Pages

Friday, March 12, 2010

Mr..ஆன்மீகம் & அரசியவாதிகளே..

இரண்டு நாளா , மனசு சரியில்ல சார்..( நம்ம ரஞ்சி மற்றும் நித்தி பேட்டிகளை படிச்சு..)
இதுல வேற வெளியூரான், 'ஏய்யா.. இன்னும அதையே எழுதிகிட்டு இருக்கே..போயி வேற வேலையப்பாரு'னு  சொல்லிபுட்டான்...
சரி.. பேசாம ஜூராங்க் ஈஸ்ட்  போயி, முருகனுக்கு ஒரு சல்யூட் வெச்சா, எல்லாப்பிரச்சனையும்  சால்வ் ஆயுடுமேனு முடிவு பண்ணி , நேரா போயிட்டேன் சார்..

கோயில்ல ஒரே கூட்டம்.. ஏதோ உண்டகட்டி கொடுப்பாங்க  போல..அதுக்குத்தான்,  கூட்டம் இந்த  அம்மு அம்முதுனு நினைச்சுகிட்டு , செருப்ப கழட்டறேன், தோள் மேல ஒரு கை விழுகுது சார்..

திரும்பிப் பார்த்தா, 'ஈ'னு இளிச்சுகிட்டு சின்ராசு..
சனீஸ்க்கு, சகலைய ரொம்ப புடிக்கும்போல..
என்ன பண்றது.. ரெண்டு பேருமே, உள்ள போயி சாமி கும்பிட்டோம் சார்..( சாமி சத்தியமா..)  ......உண்டகட்டி கொடுக்கிற இடத்தில, கூட்டமே இல்ல..
ஆளுக்கு ஒண்ணு வாங்கிட்டு , படிக்கட்டுல உக்கார்ந்து சாப்பிட்டோம்..

திடீர்னு , சின்ராசு காதுகிட்ட, 'ஏதாவது பேசுடா பங்காளி.. அவன் நம்மளையே முறைக்கிறான்'னு சொன்னான்.       எவண்டா அது , எங்கள முறைக்கிறதுனு திரும்பிப்பார்த்தா, சோறு போட்ட செம்மலு..
(சே....ரெண்டு பார்சல் பண்ணலாமுனு பார்த்தா, சின்ராசு காரியத்த கெடுத்துப்புட்டானே...         பன்னி திங்கிற மாறி , திங்காதேனு சொன்னா, கேக்கிறானா, இந்த பய)

ஏதாவது பேசித்தொலைக்கமுனு, 'ஏம்பா.. சின்ராசு..ஊர்ல, சாமிக அட்டகாசம் தாங்க முடியல..       மருந்து கொடுக்கிறேன்.. ம&^ரக்கொடுக்கிறேனு அலம்பல் பண்ணிட்டு இருக்கானுக..    மக்களுக்கு கரண்ட் இல்ல.. குடிக்க தண்ணி இல்ல.. வருசம் பூரா, ரோடு போடறமாறி போட்டுட்டே இருக்கானுக..
ஆனா, ரோட்டத்தான் காணோம்.. இதெல்லாம் எப்ப சரியாகும்?'னு கேட்டேன்..

அதுக்கு, 'பேசாம, அரசியலு மற்றும், ஆன்மீகங்களை, மூணே வருசம்.. மூடிக்கிட்டு இருக்க சொல்லு..         எல்லாம் சரியாயிடும்'னு சொல்றான்

எப்படி?-இது நானு..

'பட்டாபட்டி....மூணு வருசம் லஞ்சம் வாங்காம், இருந்தா.. அந்தப்பணத்த வெச்சுட்டு , எல்லாப்பிரச்சனைகளையும்  சரி பண்ணிடலாம்'

ஏம்பா.. அவ்வளவு பணம் புரளுதா அதில..

ஆமாய்யா.. ஊடால ,  இந்த சன் நியாசி பயலுக வேற,  வெளி நாட்டுப் பணத்த வாங்கி,     போற வரவனுக்கு,    மருந்து கொடுத்துட்டு, நாட்ட குட்டிச்சுவராக்கிட்டு  இருக்கானுக..    பேசாமா, இவனுகள, கொஞ்ச நாளைக்கு , அமெரிக்கா, ஆப்பிரிக்கானு அனுப்பிட்டு, நாட்ட  நாமளே சுத்தப்படுத்திடலாம்..

போவானுகளா..?

போகாம என்ன.. வெள்ளக்காரனுகனா, நாம பல்ளிலுப்போமுனு , உலகத்துக்கே தெரியும்..  கிளிண்டனு, புஸ்சு கிட்ட சொல்லி, இவனுகள , அவனுக ஊருக்கு கூப்பிடச்சொல்லலாம்..  எல்லோரும்,   துண்டக்கட்டிட்டு போயிடுவானுக..

சரி.. அப்புறம்..

ஆக்கிரமிப்பு பண்ணுன, கடை, கண்ணி, வீடு.. எல்லாத்தையும் தட்டி எடுக்கிறோம்..  ரோட்ட அகலமா போட்டு, சோலார் யூஸ் பண்ணி எரியற, தெருவிளக்கு மாட்டுறோம்..  இதைய மட்டும் பண்ணிட்டாலே, பாதி பிரச்சனை தீர்ந்தது....  அப்புறம்.. நிசமாவே , ' இந்தியா ஒளிருமையா...'

