Pages

Wednesday, January 5, 2011

நேர் நேர் தேமா!!!!

.
.
.
சீக்கிரம் தேர்தல் வரப்போகிறது. கட்சி தலைமைகளின் ஒரே கு(வெ)றி.... "அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்போம்" என்பதே. இதில் பிரச்சனைக்குறிய உயிரினங்கள்(?) யார் என நினக்கிறீர்கள்?


உங்கள் மனத்தில், 'மக்கள்' என்ற எண்ணம் தோன்றினால்...... ப்ளீஸ்.. ஒரு நிமிடம் கண்களை இறுக்க மூடிக்கொண்டு, கைகளால், உங்களின் ஒரே ஒரு பரம்பரை சொத்தான, கோமணத்தை இறுக்க பற்றிக்கொண்டு வெளியே போய்விடுங்கள், அடுத்த பதிவில் நாம் சந்திக்கலாம். ( நானும் எங்கேயும் போயிடமாட்டேன்.. ஹி..ஹி நீங்களும்தான்.. அப்புறம் என்ன கவலை பிரதர்?..)மீதி உயிரினங்கள்(!)... வாங்க சார்.. நாம அலசுவோம். உஷ்.. இப்ப ஒரு குரூப் வெளிய போனதே!.. தேசப்பற்றே இல்லாத பன்னாடை பயலுக சார்... கட்சி நடத்துவது என்ன சாதாரணமா?. என்னமோ எப்ப பார்த்தாலும், 'மக்கள், மயிரு, மட்டை'னு கூவிக்கிட்டு இருக்கானுக.. இந்த மக்களுக்குத்தான் தங்களின் பொன்னான, மூளையை கசக்கி,

 • 1 ரூபாய்க்கு அரிசி,
 • அரசின் சலுகைவிலையில் சாராயம். அதாங்க.. டாஸ்மார்க்,
 • இலவச டீவீ,
 • அதுக்கு முன்னாடி செருப்பு,
 • பல்லு விளக்க பிரஸ்..
 • ஆங்.. கோயில்ல இலவச உண்டக்கட்டி,
 • வெள்ளிக்கிழமை, பெண்கள் தலைக்கு குளித்துவர ஆபீஸ் நேர மாற்றம்....
 • கிராமிய வேலைவாய்ப்புத்திட்டம். (கைதாங்கலா நடந்து வந்தா போதும். தினக்கூலி நிச்சயம்.என்னா அருமையான திட்டம்!!)
போன்ற அரிய திட்டங்களை கொண்டு வந்தாலும், திருப்திப்படமாட்டார்கள்.

எல்லாப்பயலும், பழசை மறந்துட்டானுக தலை. நன்றி கெட்ட நாதாரிக....


'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு'னு , அவரவர் குழந்தைகுட்டியை பார்க்ககூட நேரமில்லாமல், மக்களுக்கு உழைக்கும் கட்சிக்காரர்களின் புகழை, நாம் பாடாமல் எவர் பாடுவார்?. என்ன சார்?. நான் சொல்லுவது சரிதானே.

சரி..இப்ப யார் யார் , எப்படினு பார்க்கலாம்.கலைஞர்.

'மக்கள்தான் குடும்பம், குடும்பம்தான் மக்கள்' என்ற உயரிய கொள்கைகொண்ட ப(பு)ழுத்த பழம்.. எவ்வளவு வருட அரசியல் அனுபவங்கள், சிறைகள், சிந்தனைகள், திரைப்படங்கள், பாராட்டு நிகழ்சிகள். பாவம் நிற்ககூட(!) நேரமில்லாமல்.. நினச்சா எனக்கே கலங்குது பாஸ்.

விரைவில் பொதுக்குழு கூட்டப்போகிறாராம். உம்..பார்ப்போம். 'எந்த மக்களின் பேரன்' அரசியலுக்கு வரப்போகிறாரோ!... காரமடை ஜோசியனுக்கு மட்டும்தான் தெரியும்.

அதனால , அவரை அடுத்த முதல்வர் ஆக்குவது நம் கைகளில்தான் உள்ளது..பராசக்தி

'அம்மா' என்று செல்லமாக, ரத்தங்களால் அழைக்கப்படும் கான்வென்ட் மாமி. அந்தகால வெற்றிப்பட நடிகை. தமிழகத்தின் தலைவிதி. மக்களின் விடிவெள்ளி, ஆடிட்டர்களை செருப்பில் அடிக்கும் பத்ரகாளி. கொடைநாட்டு கோமகள். உடன்பிறந்த, பிறக்கப்போகும் பெண்களின் காவல் தெய்வம். அப்ப்ப்பா எவ்வளவு பட்டங்கள்?.

பாவம்..அடிக்கடி ஓய்வு எடுத்தாலும், மக்களுக்கு ஒரு பிரச்சனைனா, வீதிக்கு வந்து போராடும் மிருககுணம் கொண்ட மூர்க்கமான கோபம் உள்ளவர். ( நீங்கவேணா, அவர் காலில் விழாமல், உங்கள் காரியத்தை சாதித்துப்பாருங்க.. அப்ப புரியும் அந்த வலி..)

ஏன் அடிக்கடி கொடை நாடு போறாங்க?. இது, சில பன்னாடைகள் கேட்கும் கேள்வி..

பாவம்... என்னதான் பண்ணுவாங்க?.. எல்லோரும் கால்ல விழுந்து, ஏதாவது விழும் என எழாமல் இருப்பதால், அவருக்கு கால்வலி. அதனால..., கொடை நாட்டுக்கு போறாங்க..

தற்போதய முதல்வருக்கு , இவர் மாற்றா?.. இல்லை.. இவருக்கு, அவர் மாற்றா?.. சே..சே. அப்படி எல்லாம் பிரிச்சு பேசக்கூடாது. கோயில்ல அன்னதானம் பண்ணி, மக்களுக்கு புண்ணியம் சேர்த்த வீராங்கனை இவர்..

என்ன.. அங்கே ஓவரா நாறுச்சுனா, இங்கே, விட்டுவிட்டு நாறும்.. மற்றபடி எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக, மக்களுக்கு தொண்டு செய்பவர்கள்தான்..

அதனாலே.. அதனால்.. இவரையும் அடுத்த முதல்வராக்கலாம். ( ஆனா..கால்ல விழுந்தா, தலை தூக்கிப்பார்க்க்கூடாது ..சொல்லீட்டேன்..)கேப்டன்.

