Pages

Wednesday, March 9, 2011

நிரந்தர(?) முதல்வர் வாழ்க...

.
.
.
தலைவா. வணக்கம். ஆங்.. அட என்னாத்தலைவா..  நாந்தான்.... அட...உடன்பிறப்பு தலீவா..   நாலு நாளா உடம்பு சுளுக்கெடுத்தாபல இருக்கேனு, புல் அடிச்சு மட்டையாகி இருந்தேன். அதுக்குள்ள படா பேஜாரு பண்ணிப்புட்டானுக இந்த பதிவுலகுலே.

ஒருத்தன் என்னான, ’தலீவரு சாணக்கியத்தனம் பண்ணியிருக்காரு’ங்கரான்.
அடுத்தவன், ’தலைவரு வெச்சாரு பாரு ஆப்பை’-ங்கிறான்.
சென்னையிலிருந்து இன்னொருத்தன், ”அதை கூட்டி, இதை கழித்து, இதாலே பெருக்கினா சுத்தம் ஆகுங்குறான்”.
அவனோ,”கலைஞர், turbo power-யை உபயோகப்படுத்தரார்”-ங்குரான்
என்னா தலைவா நடக்குது?.

என்னமோ போங்க. கடைசியா சோனியா அம்மாவோட மனம் குளிர நடந்ததுக்கு, உங்களுக்கு ஒரு பட்டம் தரனும் தலீவா?. உங்களுக்கு இன்னா அறிவு?.. இன்னா சாணக்கியத்தனம்..?

ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம் தலை.  படிச்சவனையே சில நாட்கள், சிங்கி அடிக்கவிட்டுட்டீயே!!.. அங்கதான் நீ நிக்கிறே!!... சாரி தலைவா.. ஒரு ப்ளோல வந்திருச்சு. எப்பவும் மாறி கண்ணை மூடிக்கிட்டு, உடன்பிறப்பு சொன்னதா எடுத்துக்க..


ஆங்..தலீவா.. நம்ம அல்லக்கை, அதாம்பா  ’லகலக அண்ணாச்சி’, நீங்க எடுத்த முடிவை பார்த்து, ”ஆகா.. தமிழகத்திலேயே முதன்முறையா, அதிரடி ஆட்டம்னு” டிவிட்டராரு. பார்த்துக்கோங்க தலீவா.. இதுமாறி அல்லக்கைக இருக்கும்வரைதான் நாடு நம்மதுதான். இல்லை, எல்லாத்தையும் புடிங்கி, திரும்பவும் திருட்டு ரயில் ஏத்த விட்டுவானுகோ..

தல.. உங்ககிட்ட ஒரே ஒரு விண்ணப்பம்.. இந்த அல்லக்கைக்கு, ஏதாவது வட்டம், சதுரம்னு,  பீடி காசுக்கு சம்பாரிக்கிறமாறி, ஒரு பதவி குடேன். பாவம் சம்பளம் வாங்காம கூவிக்கிட்டு இருக்குல்ல..

ஆங்.. தலீவா.. இங்க எல்லா பயபுள்ளைகளும் பயந்து போய், நடுங்கிட்டு இருக்கானுகோ நாம ஆடின ஆட்டத்தைப் பார்த்து. வீல்சேர்ல புச்சா பேட்டரி மாத்தினது எவனுக்கு தெரியாது போல தலீவா.  சாம்பிளுக்கு சிலது சொல்றேன்.. மைண்டுல வெச்சுக்க.

 • தலைவர் புத்துணர்சியுடன் புதுவேகம் எடுத்துள்ளார்.
 • அவர் கை அசைத்தால், இந்தியாவே ஆடும்
 • சாணக்கியனுக்கே சாணக்கியதனம் சொல்லிக்கொடுப்பார்
அப்படீனு , காலையில பல்லே விளக்காம கூவிக்கினு இருக்கானுக..
அதனால...இதையெல்லாம், அப்படியே லூஸ்ல விட்டுபுட்டு, கனிய முதல்வர் ஆக்கும் வழியை, இப்பவே ஸ்டார்ட் பண்ணுங்க...சொல்லிப்புட்டேன்.

