Pages

Wednesday, August 18, 2010

உமாசங்கரை பழிவாங்கிய அரசு எ(இய)ந்திரத்திற்கு...

.
.


சுடுகாட்டில ஊழல்? - அமைச்சராக்கி அழகு பார்ப்போம்..
ஸ்பெக்ரம் ஊழல்? - ஊ..ஊ..சந்துமுனையில சமரசம்..

கணவனுக்கு தண்டனையா? - ’கல்’இனத்தை துடைத்து அழிப்போம்..
காவல் தெய்வங்களை - கண்மூடி காதலிப்போம்..

தமிழக மீனவர்களா? - சரி..சரி.. தந்தி அடி..
அறிவு துளிர்க்கிறதா? -  டாஸ்மார்க்கை கையிலெடு..

ஆங்கிலத்தில் தடுமாற்றம்
- அடடா..சட்டம் மாற்றம்..
கேள்விகள் பிறக்கிறதா? - கடற்கரையில் படுத்துவிடு..

முதுமையில் சிகிச்சை?
- முடிந்தவரை அனுப்பிவிடு..
முக்கல், முனங்கள் வந்தால்..
முக்காடு போட்டுவிடு..

தனிமனிதச்சுதந்திரமா? - தக்காளி போட்டுத் தள்ளு..
ஊழலுக்கு எதிரியா? - வீடு கட்டி போட்டுத்தள்ளு..

மனதில கேள்விகளா?
- மாதர்(?) குஷ்புவை.. மகிழ்வுடன் மேடையேற்று..
ஊழலுக்கு இவன் தடையா? -  குந்த விட்டு குண்%$#டி அடி..

கரம்சந்த் காந்தி.. இந்திரா காந்தி..
ராஜீவ் காந்தி.. சோனியா காந்தி..
ராகுல் காந்தி.. பிரியங்கா காந்தி(!)..
மிருகத்தை பாதுகாக்கும் ,அய்யோ.. நம்ம  மேனகா காந்தி..

அய்யா காந்திகளும்..அம்மா காந்திகளும்..
உடன்பிறந்த மற்றும் பிறவா சகோதரிகளும்..
கருப்பு எம்.ஜி.ஆர்..  காடுவெட்டி மாமேதை..
வெள்ளை வேட்டி கட்டி..வீறாப்பா போராடும்..
மனிதர்களை மிருகமாக்கி, மந்தைகளாய்..... ஆக்கும் வரை..
ஓயாது பாடுபடும் ஓங்காரச்செல்லங்களே..

கும்பல்கள் கேட்கட்டுமே.. கும்மாளம் அடிக்கட்டுமே..
கூச்சல்கள் பல கண்டோம்.. குடும்பம்தான் எங்கள் (தொலை)நோக்கு..

வாழ்க ஜனநாயகம்.. வளர்க வாழும் கடவுள்கள்..
வாழையடி வாழையாக.. வளைந்தைபடி தோள் கொடுப்போம்..

டிஸ்கி :
ஊழலைய அம்பலமாக்கிய உமா சங்கருக்கு, பல தடைகள் வந்தாலும்..
உண்மை ஒரு நாள் வெளிவரும்..
அதுவரை மனிதனாய்... தோள் கொடுக்க விரும்பும்.. மனிதர்களே..
ஒன்றுபடுங்கள்..

.
.
.

59 comments:

 1. தோள் குடுத்துட்டேன்..

  ReplyDelete
 2. பட்டா இதெல்லாம் அவிங்களுக்கு உரைக்குன்னு நெனக்குரீங்க... அதெல்லாம் உப்பு போட்டு சாபிடரவிங்களுக்கு ..

  உமா சங்கருக்கு என் ஆதரவும்..

  ReplyDelete
 3. //ஊழலைய அம்பலமாக்கிய உமா சங்கருக்கு, பல தடைகள் வந்தாலும்..
  உண்மை ஒரு நாள் வெளிவரும்..
  அதுவரை மனிதனாய்... தோள் கொடுக்க விரும்பும்.. மனிதர்களே..
  ஒன்றுபடுங்கள்..//

  நச். பட்டா.

  ReplyDelete
 4. நல்லா காரமாச் சொல்லிருக்கே.
  நனும் பதிவு போட்ரிக்கெ ’குரு’ படி.

