Pages

Tuesday, February 23, 2010

ஆந்திராவில் தமிழன் மீது கொலை வெறித் தாக்குதல்?

செய்தி...
ஆந்திராவில் தமிழக இளைஞர்களுக்கு எதிரான தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எ‌ன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அ‌ம்மா‌நில முதலமை‌ச்ச‌ர் ரோச‌ய்யாவு‌க்கு கடித‌ம் எழு‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌‌ர் இ‌ன்று ஆந்திர முதலமை‌ச்ச‌ர் ரோசய்யா, மத்திய அமை‌ச்ச‌ர்கள் ப.சிதம்பரம், விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகரில் பெல் நிறுவன வேலைக்காக தேர்வு எழுதச் சென்ற தமிழக இளைஞர்கள் மீது தெலங்கானாப்பகுதி வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்திய நிகழ்ச்சி கடும் கண்டனத்திற்குரியதாகும்.

பெல் நிறுவன 4ஆம் தகுதி ஊழியர்களின் வேலைக்கான எழுத்துத் தேர்வு கடந்த 14ஆ‌ம் தேதி நடந்தது. அதில் ஐ.டி.ஐ. படித்த தமிழகத்தின் பல்வேறு மாவட்ட இளைஞர்கள் 800 பேர் கலந்து கொண்டனர். அவர்களுள் 600 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்கள் 17ஆ‌ம் தேதி நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அதற்காக ஹைதராபாத் நகரில் உள்ள பெல் நிறுவன ஊழியர்கள் குடியிருப்புகளில் தங்கியிருந்தனர்.

இந்நிலையில் தெலங்கானா பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள் அக்குடியிருப்புகளுள் அத்துமீறி நுழைந்து தமிழக இளைஞர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். அதோடு பெல் நிறுவன தமிழக ஊழியர்களும் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடமைகளையும், வன்முறையாளர்கள் பறித்துக் கொண்டனர்.

அக்கொலை வெறித் தாக்குதலில் இருந்து தப்பித்து தமிழக இளைஞர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்க முடியாமல் தமிழகம் திரும்பியுள்ளனர். நெஞ்சையே பதறவைக்கும் இக் கொடூரச் செய்தியை அறிந்து தமிழகமே அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்தியத் திருநாட்டின் அடிப்படை மக்கள் வாழ்வுரிமைச் சட்டப்படி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான அனைத்து மாநில மக்களுக்கும் எந்த மாநிலத்திலும் வாழ தொழில் புரிய, மத்திய, மாநில அரசுகளில் வேலை வாய்ப்புகளைப் பெற முழு உரிமை உண்டு.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த குறிப்பாக தெலங்கானாப் பகுதி மக்கள் ஏராளமானோர் தமிழகத்தில் அரசு மற்றும் பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். சுமூகமான வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். ஆனால் ஆந்திராவில் தமிழக இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட வன்செயல் கொடுமை இந்திய ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு மிகவும் விரோதமானது.

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு நாட்டில் சாதி, இன, மதம் மற்றும் மாநில வெறித்தனச் செயல்பாடுகளின் தீவிரவாதத்தை ஒழித்திட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஆந்திராவில் தமிழக இளைஞர்களுக்கு எதிரான தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீண்டும் நடைபெறும் பெல் நிறுவன நேர்முகத் தேர்வுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல அம்மாநிலத்திலுள்ள அனைத்து தமிழக மக்களின் வாழ்வுக்கும், தொழிலுக்கும் உரிய உத்தரவாதம் தரப்பட வேண்டும். அம்மாநில அரசுக்கான அக்கடமையை அம்மாநில முதலமை‌ச்ச‌ர் உரிய நடவடிக்கையின் மூலம் செயல்படுத்துவார் என்று பெரிதும் நம்புகிறோம் எ‌ன்று த‌ங்கபாலு கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

 --------------------------------------------------------------------------------------------------------------

எனது மனத்திலே தோன்றியவை....

