Pages

Wednesday, January 19, 2011

ம்.. பெருசுகளுக்காக..

படிப்பறிவு ....ம்...ம்...கொஞ்சம்.     படிக்கும் காலத்தில, பழுத்து, புழுத்து, காலத்தின் கோலத்தில கல்யாணம்.

சாட்சியாக இரு குழந்தைகள்.   குழந்தைகளின் படிப்பு, செலவு.. பராமரிப்பு.. Don't Worry மாம்ஸ்....... எல்லாம் பெருசுவின் தலையில்.


குடி..குட்டி..கூ****..    வாழ்க்கை இன்பமாக போய்கொண்டிருக்கிறது.
யாருக்கா?.... உம்....தெரிஞ்ச குடும்பத்தில், இப்படி ஒரு மகன் கேரக்டர்.

பாவம் பெரிசு.   மகனை படிக்க வைத்தார். ஏறவில்லை..
பணியில் சேர்த்துவிட்டார்.. முடியவில்லை...

ரிட்டையர் ஆன பணத்தில , மகனுக்கு, லேத் கம்பெனி வைத்துக்கொடுத்தார்.
ஒவ்வொன்றாக விற்று, புதல்வன் மதுவின் மூலமாக, அரசுக்கு உதவ அதுவும் அந்தோ!!!

காலை எழுந்ததும், சரக்கு... அதுவும் எப்படி? சுயமா  நிற்ககூட முடியாதளவுக்கு.    அப்புறம் தெருவீதி உலா..மதியம் மீண்டும் கடைக்கு திரும்பல்.  நல்ல தூக்கம்.. தந்தைக்கு துக்கம்..

மாலை எழுந்ததும், மறுபடியும் கடை.  மயங்கி விழும்வரை ஆட்டம் பாட்டம்..

வாழ்க்கைச்சக்கரம் சுழல்கிறது. இப்போது அன்பருக்கு வயது 50.
கால், கை விரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கம் திரும்பி, ஒவ்வாமையை  காட்டத்துவங்கிவிட்டது.

துன்பங்கள் பல வந்தாலும், துடைத்து எறிந்துவிட்டு, துள்ளலாக துயிலும் இடம் மதுபானக்கடை என ஆயிற்று..

பிறந்தோம்.. வளர்ந்தோம்.. வாழ்ந்தோம் .. சென்றோம்..”.. இதுதான் வாழ்க்கைச்சக்கரம்....

ஆம்..... நாளை, மகனுக்கு 12 ஆம் நாள்.... கருமாதி...
.

.
.

டிஸ்கி 1
அய்யா பெரியவர்களே. உங்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்..
தயவுசெய்து, உங்கள் குழந்தைகளுக்கு, நல்ல படிப்பை கொடுத்து, சுயமாக முன்னேற மட்டும், வழியை காட்டுங்கள்.

டிஸ்கி 2
அதீத அன்பால், உங்கள் சேமிப்பை, வாரிசுகளுக்கு கொடுக்கும்முன்..தாரக மந்திரத்தை மனதில் நிறுத்தி, முடிவை எடுங்கள்.. ( ”என் காலத்துக்குப்பின்..”)


டிஸ்கி 3
பெரியவர்(74),  பழைய சைக்கிளை மீண்டும் துடைக்க ஆரம்பித்துவிட்டார்..ம்.

பேத்திகளை படிக்கவைக்க , நாளை முதல்,  இரவு பணியாளராக ஓரிடத்தில் சேரப்போகும் அவருக்கு,  


என் வருத்ததை தெரிவிப்பதா?  அல்லது  வாழ்த்துக்களையா?..



.
.
.

65 comments:

  1. பெருசுகளுக்கா???? அப்ப எங்க அண்ணன் சிரிப்பு போலிசுக்குன்னு சொல்லுங்க...ஹிஹி

    எங்களமாதிரி யூத்துக்களுக்கு இல்லையா????

    இருங்க படிச்சுட்டு வரேன்........

    ReplyDelete
  2. இதுபோன்று தவறான பாதையில் சீரழியும் மகன்களுக்கு (இளைஞர்களுக்கு) இந்த பதிவு ஒரு பாடம்.....

