Pages

Tuesday, May 18, 2010

கறுப்பு தினம்..

இன்று தமிழர்களுக்கு கறுப்பு தினம்..
போன வருடம் இதே நாள், கொன்று குவிக்கப்பட்ட என் இன மக்களுக்காக,
கையிலாகாதவனாய், பரிதவித்த தினம்..

குடும்ப உறுப்பினர்கள்சூழ, ஏற்றப்பட்ட உண்ணாவிரத நாடகங்கள்..

வாய் கிழிய பேசி, ஓட்டு வங்கிக்கு குறி வைத்த அரசியல் சாணக்கியர்கள்..


மீசைக்கும் ஆசை..கூழுக்கும் ஆசை என்ற இரட்டைவேட கபடதாரிகளின் மிதமிஞ்சிய நடிப்பு..


அன்னை சொன்னால் ஆண்டவன் சொல்வதுபோல என நான்கு, காலைதூக்கிக்கொண்ட நயவஞ்சகர்களின் கயமை.


ஓட்டுக்காக, மலம் தினபதற்க்கும் அஞ்சாத மிருகங்கள் .



போதும் மடையர்களே..

தமிழனை காப்பாற்றிக்கொள்ள தமிழன் பழகிவிட்டான்..

அழித்துவிட்டோம் என்ற இறுமாப்பு இருந்தால்..இத்துடன் இறுக்கிக்கொள்ளுங்கள்..

வினை விதைப்பவன் வினை அறுப்பான்..

சகோதரர்கள் அழிந்துவிடவில்லை.. ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் விதைக்கபட்டு இருக்கிறான்..


பொறுங்கள்..காலம், உங்களுக்கு பதில் சொல்லும்...  ஆம்...
.
.
.
இவன்
தமிழன்...



.
.
.

66 comments:

  1. உயிரெரு முறை தான் போகும் அது உரிமைக்காக போகட்டும்
    உடல் தான் எரியும் உருவமும் எரியும் உரிமைக்காக எரியம்டும் இனிவரும் காலங்கள் எங்களின் காலங்கள்..
    எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது
    இனி இங்கே பூக்கும் சின்ன பூக்கள் வாடாது..
    என்று கூறி மண்ணுள் உரமாகிய எம் சகோதரர்களே...
    உங்கள் கனவு பொய்யாகாது...
    வாசலில் காற்றென வீசுங்கள்..
    வாய்திறந்தோர் வார்த்தை பேசுங்கள்...

    ReplyDelete
  2. என்னவோ போங்க. சென்ற வருடம் இந்த நாளில் தலைவனின் இறப்புச் செய்தி கேட்டு, என்னால் அலுவலகத்தில் வேலை செய்யமுடியவில்லை. அடுத்த நாள் வேலைக்கே செல்லவில்லை.

    பட்டாபட்டி சார், காமெடியா எழுதினாலும், சீரியஸா எழுதினாலும் அதில் நீங்க 100% வெற்றி பெறுகிறீர்கள்.

    ReplyDelete
  3. அப்படி போட்டுத்தள்ளுங்க தல

    ReplyDelete
  4. ஓராண்டு நினைவஞ்சலிகள்...

    http://www.photofunia.com/output/3/1/N/R/t/NRtezPw1wK4-55HDnPga4w.jpg

    ReplyDelete
  5. பொறுங்கள்..காலம், உங்களுக்கு பதில் சொல்லும்... ஆம்...
    .
    .
    .
    இவன்
    தமிழன்...




    இன்னும் எவ்வளவு காலம் பட்டு

    ReplyDelete
  6. ஹ்ம்ம் "வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்"

    தமிழனாய் பிறந்ததற்கு வெட்கப் படுகிறேன்...ஏன்டா தமிழ் நாட்டுல பொறந்தொம்ன்னு இருக்கு....இதே அமெரிக்கா காரன் ஒருத்தன இங்க கொல்லுங்க பாப்போம்...அஞ்சு நிமிசத்தில துவம்சம் பண்ணிட்டு போய்டுவான்...

