Pages

Wednesday, November 25, 2009

தெய்வம் தந்த பூவே...

ஹாயா ஹால்ல உக்காந்து டீவி பாத்துட்டு இருந்தேன்...அப்போது என்னுடய தொலைபேசி அலறியது..யாரு-னு எட்டிப்பாத்தா "சின்ராசு"...

ஆகா, சனிஸ்வரன் ஞாயிற்றுக்கிழமையும் ஓவர் டைம் செய்யறாரு போல நினைத்து , தொலைபேசிய ஆப் பண்ணலாமுனு முடிவுசெய்தேன். அதுக்குள்ள என்னுடைய வாண்டு போன ஆன் செய்துவிட்டது...

சரின்னு கடவுள்மேல பாரத்தப்போட்டு "சொல்லு சின்ராசு "-னு சொன்னேன்.
"இல்ல . ரொம்ம நாளா ஆளைப்பாக்க முடியவில்ல.. ரொம்ப பிசியா?" -னு நக்கலா கேக்கிறான். நானு "இல்ல சின்ராசு......, ஆமா சின்ராசு.... " உளறிட்டு , "அப்புறம் என்ன விசேசம் ?" கேட்டபிறகுதான் , எனக்கு சுரீர்-னு ஆகா...
சனிஸ்வரரு நம்ம நாக்குல வந்து உக்காந்திட்டார்னு உறைத்தது......

அதுக்குள்ள சின்ராசு, எங்க எத்தன மணிக்கு மீட் பண்ணனுமுனு முகூர்த்தம் பிக்ஸ் பண்ணிட்டான். முடியாதுன்னு சொன்னா மொன்னா ஞாயம் பேசுவான்..சரி.. வேற வழி-னு பஸ் எறி சொன்ன டைமுக்கு " ஜுராங்க் ஈஸ்ட் " போயிட்டேன்.

பார்க்-ல பெரிய ஜமா கூடியிருந்தது...கூட்டத பாத்ததும் , ஓகே..இன்னைக்கு எப்படியும் தப்பிச்சிறலாம்னு நம்பிக்கை வந்திருச்சு....

எப்போதும் போல ,
இந்தியாவ இங்கிருந்தே தூக்கி நிறுத்தலாமா?.. இல்லாட்டி ஊருக்கு போன் பண்ணி நம்ம மக்காகிட்ட சொல்லி முட்டுக்குடுக்கலாமானு பேசிட்டிருந்தோம்..

அப்போ, ஒரு வயதான இந்திய மூதாட்டி , சிறு சீனக்குழந்தையுடன் வாக்கிங்க் போயிட்டிருந்தது... நாங்க தமிழில் பேசிட்டிருப்பதைப் பார்த்து பக்கதில் வந்து "எல்லா ஊர்காரங்களா ? இங்க வேலை செய்கிறீர்களா ?"-னு கேட்டாங்க..

சின்ராசு முந்திக்கிட்டு "
ஆமாங்கோ பாட்டி..."னு நக்கலா சொல்ல, பாட்டி மூஞ்சி மாறிடுச்சு... நாங்க பேச்சைமாற்ற ,"குழந்தை அழகாக இருக்குங்க.. பக்கத்துவீட்டு பாப்பாங்களா ?" - னு கேட்க "இல்ல தம்பிகளா.. என்னொட பேத்திதான் " பாட்டி சொல்லுச்சு...

ஓகே.ரைட்டு..
பாட்டி பையன் சீன சரக்க கல்யாணம் பண்ணிட்டாம்போல..பாட்டிக்கு ரொம்பவே பெரிய மனசுதானு நினச்சுட்டோம்.. திடீர்னு குழந்த ஓட ஆரம்பிச்சது.. பாட்டி இங்கிருந்தே " செல்லம்.. மெதுவா போம்மா " கத்துச்சு...

சின்ராசு பாட்டிகிட்ட நல்லபேரு வாங்கனமுனு முடிவுபண்ணிட்டு "பரவாயில்லைங்க.. குழந்தைக்கு தமிழெல்லாம் சொல்லிகொடுக்கிறீங்க .." சொல்ல
(பாட்டிங்கரத முழுங்கிட்டான் ) , பாட்டி அவன ஒரு மொறை மொறச்சது....

