Pages

Wednesday, April 11, 2012

வலிக்குது....

நானும் பொறுத்து பொறுத்து  பார்த்தேன்....
அசிங்கபடுத்துனீங்க..
கேவலபடுத்துனீங்க...
அப்பறம் எங்கள பார்க்கற எடத்துல எல்லாம் வெரட்டி வெரட்டி கொம்மட்டுலையே குத்துனீங்க...அப்ப கூட எங்களுக்கு சூடு சொரணை அவ்ளவா இல்லாததனால அதையும் பொறுத்துகிட்டோம்...

ஆனா, எப்போ மெட்ராஸ்ல துணி கடை இருந்தாதான உன் தலைவன் தங்கச்சி கல்யாணத்துக்கு துணி எடுக்க வந்துட்டு வில்லனுகள அழிப்பான்னு, அஜித் பேன்ஸ் எல்லாம் சேர்ந்து அரசாங்கத்துகிட்ட சொல்லி இருக்கற துணி கடைய பூராத்தையும் மூடுனீங்களோ...இனிமே பொறுத்துக்க மாட்டேன்..வந்து ஸ்பாட்ல எறங்கிட்டான் இந்த வெளியூர்க்காரன்..

என் தங்க தளபதி விஜய்க்க்காகவும், மண்டைல மூளை இல்லன்னாலும் மனசு பூரா பாசத்தோட இருக்கற என் பங்காளிக விஜய் ரசிகர்களுக்காகவும் அடுக்கடுக்கான பாய்ன்ட்டுகளோட அற்புதமா களமிரங்கிட்டாண்டா இந்த முரட்டு காளை..! ( விடு விடு..எங்க கூட்டமே இப்டிதான்...முட்டுசந்துல ஒன்னுக்கடிக்கரதுக்கு கூட எதுனா பஞ்ச் டயலாக் அடிச்சிகினேதான் போவோம்..நீ கண்டுக்காம அடுத்த பேராவுக்கு போ...)

உங்கள எங்களுக்கு புடிக்காதுதான்..இருந்தாலும் மங்காத்தா படத்துல உன் தல சொன்ன ஒரே வார்த்தைக்கு கண்டி, இதுநாள் வரை நான் அத பாலோ பண்ணிகினுகிறேன்...! (ரெண்டு சரக்க மிக்ஸ் பண்ணி குடிக்காதன்னு...) அந்த பெரிய மனுசத்தனம் உங்கள்ட்ட ஏண்டா இல்ல..அதென்னடா எங்க போனாலும் அடிக்கறீங்க...எத்தன பேர்ரா இருக்கீங்க நீங்க...? விஜய் ரசிகனா இருக்கறது அவ்ளோ பெரிய குத்தமாடா...?

ஆ ஊன்னா ஒரே கதைல எத்தன படத்துலடா நடிப்பான் உன் தலைவன்னு எகத்தாளம் வேற பேசுறீங்க..நான் உங்கள்ட்ட ஒன்னு கேக்குறேன்..நீங்கல்லாம் ஒரே கம்பெனில பத்து வருஷம் வேலை பார்க்கறதில்ல..அதே மாதிரிதாண்டா இதுவும்...! கடந்த பத்தாண்டு காலமா ஊர்னாட்லேர்ந்து கெளம்பி வந்து மெட்ராஸ் வில்லனுகள அழிக்கரதுன்னா சும்மா இல்லடா தம்பி...பஸ் சீசன் டிக்கெட் எடுத்தே சொத்து அழிஞ்சிரும்...இருந்தும் என் தலைவன் அதையே காலகாலமா அலுத்துக்காம செஞ்சுக்கிட்டுருக்கான்...நீ அதுக்கே அவன கோவில் கட்டி கும்புடணும்...

இப்பல்லாம் என் தலைவன் எந்த ஊர்ல பஸ்ல ஏறுனாலும் கண்டக்டர் கேக்குறாராம்...என்ன சார் ஊருக்கு போறீங்க போலருக்கு...என்ன வில்லன அழிக்கவான்னு....அந்த அளவுக்கு உலகமெங்கும் பரவிருக்கற என் தலைவனோட புகழ் உனக்கு புரியலையேங்கரதுதாண்டா எனக்கு ரொம்ப சங்கட்டமா இருக்கு..!

