Pages

Sunday, May 30, 2010

கண்கள் பனித்தது..இதயம் இடித்தது..

பட்டாபட்டி சார்.. நான் கடந்த 5 வருடங்களாக, மருத்துவர் அய்யா கட்சியில்
தொடர்ந்து இணந்திருக்கிறேன்.. சில வருடங்களுக்குமுன், அய்யா, கலைஞரிடம் இருந்து பிரிந்து  அம்மாவிடம் சேர்ந்ததால்,அலகு குத்திக்கொண்ட ஆளவந்தான் நான்.

ஆனால் சமீபகாலமாக ஊடங்களில் வரும் செய்திகள், அய்யா, கலைஞருடன் இணயப்போவதாக கூறுகிறது.  அலகு குத்தின புண்ணு ஆறுவதற்க்குள் அய்யா இப்படி பன்ணுவாருனு தெரியாம போச்சு..
என்ன செய்யலாம் என அறிவுறை கூறமுடியுமா?..

குவாட்டர் கோவிந்தன்
------------------------------------------------------------அடங்கொன்னியா.. வாய்யா தமிழ்குடிமகனே..
அய்யா யாரு?.. மக்களுக்காக நல்லது பண்ணவேண்டுமென மருத்துவர் பணியை உதறிதள்ளிவிட்டு  உழைக்க ஓடி வந்தவரு..
அவருடைய தொண்டனா ராசா  நீ..
இந்தா டீ சாப்பிடு முதல்ல....


அய்யா எதுக்கு தாத்தாகூட சேரனும்? .. யோசனை பண்ணு கோவிந்தன் சார்.... மக்கள் சொல்லுவானுக, ’அவரது அன்பு மகனுக்கு ஏதாவது கொடுப்பானுகனு  தாவுகிறார்’-னு.. ஊகூம்..மக்கள் கிடக்கானுக நாதாரிக..

பழைய பேப்பர் கிடைச்சா புரட்டிப்பாருங்க.. அவரது குடும்பமோ, உறவினறோ பதவிக்கு வந்தா..அவரை நடுரோட்டில வைத்து சவுக்கடி கொடுங்கனு சொன்ன வீரனையா அவரு...அப்படிப்பட்ட மகான்..எதுக்காக தாத்தாவிடம் வந்திருக்காரு...

உன்னையமாறி மற்றும் என்னையமாறி இருக்கும் பல லட்சம் ஏழை பங்காளனுக்கு முட்டு கொடுக்க ப்ளான் பண்ணுகிறாரு..
இது மாறி தலைவனுக, யாருக்கையா கிடைப்பானுக..?

அதனால என்ன பண்றோமுனா, பேசாம டாஸ்மார்ல போயி ஒரு குவார்ரட் விட்டுக்கிட்டு, வீட்க்குப்போ..
உங்க ஊட்டுக்காரம்மா, ரேசன் அரிசில  சோறு பொங்கி வெச்சிருக்கும்..அதை வழிச்சு தின்னுப்புட்டு,
இலவச டீவி இருக்குமே..அதுல மானாட மயிலாட பாரு..
நட்ட்டுக்குச்சுனா அடுத்த தொண்டனை ரெடி பண்ணு..
அதை விட்டுபுட்டு, என்ன மயி#$%க்கு எங்கிட்ட கேள்வி கேக்குறே?..

ஆமா.. அலகுகுத்தின இடத்தில இன்னுமா புண்ணு ஆறல?.. அடப்பாவி மக்கா.. இது தெய்வகுத்தம் ஆச்சே..
சீக்கிரம் போயி அம்மாவுக்கு தீமிதிக்கிறேனு வேண்டிக்கிட்டு, கூடவே ஒரு மொட்டையும் போடு...
வாழ்க ஜனநாயகம்..வளர்க கழகப்பணி...

இது தலைவர்களுக்கு

உங்கள் சேவை நாட்டுக்கு தேவை..
எத்தனை இடர்கள் வந்தாலும், தமிழனுக்காக உழைக்க, உ(ம)யிரை கொடுக்க ரெடியா இருக்கீங்களே..
உங்கள பெத்த மகராசிகளையும், உடனிருந்து உந்துசக்தியளிக்கும் மனைவியர்களையும்(?) வாழ்க..
உம் சந்ததியினர் வாழ்க..
எங்களை வாழவைக்கும் தெய்வங்களே..குவார்ட்டர் கோவிந்தன்(கள்) இருக்கும்வரை உங்களுக்கு சாவே கிடையாது..
அடிச்சு ஆடுங்க தலைகளா...
இவன் மர(?)த்தமிழன்..
.
.
.

76 comments:

 1. ஹைய்யா நாந்தேன் பர்ஸ்ட்டா?

