Pages

Tuesday, January 26, 2010

சினேகா அரசியலுக்கு வருகிறாரா? Exclusive பேட்டி...

காலை 7 மணி.. இடம் : சென்னை..
வணக்கம்.. நாங்க பட்டாபட்டியிலிருந்து Interview -க்கு வந்துள்ளோம்..

வாங்க.. வாங்க .. உக்காருங்க.. மேடம் மேக்கப் போட்டுட்டு இருக்காங்க.. 10 நிமிடம் வரவேற்பு அறையில உட்காருங்க..

1 மணி நேரங்கழிந்த பின்.. சினேகா ஆஜர்..

வணக்கம்.. நான பட்டாபட்டியிலிருந்து பக்கிரிசாமி. நிருபர்..

வணக்கம்.. சாரிங்க.. கொஞ்சம் லேட்டாயிடுச்சு.. நேற்று ராத்திரி Exam-க்கு Prepare பண்ணீட்டு இருந்ததால் தூங்க நேரமாகிவிட்டது..

ஓகோ.. அப்படியா. என்ன பரீட்சை மேடம்?...

10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிவருகிறேன்.. கடைசியா இன்னும் ஒரு சப்ஜெட் பாக்கியிருக்கிறது..

என்னங்க.. இப்ப போயி 10 ஆம் வகுப்பு எழுதிகிட்டு...

அவருடைய அம்மா குறுக்கிட்டு... " என்னோட மகளுக்கு இப்போதான் 15 வயசு முடிஞ்சு 16 வயசு தொடங்குது..

அய்யோ.. நான் அதைச்சொல்லலீங்க... தேர்வு எப்போதும் மார்ச் இல்லை ஏப்ரலில் தானே வரும்..

எம்மக 10ஆம் வகுப்பு தேர்வை ஷார்ஜாவில எழுதுறா.. அங்கெல்லாம் ஜனவரியிலே தேர்வு வந்துவிடும்..

அப்படினா சரிங்க மேடம்.. நான் நோட் பண்ணிக்கிறேன்..
மேடம்.. முக்கியமான கேள்வி.. நீங்க "பவானி" என்ற படத்திலே நடிக்கப்போறதா நியூஸ் வந்துச்சே..அதைப்பற்றி நம்ம வாசகர்களுக்கு
ஏதாவது சொல்ல விரும்பிகிறீர்களா?..


ஆமாங்க.. அது ஒரு சூப்பர் படம்.. நம்ம விஜயசாந்தி கூட ஒருகாலத்திலே குதித்து குதித்து அடிப்பாங்களே.. அதே மாதிரி கேரக்டரை இந்தப் படத்திலே நான் பண்ணுகிறேன்..இந்தப் படத்திலே துப்பாக்கி வச்சு சுடுரமாறி சீன் எல்லாம் வருது.. அம்மா.. அந்த துப்பாக்கிய எடுத்துட்டு வாங்க.. அவ்ருக்கு சுட்டுக்காட்டலாம்..சினேகா சொல்லிமுடித்தவுடன் பக்கத்து அறையிலிருந்து அவரது அக்கா, ஒரு துப்பாக்கிய உயர்த்திப் பிடித்துக்கொண்டு வருகிறார்.. நமக்கோ அடிவயிரு கலங்குது..  துப்பாக்கிய வாங்கிய மேடம் நம்மை குறி பார்த்தவாரு போஸ் கொடுக்கிறார்..
 
அய்யோ.. மேடம் .. துப்பாக்கிய அந்தப் பக்கம் திருப்புங்க..
குண்டு.. குண்டுல படப்போகுது
. என நான் பதற, மேடம் சிரித்தவாரு துப்பாக்கியை அக்காவிடம் திருப்பிக்கொடுக்கிறார்..
( என்னடா குண்டு, குண்டுனு ரெண்டு தடவை சொல்றேனு
நினக்கிறவங்க அப்படிக்கா " Alt+Ctr+Del " அமுத்திட்டு போயிட்டேயிருங்க..
.
ஏன்ன்ன்ன்ன்னா?..
.
.
.
போங்க சார்.. இதையெல்லாம் விளக்கமா சொல்லிக்கிட்டு ..
)

என்னோட நடுக்கத்தை வெளிகாட்டாமல் அடுத்த கேள்வியை வீசுகிறோம்..  சரிங்க.. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு மலேசிய பையனை ஏதோ கல்யாணம். கில்யாணமுனு பேட்டி கொடுத்த ஞாபகம்.
அதைப்பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?


