Pages

Saturday, August 14, 2010

சுற்றும் விழிச் சுடரே...

.

  விடியற்காலை 5 மணிக்கு, வெறும் வயிற்றில், சூடா காப்பி குடிச்சிருக்கீங்களா?.  நான் குடிச்சேன் சார்.  போன மாசம்...அதுவும் ஒரு பன்னாட பயலால.  யாருனு கண்டுபிடிச்சிட்டீங்களா?.  ரைட்....அதே.....அவனேதான்.  பழைய பதிவுகளில், வரும் வில்லன் “சின்ராசே” தான்.  பிஸ்னஸ்ல ’கால்’ வெச்சப்பப் பார்த்தது. பல மாசம் ஆயிடுச்சு. காலங்காத்தாலே, “இதோ வந்துட்டே இருக்கேன். வெளிய போலாம்”-னு, போன் அடிச்சான்.  விதி சார் விதி.  போனோம்.


ஆங்... சொல்ல மறந்துட்டேனே.. அவன் வந்தது BMW கார்லே. கருப்பு கலரு..புஸ்க்குனு வந்து நிறுத்தி, “ஏறு”-னு சொன்னான்.  சொந்த தொழில்ல, கொடி கட்டிப்பறக்கிறான் போல.  கார்-னா, அது  கார் சார். சொட்டை தலையில, எண்ணெய் வெச்ச மாறி. சும்மா சர்ர்ர்ர்ர்ர்ர்னு வழுக்கிட்டு போகுது.  காருக்குள் இருந்து வரும் இசையா..இல்லை..நறுமணமா?. தெரியலே.  சுகமா கண்ணு சொருக்கிச்சு.  சின்ராசு எழுப்பி, வெளிய பாருனு கைய காட்டுறான்.  ( காலங்காத்தாலே 5 மணிக்கு, நாய்-ய கூட்டிக்கிட்டு வாங்கிங் போயிட்டு இருக்காங்க சில பைத்தியக்காரிக.  எப்படி சார், இந்த சீன பைங்கிளிகள் மட்டும் சிக்-னு இருக்காளுக.  அந்த பல்லு.... அந்த கண்றாவிதான், இதுக்கு மேல என்னை பேச விடாம  தடுக்குது..)

காபி கடையில நிறுத்திக்கிட்டு, பழைய கதைகளை பேச ஆரம்பித்தோம்.  எனக்கு தெரியும் சார்.  சின்ன வயசியிலிருந்து, காலேஸ் வரை, ஒரே கோட்டில, பயணம் செஞ்சவங்க நாங்க...

ஏழைக்குடும்பம். அண்ணன் தம்பிகளே ஆறு பேர். கரண்டே இல்லா கிராமம். கஷ்டப்ப்ப்ப்பட்டு படிச்சான். அதுவுமில்லாம, அடிக்கடி அய்யாவுக்கு ______ வெளிய வந்திடும். ( அறிவு, நக்கல், நையாண்டி.. எதோ ஒண்னைப்  போட்டு வாக்கியத்தை படிச்சு முடிச்சுக்கோங்க.. )
அப்புறம் காட்டை விற்று, கனடா... திடீர்னு சிங்கை.. சில பல கம்பெனி.. உதைபட்டு வெளியே..  சொந்த பிஸ்னஸ்.. நஷ்டம்.. துரத்தல்.. ஓட்டம்.. தோன்றுதல்.. மறைதல்.. உள்ளே.. வெளியே..

இப்ப எதுக்கு ’பத்து வருசத்து’ கதைய இரண்டு நிமிசத்தில சொன்னேனு யோசனை பண்றீங்க பார்த்தீங்களா!!.  அதுதான் சார், உங்ககிட்ட எனக்கு பிடிச்ச விசயம்.  வேற ஒண்ணுமில்ல பாஸ்..
காப்பி ஆறிட்டா, வாயில வைக்கமுடியாது.

வாழ்க்கை சக்கரம் சுற்றிக்கிட்டேயிருக்கு.  கடைசியா அவனை, அவனுடைய கல்யாணம் நடந்த பெருமாள் கோயில பார்த்தது.  அருவா முனையில ஆடம்பரக்கல்யாணம்.  சுற்றம்சூழ(!), நாலு பேர் முன்னிலையில் நாலு நிமிசத்தில முடிந்தது.  அவனுக்கு வாய்த்த தங்கமணி, வீட்டுக்கு ஒரே பொண்ணு.  அப்பவே, கொஞ்சம்  தாட்டி....  எப்படீனா, சின்ராசு அதை சுற்றி வரனுமுனாவே ரெண்டு நிமிசம் வாக்கிங் போகனும்.  அவனோட மாமனார், மனுசனா  சார் அவன். முறுக்கு மீசை. மூஞ்சிய வெட்டு. பழைய ரவுடியாம். அருவா எடுத்துட்டு , ”கட்டுடா தாலி..”-னு ஆடினார் பாருங்க. கையெல்லாம் நடுங்கிச்சு.  ( என்ன இருந்தாலும் பழைய ரவுடியில்லையா.. வயசானாவே ஆடும் போல. பேசாம எங்காவது முதலமைச்சர் போய் தொலையாம. ஆனா.. குஷ்பு குத்த வெச்சு ஆடியிருந்தாலும்.. அது போல ஆட்டம், ஆடியிருக்க முடியாது பாஸ்..)


சரி. அதை விடுங்க.  எவ்வளவோ கஷ்டபட்டு ,வாழ்க்கையில முன்னேறி, கார் வாங்கி.. அதுமட்டுமா, அதுல நண்பனை உக்கார வெச்சு, காபி வாங்கி கொடுப்பவர்களை, விரல் விட்டு எண்ணிடலாம்.  சரியா சார் நான் சொல்வது?..

அந்த தன்னம்பிக்கை, முன்னேற வேண்டும் என்ற வெறி..வாழ்க்கையில, இவன மாறி ஒருத்தனை நண்பனா அடைய, கொடுத்து வெச்சிருக்கனும் பாஸ்.   மக்கா.. இப்ப சொல்றேன்.. வாழ்க்கையில முன்னேறி, நல்லா வாழந்துகாட்டி, எல்லோருக்கும் முன்னோடியா, நல்ல உதாரணமா இருங்க..
சுறுசுறுப்பா செயல்படுங்க.