யார் இந்த தங்கபாலு?
என்னா சார்.. டம்மி பீஸ் எல்லாம் கடிதம் எழுத ஆரம்பித்துவிட்டது..
பசுமைப் புரட்சி , ஓஷோன் ஓட்டை எல்லாம் வாய் கிழிய பேசுபவர்கள் , கடிதம் எழுதி,  துரோகம் செய்த வாலுக்கு என்ன பண்ணப்போகிறோம்..


கடிதம் எழுதினால பிரச்சனை தீர்ந்துவிடுமா?ப.சி என்ன அவ்வளவு பவர்புல் ஆளா ?
ஒரு ஆளு என்னடானா , தந்தியா அடிக்கிறாரு..
இந்தாளு கடிதமா எழுதறாரு.. என்ன கொடுமையாடா சரவணா....
அதுமில்லாமல், நாம் இருப்பது  சோனியா ஆட்சியிலா , இல்லை ...ப.சி ஆட்சியிலா  ,  இல்லை  சிங் ஆட்சியிலாகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி , எந்த மாநில மக்களுக்கும் எந்த மாநிலத்திலும் வாழ மற்றும் தொழில் புரியலாமா?
அப்படியென்றால், ஏன் காஷ்மீரில் , மற்ற மாநிலத்தினர்  இடம் வாங்க முடியாது...  அதற்கு தேசிய கட்சி என்ன செய்யப் போகிறது?
வன்செயல் கொடுமை இந்திய ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு மிகவும் விரோதமானது.   மன்மோகன் சிங் அரசு,  தீவிரவாதத்தை ஒழித்திட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறதா?..
ஆனால் இலங்கை பிரச்சனையில் எவ்வளவு தமிழர்கள் இறந்தார்கள். அப்போது  ஓன்பது ஓட்டையும் அடைத்துவிட்டதா?..


கடைசியாக....

இடம் வாங்க நினைப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி..
 •  மழை பெய்தால் உடனடியாக வடிந்துவிடும் வசதி...
 • தோண்டத்தோண்ட நல்ல களிமண் கிடைக்கும் பூமி  

சகாய   விலைக்கு உள்ளது..   உடனடி கிரயம்.. முந்துங்கள்..

(கார்திக் , கனி  என தொடங்கும் பெயருள்ளவர்களுக்கும் ,
நிதி என்று முடியும் பெயருள்ளவர்களுக்கும் ,
இடம் கிடையாது என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம்..


மேலும்  படத்துக்கும் , இடத்துக்கும் சம்பந்தம் இல்லை..எனவே தமிழக ஜனங்களே.....குழப்பிக்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கிறோம்...)
தமிழன் , தன்னை தானே காப்பாற்றிக்கொள்ளும் அறிவாளிகள்.. அவர்களுக்கு இந்த பன்னாடைகளின்  கடிதமோ  அல்லது தந்தியோ  தேவையில்லை என்பது என் விருப்பம்...

What do you think ?
.
.

28 comments:

 1. கடிதமும் தந்தியும் கதிரையில் இருந்து அடித்தால் சகலதும் சரியாகி விடும்

  ReplyDelete
 2. @உருத்திரா said...
  கடிதமும் தந்தியும் கதிரையில் இருந்து அடித்தால் சகலதும் சரியாகி விடும்
  //

  வாருங்கள் உருத்திரா,
  இந்த ஈனப் பிறவிகள் , இந்த ஜென்மத்தில் திருந்தப்போவதில்லை..
  தமிழனைக் காப்பாற்ற , உள்ளம் துடிக்கிறதாம்...

  செய்தி படித்த என் கோபத்தின் வெளிப்பாடே இந்த பதிவு..

  ReplyDelete
 3. என்னமோ போங்க பட்டி,

  தலைப்புக்கும் தலைல அடிச்சிக்கிற போட்டோவும்..!

  ---

  சாப்டீங்களா?