சார்..அதை பற்றி முன்னாலேயே சொல்லிட்டேன்..நான் மலேசியா போயிருந்தபோது அந்த பையன் என்னைபார்த்து வணக்கம் சொன்னான். நானும் பதிலுக்கு வணக்கம் சொன்னேன்.அதைப் படம் எடுத்து பிரச்சனை ஆக்கிவிட்டனர்.. . வணக்கம் சொன்னது தப்பா சார்.. இதைப் போயி............


எனன மேடம்?.. இத சாதாரணமா சொல்கிறீர்கள்.. வணக்கம் சொன்னதற்கு பதில் வணக்கம் சொல்லவில்லையென்று, பிரச்சனை வெட்டு, குத்து லெவலில் ஓடிட்டுயிருக்கு.. நாங்க ஈழப் பிரச்சனையயே மறந்துவிட்டு , இந்தப் பிரச்சனை என்னவாகுமொயென்று,  டெய்லி டாஸ்மார்க் முன்னாடி கூடிப் பேசிக்கொண்டுள்ளோம் .

சார்.. விடுங்க.. அதை நான் மறக்க முயற்சிக்கிறேன்
அடுத்த கேள்விக்குப் போங்க சார்..

ஓ.கே.. உங்க அரசியல் பிரவேசம் பற்றி...

அம்மா மற்றும் மகள் முகங்கள் பிரகாசமாகிறது..

"சென்னையில் இருந்து கூப்பிடராங்க..
டெல்லியிலேயிருந்து கூப்பிடராக..
அமெரிக்காவுல பில் கிளின்டன் கூப்பிடராக..
ஆனா, இப்போதைக்கு வேண்டாமுனு முடிவு பண்ணியிருக்கோம்.
."

எனக்கு புரியாமல் " எதுக்கு மேடம் .. உங்களை கூப்பிடராங்க?" சொல்லீட்டு திருப்பிப் பார்த்தா  அக்கா கையில துப்பாக்கி..எனக்கோ வாயிலிருந்து வார்த்தை வெளிவரவில்லை...

நல்லவேளை.. அவங்க அக்காவே "அரசியலுக்குத்தான் " எனக் கூறி வயிற்றில் பால் வார்த்தார்கள்..(அக்கா.. நல்லாயிருங்கக்கா...)

அடுத்து அம்மா "எங்களுக்கு சினிமாதான் மூச்சு.. அடுத்த 10 வருசத்துக்கு சினிமாவுல சாதிச்சுட்டு அப்புறமா அரசியலப் பற்றி சிந்திக்கலாம்.."
(தப்பிச்சமடா சாமி.. இன்னக்கு நைட்டு "குலதெய்வத்துக்கு 100 தேங்காய்" உடச்சிடனுமுனு நினைத்துக்கொண்டேன்..)

அதுக்குள்ளே , சுடசுட டீ வந்தது.. அதைக் குடித்துக்கொண்டிருக்கும் போது,

"யாராவது ஆர்ட் டைரக்டர் புதுசா படமெடுக்கற ப்ளான் வைத்திருந்தால், எங்களுக்கு சொல்லுங்க நிருபர் சார்.. பாப்பா அரசியலுக்கு வரும்முன் நல்ல படங்களில் நடித்து பேர் வாங்க வேண்டும்..."

"அரசியல் ஒரு சாக்கடை மேடம்............. அதுல எங்க தல கால் வெச்சுட்டு படாதபாடு  படாதபாடுபட்டுட்டிருக்கார்.. நீங்க போயி அதிலே..............."

"ஹல்லோ.. பாப்பா பத்தி இன்னும் உங்களுக்கு தெரியாது..மேடம் வந்தா மற்றவர்கலெல்லாம் அரசியலவிட்டே ஓடிவிடுவார்கள்..."
ஓஹோ.. அப்படினா சரிதான் மேடம்.. (விதி விட்ட வழி.. ஹும்...)