    ReplyDelete
  3. //பெரியவர்(74), பழைய சைக்கிளை மீண்டும் துடைக்க ஆரம்பித்துவிட்டார்..ம்.

    பேத்திகளை படிக்கவைக்க , நாளை முதல், இரவு பணியாளராக ஓரிடத்தில் சேரப்போகும் அவருக்கு,


    என் வருத்ததை தெரிவிப்பதா? அல்லது வாழ்த்துகளையா?..//

    பெரியவர் ஐயாவின் நிலைமையை நினைத்து வருத்தமாகவும் வேதனையாகவும்தான் உள்ளது

    ReplyDelete
  4. @மாணவன்
    தவறான வழியில் செல்லும் இளைஞர்களின், லுல்லாவை , சரியான நேரத்தில், அறுத்துவிட மறு(ற)த்ததின் விழைவு இது பாஸ்..

    ReplyDelete
  5. @மாணவன்
    தவறான வழியில் செல்லும் இளைஞர்களின், லுல்லாவை , சரியான நேரத்தில், அறுத்துவிட மறு(ற)த்ததின் விழைவு இது பாஸ்..//

    What is meant by லுல்லா?. Can i study this law in law college? hehe

    ReplyDelete
  6. என்ன சொல்றதுன்னு தெரியலை. நீங்க டாக்டர் ஆனா பிறகு உங்க பதிவு ஒண்ணுமே புரியலை..

    ReplyDelete
  7. மாணவன் said... 1

    பெருசுகளுக்கா???? அப்ப எங்க அண்ணன் சிரிப்பு போலிசுக்குன்னு சொல்லுங்க...ஹிஹி

    எங்களமாதிரி யூத்துக்களுக்கு இல்லையா????

    இருங்க படிச்சுட்டு வரேன்........
    ///

    நீ யூத் நு யார் சொன்னது?

    ReplyDelete
  8. வழக்கமாக உங்களுடைய பதிவில் நகைச்சுவையாக பின்னூட்டம் போடுவதுபோல் இந்தமுறை செய்ய மனம் வரவில்லை...

    ReplyDelete
  9. What is meant by லுல்லா?. Can i study this law in law college? hehe
    //

    இதுக்கு எதுக்கு லா காலேஸ்..?

    செத்த காலேஸ்ல சும்மாவே சொல்லிக்கொடுக்கிறாங்களாம்.... ஹி..ஹி

    ReplyDelete
  10. Blogger Philosophy Prabhakaran said...

    வழக்கமாக உங்களுடைய பதிவில் நகைச்சுவையாக பின்னூட்டம் போடுவதுபோல் இந்தமுறை செய்ய மனம் வரவில்லை...
    //

    அட..விடுங்க பாஸ்.. எனக்கு மண்டைக்கு ஏறினதாலேதான் இந்த பதிவு....

    ReplyDelete
  11. /// @மாணவன்
    தவறான வழியில் செல்லும் இளைஞர்களின், லுல்லாவை , சரியான நேரத்தில், அறுத்துவிட மறு(ற)த்ததின் விழைவு இது பாஸ்///

    சரிதான், டாக்டர் பட்டம் வாங்கியது வீண் போகவில்லை. ஆடு அறுப்பதில் தான் டாக்டர் என்றால் லுல்லியை கூட அறுக்க ஆரம்பித்துவிட்டீர்களே ! சொந்த கிளினிக் ஆரம்பித்தாகிவிட்டதா? லுல்லி எந்த ஊர் பாஷை பட்டா தெரியுமா?

    ReplyDelete
  12. உண்மை தான்...குடி குடியை கெடுத்திருச்சு...அந்த வயதான மனிதரின் நிலைமை நினைக்க ரொம்ப வருத்தமா இருக்கு...உணரும் மனுஷ ஜென்மங்கள் உணர்ந்து திருந்தினால் மகிழ்ச்சி தான்...

    ReplyDelete
  13. @பட்டா

    //நாளை முதல், இரவு பணியாளராக ஓரிடத்தில் சேரப்போகும் அவருக்கு, //

    என்னத்த சொல்ல பட்டா அளவுக்கு மீறின பாசம் இப்படி அவருக்கே வினையா முடியுது. போய் பிச்சை எடுத்து உன் சொந்த கால்ல நில்லு நாயே விட்டு இருக்கனும்.

