Pages

Saturday, February 13, 2010

" மானமுள்ள தமிழன் "

இளம் தொழிலதிபருடன் ஒரு சந்திப்பு....

( யார் என கண்டுபிடிப்பவர்களுக்கு , பதிவின் முடிவில் ஒரு பரிசு காத்திருக்கிறது..   சே.. முழு பதிவையும் படிக்க வைக்க என்னென்ன பண்ணவேண்டியிருக்கு.......ஏழுகொண்டலவாண்டா  ஏடுகொண்டலவாடா. -(நன்றி -  சேட்டைக்காரன் )


வணக்கம்..நான் தினக் குசுப்பு பத்திரிக்கையிலிருந்து பட்டாபட்டி..உங்கள் நேரத்தை வீணடிக்க விருப்பவில்லை.. எனவே நேரடியாக கேள்விகளுக்கு செல்கிறேன்...

இந்த இளம் வயதிலேயே , இவ்வளவு பெரிய பதவிக்கு வரமுடிந்தது எப்படி?

நான் பிறக்கும்போதே ஜீனியஸ் என்று எனது ' வக்கீல் தாய் '   சொல்லியிருக்கிறார்கள்..மேலும் எனது தந்தை  தேர்தலில் நிற்காமலேயே , பெரிய பதவியை அடையும் சாணக்கியத்தனம் கொண்டவர்..
அந்த கலப்படத்தால்.. இல்லை..இல்லை கலப்பினத்தால் ,சார்.. நான் சொன்னதை அடித்துவிடுங்கள்..  (அடித்துவிட்டோம் தொழிலதிபரே..)
அந்த இருவரரின் மேதாவித்தனம் சேர்ந்ததால் , எனக்கு இயற்கையிலேயே திறமை அதிகம்..

சார். இந்த அரசியலுக்குள் நுழைந்ததைப்பற்றி வாசகர்களுக்கு ஏதாவது?

இப்போதுதான் எனது தந்தையார் டிரெயினிங்க் கொடுத்துக்கொண்டுள்ளார்..
விரைவில் அரசியல் வாழ்வில் பிரகாசிப்பேன்..அதற்கு உதவும் ஒரு பெண்மணியின் தொண்டும் மகத்தானது..

சாரி சார்.. மன்னிக்கனும்.. யார் அந்த பெண்மணி.. தங்கையா சார்?

இல்லை.. இல்லை.. எங்கள் நலம்விரும்பி.. வாளும் வள்ளுவரின் போர்வால்(ள்)... ( சாரி ..நான் தமிழ்ல வீக்.. எந்த " ள் " என நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள்-நிருபர்)    நாங்கள் இருவரும் சேர்ந்து , தமிழர்களுக்கு ஆற்றும் தொண்டை நாளைய வரலாறு கூறும்..

சார். அந்த கோதுமைய வெச்சு எவ்வளவோ சம்பாரித்துவிட்டீர்கள் என வந்த நியூஸ் பற்றி...

அது வேலையில்லா பன்னாடைக கிளப்பிவிட்ட புரளிங்க..நான் தொழில் தொடங்கிய நேரம்,   உள் நாட்டில் கோதுமை விளைச்சல் அமோகமாயிருந்தது.. விலை பாத்திங்கனா , ரம்பா தொடைமாறி சர்-னு  இறங்க்கிடுச்சு..அப்ப நான் கொஞ்சம் ப்ளான் பண்ணுனேன்..

எதுக்கு சார். ரம்பா தொடைக்கா?

இப்படி குறுக்க பேசக்கூடாது.. பாவம் ரம்பா. அதுதான் தொழிலதிபருடன் செட்டில் ஆயிடுச்சே...  சே.. எங்க விட்டேன்..

சார்.. ரம்பா தொடையில சார்...