சின்ராசாவாலவே முடியுமுனா, ஏன் நம்மால் முடியாது?  கொஞ்சம் யோசனை பண்ணுங்க பாஸ்.  
( நல்லவங்க அப்படியே அடுத்த ப்ளாக் ஜம்புங்க.. )
.
.
.
.
நம்மாளுக தொடருங்க...
.
.
.

”ஏண்டா சின்ராசு.. இவ்வளவு பட்டு, இந்த நிலைக்கு வந்திருக்கேனா, அது சாதாரணம் இல்லை. அதுக்காக, பலதை இழந்திருப்பேயில்லை”-னு நான் கேட்க,

”இல்ல..இல்ல..  நான் இழந்தது ஒண்ணு மட்டும் தான்”- சின்ராசு சொல்ல,

“என்னதுனு?” நான் கேட்க,
.
.
.
.
.
.
.
தன்மானம்...  ”-னு அவன் பதில் சொல்ல............

போங்க பங்காளிகளா.. குடிச்ச காபி, வயிறுல கலக்குது.  நான் போறேன்..

டிஸ்கி..
ஆங்.. சொல்ல மறந்துட்டேனே.  அவனோட மாமனார், அதாங்க, அந்த பழைய ரவுடி.  போன மாசம்  10 கோடி சொத்தை வெச்சுட்டு, ஒன் வே டிக்கெட் எடுத்துட்டாராம்...

.
.
.

115 comments:

 1. முதல் வடை என்னக்கு ....உப்பு இல்லாம குடு பட்டா

  ReplyDelete
 2. அட.. நம்ம நரி சார்...
  உப்பு மேட்டரை படிச்சேன்.. கொடுமைதான்...

  ReplyDelete
 3. வயிறு எரியுது பட்டா !!! நேத்து nite நான் தூங்கவே இல்லை

  ReplyDelete
 4. //////ஆங்.. சொல்ல மறந்துட்டேனே. அவனோட மாமனார், அதாங்க, அந்த பழைய ரவுடி. போன மாசம் 10 கோடி சொத்தை வெச்சுட்டு, ஒன் வே டிக்கெட் எடுத்துட்டாராம்.../////

  யோவ் பட்டா ,
  அவ்வ்வ்வவ்வ்வ்வவ் !!!!!! இந்தியல்வுல குறிப்பா தமிழ் நாட்ல ஒவ்வொரு வீட்டிலும் பிரிண்ட் அவுட் எடுத்து ஓட்டனும்ய இந்த பதிவ

  ReplyDelete
 5. /////” தன்மானம்... ”/////

  நாங்கெல்லாம் இத அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறை தான் இழப்போம் ...,அப்ப அப்ப " இடையில் " வந்தா இழப்போம்

  ஹி ஹி ஹி ஹி ...அப்படின்னா என்ன பட்டா

  ReplyDelete
 6. பாப்போம் தக்காளி

  எத்தனை பேர் இதுக்கு மைனஸ் வோட்டு போடறனுங்க பார்போம்

  ReplyDelete
 7. பட்டா ந்த தன்மானன்னு செவப்பு கலருல போட்டிருக்கீங்களே அப்புடினா என்னா...?

  என்ன இருந்தாலும் BMW காரு வச்சிருக்'காரு இல்லியா ...

  ReplyDelete
 8. கே.ஆர்.பி.செந்தில் said...

  பட்டா ந்த தன்மானன்னு செவப்பு கலருல போட்டிருக்கீங்களே அப்புடினா என்னா...?

  என்ன இருந்தாலும் BMW காரு வச்சிருக்'காரு இல்லியா ...
  //

  இவரு BMW காரு வெச்சிருக்காரு..
  ஆனா.. அந்தம்மா..இவரை ஹஸ்பெண்டா இல்ல வெச்சிருக்கு..ஹி..ஹி

  ReplyDelete
 9. Blogger பனங்காட்டு நரி said...

  வயிறு எரியுது பட்டா !!! நேத்து nite நான் தூங்கவே இல்லை
  //

  எல்லாவற்றுக்கும் ஒரு விடிவு இருக்கு பாஸ்...

  ReplyDelete
 10. @ LK said...

  rendavathu vettu
  //

  என்ன பாஸ்.. ஆள் இருக்கீங்களா?

  ReplyDelete
 11. பணக்காரனாப் பிறக்காதது உன்னுடைய தவறில்லை...

  ஆனா.. பணக்காரனா இல்லாதது உன்னுடைய தவறு.. ஹி..ஹி நான் சொல்லலே..அண்ணன் பில் கேட்ஸ் சொன்னது

  ReplyDelete
 12. அதை இழ‌ந்த‌தால‌ தான் உங்க‌ளை BMW-கார்ல‌ டீ குடிக்க‌ கூட்டி போயிருக்காரு :))

  ReplyDelete
 13. சுயமுன்னேற்றப் புத்தகம் எளுதி சொறிஞ்சிக்கிறவனுங்க எல்லாம் இந்தப் பதிவ படிக்கணும் பட்டா... மெய்யாலுமே இதான்யா சுயமுன்னேற்றப் பதிவு...

  ம்ம்ம். நானும் ட்ரை பண்ணி பாக்குறேன்! (என்னது! தன்மானமா! நோ நோ நோ.... வேணாம்... அளுதுடுவேன்... டேய்... டேய்... டேய்!)

  ReplyDelete
 14. கலக்கீட்டீங்க தலைவா.

  ReplyDelete
 15. .... எப்படீனா, சின்ராசு அதை சுற்றி வரனுமுனாவே ரெண்டு நிமிசம் வாக்கிங் போகனும்//
  சூப்பரா சொன்னீங்க பட்டா

  ReplyDelete
 16. சொத்துக்காக,பதவிக்காக தன்ம்,ஆனத்தை அட்கு வைக்கும் கூட்டம் தமிழ்நாட்டில் நிறையவே இருக்கு சகா.அதுதான் புத்திசாலித்தனம்,ராஜதந்திரம் நு சொல்றாங்க..அதுதான் உண்மையோ

  ReplyDelete
 17. //கலக்கீட்டீங்க தலைவா.// யோவ் உசாருய்யா. டெம்ப்ளேட் பின்னூட்டமா வர ஆரமிக்குது... நம்ம கடை ஈயாடப் போவுதுன்னு நெனக்கிறேன்...

