Pages

Tuesday, March 30, 2010

ஆகா..சொர்க்கமடா எங்கூரு..




மார்ச் 27 - 2010......சனி...காலை 5 மணி..

6 வருடங்களுக்கு பின் பிறந்த ஊரை நோக்கிப்பயணம்..என்னதாயிருந்தாலும், பிறந்த மண்ணுல காலடி வெச்சா, உடம்புல ஒரு சிலீர்  ஓடுமே..அந்த சிலீருக்காகத்தான், உயிர பணயம் வெச்சு, திரும்பவும் ஊருக்கு வாரேன்..

என்ன சார்..உயிரு.மயிருனு...முழங்காலுக்கும், மொட்டத்தலைக்கும் முடிச்சு போட்டு பேசரானேனு நினைக்கிறீங்களா?..   அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்.. மூணு நாள் தூக்கமில்லாம, பயணம் செஞ்சு பாருங்க..எதாவது பேசனுமுனா, குழப்பமா, எண்ணங்கள்   உங்க மனசுல ஓடும்.
கொஞ்சம் இருங்க..  எங்க ஊர் வந்திடுச்சு..இறங்கிட்டு அப்புறம் சொல்றேன்..
.
.
அப்பாடா..என்ன இருந்தாலும் ஊர்..ஊர்தாங்க.. என்னா காற்று..என்னா  குளிர்ச்சி..இதையெல்லாம் விட்டுட்டு, அசாமுக்கு  ஓடிப்போனேனே..சே..
.
எம்பேரு முக்கியமில்லைங்க..நான் பொறந்து வளர்ந்தது இங்கதான் சார்..பெரிய குடும்பம் எங்களுடையது.   அப்பா, விவசாயம்.. சட்டை போடமாட்டாரு.. நல்ல முறுக்கிவிட்ட மீசை..   வருசத்திற்க்கு ஒரு தடவை கறிச்சோறு..மீதி நாளெல்லாம் கஞ்சியும்,   கம்பங்கூழும்தான்...
ஏழையாயிருந்தாலும்,  மானம்தான் பெருசுனு சொல்ற பரம்பரைங்க.

அதோ தெரியுது பாருங்க கருவேலமரம்..அதுக்கு பக்கத்தில,இருட்டுல இருக்கிற முட்டி சந்துலதான், ராஜசேகரன போட்டு  கும்மியெடுத்தேன்.......அடிச்சுட்டு  அன்னைக்கு ஓடினவந்தான் சார்.. 6 வருசத்துக்கு பின் இப்பத்தான் வரேன்...நீங்களே  சொல்லுங்க..ஒருத்தன் நான்தான் கடவுளுனு சொல்லிகிட்டு, காலையில பல்ல காட்டிட்டு, வெள்ள வேட்டி கட்டிகிட்டு, போறவரவங்களை  தொந்தரவு பண்ணினா, கோவம் வருமா, வராதா?..

