Pages

Wednesday, February 3, 2010

பட்டாபட்டி தலைவர் பதவியிலிருந்து ராஜினமா !!!

கடந்த இரண்டு வருடங்களாக நடந்த உட்கட்சி  மாநாட்டிலே ( யோவ்.. வெளியூரு.. பட்டாபட்டிய உருவாதையா...சொல்லிறேன் )  முடிவெடுத்த கருத்துக்களை உங்கள் முன் வைக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்..( லெமன் சூசு வேண்டாய்யா...)

இன்று முதல் ரெட்டை வால் இந்தியாவின் மன்னராக முடிசூட்டிக்கொண்டு டெல்லிக்கு  பயணமாகிறார்.  ( யோவ்.. அந்த தொப்பியக் கழட்டி மக்களுக்கு காமியா...)

மேலும் ( செருமல்.. ) அன்புத் தம்பி , என் உடன்பிறப்பு, ராணுவத் தளவிதியாக.. சாரி......,,ராணுவத் தளபதியாக பொறுப்பேற்கிறார்..

மேலும் பட்டாபட்டி , மகளிர் அணிக்கு, தலைவராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்..

மன்னராகப் பொறுபேற்றுள்ள ரெட்டைக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பது எல்லோரும் அறிந்ததே.. ஆகவே அவர் , நாளை முதல் , காலை வேளையில் தெருவீதி உலா வருவார் என்பதை  தெருவித்துக்கொள்கிறோம்..  பட்டத்து இளவரசியாக விருப்பமுள்ளவர்கள், காலை எழுந்து வாசலில் கோலம் போட ஆயத்தமாகுங்கள்.

கடைசியாக ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்..
ங்கொய்யாலே..
எவனாவது திவாரி , தேவ நாதாரிய...... மாமன் மச்சான் சொல்லி ,
மகளிரணிக்கு சேர்க்க ஆசைப்பட்டா , அடுத்த பாரதப் போர் வரும் என தாழ்மையுடன் சொல்லிக் கொள்ள விருப்பபடுகிறேன்..


( யோவ்.. நான் பெரிய மனுஷனய்யா.. தலைமைய.... ஒரு பதிவுக்காக விட்டுக்கொடுத்த பொன்மனச் செம்மல் என நாளை சரித்திரம் சொல்லும்..
என்ன பதிவா?.. எழுதினாம் பாருய்யா ஒரு பதிவை.. சூப்பர் அப்பு.. கம்பெனியில் சிரிச்சு .. சிரிச்சு மற்றவனுக  என்னைய கேணத்தனமா பார்க்க வச்சதால..........இனி தலைமையில இருந்தா எனக்கு மதிப்பில்ல.. யோவ்.......வெளியூரு. மரியாதையா டெய்லி ஒரு பதிவை போடு...

யோவ் ரெட்டை வாலு.. உனக்கும் தான்.. மார்க்கெட் நாளக்குகூட பண்ணிக்கலாமையா..
கம்பெனி என்ன... ஓடியா போகப்போகுது.. )
.
.
.

23 comments:

 1. சுதிர்February 3, 2010 at 9:46 PM

  அடப் பாவிகளா..
  அதுகுள்ள கிளைமேக்-ச முடிஞ்சிட்டிங்களேயா?

  ReplyDelete
 2. ராஜினாமா பொதுமக்களால் நிராகரிக்கப்படுகிறது...

  ReplyDelete
 3. //யோவ் ரெட்டை வாலு.. உனக்கும் தான்.. மார்க்கெட் நாளக்குகூட பண்ணிக்கலாமையா..
  கம்பெனி என்ன... ஓடியா போகப்போகுது.. )//

  சொல்லித்தான் சிரிக்கிறேன்:)

  ReplyDelete
 4. //சுதிர் said...
  அடப் பாவிகளா..
  அதுகுள்ள கிளைமேக்-ச முடிஞ்சிட்டிங்களேயா?
  //

  மூனு நாளுங்கண்ணே..இது போதாதா?

  ReplyDelete
 5. //க.பாலாசி said...
  ராஜினாமா பொதுமக்களால் நிராகரிக்கப்படுகிறது...
  //

  கொஞ்ச நாளைக்கு ரெஸ்ட் எடுக்கலாமுணே..
  கம்பெனி வேலை தலைக்கு மேல இருக்குணே..
  எங்க பாஸ் , இப்பவே மூக்க உறிஞ்சிகிட்டு பாக்கறாணே...

  ReplyDelete
 6. //ராஜ நடராஜன் said...
  சொல்லித்தான் சிரிக்கிறேன்:)
  //

  அண்ணே.. வெளியூரான் புதிய பதிவ பாருங்கண்ணே..
  சூப்பரா எழுதியிருக்காப்புல...

