Pages

Monday, March 1, 2010

என்னா பொழப்பு சார்.... இது?

பட்டாபட்டி சார்..
வணக்கம்.. நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில , வேலை செய்துகொண்டு இருக்கிறேன்..   என்னமோ , திடீர்னு , வாழ்க்கைமேல ஒரு வெறுப்பு சார்..
சென்னையில கொஞ்சம் நிலம் வாங்கலாம் என நினைத்தால் , கொள்ளைவிலை சொல்கிறார்கள்..

மாதம் ரூ 10000 சம்பாதிக்கிறேன்..இந்த ரேஞ்சில போனா, நிலம் வாங்கி , கல்யாணம்   பண்ணுவதற்குள்,  வயதாகிவிடும்.. 

சரி .. சிறுக சிறுக ,சேர்க்கலாம் என முடிவு பண்ணி 1 ரூபாய் அரிசியில
சமையல் பண்ணி சாப்பிட ஆரம்பித்தேன்..

அப்புறம் ரூ10, 000  செலவு பண்ணி , நேற்றுத்தான் டிஸ்சார்ஸ் ஆனேன் ...

என்னோட பிரச்சனைக்கு ஏதாவது தீர்வு சொல்லுங்க சார்..
நீங்க வேற 100வது பதிவப் போட்டுடீங்க.. உங்களை கேட்டால்தான்,
நல்ல பதில் கிடைக்கும்..
- மணிமாறன்..

---------------------------------------------------------------------------------------------

அட பயலே..
முதல்ல உடம்ப பார்த்துக்கோயா....ஆமா காப்புறுதி ஏதாவது பண்ணியிருக்கையா?.....  உடு..... எங்கிட்ட பிரச்சனைனு வந்திருக்க...... அப்புறம் எப்படி இதெல்லாம் பண்ணியிருப்பே.?

என்னைய வேற ,  செண்டிமண்ட்டா டச் பண்ணிட்ட.. 
உனக்கு நல்ல காலம் வந்துருச்சு ஓய்...

முடியாதவங்களுக்கு உதவி பண்ணுவதையே குறிக்கோளா வெச்சுட்டு இருக்கிற  ஒரு மகான் கிட்ட கேட்டதால  ( அட.. நாந்தாய்யா.. எந்த பயலும் சொல்ல மாட்டிங்கிறானுக..  அதுக்காக , சரித்திரத்தை மாற்ற முடியுமா?)
உன்னோட பிரச்சனைய , என்னோட பிரச்சனைய எடுத்துகிட்டு ,
உன்னைய உலகப்புகழ் அடையச்செய்யலேனே.........மகனே...... 
மங்குனுய,  பலி கொடுக்கவும் தயாராக இருக்கிறான் இந்த பட்டாபட்டி..

சரி.. உன்னோட பிரச்சனைக்கு வருவோம்..
முதல்ல உங்கப்பன் மற்றும் ஆத்தாளுக்கு , 100 தேங்காய் உடைக்கனுமப்பா..

ஏன்னா?.

உனக்கு சொத்தோ, சுகமோ சேர்த்து வைக்கவில்லையினாலும்,
மணிமாறன் அப்படீனு பேரு வெச்சிருக்காங்களே.......... அதுவே,  10 கோடிக்கு சமமய்யா...

நான் சொல்ற மாறி செய்யி............ 6 மாசத்தில , நீ கோடீஸ்வரன் ஆகலைன இந்த தொழில விட்டுட்டு  போயிடறேன்..... ( ஆமா.. செல்வமா வந்து கொட்டுது  இப்ப.... தக்காளி...... புலி வால் புடிச்ச கதைமாறி  ஆயுடுச்சு என் பொழப்பு....சே....6 மாசமுனு வாக்கு கொடுத்துட்டனே.....)


நேரா, சென்னை போ...... டாக்டருக்கு ஒரு போனைப் போடு.. ( நம்ம விஜய்..ஆமாமா  இளய தளபதியேதான். )...