யோவ்..என்னைய பேசவிடுப்பா...
ஆங்.. கோதுமையில...
விலை கம்மியாயிருக்கும்போது எல்லா கோதுமையையும் விலைக்கு வாங்கிட்டேன்..அதை   வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாமுனு முடிவு பண்ணி லாரியில ஏற்றி ,  டெல்லிக்கு அனுப்பிட்டேன்...

ஏன் சார்.. டெல்லியிலிருந்து அனுப்பி , அங்கிருந்து லாரியிலேயே வெளி நாட்டுக்கு அனுப்ப திட்டமா சார்..?

இல்லை..இல்லை.. என் தந்தையார் , தமக்கு வேலை அதிகம் இல்லை.. அங்க அனுப்பினா, அவரே  மீதியெல்லாம் பார்த்துக்குரேனு சொன்னாரு...

ஓ.. டாலரில சம்பாரிச்சுட்டேனு சொல்லுங்க.....


No... No....
அப்ப என்னாச்சுனா , இந்தியாவில கோதுமைத்தட்டுப்பாடு வந்திருச்சு..
(ங்கொய்யாலே.. எல்லா கோதுமையும் வாங்கி பதுக்கிட்டா தட்டுப்பாடு வராம , ம%$#ரா வரும்...)
அப்ப எங்க நைனா சொன்னாரு பாருங்க ஒரு வாசகம்..எனக்கே கலங்கிடுச்சு..

சார்.. சார். ப்ளீஸ் சார்.. அதை கொஞ்சம் பதிவுலகத்துக்கு சொல்ல முடியுமா?..

"அமெரிக்காக்காரனே, விளஞ்ச கோதுமைய யார் தலையிலே கட்டலாமுனு பார்த்துக்கொண்டிருக்கிறான்.....உள் நாட்டில பசி பஞ்சம் தலைவிரித்து ஆடும்போது , அந்த நாதாரிகளை பணம் பண்ண விடக்கூடாது..
மேலும் , அவர்கள் வந்து நம் கோமணத்தை உருவுவதை விட ...நாமே மக்களுக்கு செய்திடலாமுனு  சொல்லி , கோதுமைய உள்ளூர் மார்கெட்ல விற்கச்சொல்லிட்டார்.

சரி.. தந்தை சொல்லை மீறிவிட்டான் தமையன் என நாளைய சரித்திரம் சொல்லிவிடக்கூடாது என் எண்ணி,  கோதுமைய திருப்பி வரவழைத்து தமிழக மக்களுக்கு கொடுத்துவிட்டேன்..

வாங்கின விலைக்கே-வா சார்....

என்ன சார். லாரியெல்லாம் வெச்சு செஞ்சுருக்கேன்.. கட்டுபடியாகுமா சார்..அதுவுமில்லாம ,  கோதுமை பஞ்சம் தலைவிரித்தாடுது.. அதனால கொஞ்சம் அதிக விலைக்கு விற்றுவிட்டோம்...  வந்த லாபத்தை , நானும்  எனது நலம் விரும்பியும் , கோவையில் 200 ஏக்கர் நிலத்தில்
முதலீடு செய்துவிட்டோம்...

அது என்ன விளைச்சல் நிலமா சார்?.


of course...
வாங்கும்போது விளைச்சல் நிலம்தான்.. இப்போது பார்க்க ஆள் கிடைக்காத்தால்............ அதை விடுங்க..

என்ன சார்.. இந்த பணத்தை விவசாயிகளுக்கு கடனா கொடுத்திருந்தால் , தமிழ் நாடு எங்கேயோ போயிருக்குமே சார்..

சார்.. என்னொட மனசுலையும் பட்டுச்சு.. ஆனா , எனது தந்தையும் , நலம் விரும்பியின் தந்தையும்  எங்கள் மனதை மாற்றிவிட்டனர்..


என்ன சொல்லி சார் ?.

