சார்..ரொம்ப கஷ்டப்பட்டு, தட்டுத்தடுமாறி, ஸ்கூல் படிச்சுட்டேன்.. எனக்கு ரொம்ப நாளா, ஷேர் மார்க்கெட்ல இறங்கி, பணக்காரனா ஆகி, அவனுக மாறியே வாழனுமுனு ஆசை..என்ன பிரச்சனைனா..இந்த ஷேர் மார்க்கெட் பற்றி, ஒரு மண்ணும் மண்டையில ஏறமாட்டீங்குது.. நண்பர்களை கேட்டா, சரக்கு வாங்கித்தா, சொல்லிக்கொடுக்கிறேனு சொன்னாங்க.. சரி...பொழைக்க வழி சொல்றவங்களுக்கு, சரக்கு வாங்கி கொடுப்பது தப்பேயில்லனு, சாஸ்திரத்தில சொல்லியிருக்கே..வாங்கடானு, ஒரு நல்ல நாள்ல கடைக்கு கூட்டிக்கிட்டு போனேன்..
படுபாவிக.. தண்ணியப்போட்டு ,அங்கேயே ஆப்பாயில் எடுக்கிறானுக.. கையிலிருந்த காசெல்லாம் எடுத்து கல்லாவுல கட்டிப்புட்டு திரும்பிப் பார்க்காம ஓடி வந்துட்டேன்..சோறு துன்னனுமே..அதுக்கு ஏதாவது வழி பண்ணலாமுனு, சலூன் கடை வைச்சுட்டேன்
சார்.. ஆனாலும் கை அரிக்குது.. நீங்கதான் என் வாழ்க்கையில ஒளி ஏற்றி
வைக்கனும்..எனக்கு மட்டும் இந்த ஷேர் மார்க்கெட்டைப்பற்றி, புரியறமாறி சொல்லீட்டீங்க..பட்டாபட்டி சார்.. எங்க கடையில, உங்களுக்கு கட்டிங் + சேவிங் ப்ரீ...
அன்னூர் ஆளவந்தான்
-----------------------------------------------------
வணக்கம் அன்னூர் ஆளவந்தான்..ஏய்யா..இப்பத்தான் கை மேல தொழில
வெச்சிருக்கையே..அப்புறம் ஏன் காண்டு புடிச்சு அலையிறே?.. இங்க பாரு..முடி
வெட்டறது ,டாக்டர் தொழில் மாறி..எல்லா சீசன்லையும் காசு பார்க்கலாம்..
ஷேர்..ஷேர்னு கூவிக்கிட்டு இருக்கான்களே..அது ஒரு கானல் நீரருப்பா..கொஞ்சம் மூளைய யூஸ் பண்ணினா, காசு பார்க்கலாம்..இல்ல கட்டின கோமணத்தை அவுத்து விட்டுடுவானுக..இன்னொரு விசயம்..ஆமா..இப்ப எதுக்கு பணக்காரனாகனுமுனு பரபரக்குறே?..அவனுக சோத்தை தின்னாலும், காலையில அதுதான் வரும்.. நீ தின்னாலும் அதுதான் வரும்..
சரி..உனக்கு ’சனி’ குட்மார்னிங் சொல்லனுமுனு இருந்தா, நான் நடுவுல என்ன
செய்யமுடியும?..இந்த ஷேர் மார்க்கெட்னா என்னானு ஒரு கதை சொல்றேன்..
கேட்டுக்கோ..அதுக்கு மேல உன் விருப்பம்...
இரு அழகான கிராமம்..மக்கள் சந்தோசமா விவசாயம் பண்ணிக்கிட்டு, குடும்பம் குட்டியோட இருக்கானுக..நல்லது கெட்டதுக்கு கூடிக்கிறதும், சின்ன சின்ன சண்டை சச்சரவுமா, வாழ்க்கை ஆனந்தமா ஓடிக்கிட்டு இருக்கு..என்ன ஒரு பிரச்சனைனா, அங்க குரங்கு தொல்லை கொஞ்சம் அதிகம்..ஆக்கி வெச்ச சோத்தை, வீட்டுக்குள்ள புகுந்து , தட்டுல போட்டு சாப்பிடற அளவுக்கு உரிமையோட சுத்திக்கிட்டு இருக்கு..
அப்ப ஒரு முதலாளி அந்த கிராமத்துக்கு போனான்..கிராமத்தான் வாழ்க்கைமுறையை பார்த்ததும், அவனுக்கு எப்பம்போல வயிரெறியுது..என்னடா பண்ணலாமுனு யோசிக்கிறான்..
ஒரு நாள், ஊர் மத்தியில நின்னுக்கிட்டு, ”அய்யா வாங்க..அம்மா வாங்க..கடவுள், என் கனவில வந்தாரு”னு கூவறான்..கடவுள்னு சொன்னதும், மக்கள் போட்டது போட்டபடி மைதானத்துல கூடறாங்க..
கூட்டத்தை பார்த்துட்டு, “மக்களே..நான் பிறவிப்பணக்காரன்..ஒரு நாள், நல்ல தூக்கத்தில கடவுள் வந்து, இப்படி ஒரு கிராமம் இருக்கு..அங்குள்ள மக்கள்,குரங்கினால பெரும் பிரச்சனைய சந்திக்கிறாங்க..நீ போயி அவங்களுக்கு, ஏதாவது நல்லது பண்ணுனு சொல்லியிருக்காரு”னு சொல்றான்.
மக்கள்தான் விவரமில்லாதவனுக ஆச்சே..சந்தோசமா தலையாட்டுரானுக அவனுக தலை போவது தெரியாமல்.. முதலாளி சொல்றான்..”மக்களே.. இனிமேல உங்களுக்கு நல்ல காலம் வந்திடுச்சு..தொல்லை தருகின்ற குரங்கை பிடித்து என்னிடம் தந்தால், ஒரு குரங்குக்கு ரூ 100 தருகிறேனு.. அது வரை , இந்த கிராமத்தில ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கிக்கொள்கிறேன் “
மக்களும், மண்டையாட்டிக்கிட்டு, குரங்கு பிடிக்கப்போறானுக..ஒரு வாரம் கழித்து பிடித்த குரங்குகளுடன் முதலாளி வீட்டுக்கு போனா, அவரு, 1 குரங்குக்கு ரூ 100 கொடுத்து, எல்லா குரங்கையும் வாங்கி கூண்டுல அடைச்சுட்டாரு..
இப்ப மக்களை பார்த்து, “இனிமேல் பிடிக்கும் குரங்குகளை, ரூ 200 -க்கு வாங்கி
கொள்கிறேனு” அறிக்கை விடறாரு..மக்களும், விவசாயத்தை மறந்து, குடும்பத்தோட குரங்கு வேட்டைக்கு அலையாருனுக..