    ReplyDelete
  14. //போய் பிச்சை எடுத்து உன் சொந்த கால்ல நில்லு நாயே விட்டு இருக்கனும்//
    ஏன் ரமேஷ பிச்சை எடுக்க சொல்லுற டெர்ரர் ......

    ReplyDelete
  15. மக்கா பட்டா அது என்ன (DR ).........எப்போ இந்த பட்டம் வாங்கினா .........?பதிவை படிச்சி ரொம்ப கஷ்ட்டாமாக போச்சு பட்டா .......அதை பாசம் ன்னு நீங்க சொல்லுறீங்க .......எனக்கு பாசத்துடன் சேர்ந்த கண்டிப்பு கண்டிப்பாக இருக்கனும்ன்னு தோணுது பட்டா .......கண்டிப்பு மட்டும் இருந்தாலும் பிரெச்சனை தான் ......

    ReplyDelete
  16. //என் வருத்ததை தெரிவிப்பதா? அல்லது வாழ்த்துகளையா?//

    :-(

    ReplyDelete
  17. பாசமும் கண்டிப்பும் சரி அளவில் இருக்கவேண்டும் பட்டாப்பட்டி. அளவுக்கு மீறிய செல்லமும் சரி வராது அதே போல் அளவுக்கு மீறிய கண்டிப்பும் எதிர்மறை விளைவுகளைத்தான் உண்டாக்கும்

    ReplyDelete
  18. பட்டா இப்படித்தான் நிறையா நடக்குது ................ எல்லாம் ஒரு நம்பிக்கைதான் ............ நமக்கு பிறந்த நம்மோட குழந்தைக நல்லா இருக்கட்டும் , கால்போன கடைசில நம்மள கைவிடாது அப்படின்னு நம்பிக்கைத்தான் ...............

    ReplyDelete
  19. தெரிவிக்க வேண்டியது வாழ்த்துக்களா? வருத்தங்களா? அதே குழப்பம்தான் நண்பரே

    விரல்களுக்கும் இதழ்களுக்கும் சண்டை

    ReplyDelete
  20. பசி மட்டுமல்ல பாசமும் கண்ணை மறைக்கும், அவருக்கு வருத்தம் கலந்த வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

    ReplyDelete
  21. அதிகப்படியா செல்லம் (மட்டும்)கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் தவறான பாதையில் போவதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம். தவறுக்கான அதிகபட்ச பொறுப்பாளி பெற்றோர்கள்தான்.

    ReplyDelete
  22. பட்டாபட்டி பிளாக்குல முதல் தடவையா $%#%#^# இல்லாத கமெண்டு போட்டுருக்கேன்.

    ReplyDelete
  23. கருப்பு எம்ஜிஆர் மாதிரி ஒரு டாகுடர் பட்டம் ``வாங்கி’’ மாட்டிக்கிட்டு இந்த பட்டாபட்டி கொடுக்குற அலப்பற தாங்க முடியல.

    ReplyDelete
  24. இப்படி வெந்தது, வேகாதது, கடன் சொல்லி பீடி குடிச்சது, வூடு பூந்து அண்டா திருடினது, திருவிழா கூட்டத்துல தாலி அறுத்தது, வெட்டித்தனமா ஊர்ஞாயம் பேசுறதுங்கிற ஆளுங்க எல்லாம் எதாவது பண்ணி டாக்டர் பட்டம் வாங்கி மாட்டிக்கிட்டு நம்ம உசுர வாங்குதுய்யா.(யார்ரா அது, டாக்டர் . பட்டாபட்டி வாழ்க ன்னு கோசம் போடுறது, அண்ணன் பட்டாபட்டி என்ன தப்பா நெனச்சுக்கப்போறாரு. நான் உங்களப்பத்தி எதுவுமே சொல்லலீங்கண்ணா)

    ReplyDelete
  25. அதிகப்படியா பேசிட்டேன் போலயே,சரி...

    உங்கள் பதிவை படித்தேன்.

    ஆகா.. சூப்பர்..
    வாழ்த்துக்கள்..
    அருமை நண்பா..
    கலக்குங்க..
    எப்படி சார் இப்படி?..
    ஹா..ஹா
    :-)
    :-(
    ம்..ம்..
    Online...

