Pages

Tuesday, February 2, 2010

ப.மு.க பொதுகுழு அறிக்கை

ப.மு.க பொதுகுழு அறிக்கை
கழகக் கண்மணிகளே.. ஏன் உடன்பிறவா ரத்ததின் ரத்தங்களே..
உங்கள் கை தட்டல் ஓசையினால் , டெல்லி அதிர்கிறது..
நான் அன்றே சொன்னேன் ' வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது' என்று..
( யோவ் .. என்ன பேச உடுங்கடா நாதாரிகளா..1 குவாட்டர்+ 1 ப்ளேட் பிரியாணிக்கும் இது ஓவர்யா )

நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்திலே ( கை தட்டல்...சோமாறிகளா..
கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவேயில்லையாடா..
. ) உடன் பிறப்புகளின் கலந்துரையால் நல்லவிதமாக நடந்து முடிந்தது...

அங்கு பரிமாறிய கருத்துக்களை , இங்கு பரிமாறினால் , மத்திய அரசிடம்
நிதி கேட்டு தந்தி அடிக்கும் நிலை வந்தூவிடும் என்ற காரணத்தால்

( யோவ்.. சோடா கொடுயா.....) கருத்துகளை வெட்டி , ஒட்டி  உங்களுக்கு புரியும்வண்ணம் அளிக்கிறேன்..( கை தட்டல்)

வெளியூர்காரன் மற்றும் ரெட்டை வால்ஸ் இருவருக்கும் பதவி மேல் என்றுமே
ஆசையிருந்ததில்லை..( சரி..சரி.. கத்திய உள்ள வைய்யா..
ஆய்.. ஊய்ன சபையில கத்திய தூக்காதேனு எத்தனை தடவை சொல்வது
)
அவர்களை அப்படியே விட்டுவிட்டால் தேசசஞ்சாரம் போய்விடுவார்களோ என்று  மனது அழுகிறது...

உயிரோடு இருக்கும் போதே திதி வைத்துவிடுவார்கள் என் உள்ளுணர்வு சொல்வதால்,  உடனடியாக கட்சியை இரண்டாகப் பிரித்து இன்று முதல்

ப.மு.க
ப.மு.க


என இரு வேறு அணிகளாக செயல்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கோள்கிறேன்..

கண்மணிகளே, நன்றாக உற்றுப் பாருங்கள்..
முதல் கட்சி நீல நிறத்திலும்   அடுத்த கட்சி மஞ்சல் நிறத்திலும் பிரிக்கப்பட்டுள்ளது..   உங்கள் விருப்படி , நீங்கள் இந்த இரண்டு கட்சிகளுக்குமே   வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் நாளை செய்தி வெளியிடும்

மற்றும் இன்று முதல் , தமிழ் நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும்
ஒரே குடையின் கீழ் வருகிறது...

அன்புத்தம்பி வெளியூரான், அண்ணன் சண்முகவேலுக்கு,
சென்னையிலிருந்து , தஞ்சாவூர் வரை ரன்வே அமைக்கும் டெண்டரில் முதல் கையெழுத்திடுவார் என்பதை   கரகோசங்களுக்கு நடுவே சொல்லிக்கொள்கிறேன்..
( யோவ் ரெட்டை..அந்தப் பக்கம் கை தட்டல் கம்மியா வருது. . என்னானு பாரு..
அப்புறம் கோவத்திலெ யாரையாவது கொடும்பாவி ஆக்கிடாதையா.
.)

மேலும் மற்றுமொரு தம்பி ரெட்டைவால் அண்ணன் வெளியூருக்கு ஆதரவு தந்து கொண்டே ,   அடுத்த ஆட்சிக்கு குழி பறிப்பார் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்..

மேலும், அன்பு அண்ணன் பட்டாபட்டியாகிய நான் சாகாவரம் பெற்றவன் என்பது   உலகம் அறிந்ததே..

ஆகவே... நீல  நிறக்கட்சி, தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும்,

மஞ்சள் நிறக்கட்சி மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆட்சி செய்யும்..

மற்ற நேரங்களில் , உங்கள் ' சாகாவரம் பெற்ற சாதனை சக்கரவர்த்தி ' பட்டினத்தாரின் மறு அவதாரமான
உங்கள் ... உங்கள் பட்டாபட்டியார் நல்லாட்சி செய்வார் என்பதை கண்டிப்பாக தெரிவித்துக் கொள்கிறோம்..

