Pages

Sunday, March 28, 2010

ஒரு நாள் மன்னர் நாம்மென்போம்.தர்மபுரி மாவட்டத்திலுள்ள பென்னாகரம் தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப் பதிவு பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளது. சராசரியாக 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

திமுக, பாமக, அதிமுக, தேமுதிக ஆகிய நான்கு கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 31 பேர் பென்னாகரம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டனர்.திமுக சார்பில் இன்பசேகரன், அதிமுக சார்பில் அன்பழகன், பாமக சார்பில் தமிழ்க்குமரன், தேமுதிக சார்பில் காவேரி வர்மன் ஆகியோர் போட்டியிட்டனர்.தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் கருணாநிதி, அ இஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரும் பிரச்சாரங்களில் கலந்துகொண்டனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் அ இஅதிமுக கூட்டணியில் இருந்து, போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலுமே தோல்வியுற்று இப்போது எக்கூட்டணியிலுமில்லாது தனித்துப் போட்டியிட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு இது மிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகக் கருதப்படுகிறது. இதனால் அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசும் அவரது மகன் முன்னாள் மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணியும் தொகுதியிலேயே முகாமிட்டு தங்கள் கட்சிப் பிரச்சாரத்தை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தனர்.

வன்முறை சம்பவங்கள் நிகழக்கூடும் என்றஞ்சி ஏறத்தாழ 3000 மத்திய, மாநில போலீஸார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் காமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இவை இணையத்துடன் இணைக்கப்பட்டிருந்தன. அதன் மூலம் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தர்மபுரியில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி வாக்குப் பதிவை நேரடியாக கண்காணித்தார்.

--------------------------------------------------------

நன்றி.. வாக்காளப்பெருமக்களே..

ஏழை.ஏளியவர்களின் முகத்தில புன்முறுவல்,
மக்கள் துயர் துடைக்க, கட்சியினர் ஆற்றிய தொண்டு,
பத்திரிக்கைகளுக்கு தினத்தீனி,
பாக்கெட்டுகளில் பணம்,
டாஸ்மார்க்கில் அதீத விற்பனை,
கஞ்சி குடிக்கும் மக்களுக்கு, அரிசி சோறு,
மண்ரோடு, தார்ரோடு ஆனவிதம்,
பஸ் பார்க்காத இடங்களுக்கு,போக்குவரத்து வசதி,

ஸ்.. அப்பாடா .. ஒருவழியாக எது நடக்கவேண்டும் என நினைத்தமோ அது நடந்துவிட்டது..

ஏழைகளை ஒரு வழியாக இந்நாட்டு மன்னராக்கிவிட்டோம்..நெஞ்சு நிறைய சந்தோசம்..


மக்களே..உங்களை மன்னராக்கி..சாணி பூசிய செருப்பில, அடித்தாகிவிட்டது..    உழைத்து களைத்த கரங்களுக்கு , கரண்ஸியில் ஒத்தடம் கொடுத்தாகிவிட்டது..

ஓய்வெடுத்தது போதும் நண்பர்களே..

உங்கள் கலப்பையை தோளில் ஏந்தி உழைக்க தயாராகுங்கள்..
கிழிந்த வேட்டியை தைத்துக்கொண்டு , தொழிலுக்குப் புறப்படுங்கள்.


மீண்டும் உங்களை மன்னராக்கி பார்க்கும் காலம் வரும்..
அன்று மீண்டும்  சந்திக்கலாம்..

நன்றி.. வணக்கம்..

அவன் - இன்றைய வட்டம்.. நாளைய மந்திரி..
.
.
.

36 comments:

 1. நானும் நாளைய மன்னர் ஆகணும் பட்டபட்டியாரே... அதற்கு வழி சொல்லுங்கள்...

  ReplyDelete
 2. எந்தக் கட்சி ஜெயிச்சா, யார் யார் எப்படி அறிக்கை விடுவாங்கன்னு ஒரு கலாய்ப்பு கலாய்ச்சிருக்கலாமண்ணே! :-)))

  ReplyDelete
 3. யோவ் பட்டு ஒரு விருதும் லிங்கும் குடுத்ததும் எப்படி இருந்த நீ இப்ப்டி ஆயிட்டியேயா?? மனசு தாங்கல எனக்கு..