    ReplyDelete
  26. இன்னொன்னு மிஸ் ஆயிடுச்சே...

    ஆங்ங்...

    உங்கள் பொன்னான பணி தொடரட்டும்....

    ReplyDelete
  27. இப்படி ஆளுக இப்போ நெறைய கெளம்பிட்டாய்ங்க.... புள்ளைகன்னா எத வேணும்னாலும் செய்வோம், பொறுத்துக்குவோம்கறாய்ங்க......

    ReplyDelete
  28. சினிமாவுல கூட இப்போ இந்தத் தறுதலை கேரக்டர்ஸ்தான் ஹீரோவா வர்ரானுங்க, ஹீரோயின்ஸும் இவனுகளையே தேடிப்புடிச்சி லவ் பண்ணுவாளுங்க.....!

    ReplyDelete
  29. //சினிமாவுல கூட இப்போ இந்தத் தறுதலை கேரக்டர்ஸ்தான் ஹீரோவா வர்ரானுங்க, ஹீரோயின்ஸும் இவனுகளையே தேடிப்புடிச்சி லவ் பண்ணுவாளுங்க.....!//

    பட்டு!எப்படியிருக்கீங்க?

    பதிவை விட என்னை யோசிக்க வைத்தது பன்னிக்குட்டி அண்ணன் ராமசாமியின் கருத்து.

    களவாணி போன்ற எதிர்மறையான உருப்படாதவனுக்கெல்லாம் ஆஹா!ஓஹோன்னு விமர்சனமும்,ஆதரவும் தருவது சமூக சீர்கேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதால் அந்தப்படம் வெளியான காலத்தில் ஒரே ஒரு எதிர் பின்னூட்டம் மட்டும் போட்டேன்.

    ReplyDelete
  30. உங்க கடைல ஒரு ஆளு தலைய சொறிஞ்சுகிட்டே இருந்தாரே?லீவா!

    ReplyDelete
  31. கண்மூடித்தனமான பாசம் இப்படித்தான் முடியும்.

    ReplyDelete
  32. டாக்குடரு பட்டம் எல்லாம் வாங்கியாச்சா? சொல்லவேயில்லே. ஊருக்கு வந்ததும் பார்ட்டி கண்டிப்பா கொடுக்கணும்.

    ReplyDelete
  33. எங்க ஊருல என் கண் முன்னாலே இதே மாதிரி ஒருத்தர் இருந்தாரு.
    Same retired அப்பா
    same லேத் பட்டறை
    but வேற கூ****
    அவர் பேரு ஏழுமலை...
    அவரு இப்போ இருக்காரா இல்லையானு தெரியல...
    எங்க ஊர் சேலம்

    ReplyDelete
  34. வேதனைக்கு உரியது.. எனக்கு தெரிந்த குடும்பத்தில் இது போல் இன்றும் நடக்கிறது...ஆனால் பெரியவருக்கு பதில் 70 வயது மூதாட்டி.75 வயசு பெருசும் , 50+ வயசுல இருக்குற மகனும் ஒற்றுமையாக அரசு சரக்கு கடையின் நிரந்தர வாடிக்கையாளர்கள்.

    ReplyDelete
  35. //
    பன்னிக்குட்டி ராம்சாமி said... 30
    சினிமாவுல கூட இப்போ இந்தத் தறுதலை கேரக்டர்ஸ்தான் ஹீரோவா வர்ரானுங்க, ஹீரோயின்ஸும் இவனுகளையே தேடிப்புடிச்சி லவ் பண்ணுவாளுங்க.....!
    //
    சரியா சொன்னீங்க தல... அவனுங்கல பாதாலே கடுப்பா இருக்குது... (வவுத்தெறிச்சலும் உண்டு)

    ReplyDelete
  36. @கக்கு - மாணிக்கம் said... 11
    சரிதான், டாக்டர் பட்டம் வாங்கியது வீண் போகவில்லை. ஆடு அறுப்பதில் தான் டாக்டர் என்றால் லுல்லியை கூட அறுக்க ஆரம்பித்துவிட்டீர்களே ! சொந்த கிளினிக் ஆரம்பித்தாகிவிட்டதா? லுல்லி எந்த ஊர் பாஷை பட்டா தெரியுமா?
    //