  ReplyDelete
 7. இதயம் கனத்தது ...கண்கள் பனித்தது

  இந்த பட்டாபட்டிய சும்மா சொல்லக்கூடாதுய்யா...நெஞ்ச நக்கறதை இதுவரைக்கும் கேள்விதான் பட்டிருக்கேன்...இப்போதான் அனுபவிக்கிறேன். வார்த்தைக்காக சொல்லலையா..நெஜமாத்தான் சொல்றேன்..இனிமே நான் ஜட்டி அணியப் போவதில்லை...ஒன் அன்ட் ஒன்லி பட்டாபட்டி தான். வெளியூரு ஆர்மில எல்லாவனுக்கும் யூனிபாரத்தைக் கழட்டிட்டு பட்டாபட்டி போட சொல்லுயா!

  திவாரி , தேவநாதாரி எல்லாம் உன் முன்னாடி தூசுய்யா..கஜானால துட்டெடுத்து உனக்கு ஆசிரமம் கட்டிதர சொல்றேன்யா..இதுக்கு மேல என்ன வேணும்? நீ பாட்டுக்குக் குதியாட்டம் போடு!

  ReplyDelete
 8. வாய்யா வண்ணாரப் பேட்ட..
  இன்னைக்கு மார்கெட்டிங்கல கலெக்ஷ்ன் அதிகமோ?..

  ReplyDelete
 9. //கண்ணகி said...

  :).....:)....:)
  //

  நன்றி கண்ணகி அவர்களே....

  ReplyDelete
 10. நீ பெரிய மனுசன்யா.சொன்னத செஞ்சுபுட்ட...!

  -வெளியூர்க்காரன்.
  ராணுவ தளபதி..
  இந்திய ராணுவம்.
  இந்தியா.

  ReplyDelete
 11. மிஸ்டர் பட்டபட்டி,
  டங்குவாலுவில் இருந்து ஒபாமா வரை பாரபட்சமின்றி பட்டாபட்டியை டாரு டாரா கிழிச்சி தொங்க விட்டீங்கலேன்னு உங்கள நம்பி கட்சில சேர்ந்தோம்.
  இப்ப என்னடான்னா திடுதிப்புன்னு ராஜினாமா, மாஜிமாமான்றீங்க ....
  என்ன மாதிரி அடிமட்ட தொண்டர்கள் கதி என்னாவது ? கொஞ்சமாவது யோசிச்சீங்களா?
  :-(

  ReplyDelete
 12. //வெளியூர்க்காரன் said...
  நீ பெரிய மனுசன்யா.சொன்னத செஞ்சுபுட்ட...!
  -வெளியூர்க்காரன்.
  ராணுவ தளபதி..
  இந்திய ராணுவம்.
  இந்தியா.
  //

  சல்யூட் சார்.... ( ஒவ்வொரு Line-யிலும் புள்ளியா வெச்சிருக்கீரு..
  வாரேன் கோலம் போட..)

  ReplyDelete
 13. //யூர்கன் க்ருகியர் said...
  மிஸ்டர் பட்டபட்டி,
  டங்குவாலுவில் இருந்து ஒபாமா வரை பாரபட்சமின்றி பட்டாபட்டியை டாரு டாரா கிழிச்சி தொங்க விட்டீங்கலேன்னு உங்கள நம்பி கட்சில சேர்ந்தோம்.
  இப்ப என்னடான்னா திடுதிப்புன்னு ராஜினாமா, மாஜிமாமான்றீங்க ....
  என்ன மாதிரி அடிமட்ட தொண்டர்கள் கதி என்னாவது ? கொஞ்சமாவது யோசிச்சீங்களா?
  :-(
  //

  சார்.. கொஞ்ச நாளைக்கு இரட்டைகுழல் துப்பாக்கி ( அது தாங்க .. வெளியூரு + ரெட்டை வாலு ) , கட்சிய பார்க்கட்டும்...
  நான் ரொம்ப பிஸி சார்.. மகளிர் அணிக்கு ' லையன் டான்ஸ் ' (சிங்கப்பூர் பேமஸ்) சொல்லிக்குடுத்துட்டு இருக்கேன்..
  சீக்கிரம் வரேன்... அரங்கேற்றம் வெளியூரானுக்கு முன்னால்....

  ReplyDelete
 14. //யூர்கன் க்ருகியர் said...//


  சாம்பிள் பார்கனுமா சார்...
  அன்னக்கே 'சுப்ரமணி சாமி' முன்னாடி ஒரு சாம்பிள் ஆடிக்காமிச்சாங்க..
  இப்ப கொஞ்ச புது அயிட்டம் சேர்த்து , புதுப் பொலிவோட வருவாங்க..
  அப்ப பாருங்க...