  உன்னோட பதிவுதான் நல்லா வந்திருக்கு...

  ReplyDelete
 5. /ஊழலைய அம்பலமாக்கிய உமா சங்கருக்கு,//

  நன்றி பட்டா ஊழலைய அம்பலமாக்கியவருக்கு நமது ஆதரவை தருவோம்

  ReplyDelete
 6. //ஊழலைய அம்பலமாக்கிய உமா சங்கருக்கு, பல தடைகள் வந்தாலும்..
  உண்மை ஒரு நாள் வெளிவரும்..
  அதுவரை மனிதனாய்... தோள் கொடுக்க விரும்பும்.. மனிதர்களே..
  ஒன்றுபடுங்கள்..//

  நானும் மனிதன் தான்....

  ReplyDelete
 7. செம சூடு பட்டா !! இந்த மாதிரி பதிவு வரும் எதிர்பார்த்தது தான்

  ReplyDelete
 8. பட்டா நானும் இருக்கேன் :)

  ReplyDelete
 9. மானம்கெட்ட ஈத்தரைகள் மண்ணாகனும்...
  என் ஆதரவும் இங்கே, பதிவு செய்கிறேன்... நன்றி பட்டா..!

  ReplyDelete
 10. பட்டாபட்டி பஞ்ச் வச்சாச்சு. வேண்டிய ஆளுக்கு எப்போ உரைக்கப் போகுது.

  ReplyDelete
 11. வ‌ண‌க்க‌ம் ப‌ட்டா... அர‌சுக்கு என்னுடைய‌ க‌ண்ட‌ன‌ங்க‌ளை இங்கு ப‌திவு செய்கிறேன்.

  ReplyDelete
 12. //வளைந்தைபடி தோள் கொடுப்போம்..//

  செருப்படி பட்டா!!

  ReplyDelete
 13. //ஊழலைய அம்பலமாக்கிய உமா சங்கருக்கு, பல தடைகள் வந்தாலும்..
  உண்மை ஒரு நாள் வெளிவரும்.. //

  நல்ல வரும்... இவனுங்க வர விட்டுட்டாலும்.. போ பட்டா...

  ReplyDelete
 14. //அதுவரை மனிதனாய்... தோள் கொடுக்க விரும்பும்.. மனிதர்களே..
  ஒன்றுபடுங்கள்..//

  தோள் கொடுக்கிறேன்...

  ReplyDelete
 15. ஓகே.... வால்பையன் ஒரு ஐடியா சொல்லிருக்காரு பாரு பட்டா ..................(அனைவரும் வால்பையன் பிளாக் பார்க்கவும் )
  அனைவரும் வால்பையன் பிளாக் பார்க்கவும்
  அனைவரும் வால்பையன் பிளாக் பார்க்கவும்
  அனைவரும் வால்பையன் பிளாக் பார்க்கவும்

  ReplyDelete
 16. உங்கள் பேட்டை ரேப் சூப்பர்.

  ReplyDelete
 17. எனது கண்டனத்தையும் பதிவு செய்கிறேன்!

  ReplyDelete
 18. அண்ணே, யாருண்ணே இந்த உமாசங்கரு...?

  ReplyDelete
 19. துணிந்தமைக்கு தோள் கொடுப்போம்:)

  ReplyDelete
 20. தமிழகத்தின் தலைசிறந்த அதிகாரிகளில் ஒருவர் என்பதால் மட்டுமல்ல...அவர் முதன்முதலில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய மாவட்டத்தை சேர்ந்தவன் என்ற முறையிலும் மக்களுக்காக தள்ளாத வயதிலும் அயராது உழைத்துகொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் மாநிலத்தின் தலைமகன் திரு கலைஞர் அவர்களின் செல்லபிள்ளயாகவும் திமுக இளைங்கரணி செயலாளராகவும் சிறிது காலம் யாருக்கும் தெரியாமல் பணியாற்றியதர்க்காகவும், திரு உமா சங்கர் IAS அவர்களுக்கு என் ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்...! :)

  ReplyDelete
 21. உமா ஷங்கர் நல்லவரா, கெட்டவரா தெரியாது. ஆனால் இதுவரை நடந்த ஊழலுக்கும், இனிமேல் நடக்கப் போகும் ஊழலுக்கும் (கண்டிப்பா நடக்கும், மூணு வேலை சோறு திங்காம இருக்க முடியுமா??? அது போல தான் இதுவும்! இன்றியமையாதது! பஞ்சபூதம், ஐம்புலன் வரிசையில் ஆறாவது பூதம், ஆறாவதுபுலன்!!) என் கடும் கண்டனங்கள்.