  ReplyDelete
 4. இப்படியே காரம் மசாலா இல்லாம பதிவு போனா , அப்புரம் ப மு க தலைவர்+ செயலாளர்+ பொருளாளர் நாந்தான் சொல்லிட்டேன் ஆமா!!!

  ReplyDelete
 5. //ரோஸ்விக் said...

  நானும் நாளைய மன்னர் ஆகணும் பட்டபட்டியாரே... அதற்கு வழி சொல்லுங்கள்..//

  இருங்கப்பூ , உங்களுக்கும் ஒரு விருதும் லிங்க்கும் ரெடி பண்ணிடுவோம்.

  ReplyDelete
 6. //சேட்டைக்காரன் said...

  எந்தக் கட்சி ஜெயிச்சா, யார் யார் எப்படி அறிக்கை விடுவாங்கன்னு ஒரு கலாய்ப்பு கலாய்ச்சிருக்கலாமண்ணே! :-)))//

  ஆமாப்பா ஆமாம். என்ன ஆச்சுன்னே தெரியலயே.

  ReplyDelete
 7. இன்னைக்கு பாத்து வெளியூரு வையும் கானேமே!! ஜூரோங் வெஸ்ட்ல தண்ணி அடிக்க போயிடுச்சா!!!

  ReplyDelete
 8. ஆரம்பிச்சுட்டான்யா சிங்கம்... எல்லாரையும் மன்னராக்கி ஏன் பட்டபி இந்த மன்னரை கவுக்கறீங்க...

  எல்லாரையும் ஒரு ராணுவ தளபதி... ஒரு மகளிர் அணித்தலைவராக்கலாம்ல...எல்லாவனுக்கும் என் ஸீட்டு மேல தான்யா கண்ணு...சே...!

  ReplyDelete
 9. ஆரம்பிச்சுட்டான்யா சிங்கம்... எல்லாரையும் மன்னராக்கி ஏன் பட்டபி இந்த மன்னரை கவுக்கறீங்க...

  எல்லாரையும் ஒரு ராணுவ தளபதி... ஒரு மகளிர் அணித்தலைவராக்கலாம்ல...எல்லாவனுக்கும் என் ஸீட்டு மேல தான்யா கண்ணு...சே...!

  ReplyDelete
 10. பட்டாபட்டியாக இல்லாமல்,ஒரு பதிவராக, பதிவு போட்டுள்ளீர்கள். நல்ல பதிவு. இறுதிவரிகளில் யதார்த்தமான உண்மையைச் சொல்லியிருக்கின்றீர்கள். நன்றி.

  நான் பட்டாபட்டி,வெளியூரான்,மங்குனி,இலுமினாட்டி,ஜெய்லானியின் பதிவுகளை தினமும் பார்ப்பது வழக்கம்,படித்துக் கொண்டுதான் இருக்கின்றேன். சனிக்கிழமை கூட கோயிலுக்கு வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

  புதன் கிழமையில் இருந்து வைரல் பீவர், வியாழன் எம்,சி. சனி ஞாயிறு ஓய்வுக்குப் பின்னர் இப்பதான் பரவாயில்லை. இன்னமும் உடல் அசதி மற்றும் வலி உள்ளது.

  நான் மறுபடியும் சொல்கின்றேன், பதிவு என்பது வேறு,நட்பு என்பது வேறு. பதிவில் நாம் ஆயிரம் கருத்துப் பறிமாற்றம் செய்யலாம். வார்த்தைகளில் அடித்துக் கொள்ளலாம்,ஆனால் தனிமனித நட்பில் அது ஒரு குறுக்கீடாக இருக்கக்கூடாது. நானும், சிங்கை கோவி அண்ணாவும் பல கருத்துக்களில் காரசாரமாக விவாதம் செய்வேம். ஜாதியம்,பகுத்தறிவு,கடவுள்,திராவிடம் போன்றவற்றில் முரண் படுவேம். ஆனால் நாங்கள் சந்திக்கும் போது,அண்ணன் தம்பியாக பழகுகின்றேம். இதுதான் பதிவுலக நட்பு. உங்கள் யார் மீதும் எனக்கு கோபமே,வருத்தமோ இல்லை. அது நமது கருத்துக்களின் பரிமாற்றம்தான் என்று மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். சந்திக்கும் போது சொல்லாம் என்று நினைத்தேன், ஆனால் இப்போது சொல்லவேண்டியது ஆயிற்று. நன்றி பட்டாபட்டி.