'கேப்டன்' என்று செல்லமாக, மக்களால் அழைக்கப்படும் அடுத்த முதல்வர்(?). அவரும் முதல்வராகி, 'பாகிஸ்தானை தமிழ்நாட்டுடன் சேர்க்க', அரிதாரம் பூச ஆரம்பித்துவிட்டார். ( ஆமாய்யா.. அவர் முகத்துக்குத்தான்.. மக்களுக்கு கரி போதும்.). பெண்களை எப்போதும் மதிப்பார். பாருங்களேன்.. அவரது மனைவி, மச்சான் நல்லா இருந்தா, மக்களும் நல்லா இருப்பாங்கனு புரிஞ்சு வைத்துள்ளார்.

அவரு மட்டும் முதல்வராகட்டும்.. மச்சான் சதீஸ்கிட்ட சொல்லி, விருதகிரிய தேசியப்படமா அறிவிக்க சொல்லிடலாம்.. தேசிப்பறவை மயில், தேசப்படம் விருதகிரி....ஹி..ஹி நல்லாயிருக்குல்ல..

அதனாலே.. இவரையும் அடுத்த முதல்வராக்கி பாகிஷ்தானை தமிழ்நாட்டோடு இணய உதவ.. உங்கள் பொன்னான வாக்கை, இவருக்கோ, அல்லது அவரது துணவியாருக்கோ, அல்லது மச்சான் சதீஸ்க்கோ போடுங்க.. போடுங்க. போட்டுக்கிட்டே இருங்க.'அய்யா'.

இவர் பெயர் சொன்னால், சாலை ஓர மரங்கள், அதுவாக தற்கொலை செய்துகொள்ளும். 'பிள்ளைய பெற்றா கண்ணீரு'னு பாவம், வயதான காலத்தில், மகனின் வேலை வாய்புக்காக, கடைகடையா ஏறி இறங்கிட்டு இருக்காரு.. யாரும் கொடுக்க தயாராக இல்லை.

அவரின் மனசஞ்சலத்தைப்போக்க, அவரை முதல்வராக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது.
சிற்றரசர்கள்.

இந்த லிஸ்டில், மீதியுள்ள நல்ல உள்ளங்களை பட்டியலிட்டுக்கொள்ளலாம். பாவம்.. அவர்களும் மக்களுக்காக உழைக்க , ஓ.கே..ஓ.கே.( தங்கபாலு அண்ணே.. இதில் உங்கபேரும் இருக்கு..பயப்படாதீங்க..!!)இது தலைவர்களுக்காக..

அய்யா தொரைகளே, தொரைசாணிகளே... மக்கள் துயர் துடைக்கவந்த மாசறு மாணிக்கங்களே. இப்படி பிரிச்சு, பிரிச்சு அடிச்சுக்கிட்டா, எங்க மனசு கலங்குது.. ஏன் நீங்கள் எல்லோரும் சேர்ந்து, "முதல்வர்களாக" அமரக்கூடாது. 
அந்த காட்சியை காணும் பாக்கியத்தை, இந்த மக்களுக்கு அருள்வீர்களா? ( அருள் அண்ணே.. உங்கள சொல்ல்லே.. லூஸ்ல விட்டுப்புட்டு, எப்பவும் போல, டோமர்ர்ர்ர்ர்ர்ர்ருக்கு உதவி பண்ணுங்க..ஹி..ஹி)

 

தலைவர்களுக்கு, 
இலவச திட்டங்களுக்கு,  என்னால் முடிந்த சிறு உதவி.

 • ஆண் மக்களுக்கு இலவச காண்டம்.
 • வீதிக்கு ஒரு அன்னதான முகாம்.
 • பொங்கலுக்கு, இலவச கோமணம்
 • பெண்களுக்கு, இலவச மூக்குத்தி
 • குழந்தைகளுக்கு, மூக்கு சீந்த, பழைய கட்சிக்கொடிகள்.
 • மாதம் ஒருமுறை மொட்டை அடிக்க, திருப்பதிக்கு இலவச பேருந்து. ( ஏசி வசதியுடன் )
 • பாராட்டுவிழாவில் நேரில் பார்வையிட , நமீதா மூலம் குலுக்கல் முறையில் தேர்வு.
 • முதியவர்களுக்கு, இலவச சுடுகாடு.
 • பள்ளிக்கட்ட்டங்களை, டாஸ்மார்க் கோடோனாக மாற்றகோரிக்கை.
 • கோயில்களில், அம்மாவாசை அன்று இலவச பூசை.


டிஸ்கி 0.

சார்வாள்.. யாரு முதல்வரா வந்தாலும், இந்த சிறுவனை மறந்துவிடாதீங்க.. என்னோட மச்சான், சென்னையில, சும்மா ப்ளாக் எழுதிக்கிட்டு நேரத்தை விரயம் பண்ணிக்கிட்டு இருக்கான்.

அந்த பன்னாடைக்கு, ஹோல்சேல் காண்டம் சப்ளை செய்ய அனுமதி கொடுத்தால், நானும், என் குடும்பமும், வாழ்நாள் முழுதும், உங்களை மறக்கமாட்டோம்.


( அதில், கட்சி லோகோ மற்றும் எழுச்சி வாசங்கள் எழுத, என்னுடைய பெரியப்பா மகன் இருக்கான்.. இத்துடன் சில சாம்பிள் கொடுத்துள்ளேன்.. அதனால, பிரிண்டிங் காண்ராக்ட்டை, பெரியப்பா பையனுக்கு கிடைக்க, அருள் புரியுங்கள். )


சாம்பிள் வாசகங்கள்


சூரியன் எழுகிறது...

எழுச்சிப்பயணம் இங்கே ஆரம்பம்..

இலை..தொடை..இலவசம்..( முக்கியமாக, இந்த காண்ராக்ட் கிடைத்தால், காண்டத்தில், இலவசமாக, தலைவர்கள் படத்தை ( கலர் ) போடவும், தயாராக உள்ளோம் என்பதையும் இத்தருணத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.)


டிஸ்கி 1..

என்னடா.. பட்டாபட்டி, காங்கிரஸ் பற்றி ஒன்னுமே சொல்லலைனு பார்க்கிறீங்களா?
”.. சே..சே.. நாம் வாழும் நாடு.. அவர்கள் போட்ட பிச்சை..”.
அவர்கள் கடவுளின் அவதாரங்கள்...


நன்றி..
.
.
.

90 comments:

 1. அண்ணே உங்க மச்சான் விலாசம் கொடுங்க ஊருக்கு போகைல நானும் சலுகை விலைல வாங்கிக்கிறேன்!

  ReplyDelete
 2. ( முக்கியமாக, இந்த காண்ராக்ட் கிடைத்தால், காண்டத்தில், இலவசமாக, தலைவர்கள் படத்தை ( கலர் ) போடவும், தயாராக உள்ளோம் என்பதையும் இத்தருணத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.)//////////

  ஜலதோஷம் புடிக்காதா?!!