இப்படி நான் "மாறன்" பேசறேன்.......... அடுத்த படத்துக்கு டேட்ஸ் வேணும்..
அப்படீனு சொல்லி , அடுத்த நாலு மாசத்துக்கும் புக் பண்ணிக்க...........
ஒரு பிரச்சனை முடிஞ்சது..

அடுத்து , எவனாவது பைனான்சியருக்கு போனைப் போடு.............
இப்படி விஜய் நம்ம பிரண்டு.......  அடுத்த நாலு மாசத்துக்கு , என்னோட படத்தில
நடிக்க டேட்ஸ் குடுத்துட்டாரு........படத்து பேரு "இறா".......  பணம் பைனான்ஸ் பண்ண முடியுமா?னு கேளு..

விஜய் படத்துக்கு, பைனான்ஸ் பண்ண முடியாதுனு எந்த நாயி சொல்லும்?..
ரெண்டாவது பிரச்சனை முடிஞ்சது..

இப்ப , ஹீரோயின் செலக்சன்............ மாறன் படத்தில  நடிப்பதற்க்கு போட்டி கொஞ்சம்  ஜாஸ்தியாயிருக்கும்......... உனக்கு கன்பூஸ் ஆயிடும்..
அதனால , நானே,  டிஸ்கஸ் பண்ணி,  யாரு.. என்னானு அடுத்த வாரம்  சொல்றேன்..

சொல்ல மறந்துட்டனே...... ஹீரோயின் காஸ்டீயும் நானே பார்த்துக்குறேன்..
டிரஸ்சே இல்லாம வரச்சொல்லு..( சே.. ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டேன்..)
இல்ல..இல்ல..
போட்ட டிரஸ்சோட வரச்சொல்லு..மீதிய நான் பார்த்துக்கிறேன்..


அவ்வளவுதான்....... முடிஞ்சது பிரச்சனை..
சம்பாரிச்ச பணத்தில , எனக்கு 10% ஒதுக்கிட்டு, மீதிய ஒழுக்கமா ,
நேசனல் பேங்க்ல டெபாசிட் பண்ணிட்டு ,  கல்யாணம் பண்ணிக்க...

வரட்டா..

சே.. சொல்ல மறந்துட்டனே...
போன் பண்றப்ப , மறந்து போயி "மணி"-னு சொல்லிடாதே..
அப்புறம் உன்னோட மணிய , கடவுளாலேயே காப்பாத்த முடியாது..
( நான் இதை,  அன்பு ஆக,  சொல்லிக்கொள்ள விரும்பிகிறேன்..)

வாசகர்களே.. ( பெரிய இவன்.. எழுத்தாளன் மாறியே பேசுறான் பன்னாட........என்னைய நானே சொன்னேன் சார்.)

அடுத்த ஆறு மாதத்தில் "இறா" என்ற படம் வெளிவந்தால் ,
மணிமாறன் வெற்றி பெற்றுவிட்டான் என  கொண்டாடி விடுவோம்..
இல்லை.. பேப்பர் , நீயூஸ்  பார்த்து தெரிந்து கொள்கிறேன்..மக்கா....
.
.
.

42 comments:

 1. இறா, வெற்றி பெற
  வாழ்த்துக்கள் மணிமாறன் :))

  ReplyDelete
 2. அப்படி போடு அருவாளா...
  பார்ப்போம்.. என்னதான் நடக்குமுனு கொத்து பரோட்டா...

  ReplyDelete
 3. @யூர்கன் க்ருகியர் said...
  மணிமாறா ..be careful!
  //


  என்னா சாரே..
  மணிமாறனுக்கு நல்லதுதானே சொல்லியுருக்கேன்

  ReplyDelete
 4. மாறன் குரூப் கிட்ட மாட்டினாலும் மண்டைய உடச்சி அனுப்பிருவாங்க
  தளபதி கிட்ட மாட்டினாயேன்றால் அவ்வளவுதான் நடிச்சே கொன்னுருவாறு..
  அதான் கொஞ்சம் எச்சரிக்கை செய்தேன்..

