Pages

Tuesday, May 18, 2010

கனவு, ஒரு நாள் நிஜமாகும்..


சரியான சாலைகள் இல்லை,
மின்சாரம் இல்லை,
உணவுப்பொருட்களில் கலப்படம்,
போலி மருந்துகள்,
குடிநீரில் கழிவு,
கல்விச்சாலைகளில் ஊழல்..

என்னதான் நடக்கிறது?..

இதில் நடிகை குஷ்பு, கட்சியில் சேர்ந்து மக்களுக்காக,  பாடுபடப்போகிறாராம்..கர்மமடா கண்ணாயிரம்.. தள்ளாத வயதில், தலைவர் வேற, நற்சான்றிதல் கொடுக்கிறாரு..”குஷ்பு மிகவும்  முற்போக்கான கொள்கையுடையவர்”யென..  விளங்கும்.. ( நான் மக்களை சொன்னேன் தலைவா..   நீங்க நடத்துங்க..)

போட்ட சால்வை என்ன சாதாரணமா?.. கார் டிரைவர் உட்பட, ஓடிஓடி சால்வை போர்த்தின அழகை காண, ஆயிரம்கோடி கண்ணு வேணுமய்யா...இனிமேல் ஊருக்கு ஊர், திருமணத்துக்கு முன், பாதுகாப்பா எப்படி உடலுறவு கொள்வது எனபதை விளக்க, கட்சி மேடை உதவும் என்பதில எள்ளலுவும்  சந்தேகமில்லை.. வேலைவெட்டியை விட்டுவிட்டு, கேட்டுப் பயன்பெறுங்கள்..அது வருங்காலத்துக்கு  நல்லது..

போன ஆட்சியில பண்ணின குழறுடியாலதான் மின்சார தடுப்பாடுனு பேட்டி வேற..மின்சார  உபயோகத்துக்கு காசு வாங்கிறிங்களே.. அப்புறம் என்னய்யா கேடு?..எனக்கு தெரிஞ்சு  இந்தோனேசியாவுல, டீ கடை வெச்சிருந்த பயலுக, இப்ப மெர்சிடிஸ் பென்ஸ்ல சுத்தாரானுக..
கேட்டா, $10 டாலர் விலையுள்ள நிலக்கரிய, $30க்கு விற்கிறானுக..
அதையே, $93க்கு தமிழ்நாடு வாங்குது.. யார் வீட்டுப்பணம்..எவன் சம்பாரிப்பது?..
இந்த இறக்குமதி பண்ணுவது யாருனு கேட்டீங்கனா, வேதியல் பட்டப்படிப்பில்  டாக்ரேட் வாங்கின,  கலைக்காக, உயிரைக்கொடுக்கும் .கன்னிமை..

ஒண்ணுமட்டும் உண்மை...படிச்சபய புள்ளைக, சயின்டிபிக்கா ஊழல் பண்றது எப்படினு  கத்துக்கிட்டானுக.. நடத்துங்கடா ராசா...உங்க தாயாள உள்ளம் புல்லரிக்கவைக்குது.  எங்களுக்கு இதுவும் வேணும் இன்னமுன் வேணும்..
( கை நீட்டி காசு வாங்கியாச்சு சார்..நம்ம வாயத்தொறந்து,  அதுல சாணி வெச்சாலும்..முகம்  கோணாம சாப்பிடுவதுதான் தமிழர் பண்பாடாச்சே....)

அடுத்து ஜோசியம்..நம்ம முன்னால் நடிகை, இந்நாள் எதிர்கட்சித்தலைவர் , ”கோபாலபுரம் வீட்டை  தானம் கொடுக்காவிட்டால்,ஆட்சிக்கும், உயிருக்கும் ஆபத்து..அதனால்தான் அங்கிருந்து வெளியேறப்  போகிறார் முதல்வர் கருணாநிதி” அப்படீனு காளஹஸ்தில இருந்து அறிக்கை வேற..
நாட்டுக்கு ரொம்ப முக்கியமான பிரச்சனையல்லாவா இது?..

ஊழல்..ஊழல்.. எங்கும் அதிலும் ஊழல்.. இவ்ர்களுக்கு இப்பொது உள்ள சட்டம் போதாது மக்கா.. தக்காளி..போட்ட ரோடு ரெண்டு வருசத்தில, பப்பரபானு பல்லகாமிக்குதா?... கூப்பிடுயா அந்த  இஞ்சினியரை மற்றும் அதிகாரிகளைனு , அவங்களோட, கு@#$ல, 1 லிட்டர் காய்ச்சின தாரை ஊற்றினா, ஒழுக்கமா வேலை செய்வாங்களா..இல்லையா?.

ஊழல்
1 லட்சம் வரை..ஒரு லட்சத்துக்கு , ஒரு இஞ்ச் என உடம்பிலிருந்து சதைகளை பிரிக்கலாம்..

1 கோடி வரை..பழுக்க காய்ச்சிய கம்பிய..பின்புறமா, தொப்புள் வரை செருகலாம்..

10 கோடி வரை..மூக்கை அறுத்து, யானை தும்பிக்கையை இணைக்கலாம்

100 கோடி வரை.ஜீம்..பூ..பா...புஸ்...பூமியில அட்ரஸ் இல்லாம பண்ணிவிடலாம்...