அப்பறம் கேக்கனும்னு நெனச்சேன்...அதென்னடா என் தலைவன இண்டர்நெட்ல பிச்சைகாரன் மாதிரி போட்டோஷாப்ள போட்டு கேவலபடுத்துறீங்க..உங்களுகெல்லாம் மனசாட்சியே இல்லையா...என் தலைவன சைட் போஸ்ல ஒருக்களிச்சு நிக்க சொல்லி உக்காந்துகிட்டு பாருங்கடா...சும்மாவே அப்டித்தாண்டா இருப்பாரு என் தங்க தளபதி...அவர போய் போட்டோஷாப்ள எல்லாம் போட்டு போட்டோஷாப்ப அசிங்கபடுத்துரீங்களே., நீங்கல்லாம் மனுசன்தானா...? என்னை விடு...இந்த போட்டோவ ஒரு பிச்சகாரனோ இல்ல சந்து அங்கிளோ பார்த்தா எவ்ளோ பீல் பண்ணுவாங்க...பிச்சகாரன்னா அவ்ளோ கேவலமா போச்சா உங்களுக்கு...? இத நிறுத்திக்கங்க மொதல்ல.. !


வெரைட்டி வெரைட்டிங்கறீங்க..பொறந்ததுலேர்ந்து இட்லிக்கு மொளகா பொடிதானடா தொட்டுகிட்டு திங்கறீங்க...வெரைட்டியா இருக்கட்டுமேன்னு எவனாச்சும் மூக்கு பொடிய தொட்டு தின்னு பாருங்களேன்...! முடியாதுள்ள...அந்த மாதிரிதாண்டா என் தலைவனுக்கும்...நீ நக்கல் அடிக்கலாம்...எல்லாரும் வெரைட்டியா நடிக்கறாங்க...ஆனா, உன் தளபதி மட்டும் என் ஹேர் ஸ்டைல கூட மாத்தாம நடிச்சு உசுர எடுக்கராருன்னு..உன்ன பார்த்து நான் ஒன்னு கேக்குறேன்..தெய்வ திருமகன்ல விக்ரம் பண்ண ரோல என் தளபதி பண்ணி அத வீட்ல உக்காந்து குடும்பத்தோட டிவில பார்த்தா எத்தன புள்ளைகளுக்கு மூளைக்காய்ச்சல் வரும்..எத்தன பேர் வீட்ல பிக்சர் டியுப் வெடிக்கும்..இதெல்லாம் யோசிச்சியா நீ..? பிரெண்ட்ஸ் பட க்ளைமாக்ஸ்ல விஜயோட ஆக்டிங் பார்த்துட்டு என் பிரெண்ட் மூணு நாள் ஆபிசுக்கு லீவ் போட்டுட்டு சிரிச்சிகிட்ருந்தாண்டா...அவ்ளோ பெரிய நடிப்பு சக்கரவர்த்தி ரிஸ்க் எடுக்காம இருக்கறது உங்கள காப்பாத்ததான்னு ஏண்டா புரிஞ்சுக்க மாட்றீங்க...!