  ReplyDelete
 3. முக்கியமாக, இந்த காண்ராக்ட் கிடைத்தால், காண்டத்தில், இலவசமாக, தலைவர்கள் படத்தை ( கலர் ) போடவும், தயாராக உள்ளோம் என்பதையும் இத்தருணத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.)//
  அப்படியே ஒரு ஓட்டை (ஹோல்) போடாமல் இருந்தா சரிதான்

  ReplyDelete
 4. இப்படி சொல்லி தொலைசிட்டீங்க , பாருங்க இது நடக்குதா இல்லையான்னு. ஆண் மக்களுக்கு இலவச காண்டம் திட்டத்தைதான் சொன்னேன். மற்றதெல்லாம் ஒரு வகைல முன்னமே அமலில் இருக்குதானே. , டிஸ்கி ௦, சாம்பிள் வாசகங்கள் மிக தத்ரூபம் . பட்டாப்பட்டி பேசாமல் இவர்களின் "இலக்கிய அணி தலைவர் " பதவிக்கு சென்றால் சிறப்பாக இருக்கும் .அப்படியே சந்தடி சாக்கில் நம்மளையும் கொஞ்சம் இழுத்து போட்டார்னா அண்ணாதே தான் வருங்கால தமிழக முதல்வர்.

  ReplyDelete
 5. இலவச திட்டம் ரொம்ப குறைவா இருக்கே பட்டா.... ஓ

  ரேஷன் சாமான்கள் வீட்டுக்கே டெலிவரி ன்னு வரனும் ..நடக்க சிரமம் இருக்கதா..?

  ReplyDelete
 6. //( முக்கியமாக, இந்த காண்ராக்ட் கிடைத்தால், காண்டத்தில், இலவசமாக, தலைவர்கள் படத்தை ( கலர் ) போடவும், தயாராக உள்ளோம் என்பதையும் இத்தருணத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.)//

  அது ஒன்னுதான் அவனுங்க கண்னுல படாம இருந்துச்சி .

  ReplyDelete
 7. எங்கள் தா(கே)னைத்தலையன் வருங்கால முதல்வர்,பிரதமர் டாக்குடர்ர்ரு விஜயை விட்டுவிட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.

  ReplyDelete
 8. மக்கா பட்டா இலவச உண்டக்கட்டி தின்னுட்டு .குத்த வைக்க போன காசு கேக்குறாங்க அதையும் உங்க திட்டத்துல சேர்த்து கிடுங்கா ...

  ReplyDelete
 9. //ஆண் மக்களுக்கு இலவச காண்டம்.

  கோயில்களில், அம்மாவாசை அன்று இலவச பூசை.
  //
  அப்படியே மானாட மயிலாட புகழ் கலா ,குஸ்பு ,நமீதா .இவர்கள் ஆடும் குத்தாட்டம் இலவசமாக பெரிய திரை கட்டி இலவசமாக காண்பிக்கா வேண்டும் ..அன்பு தொண்டனின் வேண்டுகோள்

  ReplyDelete
 10. காண்டம் மட்டுந்தான் பிரீயா? கூடவே அதையும் பிரீயா ஏற்பாடு பண்ண ரேகமெண்ட் பண்ணுங்க தல ,,,

  ReplyDelete
 11. அண்ணே அந்த காண்டம் ல டிசைன் பண்ற காண்ட்ராக்ட எனக்கு வாங்கி கொடுதுருங்கன்னே... நான் டிசைனர்தான்னே..

  ReplyDelete
 12. பட்டா, என்ன இது அநியாயம்? எல்லா இலவச திட்டங்களும் தலைவர்ர்ரு கொடுக்குற திட்டமாவே இருக்கே. புர்ர்ர்ரச்சிதலைவி யம்மா திட்டமான, மக்கள் அஞ்சு வருசம் சுகமா தூங்க இலவச பாய்,போர்வை,தலையணை திட்டம் எங்கய்யா?

  ReplyDelete
 13. ஹி.ஹி.ஹி..............இரு படிச்சிட்டு வர்றேன்

  ReplyDelete
 14. பட்டா நாட்டு மக்களின் இலவசங்களுக்காக தலைவர்களிடம் போராடும் உனது போர்குணம் பாராட்டத்தக்கது , இவ்வளவு ஏன் கஷ்டப் படவேண்டும்? .பேசாமல் நீயே முதல்வராகிவிட்டால் ????? (அப்பாடா கோர்த்து விட்டாச்சு )

  ReplyDelete
 15. அடுத்த தேர்தலுக்கு அப்புறம் தலைவர்ரு கொலைஞர், புர்ரச்சிதலைவி யம்மா, மருத்துவர் ங்கொய்யா எல்லாருமா சேந்து ‘தலைவர்களின் ரத்த சொந்தங்களோ அல்லது உடன்பிறவா சகோதரியின் ரத்த சொந்தங்களோ மட்டுமே மந்திரியோ முதல்வரோ ஆகமுடியும், ஊழல் செய்ய முடியும், சொத்து சேர்க்க முடியும். வேறு யாருக்கும் அந்த தகுதி இல்லை’ ன்னு ஒரு சட்டம் கொண்டுவரப்போராங்களாமே,
  அதப்பத்தி எதாவது தெரியுமா, பட்டாஜி?

  ReplyDelete
 16. யோவ் பட்டா, என்ன ஆளையே காணோம்? அடுத்த பதிவு போடும்போது வரலாம்னு கொடநாட்டுக்கு ரெஸ்ட்டு எடுக்க போய்ட்டியா?

  ReplyDelete
 17. // தேசப்படம் விருதகிரி....ஹி..ஹி நல்லாயிருக்குல்ல..//
  ஆகா....புது ட்ரெண்டா ஆரம்பிச்சு வச்சுடானையா ....இந்த பட்டா ...இனி எவன் முக்குனாலும் வராது ...என்னதுன்னு கேக்கா கூடாது

  ReplyDelete
 18. //என்னடா.. பட்டாபட்டி, காங்கிரஸ் பற்றி ஒன்னுமே சொல்லலைனு பார்க்கிறீங்களா?
  ”.. சே..சே.. நாம் வாழும் நாடு.. அவர்கள் போட்ட பிச்சை..”.
  அவர்கள் கடவுளின் அவதாரங்கள்...///

  மச்சி உன் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு

  ReplyDelete
 19. டாக்டர் விஜய் சரத்குமார், கார்த்திக் இவங்களை பத்தி சொல்லாததை வன்மையா கண்டிக்கிறேன்

  ReplyDelete
 20. // மக்களுக்கு புண்ணியம் சேர்த்த வீராங்கனை இவர்..//
  ஆமா புண்ணு ல ஈயத்தை காச்சி விட்டாதானால் புண்ணியம் .என்று வந்தது .கரெக்ட் தானே பட்டா....