நம்ம பய ஒருத்தன் ஆர்ட் படமெடுப்பதில் வல்லவர்..அவரு ஒரு நல்ல படம்
எடுக்கனுமுனு சொல்லிட்டு இருக்கார்..

அட... அப்படியா... பாத்தீங்கல்ல எங்க பாப்பா ராசிய...சரி..ஆளு எப்படி?..நல்ல பேமஸ் டைரக்டரா?.. அவரு எடுக்கற படமெல்லாம் எப்படி ஓடுது?..

அய்யோ.. அதை ஏன் கேக்கிறீங்க.. நெட்-ல அவரு எடுத்த படம் பார்த்தவங்க மட்டும்....... கோடிக்கணக்கில இருக்கும்..  படத்த இன்னும் பாக்கறாங்கனா, பார்த்துக்கோங்களேன்..   படம் 100 நாளைத் தாண்டி ஓடிட்டேயிருக்கு...

"ஓஹொ..அப்படியா.. நாங்க கேள்விப்பட்டதேயில்லையே.".

"போங்கம்மா.. டமாசு பண்ணிகிட்டு..நீங்க பாப்பா Exam-க்கு ஷார்ஜாவில பிஸியாயிருந்த நேரத்தில  அவரு இங்க பிரபலமாயிட்டாரு.."

அட.. பாத்தீங்களா.. கொஞ்ச நாளு வெளி நாடு போயிட்டு வந்தா , இங்க என்னென்னமோ நடந்திருச்சு..  சரிங்க.. அவரு யாரு..?

அம்மா.. அவர ரோட்ல பார்த்தா கால்ல யாரும் செருப்ப போட மாட்டாங்க..

ஏன் அவ்வளவு மரியாதையா?..

ஆமாம்மா..அவரு சுத்தி நின்னுகிட்டு , கன்னத்தில , உடம்புல.. எல்லாயிடத்திலும் தட்..தட்-னு.........  போங்கம்மா.. எனக்கே வெக்கமாயிருக்கு...

சரிப்பா..அவரு அமெரிக்கா லெவல்-க்கு படம் எடுப்பாரா?..

அய்யோ மேடம். என்ன இப்படி சொல்லீட்டிங்க..  பில் கிளின்டன் "ஆபிஸ் ரூம்"-ல பண்ணுனதை இவரு "ஆண்டவர் ரூம்"-லேயே பண்ணீட்டார்..
படத்த பார்த்த கிளின்டனே , பயலைப் பாராட்ட நினைத்து,
அமெரிக்காவில உள்ள இந்திய தூதரகத்தில் விசா-க்கு க்யூல நிக்கிறாரு....


சரிப்பா.. நீ உடனே அந்த டைரக்டரை வரச் சொல்லு.. புதுப்படத்த பற்றி பேசலாம்..

மேடம்.. நீங்க நினைக்கின்ற மாறி அவரு என்ன கத்துகுட்டி டைரக்டரா?.. சொன்னதும் வருவதற்க்கு... அவரு ஒரு க்ரைம் பட டிஸ்கசனுக்கா , லொகேசன் பார்த்து கதை எழுத ஜெயிலுக்குள்ள போயிருக்கார்..
எப்ப வருவாருனு அவருக்கே தெரியாது.. ஆங்
..
அவரு வெளிய வந்ததும் உங்களுக்கு இன்பர்மேஷன் கொடுக்கிறேன்..

சரிங்க மேடம்..நான் வரட்டுங்களா.. தலைக்கு மேல வேலையிருக்கு..
வேலை முடிக்காட்டி பட்டாபட்டியார் வந்து சாமியாடிடுவார்..

என்ன பக்கிரி அண்ணே. கொஞ்சம் நில்லுங்க.. அவரு பேரு + போன் நம்பரையாவது சொல்லிட்டுப்போங்க..இல்லாட்டி எங்களுக்கு தலையே வெடிச்சுடும்..