நீ சொல்றது சரியாத்தான் படுது....மூணு வருசம்  லஞ்சம் வாங்காம இருந்தா
சுடுகாடா மாறிட்டு இருக்கிற நாட்ட, சொர்க்க நாடா மாத்திடலாம்..
ஆனாலும்.. கொஞ்சம் மனச் நெருட்டுதே..

சொல்லு..சொல்லு..அதுக்குத்தானே.. நானும் வந்திருக்கேன்..

இல்ல.. இவனுக திரும்பி வந்து .. திரும்பவும் நாறடுச்சுட்டா...

அதுக்கும் வழி இருக்கே....
திரும்பி, உள்ள வரும்போது .. இந்த ஏர்போர்ட்ல தான் இறங்கனுமுனு சட்டம் போட்டுடலாம்..  முதல்ல, ஆன்மீகத்த , ஒரு கேட்ல உள்ள அனுப்பனும்..
கேட்ல இருந்து வெளிய வரும்போது.. எவனுக்கும் வால் ட்யூப் இருக்காது..
ஏன்னா.. நம்ம டாக்டர் குழு.. வெற்றிகரமா பிரிச்சு எடுத்து விடும்..
அப்பறம் , இவனுகனாலே,   பிரச்சனை வருமா?

ஆகா.. அசைவமா பேசறானே.......வா.. வா.. மீதிய வெளிய போயி பேசலாமுனு
கூட்டிக்கிட்டு வந்துட்டேன்..
.
.
இதுவரை படித்துக்கொண்டு வந்த பெண்களே..
அப்படியே.. Bye..Bye சொல்லிட்டு கிளம்புங்க.. அடுத்த பதிவுல பார்க்கலாம்..
.

.
ஆண்களுக்கு...

கழட்டுன வால் ட்யூப்ப என்ன பண்ண போறேனு கேட்டேன் சார்...

அதுக்கு சொன்னான் பாருங்க.. ஒரு பதில..
கர்மமாடா சாமி..

அடுத்த கேங்குக்கு( அரசியல்னு என்னோட வாயால சொல்ல மாட்டேன் சார்..),
அதை  வேஸ்ட் பண்ணாம,  பின்னாடி,   fevicol போட்டு சொருகிடனுமாம்..
.
.
அப்ப என்ன நடக்கும்?..
[  புடுங்கியுட்டதாலே.....நிற்க வேண்டியது.....நிற்காம ..வந்துகிட்டேயிருக்கும்..இங்க... அடைச்சு விட்டதாலே.. வர வேண்டியது வராம...!!!!!!.. .
  ]
.
.
வரட்டா ?

66 comments:

 1. யோவ் பட்டாபட்டி,

  பாக்காதத பாத்துபுட்டு தூக்கம் வராம ஏம்ப்பு இப்படி பொலம்புறீய!

  ரோஸ்விக்கும் நானும்தான் தூங்காம நைட் ஷிஃப்ட் வேலை பாத்துகிட்டிருக்கோம்...

  பிரபாகர்.

  ReplyDelete
 2. இருங்கப்பு... இந்தா படிச்சிட்டு வாரேன்...

  ReplyDelete
 3. அடப்பாவிகளா..
  Send பட்டன் அமுக்கறதுக்குள்ள..

  கமென்ஸ் போட்டாச்சா..திரும்பவும், முருகன பார்க்க போகனும்..

  ReplyDelete
 4. வெள்ள்ககலர்ல எழுதி கலக்குறீங்கப்பு!

  நடத்துங்க நடத்துங்க!

  பிரபாகர்.

  ReplyDelete
 5. அதெல்லாம் ஏற்கனவே நாங்க படிச்சிட்டோம்பு

  ReplyDelete
 6. தெரியுமப்பு! படிச்சிட்டோம் சொல்றதுக்கு முன்னாலயே

  ReplyDelete
 7. பொட்ட புள்ளைங்க உன் ப்ளாக் பக்கம் வரமுடியாது போலிருக்கே

  ReplyDelete
 8. How is cable shankar..?
  Convey my rgds to him.....

  ReplyDelete
 9. ரோஸ்விக்...

  நான் போடற கமெண்ட் மாதிரியே போடாதிங்க ராசா...

  மாத்தி யோசிங்க, பட்டா போல...

  ReplyDelete
 10. பட்டாபட்டி.. said...

  அடப்பாவிகளா..
  Send பட்டன் அமுக்கறதுக்குள்ள..

  கமென்ஸ் போட்டாச்சா..திரும்பவும், முருகன பார்க்க போகனும்..


  ஹி ஹி ...நாங்கெல்லாம் இதே வேலையாய் தானே இருக்கோம்

  ReplyDelete
 11. அடுத்த வாரத்தில் , ஒரு ஐயர கூப்பிட்டு , பூசை பண்ணிடலாம்..
  ( தோசம் போயிடும் பாருங்க..)
  அப்புறம்.. என்ன போல நல்ல பையன் உலகத்திலேயே இல்லனு, கேபிள் சங்கரே,
  சொல்லுவாரு..