சரின்னு நாம எங்க வேலையப்பார்ப்போமுனு வெட்டி கதை பேச ஆரப்பித்துவிட்டோம்... கொஞ்ச நேரம் கழித்து சின்ராசு என்ற முதுகச்சொறிஞ்சு சைடுல கையக் காண்பிக்கிறான்..


திரும்பிப் பார்த்தா , ஒரு 30 வயது , தமிழ் பொண்ணு ( தொட்டு பொட்டு வச்சுக்கலாம்... ) அந்தக் குழந்தையை கொஞ்சிட்டிருந்தது.. மெதுவா பாட்டியப் பார்த்து "அது யாருங்க" னு நான் கேட்க , "அதுதான் தம்பி என்ற மருமகள்." ங்குது பாட்டி..

சின்ராசு முகம் திடீர்னு
பல்பு போட்டமாறி பிரகாசமாயிடுச்சு...ஓகே.. சின்ராசு ஏதோ வில்லங்கம் பண்ணறதுக்குள்ள இடத்த காலி பண்ணிடலாமுனு அவசர அவசரமா எந்திரிச்சு நகர ஆரம்பித்தோம்..


சின்ராசு அப்பாவியா முஞ்சிய வெச்சுட்டு பாட்டிகிட்ட "குழந்த அழகா சீனப்பாப்பா மாதிரி இருக்குதுங்க.." சொல்றான்.. பாட்டி பல்லைக் காண்பிச்சுட்டு
" என்ற மருமகள் எப்ப பாத்தாலும் சீனச்சாமியே கும்பிடுவா..அதனால சாமியே பாத்து சைனாக்காரங்க மாறி புள்ளையக் கொடுத்திருச்சு" னு சொல்லுது...

சின்ராசு அங்கிருந்தே
"விதை ஒண்ணு போட்டால், சொறை ஒண்ணு முளைக்கும்..
சொறை ஒண்று முளைத்தால் யாருக்கு லாபம்" னு

பாடிட்டே எங்களை பார்த்துவரான்...

" போதுன்டா உன்ற சாகவாசம் ..இப்படியா பேசறது.. " நான் சொல்ல ,
"
டேய், வாடா போயி ஜப்பாங்கார சாமி கும்பிடலாம் " னு பல்லைக் காண்பிக்கிறான் இந்த மானங்கெட்ட சின்ராசு....
Tuesday, November 24, 2009

சரித்திரம் மாறிவிட்டதா?

அன்று ஆகஸ்ட் 15..சுதந்திரதினம்.. காலையில வீதியில சும்மா நடந்து போயிட்டு இருந்தபோது, எதுத்தாப்ல சின்ராசு வந்தான். சரி..எதுக்கு நாமளா போயி சனிஸ்வரனுக்கு சல்யூட் வெக்கனுமு நினைத்து வெரச வேற பக்கம் திரும்பிட்டேன்...

அப்பாடா ஒரு வழியா தப்பியாச்சுன்னு நினைக்கரப்போ, இளிச்சுட்டே சின்ராசு தோளைத் தொட்டு "அப்புறம் ..கொண்டாட்டமெல்லாம் எப்படியிருக்குனு " பல்லைக் காண்பிக்கிறான். சரி.. மாட்டியாச்சுனு நினைத்து திரும்பி ஈ...னு நானும் சிரித்துவைத்தேன்.

அப்ப ஒரு ஸ்கூல் பையன் கொடியெல்லாம் குத்திட்டு நடந்து போயிட்டுருந்தான். பேச்சை திசை திருப்பலாமுனு "அப்புறம் தம்பி.. ஸ்கூலுக்கா ? " -னு கேட்டேன்..
அவன் பதில் சொல்வதிற்குள் சின்ராசு, குறுக்கபூந்து "தம்பி.. நமக்கு யாரு சுதந்திரம் வாங்கிதந்தது ? " ஒரு பிட்-ட போட்டான். பையனும் சந்தோசமா " காந்தி தாத்தா " னு சொன்னான்.