அவரப் பத்தி ஒரு பதிவையே போட்டிருக்கோம்.. படிச்சுக்குங்க..
வரட்டுங்களா..


மக்கா.. நம்ம பேட்டி நல்லாயிருந்தா , கமெண்ஸா துப்புங்க.. உங்க புண்ணியத்தில பட்டாபட்டியார் கிட்ட  புரமோஷன் வாங்கிடுவேன்.. இல்லாட்டி பழையபடி சைக்கிள் ஸ்டேன்ட் தான்..( செட்டியாரு வேற அங்க குத்தவெச்சி உக்காந்துட்டு இருக்காரு...)
.
.
.

13 comments:

 1. //யூர்கன் க்ருகியர் said...

  Pakkiri Rocks !//

  pakkri got the first vote...
  thank you Mr.யூர்கன் க்ருகியர்

  ReplyDelete
 2. வெட்டி வேந்தன், தலைவர்,ஒரிஜினல் ப மு க .January 26, 2010 at 3:22 PM

  ஒரிஜினல் பட்டாப்பட்டி முன்னேற்ற கழத்தின் தலைவர் என்ற முறையில், உங்களை பாராட்டுகிறேன் .
  உங்களுக்கான சில hint .
  கேட்க கூடாத கேள்விகள் .( மீறி கேட்டால் என்ன ஆகும் என்பதை நீங்கள் அனுபவித்து உணர்வீர்கள் )
  - மஞ்சள் கலர் மற்றும் பவழம் அணிவதால் என்ன நன்மை ?இது பகுத்தறிவு லிமிட்ல வருகிறதா?
  - அ. நெஞ்சஜனுக்கு , நான் வகிக்கும் துறையின் பெயரை ஆங்கிலத்தில் எழுதி காட்ட முடியும்மா ?( உசாரு .. missed கால்ள்ள மேட்டர் முடிச்சுடும்)
  - அம்மா...அடிக்கடி Rest எடுகீர்களே , அப்படி என்ன வேலை செய்தீர்கள்?
  -ய ர ல வ ழ ல - என்று மூன்று முறை தங்களால் கூற முடியும்மா? ( கேப்டன் டென்ஷன் பார்ட்டி)
  - என் உறவினர்கள் , என் மகன் , பார்லிமெண்ட , சட்டசபைய மிதிச்சா , நடுத்தெருவில் வைத்து சாட்டையால் அடிக்கலாம் சொன்னாரே, அது எந்த நடுத்தெரு என்று சொல்ல முடியுமா?
  - யாரிடம் பணம் இருக்கின்றதோ , அவர்களை கல்யாணம் பண்ணுவது , எந்த டமில் culture? ( ஜக்குபாய் ஜல்தி ஆவோ )

  ReplyDelete
 3. பக்கிரிக்கு எப்போ ப்ரமோஷன்?

  ReplyDelete
 4. //அண்ணாமலையான் said...
  பக்கிரிக்கு எப்போ ப்ரமோஷன்?//

  அடுத்த ஓட்டை அண்ணாமலையான் போட்டுட்டாரு..
  நன்றி அண்ணாமலையான் சார்...என்ன சார்.. பொன்னு வெளஞ்ச பூமிக்கு பின் பதிவு ஏதும் காணோம்..

  ReplyDelete
 5. //பிரியமுடன்...வசந்த் said...
  பக்கிரி வாழ்க,,,,!//

  ஆகா... மூணாவது ஓட்டை அண்ணன் "பிரியமுடன் வசந்த்" குத்தீட்டாரு..
  நன்றீங்கண்ணா...

  Your Profile Image Looks nice Now..
  PLs keep this Image , as your TradeMark..

  ReplyDelete
 6. என்ன பக்கிரி அண்ணே. கொஞ்சம் நில்லுங்க.. அவரு பேரு + போன் நம்பரையாவது சொல்லிட்டுப்போங்க..இல்லாட்டி எங்களுக்கு தலையே வெடிச்சுடும்..