  ReplyDelete
 2. @பனங்காட்டான் said...
  ஹைய்யா நாந்தேன் பர்ஸ்ட்டா?
  //

  அட.. ஆமா சார். நீங்க தான் பர்ஸ்ட்..
  இப்ப டீலா.. இல்ல நோ டீலா?..ஹி..ஹி

  ReplyDelete
 3. //அலகுகுத்தின இடத்தில இன்னுமா புண்ணு ஆறல?.. //

  அப்புடி எந்த எடத்துல சார் அலகு குத்தினாரு நம்ம கோயிந்து?

  ReplyDelete
 4. இனி டீல் தான்! அதான் மகனுக்கு எம்பி பதவி வேணுமே? சும்மா கொடுப்பாரா தமிழனத்தலைவரு?

  ReplyDelete
 5. @பனங்காட்டான் said...
  அப்புடி எந்த எடத்துல சார் அலகு குத்தினாரு நம்ம கோயிந்து?
  //

  அவரு எங்க சார் குத்திக்கிட்டாரு.. ?

  தலைவனுக, குமிய வெச்சு குமறியிருப்பானுக.. பாவம்..
  (நான் கோவித்தனை சொன்னேன் சார்..)

  ReplyDelete
 6. //இலவச டீவி இருக்குமே..அதுல மானாட மயிலாட பாரு..
  நட்ட்டுக்குச்சுனா அடுத்த தொண்டனை ரெடி பண்ணு..//

  "நட்டுக்குச்சுனா?"
  மானாட மார்பாட பாக்குறதுக்கு அது ஒன்னுதேன் மிச்சம்!

  ReplyDelete
 7. @பனங்காட்டான் said...
  "நட்டுக்குச்சுனா?"
  மானாட மார்பாட பாக்குறதுக்கு அது ஒன்னுதேன் மிச்சம்!
  //

  அடுத்த ஜெனரேஷன் தொண்டர்களை ரெடி பண்றாங்களாம்..ஹி..ஹி

  ReplyDelete
 8. //அடுத்த ஜெனரேஷன் தொண்டர்களை ரெடி பண்றாங்களாம்..ஹி..ஹி//

  அப்போ தமிழ்நாட்டோட எதிர்காலத்துக்கு நம்ம கலாக்கா வகையறாவோட சேவை ரொம்ப முக்கியம்னு சொல்லுங்கோ! இதுக்கு நம்ம குஷ்பக்கா என்ன பண்ணப் போறங்க? ஏதாவது ரகசியத் தகவல் இருக்கா?

  ReplyDelete
 9. @ பனங்காட்டான் said...
  இதுக்கு நம்ம குஷ்பக்கா என்ன பண்ணப் போறங்க? ஏதாவது ரகசியத் தகவல் இருக்கா?
  //
  குஷ்புவா?..
  அதை பற்றி எழுதினா..நக்கீரன் மாறி நாறுமே சார்..

  ReplyDelete
 10. கருணாநிதி, ராமதாஸ் போல, பத்து ராமதாஸ்களை, முழுங்கி ஏப்பம் விடக் கூடியவர். இன்று ராமதாஸ் ஆதரவு இல்லாமல், நடுத் தெருவில் இருக்கிறார் என்பது கருணாநிதிக்கு தெரியாதா என்ன ?

  ராமதாஸ் மகனுக்காக, தன் மகன் சொன்ன ஆட்களுக்கு சீட் கொடுக்காமல், தன் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்த, கருணாநிதி அவ்வளவு முட்டாளா என்ன ?

  ReplyDelete
 11. பட்டு, தமிழ்நாட்டின் சாபக்கேடுன்னு சொன்னா அதோட அர்த்தம் என்னன்னு இன்னைக்கி தெரிஞ்சிகிச்சி.

  ReplyDelete
 12. உடம்புல ஓடுறது கூவமா !!! ரத்தமா !! அசிங்கமா தெரியல !!! பதவி வெறி ஒரு மனுசனை இந்த அளவுக்கு கொண்டு போகுமா என்ன ?

  ReplyDelete
 13. கண்கள் பனித்தது..இதயம் இடித்தது..

  சங்கு ஊதபோகிறது ......
  தமிழ்நாடு விடியபோகிறது........

  ReplyDelete
 14. யோவ்..பட்டாபட்டி! தமிழ்நாட்டு ஜனங்களையா கிண்டல் பண்ற...(அய்யோ..ஜனங்களே! இதை நான் யார்கிட்டயாவது பத்தவைக்கணுமே...இல்லாட்டி வெளியூர்காரன் கோவிச்சுப்பானே!)
  அன்புமணி சார்!உங்களுக்கு மானாட மயிலாட ஜட்ஜ் போஸ்ட் வாங்கித்தர சொல்றேன்..கவலைப் படாதீங்க!

  ReplyDelete
 15. /////உங்கள பெத்த மகராசிகளையும், உடனிருந்து உந்துசக்தியளிக்கும் மனைவியர்களையும்(?) வாழ்க//////

  ஆஹா நல்லாதானே போயிக்கிட்டு இருந்தது இதில் என்ன கேள்விக்குறி ஏதோ வில்லங்கம் இருக்கு சொல்லிடுங்க அதையும் மறைக்காமல் ????????????????