  மற்றபடி உங்க பேச்சுக்கு மறுபேச்சு பேசுவனா தலைவரே ...

  ReplyDelete
 5. @யூர்கன் க்ருகியர் said...
  மாறன் குரூப் கிட்ட மாட்டினாலும் மண்டைய உடச்சி அனுப்பிருவாங்க
  தளபதி கிட்ட மாட்டினாயேன்றால் அவ்வளவுதான் நடிச்சே கொன்னுருவாறு..
  அதான் கொஞ்சம் எச்சரிக்கை செய்தேன்..
  மற்றபடி உங்க பேச்சுக்கு மறுபேச்சு பேசுவனா தலைவரே ...
  //

  அப்படி இல்ல யூர்கன் க்ருகியர்..

  வல்லவனுக்கு வல்லவன் , நம்ம மணிமாறனா இருக்கலாம் அல்லவா..
  உடுங்க சார்.. ஆரம்பம்னா ஒரு முடிவு இல்லாமல போயிடும்..

  ReplyDelete
 6. மணிமாறன் வெற்றி பெற வாழ்த்துகள்..

  நீங்க தொழிலை விட்டுப் போயிடக்கூடாதுன்னு நினைக்கிற ஒரு நல்ல மனிதன் நானு..

  ReplyDelete
 7. @முகிலன் said...
  மணிமாறன் வெற்றி பெற வாழ்த்துகள்..
  நீங்க தொழிலை விட்டுப் போயிடக்கூடாதுன்னு நினைக்கிற ஒரு நல்ல மனிதன் நானு..
  //
  நன்றி சார்..
  இப்பத்தான் உங்க ப்ளாக்கப் படிச்சுட்டு இருக்கேன்..
  அடிக்கடி உங்க கடைப்பக்கம் வரப்போறேன்..
  தொடர்ந்து எழுதுங்க...

  ReplyDelete
 8. ஏங்க .. அப்ப மணிமாறன் ஹீரோயினோட டேட்ஸ்-ச பார்த்துக்க மாட்டாறா?

  ReplyDelete
 9. @Manithan said...
  ஏங்க .. அப்ப மணிமாறன் ஹீரோயினோட டேட்ஸ்-ச பார்த்துக்க மாட்டாறா?
  //


  யோவ்..
  நீ ஏதோ, டபுள் மீனிங்கல பேசற மாறி தெரியுது..
  நான் திருந்திட்டன்லே..என்னைய நம்புலே....

  என்னைய வம்புக்கு இழுக்காதலே...
  வெளியூரு, ரெட்டை, என்னானு பார்த்து
  நம்மள காப்பாத்துங்கலே....

  ReplyDelete
 10. சென்சார் பண்ணனும்போலிருக்கே...

  ReplyDelete
 11. பட்டாபட்டி சார் எனக்கும் ஒரு பிரச்சனை. உங்கள பார்த்தா ரெம்ப நல்லவரா தெரியுது. ஹெல்ப பண்ணுங்க. நான் அல்டிமேட் ஸ்டார்கிட்ட கால்ஷிட் வாங்கிட்டு வர்றேன்.

  ReplyDelete
 12. பட்டு சார் ஹிரோயின் (டிரஸ்) நாதான் செலக்ட் பன்னுவேன். (ஐயோ ஒளரிட்டேனோ )

  ReplyDelete
 13. @கண்ணகி..
  சென்சார் பண்ணனும்போலிருக்கே...
  //
  சீக்கிரம் நான் திருந்தனுமுங்கா..