  ReplyDelete
 12. கேபிள் சங்கர் நல்லாயிருக்காரு...

  ReplyDelete
 13. எதுக்குங்க ஆசாமிய விட்டு சொல்ல சொல்றீங்க... நல்ல ஒரு ஆசன (சாரிப்பா ஆஸ்த்தான) சாமிய வச்சு உங்க தோசத்த போக்கிடுவோம்...

  ReplyDelete
 14. @Muthu said...
  ஹி ஹி ...நாங்கெல்லாம் இதே வேலையாய் தானே இருக்கோம்
  //

  விளங்கும்...
  அப்புறம் நித்தி பய வெக்கமே இல்லாம வந்து,
  பேசாம. என்ன பண்ணுவான்?.

  ReplyDelete
 15. கஸ்டமர் கூப்பிட்டுட்டான்.... பேசிக்கிட்டிருக்கேன்... வந்துடறேன்...

  கேபிள் இப்பத்தான் நம்ம கஸ்டடியில இருந்து போயிருக்காரு... என்ன பாக்க என்ன தயக்கம் பட்டா பட்டி நண்பா!

  ReplyDelete
 16. ரோஸ்விக் said...

  எதுக்குங்க ஆசாமிய விட்டு சொல்ல சொல்றீங்க... நல்ல ஒரு ஆசன சாமிய வச்சு உங்க தோசத்த போக்கிடுவோம்...


  அதை செய்யுங்க முதலா

  ReplyDelete
 17. @ ரோஸ்விக் said...
  எதுக்குங்க ஆசாமிய விட்டு சொல்ல சொல்றீங்க... நல்ல ஒரு ஆசன (சாரிப்பா ஆஸ்த்தான) சாமிய வச்சு உங்க தோசத்த போக்கிடுவோம்...
  //

  சாமி நின்னுகிட்டே தான் பூசை பண்ணனும்.. இப்பவே சொல்லிட்டேன்..
  பய புள்ளைகள உக்காரச் சொன்ன படுத்துருவானுக..

  ReplyDelete
 18. கேபிளை பாக்குற ஐடியா இல்லையா பட்டா?

  தெனமும் பாக்குறேன்னு நக்கல் வேணாம்....

  ReplyDelete
 19. உமக்கு ஒன்னு தெரியுமாவோய் அந்த நித்தி பய புள்ள இங்க வந்துடதா புரளியை கிளப்பிவுட்டுடாணுவ

  ReplyDelete
 20. பிரபாகர் said...

  கஸ்டமர் கூப்பிட்டுட்டான்.... பேசிக்கிட்டிருக்கேன்... வந்துடறேன்...  மாமா பிஸ்கோத்து!!!

  ReplyDelete
 21. பட்டாபட்டி.. said...
  சாமி நின்னுகிட்டே தான் பூசை பண்ணனும்.. இப்பவே சொல்லிட்டேன்..
  பய புள்ளைகள உக்காரச் சொன்ன படுத்துருவானுக..//////////  செல்லாது செல்லாது தீர்ப்ப மாத்தி சொல்லு

  ReplyDelete
 22. என்ன திடு திப்புன்னு இது மாதிரி ஒரு பதிவ போட்டு தொலைச்சே,உன்னை வைத்து ஒரு ஆஸ்ரமம் போடலாமுன்னு நினைத்தேன் உம் இனி மேல் எங்க?
  பய புள்ளைங்க ஏற்கனவே டெரர் இதுல நீ வேற வால்ட்யூப் புடுங்க சொல்லி இருக்க,சரி சாமி பட்டு ஆனந்தாக்கு பதில் மங்குனி ஆனந்தா வை வைத்து ஆரம்பிக்க வேண்டியது தான்

  ReplyDelete
 23. @பிரபாகர் said...
  கேபிளை பாக்குற ஐடியா இல்லையா பட்டா?
  தெனமும் பாக்குறேன்னு நக்கல் வேணாம்....
  //

  வருவேன் சார்.. கண்டிப்பா பார்க்கலாம்..

  ReplyDelete
 24. @Muthu said...
  உமக்கு ஒன்னு தெரியுமாவோய் அந்த நித்தி பய புள்ள இங்க வந்துடதா புரளியை கிளப்பிவுட்டுடாணுவ
  என்ன திடு திப்புன்னு இது மாதிரி ஒரு பதிவ போட்டு தொலைச்சே,உன்னை வைத்து ஒரு ஆஸ்ரமம் போடலாமுன்னு நினைத்தேன் உம் இனி மேல் எங்க?
  பய புள்ளைங்க ஏற்கனவே டெரர் இதுல நீ வேற வால்ட்யூப் புடுங்க சொல்லி இருக்க,சரி சாமி பட்டு ஆனந்தாக்கு பதில் மங்குனி ஆனந்தா வை வைத்து ஆரம்பிக்க வேண்டியது தான்
  //

  நானு திருந்திட்டனுங்கோ....கூவுகிறார் பட்டாபட்டி..

