Pages

Thursday, July 29, 2010

பதிவுலகில் நான் ஒரு பன்னா @#$..........!!!

.
.
.
தலைப்பை பார்த்து மிரளவேண்டாம்..
பதிவுலகில்,  நான் பன்னாட்டு சிங்கம் என்று எழுத வந்தது.. இங்க் தீர்ந்தபடியால்.. பாதியில் தொங்கிக்கொண்டிருக்கிறது...
என்னையும்(?).. இந்த தொடருக்கு..எழுத அழைத்த அண்ணன்  “முகிலனின் பிதற்றல்கள்”  அவர்களுக்கு நன்றி கூறி...

யாருப்பா.. மைக் பிடிங்கிறது......சரி..சரி.....நேரா கேள்விக்குப்போயிடலாம்......1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
பட்டா..பட்டி ( படிக்கும்போது, மறக்காம  ”கலர்ல” படிங்க பாஸ்..)


2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில்
பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

உண்மையான பெயரா....சே..சே....      என்ன பாஸ்..இப்படி ஒரு கேள்விய கேட்டுப்புட்டீங்க?.        நான் ஜெர்மனியில பிறந்தபோது..சரி..சரி..விடுங்க..

தீபாவளி சமயம், நானும் நண்பரும், துணி எடுக்க காந்திபுரம்  போயிருந்தோம்.  சுமார் இரண்டு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, அழகான,  அருமையான ஒரு சட்டைதுணியப் பார்த்தேன்..  அதுல இரண்டுமீட்டர் கிழிக்கச்சொல்ல, அந்த சேல்ஸ் கேர்ள் பார்த்த  பார்வையில...

அப்பப்பா...வேற யாராவது இருந்தா..வெக்கமில்லாம  அரசியல் கட்சில சேர்ந்திருப்பானுக.. நான் மானஸ்தன் ஆச்சே.     கண்ணாடி எடுத்து மூஞ்சியில மாட்டிக்கிட்டு,  கடைய விட்டு வெளிய  வந்துட்டேன்.

அது பேரு பட்டாபட்டியாம்.....கீழ போடறதாம்..பாக்கெட் வைத்தோ, வைக்காமலோ தைத்துப் போட்டுக்கலாமாம்... அவ்வளவு ’ஆம்’மிருக்காம்... அதிலிருந்து  இனிமேல் பட்டாபட்டில சட்டை போடுவதில்லைனு குலதெயவம் மேல சத்தியம்  பண்ணிட்டேன்.

அதனால, பழச மறக்ககூடாதுனு ...ஹி..ஹி..பேர மட்டும் யூஸ் பண்ணிக்கிட்டேன்.

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
என்ன பாஸ்?.. விரதம் இருந்தா... காலடி எடுத்து வைப்பாங்க.. அப்படிக்கா போனவருஷம் ஊருக்குப்போயிருந்தபோது, பிரதர் கேட்டாரு.. ”ஏண்டா..யாரைப்பார்த்தாலும்  Blog Blog-னு  சொல்லிக்கிட்டு இருக்காங்க.   நீதான் வாயைத்திறந்தா, நிறுத்தாம ஒரு மணி நேரம் பேசுவியே. ஏதாவது  எழுது”னு புத்திமதி சொன்னாரு..அதனால கூகிளாண்டவர்கிட்ட கேட்டு நானும்   ஆரம்பிச்சுட்டேன்.


4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம்  செய்தீர்கள்?
இனிதான் ஏதாவது செய்யனும்.  நித்தியானந்த்தை வச்சு யாகம் பண்ணினா,
பிச்சுக்க சான்ஸ் இருக்கா?-னு பார்க்கனும் தல..
இல்ல.... சாணியக்கூப்பிட்டு, வாசல் தெளிக்கவும் ஐடியா வெச்சிருக்கேன்.


5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து 
கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை
என்றால் ஏன்?

தோணினதை எழுதுவேன். சொந்த விஷயம்?.. இதுல ஏதாவது உள்குத்து
இருக்கா பாஸ்..   ஏன்னா, கலைஞர் ”உடன்பிறப்பே”னு சொல்வாரு..
அம்மா, ”ரத்ததின் ரத்தமே”னு சொல்லும்..   அப்ப,  நான் எழுதுவது சத்தியமா சொந்தவிசமா..சாரி   பாஸ்..சொந்தவிசயமாத்தான் இருக்கனும். ஹி..ஹி


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது
பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நான் எழுதுவது பொழுதுபோக்குக்குத்தான். 
ஆங்....சம்பாரிப்பது?.. இதையும் முயற்சி செய்தேன்.. ஆனா யாரும் வாங்க
வரலே..   ( வெளியூர்காரன் ப்ளாகை..ப்ளாட் போட்டு விற்க முயற்சிசெய்தது மிஸ்  ஆயி....சே..அந்த கொடுமைய விடுங்க பாஸ்...  எல்லா பயலும் விவரமாயிட்டானுக..)


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில்
எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒண்ணுதான் பாஸ்..  இதுக்கே கண் பிதுங்குது...
மேலும், நான் சட்டப்படி நடப்பவன்.. ஒருவனுக்கு ஒருத்தி...ஹி..ஹி
( இதில் உள்குத்து எதுவுமில்லை என தமிழக அரசின் மேல் ஆணையாக கூறுகிறேன்..)

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை  ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
கோபமா?.. அப்பப்போ வரும்..அப்புறம்,    காணாம போயிடும்..  ( உப்பை குறைக்கனும் பாஸ்.)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு
பாராட்டிய மனிதர் யார்?