சின்ராசு வில்லங்கத்த ஆரம்பிசிட்டானு தெரிந்துவிட்டது. நான் முந்திக்கிட்டு "சரி தம்பி..தாத்தா தவிர வேற யார், யார் எல்லாம் வாங்கிதந்தா?" எனக் கேட்டு சின்ராசுக்குத் தெரியாம சைகை செஞ்சேன். பையனும் மண்டைய சொறிச்சிக்கிட்டே "நேரு மாமா..." னு சொல்றான்.

ஓகே.. சனிஸ்வரன் வேலைய ஸ்டார்ட் பண்ணிட்டாரு..இனி நம்ம கைல ஒண்ணுமில்ல-னு முடிவு பண்ணிட்டேன்..

"சரிடா,
பகத்சிங் , சுபாசு , வ.உ.சி இவங்கெல்லாம் யாரு "னு சின்ராசு கேட்க,
"இவங்கெல்லாம் போராட்டத்தில கலந்துக்கிட்டவங்க" - னு பையன் சொல்றான்...

சரி..சின்ராசு..... பையன் மனசில நஞ்சக் கலந்துராதே.னு சொல்லிட்டு பையன விரட்டிவிட்டேன். ஒரு வழியா , பையன தப்பிக்க விட்டாச்சுனு பெருமுச்சு விட்ட போது சின்ராசு என்னப் பாத்து ஒரு கேனச்சிரிப்ப சிரித்தான்.

"சின்ராசு..எனக்கு நேரமாச்சு...கிளம்பறென்.." சொல்லிட்டு ிரும்பறேன்..குறுக்கால கையவெச்சு வழிய மறிக்கிறான். "நா சொல்ற கதயக் கேட்டுட்டு அப்புறம் எக்கேடோ கெட்டு ஒழி.." னு சொல்லிட்டு ஒரு கதை சொல்றான்.

ஒரு ஊர்ல பெரிய மாமரத்தோட்டம் இருந்துச்சு.. திடீர்னு ஒரு நாள், வெள்ளை குரங்கொன்று மரத்துமேல உக்கார்ந்துட்டு தோட்டதில வேலை செய்பவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது...

அதைப்பார்த்த மக்கள், "ஆகா.. வெள்ளக் குரங்கு வெள்ளக் குரங்கு " என் வாயப்பொளத்துட்டு வேடிக்கை பார்த்தனர். அதுல சில பெரிய மனுசங்க , குரங்கு வெள்ளையா இருப்பதனாலே, அது
கடவுளின் மறு உருவமுன்னு ஊர் சனங்களுக்கு சொல்லி, குரங்குக்கு நல்ல மாம்பழங்களை கொடுத்தனர். குரங்கு அத சாப்பிட்டுவிட்டு பெரிய மனுசனுக்ளைப் பார்த்து , பெரிசா ஒரு கும்புடு போட்டது..

அதப் பார்த்த பெரிய மனுசனுகளுக்கு , கால் ஒரு வாரமா, தரையில் படவில்லை...

இப்படி போயிட்டுருக்கும் போது ,கொஞ்ச நாள் கழித்துப்பார்த்தால் , எல்லா மரத்திலும் குரங்கு குட்டிகளா இருத்தது...பெரிய மனுசனுக பார்த்தாங்க.. ஆகா.. இப்படியே விட்டா, நமக்கு ஒண்ணும் கெடைக்காதுன்னு முடிவு பண்ணி அத விரட்டப்போனார்கள். குரங்குகள் குச்சிய எடுத்துட்டு வந்தவர்களை தொரத்த ஆரம்பித்தது...

அப்பொ , பெரிய மனுசனுக , வேட்டிய குண்%#$ மேல கட்டிட்டு , "
என்ன மெரட்டுனா நான் சாப்புடமாட்டேன்.. எங்க சாதி, சனமெல்லாம் , தோட்டத்திலிருந்து நீ வெளிய போறவரைக்கும் வீட்டுக்குள்ளார போகமாட்டொம்.. சோத்துல உப்பு போடமாட்டோம்.. பல்லுல பச்ச தண்ணி படாம உண்ணாவிரதம் இருப்போம் "-னு சொல்லிட்டு இருந்தாங்க...