  ReplyDelete
 25. அண்ணே! ஒரு முடிவோட தான் இருக்கீங்க போலிருக்கு! :-))))))))))

  ReplyDelete
 26. @சேட்டைக்காரன் said...
  அண்ணே! ஒரு முடிவோட தான் இருக்கீங்க போலிருக்கு! :-))))))))))
  //
  என்ன அப்பு பண்றது.. வாழ்க்கையே மாயை..
  மெலும் விவரங்களுக்கு, அணுகவும் நித்தி..( சுவாமிகள் )

  ReplyDelete
 27. மங்குனி அமைசர் ?
  ஆஜர் சார்,

  டேய் பட்டா நீ எப்படா "மைலாப்பூர் பார்த்தசாரதியா" கன்வெர்ட் ஆனே ?

  ReplyDelete
 28. தக்காளி நாவந்த உடனே எல்லா நாதாரிகளும் சாப்பிட போயடுவாணுக.

  இனி இந்த எபிசோடுக்கு மட்டும் நம்ம பட்டாபட்டி "மைலாப்பூர் பார்த்தசாரதி" என்று எல்லோராலும் அன்போடு அழைக்கபடுவார் .

  ReplyDelete
 29. இந்த நித்தியா மேட்டர ஏறக்கட்டிட்டு வேற மேட்டரு போடுங்க பட்டா.. :))

  ReplyDelete
 30. அப்பாவிMarch 12, 2010 at 12:56 PM

  காசுக்கு ஓட்டை விற்கும் மக்கள்..
  குடிக்கு மக்களை அடிமையாக்கும் அரசாங்கம்..
  கள்ள காதலை வளர்க்கும் தொலைகாட்சி நாடகம்..
  நீல படம் விற்கும் பத்திரிக்கை. ...
  ஏழைகளை பிட்சக்காரனாய் மாற்றி , பணக்காரனை, மேலும் கோடிஸ்வரனாக்கும் பட்ஜெட்....
  Corporate நிறுவனங்களின் god father ஆக திரியும் மத்திய அமைச்சர்....
  கூத்தாடிகளை, தூக்கி வைத்து கூத்தாடும் அரசாங்கமும், மக்களும்.....
  நாசமாய் போகட்டும்...இந்த நாடும்....... நாட்டு மக்களும்.............

  ReplyDelete
 31. @ மங்குனி அமைச்சர் said...
  மங்குனி அமைசர் ?
  ஆஜர் சார்,
  டேய் பட்டா நீ எப்படா "மைலாப்பூர் பார்த்தசாரதியா" கன்வெர்ட் ஆனே ?
  தக்காளி நாவந்த உடனே எல்லா நாதாரிகளும் சாப்பிட போயடுவாணுக.
  இனி இந்த எபிசோடுக்கு மட்டும் நம்ம பட்டாபட்டி "மைலாப்பூர் பார்த்தசாரதி" என்று எல்லோராலும் அன்போடு அழைக்கபடுவார் .
  //
  இனி வரும் எல்லாப் பதிவுகளுக்கும் , பட்டாபட்டி "மைலாப்பூர் பார்த்தசாரதி" என்றுஅன்போடு அழைக்கபடுவார் .

  ReplyDelete
 32. @ முகிலன் said...
  இந்த நித்தியா மேட்டர ஏறக்கட்டிட்டு வேற மேட்டரு போடுங்க பட்டா.. :))
  //
  அட சரியா சொன்னீங்க.. அவன் 2 மணி நேரத்தில , ஜோலிய முடிச்சுட்டு, வேற வேலையப் பார்க்கப் போயிட்டான்..
  நாம தான் 1 வாரமா, அதையே இழுத்துகிட்டு இருக்கோம்..
  உடுங்க சார்..அடுத்த பிரச்சனைக்கு தாவிடலாம்..

  ReplyDelete
 33. அப்பாவி said...

  காசுக்கு ஓட்டை விற்கும் மக்கள்..
  குடிக்கு மக்களை அடிமையாக்கும் அரசாங்கம்..
  கள்ள காதலை வளர்க்கும் தொலைகாட்சி நாடகம்..
  நீல படம் விற்கும் பத்திரிக்கை. ...
  ஏழைகளை பிட்சக்காரனாய் மாற்றி , பணக்காரனை, மேலும் கோடிஸ்வரனாக்கும் பட்ஜெட்....
  Corporate நிறுவனங்களின் god father ஆக திரியும் மத்திய அமைச்சர்....
  கூத்தாடிகளை, தூக்கி வைத்து கூத்தாடும் அரசாங்கமும், மக்களும்.....
  நாசமாய் போகட்டும்...இந்த நாடும்....... நாட்டு மக்களும்.............
  //


  ரொம்பவும் வெறுப்பாயிட்டீங்க போல.. அப்பாவி
  ஆடட்டும்..
  ஆடட்டும்..
  அலுக்கும் வரை ஆடட்டும்..

