Pages

Monday, February 1, 2010

வெளியூர்காரனுக்கு வக்கீல் நோட்டீசு....

சார்.. நீங்களே கேளுங்க அ நியாயத்தை...

நேற்று , வெளியூர்காரன் தமிழ் ப்ளாக் - பதிவர்களுக்கு ஒரு எச்சரிக்கை விட்டிருந்தார்..

நானும் நைட்டு ஒரு மணிவரைக்கும்,  கட்ட பஞ்சாயத்து பண்ணி
ஒரு வழியா பிரச்சனைய முடிச்சாசுங்க...

ஆனா பாருங்க..மற்றவங்க பிரச்சனைய முடிச்சா போதுங்களா?..
நம்ம பிரச்சனைய யாருங்க முடிப்பா?..

யோவ்.. என்ன பிரச்சனையினு சொல்லித்தொலைக்கிறதா?
பார்த்தீங்களா. உங்களுக்கே இவ்வளவு கோபம் வருது...
அப்ப எனக்கு எப்படியிருக்குங்க..

அவரு சொன்னவரை போட்டு தள்ளினதுக்கு இன்னும் கவரு வந்து சேரலிங்கோ..
நேத்து 3 மணிக்கு ஒரு தடவை,
4 மணிக்கு ஒரு தடவை,
அப்புறமா காலங்காத்தாலே 10 மணிக்கு ஒரு தடவை, லெட்டர் பாக்ஸ்-ச தொறந்து பாத்தாச்சுங்க..

ஒரு மனுசன் , எவ்வளவு தடவை தான் 10 மாடிக்கும்........ மேல, கீழ ஏறி இறங்கிறது?..

சார்.. படிக்கற உங்களுக்கே இவ்வளவு கோபம் வருதுங்களே..
பண்ணுன எங்களுக்கு எவ்வளவு கோபம் வருமுங்க...

போன மாசம் 500 ரூபா அனுப்பினாருங்கோ
அதுக்கு அடுத்து 1000 ரூபா கொடுத்தாருங்கோ..
போன வாரப் பிரச்சனைக்கு 5000 ரூபா செட்டில் பண்ணிணாருங்கோ..

ஆனா, இப்ப மூச்சே காணோங்கோ...
பதிவப் படிச்சதும் ஆபிஸ்க்கு 10,000  ரூபா அனுப்பி வைக்கச் சொல்லுங்கோ...

ஆபிஸ்ல யாருமில்லாட்டி கேட்டுக்கு முன்னாடி போட்டுட்டு போகச்சொல்லுங்கோ...


( அய்யா வெளியூர்காரரே..விலைவாசி எல்லாம் ஏறிப் போச்சு.. கொஞ்சம் போட்டு குடுங்க நைனா..)

சே.. சே.. வெக்கமா.. எனக்கா..
போங்க சார் டமாஸ் பண்ணிகிட்டு..

கவர மட்டும் மறக்காம அனுப்பி வெச்சுருங்க அப்பு... 
.
.
.


18 comments:

  1. நியாயம் செத்து போச்சு நாயக்கரே..நியாயம் செத்து போச்சு..!!!...இன்னிக்கு நானா.!!.பண்ணுங்க மொதலாளி...பண்ணுங்க...!!

    ReplyDelete
  2. //வெளியூர்காரன் said...

    நியாயம் செத்து போச்சு நாயக்கரே..நியாயம் செத்து போச்சு..!!!...இன்னிக்கு நானா.!!.பண்ணுங்க மொதலாளி...பண்ணுங்க...!!//

    எப்ப வரீங்க.. எப்ப போறீங்க..
    ஒண்ணுமே புரியல சாமி..

    ஆங்க்.. அந்த கவரு மேட்டரு....?

    ReplyDelete
  3. தலைவரே,
    ப மு க - கஜானா இவ்வளவு மோசமா இருக்குமென்று நெனக்கல ..

    ReplyDelete
  4. //யூர்கன் க்ருகியர் said...

