Pages

Thursday, February 18, 2010

ராதிகா செல்போன் சுக்கு நூறாக உடைந்தது..மக்கள் அதிர்சி

செய்தி...
முதல்வர் கருணாநிதிக்கு திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாவில் வழக்கம் போலவே ஏகப்பட்ட குழப்பங்கள், கடைசி நேர சொதப்பல்கள்.  நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏறத்தாழ 7,000 பேர் அமரலாம். ஆனால் 14,000 அழைப்பிதழ்கள் அடிக்கப்பட்டுவிட்டனவாம்.

இதனால் விழா நாளன்று உள்ளே இருந்த கூட்டத்துக்கு நிகராக வெளியிலும் குழுமி நின்று சாலைளை ஸ்தம்பிக்க வைத்தனர்.  இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்ட முக்கியமானவர் ராதிகா சரத்குமார். அவர் கொண்டு வந்திருந்த பாஸ், அடையாள அட்டை என எதைக் காட்டியும் உள்ளே அனுமதிக்க தாமதப்படுத்தினர்.

இதனால் கடும் ஆத்திரம் கொண்ட ராதிகா, திட்டிக் கொண்டே, அரங்கத்துக்குள் இருந்த சரத்குமாரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தாராம். ஆனால் செல்போன் அலைகள் தடுக்கப்பட்டிருந்ததால், சரத்தை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் பலனில்லாததால், அந்த மகா காஸ்ட்லி செல்போனை ஆத்திரத்துடன் நடு ரோட்டில் போட்டு உடைத்தார் ராதிகா.

பின்னர் மிகக் கடுமையான வார்த்தைகளால் திட்டியபடியே தனது காருக்குள் அமர்ந்தவர், வீட்டுக்கு போய் விட்டார்.
ராதிகாவுக்கு மட்டுமல்ல, இன்னும் பல நட்சத்திரங்களுக்கும் அன்றைக்கு இதே நிலைமைதான் ஏற்பட்டதாம்.
'நான்கு மணிக்கே அரங்குக்கு வந்து இருக்கையில் அமரச் சொல்லி அழைப்பிதழில் போட்டிருந்தோம். ஆனால் இவர்கள் எப்போதும் போல மிகத் தாமதமாக, கடைசி நேரத்தில் வந்ததால் இந்த நிலை. அதைப் புரிந்து கொள்ளாமல் எங்களைத் திட்டி என்ன பயன்' என்று பதிலுக்கு கத்தினார் வாசலில் இருந்த ஒரு காவலர்.

------------------------------------------------------------------------------------------------------தலைவர்  அவர்களுக்கு..
உங்கள் உடன்பிறப்பு எழுதும் மடல்..

அய்யா..உங்களுக்கு நடத்திய பாராட்டு விழாவில் பங்குபெற பறந்தோடி வந்த எங்கள் ஜக்குGirl- லை, உள்ளே விட  தாமதப்படுத்தியதால் , அவர் ஆத்திரத்தில் தனது தொலைபேசியை உடைத்து விட்டார்...

அவர் சமீபத்தில் 17 கோடி ரூபாய் நஷ்டத்துக்கு கண்ணீர்விட்டு அழுத காட்சி,  உங்களுக்கு மறந்திருக்கலாம்..  (  காரணம் நமீதா என்ற கட்டுக்கதையை நான் நம்பவில்லை  )  அத்துடன் இந்த செல்போன் செலவு வேறு..

எனவே , தயவுசெய்து நீங்கள் , மேடத்துக்கு நல்ல செல்போன்கள்( Standby  தலைவா...)  + 17 கோடிகளை   அள்ளித் தருவீர்கள் என் நம்புகிறோம்... .பெண்களின் காவலன் நீங்கள்... ஒரு பெண்ணின் கண்ணீரை
விட உங்களுக்கு அரசாங்கப் பணி முக்கியமில்லை என இந்த நேரத்ததில்  நினைவுப்படுத்த விரும்புகிறேன்..

மேலும் உங்களுடைய இலவச திட்டத்தினால் கஜானா காலியாயிவிட்டது என ஆற்காட்டார் புலம்புவது  என் காதில் விழுகிறது..போக்குவரவு மற்றும்  தகவல் தொடர்பு துறையில் சில மாற்றங்கள் செய்தால்  ராதிகா மேடம் கண்ணீரை துடைத்துவிடலாம் என்பது என் கருத்து..மேலும் முடியாவிட்டால்,
இருக்கவே இருக்கிறார்கள் இந்த NRI பயல்கள்...( தாளித்துவிடலாம் தல..)

மேடம்   நாட்டாமையை அழைத்தபோது , அவர் தகவல் தொடர்பு எல்லைக்கு அப்பால்  உள்ளதாக செய்திகள் வந்துள்ளது.. எனவே , அவருக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கவேண்டும்  என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..( பாவம் சார்.. நம்ம நாட்டாமை )

வாசலில் இருந்த ஒரு காவலர் , மேடத்தைப் பார்த்து கத்தியதாகக் கேள்விப்பட்டேன்.  எப்படி கணவனாக,  எங்கள் நாட்டாமைக்கு இல்லாத உரிமை , .அரசாங்க சம்பளம்   வாங்கும் ஒரு காவலருக்கு வந்தது?.இதற்கும் தகுந்த ஆவன செய்வீர்கள் என நம்புகிறோம்..   (  தயவு செய்யு அவரை தூக்கில் போட வேண்டாம்.. பாவம் புள்ளை குட்டிக்காரன் .. சும்மா பயங்காட்ட ஆயுள் தண்டனை போதும் )..

- இவன்  உடன்பிறப்பு

79 comments:

 1. அப்பாவிFebruary 18, 2010 at 2:47 PM

  நீங்கள் யாரை பற்றி வேண்டுமானாலும் எழுதுங்கள், கவலை இல்லை.ஆனால், தங்க தலைவி, வருங்கால முதல்வர்(?) நக்மா பெயரை( பெயரை மட்டும் ) கெடுக்கும் விதமாக எழுதவேண்டாம். ஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம் வாங்கும்( நடிக்க தாங்க)தலைவிக்கு, கோடி எல்லாம் தெரு கோடி. இது அவரை ஆதரிக்கும் ஆயிரக்கணக்கான தொழிலதிபர்கள் மேல் சத்தியம்.

