Pages

Thursday, May 13, 2010

சிங்கையிலுமா? ஊகூம்..

ஆங்.. சொல்ல மறந்துட்டனே..
போன வாரம் பதிவ போட்டு..சண்டையாகி..சமாதானமாகி(?)..
எல்லாம ஆயி...ரெகுலர் வாழ்க்கைக்கு போனபோது, திடுக்கிடும் சம்பவம் நடந்துடுச்சு மக்காஸ்..

சம்பவம் நடந்த அன்று,  எனது பைக்..கம்பெனி கேட்டை கடக்கும்போது சரியாக மாலை 6 மணி..பட்டா...உள்குத்து உடம்புக்கு ஆகாது.. பார்த்துக்க.( இது எனக்கு நானே சொல்லிக்கிட்டது....)

சரியான மழை சார்...அப்படியே என்னொட பைக், இடதுபக்கம் திரும்புது.. போலிஸ்..சைரன் போட்டுகிட்டு, அடாதாமழையில..விடாம
ரோட்டுக்கு குறுக்கே நிற்கிறார்கள்..லைட்டா டவுட்...ஏன்னா.. போட்டுகுடுத்தே பேர் வாங்கும் , சொம்புதூக்கி எவனாவது,  எப்போம்போல, தவறான தகவல் கொடுத்திட்டானுகளா?.. இல்ல..ஆக்ஸிடெண்ட் ஏதாவதா?..

அருகில் நெருங்கினால், நடுரோட்ல மூணு மரம்..ஹாய்யா....ரோட்டுக்கு குறுக்கா படுத்துக்கிட்டு இருக்கு?..இந்த மழைக்கெல்லாம் தற்கொலை பண்ணிக்கிட்டா?.. யாருக்கு சார்.. பிரயோசனம்?.

ரெண்டு நிமிசம் ஆச்சி.. போலீஸ்கார அண்ணாச்சி என்னொட பைக்கை பார்த்து கைய காட்டுறாரு..  பைக்கும், மெதுவா, அவங்களை கடந்து போகுது சார்..( தற்பெருமையா?..சே..சே..நான் அவ்வளவு ஸ்மார்ட் கிடையாது..)

மழை தொடர்ந்து பெய்ஞ்சுக்கிட்டு இருக்கு.. ஒருவழியா வீட்டுக்கு போனேன்...
வீடும் இருட்டாயிருக்கு..
தீப்பெட்டி இல்ல.. 
மெழுகுவர்த்தி இல்ல..
பிரண்ஸ் இல்ல..

அப்படியே பேய் அடிச்சமாறி உக்காத்திட்டு இருக்கேன்..
இருட்டுல, வேர்க்க விறுவிறுக்க , கொஞ்ச நேரம் இருந்து பாருங்க.. நான் என்ன சொல்ல வரேனு புரியும்..
( எங்கேயோ புகையிற வாசனை வர்றமாறி இருக்கு..என்னானு பாரு  மங்குனி....)



5 நிமிசம் ஆச்சு..வந்தது பாருங்க கரண்ட்.. அப்பாடி..
கரண்ட் இல்லாட்டி வாழ்க்கையில ரொம்ப கஷ்டம் சார்..

எதுக்குடா இப்படி மொக்கையா எழுதுரேனு யோசனை பண்றீங்களா?..
கக்கூஸ் போயிட்டு கழுவுரதப் பற்றி ஒரு பதிவ போடலாம்..இப்படி
மொக்கையா , சாரிப்பா..ஸ்மார்ட்டா எழுதினா..புடிக்காது..அப்படித்தானே...


பாருங்க.. எதையோ சொல்ல வந்து  எதையோ பேசிக்கிட்டு இருக்கேன்..
சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில இருக்கும் பதிவர்களே..எனக்காக ஒரு உதவி செய்யுங்களேன்..  அப்படிக்கா.. பக்கத்தில , ஆற்காட்டாரும், மருத்துவரும் ஊருக்குளள இருக்காங்களா?..  இல்ல டூரிஸ்ட் விசா எடுத்துக்கிட்டு, ஏதாவது வெளிநாடு போயிருக்காங்களானு செக் பண்ணிக்கிட்டு,
எனக்கு உடனடியா தந்தி அடிங்க..
சார்.. முழுசா கேட்டுக்கிட்டு போங்க.....
டெல்லிக்கு இல்ல  சார்.... சிங்கைக்கு..

