Pages

Wednesday, February 24, 2010

அடப்பாவிகளா.. இப்படிகூட இருக்கா?

ரொம்ப நாள் கழிச்சு நண்பர் ஒருவரை, 'லிட்டில் இந்தியாவில்'   பார்க்க நேர்ந்தது..    பீர் சாப்பிட்டுட்டுதான் போகனுமுனு ஒரே அடம் சார்..
"யோவ்.. நான் நல்ல பையனாயிட்டேன்",    சொன்னாலும் கேட்காம சீனக் கடைக்கு கூட்டிட்டு   போயிட்டான்.

(  நண்பர் பேரு வேண்டாமே சார்.. பின்னாடி என்னைய யாருனு தெரியாது சொல்லிட்டா,   மனசு கஷ்டமாயிடும்.. அதனால மிஸ்டர் எக்ஸ் -னு நினச்சுக்கோங்க .....ப்ளிஸ்....)

அப்போது ஒரு சீனர்.. தாத்தா வயசு இருக்கும் சார்.. நல்லா பேண்ட் , சர்ட் போட்டுட்டு   ரீஜண்டா, பீர் குடுச்சுட்டு இருந்தார் ..

நாங்க போயி பக்கத்து டேபிள்ல உக்கார்ந்து பீர் ஆர்டர் செஞ்சுட்டு,  எப்போதும்போல
 • நாட்டு நடப்பு,
 • ஊத்திகிட்ட படங்கள்,
 • ஊத்தப்போற படங்கள்,
 • அடுத்தவன் காலை வாரிவிடுவது நல்லதா/கெட்டதா?,
 • விஜய்/அஜீத் யாரோடது படம் ஹிட்,
 • ஏறிப்போற ஏணியா?, இல்ல... எட்டி மிதிக்கிற சாணியா இருக்கணுமா?
அப்படினு தலையால பிரச்சனைய பற்றி பேசிட்டு இருந்தோம்..

கொஞ்ச நேரம் ஆயிருக்கும் சார்..தண்ணி உள்ள போயிட்டா , எல்லோருமே சொந்தக்காரங்கதானே..( சீனனாவது , மலாய்காரனாவது )
சன்னமா, பக்கத்திருந்த பெருசப் பார்த்து சிரித்தோம்..

அவரும் எங்களைப் பார்த்து சிரிச்சுகிட்டே சீன பாஷையிலே என்னமோ சொன்னார்..     நமக்கு தான் எல்லா பாஷையும் தெரியுமே.......
நாய் வாய் வெச்சமாறி சார்......... ( எல்லாமே அரைகுறை........ இன்னும் .புரியாதவங்க, என்னோட  மெயில் ஐடீக்கு , தட்டிவிடுங்க... சொல்றேன் .)
அப்படியே பேச்சு கொடுத்தேன்..( சீன பாஷையில தான் .. ஹி..ஹி )

பார்த்தா, பெருசு சீன ஆயுர்வேதிக் டாக்டராம்..
என்னடா, டாக்டராயிருந்துட்டு , தண்ணி அடிக்கிறீங்கனு கேட்டா பெருசு நக்கலா சிரிக்குது..

நண்பருக்கு டர்ர்ர்ர்ர் ஆயிடுச்சு..... அவசரமா என்னைய சொறிஞ்சு , அவரை கலாயிக்கலாமானு கேக்கிறான்..  என்ன பிரச்சனைனா , நண்பருக்கு சீனம் தெரியாது.. பெருசுக்கு ஆங்கிலம் அவ்வளவா வராது..

நண்பர் உணர்சிவசப்பட்டு , நான் உங்கிட்ட ஆங்கிலத்திலே சொல்றேன்..
நீ அதை  அவர்கிட்ட சீனத்தில கேட்டு பதில் சொல்லுனு சொன்னான்..

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது அப்பதான் சார் புரிஞ்சது...
அவனுக்கும் தமிழ் தெரியும்.. எனக்கும் தமிழ் தெரியும்..

நாதாரி..ஆங்கிலத்திலே கேட்கிறானாமா.. ஆங்கிலத்தில....

அப்புறம் நடந்த உரையாடலை தமிழ்படுத்தி கொடுத்துள்ளேன்..நீங்களே பாருங்க...

சார்.. குடிப்பது, அசைவம் , சைவம் பற்றி என்ன நினைக்கிறீகள்.. குடி உடம்புக்கு கெடுதலா..?
வெஜிடேரியன் உடம்புக்கு நல்லதுதான்.. உடம்பை ஈஸியா வைத்திருக்க உதவும்..  அதனாலதான் டெய்லி பீர் குடிக்கிறேன்...

ஆல்கஹால்தான் உடம்புக்கு கெடுதல்தானே சார்.
இல்லை..இல்லை.. வைன் எதுல இருந்து தயாரிக்கறாங்க.. பழங்கள்தானே..
பிராண்டி, சுத்திகரிக்கப்பட்ட வைன்ல இருந்து வருவது..
பியர் பார்லியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.. அப்புறம் என்ன கெடுதல்? ...

சார்.. இதய ஆரோக்கியப் பயிற்சிகளால், வாழ் நாள் அதிகரிக்கும் என்கிறார்களே..  அது உண்மையா ?.
ஒரு கார் -னு எடுத்துகிட்டா , அதில இஞ்சின் என்பது இதயம்..
கார் தயாரித்தவங்க என்ன சொல்றாங்க?..நார்மல் கண்டிஷன்ல , இஞ்சின் 100,000 கி.மீ.. பிரச்சனியில்லாமல் ஓடும்..

உடற்பயிற்சி என்பது, இதயத்துடிப்பை அதிகரிப்பது....
உதாரணத்துக்கு , உங்கள் கார் இஞ்சின் வேகமாக ஓடினால் , இஞ்சின் ஆயுட்காலம் நீடிக்குமா அல்லது
குறையுமா?.

100,000 கி.மீ நீங்க 20 வருசத்திலையும் ஓட்டலாம்.. அல்லது 40 வருடம் வரையும் ஓட்டலாம்..
எது என முடிவு செய்ய வேண்டியது நீங்கதான்..
அதனால் , நேரம் கிடைக்கும்போது நிம்மதியாகத் குட்டி தூக்கம் போடுங்கள்..