  ReplyDelete
 2. @அப்பாவி said...

  //

  ஆகா.. இதென்ன புதுக்கதையாயிருக்கு...
  ஆமா சார்.. பேர அப்பாவி னு வச்சுகிட்டு , எல்லா விவரமும் , விரல் நுனில வெச்சிருக்கீங்க சார்..
  ( அந்தம்மா என்னமோ கன்னியாஸ்திரியா போயிடுச்சுனு சொன்னாங்க..)

  ReplyDelete
 3. எங்க தலைவிக்கு வேலையில்லையினு நினைச்சீங்களா?..
  அவங்க பிஸி ஷெட்யூல விழாவுக்கு வந்ததே பெரிசு..

  தடுக்கறாங்களாம் தடுக்கி..
  ஜாக்கிரதை..சொல்லிப்பிட்டேன்

  ReplyDelete
 4. @manithan said...
  எங்க தலைவிக்கு வேலையில்லையினு நினைச்சீங்களா?..
  அவங்க பிஸி ஷெட்யூல விழாவுக்கு வந்ததே பெரிசு..
  தடுக்கறாங்களாம் தடுக்கி..
  ஜாக்கிரதை..சொல்லிப்பிட்டேன்
  //

  அய்யா மனிதா..
  யாரு ஜாக்கிரதை..
  உங்க மேடம் ட்ரை பண்ணினப்ப, அரங்கத்திற்க்குள்ள இருந்தாரே...
  அப்ப எங்க அய்யா என்ன வேலை வெட்டியில்லாத புண்ணாக்கா..?

  எங்க அய்யாவப் பத்தி பேசினே .... தொலச்சுப்புடுவேன் தொலச்சு

  ReplyDelete
 5. மன்னா உங்க வலைபூவை பார்த்ததிலிருந்து தெரியுது உங்களுக்கு வேற வேலையில்லைன்னு , அதுனாலதான் இப்படி தோணும் . பேசாம நல்லா எலுமிச்சம்பழம் போட்டு தலைக்கு குளிச்சுட்டு வாங்க நம்ம கரடி வேட்டைக்கு போகலாம் (நிறைய போர் வீரர்களோடுதான் ) . சார் சும்மா தமாசுக்கு உண்மையில் நல்லா
  இருந்தது (ரூம் போட்டு யோசிப்பிங்களோ)
  இந்த தமிழ் டைபிங் வேற புதுசா டைப் பண்ணும்போது சரக்கு அடிக்கமே போதையயிடுது

  யப்பா இப்பவே கண்ணகட்டுதே

  ReplyDelete
 6. @ மங்குனி அமைச்சர் said...
  மன்னா உங்க வலைபூவை பார்த்ததிலிருந்து தெரியுது உங்களுக்கு வேற வேலையில்லைன்னு , அதுனாலதான் இப்படி தோணும் . பேசாம நல்லா எலுமிச்சம்பழம் போட்டு தலைக்கு குளிச்சுட்டு வாங்க நம்ம கரடி வேட்டைக்கு போகலாம் (நிறைய போர் வீரர்களோடுதான் ) . சார் சும்மா தமாசுக்கு உண்மையில் நல்லா
  இருந்தது (ரூம் போட்டு யோசிப்பிங்களோ)
  இந்த தமிழ் டைபிங் வேற புதுசா டைப் பண்ணும்போது சரக்கு அடிக்கமே போதையயிடுது

  யப்பா இப்பவே கண்ணகட்டுதே
  //

  என்னா சார்.. கரடி வேட்டை , புலி வேட்டையுனு..
  நாங்க சொடுக்குனா , அதுவா எங்க முன்னாடி வந்து தற்கொலை பண்ணிக்கும் சார்..
  சும்மா டமாசு..

  எங்க ப்ளாக்கே இப்படித்தான் இருக்கும்..
  படிங்க.. புடிச்சிருந்தா சொல்லுங்க..

  என்னது.. புடிக்காட்டியா?
  சார்.. வீதியிலே இழுத்து போட்டு அடிங்க சார்....
  என்னையில..
  .
  .
  .என்னோட நண்பர்களை..ஹி..ஹி..ஹி

  ReplyDelete
 7. நூசு நல்லாத்தேன் இருக்கு :))

  ReplyDelete
 8. @சைவகொத்துப்பரோட்டா said...
  நூசு நல்லாத்தேன் இருக்கு :))
  //

  இன்னா சார். ஒரு பச்ச மண்ணு 'ஓ'ன்னு அழுகுது.. நீங்க நல்லாயிருக்குனு
  சொல்றீங்க...போங்க சார்.. நீங்க மோசம்.. உங்களுக்கு ஜக்குபாய் சீடீ இல்ல..
  ஹி..ஹி

  ReplyDelete
 9. அண்ணே! இன்னொரு விழாவுக்கு ஏற்பாடு செய்து "ஆயிரம் செல்லுடைத்த அபூர்வசெல்வி,"ன்னு பட்டம் கொடுக்கப்போறாங்கன்னு செய்தி வந்திருக்கு! அவசரப்பட்டு எதையாவது எழுதி கலைஞர் டி.வி.பொழைப்பிலே மண்ணைப்போட்டிராதீங்கண்ணே!

  ReplyDelete
 10. @சேட்டைக்காரன் said...
  அண்ணே! இன்னொரு விழாவுக்கு ஏற்பாடு செய்து "ஆயிரம் செல்லுடைத்த அபூர்வசெல்வி,"ன்னு பட்டம் கொடுக்கப்போறாங்கன்னு செய்தி வந்திருக்கு! அவசரப்பட்டு எதையாவது எழுதி கலைஞர் டி.வி.பொழைப்பிலே மண்ணைப்போட்டிராதீங்கண்ணே!
  //

  நல்ல வேலை.. செல்லுடைத்தது.. இல்லாட்டி நாட்டாம்மை கதி..
  நினைச்சாலே அடிவயிரு கலங்குது சார்.