பலபேர் பாராட்டியிருக்காங்க...ஓகே..ஓகே.. ரைட்டு...
பலபேரு தேடிக்கிட்டு இருக்காங்க பாஸ்...ஒத்துக்கிடறேன்.....


10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு
தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

ஏதோ.பொழப்புக்கு பொட்டி தட்டிட்டு இருக்கேன் சிங்கைல..
சீக்கிரமா(?), இந்தியா வந்து செட்டில் ஆகிடனுமுனு , கடந்த 15 வருடமா முயற்சிபண்ணிக்கிட்டு இருக்கேன்..”முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்..”

மேலும் பொழுதுபோக்குக்கு ஆரம்பித்த, பட்டாபட்டி ப்ளாக்கை,
உசுப்பேற்றி, உசுப்பேற்றி...   ”போஸ்மார்ட்டம் கிரவுண்ட்” ஆகிய பெருமை , நல்ல நண்பர்களையே(?) சேரும்..

அந்த நல்லவர்களை,  இத்தொடரைத்  தொடர அழைக்கிறேன்

கீழே நான் கிறுக்கியிருப்பது.....அந்த நல்ல நண்பர்களுக்காக..

பேரைச்சொல்லி உங்களை இழுத்துவிட விரும்பவில்லை...
மனச்சாட்சிப்படி, நீங்களா ஒத்துக்கிட்டு....
ஒழுக்கமா..
உண்மையா..
மெய்யா..
விவரமா..
நீங்களா எழுதினா....... நல்லாயிருக்கும்..
இல்ல ஆயுத முனையில,  எழுதவைக்கவேண்டி வரும் ...சொல்லிப்புட்டேன்  மக்கா...
.
.
.

108 comments:

 1. அட அட இன்னைக்கும் வடை எனக்குதான்

  ReplyDelete
 2. தலைவரே நித்தியா பிசி ஆயிட்டதால நாமே யாகம் பண்ணாத்தான் உண்டு.. யாரை பலி கொடுக்கலாம்..

  ReplyDelete
 3. கே.ஆர்.பி.செந்தில் said...

  அட அட இன்னைக்கும் வடை எனக்குதான்

  //

  வாங்க பிரதர்....

  ReplyDelete
 4. Blogger கே.ஆர்.பி.செந்தில் said...

  தலைவரே நித்தியா பிசி ஆயிட்டதால நாமே யாகம் பண்ணாத்தான் உண்டு.. யாரை பலி கொடுக்கலாம்..
  //

  நாம என்னைக்கு பிரிச்சு பேசியிருக்கோம்..

  யாராயிருந்தாலும் சர்தான்.. வெட்டு ஒண்ணு.. துண்டு ரெண்டு..ஹி..ஹி

  ReplyDelete
 5. நல்ல அறிமுகம் பட்டாபட்டியாரே!

  ஆமாம்.. தாங்கள் சிங்கை வலைப்பதிவாளர்கள் குழுவில் இருக்கும் ஒருவர்தான் என்று உளவுத்துறை தகவல்...:)

  //அப்பப்பா...வேற யாராவது இருந்தா..வெக்கமில்லாம அரசியல் கட்சில சேர்ந்திருப்பானுக.. நான் மானஸ்தன் ஆச்சே. கண்ணாடி எடுத்து மூஞ்சியில மாட்டிக்கிட்டு, கடைய விட்டு வெளிய வந்துட்டேன்.//

  அதகளம்:)))

  அன்புடன்,
  -ரவிச்சந்திரன்

  ReplyDelete
 6. நான் உங்கள பாத்திருக்கேனா ..?

  ReplyDelete
 7. ரைட்டு அடுத்த வீடு பாக்க வேண்டியது தான்

  ReplyDelete
 8. டாப்பு பாஸு!

  அட, நம்ம பெற சொல்லுவீங்கன்னு பாத்தேன். இப்பிடி எழுத விடாம பண்ணிட்டீங்களே!

  ReplyDelete
 9. பலபேரு தேடிக்கிட்டு இருக்காங்க பாஸ்...ஒத்துக்கிடறேன்..... நான்தான். இதோ வாங்கிங்க பாராட்டை.

  ReplyDelete
 10. @ரவிச்சந்திரன் said...
  நல்ல அறிமுகம் பட்டாபட்டியாரே!
  ஆமாம்.. தாங்கள் சிங்கை வலைப்பதிவாளர்கள் குழுவில் இருக்கும் ஒருவர்தான் என்று உளவுத்துறை தகவல்...:)
  //


  நம்பாதீங்க.. வதந்திகளை நம்பாதீங்க..
  எனக்கு கோவியார், ஜோசப் பால்ராஜை பார்த்தா...கால் நடுங்கும் பாஸ்...

  ReplyDelete
 11. @மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
  பட்டுல பட்டாப்பட்டி....
  //

  வாங்க பாஸ்..

  ReplyDelete
 12. @தருமி said...
  நான் உங்கள பாத்திருக்கேனா ..?
  //

  இருக்காது பாஸ்.. நீங்க வந்ததுட்டு போன பிறகுதான் தெரியும்..

  ReplyDelete
 13. @சசிகுமார் said...
  ரைட்டு அடுத்த வீடு பாக்க வேண்டியது தான்
  //

  என்னண்ணே.. கோவிச்சிட்டீங்களா?