ரூ200 ஆச்சே.. ஆசை விடும்மா? .இப்ப கிராமத்தில குரங்குகள் வேற கம்மியாயிடுச்சு.. அடுத்த வாரம், கஷ்டப்பட்டு மீதிக்குரங்குகளை பிடித்து வருகின்றனர்..சொன்னபடி 1 குரங்கு , ரூ200 செட்டில பண்ணிட்டாரு...
இப்ப....
”நீங்கள் பிடிக்கும் குரங்கு ஒன்றுக்கு ரூ 500 கொடுக்கப்போறனு” முதலாளி
சொன்னதும் மக்கள் விழிப்படைஞ்சிட்டாங்க..ஆகா, இனி மாமன் மச்சானு கூட்டு சேர்ந்துக்கிட்டு போனா, நல்லாயிருக்காது.. நாமே, தனித்தனியா பிடிச்சு, ரூ 500 வாங்கி வாழ்க்கையில செட்டிலாகிடனுமுனு சபதம் போட்டுக்கிட்டு போறானுக..
கடைசியா கிடைத்தது 10 குரங்கு மட்டுமே..நல்லவரும் சொன்னபடி 1 குரங்கு = ரூ 500 கொடுத்திட்டு, “மக்கா..நகரத்தில, என்னோட கடைய, போட்டது போட்டபடி வந்துட்டேன்..அதுவுமில்லாம புள்ள குட்டியப் பார்த்து நாளாச்சு..நான் போயிட்டு, 2 வாரம் கழித்து வருகிறேன்..அதுவரை நம்ம
கணக்குப்பிள்ளை ( ப.சி இல்ல பாஸ்..) குரங்குகளை பார்த்துக்குவான்..அப்புறம்
சொல்ல மறந்துட்டேன்..அடுத்த பேஜ்ல 1 குரங்கு, ரூ 1000.. வரட்டா”னு
சொல்லிக்கிட்டு நகரம் பார்க்கப்போயிட்டாரு..
மக்கள் அலையுறானுக...ஒரு குரங்காவது மாட்டனுமே..சே...கண்ணுக்கு முன்னாடி காசு ஆடுது.. 1 குரங்கு , ரூ 1000 .. விவசாயத்தை விட்டுவிட்டு, காடு மேடா சுத்தறானுக..ஊகூம்.. கிடைக்கலை.. என்னடா பண்றது..சரி வேற ஏதாவது வாங்குவானுகளானு (நப்பாசை?) , எதுக்கும், அந்த கணக்குப்புள்ளைய கேட்கலாமுனு முதலாளி வீட்டுக்குப்போறானுக..
கணக்குப்புள்ளை, காலை விரிச்சுட்டு, கட்டில்ல தூங்கிக்கிட்டு இருக்காரு...
எழுப்பி..எங்க வாழ்க்கைக்கு ஒரு வழி சொல்லுனு அழறானுக..மக்கள் படும்பாட்டை பார்த்து, கணக்குப்புள்ளை கண்ணுல தண்ணியா வருது.. ”உங்க நிலைமைய பார்த்து மனசு கஷ்டமாயிருக்கு..என்னோட முதலாளியா?... இல்ல மக்களா?னு கேள்வி கேட்டா, நான் மக்கள்னுதான் சொல்லுவேன்..ஏன்னா மங்களோட நானும் ஒரு அங்கம். அதனால நாம கூட்டணி வெச்சு காசு பார்க்கலாம்.. நீங்க என்ன பண்றீங்க..எங்கிட்ட உள்ள குரங்கையெல்லாம், ரூ800 கொடுத்து வாங்கிடுங்க..அடுத்த வாரம் முதலாளி வந்ததும், அவருகிட்ட ரூ 1000 -துக்கு விற்று ரூ 200 லாபம் பார்க்கலாமுனு சொல்றாரு..
இப்ப மக்கள் கண்களில் தண்ணீர்..நீர்தான் எங்களை வாழவைத்த தெய்வம்னு சொல்லீட்டு, இருந்த தோட்டம், வீடு, காடு எல்லாம் விற்றுவிட்டு, குரங்கா வாங்கி வெச்சுட்டானுக..
இப்ப
- கணக்குப்புள்ளைய காணவில்லை..
- முதலாளி திரும்பவும் வருவானா???
- சும்மா கிடைத்த, குரங்கோட அடக்கவிலை ரூ 800
- விற்கும் விலை ரூ 1000...லாபம் ரூ 200..
சரி அன்னூர் ஆளவந்தான்..
இவ்வளவு தூரம் நூல்பிடிச்சப்மாறி படிச்சிட்டு வந்தீங்க... எங்கிட்ட சில குரங்குகள் இருக்கு சார்..குரங்கு விலை ரூ 700 தான் (அன்னூர்காரங்களுக்கு, 100 ரூபா டிஸ்கவுண்ட்..) .. ஆனா சீக்கிரமா ரூ 1000 க்குப்போகும்.. வாங்கிக்குங்க பாஸ்...
டிஸ்கி..
சரியாக வைத்தால் சரக்கு உங்களுக்கு..லாபம் எங்களுக்கு...
இல்லாட்டி, உங்க கோமணம் எங்களுக்கு..லாபமும் எங்களுக்கு..
கடைசியா..ஹி..ஹி...எல்லாமே எங்களுக்கு...ஹி..ஹி
.
.
.
சரக்கு இல்ல பாஸ்.. ஹி..ஹி..
ReplyDeleteமன்னித்து அருளுக..ஹி..ஹி...
ஹி..ஹி..ஹி..ஹி
ஹி..ஹி..ஹி
ஹி..ஹி
ஹி
படிச்சிட்டு வ்ர்றேன் தலைவா.
ReplyDeleteJey said...
ReplyDeleteபடிச்சிட்டு வ்ர்றேன் தலைவா.
//
ரைட்டு.. பொறுமையா படிச்சுட்டு எனக்கும்...விளக்கமா சொல்லுங்க..ஹி..ஹி
கதை நல்லாருக்கு தல. சராசரி மனுஷன் ஷேர் மார்கட்ல சம்பாரிச்சத விட இழந்ததுதாம்பா அதிகம்.
ReplyDeleteவோட்டு போட்டுட்டேன்.
//பொழைக்க வழி சொல்றவங்களுக்கு, சரக்கு வாங்கி கொடுப்பது தப்பேயில்லனு, சாஸ்திரத்தில சொல்லியிருக்கே.//
ReplyDeleteஅது எந்த சாஸ்திரத்துல சொல்லியிருக்கு?
பட்டாப்பட்டி சாஸ்திரதிலா!!!!!!!!!!!!!!!!!!
தலைவா எப்படி ,கலக்குங்க இதுதான் பட்டாப்பட்டி
ReplyDelete@சசிகுமார் said...