    நாமளும் தான் இருக்கோமே..வெட்கங்கெட்ட பொறப்பு

    ReplyDelete
  7. சகோதரர்கள் அழிந்துவிடவில்லை.. ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் விதைக்கபட்டு இருக்கிறான்..

    ReplyDelete
  8. நமது வார்த்தைகளில் வீசும் வாளில் தான் இத்தனை உறவுகள் உயிரிழந்ததோ என்ற ஒரு மிகப்பெரிய அச்சம் இன்னும் மனத்திற்குள் !

    ReplyDelete
  9. பட்டா பட்டி ... அழிக்கப்படவில்லை ,விதைக்கபபட்டுள்ளது..............

    ReplyDelete
  10. அனைவருக்கும் 2ம் ஆண்டு நினைவு அஞ்சலிகள்.

    ReplyDelete
  11. \\சகோதரர்கள் அழிந்துவிடவில்லை.. ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் விதைக்கபட்டு இருக்கிறான்..
    பொறுங்கள்..காலம், உங்களுக்கு பதில் சொல்லும்... ஆம்...\\
    நிதர்சன வரிகள். குள்ளநரிகளின் நரித்தனம் நிச்சயம் ஒருநாள் தோற்கும் என்ற என்னத்தில் ஈழத்தமிழரின் சோகத்தில் நாமும் பங்கு கொள்வோம்

    ReplyDelete
  12. @Cool Boy கிருத்திகன். said...
    இனி இங்கே பூக்கும் சின்ன பூக்கள் வாடாது..
    என்று கூறி மண்ணுள் உரமாகிய எம் சகோதரர்களே...
    //

    எனது சகோதர , சகோதரிகளுக்கு , எங்களது வீர வணக்கங்கள்..

    கனவு நிறைவேறும் நாள் வெகு அருகில்

    ReplyDelete
  13. @செந்தாரப்பட்டி பெத்துசாமி said...
    என்னவோ போங்க. சென்ற வருடம் இந்த நாளில் தலைவனின் இறப்புச் செய்தி கேட்டு, என்னால் அலுவலகத்தில் வேலை செய்யமுடியவில்லை. அடுத்த நாள் வேலைக்கே செல்லவில்லை.
    //

    விசமிகள், பதில் சொல்லவேண்டிய காலம் வெகு அருகில்

    ReplyDelete
  14. @VELU.G said...
    அப்படி போட்டுத்தள்ளுங்க தல
    //

    ஆமா சார்..அரசியல்வாதிகளை, மனிதர்களாக மதிப்பதில்லை நான்

    ReplyDelete
  15. @மோனி said...
    ஓராண்டு நினைவஞ்சலிகள்...
    http://www.photofunia.com/output/3/1/N/R/t/NRtezPw1wK4-55HDnPga4w.jpg
    //

    தலைவர் படத்தை பார்த்தேன் மோனி சார்..

    ReplyDelete
  16. @MUTHU said...
    இன்னும் எவ்வளவு காலம் பட்டு
    //

    ஆடட்டும் முத்து.. எதுவரை என பார்த்துவிடலாம்

    ReplyDelete
  17. @பருப்பு The Great said...
    ஹ்ம்ம் "வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்"
    தமிழனாய் பிறந்ததற்கு வெட்கப் படுகிறேன்...ஏன்டா தமிழ் நாட்டுல பொறந்தொம்ன்னு இருக்கு....இதே அமெரிக்கா காரன் ஒருத்தன இங்க கொல்லுங்க பாப்போம்...அஞ்சு நிமிசத்தில துவம்சம் பண்ணிட்டு போய்டுவான்...
    நாமளும் தான் இருக்கோமே..வெட்கங்கெட்ட பொறப்பு
    //

    வெளிநாட்டு பெண், நம்மிடம் வரியை வாங்கி.. நம்மவர்களை கொல்ல உதவி..
    என்ன ஒரு சாணக்கியத்தனம்.. அதற்கு...தமிழ்ர்கள்(?) என கூறி கொள்பவரும் உடந்தை..
    வெட்கம்