ங்கொய்யா.. இப்படியெல்லாம் சட்டம் கொண்டுவந்தா, இந்த நாட்டுநலன்,நாட்டுநலன்னு ,அன்பு மகன், அன்பு மச்சான், அன்பு மனைவியெல்லாம், அன்பு கூ@%$யா வைத்துக்கொண்டு பாடுபடுகிறார்களே..
இவர்கள் எல்லாம், அரசியலுக்கு வரனுமுனு நினைப்பாங்க?..வந்தாலும், ஊழல் பண்ணனுமுனு நினைப்பாங்க?

கனவு காணுங்கள்..கனவு, ஒரு நாள் நிஜமாகும்..

இவன்
ஆடும் ஆட்டத்தை பார்த்து, மனசு வெறுத்துப்போய் உள்ள தமிழன்..
.
.
.

77 comments:

 1. இனிமே கலைஞர் டிவி ல மானாட மார்பாட தான். என்ஜாய் கலைஞர்

  ReplyDelete
 2. தண்டனை எல்லாம் பயங்கரமா இருக்கு.. இது பட்டாபட்டியின் பருட புராணமா?

  ReplyDelete
 3. அண்ணே இந்தோனேசியா கதை எனக்கும் தெரியும்,
  ரொம்ம்ப சூடா இருப்பதால் வாங்க பீர் சாப்புட்டுகிட்டே பேசலாம் ...

  ReplyDelete
 4. தண்டனை நல்லாத்தான் இருக்கு,
  தண்டனை குடுக்கிறவரும் காசு வாங்கினா என்ன தண்டனை அண்ணே ,..

  ReplyDelete
 5. ஆஆஆஆ......... என்னத்த சொல்ல?

  ReplyDelete
 6. அது ஒன்னுமில்லை பட்டா, முற்போக்கான கருத்து இல்லயா தாத்தாவுக்கு உடனே பிடிச்சி போச்சி !

  ReplyDelete
 7. இவனுகளுக்கு இன்னொரு இந்தியன் , அன்னியன் தண்டனை கண்டிப்பா தரனும். லஞ்சம் பேரை கேட்டாலே அலறி அடித்து ஓடனும்.

  ReplyDelete
 8. இந்த தண்டனையை எல்லாம் நிறைவேத்த ஆரம்பிச்சா.......
  எல்லா "வியாதிகளும்" காலி.

  ReplyDelete
 9. //கே.ஆர்.பி.செந்தில் said...
  தண்டனை நல்லாத்தான் இருக்கு,
  தண்டனை குடுக்கிறவரும் காசு வாங்கினா என்ன தண்டனை அண்ணே
  //
  repeat...............tu!

  எப்போ ஐநூறுக்கும் ஆயிரத்துக்கும் ஆசைப்பட்டு வோட்டு போட்டோமோ, அப்பவே எல்லாத்தையும் துடைச்சுகிட்டு வாழனும் தம்பி

  ReplyDelete
 10. ச‌ட்ட‌ம் போடுற‌தே அதை உடைக்க‌தான் என்று நினைக்கிறேன்.... அவ‌னுங்க‌ளே போடுவானுங்க‌.. அப்புற‌ம் அதில் உள்ள‌ ஓட்டைக‌ளை வைத்து வெளியேவும் வ‌ந்து விடுவானுங்க‌..

  ReplyDelete
 11. //இனிமேல் ஊருக்கு ஊர், திருமணத்துக்கு முன், பாதுகாப்பா எப்படி உடலுறவு கொள்வது எனபதை விளக்க, கட்சி மேடை உதவும் என்பதில எள்ளலுவும் சந்தேகமில்லை..//

  ஆமாம்.இதில் குஷ்புவுடன் பேச்சில் ஒழுக்கம் கொண்ட வெற்றிகொண்டானும்,ஒழுக்கமே உருவான கருணாநிதியும் சேர்ந்து செயலாற்றுவார்கள் என்று கழகம் சந்தோசத்துடன் தெரிவித்துக் கொள்கிறது.

  ReplyDelete
 12. ஏம்பா , நம்ம நாட்ல தான் நீதிபதியே லஞ்சம் வாங்குறாங்க , அப்புறம் எப்படி , தண்டன குடுப்ப?
  இப்படி கோபப்பட்டு உடம்ப கேடுத்துகாம போய் ஒரு ஜில்லுன்னு லைம் ஜூஸ் சாப்டு வா ?

  ReplyDelete
 13. //ஆடும் ஆட்டத்தை பார்த்து, மனசு வெறுத்துப்போய் உள்ள தமிழன்..//

  வெறுத்து மட்டும் இல்லையா.வெறியில இருக்கேன்.

  ReplyDelete
 14. ஆஹா சரியான டாபிக்.... "தமிழகத்தின் தலைமகளே" என்று தலைவர் வழிமொழிய அதையே அடிபொடிகள் பின்பற்ற ஆஹா ஆஹா தமிழ்நாடு எங்கேயோ போயிரும்...

  வரும் தேர்தலில் காசுக்கு பதிலா "!!!!!" கிடைக்க வழிவகுத்த தானைத்தலைவி குஷ்பு............???

  வேறென்ன வாழ்க....

  ReplyDelete
 15. நல்ல காலம் வரப்போகுது..
  பட்டாபட்டி சொல்றான்.. பரந்தாமன் கேக்குறான்.. ஹா.ஹா..

  யாராவது ஸ்டாராஙகா வந்து சட்டத்தை கையில எடுத்து.. கனவு... கனவு... கனவு.....

  நடக்கும்..