  ReplyDelete
 11. சார் உங்க ஆபீஸ் தலையோட நம்பர் கிடைக்குமா (சும்மா..... உங்கள போட்டுகுடுக்க இல்லை )
  அப்புறம் நாம நாட்டாமி (பெண்பால்) பற்றி ரொம்போ எல்லோரும் பீல் பண்றகளே நம்ம ரித்தீஸ் மாதிரி ஏதும் துட்டு குடுக்குரான்களா???? அப்புறம் அந்த மேடம் போன்ல ட்ரை பன்னது நாட்டமைக்கு இல்லையாம் பட்டாபட்டிகாம் (லாஸ்ட் டயல்டு நம்பர வச்சு மொபைல் கம்பனில கண்டுபிடிச்சேன் )
  நீங்க என்னானா ஊருக்கே அல்வா கொடுக்கிற ..........(மக்கா.... பார்த்துக்கோங்க)
  இப்படிக்கு
  எப்படியாவது புகழ்பெற அலைவோர் சங்கம்

  ReplyDelete
 12. இன்னாது செல்லு போனு பூடுதா ? யப்பாடா !! இனி மேட்டு நாட்டாம எங்க கீராருன்னு அடிக்கடி இவங்க போணு பண்ண மாட்டாங்களே !!

  அத்த மாங்கா மடையன் ஓசில வாங்கி குடுக்கற வெரிக்கும் தலீவருக்கு
  நிம்மதி !!

  பட்டா பட்டி , நானு தாம்பா டவுசர் பாண்டி , நம்பளுக்கு ஒரு ஒத்தும
  கீதுபா !! ( ரெண்டும் டவுசர் தான் )

  ReplyDelete
 13. //ராதிகா செல்போன் சுக்கு நூறாக உடைந்தது..மக்கள் அதிர்சி

  நையாண்டி by.... பட்டாபட்டி.. on Thursday, February 18, 2010 //

  ஒரு டம்மி பீசு இன்னொரு டம்மி பீச உடச்சிருக்கும் !
  இதுக்கெல்லாம் போய் பீல் பண்ணிக்கிட்டு ...

  ReplyDelete
 14. பார்ரா அடுத்த இன்னிங்க்ஸ் ஆரம்பம் ஆயிடுச்சா

  ReplyDelete
 15. @மங்குனி அமைச்சர் said...
  சார் உங்க ஆபீஸ் தலையோட நம்பர் கிடைக்குமா (சும்மா..... உங்கள போட்டுகுடுக்க இல்லை )
  அப்புறம் நாம நாட்டாமி (பெண்பால்) பற்றி ரொம்போ எல்லோரும் பீல் பண்றகளே நம்ம ரித்தீஸ் மாதிரி ஏதும் துட்டு குடுக்குரான்களா???? அப்புறம் அந்த மேடம் போன்ல ட்ரை பன்னது நாட்டமைக்கு இல்லையாம் பட்டாபட்டிகாம் (லாஸ்ட் டயல்டு நம்பர வச்சு மொபைல் கம்பனில கண்டுபிடிச்சேன் )
  நீங்க என்னானா ஊருக்கே அல்வா கொடுக்கிற ..........(மக்கா.... பார்த்துக்கோங்க)
  இப்படிக்கு
  எப்படியாவது புகழ்பெற அலைவோர் சங்கம்
  //

  என்னா சார்.. அது ஒரு பழைய கிழ போல்ட்.. அதுகூடப் போயி..
  ஏதோ நம்ம ரேஞ்சுக்கு பாவனா ,அஸின், கஸின் etc...கூட கம்பேர்
  பண்ணுங்க சார்...

  ReplyDelete
 16. @டவுசர் பாண்டி said...
  இன்னாது செல்லு போனு பூடுதா ? யப்பாடா !! இனி மேட்டு நாட்டாம எங்க கீராருன்னு அடிக்கடி இவங்க போணு பண்ண மாட்டாங்களே !!
  அத்த மாங்கா மடையன் ஓசில வாங்கி குடுக்கற வெரிக்கும் தலீவருக்கு
  நிம்மதி !!
  பட்டா பட்டி , நானு தாம்பா டவுசர் பாண்டி , நம்பளுக்கு ஒரு ஒத்தும
  கீதுபா !! ( ரெண்டும் டவுசர் தான் )
  //

  அண்ணாத்த வாங்க.. உங்கள தான் தேடிட்டு இருந்தேன்..
  உங்க அட்வைசு படி , என்னோட ப்ளாக்கில் கொஞ்சம் Modify பண்ணுனேன்..
  ரொம்ப நன்றிகண்ணா..

  அடுத்த தடவை எலெக்சன்ல நிக்கிறமாறி யிருந்தா ஒரு போனை
  போடுங்க.. கள்ள ஓட்டு போட, கூட்டாளிகள கூட்டிட்டு,
  நானே வரேன் அண்ணாச்சி..

  ReplyDelete
 17. @யூர்கன் க்ருகியர் said...
  ஒரு டம்மி பீசு இன்னொரு டம்மி பீச உடச்சிருக்கும் !
  இதுக்கெல்லாம் போய் பீல் பண்ணிக்கிட்டு ...
  //

  அது உண்மைதான் சார்.. இந்த கோபத்துக்கே போன் உடையுதுனா?..

  இந்தம்மா வீட்டுக்காரரு சி.எம் ஆனா, நம்ம கதி?..

  ReplyDelete
 18. செல்லை உடைச்ச தலைவிக்கு... நாட்டமை பல்லை உடைக்க நேரம் ஆகாதுன்னு... இன்னொரு துணுக்கு செய்தியா போட்டுருய்யா...

  இதுக்கு ஒரு "பிரஸ்" மீட் வைப்பாங்களே... அத நினைச்சா தான் கலக்குது...

  ReplyDelete
 19. @Muthu said...

  பார்ரா அடுத்த இன்னிங்க்ஸ் ஆரம்பம் ஆயிடுச்சா
  //

  ஆமாங்கண்ணா.. நீயூஸ் பார்த்ததும் , என் உச்சி மண்டையிலெ
  சுர்னுச்சு..

  ReplyDelete
 20. @ரோஸ்விக் said...
  செல்லை உடைச்ச தலைவிக்கு... நாட்டமை பல்லை உடைக்க நேரம் ஆகாதுன்னு... இன்னொரு துணுக்கு செய்தியா போட்டுருய்யா...
  இதுக்கு ஒரு "பிரஸ்" மீட் வைப்பாங்களே... அத நினைச்சா தான் கலக்குது...
  //

  அதெல்லாம் நாம கட்டுன Tax....கண்ணுக்கு முன்னாடி , கஜானாவ
  காலி பண்றாங்க ரோஸ்விக்கு...