  ReplyDelete
 11. Guys,do visit here please.

  http://kaattchi.blogspot.com/2010/03/blog-post_5727.html

  ReplyDelete
 12. நன்றி பட்டா , அப்புறம் நான் சொல்றப்ப அந்த gif பைல என்னோட ப்ளாக்-ல நீ வச்சுருக்க மாதிரி ரைட் சைட் கீழ பெர்மனன்டா இருக்க மாதிரி பண்ணிடு

  ReplyDelete
 13. நண்பா 84 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது

  ReplyDelete
 14. திராவிட முன்னேற்ற கழகம் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெரும்..!!..எதிரிகளின் கனவு கோட்டை தகரும்.
  பா ம க மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு பென்னாகரத்தில் படுகேவலமாக மண்ணை கவ்வும்..

  தலைவர் வாழ்க..

  திராவிட முன்னேற்ற கழகம் வாழ்க..


  இவன் வெளியூர்க்காரன்.!

  ReplyDelete
 15. //Veliyoorkaran said...
  திராவிட முன்னேற்ற கழகம் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெரும்..!!..எதிரிகளின் கனவு கோட்டை தகரும்.
  பா ம க மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு பென்னாகரத்தில் படுகேவலமாக மண்ணை கவ்வும்..

  தலைவர் வாழ்க..

  திராவிட முன்னேற்ற கழகம் வாழ்க..


  இவன் வெளியூர்க்காரன்.!//

  என்னா ஒரு கண்டுபிடிப்பு

  ReplyDelete
 16. இப்போ MLA நல்லா இருக்கணும், தொகுதிக்கு நல்லது பண்ணனும்னு யாரும் ஒட்டு போடகூடாது. அவன் சீக்கிரம் சாவனும். தொகுதிக்கு இடை தேர்தல் வரணும்.அப்போ தான் நாடு நல்ல இருக்கோ இல்லையோ குடிமகன்கள் நன்றாக இறுப்பர்.

  ReplyDelete
 17. தொடர்ந்து மக்களுக்கு நல்ல கருத்தை கூறிவரும் பட்டாபட்டியாரால் விரைவில் தமிழகத்தில் ப.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்பதை கூறிக்கொள்கிறேன்.
  (தலைவா நீங்க சொன்னமாதிரி கமெண்ட் போட்டாச்சு எனக்குத்தான் மகளிர் அணி தலைவர் பதவி தரவேண்டும்)

  ...சிவா...

  ReplyDelete
 18. அப்பாவிMarch 29, 2010 at 9:01 PM

  கண்கள் பணித்தது
  இதயம் இனித்தது.........

  ReplyDelete
 19. @ரோஸ்விக் said...
  நானும் நாளைய மன்னர் ஆகணும் பட்டபட்டியாரே... அதற்கு வழி சொல்லுங்கள்...
  //

  இதுக்கு கொஞ்சம் பொறுத்திருங்க.. அடுத்து யாரு.. எப்பனு இப்ப சொல்லமுடியாது..

  ReplyDelete
 20. @சேட்டைக்காரன் said...
  எந்தக் கட்சி ஜெயிச்சா, யார் யார் எப்படி அறிக்கை விடுவாங்கன்னு ஒரு கலாய்ப்பு கலாய்ச்சிருக்கலாமண்ணே! :-)))
  //

  என்க்கு, வெக்கமாயிருந்ததால அத சொல்லலை செட்டை..ஹி..ஹி

  ReplyDelete
 21. @ஜெய்லானி said...
  யோவ் பட்டு ஒரு விருதும் லிங்கும் குடுத்ததும் எப்படி இருந்த நீ இப்ப்டி ஆயிட்டியேயா?? மனசு தாங்கல எனக்கு..
  //

  அதுக்குத்தான் ஒரு டுபாக்கூர் விருதை கொடுக்கச்சொன்னேன்..
  பார்த்தீங்களா...இப்ப எழுத வார்த்தைகளே கிடைக்க மாட்டீங்குது ஜெய்லானி..