  ReplyDelete
 14. @தமிழ் உதயம் said...
  பட்டாபட்டி சார் எனக்கும் ஒரு பிரச்சனை. உங்கள பார்த்தா ரெம்ப நல்லவரா தெரியுது. ஹெல்ப பண்ணுங்க. நான் அல்டிமேட் ஸ்டார்கிட்ட கால்ஷிட் வாங்கிட்டு வர்றேன்.
  //

  நல்லவருனு சொல்லிட்டீங்க..
  ஓபாமாவ நடிக்க வைக்கனுமா.. சொல்லுங்க..
  பண்ணிடலாம்

  ReplyDelete
 15. @ஜெய்லானி said...
  பட்டு சார் ஹிரோயின் (டிரஸ்) நாதான் செலக்ட் பன்னுவேன். (ஐயோ ஒளரிட்டேனோ )
  //

  ஆகா.. உங்களுக்கு இல்லாததா?..
  பண்ணுங்க சார்..

  ReplyDelete
 16. நீங்க வேற 100வது பதிவப் போட்டுடீங்க.. உங்களை கேட்டால்தான்,
  நல்ல பதில் கிடைக்கும்..
  - மணிமாறன்..
  *******************************
  வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்லமாட்டாய்ங்க ங்கற மாதிரியில்ல இருக்கு மணிமாறா!

  ReplyDelete
 17. நல்லா எழுதயிருக்கீங்க தம்பி,
  அப்டியே எங்கூருலெ வெவசாயமெல்லாம் கெட்டுப்போச்சுங்க. அங்க வந்தா பொளச்சுக்கலாங்களா? இந்த மாதிரி ஏதாச்சும் நல்ல வளி காட்டுவீங்களா?

  ReplyDelete
 18. @ரெட்டைவால் ' ஸ் said...
  நீங்க வேற 100வது பதிவப் போட்டுடீங்க.. உங்களை கேட்டால்தான்,
  நல்ல பதில் கிடைக்கும்..
  - மணிமாறன்..
  *******************************
  வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்லமாட்டாய்ங்க ங்கற மாதிரியில்ல இருக்கு மணிமாறா!
  //

  மணிமாறா.. நீ முன்னேறிடுவேனு ,என்னென்னமோ, சொல்றாங்க இந்த பயலுக..
  நம்பாதே..
  என்னா துயர் வந்தாலும் , தொடச்சு போட்டுட்டு போயிட்டேயிரு..
  கலங்காதே..

  போய் ரத்தகளரியா(க்)கிவிட்டு வா...
  வேல்.. வேல்.. வெற்றி வேல்...

  ReplyDelete
 19. @ மசக்கவுண்டன் said...
  நல்லா எழுதயிருக்கீங்க தம்பி,
  அப்டியே எங்கூருலெ வெவசாயமெல்லாம் கெட்டுப்போச்சுங்க. அங்க வந்தா பொளச்சுக்கலாங்களா? இந்த மாதிரி ஏதாச்சும் நல்ல வளி காட்டுவீங்களா?
  //

  அக்கறைக்கு , இக்கறை பச்சை கதைதான் கவுண்டரே..
  நானே அங்க வரலாமுனு இருக்கேன்.. .. 10 காசு சம்பாரிச்சாலும் , நம்ம ஊர் மாறி வராதுங்கண்ணா..

  நாங்க லீவுல வரப்போ , கறுப்பு கண்ணாடி , ரீபோக் ஷு எல்லாம்,
  போட்டு பந்தா பண்றதப் பார்த்துட்டு
  பெருசா நினைச்சுக்காதீங்க.. எல்லாமே மாயை...

  நான் உங்களை டிஸ்கரேஸ் பண்றேனு நினைக்காதீங்க.. வந்தா நல்ல போஸ்ட்ல வரனும்..
  இல்லாட்டி , டூரிஸ் விசாவுல வந்து ஜாலியா சுத்திப் பார்த்துட்டு போங்க..

  ReplyDelete
 20. மங்குனி ஆஜர்
  அடபாவி மணிமாற ? புலி வாழ விட்டு இப்ப டினோசார் வாழ புடுசிட்டியே , இனி அது குலதெய்வத்துக்கு பளிகுடுக்காம விடாது . ஒரு ரூபா அறிசினால 10000 தான் செலவாச்சு , இனி பாரு

  ReplyDelete
 21. @மங்குனி அமைச்சர் said...
  மங்குனி ஆஜர்
  அடபாவி மணிமாற ? புலி வாழ விட்டு இப்ப டினோசார் வாழ புடுசிட்டியே , இனி அது குலதெய்வத்துக்கு பளிகுடுக்காம விடாது . ஒரு ரூபா அறிசினால 10000 தான் செலவாச்சு , இனி பாரு
  //


  யோவ்... மங்குனி..
  வந்தது கரெக்டா பத்த வைக்கிறயே..?