அப்பால தலீவா.. முடிக்கும்முன், இன்னொன்னை சொல்லிக்கிட்டுப்போறேன். வீட்டுக்காரம்மாவை, வேலைக்கு போகச்சொல்லீட்டேன்.. புள்ளைக படிப்பை பாதியிலே நிறுத்திப்புட்டு, சிவகாசிக்கு , வேலைக்கு அனுப்பியிருக்கேன்.. என்னோட பிரச்சனை முடிஞ்சது தலீவா.. இனி உனக்காக, உடல், பொருள் ஆவி.. எல்லாமயிரையும் குடுக்க ரெடி ஆகிட்டேன்.. நீ மட்டும் ‘உம்’னு சொல்லு தலீவா.. 63 தொகுதியிலும் இடைதேர்தல் வரமாறி செஞ்சுபுடலாம்...

தலைவா.. மாற்று அரசு ஆட்சிக்கு வரனுமுனு , சிலபயலுக கூவிக்கிட்டு இருக்கானுக.. அந்தம்மா என்னமோ, வந்ததும் தமிழ்நாட்டை ஆசிட் ஊத்தி கழுவிவிடரமாறி.
( இதுல வேற , இந்த பட்டாபட்டி மயிராண்டி,  இந்த ஊழல்பெருச்சாளிக்கு, அந்த ஊழல் மகாராணி தேவலைனு கூவரான்) . தல.. முடிஞ்சா, அந்தம்மா கூட சில ரகசிய கூட்டணி போடுங்க தல்.. மக்கள்  தலவிதி நம்ம கையிலதான்.. எவ்வளவு ஜென்மங்கள் ஆனாலும் சரி.. விடக்கூடாது..ஆங்..தலீவா.. சமீபத்தில, இலவச டீவிய..அதாம்மா.. கட்சி ஆபீஸ்ல சுட்டுகிட்டு வந்ததை, பழைய இரும்புக்கு போட்டு,ஐபோன் வாங்கிட்டேன்.. என்னா வசதி. என்னா அழகு... தொட்டாப்போதும்.. பூ மாறி வழுக்கிட்டு போகுது தலீவா ..
அதுக்கு 2 மணி நேரம் சார்ஜ் பண்ணினா, 4 மணி நேரம் உழைக்குது.

ஆனா, அந்தம்மா, 4 நாள் ஓய்வெடுத்தா, 2 நாள்தான் உழைக்குது.. பேட்டரி வீக் போல..  அதனால .. கவலையே படாத தல..  அடுத்த 50 வருசத்துக்கு நம்ம ஆட்சிதான்.. கட்சிக்காரனுக, ஏரோப்ளேன் ஏறிப்போயி பிச்சை எடுப்பதை, கண்குளிர பார்க்கனும்..


எவனாவது, ’ஏய்யா ரெண்டு ஏக்கர் நிலம் தரலே?னு கேட்டா, உள்ள தூக்கிப்போட்டு, வாயிலையே மிதி தலைவா.. மிதினா.. நான் உன்னிய சொல்லலே.. ஆளைவிட்டு மிதிக்கச்சொல்றேன்.

நமது நோக்கம், ”தமிழ்நாட்டுல பாலும் தேனும் ஓடவைக்கனும்”. இனி எவ்வளவு ஜென்மம் எடுத்தாலும் சரி தல.. அதை அடைய பாடுபட்டுக்கிட்டே இருப்போம் என கனிஉறுதிமொழி எடுக்கிறேன்..

நீங்க வேற, மகளிர் துயர் துடைப்பதில் நம்பர் ஒன் ஆச்சே.. பேசாம, இந்த கோயமுத்தூரை தனியா பிரிச்சு, ராசாத்தி அம்மாக்கு தாரை வார்த்திடலாம் தொரை.   ஏன்னா, ’உன்னை நம்பி வந்ததுக்கு, எனக்கு எதுவுமே இல்லை’னு கண்ணை கசக்கினா, கழக்த்தொண்டன் பார்த்துக்கிட்டு சும்மா இருக்கமுடியாது இல்ல..