  ReplyDelete
 21. அப்படியே தமிழ்மணம் ரேங்குல வரவங்களுக்கு வோட்டு போடலாமா? சொன்னா நல்லா இருக்கும்

  ReplyDelete
 22. இல்லன்னா வழுக்குப்பாறை மண்டையன் தங்கபாலு மாதிரி டெல்லிஜீ அன்னைஜீ சோனியாஜீ ஆணைக்குப்பிறகுதான் கமெண்டு போடனுமா?

  ReplyDelete
 23. அண்ணே இந்த கோஷம் போடுறதுக்கு ஓட்டு கேட்டு கேண்வாஷ் பண்றதுக்கு ஆளு வேணுமுன்னா சொல்லுங்க நம்ம பய ஒருத்தன் சென்னைல இருக்கான கூவுறதில் சிறப்பு பட்டமே வாங்கியிருக்கான் அந்த காண்ட்ராக்ட அவனுக்கு வாங்கி கொடுத்துருவோம்........

  ReplyDelete
 24. காங்கிரஸ் போட்ட பிச்சை தான் நம் நாடு என்ற உண்மையை தெரிவித்த நீங்கள் வாழ்க பல்லாண்டு.

  ReplyDelete
 25. என்ன பட்டா இப்படி சொதப்பிடீங்க... உங்க பதிவுல மனம், திடம், காரம் குறைந்த பதிவு இதுதான்.. என்னத்த பண்றது இதுக்கு மேல இவுங்கள பத்தி எதுக்குன்னு யோசிச்சிருப்பீங்க போல.. ஆன இந்த காங்கிரசு மன்னு மோகன் கலிஞ்சருக்கு வச்ச ஆப்பே நெனச்சா சிரிப்பு சிரிப்பா வருதுங்கறேன் ...

  ReplyDelete
 26. அவரு மட்டும் முதல்வராகட்டும்.. மச்சான் சதீஸ்கிட்ட சொல்லி, விருதகிரிய தேசியப்படமா அறிவிக்க சொல்லிடலாம்//
  செம பாயிண்டு

  ReplyDelete
 27. காரம் தூக்கலாவே இருக்கு...

  ReplyDelete
 28. ம் வாழும் நாடு.. அவர்கள் போட்ட பிச்சை///
  விரைவில் பிச்சை எடுப்பாங்க ஸ்பெக்ட்ரம் புண்ணியத்தால

  ReplyDelete
 29. முக்கியமாக, இந்த காண்ராக்ட் கிடைத்தால், காண்டத்தில், இலவசமாக, தலைவர்கள் படத்தை ( கலர் ) போடவும்//
  அதுல தலைவர் விரல் உயர்த்தி சக்ஸஸ் நு சிரிக்கிற மாதிரி படம் வேணும்-உண்மை தொண்டன்

  ReplyDelete
 30. சூரியன் எழுகிறது...

  எழுச்சிப்பயணம் இங்கே ஆரம்பம்..

  இலை..தொடை..இலவசம்..//////////

  விழுவது நாமாய் இருந்தாலும் எழுவது நீயாய் இரு ...........

  எழுச்சி நாயகனே ......

  ReplyDelete
 31. //இவர் பெயர் சொன்னால், சாலை ஓர மரங்கள், அதுவாக தற்கொலை செய்துகொள்ளும்.//


  ஒவ்வொரு புகைப்படத்துடன் விளக்கம் விலாசல்.

  ReplyDelete
 32. சூப்பருங்கோ

  நண்பர்களே உதவுங்கள் -

  http://vikkiulagam.blogspot.com/2011/01/help.html

  காத்திருக்கிறேன்.....

  ReplyDelete
 33. //கலைஞர்.//

  போங்க அண்ணா , அவர் பேரு கலைஞ்சர் ,கலைஞர் கிடையாது

  ReplyDelete
 34. // மங்குனி அமைச்சர் said...
  பட்டா நாட்டு மக்களின் இலவசங்களுக்காக தலைவர்களிடம் போராடும் உனது போர்குணம் பாராட்டத்தக்கது , இவ்வளவு ஏன் கஷ்டப் படவேண்டும்? .பேசாமல் நீயே முதல்வராகிவிட்டால் ????? (அப்பாடா கோர்த்து விட்டாச்சு )//  என் ஒட்டு பட்டா பட்டி அண்ணனுக்கே ..!!

  ReplyDelete
 35. @வைகை said... 1
  அண்ணே உங்க மச்சான் விலாசம் கொடுங்க ஊருக்கு போகைல நானும் சலுகை விலைல வாங்கிக்கிறேன்!
  //

  பேரு மங்குனி.. அட்ரஸ் மெயில் பண்றேன்.. பார்த்து(?) கவனிங்க..

  ReplyDelete
 36. @ரஹீம் கஸாலி said... 3
  முக்கியமாக, இந்த காண்ராக்ட் கிடைத்தால், காண்டத்தில், இலவசமாக, தலைவர்கள் படத்தை ( கலர் ) போடவும், தயாராக உள்ளோம் என்பதையும் இத்தருணத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.)//
  அப்படியே ஒரு ஓட்டை (ஹோல்) போடாமல் இருந்தா சரிதான்
  //

  அப்படி போட்டா, கட்சிக்கு புது உறுப்பினர்கள் கிடைப்பாங்க அண்ணாச்சி...Win-Win Situation

  ReplyDelete
 37. @கக்கு - மாணிக்கம் said... 4
  இப்படி சொல்லி தொலைசிட்டீங்க , பாருங்க இது நடக்குதா இல்லையான்னு. ஆண் மக்களுக்கு இலவச காண்டம் திட்டத்தைதான் சொன்னேன். மற்றதெல்லாம் ஒரு வகைல முன்னமே அமலில் இருக்குதானே. , டிஸ்கி ௦, சாம்பிள் வாசகங்கள் மிக தத்ரூபம் . பட்டாப்பட்டி பேசாமல் இவர்களின் "இலக்கிய அணி தலைவர் " பதவிக்கு சென்றால் சிறப்பாக இருக்கும் .அப்படியே சந்தடி சாக்கில் நம்மளையும் கொஞ்சம் இழுத்து போட்டார்னா அண்ணாதே தான் வருங்கால தமிழக முதல்வர்.

  //

  ஏண்ணே.. நமக்கு முதுகெலும்பு வளையாதே!!

