Pages

Thursday, April 1, 2010

தமிழர்கள் நன்றிகெட்டவர்களா?

என்னடா.. பட்டாபட்டி ,இன்னுமா, இடைதேர்தலில் இருந்து விடுபடலைனு, நினைக்கிற மக்களுக்குகாக இந்த பதிவு..

அரசியல்வாதிகளும் மனிதர்கள்தான்..அவர்களுக்கு குடும்பம்,குட்டினு இருக்கும்..    அதையெல்லாம் விட்டுவிட்டு, மக்களுக்காக,ஊண் உறக்கம் தவிர்த்து , வீதி வீதியாக அலைந்து ஓட்டு சேகரித்து..  ஒரு நிமிசம் நினைத்துப்பாருங்க சார்..உங்களுக்கே மனசு நெகிழும்..

ரைட்.. ரொம்ப நெகிழவிட்டுவிடாதீங்க..முதுகுத்தண்டு வளைந்துவிடும்..தேர்தல்னா என்ன?.. அண்ணாச்சி கடைக்கு போயி
1 கிலோ புண்ணாக்கு வாங்குவதுனு நினைச்சீங்களா? இல்ல சார்.. இல்லை..

Target - தொகுதி
தேர்தல் தேதி அறிவிச்சவுடன்..    முதல்வேலை அந்த தொகுதி எங்க இருக்குனு கண்டுபிடிக்கனும்..
சரியான தொகுதி..
சரியான மக்கள்..
சரியான நேரம்..

ஏன்னா..அவர்கள் உழைப்பு, விழலுக்கு இறைத்த நீராகிவிடக்கூடாது பாருங்க. அதனால..

Planning - கணிப்பு
தொகுதில எவ்வளவு நம்ம ஜாதி..எவன் எதிர்கட்சினு, பணம் கொடுத்தா குத்துவானுகளா?..   இல்ல சிக்கன் பிரியாணி+குவாட்டருக்கே குத்திட்டு போயிடுவானுகளா?....  எதிர்த்து நிற்பவன் பண முதலையா? இல்ல பச்சோந்தியா?....  போனதடவை சொன்ன வாக்குருதியை, , திரும்பவும் ரீமேக் பண்ணி எப்படி சொல்லுவது?..... அதெல்லாம் பொதுக்குழுவில முடிவு செஞ்சு, தொகுதிய,தரவாரியா பிரிக்கனும்..


Decision Making - வேட்பாளர்..

இது ரொம்ப கஷ்டமான காரியம் சார்..இதை பண்றது,
’விஜயகாண்டு வெச்சு பிட்டு படம் எடுத்து.. 100 நாள் ஓட்டறதுக்கு சமம்’..

இதுல முக்கியமா கவனிக்க வேண்டியது..
சொந்தக்காரன்..மாமன் , மச்சான்.. சகலையோ சித்தப்பா..
இல்ல.. நல்ல கொழுத்த பணக்காரன்..
இல்ல.. டம்பி பீசு.. எதுசொன்னாலும் தலையாட்டும் பாருங்க ..அதெல்லாம் கன்சிடர் பண்ணிட்டு,   பேரை அறிவிக்கனும்..


Action - தேர்தல் களம்

இதுல, கட்சிக்கு நிதிசேர்பது..
போஸ்டர் ஒட்டுவது..
தினமும் முச்சந்தியில் மீட்டிங்..
பணம் பட்டுவாடா..
கள்ள ஓட்டு..
நல்ல ஓட்டு..
கட்டைபஞ்சாயத்து..
பிரியாணி..
ஆள் சேர்ப்பது அடக்கம்...

