Pages

Friday, January 8, 2010

கேப்டன் calling......

நேற்றிரவு திடீரென்ன நம்ம கேப்டனிடம் இருந்து போன்..
ஆகா..நாம குடுத்த ஐடியா வொர்க் அவுட் ஆயிடுச்சுன்னு போல்....... ரைட்........
எப்படியியும் 50 கோடியில கொஞ்சம் ஆட்டய போட்டு ப.மு.க - வை
இன்னும் ஒருபடி முன்னேற்றிடலாம் என மனசு துள்ள ஆரம்பித்தது..

நான் - "நல்லா இருக்கீங்களா கேப்டன்..அக்கா, மச்சான், பயலுக எல்லாம் எப்படியிருக்காங்க?" கேட்டேன்..


"எங்கப்பா, பயபுள்ள சரியாவே படிக்க மாட்டிங்கிறான்..அக்காவேற அவனை டாக்டராக்க வேண்டுமென்று ஒத்த கால்ல நிக்கிறாங்க.. மச்சான் வேற,  எப்ப மாமா.. ஜெயலட்சுமிய பாக்க போகலாமுனு,  ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை மிஸ்ட் கால் கொடுக்கிறான்.. ஏம்பா.. நீ சொன்னமாறி படம் எடுத்தா செட்டில் ஆயிடிலாமில்ல.."

"தலைவா.. உடுங்க தலைவா.. இதெல்லாம் ஒரு பிரச்சனையினு............பையன டாக்டர் ஆக்கிறது ரொம்ப ஈஸி.. அதுக்கு என்ன பார்மாலிட்டிஸ்-னு எதுக்கும் நம்ம "Dr.. விஜய் "-ய கேட்டுக்கிறேன்..  அப்புறம் ...நம்ம மச்சான் விசயம் ஒண்ணுமேயில்ல..ஒரு டாடா சுமோ -வை வாடகைக்கு எடுத்துக்குங்க..
நேரா சிவகாசிக்கு உடுங்க..போயி மச்சானோட ஹீரோயினியப்  பாத்துட்டு வந்திடுங்க..."
...
...

...
அக்கா எதுக்கு?.. அவங்க படம் வந்தபிறகு தியேட்டர்ல போயி பாத்துக்கச் சொல்லுங்க"
...
...

...
"அட்ரஸ்-சா.... என்ன தலைவா.. அங்க யாரக் கேட்டாலும் அட்ரஸ் சொல்லுவாங்க..அப்படி வெளியூர்காரனுக்கு யாருக்காவது
தெரியலைன்னா .. பக்கத்திலேயிருக்கிற போலிஸ் ஸ்டேசன்ல கேட்டுக்கோங்க..
முக்கியமா ஒரு விசயம் சொல்லனும்.. நீங்க வேற அதப் பார்த்திட்டு ,

ஊர்ல எவ்வளவு கக்கூஸ், 
ஒரு நாளைக்கு எவ்வளவு பேர் போவாங்க..
அதுல தண்ணி வர கக்கூஸ் எவ்வளவு?...
தண்ணி வரதா கக்கூஸ் எவ்வளவு?.... .
காலையிலே எவ்வளவு பேரு போவாங்க, 
சாயந்திரம் எவ்வளவுனு? 

கணக்கு சொல்லிட்டிருக்காதீங்க..  பச்ச மண்ணு........ பயந்திடும்.."
...
...
...

பயப்படாதீங்க.. நீங்க தெலுங்கிலேயே மாட்லாடலாம்..... எல்லா உங்க கொல்டிகள்தான்.......
...
...
...


இல்லைங்க..நானும் கொஞ்ச பிஸியாதான் இருக்கிறேன்..எங்க கல்லாபெட்டி கொடவுன் " Full "  ஆயிடுச்சு.......கொஞ்சம் பெரிய இடமாயிருந்தா நல்லாயிருக்குமேன்னு சென்னையில்  இடம் பாத்துட்டுருக்கேன்..
...
...