  ReplyDelete
 16. ஆனா சொரண கெட்ட ஜனங்க இருக்குற வரை கழகத்திற்கு என்ன பிரச்சனை?அடிச்ச காசுல கொஞ்சம் பங்கு கொடுத்தா போச்சு....
  அதுக்கப்புறம் எப்படி வேணும்னா ஏறி மிதிக்கலாம்.கொடுத்த காசுக்கு நல்லாவே எல்லாத்தையும் மூடிகிட்டு அடி வாங்குவானுங்க.

  ReplyDelete
 17. ஏம்பா.. இந்த D.N.A மாற்றியமைப்பது பற்றி கூவிக்கிட்டு இருக்கானுகளே..

  அதை வெச்சி.. இவனுக மூளைய ஏதாவது பண்ணமுடியாது?

  ReplyDelete
 18. என்ன பட்டாபி...இதுக்கே மனசு வெறுத்துட்டா எப்படி...?

  இன்னும் ரம்பா, டான்ஸ் மாஸ்டர் கலா எல்லாம் திராவிட கொள்கைகள பரப்ப ரெடியாகிட்டு இருக்காங்க...அப்புறம் நமீதா..வாவ்... ஒரே ஜாலிதான் போ!

  ReplyDelete
 19. சான்சே இல்லை. நாம் வாழ்வது ஜனநாயக புண்ணிய பூமி (ங்கொய்யால)
  இப்படியெல்லாம் வேண்டும் என்றுதான் புடுங்கி ஜனநாயகத்தை பெயரளவில் வைத்துக்கொண்டார்கள்.
  எல்லா 'நாதாரி " நாய்களும்,யார் வந்தாலும் இப்படித்தான் இருக்கும்.
  இங்குதான் ஜனங்களை பிரித்து வைக்க ஆயிரம் வழி இருக்கே தல!!
  மதம்,ஜாதி, மொழி, இனம், நிறம், நிலம் என! அரசியல் செய்யும் நாய்கள்,அரசு அலுவலர்கள், வணிகர்கள்,வியாபாரிகள் இவர்கள்தான் இங்கு வளமும் நலமும் கொழிக்க வாழுகின்றனர்.
  ஜனங்கள் உணராதவரை ஒரு மயிரும் புடுங்க முடியாது. இதுவும் இந்த கொள்ளை கூட்டங்களுக்கு
  தெரியும்.

  ReplyDelete
 20. Dear Pattapatti,

  I share your concern.Its okay to dream and expect miracles to happen.But in reality nothing is going to happen unless some bloody revolution happens. I just happened to read a forwards that explicitly explains how the present structure of enterprise stands on a 40% base of BPL and just above BPL popoulations is shouldering. Just like Atlas Shrugged, this powerful base of the pyramid will shrug one day and all these politicians will disappear.
  May be this also a dream.
  Shankar

  ReplyDelete
 21. சரி நாமலே கனவு காணுவோம். அந்த நார அரசியல் வாதிகள், குஷ்பு எல்லாத்தையும் (ஒரு நிமிஷம் மறந்து) ஓரம் கட்டிடுவோம். நம் பதிவர்கள், ப்ளாக்கர்கள் அனைவரையும் (தீவுக்கு தீவு இருந்தாலும்) ஒன்று சேர்த்துக்குவோம்.

  இப்ப நாம தான் அரசை நடத்த போறோம். சரியா.. இதில் பட்டபட்டி, ஜெய்லானி, மங்குனி, சரவணகுமார் (எனக்கு பதவி ஆசை எல்லாம் கிடையாது) எல்லோரும் உண்டு. வெயிட் வெயிட். (பெயர் விடுபட்டவர்களுக்கு பின்னர் அரசவை விஸ்தரிக்கும் போது பதவி கொடுக்கப்படும். கொஞ்சம் பொறுங்க.) இப்ப மேற்படி பெயர் குறிப்பிட்ட அமைச்சர்களுக்கு யாருக்கு என்ன பதவி கொடுக்கணும் (அடிச்சுக்காம) நீங்களே (பட்டா) ஒரு முடிவு பண்ணுங்க. நான் இப்படி ஒரு ஓரமா நின்று ஆசீர்வதிக்கிறேன். திரும்பவும் சொல்றேன் எனக்கு பதவி ஆசை எல்லாம் கிடையாது.

  முடிவாக தீர்மானம் இன்றே நிறைவேற்றனும். எங்கே எல்லோரும் ரெடியா? மேடைக்கு வாங்க...

  ReplyDelete
 22. மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி

  ReplyDelete
 23. hmm punsihment nalla iruku

  ReplyDelete
 24. குஷ்புவை கும்முறதுன்னா குஜாலாயிருவே பட்டா நீ !!

  ReplyDelete
 25. குஸ்புவின் ஜாதகப்படி தமிழ் நாட்டின் முதல்வராகியே தீரனும்

  ReplyDelete
 26. வருங்கால தமிழக நிரந்தர முதல்வர் தமிழ்த் தெய்வம் புரட்சித் சூறாவளி அம்மா டாக்டர் குஷ்பூ வாழ்க.

  இந்த பட்டாபட்டி 2016-ல் அம்மா குஷ்பூ ஆட்சியில் சிறையில் அடைக்கப் படுவார்.
  கேசு ஹி.. ஹி.. கஞ்சா கேசு தான்.