OutCome - தேர்தல் முடிவு..
இங்க தான் சார் மூளைய உபயோகிக்கனும்..
ஜெயிச்சா.. நன்றினு ஒரு பெரிய கும்புடு போட்டுட்டு போயிட்டேயிருக்கனும்..
தோத்தா.. இது எதிர்கட்சிகளின் சதி..ஊழல் தலைவிரித்தாடிச்சு..
இன்னும் பிறக்காதவர்கள் எல்லாம் வந்து ஓட்டு போட்டுட்டானுக..
அடுத்த ஆட்சி எங்களுதுதான்.. bla..bla...bla..னு சொல்லிட்டு
போயிட்டேயிருக்க வேண்டியதுதான்..ஏன்னா.. காலம் கலிகாலம் சார்.. சீக்கிரம் திரும்பி வரவேண்டியிருக்கலாம்..  (உள்குத்து எதுவுமில்லை  -ஆசிரியர்)



Thanks Giving - மக்கள்
இந்த பார்ட்..நாம...அதாவது மக்கள்....
இப்படியெல்லாம் போராடி.. மக்களுக்கு நல்லது பண்ண வந்தா.. நக்கல் பண்ணிகிட்டு..சே..  கட்சிக்காரன் தோற்றானோ.. இல்ல ஜெயிச்சானோ.. அது வேற விசயம்..  ஆனா, பொழப்ப விட்டிவிட்டு உங்களுக்காக பாடுபட்டானே.. அவனுக்கு நீங்க என்ன பண்ணுனிங்க..?

ஓட்டு போட்டேனு சொல்லாதீங்க....
அது ஜனநாயகக்கடமை சார்..அதுவுமில்லாம காசு வாங்கித்தானே போட்டீங்க..அதைய பெரிய ம^%$ரா சொல்லக்கூடாது..

மாடுகளை மதித்து, மாட்டுப்பொங்கல்+ஜல்லிக்கட்டு கொண்டாடும் தமிழர்கள் நாம்..    ஆனால்.. இவர்களுக்கு எதுவும் பண்ணுவதில்லை நாம்.. ஏன்?..
இனிமேல நாம அவர்களுக்கு என்ன/எப்படி செய்யலாமுனு சொல்றேன்.. கேட்டுக்குங்க..

இதுக்கு தேவையானவை...
சைக்கிள் ( பைக் வேணாம்.. சாமகோடாங்கி பிரகாசு..எப்படி கார்பன் சுவடுகளுக்கு சப்போர்ட் பண்றேன்..)
மரப்பலகை( ரோஸ்விக்.. எனக்கு தெரியும்.. மரம் வெட்டுனா, நீர்வளம் குறையுமுனு..ஆனா வேற வழியில்லை எனக்கு..)
வேட்பாளர்கள் ( நம்மை வழிநடத்திச்செல்லும் தலைவர்கள்)
ஓட்டாளர்கள் ( அட நாமதான்..)




 அடுத்து மரத்தை வெட்டி..மேடான பாலம் மாறி செட்டப் செய்யுங்க..
தொகுதிக்கு பாடுபட்ட..தேர்தலில் நின்ற எல்லா வேட்பாளைகளையும்
வரச்சொல்லி.. வரிசையா படுக்கச்சொல்லனும்..அடுத்து..ஓட்டு போட்டவனுக
க்யூல நின்னு , கீழ உள்ள படத்தில் உள்ளது போல ஜம்ப் பண்ணுங்க.




.






 



விதிமுறைகள்..
ரேசன் கார்ட் உள்ளவர்களுக்கு மட்டும்தான் கலந்து கொள்ளலாம்..
கள்ள ஓட்டு கண்டிப்பாக அனுமதிக்கப்படாது..
ஒருவர் ஒரு தடவைதான் ஜம்ப் பண்ணனும்..
யார் மேலையும் படாமா, ஜம்ப் பண்ணிவிட்டால்..1 குவாட்டர் இலவசம்..
ஒரு வேட்பாளர் மேல் பட்டுவிட்டால்.. அவருக்கு நீங்கள் 5கிலோ ரேசன் அரிசியும்..2 சாத்துகுடியும் கொடுக்கவேண்டும்..
இரண்டு வேட்பாளர்கள்மேல் பட்டுவிட்டால்..5 கிலோ அரிசி + 2 சாத்துக்குடி + நீங்கள் அவரிடம் வாங்கிய பணத்தையும் திருப்பிகொடுக்கவேண்டும்..