கரெண்ட் இல்லாத நாள்ல, வகைக்கு சிக்கினான் சார் அந்த நாதாரி..ஆசை தீர நொங்கெடுத்தேன்.   தக்காளி.. வெள்ளை வேட்டியெல்லாம், செம்மண் ஆயிடுச்சு..அடிச்ச அடியில பேச்சு மூச்சில்லாம மரத்துக்கடியில விழுந்துட்டான்..   அப்ப, ’எங்கப்பனோட மீசையும், நுங்கு செதுக்குற அருவாளும்’ மனசுக்குள்ள நிழலாடிச்சு சார்..உகூம்.. ஒரு நிமிசம் இந்த ஊருல
இருக்ககூடாதுனு..ஒரே ஓட்டம் சார்..ஊர விட்டு ஓடிப் போயிட்டேன்.அப்புறம் அசாம் காடு..டெல்லி, ஏன்.. காசி..எல்லமே சுத்திட்டேன்.......திடீர்னு மனசுக்குள்ள , சொந்த ஊருக்கு போடானு ஒரு குரல்.அதுதான் கிளம்பிவந்துட்டேன்.
.
.
என்னாச்சு சார்..போலீசுக்காரனுகளா நிக்கிறானுக..இருங்க..என்னானு பார்த்துட்டுவறேன்..
.
.
ஒண்ணுமில்லை சார்..சும்மா செக் பண்றாங்களாம்..வாங்க சார்.. டீ சாப்பிடலாம்..
.
.
மக்கள் திருந்திட்டானுகளா..எவனும் வேலைக்கு போகாமா சுத்திக்கிட்டு இருக்கானுக..     கிராமம் உண்மையா முன்னேறிடுச்சா...டீக்கு வேற,  காசு வேனாமுனு சொல்றாங்க..
.
.
நிசமாவே என்னமோ நடந்திருக்கு.. இங்கிருந்த இருட்டு சந்து எங்க போச்சு?.முக்கியமா ஒரு விசயத்தை நோட் பண்ணுனிங்களா?
பிச்சக்காரன் எவனையும்மே காணல.....எங்க பார்த்தாலும் பளீருங்குது..
ஆகா.. நாம முன்னேறிட்டோம் சார்..இந்த சொர்கத்தை விட்டுட்டு , ஆறு வருசமா அல்லாடியிருக்கேனே..   நான் உண்மையிலேயே மடையன் சார்..
.
.
சரி சார்..ரொம்ப அசதியா இருக்கு.. ஒரு கட்டிங் போட்டுட்டு போயி படுக்கனும்..
.
.
என்னமோ ஆயிடுச்சு..
ஒருவேளை எவனாவது , எங்கஊரை, தத்தெடுத்துட்டானுகளா?..
இல்ல..கவருமெண்டு, பெட்ரோல் கிணத்தை ஏதாவது  கண்டுபிடிச்சுட்டானுகளா?.....   என்ன மாயமடா இது?  கட்டிங் கேட்டா, சும்மாவே ஒரு புல் பாட்டில் கொடுக்கிறானுக..
.
.
.
எங்கப்பன் சொக்க தங்கம் சார்..,ஓடிப்போனவனை ஏத்துக்க ஒரு மனப்பக்குவம் வேணும் சார்.        கரெண்டே இல்லாம இருந்த எங்க பழைய வீடா சார் இது?..இப்ப பாருங்க..டீவி.. பேன்.. மெத்தை...    வீதியில, காரு,பைக்கு சர்..சர்..னு போயிட்டிருக்கு...     சட்டை போட்ட எங்கப்பன இப்பத்தான் பார்க்கிறேன்..பாக்கெட்ல பாருங்க 1000 ரூபாய் நோட்டு..
.
தெய்வம் சார் எங்கப்பன்..
கோழி, ஆடுனு ஒரே கறி சோறு போட்டு திக்குமுக்காட வெச்சுட்டாரு சார்..
.
.
நல்ல சாப்பாடு...ம்..பேனை போட்டுட்டு, மெத்தையில படுக்கற சுகமே தனிதான்..இருக்கற அசதிக்கு, நாளைக்குத்தான்  எந்திரிப்பேன்...இனி இந்த ஊர விட்டு போனா, என்ன செருப்புல அடிங்க சார்..
.
.
.
மார்ச் 28 - 2010.......ஞாயிறு...காலை 6 மணி..

கொசு..புரண்டு படுக்கிறேன்..ஒரே புழக்கம்..
.
சே..அப்பா.. இந்த பேனை போடேன் -நான்
.
பதிலில்லை.
.
இது கனவா?.. இல்ல....
.
மெதுவாக வெளியே வந்தேன்..
.
காதில், கொசுக்களின் ரீங்காரம்..
வெறிச்சோடிய வீதி..
கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருட்டு..
.
அடுத்த தெருவில், “அம்மா..தாயே..”- ஒருவனின் குரல்..
தூரத்தில, ’கீரிச்..கீரிச்..’- பால்காரனின் சைக்கிள் சத்தம்..
.
.
.
ஆங்.. சொல்லமறந்துட்டேனே......
.
எங்க ஊரு பேரு....


”பென்னாகரம்”  சார்....
.
.
.

66 comments:

  1. சார்..என்னடா பட்டாபட்டிக்கு நட்டு கழண்டுகிச்சானு யோசனை பண்றீங்க?..சரியா?

    இல்ல சார்..சும்மா டமாசுக்கு எழுதிப்பார்த்தேன்..
    நல்லாயில்லாட்டி, செருப்புல அடிக்காதீங்க.. சொல்லிப்புட்டேன்..