இந்த Body / Fat ratio .. அதைபற்றி விளக்கமுடியுமா?
இப்போ உங்களுக்கு ஒரு Body , அதில் FAT இருந்தால் 1:1
அப்படியில்லாம , ரெண்டு Body இருந்தால் 2:1.. etc..

சார். இந்த பொறித்த (பிரை) பண்ணிய உணவுகளை சாப்பிடக்கூடாதுனு சொல்றாங்களே..
தம்பி....பிரை, எதில் பண்றாங்க?.. வெஜிடபிள் ஆயில்ல..
அப்படினா நீங்க ரொம்ப வெஜிடபிள் சாப்பிடுகிறீர்கள்...அது நல்லதுதானே....

Sit-Ups செய்தால் வயிறு குறையும் என்ற கருத்து....
தவறான கருத்து..
உடற்பயிற்சி செய்தால் உங்கள் தசை பெரிதாகும் என்பது எல்லோருக்கும் தெரியும்..   உங்களுக்கு வயிறு வேண்டுமென்றால் Sit-Ups செய்யலாம்.. தவறில்லை..

சாக்லெட் கெடுதலா?
சாக்லெட் ..ம்.. "Cocoa Beans"ல இருந்து சாக்லெட் செய்யறாங்க .. அதுவும் ஒரு வெஜிடபிள்..  எனக்கு தெரிந்து, உலகத்திலேயே சிறந்த உணவு சாக்லெட்தான்..

உடம்பை அழகாக வைத்திருக்க நீச்சல் நல்ல உடற்பயிற்சியா டாக்டர்?..
சரி.. நீச்சல் உடம்பை அழகாக வைத்திருக்க உதவுமெனில் , திமிங்கலத்தின் உடம்பை பற்றி எனக்கு கூறுங்களேன்...

உடம்பை Shape - ஆக வைத்திருப்பது , வாழ்க்கைக்கு உதவுமா?
Round-ம் ஒரு Shape தானே தம்பி...
அந்தகாலத்து ஆளுக எல்லாம் உங்கள கெடுத்து வைத்திருக்கிறார்கள்..

பிறந்து , வளர்ந்து , கடைசியில் இறப்பது வரை , அது ஒரு நெடிய, வாழ்க்கை பயணம்..

ரோலர் கோஸ்டரில், ' A , B  ' ரெண்டுபேரு பயணம் செய்கிறர்கள் என வைத்துக்கொள்வோம்..
பயண முடிவுல
A- தலை கலையாமல், சட்டை கசங்காமல் , பயணத்தை முடிக்கிறார்.
B- தலை கலைந்து , சட்டை மேலேறி.. அட....,ஒரு பைத்தியகாரன் போல
இறங்குகிறான்..

யார் பயணத்தை அனுபவித்தது ... A-யா B-யா ?..யோசனை பண்ணுங்க...

நல்ல உடம்பை மெயின்டெயின் பண்ணி , அழகாக சுடுகாட்டுக்கு செல்வதா?

இல்லை

நல்லா தண்ணியாடிச்சுட்டு ,கை, கால்ல காயம் பண்ணிகிட்டு, தலையிலே பாதி முடி காணாம போயி,   வாழ்க்கைய அனுபவிச்சுட்டு , வெற்றி , வெற்றி கத்திகிட்டு சுடுகாட்டுக்கு செல்வதா?

சிந்தியுங்கள் மக்களே..


அப்பாடா..
பெருசு ஒரு வழியா பேசி முடிக்கவும் , எங்க பியர் முடியவும் சரியாயிருந்தது..
ஆனா ஒண்ணு பட்டும் சார்..


கடைசியா சொன்னாரு பாருங்க...

 • ஜப்பாங்காரங்க குறைவான FAT எடுத்துக்கிறாங்க..அதனால ஹார்ட் அட்டாக் வருவது,  அமெரிக்கனைவிட கம்மி..
 • மெக்சிகன் அதிகமான FAT எடுத்துக்கிறாங்க..ஆனாலும் ஹார்ட் அட்டாக் வருவது,  அமெரிக்கனைவிட கம்மி..
 • சீனனுக  குறைவான Wine குடிக்கிறாங்க..அதனால ஹார்ட் அட்டாக் வருவது,  அமெரிக்கனைவிட கம்மி..
 • இத்தாலிகாரனுக அதிகமான Wine எடுத்துக்கிறாங்க..ஆனாலும் ஹார்ட் அட்டாக் வருவது,  அமெரிக்கனைவிட கம்மி..
 • ஜெர்மங்காரனுக அதிகமான BEER எடுத்துக்கிறாங்க..ஆனாலும் ஹார்ட் அட்டாக் வருவது,  அமெரிக்கனைவிட கம்மி

இதிலிருந்து என்ன தெரியுது?.. பெருசு எங்களை கேட்குது..
எங்களுக்கு Confuss ஆயிடுச்சு.

எங்க மூஞ்சி இஞ்சி தின்ன குரங்கு மாறி மாறுனதாலே , பெருசே பதிலையும் சொல்லிடுச்சு..

என்னவா ?

நல்லா குடி.. நல்லா தின்னு..
ஆனா ஆங்கிலம் பேசுனா ஹார்ட் அட்டாக் வருவதற்க்கு சான்ஸ் அதிகமாம்..
அய்யோ சாமி...தல கிர்னு சுத்திடுச்சு...

முக்கியமான மேட்டரை விட்டுவிட்டேன்..
மேல சொன்னதெல்லாம் தாத்தாவோட கருத்து..
பின்பற்றுவதும் , துடைத்துப் போட்டுவிட்டு அடுத்த பதிவைப் படிக்கப்போவதும்  உங்கள் விருப்பம்...

என்னைய குறை சொல்லாதீங்க அப்புகளா..........
.
.
.
அந்த சீனக்கிழவனாரை பார்க்கனுமா?..
கீழ இருக்காறே.. அவர்தான்.. ......

...ம்..ம்.....நல்ல டாக்டர் சார்.... .
..

.
.

83 comments:

 1. //அடுத்தவன் காலை வாரிவிடுவது நல்லதா/கெட்டதா?,//

  நல்ல தலைப்பு.