ஓ.கே..

ஆரம்பியுங்கள்.. ஸ்டார்ட்..
.
.
இந்த விளையாட்டு, வீடியோ கேமரா மூலமாக,கண்காணிக்கப்படுவதால்..ஊழல் நிகழ வாய்ப்பில்லை  என
தினக்குசும்பு நிருபர் பேட்டி அளித்துள்ளார்....
.
.
.

57 comments:

  1. பட்டா,

    செருப்பால அடிச்சாலும் திருந்த மாட்டானுங்க! பேசி வேஸ்ட்...

    மாற்றம் வரது ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப் கஷ்டம்.

    மூடிகிட்டு நம்ம வேலைய பாப்போம் நண்பா!

    பிரபாகர்...

    ReplyDelete
  2. @பிரபாகர் said...
    பட்டா,
    செருப்பால அடிச்சாலும் திருந்த மாட்டானுங்க! பேசி வேஸ்ட்...
    மாற்றம் வரது ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப் கஷ்டம்.
    மூடிகிட்டு நம்ம வேலைய பாப்போம் நண்பா!
    பிரபாகர்...
    //

    எறும்பு ஊற, கல்லும் தேயும்..

    வரும்..நல்ல காலம் கண்டிப்பாக வரும் நண்பரே...

    ReplyDelete
  3. //பென்னாகரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வியால் தீக்குளித்த அக்கட்சித் தொண்டரைப் பார்ப்பதற்காக, கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வியாழக்கிழமை ஈரோடு செல்கிறார்.
    ஈரோடு, பி.பி. அக்ரஹாரம், 18}வது வார்டில் வசிக்கும் அ.தி.மு.க. தொண்டர் தங்கவேல் (55). இவர், பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வியை அடுத்து, செவ்வாய்க்கிழமை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.//


    கோழைகள்.. சாகுங்கடா தக்காளிகளா..
    ஏன் இப்படி இருக்கானுகோ பன்னாடை பயலுக?

    ReplyDelete
  4. என்னாதான் சொன்னாலும் எவனும் திருந்தபோறதில்லை பட்டா. எலெக்ஷன் நாளை லீவு நாள்னு நெனைச்சி துாங்கும் மக்கள் இருக்குமவரை எதுவும் மாறாது. மேலும் மக்களிடையே கூட நேர்மை என்ற வஸ்து சுத்தமாக காணாமல் போய்விட்டதே.

    ReplyDelete
  5. அப்பாவிApril 1, 2010 at 12:47 PM

    ஏப்ரல் 1 என் இனிய
    " இந்திய மக்கள் தின" வாழ்த்துக்கள்
    இந்த நல்ல நாளில், காவிரில, கங்கை தண்ணிய குடிக்கற மாதிரி , கருப்பு பணம் 73 லட்சம் கோடி வர மாதிரி, பெட்ரோல் வெல கொறையரா மாதிரி, ஒரு கனவ,அடிக்கடி நினச்சி பாத்து சந்தோஷமா இருக்கணும் .
    தாத்தா டிவி ல போடற " மானாட மயிலாட" பாத்துட்டு சமத்தா இருக்கணும் ... o.k va...

    ReplyDelete
  6. Thanks giving - ல சைக்கிளுக்கு பதில்
    வேற ஏதாவது Heavy vechicle - போடுங்க தல.

    ReplyDelete
  7. //சைவகொத்துப்பரோட்டா said...
    Thanks giving - ல சைக்கிளுக்கு பதில்
    வேற ஏதாவது Heavy vechicle - போடுங்க தல//


    Heavy vechicle ,அப்படினா 160 டயரோட ஒரு வண்டி பெரிய ஆஞ்சிநேயர் சிலை ஒன்ன எடுத்துகிட்டு அர்ஜுன் சார் , தோட்டத்துக்கு கொண்டு வருது அந்த வண்டி எடுத்துக்கலாமா ?