சும்மா உக்காந்திருக்கும்போது ரோசனை பன்ணி, தமிழனுகளுக்கு(?) நல்ல முடிவை எடு முதலாளி..


இப்படிக்கு
உடன்பிறப்பு.
.
.
.

48 comments:

 1. //அவனோ,”கலைஞர், turbo power-யை உபயோகப்படுத்தரார்”-ங்குரான்
  என்னா தலைவா நடக்குத//

  hahaha.............

  ReplyDelete
 2. என்னமோ போங்க. கடைசியா சோனியா அம்மாவோட மனம் குளிர நடந்ததுக்கு, உங்களுக்கு ஒரு பட்டம் தரனும் தலீவா?. //

  கடைசி வரை தலைவனுக்கு பட்டம் கொடுக்கவே இல்லையே?

  ReplyDelete
 3. கனிய முதல்வர் ஆக்கும் வழியை, இப்பவே ஸ்டார்ட் பண்ணுங்க...சொல்லிப்புட்டேன்.
  //

  அப்ப துணை முதல்வர் யாரு?

  ReplyDelete
 4. அடுத்த 50 வருசத்துக்கு நம்ம ஆட்சிதான்.. கட்சிக்காரனுக, ஏரோப்ளேன் ஏறிப்போயி பிச்சை எடுப்பதை, கண்குளிர பார்க்கனும்..//

  இப்பவே டெல்லிக்கு போயி பிச்சை எடுத்தாதா பாக்கலையா?

  ReplyDelete
 5. எவனாவது, ’ஏய்யா ரெண்டு ஏக்கர் நிலம் தரலே?னு கேட்டா, உள்ள தூக்கிப்போட்டு, வாயிலையே மிதி தலைவா.. மிதினா.. நான் உன்னிய சொல்லலே.. ஆளைவிட்டு மிதிக்கச்சொல்றேன். //

  மிதிக்கிரதுன்னு முடிவாயிருச்சு.. மகளிர் அணிய வச்சு மிதிக்க சொல்லு தலைவா ..ஹி ஹி

  ReplyDelete
 6. இனி எவ்வளவு ஜென்மம் எடுத்தாலும் சரி தல.. அதை அடைய பாடுபட்டுக்கிட்டே இருப்போம் என கனிஉறுதிமொழி எடுக்கிறேன்..//

  நீண்ட வரிசையில் இன்னுமொரு ஆளா?

  ReplyDelete
 7. நீங்க வேற, மகளிர் துயர் துடைப்பதில் நம்பர் ஒன் ஆச்சே.. //

  ஆமாமா... நல்லா தொடப்பாறு இவரு....

  ReplyDelete
 8. இன்னாத்த , சொல்றது !! சொல்லிக்கிறா மேரி ஒன்னியும் இல்ல !! ஹிஹி

  ReplyDelete
 9. அரசியல் பதிவுன்னா உங்களுக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி போல..
  கலக்கிரீங்க..

  ReplyDelete
 10. // உங்களுக்கு ஒரு பட்டம் தரனும் தலீவா?. உங்களுக்கு இன்னா அறிவு?.. இன்னா சாணக்கியத்தனம்..?//

  பட்டம் கொடுக்கவே இல்ல ..சரி நானே சொல்லுறேன் "தேடி போய் சாணி ய மிதிச்ச தலைவர் "என்று இன்று முதல் அன்பாக அழைக்கபடுவீர்கள்

  ReplyDelete
 11. //’ஏய்யா ரெண்டு ஏக்கர் நிலம் தரலே?னு கேட்டா, உள்ள தூக்கிப்போட்டு, வாயிலையே மிதி தலைவா.. மிதினா.. நான் உன்னிய சொல்லலே.. ஆளைவிட்டு மிதிக்கச்சொல்றேன். //

  எங்க உக்கார்ந்துகிட்டே தான் மிதிக்கணும் ...எந்திரிச்ச அவ்வளவும் பார்ட் பார்டாக கழன்று கீழ விழும் ..பின்ன அத எடுத்து வீட்டுல வச்ச நல்ல luck க்கும் இருக்கும் Look உம இருக்கும் ...சொல்லி வித்து போடுவாங்க ....