  ReplyDelete
 34. டேய் மைலாப்பூர் பார்த்தசாரதி, உன்னோட இந்த கமென்ட்-அ படிச்சவுடனே ஒபாமா ரிசைன் பண்ணிட்டாராம், பின்லேடன் சூசைட் பணிகிட்டானாம் , நம்ம பால் தாக்ரே முஸ்லீமா கன்வர்ட் ஆயிட்டாராம் , வேணாம் பட்டா உடனே உன் முடிவ மாத்து, நாட்டாம தீர்ப்ப மாத்து

  ReplyDelete
 35. @மங்குனி அமைச்சர் said...
  டேய் மைலாப்பூர் பார்த்தசாரதி, உன்னோட இந்த கமென்ட்-அ படிச்சவுடனே ஒபாமா ரிசைன் பண்ணிட்டாராம், பின்லேடன் சூசைட் பணிகிட்டானாம் , நம்ம பால் தாக்ரே முஸ்லீமா கன்வர்ட் ஆயிட்டாராம் , வேணாம் பட்டா உடனே உன் முடிவ மாத்து, நாட்டாம தீர்ப்ப மாத்து
  //

  ஆமாய்யா.. நீ , வெளியூரு , முத்து எல்லாரும் நல்ல பிள்ளைகளா பதிவ
  போடறீங்க..

  நான் மட்டும் தனியா அடிவாங்குனா, தாங்குவனாயா?

  ReplyDelete
 36. @மங்குனி
  சரி..பித்தன் ஒரு செயல் முறை விளக்கம் கொடுத்துள்ளார்..
  அதப் மூஞ்சி பூரா, பூசிட்டு முச்சந்திய நின்னா,
  சோனா மாறி , செக்ஸியா ஆயிடுவியாம்..

  எதுக்கும் ட்ரை பண்ணி பாரேன்..

  ReplyDelete
 37. //ஆமாய்யா.. நீ , வெளியூரு , முத்து எல்லாரும் நல்ல பிள்ளைகளா பதிவ
  போடறீங்க..

  நான் மட்டும் தனியா அடிவாங்குனா, தாங்குவனாயா?//

  மைலாப்பூர் பார்த்தசாரதி நாங்கல்லாம் டிரைனி, நீ , வெளியூரு, ரெட்டை எல்லாம் தலைங்க போதுமா,.. தக்காளி என்னா வோவரா போற அப்புறம் இன்னைக்கு நீ தான் ஆடு , பாத்துக்க

  ReplyDelete
 38. ம்.. அப்புறம்.. இன்னுமாயா என்னைய நம்புறே?..
  நிசமாவே நான் நல்லவனையா..

  ReplyDelete
 39. டேய் பட்டா யாருடா இந்த அப்பாவி , ரொம்ப கொயந்த புள்ளையா இருக்கு, ஒரு செருப்பு கட வச்சு குடுத்தா போலைச்சுகிரும்

  ReplyDelete
 40. //@மங்குனி
  சரி..பித்தன் ஒரு செயல் முறை விளக்கம் கொடுத்துள்ளார்..
  அதப் மூஞ்சி பூரா, பூசிட்டு முச்சந்திய நின்னா,
  சோனா மாறி , செக்ஸியா ஆயிடுவியாம்..

  எதுக்கும் ட்ரை பண்ணி பாரேன்..//

  அது மைலாப்பூர் பார்த்தசாரதிக்கு சொன்னது , என்னா பட்டாபட்டியா மூஞ்சி ரப்பா இருந்ததா அத மைலாப்பூர் பார்த்தசாரதி மாதிரி மாத்தனும்ல அதுக்குதான்

  ReplyDelete
 41. வால் ட்யூப் கட் பண்ணா மட்டும் திருந்திடுவாங்களா,,,, வாய் இருக்கில்ல ??

  -யூர்கன் க்ருகியர்

  ReplyDelete
 42. @யூர்கன் க்ருகியர்
  வால் ட்யூப் கட் பண்ணா மட்டும் திருந்திடுவாங்களா,,,, வாய் இருக்கில்ல ??
  //
  நமக்கு, மெயின் Switch தான் முக்கியம்..
  அதை புடிங்கிட்டா, 3" ஸ்கீரினல் ஏன்ன பண்ண முடியும் அப்பு..

  ReplyDelete
 43. @மங்குனி அமைச்சர் said...
  டேய் பட்டா யாருடா இந்த அப்பாவி , ரொம்ப கொயந்த புள்ளையா இருக்கு, ஒரு செருப்பு கட வச்சு குடுத்தா போலைச்சுகிரும்
  அது மைலாப்பூர் பார்த்தசாரதிக்கு சொன்னது , என்னா பட்டாபட்டியா மூஞ்சி ரப்பா இருந்ததா அத மைலாப்பூர் பார்த்தசாரதி மாதிரி மாத்தனும்ல அதுக்குதான்
  //
  யோவ்.. உனக்கு அப்பாவிய பத்தி தெரியாது..
  சாக்கிரதையா இருந்துக்க..