    ReplyDelete
  8. @சைவகொத்துப்பரோட்டா said...
    Thanks giving - ல சைக்கிளுக்கு பதில்
    வேற ஏதாவது Heavy vechicle - போடுங்க தல.
    //


    @மங்குனி அமைச்சர் said...
    Heavy vechicle ,அப்படினா 160 டயரோட ஒரு வண்டி பெரிய ஆஞ்சிநேயர் சிலை ஒன்ன எடுத்துகிட்டு அர்ஜுன் சார் , தோட்டத்துக்கு கொண்டு வருது அந்த வண்டி எடுத்துக்கலாமா ?
    //

    நான் இலவச கருத்தடை ஆப்பரேசன் மட்டும் பண்ணலாமுனு பார்த்தா,
    நீங்க சவப்பொட்டிக்கு ஆர்டர் கொடுக்கிறீங்க..

    அப்புறன் இன்னும் ஒரு இடைத்தேர்தல்...தாங்குமா?

    ReplyDelete
  9. பட்டு ஜம்ப் பண்ணும்போது சைக்கிள் பட்டு( அட நீ இல்லையா) வேட்பாளர் டங்குவார் கிழிஞ்சா. சாத்துகுடி பத்தாதயா?


    அடப்பாவி நீ இலவச கு .க வுக்கு இல்ல வழி சொல்ற......

    ReplyDelete
  10. அப்பதான் குடுமப அரசியல்ல எவனும் வரமாட்டான் .ஜெய்ச்சாலும் பயம் இருக்கும்.

    ReplyDelete
  11. @ ஜெய்லானி said...
    அடப்பாவி நீ இலவச கு .க வுக்கு இல்ல வழி சொல்ற..
    //


    Win-Win situvation..

    எல்லாப் பிரச்சனைக்கும் காரணம் அதுதானே..( நித்தி..வாரிசு அரசியல்..etc..)

    ReplyDelete
  12. என்ன பட்டா போன பதிவில் நான் க்டைசியா ஒரு பின்னூட்டம் போட்டேன் பதிலைக் கானேம். படிய்யா போய்யா போஆஆஆஆஅ.

    ReplyDelete
  13. @பித்தனின் வாக்கு said...

    என்ன பட்டா போன பதிவில் நான் க்டைசியா ஒரு பின்னூட்டம் போட்டேன் பதிலைக் கானேம். படிய்யா போய்யா போஆஆஆஆஅ.
    //

    ஆங்..போன பதிவா?..இருங்கப்பு.. பாத்துபுட்டு வாரேன்..

    ReplyDelete
  14. அப்பாவிApril 1, 2010 at 3:11 PM

    பட்டாப்பட்டி .... தமிழர்களின் , நேர்மையும், நாணயமும் ISO முத்திரை பெற்றது. வாங்கன காசுக்கு, வஞ்சன இல்லாம குத்துவாங்க... ஒட்டு தான் .
    அ . நெ வோட இந்த பார்முலாவ ஒபாமாவே கேட்டதா கேள்வி . தாத்தா 200 தொகுதில வெற்றி பெறுவோம்ன்னு சொல்லி இருக்காரு .. பாவம் மிச்ச தொகுதிக்கு காசு குறையுது போல.. எல்லாரும் சேந்து ஏதாவது உதவி பண்ணலாம் பட்டாப்பட்டி

    ReplyDelete
  15. @அப்பாவி said...
    பட்டாப்பட்டி .... தமிழர்களின் , நேர்மையும், நாணயமும் ISO முத்திரை பெற்றது. வாங்கன காசுக்கு, வஞ்சன இல்லாம குத்துவாங்க... ஒட்டு தான் .
    அ . நெ வோட இந்த பார்முலாவ ஒபாமாவே கேட்டதா கேள்வி . தாத்தா 200 தொகுதில வெற்றி பெறுவோம்ன்னு சொல்லி இருக்காரு .. பாவம் மிச்ச தொகுதிக்கு காசு குறையுது போல.. எல்லாரும் சேந்து ஏதாவது உதவி பண்ணலாம் பட்டாப்பட்டி
    //

    ஸ்பெக்டரமுல சம்பாரிச்சது பத்தலையா?..அய்யோ பாவம்..
    இதுல வேற, வீட்ட பொதுமக்களுக்கு கொடுக்கிறேனு வாக்கு கொடுத்திட்டாரே..
    .
    .
    உடுங்க.. மக்களை காலை..மாலை டாஸ்மார்க் போகச்சொல்லலாம்.. இரட்டை வருமானம் வருமே..