  ReplyDelete
 21. ஆங்....எல்லோரும் உசாரா இருந்துக்கங்க அப்புகளா...
  illuminati is back.....
  வெளியூரு..உம்ம மறுபடியும் நெட்ல பாக்குறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு ஓய்.எப்டி எல்லாமோ கூப்பிட்டும் வராத மனுஷன்,பொண்ணு பக்குரோம்னு சொன்ன உடனேயே வந்துட்டீரே.ஏன் வெளி,அவ்ளோ காஞ்சு போயா இருக்கீறு?நம்ம பட்டுவோட மகளிர் அணியில இருந்து ஒண்ணு செட பண்ணிக்க வேண்டியது தான....(ஆமா,அதுங்களுக்கு பல் செட் தான் கொடுக்கணும் நீரு மைன்ட் வாய்ஸ்ல பேசுறது எனக்கும் கேக்குது).
  ஆமா,உமக்கு பொண்ணு தேடி பட்டு full fledgedஆ அலையுறாரு போல இருக்கு.ஆனா அவர் பாத்து வச்ச பொண்ணுங்க எல்லாமே உமக்கு ரொம்ப பொருத்தமய்யா....
  அனுபவி ராஜா,அனுபவி.....

  ReplyDelete
 22. @ILLUMINATI said...
  ஆங்....எல்லோரும் உசாரா இருந்துக்கங்க அப்புகளா...
  illuminati is back.....
  //

  இலிமி.. அர் நால்ட் சுச்சுனக்கினார் மாறி வந்துவிட்டீரா..
  வருக .. வருக...

  ReplyDelete
 23. // இதுக்கு ஒரு "பிரஸ்" மீட் வைப்பாங்களே... அத நினைச்சா தான் கலக்குது...//

  ஆமா,’கண்கள் பனித்தது,இதயம் இனித்தது’ கொடுமையவே தாங்கிட்டோம்.இது என்ன ஜுஜுபி......

  ReplyDelete
 24. தேங்க்ஸ் பட்டு sir....

  ReplyDelete
 25. @ILLUMINATI said...
  ஆமா,’கண்கள் பனித்தது,இதயம் இனித்தது’ கொடுமையவே தாங்கிட்டோம்.இது என்ன ஜுஜுபி......
  //

  அய்.. ராதிகா ரசிகர் சும்மா சொல்ற மாறியிருக்கு...

  ReplyDelete
 26. அவ்ளோ சீக்கிரம் உங்கள தவிக்க விட்டுட்டு போய்டுவோமா?நாம என்ன அப்டியா பழகி இருக்கோம்?(கழுத,ஒரேயடியா சோலிய முடிச்சிட்டு தான் போவோம்).

  ReplyDelete
 27. @ILLUMINATI said...
  //
  ஆமா சார். எங்க புது பதிப்பக் காணோம்

  ReplyDelete
 28. அட போங்க தல!இந்த மாதிரி கிழ போல்டுங்க எல்லாம் உங்க மகளிர் அணியில தான் இருக்குன்னு ரெட்டை சொன்னாப்படியே.ஒரு வேள நீங்க தான் ரசிகர் மன்றம் வச்சு இருக்கின்களோ என்னமோ...

  ReplyDelete
 29. இருங்க தல.ஒரு ரெண்டு நாள் பொறுங்க.நல்லா நெனவு வச்சுக்கங்க.உங்க ஆயுள் ரெண்டு நாள் தான்.

  ReplyDelete
 30. என்ன இலுமி.. கோவத்தில போன் சுக்கு நூறா உடையது..
  இந்த மாறி கோபப்டுற பீஸு நம்ம கட்சியில இல்ல..
  ( எங்களுக்கு சூடு , சொரணை இல்லையென்பது உலகத்துக்கே தெரியும்..
  ஆனா , நீங்க யார்கிட்டையும் சொல்லாதீங்க.. சரியா..)

  ReplyDelete
 31. பட்டு.ஏற்கனவே நீங்க இத்துப் போனதெல்லாம் மகளிர் அணியில வச்சு இருக்குறதுனால மன்னர் ரொம்ப காண்டா இருக்காருன்னு சொன்னாங்க.ராதிகா ரசிகர் மன்ற தலைவர் நீங்க தான்னு தெரிஞ்சா அவ்ளோ தான்.அப்புறம்,சீக்கிரமே தீ குளிக்க வச்சுருவனுங்க.(யோவ் மன்னரே!இந்த மாதிரி நல்ல ஐடியாவ எல்லாம் கபால்னு கேட்ச் பண்ணிக்கையா.நீர் ஏதாவது பன்னுவீர்னு நான் எவ்ளோ நேரம் தான் வெயிட் பண்றது.நான் தீக்குளிப்பு எல்லாம் பாத்ததே கெடையாதுயா.ஏதாவது ஏற்பாடு பண்ணுயா).

  ReplyDelete
 32. @ILLUMINATI said...
  பட்டு.ஏற்கனவே நீங்க இத்துப் போனதெல்லாம் மகளிர் அணியில வச்சு இருக்குறதுனால மன்னர் ரொம்ப காண்டா இருக்காருன்னு சொன்னாங்க.ராதிகா ரசிகர் மன்ற தலைவர் நீங்க தான்னு தெரிஞ்சா அவ்ளோ தான்.அப்புறம்,சீக்கிரமே தீ குளிக்க வச்சுருவனுங்க.(யோவ் மன்னரே!இந்த மாதிரி நல்ல ஐடியாவ எல்லாம் கபால்னு கேட்ச் பண்ணிக்கையா.நீர் ஏதாவது பன்னுவீர்னு நான் எவ்ளோ நேரம் தான் வெயிட் பண்றது.நான் தீக்குளிப்பு எல்லாம் பாத்ததே கெடையாதுயா.ஏதாவது ஏற்பாடு பண்ணுயா).
  //

  அடப்பாவி.. நீரு எனக்கு சப்போர்ட் பண்ணுனவீருனு பாத்தா, நம்மள முடிக்கிறதிலயே இருக்காங்க...
  ( நான் சாகாவரம் பெற்றவன் என்பது யாருக்கும் தெரியாத வரை நல்லது)

  ReplyDelete
 33. என்னது?சாகா வரமா?அப்போ என்ன பண்ணினாலும் நீரு சாக மாட்டீறு?யப்பா ரெட்டை,இதையும் நோட் பண்ணும் ஓய்.அப்ப பயபுள்ள மேல பெட்ரோல் மட்டும் இல்ல உமக்கு கைல கெடக்குரத எல்லாம் வச்சு விளையாடலாம்.

