Pages

Friday, January 29, 2010

பேட்டி எடுப்பது தப்பா சார் ?.....

செய்தி : சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் சார்பில் குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் தங்கபாலு தேசிய கொடி ஏற்றினார்.
அப்போது செய்தியாளர்கள்,  "ஓரிரு தினங்களுக்கு முன் புதுடெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, காங்கிரஸ் தலைவர் சோனியாவை, ஜெயலலிதா  சந்தித்த காரணத்தால் தமிழகத்தில் கூட்டணி மாற்றம் ஏற்படுமா? " எனக் கேள்வி எழுப்பினர்.


அதற்கு பதிலளித்துப் பேசிய தங்கபாலு, “சோனியா காந்தியை ஜெயலலிதா டெல்லியில் சந்தித்தது சாதாரணமாக நிகழ்ந்தது.  தலைவர்கள் சந்தித்துக் கொள்ளும்போது மரியாதை நிமித்தமாக பேசிக் கொள்வது வழக்கமானது. அதேபோலதான் இருவரும் பேசிக்கொண்டனர். இதில் வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை. ஊடகங்கள்தான் பெரிதுபடுத்துகின்றன.
தமிழகத்தைப் பொறுத்த வரை திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றிக் கூட்டணி. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. இதில் எந்த பாதிப்பும் வராது” என்றார்.

------------------------------------------------------------------------------------------------------


சார்.. மேலேயுள்ள செய்திகளைப் படித்தீர்களா?..
<.சே.. போட்டோ வுல கூட என்னை மொரைக்கிறாரு....>
.
நீங்க நினைப்பது சரிதான்.. எனக்கும்....... அதே டவுட்தான்  வந்தது...

புரிஞ்சவங்க அப்படிகா ஜம்ப் பண்ணி அடுத்த பாராவுக்குப் போயிடுங்க....
பத்திரம் சார்.. பார்த்து...( கீழ விழுந்தா.... தற்கொலை முயற்சியினு போலீஸ் புடிச்சுக்கும்..)
.
.
( ஓகே.. நம்மாளுக....... இப்படிக்கா எங்கூடவே வாங்க...)

 • எதுக்கு "டெல்ல்ல்ல்லியிலே" சந்திச்சாங்க?
 • அம்மா ,"  அன்னை   "-கு வணக்கம் வெச்சாங்களா?
 • பதிலுக்கு அவிங்க , இவிங்களுக்கு வணக்கம் வெச்சாங்களா?
 • அப்படினா...கலைஞரும் , அம்மாவும் மரியாதை நிமித்தமாக பேசிக்கொள்வார்களா?
 • இது எப்படி மக்களுக்கு தெரியாம போயிடுச்சு?.
 • சந்திப்பு சாதாரணமா டெல்லியில நடக்கும் அளவுக்கு....நாடு...  பணக்கார நாடு ஆயிடுச்சா?
 • "ஊடகம் பெரிதுபடுத்துகின்றன"  என்றால்  பதிவுலகம் ( அட.. நாமதான்...) நல்லவர்களின் கூடாரமா?.
 • "திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றிக் கூட்டணி" யென்றால் , ஏன்  இடைத்தேர்தலிலே பணம் பட்டுவாடா நடந்தது?..

இவ்வளவுதாங்க நம்ம டவுட்டு..
.
.
.
.
(  ஜம்ப் பண்ணினவங்க... இங்க வந்து சேர்ந்துக்கோங்க...)