அப்போ சில வீர இளை ஞர்கள் கம்பு, கடப்பாரை எல்லாம் தூக்கிகிட்டு, "
ங்க்கொய்யாலே..ஓடிப்போகலைனா உனக்கு சங்கு தாண்டி" சொல்லிட்டு குரங்குகளை விரட்ட ஆரப்பித்தனர்....நம்ம பெருசுக அவங்களை தடுத்து நிறுத்திவிட்டனர். எல்லா கூட்டமும் தோட்டத்த சுத்தி நிக்குது. முன்னாடி எல்லாம் , பெரிசுக, வேட்டிய தூக்கிகட்டிகிட்டு நிக்கறாங்க.. பின்னாடி, கத்தி, கம்போட இளை ஞர்கள்.

குரங்குகள் மரத்துமேல இருந்து கூட்டத்த பார்க்குது. அதுக கண்களுக்கு கத்தி , கபடா எல்லாம் பள பள-னு தெரியுது. "
ஆகா.. போட்டாலும் போட்டுருவானுக போல..எடத்த காலி பண்ணிடலானு..." முடிவு பண்ணி, கம்ப கூட்டதுக்கு முன்னால வீசிட்டு , ஓடிப்போயிருச்சு......(முன்னாடி யார் இருக்கா ?)

குரங்குகள் ஓடிப்போனதும் பெரிசுக எல்லாம் , குண்%^# மண்ண தட்டிட்டு "
வெற்றி.. வெற்றி. ." னு கூத்தாடுகிறார்கள்...கம்பு எடுத்துட்டு வந்த கூட்டம், அத வீசிட்டு அவங்கவங்க வேலையப்பார்கக போயிட்டாங்க..

இப்ப சொல்லு.. குரங்கு ஓடிப் போனதுக்கு காரணம் பெரிசுகளா? இல்ல கடப்பாரை எடுத்துட்டு வந்த கூட்டமா? -னு கேக்கிறான்..
எனக்கு மண்டை குழம்பிப்பொயி வீட்டுக்குப்போயிட்டேன்..Sunday, November 22, 2009

காலேஜ் கலாட்டா ...( 1 Contd....).

காலேஜ்-ல் இருந்து ஒரு checklist தரப்பட்டது..நமக்குத்தான் எதுவும புரியாதே..
நேரா அத எடுத்துட்டுப்போயி காந்திபுரத்தில ஒரு க்ளினிக்குல க்யூ கட்டி நின்னாச்சு..

நர்ஸம்மா வந்து ஒவ்வொருதர உள்ள போங்கன்னு சொன்னாங்க ...ரிசப்சன்-ல ஒரு அசினோட கஸின் மாறி ஒரு சப்ப பிகர்.. என்னமோ நாங்க , ஆக்ஸ்போர்ட்-ல இருந்து வந்தவங்கனு நெனைத்து ஒரே தாட், பூட்ன்னு இங்கிலிச்சு என்னமொ சொல்லுச்சு...

நல்லவேளை, எங்க கேங்க்ல ஒரு ஆப்பக்காரன் இருந்தான். (ஆப்பகாரன யாருன்னு தெரியாதவங்க, எனக்கு ஒரு EMail அனுப்புங்க.. ) ஒரு வழியா அவந்தான் எங்களுக்கு என்னென்ன டெஸ்ட்னு புரிய வைத்தான்.

ஒகே... ரைட்.. விடுன்னு நாங்க, Urine, Blood, extra டெஸ்ட் எல்லாம் செய்தாகிவிட்டது..ஒரே ஒரு Item- தான் பாக்கி.. அதுதான் "மோசன் டெஸ்ட்.." மொட்ட வெயிலில முக்கினாலும் வராதுன்னு தெரியும்..எனவே, நாளை கொடுக்கிறோம்முனு நர்ஸம்மா கிட்ட சொல்லிடு சினிமா பாக்க சென்றுவிட்டோம்.( நம்ம தாடி படம்.. )

இன்டர்வெல்ல காட்டான் மெல்ல வந்தான். என்னடா அந்த "மோசன் மோசன்." சொல்றாங்களே, அது என்னடான்னு மண்டய சொறியறான்..
நானே தாடி, கம்பு எடுத்து படம் பாக்றவங்கல தொரத்திட்டுருக்கானே என எரிச்சல்ல இருந்தேன் இந்த நாயி வந்து டவுட் கேக்குதுனு ," முடிட்டு போடா" சொல்ல, காட்டான் முகம் இருட்டில போட்ட இட்டிலி மாறி மாறிடுச்சு..
எப்படியொ ஒரு வழியா அவனுக்கு புரியவெச்சிட்டு , நம்ம தாடிக்காரருகிட்டருந்து தப்பிச்சிட்டு வீடுக்கு போயிட்டோம்..