  ReplyDelete
 16. @சவுக்கு said...
  கருணாநிதி, ராமதாஸ் போல, பத்து ராமதாஸ்களை, முழுங்கி ஏப்பம் விடக் கூடியவர். இன்று ராமதாஸ் ஆதரவு இல்லாமல், நடுத் தெருவில் இருக்கிறார் என்பது கருணாநிதிக்கு தெரியாதா என்ன ?

  ராமதாஸ் மகனுக்காக, தன் மகன் சொன்ன ஆட்களுக்கு சீட் கொடுக்காமல், தன் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்த, கருணாநிதி அவ்வளவு முட்டாளா என்ன ?
  //

  ஆனாலும், ஏதாவது காம்பரமைஸ் ஆகும் போல சவுக்கு சார்..
  மக்கள் முட்டாளுகனு தெரிஞ்சுவெச்சு இருக்காங்க..

  ReplyDelete
 17. @ஜெய்லானி said...
  பட்டு, தமிழ்நாட்டின் சாபக்கேடுன்னு சொன்னா அதோட அர்த்தம் என்னன்னு இன்னைக்கி தெரிஞ்சிகிச்சி.
  உடம்புல ஓடுறது கூவமா !!! ரத்தமா !! அசிங்கமா தெரியல !!! பதவி வெறி ஒரு மனுசனை இந்த அளவுக்கு கொண்டு போகுமா என்ன ?
  //

  இவனுக பொறந்ததே தமிழ்நாட்டை தூக்கி நிறுத்தனுமுனுதான்..

  ReplyDelete
 18. @கண்ணகி said...
  :)...:)
  //

  வாங்க மேடம்.. ஈரோட்ல மழை பெய்துங்களா?
  இல்ல வெயில கொளுத்துதா?

  ReplyDelete
 19. @உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...
  கண்கள் பனித்தது..இதயம் இடித்தது..
  சங்கு ஊதபோகிறது ......
  தமிழ்நாடு விடியபோகிறது........
  //

  நாமும் நம்புவோம் ..

  ReplyDelete
 20. @ரெட்டைவால் ' ஸ் said...
  யோவ்..பட்டாபட்டி! தமிழ்நாட்டு ஜனங்களையா கிண்டல் பண்ற...(அய்யோ..ஜனங்களே! இதை நான் யார்கிட்டயாவது பத்தவைக்கணுமே...இல்லாட்டி வெளியூர்காரன் கோவிச்சுப்பானே!)
  அன்புமணி சார்!உங்களுக்கு மானாட மயிலாட ஜட்ஜ் போஸ்ட் வாங்கித்தர சொல்றேன்..கவலைப் படாதீங்க!
  //

  அதெல்லாம் முடியாது.. அதுக்கு நட்டுக்கனும்.. நமக்கு எம்.பி போஸ்ட்தான் சர்ர்..

  ReplyDelete
 21. @♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

  ஆஹா நல்லாதானே போயிக்கிட்டு இருந்தது இதில் என்ன கேள்விக்குறி ஏதோ வில்லங்கம் இருக்கு சொல்லிடுங்க அதையும் மறைக்காமல் ????????????????
  //

  நீங்க வேற பாஸ்.. ஒவ்வொரு வெற்றிக்கும் பின் ஒரு பெண் இருப்பாங்கனு சொல்லுவாங்க..
  ஆனா..மூணு பெண்கள் இருந்தால்(?)..

  அடப்பார்றா..மீண்டும் கேள்விக்குறி...

  ReplyDelete
 22. பட்டய கிளப்பிட்டீங்க பட்டா:)).

  ReplyDelete
 23. ///பட்டாபட்டி.. said...

  @ரெட்டைவால் ' ஸ் said...
  யோவ்..பட்டாபட்டி! தமிழ்நாட்டு ஜனங்களையா கிண்டல் பண்ற...(அய்யோ..ஜனங்களே! இதை நான் யார்கிட்டயாவது பத்தவைக்கணுமே...இல்லாட்டி வெளியூர்காரன் கோவிச்சுப்பானே!)
  அன்புமணி சார்!உங்களுக்கு மானாட மயிலாட ஜட்ஜ் போஸ்ட் வாங்கித்தர சொல்றேன்..கவலைப் படாதீங்க!
  //

  அதெல்லாம் முடியாது.. அதுக்கு நட்டுக்கனும்.. நமக்கு எம்.பி போஸ்ட்தான் சர்ர்..///

  அப்படின்னா அன்பு'மணி'க்கு அது இல்லையா? குஷ்பக்காவ விட்டு உடனே செக் பண்ணச் சொல்லி கன்பர்ம் பண்ணுங்க பட்டா சார்!