  ReplyDelete
 2. i naan thaan first innum padikkala padichittu appuram varren

  ReplyDelete
 3. //நாதாரி..ஆங்கிலத்திலே கேட்கிறானாமா.. ஆங்கிலத்தில....//
  யாரையோ சொல்ற மாதிரி இருக்கே..

  ReplyDelete
 4. @ஜெய்லானி said...
  நல்ல தலைப்பு.
  //

  சார்.. இது டமாசுக்குப் போட்டது..
  எப்பபோதும்போல , சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்யுங்கள்..

  ReplyDelete
 5. //நீச்சல் உடம்பை அழகாக வைத்திருக்க உதவுமெனில் , திமிங்கலத்தின் உடம்பை பற்றி எனக்கு கூறுங்களேன்.//

  உன்மையிலெயே டாக்டர் தான் நா நம்பிட்டேன்.

  ReplyDelete
 6. @மங்குனி அமைச்சர் said...
  i naan thaan first innum padikkala padichittu appuram varren
  just miss
  //
  அட அதனால என்ன சார்..
  அடுத்த பதிவு போடுவதற்க்கு முன்னாடி , ஒரு கோட் சொல்றேன்..
  டகாருனு வந்துடுங்க...

  ReplyDelete
 7. ஜெய்லானி said...
  யாரையோ சொல்ற மாதிரி இருக்கே..
  உன்மையிலெயே டாக்டர் தான் நா நம்பிட்டேன்.
  //

  டமாசு.. சார்... டமாசுக்கு..
  இன்னும் எழுதலாமுனு பார்த்தேன்..
  சரி.. வடை எங்க போயிடும்

  ReplyDelete
 8. //அட அதனால என்ன சார்..
  அடுத்த பதிவு போடுவதற்க்கு முன்னாடி , ஒரு கோட் சொல்றேன்..
  டகாருனு வந்துடுங்க..//

  உஷார்!! அப்புறம் அவர் பிளாக்கிலே போட்டுடுவார்...

  ReplyDelete
 9. //நமக்கு தான் எல்லா பாஷையும் தெரியுமே.......
  நாய் வாய் வெச்சமாறி சார்......... ( எல்லாமே அரைகுறை........ இன்னும் .புரியாதவங்க, என்னோட மெயில் ஐடீக்கு , தட்டிவிடுங்க... சொல்றேன் .)
  அப்படியே பேச்சு கொடுத்தேன்..( சீன பாஷையில தான் .. ஹி..ஹி )//

  இந்த மானம் கேட்ட பொழப்புக்கு மருந்த குடிச்சு சாகலாம் (கூட வந்த பிரென்ட் அப்புறம் அந்த டாக்டர் )
  ஏம்பா பீர் குடிக்கும் போதெல்லாம் ஒரு வார்த்த கூட கூபிடமாற்ற

  ReplyDelete
 10. அமைச்சருக்கு ஒரு லெமன் ஜூஸ் ஆர்டர் பிளீஸ்..

  ReplyDelete
 11. @ஜெய்லானி said...
  உஷார்!! அப்புறம் அவர் பிளாக்கிலே போட்டுடுவார்...
  //

  அதானால என்ன சார்..
  எல்லோரும் நம்ம பய புள்ளைக தானே...

  ReplyDelete
 12. @மங்குனி அமைச்சர் said...
  இந்த மானம் கேட்ட பொழப்புக்கு மருந்த குடிச்சு சாகலாம் (கூட வந்த பிரென்ட் அப்புறம் அந்த டாக்டர் )
  ஏம்பா பீர் குடிக்கும் போதெல்லாம் ஒரு வார்த்த கூட கூபிடமாற்ற
  //

  அப்பு.

  பீர் குடிக்க சிங்கப்பூர் வரமாறி,
  பொருளாதரத்தில பின்னறீங்க போல..
  வாங்கப்பு..
  உங்களுக்கு இல்லாத பீரா...

  ReplyDelete
 13. //ஜெய்லானி said...
  //அட அதனால என்ன சார்..
  அடுத்த பதிவு போடுவதற்க்கு முன்னாடி , ஒரு கோட் சொல்றேன்..
  டகாருனு வந்துடுங்க..//

  உஷார்!! அப்புறம் அவர் பிளாக்கிலே போட்டுடுவார்...//

  வாங்க வாங்க நீங்க தான் அந்த குல தெய்வமா ( நானே பஞ்சாயத கலைக்க என்ன பாடு பட்டேன்)

  ReplyDelete
 14. ///வாங்க வாங்க நீங்க தான் அந்த குல தெய்வமா ( நானே பஞ்சாயத கலைக்க என்ன பாடு பட்டேன்)//

  பின்ன நமிதா நல வாரியத்தில எனக்கு பங்கு வானாமா?

  ReplyDelete
 15. //அப்பு.

  பீர் குடிக்க சிங்கப்பூர் வரமாறி,//

  ஏன் பட்டாப்பட்டி நான் உன்ன பார்க்க என் சொந்தகாசுல டிக்கெட் போட்டுவந்தா நல்லாவா இருக்கும் ஊர் ஒலகம் ஒன்ன தப்ப நினைக்காது உன் மானம் போக நானா காரணமா இருப்பேன் அதுனால நீயே டிக்கெட் போட்டு அனுப்பு

  ReplyDelete
 16. //ஜெய்லானி said...
  பின்ன நமிதா நல வாரியத்தில எனக்கு பங்கு வானாமா?//

  இங்கே இருயா நான் உன் ப்ளாக் -க பார்த்திட்டு வந்து வசுகிறேன்

  ReplyDelete
 17. //இந்த Body / Fat ratio .. அதைபற்றி விளக்கமுடியுமா?

  இப்போ உங்களுக்கு ஒரு Body , அதில் FAT இருந்தால் 1:1
  அப்படியில்லாம , ரெண்டு Body இருந்தால் 2:1.. etc..//

  என்ன பிரமாதமா சொல்லி இருக்கிறார் பாருங்க..!!??
  பட்டயகிளப்பறீங்க.... தலைவா...