"விவசாயிகள், குழந்தைகளை படிக்க வைக்கவும் கஷ்டப்படுகின்றனர்...
அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு...
பெட்ரோல் , டீசல் விலை உயர்வு...
தற்கொலை சாவு அதிகரிப்பு....
இந்த நேரத்தில் அவர்களுக்கு வேண்டியது பணமே தவிர ஆறுதல் அல்ல...
அவர்களை காப்பாற்ற ஒரே வழி.. அவர்களின் இடத்தை வாங்கிக்கொள்வதுதான்.." என கூறிவிட்டனர்.
தமிழனுக்கு ஒரு பிரச்சனையினா , பெரியவர்களின் உடல் , உயிர் , பொருள் எல்லாமே  துடிக்கும் சார்ஆனாலும் கொஞ்சம் நெருட்டலா இருக்கிறதே?..

சார். நீங்க சின்ன வட்டத்திலேயே யோசனை பண்ணுகிறீர்கள்...
அமெரிக்காவும் பாவம் சார்.. அங்கேயும் வேலையில்லா திண்டாட்டம்..
அவர்களுக்கு உதவுவது நம் கடமையில்லையா சார்...
அதனாலே, எங்க அப்பா அவரோட Influnce பயன்படுத்தி ,
அயல் நாட்டு கோதுமைய , எங்கள் மூலமாக விற்க ஏற்பாடுசெய்துவிட்டார்...
என்னயிருந்தாலும் , அடுத்தவன் வந்து நம்மளை உருவுவதை,
தன்மானமுள்ள எந்த தமிழனும் ஒத்துக்கொள்ள மாட்டான் ..

நான் சொல்வது சரிதானே சார்...

100% சரிதான் சார்.. அப்புறம் , எவனோ ஒரு பன்னாட , ஷூ எடுத்து
உமது தந்தையார் முகத்திலே வீசினானாமே.. அதைப் பற்றி..


அது வந்து.. வந்து .. உடுங்க சார்.. அது முடிந்து போன சம்பவம்..
அதுவுமில்லாமல் , குறிதான் தப்பிடுச்சே...

ஆமா சார்.. எனக்கும் கஷ்டமாயிருக்கு...
( எங்க ஊர்ல குறி பார்த்து வீசுபவர்கள் நிறைய உள்ளனர்..
அவர்களுக்கு அடுத்த தடவை ஏதாவது சான்ஸ் வாங்கி கொடுங்க சார்..)


அதற்குள் நலம் விரும்பியிடமிருந்து போன் வந்ததால்,  பேட்டியை தொடர முடியவில்லை...

சரி சார்.. மீண்டும் சந்திப்போம்..


வரட்டா...


( யோவ்.. பதிவு கடைசியிலே என்னமோ கொடுக்கிறேனு சொன்னீரே.. எங்கையா ? )
.
.

யார் என கண்டுபிடிப்பவற்களுக்கு , நமது அண்ணன் கார்திக் சிதம்பரம்   தனது பொற்கரங்களால் , காங்கிரஸ் உறுப்பினர் அட்டையை வழங்குவார் என்பதை   அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்..
 விழா முடிவில் ,  நமது அக்கா கனிமொழியின் கலைக்குழு நடத்தும்,  " மானமுள்ள தமிழன் " என்ற நகைச்சுவை நாடகத்தை கண்டுகளிக்க தவறாதீர்கள்...
.
.
..

37 comments:

 1. யோவ்.. பட்டாபட்டி..
  யாரையா அந்த தொழிலதிபர்..
  மண்டைய குழப்பி யோசனை பண்ணிட்டேன்..
  ப்ளிஸ்.. சொல்லையா...

  ReplyDelete
 2. @suthir said...
  யோவ்.. பட்டாபட்டி..
  யாரையா அந்த தொழிலதிபர்..
  மண்டைய குழப்பி யோசனை பண்ணிட்டேன்..
  ப்ளிஸ்.. சொல்லையா...
  //

  சார். இப்படி பப்ளிக்ல கேட்கக்கூடாது சார்..
  அப்புறம் ஏதாவது பிரச்சனை வந்துடும்..
  ( யோவ்.. நிசமா தெரியல?)