  ReplyDelete
 34. @ILLUMINATI said...

  என்னது?சாகா வரமா?அப்போ என்ன பண்ணினாலும் நீரு சாக மாட்டீறு?யப்பா ரெட்டை,இதையும் நோட் பண்ணும் ஓய்.அப்ப பயபுள்ள மேல பெட்ரோல் மட்டும் இல்ல உமக்கு கைல கெடக்குரத எல்லாம் வச்சு விளையாடலாம்.
  //

  அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

  ReplyDelete
 35. @ILLUMINATI said...

  என்னது?சாகா வரமா?அப்போ என்ன பண்ணினாலும் நீரு சாக மாட்டீறு?யப்பா ரெட்டை,இதையும் நோட் பண்ணும் ஓய்.அப்ப பயபுள்ள மேல பெட்ரோல் மட்டும் இல்ல உமக்கு கைல கெடக்குரத எல்லாம் வச்சு விளையாடலாம்.
  //

  அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

  அடுத்த ரெண்டு நாளைக்கு அய்யா மலேசியா பயணம்..
  வந்து சண்ட கட்டலாம் சரியா இலுமி..
  ( எதுக்கும் ,ரோஸ்விக் , வெளியூரான் மற்றும் ரெட்டைய ரெடியாயிருக்கச் சொல்லவும்)..

  ReplyDelete
 36. // அடுத்த ரெண்டு நாளைக்கு அய்யா மலேசியா பயணம்..//
  நீங்க வர்றப்ப நாங்க எல்லோரும் பெட்ரோலோட,ச்சே ,பூவோட வரவேற்க ரெடியா இருப்போம் தல....
  by the by,நம்ம வெளியூருக்கு அங்கன ஏதாச்சும் நல்ல பொண்ணா(photoல பத மாதிரி ) பாத்துட்டு வாங்க.

  ReplyDelete
 37. பட்டு மாம்ஸ்...நீ என்ன தமிழ்பட ஹீரோவா...சாகவே மாட்டியாலே நீ!

  ReplyDelete
 38. பட்டு சார் ராதிகா வீட்டுக்கு போன்பின்பு ராத்திரி நாட்டாண்மையோட கதி என்ன ஆகி இருக்கும் .டயர் பன்ச்சரா??

  ReplyDelete
 39. ஜெய்லானி said...

  பட்டு சார் ராதிகா வீட்டுக்கு போன்பின்பு ராத்திரி நாட்டாண்மையோட கதி என்ன ஆகி இருக்கும் .டயர் பன்ச்சரா??

  டயர் இல்லிகண்ணோ குண்டு பல்ப் டாமல்

  ReplyDelete
 40. பட்டாபட்டி.. said...

  @சைவகொத்துப்பரோட்டா said...
  நூசு நல்லாத்தேன் இருக்கு :))
  //

  இன்னா சார். ஒரு பச்ச மண்ணு 'ஓ'ன்னு அழுகுது.. நீங்க நல்லாயிருக்குனு
  சொல்றீங்க...போங்க சார்.. நீங்க மோசம்.. உங்களுக்கு ஜக்குபாய் சீடீ இல்ல..
  ஹி..ஹி

  எனக்கு இல்ல எனக்கு இல்ல

  ReplyDelete
 41. @ILLUMINATI said...
  நீங்க வர்றப்ப நாங்க எல்லோரும் பெட்ரோலோட,ச்சே ,பூவோட வரவேற்க ரெடியா இருப்போம் தல....
  by the by,நம்ம வெளியூருக்கு அங்கன ஏதாச்சும் நல்ல பொண்ணா(photoல பத மாதிரி ) பாத்துட்டு வாங்க.
  //

  அது மட்டும் வேண்டாம்.. அப்புறம் வெளியூரு , வெளியூர் பாய் ஆயிடுவாரு.

  ReplyDelete
 42. @ரெட்டைவால் ' ஸ் said...
  பட்டு மாம்ஸ்...நீ என்ன தமிழ்பட ஹீரோவா...சாகவே மாட்டியாலே நீ!
  //

  என்னப்பு.. புதுசா கேக்குறே....நாங்க யாரு.. எங்க பலம் என்னா?.
  ஹி..ஹி..ஹி

  ReplyDelete
 43. @ஜெய்லானி said...
  பட்டு சார் ராதிகா வீட்டுக்கு போன்பின்பு ராத்திரி நாட்டாண்மையோட கதி என்ன ஆகி இருக்கும் .டயர் பன்ச்சரா??
  //

  அப்புறம்.. கோவத்திலெ போயிருக்காங்க.. பாவம்..
  நாட்டாமை தலைமறைவாயிருப்பதா ஒரு சேதி சார்..

  ReplyDelete
 44. @Muthu said...
  டயர் இல்லிகண்ணோ குண்டு பல்ப் டாமல்
  //
  ஆகா.. நல்ல யோசனை பண்ணியிருக்கீங்க..
  ஆனா பல்ப் - பா இல்லா பல்ப்களா முத்து சார்?

  அப்புறம், உங்களுக்கு எப்படி சார் அந்த சீடி கொடுப்பேன்..
  ( சீக்கிரம் நம்ம கட்சியிலெ சேரப்போறீங்க..ஹி..ஹி)

  ReplyDelete
 45. ஜக்குGirl-.......

  !!!!!!!!!