    ReplyDelete
  18. @Chitra said...
    சகோதரர்கள் அழிந்துவிடவில்லை.. ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் விதைக்கபட்டு இருக்கிறான்..
    /
    உண்மைதான் மேடம்

    ReplyDelete
  19. @♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
    நமது வார்த்தைகளில் வீசும் வாளில் தான் இத்தனை உறவுகள் உயிரிழந்ததோ என்ற ஒரு மிகப்பெரிய அச்சம் இன்னும் மனத்திற்குள் !
    //

    பங்களாதேஸ் உருவாக உதவியவர்கள், தமிழனுக்கு உதவ மறுப்பதேன்?...

    ReplyDelete
  20. @ஆண்டாள்மகன் said...
    பட்டா பட்டி ... அழிக்கப்படவில்லை ,விதைக்கபபட்டுள்ளது..............


    @Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    அனைவருக்கும் 2ம் ஆண்டு நினைவு அஞ்சலிகள்.

    @சைவகொத்துப்பரோட்டா said...

    கண்ணீர் அஞ்சலி.
    //

    என்ன சொல்வதென தெரியவில்லை.. ஊமையாக இருக்கின்றேன்..

    ReplyDelete
  21. @சிவா (கல்பாவி) said...
    நிதர்சன வரிகள். குள்ளநரிகளின் நரித்தனம் நிச்சயம் ஒருநாள் தோற்கும் என்ற என்னத்தில் ஈழத்தமிழரின் சோகத்தில் நாமும் பங்கு கொள்வோம்
    //

    நன்றி சிவா..

    ReplyDelete
  22. வேதனையோடு நானும் பட்டா! கோபம் இன்னும் இன்னும்..... அதிகமாகிறது!

    பிரபாகர்...

    ReplyDelete
  23. ஒன்னும் சொல்லத் தோணலை பட்டா. வெறுமை. அயற்சி. :(

    ReplyDelete
  24. நான் தமிழன் ...அதனால் வெட்கி வேதனையோடு தலை குனிகிறேன் ...இப்படிப்பட்ட அரசியல்வாதிகளால் சொந்த இனமே அளிக்கபடுவது எண்ணி....என்ன செய்வது தமிழனாக பிறந்துவிட்டோம்.. இந்த குடும்ப அரசியல்வாதிகளின் ஆட்டத்தை காணத்தான் வேன்டும்...வெட்கம்..வேதனை...அதிககோபம...அதிகமாகின்றது இதை நினைக்கும் போது....

    ReplyDelete
  25. நான் அளவிற்கு அதிகமாய் நேசித்த இந்திய நாடு, என் சொந்தங்கள் இரத்தம் சிந்திய போது ஆடிய கபடநாடகத்தினால் என்னை நானே சுயபரிசோதனை செய்துகொண்டேன். தமிழன் என்பதே என் இறுதி அடையாளம் என்று உணர்கிறேன்.

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள், இரங்கல், இவைகளை மட்டுமே எங்கிருந்து வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் அளிக்க முடியும். நானும் இதையே செய்து கொண்டிருக்கிறேன்..அவர்கள் இழப்பை உணர்வது என்னால் இயலாது. ஏசி அறையில் உக்கார்ந்து மாதச் சம்பளம் வாங்கும் நான் அதை உணர்ந்தேன் என்று சொன்னால் அது என் மனசாட்சிக்கு நான் செய்யும் துரோகம்.உணர்ந்தேன் என்று சொன்னால் அதன் வெளிப்பாடு இருந்திருக்க வேண்டுமே...களத்தில் இறங்கிப் போராடுபவனே உண்மையான வீரன்...

    நம்மினம் வாழ்த்துக்கள், இரங்கல் இதையே கொடுத்துக் கொடுத்துப் பழகி விட்டோம்.. வாய்ச் சொல் வீரர்கள் கையில் வாள் கொடுத்தால் அதை என்ன செய்வதென்றே அவர்கள் அறியார்..