  நான் நல்லவனு எப்பய்யா சொல்லப் போற செல்லம்...

  ReplyDelete
 22. அது என்னாங்கடா நான் வந்த உடனே கரெக்டா எல்லோரும் எஸ் ஆகிட்ரிங்க

  ReplyDelete
 23. @மங்குனி அமைச்சர் said...
  அது என்னாங்கடா நான் வந்த உடனே கரெக்டா எல்லோரும் எஸ் ஆகிட்ரிங்க
  //

  நாங்க சிங்கமுலே..
  சாப்பிடப் போயிருந்தோம்.. ஹி..ஹி

  ReplyDelete
 24. அந்த 50000 காசோல தானே, நம்ம மன்னர் ரெட்ட தருவாரு
  டாக்டர் மங்குனி வாழ்க , டாக்டர் மங்குனி வாழ்க வாழ்க , டாக்டர் மங்குனி வாழ்க, வாழ்க, வாழ்க
  இது அதுவா வந்த கூட்டம்

  ReplyDelete
 25. @மங்குனி
  அந்த 50000 காசோல தானே, நம்ம மன்னர் ரெட்ட தருவாரு
  டாக்டர் மங்குனி வாழ்க , டாக்டர் மங்குனி வாழ்க வாழ்க , டாக்டர் மங்குனி வாழ்க, வாழ்க, வாழ்க
  இது அதுவா வந்த கூட்டம்
  //

  யோவ்.. சத்தம் உம் உடல் நலத்துக்கு கேடு..
  உனக்கு ரூ 50,000 என்ன , ரூ 50,001 தரும்படி ரெட்டையிடம் சொல்கிறேன்..
  ஆமா. நீ எப்ப டாக்டர் ஆனே..?

  ReplyDelete
 26. //யோவ்... மங்குனி..
  வந்தது கரெக்டா பத்த வைக்கிறயே..?

  நான் நல்லவனு எப்பய்யா சொல்லப் போற செல்லம்...//

  தோடா சாமியே சைக்கிள் -ல போய்கிட்டு இருந்துச்சாம் பூசாரி புல்லெட் கேட்டானாம்

  ReplyDelete
 27. @மங்குனி
  தோடா சாமியே சைக்கிள் -ல போய்கிட்டு இருந்துச்சாம் பூசாரி புல்லெட் கேட்டானாம்
  //

  உகூம்.. உன்னோட கடைக்கு வந்து
  நான் வாந்தி எடுக்காதவரை.. நீ அடங்க மாட்டே..

  வரட்டுமா?...
  ..

  ( வந்தாச்சு.. எடுத்தாச்சு.. போயி உன்னோட கடையப் பாரு..)

  ReplyDelete
 28. //யோவ்.. சத்தம் உம் உடல் நலத்துக்கு கேடு..
  உனக்கு ரூ 50,000 என்ன , ரூ 50,001 தரும்படி ரெட்டையிடம் சொல்கிறேன்..
  ஆமா. நீ எப்ப டாக்டர் ஆனே..?//

  உஷ்பெச்கிஷ்தான்ல இருக்க பட்டாப்பட்டி யூனிவெர்சிடி-ல கொடுத்தாக.
  வர்ற சண்டே நம்ம குலைஞர் டிவி பாரு அதுல நேரடி ஒலிபரப்பு செய்றா

  ReplyDelete
 29. @மங்குனி அமைச்சர் said...
  உஷ்பெச்கிஷ்தான்ல இருக்க பட்டாப்பட்டி யூனிவெர்சிடி-ல கொடுத்தாக.
  வர்ற சண்டே நம்ம குலைஞர் டிவி பாரு அதுல நேரடி ஒலிபரப்பு செய்றா
  //

  யோவ்.. ப்ளிஸ்யா.. எனக்கு ரெக்கமண்டேஷன் பண்ணி ஒரு டாக்டர் பட்டம் வாங்கித்தாயா..