  ஒரு சிக்கன முயற்சியா இவங்க விடற கண்ணீரை எல்லாம் சேமிச்சு போக்குவரத்துத் துறைல பஸ் கிளீன் பண்ண வச்சிக்கலாம்.
  ரொம்ப அதிகமானா தொட்டி கட்டி ரீசைக்கிள் பண்ணி குடிநீரா மாத்திடலாம்

  ReplyDelete
 46. @ஸ்ரீராம். said...
  ஜக்குGirl-.......
  !!!!!!!!!
  ஒரு சிக்கன முயற்சியா இவங்க விடற கண்ணீரை எல்லாம் சேமிச்சு போக்குவரத்துத் துறைல பஸ் கிளீன் பண்ண வச்சிக்கலாம்.
  ரொம்ப அதிகமானா தொட்டி கட்டி ரீசைக்கிள் பண்ணி குடிநீரா மாத்திடலாம்
  //

  ஐடியா சூப்பராயிருக்கு ஸ்ரீராம் சார்..
  நதி நீர் ஒருங்கிணப்பு திட்டத்திலே , கழகம் காசு
  பார்க்க முடியாது...அதுதான் பிரச்சனை...

  ReplyDelete
 47. ஒரு தர்ப்பூசனி பீஸிக்கே 17கோடி கொடுத்த நாட்டாமை. ஆல் இன் ஆல் அழகு இராணிக்கு ஒரு செல்பேன் வாங்கித் தர மாட்டாரா?. அடப் போங்கப்பா நானே எங்க தலைவி உள்ள போகதா வருத்ததில் இருக்கின்றேன்.

  ReplyDelete
 48. @பித்தனின் வாக்கு said...
  ஒரு தர்ப்பூசனி பீஸிக்கே 17கோடி கொடுத்த நாட்டாமை. ஆல் இன் ஆல் அழகு இராணிக்கு ஒரு செல்பேன் வாங்கித் தர மாட்டாரா?. அடப் போங்கப்பா நானே எங்க தலைவி உள்ள போகதா வருத்ததில் இருக்கின்றேன்.
  //

  அந்தம்மா உள்ள போகாததால் , தமிழ் நாடு தலைவிதியா சார் மாறும்..

  என்னோட கவலை , நாட்டாம்மை சி.எம் ஆயிட்டா , "நம்ம கதி + அவரு கதி " சார்?

  ReplyDelete
 49. இதனால் சகலமான பொதுமக்களுக்கு சொல்றது என்னான நம்ம நாட்டாமைய காணோமாம், கண்டுபுச்சு கொடுத்தா "வேரவேலைஇல்லாத வெட்டிபய" என்ற பட்டமும் "1000 பொற்காசுகளும்" பரிசுஅளிக்கபடும், "வேரவேலைஇல்லாத வெட்டிபய" பட்டத்த நானும் "1000 பொற்காசுகள" நம்ம பட்டாபட்டியும் (வருக்கால சி.எம் மோட வூட்டுகாரம்மா ஆடர்) தர்றதா முடிவாயிருக்கு.

  இப்படிக்கு
  வருக்கால சி.எம் மோட வூட்டுகாரம்மா

  ReplyDelete
 50. என்னா இன்னும் பதிலகாணோம் வேலை கீல எதுவும் செய்ரின்களோ

  ReplyDelete
 51. அந்தம்மா உள்ள போகாததால் , தமிழ் நாடு தலைவிதியா சார் மாறும்..

  என்னோட கவலை , நாட்டாம்மை சி.எம் ஆயிட்டா , "நம்ம கதி + அவரு கதி " சார்?

  டொட் டோ டொய்ங்

  ReplyDelete
 52. பட்டாபட்டி.. said...

  ஆகா.. நல்ல யோசனை பண்ணியிருக்கீங்க..
  ஆனா பல்ப் - பா இல்லா பல்ப்களா முத்து சார்?

  யாருக்குன்னு சொல்லலேயே ..எதோ டபுள் மீனிங் மாதிரி கீதே

  ReplyDelete
 53. பட்டாபட்டி.. said...
  அப்புறம், உங்களுக்கு எப்படி சார் அந்த சீடி கொடுப்பேன்..
  ( சீக்கிரம் நம்ம கட்சியிலெ சேரப்போறீங்க..ஹி..ஹி)

  சேர்ந்தாச்சு சேர்ந்தாச்சு ஆதாரம் பட்டாபட்டி நாடாவை பின்பற்றுவோர் சங்கத்தை பார்க்கவும்

  ReplyDelete
 54. அப்பாவிFebruary 19, 2010 at 11:09 PM

  காலையிலருந்து ஒரு யோசனை, பல்லு வெளக்காம, பாத்ரூம் போவாம, ஒரே சிந்தனை நடக்குமா, நடத்தமுடியாதா,நம்ம ல்லாம்,அதான் எல்லா பதிவரும் சேந்து தலைவருக்கு ஒரு விழா எடுக்கலாமா? எல்லோருக்கும் கம்ப்யூட்டர், முடிஞ்சா நெலம்,பிராட் பேண்ட் கனக்சியன், எல்லாரும் யோசனை பண்ணி ஒரு முடிவுக்கு வாங்க.

  ReplyDelete
 55. தல.சொன்ன மாதிரியே புது போஸ்ட் ஒண்ணு போட்டு இருக்கேன்.வந்து பாத்துபுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.

  http://illuminati8.blogspot.com/2010/02/wasabi-punisher-max.html

  ReplyDelete
 56. இனிமே சித்தியை செல்ஃபோன் அழகின்னு கூப்பிடலாமா பட்டாபி?உனக்குனு சிக்குது பாரு மேட்டரு!

  ReplyDelete
 57. @மங்குனி அமைச்சர் said...
  இதனால் சகலமான பொதுமக்களுக்கு சொல்றது என்னான நம்ம நாட்டாமைய காணோமாம், கண்டுபுச்சு கொடுத்தா "வேரவேலைஇல்லாத வெட்டிபய" என்ற பட்டமும் "1000 பொற்காசுகளும்" பரிசுஅளிக்கபடும், "வேரவேலைஇல்லாத வெட்டிபய" பட்டத்த நானும் "1000 பொற்காசுகள" நம்ம பட்டாபட்டியும் (வருக்கால சி.எம் மோட வூட்டுகாரம்மா ஆடர்) தர்றதா முடிவாயிருக்கு.
  இப்படிக்கு
  வருக்கால சி.எம் மோட வூட்டுகாரம்மா
  என்னா இன்னும் பதிலகாணோம் வேலை கீல எதுவும் செய்ரின்களோ
  //

  ரொம்ப பிஸிண்ணா.. மலேசியா இரண்டு நாள் பயணம்..( பிரண்டு கல்யாணம்)..
  ஓ.கே.. வந்திட்ட்டோமில்ல.. ஆரம்பிச்சிடலாம்.