  ReplyDelete
 12. //அந்தம்மா, 4 நாள் ஓய்வெடுத்தா, 2 நாள்தான் உழைக்குது//

  ஏன் மச்சி இந்த கொலைவெறி... :))))

  ReplyDelete
 13. //இதுல வேற , இந்த பட்டாபட்டி மயிராண்டி, இந்த ஊழல்பெருச்சாளிக்கு, அந்த ஊழல் மகாராணி தேவலைனு கூவரான்)//

  இத தான் நானும் சொன்னே எல்லா பயல்களும் நீ அ தி மு க காரன்னு சொல்லிப்புட்டன் ....உன்னையும் சொல்லிட்டான ..சரி விடு ...வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் ....

  ReplyDelete
 14. கலக்கல் பதிவு பட்டா..........அப்படியே எப்போ அடுத்த பாராட்டு விழா...............குனியாமல் காலில் விழுந்த தலைவன் பட்டம் எப்போ!

  ReplyDelete
 15. //”தமிழ்நாட்டுல பாலும் தேனும் ஓடவைக்கனும்”//

  என்ன பாலுன்னு சொல்லலியே தலீவா

  ReplyDelete
 16. இனிமேல் தலைவர் இந்த சா நக்கிய தனத்தை பற்றி கடிதம் எழுதி சல்ஜாப்பு பண்ணுவாரு பாருங்க அப்பப்பா.... ஏப்ரல் 13 வரை அழும்பு இருக்கு

  ReplyDelete
 17. தமிழ் நாட்டுல இருக்குறவன் மொத்தமும் கேனக் கிறுக்கனா மாறிட்டான்..

  ReplyDelete
 18. உடன்பிறப்பே,
  எழுந்திடுக,
  சோம்பல் முறித்திடுக,
  அன்புத்தம்பி பட்டாபட்டியாரின் தலைமையில் திரண்டு கழகத்தின் பொற்கால ஆட்சிதனை மீண்டும் நிறுவிடுக.

  ReplyDelete
 19. தக்காளி போட்டுத்தாக்கு....

  ReplyDelete
 20. //கே.ஆர்.பி.செந்தில் said...
  தமிழ் நாட்டுல இருக்குறவன் மொத்தமும் கேனக் கிறுக்கனா மாறிட்டான்.//

  என்னாண்ணே இப்படி உண்மையை பொதுவுல போட்டு உடைச்சுட்டீங்க...?

  ReplyDelete
 21. முதல்ல சாரி ...,ஆணி தல ..,ஆணி ...,புரியும் நினைகிறேன்

  ReplyDelete
 22. வைகை said... 3

  என்னமோ போங்க. கடைசியா சோனியா அம்மாவோட மனம் குளிர நடந்ததுக்கு, உங்களுக்கு ஒரு பட்டம் தரனும் தலீவா?. //

  கடைசி வரை தலைவனுக்கு பட்டம் கொடுக்கவே இல்லையே?/////////////////////

  தறுதலைவன் பட்டம் ஒக்கே வா ?

  ReplyDelete
 23. வடநாட்டுக்கார ஊடகக்(காரி)காரன் கலங்கர் ன்னுதான் உச்சரிக்கிறார்கள்.நாம வேணுமுன்னா களங்கர் ன்னு பட்டம் கொடுத்திடலாம்.

  ReplyDelete
 24. ///////தலைவர் புத்துணர்சியுடன் புதுவேகம் எடுத்துள்ளார். ///////

  இதற்குக் காரணம் யார்?

  1. நமீதா
  2. கலாக்கா
  3. குஷ்பு

  சரியான விடை தெரிய வேண்டுமா? விரைவில் பட்டா டீவியில் பரபரப்பு பட்டி மன்றம்..... உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக, காணத்தவறாதீர்கள்.....!