    நம்மினம் அழியும்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன் தானே நான்.. என்னுடைய அன்றாடச் செயல்கள் எதுவும் பாதிக்கப்படவில்லையே..

    இறந்தவர்களின் த்யாகங்களைத் தாங்கிக் கொண்டு வளரும் சங்கதி, என்னைப் போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிராமல் அநியாயத்தைக் கண்டவிடத்தில் வேரறுக்கும் உண்மை வீரர்களாக வர நான் ஆண்டவனை வேண்டுகிறேன்..

    உள்மனதுடன் சண்டை போடுவதே என் வேலை ஆகிப் போய் விட்டது..

    நன்றி..

    ReplyDelete
  27. பயந்து பயந்து இந்த உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு என்ன நான் சாதிக்கப் போகிறேன் என்று ஒரு கணம் தோன்றுகிறது.. உயிரைத் துச்சம் என் மதித்து வாழ்ந்த வீரர்கள் பிறந்த அதே மண்ணில் நானும் பிறந்திருக்கிறேன்..

    ReplyDelete
  28. பட்டாபட்டி உங்கள் வேதனை ஒவ்வொரு உண்மையான தமிழனின் வெளிப்பாடு. தமிழுக்கு “நான் தான் பிடுங்கினேன்” என்று சொல்பவர்களை நமக்கு அடையாளம் தெரியும், ஒன்று நிச்சயம் அந்த யுத்த பூமியில் வளர்ந்த குழந்தைகள் இதை கட்டாயம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார்கள். இது சத்தியம்.

    ReplyDelete
  29. கருப்பு இல்லை பாஸ் கறுப்பு நாள் . அந்த கிழவன் உழைத்து வாழ்வோம் எண்டு செம்மொழியான தமிழ் மொழியாம் பாட்டு லிரிக்ஸ் எழுதிப்ப்போட்டு நித்திரை கொள்ளுது. சினேகாவுக்கு விருது கொடுக்க தான் அந்த ஆள் சரி . உங்களை போல இருக்கிறதால தான் எதோ கொஞ்சம் நிம்மதியா இருக்கு . மிக மிக நன்றி ...
    இங்க ஒரே கடும் மழை... இல்லையெண்டா அவளவு உயிர் போனதை வெடி கொளுத்தி கொண்டாடுற திட்டம் இருந்தது . அதே நேரம் அதே நாள் இங்க கொழும்பிலையும் சனம் 200 ,௦௦௦ பேர் இடம் பெயர்வு . இயற்க்கை கொடுத்த தண்டனை ..

    ReplyDelete
  30. \\சகோதரர்கள் அழிந்துவிடவில்லை.. ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் விதைக்கபட்டு இருக்கிறான்..
    பொறுங்கள்..காலம், உங்களுக்கு பதில் சொல்லும்... ஆம்...\\

    அடக்கி வைத்த எரிமலை ஒரு நாள் தன் வலிமையை காட்டவே செய்யும். அப்போது புரியும் தமிழன் யார் என்று....அதுவரை பொருங்க மக்கா...பொருங்க.

    ReplyDelete
  31. கருத்து எழத என்னால் முடிய வில்லை.
    ஓட்டு போட்டு விட்டேன் நண்பரே.

    ReplyDelete
  32. கண்ணீர் அஞ்சலி

    ReplyDelete
  33. பூதேவி, சீதேவி அருகிருக்க, பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் உலகளந்த பெருமாள், எம் தலைவரைக் காணக் கண் கோடி போதாதே... ( அடச்சே.... இந்த நேரம் பாத்து என் கெட்டவார்த்த டிக்ஷ்னரியத் தொலைச்சிட்டேன்).

    ReplyDelete
  34. அழிக்கப்படவில்லை,விதைக்கபபட்டுள்ளது...


    கனவு நிறைவேறும்

    ReplyDelete
  35. எவனும் திருந்த மாட்டான் பட்டா. ஓட்டுக்காக, மலம் தினபதற்க்கும் அஞ்சாத மிருகங்கள் .

