கும் பதில் சொல்ல மாட்டற. சோனா ஏன் ஆஸ்திரேலியா போனாங்கறதயும் சொல்ல மாட்டேங்கிற... பதிவைப் பார்த்தா மலையாள ஆர்ட் ஃபிலிம் மாதிரி போடற...என்னய்யா நினைச்சுக்கிட்டு இருக்க நீ?
  //

  என்னத்த எழுதி.. என்னத்த பண்ணி..?

  ReplyDelete
 89. Sona why Australia fly naaa..??? You sollunga answer to enakku..!! I want to thernjika that answer for my kelvi...!!

  ReplyDelete
 90. அன்பின் பட்டாபட்டிக்கு ,

  உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. சிரிப்பாக உள்ளது.

  (வெளியூரு..இவன் கேக்கற மாதிரி தெரியலைன்னா..இப்படி ஃபார்மாலிட்டி கமென்ட் போட்டே இவனை கொல்லுவோம் ..என்ன சொல்ற..?)

  ReplyDelete
 91. கலக்கி விட்டீர்கள் போங்க....

  எப்படிங்க இப்படியெல்லாம்....

  சான்ஸே இல்லைங்க ... பின்னிட்டீங்க...

  மீ த 125463258625892

  (டேய் வெளி...அப்புறம் வேற என்னடா கமென்ட்ஸ்...எழவு இந்த நேரம் பார்த்து வரவே மாட்டேங்குது!)

  ReplyDelete
 92. @@@@ரெட்டைவால் ' ஸ் said...
  மீ த 125463258625892
  (டேய் வெளி...அப்புறம் வேற என்னடா கமென்ட்ஸ்...எழவு இந்த நேரம் பார்த்து வரவே மாட்டேங்குது!)///

  (யாமிருக்க கவலையேன்...இதோ ஸ்பாட்ல எறங்கறான் வெளியூர்காரன்..!! )

  மிகவும் அருமையாக எழுதி உள்ளீர்கள் திரு பட்டாப்பட்டி அவர்களே..அதுவும் அந்த மூன்றாம் வரி..அய்யோ, ஒரே சிரிப்புதான் பொங்கல்..ச்சேய்..போங்கள்..!!

  ReplyDelete
 93. @Pattapatti..//

  எப்புடி இதெல்லாம்..பின்னீட்டீங்க...மிகவும் அருமை...! (வக்காளி மனசு குறுகுறுத்து பட்டாப்பட்டி தற்கொலை பண்ணிக்கணும்..அதான் என் ஆசை...)

  ReplyDelete
 94. அப்பாடா..ஒரு பயலும் போட்டிக்கு இல்லாம நூறு அடிக்கறது எம்புட்டு கஷ்டமா போச்சு..இந்தாங்கடா டேய்..நான்தாண்டா நூறு..!!

  ReplyDelete
 95. Veliyoorkaran said...

  அப்பாடா..ஒரு பயலும் போட்டிக்கு இல்லாம நூறு அடிக்கறது எம்புட்டு கஷ்டமா போச்சு..இந்தாங்கடா டேய்..நான்தாண்டா நூறு..!!
  //

  யோவ்..ஆளில்லாத கடையில வந்து அலம்பரை பண்ணிட்டு இருக்க..
  நாங்க வீடு மாத்தி, அடுத்த பதிவுக்கு போயாச்சு..

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!