தங்கவாலு.. சே.. எல்லாமே தப்பு... தப்பாவே... வருது..
ஆங்....நம்ம தங்கபாலு அண்ணன் சும்மாதானே  இருப்பாரு....
பாதிப்பு வேற வராதுனு அடிச்சு சொல்றாரே......
.
எதுக்கும் " இரண்டு இத்தாலி பிஸ்சா " வாங்கிட்டு,
அவருக்கு போயி ஒரு சலாம் போட்டுட்டு  வரலாமுனு
கம்பெனி வேன் எடுத்துகிட்டு போனோமா....( அட நானும் , பக்கிரியும் ).
.
.
.
மூச்சு வாங்குது...கொஞ்சம் இருங்க தண்ணி குடுச்சுகிறேன்...
.
.
.
போனோமா , பெரிய "கேட்"-னே.. முன்னாடி தடி தடியா இரண்டு பேரு.. கையில வேற குச்சின்ணே...எப்படியிருக்கும் எங்களுக்கு.....
பார்த்ததுமே பக்கிரி , பாத்ரூம் எந்தப்பக்கம்னு,    பார்க்க ஆரம்பிச்சுட்டான்..
.
.
இரண்டு பேப்பர் கொடுத்து
"பேரு..... 
வயசு.......  
ஆம்பளையா இல்ல பொம்பளையா....
அப்பன் பேரு.......
ஆத்தா பேரு......
எத்தன குழந்தைக........."
பெரிய லிஸ்ட்-னே....இதுல வேற வேனை .........வெளியே நிறுத்திட்டு போகனுமாமாம்....
.
அப்பப்பா.. ஒருவழியா எழுதிக்கொடுத்துட்டு ,  உள்ள போறோம்......
ஒரு பத்தடி நடந்திருப்பனே.. பின்னாடியே திபு..திபு -னு  ஓடிவராங்க அந்த தடியனுக...

திரும்பிப் பார்த்தா , எமதர்மனுகளே ஓடிவருவது போல இருக்கு...
ஆகா.. உள்ளவிட்டு உருவுவானுகளா.. இல்ல .. குமறுவானுகளா-னு புரியாம  ....நான் கிழக்க ஓட , பக்கிரி மேற்க ஓட....
கடைசியா...............  புடிச்சுட்டாங்கணே....

என்னடானு பார்த்தா................ ஷூ -வ வெளியே கழட்டிவெச்சுட்டு போகனுமாம்..அதுவும் மேலிட உத்தரவாம்..( திருந்தவே மாட்டாங்க போல...)
அதையும் பண்ணித் தொலச்சுட்டு , நாறக்காலோட நடந்தே உள்ளே போனோம்..

உள்ள போனதுமே ஒரே மீன் நாற்றம்..... என்னடானு பார்த்தா,
தங்கபாலு , பல்லுக்குச்சிய வெச்சுகிட்டு.............
குத்திகிட்டு இருக்காருணே..( பல்லை- யில்ல.......  மீனை.....)

மீன் -> சின்னம் -> பாண்டிய நாடு  -> அட....ங்க்... அண்ணன் வந்துட்டு போயிருக்காரு போல..( எப்படியா    பட்டாபட்டி ?)

நம்ம தங்க்ஸ் , குச்சிய வெச்சு, மீன்   முள்ள எண்ணிக்கிட்டு  " உம்.. சொல்லுங்க.. என்னா  ? " -னு    கேக்கறாருங்க..

நான்  "சார்.. சில டவுட்ஸ்......அதை தெளிவுபடுத்திக்கலாம் என்று...."  நான் இழுக்க...

"யோவ்.. கட்சித் தொண்டனா கடமையச் செய்.. மீதிய நான் பார்த்துக்கொள்கிறேன்      "னு தெனாவெட்டா  சொல்றார்...

பக்கிரிக்கு மண்டைக்கு மேல ஏறிடுச்சு..."  யாரப் பார்த்து என்னா கேள்வி கேக்குறே ?.. இவரு யாரு தெரியுமா?...   ப.மு.க தலைவர் + ரிப்போர்டர்.........இவரப் பார்த்து எப்படி சொல்லலாம்   "னு குதிக்கிறான்..
( பக்கிரிக்கு  இந்த வருசம் கண்டிப்பா  சம்பளத்த ஏத்தி கொடுக்கனும் )..
.
.
"தம்பி.. பாரம்பறிய கட்சிக்காரன் நானு.. எனக்கு தெரியாத தகிடுதத்தமா?..
நீ செக்யூரிட்டியிலே பாரம் நிரப்பினாயே.....அது என்னானு தெரியுமா உனக்கு..?