  படுக்க வெச்சு அறுக்கனுமுனு ஆசை ஆசையாயிருக்கையா..
  ( மகனே..வாங்க்கி கொடுத்தாலும், கொடுக்கலைனாலும், உன்னத்தான்
  அறுக்கப் போறெனு தெரியாம இருக்கு மங்குனி.. ஜாலி . ஜாலி )

  ReplyDelete
 30. நம்ம வெளியூரு , ரெட்ட , ஜெய்லானி இவுகள்லாம் கரெக்டா மாடு மேகக அனுபிசிட்ட போல இருக்கு

  ReplyDelete
 31. @மங்குனி அமைச்சர் said...
  நம்ம வெளியூரு , ரெட்ட , ஜெய்லானி இவுகள்லாம் கரெக்டா மாடு மேகக அனுபிசிட்ட போல இருக்கு
  //

  உனக்கு, சனிஸ்வரன் , சல்யூட் வெச்சுட்டாருனு நினைக்கிறேன்..
  அடிச்சு ஆடு ராசா...

  ReplyDelete
 32. //உனக்கு, சனிஸ்வரன் , சல்யூட் வெச்சுட்டாருனு நினைக்கிறேன்..
  அடிச்சு ஆடு ராசா...//

  மிஸ்டர் சனீஸ் கிட்ட நான் ஒரு டீல் வச்சுருக்கேன் (ரெண்டே ரெண்டு பீர் தான்யா ) சோ நோ ப்ராப்ஸ்

  ReplyDelete
 33. @மங்குனி அமைச்சர் said...
  மிஸ்டர் சனீஸ் கிட்ட நான் ஒரு டீல் வச்சுருக்கேன் (ரெண்டே ரெண்டு பீர் தான்யா ) சோ நோ ப்ராப்ஸ்
  //

  இந்த மாறி சொன்னவங்க.. பட்டாபட்டி கிழிஞ்சத, ரெண்டு கண்ணாலப் பார்த்தவன்.
  இந்த பட்டாபட்டி..
  யோவ்.. எங்கூட சண்டை போடற நேரத்திலே , அழகா,

  ஒரு கவிதை,
  இல்ல ஒரு கதை,
  இல்ல கருத்து, அப்படி ஒரு பதிவ ரெடி பண்ணுய்யா..

  ( ஆமா.. நானும் மொக்கையா எழுதாம, ஒரு கவிதையப் போட்டு மக்கள் பல்ஸ் பார்க்கலாமா?)

  ReplyDelete
 34. //யோவ்..
  நீ ஏதோ, டபுள் மீனிங்கல பேசற மாறி தெரியுது..
  நான் திருந்திட்டன்லே..என்னைய நம்புலே....//

  என்னது சூரியன் தலைகீழா சுத்துன்னு சொல்ற மாதிரி இருக்கு!!!!.

  அகா நம் தலைவரிடம் ஏமாந்த மணிமாறனை இனி எவராலும் காப்பாத்த முடியாது. அது யாருங்கன்னா வேனுக்கு வெளியில தொங்கிட்டு வர்றது ???


  அய்யா குட்டி இந்தியாவிற்க்கு வந்தால் எனக்கு போன் பண்ணுங்கள். எனது எண்: 91329876.

  ReplyDelete
 35. @பித்தனின் வாக்கு said...
  என்னது சூரியன் தலைகீழா சுத்துன்னு சொல்ற மாதிரி இருக்கு!!!!.
  அகா நம் தலைவரிடம் ஏமாந்த மணிமாறனை இனி எவராலும் காப்பாத்த முடியாது. அது யாருங்கன்னா வேனுக்கு வெளியில தொங்கிட்டு வர்றது ???
  //

  சார்.. வாங்க.. திருந்தி ஒரு நல்லா எழுதலாமுனா,
  விஜயகாந்த் , முதலைமைசரா நடிக்கிற மாறியிருக்குனு
  கிண்டல் பண்றாங்க..
  என்ன சார் பண்றது.. புலி வால் புடிச்ச கதைதான்..

