Pages

Tuesday, April 6, 2010

மூளைக்கு வேலை..( இருந்தால்..)

வணக்கம் சார்.. என்னாடா ரொம்பநாளா, எஸ் ஆயிட்டேனு பார்க்கிறீங்களா?.
என்ன சார்.. பண்றது..எங்க கம்பெனியில, ஏப்ரல்மாசம் ப்ரோமோஷன் லிஸ்ட் ரெடி பண்ணுவாங்க.( லூஸ் மோஷன் இல்ல சார்.. பதவி..மற்றும் சம்பள உயர்வு..ஆமாமா..ப்ரோமோஷன்தான்)
 
நானும் கடந்த ஒரு மாதமா, சிவாஜி, எம்.ஜி.ஆர் மாறி  நடிச்சிட்டேன்..
நமக்கு கடமை முக்கியமில்லையா?...பார்ப்பம்.. ஏதாவது ஆஸ்கார்,கீஸ்கார் கொடுக்கிறானுகளானு..!!

இதுலவேற, ரெட்டை, வெளியூரு , முத்து , இந்த மூணூபேரும் சேர்ந்துகிட்டு , பதிவ போடுனு மெரட்ரானுக..சரி.. சமையலப்பற்றி எழுதலாமுனா, பித்தன் சாரோட ஆரஞ்சு பச்சிடி மனசுல ஆடுது..
அடுத்த நாளு கழுவிட்டு , வேற புதுசா யோசிக்கனும்.. இது நமக்கு சரிவராது..

சரி.. கதை, கவிதை எழுதலாமென பார்த்தால்..ஏற்கனவே பயபுள்ளைக, கழட்டி விட்டுட்டாங்க..
அதனால யூஸ்புல்லாவும் இருக்கனும்..ரெட்டை மற்றும் வெளியூரானுக்கு உபயோகமாவும் இருக்கனும்..என்னடா பண்ணலாமுனு ரோசனை பண்ணினேன்..


ஆ..எக்ஸ்ரா திறமை..அது இருந்தா எல்லாரும் மூளைக்காரன் ஆகிவிடலாம்...
அதனால..Origami பற்றி இந்த பதிவு..இது மூளைக்கு வேலை..( மங்குனி..நீ கழண்டுக்க..)

மற்றவர்களெல்லாம் தொடருங்க..

மேலும் இதை , காலை, மாலை, இரவு ..முக்கியமா.. பெண்களுக்கு முன்னாடி பண்ணி அசத்தலாம்..( வெளியூரான்.. Note the Point..)

முதல்ல, A4 பேப்பர எடுத்துக்குங்க..இதுல முக்கியமா 4 ஸ்டெப்ஸ் இருக்கு..
படத்தில இதைப்பற்றி விரிவா, விளக்கமா சொல்லியிருக்கோம்..முதல்ல கஷ்டமாகத்தான் தெரியும்.   பழக பழக , “அட.. இவ்வளவுதானா”-னு, நீங்களே அடுத்தவன் மூக்கில விரலை வைப்பீங்க..
இப்ப முக்கியமான கட்டத்தக்கு வந்துட்டீங்க..இத செய்யும்போது , ரொம்ப ஜாக்கிரதையா,  சரியா சொல்லனுமுனா, ”ஒரு தவம் மாறி செய்யனும்”..
.
.
.
.
அந்த பேப்பரை, இரண்டு கையிலையும் பிடித்துகொண்டு, கிழக்கு நோக்கி நில்லுங்க..
.
.
.
கண்ண மூடிக்கிட்டு..இந்த பேப்பரை, 90 டிகிரி திருப்புங்க..
.
.
.
ரைட்..
அப்படித்தான்..
.
.
.
.
துணி துவைத்ததும், பிழிவீங்களே..அது மாறி ..ஆங்..
அப்படித்தான்..பார்த்தீங்களா.. இப்ப மனித மூளைய, ஒரு சாதாரண பேப்பர் வைத்து பண்ணீட்டீங்க..
இதே மாறி தினமும் செய்துவந்தால்,.....எதுக்கு என் வாயால சொல்லிகிட்டு?..
நீங்களே பாருங்களேன்


கடைசியா ஒரு டிப்ஸ்சு..
வீட்ல பத்திரபேப்பர் இருந்தா.. அதை யூஸ் பண்ணுங்க..Final Output சூப்பராயிருக்கும்..  ஏன்னா.. பேப்பர் குவாலிட்டி அதுமாறி...