    ( வீட்டுக்கு தலைச்சன் புள்ள நானு..அதனால, செருப்புல, சாணியப் பூசி அடிங்க சார்.. )

    -இவன் பட்டாபட்டி

    ReplyDelete
  2. யோவ் பட்டு சும்மா சுல்லக் கூடாதுலே...கிளப்பிப்புட்ட லே

    கொஞ்ச நாள் அங்க நம்ம வெளியூரு ஓட்டு ( தப்பாக எதுவும் இல்லை) சேகரிச்கிக்கிட்டு இருந்தானாம்ல

    ReplyDelete
  3. பென்னாகரத்துல அப்பிடியே நித்யாவையும் கும்மியாச்சி போல? நடத்துங்க நடத்துங்க

    ReplyDelete
  4. பட்டா அந்த கருவேலன் காட்டுக்குள்ள எது கேமரா இருக்கான்னு பாதியா ?

    ReplyDelete
  5. ////ரெட்டைவால் ' ஸ் said...
    ( தப்பாக எதுவும் இல்லை) /////

    மன்னரே எதுனாலும் நேரா சொல்லு அது என்னா அதுல ஒரு "க்" கன்னா?

    ReplyDelete
  6. மொதல்ல படிச்சிட்டு வரேன்

    ReplyDelete
  7. அதானே பாத்தேன். எல்லாமே ஓட்டு வாங்குற வரைக்கும் கிடைக்கும்.அப்புறம் நாமம்,

    ReplyDelete
  8. ஏனுங்... தலைவரே.... தமிழ்மணத்துல இணைச்சிருக்கீங்.... ஓட்டுபொட்டிய காணமே.....

    ReplyDelete
  9. யோவ் பட்டு, ஊரில எல்லாருக்கும் 15 வரை கிடைச்சி இருக்கையா.

    ReplyDelete
  10. யோவ் பட்டு, ஊரில எல்லாருக்கும் 15 வரை கிடைச்சி இருக்கையா.

    ReplyDelete
  11. அதானே பார்த்தேன்...
    :)

    ReplyDelete
  12. @ரெட்டைவால் ' ஸ் said...
    யோவ் பட்டு சும்மா சுல்லக் கூடாதுலே...கிளப்பிப்புட்ட லே
    கொஞ்ச நாள் அங்க நம்ம வெளியூரு ஓட்டு ( தப்பாக எதுவும் இல்லை) சேகரிச்கிக்கிட்டு இருந்தானாம்ல
    //

    இருக்கும். இருக்கும்..வெளியூரு, ஒரு வாரமா ஆளக்காணோம்..
    நல்ல கலெக்‌ஷன் போல..

    ReplyDelete
  13. @முகிலன் said...
    பென்னாகரத்துல அப்பிடியே நித்யாவையும் கும்மியாச்சி போல? நடத்துங்க நடத்துங்க
    //

    சும்மா எழுதிப்பார்த்தேன் சார்.. இன்னைக்கு ஆபிஸ்ல ஆணி கம்மி..

    ReplyDelete
  14. @மங்குனி அமைச்சர் said...
    பட்டா அந்த கருவேலன் காட்டுக்குள்ள எது கேமரா இருக்கான்னு பாதியா ?
    //


    மங்குனி.. அடிக்கறப்போ.. உயிர கையில் புடிச்சுட்டு அடிச்சனய்யா..அதனாலா
    பார்ககல..
    உடு.. அடுத்த தடவை..பாலு மகேந்திராவ கூப்பிட்டு.. எடுக்க சொல்லலாம்..

    ReplyDelete
  15. @ஜெய்லானி said...
    அதானே பாத்தேன். எல்லாமே ஓட்டு வாங்குற வரைக்கும் கிடைக்கும்.அப்புறம் நாமம்,
    //

    நிசம்தானே.. அடுத்த எலெக்‌ஷன் வரும் வரை.. கஞ்சி..ஊறுகாய்.. அவவளவுதான்

    ReplyDelete
  16. @க.பாலாசி said...
    ஏனுங்... தலைவரே.... தமிழ்மணத்துல இணைச்சிருக்கீங்.... ஓட்டுபொட்டிய காணமே.....
    //

    எதுக்குனுதான் தல..நாம பெரியாளானது வெச்சுக்கலாம்..
    ( அதை வெச்சா, Page load ஆக, நிறைய நேரமாகுது..அதான், தூக்கி கடாச்சுட்டேன் )

    ReplyDelete
  17. @ஜெய்லானி said...
    யோவ் பட்டு, ஊரில எல்லாருக்கும் 15 வரை கிடைச்சி இருக்கையா.
    //

    விலைவாசி ஏறிப்போச்சு சார்..