  ReplyDelete
 24. இந்த முறையும் இலவு காத்த கிளி கதை மாதிரிதான் தெரியுது. 2011 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகே ராஜ்யசபா சீட் அப்படின்னு தாத்தா சொல்லிட்டாரு.

  2009ல 7ல நின்னு 8ல தோத்தாங்க. 2011ல எத்தனையில நின்னு எத்தனையில தோப்பாங்க?

  ReplyDelete
 25. அடங்கோனியா நூறாவது பதிவு இவனப் பத்தியா?

  யோவ் குடிதாங்கியப் பத்தி இவ்ளோ சொன்னவன், அவர் குளோபல் வார்மிங் க்கு பண்ண உதவியப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே? ஏன்?

  ReplyDelete
 26. தாத்தா கால விரிச்சிட்டாரு சாரி கைய விரிச்சிட்டாரு, சீட் கிடையாதாம்.. நாளைக்கு பாரு குடிதாங்கி பேட்டிய, எனக்கு பதிவ போட நேரம் வந்திருச்சுன்னு நினைக்கிறேன்...

  அத்த விடு இத்தப் படி

  http://thatstamil.oneindia.in/news/2010/05/30/ec-show-cause-pmk-mdmk-sp-trinamool.html

  நம்ம எழவெடுத்த தேர்தல் கமிஷன் லெட்டர் அனுப்பிருக்கு...என்னமோ நடவடிக்கை எடுக்கப்போற மாதிரி!

  ReplyDelete
 27. //இந்த முறையும் இலவு காத்த கிளி கதை மாதிரிதான் தெரியுது. 2011 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகே ராஜ்யசபா சீட் அப்படின்னு தாத்தா சொல்லிட்டாரு. //

  ராமதாஸ்க்கு 2011லயும் ஆப்பு காத்துகிட்டு இருக்கிற மாதிரிதான் தெரியுது.பார்க்கலாம் பட்டு!

  ReplyDelete
 28. //எத்தனை இடர்கள் வந்தாலும், தமிழனுக்காக உழைக்க, உ(ம)யிரை கொடுக்க ரெடியா இருக்கீங்களே..//

  எந்த ஊர்ல இந்த மாதிரி தலைவர்களும் மாக்களும் கெடப்பாய்ங்க. நம்ம ஊரு ஜனங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க, பட்டா. அதைத்தான் ஒவ்வொரு இடைத்தேர்தல்லயும் திருப்பி வாங்கிட்டு இருக்கோம்.

  ReplyDelete
 29. //இலவச டீவி இருக்குமே..அதுல மானாட மயிலாட பாரு..
  நட்ட்டுக்குச்சுனா அடுத்த தொண்டனை ரெடி பண்ணு..
  அதை விட்டுபுட்டு, என்ன மயி#$%க்கு எங்கிட்ட கேள்வி கேக்குறே?..//

  ஹாஹஹா.....'எழுச்சித்' தலைவர்க்கு புது அர்த்தம் கொடுதவர்யா கருணாநிதி...என்ன சின்ன புள்ளத் தனமா பேசிகிட்டு....

  //அப்போ தமிழ்நாட்டோட எதிர்காலத்துக்கு நம்ம கலாக்கா வகையறாவோட சேவை ரொம்ப முக்கியம்னு சொல்லுங்கோ! இதுக்கு நம்ம குஷ்பக்கா என்ன பண்ணப் போறங்க? ஏதாவது ரகசியத் தகவல் இருக்கா?//

  ஆஹா,கோத்து விட்டீரா ? இனி கலா வ கட்சியில இழுக்காம விட மாட்டனுங்களே ......

  //குஷ்புவா?..
  அதை பற்றி எழுதினா..நக்கீரன் மாறி நாறுமே சார்..//

  ஹிஹி....

  //சங்கு ஊதபோகிறது ......
  தமிழ்நாடு விடியபோகிறது........//

  அய்......விடியப் போகுதா? ஜாலி ஜாலி....

  //அப்படின்னா அன்பு'மணி'க்கு அது இல்லையா? குஷ்பக்காவ விட்டு உடனே செக் பண்ணச் சொல்லி கன்பர்ம் பண்ணுங்க பட்டா சார்!//

  செம கமெண்ட்...

  //தாத்தா கால விரிச்சிட்டாரு சாரி கைய விரிச்சிட்டாரு//

  ஆஹா,எல்லாருமே பின்றானுங்களே ....எப்படியோ,'எழுச்சித்' தலைவர் கருணாநிதி வாழ்க....

  //அன்புமணி சார்!உங்களுக்கு மானாட மயிலாட ஜட்ஜ் போஸ்ட் வாங்கித்தர சொல்றேன்..கவலைப் படாதீங்க!//

  அப்பு ரெட்ட...அது என்ன இளவா இருந்தாலும் ஓகேயாம்.pre kg புள்ளைங்களுக்கு rhymes போட்டிக்கு ஜட்ஜா கூட போகும் மணி....ஆனா,என்ன கொஞ்சம் காசு கேக்கும்....