ReplyDelete//பொழைக்க வழி சொல்றவங்களுக்கு, சரக்கு வாங்கி கொடுப்பது தப்பேயில்லனு, சாஸ்திரத்தில சொல்லியிருக்கே.//
அது எந்த சாஸ்திரத்துல சொல்லியிருக்கு?
பட்டாப்பட்டி சாஸ்திரதிலா!!!!!!!!!!!!!!!!!!
//
அதே...
பக்கம் 18...ல ,கடைசி வரி அதுதான் பாஸ்..
யோவ் குரங்கு. சீ சீ குரங்கு கதை நல்லா இருக்குன்னு சொல்ல வந்தேன். வாய் குழறிடுச்சு. ஷேர் மார்க்கெட்ல உள்ளவங்களை எல்லாம் குரங்குன்னு சொல்றீங்களா?
ReplyDeleteBlogger ஆண்டாள்மகன் said...
ReplyDeleteதலைவா எப்படி ,கலக்குங்க இதுதான் பட்டாப்பட்டி
//
வாங்க பிரதர்..என்னோட முதல் கமென்ஸ்ச பாருங்க..ஹி..ஹி
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteயோவ் குரங்கு. சீ சீ குரங்கு கதை நல்லா இருக்குன்னு சொல்ல வந்தேன். வாய் குழறிடுச்சு. ஷேர் மார்க்கெட்ல உள்ளவங்களை எல்லாம் குரங்குன்னு சொல்றீங்களா?
//
அது என்ன ஷேர் மார்க்கெட்ல இருப்பவர்களை மற்றும்?..
கேள்விக்குறி?....
பட்டா, வாழ்க்கைல நெறய சம்பாரிச்சு நல்லா வாழ்றதுக்கு, என்கிட்ட சூப்பர் ஐடியாலாம் இருக்கு, உனக்கு என்னோட சேவை ஏதும் தேவைனா, சிங்கைல ஸ்டார் கோட்டல்ல ரூம் போட்டுட்டு, அப் அண்ட் டெளன் டிக்கெட் எடுத்து அனுப்பு , வேணும்னா மங்குனி,பன்னிகுட்டினு நம்ம பயளுகளயும் கூட்டிட்டு வர்றேன், நேங்க எங்கயோ போயிருவீக.
ReplyDeleteJey said...
ReplyDeleteபட்டா, வாழ்க்கைல நெறய சம்பாரிச்சு நல்லா வாழ்றதுக்கு, என்கிட்ட சூப்பர் ஐடியாலாம் இருக்கு, உனக்கு என்னோட சேவை ஏதும் தேவைனா, சிங்கைல ஸ்டார் கோட்டல்ல ரூம் போட்டுட்டு, அப் அண்ட் டெளன் டிக்கெட் எடுத்து அனுப்பு , வேணும்னா மங்குனி,பன்னிகுட்டினு நம்ம பயளுகளயும் கூட்டிட்டு வர்றேன், நேங்க எங்கயோ போயிருவீக.
//
இந்த டீலிங் நல்லாயிருக்கே..
இதுக்கு மேல நான் எங்கேயோ போகனுமுனா.. தமிழநாட்டு முதலமைச்சராகத்தான் ஆகனும்..
கிளம்பி வாங்க அப்பு.. சிங்கப்பூர் என்ன சீனாவுலையா இருக்கு?..
அடக்க விலைன்னா என்ன சார்? அடக்கம் பண்றதுக்கா?
ReplyDeleteயோவ் பட்டு,சூப்பர்யா.
ReplyDeleteஆமா,நீ மட்டும் எப்பிடியா தப்பிச்ச?நான் குரங்கு பிடிக்குறவங்க கிட்ட இருந்து எப்டி தப்பின னு கேக்கலையா.இந்த ஷேர் ஆளுங்க கிட்ட இருந்து எப்டி தப்பிச்சனு கேட்டேன். :)
@Phantom Mohan said...
ReplyDeleteஅடக்க விலைன்னா என்ன சார்? அடக்கம் பண்றதுக்கா?
//
எல்லாப் பயலும் ஒரு மாறிதான் திரியுரானுக..
“அடக்கம் அமரருள் உய்க்கும்.. அடங்காமை ????????? ????”
ஹி..ஹி
எனக்கு தெரிஞ்சது..
ஏற்கனவே படிச்சதுதான், பட்டி பார்த்தது நல்லா இருக்கு!!
ReplyDeleteநான் ப்ளாஸ்ட்டிக் சேர் வாங்கறதோட சரி! :))
ஆமா கேக்க மறந்துட்டேன். சவுக்கியமா பட்டி? :))
@ILLUMINATI said...
ReplyDeleteயோவ் பட்டு,சூப்பர்யா.
ஆமா,நீ மட்டும் எப்பிடியா தப்பிச்ச?நான் குரங்கு பிடிக்குறவங்க கிட்ட இருந்து எப்டி தப்பின னு கேக்கலையா.இந்த ஷேர் ஆளுங்க கிட்ட இருந்து எப்டி தப்பிச்சனு கேட்டேன். :)
//
இன்னும் கூண்டுக்குள்ல்ளதான் இருக்கேன்..
நான் ஷேர் பற்றி சொல்லலே..குரங்கை பற்றி சொன்னேன்..ஹி..ஹி
Blogger 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
ReplyDeleteஏற்கனவே படிச்சதுதான், பட்டி பார்த்தது நல்லா இருக்கு!!
நான் ப்ளாஸ்ட்டிக் சேர் வாங்கறதோட சரி! :))
ஆமா கேக்க மறந்துட்டேன். சவுக்கியமா பட்டி? :))
//
ஆகா.. என்னைய கேட்ட முதல் ஆள் நீங்கதான் சார்..
சவுக்கியமா இருக்கேன் பாஸ்..
என்ன.. இங்க ஆணி கொஞ்சம் அதிகமாயிட்டு இருக்கு.. சீக்கிரம் பதிவுக்கு வணக்கம் போட யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன்.. பார்ப்போம் சார்...
குரங்குக்கதை நல்லாருக்கு....உங்களுக்கு எவ்வளவு போச்சு...
ReplyDeleteவந்துட்டம்ல! கடைல என்ன ஓடிக்கிட்டு இருக்கு?
ReplyDeleteதல, பன்னி விக்கிரவன் எவனாவது வந்தா சொல்லுங்க!
ReplyDeleteஅப்படியே வித்து வாழ்க்கைல செட்டில ஆகிடலாம்ல?
ReplyDelete//என்ன.. இங்க ஆணி கொஞ்சம் அதிகமாயிட்டு இருக்கு.. சீக்கிரம் பதிவுக்கு வணக்கம் போட யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன்.. பார்ப்போம் சார்...//
ReplyDeleteஎன்ன பட்டி இப்பிடி சொல்ர? நீ புடுங்குற ஆணி எல்லாத்தையும் ஏவனோ பன்னாடை திருப்பி அடிச்சிக்கிட்டு இருக்கான்னு நெனக்கிறேன்!