    தலைவரே,
    ப மு க - கஜானா இவ்வளவு மோசமா இருக்குமென்று நெனக்கல ..//


    இருந்த பணத்த சந்ததிக்கு எழுதி வச்சாச்சு சார்..
    இப்ப புதுசா கணக்கு தொடங்கியிருக்கோம்...

    ReplyDelete
  5. நேத்தைக்கு மப்புல திரும்ப வந்தா வெளியூருக்கு நோட்டிஸ் கொடுக்கிறீங்களே

    (பதிவு பெருசுக எல்லாம் கோவிச்சுக்கப் போவுது.வெளியூர,உள்ளூர பாத்து செய்யுங்கப்பு)

    ReplyDelete
  6. //ராஜ நடராஜன் said...

    நேத்தைக்கு மப்புல திரும்ப வந்தா வெளியூருக்கு நோட்டிஸ் கொடுக்கிறீங்களே

    (பதிவு பெருசுக எல்லாம் கோவிச்சுக்கப் போவுது.வெளியூர,உள்ளூர பாத்து செய்யுங்கப்பு)//

    சார்.. நீங்க நம்மாளாப் போயிட்டீங்க..
    உங்ககிட்ட சொல்லாம யாருகிட்ட சொல்லப் போறோம்.
    இதெல்லாம் சும்மா உலுல்லாக்கு..

    வெளியூர்காரனுக்கும் , ப.மு.க வுக்கும்
    கூட்டணி பேச்சு வார்த்த நடந்துகிட்டு இருக்கு சார்.
    http://veliyoorkaran.blogspot.com/

    ReplyDelete
  7. யோவ் பட்டாபட்டி...சிங்கப்பூர்ல போலீஸ் தேடுதாமே உன்னையும் வெளியூர்காரனையும்... ஜாக்கிரதை மாமே! முதல்ல உங்க ஜாமீனுக்கு வழி பாருங்கையா!அப்புறம் விடலாம் வக்கீல் நோட்டீஸு ஹி ஹி

    ReplyDelete
  8. //ரெட்டைவால் ' ஸ் said...
    யோவ் பட்டாபட்டி...சிங்கப்பூர்ல போலீஸ் தேடுதாமே உன்னையும் வெளியூர்காரனையும்... ஜாக்கிரதை மாமே! முதல்ல உங்க ஜாமீனுக்கு வழி பாருங்கையா!அப்புறம் விடலாம் வக்கீல் நோட்டீஸு ஹி ஹி//

    அட.. அரசியல இதெல்லாம் சகஜமப்பா..
    நாங்க வக்கீல் நோட்டிஸ வாபஸ் வாங்கி , இப்ப கூட்டணி பத்தி
    பேசிகிட்டு இருக்கோம் தல..

    ReplyDelete
  9. போய் தொலைங்கய்யா...உங்க கூட்டணிக்கு நான் ஆதரவு தர்றேன்... எனக்கு தொலை தொடர்பும், நிதியும் வேணும்.ஏன்னா எனக்கு ஸ்பெக்ட்ரம்னா கொஞ்சம் இஷ்டம் அதான்!

    ReplyDelete
  10. அப்புறம் பட்டாபட்டி..உன் பேர்ல தமிழ்ல ஒரு படம் வருது தெரியுமா...லகான் படத்தை ரீமேக் பண்றாங்கய்யா..அவனுகளுக்கும் ஒரு நோட்டீஸ் அனுப்பிச்சு விட்ரு!

    ReplyDelete
  11. //ரெட்டைவால் ' ஸ் said...
    அப்புறம் பட்டாபட்டி..உன் பேர்ல தமிழ்ல ஒரு படம் வருது தெரியுமா...லகான் படத்தை ரீமேக் பண்றாங்கய்யா..அவனுகளுக்கும் ஒரு நோட்டீஸ் அனுப்பிச்சு விட்ரு!//

    அடப்பாவிகளா..
    சொல்லாமலேயா படம் எடுக்கறானுக..
    உடுங்க.. லீகல் நோட்டிஸ் உட்டு பணம் பண்ணிறலாம்..