யோவ்.. கேட்டு கதவ இழுத்து மூடுங்கடா.. யாரு யாரையினு பார்த்திடலாம்..

இப்போது , வெளியூரு மற்றும் ரெட்டை வால் களத்தில் இறங்கி , கூடியுள்ள தொண்டர்களுக்கு பணம் வழங்குவார்கள்..
 
அவர்கள் உடம்பினுல் வெளியூர் மற்றும் உள்ளூர் கரென்சிகள் ஒளித்து வைக்கப்பட்டுள்ளது

தொண்டர்களே.. உங்கள் திறமைய காட்ட சரியான சமயம்..
சீறிப் பாயுங்கள்.. பரிசினை பெற்றிடுங்கள்..
உங்களால் எவ்வளவுக்கு எவ்வளவு எடுக்க முடியுமோ , அத்தனையும் அள்ள ஆசைப்படுங்கள்.
நமக்கு அவர்களின் உயிரை விட அவர்களின் மயிர் ( சாரிங்க.. ஒரு ப்ளோல வந்திருச்சு..) பணம்  முக்கியம்..

வென்றிடுவீர் .. வேல்... வேல் .. வீர வேல்...

13 comments:

  1. கடைசி நேரச் சேர்க்கை:
    -----------------------

    கடும் போராட்டங்களால் , கழக பணி ஆற்ற முடியாததால்
    அண்ணன் வெளியூரான் , சென்னையிலிருந்து , தஞ்சைக்கு
    நடைப் பயணம் மேற்கொள்ளப் போகிறார்..

    அவருக்கு உதவியாக 'அன்பு செல்லம் ரெட்டை வால்ஸ்ம்' தண்ணீர் பாட்டிலை
    தலையில் சுமத்தபடி செல்ல முடிவெடுத்துள்ளார்.

    இதைக் கண்ட பொது சனம் , பார்க்க ' ராமருடன் சென்ற லட்சுமணனைப் போல '
    இருப்பதாக தினக் குசும்பு நிருபருக்கு கண்ணீர் மல்க பேட்டியளித்தார்..

    ReplyDelete
  2. வெளியூருதான் ராணுவ மந்திரி கொடுத்தா போதுமுன்னு பேரம் பேசுறாரே அப்புறமென்ன கட்சி பிரிக்கிற வேலை:)

    ReplyDelete
  3. மஞ்சா கலரு சரி.இந்த நீலம்தான் புரிய மாட்டேங்குது.

    ReplyDelete
  4. தினமும் புது தகவலுக்கு இன்னொரு தகவல்.

    பிரியாணிக்குள்ளதான் கோழி இருக்கும்.ஆனா கோழிக்குள்ள பிரியாணி யாராவது பார்த்திருக்கீங்களா?

    ReplyDelete
  5. சார்.... இதுக்கு.முன்னாடி பதிவை பாருங்க.. கடைசி கமென்ஸ் படிச்சாதான் 'என்ன நடந்ததுனு ' புரியும்..

    பாரம்பரிய கட்சிக்காரன் நானு.. எங்கிட்டயேவா....?

    ReplyDelete
  6. தினக்குசும்பு பத்திரிக்கையின் தலைப்புச் செய்திகள்.

    (அள்ளித்தந்த வானம் விவேக் ஸ்டைலில் படிக்கவும்...)

    ப.மு.க ரெண்டாக உடையுமா...தமிழக மக்கள் துக்க்க்க்க்கம்...!

    பட்டாபட்டி நாடாவை கழட்டுனது நாங்கதானுங்கோஓஓஒ...மார் தட்டுகிறார்கள் வெளியூர்காரனும் ரெட்டைவால்ஸும்...
    ப.மு.க, தேர்தலுக்கு வாக்காளர்களுக்குக் கொடுத்த நிதியில் கள்ளநோட்டைக் கலந்து விட்டது யார்? கட்சித் தொண்டர்கள் தலைவரிடம் வீராவேசம்.

    மகளிர் அணித் தலைவிக்காக சண்டை போட்ட ப.மு.க தலைவர்கள். பட்டாபட்டி உள்ளே நுழைந்ததால் அடிதடி. இரு தலைவர்கள் உயிர் ஊஊஊஊஊசல்....!

    ப.மு.க வின் சின்னம் பட்டாபட்டி யாருக்குக் கிடைக்கும்... சோழி உருட்டி தேர்தல் ஆணையம் தேர்வு.