வ்ரட்டுமா..
.
.
.

78 comments:

 1. யோவ் பட்டாபட்டி,

  இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல? வெள்ளக்காரன் இதையேதான் இருனுறு வருசமா காலங்காலத்தால டாய்லட் பேப்பர வச்சு செய்யிறான். இதைப்போயி தவண கிவம்னுட்டு.........

  ReplyDelete
 2. @கரிகாலன் said...
  யோவ் பட்டாபட்டி,
  இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல? வெள்ளக்காரன் இதையேதான் இருனுறு வருசமா காலங்காலத்தால டாய்லட் பேப்பர வச்சு செய்யிறான். இதைப்போயி தவண கிவம்னுட்டு.........
  //

  சர்தான்..வெள்ளக்காரன் மூளக்காரன்..அவனுக்கு அப்பவே தெரியும், ‘பின்னாடி தண்ணி கஷ்டம் வருமுனு’..

  ஆனா, நாம,இன்னும் தண்ணிய வேஸ்ட் பண்ணிகிட்டில்ல இருக்கோம்..

  ReplyDelete
 3. நானும் பலவாட்டி முயற்சி பண்ணியும் சரியா வரமாட்டேங்குது! ஏதாவது ஷார்ட்-கட் இருக்காண்ணே? :-)

  ReplyDelete
 4. @சேட்டைக்காரன் said...
  நானும் பலவாட்டி முயற்சி பண்ணியும் சரியா வரமாட்டேங்குது! ஏதாவது ஷார்ட்-கட் இருக்காண்ணே? :-)
  //

  அண்ணே.. இதுக்கு சாருமாறிதான் பதில் சொல்லனும்..

  உள்ளூராயிருந்தா ரூ 1000..
  வெளியூருனுனா, US$100..அனுப்புங்க..
  செயல் முறை விளக்கம் அளிக்கப்படும்..

  ReplyDelete
 5. பட்டா, எல்லா பயபுள்ளைகளும் இந்த மூளையா வச்சிக்கிட்டு என்னடா பன்றானுக?

  ReplyDelete
 6. மங்குனி அமைச்சர் said...

  பட்டா, எல்லா பயபுள்ளைகளும் இந்த மூளையா வச்சிக்கிட்டு என்னடா பன்றானுக?
  //

  சனிக்கிழமை, கொத்து கறி போட்டு சாப்பிடலாம் மச்சி.. சூப்பராயிருக்கும்..

  ReplyDelete
 7. பிரஜைகளே...நான் சொல்லல...பட்டாபட்டி மூளைக்காரன்னு...!

  பட்டாபட்டி...நீ ஏதோ ஃபிகர் கரெக்ட் பண்றதுக்காக இப்படியெல்லாம் பண்றேன்னு தோனுது...!

  ReplyDelete
 8. சரியா வரலைன்னா திரும்ப திரும்ப செஞ்சு பார்க்கலாமா தல!?

  ReplyDelete
 9. ப்ளீஸ்.......ப்ளீஸ்.........பட்டாபட்டி சார்,
  இன்னும் கொஞ்சம் "எளிமையாயான"
  விளக்கங்கள் கொடுங்களேன்,
  சரியா புரியல :))

  ReplyDelete
 10. //ரெட்டைவால் ' ஸ் said...

  பிரஜைகளே...நான் சொல்லல...பட்டாபட்டி மூளைக்காரன்னு...!

  பட்டாபட்டி...நீ ஏதோ ஃபிகர் கரெக்ட் பண்றதுக்காக இப்படியெல்லாம் பண்றேன்னு தோனுது...!//

  யோவ் மன்னா இததான் நான் ரெண்டு நாலா சொல்லிகிட்டு இருக்கேன் , இப்ப வந்து பெரிய வெங்காயம் மாதிரி பேசுற (சாரி மன்னா ஒரு டென்சன்ல வந்திருச்சு )

  ReplyDelete
 11. அப்பாவிApril 6, 2010 at 1:07 PM

  அந்த படத்த பாத்தா, அப்படியே பாலுவோட மூள மாத்ரி இருக்கு, ஆனா அது பேப்பருல செய்ய முடியாதே, களிமண்ணு வேணுமே ..