  ReplyDelete
 3. உமது கட்டுரையில் சொற்குற்றம் இருக்கிறது. அது "ஏழுகொண்டலவாடா" இல்லை: "ஏடுகொண்டலவாடா". விட்டால் "ஏழு குண்டலவாடா, எட்டு குண்டலவாடா,"ன்னு சொல்லிருவீங்க போலிருக்குதே!

  (கட்டுரை சூப்பர்ணே!)

  ReplyDelete
 4. @சேட்டைக்காரன்
  உமது கட்டுரையில் சொற்குற்றம் இருக்கிறது. அது "ஏழுகொண்டலவாடா" இல்லை: "ஏடுகொண்டலவாடா". விட்டால் "ஏழு குண்டலவாடா, எட்டு குண்டலவாடா,"ன்னு சொல்லிருவீங்க போலிருக்குதே!
  (கட்டுரை சூப்பர்ணே!)
  //
  நல்லா உன்னிப்பா படிக்கிறார்களா என்பதற்காக ஆசிரியர் செய்த விளையாட்டு இது..
  எனவே ஆசிரியர் வைத்த தேர்வில் நீங்கள் பாஸ் செய்துவிட்டீர்கள் சேட்டைக்காரன் அவர்களே..

  ( பட்டாபட்டி.. பய புள்ளைக என்னமா நோட் பண்றாங்க...எப்படியோ சமாளிச்சுட்ட..
  அடுத்த பதிவிலயாவது , போஸ்ட் செய்வதற்க்கு முன்னாடி படியுமய்யா...)

  ReplyDelete
 5. //குறிதான் தப்பிடுச்சே...//

  எந்த ‘குறி’ங்க தலைவரே...

  ReplyDelete
 6. @ க.பாலாசி said...
  எந்த ‘குறி’ங்க தலைவரே...
  //

  சார்.. நான் நல்ல பையன் சார்.. எதுக்கும்
  கனியாக்ககிட்ட கேட்டுப் பார்க்கிறேன்..

  ReplyDelete
 7. ..._...|..____________________, ,
  ....../ `---___________----_____|]
  ...../_==o;;;;;;;;_______.:/
  .....), ---.(_(__) /
  ....// (..) ), ----"
  ...//___//
  ..//___//
  .//___//

  டுமீல்... ! :)

  ReplyDelete
 8. @ ஷங்கர்.. said...

  ..._...|..____________________, ,
  ....../ `---___________----_____|]
  ...../_==o;;;;;;;;_______.:/
  .....), ---.(_(__) /
  ....// (..) ), ----"
  ...//___//
  ..//___//
  .//___//

  டுமீல்... ! :)
  //


  சார்.. யாரை சுடறீங்கனு சொல்லிட்டு சுடுங்க சார்..
  பேஸ்மெண்ட் ஷேக் ஆகுது சார்.. :-)

  ReplyDelete
 9. ஆயிரம்தான் இருந்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே.

  போற்றுவார் போற்றினாலும் தூற்றுவார் தூற்றினாலும் அவர்களிருவரும் தத்தமது காரியத்தில் கண்ணாகத்தானய்யா இருக்கிறார்கள். நாமத்தான் வெட்டிப்பேச்சு பேசிகிட்டிருக்கோம்.

  ----- சிவா...

  ReplyDelete
 10. "எங்கே விட்டேன்..."

  கொஞ்சம் ஓவர்.

  யாருங்க அந்த நலம் விரும்பி?

  ReplyDelete
 11. ///பேஸ்மெண்ட் ஷேக் ஆகுது சார்.. :-)///

  பாடிதான் ஸ்ட்ரங்க்,அப்ப பேஸ்மெண்ட் வீக்கா???

  ReplyDelete
 12. யாருங்க அந்த நலம் விரும்பி?

  இரண்டாவது போட்டோவில் இருப்பவர் தானே ?