  ReplyDelete
 14. @கிரி said...
  டாப்பு பாஸு!
  அட, நம்ம பெற சொல்லுவீங்கன்னு பாத்தேன். இப்பிடி எழுத விடாம பண்ணிட்டீங்களே!
  //

  எழுதுங்க பாஸ்..
  யாரு என்ன சொல்லுவாங்க?..

  மிரட்டினா, பட்டாபட்டி மைதானத்துக்கு அனுப்பிவையுங்க..
  நாங்க பார்த்துக்கிறோம்..

  ReplyDelete
 15. @கக்கு - மாணிக்கம் said...
  ஆஜர் பாஸ்.
  //

  இது செல்லாது..பாஸ்..

  ReplyDelete
 16. @Mahi_Granny said...
  பலபேரு தேடிக்கிட்டு இருக்காங்க பாஸ்...ஒத்துக்கிடறேன்..... நான்தான். இதோ வாங்கிங்க பாராட்டை.
  //

  நாந்தானு கண்டுபிடிச்சிட்டீங்க போல...
  நீங்க கில்லாடி..
  இந்தாங்க NTUC வவுச்சர்...

  ReplyDelete
 17. ஹீ ஹீ,நல்ல வேளை,என்னை இழுக்கலை. :)

  ReplyDelete
 18. உள்ளேன் ஐயா , இரு படிச்சிட்டு வர்றேன்

  ReplyDelete
 19. Blogger ILLUMINATI said...

  ஹீ ஹீ,நல்ல வேளை,என்னை இழுக்கலை. :)
  //

  நினச்சுக்கிட்டு இரு..
  ஒழுக்கமா, தொடர் பதிவ எழுத ஆரம்பிச்சுடு....

  ReplyDelete
 20. @மங்குனி அமைசர் said...
  உள்ளேன் ஐயா , இரு படிச்சிட்டு வர்றேன்
  //

  அடுத்த நண்பன்...(?)..ஹி..ஹி

  ReplyDelete
 21. அட பட்டாப்பட்டி , அன்னைக்கே நீ அந்த துணியில ஒரு சட்டை தச்சு போட்டுருந்தா இந்நேரம் நம்ம நாடு வல்லரசா மாறிருக்கு , விட்டுட்டியே பட்டா ???

  ReplyDelete
 22. ///கடந்த 15 வருடமா முயற்சிபண்ணிக்கிட்டு இருக்கேன்.///

  முயற்சி திருவினை ஆக்கும் , விடாத தக்காளி அவனுகளா இல்ல நீயான்னு பாத்திடுவோம்

  ReplyDelete
 23. //நினச்சுக்கிட்டு இரு..
  ஒழுக்கமா, தொடர் பதிவ எழுத ஆரம்பிச்சுடு....//

  ஹீ ஹீ,உண்டான பதிவ எழுதவே எனக்கு சோம்பேறித்தனமா இருக்கு.இதுல இது வேறயா? :)

  ReplyDelete
 24. மங்குனி அமைசர் said...

  அட பட்டாப்பட்டி , அன்னைக்கே நீ அந்த துணியில ஒரு சட்டை தச்சு போட்டுருந்தா இந்நேரம் நம்ம நாடு வல்லரசா மாறிருக்கு , விட்டுட்டியே பட்டா ???
  //

  யோவ்.. போனதை பற்றி வக்கனையா பேசு..

  இனி....இனி.. என்ன பண்ணலாமுனு ஐடியா குடுயா....

  ReplyDelete
 25. @ ILLUMINATI said...
  ஹீ ஹீ,உண்டான பதிவ எழுதவே எனக்கு சோம்பேறித்தனமா இருக்கு.இதுல இது வேறயா? :)
  //

  ஒரு பீரை போட்டுட்டு எழுது..சுறுசுறுப்பா எழுத வரும்

  ReplyDelete
 26. பட்டாபட்டி.. said...  யோவ்.. போனதை பற்றி வக்கனையா பேசு..

  இனி....இனி.. என்ன பண்ணலாமுனு ஐடியா குடுயா....////


  ஏன்னா ? இன்னைக்கு ஆணி எதுவும் இல்லையா , சாட் ல இருக்க

  ReplyDelete
 27. சொல்ல மறந்துட்டேன் பட்டா , இனி நீ தமிழ்நாட்டுக்கு வந்துடாத , இங்க மதுவிலக்கு அமல்படுத்த போறாங்களாம் , இன்னைக்கு ஹாட் நியுஸ்

  ReplyDelete
 28. ஏன்னா ? இன்னைக்கு ஆணி எதுவும் இல்லையா , சாட் ல இருக்க//

  வேலை ஜாஸ்தி.. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்க..ஹி..ஹி

  ReplyDelete
 29. மங்குனி அமைசர் said...

  சொல்ல மறந்துட்டேன் பட்டா , இனி நீ தமிழ்நாட்டுக்கு வந்துடாத , இங்க மதுவிலக்கு அமல்படுத்த போறாங்களாம் , இன்னைக்கு ஹாட் நியுஸ்
  //


  ரொம்ப வருசமா சொல்லிக்கிட்டி இருக்கானுக..எல்லாம் சும்மா டமாசுக்கு..

  நீ எப்பம்போல..தண்னிய போட்டுக்கிட்டு..ஜாலியா இரு...