( பாரேன்.. உள்நாட்டுக்கு தந்தி, வெளிநாட்டுக்கு #$%தினு, யாராவது,   ஸ்மார்டா  சொல்லுவாங்க..)
.
.

.
( இது மங்குனி மட்டும்...
இனி புது பதிவப்போடுனு சொல்லுவே..?..
மேலும்..மண்டையில கரையான் அரிச்சது போக, இன்னும் ஒரு  கவிதை ஒட்டிக்கிட்டு இருக்கு  பாஸ்..
போடவா?..  சொல்லு.. போடவா?...)
.
.
.
கடைசியா ஒரு சீரியஸான மேட்டரை சொல்லிக்கிட்டு கிளம்பறேன் சார்..
பாஸ்ட் புட்..பாஸ்ட் புட்..னு சொல்றாங்களே..அதை அதிகமா தின்னா.. அப்புறம்,  காங்கிரஸ்காரங்க சொல்றது மாறி போர்ட், மாற்றி வைக்கவேண்டி வரும்..
பார்த்துக்குங்க...
.
.
.
.
.
.
.
.

73 comments:

  1. T.V.ராதாகிருஷ்ணன் said...

    :)))
    //

    முதல் வெட்டு வெட்டிய உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..ஹா.ஹா

    ReplyDelete
  2. இருட்டுல கண்ணக்கட்டி உட்டாப்ல இருக்குங்க.

    ReplyDelete
  3. ஒண்ணும் பிர்யலையே?

    ReplyDelete
  4. பட்டா!

    அவசரமா படிச்சதாலயான்னு தெரியல! சரிவர புரியல! சாவகாசமா வீட்டுக்குப் போய் படிக்கிறேன்...

    அப்புறம் ஏற்கனவே பேசின மாதிரி இந்த வாரம் சந்திப்போம் (எப்போன்னு அதிர்ச்சியாக வேணாம்! எத்தனை தடவத்தான் கேக்குறது? prabhagar@gmail க்கு மெயில் பண்ணுங்க! We will meet this week!

    பிரபாகர்...

    ReplyDelete
  5. கண்ண இருட்டுல கட்டிவிட்ட மாதிரி இருக்கு!

    ReplyDelete
  6. //அப்புறம் ஏற்கனவே பேசின மாதிரி இந்த வாரம் சந்திப்போம் (எப்போன்னு அதிர்ச்சியாக வேணாம்! //

    அவருதான் எத்தன தடவ அப்பாயிண்ட்மெண்ட் கேட்கிறது?

    ReplyDelete
  7. 8 வது வெட்டு நான் தான் , இரு படிசித்ட் வர்றேன்

    ReplyDelete
  8. @மசக்கவுண்டன் said...
    இருட்டுல கண்ணக்கட்டி உட்டாப்ல இருக்குங்க.
    //

    எழுதுன எனக்கு எப்படியிருக்கும் சார்?

    ReplyDelete
  9. என்ன ஒரு அருமையான பதிவு, உன் வாழ்கையிலே இதுதான் பெஸ்ட்டு பதிவுன்னு நினைக்கிறன் வாழ்த்துக்கள் , அதுவும் உன் எழுத்து ஸ்டைல் இருக்கே ? அதுவும் மலை பெய்யும் போது நீ பைக் ஓட்டுன ஸ்டைல் இருக்கே ??????..........................................

    ReplyDelete
  10. @ராஜ நடராஜன் said...
    // ஒண்ணும் பிர்யலையே?//

    எனக்கும் அதே பிரச்சனைதான் சார்.. சும்மா பிரபல பதிவர் மாறி புரியாம எழுதிப்பார்த்தேன்..ஹி..ஹி

    // அவருதான் எத்தன தடவ அப்பாயிண்ட்மெண்ட் கேட்கிறது?//

    கொஞ்சம் பயம்தான் சார்...