  ReplyDelete
 13. விடை கிடைக்காவிட்டால் 2 மணி நேரம் உண்ணா விரதம் இருப்பேன்

  ReplyDelete
 14. பிறகும் சொல்லவில்லை என்றால் நம் கழக கண்மணிகள் sunday அதுவும் அனைவரும் தந்தி அனுப்புவோம்

  ReplyDelete
 15. (ங்கொய்யாலே.. எல்லா கோதுமையும் வாங்கி பதுக்கிட்டா தட்டுப்பாடு வராம , ம%$#ரா வரும்...)
  .
  இதுல எனக்கென்ன சந்தேகம்னா.. (ம%$#ரா)என்றால் என்ன ? (கேட்டமுல்ல டீடேயிலு)

  ReplyDelete
 16. யோவ் பட்டு... என்ன சின்கையில குடியுரிமை வாங்கிவிட்டீரா?? விழாவின் விருந்தினர்களை போட்டோ போட்டும் எனக்கு தெரியல... ஆனா அந்த தொழில் அதிபரையும், நலம்விரும்பியையும் நல்லா தெரிஞ்சுகிட்டேன்.

  ஷங்கர் அண்ணேன் போட்ட டுமீல் ரெண்டு என்கவுண்டருக்குயா... ஆம்புள ரவுடி, பொம்புள ரவுடி யாரா இருந்தாலும் நெஞ்சுநிமிர்த்திய ஷங்கர் அண்ணேன்... போட்டு தள்ளிடுவாரு...

  எப்ப போடுவாரு... எப்போ தள்ளுவாருனு வழக்கம்போல உம்ம குதர்க்க கேள்வியை சபையில கேக்கப்புடாது... சொல்லிபுட்டேன்.

  ReplyDelete
 17. பாஸ் .முத முதல்ல தமிழ்ல போஸ்ட் போட்டு இருக்கேன்.
  வந்து பாத்துட்டு, புடிச்சு இருந்தா,வோட்டு குத்திட்டு போங்க.
  உங்க கருத்துக்களையும் சொல்லுங்க.

  http://illuminati8.blogspot.com/2010/02/blog-post.html

  ReplyDelete
 18. @ சிவா...
  ஆயிரம்தான் இருந்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே.
  போற்றுவார் போற்றினாலும் தூற்றுவார் தூற்றினாலும் அவர்களிருவரும் தத்தமது காரியத்தில் கண்ணாகத்தானய்யா இருக்கிறார்கள். நாமத்தான் வெட்டிப்பேச்சு பேசிகிட்டிருக்கோம்.
  //

  சிவா சார்.. அதுக்குத்தான் நாங்கள் ப.மு.க ஆரம்பிச்சுட்டோமே..
  எதுக்கா?.
  என்ன சார்...எங்க காரியத்தில கண்ணாயிருக்கத்தான் சார்..

  ReplyDelete
 19. @ஸ்ரீராம். said...
  "எங்கே விட்டேன்..."
  கொஞ்சம் ஓவர்.
  யாருங்க அந்த நலம் விரும்பி?
  //

  எப்படி சார் .. அந்த நலம் விரும்பிய , என்னோட வாயால சொல்லுவேன்

  ReplyDelete
 20. @ஜெய்லானி said...
  பாடிதான் ஸ்ட்ரங்க்,அப்ப பேஸ்மெண்ட் வீக்கா???
  //

  சார்.. நம்ம தாத்தாவுக்குச் சொன்னேன்.. ஹி..ஹி..ஹி

  ReplyDelete
 21. @Muthu said...
  யாருங்க அந்த நலம் விரும்பி?
  இரண்டாவது போட்டோவில் இருப்பவர் தானே ?
  விடை கிடைக்காவிட்டால் 2 மணி நேரம் உண்ணா விரதம் இருப்பேன்
  பிறகும் சொல்லவில்லை என்றால் நம் கழக கண்மணிகள் sunday அதுவும் அனைவரும் தந்தி அனுப்புவோம்
  //

  சார்.. எதுக்கு சார் , உடம்பை வருத்தி உண்ணாவிரதமெல்லாம்..
  அந்த ரெண்டாவது போட்டோ தான் சார்..
  ஆனா ' @ஸ்ரீராம் ' கிட்ட சொல்லிடாதீங்க..