  ReplyDelete
 12. @ரெட்டைவால் ' ஸ் said...
  பிரஜைகளே...நான் சொல்லல...பட்டாபட்டி மூளைக்காரன்னு...!
  பட்டாபட்டி...நீ ஏதோ ஃபிகர் கரெக்ட் பண்றதுக்காக இப்படியெல்லாம் பண்றேன்னு தோனுது...!
  //

  முதல்ல

  ஆட்டை கடிச்சானுகோ..
  மாட்டை கடிச்சானுகோ..
  உட்டானுகளா..

  பன்னிகுட்டிய கடிச்சானுகோ..

  சரி தொலையுதுனு உட்டா,
  பித்தன கடிச்சானுகோ..

  இப்ப பட்டாபட்டி..

  ( பட்டாபட்டி .. விட்றாதே.. ஆனது ஆகட்டும்..)

  ReplyDelete
 13. @Blogger வால்பையன் said...
  சரியா வரலைன்னா திரும்ப திரும்ப செஞ்சு பார்க்கலாமா தல!?
  //

  இல்லாட்டி எப்படி பழகுறது பாஸ்..

  ReplyDelete
 14. @Blogger சைவகொத்துப்பரோட்டா said...
  ப்ளீஸ்.......ப்ளீஸ்.........பட்டாபட்டி சார்,
  இன்னும் கொஞ்சம் "எளிமையாயான"
  விளக்கங்கள் கொடுங்களேன்,
  சரியா புரியல :))
  //

  அடப் பாவிகளா...
  இதுவே புரியலேனா..ஒரே வழி..
  வெறும் வயித்தில , ஆரஞ்சு பச்சிடிய சாப்பிடறதுதான்..

  பித்தன்.. இந்த பீஸ்ச, என்னானு கவனிங்க..

  ReplyDelete
 15. @மங்குனி அமைச்சர் said...
  யோவ் மன்னா இததான் நான் ரெண்டு நாலா சொல்லிகிட்டு இருக்கேன் , இப்ப வந்து பெரிய வெங்காயம் மாதிரி பேசுற (சாரி மன்னா ஒரு டென்சன்ல வந்திருச்சு )
  //

  யோவ்.. உன்னையத்தான் பதிவோட பாதியில, வெளிய தூக்கிப்போட்டாச்சே..

  ReplyDelete
 16. @அப்பாவி said...
  அந்த படத்த பாத்தா, அப்படியே பாலுவோட மூள மாத்ரி இருக்கு, ஆனா அது பேப்பருல செய்ய முடியாதே, களிமண்ணு வேணுமே ..
  //

  அப்படி சொல்லமுடியாது அப்பாவி..
  சில சமயம் களிமண்ணு கிடைக்காது.. அப்ப மாட்டி சாணிய யூஸ் பண்ணிக்கலாம்..
  பாலுவுக்கு.. எல்லாமே ஒண்ணுதான்..

  ReplyDelete
 17. @மங்குனி அமைச்சர் said...
  பட்டா அந்த pannikutti yengataa
  //

  யோவ்..அது ஒரே மாறி பேசுதுயா..
  ,பன்னி வந்தா, அதுக்கு சங்குதான்.... சொல்லிட்டேன்..

  ReplyDelete
 18. //பட்டாபட்டி.. said...  யோவ்.. உன்னையத்தான் பதிவோட பாதியில, வெளிய தூக்கிப்போட்டாச்சே.//

  என்பா எனக்கு ஒரு மூளை செஞ்சு தாங்கப்பா , நானும் மாட்டிகிறேன்

  ReplyDelete
 19. எல்லாரும் பன்னிக்காக வெய்ட்டிங்...ஆனா அவனை எப்பவோ ஸ்வைன் ஃப்ளூ கேஸ்ல புடிச்சுட்டுப் போய்ட்டானுங்க...ஹி ஹி.....