    ReplyDelete
  11. என்னே கருத்து செறிந்த ஓர் பதிவு!

    (ஒரு எழவும் புரியல...ஒரு வேலை நம்ம ஓர் அரசியல் வியாதிகளுக்கு புரியுமோ?)

    ReplyDelete
  12. @பிரபாகர் said...
    அவசரமா படிச்சதாலயான்னு தெரியல! சரிவர புரியல! சாவகாசமா வீட்டுக்குப் போய் படிக்கிறேன்...
    அப்புறம் ஏற்கனவே பேசின மாதிரி இந்த வாரம் சந்திப்போம் (எப்போன்னு அதிர்ச்சியாக வேணாம்! எத்தனை தடவத்தான் கேக்குறது? prabhagar@gmail க்கு மெயில் பண்ணுங்க! We will meet this week!
    //


    ரொம்ப நம்பிக்கை சார் உங்களுக்கு..
    மெதுவா படிச்சாலும் புரியாது..சேலஞ்ச் பண்றேன் சார்..
    ( அப்பாடா.. மெயில் ஐடி கொடுத்ததை மறந்துட்டாரு..)

    ReplyDelete
  13. Blogger பருப்பு The Great said...

    என்னே கருத்து செறிந்த ஓர் பதிவு!

    (ஒரு எழவும் புரியல...ஒரு வேலை நம்ம ஓர் அரசியல் வியாதிகளுக்கு புரியுமோ?)
    //

    எல்லாப் பெருமையும் மங்குனிக்கே சேரும்..( பதிவ போடு...பதிவ போடு...னு டார்ச்சர் சார்..)

    ReplyDelete
  14. இந்த பதிவுக்கும்

    http://thatstamil.oneindia.in/news/2010/05/13/mgr-made-me-cm-after-anna-death.html

    இதுக்கும் ஏதும் சம்பந்தம் இல்லையே?

    என்னா ரெண்டுமே எனக்கு புரியல....

    ReplyDelete
  15. Blogger மங்குனி அமைச்சர் said...

    என்ன ஒரு அருமையான பதிவு, உன் வாழ்கையிலே இதுதான் பெஸ்ட்டு பதிவுன்னு நினைக்கிறன் வாழ்த்துக்கள் , அதுவும் உன் எழுத்து ஸ்டைல் இருக்கே ? அதுவும் மலை பெய்யும் போது நீ பைக் ஓட்டுன ஸ்டைல் இருக்கே ??????...
    //

    இனி கேப்ப மங்குனி..?
    அப்பாடா.. மூணு மாசம் ஜாலி...

    ReplyDelete
  16. உங்க அன்பு நண்பர் சா.நி....இப்போ இசை சித்தரா மாறி..உலக இசையையும், உள்ளூர் இசையையும் பிரிச்சு மேஞ்சி ஒரு பதிவு போட்ருக்கார்... பாத்தீகளா?

    ReplyDelete
  17. பட்டாபட்டி சார், நெசம்மாவே ஒன்னும் புரியலை. ஆனா யாரையோ போட்டுத்தள்ளியிருக்கீங்க என்பது மட்டும் தெரியுது.

    ReplyDelete
  18. பருப்பு The Great said...

    இந்த பதிவுக்கும்

    http://thatstamil.oneindia.in/news/2010/05/13/mgr-made-me-cm-after-anna-death.html

    இதுக்கும் ஏதும் சம்பந்தம் இல்லையே?

    என்னா ரெண்டுமே எனக்கு புரியல....
    //

    என்ன சொல்லுங்க..பெருசு..பெருசுதான்..
    பாத்தீங்களா. என்க்கே பல்பு கொடுத்திடுச்சு..
    ( சத்தியமா எனக்கும் புடியலே..ஒரு வேளை ஸ்மார்ட்டாயிருந்தா புரியுமோ .. என்னமோ?

    ReplyDelete
  19. @Coumarane said...
    பட்டாபட்டி சார், நெசம்மாவே ஒன்னும் புரியலை. ஆனா யாரையோ போட்டுத்தள்ளியிருக்கீங்க என்பது மட்டும் தெரியுது.
    //

    அப்பாடா. நீங்களாவது கண்டுபிடிச்சீங்களே.. சபாஸ்..ஸ்மார்ட்
    ( உண்மைதான் சார்...)