  ReplyDelete
 30. சிங்கபூருக்கு ஆட்டோ அனுப்ப முடியாதுன்னு ரொம்ப தைரியமோ?

  ReplyDelete
 31. இன்னைக்கு பேப்பர் பார்த்தவுடன் நினைச்சேன் , பட்டா டவுசர கிழிப்பான்னு , கரக்டா கிழிச்சிட்ட , நல்லா அடிச்சு ஆடுங்க

  ReplyDelete
 32. ஹி....ஹி......ஹி.....அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!
  (யாருப்பா, அரசியல்வாதிகளால நன்மையே இல்லைன்னு? இங்க ஒரு பதிவுக்கு யூஸ் ஆகுதில்ல!)

  ReplyDelete
 33. எதாவது தலைவர்கள் குனிஞ்சா சொல்லுயா... நம்ம பயலுகள விட்டு அவனுகளுக்கு அலகு குத்த சொல்லுவோம்.

  ReplyDelete
 34. நம்ம தமிழகத்துக்கு இந்த செய்தி ஒன்னும் அதிர்ச்சியா இருக்காதுய்யா.... எல்லாருக்கும் இது பழகிப்போச்சு.

  ஆனா, இவனுக ரொம்ப ரொம்ப வெட்கம் கெட்டவனுகடா சாமி.... அடுத்து கம்யூனிஸ்டுகள் போவாங்க ... போயி டீ குடிச்சிட்டுவா... அடுத்த செய்தி ரெடியாயிரும்.

  ReplyDelete
 35. நம்ம தமிழகத்துக்கு இந்த செய்தி ஒன்னும் அதிர்ச்சியா இருக்காதுய்யா.... எல்லாருக்கும் இது பழகிப்போச்சு.

  ஆனா, இவனுக ரொம்ப ரொம்ப வெட்கம் கெட்டவனுகடா சாமி.... அடுத்து கம்யூனிஸ்டுகள் போவாங்க ... போயி டீ குடிச்சிட்டுவா... அடுத்த செய்தி ரெடியாயிரும்.

  ReplyDelete
 36. நம்ம தமிழகத்துக்கு இந்த செய்தி ஒன்னும் அதிர்ச்சியா இருக்காதுய்யா.... எல்லாருக்கும் இது பழகிப்போச்சு.

  ஆனா, இவனுக ரொம்ப ரொம்ப வெட்கம் கெட்டவனுகடா சாமி.... அடுத்து கம்யூனிஸ்டுகள் போவாங்க ... போயி டீ குடிச்சிட்டுவா... அடுத்த செய்தி ரெடியாயிரும்.

  ReplyDelete
 37. இவனுகள விட்டுத்தள்ளு பட்டா... இதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரிச்சிகிட்டு இருக்கேன்...

  (பார்த்து அடிபட்டுற போகுதுன்னு கமெண்ட் வந்தா... கொலை விழும்... ஆமா, ஆமா... மங்குனியை போட்டுருவோம்...)

  http://maniyinpakkam.blogspot.com/2010/05/blog-post_3537.html

  ReplyDelete
 38. //ரோஸ்விக் said...
  எதாவது தலைவர்கள் குனிஞ்சா சொல்லுயா... நம்ம பயலுகள விட்டு அவனுகளுக்கு அலகு குத்த சொல்லுவோம்.//

  அவனுங்க என்னைக்கு நமக்கு குனிஞ்சு காட்டியிருக்கானுங்க? இப்ப பாருங்க, அன்பு'மணி' யும் ராமதாஸும் , தமிழனத்தலைவருக்கு நல்லாக் காட்டுனாங்க, எப்படியாவது எம்பி ஆக்கிடுவாருன்னு, தலைவர் யாரு... குமுறுனதுமில்லாம, இன்னும் ஒருவருஷத்துக்கு வெளிய எடுக்க முடியாமப் பண்ணிப்புட்டாரு. இனி இவனுங்க ரெண்டுபேரும் 2011ல எம்பி ஆயிடலாம்னு, ஆப்போட அலையவேன்டியதுதான்!

  ReplyDelete
 39. நிறைய பேசி, எழுதி கிழித்தாகி விட்டது. இந்த நாதாரிகள் மாறபோவதில்லை.
  இதுகள் எல்லாம் சோறு தின்னுதுகளா இல்லை வேறு எதாவதா தெரியாது.
  இதில் வேறு "வீர ............ மறவர்கள்?!"
  பாவம் வன்னிய இன மக்கள். இந்த கும்பலின் சுய ரூபம் இன்னுமா அவர்களுக்கு விளங்க வில்லை?