  ReplyDelete
 25. ஓவரா புகழாத பட்டா, கலிஞ்சரு வெட்கப்படுவாரு...( தக்காளி நல்லா மென்னு துப்பிருக்கான்யா...)

  ReplyDelete
 26. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////தலைவர் புத்துணர்சியுடன் புதுவேகம் எடுத்துள்ளார். ///////

  இதற்குக் காரணம் யார்?

  1. நமீதா
  2. கலாக்கா
  3. குஷ்பு ......///

  பன்னிப்பயலே இன்னும் இந்த அக்காக்கள விடலையா....., புதுசா இளசா மூனு பேர தேத்து ராசா....

  ReplyDelete
 27. தலைவர் புத்துணர்சியுடன் புதுவேகம் எடுத்துள்ளார்.??
  வயாக்ரா எதுவும் சாப்பிட்டுட்டாரோ ?

  ReplyDelete
 28. இவரின் இளமையின் ரகசியம் என்ன?:-)

  ReplyDelete
 29. //எவனாவது, ’ஏய்யா ரெண்டு ஏக்கர் நிலம் தரலே?னு கேட்டா, உள்ள தூக்கிப்போட்டு, வாயிலையே மிதி தலைவா.. மிதினா.. நான் உன்னிய சொல்லலே.. ஆளைவிட்டு மிதிக்கச்சொல்றேன்.//

  பாத்துய்யா உன்னைய தூக்கிட்டு போயி எண்டா இப்பிடி பதிவை போட்டேன்னு மிதிச்சிற [[ஆளை வச்சுதான்]] போரானுக....

  ReplyDelete
 30. @MANO நாஞ்சில் மனோ said... 31

  பாத்துய்யா உன்னைய தூக்கிட்டு போயி எண்டா இப்பிடி பதிவை போட்டேன்னு மிதிச்சிற [[ஆளை வச்சுதான்]] போரானுக...
  //

  ஏண்ணே எங்க பிதுக்குனா கோடி வரும்னு தெரிஞ்சவங்களுக்கு, என்னைய பிதுக்கினா சாணி வரும்னு தெரியாதா?.. ஹி..ஹி

  ReplyDelete
 31. //அந்தம்மா, 4 நாள் ஓய்வெடுத்தா, 2 நாள்தான் உழைக்குது.. பேட்டரி வீக் போல.. அதனால .. கவலையே படாத தல.. அடுத்த 50 வருசத்துக்கு நம்ம ஆட்சிதான்.. கட்சிக்காரனுக, ஏரோப்ளேன் ஏறிப்போயி பிச்சை எடுப்பதை, கண்குளிர பார்க்கனும்..//

  அடப்பாவி மக்கா ..ஐபோன் மாதிரியா அந்தம்மா இருக்கு....!! கடவுளே..கடவுளே...!!

  ReplyDelete
 32. //இதுமாறி அல்லக்கைக இருக்கும்வரைதான் நாடு நம்மதுதான். இல்லை, எல்லாத்தையும் புடிங்கி, திரும்பவும் திருட்டு ரயில் ஏத்த விட்டுவானுகோ..//

  ஹா..ஹா..ஹா.. நினைச்சுப்பார்த்தேன் ...ஹா..ஹா..

  ஐயோ..கொல்றாங்களே...கொல்றாங்களே......

  ReplyDelete
 33. //ஏண்ணே எங்க பிதுக்குனா கோடி வரும்னு தெரிஞ்சவங்களுக்கு, என்னைய பிதுக்கினா சாணி வரும்னு தெரியாதா?.. ஹி..ஹி //

  ஒரு வேளை வருமான்னு சோதனை பண்னிட்டா என்னாகிறது ...? ஹி..ஹி..