    ReplyDelete
  16. என்னைய்யா... நம்ம ப.மு.க. ஒரு கார்பொரேட் கட்சியா மாறிகிட்டு வருது... ம்ம்ம்

    தேர்தலை விட தேர்தல் விளக்கம் அமர்க்களப்படுது...

    ReplyDelete
  17. பேசமா ஈசியா ஒரு வழி இருக்கு... அது மாதிரி பண்ணிடலாமா...

    எல்லாப் பயலுகளையும் காலை அகட்டி மல்லாக்க படுக்க சொல்லி (வின்னர் வடிவேலு மாதிரி) சின்ன பயலுகளை விட்டு லாரி டயர ஒட்டி விளையாட சொல்லுவமா..??

    ReplyDelete
  18. ஐந்து கிலோ அரிசி, சாத்துக்குடி பழம் எல்லாம் நம்ம ப.மு.க. சார்பா குடுத்திரலாம்.

    ReplyDelete
  19. @ரோஸ்விக் said...

    ஐந்து கிலோ அரிசி, சாத்துக்குடி பழம் எல்லாம் நம்ம ப.மு.க. சார்பா குடுத்திரலாம்.
    //

    ஏம்பா.. துக்கத்தில பங்கெடுத்துக்க, ப.மு.க விட்டா யார் இருக்கா?..

    மேல சொன்னதுடன், கூட, 1 பவுன் காசு கொடுக்கலாமையா..

    ReplyDelete
  20. மங்குனி, ரெட்டை, வெளியூரு, ஜெய்லானி , முத்து மற்றும் ரோஸ்விக் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..


    யோவ்.. கடைய தொறந்து வெச்சுட்டு ஈ ஓட்டிட்டு இருக்கேன்யா..
    போர் அடிக்குது..

    அப்புறம் அடுத்து கவிதை எழுத ஆரம்பிச்சுடுவேன்..வருத்தப்படக்கூடாது

    ReplyDelete
  21. கு.க .பண்ண சுலபமான வழி

    ReplyDelete
  22. @Muthu said...
    கு.க .பண்ண சுலபமான வழி
    //

    நல்ல வேலை.. பேச்சு துணைக்கு நீயாவது வந்தே..

    ReplyDelete
  23. வந்துட்டேன்

    ReplyDelete
  24. @முத்து.
    ஏய்யா.. உம்மோட ப்ளாகில ஜோதிகா, தலைய தலைய ஆட்டிட்டு இருக்கே.. கழுத்து புடிச்சுக்காது?..

    ஆமா உம்மோட தமிழ் ப்லாக் என்னாச்சு?.. வித்துட்டுயா?

    ReplyDelete
  25. ரோஸ்விக் said...

    பேசமா ஈசியா ஒரு வழி இருக்கு... அது மாதிரி பண்ணிடலாமா...

    எல்லாப் பயலுகளையும் காலை அகட்டி மல்லாக்க படுக்க சொல்லி (வின்னர் வடிவேலு மாதிரி) சின்ன பயலுகளை விட்டு லாரி டயர ஒட்டி விளையாட சொல்லுவமா..??/////


    இந்த நேர்மை தான் உங்களிடம் பிடித்தது

    ReplyDelete
  26. @Muthu said...
    இந்த நேர்மை தான் உங்களிடம் பிடித்தது
    //
    ஏன்.. கட்டிங் பிளேயர் யூஸ் பண்ணலாமில்ல.. வலிக்காது..

    ReplyDelete
  27. பட்டாபட்டி.. said...