அடுத்தது கவ்தம் மேனன் படத்துல மட்டும் என்ன கதைன்னு நெனைக்கற...அமெரிக்கால நடக்கற ஒபாமா தங்கச்சியோட கல்யாணத்துக்கு துணி எடுக்கறதுக்காக நியூயார்க் போறாரு என் தளபதி...அப்போ நியூயார்க்ல இருக்கற வில்லன் ஒபாமா தங்கச்சிய கைய புடிச்சு இழுத்தர்றான்..!.ஒபாமா தங்கச்சிய எவனோ ஒருத்தன் கைய புடிச்சு இழுக்கரதுக்கும் உன் தளபதிக்கும் என்னாடா சம்பந்தம் நார பயலேன்னுதான கேக்க வர்ற...! போடா லூசு...இதுவரைக்கும் எந்த படத்துலடா நாங்க லாஜிக்கொட படம் எடுத்துருக்கோம்...கேக்றான் பாரு கேள்வி.கேனயாட்டம் ..கதைய மேல கேள்றா பன்னாட..கைய புடிச்சு இழுத்த அடுத்த செகேன்ட் வெக்கிறோம் ஒரு பஞ்ச் டயலாக...தங்கச்சி யாரோடதுங்கறது முக்கியம் இல்ல..கைய புடிச்சு இழுக்கரதுதான் முக்கியம்னு சொல்லிட்டு கலிபோர்னியால இருக்கற ஒரு டீ கடைல வெச்சு வில்லன வெளு வெளுன்னு வெளுத்து......டேய் டேய் டேய்..ஏண்டா இப்ப கொட்டாவி விட்ரா...இருடா படம் வரட்டும்..அப்பறம் விட்டுக்கலாம்....!


கடைசியா ஒரு விஷயம் உன்ட்ட வெக்கத்த விட்டுட்டு சொல்றேன்...எங்களுக்கு இதான் வரும்...வெச்சுக்கிட்டு வஞ்சகம் இல்ல...நடிக்க தெரிஞ்சா நடிச்சிருவோம்..வரல..அதனால வில்லனுகள அழிச்சு வியாபாரம் பண்ணிக்கிட்டுருக்கோம்..!


வேணா என் தலைவன்ட்ட சொல்லி அடுத்த படத்துல மெட்ராஸ்லேர்ந்து கெளம்பி போய் கொட்டாம்பட்டில இருக்கற பண்ணையார் வில்லன அழிக்க சொல்றேன்..!

ஆனா ஒரு கண்டிசன்...!

"நீங்க மொதொள்ள மெட்ராஸ்ல மூட சொன்ன துணி கடை எல்லாத்தையும் தொறந்து விட சொல்லுங்க...!"


இவன்
வெளியூர்க்காரன்


( ஒரே ஒருத்தர் தான் இதுவரைக்கும் புலனாய்ய்ய்ய்ய்ய்ய்ந்து...” வெளியூரும் நானும் ஒருத்தனு “ கண்டுபிடிச்சிருக்கார்... அவருக்காக இந்த பதிவு..ஆக்காங்...)

36 comments:

 1. முடியல வலிக்குது

  ReplyDelete
 2. எம்மாம் குத்துய்யா..

  ReplyDelete
 3. ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோணே .....

  ReplyDelete
 4. ஒரே ஒருத்தர் தான் இதுவரைக்கும் புலனாய்ய்ய்ய்ய்ய்ய்ந்து...” வெளியூரும் நானும் ஒருத்தனு “ கண்டுபிடிச்சிருக்கார்... அவருக்காக இந்த பதிவு..ஆக்காங்..///

  இந்த உண்மையைக் கண்டறிந்த விஞ்ஞானி யாரோ?

  ReplyDelete
 5. ச்சே..
  காமன்டத்தான் காப்பி பேஸ்ட்டு போடுவாய்ங்க... போச்ட்டையே காப்பி பேஸ்ட்டு போட்ட தல, "நீ எங்கியோ போயிட்ட!!!"

  ReplyDelete
 6. அண்ணனுகளா.. வணக்கம்.

  ReplyDelete
 7. //Jey said... 6
  அண்ணனுகளா.. வணக்கம்.
  ////

  யோவ் பட்டா... உனக்கு வயசாயிடுச்சின்னு இந்தப் புள்ளை சொல்லாம சொல்லுது பாத்தியா?

  ReplyDelete
 8. ரொம்ப நாளாச்சுன்னாலும் செம எண்ட்ரி:)))

  ReplyDelete
 9. ▼ April (1)
  வலிக்குது....

  ► January (1)

  உங்க காலண்டர்ல பெப்ரவரி மார்ச் இல்லிங்களா சார்?