  யார் எப்படி இருந்தாலும் நான் லஞ்சம் குடுக்க மாட்டேன், லஞ்சம் வாங்க மாட்டேன், ஊழலை எதிர்த்து களத்தில் இறங்கி போராடாவிட்டாலும், ஊழலுக்கு துணை நிற்க மாட்டேன்.

  மோகன்

  ReplyDelete
 22. பணிச்சுமை காரணமாக எனது வலைப்பூவில் இதற்கு ஆதரவாக பதிவிட முடியவில்லை .. இருந்தாலும் இந்தப் பின்னூட்டத்தின் வாயிலாக எனது ஆதரவினை திரு உமா சங்கர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 23. Govt must be reconsider his suspension.I support Umasankar IAS

  ~TSEKAR

  ReplyDelete
 24. //உமா ஷங்கர் நல்லவரா, கெட்டவரா தெரியாது. ஆனால் இதுவரை நடந்த ஊழலுக்கும், இனிமேல் நடக்கப் போகும் ஊழலுக்கும் (கண்டிப்பா நடக்கும், மூணு வேலை சோறு திங்காம இருக்க முடியுமா??? அது போல தான் இதுவும்! இன்றியமையாதது! பஞ்சபூதம், ஐம்புலன் வரிசையில் ஆறாவது பூதம், ஆறாவதுபுலன்!!) என் கடும் கண்டனங்கள்

  repeattu...

  இங்கு கண்டனம் தெரிவிப்பதோடு நின்று விடாமல் நமக்கு தெரிந்த , இந்த விஷயம் பற்றி அறிந்திராத நாலு பேருக்கு இதை பற்றி அறிவிப்போம் ...

  ReplyDelete
 25. நேர்மையான அதிகாரியின் சொல் நிச்சயம் அம்பலத்தில் ஏறும்

  ReplyDelete
 26. உண்மை எப்படியும் வெளியே வந்தே தீரும் .

  அதான் வாய்மையே வெல்லும்

  ReplyDelete
 27. அண்ணே எழத்து நடை மிகவும் அருமை. \\வளைந்தைபடி தோள் கொடுப்போம்..// வனளந்தபடி தோள் கொடுப்பதால்தான் அவர்கள் ஆடுகிறார்கள். நிமிர்ந்து நின்று முட்டுகொடுப்போம்.

  ReplyDelete
 28. திமுகவின் திருவாரூர் மாவட்ட முன்னாள் செயலாளர் உமாசங்கர் அவர்கள் தண்டிக்கப்பட்டதை கண்டிக்கிறேன்.

  ReplyDelete
 29. //அதுவரை மனிதனாய்... தோள் கொடுக்க விரும்பும்.. மனிதர்களே..
  ஒன்றுபடுங்கள்..//

  தோள் கொடுக்கிறேன்...

  எனது கண்டனத்தையும் பதிவு செய்கிறேன்!

  ReplyDelete
 30. தானும் உருப்படியா இருக்க மாட்டானுங்க,நல்லவனுகளையும் உருப்படியா இருக்க விட மாட்டானுங்க.வாழ்க ஜனநாயகம்!வாழ்க தமிழகம்!வளர்க குடும்பம்!

  ReplyDelete
 31. மக்களுக்கு நல்லதா செய்ய கூட விட மாட்டேங்குறாங்களே என்னடா நாடு இது, என்னுடைய கண்டனத்தை அழுத்தமாக இங்கு பதிக்கிறேன்

  ReplyDelete
 32. என் கண்டனத்தையும் சொல்லிக்கிறேன். இடுகையும் இட்டுள்ளேன்.

  ReplyDelete
 33. எனது வன்மையான கண்டனங்கள் ஆளும் மன்னர்களுக்கும். அவர்களின் கைக்கூலிகளுக்கும்.