  ReplyDelete
 22. @ஜெய்லானி said...
  இப்படியே காரம் மசாலா இல்லாம பதிவு போனா , அப்புரம் ப மு க தலைவர்+ செயலாளர்+ பொருளாளர் நாந்தான் சொல்லிட்டேன் ஆமா!!!
  //

  ரைட்.. அடுத்த பதிவுல.. ஆடிவிடலாம்..

  ReplyDelete
 23. @ரெட்டைவால் ' ஸ் said...
  ஆரம்பிச்சுட்டான்யா சிங்கம்... எல்லாரையும் மன்னராக்கி ஏன் பட்டபி இந்த மன்னரை கவுக்கறீங்க...
  எல்லாரையும் ஒரு ராணுவ தளபதி... ஒரு மகளிர் அணித்தலைவராக்கலாம்ல...எல்லாவனுக்கும் என் ஸீட்டு மேல தான்யா கண்ணு...சே...!
  //

  ரொம்ப நாளா ஆளக்காணோமே..சரி,, நமக்கு நாமே திட்டத்தில.. மன்னராயிடலாமுனு பார்த்தா....

  ReplyDelete
 24. @பித்தனின் வாக்கு said...
  பட்டாபட்டியாக இல்லாமல்,ஒரு பதிவராக, பதிவு போட்டுள்ளீர்கள். நல்ல பதிவு. இறுதிவரிகளில் யதார்த்தமான உண்மையைச் சொல்லியிருக்கின்றீர்கள். நன்றி.

  நான் பட்டாபட்டி,வெளியூரான்,மங்குனி,இலுமினாட்டி,ஜெய்லானியின் பதிவுகளை தினமும் பார்ப்பது வழக்கம்,படித்துக் கொண்டுதான் இருக்கின்றேன். சனிக்கிழமை கூட கோயிலுக்கு வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

  புதன் கிழமையில் இருந்து வைரல் பீவர், வியாழன் எம்,சி. சனி ஞாயிறு ஓய்வுக்குப் பின்னர் இப்பதான் பரவாயில்லை. இன்னமும் உடல் அசதி மற்றும் வலி உள்ளது.
  //

  நமக்குள்ள என்ன பிரச்சனை..இதெல்லாம் ஜுசுபி மேட்டரு..
  புலிப்பால குடிச்சுட்டே பேசித்தீர்த்துக்களாம்...
  முதலில்..உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் பித்தன் சார்..
  ( மக்கா... சீரியசா சொல்லியிருக்கேன்.. உள்குத்து எதுவுமில்லை..)

  ReplyDelete
 25. @ILLUMINATI said...
  Guys,do visit here please.
  http://kaattchi.blogspot.com/2010/03/blog-post_5727.html
  //

  பார்த்தேன்.. கலக்கியிருக்காங்க பய புள்ளைக..
  என்னோட கருத்துக்களையும் அங்கு பதிவுசெய்துவிட்டேன் நண்பா..

  ReplyDelete
 26. @Veliyoorkaran said...
  திராவிட முன்னேற்ற கழகம் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெரும்..!!..எதிரிகளின் கனவு கோட்டை தகரும்.
  பா ம க மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு பென்னாகரத்தில் படுகேவலமாக மண்ணை கவ்வும்..
  தலைவர் வாழ்க..
  திராவிட முன்னேற்ற கழகம் வாழ்க..
  இவன் வெளியூர்க்காரன்.!
  //


  ஆகா.. கழக கண்மணிக்கு உற்சாகம் வந்திடுச்சு..

  @மக்கா....
  இது உங்களுக்கு..

  வெளியூரு.. நீரு அடுத்த பதிவில வந்து ஜாயின் பண்ணிக்க..  சரி மக்கா.. வெளியூர வெறியேத்த என்ன பண்ணனுமுனு கேட்டீங்களே..
  அவரே பதில சொல்லிட்டாரு,..