  ReplyDelete
 20. மங்குனி கண்ணா...அது ரவா கிச்சடி இல்லைடா...மூளை...செஞ்செல்லாம் தர முடியாது...மண்டைக்குள்ள மழு மழுன்னு ஒரு ஒண்ணரை கிலோவுல ..சரி வுடு...உனக்கு சம்மந்தமில்லாதது!

  ReplyDelete
 21. @மங்குனி அமைச்சர் said...
  என்பா எனக்கு ஒரு மூளை செஞ்சு தாங்கப்பா , நானும் மாட்டிகிறேன்
  //

  யோவ்.. இது என்னா, பன்னிகுட்டி ராமசாமியோட, மூக்கு வழியில, மூளையப் பாக்கிற
  சமாச்சாரமா?..

  அதுக்கெல்லாம், மார்கழி மாசம் முச்சூடும்,வெறும் வயித்தில, ஆரஞ்சு பச்சிடிய சாப்பிடனுமய்யா..
  ஓவரா சாப்பிட்டா.. அப்புறம் ஒரு ம^&$&$ரும் நிக்காது..
  அதையும் சொல்லிடறேன்..

  ReplyDelete
 22. @ரெட்டைவால் ' ஸ் said...
  எல்லாரும் பன்னிக்காக வெய்ட்டிங்...ஆனா அவனை எப்பவோ ஸ்வைன் ஃப்ளூ கேஸ்ல புடிச்சுட்டுப் போய்ட்டானுங்க...ஹி ஹி.....
  //

  ஆமாய்யா.. எங்கயாவது மாட்டிகிச்சா?..

  ReplyDelete
 23. @ரெட்டைவால் ' ஸ் said...
  மங்குனி கண்ணா...அது ரவா கிச்சடி இல்லைடா...மூளை...செஞ்செல்லாம் தர முடியாது...மண்டைக்குள்ள மழு மழுன்னு ஒரு ஒண்ணரை கிலோவுல ..சரி வுடு...உனக்கு சம்மந்தமில்லாதது!
  //

  பாவமய்யா.. ப்யபுள்ள கெஞ்சிக்கேக்குறான்.. ஏதாவது பண்ணலாமா?..
  ( அந்த அட்டை பூச்சிய மண்டையில விட்டா, ஏதாவது வருங்குறே?)

  ReplyDelete
 24. பட்டா,

  உங்களுக்கு சரி மூளைங்க!

  பிரபாகர்...

  ReplyDelete
 25. @@@@ பட்டாபட்டி.. said...
  @ரெட்டைவால் ' ஸ் said...
  மூளை..மண்டைக்குள்ள மழு மழுன்னு ஒரு ஒண்ணரை கிலோவுல ..///

  கேக்கும்போதே நாக்கு ஊறுதே பட்டாப்பட்டி...இனிமே வர்றவன் எல்லா பயலுக்கும் மொதொள்ள மூளைய எடுக்கறோம்..அப்பறம்தான் லெக் பீஸ்..!!

  ReplyDelete
 26. @பிரபாகர்...
  பட்டா,
  உங்களுக்கு சரி மூளைங்க!
  //

  எல்லாம் உங்க ஆசீர்வாதமண்ணே..

  ReplyDelete
 27. @Veliyoorkaran said...
  கேக்கும்போதே நாக்கு ஊறுதே பட்டாப்பட்டி...இனிமே வர்றவன் எல்லா பயலுக்கும் மொதொள்ள மூளைய எடுக்கறோம்..அப்பறம்தான் லெக் பீஸ்..!!
  //
  ஏய்யா.. இல்லாத பயலுக வந்தா, என்ன பண்ணப்போறே?..

  ReplyDelete
 28. வேறென்ன நெ(.......)ஞ்சுக்கறி தான்...

  ReplyDelete
 29. ரெட்டைவால் ' ஸ் said...
  வேறென்ன நெ(.......)ஞ்சுக்கறி தான்...
  //

  ஏம்பா.. இது கெட்ட வார்த்தை இல்லையே..
  இல்ல..
  சும்மா கேட்டேன்..

  ReplyDelete
 30. .// ..இனிமே வர்றவன் எல்லா பயலுக்கும் மொதொள்ள மூளைய எடுக்கறோம்..அப்பறம்தான் லெக் பீஸ்..!! //

  ஒரு வாரத்துக்கு அப்புறம் இப்பத்தான் வந்து பதிவ படிச்சு கமெண்ட் போடலாம்ன்னு பார்த்தா இப்படியா பயமுறுத்துவது?