  ReplyDelete
 27. பட்டாப‌ட்டி,
  எண்ண‌த்த‌ எழுதீட்டிங்க‌,
  வார்த்தைக‌ள் குத்தீட்டியாய்.
  நாங்க‌ என்ன‌த்த‌ எழுத‌?
  ஊழ‌லை வாழ்விய‌லாக்கி,
  ஒட்டுப்போட‌ ல‌ஞ்ச‌ம் வாங்கும‌ள‌வு
  த‌மிழ‌னை த‌ர‌ம் தாழ்த்தி, ம‌க்க‌ளாட்சியின்
  ஆணிவேரை திரும‌ங்க‌ல‌த்தில் பிடிங்கி
  ம‌ங்க‌ள‌ம் பாடிவிட்டார்க‌ள்.
  ப‌.சி. தேர்த‌ல் க‌ள‌த்தில் ம‌ய‌ங்கி விழும் போது
  த‌ண்ணீர் காட்டிய‌தால், இவ‌ர்க‌ள் தாக‌ம் எப்போதும்
  ம‌த்தியில் தீர்ந்துவிடும்.கூட‌வே கூட்ட‌ணி த‌ர்ம‌ம் வேற‌,
  இங்கே,கேள்வி கேட்டால், ஜே வுக்கு
  (சிறுதாவூர்,ப‌ஸ் எரிப்பு, அள‌வுக்க‌திக‌
  சொத்து விசார‌ணை இப்ப‌டி)
  டாக்ட‌ர் ஐயாவுக்கு (சின்னையா எம்பீ சீட்டு,
  மற்றும் ப‌ல‌ ர‌க‌சிய‌ கேசுக‌ள்)
  விஜ‌ய‌காந்த் (சினிமாக்கார‌னை எல்லாம் வ‌ளைச்சுப் போட்டாச்சு,
  ர‌ஜ‌னி, க‌ம‌ல் மாத‌மொரு பாராட்டு விழா) சினிமா மாயை காலி.
  ந‌ம்ம‌ த‌லைவ‌ர்க‌ள் எல்லாம் ஒரே குட்டையின் ம‌ட்டைக‌ள்.
  67‍ல் இவ‌ர்க‌ள் ஜெயித்த‌ போதே, ப‌க்த‌வ‌ச்ச‌ல‌ம் `விஷ‌கிருமிக‌ள்`
  ப‌ர‌வி விட்ட‌துன்னு சொன்னார்.
  ந‌ம‌க்கு தெரிய‌ இவ்வ‌ள‌வு காலமாகி விட்ட‌து.
  (ந‌ம்மதானே வ‌ளர்த்துவிட்டோம் புத்தியின்றி)
  முத‌ல்ல, புற‌ம்போக்க‌ ம‌ட்டும் வ‌ளைச்சாங்க‌,
  அப்புற‌ம், க‌ட்டப‌ஞ்சாத்துல‌ பிர‌ச்ச‌ன‌யான இட‌த்துக்கு ப‌ண‌ம் ம‌ட்டும்,
  பின் அந்த‌யிட‌மே, ஒரு இட‌ம் பிடிச்சுட்டா,
  இப்ப‌வெல்லாம் வீட்டுக்கார‌னையே `காலி` ப‌ண்ணிட்டு ...
  இப்ப‌டி போகுது வ‌ண்டி ரெம்ப‌ ஸ்பீடா..
  நான் பிரேக் போட்டு நிறுத்திக் கொள்கிறேன்.

  ReplyDelete
 28. போடு போடுன்னு போட்டியே ராசா:))

  ReplyDelete
 29. Dear Mr Patta,

  Though I have few reservations on your blog articles, I always visit your site and vote for most of the articles you have written. Surely, you have developed your writing skills that has reached vast number of readers like me.

  My request to you now is - to make an article (post) on May 18th - the dark day of Eelam struggle. As many people visit your site, your thoughts on this issue would reach like minded people around.

  Please visit the following sites:

  http://maaruthal.blogspot.com/2010/05/blog-post_18.html

  It is also worth visiting another site from Tamilatchi

  http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=2085

  May I request you to express your thoughts on this issue?

  Swamy.

  ReplyDelete
 30. கலைஞர் மிகவும் முற்போக்கானவர் ஆகையால் தான் கற்புக்கரசி கண்ணகிக் சிலையும்,குஷ்புவுக்கு பதவியும் பகிர்ந்தளித்துள்ளார். நாமெல்லாம் ஓட்டு மட்டும் தான் போட வேண்டும் வேறு எதற்கும் ஆசை படக்கூடாது.வாழத் தெரியாதவர்கள் வாழம் நாட்டில் ஆழத் தெரியாதவர்கள்தான் ஆட்சி செய்வார்கள்

  ReplyDelete
 31. தலைவரே குஷ்பூ CD (DVD) கிடைக்குதாமே?

  ReplyDelete
 32. அண்ணே குஷ்பு அக்கா மறுபடியும் டி.வியிலே டான்ஸ் ஆடமாட்டங்களான்னே

  ReplyDelete
 33. ஒண்ணுமட்டும் உண்மை...படிச்சபய புள்ளைக, சயின்டிபிக்கா ஊழல் பண்றது எப்படினு கத்துக்கிட்டானுக.. நடத்துங்கடா ராசா...உங்க தாயாள உள்ளம் புல்லரிக்கவைக்குது. எங்களுக்கு இதுவும் வேணும் இன்னமுன் வேணும்..
  ///////////////////

  அது தாயாள உள்ளம் இல்ல ராஜாத்திய உள்ளம்...C.I.T களுக்கு கூட தெரியுமே!