அடுத்த நாள் எப்படியோ கொஞ்ச்ம் முக்கி, முணங்கி , தீப்பெட்டில போட்டு க்ளினிக் -ல் கொடுத்துவிட்டோம். ( காட்டானத் தவிர....)
முணு நாளா காட்டான் காலெஜுக்கு வரவில்லை...நாங்க Busy -யா இருந்ததால அவனப் பற்றி நினைக்கவில்லை...
அடுத்த நாலு கரெக்டா 8 மனிக்கு டீ கடையில நாங்க ஆஜர்.
காட்டான் மஞ்சப்பையோட டீ கடை முன்னால நிக்கிறான்..கிட்டப்போனா எலி செத்த நாத்தம். அந்த நாத்த்திலும், எப்பம்போல "2/6 " டீ..கெணப்பார்வை..etc.. etc.... ஒரு வழியா காலெஜுக்கு போலாம்ன்னு முடிவெடுத்தோம்.

காட்டான் மெதுவ வந்து "டேய்... மோசன் சாம்பிள் குடுத்துட்டு மதியம் காலெஜுக்கு போகலானு" சொல்ல எங்க கேங்கும் 100% ஓட்டுப்போட, ஒரு வழியாதிரும்பவும் காந்திபுரம் பயணம். .

நல்லவேளை க்ளினிக்-ல் கூட்டம் இல்லை.. அசின் , எப்பம்போல ஒரு கேனப் பார்வை பார்த்துவிட்டு உள்ள கை காமித்தாள்...டாக்டர் ரூமுக்குல்ல நுழைஞ்சாச்சு...நம்ம டாக்டர், அப்பதான் நல்ல பவுடர் போட்டு பேண்டு போட்ட பெருமாளு மாதிரி சீட்ல உக்காந்து இருக்கார்...( பிகர கரெக்ட் பண்றாராம்....)

நாங்க "Good morning, வணக்கம் , Good afternoon, Good night " அப்படினு சொல்லிடு இருக்கரதுக்குல்ல டாக்டரு பொதெல்லு சேர்லேருந்து விழுந்தாரு...என்னடா கடவுளு காலைல எலிசெத்த சிக்னல் குடுத்தாரு.. இப்ப நிஜமாவே அய்யா டிக்கெட் வாங்கிட்டாரானு மெரண்டுட்டொம்..

ஒரு வழியா சுதாரிச்சுக்கிட்டு, அவருகிட்ட போயி தோள உழுக்கி சத்தம் போட , நம்ம அஸின் உள்ள ஓடிவரா.ரூம்-பே சந்தைகடை மாறி ஆயிருச்சு....
எங்களுக்கு ஒண்ணுமே புரியவில்லை... இந்த பிரச்சனயில, அசினு திடீருன்னு கதவைப்பாத்து ஓட ஆரம்பிச்சுவிட்டது....

அப்போ டாக்டரு மெதுவா முணங்கிட்டெ கண்ணு முழிக்கிராரு...பார்வை மெதுவா டேபிள் மேல போகுது....
" எடுத்துட்டு ஓடுரா , எடுத்துட்டு ஓடுரா " கத்திக்கிட்டே நடுங்கராரு . எங்களுக்கு அஸ்திவாரம் ஆட்டமாட ஆரம்பித்துவிட்டது.....எல்லோரும் பயம்மா டேபிள் பார்க்க அதுமேல
" 1kg ஹார்லிக்ஸ் Bottle-ல நம்ம காட்டான் ஃபுல்லா நிரப்பிட்டு வந்திருக்கான் "....