  ReplyDelete
 30. //அன்னைக்கே நீ அந்த துணியில ஒரு சட்டை தச்சு போட்டுருந்தா இந்நேரம் நம்ம நாடு வல்லரசா மாறிருக்கு , விட்டுட்டியே பட்டா ???//

  யோவ்,போடாம போனதுக்கே இந்த அலும்பு.அதுல சட்ட மட்டும் போட்டு இருந்தான்னா நாறி இருக்கும்.(டபுள் மீனிங் கிடையாதுங்க.)

  //யோவ்.. போனதை பற்றி வக்கனையா பேசு..

  இனி....இனி.. என்ன பண்ணலாமுனு ஐடியா குடுயா....//

  பேசாம ஜட்டில சட்ட தச்சுக்க மச்சி.. :)

  //ஒரு பீரை போட்டுட்டு எழுது..சுறுசுறுப்பா எழுத வரும்//

  பீரா? அப்டின்னா என்னங்க ?
  கோக் மாதிரியா ?

  ReplyDelete
 31. பீரா? அப்டின்னா என்னங்க ?
  கோக் மாதிரியா ?//

  ஆளாளுக்கு எகத்தாளம் பேசுங்க..
  எனக்கு பயமாயிருருருருருருருர்க்கு....

  ReplyDelete
 32. ILLUMINATI said...


  பீரா? அப்டின்னா என்னங்க ?
  கோக் மாதிரியா ?////


  ;யோவ் பட்டா நம்ம பிரண்டு பீர் பாய் சொல்லறான் , இப்ப அந்த பீர் எங்க இருக்கான் பட்டா ?

  ReplyDelete
 33. பட்டாபட்டி.. said...

  பீரா? அப்டின்னா என்னங்க ?
  கோக் மாதிரியா ?//

  ஆளாளுக்கு எகத்தாளம் பேசுங்க..
  எனக்கு பயமாயிருருருருருருருர்க்கு....////

  ராவா ஒரு கட்டிங் போடு , பயமெல்லாம் ஓடிப்போயிடும்

  ReplyDelete
 34. ங்கொய்யாலே, நான் லேட்டா, இரு படிச்சிட்டு வருரேன்

  ReplyDelete
 35. //ங்கொய்யாலே, நான் லேட்டா, இரு படிச்சிட்டு வருரேன்//

  நி என்னைக்கிதான் சரியான நேரத்துல வந்தே

  ReplyDelete
 36. //ராவா ஒரு கட்டிங் போடு , பயமெல்லாம் ஓடிப்போயிடும்//

  கட்டிங்னா ? எனக்கு ஆஃப், ஃபுல்தான் தெரியும்..ச்செ..பிடிக்கும்

  ReplyDelete
 37. பட்டா நீ இப்பிடிதான் பதில் சொல்லுவன்னுதான் ந கூப்பிடல..முகிலன் இதை படிச்சி நொந்து நுடுல்ஸ் ஆகி இருப்பார்..ஹா..ஹ..

  ReplyDelete
 38. அறிமுகம் பண்றதுலையும் இவ்வளவு லொல்லா,
  1 வாரமா, வலையுலகம் டல்லா இருக்குனு மங்குனி கவலைப்பாட்டாரு...இப்பதா, அன்றாயர் புண்ணியத்துல களை கட்டியிருக்கு..

  ReplyDelete
 39. ஜெய்லானி said...
  //ங்கொய்யாலே, நான் லேட்டா, இரு படிச்சிட்டு வருரேன்//

  நி என்னைக்கிதான் சரியான நேரத்துல வந்தே ///

  நான் சும்மா இருக்குற நேரத்துல, எல்லாரும் ஆனிபுடுங்க போயிடுறேங்க, எனக்கு ஆனினா, எல்லா பன்னாடயும் ஒட்டுக்க வந்து கும்மி அடிக்கிரானுக..

  ReplyDelete
 40. கே.ஆர்.பி.செந்தில் said...
  தலைவரே நித்தியா பிசி ஆயிட்டதால நாமே யாகம் பண்ணாத்தான் உண்டு.. யாரை பலி கொடுக்கலாம்..//

  அண்ணே இந்த இலுமி இல்லைனா ஜெய்லானிய பலி குடுங்கண்ணே புன்னியமா போகும்.

  ReplyDelete
 41. பட்டாபட்டி.. said...

  நம்பாதீங்க.. வதந்திகளை நம்பாதீங்க..
  எனக்கு கோவியார், ஜோசப் பால்ராஜை பார்த்தா...கால் நடுங்கும் பாஸ்...///

  பட்டாபட்டி, சிங்கைல இருக்கிற, ஃபிரண்டை வச்சி உன்னை வீடியோ படம் எடுத்து வச்சிருக்கேன்....

  ReplyDelete
 42. மேலும் பொழுதுபோக்குக்கு ஆரம்பித்த, பட்டாபட்டி ப்ளாக்கை,
  உசுப்பேற்றி, உசுப்பேற்றி... ”போஸ்மார்ட்டம் கிரவுண்ட்” ஆகிய பெருமை , நல்ல நண்பர்களையே(?) சேரும்..///

  அந்த நல்லவங்க எங்கிருந்தாலும், நல்லாருகனுய்யா..

  ReplyDelete
 43. சசிகுமார் said...
  ரைட்டு அடுத்த வீடு பாக்க வேண்டியது தான்///

  வந்தது வந்துட்டீக, இருந்து காப்பி சாப்டுட்டு போங்க...

  ReplyDelete
 44. அடச்சே,
  சிங்கிலா ஆடவிட்டுட்டு எல்லோரும் போய்ட்டானுக...நானும் ஆனி புடிங்கிட்டு அப்புறமா, வர்றேன்..