  ReplyDelete
 34. OVER ALL

  சட்டம் தன் கடமையை செய்யும்...

  நாம ஓரமா நின்னு வேடிக்க பார்ப்போம்....

  ReplyDelete
 35. எனக்கு தெரிஞ்சு பேசாம தமிழ் நாட்டுல மன்னர் ஆட்சி கொண்டு வந்து பாசத் தலைவன பாச மன்னர் ஆக்கிடலாம்...

  அதுக்கு அப்புறம் கண்டிப்பா ஊழல் இருக்காது என்பது திண்ணம் (கிண்ணம் இல்லையா)...ஏன்னா இவன் மன்னர் ஆயிட்டா கண்டிப்பா அடுத்தவன் இவன் காச திருட விட மாட்டான்...அப்புறம் தமிழ் நாட்டையே ஒரு நூறா பிரிச்சு குறு நில மன்னர்கள உருவாக்கிடலாம்...அவன் குடும்பத்தில என்ன ஆளா இல்ல, நூறு பத்தாது...இவன் குடும்பம் எப்பவும் போல சந்தூசம இருக்கட்டும்..

  அட்லீஸ்ட் நாமளாவது நிம்மதியா இருப்போம்..என்ன சொல்ற? புரட்சி பண்ணிரலாமா?

  ReplyDelete
 36. உங்க ஆதங்கமும்... கோபமும்
  நேர்மையானதுதான்..... ஆனா...............

  ReplyDelete
 37. ஜாக்பாட்' - அடுத்தது யார்?
  குஷ்பு திமுகவில் சேர்ந்ததால் கடுப்பான ஜெயா டிவிநிர்வாகம் குஷ்புவை அதிரடியாக நீக்கியது....

  ReplyDelete
 38. கருத்துக் கணிப்பு

  குஷ்புவின் வருகையால் திமுகவுக்கு அரசியல்ரீதியில் லாபம் இருக்குமா?


  நிச்சயம் இருக்காது


  இருக்கும்


  தெரியவில்லை


  கருத்து இல்லை

  ReplyDelete
 39. அரசியல்வாதிகளின் ரீல்களை கேட்டு கேட்டு காதே பஞ்சர் ஆகி விட்டது...

  ReplyDelete
 40. சென்ட்ரலில் சோனியா,இங்கே குஷ்பூ ரைட்டா பட்டு

  ReplyDelete
 41. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  இனிமே கலைஞர் டிவி ல மானாட மார்பாட தான். என்ஜாய் கலைஞர்
  //

  ஆடும் வரை ஆட்டம்..
  ஆயிரத்தில நாட்டம்..
  கூடி வரும் கூட்டம் கொள்ளிவரை வருமா?

  ReplyDelete
 42. @சேட்டைக்காரன் said...
  ஆஜர் அண்ணே! :-)
  //

  வாங்க சேட்டை சார்...

  ReplyDelete
 43. @முகிலன் said...
  தண்டனை எல்லாம் பயங்கரமா இருக்கு.. இது பட்டாபட்டியின் பருட புராணமா?
  //
  உருவ புராணம் சார்.. ( பட்டாபட்டிய...)

  ReplyDelete
 44. @கே.ஆர்.பி.செந்தில் said...

  அண்ணே இந்தோனேசியா கதை எனக்கும் தெரியும்,
  ரொம்ம்ப சூடா இருப்பதால் வாங்க பீர் சாப்புட்டுகிட்டே பேசலாம் ...
  தண்டனை நல்லாத்தான் இருக்கு,
  தண்டனை குடுக்கிறவரும் காசு வாங்கினா என்ன தண்டனை அண்ணே ,..
  //

  எவன் தப்பு பண்ணினாலும், தண்டனை கிடக்கனும் சார்.. என் கனவு இது..

  ReplyDelete
 45. @Chitra said...
  ஆஆஆஆ......... என்னத்த சொல்ல?
  //
  என்ன மேடம் பண்ணுவது.. காசேதான் கடவுளடா...

  ReplyDelete
 46. @ஜெய்லானி said...
  அது ஒன்னுமில்லை பட்டா, முற்போக்கான கருத்து இல்லயா தாத்தாவுக்கு உடனே பிடிச்சி போச்சி !

  இவனுகளுக்கு இன்னொரு இந்தியன் , அன்னியன் தண்டனை கண்டிப்பா தரனும். லஞ்சம் பேரை கேட்டாலே அலறி அடித்து ஓடனும்.

  //

  வரும்.. காலம் வரும் ஜெய்லானி

  ReplyDelete
 47. @சைவகொத்துப்பரோட்டா said...
  இந்த தண்டனையை எல்லாம் நிறைவேத்த ஆரம்பிச்சா.......
  எல்லா "வியாதிகளும்" காலி.
  //

  அப்படியாவது நாடு முன்னேறாதானு ஆசை சார்..

  ReplyDelete
 48. @பெயர் சொல்ல விருப்பமில்லை said...
  எப்போ ஐநூறுக்கும் ஆயிரத்துக்கும் ஆசைப்பட்டு வோட்டு போட்டோமோ, அப்பவே எல்லாத்தையும் துடைச்சுகிட்டு வாழனும் தம்பி
  //
  உண்மைதான் சார்..