கையெல்லாம் ஆடுது டைப் பண்ண முடியல, ஈவ்னிங் கொஞ்சம் ஏத்திக்கிடு தெம்பா வந்து மீட் பண்றேன்!
ReplyDeleteரொம்ப அடிவாங்கியிருப்பீங்க போலருக்கே...
ReplyDelete//ஆனா சீக்கிரமா ரூ 1000 க்குப்போகும்.. வாங்கிக்குங்க பாஸ்...//
அய்யா சாமீ... ஆளவிடுங்க...
@கண்ணகி said...
ReplyDeleteகுரங்குக்கதை நல்லாருக்கு....உங்களுக்கு எவ்வளவு போச்சு...
//
அது இருக்கும் 100 குரங்குகள்..( கடைசி, முதலாளி சொன்ன விலை மேடல்..)..
ஹி..ஹி
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteதல, பன்னி விக்கிரவன் எவனாவது வந்தா சொல்லுங்க!
//
ஆகா.. அடுத்த பிஸ்னஸ் ரெடி பண்ணி(ன்னி)ட்ட போல..
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
கையெல்லாம் ஆடுது டைப் பண்ண முடியல, ஈவ்னிங் கொஞ்சம் ஏத்திக்கிடு தெம்பா வந்து மீட் பண்றேன்!
//
ரைட்டு.. பார்த்து ஆம்லெட் போடாம வா...
@ க.பாலாசி said...
ReplyDeleteரொம்ப அடிவாங்கியிருப்பீங்க போலருக்கே...
//ஆனா சீக்கிரமா ரூ 1000 க்குப்போகும்.. வாங்கிக்குங்க பாஸ்...//
அய்யா சாமீ... ஆளவிடுங்க...
//
என்ன பாஸ்.. ஒரே மாவட்டத்துக்காரங்க..பார்த்து பண்ணுங்க சாமியோவ்...
//பட்டாபட்டி.. said...
ReplyDeleteரைட்டு.. பார்த்து ஆம்லெட் போடாம வா...//
ஆம்லெட்டாவது ஆப்பாயிலாவது, நமக்கு ஒன்வேதான், நோ ரிட்டன்!
ஷேரு ஷேருன்னு என்னமோ எழுதியிருக்கீங்களே, அது இந்த சேரு தானே? (அதாங்க டேபிள் கூட போடுவோமே அது!
ReplyDeleteஇனிமே சேர் வாங்கும்போது டேபிளும் சேத்து வாங்கிடுங்க ஒரு பிரச்சனையும் வராது, எப்பூடி?
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஷேரு ஷேருன்னு என்னமோ எழுதியிருக்கீங்களே, அது இந்த சேரு தானே? (அதாங்க டேபிள் கூட போடுவோமே அது!
//
யோவ்..உளராதே..
உயிரைக்கொடுத்து எழுதியிருக்கேன்..ஷேர்னா என்னானு தெரியாது உனக்கு..?
அதுதான்யா விட்டத்திஅல் சுற்றுமே..காற்று வருமே...
ஓ..
சாரி..சாரி..
உனக்கு ஆற்காடு பல்பு கொடுத்ததை மறந்துட்டேன்...
///பட்டாபட்டி.. said...
ReplyDeleteஅதுதான்யா விட்டத்திஅல் சுற்றுமே..காற்று வருமே...///
அதுக்குப் பேரு ஃபேன், எங்கே சொல்லுங்க, ஃபே...!, ன்ன்...! சரியா? இன்னொரு தடவ சொல்லிப் பாருங்க, ஃபே...!, ன்ன்...! , சரியா சொன்னீங்க, அடுத்த பாடத்துக்கு போவோமா?
"சீக்கிரம் பதிவுக்கு வணக்கம் போட யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன்"
ReplyDelete:(
அட மூதேவிகளா?! எனக்கு நல்லா வாயில வருதுல்ல ?
ReplyDeleteபின்ன என்னா? கிளாஸ் எங்க இருக்கு? பாட்லு எங்க இருக்கு?
கண்ணு கூடவா பீசாபுடிச்சு?
அதுசரி, அண்ணாத்தே, அந்த சரக்கு பேரு இன்னா தல?
"சீக்கிரம் பதிவுக்கு வணக்கம் போட யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன்"
ReplyDelete:(
June 16, 2010 3:39 PM
Delete
Blogger கக்கு - மாணிக்கம் said...
அட மூதேவிகளா?! எனக்கு நல்லா வாயில வருதுல்ல ?
பின்ன என்னா? கிளாஸ் எங்க இருக்கு? பாட்லு எங்க இருக்கு?
கண்ணு கூடவா பீசாபுடிச்சு?
அதுசரி, அண்ணாத்தே, அந்த சரக்கு பேரு இன்னா தல?
//
சரக்கு வீணா போவதை பார்த்து கோபப்படக்கூடாது..ஏன்னா..சரக்கு ஊற்றும்ம்போது சைட்ல , நம்ம கோமணத்தையும் உருவரானுகோ..
இப்ப சொல்லுங்க..
சரக்கு வேணுமா?.. இல்ல கோவணம் வேணுமா தல...
இந்த சரக்குக்கு பேரு கார்ல்ஸ்பெர்க்கு சொல்லுவானுகோ ..
Blogger ஷர்புதீன் said...
ReplyDelete"சீக்கிரம் பதிவுக்கு வணக்கம் போட யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன்"
:(
//
ஆணி பாஸ்...ஆணி....
பங்கு மார்க்கெட்டில் விளையாட்டு பற்றி இவ்வளவு தெளிவாக யாராலும் சொல்ல முடியாது. வாழ்த்துகள் பட்டாப்பட்டி!
ReplyDelete//பட்டாபட்டி.. said...
சரக்கு இல்ல பாஸ்.. ஹி..ஹி..
மன்னித்து அருளுக..ஹி..ஹி...
//
சரக்கு இல்லைன்னாதான் இம்மாதிரி நல்ல பதிவுகள் வரும்னா, எப்பவும் சரக்கு இல்லாம இருக்க இறைவனை வேண்டுகிறேன்!
பட்டு , என் கண்ணு கலங்கிருச்சிபா ..இந்த மூனு மாசத்துல வந்த அருமையான பதிவு இது.....
ReplyDeleteஎன்ன மாதிரி மர மண்டைகளுக்கும் புரிஞ்சிடுச்சின்னா பாத்துகோயேன்..!!