  ReplyDelete
 18. //இங்கே இருயா நான் உன் ப்ளாக் -க பார்த்திட்டு வந்து வசுகிறேன்//
  என் அந்தபுரதில் மங்குனியா? யார் அங்கே... யாரடா அங்கே.. அமைச்சரை பிடித்து பாதால சிறையில் அடையுங்கள்.( அடைப்பவருக்கு இன்க்கிரிமெண்ட் உண்டு )

  ReplyDelete
 19. @மங்குனி அமைச்சர் -> வாங்க வாங்க நீங்க தான் அந்த குல தெய்வமா ( நானே பஞ்சாயத கலைக்க என்ன பாடு பட்டேன்)
  @ஜெய்லானி -> பின்ன நமிதா நல வாரியத்தில எனக்கு பங்கு வானாமா?
  //

  ஆகா.. பதவியாச வந்துடுச்சே...
  அது ஆள முடுச்சுடுமே அப்புகளா..

  ReplyDelete
 20. நம்புற மாதிரியும் இருக்கு,நம்பக் கூடாது போலையும் இருக்கு ,எதுக்கும் ஒருக்கா சிங்கமுத்தக் கூப்பிடுங்கப்பா

  ReplyDelete
 21. @மங்குனி அமைச்சர் said...
  ஏன் பட்டாப்பட்டி நான் உன்ன பார்க்க என் சொந்தகாசுல டிக்கெட் போட்டுவந்தா நல்லாவா இருக்கும் ஊர் ஒலகம் ஒன்ன தப்ப நினைக்காது உன் மானம் போக நானா காரணமா இருப்பேன் அதுனால நீயே டிக்கெட் போட்டு அனுப்பு
  //

  இது நல்லாயிருக்கே..
  பேசாம நானே அடுத்த மாசம் அங்க வரேன் மங்குனி..

  ReplyDelete
 22. @பிரவின்குமார் said...
  என்ன பிரமாதமா சொல்லி இருக்கிறார் பாருங்க..!!??
  பட்டயகிளப்பறீங்க.... தலைவா...
  //

  வாங்க பிரவின்.. இதுபோல இன்னும் வரும்..
  அடிக்கடி வாங்க

  ReplyDelete
 23. @மங்குனி அமைச்சர் -> இங்கே இருயா நான் உன் ப்ளாக் -க பார்த்திட்டு வந்து வசுகிறேன்
  @ஜெய்லானி -> என் அந்தபுரதில் மங்குனியா? யார் அங்கே... யாரடா அங்கே.. அமைச்சரை பிடித்து பாதால சிறையில் அடையுங்கள்.( அடைப்பவருக்கு இன்க்கிரிமெண்ட் உண்டு )
  //

  மங்குனிய அடைக்க முடியாது ஜெய்லானி..
  பேசாம போட்டு தள்ளிடுங்க..

  ReplyDelete
 24. //ஜெய்லானி said...
  என் அந்தபுரதில் மங்குனியா? யார் அங்கே... யாரடா அங்கே.. அமைச்சரை பிடித்து பாதால சிறையில் அடையுங்கள்.( அடைப்பவருக்கு இன்க்கிரிமெண்ட் உண்டு )//

  தோடா சவுண்ட பாரு உங்க அந்தபுரம் இப்ப நம்ம கண்ட்ரோல் (என்னையா உங்க அரண்மனைல இப்ப்ப்பப்புடி லஞ்சம் வாங்குறானுக) கொஞ்ச நாளைக்கு பட்டாப்பட்டி அரண்மனைலே ஒளிஞ்சுக்கோ

  ReplyDelete
 25. @ உருத்திரா said...
  நம்புற மாதிரியும் இருக்கு,நம்பக் கூடாது போலையும் இருக்கு ,எதுக்கும் ஒருக்கா சிங்கமுத்தக் கூப்பிடுங்கப்பா
  //

  சில Extend வரைதான் , உடம்பு நம்ம கையில சார்..
  மீதி எதுவும் , நமதில்லை..
  வாழும்வரை மகிழ்சியாக வாழ்வோம்

  ReplyDelete
 26. @மங்குனி அமைச்சர் said...
  தோடா சவுண்ட பாரு உங்க அந்தபுரம் இப்ப நம்ம கண்ட்ரோல் (என்னையா உங்க அரண்மனைல இப்ப்ப்பப்புடி லஞ்சம் வாங்குறானுக) கொஞ்ச நாளைக்கு பட்டாப்பட்டி அரண்மனைலே ஒளிஞ்சுக்கோ
  //

  என்னோட அரனண்மணை ஒன்லி மகளிருக்கு தான்..
  பாம்பே போயி காரியத்த முடிச்சுட்டு வாங்க..
  ( மறக்காம டாக்டர் சர்டிஃபிகேட் வேணும்.. சொல்லிட்டேன் )
  அதுவரை , எங்க அரண்னமனை , கதவு சாத்தியிருக்கும்..

  ReplyDelete
 27. //என்னோட அரனண்மணை ஒன்லி மகளிருக்கு தான்..
  பாம்பே போயி காரியத்த முடிச்சுட்டு வாங்க..
  ( மறக்காம டாக்டர் சர்டிஃபிகேட் வேணும்.. சொல்லிட்டேன் )
  அதுவரை , எங்க அரண்னமனை , கதவு சாத்தியிருக்கும்..//

  யப்பா!!! இப்பவே கண்ணை கட்டுதே!!உஸ்....

  ReplyDelete
 28. ஆப்பரேஷனா..............கிரேட் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

  ReplyDelete
 29. @ஜெய்லானி said...
  யப்பா!!! இப்பவே கண்ணை கட்டுதே!!உஸ்....
  //

  சார்.. உங்க அரண்மனை அகழியில் கொஞ்சம் முதலைகளை
  விட்டுடுங்க சார்..
  மங்குனிக்கு ஆப்ரேசன் செலவு மிச்சமாயிடும்

  ReplyDelete
 30. சார்.. அவசரமா ஏர்போர்ட் போறேன்..
  இன்றிரவு மீண்டும் வருகிறேன்...

  ReplyDelete
 31. பிரம்மானந்தம் சூப்பரப்பு!!

  ReplyDelete
 32. @தண்டோரா ...... said...
  பிரம்மானந்தம் சூப்பரப்பு!!
  //

  அண்ணா.. அதுக்காக ஓவரா குடிக்ககூடாது..
  இப்பவே சொல்லிட்டேன்..

  ReplyDelete
 33. அந்த திமிங்கலம் மேட்டர், ஹா...ஹா...., கலக்கல் தல.