    ReplyDelete
  36. காசுக்காக ஓட்டு போட்ட ஜனங்களை ஏன் விட்டுவிட்டீர்கள்?

    தேர்தல் முடிவுகள் வேறாக இருந்திருந்தால் போரின் முடிவும் வேறாகி இருந்திருக்குமே?

    ReplyDelete
  37. வருசத்துக்கு ஒரு தடவை கரெக்டா கோவப்பட்டு கொந்தளிச்சு அடுத்த நாள் போய் குப்புற படுத்து குறட்டை விட்டு தூங்கரதுல தமிழன அடிச்சுக்க ஆளே இல்ல ஓய்..!

    யோவ் பட்டாப்பட்டி, இவ்ளோ நாள் எங்கடா போயிருந்தீங்கன்னு யாராச்சும் கரெக்டா இங்க வந்து கேட்டா விடாத..இங்கயே வெச்சு கொன்னுடு...!

    ReplyDelete
  38. @பிரபாகர் said...
    வேதனையோடு நானும் பட்டா! கோபம் இன்னும் இன்னும்..... அதிகமாகிறது!
    //

    @வானம்பாடிகள் said...
    ஒன்னும் சொல்லத் தோணலை பட்டா. வெறுமை. அயற்சி. :(
    //

    ஆமா சார்..

    ReplyDelete
  39. Blogger S.Sudharshan said...

    கருப்பு இல்லை பாஸ் கறுப்பு நாள் . அந்த கிழவன் உழைத்து வாழ்வோம் எண்டு செம்மொழியான தமிழ் மொழியாம் பாட்டு லிரிக்ஸ் எழுதிப்ப்போட்டு நித்திரை கொள்ளுது. சினேகாவுக்கு விருது கொடுக்க தான் அந்த ஆள் சரி . உங்களை போல இருக்கிறதால தான் எதோ கொஞ்சம் நிம்மதியா இருக்கு . மிக மிக நன்றி .../

    மாற்றிவிட்டேன் பாஸ்...

    ReplyDelete
  40. @Veliyoorkaran said...
    வருசத்துக்கு ஒரு தடவை கரெக்டா கோவப்பட்டு கொந்தளிச்சு அடுத்த நாள் போய் குப்புற படுத்து குறட்டை விட்டு தூங்கரதுல தமிழன அடிச்சுக்க ஆளே இல்ல ஓய்..!
    யோவ் பட்டாப்பட்டி, இவ்ளோ நாள் எங்கடா போயிருந்தீங்கன்னு யாராச்சும் கரெக்டா இங்க வந்து கேட்டா விடாத..இங்கயே வெச்சு கொன்னுடு...!
    //

    நாமதான் சதை பிண்டங்களாகி ஒரு வருசம் ஆச்சே..
    வெட்கமில்லாமல், கையை நீட்டி காசு வாங்க ஆரம்பிச்சாச்சு..

    இனி அவர்கள் குமிய வெச்சு..@#$ அடிச்சாலும் வாங்க , வெண்ணைய வெச்சுட்டு ரெடியாயிருக்கமில்ல..

    ReplyDelete
  41. எப்போது ஒரு மனிதன், தனது ஓட்டை,காசுக்கு விற்காமல், நல்லவர்களுக்கு போட துணிக்கிறானே..
    அன்றுதான் உண்மையான ஜனநாயகம் மலரும்...

    ReplyDelete
  42. பொளந்துட்ட பட்டா , (தமிழா, தமிழா என்னை தூக்கி நீங்கள் கடலில் போட்டாலும் உங்களுக்கு கட்டுமரமாகாக இருப்பேன்) ஹா.....ஹா.....ஹா.....

    ReplyDelete
  43. //பொளந்துட்ட பட்டா , (தமிழா, தமிழா என்னை தூக்கி நீங்கள் கடலில் போட்டாலும் உங்களுக்கு கட்டுமரமாகாக இருப்பேன்) .....ஹா.....ஹா.....//

    அடேய் மங்கு அதுக்கு என்னா அர்த்தம்னா, நீங்க என்னை கடல்ல போட்டலும், நான் மிதந்துருவேன். மூழ்கமாட்டேன்னு அர்த்தம்.