ReplyDelete\\உங்க நிலைமைய பார்த்து மனசு கஷ்டமாயிருக்கு..என்னோட முதலாளியா?... இல்ல மக்களா?னு கேள்வி கேட்டா, நான் மக்கள்னுதான் சொல்லுவேன்..ஏன்னா மங்களோட நானும் ஒரு அங்கம். அதனால நாம கூட்டணி வெச்சு காசு பார்க்கலாம்.. //
ReplyDeleteஅப்ப முதலாளி மேல் தப்பில்லிங்கண்ணா அந்த கணக்குபிள்ள மேலதா தப்பு (நான் பி.மு. சொல்ல)
\\ஜெய்லானி said...
ReplyDeleteஎன்ன மாதிரி மர (மண்டைகளுக்கும்) புரிஞ்சிடுச்சின்னா பாத்துகோயேன்..!!//
ஜெய்லானி அண்ணே உங்களோட நிறைய மர மண்டைங்க இருக்காங்களாண்ணே.
Pattaa Patti , where are u in Singapore ?
ReplyDeleteU very great. This Messange can understand everybody. I think U will come to polictical and public service.
ReplyDeleteதமாஷ் இல்ல, உண்மையிலேயே இந்த "ஷேர் மார்கெட் உல்டா லண்கிடி" வேலைய இவ்வளவு எளிமையா விளக்கி சொன்னதுக்கு நம்ம பட்டாவுக்கு பாராட்டுக்கள். பதிவு போட்டா இப்படி நாலு பேருக்கு ஏதாவது சொல்லணும் அய்யா! காமெர்ஷ் படிச்சவுங்கோ
ReplyDeleteகொம்ப தூக்கினு வந்துராதீங்கோ கண்ணுகளா!
கலக்கல் பட்டாபட்டி சார்... குரங்கு கதை நல்லா இருக்கு..
ReplyDeleteபட்டு உண்மையில் கலக்கிட்ட எல்லோருக்கும் புரியும் மாதிரி சொல்லி இருக்க
ReplyDeleteJey said...
ReplyDeleteபட்டா, வாழ்க்கைல நெறய சம்பாரிச்சு நல்லா வாழ்றதுக்கு, என்கிட்ட சூப்பர் ஐடியாலாம் இருக்கு, உனக்கு என்னோட சேவை ஏதும் தேவைனா, சிங்கைல ஸ்டார் கோட்டல்ல ரூம் போட்டுட்டு, அப் அண்ட் டெளன் டிக்கெட் எடுத்து அனுப்பு , வேணும்னா மங்குனி,பன்னிகுட்டினு நம்ம பயளுகளயும் கூட்டிட்டு வர்றேன், நேங்க எங்கயோ போயிருவீக./////
என்னை விட்டுட்டீகளே jey இருங்க நீங்க போற ப்ளைட்டில் பாம் வைக்க சொல்லுறேன்
50
ReplyDeleteபட்டாபட்டி.. said....
ReplyDeleteஎன்ன.. இங்க ஆணி கொஞ்சம் அதிகமாயிட்டு இருக்கு.. சீக்கிரம் பதிவுக்கு வணக்கம் போட யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன்.. பார்ப்போம் சார்...////////
அப்படிலாம் சொல்லகூடாது,மீறினால் பன்னிகுட்டியை மூத்திர சந்தில் விட்டு அடிக்கும் போராட்டத்தை ஆரம்பிப்போம்
கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteபதிவு போட்டா இப்படி நாலு பேருக்கு ஏதாவது சொல்லணும் அய்யா! காமெர்ஷ் படிச்சவுங்கோ
கொம்ப தூக்கினு வந்துராதீங்கோ கண்ணுகளா!//////
இதில் எதுவும் உள்குத்து இல்லையே
இவ்வளவு எளிமையா யாராலும் சொல்ல முடியாது தல!
ReplyDeleteஹர்சத் மேத்தா கம்பெனியா ஆரம்பிக்காம ஷேர் விட்ட கதை கண் முன் நிழலாடுது!
எனக்கு அர்ஜன்ட்டா பத்தாயிரம் கொரங்கு வேணுமே, பட்டாபட்டி, எங்கூர்ல கொரங்குகளுக்கு செம கிராக்கி, புதிசா ஒரு மொதலாளி வந்துருக்காருங்க.
ReplyDeleteபட்டா, பல முறை பட்டுட்டேன். இருந்தாலும் இன்னமும் ஆடிக்க்கிட்டுதான் இருக்கேன் இந்த ஆட்டத்தை.
ReplyDeleteஷேர் மார்கெட் பத்தி இன்னும் கொஞ்சம் தெருஞ்சுக்கணும்னா இந்தப்பதிவையும் பாருங்க.
ReplyDeletehttp://swamysmusings.blogspot.com/2010/05/blog-post_18.html
பெயர் சொல்ல விருப்பமில்லை said...
ReplyDeleteபங்கு மார்க்கெட்டில் விளையாட்டு பற்றி இவ்வளவு தெளிவாக யாராலும் சொல்ல முடியாது. வாழ்த்துகள் பட்டாப்பட்டி!
சரக்கு இல்லைன்னாதான் இம்மாதிரி நல்ல பதிவுகள் வரும்னா, எப்பவும் சரக்கு இல்லாம இருக்க இறைவனை வேண்டுகிறேன்!
//
நன்றி பாஸ்..
@ஜெய்லானி said...
ReplyDeleteபட்டு , என் கண்ணு கலங்கிருச்சிபா ..இந்த மூனு மாசத்துல வந்த அருமையான பதிவு இது.....
//
உள்குத்து(?)
@சிவா (கல்பாவி) said...
ReplyDelete\\உங்க நிலைமைய பார்த்து மனசு கஷ்டமாயிருக்கு..என்னோட முதலாளியா?... இல்ல மக்களா?னு கேள்வி கேட்டா, நான் மக்கள்னுதான் சொல்லுவேன்..ஏன்னா மங்களோட நானும் ஒரு அங்கம். அதனால நாம கூட்டணி வெச்சு காசு பார்க்கலாம்.. //
அப்ப முதலாளி மேல் தப்பில்லிங்கண்ணா அந்த கணக்குபிள்ள மேலதா தப்பு (நான் பி.மு. சொல்ல)
//
முதல்ல முதலாளி மூளைக்காரன்.. அவனோட வேலை முடிஞ்சதும்..வேற வேலைய பார்க்கப்போயிட்டான்..
பாஸ்கரன் சுப்ரமணியன் said...
ReplyDeletePattaa Patti , where are u in Singapore ?
//
Boonlay பாஸ்..ஆட்டோ அனுப்பவா பாஸ்?.. எதுனாலும் சொல்லிட்டு பண்ணிங்க..ஹி..ஹி
@ratan said...
ReplyDeleteU very great. This Messange can understand everybody. I think U will come to polictical and public service.