  ReplyDelete
 34. கழக உடன் பிறப்பு,
  என் இளவல்,
  சிங்கை வாழ் தன்மான தமிழ் சிங்கம்,
  கொங்கு மண்டலம் தந்த பசும் பொன் தங்கம்
  நீவீர் கோவையில் போட்டி இட்டு, எதிர்த்து நிற்கும் குள்ள நரி குரங்கு கூட்டங்களை ஊளையிட்டு ஓட செய்வாய் என்பது இந்த அண்ணாவின் அருமை தம்பிக்கு தெரியுமாதலால் உன்னுடைய பெயரை என்சார்பாகவும், நம் கழக கண்மணிகள் சார்பாகவும் வழி மொழிகிறேன்.களம் பல கண்டு ,வென்று அந்த வெற்றி காணிக்கயினை கண்மணி கனி மொழியின் சார்பில்.........................

  அப்பாசாமி ......ஆள வுடுங்க.............................

  ReplyDelete
 35. @THOPPITHOPPI said...
  //அவனோ,”கலைஞர், turbo power-யை உபயோகப்படுத்தரார்”-ங்குரான்
  என்னா தலைவா நடக்குத//

  hahaha.............
  //

  ஹி..ஹி  @வைகை said...
  கனிய முதல்வர் ஆக்கும் வழியை, இப்பவே ஸ்டார்ட் பண்ணுங்க...சொல்லிப்புட்டேன்.
  //
  அப்ப துணை முதல்வர் யாரு?
  //

  எப்பவும் போல ஸ்டாலின் தான்.. (நிரந்தர)  @மாணவன் said...
  இன்னாத்த , சொல்றது !! சொல்லிக்கிறா மேரி ஒன்னியும் இல்ல !! ஹிஹி
  //

  அப்ப செரி..ஹி..ஹி
  @வேடந்தாங்கல் - கருன் said...
  அரசியல் பதிவுன்னா உங்களுக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி போல..
  கலக்கிரீங்க..
  //

  ஹி..ஹி அப்ப அவங்க, அல்வா குடுக்கிறாங்கனு சொல்றீங்க..?
  @இம்சைஅரசன் பாபு.. said...

  // உங்களுக்கு ஒரு பட்டம் தரனும் தலீவா?. உங்களுக்கு இன்னா அறிவு?.. இன்னா சாணக்கியத்தனம்..?//

  பட்டம் கொடுக்கவே இல்ல ..சரி நானே சொல்லுறேன் "தேடி போய் சாணி ய மிதிச்ச தலைவர் "என்று இன்று முதல் அன்பாக அழைக்கபடுவீர்கள்
  //

  நமீதாவ வெச்சு குடுக்கனும். உடனே பெண்ணுரிமை-னு, யாராவது கொடிய தூக்கிட்டு வந்துடாதீங்க..
  :-)

  ReplyDelete
 36. @TERROR-PANDIYAN(VAS) said...
  //அந்தம்மா, 4 நாள் ஓய்வெடுத்தா, 2 நாள்தான் உழைக்குது//
  ஏன் மச்சி இந்த கொலைவெறி... :))))
  //

  எனக்கா மச்சி? ஹி..ஹி  @விக்கி உலகம் said...
  கலக்கல் பதிவு பட்டா..........அப்படியே எப்போ அடுத்த பாராட்டு விழா...............குனியாமல் காலில் விழுந்த தலைவன் பட்டம் எப்போ!
  //

  தேர்தல் முடிஞ்சதும் வருமோ என்னவோ?


  @Blogger ரஹீம் கஸாலி said...
  ha....ha...ha....
  //
  :-)
  @சசிகுமார் said...
  //”தமிழ்நாட்டுல பாலும் தேனும் ஓடவைக்கனும்”//
  என்ன பாலுன்னு சொல்லலியே தலீவா
  //

  கள்ளிப்பாலை சொல்லியிருப்பாங்க போல...
  @முகமூடி said...
  இனிமேல் தலைவர் இந்த சா நக்கிய தனத்தை பற்றி கடிதம் எழுதி சல்ஜாப்பு பண்ணுவாரு பாருங்க அப்பப்பா.... ஏப்ரல் 13 வரை அழும்பு இருக்கு
  //