    ReplyDelete
  20. பருப்பு The Great said...

    உங்க அன்பு நண்பர் சா.நி....இப்போ இசை சித்தரா மாறி..உலக இசையையும், உள்ளூர் இசையையும் பிரிச்சு மேஞ்சி ஒரு பதிவு போட்ருக்கார்... பாத்தீகளா?
    //

    நீங்க வேற.. ரெண்டு வாரம் கழிச்சு..இசையினா,எனக்கு, பீ மாறினு பேசும் அந்தாளு...

    ReplyDelete
  21. பட்டா , மொத்தம் மூணு மரமா சாயிந்து இருந்தது , நல்லா யோசிச்சு சொல்லு

    ReplyDelete
  22. மங்குனி அமைச்சர் said...

    பட்டா , மொத்தம் மூணு மரமா சாயிந்து இருந்தது , நல்லா யோசிச்சு சொல்லு
    /

    என்னயா.. கதைய எங்கேயோ திருப்பற?..

    ஆமா.. மூணு மரம்தான்...

    ReplyDelete
  23. Sangkavi said...

    :)))
    //

    வாங்க சார்.. நல்ல வேளை .. நீங்களாவது என்னை திட்டாம விட்டீங்களே..நன்றி சார்..

    ReplyDelete
  24. ////பட்டாபட்டி.. said...

    மங்குனி அமைச்சர் said...

    பட்டா , மொத்தம் மூணு மரமா சாயிந்து இருந்தது , நல்லா யோசிச்சு சொல்லு
    /

    என்னயா.. கதைய எங்கேயோ திருப்பற?..

    ஆமா.. மூணு மரம்தான்...////


    பட்டா நேரம் ஆனாலும் , பரவா இல்ல , இன்னு ரெண்டு கட்டிங் போட்டு நல்லா ரோசன பண்ணி சொல்லு , பின்னாடி தெய்வ குத்தம் ஆயிடக்கூடாது

    ReplyDelete
  25. பட்டா நேரம் ஆனாலும் , பரவா இல்ல , இன்னு ரெண்டு கட்டிங் போட்டு நல்லா ரோசன பண்ணி சொல்லு , பின்னாடி தெய்வ குத்தம் ஆயிடக்கூடாது
    //
    நாளக்கே புது பதிவ போட்டு, நேர்த்திக்கடன் பண்ணிக்கிறேன்.. ஓ.கேயா?...

    ReplyDelete
  26. பட்டாபட்டி.. said...

    பட்டா நேரம் ஆனாலும் , பரவா இல்ல , இன்னு ரெண்டு கட்டிங் போட்டு நல்லா ரோசன பண்ணி சொல்லு , பின்னாடி தெய்வ குத்தம் ஆயிடக்கூடாது
    //
    நாளக்கே புது பதிவ போட்டு, நேர்த்திக்கடன் பண்ணிக்கிறேன்.. ஓ.கேயா?...
    ///////////////////



    புது பதிவு இம்மம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.................... இரு யோசிச்சு ஒரு ஒளிவருடதில சொல்றேன்

    ReplyDelete
  27. ஆனாலும் தில்லு வேணும் தைரியம் வேணும் தெனாவெட்டு வேணும் இப்படி எல்லாம் எழுதுறதுக்கு. ஆமா நான் இப்ப என்ன எழுதினேன் அய்யே எனக்கே பிரியலையே நைனா!!!

    ReplyDelete
  28. தாத்தாதான் ஊருக்கு போயிட்டாரே இன்னும் என்ன பயம் பட்டா பயப்படாம தெளிவா சொல்லலாமே!!!!

    ReplyDelete
  29. இதுக்கு மேலயும் கரண்ட் கட் பண்ணிணா....பட்டா பட்டு சும்ம வுட மாட்டாப்ள....ஹுக்கூம்........ஆமா!