//
ரைட்டு..எதுனாஅலும் பேசித்தீர்த்துக்கலாம் பாஸ்...ஹி..ஹி
@கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteதமாஷ் இல்ல, உண்மையிலேயே இந்த "ஷேர் மார்கெட் உல்டா லண்கிடி" வேலைய இவ்வளவு எளிமையா விளக்கி சொன்னதுக்கு நம்ம பட்டாவுக்கு பாராட்டுக்கள். பதிவு போட்டா இப்படி நாலு பேருக்கு ஏதாவது சொல்லணும் அய்யா! காமெர்ஷ் படிச்சவுங்கோ
கொம்ப தூக்கினு வந்துராதீங்கோ கண்ணுகளா!
//
ஆகா..அண்ணன் வாழ்க....
@நாடோடி said...
ReplyDeleteகலக்கல் பட்டாபட்டி சார்... குரங்கு கதை நல்லா இருக்கு..
//
நன்றி பாஸ்...உங்கள் பள்ளி வாழ்க்கை அருமையா போயிட்டு இருக்கு..
@முத்து said...
ReplyDeleteபட்டு உண்மையில் கலக்கிட்ட எல்லோருக்கும் புரியும் மாதிரி சொல்லி இருக்க
அப்படிலாம் சொல்லகூடாது,மீறினால் பன்னிகுட்டியை மூத்திர சந்தில் விட்டு அடிக்கும் போராட்டத்தை ஆரம்பிப்போம்
//
இந்த டீல் எனக்கு பிடிச்சிருக்கு முத்து...
முகூர்த்த நாள் மட்டும் குறி..மீதிய பார்த்துக்கலாம்...
@வால்பையன் said...
ReplyDeleteஇவ்வளவு எளிமையா யாராலும் சொல்ல முடியாது தல!
ஹர்சத் மேத்தா கம்பெனியா ஆரம்பிக்காம ஷேர் விட்ட கதை கண் முன் நிழலாடுது!
//
ஹர்சத் மேத்தா - அப்பா..எவ்வளவு கோடி சம்பாரிச்சான்..
ஆனா ஷேர்ல விட்டவங்க எல்லாம் நடுத்தர மக்கள் பாஸ்...
@மசக்கவுண்டன் said...
ReplyDeleteஷேர் மார்கெட் பத்தி இன்னும் கொஞ்சம் தெருஞ்சுக்கணும்னா இந்தப்பதிவையும் பாருங்க.
http://swamysmusings.blogspot.com/2010/05/blog-post_18.html
//
நம்ம பூனை கதை தானே சார்..அதேதான்..மக்களை எப்படி முட்டாளாக்ப்பார்க்குறானுக..பாருங்க...
@Shabeer said...
ReplyDeleteபட்டா, பல முறை பட்டுட்டேன். இருந்தாலும் இன்னமும் ஆடிக்க்கிட்டுதான் இருக்கேன் இந்த ஆட்டத்தை.
//
பார்த்துங்க.. குரங்கு விலை ரூ 500 இருக்கும்போது..ஆட்டத்தை விட்டு விலகிடுங்க..ஹி..ஹி
இந்த பங்கு சந்தையே சூதாட்டம்தான்..அது சரி இந்த ஆணி புடுங்குறதுன்னா என்னா?
ReplyDeleteதமிழ் வெங்கட் said...
ReplyDeleteஇந்த பங்கு சந்தையே சூதாட்டம்தான்..அது சரி இந்த ஆணி புடுங்குறதுன்னா என்னா?
//
வேலை பாஸ்..வேலை..ஹி..ஹி
( நாய்க்கு வேலை இல்ல...நிற்க நேரம் இல்லை என்ற பழமொழி உங்கள் நினைவுக்கு வந்தா, கம்பெனி பொறுப்பாகாது..)
பூனாவில் நடந்த உண்மை கதை..
ReplyDeleteஅரசியல்வாதி ஒருவன் அரசாங்க விளம்பரம் மூலம் நகரின் ஒதுக்கு புறமான ஒரு பகுதியை அரசாங்க குப்பை கொட்டும் கிடங்கு கட்ட போவதாக செய்தி வெளியிட்டான்.
அய்யய்யோ குப்பை கொட்டும் இடமாக மாறிவிட்டால் அதற்கு பக்கத்தில் இருக்கும் நம் இடமும் நாறுமே என பயந்து அப்பகுதியில் உள்ள சிறு விவசாயிகள் கிடைக்கும் குறைந்த பட்ச விலைக்கு தங்கள் நிலங்களை விற்று விட்டார்கள் .. ( வாங்கியவன் வேற யாரும் இல்ல அந்த அரசியல்வாதி தான்!)
கடைசியில் பார்த்தீங்கன்னா , அந்த இடத்தில குப்பை கிடங்குக்கு பதிலாக பெரிய ஷாப்பிங் மால் வந்துவிட்டது. அந்த இடத்தின் மதிப்புன் நூறு மடங்கு உயர்ந்துவிட்டது..
குறிப்பு : மக்களை பயமுறுத்தி அந்த இடத்தை அடி மாட்டு விலைக்கு வாங்கிய அரசியல்வாதி வேறு யாருமல்ல கோண வாயன் சரத்பவார் தான்!!
இது எப்படி இருக்கு ??
யூர்கன் க்ருகியர் said...
ReplyDeleteபூனாவில் நடந்த உண்மை கதை..
அரசியல்வாதி ஒருவன் அரசாங்க விளம்பரம் மூலம் நகரின் ஒதுக்கு புறமான ஒரு பகுதியை அரசாங்க குப்பை கொட்டும் கிடங்கு கட்ட போவதாக செய்தி வெளியிட்டான்.
அய்யய்யோ குப்பை கொட்டும் இடமாக மாறிவிட்டால் அதற்கு பக்கத்தில் இருக்கும் நம் இடமும் நாறுமே என பயந்து அப்பகுதியில் உள்ள சிறு விவசாயிகள் கிடைக்கும் குறைந்த பட்ச விலைக்கு தங்கள் நிலங்களை விற்று விட்டார்கள் .. ( வாங்கியவன் வேற யாரும் இல்ல அந்த அரசியல்வாதி தான்!)
கடைசியில் பார்த்தீங்கன்னா , அந்த இடத்தில குப்பை கிடங்குக்கு பதிலாக பெரிய ஷாப்பிங் மால் வந்துவிட்டது. அந்த இடத்தின் மதிப்புன் நூறு மடங்கு உயர்ந்துவிட்டது..
குறிப்பு : மக்களை பயமுறுத்தி அந்த இடத்தை அடி மாட்டு விலைக்கு வாங்கிய அரசியல்வாதி வேறு யாருமல்ல கோண வாயன் சரத்பவார் தான்!!
இது எப்படி இருக்கு ??
//
நல்லாத்தான் மக்களை முட்டாளாக்குறானுக யூர்கான்...