  ReplyDelete
 38. @ஜெய்லானி said... 5
  இலவச திட்டம் ரொம்ப குறைவா இருக்கே பட்டா.... ஓ
  ரேஷன் சாமான்கள் வீட்டுக்கே டெலிவரி ன்னு வரனும் ..நடக்க சிரமம் இருக்கதா..?
  //

  அட.. ஆமா பாஸ்.... கேப்டன் இதை பற்றி முதல்லே கூ(றி)விட்டாரே..
  எப்படி விட்டேன்...?

  ReplyDelete
 39. @பரிதி நிலவன் said... 7
  எங்கள் தா(கே)னைத்தலையன் வருங்கால முதல்வர்,பிரதமர் டாக்குடர்ர்ரு விஜயை விட்டுவிட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.

  //

  நானும்தான்.. ஹி..ஹி

  ReplyDelete
 40. @இம்சைஅரசன் பாபு.. said... 8
  மக்கா பட்டா இலவச உண்டக்கட்டி தின்னுட்டு .குத்த வைக்க போன காசு கேக்குறாங்க அதையும் உங்க திட்டத்துல சேர்த்து கிடுங்கா ...
  அப்படியே மானாட மயிலாட புகழ் கலா ,குஸ்பு ,நமீதா .இவர்கள் ஆடும் குத்தாட்டம் இலவசமாக பெரிய திரை கட்டி இலவசமாக காண்பிக்கா வேண்டும் ..அன்பு தொண்டனின் வேண்டுகோள்

  //

  நடக்கும்..நடக்கும்.. ஆனா அதுக்கு அங்க அலகு குத்தனும் ,,ரெடியா?.. ஹி..ஹி

  ReplyDelete
 41. @"ராஜா" said... 10
  காண்டம் மட்டுந்தான் பிரீயா? கூடவே அதையும் பிரீயா ஏற்பாடு பண்ண ரேகமெண்ட் பண்ணுங்க தல ,,,
  //

  ஆகா.. கட்சிக்காரங்களை, மாமா ஆக்காம விடமாட்டீங்க போல.!!!

  ReplyDelete
 42. @karthikkumar said... 11
  அண்ணே அந்த காண்டம் ல டிசைன் பண்ற காண்ட்ராக்ட எனக்கு வாங்கி கொடுதுருங்கன்னே... நான் டிசைனர்தான்னே..
  //

  சே..சே.. அது மச்சானுக்கு கொடுத்தாச்சு. அடுத்த ஜென்மத்தில பார்க்கலாம்..

  ReplyDelete
 43. @வானம் said... 12
  பட்டா, என்ன இது அநியாயம்? எல்லா இலவச திட்டங்களும் தலைவர்ர்ரு கொடுக்குற திட்டமாவே இருக்கே. புர்ர்ர்ரச்சிதலைவி யம்மா திட்டமான, மக்கள் அஞ்சு வருசம் சுகமா தூங்க இலவச பாய்,போர்வை,தலையணை திட்டம் எங்கய்யா?
  அடுத்த தேர்தலுக்கு அப்புறம் தலைவர்ரு கொலைஞர், புர்ரச்சிதலைவி யம்மா, மருத்துவர் ங்கொய்யா எல்லாருமா சேந்து ‘தலைவர்களின் ரத்த சொந்தங்களோ அல்லது உடன்பிறவா சகோதரியின் ரத்த சொந்தங்களோ மட்டுமே மந்திரியோ முதல்வரோ ஆகமுடியும், ஊழல் செய்ய முடியும், சொத்து சேர்க்க முடியும். வேறு யாருக்கும் அந்த தகுதி இல்லை’ ன்னு ஒரு சட்டம் கொண்டுவரப்போராங்களாமே,
  அதப்பத்தி எதாவது தெரியுமா, பட்டாஜி?
  இல்லன்னா வழுக்குப்பாறை மண்டையன் தங்கபாலு மாதிரி டெல்லிஜீ அன்னைஜீ சோனியாஜீ ஆணைக்குப்பிறகுதான் கமெண்டு போடனுமா?

  //

  அய்.. நம்ம வானம்..
  தங்கபாலு பேரு ஜோரு..

  ReplyDelete
 44. @மங்குனி அமைச்சர் said... 13
  ஹி.ஹி.ஹி..............இரு படிச்சிட்டு வர்றேன்
  பட்டா நாட்டு மக்களின் இலவசங்களுக்காக தலைவர்களிடம் போராடும் உனது போர்குணம் பாராட்டத்தக்கது , இவ்வளவு ஏன் கஷ்டப் படவேண்டும்? .பேசாமல் நீயே முதல்வராகிவிட்டால் ????? (அப்பாடா கோர்த்து விட்டாச்சு )
  //

  நீ லேட்டு.. அதுக்கு முன்னாடியே உன்னை கோத்தாச்சு..கமென்ஸ் போடும்முன் உன்னை சுற்றி சுருக்கு கயிறு இருக்கானு பார்த்துட்டு , அப்பால ஏதாவது போடு மச்சான்..

  ReplyDelete
 45. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 18
  // மச்சி உன் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு//

  ஹி..ஹி என்க்கும்தான்


  //
  டாக்டர் விஜய் சரத்குமார், கார்த்திக் இவங்களை பத்தி சொல்லாததை வன்மையா கண்டிக்கிறேன்
  //

  யோவ்.. யாருய்யா இவங்க?..

  ReplyDelete
 46. @மாணவன் said... 23
  அண்ணே இந்த கோஷம் போடுறதுக்கு ஓட்டு கேட்டு கேண்வாஷ் பண்றதுக்கு ஆளு வேணுமுன்னா சொல்லுங்க நம்ம பய ஒருத்தன் சென்னைல இருக்கான கூவுறதில் சிறப்பு பட்டமே வாங்கியிருக்கான் அந்த காண்ட்ராக்ட அவனுக்கு வாங்கி கொடுத்துருவோம்........
  //

  அட.. அதுக்குனே, சரக்கு ஊத்தி , அடிமைகளை, வளர்த்துக்கிட்டு இருக்கோம்.. பத்தலேனா, கூப்பிடறோம்..ஹி..ஹி

  ReplyDelete
 47. @அமுதா கிருஷ்ணா said... 24
  காங்கிரஸ் போட்ட பிச்சை தான் நம் நாடு என்ற உண்மையை தெரிவித்த நீங்கள் வாழ்க பல்லாண்டு.
  //

  மோதிலால் நேரு, ஜவஹைர்லால் நேரு, காந்தி என்ற மும்மூர்திகளால், கிடைத்தது நம் இந்தியா..
  அவர்களே நம் முன்னோர்கள்.. அவர்களின் அடிமை நாம்.. இதை நான் சொல்ல்லே.. நம் ரத்தம் சொல்லுது..