  ReplyDelete
 31. // ஏய்யா.. இல்லாத பயலுக வந்தா, என்ன பண்ணப்போறே?.. //
  பட்டா நீரு நித்தியானந்தா சிஷ்யனா? எப்படி கரீட்டா நான் வருவேன்னு தெரியும். சமாதி நிலையில் இருந்தீரா?

  ReplyDelete
 32. @ பித்தனின் வாக்கு said...
  .// ..இனிமே வர்றவன் எல்லா பயலுக்கும் மொதொள்ள மூளைய எடுக்கறோம்..அப்பறம்தான் லெக் பீஸ்..!! //
  ஒரு வாரத்துக்கு அப்புறம் இப்பத்தான் வந்து பதிவ படிச்சு கமெண்ட் போடலாம்ன்னு பார்த்தா இப்படியா பயமுறுத்துவது?
  //

  நீங்க எதுக்குண்ணே பயப்படுறீங்க..சும்மா வாங்க..

  ReplyDelete
 33. மூளையே இல்லே. பின்னே எங்கிருந்து வரும் மூளைக்கு வேலை, நல்லா கெளப்புறாங்கயா பீதிய....

  (யார்ர மூளைனு கேட்றக்கூடாது ஆமா)

  ReplyDelete
 34. @பித்தனின் வாக்கு said...
  பட்டா நீரு நித்தியானந்தா சிஷ்யனா? எப்படி கரீட்டா நான் வருவேன்னு தெரியும். சமாதி நிலையில் இருந்தீரா?//

  சீடன்னு சொல்லமுடியாது சார்.. ஆனா அஸிஸ்டெண்ட்னு வெச்சுக்கலாம்..
  அதாங்க..கேமரா துடைக்கிறது..லைட்டிங் செட் பண்றது .. இதுமாறி சின்ன சின்ன வேலை செய்ற
  பெரிய மனுஷன்..ஹா..ஹா

  ReplyDelete
 35. @அஹமது இர்ஷாத் said...
  மூளையே இல்லே. பின்னே எங்கிருந்து வரும் மூளைக்கு வேலை, நல்லா கெளப்புறாங்கயா பீதிய....
  (யார்ர மூளைனு கேட்றக்கூடாது ஆமா)
  //

  அண்ணா.. அடுத்த பதிவில பாருங்க.. மூளையே இல்லாம,
  முன்னேற வழி சொல்லப்போறேன்..

  ReplyDelete
 36. அண்ணே எப்புடி கசக்கினாலும் உங்க மூளைபோல் வரமாட்டிங்கிது

  ...சிவா...

  ReplyDelete
 37. me the 41 இப்படி தான் போடா வேண்டி இருக்கு கரிகாலன் தான் துண்டு போட்டு வைசுயருக்கரே

  ReplyDelete
 38. பட்டு உனக்கும் மூளை இருக்குன்னு நிருபிசுட்டியே

  ReplyDelete
 39. சேட்டைக்காரன் said...

  நானும் பலவாட்டி முயற்சி பண்ணியும் சரியா வரமாட்டேங்குது! ஏதாவது ஷார்ட்-கட் இருக்காண்ணே? :-)//////


  இருக்கு அண்ணே !! உங்க வீட்டு பத்திரத்தை எடுத்து வாருங்கள் சொல்லி தருகிறேன்

  ReplyDelete
 40. மங்குனி அமைச்சர் said...

  பட்டா, எல்லா பயபுள்ளைகளும் இந்த மூளையா வச்சிக்கிட்டு என்னடா பன்றானுக?/////


  உனக்கு இல்லாததை நினைத்து மெர்சல் ஆவத தலைவா

  ReplyDelete
 41. ரெட்டைவால் ' ஸ் said...
  பட்டாபட்டி...நீ ஏதோ ஃபிகர் கரெக்ட் பண்றதுக்காக இப்படியெல்லாம் பண்றேன்னு தோனுது...!////


  அந்த தெறமை நம்ம பட்டுக்கு வெளியூரு மாதிரியே சுட்டு போட்டாலும் வராது

  ReplyDelete
 42. பட்டாபட்டி.. said...