  நல்ல வேலை பெயரை சொல்லவில்லை இல்லையென்றால் பட்டாபட்டி வெடித்திருக்கும்!!!!!!!!!!!!  sorry அக்கா கிட்ட இருந்த துப்பாக்கியை சொன்னேன்

  ReplyDelete
 7. செட்டியார் மேட்டர பிறகு பாக்கலாம். பாப்பா ஆர்ட்டுப் படத்துக்கு காஞ்சிபுரம் பக்கமெல்லாம் இஸ்து விடாதீங்க. பக்கிரி பட்டாபட்டியார கேட்டதா சொல்லுங்க.

  ReplyDelete
 8. காஞ்சிக்கு (சோரம்) போன ஸொர்னமொலையை நினைவு கொள்ளவும். நல்ல அறிவுப்பூர்வமான பேட்டி'ங்னா. மூ.மு.க. வுக்கு கட்சித் தொண்டு (புது ரத்தம் ஏற்ற) செய்ய சங்கமித்திருக்கும் புவனேஸ்வரியையும் கொஞ்சம் கண்டுக்கங்னா

  ReplyDelete
 9. //Tamilmoviecenter said...
  என்ன பக்கிரி அண்ணே. கொஞ்சம் நில்லுங்க.. அவரு பேரு + போன் நம்பரையாவது சொல்லிட்டுப்போங்க..இல்லாட்டி எங்களுக்கு தலையே வெடிச்சுடும்..
  நல்ல வேலை பெயரை சொல்லவில்லை இல்லையென்றால் பட்டாபட்டி வெடித்திருக்கும்!!!!!!!!!!!!
  sorry அக்கா கிட்ட இருந்த துப்பாக்கியை சொன்னேன் //

  அக்கா வேற அரசியலுக்கு வருவேனு நக்கீரன் பத்திரிக்கைக்கு
  பேட்டி கொடுத்துதிருக்காங்க..
  சீக்கரம் வந்து C.M ஆகி, பட்டைய கிளப்பப் போறாங்க..
  அப்ப இருக்குது நம்மளுக்கு..

  //கும்மாச்சி said...
  செட்டியார் மேட்டர பிறகு பாக்கலாம். பாப்பா ஆர்ட்டுப் படத்துக்கு காஞ்சிபுரம் பக்கமெல்லாம் இஸ்து விடாதீங்க. பக்கிரி பட்டாபட்டியார கேட்டதா சொல்லுங்க.//


  போற போக்கப் பார்த்தா பக்கிரி பட்டாபட்டிய ஓவர் டேக் பண்ணிடுவார் போலயிருக்கே..
  ஊகும்.. இலாகா இல்லாதா நிருபரா போட்டுடலாமா?..
  //மன்மதக்குஞ்சு said...
  காஞ்சிக்கு (சோரம்) போன ஸொர்னமொலையை நினைவு கொள்ளவும். நல்ல அறிவுப்பூர்வமான பேட்டி'ங்னா. மூ.மு.க. வுக்கு கட்சித் தொண்டு (புது ரத்தம் ஏற்ற) செய்ய சங்கமித்திருக்கும் புவனேஸ்வரியையும் கொஞ்சம் கண்டுக்கங்னா//

  அண்ணா.. புவனேஸ்வரி யக்காவ பத்தி படிச்சேன்..
  நிசமாவே நாம தமிழ் நாட்டுல தான் இருக்கமா?..
  ஆமா.. இவங்க கட்சியில சேர்கின்ற வேகத்தப் பார்த்தா,
  பின்னாளில், தொண்டர்களுனு யாருமே இருக்க மாட்டாங்களே..
  அப்ப என்ன பண்றது?..

  ReplyDelete
 10. வேணாம்!கன் ன கீழே போடச் சொல்லுங்க.ஆலிவுட்டு ஆஞ்சலினா ஜூலி சண்டைக்கு வரும்.சொல்லிப்புட்டேன்.

  ReplyDelete
 11. //ராஜ நடராஜன் said...

  வேணாம்!கன் ன கீழே போடச் சொல்லுங்க.ஆலிவுட்டு ஆஞ்சலினா ஜூலி சண்டைக்கு வரும்.சொல்லிப்புட்டேன்.//

  பாவங்கண்ணா. பச்சபுள்ள..
  இன்னும் பத்தாவதே படிச்சுட்டிருக்கு..

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!