  ReplyDelete
 18. இந்த சின்ராசா எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு பாஸ். எனக்கு முன்னாடி (அந்த முன்னாடியில்லைய்யா) படிச்சிருப்பாரோ??
  பட்டு தன்மானத்தை நானும் தாறேன். அந்த தன்மானத்துக்கு BMW இல்லாட்டியும் ஏதோ ஸ்கார்ப்பியோ-வாவது கிடைக்குமான்னு கேட்டு சொல்லுயா...

  ReplyDelete
 19. வாழ்கையில ஏதோ ஒரு கட்டத்துல இந்த தன்மானத்தை ஒரு திருடன் திருடப்போறான். அதுக்கு நம்மளே வித்துட்டு ஒரு காரு வாங்குறது தானே புத்திசாலித்தனம். நீயே சொல்லு....

  ReplyDelete
 20. விளையாட்டாப் பேசி இளக்கி கடைசியில பளார்னு அறையுற இந்த உத்தி ரொம்ப நல்லாருக்கு. அளவா பிரயோகிக்கணும் பட்டா.

  ReplyDelete
 21. BMW கார் வாங்கி குடுத்து தன் பொண்ணுக்கு, மாப்ளய காரோட்டி ஆக்கிடாரா மனுசன்...ச்சோ பாவம்...(

  ReplyDelete
 22. ///” தன்மானம்... ”-னு அவன் பதில் சொல்ல...........//

  அட போ பட்டா, நம்ம ‘தன்மானத்துக்கு” மாருதிக்கார் கூட கிடைக்குமானே தெரியலை.

  ReplyDelete
 23. //ஆங்.. சொல்ல மறந்துட்டேனே. அவனோட மாமனார், அதாங்க, அந்த பழைய ரவுடி. போன மாசம் 10 கோடி சொத்தை வெச்சுட்டு, ஒன் வே டிக்கெட் எடுத்துட்டாராம்...//

  ஒத்த ரூவா நோட்டையாவது விறகு கூட வச்சாங்களாமா?.

  ReplyDelete
 24. ப்பவே, கொஞ்சம் தாட்டி.... எப்படீனா, சின்ராசு அதை சுற்றி வரனுமுனாவே ரெண்டு நிமிசம் வாக்கிங் போகனும். ////

  இப்போ எத்தினி நிமிஷம் சுத்தணும் . இப்போ அப்படி சுத்தனுமின்னா பெர்மிசன் கிடைக்குமா (யோவ் சின்னராசுக்கு தான்யா , எப்ப பாரு ராங்காவே யோசிக்கிறது )

  ReplyDelete
 25. வானம்பாடிகள் said...

  விளையாட்டாப் பேசி இளக்கி கடைசியில பளார்னு அறையுற இந்த உத்தி ரொம்ப நல்லாருக்கு. அளவா பிரயோகிக்கணும் பட்டா.///

  ஆமா சார் , எப்பவும் ஸ்கிரீனுக்கு கொஞ்சம் தூரமா இருந்தே படிங்க

  ReplyDelete
 26. Coumarane said...

  கலக்கீட்டீங்க தலைவா.///

  இதுக்கு தான் காலங் காத்தால வெறும் வயித்துல காப்பி குடிக்க கூடாதுங்கிறது

  ReplyDelete
 27. ரோஸ்விக் said...

  வாழ்கையில ஏதோ ஒரு கட்டத்துல இந்த தன்மானத்தை ஒரு திருடன் திருடப்போறான். அதுக்கு நம்மளே வித்துட்டு ஒரு காரு வாங்குறது தானே புத்திசாலித்தனம். நீயே சொல்லு....///

  இதுக்கு தான்யா படிச்ச புள்ளிகள் கிட்ட ஒரு வார்த்த கேட்கணும் கிறது

  ReplyDelete
 28. பனங்காட்டு நரி said...

  வயிறு எரியுது பட்டா !!! நேத்து nite நான் தூங்கவே இல்லை///

  நீ ஏன் சின்னராச பாத்து போராம படுற , அப்புறம் வயிறு எறியத்தானே செய்யும்

  ReplyDelete
 29. thanmanam appadinna enna boss. namma sangathula athu irukka???

  ReplyDelete
 30. //// அவனோட மாமனார், அதாங்க, அந்த பழைய ரவுடி. போன மாசம் 10 கோடி சொத்தை வெச்சுட்டு, ஒன் வே டிக்கெட் எடுத்துட்டாராம்.../////

  எத்தனை ஆயிரம் கோடி சொத்து இருந்தாலும் ஒன் வே டிக்கெட்தான்..எல்லாருக்குமே!!!!!!!!! நல்ல பதிவு

  ReplyDelete
 31. கேவலமாகவோ கிண்டலாகவோ இருந்தாலும் அதுதான் உண்மையும் கூட. எதையும் இழக்காமல் வேண்டியதை பெற இயலாது.அது கற்போ,தன்மானமோ,சுய கவுரவமோ என்ன க்ன்றாவியானாலும் சரி இதுதான் நியதி இங்கே.அந்த இழப்புகளை சரிசெய்து ஈடுகட்டவே வாழ்கை வசதிகள் என்று நாம் பளபளபைக்காட்ட வேண்டியுள்ளது.

  ReplyDelete
 32. \\( நல்லவங்க அப்படியே அடுத்த ப்ளாக் ஜம்புங்க.. )//
  அடுத்த பிளாக்குக்கு ஜம்பு ஆயாச்சுங்கன்னா

  ReplyDelete
 33. பட்டாபட்டியின் தற்போதைய பிரச்சினை..

  1. தன்னிடம் BMW கார் இல்லாதது
  2. சின்ராசு போல் வாழ்க்கை அமையாதது
  3. பட்டாபட்டியின் மாமனார் இன்னும் ஒன்வே டிக்கெட் எடுக்காதது
  4. காபி சூடாக இருப்பது

  சரியான பதில் சொல்லும் எல்லோருக்கும் பித்தன் அண்ணாச்சி எழுதிய "தன்மானத்தால் அல்வா செய்வது எப்படி " புத்தகம் பரிசு!