எங்க கட்சி அடிப்படை உறுப்பினர் ஆயிட்டேனு...  நீயே   எங்களுக்கு கொடுத்த......... பட்டா.. அப்பு.. பட்டா.."-னு வீரப்பா மாறி சிரிக்கிறாரு...

அதுகூடப் பரவாயில்ல சார்.. ஆனா சொன்னாரு பாருங்க ஒரு வாக்கியம்..
என்னோட ஈரக் குலை நடுங்கிருச்சு சார்.

"என்னோட சாதனையா.... இந்த 2 Form's -ச  டெல்லிக்கு அனுப்பி , அடுத்த 5 வருசத்துக்கு தலைவராவே ஓட்டிடுவேன்.....  "-னு...
.
.
வந்ததே சார்.. கோபம்...அப்படியே கைய ஓங்கிட்டு ....
.
.
.
திரும்பி வேனைப் பார்த்து ஒரே ஓட்டம்..
நாங்க ஓடிவர ஸ்பீட் பார்த்துட்டு... அந்த ரெண்டு குண்டனுக....
கையில வச்சிருந்த பாரமெல்லாம்( Form's) கீழ போட்டுட்டு ,
என்னோட ஷூ-வையும் , பக்கிரியோட செருப்புக்களையும் அவசரம்மா
எடுத்து ஒளிச்சு வெச்சுடாங்க...( சீப்பை ஒளித்துவைத்தால், கல்யாணம் நின்னுடுமா?- பாருங்க.. இவனுக பண்ணின அலம்பறையில )

செருப்பா  இல்ல வாழ்க்கையா.?????.
.
.
.
"வாழ்க்கை"-தான் முடிவுபண்ணிட்டு , Forms பொறுக்கியெடுத்துட்டு       ஓடி போயி வேன்-ல ஏறி "கிரேட் எஸ்கேப்"....
.
.
அதனாலே , அந்தப் பக்கம் போனா, பார்த்து சூதனமா நடந்துக்குங்க...
.
.

சரிங்க.. உங்களுக்கு  நேரமாச்சுனா , கமெண்ஸ் போட்டுட்டு
போயிட்டேயிருங்க.. நாளைக்குப் பார்க்கலாம்..


மற்றவர்களுக்கு...

.
.
சார்.. அந்தப் பக்கம் போனா , என்னோட ஷூ-வையும்,
பக்கிரியோட செருப்பையும் ,அவங்களுக்கு தெரியாம எடுத்துட்டு வந்திடுங்கண்ணே...
.
.
அடையாளமா?..
.
.
.
என்னோட  இடது கால் ஷு-ல "பட்டா" ,
லது கால் ஷு-ல "பட்டி" -னு போட்டிருக்கும் சார்...
.
.
பக்கிரியோடதா?
சொல்ல மறந்துட்டேங்க...
பக்கிரி காது குத்து , கிடா வெட்டுக்கு போகும்போது
ரெண்டுமே வலதுகால் செருப்பா போட்டுக்குவானுங்க...

அப்புறம்.. இந்த  கருமாதி, ஆஸ்பத்திரி போகும்போது
ரெண்டுமே இடதுகால் செருப்பா போட்டுட்டு போவானுங்க..
.
.
. என்னா பக்கிரி  ?  .. இப்ப தொலைச்சது எந்த ஜோடி செருப்பு?..
.
.
"இடது கால் செருப்பா.....அடப் பார்றா...."
.
.
.
30 comments:

 1. ஹ..ஹா...ஹா. தங்கபாலு ரொம்பவே பய்முறுத்திட்டாரோ...