  ReplyDelete
 34. நாட்டுக்காக நல்லவங்க போராடுனா, நல்லவங்களுக்காக நாம போராடுவோம். நானும் பதிவு பண்ணிட்டேன்.

  ReplyDelete
 35. சினிமால மட்டும் ஹிரோ தப்பு செஞ்சி போலீஸ் ஆகி நால்லது செஞ்சாருன.. கடைசில... அவர் நாட்டுக் செய்த சேவை கருதி மண்ணித்து விருது கொடுப்பாங்க. கொய்யால!! நிஜத்துல ஒருத்தன் செஞ்ச வேலை விட்டு துக்கரது.....

  ReplyDelete
 36. சரியா சொன்னிங்க தல!

  ReplyDelete
 37. பட்டாபட்டியின் சாட்டையடி எழுத்தை மறுபடியும் படித்ததில் மகிழ்ச்சி.. கை கொடுப்போம் தல..

  ReplyDelete
 38. http://saamakodangi.blogspot.com/2010/08/blog-post_18.html

  என்னுடைய கண்டனங்கள் இங்கேயும்...

  ReplyDelete
 39. என்னமோ இதுக்கு முன்னாடி எல்லா ஐ.ஏ.எஸ்ஸுங்களும் கரெக்டா நடந்தா மாதிரியும், நல்ல ஐ.ஏ.எஸ்ஸுங்களை அரசாங்கம் சட்டப்படி மதிச்சு நடந்தா மாதிரியும், சுடுகாட்டு ஊழல் கண்டு புடிச்ச உடனே இந்தியாவோட ஜி.டி.பி இறங்கிட்டா மாதிரியும் , இப்போ எதுக்கு இவ்வளோ குமுறுறீங்க எல்லாரும்!

  இன்னிக்கு ஹெட்லைன்ஸுக்கு நமக்கு வாய்க்கு ருசியா ஒன்னு வேணும். முந்தா நாள் ராமலிங்க ராஜு., நேத்து கேத்தன் தேசாய், இன்னிக்கு சுரேஷ் கல்மாதி! யாரால என்ன புடுங்க முடிஞ்சது.? ராமலிங்க ராஜு பெயில் ல வந்து கூலா ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டு இருக்கார். நித்தி அருள் வாக்கு குடுத்துட்டு இருக்கார். போங்கய்யா போங்க...இவனுங்களை மாதிரி ஆளுங்களுக்கு தண்டனையை கடுமையாக்கனும்னு எல்லாரும் சேர்ந்து வலியுறுத்துங்க ...கையெழுத்து வாங்குங்க..ஒண்ணா ஒரே நேரத்துல பதிவெழுதுங்க ...நாடு கொஞ்சமாவது உருப்படும். தப்பு செய்யறவன் பயப்படுவான்.

  பிரச்சினையின் வேர் எங்கே என்று தேடுங்கள். விளைவுகளை விளக்குமாற்றால் அடித்து ஒரு பிரயோஜனமும் இல்லை.

  பின் குறிப்பு : இது பட்டாபட்டிக்கு (மட்டும்) எழுதியதல்ல.. எல்லாருக்கும் தான். விவாதியுங்கள்.

  ReplyDelete
 40. @@Rettaival's said...
  பின் குறிப்பு : இது பட்டாபட்டிக்கு (மட்டும்) எழுதியதல்ல.. எல்லாருக்கும் தான். விவாதியுங்கள்.
  ////
  இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு, தவறுகள வேர்லையே கிள்ளி எறியரதுதான்..இவ்ளோ சத்தம் போடறீங்களே, என்ன தெரியும் உங்களுக்கு உமா சங்கர பத்தி..ஒருத்தன் அடிச்சா எல்லாரும் சேர்ந்து அடிப்பீங்களா...நான் திருவாரூர்காரன்...திரு உமா சங்கர் அவர்கள் திமுக அரசாங்கத்தோட தத்துப்பிள்ளை..அப்போ நல்ல விசயங்கள அனுபவிச்சாறு..இப்போ கெட்ட விசயங்கள...! மக்களே காயம் வந்துருச்சுன்னா அதுக்கு மருந்து போடணுமே தவிர அத மறைச்சு மேக் அப் போடகூடாது...பிரச்சனைகள முழுசா படிச்சிட்டு வந்து எதா இருந்தாலும் பேசுங்க...! மேக் அப் போட்டு இந்த பிரச்சனையும் மூட பார்க்காதீங்க....! அப்பறம் நித்யானந்தரோட ஆசி உங்களுக்கு கெடக்காமையே போயிரும்...! :)