    ReplyDelete
  44. http://thatstamil.oneindia.in/news/2010/05/19/srilanka-tamil-killings-channel.html


    பட்டா இதை பாரு

    ReplyDelete
  45. http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-05-09/6556-2010-05-19-10-55-29



    http://cinemasuperkings.blogspot.com/2010/05/blog-post_4132.html


    பார்த்துவிட்டு சொல்

    ReplyDelete
  46. நெஞ்சு பொறுக்குதில்லையே!

    ReplyDelete
  47. நினைவுகளை வில்லில் ஏற்றி சுளீர் என்று பதித்து விட்டீர்கள். கட்டு மரமாக வருவேன் என்று சொல்பவர் கூட "கட்டு" இல்லாமல் எதுவும் பேசமாட்டார். நீங்க சொல்வது போல் வாயில் மலமிருந்தால் எப்படி வாயை திறக்க முடியும்.

    இதற்கு என்ன தான் தீர்வு. சொல்லு பட்டா, இனியும் பொறுமை இல்லை.

    ReplyDelete
  48. அடுத்தக்கட்ட ஈழப்போரிலாவது தமிழர்கள் அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டு விடாமல் உலக நாடுகளின் ஆதரவைப் பெற்று போராடி உரிமைகளைப் பெற வேண்டும். பேரினவாதத்தின் உச்சம் என்னவென்பதை நாம் பார்த்தாயிற்று! விடுதலைப் போராளிகளின் உச்சத்தை நம் வாழ்நாளில் பார்க்கும் பாக்கியம் நமக்கு கிடைக்க வேண்டும்!

    ReplyDelete
  49. அனைவரின் கருத்துக்கும் நன்றி மக்கா..
    விரைவில நல்ல தீர்வு வரும்..

    நயவஞ்சகர்களின், கு%$@#யில் பச்சைமிளகாய் வைக்கும் காலம் வெகு விரைவில வரும்..

    ReplyDelete
  50. வந்து கருத்து சொன்னவர்களுக்கு நன்றி,நான் கேட்பது ஒன்று தான் என்னையும் சேர்த்து தான் வாய் பேய்ச்சில் தான் வீரர்கள்

    ReplyDelete
  51. பச்சைமிளகாய கொண்டு போய் எங்கே வெக்கிறீங்... அப்புறம் கண்கள் பனித்து ...அது கனத்து !! பாவம் தாத்தா :) :)

    ReplyDelete
  52. //சகோதரர்கள் அழிந்துவிடவில்லை.. ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் விதைக்கபட்டு இருக்கிறான்.//

    நூற்றுக்கு நூறு உண்மை.தமிழ் நாட்டில் பிறந்து விட்டு ஒன்றும் செய்ய முடியாமல் இருந்ததற்கு வெட்கப்படுகிறேன்.

    ReplyDelete
  53. நான் அரசியல்லே கொஞ்சம் ஞானசூன்யம். அதனாலயே பலமுறை இந்தப்திவப்பார்த்தும் ஒண்ணும் சொல்லத்தெரியலே. தப்பா நெனச்சுக்காதீங்க பட்டா.

    ReplyDelete
  54. இறையாண்மையும், நம் அரசியல் இறைவன்களின் ஆண்மையும் பலருக்கும் பாடை கட்டியது வெட்கப்பட வேண்டிய விஷயம்.

    நானும் வெட்கப்படுகிறேன்.

    விதைக்கப்பட்டவை விருட்சமாகட்டும் ...

    ReplyDelete
  55. Hai patta eppadi irukkinga?. i back to chennai, and joined the duty. things are going fine.

    ReplyDelete
  56. கலக்குறியே பட்டா... மொக்க கும்மி எப்போ?

    ReplyDelete
  57. பட்டா நான் இந்தியா போறதுக்குள்ள எனக்கு ஒரு மானஸ்தன், அறிவாளி, ரோசக்காரன் 84373724 kku போன் பண்றதா சொன்னார். அவர நீங்க பாத்தீங்களா?