  ReplyDelete
 22. @Anonymous said...
  super
  //

  சார்.. சார்.. சீக்கிரமா பேர வெச்சுக்கோங்க சார்..

  ReplyDelete
 23. ManA said...
  இதுல எனக்கென்ன சந்தேகம்னா.. (ம%$#ரா)என்றால் என்ன ? (கேட்டமுல்ல டீடேயிலு)
  //

  எதற்கும் திரு..வெங்கடாசலபதியை கேட்டுவிட்டு சொல்கிறேனே சார்..

  ReplyDelete
 24. @ரோஸ்விக் said...
  யோவ் பட்டு... என்ன சின்கையில குடியுரிமை வாங்கிவிட்டீரா?? விழாவின் விருந்தினர்களை போட்டோ போட்டும் எனக்கு தெரியல... ஆனா அந்த தொழில் அதிபரையும், நலம்விரும்பியையும் நல்லா தெரிஞ்சுகிட்டேன்.
  ஷங்கர் அண்ணேன் போட்ட டுமீல் ரெண்டு என்கவுண்டருக்குயா... ஆம்புள ரவுடி, பொம்புள ரவுடி யாரா இருந்தாலும் நெஞ்சுநிமிர்த்திய ஷங்கர் அண்ணேன்... போட்டு தள்ளிடுவாரு...
  எப்ப போடுவாரு... எப்போ தள்ளுவாருனு வழக்கம்போல உம்ம குதர்க்க கேள்வியை சபையில கேக்கப்புடாது... சொல்லிபுட்டேன்.
  //


  ரோஸ்விக்..
  ஒரு டுமீல் தான் வந்துச்சு.. அதனாலதான் டவுட்... ஹி..ஹி..

  ஆமா.. வெளியூரு ஏதொ பிப் 14 , மீட் பண்ணலாம், பியர் வாங்கித்தாரேன் அப்படினு
  என்னென்னமோ சொல்லுச்சே.. எங்க சத்தமே காணோம்..

  பேசாமா ஒரு வெள்ளக்காரி போட்டோ போட்டு அடுத்த
  பதிவை போட்டுடட்டுமா?

  ReplyDelete
 25. @ILLUMINATI said...
  பாஸ் .முத முதல்ல தமிழ்ல போஸ்ட் போட்டு இருக்கேன்.
  வந்து பாத்துட்டு, புடிச்சு இருந்தா,வோட்டு குத்திட்டு போங்க.
  உங்க கருத்துக்களையும் சொல்லுங்க.
  http://illuminati8.blogspot.com/2010/02/blog-post.html
  //

  அடப்பாவி.. தமிழ்தான் நல்லா வருதே..
  அப்புறம் ஏய்யா ஆங்கிலத்தில் எழுதி எங்களை சதாய்ச்சே..
  நல்லாத்தான் எழுதிரீரு... அப்படியே கண்டின்யூ பண்ணுமோய்..

  ReplyDelete
 26. // அடப்பாவி.. தமிழ்தான் நல்லா வருதே..
  அப்புறம் ஏய்யா ஆங்கிலத்தில் எழுதி எங்களை சதாய்ச்சே..//
  நண்பரே.முடிஞ்சுருச்சுன்னு நினைக்க வேணாம்.அவ்ளோ சீக்கிரம் எஸ்கேப் ஆயிட முடியாது.கலந்து கட்டி(இங்கிலீஷ்,தமிழ்) அடிக்கலாம்னு இருக்குரோம்ல....
  அப்பப்போ இங்கிலிஷ்ளையும் எழுதுவோம்.