    @முத்து.
    ஏய்யா.. உம்மோட ப்ளாகில ஜோதிகா, தலைய தலைய ஆட்டிட்டு இருக்கே.. கழுத்து புடிச்சுக்காது?..//////

    அது சூர்யா,பிரச்னை

    ஆமா உம்மோட தமிழ் ப்லாக் என்னாச்சு?.. வித்துட்டுயா?/////

    copy paste பண்ண பிடிக்கவில்லை நிறுத்திவிட்டேன்

    ReplyDelete
  28. பட்டாபட்டி.. said...
    //
    ஏன்.. கட்டிங் பிளேயர் யூஸ் பண்ணலாமில்ல.. வலிக்காது..///

    அத்தனை கட்டிங் பிளேயர்க்கு எங்க போறது

    ReplyDelete
  29. Muthu said...

    பட்டாபட்டி.. said...
    //
    ஏன்.. கட்டிங் பிளேயர் யூஸ் பண்ணலாமில்ல.. வலிக்காது..///

    அத்தனை கட்டிங் பிளேயர்க்கு எங்க போறது
    //
    ஒண்ணு போதாது.. திரும்ப திரும்ப யூஸ் பண்ணிக்கலாம்.. அவனுகளுக்கு அதே அதிகம்

    ReplyDelete
  30. பட்டாபட்டி.. said...
    மேல சொன்னதுடன், கூட, 1 பவுன் காசு கொடுக்கலாமையா../////

    கணக்கு வழக்கை நான் பார்த்து கொள்கின்றேன்,ப மு.க உறுபினர்களே உங்க வீட்டை விற்று காசை என் அக்கௌன்ட்டுக்கு அனுப்பவும்

    ReplyDelete
  31. கணக்கு வழக்கை நான் பார்த்து கொள்கின்றேன்,ப மு.க உறுபினர்களே உங்க வீட்டை விற்று காசை என் அக்கௌன்ட்டுக்கு அனுப்பவும்
    //
    அது சூப்பரு.. ஆட்சிக்கு வந்தா, வட்டியொட அள்ளிடனும் முத்து..

    ReplyDelete
  32. பட்டாபட்டி.. said... //
    ஒண்ணு போதாது.. திரும்ப திரும்ப யூஸ் பண்ணிக்கலாம்.. அவனுகளுக்கு அதே அதிகம்////

    என் profil உள்ள கத்தியை use பண்ணிகலாமா .

    ReplyDelete
  33. பட்டாபட்டி.. said... //
    அது சூப்பரு.. ஆட்சிக்கு வந்தா, வட்டியொட அள்ளிடனும் முத்து..//

    வட்டியா,பட்டாபட்டியை கூட விட கூடாது (உன்னை சொல்லலை)

    ReplyDelete
  34. என் profil உள்ள கத்தியை use பண்ணிகலாமா .
    //

    அதுவும் சரிதான்.. ஆனா கூர்மையா இருக்குமா..?...

    ReplyDelete
  35. பட்டாபட்டி.. said...
    ஒண்ணு போதாது.. திரும்ப திரும்ப யூஸ் பண்ணிக்கலாம்.. அவனுகளுக்கு அதே அதிகம்/////

    இந்த வேலையை மன்குவிடம் ஒப்படைக்கலாம்,அவர் தான் இது மாதிரி வேலையை தவம் மாதிரி பண்ணுவார்

    ReplyDelete
  36. பட்டாபட்டி.. said...

    என் profil உள்ள கத்தியை use பண்ணிகலாமா .
    //

    அதுவும் சரிதான்.. ஆனா கூர்மையா இருக்குமா..?.../////


    வேணும் என்றால் நம்ம பன்னி குட்டியிடம் டெஸ்ட் பண்ணி பார்க்கலாம் சரியா

    ReplyDelete
  37. மங்குனிய எங்க காணோம்..?.. ஆமா எப்ப , இந்தியா பயணம்?

    ReplyDelete
  38. வரதராஜலு .பூ said...

    மேலும் மக்களிடையே கூட நேர்மை என்ற வஸ்து சுத்தமாக காணாமல் போய்விட்டதே.////

    அது சரி வஸ்து புரியுது. ,நேர்ம்மைனா!!! என்ன தலைவா

    ReplyDelete
  39. பட்டாபட்டி.. said...