  ReplyDelete
 2. வாங்..ங்..ங்..ங்..ங்..ங்க கண்ணகி..
  இன்னும் சரியாகவில்லை..( நாக்கு குழறதுங்க..)
  அடுத்த தடவை ஊருக்கு வரும்போது,
  காரமடை ஜோசியர்கிட்ட தாயத்து வாங்கனுங்க...

  ReplyDelete
 3. "தம்பி.. பாரம்பறிய கட்சிக்காரன் நானு.. எனக்கு தெரியாத தகிடுதத்தமா?..
  நீ செக்யூரிட்டியிலே பாரம் நிரப்பினாயே.....அது என்னானு தெரியுமா உனக்கு.."

  இப்படி தான் ஆள் சேர்கிறார்களா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!!!!!!!!!

  ReplyDelete
 4. அப்பாவிJanuary 29, 2010 at 8:10 PM

  ஏம்பா ... இவளு தூரம் போனிங்களே, அப்டியே ஓர் எட்டு போய் மஞ்ச துண்டு கார பாத்திருக்கலாம் இல்ல? சொக்க தங்கத்த பத்தி சொல்லிருப்பார் இல்ல.
  என்ன அங்க போயிட்டு வந்தா , நாங்க உங்கள பாக்க ரெண்டுமே இடதுகால் செருப்பா போட்டுட்டு வரணும். பின்ன ஆஸ்பத்திரிநா ஒரு மருவாத இல்ல.

  ReplyDelete
 5. //Tamilmoviecenter said...
  இப்படி தான் ஆள் சேர்கிறார்களா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!!!!!!!!! //

  சார்.. புதுசு புதுசா கண்டுபுடிக்கறாங்கோ..
  என்ன சார் பண்றது.. கையெழுத்துப் போடவே
  பயமாயிருக்கு சார்...

  ReplyDelete
 6. //அப்பாவி said...
  ஏம்பா ... இவளு தூரம் போனிங்களே, அப்டியே ஓர் எட்டு போய் மஞ்ச துண்டு கார பாத்திருக்கலாம் இல்ல? சொக்க தங்கத்த பத்தி சொல்லிருப்பார் இல்ல.
  என்ன அங்க போயிட்டு வந்தா , நாங்க உங்கள பாக்க ரெண்டுமே இடதுகால் செருப்பா போட்டுட்டு வரணும். பின்ன ஆஸ்பத்திரிநா ஒரு மருவாத இல்ல. //
  எங்க சார்.. மஞ்சத்துண்ட நினைக்கிறது..
  நாங்களே துண்டக் காணோம் , துணியக் காணோமுனு , உயிரக் கையிலெ புடிச்சு ஓடிவந்திருக்கோம்.. டமாசு பண்றிங்க..

  ReplyDelete
 7. அப்பு.. டமாசு..

  ReplyDelete
 8. //manithan said...

  அப்பு.. டமாசு..//


  ஆகா.. மனிதா..
  உயிரக் கையில புடிச்சுட்டு ஓடி வந்தா, உமக்கு
  டமாசா இருக்கு...

  தில் இருந்தா , அங்கபோயி எங்க ஷூ மற்றும் செருப்ப எடுத்துட்டு வந்துடுங்க பார்க்கலாம்...

  ReplyDelete
 9. அப்பாவிJanuary 29, 2010 at 8:53 PM

  ஹ்ம்ம் படபடப்பா பதில் சொல்றத பாத்தா, ரொம்பத்தான் பயந்து போனாப்பல தெரியுது. கவலைபடாதிங்க, மம்மி கிட்ட சொல்லி, ஆளாளுக்கு ஒரு கவர்னர் வேலை வாங்கி தரேன். திவாரி தாத்தாவ கொலதெய்வமா நெனச்சி நல்லா இருங்க.

  ReplyDelete
 10. //அப்பாவி said...