  ReplyDelete
 45. ஒரு பய புள்ளையும் நேர்மையா பதிலச் சொல்லமாட்டன்னுதே:))

  ReplyDelete
 46. பட்டைய கிளப்பும் பட்டாபட்டி வாழ்க...

  ReplyDelete
 47. //சாணியக்கூப்பிட்டு, வாசல் தெளிக்கவும் ஐடியா வெச்சிருக்கேன். ///

  கிராணைட்டு போட்ட உங்க வீட்டுலயும் சாணிதானா??? என்ன மொடும சார் இது????

  ReplyDelete
 48. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... செம காமெடி!

  ReplyDelete
 49. @ஜெய்லானி said...
  பட்டா நீ இப்பிடிதான் பதில் சொல்லுவன்னுதான் ந கூப்பிடல..முகிலன் இதை படிச்சி நொந்து நுடுல்ஸ் ஆகி இருப்பார்..ஹா..ஹ..
  //


  என்ன தவம் செய்துவிட்டேன்..!!!!
  ( இனிமேல கூப்பிடமாட்டாரு?...அய்யோ..அய்யோ)

  ReplyDelete
 50. @Jey said...
  பட்டாபட்டி, சிங்கைல இருக்கிற, ஃபிரண்டை வச்சி உன்னை வீடியோ படம் எடுத்து வச்சிருக்கேன்....
  //

  இன்னொரு அய்யோ..அய்யோ..
  என்னையா?...

  அந்த கர்மம் என்னதுக்கு?..

  ReplyDelete
 51. @வானம்பாடிகள் said...
  ஒரு பய புள்ளையும் நேர்மையா பதிலச் சொல்லமாட்டன்னுதே:))
  //

  நான் சொன்னதெல்லாம் உண்மைதான் பாஸ்..
  எங்க வேணாலும் தேங்காய் உடைக்க ரெடியாயிருக்கேன்..ஹி..ஹி

  ReplyDelete
 52. @rk guru said...
  பட்டைய கிளப்பும் பட்டாபட்டி வாழ்க...
  //

  வாங்க அப்பு..

  ReplyDelete
 53. @ஜூனியர் தருமி said...

  கிராணைட்டு போட்ட உங்க வீட்டுலயும் சாணிதானா??? என்ன மொடும சார் இது????

  //

  ஓ..அந்த பிரச்சனை இருக்கா?..
  விடுங்க..
  கட்சி மேலிடத்தில(?) கலந்து பேசிட்டு...நல்ல முடிவா சொல்றேன் ..

  ReplyDelete
 54. Chitra said...

  ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... செம காமெடி!

  //
  போங்க மேடம்..இது ரொம்ப சீரியஸான பதிவு...ஹி..ஹி

  ReplyDelete
 55. படிக்கிறதுக்கு முன்னாலயே கண்டிப்பா எங்கயாவது சாணி தெளிச்சி நித்யமா கோலம் போடுவீஙன்னு நினச்சேன். பட்டா என் எண்ணத்தை வீணாக்கல!

  கலக்கல் பட்டா!

  பிரபாகர்...

  ReplyDelete
 56. பிரபாகர் said...

  படிக்கிறதுக்கு முன்னாலயே கண்டிப்பா எங்கயாவது சாணி தெளிச்சி நித்யமா கோலம் போடுவீஙன்னு நினச்சேன். பட்டா என் எண்ணத்தை வீணாக்கல!

  கலக்கல் பட்டா!
  //

  வாங்க சார்.. சிங்கையிலையா.. இல்ல... இன்னும் சென்னையில இருக்கீங்களா?...

  ReplyDelete
 57. //வாங்க சார்.. சிங்கையிலையா.. இல்ல... இன்னும் சென்னையில இருக்கீங்களா?...
  //
  சிங்கை வந்தாச்சு பட்டா, ரெண்டு வாரம் ஆச்சு!

  பிரபாகர்...

  ReplyDelete
 58. நல்ல வேலை கடைசியில் யார் பெயரும் இல்லை

  ReplyDelete
 59. Blogger சௌந்தர் said...

  நல்ல வேலை கடைசியில் யார் பெயரும் இல்லை
  //

  அடுத்த ஆள் மாட்டிக்கிச்சு..ஹா.ஹா..
  வாழ்த்துக்கள் சௌந்தர்

  ReplyDelete
 60. பட்டாபட்டி.. said...எதுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 61. சௌந்தர் said...

  பட்டாபட்டி.. said...எதுக்கு வாழ்த்துகள்
  //

  பதிவைத் தொடரத்தான்.. ஹா.ஹா

  ReplyDelete
 62. நான் எழுதின மறுபடி உங்களையே தொடர் எழுத சொல்வேன்

  ReplyDelete
 63. Blogger சௌந்தர் said...

  நான் எழுதின மறுபடி உங்களையே தொடர் எழுத சொல்வேன்
  //

  ஆகா..அது வேறயா.. இதுக்கே என்னால முடியலே..

  சரி பாஸ்...அப்ப பேசித்தீர்த்துக்கலாம் .ஹி..ஹி

  ReplyDelete
 64. நம்ம தேவா அண்ணன் எழுதுறார் அடுத்த தொடர்..... ஹா ஹா ஹா

  ReplyDelete
 65. கலக்கல் பட்டா..