    ReplyDelete
  18. @【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
    அதானே பார்த்தேன்...
    :)
    //

    @சைவகொத்துப்பரோட்டா said...

    ரைட்டு, நடத்துங்க.
    //


    என்ன எழுதுவதுனு தெரியல சார்..அதான் டமாசு

    ReplyDelete
  19. கலக்கல் பட்டாபட்டி,இதுக்கெல்லாம் செருப்பால அடிப்பாங்களா..

    ReplyDelete
  20. @அஹமது இர்ஷாத் said...

    கலக்கல் பட்டாபட்டி,இதுக்கெல்லாம் செருப்பால அடிப்பாங்களா..
    //

    நீங்க வேற சார்..நல்லது சொன்னாலும் செருப்ப தூக்கிறானுகோ.. சொல்லாம இருந்தால்ம், அடிக்க வரானுகோ.. என்னதான் சார் பண்றது..

    ( அதுதான் பேசாம, நம்ம ப.சி போல,
    அமைதியா இருக்கலாமுனு..ஹி..ஹி..)

    ReplyDelete
  21. நக்கல் நல்லாருக்குங்கோ

    ReplyDelete
  22. @மசக்கவுண்டன் said...
    நக்கல் நல்லாருக்குங்கோ
    //

    சும்மா டமாசுக்கு எழுதி பார்த்தேன் கவுண்டரே..

    ReplyDelete
  23. @ஜீவன்பென்னி said...
    onnum solluradukku illa.
    //
    என்னங்க இப்படி சொல்லிப்போட்டீங்க..
    ( என்னொட முதல் கமென்ஸ்ச படிங்க..)

    ReplyDelete
  24. என்ன கொடுத்த பணம் அதுக்குள்ளே செலவாய்டுச்சா, அடுத்த இடைதேர்தலில் பார்க்கலாம்

    ReplyDelete
  25. Blogger கும்மாச்சி said...

    என்ன கொடுத்த பணம் அதுக்குள்ளே செலவாய்டுச்சா, அடுத்த இடைதேர்தலில் பார்க்கலாம்
    //

    ஆமா சார்.. அடிக்கடி தேர்தல் வந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்...

    ReplyDelete
  26. //
    ஆமா சார்.. அடிக்கடி தேர்தல் வந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்...//

    எவனாவது மண்டைய போடனும்னு வேண்டுங்க உங்க ஆசை நிறைவேறும்.

    ReplyDelete
  27. @ஜெய்லானி said...
    எவனாவது மண்டைய போடனும்னு வேண்டுங்க உங்க ஆசை நிறைவேறும்.
    //

    எதுக்கு நேராச்சொல்லனுமுனு பார்த்தேன்..படாருனு ஒடச்சிட்டீங்க ஜெய்லானி

    ReplyDelete
  28. அடுத்த எலக்சன் எப்போ?????

    ReplyDelete
  29. @கண்ணகி said...
    அடுத்த எலக்சன் எப்போ?????
    //

    எதுக்கும் சோளி, போட்டு பார்த்து சொல்றேங்க...ஹா..ஹா

    ReplyDelete
  30. ///பட்டாபட்டி.. said...

    @கண்ணகி said...
    அடுத்த எலக்சன் எப்போ?????
    //

    எதுக்கும் சோளி, போட்டு பார்த்து சொல்றேங்க...ஹா..ஹா///

    பட்டா ராணுவம் இந்த எலக்சன்ல நல்லா கல்லா கடிருச்சு போல , ஆளவே காணோம் பார்

    ReplyDelete
  31. அப்பாவிMarch 30, 2010 at 8:20 PM

    பட்டாப்பட்டி ... இந்த பதிவ படிச்சப்ப , எனக்கு வந்த sms நியாபகம் வருது.
    " We live in a Nation where Rise is 40/kg and sim card is free,#Pizzas reaches home faster than ambulance and police,.# Car load @ 5%, where education loan @12.5%. # Assembly complex building was getting ready in One year,while public transport bridges alone takes several years to be completed.#cinema is Tax free, where medicines are with taxes.
    incredible India..
    long live Democracy.
    உருப்படும்மா இந்த நாடு???.