  ஹ்ம்ம் படபடப்பா பதில் சொல்றத பாத்தா, ரொம்பத்தான் பயந்து போனாப்பல தெரியுது. கவலைபடாதிங்க, மம்மி கிட்ட சொல்லி, ஆளாளுக்கு ஒரு கவர்னர் வேலை வாங்கி தரேன். திவாரி தாத்தாவ கொலதெய்வமா நெனச்சி நல்லா இருங்க.//


  அது ஒரு பெரிய கதை சார்..
  அந்த ப்ளான் பெயில் ஆனதால்தான்,
  இப்படி ஆள் புடிக்கிறாங்க..
  (எப்படியா ?. அத ஒரு பதிவாப்
  போட்டாலும் தீராது சார்....)

  சீக்கிரம் எதிர்பாருங்கள்

  ReplyDelete
 11. அவரு ‘தலை’யப்பாத்து அவரே பயந்துபோயி கெடக்காரு... நீங்க வேற...

  ReplyDelete
 12. பட்டாப்பட்டிக்கும் பக்கிரிக்கும் ஒரு வேண்டுகோள்
  அடுத்த முறை டங்குவாலை சந்திக்க நேர்ந்தால் நான் "த்த்தூ" ன்னு துப்புனதா சொல்லிருங்க !!

  ReplyDelete
 13. //க.பாலாசி said...

  அவரு ‘தலை’யப்பாத்து அவரே பயந்துபோயி கெடக்காரு... நீங்க வேற...//

  பாலாசி அண்ணா..
  வாங்கண்ணா..
  நம்ம கடைக்கு வந்து
  ரொம்ப நாளாகிப்போச்சுங்களே..

  எப்படியிருக்கீங்க..?

  ReplyDelete
 14. //யூர்கன் க்ருகியர் said...

  பட்டாப்பட்டிக்கும் பக்கிரிக்கும் ஒரு வேண்டுகோள்
  அடுத்த முறை டங்குவாலை சந்திக்க நேர்ந்தால் நான் "த்த்தூ" ன்னு துப்புனதா சொல்லிருங்க !!//


  சார்.. இனி ஏழேலு ஜென்மத்துக்கும்..
  அந்தப் பக்கப் போற மாறியில்லைங்க....

  நிமிசத்தில பயமுறுத்திட்டாங்க..
  பாவங்க நம்ம பக்கிரி.. பச்ச மண்ணுங்க...
  அவனையும் போயி...

  ReplyDelete
 15. தொடர்ந்து படித்து வருகிறேன்...தொடர்ந்து துப்புவதில்லை!!! (இந்த வார்த்தை பிடிக்கவில்லை எனக்கு..நகைச்சுவைக்கு சொன்னாலும் உங்களை சாமானியமாக எடை போட முடியாததால்...அந்த வார்த்தையை மாற்றி விடுங்களேன்..)
  எழுத சப்ஜெக்டா இல்லை என்ற போதும்...எல்லாவற்றையும் அழகிய நகைச்சுவை நடையில் தொடர்ந்து எழுதுவது சாதாரண விஷயம் இல்லை. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 16. // ஸ்ரீராம். said...
  தொடர்ந்து படித்து வருகிறேன்...தொடர்ந்து துப்புவதில்லை!!! (இந்த வார்த்தை பிடிக்கவில்லை எனக்கு..நகைச்சுவைக்கு சொன்னாலும் உங்களை சாமானியமாக எடை போட முடியாததால்...அந்த வார்த்தையை மாற்றி விடுங்களேன்..)
  எழுத சப்ஜெக்டா இல்லை என்ற போதும்...எல்லாவற்றையும் அழகிய நகைச்சுவை நடையில் தொடர்ந்து எழுதுவது சாதாரண விஷயம் இல்லை. பாராட்டுக்கள் //

  நன்றி ஸ்ரீராம்.
  இதை பலரும் சொல்லிவிட்டனர்..
  மாற்றிவிடுகிறேன் விரைவில்...
  இதுவரைக்கும் Exam தவிர , எங்கேயியும் எழுதினதில்லை..
  இது என் முதன் முயற்சி....( 3 மாதம்..)