  ReplyDelete
 49. நாடோடி said...
  ச‌ட்ட‌ம் போடுற‌தே அதை உடைக்க‌தான் என்று நினைக்கிறேன்.... அவ‌னுங்க‌ளே போடுவானுங்க‌.. அப்புற‌ம் அதில் உள்ள‌ ஓட்டைக‌ளை வைத்து வெளியேவும் வ‌ந்து விடுவானுங்க‌..
  //

  விடுங்க..எல்லா பயலும் மாட்டுவாங்க நாடோடி சார்

  ReplyDelete
 50. @ILLUMINATI said...
  ஆமாம்.இதில் குஷ்புவுடன் பேச்சில் ஒழுக்கம் கொண்ட வெற்றிகொண்டானும்,ஒழுக்கமே உருவான கருணாநிதியும் சேர்ந்து செயலாற்றுவார்கள் என்று கழகம் சந்தோசத்துடன் தெரிவித்துக் கொள்கிறது.
  //

  ஹி..ஹி

  ReplyDelete
 51. @மங்குனி அமைச்சர் said...
  ஏம்பா , நம்ம நாட்ல தான் நீதிபதியே லஞ்சம் வாங்குறாங்க , அப்புறம் எப்படி , தண்டன குடுப்ப?
  இப்படி கோபப்பட்டு உடம்ப கேடுத்துகாம போய் ஒரு ஜில்லுன்னு லைம் ஜூஸ் சாப்டு வா ?
  //

  குடி..குடியை கெடுக்கும்

  ReplyDelete
 52. அஹமது இர்ஷாத் said...

  ஆஹா சரியான டாபிக்.... "தமிழகத்தின் தலைமகளே" என்று தலைவர் வழிமொழிய அதையே அடிபொடிகள் பின்பற்ற ஆஹா ஆஹா தமிழ்நாடு எங்கேயோ போயிரும்...

  வரும் தேர்தலில் காசுக்கு பதிலா "!!!!!" கிடைக்க வழிவகுத்த தானைத்தலைவி குஷ்பு............???
  வேறென்ன வாழ்க....
  //

  அடுத்து நமீதா வந்தாலும் வரும்...

  ReplyDelete
 53. @ரெட்டைவால் ' ஸ் said...
  என்ன பட்டாபி...இதுக்கே மனசு வெறுத்துட்டா எப்படி...?
  இன்னும் ரம்பா, டான்ஸ் மாஸ்டர் கலா எல்லாம் திராவிட கொள்கைகள பரப்ப ரெடியாகிட்டு இருக்காங்க...அப்புறம் நமீதா..வாவ்... ஒரே ஜாலிதான் போ!
  //

  ஓ.. இதுவேற இருக்கா?

  ReplyDelete
 54. @கக்கு - மாணிக்கம் said...
  ஜனங்கள் உணராதவரை ஒரு மயிரும் புடுங்க முடியாது. இதுவும் இந்த கொள்ளை கூட்டங்களுக்கு
  தெரியும்.
  //
  உண்மைதான் சார்.. அதுதான் மக்களை முட்டாளாகவே வெச்சுக்கிட்டு இருக்கானுக..

  ReplyDelete
 55. Shankar said...

  Dear Pattapatti,

  I share your concern.Its okay to dream and expect miracles to happen.But in reality nothing is going to happen unless some bloody revolution happens. I just happened to read a forwards that explicitly explains how the present structure of enterprise stands on a 40% base of BPL and just above BPL popoulations is shouldering. Just like Atlas Shrugged, this powerful base of the pyramid will shrug one day and all these politicians will disappear.
  May be this also a dream.
  Shankar
  //
  Hope one day, the Dream willbe come true...

  ReplyDelete
 56. @அக்பர் said...
  மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி
  //

  வாங்க அக்கபர்.. நூற்றில் ஒரு வார்த்தை...

  ReplyDelete
 57. @LK said...
  hmm punsihment nalla iruku
  //

  பச்சையா எழுதலாமானு பார்த்தேன் சார்,

  ரொம்ப யோசனை பண்ணி எடிட் பண்ணின தண்டனை இது..

  ReplyDelete
 58. @செந்தழல் ரவி said...
  குஷ்புவை கும்முறதுன்னா குஜாலாயிருவே பட்டா நீ !!
  //

  ஆமாமா.. கண்ணகி சிலைய துக்கி கடாசிட்டு, குஷ்புவை சினை
  வடிக்கும் வரை, ஓயாது இந்த போராட்டம்..

  சாரிப்பா..கீ போர்ட் ஸ்லிப் ஆயிடுச்சு..

  சினை என்பதை சிலை என்று படிக்கவும்..- ஆசிரியர்

  ReplyDelete
 59. @buruhaniibrahim said...
  குஸ்புவின் ஜாதகப்படி தமிழ் நாட்டின் முதல்வராகியே தீரனும்
  //

  ஓ.. அதுவேறயா?..

  ReplyDelete
 60. @சதீஷ் said...
  வருங்கால தமிழக நிரந்தர முதல்வர் தமிழ்த் தெய்வம் புரட்சித் சூறாவளி அம்மா டாக்டர் குஷ்பூ வாழ்க.
  இந்த பட்டாபட்டி 2016-ல் அம்மா குஷ்பூ ஆட்சியில் சிறையில் அடைக்கப் படுவார்.
  கேசு ஹி.. ஹி.. கஞ்சா கேசு தான்.
  //

  கொஞ்சம் பெரிய லெவல்ல சொல்லுங்க தல..
  கஞ்சா, ஷெரினாவோட போச்சு..