  ReplyDelete
 27. aama,veliyoora enga aalaye kanom?

  bore adikkuthu boss.antha peicu iruntha konjam kalaichukitte time pass pannidalaam.

  ReplyDelete
 28. வெளியூரு....எங்கயா போன நீயு.கோவில் திருவிழாவுல ஆடு இல்லன்னா நல்லவா இருக்கும்.புது போஸ்ட் போட்டு இருக்கேன்.வந்து பாதுப்புட்டு போ ராசா....

  ReplyDelete
 29. @ILLUMINATI said...
  நண்பரே.முடிஞ்சுருச்சுன்னு நினைக்க வேணாம்.அவ்ளோ சீக்கிரம் எஸ்கேப் ஆயிட முடியாது.கலந்து கட்டி(இங்கிலீஷ்,தமிழ்) அடிக்கலாம்னு இருக்குரோம்ல....
  அப்பப்போ இங்கிலிஷ்ளையும் எழுதுவோம்.

  வெளியூரு....எங்கயா போன நீயு.கோவில் திருவிழாவுல ஆடு இல்லன்னா நல்லவா இருக்கும்.புது போஸ்ட் போட்டு இருக்கேன்.வந்து பாதுப்புட்டு போ ராசா....
  //

  வெளியூரு சத்தமே காணோம்.. செட்டில் ஆயிடுச்சோ என்னமோ?
  ஆமா.. இலுமி...ஒண்ணு தமிழ்ல எழுது.. இல்ல இங்கிலீசுல எழுது..

  நாய் வாய் வெச்ச மாறி இரண்டெயும் கலந்தடிகாதீர் ஓய்..

  ReplyDelete
 30. ஆனாலும் ரொம்பதான் தைரியம் உங்களுக்கு. இதுல போட்டோ வேற. ஆட்டோவுக்கு பதிலா புல்டோசர் வந்துடபோவுது.

  ReplyDelete
 31. @ஆதி மனிதன் said...
  ஆனாலும் ரொம்பதான் தைரியம் உங்களுக்கு. இதுல போட்டோ வேற. ஆட்டோவுக்கு பதிலா புல்டோசர் வந்துடபோவுது.
  //

  என்ன சார்.. பண்ற இவங்களே, யாருக்கும் பயந்துக்கிட மாட்டாங்க..
  சொல்ற நான்,........... எதுக்கு பயப்படனும்..

  ReplyDelete
 32. ////பேசாமா ஒரு வெள்ளக்காரி போட்டோ போட்டு அடுத்த
  பதிவை போட்டுடட்டுமா?////

  பட்டு சார் சீக்கிரம் போடுங்க ,அப்பதான் ஆடு.. ச்சே..ஆள் வெளியே வரும்.

  ReplyDelete
 33. @ஜெய்லானி said...
  பட்டு சார் சீக்கிரம் போடுங்க ,அப்பதான் ஆடு.. ச்சே..ஆள் வெளியே வரும்.
  //

  எங்க சார்.. மூஞ்சிய தூக்கி வெச்சுட்டு போயிடுச்சு சார்..
  பரவாயில்லை.. ஆனா அடுத்த பதிவில வெளியூர் னு போடுவதற்க்கு பதில்
  ஒரு நண்பர் அப்படினு போட்டு விடுகிறேன்..

  சார்.. வெளியூர் ஆட்டொவெல்லாம் அனுப்பாதே...

  'அனுப்பாது' என நம்பி அடுத்த பதிவை போட்டுவிடுகிறேன் சார்..

  ReplyDelete
 34. ராகுலோட‌ குலோசு யுவ‌ராஜாவா? நீங்க‌ளா?யுவ‌ராஜா உங்க‌ளை க‌ம்முன்னு கிட‌ன்னு சொல்லிடார‌முல்ல‌?ன்னு அவருகிட்ட‌, நீங்க‌ கேக்க‌‌ளியா ப‌டாப‌ட்டி?

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!