    ReplyDelete
  32. அப்பாவிMarch 30, 2010 at 8:51 PM

    ரெட்டை,மங்குனி,வெளியூரு,பித்தா
    யாராவது ஒரு நல்ல மந்தர வாதி இருந்தா கூப்புடுங்கப்பா .. பட்டாபட்டிக்கு யாரோ சூனியம் வச்சிட்டாங்க..

    ReplyDelete
  33. பட்டு புல் பார்மில் இருக்க போலிருக்கு

    ReplyDelete
  34. தாத்தா தேயிசுட்டாருன்னு தெரியுமா

    ReplyDelete
  35. பட்டாபட்டி சார், நல்லா கலக்கியிருக்கீங்க. இடைத்தேர்தல் கலக்கலும், தேர்தல் முடிந்தவுடன் அரசியல் கட்சிகளின் பாராமுகமும், நம் மக்கள் இன்னும் அப்பாவிகளாக இருப்பதையே காட்டுகிறது. என்ன ஒரே முன்னேற்றம்…...இப்பல்லாம் அவங்க வேலைக்கு – அதாங்க வோட்டு போடறதுக்கு – காசு வாங்கிக்கறாங்க. அரசியல்வா(வியா)திங்களும் அவங்க முதல் போட்ட தொழில் நஷ்டம் ஆகாம டர்ன் ஓவர அள்ளி குவிச்சிடறாங்க. வாழ்க சந்தியா...........ஹி..ஹி..

    ReplyDelete
  36. Ha..Ha..Yov pattapatti..admk deposit gaali paarthe illa..inime naangathaandi... :)

    ReplyDelete
  37. இந்த நகைச்சுவை உங்களுக்கு மட்டுமே உரித்தானது...

    சூப்பர்..

    நானும் யோசிப்பேன்.. யோசிக்கும்போதே செருப்படி வாங்குவேன்.. என் மனசாட்சி தான் என் முதல் வாசகன்.. அதனால் தான் என்னவோ நான் இது போன்ற விஷப் பரீட்சைகளில் இறங்குவதில்லை...

    ReplyDelete
  38. அப்பாவி said...

    ரெட்டை,மங்குனி,வெளியூரு,பித்தா
    யாராவது ஒரு நல்ல மந்தர வாதி இருந்தா கூப்புடுங்கப்பா .. பட்டாபட்டிக்கு யாரோ சூனியம் வச்சிட்டாங்க..
    *************************************

    ஒரு சிங்கம் வெஜிடேரியனாக மாறுகிறது!

    அப்பாவி சார்... விட்டுத் தள்ளுங்க! இந்த பட்டாபட்டிக்கு எப்படி சூடேத்தறதுன்னு எனக்கும் வெளியூருக்கும் தெரியும்! யோவ் வெளியூரு! பயபுள்ள கசாப்பு வெட்டிக்கிட்டிருந்தது திடீர்னு கோயில்ல மணியாட்டற மாதிரி இருக்கு... என்னன்னு கேளுய்யா!

    ReplyDelete
  39. ஏம்பா வெளியூரு, ரெட்ட ஒரு ஒரு வாட்டியும் கூப்டா தான் என் ப்ளாக் வருவீகளா ?
    என் ப்ளாக் போய் என்னா எதுன்னு ஒரு வாட்டி பாத்துட்டு வாங்க

    ReplyDelete
  40. அப்பா கலர் கலரா பதிவ மாத்தி எழுதாம... கலக்கலா ஒரு பதிவுயா பட்டு... (மத்த பதிவுகள விட இதுக்கு ஒரு கள்ள ஓட்டாவது கூடுதலா போடணும்னு மனசு சொல்லுதுயா)

    அருமையா இருக்கு... போட்டு தாக்கிட்டீறு ... இந்த பதிவை இவ்வளவு அருமையா எழுதியதுக்கு முதல் முறையா எங்கையாவது பாக்கும்போது சோடா வாங்கி கொடுக்காலாம்... :-)

    ReplyDelete
  41. இன்பசேகரன் : ஒட்டு போட்டுடீங்க இல்ல ..இனிமே ஒருத்தன் எம்முன்னாடி நிற்க கூடாது !!
    மக்கள் : ??*!!!*

    ReplyDelete
  42. அப்பாவிMarch 31, 2010 at 2:51 PM

    பட்டாப்பட்டி .. வருகிற "இந்திய மக்கள் தினத்தை" முன்னிட்டு ( அதாப்பா ,ஏப்ரல் 1 ), அன்னைக்கு ஒரு சிறப்பு பதிவு போட்டா என்ன ?