    கடைசியாக வந்த தகவலின் படி ரெட்டைவால்ஸின் பிரதமர் பதவிக்கு ஆபத்து இருப்பதால் ப.மு.க நிறுவனரும் தலைவருமான பட்டாபட்டி அவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.வராமல் அடம்பிடித்த பட்டாபட்டியை போலிஸார் அடித்து துவைத்துத் தொங்கப் போட்டனர்.இதனால் மக்கள் பெரும் நிம்மதி அடைந்தனர்.

    ReplyDelete
  7. Hope pa.mu.ka is bigger than ku.ja.mu.ka

    kudukuduppai

    ReplyDelete
  8. http://rettaivals.blogspot.com/2010/02/blog-post_02.html

    see this maamu!

    ReplyDelete
  9. நான் கூட உன்ன நேத்தோட விட்டர்லாம்னு பார்த்தேன்..நீ எகத்தாளம் புடிச்சவன்....உன்ன விடகூடதுயா...அதனால, என் தங்க தலைவன் ஆசியா துணைக்கண்டத்தின் தன்னிகரில்லா தலைவன் திரு..அய்யா ரெட்டைவால்ஸ் அவர்களின் (ங்கோயல, இவனுக்கு கூடிய சீக்கிரம் வேட்டு வெக்கணும்...) ஆசியோடு இன்றைய விவாதங்களை துவக்கி வைக்கறேன்...அதற்க்கு முன் பட்டாப்பட்டி என்ற பெயர் க்ரிப்பான ரௌடி பேராக இருப்பதால் அது பிஞ்சு நெஞ்சு கொண்ட நமது பட்டுக்கு செட் ஆகாத காரணத்தினால் அவருக்கு அக்ரகாரத்தில் முறுக்கு சுட்டு விக்கும் பட்டாபி என்ற பெயரே சூட் ஆகும் என்ற காரணத்தினாலும் அவரது பெயரை அவர் அனுமதி இல்லாமலேயே மாற்றி அறிவிக்குமாறு நமது பிரதமர் அவர்களை கேட்டுகொள்கிறேன்...இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தந்து பாராளுமன்றத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமாய் ராஜ ராஜ சோழனின் கடைசி வாரிசு நமது துணை பிரதமர் திரு.ராஜ நடராஜன் அவர்களையும் வணங்கி கேட்டு கொள்கிறேன்...யோவ்.பட்டாபி உம்..ஸ்டார்ட் மியூசிக் பார் டுடே... :)

    ReplyDelete
  10. யோவ் இருய்யா..
    பட்டாபட்டில முடிச்சு போட்டுட்டு வந்திடரேன்..
    ஸ்டார்ட் மியூசிக்...

    இன்னும்
    அஞ்சு நிமிசத்தில அடுத்த பதிவு ரெடி..

    ReplyDelete
  11. என்னை இந்தியாவின் ராணுவ தளபதியாக அறிவித்த ஆசியாவின் வருங்கால மற்றும் வாழ்நாள் பிரதமர் தமிழகத்தில் பிறந்த ஏசுநாதர் அய்யா திரு ரெட்டைவால்ஸ் அவர்களுக்கும் எதிர்க்கட்சி தலைவர் அஞ்சாநெஞ்சன் சிங்கத்தை மிரள வைக்கும் குரல் கொண்ட திரு பட்டாபி என்கிற பட்டாப்பட்டி அய்யா அவர்களுக்கும் என் இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்...உங்கள் இருவருக்கும் சேவை செய்ய காத்திருக்கிறோம் என்று இந்திய ராணுவத்தின் சார்பில் உறுதியளிக்கிறோம்....நன்றிகளும் வணக்கங்களும்...

    ReplyDelete
  12. டேய் ரெண்டு பெரும் என்ன வேலை பார்க்க விடுங்கடா டேய்...காலைலேர்ந்து மெயில் செக் பண்ணாம ப்லாக்லையே உக்காந்துருக்கேன் .இந்த எலவுக்குதான் ப்ளாக் பக்கமே வர்றதில்ல..... :)

    ReplyDelete
  13. சலாமியா தேசத்து மன்னர் என்னை சந்திக்க வந்துள்ளதால் பட்டாபட்டி பற்றிய அரிய தகவல்களோடு இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு பிரஸ் மீட்டில் சந்திக்கிறேன்.

    இப்படிக்கு

    பாரத மன்னர் ரெட்டைவால்ஸ்

    (ஜனநாயக காமெடிகள் இனி செல்லாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்)

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!