  ReplyDelete
 40. அண்ணே அடுத்த தேர்தல்ல எவ்வளவு கொடுப்பாங்க. ( நான் வெளி நாட்டில் இருப்பதால என்னால் ஓட்டு போட முடியாது. சும்மா டீட்டையிலுக்காக)

  உங்கள் ஆதங்கம் எல்லோரிடத்திலும் இருக்கு. என்ன செய்ய.

  ReplyDelete
 41. நாட்டுக்கு தேவையான நல்ல விஷயங்களை இப்படி அள்ளி விடுறீங்களே அண்ணே.. இதெல்லாம் நீங்களா நம்ம கட்சி சார்பா சொல்றதா இல்லை மண்டபத்தில யாராவது....

  ReplyDelete
 42. என்னத்தை மாறி, என்னத்தை பதவி வாங்கி, என்னத்தை பன்றது.... நமது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விரைவாக அறிவிக்கவும் தங்களது கட்டளைக்கு காத்திருக்கின்றோம்

  ReplyDelete
 43. அதான்(அய்யா) வெட்டிகிட்டு வெட்டிக்கிட்டு போவுதுல, எதுக்கு கூப்டு வச்சு நட்டுக்கணும். இந்த அரசியலே புரிய மாட்டேங்குதுண்ணா.

  ReplyDelete
 44. ரோஸ்விக் said...

  இவனுகள விட்டுத்தள்ளு பட்டா... இதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரிச்சிகிட்டு இருக்கேன்...

  (பார்த்து அடிபட்டுற போகுதுன்னு கமெண்ட் வந்தா... கொலை விழும்... ஆமா, ஆமா... மங்குனியை போட்டுருவோம்...)//////  ஏம்பா ரோஸு உனக்கு நான் என்னா கெடுதல் பன்னேன் , எந்தலைய கொண்டுபோய் வேட்டுகல்லுல வக்கிரியே இது ;நியாயமா ???? என்னவோ போ நல்லாயிரு

  ReplyDelete
 45. @வானம்பாடிகள் said...
  பட்டய கிளப்பிட்டீங்க பட்டா:)).
  //

  வாங்க பாஸு..

  ReplyDelete
 46. @கும்மி said...
  இந்த முறையும் இலவு காத்த கிளி கதை மாதிரிதான் தெரியுது. 2011 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகே ராஜ்யசபா சீட் அப்படின்னு தாத்தா சொல்லிட்டாரு.
  2009ல 7ல நின்னு 8ல தோத்தாங்க. 2011ல எத்தனையில நின்னு எத்தனையில தோப்பாங்க?
  //
  ஓ அதுவேறையா.. 8/7 - னு சொல்லுங்க..

  ReplyDelete
 47. @Phantom Mohan said...
  அடங்கோனியா நூறாவது பதிவு இவனப் பத்தியா?
  யோவ் குடிதாங்கியப் பத்தி இவ்ளோ சொன்னவன், அவர் குளோபல் வார்மிங் க்கு பண்ண உதவியப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே? ஏன்?
  //

  ஏம்பா.. அதைத்தான் அனுபவிச்சுட்டு இருக்கோமே..
  எங்கயாவது மரம் இருந்தா அவருக்கு சொல்லியனுப்பு.. வருவாரு..ஹி..ஹி
  ( எவனாவது அவருக்கு மரத்தால சனினு சொல்லியிருப்பானுகளே..)

  ReplyDelete
 48. @ராஜ நடராஜன் said...
  ராமதாஸ்க்கு 2011லயும் ஆப்பு காத்துகிட்டு இருக்கிற மாதிரிதான் தெரியுது.பார்க்கலாம் பட்டு!
  //

  இருக்கவே இருக்காங்க அம்மா..

  சகோதரினு ஓடிப்போயி ஒரு சால்வை..
  மேட்டர் முடிஞ்சது சார்..

  ReplyDelete
 49. @மசக்கவுண்டன் said...
  எந்த ஊர்ல இந்த மாதிரி தலைவர்களும் மாக்களும் கெடப்பாய்ங்க. நம்ம ஊரு ஜனங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க, பட்டா. அதைத்தான் ஒவ்வொரு இடைத்தேர்தல்லயும் திருப்பி வாங்கிட்டு இருக்கோம்.
  //

  உண்மை சார்..

  ReplyDelete
 50. @ILLUMINATI said...
  ஹாஹஹா.....'எழுச்சித்' தலைவர்க்கு புது அர்த்தம் கொடுதவர்யா கருணாநிதி...என்ன சின்ன புள்ளத் தனமா பேசிகிட்டு....
  //

  பிரிச்சு அக்குவேறு ஆணிவேறா அலசிட்டே இலுமி..
  பேசாம காமிக்ஸ் ப்ளாக்க மூடிட்டு, அரசியல் பளாக் ஆரம்பிக்கலாம் நீர்..

  ReplyDelete
 51. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  சிங்கபூருக்கு ஆட்டோ அனுப்ப முடியாதுன்னு ரொம்ப தைரியமோ?
  //

  நீரு வேற.. இப்பவே கை கால் எல்லாம் நடுங்கிப்போயிதான் உக்காந்திருக்கேன்...
  இனு என்னென்ன ஆடப்போகுதோ?