  ஓ.கே..ஸ்டார்ட் மீசிக்

  ReplyDelete
 27. @பக்கத்து வீட்டுக்காரன் said...
  இப்போ MLA நல்லா இருக்கணும், தொகுதிக்கு நல்லது பண்ணனும்னு யாரும் ஒட்டு போடகூடாது. அவன் சீக்கிரம் சாவனும். தொகுதிக்கு இடை தேர்தல் வரணும்.அப்போ தான் நாடு நல்ல இருக்கோ இல்லையோ குடிமகன்கள் நன்றாக இறுப்பர்.
  //

  @ரோஸ்விக்.. உமக்கு .. நம்ம அண்ணன் பதில சொல்லிவிட்டாரு...

  ReplyDelete
 28. @...சிவா...

  தொடர்ந்து மக்களுக்கு நல்ல கருத்தை கூறிவரும் பட்டாபட்டியாரால் விரைவில் தமிழகத்தில் ப.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்பதை கூறிக்கொள்கிறேன்.
  (தலைவா நீங்க சொன்னமாதிரி கமெண்ட் போட்டாச்சு எனக்குத்தான் மகளிர் அணி தலைவர் பதவி தரவேண்டும்)
  //

  உயிரக்கூட கொடுப்பேன்.. ஆனா .. மகளிர் அணி மட்டும்.. ஹி..ஹி..முடியாது சார்..

  ReplyDelete
 29. @அப்பாவி said...
  கண்கள் பணித்தது
  இதயம் இனித்தது.........
  //

  வாங்க அப்பாவி.. எங்க ஆளக்காணோம்...
  இடைத்தேர்தலில் பிஸியா?..

  ReplyDelete
 30. ஐந்து வருட ஆட்சியில் இடை இடையே நடப்பதால் அது இடை தேர்தலா?

  ReplyDelete
 31. பென்னாகரம் தேர்தல் முடிவுகள்

  http://manakkan.blogspot.com/2010/03/blog-post_29.html

  ReplyDelete
 32. பட்டாபட்டி தம்பி,
  நம்ம ஊர்லயும் இடைத்தேர்தல் வந்துச்சுங்க ஒரு 6 மாசம் முன்னாடி. தேர்தல் முடிஞ்ச பொறகு அது என்னமோ இடியட் பாக்ஸாமே, அதெக்கொடுத்தாங்க.ராஜா அன்பளிப்பு கொடுத்தா அதெ மறுக்கப்படாதுங்களாமே, அதனாலெ மரியாதையா போயி வாங்கிட்டு வந்துட்டனுங்க.

  ReplyDelete
 33. ரொம்ப புடிச்சுது.

  அழகாக மனதில் தைத்தது.

  நன்றி.

  ReplyDelete
 34. @VISA said...
  ஐந்து வருட ஆட்சியில் இடை இடையே நடப்பதால் அது இடை தேர்தலா?
  //

  ஆமாண்ணே..அப்பப்ப, பணம், Transaction நடக்கலைனா,
  வங்கி நடத்த முடியாதுண்ணே..

  ReplyDelete
 35. @மசக்கவுண்டன் said...
  பட்டாபட்டி தம்பி,
  நம்ம ஊர்லயும் இடைத்தேர்தல் வந்துச்சுங்க ஒரு 6 மாசம் முன்னாடி. தேர்தல் முடிஞ்ச பொறகு அது என்னமோ இடியட் பாக்ஸாமே, அதெக்கொடுத்தாங்க.ராஜா அன்பளிப்பு கொடுத்தா அதெ மறுக்கப்படாதுங்களாமே, அதனாலெ மரியாதையா போயி வாங்கிட்டு வந்துட்டனுங்க.
  //

  அது நம்ம பணம்தான் கவுண்டரே..
  ( கடை தேங்காய், வழி பிள்ளையாரு..ஞாபகம் வருதே..!!)

  ReplyDelete
 36. @Vetrimagal said...
  ரொம்ப புடிச்சுது.
  அழகாக மனதில் தைத்தது.
  நன்றி.
  //
  வ்ருகைக்கு நன்றி சார்..

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!