  @ரெட்டைவால் ' ஸ் said...
  பிரஜைகளே...நான் சொல்லல...பட்டாபட்டி மூளைக்காரன்னு...!
  பட்டாபட்டி...நீ ஏதோ ஃபிகர் கரெக்ட் பண்றதுக்காக இப்படியெல்லாம் பண்றேன்னு தோனுது...!
  //

  முதல்ல

  ஆட்டை கடிச்சானுகோ..
  மாட்டை கடிச்சானுகோ..
  உட்டானுகளா..

  பன்னிகுட்டிய கடிச்சானுகோ..

  சரி தொலையுதுனு உட்டா,
  பித்தன கடிச்சானுகோ..

  இப்ப பட்டாபட்டி..////  பன்னி குட்டி செத்து போச்சு வேணும் என்றால் வெளி ப்ளாக் பக்கம் போயி பாரு,நானும் கரிகாலனும் சேர்ந்து போட்டு தாக்கிட்டோம்.அதான் உன்னிடம் ஆரம்பித்து உள்ளோம்

  ReplyDelete
 43. பிரபாகர் said...

  பட்டா,

  உங்களுக்கு சரி மூளைங்க!////


  உள் மூலமா,வெளி மூலமா
  ஓ மூளையா அது பட்டுக்கு கிடையாதே

  ReplyDelete
 44. பட்டாபட்டி.. said..
  அண்ணா.. அடுத்த பதிவில பாருங்க.. மூளையே இல்லாம,
  முன்னேற வழி சொல்லப்போறேன்..//////


  இப்பவாவது நம்ம மங்கு மேல் இரக்கம் வந்ததே

  ReplyDelete
 45. Anonymous said...

  அண்ணே எப்புடி கசக்கினாலும் உங்க மூளைபோல் வரமாட்டிங்கிது

  ...சிவா...///////


  ரொம்ப பீல் பண்ணாதேங்க கோர்ட்டர் அடிச்சுட்டு யோசிச்சி பாருங்க

  ReplyDelete
 46. me the 50 இதுக்கு என்னலாம் பண்ண வேண்டி இருக்கு

  ReplyDelete
 47. Blogger Muthu said...
  Anonymous said...
  அண்ணே எப்புடி கசக்கினாலும் உங்க மூளைபோல் வரமாட்டிங்கிது
  ...சிவா...///////
  // ரொம்ப பீல் பண்ணாதேங்க கோர்ட்டர் அடிச்சுட்டு யோசிச்சி பாருங்க//

  மல்லாக்க படுத்து யோசிக்கவா இல்ல குப்புறபடுத்து யோசிக்கவா தலைவா

  ...சிவா...

  ReplyDelete
 48. //அண்ணே எப்புடி கசக்கினாலும் உங்க மூளைபோல் வரமாட்டிங்கிது//

  யோவ்,இருந்தா தானயா வர்றதுக்கு.....
  பட்டு,நான் உன்ன சொல்லல ......

  ReplyDelete
 49. மல்லாக்க படுத்து யோசிக்கவா இல்ல குப்புறபடுத்து யோசிக்கவா தலைவா

  ...சிவா...

  அது உங்க விருப்பம் தல, ஆனால் கோர்ட்டர் முக்கியம்

  ReplyDelete
 50. நீங்க சொன்ன மாதிரியே நானும் செஞ்சேன் ஆனா பாகத்து வீட்டுக்காரன் வீட்டு பத்திரத்தை வைத்து, நான் கசக்கி பிளிஞ்சது மாதிரியே என்னையும் கசக்குர்றனுங்க. வீட்டு பத்ரம்ன்னு சொன்ன, எந்த வீட்டு பத்ரம்ன்னு சொல்லாம போயிட்டே ......
  நீ நல்ல இருக்கணும் சாமி.

  ReplyDelete
 51. @முத்து..

  நன்றி தல..

  எல்லாத்துக்கும் கமெண்ட் போட்டு, என்னோட வேலைய சுலபமாக்கிட்டே..

  அதுக்காக, உனக்கு ஒரு ஸ்பெஷல் சலாம் வாத்தியாரே..