  ReplyDelete
 61. @vasan said...
  பட்டாப‌ட்டி,
  எண்ண‌த்த‌ எழுதீட்டிங்க‌,
  வார்த்தைக‌ள் குத்தீட்டியாய்.
  நாங்க‌ என்ன‌த்த‌ எழுத‌?
  ஊழ‌லை வாழ்விய‌லாக்கி,
  ஒட்டுப்போட‌ ல‌ஞ்ச‌ம் வாங்கும‌ள‌வு
  த‌மிழ‌னை த‌ர‌ம் தாழ்த்தி, ம‌க்க‌ளாட்சியின்
  ஆணிவேரை திரும‌ங்க‌ல‌த்தில் பிடிங்கி
  ம‌ங்க‌ள‌ம் பாடிவிட்டார்க‌ள்.
  ப‌.சி. தேர்த‌ல் க‌ள‌த்தில் ம‌ய‌ங்கி விழும் போது
  த‌ண்ணீர் காட்டிய‌தால், இவ‌ர்க‌ள் தாக‌ம் எப்போதும்
  ம‌த்தியில் தீர்ந்துவிடும்.கூட‌வே கூட்ட‌ணி த‌ர்ம‌ம் வேற‌,
  இங்கே,கேள்வி கேட்டால், ஜே வுக்கு
  (சிறுதாவூர்,ப‌ஸ் எரிப்பு, அள‌வுக்க‌திக‌
  சொத்து விசார‌ணை இப்ப‌டி)
  டாக்ட‌ர் ஐயாவுக்கு (சின்னையா எம்பீ சீட்டு,
  மற்றும் ப‌ல‌ ர‌க‌சிய‌ கேசுக‌ள்)
  விஜ‌ய‌காந்த் (சினிமாக்கார‌னை எல்லாம் வ‌ளைச்சுப் போட்டாச்சு,
  ர‌ஜ‌னி, க‌ம‌ல் மாத‌மொரு பாராட்டு விழா) சினிமா மாயை காலி.
  ந‌ம்ம‌ த‌லைவ‌ர்க‌ள் எல்லாம் ஒரே குட்டையின் ம‌ட்டைக‌ள்.
  67‍ல் இவ‌ர்க‌ள் ஜெயித்த‌ போதே, ப‌க்த‌வ‌ச்ச‌ல‌ம் `விஷ‌கிருமிக‌ள்`
  ப‌ர‌வி விட்ட‌துன்னு சொன்னார்.
  ந‌ம‌க்கு தெரிய‌ இவ்வ‌ள‌வு காலமாகி விட்ட‌து.
  (ந‌ம்மதானே வ‌ளர்த்துவிட்டோம் புத்தியின்றி)
  முத‌ல்ல, புற‌ம்போக்க‌ ம‌ட்டும் வ‌ளைச்சாங்க‌,
  அப்புற‌ம், க‌ட்டப‌ஞ்சாத்துல‌ பிர‌ச்ச‌ன‌யான இட‌த்துக்கு ப‌ண‌ம் ம‌ட்டும்,
  பின் அந்த‌யிட‌மே, ஒரு இட‌ம் பிடிச்சுட்டா,
  இப்ப‌வெல்லாம் வீட்டுக்கார‌னையே `காலி` ப‌ண்ணிட்டு ...
  இப்ப‌டி போகுது வ‌ண்டி ரெம்ப‌ ஸ்பீடா..
  நான் பிரேக் போட்டு நிறுத்திக் கொள்கிறேன்.
  //

  என்ன சார் .. ஒரு பதிவவே போட்டுட்டீங்க..
  நல்ல அலசல் சார்..

  ReplyDelete
 62. @வானம்பாடிகள் said...
  போடு போடுன்னு போட்டியே ராசா:))
  //

  வாங்க சார்.....

  ReplyDelete
 63. @V R said...
  Please visit the following sites:

  http://maaruthal.blogspot.com/2010/05/blog-post_18.html

  It is also worth visiting another site from Tamilatchi

  http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=2085

  May I request you to express your thoughts on this issue?

  Swamy.
  //

  பதிவு போட்டாச்சு சார்.. மனசு கஷ்டமானதால.. எழுதாம இருந்தேன்

  ReplyDelete
 64. @சிவா (கல்பாவி) said...
  கலைஞர் மிகவும் முற்போக்கானவர் ஆகையால் தான் கற்புக்கரசி கண்ணகிக் சிலையும்,குஷ்புவுக்கு பதவியும் பகிர்ந்தளித்துள்ளார். நாமெல்லாம் ஓட்டு மட்டும் தான் போட வேண்டும் வேறு எதற்கும் ஆசை படக்கூடாது.வாழத் தெரியாதவர்கள் வாழம் நாட்டில் ஆழத் தெரியாதவர்கள்தான் ஆட்சி செய்வார்கள்
  //

  என்ன சிவா.. கலக்குறீங்க.. பேசாம, நீங்களும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கலாம்..

  ReplyDelete
 65. @பனங்காட்டான் said...
  தலைவரே குஷ்பூ CD (DVD) கிடைக்குதாமே?
  //

  அந்த கண்ராவி வேறயா?

  ReplyDelete
 66. @VELU.G said...
  அண்ணே குஷ்பு அக்கா மறுபடியும் டி.வியிலே டான்ஸ் ஆடமாட்டங்களான்னே
  //

  ஆசைதான்.. வீட்ல எவவளவு இஞ்ச் டீவி சார்?..