    ReplyDelete
  30. நீங்க எழுதுன இந்த பதிவுக்கு உங்க ப்ளாக் ஓரத்துல இருக்குற டெம்புலேட் சரியாக பொருந்தும் (ஒன்னும் புரியல சார் ).
    ஆமா உங்ககிட்ட கேக்கணும்னு நெனச்சேன் பட்டாபட்டினு ஒரு படம் ரிலீஸ் ஆக போகுது நீங்க ஏன் அந்த படத்துக்கு கதை ஆசிரியரா போககுடாது.

    ReplyDelete
  31. வலைச்சரத்துல அந்தக் கமெண்ட்டப் பாத்ததுமே பதிலடி குடுக்கணும்னு நினைச்சேன்.. ஆனா நீங்கதான் சரியாக் குடுப்பீங்கன்னு விட்டுட்டேன்.. :))

    ReplyDelete
  32. @எம் அப்துல் காதர் said...
    ஆனாலும் தில்லு வேணும் தைரியம் வேணும் தெனாவெட்டு வேணும் இப்படி எல்லாம் எழுதுறதுக்கு. ஆமா நான் இப்ப என்ன எழுதினேன் அய்யே எனக்கே பிரியலையே நைனா!!!
    //

    ஹா...ஹா..சீக்கிரம் புரியும் சாரே...

    ReplyDelete
  33. @ஜெய்லானி said...
    தாத்தாதான் ஊருக்கு போயிட்டாரே இன்னும் என்ன பயம் பட்டா பயப்படாம தெளிவா சொல்லலாமே!!!!
    //

    யாரை சொல்றீக?.. நம்ம பித்தன் சாரையா?..
    ஆமா சார்.. என்னது 10 நாளுனு சொல்லிட்டு, 1 மாசமா காணலே..

    ReplyDelete
  34. @சி. கருணாகரசு said...
    @dheva said...
    இதுக்கு மேலயும் கரண்ட் கட் பண்ணிணா....பட்டா பட்டு சும்ம வுட மாட்டாப்ள....ஹுக்கூம்........ஆமா!
    //

    சும்மா மொக்கை பதிவு சார்..லூஸ்ல விடுங்க..

    ReplyDelete
  35. @INNOVATOR said...
    நீங்க எழுதுன இந்த பதிவுக்கு உங்க ப்ளாக் ஓரத்துல இருக்குற டெம்புலேட் சரியாக பொருந்தும் (ஒன்னும் புரியல சார் ).
    ஆமா உங்ககிட்ட கேக்கணும்னு நெனச்சேன் பட்டாபட்டினு ஒரு படம் ரிலீஸ் ஆக போகுது நீங்க ஏன் அந்த படத்துக்கு கதை ஆசிரியரா போககுடாது.
    //

    நமக்கு எதுக்கு சார் அந்த கண்றாவி..
    ஆனா.. படத்தை நூறு நாள் ஓட்டப்போறோம்..( சுறாவிட வசூலில் சாதனை படைக்கும்..ஹி..ஹி
    பாருங்க..விஜய் மக்கா..எப்படி சண்டைக்கு வரப்போறங்கனு..)

    ReplyDelete
  36. @முகிலன் said...
    வலைச்சரத்துல அந்தக் கமெண்ட்டப் பாத்ததுமே பதிலடி குடுக்கணும்னு நினைச்சேன்.. ஆனா நீங்கதான் சரியாக் குடுப்பீங்கன்னு விட்டுட்டேன்.. :))
    //

    அதே சார்..
    எதுக்கு அங்க கமென்ஸ் போடனுமுனுதான், மொக்கையா இங்க எழுதி ஆடிக்கிட்டு இருக்கோம்..
    சரியா சொன்னா, யார் யார், டோண்டுக்கு எதிராக சொன்னாலும், ஸ்மார்ட்டா ஆஜர் ஆவார்கள்..
    ( இல்ல டாக்டர், வால் இவங்க, எந்த பதிவுல கமென்ஸ் போட்டாலும், அந்த பதிவு மொக்கைனு சொல்ல
    ஒரு கூட்டமே சுற்றிக்கொடுள்ளது)

    இதுல வேற, நான் புனை பெயரில் எழுதுகிறேனாம்..அப்படீனு, புனை பெயர்ல வந்து சொல்லுவாங்களாம்..
    நான் மண்டைய ஆட்டிக்கிட்டு போகனுமாம்.. என்ன கொடுமை சார்..