  ReplyDelete
 34. எவன் அந்தப்புரத்தை எவன்டா பங்கு போடறது... நமீதா வை வேற பங்கு போடறானுங்க... ஏன்யா பட்டு..நீ ஆதரவு குடுப்பென்னு தானே மகளிர் அணியை உனக்கு வச்சிக்கக் கொடுத்தேன்...

  யோவ் தளபதி..ரெய்ட் போய்யா..அந்தப்புரத்துல எவன் எவன் ஒளிஞ்சிருக்கான்னு பாத்து ரிப்போர்ட் குடு... பட்டு இருந்தான்னா விட்ரு...( ஏன்னா அப்பப்போ நாம மகளிர் அணி ஆஃபீஸ் போறது.. மக்களுக்குத் தெரிஞ்சிடும்!)

  ReplyDelete
 35. நீச்சல் உடம்பை அழகாக வைத்திருக்க உதவுமெனில் , திமிங்கலத்தின் உடம்பை பற்றி எனக்கு கூறுங்களேன்.: என்னால முடியல..
  :P
  இதுமூலம் நீங்க சொல்லவரும் கருத்து மட்டும் எனக்கு புரிஞ்சு போச்சு.. "வாழ்க்கையை நல்லா என்ஜோய் பன்னும்,,
  அப்படித்தானே. ?

  ReplyDelete
 36. உண்மையிலேயே தாங்க முடியலே சார், எப்பிடி எப்பிடியெல்லாம் ?

  எப்படியோ படித்தவுடன் மனது லேசானது மட்டும் உண்மை.

  ReplyDelete
 37. மிஸ்டர் பட்டாபட்டி ,,

  தகவலுக்கு நன்றி..

  நானும் இன்றிலிருந்து பீர்-க்கு மாறிட்டேன்!

  ReplyDelete
 38. @சைவகொத்துப்பரோட்டா said...
  அந்த திமிங்கலம் மேட்டர், ஹா...ஹா...., கலக்கல் தல.
  //

  சார்.. திரும்ப திரும்ப சொல்லுரேன்..
  எல்லாமே டமாசுக்கு...
  பட்டாபட்டி சொன்னானு தண்ணி அடிக்கப் போகாதீங்க..

  ReplyDelete
 39. @ரெட்டைவால் ' ஸ் said...
  எவன் அந்தப்புரத்தை எவன்டா பங்கு போடறது... நமீதா வை வேற பங்கு போடறானுங்க... ஏன்யா பட்டு..நீ ஆதரவு குடுப்பென்னு தானே மகளிர் அணியை உனக்கு வச்சிக்கக் கொடுத்தேன்...
  யோவ் தளபதி..ரெய்ட் போய்யா..அந்தப்புரத்துல எவன் எவன் ஒளிஞ்சிருக்கான்னு பாத்து ரிப்போர்ட் குடு... பட்டு இருந்தான்னா விட்ரு...( ஏன்னா அப்பப்போ நாம மகளிர் அணி ஆஃபீஸ் போறது.. மக்களுக்குத் தெரிஞ்சிடும்!)
  //
  ரெட்டை....எனக்கு தெரியாமா , ஆஃபீஸ் போறீங்களா?..
  பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியதுதான்..

  அகழி பூரா லெமன் சூசா , ஊத்தச் சொல்றேன்

  ReplyDelete
 40. @ManA © said...
  இதுமூலம் நீங்க சொல்லவரும் கருத்து மட்டும் எனக்கு புரிஞ்சு போச்சு.. "வாழ்க்கையை நல்லா என்ஜோய் பன்னும்,,
  அப்படித்தானே. ?
  //

  ஒரு லிமிட் வரை கரெக்டுதான்..
  பார்த்து பதிவுசா நடந்துக்கோங்க மானா சார்...

  ReplyDelete
 41. @கிருஷ்ணா (Krishna) said...
  உண்மையிலேயே தாங்க முடியலே சார், எப்பிடி எப்பிடியெல்லாம் ?
  எப்படியோ படித்தவுடன் மனது லேசானது மட்டும் உண்மை.
  //

  இந்த , இந்த வார்த்தைக்குத்தான் உயிரக் கொடுத்து எழுதுவது...
  நன்றி கிருஷ்ணா சார்...( புல்லாங்குழல் பத்திரம் சார்.. ஏன்னா
  இது கலிகாலம்..)

  ReplyDelete
 42. @யூர்கன் க்ருகியர் said...
  மிஸ்டர் பட்டாபட்டி ,,
  தகவலுக்கு நன்றி..
  நானும் இன்றிலிருந்து பீர்-க்கு மாறிட்டேன்!
  //

  அப்பு.. பார்த்து.. பீர ஓவராப் போட்டாலும் பிரச்சனை...

  ReplyDelete
 43. தண்ணி குடிக்கறதுல இவ்வளவு மேட்டர் இருக்கா?

  ReplyDelete
 44. இவரு போலி டாக்டருன்னு நினைக்கிறேன்; ஸ்டெதாஸ்கோப்பையே காணோம். இல்லே, அதை வித்த காசுலே தான் பீர் அடிக்க வந்திட்டாரோ? :-)

  ReplyDelete
 45. eluththu thanniyaa varuthu...vaalththukkal,

  ReplyDelete
 46. eluththu thanniyaa vanthurukku . vaalththukal,

  ReplyDelete
 47. @ஸ்ரீராம். said...
  தண்ணி குடிக்கறதுல இவ்வளவு மேட்டர் இருக்கா?
  //

  வயசில பெரியவரு சொல்றாரு.. அப்ப என்னவோ இருக்கு சார்...

  ReplyDelete
 48. @சேட்டைக்காரன் said...
  இவரு போலி டாக்டருன்னு நினைக்கிறேன்; ஸ்டெதாஸ்கோப்பையே காணோம். இல்லே, அதை வித்த காசுலே தான் பீர் அடிக்க வந்திட்டாரோ? :-)
  //

  என்னப்பு சொல்றீங்க...
  கார் மெக்கானிக் , ஸ்பானருடன், வெளிய வந்தாதான் நம்புவிங்க..

  ReplyDelete
 49. @Madurai Saravanan said...
  eluththu thanniyaa vanthurukku . vaalththukal,
  //

  வாங்க சரவணன் சார்...
  உங்கள் வாழ்த்துக்களுக்கு என் நண்றி..