  ReplyDelete
 52. @மங்குனி அமைச்சர் said...
  இன்னைக்கு பேப்பர் பார்த்தவுடன் நினைச்சேன் , பட்டா டவுசர கிழிப்பான்னு , கரக்டா கிழிச்சிட்ட , நல்லா அடிச்சு ஆடுங்க
  //

  ஹி..ஹி

  ReplyDelete
 53. @பெயர் சொல்ல விருப்பமில்லை said...
  ஹி....ஹி......ஹி.....அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!
  (யாருப்பா, அரசியல்வாதிகளால நன்மையே இல்லைன்னு? இங்க ஒரு பதிவுக்கு யூஸ் ஆகுதில்ல!)
  //

  அவ்வளவுதான்.. அப்புறம் தேர்தல் அறிக்கைய, குழந்தைகள் கக்கா போயிட்டா யூஸ் பண்ணலாம் பாஸ்..

  ReplyDelete
 54. @ரோஸ்விக் said...
  எதாவது தலைவர்கள் குனிஞ்சா சொல்லுயா... நம்ம பயலுகள விட்டு அவனுகளுக்கு அலகு குத்த சொல்லுவோம்.
  //

  அட நம்ம ரோஸ்விக்கு..
  நீரு ஊருக்கு போயிட்டதா அரசல்புரசலா காதில விழுந்துச்சு..

  ReplyDelete
 55. பட்டாப்பட்டி சார்.எதற்கும் ஜாக்கிரதையாக இருங்கோ.ஆட்டோ வந்துவிடப்போகுது.(உண்மைய சொன்னால் தான் நம்மவர்களுக்கு பிடிக்காதே)

  ReplyDelete
 56. @அக்பர் said...
  அண்ணே அடுத்த தேர்தல்ல எவ்வளவு கொடுப்பாங்க. ( நான் வெளி நாட்டில் இருப்பதால என்னால் ஓட்டு போட முடியாது. சும்மா டீட்டையிலுக்காக)
  உங்கள் ஆதங்கம் எல்லோரிடத்திலும் இருக்கு. என்ன செய்ய.
  //

  என்னத்த சார் கொடுக்கப்போறானுக.. தண்ணி கஷ்டத்துக்கு, தொடைக்க பேப்பர் கொடுப்பானுக..ப்ரீயா..

  ReplyDelete
 57. @VELU.G said...
  நாட்டுக்கு தேவையான நல்ல விஷயங்களை இப்படி அள்ளி விடுறீங்களே அண்ணே.. இதெல்லாம் நீங்களா நம்ம கட்சி சார்பா சொல்றதா இல்லை மண்டபத்தில யாராவது....
  //


  அப்படிக்கா..கீழிருந்து வருது சார்..

  ReplyDelete
 58. @சிவா (கல்பாவி) said...
  என்னத்தை மாறி, என்னத்தை பதவி வாங்கி, என்னத்தை பன்றது.... நமது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விரைவாக அறிவிக்கவும் தங்களது கட்டளைக்கு காத்திருக்கின்றோம்
  //

  வரும் சிவா..எல்லோரையும் திருத்த வரப்போகிறான் சுறா- பார்ட் 2

  ReplyDelete
 59. @எம் அப்துல் காதர் said...
  அதான்(அய்யா) வெட்டிகிட்டு வெட்டிக்கிட்டு போவுதுல, எதுக்கு கூப்டு வச்சு நட்டுக்கணும். இந்த அரசியலே புரிய மாட்டேங்குதுண்ணா.
  //

  புள்ளைய பெத்தா கண்ணீரு..
  வயசுக்கு வந்த பையனுக்கு எம்.பி சீட் வாங்கி கொடுப்பது ..அப்பனுகளுக்கு கொடுமையான நிகழ்வு சார்..
  அதுக்கு பேசாம இன்னொரு புள்ளைய பெத்துக்கலாம்..

  ReplyDelete
 60. //பேசாம காமிக்ஸ் ப்ளாக்க மூடிட்டு, அரசியல் பளாக் ஆரம்பிக்கலாம் நீர்..//

  யோவ்,ஒண்ணு ரெண்டு காமிக்ஸ் பதிவு போட்டா உடனே காமிக்ஸ் ப்ளாக் னு சொல்லுவியே..அதுல புக்ஸ்,காமிக்ஸ்,மியூசிக்,பிலிம் னு எல்லாமே வருதுயா...அது ஒரு entertainment ப்ளாக்...