  என்ன ஏப்ரல் 13 வரைதானா?.. நானும் இன்னும் நாலு தலைமுறை இருக்குமுனு நினச்சேன்...
  @கே.ஆர்.பி.செந்தில் said...
  தமிழ் நாட்டுல இருக்குறவன் மொத்தமும் கேனக் கிறுக்கனா மாறிட்டான்..
  //

  ஹி..ஹி.. விடுங்க.. இனி கோணக்கிறுக்கனா மாறாம இருந்தா சர்தான்.. ஹி..ஹி

  ReplyDelete
 37. @வானம் said...
  உடன்பிறப்பே,
  எழுந்திடுக,
  சோம்பல் முறித்திடுக,
  அன்புத்தம்பி பட்டாபட்டியாரின் தலைமையில் திரண்டு கழகத்தின் பொற்கால ஆட்சிதனை மீண்டும் நிறுவிடுக.
  //

  சே..சே இப்ப எனக்கு கல்யாணம் வேண்டாம்..

  :-)
  @ரோஸ்விக் said...
  தக்காளி போட்டுத்தாக்கு....
  //

  ங்கொய்யாலே.. உன்னைதான் பட்டாபட்டீனு ஊரே தேடிக்கிட்டு இருக்கு..!!
  @பனங்காட்டு நரி said...
  முதல்ல சாரி ...,ஆணி தல ..,ஆணி ...,புரியும் நினைகிறேன்
  /

  ரைட்டு..ரைட்டு
  @அஞ்சா சிங்கம் said...
  வைகை said... 3

  என்னமோ போங்க. கடைசியா சோனியா அம்மாவோட மனம் குளிர நடந்ததுக்கு, உங்களுக்கு ஒரு பட்டம் தரனும் தலீவா?. //

  கடைசி வரை தலைவனுக்கு பட்டம் கொடுக்கவே இல்லையே?/////////////////////

  தறுதலைவன் பட்டம் ஒக்கே வா ?
  //

  டபுள் ஓகே

  ReplyDelete
 38. @ராஜ நடராஜன் said...
  வடநாட்டுக்கார ஊடகக்(காரி)காரன் கலங்கர் ன்னுதான் உச்சரிக்கிறார்கள்.நாம வேணுமுன்னா களங்கர் ன்னு பட்டம் கொடுத்திடலாம்.
  //

  குழைநர்- இந்தப்பட்டம் எப்படி சார் இருக்கு.. சோனியாவை விட்டு கொடுக்கலாம்...

  @பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இதற்குக் காரணம் யார்?

  1. நமீதா
  2. கலாக்கா
  3. குஷ்பு

  சரியான விடை தெரிய வேண்டுமா? விரைவில் பட்டா டீவியில் பரபரப்பு பட்டி மன்றம்..... உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக, காணத்தவறாதீர்கள்.....!
  //

  யோவ்.. இன்னும் நீ திருந்தலையா?  @Jey said...
  ஓவரா புகழாத பட்டா, கலிஞ்சரு வெட்கப்படுவாரு...( தக்காளி நல்லா மென்னு துப்பிருக்கான்யா...)
  //

  ஹி..ஹி


  @கே. ஆர்.விஜயன் said...
  தலைவர் புத்துணர்சியுடன் புதுவேகம் எடுத்துள்ளார்.??
  //

  இனி No use...

  ReplyDelete
 39. @எஸ்.கே said...
  இவரின் இளமையின் ரகசியம் என்ன?:-)
  //
  ஹி..ஹி மஞ்சள்தான் பாஸ்...  @ஜெய்லானி said...
  //அந்தம்மா, 4 நாள் ஓய்வெடுத்தா, 2 நாள்தான் உழைக்குது.. பேட்டரி வீக் போல.. அதனால .. கவலையே படாத தல.. அடுத்த 50 வருசத்துக்கு நம்ம ஆட்சிதான்.. கட்சிக்காரனுக, ஏரோப்ளேன் ஏறிப்போயி பிச்சை எடுப்பதை, கண்குளிர பார்க்கனும்..//
  அடப்பாவி மக்கா ..ஐபோன் மாதிரியா அந்தம்மா இருக்கு....!! கடவுளே..கடவுளே...!!
  //