  அடிக்கடி வாங்க சார்..

  ReplyDelete
 50. ஒரே தமாசுதாம்போங்க. நல்லாருக்கிதுங்க.

  ReplyDelete
 51. @மசக்கவுண்டன் said...
  ஒரே தமாசுதாம்போங்க. நல்லாருக்கிதுங்க.
  //

  வாங்க கவுண்டரே...
  சும்மா டமாசுக்கு எழுதியது..
  வந்தததுக்கு நன்றிங்க..

  ReplyDelete
 52. //பட்டாபட்டி.. said...
  சார்.. அவசரமா ஏர்போர்ட் போறேன்..
  இன்றிரவு மீண்டும் வருகிறேன்...
  //

  அது எப்படி மக்கா கரக்டா மகளிர் அணி கூட பேசும்போது (மூக்கு வேர்த்து) வந்த???
  (அங்கங்க ஆள் போட்ரிகியோ)

  ReplyDelete
 53. @மங்குனி அமைச்சர் said...
  அது எப்படி மக்கா கரக்டா மகளிர் அணி கூட பேசும்போது (மூக்கு வேர்த்து) வந்த???
  (அங்கங்க ஆள் போட்ரிகியோ)
  //

  யாரை மங்குனி சொல்றே.. ரெட்டையயா...
  ஆமா.. எங்க போயிட்டீரு...உம்ம ப்ளாக் வந்திருந்தேனே...

  ReplyDelete
 54. //யாரை மங்குனி சொல்றே.. ரெட்டையயா...
  ஆமா.. எங்க போயிட்டீரு...உம்ம ப்ளாக் வந்திருந்தேனே...//

  உன்னதான், கரக்டா நான் கிளம்பும்போது வந்த

  ReplyDelete
 55. //@ரெட்டைவால் ' ஸ் said...
  எவன் அந்தப்புரத்தை எவன்டா பங்கு போடறது... நமீதா வை வேற பங்கு போடறானுங்க... ஏன்யா பட்டு..நீ ஆதரவு குடுப்பென்னு தானே மகளிர் அணியை உனக்கு வச்சிக்கக் கொடுத்தேன்...
  யோவ் தளபதி..ரெய்ட் போய்யா..அந்தப்புரத்துல எவன் எவன் ஒளிஞ்சிருக்கான்னு பாத்து ரிப்போர்ட் குடு... பட்டு இருந்தான்னா விட்ரு...( ஏன்னா அப்பப்போ நாம மகளிர் அணி ஆஃபீஸ் போறது.. மக்களுக்குத் தெரிஞ்சிடும்!)//

  மன்னா வர்ற நம்ம பட்டாபட்டிக்கு பொறுப்பே இல்லாம போச்சு, நல்ல வேல நேத்து நான்போய் நம்ம அரண்மனைய பாத்துகிட்டேன் (பட்டாப்பட்டி தனி ஒரு பிகர உசார் பண்ணி இருக்கான்னு நினைக்கிறேன் )

  ReplyDelete
 56. @மங்குனி அமைச்சர் said...
  உன்னதான், கரக்டா நான் கிளம்பும்போது வந்த
  மன்னா வர்ற நம்ம பட்டாபட்டிக்கு பொறுப்பே இல்லாம போச்சு, நல்ல வேல நேத்து நான்போய் நம்ம அரண்மனைய பாத்துகிட்டேன் (பட்டாப்பட்டி தனி ஒரு பிகர உசார் பண்ணி இருக்கான்னு நினைக்கிறேன் )
  //

  என்ன மங்குனி பண்றது..
  அப்படியே பிக அப் பண்ணிட்டு போயிட்டேயிருக்க வேண்டியதுதான்...

  ஆமா.. என்னோட ப்ளாக்ல ஓட்டு போட்டாச்சா..
  சீக்கிரம் ஒரு முடிவெடுக்கனுமையா...

  ReplyDelete
 57. //ஆமா.. என்னோட ப்ளாக்ல ஓட்டு போட்டாச்சா..
  சீக்கிரம் ஒரு முடிவெடுக்கனுமையா...//

  ஓட்டு போட்டு ஒன் அவர் ஆச்சு (நீ ப்ளாக்-ல போடுறதுக்கு முனாடியே நான் வோட்டு போட்டேன்)

  ReplyDelete
 58. பட்டு நம்ம ஜெய்லானி லைன்ல வந்தா புடுச்சி வை . தக்காளிக்கு அவனுக்கு ஒரு பூஜை போடணும் . அவன் ப்ளாக்-ல ஒரு கமென்ட் போட்டேன் அந்த பயபுள்ள மதிக்கவே இல்ல.

  ReplyDelete
 59. This comment has been removed by the author.

  ReplyDelete
 60. கொஞ்ச நாள் வராம இருந்ததுகுல்லையே இவ்ளோ கூத்து நடந்து போச்சா.அவ்ளோ சீக்கிரம் நீறு escape ஆகா முடியாது ஓய.யோவ்!பட்டு.உம்மையும் வெளியையும் விட்ட கலாய்குரதுக்கு எனக்கு நல்லா டம்மி பீசுங்க மாற்றது ரொம்ப கஷ்டம்யா.

  ReplyDelete
 61. @மங்குனி அமைச்சர் said...
  ஓட்டு போட்டு ஒன் அவர் ஆச்சு (நீ ப்ளாக்-ல போடுறதுக்கு முனாடியே நான் வோட்டு போட்டேன்)
  //

  அடப்பாவி.. ரொம்பத்தான் பாஸ்டா இருக்க..

  ReplyDelete
 62. @மங்குனி அமைச்சர் said...
  பட்டு நம்ம ஜெய்லானி லைன்ல வந்தா புடுச்சி வை . தக்காளிக்கு அவனுக்கு ஒரு பூஜை போடணும் . அவன் ப்ளாக்-ல ஒரு கமென்ட் போட்டேன் அந்த பயபுள்ள மதிக்கவே இல்ல.
  //

  இன்னைக்கு ஆள காணேம்..
  ஆமாய்யா.. சொல்லாமா அவங்க அரண்மணைக்குப் போன,
  பய புள்ளைக பயந்துக்காது?..