    மங்குனிய எங்க காணோம்..?.. ஆமா எப்ப , இந்தியா பயணம்?////

    அடுத்த வருடம் ஜூன் மாதம்

    ReplyDelete
  40. Muthu said...

    பட்டாபட்டி.. said...

    மங்குனிய எங்க காணோம்..?..


    பொன்னகரம் தொகுதி பக்கம் அலைவதாக செய்தி

    ReplyDelete
  41. நான் ஆகஸ்ட் வரலாம் என் நினைக்கிறேன்.. ரெட்டை, மற்றும் மங்குனியை சிங்கை வரச்சொல்லியிருக்கேன்.. உம்மால் வரமுடியுமா?...

    ReplyDelete
  42. பட்டு நம்ம வெளி நைசா ஒரு பிகருக்கு அவர் blog ல் நூல் விட்டு இருக்கார் கவனிச்சியா

    ReplyDelete
  43. இது ஹாட் நியூஸ் ஆச்சே.. அட்ரஸ் குடு

    ReplyDelete
  44. பட்டாபட்டி.. said...

    நான் ஆகஸ்ட் வரலாம் என் நினைக்கிறேன்.. ரெட்டை, மற்றும் மங்குனியை சிங்கை வரச்சொல்லியிருக்கேன்.. உம்மால் வரமுடியுமா?...////

    வருவதை பற்றி ஒன்றும் இல்லை நானும் எங்க வுட்டு அம்மா தங்குவதற்கு இடம் இருந்தால் இந்த சம்மேர் கூட வரலாம்

    ReplyDelete
  45. கடுப்பை கிளப்பும் பெண்கள் பார்ட் - 4 ...": yai paru

    ReplyDelete
  46. அட,.. அதெல்லாம் ஒரு பிரச்சனையா?.. எனக்கு ஒரு மெயில் அனுப்பு..

    pattapatti.cbe@gmail.com

    ReplyDelete
  47. ரொம்ப நன்றி நண்பா,வெளி ரவுசை பாரு

    ReplyDelete
  48. ரைட் .. நாளைக்கு சாட் பண்ணலாம்.. மறக்காம மெயில் அனுப்பு..

    ReplyDelete
  49. எனக்கு இன்னும் ஓட்டு போடுற வயசு ஆகலையே தல!

    ReplyDelete
  50. சைக்கிள் ஓட்ட லைசன்ஸ் வேணுமா, வேணாமான்னு சொல்லலையே!?

    ReplyDelete
  51. @வால்பையன் said...

    எனக்கு இன்னும் ஓட்டு போடுற வயசு ஆகலையே தல!
    //

    நமக்கு எதுக்குனே லைசன்ஸ்சு..? ஆனா, ஹெல்மட் மறக்காம போட்டுகுங்க..பாதுகாப்பு முக்கியம்

    ReplyDelete
  52. பட்டு,புது போஸ்ட் போட்டுட்டேன்.ஆனாலும் உமக்கு தற்கொல மேல இவ்ளோ ஆசையா ராசா.....

    ReplyDelete
  53. @மசக்கவுண்டன் said...
    நல்ல தமாசுங்க
    //

    நன்றிங்க கவுண்டரே..

    ReplyDelete
  54. @ILLUMINATI said...
    பட்டு,புது போஸ்ட் போட்டுட்டேன்.ஆனாலும் உமக்கு தற்கொல மேல இவ்ளோ ஆசையா ராசா.....
    //

    நான் ஏய்யா தற்கொலை பண்ணிக்கனும்.. ?

    சரி.. இரு பதிவ படிக்க வாரேன்..

    ReplyDelete
  55. ஆனா தல.. அரசியலையும் சாப்ட்வேரையும் எப்படி இப்படி கொத்து பரோட்டா பண்ணி வெச்சிருக்கீங்க..?

    ஆனா இந்த அரசியல் ரொம்ப கஷ்டமான விஷயம் தான் போல...?

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!