  ReplyDelete
 44. //யோவ்.. உனக்கு அப்பாவிய பத்தி தெரியாது..
  சாக்கிரதையா இருந்துக்க..//

  அட பன்னாட அப்பாவின்னு ஒரு ப்ளாக் இல்லையா? நீதானா அது , டேய் முத்து , வெளியூரு, ரெட்ட, ரோஸ் எல்லாம் இங்க பாருங்கடா பட்டாபட்டிக்கு மல்டிபுள் பர்சனாலிடி இருக்குடா , "பட்டாப்பட்டி", "அப்பாவி" ,"மைலாப்பூர் பார்த்தசாரதிக்கு",

  ReplyDelete
 45. @மங்குனி அமைச்சர் said...
  அட பன்னாட அப்பாவின்னு ஒரு ப்ளாக் இல்லையா? நீதானா அது , டேய் முத்து , வெளியூரு, ரெட்ட, ரோஸ் எல்லாம் இங்க பாருங்கடா பட்டாபட்டிக்கு மல்டிபுள் பர்சனாலிடி இருக்குடா , "பட்டாப்பட்டி", "அப்பாவி" ,"மைலாப்பூர் பார்த்தசாரதிக்கு",
  //
  கூவக்கூடாது..
  இன்னுமொரு ரகசியம் சொல்றேன் கேட்டுக்கோ..

  பட்டாபட்டி, வெளியூரு , அப்பாவி எல்லாமே நாந்தேன்..

  ரெட்டை மட்டும்..சென்னையில இருக்கு..

  ReplyDelete
 46. // சரி..பித்தன் ஒரு செயல் முறை விளக்கம் கொடுத்துள்ளார்..
  அதப் மூஞ்சி பூரா, பூசிட்டு முச்சந்திய நின்னா,
  சோனா மாறி , செக்ஸியா ஆயிடுவியாம்.. //
  என்னது இது எனக்குத் தெரியாம? எங்கனா கும்மி கட்டுவது என்றால் சொல்லிட்டுக் கட்டுங்கப்பு. நானும் ஆஜர் ஆஜர்.ஆஜர்.

  ReplyDelete
 47. // நிசமாவே நான் நல்லவனையா.. //
  அப்பூபூடியாஆஆஆ, அதுக்குத்தான் உங்களுக்கு ஓஸ்காஆஆர் விருது எல்லாம் கொடுக்கப் போறாங்களாமே நிசமாங்க.....

  ReplyDelete
 48. @பித்தனின் வாக்கு said...
  அதப் மூஞ்சி பூரா, பூசிட்டு முச்சந்திய நின்னா,
  சோனா மாறி , செக்ஸியா ஆயிடுவியாம்.. //
  என்னது இது எனக்குத் தெரியாம? எங்கனா கும்மி கட்டுவது என்றால் சொல்லிட்டுக் கட்டுங்கப்பு. நானும் ஆஜர் ஆஜர்.ஆஜர்.
  அப்பூபூடியாஆஆஆ, அதுக்குத்தான் உங்களுக்கு ஓஸ்காஆஆர் விருது எல்லாம் கொடுக்கப் போறாங்களாமே நிசமாங்க.....
  //

  சார்.. இவிங்க இப்படித்தான்.. பதிவ படிச்சுட்டு, மார்கழி மாச பஜனை கோஷ்டி மாறி.. எல்லா
  இடத்திலும் போயி கும்பியடிப்பானுக..
  எல்லாம் பேட் பாய்ஸ்..
  .
  .
  .
  ஆனாலும் நான் நல்லவனுங்கோ...

  ReplyDelete
 49. @பித்தனின் வாக்கு said...
  பாருங்க.. பேசிட்டே இருக்கும் போது.. உங்க ப்ளாக்ல போயி
  வாந்தியெடுத்தாச்சு..
  அதுக்கு தான் சொல்வது.. கண்ண நாலா புறமும் சுற்றிபார்க்கனும்..

  ReplyDelete
 50. //பித்தனின் வாக்கு said...
  // சரி..பித்தன் ஒரு செயல் முறை //விளக்கம் கொடுத்துள்ளார்..
  அதப் மூஞ்சி பூரா, பூசிட்டு முச்சந்திய நின்னா,
  சோனா மாறி , செக்ஸியா ஆயிடுவியாம்.. //
  என்னது இது எனக்குத் தெரியாம? எங்கனா கும்மி கட்டுவது என்றால் சொல்லிட்டுக் கட்டுங்கப்பு. நானும் ஆஜர் ஆஜர்.ஆஜர்.//

  பட்டா பித்தன் ஆடு ரெடியா இருக்குடா , மஞ்சத்தண்ணி ஊத்தி மாலை போட்டம்னா அதுவா தலைய குனிஞ்சு கொடுக்கும்.

  ReplyDelete
 51. @மங்குனி அமைச்சர் said...
  பட்டா பித்தன் ஆடு ரெடியா இருக்குடா , மஞ்சத்தண்ணி ஊத்தி மாலை போட்டம்னா அதுவா தலைய குனிஞ்சு கொடுக்கும்.
  //

  யோவ்.. துடிக்க கூடாது..
  எந்த ஒரு காரியத்தை செய்யனுமுனாலும், அதை ஒரு தவம் மாறி செய்யனும் , அப்படினு ப்ரியமுடன் வசந்த் சொல்லியிருக்காரு..