அப்படியெ வலைய வீசர மாதிரி மஞ்சப்பைய பாட்டல் மேல போட்டு, டபால்னு தூக்கிகிட்டு வீதிக்கு ஓடி வந்துட்டோம்.
ஒரு வழியா குப்பையில வீசிட்டு "என்னடா காட்டான் இப்படி பண்ணிட்டெனு கேட்டா "நீங்கதா எவ்வ்ளவுனு சொல்லலியே.. எங்களை திருப்பிக்கேக்கிறான்..

( Moral - Communication is a skill and not everbody have.. )

Friday, November 20, 2009

காலேஜ் கலாட்டா ...( 1 ).

நன்றாக நேர் எடுத்து சீவிய தலை. எண்ணை வடியும் முகம்.தோளில் ஒரு மஞ்சள் பை.இந்த மொத்த உருவத்தின் பெயர்தான் காட்டான். நிஜப்பெயர் கோபால்சாமி... ( அய்யோ சாமி , நம்ம வைகோ இல்லங்கோ . இது வேற சாமி...)
சொந்த ஊரு பல்லடம். 10-வது படித்தது தமிழ் மீடியம்.. காலேஜ்-ல ஆங்கில மீடியம்.

நாங்கள் முதல் வருடம் காலேஜ் சேர்ந்தபோது , எப்படியோ எங்கள் குழுவில் ஐக்கியமாகிவிட்டான்..காலேஜ் 9 மணிக்கு ஆரம்பிக்கும். ஆனா எங்க ஜமா (Gang ) 8 மணிக்கு காலேஜ் முன்னால உள்ள டீ-கடையில ஆஜராகிவிடும்.(Punctuality அப்படினா என்னனு அங்கதான் கத்துக்கிட்டோம் ).

எப்ப போல " 2 / 6 " இல்லாட்டி " 2 / 8 " டீ தான் Order செய்வது...கடைக்காரன் ஒரு கேனப்பார்வை பார்த்துவிட்டு டீ சப்ளை செய்வான்.

அடுத்த ஒரு மணி நேரம், காலேஜ் வருபவர்களை பத்திரமாக உள்ள அனுப்பிவிட்டு 9 மணிக்கு நாங்க எங்க பொன்னான பாதங்கள காலேஜ்-ல எடுத்து வைப்போம்.

முதல் வருடத்தில் எல்லா மாணவர்களும் மெடிக்கல் செக்கப் செய்யவெண்டும் என் சர்குலர் வந்துவிட்டது..நம்ம காட்டான் , ஆனானப்பட்ட மருத்துவரையே அயரவைத்த சம்பவம் விரைவில்.....( நம்ம மருத்துவர் அய்யா இல்லங்கோ . இது வேற அய்யா...)

தொடரும்....

Saturday, November 14, 2009

கோடான கோடி நன்றியய்யா......

முல்லை பெரியாறில் தமிழக மக்களின் உரிமையை பறிக்கும் வகையில் புதிய ஆணை கட்ட முதற்கட்ட பணிகளை துவக்கிய கேரள அரசையும், ஆய்வு பணிக்கு அனுமதி வழங்கிய மத்திய தமிழர் விரோத காங்கிரஸ் அரசையும் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் மதுரையில் நாளை மாபெரும் உண்ணாநிலைப்போராட்டம் நடைபெறுகிறது.


இலங்கை பிரச்சனையை முடித்துவிட்டார்கள்.அடுத்து முல்லை பிரச்சனை ஆரம்பம்..
நடத்துங்கையா , நடத்துங்க........

Tuesday, November 10, 2009

நன்றியய்யா......


தமிழக மக்களின் மின்சாரத்தேவையை முழுமையாக நிறைவு செய்த அமைச்சருக்கும் ,
மின்சார ஊழியர்களுக்கும்
மற்றும் முக்கியமாக எங்கள் தமிழக முதல்வருக்கும்,
கோடான கோடி நன்றியய்யா......

Friday, November 6, 2009

ங்க்கொய்யா....
நம்ம மினிஸ்டர்ஸ் ஒரு நாள் உல்லாசபயணமாக இலங்கை சென்று வெற்றிகரமாக "அன்பளிப்பு" வாங்கிவந்துவிட்டனர்.

நம்ம மீனவர்கள் கதி ???????????...