  ReplyDelete
 34. @Rettaival's said...
  பட்டாபட்டியின் தற்போதைய பிரச்சினை..
  1. தன்னிடம் BMW கார் இல்லாதது
  2. சின்ராசு போல் வாழ்க்கை அமையாதது
  3. பட்டாபட்டியின் மாமனார் இன்னும் ஒன்வே டிக்கெட் எடுக்காதது
  4. காபி சூடாக இருப்பது
  //

  எழுதினாலும் தொறத்தராங்க.. எழுதாட்டியும் கிழிக்கிறாங்க.. சே.. பேசாம, நானும் அடிமாட்டு விலைக்கு போயிருக்கலாம்....

  ReplyDelete
 35. @நாடோடி said...
  அதை இழ‌ந்த‌தால‌ தான் உங்க‌ளை BMW-கார்ல‌ டீ குடிக்க‌ கூட்டி போயிருக்காரு :))
  //

  இருக்கும்..இருக்கும்..

  ReplyDelete
 36. @விந்தைமனிதன் said...
  சுயமுன்னேற்றப் புத்தகம் எளுதி சொறிஞ்சிக்கிறவனுங்க எல்லாம் இந்தப் பதிவ படிக்கணும் பட்டா... மெய்யாலுமே இதான்யா சுயமுன்னேற்றப் பதிவு...
  ம்ம்ம். நானும் ட்ரை பண்ணி பாக்குறேன்! (என்னது! தன்மானமா! நோ நோ நோ.... வேணாம்... அளுதுடுவேன்... டேய்... டேய்... டேய்!)
  //

  எப்படியாவது எழுதி என் கட்சில சேருங்க.. தனியா இருக்க பயமாயிருக்கு..ஹி..ஹி

  ReplyDelete
 37. @Coumarane said...
  கலக்கீட்டீங்க தலைவா.
  //

  ஹி..ஹி

  ReplyDelete
 38. @ஆர்.கே.சதீஷ்குமார் said...
  சொத்துக்காக,பதவிக்காக தன்ம்,ஆனத்தை அட்கு வைக்கும் கூட்டம் தமிழ்நாட்டில் நிறையவே இருக்கு சகா.அதுதான் புத்திசாலித்தனம்,ராஜதந்திரம் நு சொல்றாங்க..அதுதான் உண்மையோ
  //

  காலம் மாறிட்டு வருது பாஸ்..

  @செந்தமிழ் ரவி அண்ணா..
  காலம் மாறிடுச்சுங்குண்ணோ...

  ReplyDelete
 39. @விந்தைமனிதன் said...

  //கலக்கீட்டீங்க தலைவா.// யோவ் உசாருய்யா. டெம்ப்ளேட் பின்னூட்டமா வர ஆரமிக்குது... நம்ம கடை ஈயாடப் போவுதுன்னு நெனக்கிறேன்...
  //

  உடுங்க.. ஈயாடுனா..சீக்கிரம் ஷ்ட்டரை போடலாமுனு அர்த்தம்..


  ”இதற்க்குத்தானே ஆசைப்பட்டாய் பட்டாபட்டி..”

  ReplyDelete
 40. @ரோஸ்விக் said...
  வாழ்கையில ஏதோ ஒரு கட்டத்துல இந்த தன்மானத்தை ஒரு திருடன் திருடப்போறான். அதுக்கு நம்மளே வித்துட்டு ஒரு காரு வாங்குறது தானே புத்திசாலித்தனம். நீயே சொல்லு....
  //

  சரி..சரி..

  சிங்கை ப்ளாக்கர்ல சேர்றேன்..ஹி..ஹி

  ReplyDelete
 41. @வானம்பாடிகள் said...
  விளையாட்டாப் பேசி இளக்கி கடைசியில பளார்னு அறையுற இந்த உத்தி ரொம்ப நல்லாருக்கு. அளவா பிரயோகிக்கணும் பட்டா.
  //

  வாங்கண்ணே....
  எண்ணே.. பச்சமண்ணுகிட்ட “அளவா”-னு சொல்லீட்டீங்க..

  எந்த அளவுனு தெரியாம..அலைஞ்சுக்கிட்டு இருக்கேன்..
  கொஞ்சம் விளக்குங்குண்ணா..

  ReplyDelete
 42. @Jey said...
  BMW கார் வாங்கி குடுத்து தன் பொண்ணுக்கு, மாப்ளய காரோட்டி ஆக்கிடாரா மனுசன்...ச்சோ பாவம்...(

  //

  ஆகா..விந்தைமனிதன் சொன்னமாறி.. டெம்ப்ளேட் பின்னூட்டம் வருதே..
  பட்டாபட்டி.. ஓடு...ஓடிடு..
  உயிரோட இருந்தா பேசிக்கலாம்..

  ReplyDelete
 43. @மங்குனி அமைசர் said...
  Coumarane said...
  கலக்கீட்டீங்க தலைவா.///
  இதுக்கு தான் காலங் காத்தால வெறும் வயித்துல காப்பி குடிக்க கூடாதுங்கிறது
  //

  ஓ..அது வேற இருக்கா..
  What about Coke..?

  ReplyDelete
 44. @பித்தனின் வாக்கு said...
  thanmanam appadinna enna boss. namma sangathula athu irukka???
  //

  ke..he .. Namakku Ethukku bOSS inththa pollaabu?..
  பார்த்தீங்காளா. நானும் உங்களை மாறி எழுத பழகிட்டேன்..

  ReplyDelete
 45. @நந்தா ஆண்டாள்மகன் said...

  //// அவனோட மாமனார், அதாங்க, அந்த பழைய ரவுடி. போன மாசம் 10 கோடி சொத்தை வெச்சுட்டு, ஒன் வே டிக்கெட் எடுத்துட்டாராம்.../////

  எத்தனை ஆயிரம் கோடி சொத்து இருந்தாலும் ஒன் வே டிக்கெட்தான்..எல்லாருக்குமே!!!!!!!!! நல்ல பதிவு
  //

  நன்றி சார்..