  அதனால் தான் எனக்கு நானே குட்டும்படி அமைத்திருந்தேன்..

  கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 17. //சுப.தமிழினியன் said...
  :-))) //

  நன்றி சுப.தமிழினியன் அய்யா...


  //Anonymous said.....
  arumai,sami //

  அட.. நீங்கதான் அவரா.... நன்றி சார்....

  ReplyDelete
 18. என்னா சார்.. சீக்கிரம் முடிச்சுட்டீங்க..

  ReplyDelete
 19. Oho ippadithan katchikku aal sergirargala, adhanala makkale thappi thavari kooda andha area pakkam poyidatheenga

  ReplyDelete
 20. அண்ணாத்தே!இம்புட்டு நாளா எங்க குந்திகினு இருந்தீங்கோ!சும்மா பட்டாசா சர சரக்குது வார்த்த.

  ReplyDelete
 21. //ராஜ நடராஜன் said...

  அண்ணாத்தே!இம்புட்டு நாளா எங்க குந்திகினு இருந்தீங்கோ!சும்மா பட்டாசா சர சரக்குது வார்த்த.
  //

  இன்னா சார் பண்றது.. இவனுக
  பண்ற லூட்டி தாங்கமா, நமகு
  பிச்சிகிடுச்சு..
  ஆனது ஆகட்ட்டுமுனு ப்ளாக் ஆரப்பிச்சுட்டேன்..
  அடிக்கடி வாங்க அண்ணாத்தே..

  ReplyDelete
 22. //ராஜ நடராஜன் said...//

  அட கோயமுத்தூரு...நம்மூரு...
  என்னங்கண.. எங்கள உட்டுட்டு குவைத்துக்கு
  போயிட்டீங்க..

  ReplyDelete
 23. பிடிச்சிருந்தா சொல்லுங்க..
  பிடிக்கலைனா குட்டுங்க சார்....

  இது ஓகே..::))

  (அட நானும் மாத்திட்டேன் பார்த்தீங்களா?):)

  ReplyDelete
 24. //ஷங்கர்.. said...

  பிடிச்சிருந்தா சொல்லுங்க..
  பிடிக்கலைனா குட்டுங்க சார்....

  இது ஓகே..::))

  (அட நானும் மாத்திட்டேன் பார்த்தீங்களா?):)//


  வாருங்கள் ஷங்கர் சார்..
  இப்பதான் சிங்கப்பூர்ல, 'துப்புனா
  பைன்'-னு கேள்விப்பட்ட்டேன்..

  எதுக்கு வம்பு..?

  ReplyDelete
 25. //அட கோயமுத்தூரு...நம்மூரு...
  என்னங்கண.. எங்கள உட்டுட்டு குவைத்துக்கு
  போயிட்டீங்க..//

  மெய்யாலுமா!வணக்கமுங்ண்ணா!

  இது கூட தெரியாம முதல் பின்னூட்டத்துக்கு முன்னாடி உங்க கடையில உட்கார்ந்தவன் மேய் மேய்ன்னு மேஞ்சுகிட்டு இருக்கிறேன் இப்ப வரைக்கும்:)

  ReplyDelete
 26. //ராஜ நடராஜன் said... மெய்யாலுமா!வணக்கமுங்ண்ணா!

  இது கூட தெரியாம முதல் பின்னூட்டத்துக்கு முன்னாடி உங்க கடையில உட்கார்ந்தவன் மேய் மேய்ன்னு மேஞ்சுகிட்டு இருக்கிறேன் இப்ப வரைக்கும்:)//
  படிச்சுட்டு , நல்லாயிருந்தா சொல்லுங்க..

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!