  ஏண்ணே.. அப்ப, ஹைடெக் இல்லையா?.. ஹி..ஹி


  //ஏண்ணே எங்க பிதுக்குனா கோடி வரும்னு தெரிஞ்சவங்களுக்கு, என்னைய பிதுக்கினா சாணி வரும்னு தெரியாதா?.. ஹி..ஹி //
  ஒரு வேளை வருமான்னு சோதனை பண்னிட்டா என்னாகிறது ...? ஹி..ஹி..
  //

  சாணிய வெச்சு என்னவோ பண்ணட்டும் தொரை.. பாவம் அவிங்க பொழைப்புல, மண்ணை
  ..சாரிங்க...

  சாணியை போடக்கூடாது
  @வெளங்காதவன் said...
  hi hi hi
  //

  ஹோ..ஹோ  @கக்கு - மாணிக்கம் said...
  கழக உடன் பிறப்பு,
  என் இளவல்,
  சிங்கை வாழ் தன்மான தமிழ் சிங்கம்,
  கொங்கு மண்டலம் தந்த பசும் பொன் தங்கம்
  நீவீர் கோவையில் போட்டி இட்டு, எதிர்த்து நிற்கும் குள்ள நரி குரங்கு கூட்டங்களை ஊளையிட்டு ஓட செய்வாய் என்பது இந்த அண்ணாவின் அருமை தம்பிக்கு தெரியுமாதலால் உன்னுடைய பெயரை என்சார்பாகவும், நம் கழக கண்மணிகள் சார்பாகவும் வழி மொழிகிறேன்.களம் பல கண்டு ,வென்று அந்த வெற்றி காணிக்கயினை கண்மணி கனி மொழியின் சார்பில்.........................

  அப்பாசாமி ......ஆள வுடுங்க.............................
  //

  ஹி..ஹி


  @வானம்பாடிகள் said...
  ippudithan theethukkanum vayaththerichchala. :(
  //

  உண்மைதாண்ணே...

  ReplyDelete
 40. vithiyasama sinthanai patta --- nee oru pakka petti

  ReplyDelete
 41. http://6.latest.shalinsmangar.appspot.com/view-video/kanimozhi-angry-speech-part-1jeyamohan-mentally-retarded/?v=NyzbWEWJu1Q


  என்னங்க இப்படி உளர்றா

  ReplyDelete
 42. Indian No 1 Free Classified website www.classiindia.com
  No Need Registration . Just Post Your Articles Get Life time Income.

  Start to post Here ------ > www.classiindia.com

  ReplyDelete
 43. Anonymous India Free Traffic said...

  Indian No 1 Free Classified website www.classiindia.com
  No Need Registration . Just Post Your Articles Get Life time Income.

  Start to post Here ------ > www.classiindia.com
  //

  டேங்ஸ்ண்ணே.. சும்மா கிடந்தவனுக்கு பொண்ணையும் கொடுத்து, பங்களாவும் கொடுக்கீங்க.. ஹி..ஹி.. எப்பண்ணே வீட்டோட மாப்பிள்ளையா வரட்டும்..

  ஏம்பா ரோஸ்விக்.. நான் சரியா பேசறேனா..( ஆமா.. இந்த இங்கிலீசுல , எனக்கு பொண்ணு பார்த்திருக்கேனுதானே சொல்லியிருக்காங்க..!!!)

  ReplyDelete
 44. Blogger ரோஸ்விக் said...

  http://6.latest.shalinsmangar.appspot.com/view-video/kanimozhi-angry-speech-part-1jeyamohan-mentally-retarded/?v=NyzbWEWJu1Q


  என்னங்க இப்படி உளர்றா
  //

  ஓய்.. எங்க வந்து என்னா பேச்சு?..

  ஆமா.. மச்சி,,. நீ, என்னைய சொல்லலையே.. ஹி..ஹி

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!