  எனக்கென்னமோ , உனக்கு பயந்துகிட்டு , வெளிய வராதுனு நினைக்கிறேன்

  ReplyDelete
 63. @ILLUMINATI said...
  கொஞ்ச நாள் வராம இருந்ததுகுல்லையே இவ்ளோ கூத்து நடந்து போச்சா.அவ்ளோ சீக்கிரம் நீறு escape ஆகா முடியாது ஓய.யோவ்!பட்டு.உம்மையும் வெளியையும் விட்ட கலாய்குரதுக்கு எனக்கு நல்லா டம்மி பீசுங்க மாற்றது ரொம்ப கஷ்டம்யா.
  //

  என்னா கூத்து நடந்துடுச்சு ஓய்..
  காந்திய போட்டு தள்ளிட்டாங்களா?

  ReplyDelete
 64. பின்ன என்ன ஓய்.கலாய்குர பூமி இப்ப கலவர பூமியாவுல்ல ஆகிட்டு இருக்குது.இத எல்லாம் பாத்தா என்ன மாதிரி அப்பாவிங்களுக்கு பயமா இருக்காது? ஆமா,வீனா ஏன்யா அந்த நல்ல மனுஷன் காந்திய போட்டு தள்ளணும்னு பாக்குற?

  ReplyDelete
 65. ஆமா,இது யாரு புது பீசு,மங்குனினுகிட்டு?மானாவாரியா மொக்க போடுது....ஏம்பா பட்டு,புதுசா எதுவும் அஸிஸ்டன்ட் சேத்தியா?தெளிவா சொல்லிட்ட இல்ல,சம்பளம் எல்லாம் நம்ம கட்சியில எதிர்பார்க்க கூடாதுன்னு....

  ReplyDelete
 66. @ILLUMINATI said...
  பின்ன என்ன ஓய்.கலாய்குர பூமி இப்ப கலவர பூமியாவுல்ல ஆகிட்டு இருக்குது.இத எல்லாம் பாத்தா என்ன மாதிரி அப்பாவிங்களுக்கு பயமா இருக்காது? ஆமா,வீனா ஏன்யா அந்த நல்ல மனுஷன் காந்திய போட்டு தள்ளணும்னு பாக்குற?

  ஆமா,இது யாரு புது பீசு,மங்குனினுகிட்டு?மானாவாரியா மொக்க போடுது....ஏம்பா பட்டு,புதுசா எதுவும் அஸிஸ்டன்ட் சேத்தியா?தெளிவா சொல்லிட்ட இல்ல,சம்பளம் எல்லாம் நம்ம கட்சியில எதிர்பார்க்க கூடாதுன்னு....
  //

  ஆமா.. எங்க ரொம்ப நாளா ஆளக் காணோம்..
  மங்குனி இப்பத்தான் டிரெயினிங்க் எடுக்குது..

  பார்த்துட்டு போட்டு குடுக்கலாம் இலுமி

  ReplyDelete
 67. அட,எத்தன முறை உம்ம கிட்ட சொல்றது.basically, நான் ஒரு சோம்பேரின்னு..... :)

  ReplyDelete
 68. கவலைய விடும்.இனிமே அடிக்கடி வந்து ராவடி பண்ண வேண்டியது தான்.

  ReplyDelete
 69. என்னய்யா இலுமி! நல்லா இருக்கியா.... எங்க... அமெரிக்கா போயிருந்தியா... ஒபாமா வொஇஃப் நல்லா இருக்காளா?

  ReplyDelete
 70. ஆமா,போரும்மையா மன்னரே!நீரு கொடுக்குற சம்பளத்துக்கு அமெரிக்கா என்ன,அம்ஜிகரை கூட போக முடியாது.இதுல எகத்தாளம் வேற....

  ReplyDelete
 71. ஆமா,ஏம்பா ரெட்ட.என்ன உம்ம ப்லோக்ள ஒரே களேபரமா இருக்குது....

  ReplyDelete
 72. எலேய் இலுமி...சச்சினை ஒருத்தன் கேவலப் படுத்திப் புட்டாமுலே... ஜட்டி விளம்பரத்துல தான் நடிக்கதான் செஞ்சுரி போட்றான்னுட்டான்...தக்காளி...இதுக்கு மேல பொறுத்துக்க முடியாதுலா..!

  ReplyDelete
 73. @ILLUMINATI said...
  அட,எத்தன முறை உம்ம கிட்ட சொல்றது.basically, நான் ஒரு சோம்பேரின்னு..... :)
  கவலைய விடும்.இனிமே அடிக்கடி வந்து ராவடி பண்ண வேண்டியது தான்.
  //

  சோம்பேறி தெரியும்.. நீரு கும்ப கரண மாறியில்லெ ரொம்ப நாள்
  கழிச்சு வந்திருக்கே..

  ReplyDelete
 74. @ரெட்டைவால் ' ஸ் said...
  என்னய்யா இலுமி! நல்லா இருக்கியா.... எங்க... அமெரிக்கா போயிருந்தியா... ஒபாமா வொஇஃப் நல்லா இருக்காளா?
  //

  கேட்டா மட்டும் பத்தாதய்யா.. கொஞ்சம் அமெரிக்க டாலரை
  கொடுத்து அனுப்பியுருக்கணும்..

  அப்பதான் அமெரிக்க லாலா ஸ்வீட் வாங்கிட்டு வருவாங்க..

  ReplyDelete
 75. ILLUMINATI said...
  ஆமா,போரும்மையா மன்னரே!நீரு கொடுக்குற சம்பளத்துக்கு அமெரிக்கா என்ன,அம்ஜிகரை கூட போக முடியாது.இதுல எகத்தாளம் வேற....
  //

  அட.. இதுக்குதான் மங்குனிக்கு எவ்வளவு சம்பளம் என கேட்டையா..

  ReplyDelete
 76. அட விடு ரெட்ட.நம்ம ஊரு பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க.’ஆட தெரியாதவள் முற்றம் கோணல்னு சொன்னாளாம்’ன்னு.கொற சொல்றதையே பொழப்பா வச்சுக்கிட்டு சுத்துற gang அது.கெடக்கானுங்க விடு.....