    ReplyDelete
  12. //ரெட்டைவால் ' ஸ் said...
    போய் தொலைங்கய்யா...உங்க கூட்டணிக்கு நான் ஆதரவு தர்றேன்... எனக்கு தொலை தொடர்பும், நிதியும் வேணும்.ஏன்னா எனக்கு ஸ்பெக்ட்ரம்னா கொஞ்சம் இஷ்டம் அதான்! //


    முதலில் இதயத்தில் இடம் தருகிறோம்..
    அடுத்த வருடம் , நீங்க கப்பம் கட்டுவதைப் பொருத்து
    போஸ்ட் தரப்படும்...

    ReplyDelete
  13. ரெட்டைவால்ஸ்ஸுக்கு டெல்லி செல்வாக்குய்யா...இதயத்துல இடமாம்ல...அப்புறம் ராம்தாஸை உங்க கூட்டணியில சேத்து விட்டுடுவோம் ஜாக்கிரதை. மரியாதையா குடுத்துடு தொலைதொடர்பு துறையை...

    ReplyDelete
  14. //ரெட்டைவால் ' ஸ் said...

    ரெட்டைவால்ஸ்ஸுக்கு டெல்லி செல்வாக்குய்யா...இதயத்துல இடமாம்ல...அப்புறம் ராம்தாஸை உங்க கூட்டணியில சேத்து விட்டுடுவோம் ஜாக்கிரதை. மரியாதையா குடுத்துடு தொலைதொடர்பு துறையை...//

    @ரெட்டை வால்ஸ்
    உங்களுக்கு டெல்லி வரை செல்வாக்கு உள்ளது என தலைமைக்கு தெரிய வந்துள்ளதால் ,
    இன்றிரவு , பொதுக்குழு கூடி நல்ல முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்...

    ReplyDelete
  15. யோவ் பட்டாபட்டி...பொதுக்குழுவுல அவனை நம்பாத...ஒரு லெமன் ஜூஸுக்காக நாட்டையே காட்டிக் குடுப்பான். உள்துறையாவது குடுங்கைய்யா..கை அரிக்குது!

    ReplyDelete
  16. //கண்ணகி said...
    :)
    //

    நன்றிங்க..

    ReplyDelete
  17. ஆக மொத்தம் ஒரு பயல உட்றதா இல்ல...

    நேத்து கோயம்பத்தூர்ல பாத்தீங்கள.. புதுசு புதுசா 200 டௌன் பஸ்ஸ விற்றுங்காங்க.. அட அது பரவால்ல. 2 ரூவா டிக்கட் 5 ரூவா.. 5 ரூவா டிக்கட் 12 ரூவான்னு அராஜகம் பன்றாணுக.. ஏற்கனவே சௌத்தையும் சென்னையையும் வளைச்சுப் போட்ட பிக்காளிப் பயலுக(ச்சே கடைசியில என் வாயிலயும் கெட்ட வார்த்த வர வெச்சுட்டாணுக) இப்ப கொஞ்சம் கொஞ்சமா கோயம்புத்தூர்லயும் புத்து மாறி மொளச்சுட்டாணுக..
    "பட்டணம்"ங்கற ஊருக்கு(அதாம்ப்பா சிங்காநல்லூர் பக்கத்துல இருக்குல்ல)ஒரே ஒரு பஸ்ஸுதான் ஓடிக்கிட்டு இருந்துச்சு. இப்ப அத நிறுத்திட்டு இந்த புது பஸ்ஸ விட்டாணுக.. காலையிலயே பஸ்ஸு வாசல்ல கண்டக்டர் நின்னுக்குட்டு தெனாவட்டா, அஞ்சுருவா இருந்தா மட்டும் ஏறுங்க ஏறுங்கன்னு கூவியிருக்கான். சனங்க எல்லாம் அவனுகள புடிச்சு அங்கேயே உக்கார வெச்சுட்டாணுக.. அப்புறம் போலீஸ் வந்து தான் உட்டுச்சு. இத நாலு கிழி கிழி அண்ணாத்த.. கேக்க ஆளில்லைன்னு நெனைக்கிராய்ங்க....

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!