    என்னண்ணே.. நம்ம வாயில வந்தா, நம்மஊர் பாஷைனு சரித்திரத்தை மாற்றிவிடமாட்டமா நாம?.. ஹி..ஹி

    ReplyDelete
  37. @ஆனந்தி.. said... 12
    உண்மை தான்...குடி குடியை கெடுத்திருச்சு...அந்த வயதான மனிதரின் நிலைமை நினைக்க ரொம்ப வருத்தமா இருக்கு...உணரும் மனுஷ ஜென்மங்கள் உணர்ந்து திருந்தினால் மகிழ்ச்சி தான்...
    //

    அதீத பாசம்.. அனைவருக்கும் கேடு...
    வளர்ந்த ஜென்மங்களுக்கு, நாம் அறிவுரை சொல்லியா கேட்கப்போறாங்க..!!

    ReplyDelete
  38. @TERROR-PANDIYAN(VAS) said... 13
    என்னத்த சொல்ல பட்டா அளவுக்கு மீறின பாசம் இப்படி அவருக்கே வினையா முடியுது. போய் பிச்சை எடுத்து உன் சொந்த கால்ல நில்லு நாயே விட்டு இருக்கனும்.
    //

    நீ சொன்னதில பாதி சரி.. மீதிய விட்டுட்டியே ராசா..

    ”செருப்புல அடிச்சுனு”----இதை சேர்த்துக்கனும்...

    ReplyDelete
  39. @இம்சைஅரசன் பாபு.. said... 15
    மக்கா பட்டா அது என்ன (DR ).........எப்போ இந்த பட்டம் வாங்கினா .........?பதிவை படிச்சி ரொம்ப கஷ்ட்டாமாக போச்சு பட்டா .......அதை பாசம் ன்னு நீங்க சொல்லுறீங்க .......எனக்கு பாசத்துடன் சேர்ந்த கண்டிப்பு கண்டிப்பாக இருக்கனும்ன்னு தோணுது பட்டா .......கண்டிப்பு மட்டும் இருந்தாலும் பிரெச்சனை தான் ......
    //

    பட்டு தெளியட்டும் பாஸ்...

    ReplyDelete
  40. @கும்மி said... 16
    //என் வருத்ததை தெரிவிப்பதா? அல்லது வாழ்த்துகளையா?//

    :-(
    //

    வாங்க சார்.. ஆள் இருக்கீங்களா?

    ReplyDelete
  41. @எல் கே said... 17
    பாசமும் கண்டிப்பும் சரி அளவில் இருக்கவேண்டும் பட்டாப்பட்டி. அளவுக்கு மீறிய செல்லமும் சரி வராது அதே போல் அளவுக்கு மீறிய கண்டிப்பும் எதிர்மறை விளைவுகளைத்தான் உண்டாக்கும்
    //

    உண்மைதான் LK....
    அளவுக்கு மீறிய கண்டிப்பால், திசை திரும்பியவர்களும் உள்ளனர்.

    ReplyDelete
  42. @மங்குனி அமைச்சர் said... 18
    பட்டா இப்படித்தான் நிறையா நடக்குது ................ எல்லாம் ஒரு நம்பிக்கைதான் ............ நமக்கு பிறந்த நம்மோட குழந்தைக நல்லா இருக்கட்டும் , கால்போன கடைசில நம்மள கைவிடாது அப்படின்னு நம்பிக்கைத்தான் ...............

    //

    ஹி..ஹி.. நம்ம்ம்பிக்கையா வாழ்க்கை?.. சரி.. என்னோட Account-ல 2 லட்சம் போட்டு மச்சி.. நம்ம்பிக்கையா திருப்பி தரேன். ஹி..ஹி

    ReplyDelete
  43. @கவிதை காதலன் said... 19
    தெரிவிக்க வேண்டியது வாழ்த்துக்களா? வருத்தங்களா? அதே குழப்பம்தான் நண்பரே
    விரல்களுக்கும் இதழ்களுக்கும் சண்டை
    //

    ஆமாம் பாஸ்...




    @சி.பி.செந்தில்குமார் said... 20
    wat to say..? a different post from yr regular style
    //

    ஹி..ஹி


    @அஹமட் சுஹைல் said... 21
    யாரு பாஸ் அவரு..?
    //

    பெரியப்பா பையன்.. நேற்று 12ஆம் நாள்.. குழந்தைகள்தான் பாவம்..