  ReplyDelete
 48. @கே.ஆர்.பி.செந்தில் said... 25
  என்ன பட்டா இப்படி சொதப்பிடீங்க... உங்க பதிவுல மனம், திடம், காரம் குறைந்த பதிவு இதுதான்.. என்னத்த பண்றது இதுக்கு மேல இவுங்கள பத்தி எதுக்குன்னு யோசிச்சிருப்பீங்க போல.. ஆன இந்த காங்கிரசு மன்னு மோகன் கலிஞ்சருக்கு வச்ச ஆப்பே நெனச்சா சிரிப்பு சிரிப்பா வருதுங்கறேன் ...
  //

  விடுண்ணா..விடுண்ணா.. ரொம்ப நாள் கழிச்சு பதிவு எழுதினா இப்படித்தான்..ஹி..ஹி

  ReplyDelete
 49. @ஆர்.கே.சதீஷ்குமார் said... 26
  செம பாயிண்டு
  காரம் தூக்கலாவே இருக்கு...
  //

  நீங்க வேற.. உப்பே போடலே,.அடுத்த பதிவுல சமச்சீர்(?) பண்ணிடலாம்

  ReplyDelete
 50. @அஞ்சா சிங்கம் said... 30
  விழுவது நாமாய் இருந்தாலும் எழுவது நீயாய் இரு ...........
  எழுச்சி நாயகனே ......

  //

  ஆகா.. இதுவும் நல்லாயிருக்கே..!!

  ReplyDelete
 51. @THOPPITHOPPI said... 31
  //இவர் பெயர் சொன்னால், சாலை ஓர மரங்கள், அதுவாக தற்கொலை செய்துகொள்ளும்.//
  ஒவ்வொரு புகைப்படத்துடன் விளக்கம் விலாசல்.

  //

  வாங்க பாஸ்.

  ReplyDelete
 52. @விக்கி உலகம் said... 32
  சூப்பருங்கோ
  நண்பர்களே உதவுங்கள் -
  http://vikkiulagam.blogspot.com/2011/01/help.html
  காத்திருக்கிறேன்.....
  //

  படிச்சேன் பாஸ்..கமென்ஸ் போட்டிருக்கேன்.. பார்த்துட்டு...தவறா நினக்காதீங்க..

  ReplyDelete
 53. @கோமாளி செல்வா said... 33
  போங்க அண்ணா , அவர் பேரு கலைஞ்சர் ,கலைஞர் கிடையாது
  என் ஒட்டு பட்டா பட்டி அண்ணனுக்கே ..!!
  //

  ஆமா..ஆமா.. பட்டாபட்டி அண்ணனுக்கே..

  ReplyDelete
 54. @!@ ஜெய்லானி கூறியது

  // ரேஷன் சாமான்கள் வீட்டுக்கே டெலிவரின்னு வரனும் ..நடக்க சிரமம் இருக்கதா//

  இன்னும் பட்டா மச்சினனுக்கே காண்ட்ராக்ட் கெடைக்கலேயே. அது எப்படி?? நடக்க முடியாம சிரமப்படுவாங்க. அவ்வ்வ்வவ்..

  ReplyDelete
 55. நம்ம மாறாத தலையெழுத்து இது.....

  கிண்டலா சொல்லியிருந்தாலும் இதுக்கு பின்னால இருக்குற ஆழமான வலியையும் உணர முடியுது...

  என்ன செய்ய.. ஒரு கிளாஸ் தண்ணிய குடிச்சுட்டு அடுத்த வேலைய பாக்க போகவேண்டியதுதான் பட்டா!

  ReplyDelete
 56. நல்லா வச்சீங்க ஆப்பு.....

  ReplyDelete
 57. @மங்குனி அமைச்சர் said... 13
  ஹி.ஹி.ஹி..............இரு படிச்சிட்டு வர்றேன்
  பட்டா நாட்டு மக்களின் இலவசங்களுக்காக தலைவர்களிடம் போராடும் உனது போர்குணம் பாராட்டத்தக்கது , இவ்வளவு ஏன் கஷ்டப் படவேண்டும்? .பேசாமல் நீயே முதல்வராகிவிட்டால் ????? (அப்பாடா கோர்த்து விட்டாச்சு )
  //

  நீ லேட்டு.. அதுக்கு முன்னாடியே உன்னை கோத்தாச்சு..கமென்ஸ் போடும்முன் உன்னை சுற்றி சுருக்கு கயிறு இருக்கானு பார்த்துட்டு , அப்பால ஏதாவது போடு மச்சான்..///

  எலேய் மங்கு இதுக்கு நீ நாண்டுகிட்டு சாவலாம். வைகை உன்னை தேடிட்டு இருக்காரு. உன் நம்பர் கொடுக்கவா?

  ReplyDelete
 58. @மங்குனி அமைச்சர் said... 13
  ஹி.ஹி.ஹி..............இரு படிச்சிட்டு வர்றேன்
  பட்டா நாட்டு மக்களின் இலவசங்களுக்காக தலைவர்களிடம் போராடும் உனது போர்குணம் பாராட்டத்தக்கது , இவ்வளவு ஏன் கஷ்டப் படவேண்டும்? .பேசாமல் நீயே முதல்வராகிவிட்டால் ????? (அப்பாடா கோர்த்து விட்டாச்சு )
  //

  நீ லேட்டு.. அதுக்கு முன்னாடியே உன்னை கோத்தாச்சு..கமென்ஸ் போடும்முன் உன்னை சுற்றி சுருக்கு கயிறு இருக்கானு பார்த்துட்டு , அப்பால ஏதாவது போடு மச்சான்..///

  எலேய் மங்கு இதுக்கு நீ நாண்டுகிட்டு சாவலாம். வைகை உன்னை தேடிட்டு இருக்காரு. உன் நம்பர் கொடுக்கவா?

  ReplyDelete
 59. Country Rule People Party (நாடாளும் மக்கள் கட்சி) தல கார்த்திக், Equal People Party(ச.ம.க.) தல சரத் மற்றும் Only You Possible (உன்னால் முடியும்) தளபதி விசய் ஆகியோரை பற்றி பெரிதாக எதுவும் இங்கே இல்லாததால்...இந்த பதிவின் மேல் Confident Nahi Hai (நம்பிக்கை இல்லா தீர்மானம்) கொண்டுவருகிறேன்.