  ReplyDelete
 15. பட்டாபட்டி அண்ணே அநாவசியமா எங்களை தீக்குளிக்க வைக்காதிங்க. நீங்க பதவி இழந்தால் நாங்க எந்த தியாகமும் செய்யத் தயார். நன்றி.

  ReplyDelete
 16. //பித்தனின் வாக்கு said...
  பட்டாபட்டி அண்ணே அநாவசியமா எங்களை தீக்குளிக்க வைக்காதிங்க. நீங்க பதவி இழந்தால் நாங்க எந்த தியாகமும் செய்யத் தயார். நன்றி.
  //

  அப்படிங்களா..
  நான் என்ன நினைச்சேனா..
  இவனுகள தலைவரா கொஞ்ச நாளு போட்டுட்டு,
  நாம அமெரிக்காவரை , எல்லா பயலுகளையும் தாளிக்கலாம்.. ஏதாவது பிரச்சனை வந்தா , அழகா ..." தலைவர் இவருதான் .. எங்க தளபதி இவருதான் ..தலவரு சொல்லிதான் நான் பண்ணினேன்.."

  அப்படி இப்படி சொல்லி, கோத்து விட்டுவிட்டு , ஒரு கல்லுல ரெண்டு மாங்காயடிக்கலாமுனு ஒரு ப்ளான் போட்டேன்..

  சரிங்க.வேண்டான , அடுத்த உள் நாட்டு கலகத்துக்கு ஏற்பாடு பண்ணிடலாம்..

  ReplyDelete
 17. பட்டாபட்டியாரே...தேச பாதுகாப்பை கருதி இந்திய ராணுவம் உங்கள தீவிரமா கண்கானிச்சுகிற்றுக்கு..ஒரு சின்ன உள்குத்துக்கு நீங்க பிளான் பண்ணாலும் உங்கள உங்க மகளீர் அணியோட சேர்த்து போட்டு தள்ள சொல்லி மன்னர் உத்தரவு...அப்பறம் உங்க இஷ்டம்...(ரெட்டை சொல்றத நான் கேக்கலைனா அவன் எனக்கு சாராயத்துல சயனைட் வெச்சுடுவான்னு உனக்கே தெரியும்..அதனால பார்த்து நடந்துகொள்ளவும் என இந்திய ராணுவம் எச்சரிக்கிறது..ஜெய்ஹிந்த்..)

  ReplyDelete
 18. கலகம் செய்வதற்கு கையும் வாயும் ரொம்ப முக்கியம் என்பதை பட்டாபட்டிக்கு மன்னர் தெளிவுபடுத்திக் கொள்கிறார் ( டேய் தளபதி...நீ மட்டும் அங்க சாய்ஞ்ச ... கலவரம்னு வந்தா இவன் வேற எமெர்ஜென்ஸி, ஷகீலா படம்னு பரபரப்பாயிடுவானே!)

  ReplyDelete
 19. (யோவ் வெளியூரு.. நிசமாவே மன்னரு மூளைக்காரந்தாயா.. சென்னையில் இருந்து
  நாம பண்ற சதிய மோப்பம் புடிக்கிறாரு மாப்ள.. சாக்கிரதையா இருக்கனும்..)


  மன்னா.....வணங்குகிறேன்...

  ReplyDelete
 20. நீங்க ராஜினாமாவை வாபஸ் வாங்கலேன்னா நான் பீச் ஸ்டேஷன் வாசலிலே பொதுமக்கள் முன்னிலையிலே சோப்பு போட்டு குளிச்சிருவேன் தல...

  ReplyDelete
 21. //சேட்டைக்காரன் said...

  நீங்க ராஜினாமாவை வாபஸ் வாங்கலேன்னா நான் பீச் ஸ்டேஷன் வாசலிலே பொதுமக்கள் முன்னிலையிலே சோப்பு போட்டு குளிச்சிருவேன் தல...
  //


  அண்ணே..அப்படி உங்கள குளிக்க உட்டுவோமாணே.
  கொஞ்ச நாளு பொறுங்கண்ணே.....

  ReplyDelete
 22. அய்யா பட்டாபட்டி அவர்களே,

  உங்களையெல்லாம் என் மானஷீக குருவா நெனச்சு யாரு கிட்டயும் சொல்லாம கொள்ளாம ஒரு வலைப்பதிவ ஆரம்பிச்சிருக்கேன்..என் அழைப்பை ஏற்று மறுக்காம நீங்க வந்து நான் பிரபல பதிவராக ஐடியா கொடுக்கணும்

  என் முகவரி http://cute-paruppu.blogspot.com/

  அழைப்பிதழை புறக்கணிப்போர் மீது சட்டப்படி ஒன்னும் பண்ண முடியாது...அதனால வந்துரங்களேன்

  என்றும் என்றென்றும் அன்புடன்
  சிஷ்யன் பருப்பு
  கத்தார்

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!