    @இரவு வானம் said... 22
    பசி மட்டுமல்ல பாசமும் கண்ணை மறைக்கும், அவருக்கு வருத்தம் கலந்த வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.
    //

    நன்றி நண்பரே..

    ReplyDelete
  44. @வானம் said... 23
    //
    அதிகப்படியா செல்லம் (மட்டும்)கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் தவறான பாதையில் போவதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம். தவறுக்கான அதிகபட்ச பொறுப்பாளி பெற்றோர்கள்தான்.
    //

    ஒருவேளை பாசம் கண்ணை மறச்சிருக்குமோ சார்?..
    ஆமா, தஞ்சாவூர்ல எப்புடீ?.. ஹி..ஹி



    //பட்டாபட்டி பிளாக்குல முதல் தடவையா $%#%#^# இல்லாத கமெண்டு போட்டுருக்கேன்.//

    நாளை தபால்காரரை எதிர்பாருங்கள்.. பார்சல் அனுப்பியுள்ளேன்...ஹி..ஹி


    // கருப்பு எம்ஜிஆர் மாதிரி ஒரு டாகுடர் பட்டம் ``வாங்கி’’ மாட்டிக்கிட்டு இந்த பட்டாபட்டி கொடுக்குற அலப்பற தாங்க முடியல.
    //

    ஹி..ஹி



    // இப்படி வெந்தது, வேகாதது, கடன் சொல்லி பீடி குடிச்சது, வூடு பூந்து அண்டா திருடினது, திருவிழா கூட்டத்துல தாலி அறுத்தது, வெட்டித்தனமா ஊர்ஞாயம் பேசுறதுங்கிற ஆளுங்க எல்லாம் எதாவது பண்ணி டாக்டர் பட்டம் வாங்கி மாட்டிக்கிட்டு நம்ம உசுர வாங்குதுய்யா.(யார்ரா அது, டாக்டர் . பட்டாபட்டி வாழ்க ன்னு கோசம் போடுறது, அண்ணன் பட்டாபட்டி என்ன தப்பா நெனச்சுக்கப்போறாரு. நான் உங்களப்பத்தி எதுவுமே சொல்லலீங்கண்ணா)
    //

    சொன்னாமட்டும் கோவிச்சுக்கவா போறேன்.. ஆனா பட்டம் வாங்கி, உமக்கு அறுக்காம இருப்பதுதான், வருத்தமா இருக்கு வானம்.. ஹி..ஹி

    ReplyDelete
  45. @பன்னிக்குட்டி ராம்சாமி said... 29
    இப்படி ஆளுக இப்போ நெறைய கெளம்பிட்டாய்ங்க.... புள்ளைகன்னா எத வேணும்னாலும் செய்வோம், பொறுத்துக்குவோம்கறாய்ங்க......

    சினிமாவுல கூட இப்போ இந்தத் தறுதலை கேரக்டர்ஸ்தான் ஹீரோவா வர்ரானுங்க, ஹீரோயின்ஸும் இவனுகளையே தேடிப்புடிச்சி லவ் பண்ணுவாளுங்க.....!

    //

    பன்னிகிட்ட இருந்து நல்ல கருத்து...ஹி..ஹி
    யோவ்.. கொஞ்சம் என்னையமாறி மூளக்காரனாத்தான் இருக்கே..
    அடிக்கடி காபி குடிப்பியா?..

    ReplyDelete
  46. @ராஜ நடராஜன் said... 31

    //சினிமாவுல கூட இப்போ இந்தத் தறுதலை கேரக்டர்ஸ்தான் ஹீரோவா வர்ரானுங்க, ஹீரோயின்ஸும் இவனுகளையே தேடிப்புடிச்சி லவ் பண்ணுவாளுங்க.....!//

    பட்டு!எப்படியிருக்கீங்க?

    பதிவை விட என்னை யோசிக்க வைத்தது பன்னிக்குட்டி அண்ணன் ராமசாமியின் கருத்து.