  அரசியல பத்தி என்ன சொன்னாலும் இவனுங்களும் திருந்த மாட்டானுங்க.நம்ம ஆட்களும் திருந்த மாட்டானுங்க.அப்புறம் ஏன் நான் கஷ்டப்படணும்?
  அடுத்த முறை ஆயிரம் ரூபா கொடுத்துட்டு மறுபடியும் கோர்ட்ல வச்சு அடிப்பானுங்க போலிஸ் முன்னாடி.அதயும் சேத்து வாங்க சொல்லு....

  ReplyDelete
 61. //நட்டுக்கிச்சுன்னா அடுத்தத் தொண்டன் ரெடி பண்ணு........//

  திஸ் இஸ் டூ டூ மச்சுங்க்னா.

  ReplyDelete
 62. ஒருவழியா நானும் ப்ளாக் ஆரபிச்சுட்டேன், வந்து குத்திட்டுப் போங்கோ!குமுறிட்டு போங்கோ!

  ReplyDelete
 63. சார்....ஆளவந்தான் அழகு எங்கே குத்தி கொண்டார்ன்னு சொல்லுங்க... அந்த புண் ஏன்? ஆரலைன்னு நான் சொல்றேன்.....

  ReplyDelete
 64. இன்னிக்கும் கடை தொறந்தாச்சு!

  ReplyDelete
 65. யப்பா,இலங்கைத் தமிழருக்கு நடக்கும் இந்த அநியாயத்த கேக்க ஆளே இல்லயா?

  போய் பாருங்க....

  http://tamil.cinesouth.com/masala/hotnews/new/01062010_2.shtml

  ReplyDelete
 66. இன்னும்மா அந்த டுபாகுறை உலகம் நம்புது

  ReplyDelete
 67. அவரது குடும்பமோ, உறவினறோ பதவிக்கு வந்தா..அவரை நடுரோட்டில வைத்து சவுக்கடி கொடுங்கனு சொன்ன வீரனையா அவரு...//////


  இது பேரு தான் வீரமா பட்டு

  ReplyDelete
 68. பனங்காட்டான் said...

  //அலகுகுத்தின இடத்தில இன்னுமா புண்ணு ஆறல?.. //
  அது எப்படி சார் உடனே ஆறும் ஒரு தடவை குத்தினால் பரவாயில்லை,
  அதான் குத்திக்கொண்டே இருக்கிறார்களே

  ReplyDelete
 69. http://charuonline.com/blog/?p=594


  பட்டு இதை பாரு

  ReplyDelete
 70. //அது எப்படி சார் உடனே ஆறும் ஒரு தடவை குத்தினால் பரவாயில்லை,
  அதான் குத்திக்கொண்டே இருக்கிறார்களே//

  அது தன்னால ஆறிடும் பாஸ், அதை தானே அய்யா வள்ளுவனும் ஏதோ "உள்ளாறும்" ஹி ஹி ஹின்னு சத்தமா, கொரல் சொல்லி இருக்கார்

  ReplyDelete
 71. @ஸாதிகா said...
  பட்டாப்பட்டி சார்.எதற்கும் ஜாக்கிரதையாக இருங்கோ.ஆட்டோ வந்துவிடப்போகுது.(உண்மைய சொன்னால் தான் நம்மவர்களுக்கு பிடிக்காதே)

  //

  உடுங்க மேடம்..முகத்தில மரு வெச்சிக்கிறேன்..

  ReplyDelete
 72. @கும்மாச்சி said...
  //நட்டுக்கிச்சுன்னா அடுத்தத் தொண்டன் ரெடி பண்ணு........//

  திஸ் இஸ் டூ டூ மச்சுங்க்னா.

  //

  என்ன பிரதர்.. கோவம் வந்து முடி நட்டுக்கிச்சுனானு சொல்ல வந்தேன்..ஹி..ஹி

  ReplyDelete
 73. @ganesh said...
  சார்....ஆளவந்தான் அழகு எங்கே குத்தி கொண்டார்ன்னு சொல்லுங்க... அந்த புண் ஏன்? ஆரலைன்னு நான் சொல்றேன்.....
  //

  எங்க சார்.. கழட்டிப்பார்த்தா, எங்க பார்த்தாலும் புண்ணாயிருக்கு..
  இப்ப எது லேட்டஸ்ட் புண்ணுனு தெரியல.. ப.சி பதிலுக்காக வெயிட்டிங்..

  ReplyDelete
 74. @MUTHU said...
  அது எப்படி சார் உடனே ஆறும் ஒரு தடவை குத்தினால் பரவாயில்லை,
  அதான் குத்திக்கொண்டே இருக்கிறார்களே
  //

  அது...

  ReplyDelete
 75. @எம் அப்துல் காதர் said...
  அது தன்னால ஆறிடும் பாஸ், அதை தானே அய்யா வள்ளுவனும் ஏதோ "உள்ளாறும்" ஹி ஹி ஹின்னு சத்தமா, கொரல் சொல்லி இருக்கார்

  //

  ஆகா..குறளு...எதுக்கும் எதுக்கும் சேர்த்து இருக்கீங்க..ஹா.ஹா

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!