சார் , கோவில் பட்டிக்கு வண்டி எத்தினை மணிக்கு சார்
ReplyDeleteசார் , என் வீட்டுல அஞ்சு சேர் , நாலு சோபா செட் இருக்கு சார் எவ்வளவு தொட்டு தருவிக்க ???
ReplyDeleteமங்குனி அமைச்சர் said...
ReplyDeleteசார் , கோவில் பட்டிக்கு வண்டி எத்தினை மணிக்கு சார்
//
எதுக்கு..’ரமெஸ் நல்லவனை’ போட்டுத் தள்ளவா?
சார் எப்படி இருக்கிங்க?...ரெம்ப நாளா காணோம்னு இருந்தேன்...ஒரு நல்ல பதிவோடு திரும்பிவந்திட்டிங்கே.....
ReplyDeleteசார் எந்த கம்பெனி சேர் நல்ல இருக்கும்னு கொஞ்சம் சொல்லுங்க....நானும் வாங்கணும்....வீட்ட்லே உட்கார சேர் இல்லை..
பட்டாபட்டி சார், எப்படி சார் இப்படி? குரங்கு கதை அருமையிலும் அருமை. தொடரட்டும். வாழ்த்துக்கள்.
ReplyDelete//கலக்கல் பட்டாபட்டி சார்... குரங்கு கதை நல்லா இருக்கு.. //
ReplyDeleteசேர்த்து பிரித்து எழுதுக...
கலக்கல் (பட்டாபட்டி குரங்கு சார்)........ கதை நல்லா இருக்கு..
//சார் , கோவில் பட்டிக்கு வண்டி எத்தினை மணிக்கு சார். எதுக்கு..’ரமெஸ் நல்லவனை’ போட்டுத் தள்ளவா?//
யோவ் பட்டா நானே செவனேன்னு கோவில்பட்டி கடலை மிட்டாயை தின்னுகினு வீட்ல உக்கர்ந்திருக்கேன். என் கோவில்பட்டி வீட்டுக்கு மெட்ரோ ரயில் எதுவும் அனுப்பிடாதய்யா!!!!
பட்டாபட்டி.. said...
ReplyDeleteஇந்த டீல் எனக்கு பிடிச்சிருக்கு முத்து...
முகூர்த்த நாள் மட்டும் குறி..மீதிய பார்த்துக்கலாம்.../////
இதுக்கு போயி நாள் நட்சத்திரம் பார்த்து கிட்டு சொல்லு ஆரம்பிச்சுடலாம்
மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteசார் , என் வீட்டுல அஞ்சு சேர் , நாலு சோபா செட் இருக்கு சார் எவ்வளவு தொட்டு தருவிக்க ???////
துட்டு தரமாட்டோம்,வேண்டும் என்றால் உன்னை போட்டு தள்ளுறோம் எப்படி வசதி
உள்ளேனையா!!!.....
ReplyDelete//////சரியாக வைத்தால் சரக்கு உங்களுக்கு..லாபம் எங்களுக்கு...
ReplyDeleteஇல்லாட்டி, உங்க கோமணம் எங்களுக்கு..லாபமும் எங்களுக்கு..
கடைசியா..ஹி..ஹி...எல்லாமே எங்களுக்கு...ஹி..ஹி//////
அய்யோ கோமாணத்தையும் விட மாட்டீங்களா !
இதை விட எளிமையா சொல்ல முடியாது வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த கதையை, முந்தியே,
ReplyDeleteமெயில்ல படிச்சிருக்கேன்.
ஆனால், நீங்க அதை உங்க நடையில் படைத்த விதம் அற்புதம்
இந்த டீல் எனக்கு பிடிச்சிருக்கு முத்து...
ReplyDeleteமுகூர்த்த நாள் மட்டும் குறி..மீதிய பார்த்துக்கலாம்.../////
என்னையும் ஆட்டத்துல சேர்த்துங்கப்பா, நான் ஸ்டார் பேட்ஸ் மேன்பா, சும்மா அடிச்சு ஆடுவேன்.
Jey said...
ReplyDeleteஇந்த டீல் எனக்கு பிடிச்சிருக்கு முத்து...
முகூர்த்த நாள் மட்டும் குறி..மீதிய பார்த்துக்கலாம்.../////
என்னையும் ஆட்டத்துல சேர்த்துங்கப்பா, நான் ஸ்டார் பேட்ஸ் மேன்பா, சும்மா அடிச்சு ஆடுவேன்./////////
இதுக்கு போயி கேட்டுகிட்டு உள்ள பூந்து அடிச்சு ஆடுங்க
http://www.youtube.com/watch?v=E6mJdw6cVOM
ReplyDeleteவணக்கம் பட்டாபட்டி பிரதர்....
ReplyDeleteஉங்களோட வலைப்பதிவை தொடர்ந்து படிச்சுட்டு வரேன். உங்க கலக்கலான நடை எனக்கு பிடிக்கும். ஒரு அக்கபோர் மேட்டர் பத்தி என்னோட பிளாக்கில எழுதியிருக்கேன். படிச்சுட்டு உங்க கருத்தை சொல்றது இல்லாம உங்க தோஸ்துகளுக்கும் ரெகமண்ட் பண்ணுங்க...
http://soonya007.blogspot.com/
அப்பாடா... எல்லாரும் வந்துட்டு போயிட்டாங்களா... ரொம்ப நல்லது...
ReplyDeleteமுன்னாடியே வந்து கமெண்டு போட்டா நான் தான் அந்த கணக்கப்பிள்ளையினு கரக்டா கண்டுபுடிச்சிருவாணுக... அதான் இப்ப வந்தேன்...
வேற ஏதாவது குரங்கு இருக்காப்பா... இப்ப மார்கெட் நல்லா இருக்கு...
@ganesh said...
ReplyDeleteசார் எப்படி இருக்கிங்க?...ரெம்ப நாளா காணோம்னு இருந்தேன்...ஒரு நல்ல பதிவோடு திரும்பிவந்திட்டிங்கே.....
சார் எந்த கம்பெனி சேர் நல்ல இருக்கும்னு கொஞ்சம் சொல்லுங்க....நானும் வாங்கணும்....வீட்ட்லே உட்கார சேர் இல்லை..
//
வாங்க பாஸ்..ஆணி அதிகம் சார்..ஹி..ஹி
@Coumarane said...
ReplyDeleteபட்டாபட்டி சார், எப்படி சார் இப்படி? குரங்கு கதை அருமையிலும் அருமை. தொடரட்டும். வாழ்த்துக்கள்.
//
நன்றி பாஸ்..
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDelete//கலக்கல் பட்டாபட்டி சார்... குரங்கு கதை நல்லா இருக்கு.. //
சேர்த்து பிரித்து எழுதுக...
கலக்கல் (பட்டாபட்டி குரங்கு சார்)........ கதை நல்லா இருக்கு..