  பேசாம 42” வாங்கி போடுங்க..ஆடுவாங்க..

  ReplyDelete
 67. @பருப்பு The Great said...
  எனக்கு தெரிஞ்சு பேசாம தமிழ் நாட்டுல மன்னர் ஆட்சி கொண்டு வந்து பாசத் தலைவன பாச மன்னர் ஆக்கிடலாம்...
  அதுக்கு அப்புறம் கண்டிப்பா ஊழல் இருக்காது என்பது திண்ணம் (கிண்ணம் இல்லையா)...ஏன்னா இவன் மன்னர் ஆயிட்டா கண்டிப்பா அடுத்தவன் இவன் காச திருட விட மாட்டான்...அப்புறம் தமிழ் நாட்டையே ஒரு நூறா பிரிச்சு குறு நில மன்னர்கள உருவாக்கிடலாம்...அவன் குடும்பத்தில என்ன ஆளா இல்ல, நூறு பத்தாது...இவன் குடும்பம் எப்பவும் போல சந்தூசம இருக்கட்டும்..

  அட்லீஸ்ட் நாமளாவது நிம்மதியா இருப்போம்..என்ன சொல்ற? புரட்சி பண்ணிரலாமா?
  //

  இப்ப அதுதானே நடந்துட்டு இருக்கு.. புரட்சி வேணாம் சார்..

  சுதந்திரம் வேணுமுனு போராடலாம்.. (கண்டிப்பா காந்தி வழியில்லை.. சுபாஸ் வழியில்..)

  ReplyDelete
 68. சி@. கருணாகரசு said...
  உங்க ஆதங்கமும்... கோபமும்
  நேர்மையானதுதான்..... ஆனா...............
  //
  ஏன் சார் நடக்காதா?

  ReplyDelete
 69. @MUTHU said...
  குஷ்பு திமுகவில் சேர்ந்ததால் கடுப்பான ஜெயா டிவிநிர்வாகம் குஷ்புவை அதிரடியாக நீக்கியது....
  //

  அட கோடியில கிடைக்கப்போகுது.. லட்சம் யாருக்கு வேணும்?..சரியா முத்து..

  ReplyDelete
 70. அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
  எஞ்சாமை வேந்தற்கு இயல்பு.
  - திருக்குறள்.
  அதாவது பயமில்லா செயல்கள், உதவி செய்யும் குணம், தலைசிறந்த கைவியறிவு மற்றும் எல்லாத் துறைகளிலும் ஆர்வம் ஆகிய நான்கும் நாட்டை ஆள்பவர்களுக்கு இயல்பாக இருக்க வேண்டிய குண நலன்களாகும். - வள்ளுவர் வாக்கு.

  லஞ்சாமை ஆசை களவுகல்லாமை இந்நான்கும்
  எஞ்சாமை வேந்தற்கு இயல்பு.
  -புதுக்குறள்.
  அதாவது லஞ்சம் வாங்குவது, அடுத்தவர்கள் (பொருள்மேல்) ஆசைப் படுத்தல், திருடுதல், அறிவு ஆய்வுத்திறன் இல்லாமை இவை நான்கும் நாட்டை ஆள்பவர்களுக்கு இயல்பாக இருக்க வேண்டிய குண நலன்களாகும். - அரசியல் போக்கு.

  ReplyDelete
 71. unga ப்ளாக்கில இருக்கும் பிரம்மானந்தத்தின் ரியாக்‌ஷன் தான் என்னுது..:(

  ReplyDelete
 72. //ஆமாமா.. கண்ணகி சிலைய துக்கி கடாசிட்டு, குஷ்புவை சினை
  வடிக்கும் வரை, ஓயாது இந்த போராட்டம்..

  சாரிப்பா..கீ போர்ட் ஸ்லிப் ஆயிடுச்சு..

  சினை என்பதை சிலை என்று படிக்கவும்..- ஆசிரியர்//


  இது வேறயா!!! . கோயில் கட்டினவன் தானே . மடத்தமிழன்

  ஸாரிப்பா ஸ்லீப் ஆயிடுசி மறத் தமிழன்

  ReplyDelete
 73. //@பனங்காட்டான் said...
  தலைவரே குஷ்பூ CD (DVD) கிடைக்குதாமே?
  //


  சின்ன புள்ள தனமாயில்ல இருக்கு .
  இன்னுமா??? கலி முத்திப்போச்சுங்கோ!!!

  ReplyDelete
 74. ////ஜெய்லானி Said...
  //@பனங்காட்டான் Said...
  தலைவரே குஷ்பூ CD (DVD) கிடைக்குதாமே?
  //


  சின்ன புள்ள தனமாயில்ல இருக்கு .
  இன்னுமா??? கலி முத்திப்போச்சுங்கோ!!!////


  ஜெய்லானி சார், அப்போ பழைய CD லாம் பாத்துட்டீங்களா?

  ReplyDelete
 75. தேவையான கனவு. விரைவில் நிஜமாகும் என்ற நம்பிக்கைகளுடன்.... நானும்.
  இது சம்பந்தப்பட்ட எனது பதிவு - <a href="http://thisaikaati.blogspot.com/2009/11/thandanaigal-1.html>தண்டனைகள் தப்பினால் தப்புக்கள் குறையுமா? </a>

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!