  ReplyDelete
 58. @Muthu said...
  டொட் டோ டொய்ங்
  யாருக்குன்னு சொல்லலேயே ..எதோ டபுள் மீனிங் மாதிரி கீதே
  சேர்ந்தாச்சு சேர்ந்தாச்சு ஆதாரம் பட்டாபட்டி நாடாவை பின்பற்றுவோர் சங்கத்தை பார்க்கவும்

  //
  ->இந்த மியூசிக் நமக்கு சாவு மணி மாறி கேட்குது முத்து சார்..
  ->சார். நான் நல்ல பையன்.. டபுள் மீனிங் எல்லாம் தெரியாது.. ஹி..ஹி
  ->நன்றிங்கண்ணா...

  ReplyDelete
 59. @அப்பாவி said...
  காலையிலருந்து ஒரு யோசனை, பல்லு வெளக்காம, பாத்ரூம் போவாம, ஒரே சிந்தனை நடக்குமா, நடத்தமுடியாதா,நம்ம ல்லாம்,அதான் எல்லா பதிவரும் சேந்து தலைவருக்கு ஒரு விழா எடுக்கலாமா? எல்லோருக்கும் கம்ப்யூட்டர், முடிஞ்சா நெலம்,பிராட் பேண்ட் கனக்சியன், எல்லாரும் யோசனை பண்ணி ஒரு முடிவுக்கு வாங்க.
  //

  அப்பாவி சார்..
  அப்பப்ப வந்து நல்ல நல்ல ஐடியா கொடுக்கிறீங்க..
  ஆனா தலைவரைப் பாராட்டி நீங்க தான் பேசனு. சரியா?

  ReplyDelete
 60. @ILLUMINATI said...
  தல.சொன்ன மாதிரியே புது போஸ்ட் ஒண்ணு போட்டு இருக்கேன்.வந்து பாத்துபுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.
  http://illuminati8.blogspot.com/2010/02/wasabi-punisher-max.html
  February 20, 2010 10:10 AM
  //

  படிச்சுட்டு விரைவில் பதில் வரும் இலுமி சார்..

  ReplyDelete
 61. @ரெட்டைவால் ' ஸ் said...
  இனிமே சித்தியை செல்ஃபோன் அழகின்னு கூப்பிடலாமா பட்டாபி?உனக்குனு சிக்குது பாரு மேட்டரு!
  //

  யோவ் ரெட்டை.. அதை அழகினு சொன்ன ரெண்டாவது ஆள் நீரு..

  முதள் ஆளா...

  ஹி..ஹி.. நம்ம நாட்டாமை..

  ReplyDelete
 62. ரொம்ப பிஸிண்ணா.. மலேசியா இரண்டு நாள் பயணம்..( பிரண்டு கல்யாணம்)..
  ஓ.கே.. வந்திட்ட்டோமில்ல.. ஆரம்பிச்சிடலாம்.

  அப்போ நிறைய brand ஓடியிருக்கும் ன்னு சொல்லுங்க

  ReplyDelete
 63. @ரெட்டைவால் ' ஸ் said...
  இனிமே சித்தியை செல்ஃபோன் அழகின்னு கூப்பிடலாமா பட்டாபி?உனக்குனு சிக்குது பாரு மேட்டரு!
  //

  யோவ் ரெட்டை.. அதை அழகினு சொன்ன ரெண்டாவது ஆள் நீரு..

  முதள் ஆளா...

  ஹி..ஹி.. நம்ம நாட்டாமை..

  அவரு எங்கய்யா சொன்னாரு தெரியாமல் விழுந்துட்டாரு அதற்காக வெந்த புண்ணில் வேல் பாய்சாதீரும் அவ்வ்வ்வ்.... சொம்பு போச்சே

  ReplyDelete
 64. @Muthu said...
  அப்போ நிறைய brand ஓடியிருக்கும் ன்னு சொல்லுங்க

  //

  அய்யோ.. அதில்லாமலா..
  ஹி..ஹி..

  ReplyDelete
 65. welcome back pattu sir.how was the journey?

  ReplyDelete
 66. @ILLUMINATI said...
  welcome back pattu sir.how was the journey?
  //

  very enjoyable..
  Any plan to visit singapore or malaysia?

  ReplyDelete
 67. and thanks for your comment friend.well,i'm going to write in tamil from now on.but,sometimes,i'll also write in english. :)
  so,beware. :)

  ReplyDelete
 68. அதானே பார்த்தேன் பொறுப்பு எதுவும் வந்துருச்சோன்னு பயந்துபோயிட்டேன்

  ReplyDelete
 69. தல கொஞ்சம் நம்மள மாதிரி காமெடி ஞானம் உள்ளவர்கள் "blog" லிஸ்ட் கொஞ்சம் குடுங்களேன்
  என்னால தேடி கண்டுபிடிக்க முடியல (யப்பா இப்பவே கண்ண கட்டுதே), ரொம்ப பேரு சீரியசாவே எழுதுறாங்க. பாவம் அவுங்களுக்கு என்ன பிராபலமோ (ஜாதகத்தில ஏதோ பிசகுன்னு நினைக்கிறேன் )

  ReplyDelete
 70. @ மங்குனி அமைச்சர் said...
  தல கொஞ்சம் நம்மள மாதிரி காமெடி ஞானம் உள்ளவர்கள் "blog" லிஸ்ட் கொஞ்சம் குடுங்களேன்
  என்னால தேடி கண்டுபிடிக்க முடியல//

  யோவ் மங்குனி..நீ காமெடியா எழுதுறேன்னு யாருயா சொன்னா உன்கிட்ட...அது என்ன நீனா சொல்லிக்கறது...இருடி வர்றேன் உன் ப்ளாகுக்கு..பட்டபட்டி வாய்யா போய் ஒரு எட்டு பார்த்துட்டு சனியன் வேலைய காமிச்சிட்டு வருவோம்...(ஆமாம்...காமெடிக்குத்தான் நாம ரெண்டு பேரு இருக்கமே...இன்னொரு காமெடியன் எதுக்கு இந்த ப்ளாக் உலகத்துக்கு..வேணாம் வாத்யாரே...இப்பயே போட்டு தள்ளிரலாம்...என்னா சொல்ற...)