  இப்பத்தான் முதற்கட்ட பேச்சு வார்த்தை ஓடிகிட்டு இருக்கு..
  அவசரப்பட்டு, காரியத்தை கெடுத்துடாதே..

  ReplyDelete
 52. டோமரு கரக்டா நான் கிளம்புறப்ப வர்ற ?

  ரைட்டு நீயே தட்டேத்திவை , நான் லஞ்சுக்கு போயிட்டு வர்றேன்

  ReplyDelete
 53. அடப்பாவிகளா விட்டா மஞ்சப் பூசி,சூடம் காட்டி வெட்டிருவீங்க போல. சரி சரி எத்தனையே பார்த்துட்டேம். இதுவும் நடக்கட்டும். நன்றி.

  ReplyDelete
 54. மங்குனி அமைசர் ?
  ஆஜர் சார்

  ReplyDelete
 55. சாப்டுட்டு கொஞ்ச நேரம் கண்ணசந்திட்டேன். எந்திரிச்சு பாத்தா ஏகப்பட்ட பேரு வந்துட்டுப்போய்ட்டாங்க போல இருக்கே. வீட்டுக்காரரை எப்போ பாத்து ஆஜர் சொல்றது?

  ReplyDelete
 56. பட்டாபட்டி.. said...
  நானு திருந்திட்டனுங்கோ....கூவுகிறார் பட்டாபட்டி.:::::::::


  உனக்கு கன்பார்மா வால் டியூபை புடுங்கரதுன்னு முடிவு பண்ணியாச்சு டி

  ReplyDelete
 57. மங்குனி அமைச்சர் said...

  டேய் மைலாப்பூர் பார்த்தசாரதி, உன்னோட இந்த கமென்ட்-அ படிச்சவுடனே ஒபாமா ரிசைன் பண்ணிட்டாராம், பின்லேடன் சூசைட் பணிகிட்டானாம் , நம்ம பால் தாக்ரே முஸ்லீமா கன்வர்ட் ஆயிட்டாராம் , வேணாம் பட்டா உடனே உன் முடிவ மாத்து, நாட்டாம தீர்ப்ப மாத்து////////////  இவ்வளவு நடந்தும் நீ,தீ குளிக்கவில்லை பார்த்தியா!யோவ் ரெட்டை சீக்கிரம் வந்து தொலையா?மங்கு ரவுசு தாங்கமுடியல

  ReplyDelete
 58. @பித்தனின் வாக்கு said...
  அடப்பாவிகளா விட்டா மஞ்சப் பூசி,சூடம் காட்டி வெட்டிருவீங்க போல. சரி சரி எத்தனையே பார்த்துட்டேம். இதுவும் நடக்கட்டும். நன்றி.
  //
  ரைட்.. ஆடே உத்தரவு கொடுத்துடுச்சு.


  @மசக்கவுண்டன் said...
  சாப்டுட்டு கொஞ்ச நேரம் கண்ணசந்திட்டேன். எந்திரிச்சு பாத்தா ஏகப்பட்ட பேரு வந்துட்டுப்போய்ட்டாங்க போல இருக்கே. வீட்டுக்காரரை எப்போ பாத்து ஆஜர் சொல்றது?
  //
  அதுக்குத்தான் கவுண்டரே சொல்றது.. தூங்கும்போதும், கம் முழுச்சுகிட்டு தூங்கனுமுனு..


  @Muthu said...
  நானு திருந்திட்டனுங்கோ....கூவுகிறார் பட்டாபட்டி.:::::::::
  உனக்கு கன்பார்மா வால் டியூபை புடுங்கரதுன்னு முடிவு பண்ணியாச்சு டி
  இவ்வளவு நடந்தும் நீ,தீ குளிக்கவில்லை பார்த்தியா!யோவ் ரெட்டை சீக்கிரம் வந்து தொலையா?மங்கு ரவுசு தாங்கமுடியல
  //

  ரெட்டை கும்மமேளாவில் பிஸியாய் இருப்பதால்....ரெட்டை கடை 1 வாரத்துக்கு மூடப்பட்டுள்ளது..

  ReplyDelete
 59. 'ஏய்யா.. இன்னும அதையே எழுதிகிட்டு இருக்கே..போயி வேற வேலையப்பாரு'னு சொல்லிபுட்டான்.."//

  அல்லது வேற சாமியாரைப் பாருன்னு சொல்லலையா?

  ReplyDelete
 60. சார்.. நானும் அட்டெண்டன்ஸ் போட்டுட்டேன்..

  ஆபீஸ் டைம்ல தான் இதெல்லாம் எழுதிறீங்கன்னு சத்தியமா இப்ப தான் தெரியும்..

  நடத்துங்க நடத்துங்க...

  நான் எப்போதும் சாயங்காலம் தான் வருவேன்..

  அப்புறம் பட்டா பட்டி.. நீங்க படிக்கக் கூடாதுன்னு போடும்போது தான் அத பொம்பள புள்ளைக கவனமா படிக்கும்ங்கறது என்னோட கற்பனை...