  ReplyDelete
 46. @கக்கு - மாணிக்கம் said...
  கேவலமாகவோ கிண்டலாகவோ இருந்தாலும் அதுதான் உண்மையும் கூட. எதையும் இழக்காமல் வேண்டியதை பெற இயலாது.அது கற்போ,தன்மானமோ,சுய கவுரவமோ என்ன க்ன்றாவியானாலும் சரி இதுதான் நியதி இங்கே.அந்த இழப்புகளை சரிசெய்து ஈடுகட்டவே வாழ்கை வசதிகள் என்று நாம் பளபளபைக்காட்ட வேண்டியுள்ளது.
  //

  உண்மைதான் பாஸ்

  ReplyDelete
 47. சிவா (கல்பாவி) said...

  \\( நல்லவங்க அப்படியே அடுத்த ப்ளாக் ஜம்புங்க.. )//
  அடுத்த பிளாக்குக்கு ஜம்பு ஆயாச்சுங்கன்னா
  //

  இது தப்பாட்டம்.. நீரு கடைசி வரைக்கும் படிக்கனும் அப்பு..

  ReplyDelete
 48. //நம்மாளுக தொடருங்க..///
  தொடருவோம்ல ..

  ReplyDelete
 49. Rettaival's said...

  பட்டாபட்டியின் தற்போதைய பிரச்சினை..

  1. தன்னிடம் BMW கார் இல்லாதது
  2. சின்ராசு போல் வாழ்க்கை அமையாதது
  3. பட்டாபட்டியின் மாமனார் இன்னும் ஒன்வே டிக்கெட் எடுக்காதது
  4. காபி சூடாக இருப்பது

  சரியான பதில் சொல்லும் எல்லோருக்கும் பித்தன் அண்ணாச்சி எழுதிய "தன்மானத்தால் அல்வா செய்வது எப்படி " புத்தகம் பரிசு!


  பட்டா அதை சுற்றி வரனுமுனாவே எத்தனை நிமிசம் வாக்கிங் போகனும். ////இதையும் சேர்த்துக்கோ ரெட்டை

  ReplyDelete
 50. பட்டாபட்டி.. said...


  எந்த அளவுனு தெரியாம..அலைஞ்சுக்கிட்டு இருக்கேன்..
  கொஞ்சம் விளக்குங்குண்ணா..//////////////


  கோர்ட்டர் அளவு தான்

  ReplyDelete
 51. // Rettaival's said...
  பட்டாபட்டியின் தற்போதைய பிரச்சினை..

  1. தன்னிடம் BMW கார் இல்லாதது
  2. சின்ராசு போல் வாழ்க்கை அமையாதது
  3. பட்டாபட்டியின் மாமனார் இன்னும் ஒன்வே டிக்கெட் எடுக்காதது
  4. காபி சூடாக இருப்பது


  சரியான பதில் சொல்லும் எல்லோருக்கும் பித்தன் அண்ணாச்சி எழுதிய "தன்மானத்தால் அல்வா செய்வது எப்படி " புத்தகம் பரிசு!///
  நீங்கள் கொடுத்த விடைகள் சரியாகப் பொருந்த வில்லை .. ஆகையால் வேறு பொருந்தக்கூடிய விடைகளை எதிர்பார்க்கிறோம் .. ....!!

  ReplyDelete
 52. ///எப்படியாவது எழுதி என் கட்சில சேருங்க.. தனியா இருக்க பயமாயிருக்கு..ஹி..ஹி
  ///
  என்னைய சேர்த்துக்கோங்க ..!!

  ReplyDelete
 53. இருங்க நல்லா படிச்சிட்டு வரேன் ஒரு தடவை

  ReplyDelete
 54. பட்டாபட்டி.. said...

  பணக்காரனாப் பிறக்காதது உன்னுடைய தவறில்லை...

  ஆனா.. பணக்காரனா இல்லாதது உன்னுடைய தவறு.. ஹி..ஹி நான் சொல்லலே..அண்ணன் பில் கேட்ஸ் சொன்னது//////////


  பில் கேட்சே சொல்லிட்டாரா!!!அப்போ வித்துடவேண்டியது தான். எதையா கருமாந்திரம் புடிச்ச தன்மானத்தை தான்.கூடிய சீக்கிரம் பெர்ராரி காருடன் சந்திப்போம்

  ReplyDelete
 55. ஜெய்லானி said...

  இருங்க நல்லா படிச்சிட்டு வரேன் ஒரு தடவை///////////

  ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா நல்லா படி அப்போ தான் கூடிய சீக்கிரம் bmw கிடைக்கும்

  ReplyDelete
 56. //அது கார் சார். சொட்டை தலையில, எண்ணெய் வெச்ச மாறி. சும்மா சர்ர்ர்ர்ர்ர்ர்னு வழுக்கிட்டு போகுது//

  பட்டா நீ உள் குத்து இல்லாம எதுவும் எழுதுவதில்லையா...? ( நல்லா பாரு மக்கா இதுவும் கேள்விக்குறி எப்பூடி..!!)

  ReplyDelete
 57. //ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா நல்லா படி அப்போ தான் கூடிய சீக்கிரம் bmw கிடைக்கும்//

  அதுக்கு ஒரு குஷ்பு (மாதிரி )வேனுமே

  ReplyDelete
 58. ஜெய்லானி said...

  //அது கார் சார். சொட்டை தலையில, எண்ணெய் வெச்ச மாறி. சும்மா சர்ர்ர்ர்ர்ர்ர்னு வழுக்கிட்டு போகுது//

  பட்டா நீ உள் குத்து இல்லாம எதுவும் எழுதுவதில்லையா...? ( நல்லா பாரு மக்கா இதுவும் கேள்விக்குறி எப்பூடி..!!)/////////////


  அப்படியே மெய் சிலிர்க்குது உன் அறிவு திறமையை நினைச்சால்?பாரு மக்கா இதுவும் கேள்விக்குறி எப்பூடி..!!

  ReplyDelete
 59. ஜெய்லானி said...

  //ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா நல்லா படி அப்போ தான் கூடிய சீக்கிரம் bmw கிடைக்கும்//

  அதுக்கு ஒரு குஷ்பு (மாதிரி )வேனுமே/////////////

  இருக்கவே இருக்கு நம்ம சோனா!