  ReplyDelete
 41. @All.//
  திரு உமா சங்கர் அவர்கள் மிக திறமையான அதிகாரிங்கரதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்ல.. திருவாரூர் மாவட்டத்த தமிழகத்தின் முதல் கணினிமயமாக்கப்பட்ட மாவட்டமா ஆக்குனதுலேர்ந்து திருவாரூர் தெப்பகுளத்த தூர் வார்னது வரைக்கும் எல்லா மட்டத்துளையும் பல சாதனைகள் செஞ்சிருக்காரு..! அதுக்கு அவருக்கு நான் தலைவணங்கறேன்..! பட், இப்போ பிரச்சனை அது இல்லை...!

  ReplyDelete
 42. @Anonymous said...
  திமுகவின் திருவாரூர் மாவட்ட முன்னாள் செயலாளர் உமாசங்கர் அவர்கள் தண்டிக்கப்பட்டதை கண்டிக்கிறேன்./////

  இத நீங்க பேரோடே போட்ருக்கலாம் அனானி சார். உண்மைய சொல்றதுக்கு அனானிய வரணும்னு அவசியம் இல்ல...! :)

  ReplyDelete
 43. //@பிரபல பதிவர் வெளியூர்க்காரன் அவர்கள் said...
  //@Rettaival's said...
  வாய்யா வென்ன்ன்ன்று..

  இங்க யாருய்யா காயத்துக்கு மேக்கப் போட்டா..
  சரி மேட்டருக்கு வா..

  காலையில சாப்பிட்டியா?..

  ஓ.கே.. இது தனிமனிதப்பிரச்சனை..இப்ப பொது பிரச்சனைக்கு போவோம்..
  உங்க பெரியவரு..அதாம்பா..தலைவரு.. ஒரு நாள் , சொல்லாம கொள்ளாம..உண்ணாவிரதம்(?) இருந்தாரே!.. எதுக்கா?..ஈழப்பிரச்சனைக்கு..

  அது என்னா மயி%$#^ருக்குனு கொஞ்சம் விளக்கி சொன்னா நல்லாயிருக்கும்..
  ஆணிவேரை புடுங்காமால்..மயி(ர்)ல் இறகில் தடவினாற்போல..அந்த பிரச்சனைய கேண்டில் பண்ணினாரே.. ஏன்?..

  ஜெயவர்தனே..மூக்கு நீட்டமா இருக்குமே..அந்தாளுக்கு முன்னாடியே ஈழப்பிரச்சனை ஆரம்பிச்சுடுச்சு.. ஆனா எதுக்கு சமீபத்தில உண்ணாவிரத நாடகம்?..

  நல்லா கேட்குறீங்கயா டீட்டேய்லு....

  அநீதிக்கு எதிர்பு காண்பிப்பதில் தவறேயில்லை.. நீங்க சொல்வது போல ஆணி வேரை களையனும்.. ஒத்துக்கிறேன்.. ஆனா.. எல்லா பிரச்சனைக்கும்..ஆணி வேரை தேடிக்கிட்டு இருந்தா.. கனிமொழி பேரன் முதலைமச்சர் ஆனாலும்..பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது..

  எதிர்ப்பை பதிவது நல்ல விசயம்தான்..

  ReplyDelete
 44. ஆமா.. ராஜாத்தி அம்மாள் எப்பையா அரசாங்க பதவிக்கு வந்தாங்க.. சொல்லவேயில்லை...

  //While I was working in ELCOT, twice I was called by Tmt.Rajathi Ammal, wife of the Hon'ble Chief Minister of Tamil Nadu to her office at Alwarpet. I should have refused to meet her. However, by way of courtesy I met her in her office. She attempted to influence me to award contract to her men in the matter of purchase of 45000 fishermen wireless sets. I told her that only through e-tender contracts are finalised and I should not be disturbed.//

  ReplyDelete
 45. வேலை நெருக்கடி காரணமாக..தனிதனியா பதில் சொல்லமுடியவில்லை..

  அதனால..இந்த பதிவுக்கு..