    ReplyDelete
  58. பட்டா நான் இந்தியா போறதுக்குள்ள எனக்கு ஒரு மானஸ்தன், அறிவாளி, ரோசக்காரன் 84373724 kku போன் பண்றதா சொன்னார். அவர நீங்க பாத்தீங்களா?
    //

    எனக்கு தெரிஞ்சு, சிங்கையில அப்படி யாருமில்ல பாஸ்..

    வரும்போதே, இந்தியா கஸ்டம்ஸ்ச வாங்கி வெச்சுட்டானுக..ஹா.ஹா

    ReplyDelete
  59. என்னத்த எழுதுறது, சாவின் விளிம்பில் இருந்து, இறுதியாகவும் எழுப்பிய என் சகோதர, சகோதரிகளின் அபயக்குரல்கள் நம் அனைவருக்குமே மனதளவில் கேட்டும், கிழம் ஆடிய நாடகத்தையும் பார்த்துகொண்டிருந்த நாம் , வெளிநாடுகளில் சிங்களனின் நக்கல் பார்வைக்கும், கேலிக்கும் ஆளான என்போன்ற ஆயிரம், ஆயிரம் தமிழர்களின் நிலைமை நடை பிணத்துக்கு ஒப்பானது என்பதை மறுப்பதற்கு இல்லை. மாவீரர்கள் என்றும் புதைக்க படுவது இல்லை. எப்போதும் விதைக்கத்தான் படுகிறார்கள். "தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்"

    ReplyDelete
  60. ஓட்டுக்காக, மலம் தினபதற்க்கும் அஞ்சாத மிருகங்கள் .
    என்று பதவி ஒன்று தான் முக்கியம் என ஆனதோ அந்த நாளிலிருந்து தமிழனின் ரத்தம் இவர்களுக்கு பதவி தரும் பொன் முட்டை வாத்து

    ReplyDelete
  61. ஏங்க,இங்க பட்டுன்னு ஒரு ஆளு இருந்தாரு.அவர இப்ப காணல.அவரு விலாசம் கொஞ்சம் சொல்ல முடியுமா?ஒருவேள வேற வீட்டுக்கு போய்டாரோ?

    ReplyDelete
  62. பித்தனின் வாக்கு said...

    Hai patta eppadi irukkinga?. i back to chennai, and joined the duty. things are going fine.
    //

    குஷ்புவ பாத்தீங்களா?.. நல்லாயிருக்காங்களா?...

    என்ன சார் ..லீவுனு சொல்லிக்கிட்டு, ஓடிப்போயிட்டீங்க..?

    ReplyDelete
  63. Dear mr.Pattapatti,
    i'm new to this kind of blog, i didn't know about these blogs earlier.person like me keeping all angry/disapointment within and unable to express in writing( as i think). my hearty appriciation for your writings and thanks for for your blog contents. Since i'm knew , i do not know how to write in tamil.
    y'day i come accross your blog and today i put leave for my office and reading all of your posts.

    thanks
    Jeyakumar.G
    Chennai-92
    any thanks

    ReplyDelete
  64. Jey said...

    Dear mr.Pattapatti,
    i'm new to this kind of blog, i didn't know about these blogs earlier.person like me keeping all angry/disapointment within and unable to express in writing( as i think). my hearty appriciation for your writings and thanks for for your blog contents. Since i'm knew , i do not know how to write in tamil.
    y'day i come accross your blog and today i put leave for my office and reading all of your posts.

    thanks
    Jeyakumar.G
    Chennai-92
    any thanks
    //

    லீவு போட்டுட்டு படிக்கிற அளவுக்கு..பெரிய ப்ளாக் இல்ல பாஸ்..

    ப்ரீயா இருக்கும் நேரத்தில படிங்க..

    ( பாருங்க.. அது யாரு ப்ரியானு..சண்டைக்கு வருவானுக..பார்த்து சூதனமா நடந்துக்குங்க..)

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!