//
ஆமா..சேர்த்து பிரித்து எழுதினா..இப்படித்தான் வருமா?...
அய்யோ..அய்யோ..
நான் சொன்னேனு உங்க தமிழ் வாத்தியாருக்கு, திருஷ்டி சுத்திப்போடுங்க..
( பிரதர் ..ஆட்டோ இன்னும் வரலே...ஆமாய்யா..கோவில்பட்டிக்குத்தான்...)
@முத்து said...
ReplyDeleteபட்டாபட்டி.. said...
இந்த டீல் எனக்கு பிடிச்சிருக்கு முத்து...
முகூர்த்த நாள் மட்டும் குறி..மீதிய பார்த்துக்கலாம்.../////
இதுக்கு போயி நாள் நட்சத்திரம் பார்த்து கிட்டு சொல்லு ஆரம்பிச்சுடலாம்
//
ஆமா...இது பாவக்கணக்குல சேராதில்ல...
@எம் அப்துல் காதர் said...
ReplyDeleteஉள்ளேனையா!!!.....
//
வாங்க பாஸ்.. ரொம்ப நாளா , எஸ் ஆயிட்டீங்க போல...
@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
ReplyDelete//////சரியாக வைத்தால் சரக்கு உங்களுக்கு..லாபம் எங்களுக்கு...
இல்லாட்டி, உங்க கோமணம் எங்களுக்கு..லாபமும் எங்களுக்கு..
கடைசியா..ஹி..ஹி...எல்லாமே எங்களுக்கு...ஹி..ஹி//////
அய்யோ கோமாணத்தையும் விட மாட்டீங்களா !
//
ஊகூம்..ஹி..ஹி
@Sabarinathan Arthanari said...
ReplyDeleteஇதை விட எளிமையா சொல்ல முடியாது வாழ்த்துக்கள்
//
நன்றி சார்...
vasan said...
ReplyDeleteஇந்த கதையை, முந்தியே,
மெயில்ல படிச்சிருக்கேன்.
ஆனால், நீங்க அதை உங்க நடையில் படைத்த விதம் அற்புதம்
//
தேங்ஸ் பாஸ்...
@Jey said...
ReplyDeleteஇந்த டீல் எனக்கு பிடிச்சிருக்கு முத்து...
முகூர்த்த நாள் மட்டும் குறி..மீதிய பார்த்துக்கலாம்.../////
என்னையும் ஆட்டத்துல சேர்த்துங்கப்பா, நான் ஸ்டார் பேட்ஸ் மேன்பா, சும்மா அடிச்சு ஆடுவேன்.
//
ரைட்..முத்து சொன்னதை,நானும் ரிப்பீட்....
@இ. கோ. முரட்டு சிங்கம் said...
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=E6mJdw6cVOM
//
ஆகா. பார்த்தேன்..சூப்பராயிருக்கு பாஸ்..ஹா..ஹா
@Soonya said...
ReplyDeleteவணக்கம் பட்டாபட்டி பிரதர்....
உங்களோட வலைப்பதிவை தொடர்ந்து படிச்சுட்டு வரேன். உங்க கலக்கலான நடை எனக்கு பிடிக்கும். ஒரு அக்கபோர் மேட்டர் பத்தி என்னோட பிளாக்கில எழுதியிருக்கேன். படிச்சுட்டு உங்க கருத்தை சொல்றது இல்லாம உங்க தோஸ்துகளுக்கும் ரெகமண்ட் பண்ணுங்க...
http://soonya007.blogspot.com/
//
படிச்சேன்..
அதை பற்றி எழுத..ஒரு பெரிய பதிவே போடவேண்டி வரும்
@ரோஸ்விக் said...
ReplyDeleteஅப்பாடா... எல்லாரும் வந்துட்டு போயிட்டாங்களா... ரொம்ப நல்லது...
முன்னாடியே வந்து கமெண்டு போட்டா நான் தான் அந்த கணக்கப்பிள்ளையினு கரக்டா கண்டுபுடிச்சிருவாணுக... அதான் இப்ப வந்தேன்...
வேற ஏதாவது குரங்கு இருக்காப்பா... இப்ப மார்கெட் நல்லா இருக்கு...
//
வாய்யா கணக்குபிள்ளை.. இருக்கீறா?..இல்ல.... மணற்கேணிய விட்டு, வெளிய வந்தாச்சானு கேட்டேன்?
யோவ் பட்டாப்பட்டி...எவனையாச்சும் சண்டைக்கு இழுயா...வக்காளி ஆசை தீர குமுறி ரொம்ப நாளாகுது...! :)
ReplyDeleteennooda BLOG i padishutu comment potathuku thanks PATTAPATTI brother. 'periya pathivu'? kandipa podunga.. padkka aavala iruken..
ReplyDeleteVeliyoorkaran said...
ReplyDeleteயோவ் பட்டாப்பட்டி...எவனையாச்சும் சண்டைக்கு இழுயா...வக்காளி ஆசை தீர குமுறி ரொம்ப நாளாகுது...! :)
வாடி மாப்ள, நாங்களும் அதுக்குத்தானே வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கோம்! (என்ன தல, இந்தத் தடவ அடி கொஞ்சம் ஜாஸ்தியோ, தேறி வர்ரதுக்கு ரொம்ப நாளாயிடுச்சே?)
@Veliyoorkaran said...
ReplyDeleteயோவ் பட்டாப்பட்டி...எவனையாச்சும் சண்டைக்கு இழுயா...வக்காளி ஆசை தீர குமுறி ரொம்ப நாளாகுது...! :)
//
யோவ்.. யாரோ வெளியூர்காரன் பேர்ல கமென்ஸ் போடறான்..
எப்படி கண்டுபிடிச்சேனு கேக்குறயா?..
வெளியூரு மானஸ்தன்யா?..எப்பவும் சண்டைக்கு போகமாட்டான்..
@Soonya said...
ReplyDeleteennooda BLOG i padishutu comment potathuku thanks PATTAPATTI brother. 'periya pathivu'? kandipa podunga.. padkka aavala iruken..
//
ஓ.கே..சீக்கிரம் பதிவப் போட்றலாம்...
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteவாடி மாப்ள, நாங்களும் அதுக்குத்தானே வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கோம்! (என்ன தல, இந்தத் தடவ அடி கொஞ்சம் ஜாஸ்தியோ, தேறி வர்ரதுக்கு ரொம்ப நாளாயிடுச்சே?)
//
பன்னி.. ..என்னோட போட்டோவுல நான் உக்காந்திருக்கும் ஸ்டைல
உனக்கு நாக்குல சனி ....உக்காந்திருக்கு போல?..
ரைட்டு மாப்ளே..
தல, இன்னிக்கு கடைல புதுச் சரக்கு வந்திருக்கு, வந்து பாருங்க!
ReplyDeleteகும்முறவங்க கும்முங்கோ.......!