  ”பிரபல பதிவர்கள் பாணியில்”, கமென்ஸ் இட்ட அனைவருக்கும்...ஒரே கமென்ஸ்ல... என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்..

  ReplyDelete
 46. பிரபல பதிவர் வெளியூர்க்காரன் அவர்கள் said...

  @All.//
  திரு உமா சங்கர் அவர்கள் மிக திறமையான அதிகாரிங்கரதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்ல.. திருவாரூர் மாவட்டத்த தமிழகத்தின் முதல் கணினிமயமாக்கப்பட்ட மாவட்டமா ஆக்குனதுலேர்ந்து திருவாரூர் தெப்பகுளத்த தூர் வார்னது வரைக்கும் எல்லா மட்டத்துளையும் பல சாதனைகள் செஞ்சிருக்காரு..! அதுக்கு அவருக்கு நான் தலைவணங்கறேன்..! பட், இப்போ பிரச்சனை அது இல்லை...!

  //

  ....ம்..... அப்புறம் எது பிரச்சனை...?

  ReplyDelete
 47. @ரெட்டை

  பின் குறிப்பு : இது பட்டாபட்டிக்கு (மட்டும்) எழுதியதல்ல.. எல்லாருக்கும் தான். விவாதியுங்கள்.
  //

  வாய்யா ரெட்டை.. திருடினா கைய வெட்டனும்.. கற்பழிச்சா ..அதைய வெட்டனும்..

  அப்புறம் பாதிப்பேர்.. கஷ்டப்படுவானுகளே.. அதாம்பா பாத்ரூம் போக.....

  என்ன பண்ணலாம் சொல்லு..?

  (சே... கேள்விக்கு எதிர் கேள்வி கேட்டே பழகிட்டனய்யா..ஹி..ஹி)

  ReplyDelete
 48. எதுக்கு குட்டனும்?

  சும்மா தூள் கிளப்பி இருக்கீங்க.

  ரொம்ப அற்புதம்.

  அதென்ன ஓரத்ல தலையில அடிச்சுக்கிட்டு இருக்காரே எப்ப நிறுத்துவாரு?

  ReplyDelete
 49. நீங்க சொல்றது அத்தனையும் கரெக்ட் தான் பட்டாபட்டி ஜீ! என்னமோ இப்போ தான் முதல் முறையா அரசியலுக்காக ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி பலியிடப்படுவது போல ஒரு தோற்றத்தை உருவாக்க முயல்வது தான் ஆச்சர்யமாக இருக்கிறது.

  இன்றைக்கும் எத்தனையோ கிரிமினல்கள் மந்திரிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இப்போதே அதைப் பற்றிப் பேசுவது தானே...அதை விட்டு விட்டு பிரச்சினை ஒன்றில் அகப்பட்டு விட்டதும் ஏன் தைய்யா தக்கா என்று குதிக்கிறீர்கள்?

  கிரிமினல்கள் நாட்டை ஆளக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து பதிவு போட வேண்டியது தானே? வேட்பாளருக்கு கல்வித் தகுதி நிர்ணயம் செய்யச் சொல்லிப் ஒன்றாக பதிவு போடுங்கள். மீடியாவில் உள்ள ஏகாதிபத்யத்தை,ஊழலைப் பற்றி எழுதுங்கள். இங்கு எல்லோருக்கும் நாடு ஓவர் நைட்டில் திருந்தி நன்றாக மாறிவிட வேண்டும் என்று ஏக்கமாக இருக்கிறது. ஆனால் அதற்கு தேவையான அவசியமான ஒன்றைப் பற்றிய வழிமுறைகளை சிந்திப்பதில் கூட ஆர்வமில்லை. பொதுவாகவே தமிழர்கள் அனைவரும் எமோஷனல் ஏமாளிகளாக இருப்பதால்தான் இன்னும் நம் மேல் சவாரி செய்கிறார்கள். நம் அடிப்படை மனோபாவம் மாறாதவரை நம் நாடு ஊழலில் தான் திளைத்திருக்கும் இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும். டெக்னாலஜியும் , தண்டனைகளும் தான் ஓரளவு தவறுகள் குறைய உதவி செய்யும். அதற்கு அறிவு தேவை. அறிவுக்குக் கல்வி தேவை. அந்தக் கல்வி அளிப்பதற்கு வசதி வாய்ப்புகள் தேவை. அந்த வசதி வாய்ப்புகளை பகிர்ந்தளிக்க மனசு தேவை. இந்த இடத்தில் தான் சறுக்குகிறோம். சுயநலம் என்கிற திரை அதை மறைத்திருக்கிறது. தான் , தன்க்கு மட்டும் என்கிற மனோபாவத்தை எல்லோரும் ஒன்று கூடி அகற்றினாலே இது சாத்தியம்.