    சேட்டை, அவருக்கு பிடிச்ச பதிவர்களை பற்றி சொல்கிறார்..
    மற்றவர்களுக்கு, அந்த பதிவரை பிடிக்கலேனா,
    நேரா அவர்கள் ப்ளாக்ல போயி, மூஞ்சிக்கு நேரா சொல்லிட்டு போலாமே....
    அதை விட்டுவிட்டு, கருத்து கந்தசாமியாயிட்டா? அதற்க்காகத்தான் சார்..

    ReplyDelete
  37. என் ப்ளாக்ல போஸ்ட் போட்டு இருக்கேன் வந்து பாருங்க. உங்க அளவுக்கு எழுத முடிய நாலும் எதோ நானும் எழுதிருகேன். உங்க கமெண்ட் போடுங்க இன்னும் நல்லா எழுத ட்ரை பண்றேன்

    ReplyDelete
  38. //என்ன ஒரு அருமையான பதிவு, உன் வாழ்கையிலே இதுதான் பெஸ்ட்டு பதிவுன்னு நினைக்கிறன் வாழ்த்துக்கள் , அதுவும் உன் எழுத்து ஸ்டைல் இருக்கே ? அதுவும் மலை பெய்யும் போது நீ பைக் ஓட்டுன ஸ்டைல் இருக்கே ??????..........................................//

    மங்குனி அது மலை இல்லப்பா மழை. தமிழ் கத்துக்கணும்ன என்கிட்டே வாங்கப்பு...அமைச்சரவையில் தமிழ் புலவர்கள் இல்லியா?

    ReplyDelete
  39. என்னது சிங்கபூர்ல கரண்ட் இல்லையா..

    கேக்குறவன் கேனைனா பட்டாப்பட்டி நல்லா ப்ளாக் எழுதுரார்னு சொல்லுவீங்க போல இருக்கே..

    ReplyDelete
  40. @INNOVATOR said...
    என் ப்ளாக்ல போஸ்ட் போட்டு இருக்கேன் வந்து பாருங்க. உங்க அளவுக்கு எழுத முடிய நாலும் எதோ நானும் எழுதிருகேன். உங்க கமெண்ட் போடுங்க இன்னும் நல்லா எழுத ட்ரை பண்றேன்
    //

    எறும்புகளை பற்றி புது தகவல்.. நல்லாயிருக்கு சார்..
    தொடர்ந்து எழுதுங்க..

    ReplyDelete
  41. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    என்னது சிங்கபூர்ல கரண்ட் இல்லையா..
    கேக்குறவன் கேனைனா பட்டாப்பட்டி நல்லா ப்ளாக் எழுதுரார்னு சொல்லுவீங்க போல இருக்கே..
    //

    அடப்பாவி.. நிசமாவே நீ சிங்கையில தான் இருக்கீறா?..
    அது என்ன, ”என்னாது?”..ஆச்சரியகுறி..


    மழையில..power supply டிஸ்டர்ப் ஆகி..எங்க ஏரியாவுல,
    சில நிமிடங்க, பவர் இல்லாம போச்சு..நல்லவரே..

    ReplyDelete
  42. //கேக்குறவன் கேனைனா பட்டாப்பட்டி நல்லா ப்ளாக் எழுதுரார்னு சொல்லுவீங்க போல இருக்கே..//

    ஹா ஹா....பட்டு,வர வர உன்ன போற வர்றவன் எல்லாம் கும்ம ஆரம்பிச்சுட்டான்.போய் 'கிழவிங்க அணி' கிட்ட சொல்லி ஒத்தடம் வச்சுக்கோ.... :)

    திரு.ரமேஷ் அவர்களே, சூப்பர்ங்க....

    ReplyDelete
  43. யோவ் பட்டு,எங்கேயா இந்த வெளியூரு?ஆளையே காணோம்?

    ReplyDelete
  44. பின் நவீனத்துவம் சரியா புரியலையே :)

    ReplyDelete
  45. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...



