Pages

Tuesday, November 24, 2009

சரித்திரம் மாறிவிட்டதா?

அன்று ஆகஸ்ட் 15..சுதந்திரதினம்.. காலையில வீதியில சும்மா நடந்து போயிட்டு இருந்தபோது, எதுத்தாப்ல சின்ராசு வந்தான். சரி..எதுக்கு நாமளா போயி சனிஸ்வரனுக்கு சல்யூட் வெக்கனுமு நினைத்து வெரச வேற பக்கம் திரும்பிட்டேன்...

அப்பாடா ஒரு வழியா தப்பியாச்சுன்னு நினைக்கரப்போ, இளிச்சுட்டே சின்ராசு தோளைத் தொட்டு "அப்புறம் ..கொண்டாட்டமெல்லாம் எப்படியிருக்குனு " பல்லைக் காண்பிக்கிறான். சரி.. மாட்டியாச்சுனு நினைத்து திரும்பி ஈ...னு நானும் சிரித்துவைத்தேன்.

அப்ப ஒரு ஸ்கூல் பையன் கொடியெல்லாம் குத்திட்டு நடந்து போயிட்டுருந்தான். பேச்சை திசை திருப்பலாமுனு "அப்புறம் தம்பி.. ஸ்கூலுக்கா ? " -னு கேட்டேன்..
அவன் பதில் சொல்வதிற்குள் சின்ராசு, குறுக்கபூந்து "தம்பி.. நமக்கு யாரு சுதந்திரம் வாங்கிதந்தது ? " ஒரு பிட்-ட போட்டான். பையனும் சந்தோசமா " காந்தி தாத்தா " னு சொன்னான்.

சின்ராசு வில்லங்கத்த ஆரம்பிசிட்டானு தெரிந்துவிட்டது. நான் முந்திக்கிட்டு "சரி தம்பி..தாத்தா தவிர வேற யார், யார் எல்லாம் வாங்கிதந்தா?" எனக் கேட்டு சின்ராசுக்குத் தெரியாம சைகை செஞ்சேன். பையனும் மண்டைய சொறிச்சிக்கிட்டே "நேரு மாமா..." னு சொல்றான்.

ஓகே.. சனிஸ்வரன் வேலைய ஸ்டார்ட் பண்ணிட்டாரு..இனி நம்ம கைல ஒண்ணுமில்ல-னு முடிவு பண்ணிட்டேன்..

"சரிடா,
பகத்சிங் , சுபாசு , வ.உ.சி இவங்கெல்லாம் யாரு "னு சின்ராசு கேட்க,
"இவங்கெல்லாம் போராட்டத்தில கலந்துக்கிட்டவங்க" - னு பையன் சொல்றான்...

சரி..சின்ராசு..... பையன் மனசில நஞ்சக் கலந்துராதே.னு சொல்லிட்டு பையன விரட்டிவிட்டேன். ஒரு வழியா , பையன தப்பிக்க விட்டாச்சுனு பெருமுச்சு விட்ட போது சின்ராசு என்னப் பாத்து ஒரு கேனச்சிரிப்ப சிரித்தான்.

"சின்ராசு..எனக்கு நேரமாச்சு...கிளம்பறென்.." சொல்லிட்டு ிரும்பறேன்..குறுக்கால கையவெச்சு வழிய மறிக்கிறான். "நா சொல்ற கதயக் கேட்டுட்டு அப்புறம் எக்கேடோ கெட்டு ஒழி.." னு சொல்லிட்டு ஒரு கதை சொல்றான்.

ஒரு ஊர்ல பெரிய மாமரத்தோட்டம் இருந்துச்சு.. திடீர்னு ஒரு நாள், வெள்ளை குரங்கொன்று மரத்துமேல உக்கார்ந்துட்டு தோட்டதில வேலை செய்பவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது...

அதைப்பார்த்த மக்கள், "ஆகா.. வெள்ளக் குரங்கு வெள்ளக் குரங்கு " என் வாயப்பொளத்துட்டு வேடிக்கை பார்த்தனர். அதுல சில பெரிய மனுசங்க , குரங்கு வெள்ளையா இருப்பதனாலே, அது
கடவுளின் மறு உருவமுன்னு ஊர் சனங்களுக்கு சொல்லி, குரங்குக்கு நல்ல மாம்பழங்களை கொடுத்தனர். குரங்கு அத சாப்பிட்டுவிட்டு பெரிய மனுசனுக்ளைப் பார்த்து , பெரிசா ஒரு கும்புடு போட்டது..