  ReplyDelete
 60. //
  இவரு BMW காரு வெச்சிருக்காரு..
  ஆனா.. அந்தம்மா..இவரை ஹஸ்பெண்டா இல்ல வெச்சிருக்கு..ஹி..ஹி//

  அட கொடுமையே...நமக்கு காசுதானே முக்கியம் ஹி..ஹி..

  ReplyDelete
 61. @@ சசிகுமார் said...

  அருமை நண்பா //

  எது காரா ..? இல்லை காரோட எஜமானியம்மாவா

  ReplyDelete
 62. ஜெய்லானி said...

  //
  இவரு BMW காரு வெச்சிருக்காரு..
  ஆனா.. அந்தம்மா..இவரை ஹஸ்பெண்டா இல்ல வெச்சிருக்கு..ஹி..ஹி//

  அட கொடுமையே...நமக்கு காசுதானே முக்கியம் ஹி..ஹி../////////

  ஓவரா யோசிக்கிற நீ வேண்டாம் வூட்டுகார அம்மா படிக்க மாட்டாங்க என்கிற தகிரியமா

  ReplyDelete
 63. //அது கார் சார். சொட்டை தலையில, எண்ணெய் வெச்ச மாறி. சும்மா சர்ர்ர்ர்ர்ர்ர்னு வழுக்கிட்டு போகுது//

  டவுட்டா இருக்கே? பட்டா அதே தானே

  ReplyDelete
 64. முத்து said...
  ஜெய்லானி said...

  //
  இவரு BMW காரு வெச்சிருக்காரு..
  ஆனா.. அந்தம்மா..இவரை ஹஸ்பெண்டா இல்ல வெச்சிருக்கு..ஹி..ஹி//

  அட கொடுமையே...நமக்கு காசுதானே முக்கியம் ஹி..ஹி../////////

  ஓவரா யோசிக்கிற நீ வேண்டாம் வூட்டுகார அம்மா படிக்க மாட்டாங்க என்கிற தகிரியமா///

  பாவம் ஜெய்லானிக்கி அடி வாங்கி மறதுப் போச்சி...அதான்..

  ReplyDelete
 65. Jey said...

  முத்து said...
  பட்டா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்///

  பட்டா நியூ வாட்டர் குடிக்கப் போயிருக்கு.. முத்து../////

  நல்லா விசாரிச்சு சொல்லுயா பயபுள்ள தன்மானத்தை விக்கபோயி இருக்க போகுது

  ReplyDelete
 66. முத்து said...
  //அது கார் சார். சொட்டை தலையில, எண்ணெய் வெச்ச மாறி. சும்மா சர்ர்ர்ர்ர்ர்ர்னு வழுக்கிட்டு போகுது//

  டவுட்டா இருக்கே? பட்டா அதே தானே//

  உள்குத்து?????? தெளிவான விளக்கம் தரவும்

  ReplyDelete
 67. முத்து said...
  Jey said...

  முத்து said...
  பட்டா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்///

  பட்டா நியூ வாட்டர் குடிக்கப் போயிருக்கு.. முத்து../////

  நல்லா விசாரிச்சு சொல்லுயா பயபுள்ள தன்மானத்தை விக்கபோயி இருக்க போகுது//

  கலம் கடந்திருச்சீ.. இப்ப வித்தா சல்லி காசுக்கு பிரயோசனமிருக்காது...

  ReplyDelete
 68. Jey said...


  பாவம் ஜெய்லானிக்கி அடி வாங்கி மறதுப் போச்சி...அதான்..//////////

  அப்போ ஜெய்லானி அடிவாங்கிய கதையை பிரிண்ட் போட்டு காசு பார்துடலாமுன்னு சொல்லு

  ReplyDelete
 69. //ஓவரா யோசிக்கிற நீ வேண்டாம் வூட்டுகார அம்மா படிக்க மாட்டாங்க என்கிற தகிரியமா//

  நாமதான் பிளாக் எழுதறதே தெரியாதே ஹி..ஹி..

  ReplyDelete
 70. Jey said...

  முத்து said...
  //அது கார் சார். சொட்டை தலையில, எண்ணெய் வெச்ச மாறி. சும்மா சர்ர்ர்ர்ர்ர்ர்னு வழுக்கிட்டு போகுது//

  டவுட்டா இருக்கே? பட்டா அதே தானே//

  உள்குத்து?????? தெளிவான விளக்கம் தரவும்//////////

  சின்ன புள்ளைகளுக்கு இங்க என்ன வேலை.போயி நியூ வாட்டர் குடிச்சுட்டு தூங்கு

  ReplyDelete
 71. //டவுட்டா இருக்கே? பட்டா அதே தானே//

  உள்குத்து?????? தெளிவான விளக்கம் தரவும்//

  க்கி..க்கி..

  ReplyDelete
 72. முத்து said...

  அப்போ ஜெய்லானி அடிவாங்கிய கதையை பிரிண்ட் போட்டு காசு பார்துடலாமுன்னு சொல்லு ///

  அதுக்கு முன்னாடி ஜெய்லானிகிட்ட பேரம் படியுதான்னு பாப்போம்...

  ReplyDelete
 73. //சின்ன புள்ளைகளுக்கு இங்க என்ன வேலை.போயி நியூ வாட்டர் குடிச்சுட்டு தூங்கு//

  அது சிங்கைலதா கிடைக்குதாம்..., ஆமா அதுல அப்ப உள்குத்து இருக்குனு சொல்லு.... சரி ரவுடிபசங்க சண்டைல ...தலையிடுரதில்ல... ஒதுங்கி வேடிக்கை பாக்குரோம்..

  ReplyDelete
 74. ஜெய்லானி said...

  //ஓவரா யோசிக்கிற நீ வேண்டாம் வூட்டுகார அம்மா படிக்க மாட்டாங்க என்கிற தகிரியமா//

  நாமதான் பிளாக் எழுதறதே தெரியாதே ஹி..ஹி../////////

  அப்போ கவலையை விடு,இதை போட்டு குடுத்தே நான் பெரிய ஆள் ஆயிடுறேன்

  ReplyDelete
 75. Jey said...

  முத்து said...