  ReplyDelete
 66. @@@மேலும் பொழுதுபோக்குக்கு ஆரம்பித்த, பட்டாபட்டி ப்ளாக்கை,
  உசுப்பேற்றி, உசுப்பேற்றி... ”போஸ்மார்ட்டம் கிரவுண்ட்” ஆகிய பெருமை , நல்ல நண்பர்களையே(?) சேரும்..//அந்த நல்லவர்களை, இத்தொடரைத் தொடர அழைக்கிறேன்
  கீழே நான் கிறுக்கியிருப்பது.....அந்த நல்ல நண்பர்களுக்காக..

  பேரைச்சொல்லி உங்களை இழுத்துவிட விரும்பவில்லை...
  மனச்சாட்சிப்படி, நீங்களா ஒத்துக்கிட்டு....ஒழுக்கமா..உண்மையா..மெய்யா..விவரமா..நீங்களா எழுதினா....... நல்லாயிருக்கும்..
  இல்ல ஆயுத முனையில, எழுதவைக்கவேண்டி வரும் ...சொல்லிப்புட்டேன் மக்கா...///

  ஹி..ஹி...உத்தரவு எசமான்...! :)

  ReplyDelete
 67. Blogger முகிலன் said...

  கலக்கல் பட்டா..
  //

  வாங்க பாஸ்...

  ReplyDelete
 68. இல்ல ஆயுத முனையில, எழுதவைக்கவேண்டி வரும் ...சொல்லிப்புட்டேன் மக்கா...///

  ஹி..ஹி...உத்தரவு எசமான்...! :)
  //

  யோவ்..பதிவ போட்டுட்டு வந்து உத்தரவு கேக்குறீயே.. எந்த ஊர் நியாமையா இது?

  ReplyDelete
 69. 15 வருஷமாவா டிரை பண்றீங்க...
  சீக்கிரம் கிளம்பிட வேண்டியதானே....
  அங்கே போனாலும் தொடர்ந்து எழுதுங்க பட்டாபட்டி அண்ணா...

  ReplyDelete
 70. //( இதில் உள்குத்து எதுவுமில்லை என தமிழக அரசின் மேல் ஆணையாக கூறுகிறேன்..)//

  தலைவர் மேல ஆணை உட்டிருந்தா நல்லாயிருந்திருக்கும்....

  ReplyDelete
 71. ஐயோ முடியாலப்பா..

  சிரிச்சு சிரிச்சு.

  ReplyDelete
 72. hahaha கலக்கல் தல ...நல்லா சிரிச்சேன்.... எதுககும் நித்தி யோட தரிசனம் வாங்குங்க...

  ReplyDelete
 73. சே நம்ம ஊர்ல இல்லைன்ன உடனே என்னென்ன நடக்குது பாருங்க!

  ReplyDelete
 74. எலேய் வெளி...இன்னிக்கு உன் பிளாகுலயே கும்மிக்கிட்டு இருந்ததால இங்கன வந்து பார்க்கவே இல்லையேலே...!

  இலுமி பயலே...ஒரு ஹின்ட் குடுத்துருந்தீன்னா...இங்கிட்டு ஏகப்பட்ட ஆடு சுத்திட்டு இருந்திருக்குது! இங்கனேயே போட்டிருக்கலாமில்ல,,!

  பட்டாப்ட்டி ஒரு பதிவுலக பன்(__________)னு (கோடிட்ட இடத்தை இஷ்டம் போல நிரப்பிக் கொள்க ) புரூவ் பண்ணிட்டாம்லே!

  ReplyDelete
 75. எலேய் வெளி...இன்னிக்கு உன் பிளாகுலயே கும்மிக்கிட்டு இருந்ததால இங்கன வந்து பார்க்கவே இல்லையேலே...!

  இலுமி பயலே...ஒரு ஹின்ட் குடுத்துருந்தீன்னா...இங்கிட்டு ஏகப்பட்ட ஆடு சுத்திட்டு இருந்திருக்குது! இங்கனேயே போட்டிருக்கலாமில்ல,,!

  பட்டாப்ட்டி ஒரு பதிவுலக பன்(__________)னு (கோடிட்ட இடத்தை இஷ்டம் போல நிரப்பிக் கொள்க ) புரூவ் பண்ணிட்டாம்லே!

  ReplyDelete
 76. :o).. அட அட... ரொம்பப் புடிச்சிருக்கு உங்க நேர்மை ..

  ReplyDelete
 77. @Soonya said...
  15 வருஷமாவா டிரை பண்றீங்க...
  சீக்கிரம் கிளம்பிட வேண்டியதானே....
  அங்கே போனாலும் தொடர்ந்து எழுதுங்க பட்டாபட்டி அண்ணா...
  //

  ஹா.ஹா..என்னை வரவேண்டாமுனு , எங்கப்பா, யாகம் வளர்க்கிறதா கேள்விப்பட்டேன்...

  ReplyDelete
 78. @க.பாலாசி said...
  //( இதில் உள்குத்து எதுவுமில்லை என தமிழக அரசின் மேல் ஆணையாக கூறுகிறேன்..)//
  தலைவர் மேல ஆணை உட்டிருந்தா நல்லாயிருந்திருக்கும்....
  //

  அரசுவையும் தலைவரையும் பிரிச்சு பேசக்கூடாது தல..ஹி..ஹி

  ReplyDelete
 79. @அரைகிறுக்கன் said...
  ஐயோ முடியாலப்பா..
  சிரிச்சு சிரிச்சு.
  //

  என்ன பாஸ் இப்படி சொல்லிப்புட்டீங்க....
  சீரியஸ் பதிவு இது...ஹி..ஹி

  ReplyDelete
 80. @நாஞ்சில் பிரதாப் said...
  hahaha கலக்கல் தல ...நல்லா சிரிச்சேன்.... எதுககும் நித்தி யோட தரிசனம் வாங்குங்க...
  //

  ஆமா சார்.. குண்டத்தில ஊற்ற, நெய்க்கு பதிலா, பெட்ரோல்கூட ரெடிபண்ணிட்டேன்.