  ReplyDelete
 10. பார்த்தேன், படித்தேன், ரசித்தேன். ஆனா தலைதான் ஒரு மாதிரியா சுத்துது.

  ReplyDelete
 11. ண்ணா...!வணக்கம்ண்ணா! கூடங்கொளம் அனுஒலை மேல தீவரவாதி ரயிலு வுடரறத எங்க தளபதி ஒன்டிக்கையால தடுக்கறத வுட்டுட்டிங்கண்ணா....

  ReplyDelete
 12. ண்ணா...வணக்கம் ண்ணா...

  ReplyDelete
 13. டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
  ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!/////

  நீங்க மனோவா....?????

  ReplyDelete
 14. ஒரு நாளைக்கு இல்லனா ஒரு நாளைக்கு விஜய் நேராவே வந்து உங்களை கடிச்சி வச்சிட்டு போக போறான ...

  ReplyDelete
 15. பட்டா...நீங்க ரோம்பபபபபபபப.....வயசானவரோ...?????

  ஏன்னா நாங்க இன்னும் டாம் & ஜெர்ரி-யையேபார்த்து முடிக்கலை....
  அதனால நீங்க யார சொல்லுரீங்கன்னு புரியலை....

  ReplyDelete
 16. யோவ்! நீதான் டோண்டுங்கிறதையும் எவனாவது கண்டுபுடிச்சுட்டானா?

  ReplyDelete
 17. ச்சே ச்சே ..,எப்படி போட்டாலும் கண்டு பிடிச்சிராங்கலே !!
  இப்படிக்கி
  பட்டாபட்டி என்ற கொசக்சி பசபுகழ்

  ReplyDelete
 18. // கொசக்சி பசபுகழ் said... 18
  ச்சே ச்சே ..,எப்படி போட்டாலும் கண்டு பிடிச்சிராங்கலே !!
  இப்படிக்கி
  பட்டாபட்டி என்ற கொசக்சி பசபுகழ்
  ///

  டோய் நரி, நீ எங்க இந்தப்பக்கம்?
  ஒ.. அப்ப நரியும் பட்டாவும் ஒண்ணா?
  :-)

  ReplyDelete
 19. நல்லவேள நானும் பட்டாபட்டின்னு யாருக்கும் டவுட்டு வரல.......... அதுனால இந்த போஸ்ட்ட நானும் காப்பி பண்ணி போட்டுக்கிறேன்...........

  ReplyDelete
 20. நாங்கள்லாம் எப்பவோ விமர்சனமே எழுதிட்டோம்.... அண்ணன் பொறுமையா படத்த முடிச்சிட்டு வரட்டும்......
  டுப்பாக்கி ஒரு உன்னத அனுபவம்

  ReplyDelete
 21. ரசிக்கக்கூடியா இருந்திச்சு!

  ReplyDelete
 22. பட்டாபட்டி பெரியப்பா! இன்னா நீங்க மொத தடவையா உங்க பிளாக்குல கொமண்டு போட வந்திருக்கேன், அருவாவ தூக்குறியளே!

  அதுசரி , இந்த பதிவோட நெஜமான ஆத்தர் யாரு? வெளியூர்க்காரனா? பட்டாபட்டியா? நம்ம பன்னிகுட்ஸ் ஆ?

  ReplyDelete
 23. http://abiappa.blogspot.in/2012/04/blog-post_26.html

  யோவ்... இங்க வந்து கொஞ்சம் %^&*ல சிரிச்சிட்டுப் போ!!!

  ReplyDelete
 24. வெளங்காதவன்™ said... 24

  http://abiappa.blogspot.in/2012/04/blog-post_26.html

  யோவ்... இங்க வந்து கொஞ்சம் %^&*ல சிரிச்சிட்டுப் போ!!!
  //

  ஹா.ஹா.. படிச்சேன்..படிச்சேன்.. கூட கோழியும் சேர்ந்து கூவிக்கிட்டு இருக்கு..