  ReplyDelete
 77. இவனுங்க சொல்லி சச்சினுக்கு கெட்ட பெரு வரவா போகுது?எனக்கு கிரிக்கெட் பிடிக்காது தான்.ஆனா,சச்சின எனக்கு ரொம்ப பிடிக்கும்.அது தான் அவரோட reach. HE IS A LEGEND UNTO HIMSELF. கொற சொல்ற கூட்டம் கொற சொல்ல தன் செய்யும்.இதுக்கு இவ்ளோ மதிப்பு கொடுக்குறது தான் நாம செய்யுற தப்பு.

  ReplyDelete
 78. ஆனா,உன்னோன்னு கவனிசீரா?பயலுக ஜட்டி மேல தான் கண்ணா இருக்கானுங்க

  ReplyDelete
 79. //ILLUMINATI said...
  ஆமா,இது யாரு புது பீசு,மங்குனினுகிட்டு?மானாவாரியா மொக்க போடுது....ஏம்பா பட்டு,புதுசா எதுவும் அஸிஸ்டன்ட் சேத்தியா?தெளிவா சொல்லிட்ட இல்ல,சம்பளம் எல்லாம் நம்ம கட்சியில எதிர்பார்க்க கூடாதுன்னு....//

  ஐயா வணக்கம்
  சார் நான் புதுசு சார் , வந்து ஒரு வாரம் தான் ஆகுது
  நமக்கு சம்பளம் எல்லாம் ஒன்னும் வேணாம் சார் டெய்லி சரக்கு, சைடிஸ் மூணு வேல சாப்பாடு போட்டு ஒரு குட்டி அரண்மனை 20 சர்வன்ட்ஸ் (எல்லாமே பெண் பணிபென்களாகவே இருக்கட்டும் ஹி ஹி ஹி ....) அப்புறம் கஜானா சாவி இது போதும் சார்

  ReplyDelete
 80. @ILLUMINATI said...
  @ரெட்டை
  அட விடு ரெட்ட.நம்ம ஊரு பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க.’ஆட தெரியாதவள் முற்றம் கோணல்னு சொன்னாளாம்’ன்னு.கொற சொல்றதையே பொழப்பா வச்சுக்கிட்டு சுத்துற gang அது.கெடக்கானுங்க விடு.....

  இவனுங்க சொல்லி சச்சினுக்கு கெட்ட பெரு வரவா போகுது?எனக்கு கிரிக்கெட் பிடிக்காது தான்.ஆனா,சச்சின எனக்கு ரொம்ப பிடிக்கும்.அது தான் அவரோட reach. HE IS A LEGEND UNTO HIMSELF. கொற சொல்ற கூட்டம் கொற சொல்ல தன் செய்யும்.இதுக்கு இவ்ளோ மதிப்பு கொடுக்குறது தான் நாம செய்யுற தப்பு.

  ஆனா,உன்னோன்னு கவனிசீரா?பயலுக ஜட்டி மேல தான் கண்ணா இருக்கானுங்க
  //

  யோவ்.. பட்டாபட்டிய கிழிச்சாச்சு..
  இப்ப ஜட்டிய கிழிக்க ப்ளான் பண்றீங்களா?..

  ReplyDelete
 81. @மங்குனி அமைச்சர் said...
  ஐயா வணக்கம்
  சார் நான் புதுசு சார் , வந்து ஒரு வாரம் தான் ஆகுது
  நமக்கு சம்பளம் எல்லாம் ஒன்னும் வேணாம் சார் டெய்லி சரக்கு, சைடிஸ் மூணு வேல சாப்பாடு போட்டு ஒரு குட்டி அரண்மனை 20 சர்வன்ட்ஸ் (எல்லாமே பெண் பணிபென்களாகவே இருக்கட்டும் ஹி ஹி ஹி ....) அப்புறம் கஜானா சாவி இது போதும் சார்
  //

  ஏய்யா மங்குனி.. ரொம்ப சின்ன ஆசையா இருக்கேய்யா..
  அதுக்கு பட்டாபட்டி ஆபிஸ , உம்பேர்ல எழுதி வெச்சுட்டா ,
  பிரச்சனை முடிஞ்சதே..

  (ஹும்.. நல்லாதான் யோசனை பண்றாங்க.. நடக்கட்டும்..
  நடக்கட்டும்..

  கலாம் அய்யா வேற , கனவு காணுங்கள்னு சொல்லிட்டுப் போயிட்டாரு..
  ஆனா, பய புள்ளைக , கனவையே பெருசா காண்றானுகளே...முருகா...)

  ReplyDelete
 82. வணக்கம்... தாங்கள் ""ராஜா" அருப்புகோட்டை" என்பவரது "பிஸியா வேலை செய்வது போல நடிப்பது எப்படி?" என்ற பதிவில் பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள்.
  தங்களுக்கு ஒரு சிறு தகவல். அந்தப் பதிவில் உள்ள விஷயம் (content) சுமார் ஒன்றேகால் வருடம் முன்பே யூத்ஃபுல் விகடனில் "(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?" என்ற பெயரில் நான் எழுதி வெளி வந்தது. அதன் லிங்க் இதோ http://youthful.vikatan.com/youth/yeskhawit17072009.asp அதைப்போய் அப்படியே திருடியிருக்கிறார் திரு.அருப்புக்கோட்டை ராஜா. அந்த திருட்டுப்பதிவின் லிங்க் http://apkraja.blogspot.com/2010/09/blog-post_17.html இதில் கொடுமை என்னவென்றால் இதை அப்படியே ஆறேழு மாதங்களுக்கு முன்பு கல்கி புத்தகத்தில் ஜான்ஸி ராணி என்ற பெயரில் யாரோ காப்பியடித்து வெளியிட்டிருந்தார்கள். இதையெல்லாம் கண்டித்து "படைப்புத் திருட்டு, காப்பி" என்ற பெயரில் நான் கட்டுரை எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையின் லிங்க் இதோ... http://yeskha.blogspot.com/2010/08/blog-post_09.html
  என் கண்டனங்கள். மனசாட்சி இருந்தால் தாங்களும் தங்கள் கண்டனத்தைத்தெரிவித்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்..
  நூறு பதிவு எழுதிவிட்டேன். முப்பதாயிரம் ஹிட்ஸ் அடித்துவிட்டேன் என்றெல்லாம் பீத்தல் வேறு.. இதே போல் எத்தனை பதிவுகளை காப்பியடித்து எழுதினாரோ தெரியவில்லை..

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!