    ReplyDelete
  43. //பட்டாப்பட்டி .. வருகிற "இந்திய மக்கள் தினத்தை" முன்னிட்டு ( அதாப்பா ,ஏப்ரல் 1 ), அன்னைக்கு ஒரு சிறப்பு பதிவு போட்டா என்ன ?//

    எப்படி பதிவு போட்டாலும் திருந்தமாட்டானுங்க : )

    ReplyDelete
  44. @அப்பாவி said...
    பட்டாப்பட்டி ... இந்த பதிவ படிச்சப்ப , எனக்கு வந்த sms நியாபகம் வருது.
    " We live in a Nation where Rise is 40/kg and sim card is free,#Pizzas reaches home faster than ambulance and police,.# Car load @ 5%, where education loan @12.5%. # Assembly complex building was getting ready in One year,while public transport bridges alone takes several years to be completed.#cinema is Tax free, where medicines are with taxes.
    incredible India..
    long live Democracy.
    உருப்படும்மா இந்த நாடு???.
    //
    இனி எவனாவது பொறந்து, நாட்ட காப்பாத்தினாதான் உண்டு..( நம்ம குரூப் தவிர)

    ReplyDelete
  45. @அப்பாவி said...
    ரெட்டை,மங்குனி,வெளியூரு,பித்தா
    யாராவது ஒரு நல்ல மந்தர வாதி இருந்தா கூப்புடுங்கப்பா .. பட்டாபட்டிக்கு யாரோ சூனியம் வச்சிட்டாங்க..
    //

    நீங்க வேற.. ஆரஞ்சு பச்சடி சாப்பிட்டதுதான் இப்படி ஆச்சு..

    ReplyDelete
  46. @Muthu said...
    பட்டு புல் பார்மில் இருக்க போலிருக்கு
    தாத்தா தேயிசுட்டாருன்னு தெரியுமா
    //

    அதுதான் கல்வெட்டுல நூரு வருஷம் முன்னாடியே பொறிச்சாச்சே..
    ( அட பார்றா வெளியூரு மூஞ்சிய..சிரிப்பு..ம்..ம்.. நடக்கட்டும்..நடக்கட்டும்..)

    ReplyDelete
  47. @இராமசாமி கண்ணண் said...
    :)
    //

    ரொம்ப யோசனை பண்ணி கமென்ஸ் போட்டிருக்கீங்க( வசந்தோட சொந்தக்காரருங்களா?.. வருகைக்கு நன்றி..)

    ReplyDelete
  48. @Vikram said...
    பட்டாபட்டி சார், நல்லா கலக்கியிருக்கீங்க. இடைத்தேர்தல் கலக்கலும், தேர்தல் முடிந்தவுடன் அரசியல் கட்சிகளின் பாராமுகமும், நம் மக்கள் இன்னும் அப்பாவிகளாக இருப்பதையே காட்டுகிறது. என்ன ஒரே முன்னேற்றம்…...இப்பல்லாம் அவங்க வேலைக்கு – அதாங்க வோட்டு போடறதுக்கு – காசு வாங்கிக்கறாங்க. அரசியல்வா(வியா)திங்களும் அவங்க முதல் போட்ட தொழில் நஷ்டம் ஆகாம டர்ன் ஓவர அள்ளி குவிச்சிடறாங்க. வாழ்க சந்தியா...........ஹி..ஹி..
    //

    உண்மைதான் சார்.. இப்படி கொடுக்கிறாங்களே.. அதய எடுக்காமலா விடுவாங்க?

    ReplyDelete
  49. @Veliyoorkaran said...
    Ha..Ha..Yov pattapatti..admk deposit gaali paarthe illa..inime naangathaandi... :)
    //

    யோவ் நக்கல்.. அடுத்த எலெக்‌ஷ்னுக்கு,நாஙக, நித்திய இறக்கறோம்.. அப்புறம் பாரு..
    அன்னைக்கு , இதே சிடிப்ப நான் சிரிக்கல.. அப்புறம் நான் வெளியூர்காரனில்ல..
    (சே... கண்டுபுடிச்சுருவானுகளோ...!!!)