    களவாணி போன்ற எதிர்மறையான உருப்படாதவனுக்கெல்லாம் ஆஹா!ஓஹோன்னு விமர்சனமும்,ஆதரவும் தருவது சமூக சீர்கேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதால் அந்தப்படம் வெளியான காலத்தில் ஒரே ஒரு எதிர் பின்னூட்டம் மட்டும் போட்டேன்.
    //

    நிசம்தான் அண்ணே.. Anti ஹீரோ கதைனா பிச்சுக்கிட்டு ஓடுது..
    மக்கள் மந்தைகளா ஆகி நாளாச்சு...




    // உங்க கடைல ஒரு ஆளு தலைய சொறிஞ்சுகிட்டே இருந்தாரே?லீவா!//

    அவரு VRS வாங்கிட்டு போயிட்டாருண்ணே...

    ReplyDelete
  47. @DrPKandaswamyPhD said... 33
    கண்மூடித்தனமான பாசம் இப்படித்தான் முடியும்.
    டாக்குடரு பட்டம் எல்லாம் வாங்கியாச்சா? சொல்லவேயில்லே. ஊருக்கு வந்ததும் பார்ட்டி கண்டிப்பா கொடுக்கணும்.
    //

    என்னண்ணே.. இப்படி சொல்லீட்டிங்க..
    கண்டிப்பா பார்ட்டி தரேன்..

    ReplyDelete
  48. @malarvannan said... 35
    எங்க ஊருல என் கண் முன்னாலே இதே மாதிரி ஒருத்தர் இருந்தாரு.
    Same retired அப்பா
    same லேத் பட்டறை
    but வேற கூ****
    அவர் பேரு ஏழுமலை...
    அவரு இப்போ இருக்காரா இல்லையானு தெரியல...
    எங்க ஊர் சேலம்
    //

    எல்லா ஊரிலேயும் இதுமாறி நாதாரிக ரொம்ப இருக்காங்கனே,..

    என்ன , பேருதான் வேறவேறா இருக்கும்..

    ReplyDelete
  49. @கே.ஆர்.பி.செந்தில் said... 36
    ஓகே ...ஓகே ...
    //

    வாங்க சார்..

    ReplyDelete
  50. @பாரதசாரி said... 37
    வேதனைக்கு உரியது.. எனக்கு தெரிந்த குடும்பத்தில் இது போல் இன்றும் நடக்கிறது...ஆனால் பெரியவருக்கு பதில் 70 வயது மூதாட்டி.75 வயசு பெருசும் , 50+ வயசுல இருக்குற மகனும் ஒற்றுமையாக அரசு சரக்கு கடையின் நிரந்தர வாடிக்கையாளர்கள்.

    //

    ஹா..ஹா.. இப்படியும் இருக்கானுகளா..

    ReplyDelete
  51. பாரதசாரி said... 38

    //
    பன்னிக்குட்டி ராம்சாமி said... 30
    சினிமாவுல கூட இப்போ இந்தத் தறுதலை கேரக்டர்ஸ்தான் ஹீரோவா வர்ரானுங்க, ஹீரோயின்ஸும் இவனுகளையே தேடிப்புடிச்சி லவ் பண்ணுவாளுங்க.....!
    //
    சரியா சொன்னீங்க தல... அவனுங்கல பாதாலே கடுப்பா இருக்குது... (வவுத்தெறிச்சலும் உண்டு)
    //

    என்ன சார் பன்னி தொலையிறது.. ஓ..ஓ.. பண்ணித்தொலையிறது.!!!

    ReplyDelete
  52. ////
    பன்னிக்குட்டி ராம்சாமி said... 30
    சினிமாவுல கூட இப்போ இந்தத் தறுதலை கேரக்டர்ஸ்தான் ஹீரோவா வர்ரானுங்க, ஹீரோயின்ஸும் இவனுகளையே தேடிப்புடிச்சி லவ் பண்ணுவாளுங்க.....!//

    உண்மைதான். Mass media இதற்கு ஒரு காரணம்..

    பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு (கள்ளு)ன்னு இதத்தான் சொன்னாங்க போல..

    எப்போதோ யாருக்கோ பட்ட கடனை இந்தப் பெரியவர் தனது மகனுக்கு செய்து முடித்திருக்கிறார். வேறென்ன சொல்லா..கொடுமை.கொடுமை..