  ReplyDelete
 61. //'பட்டாபட்டி....மூணு வருசம் லஞ்சம் வாங்காம, இருந்தா.. அந்தப்பணத்த வெச்சுட்டு , எல்லாப்பிரச்சனைகளையும் சரி பண்ணிடலாம்'//

  இது தப்பு.. மூணு மாசம் வாங்காம இருந்தாலே போதும்..

  ஒரு NGO க்கு இன்னைக்குப் போயிருந்தேன்..அவங்க 80G இன்னும் வாங்கல.. காரணம் 80 G சர்டிபிகேட் வாங்க அவங்ககிட்ட கவர் மென்ட்டுல 7000 ரூபா லஞ்சம் கேட்டிருக்காங்க..

  பொணத்தோட வாயில இருக்குற வாய்க்கரிசியைக் கூட புடுங்கித் தின்னுவாணுக...

  கொழந்தைகளுக்கு தன்னம்பிக்கை வகுப்பு எடுக்கிறேன்.. இவங்களுக்கு என்ன சொல்லிக் கொடுக்கறது..

  இவனுக கொழந்தைகளுக்கு இவனுக எந்த மூஞ்சிய வெச்சிட்டு நல்ல விஷயங்கள சொல்லித் தருவாணுக..

  வருங்காலக் குழந்தைகளாவது இத மாத்தணும்..

  சாரி பட்டாபட்டி, ஜாலியா போய்கிட்டு இருக்குற இடத்துல ஒரு ஒப்பாரி வெக்க வேண்டிய நெலம.. உங்க கிட்ட சொல்லாம வேற யாருகிட்டனே சொல்லப் போறேன்..

  ReplyDelete
 62. @ஸ்ரீராம். said...
  அல்லது வேற சாமியாரைப் பாருன்னு சொல்லலையா?
  //

  அதுதான் அடிசனல் ஷீட் வாங்கி, எழுதிகிட்டு இருக்கானுக சார் , நம்ம சாமியார்க பேரை..

  ReplyDelete
 63. @பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
  //
  ஆபீஸ் டைம்ல தான் இதெல்லாம் எழுதிறீங்கன்னு சத்தியமா இப்ப தான் தெரியும்..
  //
  ஆபிஸ், வீடு , இப்படி தனிதனியா பிரிச்சு பார்க்க மாட்டான் இந்த பட்டாபட்டி..
  அவ்வளவு தொழில் பக்தி சார்..  //
  அப்புறம் பட்டா பட்டி.. நீங்க படிக்கக் கூடாதுன்னு போடும்போது தான் அத பொம்பள புள்ளைக கவனமா படிக்கும்ங்கறது என்னோட கற்பனை...
  //

  படிச்சுட்டு , என்னை திட்டினாலும், தொடச்சுட்டு போயிட்டேயிருக்கலாம்..
  ஆனா.. காவி வேட்டி கட்டினவங்கிட்ட மட்டும் ஜாக்கிறதை..


  //
  இது தப்பு.. மூணு மாசம் வாங்காம இருந்தாலே போதும்..
  //
  அட.. அப்படியா.. நான் போனமுறை வந்தப்ப , மாகாலட்சுமில , டீ 3 ரூபா..
  அதைய வெச்சு கணக்குப்போட்டேன்..


  //
  ஒரு NGO க்கு இன்னைக்குப் போயிருந்தேன்..அவங்க 80G இன்னும் வாங்கல.. காரணம் 80 G சர்டிபிகேட் வாங்க அவங்ககிட்ட கவர் மென்ட்டுல 7000 ரூபா லஞ்சம் கேட்டிருக்காங்க..
  பொணத்தோட வாயில இருக்குற வாய்க்கரிசியைக் கூட புடுங்கித் தின்னுவாணுக...
  கொழந்தைகளுக்கு தன்னம்பிக்கை வகுப்பு எடுக்கிறேன்.. இவங்களுக்கு என்ன சொல்லிக் கொடுக்கறது..
  இவனுக கொழந்தைகளுக்கு இவனுக எந்த மூஞ்சிய வெச்சிட்டு நல்ல விஷயங்கள சொல்லித் தருவாணுக..
  வருங்காலக் குழந்தைகளாவது இத மாத்தணும்..
  சாரி பட்டாபட்டி, ஜாலியா போய்கிட்டு இருக்குற இடத்துல ஒரு ஒப்பாரி வெக்க வேண்டிய நெலம.. உங்க கிட்ட சொல்லாம வேற யாருகிட்டனே சொல்லப் போறேன்..
  //

  அப்பு.. நான் கேள்விப்பட்டேன்.. இப்ப ஸ்கூல கூட , டோனேசன் கேட்க ஆரம்பிச்சுட்டானுகளாமே..அப்படியா?..
  அன்னூர் ரோட்டுல , ஒரு ஸ்கூல் பத்தி , கதை வந்திருக்கு..
  விசாரிச்சுட்டு கிழிக்கலாமுனு இருக்கேன்..
  எந்த ஸ்கூல்னு, சீக்கிரம் மெயில் அனுப்பிறேன்.. உண்மையானு சொல்லுங்க..

  ReplyDelete
 64. தல செம காமெடி எப்படிங்க இதெல்லாம் பட்டாபட்டி நம்ம வெளியுர்காரன் பெரியாளு போல

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!