  ReplyDelete
 60. //
  @இம்சைஅரசன் பாபு.. said... 8
  மக்கா பட்டா இலவச உண்டக்கட்டி தின்னுட்டு .குத்த வைக்க போன காசு கேக்குறாங்க அதையும் உங்க திட்டத்துல சேர்த்து கிடுங்கா ...
  அப்படியே மானாட மயிலாட புகழ் கலா ,குஸ்பு ,நமீதா .இவர்கள் ஆடும் குத்தாட்டம் இலவசமாக பெரிய திரை கட்டி இலவசமாக காண்பிக்கா வேண்டும் ..அன்பு தொண்டனின் வேண்டுகோள்

  //

  நடக்கும்..நடக்கும்.. ஆனா அதுக்கு அங்க அலகு குத்தனும் ,,ரெடியா?.. ஹி..ஹி

  அதுக்கு தான் என் பக்கத்துலேயே ரமேஷ வைச்சிருக்கேன் ....அவனக்கு அங்க குத்திருவோம்...ஒன்னும் பிரெச்சனை இல்ல .......

  ReplyDelete
 61. இம்சைஅரசன் பாபு.. said... 62

  //
  @இம்சைஅரசன் பாபு.. said... 8
  மக்கா பட்டா இலவச உண்டக்கட்டி தின்னுட்டு .குத்த வைக்க போன காசு கேக்குறாங்க அதையும் உங்க திட்டத்துல சேர்த்து கிடுங்கா ...
  அப்படியே மானாட மயிலாட புகழ் கலா ,குஸ்பு ,நமீதா .இவர்கள் ஆடும் குத்தாட்டம் இலவசமாக பெரிய திரை கட்டி இலவசமாக காண்பிக்கா வேண்டும் ..அன்பு தொண்டனின் வேண்டுகோள்

  //

  நடக்கும்..நடக்கும்.. ஆனா அதுக்கு அங்க அலகு குத்தனும் ,,ரெடியா?.. ஹி..ஹி

  அதுக்கு தான் என் பக்கத்துலேயே ரமேஷ வைச்சிருக்கேன் ....அவனக்கு அங்க குத்திருவோம்...ஒன்னும் பிரெச்சனை இல்ல .......
  ///

  கடவுளே நண்பகளிடம் இருந்து என்னை காப்பாத்து எதிரிகளை நான் பாத்துக்கிறேன்

  ReplyDelete
 62. மச்சி!! டிஸ்கி 0 சூப்பர்... :)))

  ReplyDelete
 63. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

  நீ லேட்டு.. அதுக்கு முன்னாடியே உன்னை கோத்தாச்சு..கமென்ஸ் போடும்முன் உன்னை சுற்றி சுருக்கு கயிறு இருக்கானு பார்த்துட்டு , அப்பால ஏதாவது போடு மச்சான்..///

  எலேய் மங்கு இதுக்கு நீ நாண்டுகிட்டு சாவலாம். வைகை உன்னை தேடிட்டு இருக்காரு. உன் நம்பர் கொடுக்கவா?/////////////


  போலீஸ்கார் இதெல்லாம் கேட்டுகிட்டா இருக்கது? நம்பர கொடுங்க மொதல்ல....வாங்குறதுல உங்களுக்கு பாதி தரேன்

  ReplyDelete
 64. TERROR-PANDIYAN(VAS) said... 64

  மச்சி!! டிஸ்கி 0 சூப்பர்... :)))//

  அப்டின்னா மிச்சதெல்லாம் ரொம்ப கேவலமாவா இருக்கு?

  ReplyDelete
 65. பதவியை ராஜினாமா செய்தார் அழகிரி

  ReplyDelete
 66. தமிழர்களே தமிழர்களே.... நீங்கள் என் கோமணத்தை உருவினாலும்... பட்டாபட்டியுடன் எழுந்து வருவேன்.........

  ReplyDelete
 67. /////மக்கள்தான் குடும்பம், குடும்பம்தான் மக்கள்' என்ற உயரிய கொள்கைகொண்ட ப(பு)ழுத்த பழம்..//////

  87 வயசுல வேற என்ன பச்சபழமா இருக்கும்?

  ReplyDelete
 68. ////விரைவில் பொதுக்குழு கூட்டப்போகிறாராம். உம்..பார்ப்போம். 'எந்த மக்களின் பேரன்' அரசியலுக்கு வரப்போகிறாரோ!... காரமடை ஜோசியனுக்கு மட்டும்தான் தெரியும்./////

  ஆமா இப்பிடித் தான் பீத்த பையனை கட்சிக்கு ஆகாதுன்னு மதுரைக்கு அனுப்புனீங்க, இப்போ கொடி புடிக்கலியா?

  ReplyDelete
 69. /////'அம்மா' என்று செல்லமாக, ரத்தங்களால் அழைக்கப்படும் கான்வென்ட் மாமி./////

  யோவ் ரத்தத்தின் ரத்தங்கள்னு தெளிவா சொல்லுய்யா....

  ReplyDelete
 70. //////பாவம்... என்னதான் பண்ணுவாங்க?.. எல்லோரும் கால்ல விழுந்து, ஏதாவது விழும் என எழாமல் இருப்பதால், அவருக்கு கால்வலி. அதனால..., கொடை நாட்டுக்கு போறாங்க..//////

  மத்தவிங்க இவங்க கால்ல விழுக்றதுனாலதான் கால்வலியா? அப்போ எடுக்க வேண்டியதுதான்..... ரெஸ்ட்டு......!

  ReplyDelete
 71. ////'கேப்டன்' என்று செல்லமாக, மக்களால் அழைக்கப்படும் அடுத்த முதல்வர்(?).////

  வாய்ல அடி...வாய்ல அடி...வாய்ல அடி...வாய்ல அடி... யோவ் டாகுடர் கேப்டன்னு சொல்லுய்யா....!

  ReplyDelete
 72. //////உங்கள் பொன்னான வாக்கை, இவருக்கோ, அல்லது அவரது துணவியாருக்கோ, அல்லது மச்சான் சதீஸ்க்கோ போடுங்க.. போடுங்க. போட்டுக்கிட்டே இருங்க.///////

  என்ன சொந்தக்காரங்க கம்மியா இருக்காய்ங்க? இது சரிப்பட்டு வராது....

  ReplyDelete
 73. ////// 'பிள்ளைய பெற்றா கண்ணீரு'னு பாவம், வயதான காலத்தில், மகனின் வேலை வாய்புக்காக, கடைகடையா ஏறி இறங்கிட்டு இருக்காரு..////////////

  இவருதான் கவலையே இல்லாத அரசியல்வியாதி.... எந்தக் கட்சி ஆட்சிய புடிச்சாலும் போய் சேந்துடலாம், புள்ளைங்க, பேரனுங்க, மச்சான், சகொதரின்னு எந்தப் பிக்கல் பிடுங்களுமே இல்ல.... எப்பவும் சேம் டீலிங்தான்... ஒரே பையன்... ஒரே போஸ்ட்....!