  பார்ப்போம்

  ReplyDelete
 81. @பன்னிக்குட்டி ராம்சாமி said...
  சே நம்ம ஊர்ல இல்லைன்ன உடனே என்னென்ன நடக்குது பாருங்க!
  //

  அய்.. நம்ம பன்னி சார்...
  என்ன பாஸ் .. இருக்கீங்களா.. இல்ல தடா..பொடாவுல உள்ள போட்டுட்டாங்களா?

  ReplyDelete
 82. @Rettaival's said...
  எலேய் வெளி...இன்னிக்கு உன் பிளாகுலயே கும்மிக்கிட்டு இருந்ததால இங்கன வந்து பார்க்கவே இல்லையேலே...!
  இலுமி பயலே...ஒரு ஹின்ட் குடுத்துருந்தீன்னா...இங்கிட்டு ஏகப்பட்ட ஆடு சுத்திட்டு இருந்திருக்குது! இங்கனேயே போட்டிருக்கலாமில்ல,,!
  பட்டாப்ட்டி ஒரு பதிவுலக பன்(__________)னு (கோடிட்ட இடத்தை இஷ்டம் போல நிரப்பிக் கொள்க ) புரூவ் பண்ணிட்டாம்லே!
  //

  பன்னாடைனு” நேராவே சொல்லியிருக்கலாம் நீ..

  ReplyDelete
 83. @கலகலப்ரியா said...
  :o).. அட அட... ரொம்பப் புடிச்சிருக்கு உங்க நேர்மை ..
  //

  சொல்வதை செய்வோம்..செய்வதை சொல்வோம்..ஹி..ஹி

  ReplyDelete
 84. இனிதான் ஏதாவது செய்யனும். நித்தியானந்த்தை வச்சு யாகம் பண்ணினா,
  பிச்சுக்க சான்ஸ் இருக்கா?//////

  சார் உங்கவேலை முடிஞ்சதும் அப்படியே டெல்லி அனுப்பிவையுங்க...நானும் கொஞ்சம் பிச்சுக்க வச்சிக்கிறேன்...

  எத்தனை நாளைக்குத்தான் தனியாக ஈ ஓட்டுவது....

  பதிவு..வழக்கம்போல படித்தேன்..ரசித்தேன் சிரித்தேன்....

  ReplyDelete
 85. குசும்பு புடிச்ச ஆளுயா நீ... நீயே ரஞ்சிதா தலைமையில ஒரு ஆசிரமம் ஆரம்பிக்கலாம். சாணிய விட்டு... ஐய்யா சாமி-னு நிதி கூட வசூலிக்கலாம்.

  ReplyDelete
 86. //பலபேரு தேடிக்கிட்டு இருக்காங்க பாஸ்//

  அதுல நானும் ஒருத்தன்...

  ReplyDelete
 87. //கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு
  தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
  //

  என்ன பட்டு... தூக்கு தண்டனை கைதிகிட்ட கேக்குற மாதிரி இருக்கு...

  ReplyDelete
 88. //மேலும் பொழுதுபோக்குக்கு ஆரம்பித்த, பட்டாபட்டி ப்ளாக்கை,
  உசுப்பேற்றி, உசுப்பேற்றி... ”போஸ்மார்ட்டம் கிரவுண்ட்” ஆகிய பெருமை , நல்ல நண்பர்களையே(?) சேரும்..
  ///

  நானெல்லாம் "நல்ல" நண்பன் கிடையாதுப்பா... :-)))

  ReplyDelete
 89. பதிவுலகத்துல நீ ஒரு பன்ச்சிங் ஸ்டார்னு சொல்ல வந்தா உண்மையை போட்டு உடைச்சிட்டியே பட்டு!

  சரி போகுது விடு.... உனக்கு என்ன பட்டம் கொடுக்கலாம்...

  அல்டிமேட் பதிவர்...!
  பதிவுலக இளைய தளபதி, சின்ன தளபதி, குட்டித் தளபதி...!
  ஆங்.....மாப்ள...நம்ம ஊர்ல எவெர்கிரீன் புரட்சி தான்!

  அதனால் இனிமேல் நீ பிரபல பதிவர் வெளியூர்காரன் மாதிரி ....

  புரட்சி பதிவர் பட்டாபட்டி என்று அழைக்கப் படுவாய்!

  புரட்சிக்கு விளக்கம் கேட்கும் அன்பர்கள் தயவு செய்து ஜெயலலிதா,விஜயகாந்த்,எஸ்.எஸ்.ஆர் (விஜயகுமாரியை கல்யாணம் செய்து புரட்சி செய்தவர்) விஷால் ( தக்காளி புரட்சின்னா இவன் பண்ணதுதான்யா புரட்சி..) ஆகியோரிடம் விளக்கம் கேட்டுவிட்டு , பிறகு இங்கே விளக்கம் கேட்கவும்!