  அப்போ ஜெய்லானி அடிவாங்கிய கதையை பிரிண்ட் போட்டு காசு பார்துடலாமுன்னு சொல்லு ///

  அதுக்கு முன்னாடி ஜெய்லானிகிட்ட பேரம் படியுதான்னு பாப்போம்...//////////////


  ஆடு கிட்ட வெட்டறதுக்கு முன்னாடி பெர்மிசியன் கேட்டா வேட்டுறோம் இதுவும் அது போல் தான்

  ReplyDelete
 76. ஆத்தாடி, எம்புட்டு பணம், சரி சரி, அது என்ன தன்மானம், தண்ணி மானம்னு கொழப்பிக்கிட்டு, எல்லாம் ஒரு கட்டிங்குக்குத் தாங்காது சாமி!

  ReplyDelete
 77. அய்யா தங்களது பதிவு படித்தேன். மெய்சிலிர்த்து, மயிர்நட்டுக்க புல்லரித்துப் போனேன்.

  நாட்டுக்கு தேவையானா கருத்துக்களாக சொல்கிறீர்களே, எந்தக் கடையில் உப்பு வாங்குகிறீர்கள்?

  ReplyDelete
 78. ///விந்தைமனிதன் said...
  //கலக்கீட்டீங்க தலைவா.// யோவ் உசாருய்யா. டெம்ப்ளேட் பின்னூட்டமா வர ஆரமிக்குது... நம்ம கடை ஈயாடப் போவுதுன்னு நெனக்கிறேன்...///
  அப்படியெல்லாம் இல்லீங்க. கோர்வையா எனக்கு எழுத வராது. அதனாலதான் சுருக்கமா அப்படி சொல்லியிருந்தேன். பட்டாபட்டி சாருக்கு தெரியும், பாண்டிச்சேரிகாரன் பொய் சொல்லமாட்டான்னு. (மப்புலயே எப்பவும் இருந்தா எப்படி எங்களுக்கு பொய் வரும்..... சொல்லுங்க.)

  ReplyDelete
 79. நான் புதுசா ஒரு சி. என். எக்ஸ். கார் வாங்கிருக்கேன். ஒரு ரவுண்டு போலாமா?

  ReplyDelete
 80. தில்லு இருந்தா என் கடைப் பக்கம் வாங்க பாக்கலாம்.

  ReplyDelete
 81. தில் இருந்தா இதுக்கு உள்ள இருக்கற ஆள கண்டுபிடிங்க பாக்கலாம்.


  The page you are looking for is currently unavailable. The Web site might be experiencing technical difficulties, or you may need to adjust your browser settings.

  Other options to try:

  * Click the Refresh button, or try again later.
  * If you typed the page address in the Address bar, make sure that it is spelled correctly.
  * To attempt fixing network connectivity problems, click Tools, and then click "Diagnose Connection Problems..."
  * See if your Internet connection settings are being detected. You can set Microsoft Windows to examine your network and automatically discover network connection settings (if your network administrator has enabled this setting).
  * Click the Back button to try another link.

  ReplyDelete
 82. saar, naan sariyaanja m,aramantai. avar yaarunnu enakkup puriyalai . enakku mattum anthaal yaarunnu sollunka. avan tholai urichcxhu naan thaonkap potaren.

  ReplyDelete
 83. ///சரி. அதை விடுங்க. எவ்வளவோ கஷ்டபட்டு ,வாழ்க்கையில முன்னேறி, கார் வாங்கி.. அதுமட்டுமா, அதுல நண்பனை உக்கார வெச்சு, காபி வாங்கி கொடுப்பவர்களை, விரல் விட்டு எண்ணிடலாம். ///

  ரொம்ப சரி

  ReplyDelete
 84. உங்க பிரண்ட் செஞ்சது ரொம்ப ரொம்ப சரிங்க. தனமானத்தை வச்சிக்கிட்டு பல் குத்தக்கூட முடியாதுங்க, அப்பறம் எங்க போயி பென்ஸ் கார் வாங்கறது?

  ReplyDelete
 85. அன்பின் ரோஸ்விக்
  கதை அருமையா இருக்கு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 86. மயில்ராவணன் said...

  அன்பின் ரோஸ்விக்
  கதை அருமையா இருக்கு. வாழ்த்துக்கள்.

  //

  நன்றீண்ணே.. ஸ்நேக் பிரபாகருனு சொல்லாம இருந்ததுக்கு..

  ( நாந்தான் முருகேசுனு கண்டுபிடிச்சிருப்பாங்களோ?..)

  ReplyDelete
 87. டாக்டர் கந்தசாமி சொன்னதுதாங்க சாமி... சேம் டயலாக்.... பல்லு குத்த உதவுமா உங்க தன்மானம்?

  ReplyDelete
 88. @யாரோ ஒருவன் said...
  வாசிக்க தவறாதீர்கள் : சுதந்திர தின சிறப்பு சிறுகதை
  //
  ரைட்டு

  ReplyDelete
 89. @முத்து said...
  எந்த அளவுனு தெரியாம..அலைஞ்சுக்கிட்டு இருக்கேன்..
  கொஞ்சம் விளக்குங்குண்ணா..//////////////
  கோர்ட்டர் அளவு தான்
  //

  அதுலேயே இரு..
  எப்ப பாரு..தண்ணி..டாஸ்மார்க்னு.. அட.. நீ பாண்டிச்சேரியில்ல..ஹி..ஹி

  ReplyDelete
 90. @ப.செல்வக்குமார் said...
  சரியான பதில் சொல்லும் எல்லோருக்கும் பித்தன் அண்ணாச்சி எழுதிய "தன்மானத்தால் அல்வா செய்வது எப்படி " புத்தகம் பரிசு!///
  நீங்கள் கொடுத்த விடைகள் சரியாகப் பொருந்த வில்லை .. ஆகையால் வேறு பொருந்தக்கூடிய விடைகளை எதிர்பார்க்கிறோம் .. ....!!
  //

  ஆகா.. செல்வகுமாரு.. ரெட்டைகிட்ட வாயக்கொடுத்து மாட்டிக்காதீர்..
  சொல்றத சொல்லீட்டேன்

  ReplyDelete
 91. @ஜெய்லானி said...
  இருங்க நல்லா படிச்சிட்டு வரேன் ஒரு தடவை
  //

  அது என்ன பாஸ் ”நல்லா”..
  வரவர உள்குத்து ரொம்ப குத்தீரீக...