  ReplyDelete
 74. //////இந்த லிஸ்டில், மீதியுள்ள நல்ல உள்ளங்களை பட்டியலிட்டுக்கொள்ளலாம். பாவம்.. அவர்களும் மக்களுக்காக உழைக்க , ஓ.கே..ஓ.கே.( தங்கபாலு அண்ணே.. இதில் உங்கபேரும் இருக்கு..பயப்படாதீங்க..!!)///////

  தொங்கபால்வெல்லாம் சிற்றரசரா... என்ன கோலம் இது? பேரரசர் கோச்சுக்க மாட்டாரா....?

  ReplyDelete
 75. இத்தன எலவசம் போடுறீங்க... காண்டம் வேற எலவசமா கொடுக்கறீங்க... நம்ம சேலம் டாகுடர்கிட்ட ஒரு நல்ல லேகியமா வாங்கி ரேசன்ல போடப்படாதுங்களா? ?

  ReplyDelete
 76. என்னது தலைவர்கள் படமா அதுலேயா? அப்போ பஞ்ச் லைனும் உண்டா?

  சூரியன் எழுகிறது
  எழுச்சிப்பயணம் இங்கே ஆரம்பம்....
  இலை தொடை இலவசம்....

  அடாடாடா.....

  ReplyDelete
 77. பட்டாபட்டி.... said...

  @மங்குனி அமைச்சர் said... 13
  ஹி.ஹி.ஹி..............இரு படிச்சிட்டு வர்றேன்
  பட்டா நாட்டு மக்களின் இலவசங்களுக்காக தலைவர்களிடம் போராடும் உனது போர்குணம் பாராட்டத்தக்கது , இவ்வளவு ஏன் கஷ்டப் படவேண்டும்? .பேசாமல் நீயே முதல்வராகிவிட்டால் ????? (அப்பாடா கோர்த்து விட்டாச்சு )
  //

  நீ லேட்டு.. அதுக்கு முன்னாடியே உன்னை கோத்தாச்சு..கமென்ஸ் போடும்முன் உன்னை சுற்றி சுருக்கு கயிறு இருக்கானு பார்த்துட்டு , அப்பால ஏதாவது போடு மச்சான்..////


  அடப்பாவி நானா அவன் ???? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........................

  ReplyDelete
 78. //( முக்கியமாக, இந்த காண்ராக்ட் கிடைத்தால், காண்டத்தில், இலவசமாக, தலைவர்கள் படத்தை ( கலர் ) போடவும், தயாராக உள்ளோம் என்பதையும் இத்தருணத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.)
  //

  அண்ணே நல்லா தான் கலக்குறிங்க

  ReplyDelete
 79. அண்ணே எனக்கும் அந்த காண்டம் பிசினஸ ஸ்டாட் பண்ணுறத்துக்கு Help பண்ணுங்கோவேன்

  ReplyDelete
 80. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு'னு , அவரவர் குழந்தைகுட்டியை பார்க்ககூட நேரமில்லாமல், மக்களுக்கு உழைக்கும் கட்சிக்காரர்களின் புகழை, நாம் பாடாமல் எவர் பாடுவார்?. என்ன சார்?. நான் சொல்லுவது சரிதானே.

  சரிதான்! நன்றாகவே சிரிக்க வைக்கிறீர்கள் கூடவே சிந்திக்கவும்.......................!

  ReplyDelete
 81. 1.கருணாநிதி வசனம் எழுதிய படம் பார்க்க ப்ரீ பாஸ் ...டிக்கெட்ஸ்!
  2.மதுரையில் போஸ்டர்,ப்ளெக்ஸ் தொழில் தொடங்க இலவச நிதி உதவி...
  இதையும் இலவச திட்டங்களில் சேர்த்து இருக்கலாம் பட்டா சார்...:)))

  ReplyDelete
 82. நேர் நேர் தேமா - உன்னை
  நேரில் பார்த்தால் கைமா!
  பாரில் பார்த்தால்
  நீ கோமா! - புல்
  பாட்டிலைத் தூக்கிக்கொண்டு
  பக்கத்து சந்துக்கு வாமா! - உடன்
  பரோட்டா தின்றால் வரமா? சாபமா??

  இந்த கவிதையை படிச்சதுக்கப்புறமாவது நீ நம்புறியா நான்தான் அடுத்த தமிழினத்தலைவர்ன்னு?

  ReplyDelete
 83. அது சரி “இல்லை தொடை இலவசம்” “காண்டம்ல தலைவர் படம்” இது ரொம்ப டூமச்

  ReplyDelete
 84. கண்களை இறுக்க மூடிக்கொண்டு, கைகளால், உங்களின் ஒரே ஒரு பரம்பரை சொத்தான, கோமணத்தை இறுக்க பற்றிக்கொண்டு வெளியே போய்விடுங்கள்//
  கடைசியில் கோமணமாவது மிஞ்சுமா ????

  ReplyDelete
 85. //ப(பு)ழுத்த பழம்.. // நீங்க போட்டுள்ள படத்துக்கு ஏத்த வசனம்ங்கண்ணா... சூப்பர்!

  ReplyDelete
 86. //விரைவில் பொதுக்குழு கூட்டப்போகிறாராம்.// இவரு என்னா சொல்றாரோ அது தான் கடைசியா நடக்கும், அதுக்கப்புறம் பொதுக் குழு, புண்ணாக்கு குழு எல்லாம் போட்டு சீன் போடுறது எதுக்குன்னே புரியல. ஓஹோ... கட்சி ஜனநாயக முறைப் படி செயல் படுதுன்னு காமிக்கிறதுக்கா? இந்த குசும்பு தானே வேணாம்கிறது, கட்சிக்குள்ள நடப்பது சர்வாதிகாரம், மன்னராட்சி அல்லவா? அப்பனுக்கப்புரம் மவன் என்பதுக்கு வேறென்ன அர்த்தம்?

  ReplyDelete
 87. //ஏன் அடிக்கடி கொடை நாடு போறாங்க?// கொட நாடு போனாத்தான் ஆரோக்கியமா இருக்க முடியும், ஆரோக்கியமா இருந்தாத் தான் நீண்ட நாள் மக்களுக்கு தொடாற்ற முடியும் என்கிற அக்கறை தான்.
  [இங்கேயே இருந்தா வெயிலில் தோல் கலரு மங்கிடும்கண்ணா.hi...hi...hi...]

  ReplyDelete
 88. //முதியவர்களுக்கு, இலவச சுடுகாடு.// இவனுங்க ஆட்சியைப் பார்த்தா எல்லோருக்குமே சுடுகாடு கேட்க வேண்டிய நிலைதான் வரும்.

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!