  ReplyDelete
 52. வெறும்பய said...

  நீங்க சொன்ன மாதிரியே நானும் செஞ்சேன் ஆனா பாகத்து வீட்டுக்காரன் வீட்டு பத்திரத்தை வைத்து, நான் கசக்கி பிளிஞ்சது மாதிரியே என்னையும் கசக்குர்றனுங்க. வீட்டு பத்ரம்ன்னு சொன்ன, எந்த வீட்டு பத்ரம்ன்னு சொல்லாம போயிட்டே ......
  நீ நல்ல இருக்கணும் சாமி.

  //

  அடப்பாவிகளா.. இதுலயே குத்தம் கண்டுபிடிச்சுட்டாங்க..

  (பட்டாபட்டி.. ஜாக்கிரதையா இருந்துக்க..)


  சார்.. அடுத்த பதிவில, சரி பண்ணிக்கிறேன் சாமி..

  ( அடேங்கப்பா.. பட்டாபட்டி, டவுசரையே கிழிக்க வரானுக..உம்..)

  ReplyDelete
 53. நமக்கு ஏற்கனவே மூளை இருக்குறதால, இப்புடி கசக்கத் தேவையில்ல... போயிட்டு நீங்க எதுவும் சமையல் பதிவு போட்ட வர்றேன்... :-)

  ReplyDelete
 54. யேய் யாருப்பா அங்க நம்ம பட்டாவுக்கு ஒரு மூளை பிரை சொல்லு... அப்புடியே விக்கிக்காம சாப்பிட ரெண்டு பாட்டில் விஸ்கி சொல்லு...

  ReplyDelete
 55. பட்டு..ரோஸ்விக் மூளையைப் போட்டு பொரியல் பண்ணி ஒரு பதிவு போடுய்யா.. பய குளோபல் வார்மிங் அது இதுன்னு மூளைய ரொம்ப யூஸ் பண்ணிவச்சிருக்கான்...

  ReplyDelete
 56. @ரெட்டைவால் ' ஸ் said...

  பட்டு..ரோஸ்விக் மூளையைப் போட்டு பொரியல் பண்ணி ஒரு பதிவு போடுய்யா.. பய குளோபல் வார்மிங் அது இதுன்னு மூளைய ரொம்ப யூஸ் பண்ணிவச்சிருக்கான்.
  //

  அதுதான்யா பிரச்சனை...ரொம்ப யூஸ் பண்ணினா மூளையினா, பொறிச்ச பிறகு, 100 கிராம் கூடத்தேறாது..

  ReplyDelete
 57. நம்மளுக்கும் மூளை இருக்குன்னு காண்பிக்க எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு :)

  ReplyDelete
 58. ஓகே..நம்மளுக்கும் மூளை இருக்குன்னு நிருபிச்சிட வேண்டியதுதான் ..

  ReplyDelete
 59. Blogger பட்டாபட்டி.. said...

  @யூர்கன் க்ருகியர் said...
  நம்மளுக்கும் மூளை இருக்குன்னு காண்பிக்க எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு :)
  //

  ஆமா யூர்கன்.. விளம்பர உலகம் இது..
  கண்ணு முழிச்சுட்டே , தூங்கலேனா, அப்பவே.. கொண்டு போயி, பொதச்சுருவானுக..

  ReplyDelete
 60. நல்ல நகைச்சுவைப் பதிவு

  ReplyDelete
 61. நல்ல நகைச்சுவைப் பதிவு

  ReplyDelete
 62. நல்ல நகைச்சுவைப்பதிவு

  ReplyDelete
 63. //என் பட்டாபட்டி நாடாவை பின்பற்றுவோர்
  //

  :)

  ReplyDelete
 64. பட்டாபட்டி.. said...

  @முத்து..

  நன்றி தல..

  எல்லாத்துக்கும் கமெண்ட் போட்டு, என்னோட வேலைய சுலபமாக்கிட்டே..

  அதுக்காக, உனக்கு ஒரு ஸ்பெஷல் சலாம் வாத்தியாரே../////  இதுலாம் நமக்குள் கொடுக்கல் வாங்கல் தானே,பேசினபடி அமௌண்டை அனுப்பிடுங்க

  ReplyDelete
 65. ILLUMINATI said...