  முதல்ல... புளியங்கொம்புக்கு உயிர் இருக்கானு பார்க்கட்டும் .. அப்பால புடிக்கலாமா.. இல்லையானா .. அவங்க முடிவ பண்ணுவாங்க...!!!

  :-)))))


  யோவ். ராஜதந்திரம்னா இன்னானு உனக்கு தெரியுமா?..

  அதாவது.. மதுரைய அதுக்கும், சென்னைய இதுக்கும் கொடுத்துட்டு..

  டெல்லிய.. அதாமா.. திகார் பக்கமா இருக்கே.. அதை.. அதுக்கு கொடுக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு..

  கடைசியா பார்த்தா.. விட்ட குறை.. தொட்டகுறைனு.. முத்துனு இன்னொரு பீஸ் இருக்காம்.. அதுக்கு இலங்கைய பேசி..குடுக்கமாம்னு பெரிசு முடிவுபண்ணியிருக்கு..

  பாரேன்.. சீக்கிரம் நடக்கும்..

  ReplyDelete
 25. @கிஷோகர் IN பக்கங்கள் said... 23
  அதுசரி , இந்த பதிவோட நெஜமான ஆத்தர் யாரு? வெளியூர்க்காரனா? பட்டாபட்டியா? நம்ம பன்னிகுட்ஸ் ஆ?

  //

  எங்களை, 3 இடியட்ஸ்-னு சொல்லுப்புட்டீங்களே
  பாஸ்.!!

  அவ்...

  ReplyDelete
 26. Rettaival's Blog said... 17

  யோவ்! நீதான் டோண்டுங்கிறதையும் எவனாவது கண்டுபுடிச்சுட்டானா?

  //

  ஹிஹி.. நாந்தான் க்ராஸ் பெல்ட் போடலையே.. அப்பவும் கண்டுபிடிப்பானுகளோ?

  ReplyDelete
 27. வெளங்காதவன்™ said... 5

  ச்சே..
  காமன்டத்தான் காப்பி பேஸ்ட்டு போடுவாய்ங்க... போச்ட்டையே காப்பி பேஸ்ட்டு போட்ட தல, "நீ எங்கியோ போயிட்ட!!!"

  //

  ஆமாய்யா.. ஏதாவது எழுது எழுதுனு நச்சிக்கிட்டே இருந்தா..இப்படித்தான்...

  ஹிஹி

  ReplyDelete
 28. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 10

  ▼ April (1)
  வலிக்குது....

  ► January (1)

  உங்க காலண்டர்ல பெப்ரவரி மார்ச் இல்லிங்களா சார்?

  //

  ஏங்க.. அந்த மாசம் தான் .. உக்காந்து ராக்கெட் விடுவீங்களோ?

  ReplyDelete
 29. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கேன்.. என்ன சொல்றதுன்னே தெரியல...

  ஒரே கேரா இருக்கு.. இந்த நாலஞ்சு காப்பி பேஸ்ட் ல எது ஒரிஜினல் யாரு ஒரிஜினல்...

  யாரு ஒரிஜினல் யாரு, அவங்களுக்கு என்ன பேரு..

  ReplyDelete
 30. நடிக்க தெரிஞ்ச நடிக்க மாட்டோமா

  ReplyDelete
 31. மேல ஒருத்தன் தலைய சொறிஞ்சுகிட்டு இருக்கான் கொஞ்சம் நிறுத்த சொல்லும்ங்க அவன ராஸ்கல்

  ReplyDelete
 32. ஒரு பச்சபுள்ளைய போட்டு இந்த ஒட்டு ஓட்டுன யனைய நியாயம் இது.....
  இப்படிக்கு
  ஒரு 18 வருட விஜய் விசிறி ...

  ReplyDelete
 33. அணைத்து பயனுள்ள தளங்களும் ஒரே இடத்தில pattapattifollowers சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. அய்யோ அய்யோ உங்களுக்கு சத்தியம் பண்ணி சொல்லனுமா,,,, சத்தியமா pattapattifollowers சூப்பர்

   Delete
 34. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  More Entertainment

  www.ChiCha.in

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!