  ReplyDelete
 90. பதிவுலக சூப்பர்ஸ்டார் பட்டமும் , உலகப்பதிவர் (உலக நாயகன் மாதிரி யா...) ஆஸ்கர் பதிவர் போன்ற பட்டங்களை நான் எனக்காகவே ரிசர்வ் செய்திருக்கிறேன். யாராவது நீங்களே உங்களை அவ்வாறு எப்போதாவது அழைப்பது தெரிந்தால் காப்பிரைட் பிரச்சினையில் மாட்டிக் கொள்வீர்கள் என எச்சரிக்கிறேன்!

  ReplyDelete
 91. அதனால் இனிமேல் நீ பிரபல பதிவர் வெளியூர்காரன் மாதிரி ....

  புரட்சி பதிவர் பட்டாபட்டி என்று அழைக்கப் படுவாய்!
  //

  அதுமட்டும் வேணாமய்யா..
  சுய புத்திய விட்டுட்டு...
  ஒண்ணு உடன்பிறப்பு சொன்னபடி கேட்கனும்..
  இல்ல..கட்டினதோ இல்ல சேர்த்துக்கிட்டதோ சொன்னபடி கேட்கனும்.

  இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு நாண்டுக்கிட்டு சாகலாம்...ஹி..ஹி
  அதனால..அதனால.. எனக்கு புரட்(சீ) பட்டம் வேணாம்

  ReplyDelete
 92. உலகப்பதிவர் (உலக நாயகன் மாதிரி யா...) ஆஸ்கர் பதிவர் போன்ற பட்டங்களை நான் எனக்காகவே ரிசர்வ் செய்திருக்கிறேன்
  //

  ஏன் .. எனக்கு ஒண்ணு கொடுத்தா குறைஞ்சா போயிடும்...

  பார்த்து பண்ணு...

  ReplyDelete
 93. வந்த வேலை முடிஞ்சுடுச்சு இரு பதிவை படிச்சுட்டு வரேன்

  ReplyDelete
 94. பட்டாபட்டி.. said...

  @கிரி said...
  டாப்பு பாஸு!
  அட, நம்ம பெற சொல்லுவீங்கன்னு பாத்தேன். இப்பிடி எழுத விடாம பண்ணிட்டீங்களே!
  //

  எழுதுங்க பாஸ்..
  யாரு என்ன சொல்லுவாங்க?..

  மிரட்டினா, பட்டாபட்டி மைதானத்துக்கு அனுப்பிவையுங்க..
  நாங்க பார்த்துக்கிறோம்//////////

  அதானே அதுக்கு தானே காத்துக்கிட்டு இருக்கோம்

  ReplyDelete
 95. இந்த பதிவை தொடர் பதிவாக எழுத இலுமி அவர்களை ப.மு.க.முடிவு செய்துள்ளது

  ReplyDelete
 96. ரெட்டை அந்த சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு குடு உனக்கு நல்ல ஆடா பார்த்து பலி குடுக்குறேன்

  ReplyDelete
 97. நல்ல வேளை நான் நல்லவன் இல்லை

  ReplyDelete
 98. என்னங்க வால்ஸ் 100 போடா மறந்துட்டிகளே

  ReplyDelete
 99. //ஆங்....சம்பாரிப்பது?.. இதையும் முயற்சி செய்தேன்.. ஆனா யாரும் வாங்க
  வரலே.. ///

  என்ன ராஜா சொல்றே???????. எழுத ஆரம்பிச்ச ஒரே மாசத்துல சென்னைல புது வீ வாங்குற அளவு நான் சம்பாரிச்சிட்டேன், நீ மூத்த பதிவர், எனக்கெல்லாம் ”குரு” ஒன்னும் பணம் பண்ணலையா?!!!!, ரொம்ப ஏமாளியா இருப்பே போலயே???..

  ( பதிவுலக கணவான்களே, நீங்களும் என்னை மாதிரி சம்பாரிச்சி சென்னைல வீடு கட்டனுமா?, ஆளுக்கு ரூ 1000/ என்னோட அக்கவுண்டுக்கு அனுப்பிவைங்க , நான் அந்த சீக்ரெட் என்னானு சொல்லித்தர்றேன்..)

  ReplyDelete
 100. பட்டா பட்டின்னு ஒரு தமிழ்ப் படம் வருதே. நீங்கதான் ஹீரோவா

  ReplyDelete
 101. ஹை .. இன்னைக்கும்வடை சுட்ட எண்ணெய் எனக்குத்தான்...(எப்பப் பாத்தாலும் எனக்கு முன்னாடி நூறு பேர் இருக்காங்கப்பு..

  ReplyDelete
 102. பதிவு அருமை. இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
  மேலும் இதுபோன்ற பதிவுகளை படிக்க..

  http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.html

  ReplyDelete
 103. என்னப்பா ஆளாளுக்கு பேட்டி குடுக்க ஆரம்புசுட்டீங்க..
  பட்டாப்பட்டி ஸ்டைலேதனி தான்..
  அது சரி.. பட்டாப்பட்டி படத்துல நீங்க நடிக்கிரீங்கனு சொல்றது உண்மை தானா?

  ReplyDelete
 104. கடைசி பதில படிக்கிற மட்டும் சிரிப்பை அடக்க முயற்ச்சித்து முடியாமல் சிரித்துவிட்டேன். உங்க சிரிப்புணர்வு அதீதமானது.

  ReplyDelete
 105. கடைசி பதில படிக்கிற மட்டும் சிரிப்பை அடக்க முயற்ச்சித்து முடியாமல் சிரித்துவிட்டேன். உங்க சிரிப்புணர்வு அதீதமானது.

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!