...
...
...
இப்ப நம்ம கட்சிக்கார பையன் தான் பாத்துக்கிறான்..
Experience னு பாத்தா , சின்ன வயசுல இருந்து கட்சி..கட்சி.. சுத்துனதாலே
கல்யாணமே பண்ணிக்காமதான் இருக்கான்..எங்க கொடவுன்-யே ஒரு ஓரமா தங்கிக்கிறான்....
...
...
...

ஆமாம...மூணு நேரம் சோத்த போட்டு , ஒரு நாளைக்கு ஒரு குவாட்டர் கொடுக்கிறோம்.. அப்பப்ப கடைக்குப் போயிட்டுவர ஒரு சைக்கிள் வாங்கிக்கொடுத்திருக்கோம்..
...

...
...

நம்ம வசந்த் தம்பி மாறி, நல்ல பொறுப்பான பையன் தான்.. இங்கிருக்கற படத்தப்  பாருங்களேன்.. எவ்வளவு பொறுப்பு -னு உங்களுக்கே தெரியும்..


சைக்கிள எவ்வளவு சுத்தமா வெச்சுருக்கான்..
அதுவும் எங்க பாத்தாலும் திருட்டுப் பயலுகளா இருக்கறதாலே , பூட்டு வேற போட்டிருக்கான்..
...
...
...

என்னது.. உங்க மண்டபத்தப் பாத்துக்க அவனை அனுப்பனுமா?
...
...
...

எது ..நம்ம தாத்தா இடிச்ச மண்டபத்தையா ?
...
...
...

மன்னிச்சுக்கோங்க தலைவா.." Tongue ". ஸிலிப் ஆயிடுச்சு...
...
...
...

என்னது...... ஆங்கிலத்திலே உங்களுக்குப் பிடிக்காத வார்த்தை மன்னிப்பா...?
...
...
...

Sorry..Sorry...
(ங்கொய்யாலே...நல்லாதான் ஆங்கிலம் படிக்கிறாங்க .. இருடி இரு.. )
சரிங்க.. உங்களுக்கு "Ok" -னா , அவனையே ரெடி பண்ணி அனுப்பிச்சுடுரேன்..
...
...
...

"ரெட்டி இல்ல.. ரெடி.. ரெடி..( ready ).. ...
...
...
...

ஆமா.. கண்டிப்பா அனுப்பறேன்..
எவ்வளவோ செய்யறோம்.. இதைச்  செய்ய மாட்டமா?..
நானும் பெரிய இடம் கிடைக்குமான்னு பாத்துட்டு இருக்கேன்..நீங்களும் உங்க மண்டபத்துக்கு  பொறுப்பான் ஆளாப் பாத்துட்டு இருக்கீங்க..மேலும் என்னோட வாட்ஸ்மேன்-தான்  வேணுமுனு விருப்பபடுறீங்க..

என்னமோ போங்க தல... நம்ம இரண்டு   கட்சிக்குள்ளே ஒரு பாசப்பிணைப்பு இருக்குன்னு நினைக்கிறேன்..
திரும்பவும் அடுத்த வாரம் கூப்பிடறேன்..
...
...
...

டொக்..
.
.
.
.
.

2 comments:

 1. யோவ்..அ நியாயம் பண்ணாதீங்கய்யா..
  சைக்கிள , பூட்டு போட்ட லட்சணத்திலேயே தெரியுது உங்க வேலைக்காரன் மூளைக்காரணு..
  இவனுக்குப் போயி அடுச்சிக்கிடறீங்க..

  ReplyDelete
 2. //manithan said... //
  கேப்டன் அவன்தான் வேண்டுமென ஒத்த கால்ல நிக்கிறாரு..
  எனக்கு வேற , நல்ல இடமா கிடைக்கப் போகுது..
  அப்புறம் என்ன அப்பு கவலை?..

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!