  கண்டிப்பா , மீட் பண்றேன் சார்..( ஆனா ஆட்டோ அனுப்பகூடாது .. சொல்லிட்டேன்..)

  ReplyDelete
 36. //கண்டிப்பா , மீட் பண்றேன் சார்..( ஆனா ஆட்டோ அனுப்பகூடாது .. சொல்லிட்டேன்..)//

  ஆஹா ஓசி சரக்கு ஆள் ரெடி பண்டாயா, பித்தனின் வாக்கு said... சார் வேலில போன வில்லங்கத்த வெல குடுத்து வாங்கிடின்களே , வேற என்ன சொல்றது ஆழ்ந்த அனுதாபங்கள்

  ReplyDelete
 37. // கண்டிப்பா , மீட் பண்றேன் சார்..( ஆனா ஆட்டோ அனுப்பகூடாது .. சொல்லிட்டேன்..) //
  சே சே எனக்கு ஆட்டோ அனுப்புற பழக்கம் இல்லைப்பா. பயப்படாதே.

  நாங்க எல்லாம் கண்டெயினர் அனுப்புர பரம்பரையில் வந்தவிங்க.....

  ReplyDelete
 38. @மங்குனி அமைச்சர் said...
  ஆஹா ஓசி சரக்கு ஆள் ரெடி பண்டாயா, பித்தனின் வாக்கு said... சார் வேலில போன வில்லங்கத்த வெல குடுத்து வாங்கிடின்களே , வேற என்ன சொல்றது ஆழ்ந்த அனுதாபங்கள்
  //

  நீ போதுமய்யா எனக்கு.. உன்னோட அமைச்சர் பதவிய பறிக்கலாமானு,
  நாளை பொதுக்குழுவுல முடிவு செய்யப்படும்..

  ReplyDelete
 39. @பித்தனின் வாக்கு said...
  சே சே எனக்கு ஆட்டோ அனுப்புற பழக்கம் இல்லைப்பா. பயப்படாதே.
  நாங்க எல்லாம் கண்டெயினர் அனுப்புர பரம்பரையில் வந்தவிங்க.....
  //

  சார். சும்மா தமாசுக்கு சொன்னேன் சார்..
  கண்டிப்பா வரேன் சார். நேரில் நிறைய பேசலாம் சார்..

  ReplyDelete
 40. //நீ போதுமய்யா எனக்கு.. உன்னோட அமைச்சர் பதவிய பறிக்கலாமானு,
  நாளை பொதுக்குழுவுல முடிவு செய்யப்படும்..//

  பொதுகுழு பெரிய ஈர வெங்காயம் , அமைசர் பதவி குடுத்து பத்து நாள் ஆகுது இன்னும் இலாகா ஒதுக்கல , சம்பளம் குடுக்கல இதுல தக்காளி பதவிய பறிக்கலாமானு முடிவு வேறயா.

  ReplyDelete
 41. மக்கா,கொஞ்ச நாள் ஊரு பக்கம் போயிட்டேன்.இனிமே இங்க தான்.ரெகுலர் attendance போட்டுடலாம்.