  உங்கள் பதிவின் மேல் எந்த விரோதமுமில்லை. இது தனிப்பட்ட மனக்குமுறல்களே!

  ReplyDelete
 50. ளவு தவறுகள் குறைய உதவி செய்யும். அதற்கு அறிவு தேவை. அறிவுக்குக் கல்வி தேவை. அந்தக் கல்வி அளிப்பதற்கு வசதி வாய்ப்புகள் தேவை. அந்த வசதி வாய்ப்புகளை பகிர்ந்தளிக்க மனசு தேவை. இந்த இடத்தில் தான் சறுக்குகிறோம். சுயநலம் என்கிற திரை அதை மறைத்திருக்கிறது.
  //

  உண்மைதான் ரெட்டை.. ஆனாலும் படிச்சவனும் ..ஊர ஏமாற்ற பழகிவிட்டான்..

  நல்ல தலைமை.. நல்ல ஆட்சி..
  நமக்கு எல்லாம் கனவாகவே இருக்கு..

  நீர் சொல்வதை மறுக்கவில்லை.. எல்லோரும் சுயநலம் என்ற போர்வையை போட்டுக்கொண்டு சுற்றிக்கொண்டு இருக்கிறோம்..


  ஒன்றுமேயில்லாத.. பல தேசங்கள்..எங்கோ போய்கொண்டு இருக்க.. நாம் பின்னோக்கி போவதை பார்த்தால் வயிறு எரியுது பாஸ்...

  ReplyDelete
 51. ( ஆணி அதிகமாயிடுச்சு...)

  அய்யா.. கண்ணுகளா...
  பட்டாபட்டி ஆளே காணோமுனு.. ப்ளாக்க வித்துப்புட்டு போயிடாதீங்க...


  எங்காவது ஒளிஞ்சிருந்தாவது பார்த்துக்கிட்டு இருப்பேன்..ஜாக்கிரதை....ஹி..ஹி

  ReplyDelete
 52. பின்னூட்டத்துலயே இவ்வளவு கலகமா??

  பட்டாபட்டினு வச்சதுக்கு பதிலா நாரதர்னு வச்சிருக்கலாம்..

  ReplyDelete
 53. பெரிய களேபரமே நடந்து இருக்கே?இப்போ நான் என்னத்த சொல்லுறது

  ReplyDelete
 54. 100% free--Friends Please paste CHATTING BOX code to your website to get more active for -TAMIL FRIENDS CHATTING,

  Please Visit the following & get the free chat code
  http://tamilfriends-network.blogspot.com/

  powered by www.tamilhappy.com

  ReplyDelete
 55. சொல்லுலே யாரை போடுரதுன்னு.... கத்திரிக்கா போட்டுத் தள்ளிடலாம்லே..., இல்லனா சரிபட்டு வரமாடானுக மக்கா....

  ஆமா.... ஆய்போறபோது கூட ..தம் பிடிச்சி கிட்டு படிக்கிற பயபுள்ளையா மக்கா நீரு....வெளங்கிரும்லே...

  ReplyDelete
 56. சொல்லுலே யாரை போடுரதுன்னு.... கத்திரிக்கா போட்டுத் தள்ளிடலாம்லே..., இல்லனா சரிபட்டு வரமாடானுக மக்கா....

  ஆமா.... ஆய்போறபோது கூட ..தம் பிடிச்சி கிட்டு படிக்கிற பயபுள்ளையா மக்கா நீரு....வெளங்கிரும்லே...

  ReplyDelete
 57. இந்நாள் மலரும் திருநாள் போல்
  எந்நாளும் திகழ்ந்திடவே - நானும்
  எம்பெருமான் அருள்வேண்டி வாழ்த்திகிறேன்
  இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்...

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!