    ReplyDelete
  53. //வாங்க சார்.. ஆள் இருக்கீங்களா?//

    என்ன பட்டா இப்படி கேட்டுப்புட்டீங்க.? எல்லாப் பதிவும் படிச்சிட்டு ஓட்டு மட்டும் போட்டுட்டு போயிர்றேன். பின்னூட்டம் போட முடியாதபடி ஏதாவது ஒரு ஆடு எங்கையாவது மாட்டிக்கிட்டு வந்து என்னை வெட்டுன்னு நிக்குது. இன்னைக்குக் கூட பாருங்க, ஒரு சாமியார் ஆடு, நதிக்கரை நாகரிகம் கத்துக் கொடுக்கிறேன்னு, யமுனை நதிக்கரைல ஜல்சா பண்ணி விடியோ வெளியிட்டு இருக்கு. அதுக்கான கெடா வெட்டு நடந்துக்கிட்டு இருக்கு.

    ReplyDelete
  54. அளவுக்கு அதிகமான அன்பும் சில சமயங்களில் பிரச்சினையாகிவிடும்! சில குடும்பங்களில் இப்படி ரொம்ப செல்லம் கொடுத்து கெட்டுப் போன குழந்தைகளும் உண்டு!

    ReplyDelete
  55. ஆனாலும் அந்த பெரியவரின் நிலை பரிதாபம்தான்! இத்தனை வயதுக்கப்புறமும் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியுள்ளது!

    ReplyDelete
  56. இதுக்குத்தான் சொல்றது குழந்தைங்கள வளர்க்கும் போது வெள்ளைக்காரங்கள பின்பற்றனும்னு! தெரியாமலா அவிங்க 18 வயசுக்கு மேல வீட்ட விட்டு துரத்தி விடுறாங்க?

    ReplyDelete
  57. அவர் நிலை ரொம்ப மோசமா தான் இருக்கு ..
    என்ன பண்ணுறது வளர்க்கும்போது பாசம் கண்ண மறைக்குது
    அடுத்தவங்கள விட பணக்காரத் தன்மையா வளர்க்கனும்னு ஒரு ஆசை ,
    அதுவே கடைசில இப்படியும் ஆகிடுது அண்ணா

    ReplyDelete
  58. பட்டாபட்டி அண்ணனின் வழக்கமான டிரேட்மார்க் அம்சங்கள் இல்லாமல் ஒரு ஆழமான பதிவு. என்னவோ எனக்கு இந்த பதிவு பிடிக்கவில்லை. ஆடி அடங்கி கொஞ்சம் சந்தோஷமாக இருப்போமே என்று(நம்பி) அண்ணன் ப்ளக்குக்கு வந்தால் அங்கும் அழுகையா. நீங்க இதுக்கு சரிபட்டுவரமாட்டீங்க.( எதுக்குன்னா வடிவேலதான் கேட்கணும்)>

    ReplyDelete
  59. இது மாதிரி பிள்ளைங்களுக்கு ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சி அவங்க வாழ்வையும் சீரழிக்கிறது அத விட கொடுமை.

    ReplyDelete
  60. இந்த மாதிரி பெரியவர்கள் தங்கள் இரண்டாவது ஆயுளை அளித்து இப்போதைய தலைமுறைகளை காக்க வேண்டி உள்ளது.............கல்வி நிலையங்களை அரசுடமையாக்க வேண்டிய அரசு டாஸ்மாக் கடைக்களை அதிகப்படுத்தி இன்னும் சின்னஞ்சிறார்களை பாழடித்து செய்யும் கொடுங்கோல் என்று முடிவுக்கு வருமோ............

    ReplyDelete
  61. Naan enga irukken...ithu entha edam...?

    ReplyDelete
  62. Blogger Veliyoorkaran said...

    Naan enga irukken...ithu entha edam...?
    //

    வாங்க ஆபீஸர்.
    இப்ப நாம் இருப்பது ஆப்பிரிக்காவில்.

    சோனியாவும், கருணாநிதியும் , இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்து, இந்தியாவை, இத்தாலியுடன் இணைத்து, மீதி இருந்த மக்களை, இங்க அனுப்பி விட்டுட்டாங்க..

    வேற டவுட் இருந்தா, எங்க டோல்ப்ரீ நம்பருக்கு கூப்பிடுங்க.. விவரமா விளக்குறோம்..

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!