    மங்குனி அது மலை இல்லப்பா மழை. தமிழ் கத்துக்கணும்ன என்கிட்டே வாங்கப்பு...அமைச்சரவையில் தமிழ் புலவர்கள் இல்லியா?//

    ரமேஷ் சார் , சத்தியமா , நீங்க ரொம்ப ரொம்ப நல்லவர்

    ReplyDelete
  46. மே ஐ கம் இன்?வலைச்சரம் டியூட்டியிலே நிறைய பதிவு உடனுக்குடன் படிக்க முடியாமப் போயிடுச்சு! சாரி! இதோ ஆஜர் அண்ணே! :-)

    ReplyDelete
  47. யோவ் பட்டாப்பட்டி நீ இந்த பதிவ எழுதுன நேரத்துக்கு உங்க வீடு பூனைக்கு ஸ்டேப் கட்டிங் பண்ணி விட்ருந்துருகலாம்..தக்காளி ஸ்டைலாவாச்சும் அலைஞ்சிருக்கும்..!

    உன் மொக்கை பதிவுகல்லையே இதான்யா பெஸ்டு..!

    -இப்படிக்கு கோழி முட்டைக்கு மயிர புடுங்கி கொண்டே மல்லுகட்டி கமெண்ட் போடுவோர் சங்கம்..

    ReplyDelete
  48. Veliyoorkaran said...

    யோவ் பட்டாப்பட்டி நீ இந்த பதிவ எழுதுன நேரத்துக்கு உங்க வீடு பூனைக்கு ஸ்டேப் கட்டிங் பண்ணி விட்ருந்துருகலாம்..தக்காளி ஸ்டைலாவாச்சும் அலைஞ்சிருக்கும்..!

    உன் மொக்கை பதிவுகல்லையே இதான்யா பெஸ்டு..!

    -இப்படிக்கு கோழி முட்டைக்கு மயிர புடுங்கி கொண்டே மல்லுகட்டி கமெண்ட் போடுவோர் சங்கம்..
    //

    வெட்கம்..
    பட்டாபட்டி தலைமறைவு.....

    ReplyDelete
  49. சேட்டைக்காரன் said...

    மே ஐ கம் இன்?வலைச்சரம் டியூட்டியிலே நிறைய பதிவு உடனுக்குடன் படிக்க முடியாமப் போயிடுச்சு! சாரி! இதோ ஆஜர் அண்ணே! :-)
    //

    வாங்கப்பு...

    ReplyDelete
  50. \\5 நிமிசம் ஆச்சு..வந்தது பாருங்க கரண்ட்.. அப்பாடி..
    கரண்ட் இல்லாட்டி வாழ்க்கையில ரொம்ப கஷ்டம் சார்..//
    ஐந்து நிமிடத்திற்கே உங்களுக்கு இப்படி குழம்பி விட்டது என்றால் எங்கள் ஆற்காட்டாரின் நிலைமையை யோசித்து பாருங்கள்

    ReplyDelete
  51. ஆஹா ..அங்கயுமா ? வயிறு குளிர்ந்து ராசா.
    வெறும் அஞ்சு நிமிஷத்துக்கே இந்த "மொக்கை" என்றால்
    முன்று, நான்கு மணி நேரம் என்றால்!?

    ReplyDelete
  52. ..//me 50
    ஐ , நான் தான் 50//..

    எல்லா இடத்துலயுமா ?

    ReplyDelete
  53. குஷ்பு தான் அரசியலில் ஆர்வம் கொண்டிருப்பதாகவும், காங்கிரஸை மிகவும் பிடிக்கும் எனவும், ராஜீவ் காந்தி படத்தை எனது பெட்ரூமில் வைத்திருப்பேன் என்றும் பேட்டி அளித்திருந்தார். /////////////

    முதல்வர் கருணாநிதி மீது தனக்கு எப்போதும் பெரிய மரியாதை உண்டு என்றும், அதனால் திமுகவில் இணைவதாகவும், இனி முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் குஷ்பு கூறியுள்ளார்.///////////////


    எதாவது புரியுது,எலோருமே உன் ஸ்டைலை காப்பி அடிகிறார்கள் ஜாக்கிரதை

    ReplyDelete
  54. பிரபாகர் said...

    பட்டா!