    ReplyDelete
  50. @பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
    இந்த நகைச்சுவை உங்களுக்கு மட்டுமே உரித்தானது...
    சூப்பர்..
    நானும் யோசிப்பேன்.. யோசிக்கும்போதே செருப்படி வாங்குவேன்.. என் மனசாட்சி தான் என் முதல் வாசகன்.. அதனால் தான் என்னவோ நான் இது போன்ற விஷப் பரீட்சைகளில் இறங்குவதில்லை...
    //

    நீங்க வேற பிரகாஷ்.. எக்ஸாமே 1 மணி நேரத்தில எழுதிடுவேன்..இந்த கதை எழுதுவதுதான் கஷ்டமாயிருக்கு..)

    ReplyDelete
  51. @ரெட்டைவால் ' ஸ் said...
    அப்பாவி சார்... விட்டுத் தள்ளுங்க! இந்த பட்டாபட்டிக்கு எப்படி சூடேத்தறதுன்னு எனக்கும் வெளியூருக்கும் தெரியும்! யோவ் வெளியூரு! பயபுள்ள கசாப்பு வெட்டிக்கிட்டிருந்தது திடீர்னு கோயில்ல மணியாட்டற மாதிரி இருக்கு... என்னன்னு கேளுய்யா!
    //

    எல்லாம் மாயம்.. சத்தமோ, பித்தமோ..போகுமிடம் தெரியாது..
    புண்ணாக்கு புயல் ஆகாது..
    வரனய்யா பழைய பார்முல...

    ReplyDelete
  52. @மங்குனி அமைச்சர் said...
    ஏம்பா வெளியூரு, ரெட்ட ஒரு ஒரு வாட்டியும் கூப்டா தான் என் ப்ளாக் வருவீகளா ?
    என் ப்ளாக் போய் என்னா எதுன்னு ஒரு வாட்டி பாத்துட்டு வாங்க
    //

    இதுதான்.. சனிக்கு சல்யூட் வெச்சு கூப்பிடறதுங்கிறது..
    இனி ஒண்ணும் பண்ண முடியாது.
    ( யோவ்.. அவார்ட் எல்லாம் வாங்கி வெச்சுருக்கையேனு , பயலுக சும்மா இருக்கானுக..
    வந்தானுக..அப்புறம் உன்னோட கூடாரம் காலி..யோசனை பண்ணிக்க..)

    ReplyDelete
  53. @ரோஸ்விக் said...
    அப்பா கலர் கலரா பதிவ மாத்தி எழுதாம... கலக்கலா ஒரு பதிவுயா பட்டு... (மத்த பதிவுகள விட இதுக்கு ஒரு கள்ள ஓட்டாவது கூடுதலா போடணும்னு மனசு சொல்லுதுயா)
    அருமையா இருக்கு... போட்டு தாக்கிட்டீறு ... இந்த பதிவை இவ்வளவு அருமையா எழுதியதுக்கு முதல் முறையா எங்கையாவது பாக்கும்போது சோடா வாங்கி கொடுக்காலாம்... :-)
    //

    சோடா குடிக்கலாம்தான்.. ஆனா அதுக்கு சைட் டிஸ்சா, விஸ்கி வேணும்.. இப்பவே சொல்லிட்டேன்

    ReplyDelete
  54. @யூர்கன் க்ருகியர் said...
    இன்பசேகரன் : ஒட்டு போட்டுடீங்க இல்ல ..இனிமே ஒருத்தன் எம்முன்னாடி நிற்க கூடாது !!
    மக்கள் : ??*!!!*
    //

    அப்புறம் எதுக்கு இவனுக.. அதுதான் கூலி கொடுத்தாச்சே..

    ReplyDelete
  55. @அப்பாவி said...
    பட்டாப்பட்டி .. வருகிற "இந்திய மக்கள் தினத்தை" முன்னிட்டு ( அதாப்பா ,ஏப்ரல் 1 ), அன்னைக்கு ஒரு சிறப்பு பதிவு போட்டா என்ன ?
    //

    ஏண்ணே.. நாம என்ன ஒரு நாள் மட்டும்தான் ஏமாறுகிறோமா?..
    நமக்கு எல்லாம் நாளும் இனிய நாளே..