  (ஐயோ யாருமே இப்படி கேட்க்கலியேன்னு அழுவக்கூடாது..:)

  ReplyDelete
 4. @ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said..
  என்னமோ போங்க பட்டி,
  தலைப்புக்கும் தலைல அடிச்சிக்கிற போட்டோவும்..!
  சாப்டீங்களா?
  (ஐயோ யாருமே இப்படி கேட்க்கலியேன்னு அழுவக்கூடாது..:)
  //

  ஆகா, நிசமாவே அழுக வெச்சுடுவீங்க போலிருக்கே...
  நல்லா மூக்கு புடிக்க சாப்பிட்டாச்சு சார்...
  சார்.. திரும்பி போகும் போது பத்திரமா போங்க..

  த(ரை)லை வழுக்கும் .. அதனாலச் சொன்னேன்..

  ReplyDelete
 5. //யார் இந்த தங்கபாலு?
  என்னா சார்.. டம்மி பீஸ் எல்லாம் கடிதம் எழுத ஆரம்பித்துவிட்டது..///

  அதானே நம்ம தாத்தாவுக்கு முன்னே!!!.,பாருங்க ராசய்யா வேறு இந்த டம்மி பீஸுக்கு மதிப்பு குடுத்து பதில் போடுறாரு!!!.

  ReplyDelete
 6. தோண்டத்தோண்ட நல்ல களிமண் கிடைக்கும் பூமி
  சகாய விலைக்கு உள்ளது.. உடனடி கிரயம்.. முந்துங்கள்..

  ///////////////////////////

  யோவ் பட்டாபி...பொரம்போக்கு நிலமா இருக்கேய்யா...?

  ReplyDelete
 7. (மீண்டும் நடைபெறும் பெல் நிறுவன நேர்முகத் தேர்வுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல அம்மாநிலத்திலுள்ள அனைத்து தமிழக மக்களின் வாழ்வுக்கும், தொழிலுக்கும் உரிய உத்தரவாதம் தரப்பட வேண்டும்)


  இந்தளு சொல்வதை பார்த்தல் சரியாய் அடிகல்லை என்று கவலைபடுகிறார் போல.
  மீண்டும் நடைபெறும் என்றும் அம்மாநிலத்திலுள்ள அனைத்து தமிழக மக்களின் வாழ்வுக்கும், தொழிலுக்கும் ஆப்பு வைக்கவும் என்று சொல்வதை போல் உள்ளது.

  ReplyDelete
 8. @ஜெய்லானி said...
  அதானே நம்ம தாத்தாவுக்கு முன்னே!!!.,பாருங்க ராசய்யா வேறு இந்த டம்மி பீஸுக்கு மதிப்பு குடுத்து பதில் போடுறாரு!!!.
  //

  அதுதான் சார் கலிகாலம் என்பது..
  நாடு எப்பவோ முன்னேறியிருக்க வேண்டியது..
  நாதாரிகள் விட மாட்டார்கள் சார்..

  ReplyDelete
 9. @ரெட்டைவால் ' ஸ் said...
  யோவ் பட்டாபி...பொரம்போக்கு நிலமா இருக்கேய்யா...?
  //

  ரெட்டை..
  பொறம்போக்கா இருந்தா என்னய்யா?..
  நடு செண்டர்ல கிணறு வெட்டலாம்.. எங்க வேணா கொடி நட்டலாம்..
  இந்த நாதாரியும், ஏன்-னு கேட்காது..

  ReplyDelete
 10. @Agila Ulaga Superstar said...
  இந்தளு சொல்வதை பார்த்தல் சரியாய் அடிகல்லை என்று கவலைபடுகிறார் போல.
  மீண்டும் நடைபெறும் என்றும் அம்மாநிலத்திலுள்ள அனைத்து தமிழக மக்களின் வாழ்வுக்கும், தொழிலுக்கும் ஆப்பு வைக்கவும் என்று சொல்வதை போல் உள்ளது.
  //

  ஆமா சார்.. போட்டு குடுக்கிறார்...
  இல்லாட்டி அரசியல்ல காலம் தள்ளரது எப்படி?

  ReplyDelete
 11. வெளியூர்காரன் ப்ளாக்ல பாதி தலைக்கு கீழ போட்டோ..
  உங்க ப்ளாக்ல பாதி தலை மேல போட்டோ..