  //இலுமினாட்டி ( ஆங்கில நாயகன்..சொல்லிச்சொல்லி தமிழ்ல ஏழுதுகிறார்)//

  யோவ்!என்னத்த சொல்லி சொல்லி தமிழ்ல எழுதுறது?நீங்க எங்கய்யா சொன்னிங்க? இங்கிலிஸ்ல எழுதுனா விஜய் படத்த போட்டு காட்டுவேன்னு என்ன கொடுமப்படுத்தி இல்ல என்ன எழுத வெச்சீங்க.அட இதுவாவது பரவா இல்ல,ஏதோ ஒரு பக்கி ‘இனிமே இங்கிலிஸ்ல எழுதுன, மவனே, அப்றோம் ரித்திஷ் படத்த டெய்லி வீட்டுக்கு பார்சல்ல அனுபிடுவேன்னு ராவா பயமுறுத்துறான்.என்ன கொடும சார் இது.ஒரு பயல நிம்மதியா இங்கிலிஸ்ல எழுத விடாம ரப்சர் பண்ணிக்கிட்டு.......(ஆனா,ஆங்கில ‘நாயகன்’ன்னு சொல்றத பாத்தா நம்ம பட்டு தான் இந்த பக்கி வேலைய பாக்குற மாதிரி தெரியுதே... )

  பயபுள்ளைக எதுக்கு ஒண்ணு செர்ரனுன்களோ இல்லையோ,தக்காளி இதுக்கு சேர்ரானுங்க....

  //மன்னர் பெல்ட் குண்டு பாத்ததே இல்லைய்யா...தயவு செஞ்சு வெளியூருக்கு அதை மாட்டிவிட்டு ஆட விடுங்கையா....ஜாலியா இருக்கும்! பட்டு நீயும் கெஸ்ட் ரோல் ல ஆடு..(அப்டியே ரெண்டு பேரியும் அனுப்பிட்டா...ஒரு வேலை முடிஞ்சிடும்!)//

  யோவ்,தக்காளி நீ எல்லாம் என்னையா மன்னன்?போய் கெஞ்சிகிட்டு இருக்கீரே .....
  கழுதைய ரெண்டு பேருகிட்டயம் ஸ்ரீலங்காவுக்கு ப்ரீ டூர்ன்னு சொல்லி டிக்கெட் எடுத்து குடுத்து போட்டு தள்ளுவியா,அத விட்டுட்டு கெஞ்சிகிட்டு இருக்க.உம்ம கவுக்க வெளியூர் பிளான் போடறதுல தப்பே கிடையாதுயா மன்னா.

  பின் குறிப்பு: கொஞ்சம் காசு மட்டும் கொடுத்தீர்(இது கொஞ்சம் கஷ்டம் தான்.கஜானவே கடன்ல தான் ஓடுதுன்னும்,மன்னர் டெய்லி நைட் பிச்சைக்காரன் வேஷம் போட்டுக்கிட்டு,நகர உலா போற சாக்குல போய் பிச்ச எடுக்குறார்ணும் கேள்விபட்டேன். ) என்றால் இவனுங்க ரெண்டு பேருக்கும் ஒன் வே ‘டிக்கெட்’ நானே எடுத்து ஸ்ரீலங்கா அனுப்பிடறேன்.வெளியுறவுத்துறை அமைச்சரா இருந்து இது கூட செய்யலைன்னா எப்டி....

  வெளி said:

  //எங்களுக்கு மலையாள படம் புடிக்கும்தான்..ஆனா இந்த மாதிரி பேசிக்கிட்டுருக்கற படம் இல்ல..//
  அடங்கொன்னியா.....இப்டியா உண்மைய பப்ளிக்ல சொல்லுவ...பின்ன எப்டியா உமக்கு கல்யாணம் நடக்கும்?போற போக்க பாத்தா நீரு வாழ்கை முழுசும் கன்னிப்பையனாவே இருந்து செத்துப் போயடுவீறு போல இருக்குதே...(அந்த செத்து போறதுக்கு நான் கேரண்டி.பயலுக கிட்ட சொன்னா போதும்.neraya peru umma pottu thalla waiting la irukainga makka...) :)

  //அடப்பாவி பட்டா நீ எப்பவும் காசு கொடுத்துதான் சரகடிபியா ??//
  மங்குனி.எங்க பட்டு போட்டு இருக்குற பட்டாபட்டியே அவருக்கு சொந்தமானது கெடயாது.நீரு அவர்கிட்ட போய் இப்டி எல்லாம் கேக்குரீரே?

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!