    ReplyDelete
  56. @யூர்கன் க்ருகியர் said...
    எப்படி பதிவு போட்டாலும் திருந்தமாட்டானுங்க : )
    //

    அது ரைட்டு யூர்கன்..

    ReplyDelete
  57. பட்டாபட்டி.. said...
    ( அட பார்றா வெளியூரு மூஞ்சிய..சிரிப்பு..ம்..ம்.. நடக்கட்டும்..நடக்கட்டும்..)


    வெளி தாத்தா கட்சியா (திருவாரூர் அதனால்தானே)

    ReplyDelete
  58. பட்டாபட்டி.. said...
    யோவ் நக்கல்.. அடுத்த எலெக்‌ஷ்னுக்கு,நாஙக, நித்திய இறக்கறோம்.. அப்புறம் பாரு..
    அன்னைக்கு , இதே சிடிப்ப நான் சிரிக்கல.. அப்புறம் நான் வெளியூர்காரனில்ல..
    (சே... கண்டுபுடிச்சுருவானுகளோ...!!!)


    நித்தியுடன், ரஞ்சி, யுவராணியையும்,எறக்கி ஒரு வழி பண்ணிடலாம்

    ReplyDelete
  59. //
    நித்தியுடன், ரஞ்சி, யுவராணியையும்,எறக்கி ஒரு வழி பண்ணிடலாம்
    //

    வெளியுரு ப்ளாக்ல ஒரு பன்னி மாட்டிகிச்சு முத்து..

    ReplyDelete
  60. //பட்டாபட்டி.. said...

    //
    நித்தியுடன், ரஞ்சி, யுவராணியையும்,எறக்கி ஒரு வழி பண்ணிடலாம்
    //

    வெளியுரு ப்ளாக்ல ஒரு பன்னி மாட்டிகிச்சு முத்து..//

    ஐ ஜாலி ஜாலி இதோ வர்றேன்

    ReplyDelete
  61. அப்பாவிMarch 31, 2010 at 11:02 PM

    என்னதான் டெய்லி லவ் ( வெளியூர சொல்லள) பண்ணாலும், காதலர் தினம் கொண்டாடுவது இல்லையா? அதுபோலதான், என்னதான் டெய்லி ஏமாந்தாலும், அதுக்கு ஒரு நாளு வச்சி கொண்டாடனா நல்ல இருக்கும் .. அப்படியே கொஞ்சம் யோசிச்சி பாத்தா சூப்பரா இருக்கு.."
    "இந்திய வரலாற்றில் முதல் முறையாக ' இந்திய மக்கள் தினம் ' இன்றைய நிகச்சி அனைத்தையும் வழங்குபவர் " பட்டாப்பட்டி ".... ........எப்படி????????
    வேணுனா , chief guest ஆ, நம்ம "புன்னகை தளபதி நித்திய" கூப்படலாம்..அப்டியே நம்ம கோவாலும்.....

    ReplyDelete
  62. சும்மா சொல்லக்கூடாது பட்டா, நல்லா கற்பனை பண்ணியிருக்கீங்க. இந்த வாரம் மூனு நாள் லீவு. ரூமுக்குள் தான் அடைந்து கிடப்பேன். குட்டி இந்தியா வந்தால் போன் பண்ணவும் (91327896). நன்றி.

    ReplyDelete
  63. @பித்தனின் வாக்கு said...
    சும்மா சொல்லக்கூடாது பட்டா, நல்லா கற்பனை பண்ணியிருக்கீங்க. இந்த வாரம் மூனு நாள் லீவு. ரூமுக்குள் தான் அடைந்து கிடப்பேன். குட்டி இந்தியா வந்தால் போன் பண்ணவும்
    //

    அடடே.. வடை போச்சே..
    நானும் வெளியூரும் , மலேசியாவை பார்க்க போறோம் இன்னைக்கு நைட்டு..

    என்னமோ.. சூதாட்டம்னு ஒண்ணு இருக்காமே மலைமேல.. அங்க போயி 1000 வெள்ளி உடாம..சோறு தண்ணி சாப்பிடமாட்டேனு வெளியூரு சத்தியம் பன்ணிட்டான்..போயிட்டு வந்து உங்களை பார்க்க வாரேன்

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!