  இரண்டையும் ஒட்ட வைத்தால் வெளியூர்காரன் யார் என தெரியுமா பட்டாபட்டி?

  ReplyDelete
 12. @மனிதன் said...
  வெளியூர்காரன் ப்ளாக்ல பாதி தலைக்கு கீழ போட்டோ..
  உங்க ப்ளாக்ல பாதி தலை மேல போட்டோ..

  இரண்டையும் ஒட்ட வைத்தால் வெளியூர்காரன் யார் என தெரியுமா பட்டாபட்டி?
  //  ஆகா...நல்லா கோத்துடுங்க சார்..

  அந்த போட்டோவுக்கும் , இந்த போட்டோவுக்கும் சம்பந்தம் இல்லை சார்..

  வெளியூர்காரன், நம்ம "ஜெயலலிதா" மாறி... அவருக்கு பட்டாபட்டி யாருனே தெரியாது..
  அதுவுமில்லாம , பட்டாபட்டி என்ன பெரிய ம%$# சார்..

  உங்களுக்கு கொத்து புரோட்டா படிச்சா சொல்லுங்க..
  நானும் வரேன்..விருப்பமிருந்தா பேசிட்டே சாப்பிடலாம்..


  இல்ல , போயி நம்ம பொழப்ப பார்க்கலாம்...

  ReplyDelete
 13. இவ்வளவு ஆதங்கமிருந்தும் கூட நீங்க தங்கபாலுவுடைய புகைப்படத்தை (அகப்பட்டவரை) போட்டு உங்களுடைய பெருந்தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறதை நினைக்கும்போது ஒரு நாள் லீவு போட்டு அழலாமா என்று தோன்றுகிறது. நீங்க ரொம்ப நல்லவருண்ணே!

  ReplyDelete
 14. @சேட்டைக்காரன் said...
  இவ்வளவு ஆதங்கமிருந்தும் கூட நீங்க தங்கபாலுவுடைய புகைப்படத்தை (அகப்பட்டவரை) போட்டு உங்களுடைய பெருந்தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறதை நினைக்கும்போது ஒரு நாள் லீவு போட்டு அழலாமா என்று தோன்றுகிறது. நீங்க ரொம்ப நல்லவருண்ணே!
  //

  சாமி..நியூஸ் படிச்சுட்டுத்தான் இந்த பதிவப் போட்டேன்..
  இதுகெல்லாம் லீவு போட்டு அழலாமா சார்...

  நல்லவருனா சொன்னீங்க..
  நான் நல்லவனா இருந்திருந்தா , நல்லாயிருக்குமேனு நினைக்கிறேன் சார்..

  ReplyDelete
 15. போஸ்டல் டிபார்ட்மெண்டை வாழ வைக்கிறாங்க தல.

  ReplyDelete
 16. @சைவகொத்துப்பரோட்டா said...
  போஸ்டல் டிபார்ட்மெண்டை வாழ வைக்கிறாங்க தல.
  //

  சொல்ல முடியாது சார்..
  இருந்தாலும் இருக்கும்..

  இண்டர் நெட் காலத்திலிருந்து , கற்காலத்துக்கு கொண்டு செல்ல,
  இவனுகளை விட்டா, நமக்கு யார் சார் இருக்கா..?

  ReplyDelete
 17. இந்த போஸ்டல் டிபார்ட்மென்ட்- அ ஒழிசிட்டா இந்த கடிதம் எழுதுறவுக என்னா பன்னுவாக (முக்கியமா தாத்தா )

  ReplyDelete
 18. @மங்குனி அமைச்சர் said...
  இந்த போஸ்டல் டிபார்ட்மென்ட்- அ ஒழிசிட்டா இந்த கடிதம் எழுதுறவுக என்னா பன்னுவாக (முக்கியமா தாத்தா )
  //


  என்னத்தப் பெருசா கிழிப்பானுக..
  ஏதாவது ஒரு நிதிக்கு , "விமானத்துறை அமைச்சர் பதவி"யக் வாங்கிட்டு
  டெய்லி , பறந்து போயி சொல்லுவானுக சார்..