  ReplyDelete
 71. //யோவ் மங்குனி..நீ காமெடியா எழுதுறேன்னு யாருயா சொன்னா //

  நான் எங்க சாமி எழுதுறேன்னு சொன்னேன். நாங்க எல்லாம் வேடிக்க பாக்குற ஜாதி. எங்களுக்கு கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும். எழுதவெல்லாம் மாட்டோம். ஏன்ன வராது, தெரியாது. இதுதெரியாம யாருகிட்ட ம்..ம்...ம் (அமைச்சரே சரியான ரூட்லதான் போற அப்படியே பிக்கப் பன்னிகோ)

  ReplyDelete
 72. சுடச் சுட விஷயத்தை அலசியிருக்கீங்க...

  எப்புடி இப்புடி குன்றாத கற்பனை வளம்...?

  ஆனா.. செல் போன் வேலையையும் போட்டிருந்தீங்கன்னா, வருத்தப்பட வசதியா இருந்திருக்கும்..

  ReplyDelete
 73. @ILLUMINATI said...
  nope friend. :)
  and thanks for your comment friend.well,i'm going to write in tamil from now on.but,sometimes,i'll also write in english. :)
  so,beware. :)
  //

  அடிச்சு எழுதுங்க பாஸ்...

  ReplyDelete
 74. @மங்குனி அமைச்சர் said...
  அதானே பார்த்தேன் பொறுப்பு எதுவும் வந்துருச்சோன்னு பயந்துபோயிட்டேன்
  தல கொஞ்சம் நம்மள மாதிரி காமெடி ஞானம் உள்ளவர்கள் "blog" லிஸ்ட் கொஞ்சம் குடுங்களேன்
  என்னால தேடி கண்டுபிடிக்க முடியல (யப்பா இப்பவே கண்ண கட்டுதே), ரொம்ப பேரு சீரியசாவே எழுதுறாங்க. பாவம் அவுங்களுக்கு என்ன பிராபலமோ (ஜாதகத்தில ஏதோ பிசகுன்னு நினைக்கிறேன் )
  //

  நமக்கு பொறுப்பா?
  அப்படினா?

  சார்.. நான் பாலே பண்ற ப்ளாக் எல்லாமே காமெடி ப்ளாக்தான்..
  வெளியூர்க்காரன்,
  சேட்டைக்காரன்,
  டுபுக்கு
  இவங்க லிங்க் எல்லாம் என் ப்ளாக்கில இருக்கு சார்.

  ReplyDelete
 75. @வெளியூர்க்காரன் said...
  தல கொஞ்சம் நம்மள மாதிரி காமெடி ஞானம் உள்ளவர்கள் "blog" லிஸ்ட் கொஞ்சம் குடுங்களேன்
  என்னால தேடி கண்டுபிடிக்க முடியல//

  யோவ் மங்குனி..நீ காமெடியா எழுதுறேன்னு யாருயா சொன்னா உன்கிட்ட...அது என்ன நீனா சொல்லிக்கறது...இருடி வர்றேன் உன் ப்ளாகுக்கு..பட்டபட்டி வாய்யா போய் ஒரு எட்டு பார்த்துட்டு சனியன் வேலைய காமிச்சிட்டு வருவோம்...(ஆமாம்...காமெடிக்குத்தான் நாம ரெண்டு பேரு இருக்கமே...இன்னொரு காமெடியன் எதுக்கு இந்த ப்ளாக் உலகத்துக்கு..வேணாம் வாத்யாரே...இப்பயே போட்டு தள்ளிரலாம்...என்னா சொல்ற...)
  //

  யோவ்.. பாவமைய்யா மங்குனி..
  எல்லாத்தையும் போட்டு தள்ளிட்டா , அப்புறம் யாரைய்யா நம்ம ப்ளாக்
  படிக்கிறது...

  ReplyDelete
 76. @மங்குனி அமைச்சர் said...
  நான் எங்க சாமி எழுதுறேன்னு சொன்னேன். நாங்க எல்லாம் வேடிக்க பாக்குற ஜாதி. எங்களுக்கு கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும். எழுதவெல்லாம் மாட்டோம். ஏன்ன வராது, தெரியாது. இதுதெரியாம யாருகிட்ட ம்..ம்...ம் (அமைச்சரே சரியான ரூட்லதான் போற அப்படியே பிக்கப் பன்னிகோ)
  //

  உடுங்க மங்குனி..
  ரெடியாயிக்கோங்க..
  வெளியூரோட அடுத்த பதிவில
  நாம போயி கும்மி அடிச்சுட்டு வருவோம்..

  ReplyDelete
 77. @பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
  சுடச் சுட விஷயத்தை அலசியிருக்கீங்க...
  எப்புடி இப்புடி குன்றாத கற்பனை வளம்...?
  ஆனா.. செல் போன் வேலையையும் போட்டிருந்தீங்கன்னா, வருத்தப்பட வசதியா இருந்திருக்கும்..
  //

  வாங்க பிரகாஷ்..
  ஊர்ல செம்மொழி மா நாட்டுக்கு ஏதாவது ரோடு , கீடு போடறானுகளா?...
  அப்புறம் என்ன பதிய பதிவுகள் ஏதுவும் போடல?. ரொம்ப பிஸியா?

  ReplyDelete
 78. @@@யோவ்.. பாவமைய்யா மங்குனி..
  எல்லாத்தையும் போட்டு தள்ளிட்டா , அப்புறம் யாரைய்யா நம்ம ப்ளாக்
  படிக்கிறது...////

  பூரா பேத்தையும் போட்டு தள்ளிட்டு, நம்ம மட்டும் இருப்போம்யா...ஏன்யா கூட்டம் போய்டும்னு பயபட்ற...டோன்ட் வொரி லா. உலகம் பெருசு...முடிஞ்ச வரைக்கும் சிரிச்சிட்டு ஒரு நாள் செத்து போயிருவோம்...என்னையா சொல்ற மங்குனி..நான் சொல்றது கரெக்டுதான... !!! :)

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!