  ReplyDelete
 92. @சசிகுமார் said...
  அருமை நண்பா
  //

  வாங்க பாஸ்..

  ReplyDelete
 93. @முத்து said...
  //அது கார் சார். சொட்டை தலையில, எண்ணெய் வெச்ச மாறி. சும்மா சர்ர்ர்ர்ர்ர்ர்னு வழுக்கிட்டு போகுது//
  டவுட்டா இருக்கே? பட்டா அதே தானே
  //

  ஹி..ஹி

  ReplyDelete
 94. @Jey said...
  முத்து said...
  //அது கார் சார். சொட்டை தலையில, எண்ணெய் வெச்ச மாறி. சும்மா சர்ர்ர்ர்ர்ர்ர்னு வழுக்கிட்டு போகுது//
  டவுட்டா இருக்கே? பட்டா அதே தானே//

  உள்குத்து?????? தெளிவான விளக்கம் தரவும்
  //

  ஓ.. தரோம்..த்ரோம்..
  எதுக்கும் வெளியூர்காரனை கேளு.. தெளிய வெச்சு தருவான்...

  ReplyDelete
 95. @மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
  நல்லாயிருக்கு பட்டா....
  //

  டேங்ஸ் சார்..

  ReplyDelete
 96. @பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஆத்தாடி, எம்புட்டு பணம், சரி சரி, அது என்ன தன்மானம், தண்ணி மானம்னு கொழப்பிக்கிட்டு, எல்லாம் ஒரு கட்டிங்குக்குத் தாங்காது சாமி!
  //

  ஹி..ஹி..

  ReplyDelete
 97. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  ey rasa oru cofeekku ivlo akkap poraa?
  //

  ஆமாப்பா.. பில்டர் காபி ஆச்சே...

  ReplyDelete
 98. @Phantom Mohan said...
  அய்யா தங்களது பதிவு படித்தேன். மெய்சிலிர்த்து, மயிர்நட்டுக்க புல்லரித்துப் போனேன்.
  நாட்டுக்கு தேவையானா கருத்துக்களாக சொல்கிறீர்களே, எந்தக் கடையில் உப்பு வாங்குகிறீர்கள்?
  //

  மளிகை கடையிலதான்.. ஹி..ஹி

  ReplyDelete
 99. @Coumarane said...
  ///விந்தைமனிதன் said...
  //கலக்கீட்டீங்க தலைவா.// யோவ் உசாருய்யா. டெம்ப்ளேட் பின்னூட்டமா வர ஆரமிக்குது... நம்ம கடை ஈயாடப் போவுதுன்னு நெனக்கிறேன்...///
  அப்படியெல்லாம் இல்லீங்க. கோர்வையா எனக்கு எழுத வராது. அதனாலதான் சுருக்கமா அப்படி சொல்லியிருந்தேன். பட்டாபட்டி சாருக்கு தெரியும், பாண்டிச்சேரிகாரன் பொய் சொல்லமாட்டான்னு. (மப்புலயே எப்பவும் இருந்தா எப்படி எங்களுக்கு பொய் வரும்..... சொல்லுங்க.)
  //

  நீங்க வேற அப்பு.. அவங்க ரொம்ப பேசினா..அடிச்சு வீசுங்க..சப்போர்ட் பண்ண, நான் இருக்கேன்...

  ReplyDelete
 100. @கொல்லான் said...
  நான் புதுசா ஒரு சி. என். எக்ஸ். கார் வாங்கிருக்கேன். ஒரு ரவுண்டு போலாமா?
  //

  காபி வாங்கி கொடுத்தா சரி..ஹி..ஹி

  ReplyDelete
 101. @எஸ்.எஸ்.பூங்கதிர் said...
  saar, naan sariyaanja m,aramantai. avar yaarunnu enakkup puriyalai . enakku mattum anthaal yaarunnu sollunka. avan tholai urichcxhu naan thaonkap potaren.
  //

  நீங்க வேற பாஸ்.. அதுதான் மொக்கைனு சொல்லீட்டேன்.. தண்டனைய பார்த்தா எனக்கே பயமாயிருக்கு..ஹி..ஹி

  ReplyDelete
 102. @rk guru said...
  ///சரி. அதை விடுங்க. எவ்வளவோ கஷ்டபட்டு ,வாழ்க்கையில முன்னேறி, கார் வாங்கி.. அதுமட்டுமா, அதுல நண்பனை உக்கார வெச்சு, காபி வாங்கி கொடுப்பவர்களை, விரல் விட்டு எண்ணிடலாம். ///

  ரொம்ப சரி
  //
  வாங்க பாஸ்...

  ReplyDelete
 103. @DrPKandaswamyPhD said...
  உங்க பிரண்ட் செஞ்சது ரொம்ப ரொம்ப சரிங்க. தனமானத்தை வச்சிக்கிட்டு பல் குத்தக்கூட முடியாதுங்க, அப்பறம் எங்க போயி பென்ஸ் கார் வாங்கறது?
  //

  பெரியவங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் போல..

  ReplyDelete
 104. @Giri said...
  டாக்டர் கந்தசாமி சொன்னதுதாங்க சாமி... சேம் டயலாக்.... பல்லு குத்த உதவுமா உங்க தன்மானம்?
  //

  யாரு பல்ல பாஸ்..?

  ReplyDelete
 105. @பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
  உள்ளேன் ஐயா..
  //

  வாங்க சார்.. என்ன கடைப்பக்கம் ஆளே காணோம்?..

  ReplyDelete
 106. ///இன்னைக்கு என்னா கிழமை பாஸ் ?...

  செவ்வாய்கிழமை i mean TUESDAY

  ReplyDelete
 107. பழைய படந்தான் ஓடிட்டிருக்கா????புதுப்படம் ரிலீஸ் பண்ணலியா சார்.

  ReplyDelete
 108. பத்து கோடி வச்சா பத்து நிமிஷம் கூட வாக்கிங் போலாமே பாஸ்.

  ReplyDelete
 109. பட்டீன்னா, பட்டின்னா,
  தன்மானம்- ன்னா கல்யானத்துக்கபுரம் டவுசர அவுத்தவுடன் பொயிருதெ!!! அத பத்தி இப்ப வருத்தபட ஒன்னுமில்ல!!

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!