  ReplyDelete
 19. //ஆனால் இலங்கை பிரச்சனையில் எவ்வளவு தமிழர்கள் இறந்தார்கள். அப்போது ஓன்பது ஓட்டையும் அடைத்துவிட்டதா?..//

  சரியான கேள்வி.

  //மேலும் படத்துக்கும் , இடத்துக்கும் சம்பந்தம் இல்லை..எனவே தமிழக ஜனங்களே.....குழப்பிக்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கிறோம்...)//

  படத்த கடைசியாதான் கவனிச்சேன். சிரிப்ப அடக்க முடியல.

  ReplyDelete
 20. @ஆதி மனிதன் said...
  //ஆனால் இலங்கை பிரச்சனையில் எவ்வளவு தமிழர்கள் இறந்தார்கள். அப்போது ஓன்பது ஓட்டையும் அடைத்துவிட்டதா?..//
  சரியான கேள்வி.
  //மேலும் படத்துக்கும் , இடத்துக்கும் சம்பந்தம் இல்லை..எனவே தமிழக ஜனங்களே.....குழப்பிக்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கிறோம்...)//
  படத்த கடைசியாதான் கவனிச்சேன். சிரிப்ப அடக்க முடியல.
  //


  இவர்கள், அன்னை மேல ( அதுதாங்க இத்தாலி பிகரு...) தூசு பட்டா, துடிச்சுப்போயிடுவானுக..
  ஆனா சொந்த தாயிக்குக்கு சோறு போட மாட்டானுக பன்னாடைக..

  ReplyDelete
 21. @மங்குனி அமைச்சர் said...
  pattaapattin innaikku romba kovama irukkapla theriyathu
  //

  சே.. சே.. அப்படியெல்லாம் இல்லை மங்குனி...

  ReplyDelete
 22. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..
  போயிட்டே இருக்க வேண்டியதுதான்

  ReplyDelete
 23. @மங்குனி அமைச்சர் said...
  ஒரு நாள்தான் சாட் பண்ணோம்
  //

  அடப் போங்கப்பு...

  Don't take it very serious..
  Life is fun...
  Just enjoy and carry on....

  அடுத்த பதிவப் போடுற வழியப் பாருங்க...

  ReplyDelete
 24. //இடம் வாங்க நினைப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி..

  மழை பெய்தால் உடனடியாக வடிந்துவிடும் வசதி...
  தோண்டத்தோண்ட நல்ல களிமண் கிடைக்கும் பூமி

  //

  மிஸ்டர் பட்டாபட்டி..

  அப்ரோச் பண்ணி பார்த்தேன்.
  இடம் முழுதும் இத்தாலிகாரி குத்தகைக்கு எடுத்து இருககாளாம்!

  ReplyDelete
 25. மிஸ்டர் பட்டாபட்டி..

  மயிருக்கு கூட உதவாத இந்த இடத்த வாங்கி என்னத்த புடுங்குறது ??

  ReplyDelete
 26. @யூர்கன் க்ருகியர் said...
  மிஸ்டர் பட்டாபட்டி..
  அப்ரோச் பண்ணி பார்த்தேன்.
  இடம் முழுதும் இத்தாலிகாரி குத்தகைக்கு எடுத்து இருககாளாம்!
  //

  ஆமாமா .. பிஸ்ஸா செய்ய நல்ல இடம் தான் யூர்கன் க்ருகியர்

  ReplyDelete
 27. @யூர்கன் க்ருகியர் said...
  மிஸ்டர் பட்டாபட்டி..
  மயிருக்கு கூட உதவாத இந்த இடத்த வாங்கி என்னத்த புடுங்குறது ??
  //

  சறுக்கலாம்.. குழி வெட்டலாம்..
  ஆடலாம்.. பாடலாம்..

  அட பொழுது போகலேனா பொக்கலைன் விட்டுத்
  தோண்டலாம்...

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!