அதப் பார்த்த பெரிய மனுசனுகளுக்கு , கால் ஒரு வாரமா, தரையில் படவில்லை...

இப்படி போயிட்டுருக்கும் போது ,கொஞ்ச நாள் கழித்துப்பார்த்தால் , எல்லா மரத்திலும் குரங்கு குட்டிகளா இருத்தது...பெரிய மனுசனுக பார்த்தாங்க.. ஆகா.. இப்படியே விட்டா, நமக்கு ஒண்ணும் கெடைக்காதுன்னு முடிவு பண்ணி அத விரட்டப்போனார்கள். குரங்குகள் குச்சிய எடுத்துட்டு வந்தவர்களை தொரத்த ஆரம்பித்தது...

அப்பொ , பெரிய மனுசனுக , வேட்டிய குண்%#$ மேல கட்டிட்டு , "
என்ன மெரட்டுனா நான் சாப்புடமாட்டேன்.. எங்க சாதி, சனமெல்லாம் , தோட்டத்திலிருந்து நீ வெளிய போறவரைக்கும் வீட்டுக்குள்ளார போகமாட்டொம்.. சோத்துல உப்பு போடமாட்டோம்.. பல்லுல பச்ச தண்ணி படாம உண்ணாவிரதம் இருப்போம் "-னு சொல்லிட்டு இருந்தாங்க...

அப்போ சில வீர இளை ஞர்கள் கம்பு, கடப்பாரை எல்லாம் தூக்கிகிட்டு, "
ங்க்கொய்யாலே..ஓடிப்போகலைனா உனக்கு சங்கு தாண்டி" சொல்லிட்டு குரங்குகளை விரட்ட ஆரப்பித்தனர்....நம்ம பெருசுக அவங்களை தடுத்து நிறுத்திவிட்டனர். எல்லா கூட்டமும் தோட்டத்த சுத்தி நிக்குது. முன்னாடி எல்லாம் , பெரிசுக, வேட்டிய தூக்கிகட்டிகிட்டு நிக்கறாங்க.. பின்னாடி, கத்தி, கம்போட இளை ஞர்கள்.

குரங்குகள் மரத்துமேல இருந்து கூட்டத்த பார்க்குது. அதுக கண்களுக்கு கத்தி , கபடா எல்லாம் பள பள-னு தெரியுது. "
ஆகா.. போட்டாலும் போட்டுருவானுக போல..எடத்த காலி பண்ணிடலானு..." முடிவு பண்ணி, கம்ப கூட்டதுக்கு முன்னால வீசிட்டு , ஓடிப்போயிருச்சு......(முன்னாடி யார் இருக்கா ?)

குரங்குகள் ஓடிப்போனதும் பெரிசுக எல்லாம் , குண்%^# மண்ண தட்டிட்டு "
வெற்றி.. வெற்றி. ." னு கூத்தாடுகிறார்கள்...கம்பு எடுத்துட்டு வந்த கூட்டம், அத வீசிட்டு அவங்கவங்க வேலையப்பார்கக போயிட்டாங்க..

இப்ப சொல்லு.. குரங்கு ஓடிப் போனதுக்கு காரணம் பெரிசுகளா? இல்ல கடப்பாரை எடுத்துட்டு வந்த கூட்டமா? -னு கேக்கிறான்..
எனக்கு மண்டை குழம்பிப்பொயி வீட்டுக்குப்போயிட்டேன்..



3 comments:

  1. nanbarae!!!! neengal solvathu enakku purikirathu. intha madappaya makkavukku annakkaaey 1947 pinnalae purinjiruntha intha pirachanayae vanthirukkathae. Ennamo Gandhiyum Nehruvum thaan suthanthirathay vanngikkodutha???????? maathiriyum, maththa ethanayyoo uyir thiyaagam seytha thiyaagikal ellaaam onnum pannatha maathiruyum oru piracharam seythu makkal manathil oru piramayai erpaduthi vittaango. Sarithirathayae maatri eluthya oru fraud iyakkam intha Congress iyakkam.

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!