  //அண்ணே எப்புடி கசக்கினாலும் உங்க மூளைபோல் வரமாட்டிங்கிது//

  யோவ்,இருந்தா தானயா வர்றதுக்கு.....
  பட்டு,நான் உன்ன சொல்லல ......////.

  இருந்தாலும் பப்ளிக்கில் உண்மையை சொல்லபடாது,
  ஆமாம் எப்போதில் இருந்து தெலுங்கு டியூஷன் போறீங்க

  ReplyDelete
 66. எப்பூடி, ரூம் போட்டு யோசிப்பீங்களோ?

  ReplyDelete
 67. @மேரிஜோசப் said...
  நல்ல நகைச்சுவைப் பதிவு
  நல்ல நகைச்சுவைப் பதிவு
  நல்ல நகைச்சுவைப்பதிவு
  //

  நன்றி சார்..
  நன்றி சார்..
  நன்றி சார்..

  ReplyDelete
 68. @【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
  //என் பட்டாபட்டி நாடாவை பின்பற்றுவோர்
  //

  :)

  புது டெம்ப்ளேட்..சில விடுபட்டுவிட்டன..
  சரி செய்து விடுகிறோம்..ஹி..ஹி

  ReplyDelete
 69. @Muthu said...
  இதுலாம் நமக்குள் கொடுக்கல் வாங்கல் தானே,பேசினபடி அமௌண்டை அனுப்பிடுங்க
  //

  ரைட்டு..( ஒரு பன்னி கால் பார்சலூ...!!!)

  ReplyDelete
 70. @மசக்கவுண்டன் said...
  எப்பூடி, ரூம் போட்டு யோசிப்பீங்களோ?
  //

  ஏண்ணே.. இந்த நேரத்தில கமெண்ட் போடுறீங்க..தூங்கலையா கவுண்டரே?..

  ReplyDelete
 71. ஒரு வழி பண்ணிப் போடுவீங்க போல இருக்குது.. .வெயில் அப்படி.

  ReplyDelete
 72. @தாராபுரத்தான் said...
  ஒரு வழி பண்ணிப் போடுவீங்க போல இருக்குது.. .வெயில் அப்படி.
  //

  ஆமா சார்..மூளை ஓவரா வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது..

  ReplyDelete
 73. //சர்தான்..வெள்ளக்காரன் மூளக்காரன்..அவனுக்கு அப்பவே தெரியும், ‘பின்னாடி தண்ணி கஷ்டம் வருமுனு’..

  ஆனா, நாம,இன்னும் தண்ணிய வேஸ்ட் பண்ணிகிட்டில்ல இருக்கோம்..//

  அவனும் கழுவ தன்னியவே உபயோகிச்சிருந்தா இந்தப் பிரச்சினையே இல்ல.. தொடைக்க பேப்பர் செய்ய மரத்த வேட்டுனான்.. அவனுக்கு தொடைக்க பேப்பர் கிடைச்சிடுச்சு.. மரங்கள் அழிஞ்சிட்டதால நம்ம பாடு திண்டாட்டம் ஆயிடுச்சு..

  ReplyDelete
 74. @பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
  ஆனா, நாம,இன்னும் தண்ணிய வேஸ்ட் பண்ணிகிட்டில்ல இருக்கோம்..//
  அவனும் கழுவ தன்னியவே உபயோகிச்சிருந்தா இந்தப் பிரச்சினையே இல்ல.. தொடைக்க பேப்பர் செய்ய மரத்த வேட்டுனான்.. அவனுக்கு தொடைக்க பேப்பர் கிடைச்சிடுச்சு.. மரங்கள் அழிஞ்சிட்டதால நம்ம பாடு திண்டாட்டம் ஆயிடுச்சு..
  //

  உண்மைதான் பிரகாசு..மரத்தை வைப்பதை விட, வெட்டுவதில் தான் குறியாக இருக்கிறோம்..
  இந்த லிங்க் படிச்சு பாருங்க..

  http://paamaranpakkangal.blogspot.com/2010/04/blog-post_07.html

  போசாம, இதை நாடு முழுவதும், கட்டாயமாக்க வேண்டும்

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!