    அவசரமா படிச்சதாலயான்னு தெரியல! சரிவர புரியல! சாவகாசமா வீட்டுக்குப் போய் படிக்கிறேன்...///////



    ஆமா சார் பொறுமையாய் படித்து விட்டு ஸ்மார்டாய் புரியவில்லை என்று சொல்லுங்கள்

    ReplyDelete
  55. முத்து குஷ்புவை நெனச்சா பாவம் !! காங்கிரஸா , தி மு காவா ?

    ReplyDelete
  56. //மழையில..power supply டிஸ்டர்ப் ஆகி..எங்க ஏரியாவுல,
    சில நிமிடங்க, பவர் இல்லாம போச்சு..நல்லவரே..//

    சில நிமிடத்துக்கு இந்த மொக்கைன்னா அரை நாள் ஆச்சுன்னா நாங்க என்னாகிறது.

    மங்கு , பட்டாவை உசுப்பேத்தியதுக்கு தண்டனை உனக்கு கண்டிப்பா இருக்கு. விட மாட்டோம்ல

    ReplyDelete
  57. //கக்கு - மாணிக்கம் said...

    ஆஹா ..அங்கயுமா ? வயிறு குளிர்ந்து ராசா.
    வெறும் அஞ்சு நிமிஷத்துக்கே இந்த "மொக்கை" என்றால்
    முன்று, நான்கு மணி நேரம் என்றால்!?//

    உங்க சாபம் தான் போல இருக்கு,

    ReplyDelete
  58. கொஞ்ச நாள் ஏரியாவுக்கு வரலையினா ஒன்னும் புரிய மாட்டேங்குதே! என்னய்யா பிரச்சனை??

    ReplyDelete
  59. ரெம்ப நல்லா இருந்தது.... ஆனால் எனக்குத்தான் ஒண்ணுமே புரியலை....முடிந்தால் இதையே கொஞ்சம் விரிவாக்கி இன்னொரு பதிவு போடுங்கள்...

    பி.குறிப்பு.. அதையாவது எனக்கு புரியுரமாறி போடவும்

    ReplyDelete
  60. //ரோஸ்விக் said...

    கொஞ்ச நாள் ஏரியாவுக்கு வரலையினா ஒன்னும் புரிய மாட்டேங்குதே! என்னய்யா பிரச்சனை??///


    வா ரோஸு, வா எங்கப்பா ஆளையே காணும் ,

    அது ஒன்னுமில்ல இவன் ஒரு சைனா பிகர கரக்ட் பண்ண ட்ரை பண்ணான் , அது "அண்ணா" (தமிழ்ல தான் ) சொல்லிருச்சாம் , அதுதான் பயபுள்ள கழண்டு போய் திரியுறான் , கொஞ்சம் மந்திரிச்சுவிடு

    ReplyDelete
  61. ஏதாவது புரிஞ்சா எனக்கு மெல்லுங்க....

    சொல்லுங்க என்றால் புரியும்..

    அதென்ன மெல்லுங்க???
    >>>>> மெயில் பன்னுங்கன்னு அர்த்தம்...

    எப்பூடி..??? நாங்களும் பொங்க வெப்போம்'ல...

    ReplyDelete
  62. ஒண்ணும் பிரியல.சரி வுடுங்க.

    ReplyDelete
  63. விலாசம் மாறி வந்துட்டேனோ...? ஒண்ணுமே புரியல...

    ReplyDelete
  64. வணக்கம்
    நண்பர்களே

    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

    உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
    நன்றி
    தலைவன் குழுமம்

    www.thalaivan.com


    You can add the vote button on you blog:

    http://thalaivan.com/button.html

    THANKS

    Regards,
    Thalaivan Team FRANCE
    thalaivaninfo@gmail.com

    ReplyDelete
  65. www.thalaivan.com said...

    வணக்கம்
    நண்பர்களே

    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்./////////////////



    பட்டு NO COMMENTS

    ReplyDelete
  66. இந்த மாதிரி மறுபடி எழுதினா, அப்புறம் வேலாயுதம் DVD ய பார்சல்ல அனுப்பி வெச்சிடுவோம் ஆமா!

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!